தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகமானவர் ராமராஜன்.
திரையுலகில் உச்சத்தில் இருந்த போது பிரபல நடிகை நளினியை காதலித்து
திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து
வேறுபாடு காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் மக்களவை சார்பில் போட்டியிட்டு அப்பகுதியின் எம்பியாக ஆனார்.
அன்று முதல் இன்று வரை அவர் அதிமுகவில் நீடித்து வருகிறார். இந்நிலையில்
நடிகர் ராமராஜன் உடல் நிலை பற்றி வதந்தி பரவியது. அவரை ஆஸ்பத்திரியில்
சேர்த்து இருப்பதாகவும், வலை தளங்களில் சிலர் தகவல்களை பரப்பினார்கள்.
இதுபற்றி விசாரித்த போது அது வதந்தி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக
ராமராஜனிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் “நான் திருப்பர-ங்குன்றம்
தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்று கொண்டிருக்கிறேன் யாரோ அப்படி தவறான
தகவலை பரப்பி இருக் கிறார்கள்” என்றார். dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக