சனி, 18 பிப்ரவரி, 2023

10 வயது ஃபுல்மணி Phulmoni என்ற தனது மனைவியை உடலுறவின் மூலமே கொன்ற கணவன் .கொடிய இந்துமதவாதம் . தடுத்த ஆங்கில அரசு

 Shahul Hameed  :   தனது முதலிரவில், இடுப்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெளியே தள்ளிய நிலையில், படுக்கையில் இறந்து கிடந்த,  பத்துவயதே ஆன, அந்த மணப்பெண் குழந்தையை, நம்மில் எத்தனை பேர் அறிவோம்.
1889ம் ஆண்டு, ஒரிசாவைச் சேர்ந்த,35 வயது ஹரி மோகன் மைத்தி என்ற மனிதனுக்கு, திருமணமான முதலிரவிலேயே, பத்து வயதே ஆன, குழந்தை,  ஃபுல்மணி Phulmoni என்ற தனது#மனைவியின் கன்னித் தன்மையை  அழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
முதலிரவு படுக்கை விரிப்பில், ரத்தக்கறை படிந்திருக்க வேண்டும் என்பது, அந்தக்கால  ஆச்சாரமாக, சமூக வழக்கமாக இருந்தது.
அப்படித்தான், இடை உடைக்கப்பட்ட நிலையில், ஃபுல்மணி என்ற மணப்பெண் குழந்தை, கொல்லப்பட்டு, படுக்கையில் கிடந்தாள். "மணப்பெண்ணின்" கன்னித் திரை கிழிந்து,  ரத்தம் சொட்டவில்லை என்றால், அந்தப்பெண்ணை, அப்படியே கைவிட்டு விடும் வழக்கமும் அந்தக் காலத்தின் நடை முறை தான். ஆனால், அதைக் கண்டு, நெஞ்சுருகிக் கரைந்து குமுறியவர்கள்,
அப்போதைய உயர்ந்த சாதி எஜமான்களோ,சகோதர மதத்தைச் சார்ந்தவர்களோ அல்ல!
மாறாக, அந்தக் குழந்தைக்காக கண்ணீர் விட்டவர்கள் பிரிட்டிஷ் காரர்கள் மட்டும் தான்.

அதானி உறவால் மோதி பலவீனமாவார் என கூறி புயலை கிளப்பிய அமெரிக்க பணக்காரர் சோரோஸ்: யார் இவர்?

bbc.com -     இக்பால் அகமது -     பிபிசி இந்தி சேவை : \ஜார்ஜ் சோரோஸ்  அதானி - பிரதமர் நரேந்திர மோதி இடையிலான உறவு பின்னிப் பிணைந்தது என்றும் இதனால், இந்திய அரசில் மோதியின் பிடி தளரும் என்றும், இதனால், இந்தியாவின் ஜனநாயக அரசு அமைப்புகளை சீரமைப்பதற்கான அழுத்தம் கிடைக்கும் என்றும் கருத்துத் தெரிவித்துப் புயலைக் கிளப்பியுள்ளார் வித்தியாசமான வரலாறு கொண்ட அமெரிக்கப் பெரும்பணக்காரர் ஜார்ஜ் சோரோஸ்.
உலகம் முழுவதும் ஜனநாயகம், கல்வி, சுகாதாரம், தாராள சிந்தனை ஆகியவற்றுக்கு நிதியுதவி செய்யும் ஜார்ஜ் சோரோஸ் வெள்ளை மேலாதிக்கவாதிகளாலும், ட்ரம்ப் ஆதரவாளர்கள் உள்ளிட்ட வலதுசாரிகளாலும் கடுமையாக வெறுக்கப்படுகிறவர் இந்த வயது மூத்த பெரும் பணக்காரர்.

50 ஆண்டுகளுக்கு முன்பே குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்கியவர் கலைஞர்தான்..” : முதலமைச்சர் பெருமிதம்!

 Kalaignar Seithigal - Prem Kumar  :  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.02.2023) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற CREDAI FAIRPRO 2023-ல் கலந்து கொண்டு ஆற்றிய உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை பின்வருமாறு :-
“ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களை உள்ளடக்கியிருக்கக்கூடிய தென்னிந்தியாவின் மிகப்பெரிய பிராப்பர்ட்டி கண்காட்சி நிகழ்வில், ‘தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலைநோக்குத் திட்டம்-2030’ என்ற அறிமுக நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
இந்தக் கண்காட்சியை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருக்கிற கிரெடாய் அமைப்பின் தலைவர் மற்றும் நிருவாகிகளுக்கு  என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

யாழ்ப்பாணம் பெண் அடித்துக்கொலை . சாதியை குறித்து இழிவாக பேசியதால் அடித்ததாக குற்றவாளி வாக்குமூலம்

jaffnazone.con : சந்தேகநபர் கைது! சாதியை குறித்து இழிவாக பேசியதால் அடித்ததாக வாக்குமூலம்.
யாழ்.அத்தியடியில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய .
சமூக பிரிவை கூறி, தன்னை இழிவாக பேசியமையால், ஆத்திரத்தில் பெண்ணை கொலை செய்தேன் என அத்தியடி பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், பொலிஸ் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்.
யாழ்ப்பாணம், அத்தியடி பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர், கடந்த 12ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை இன்றே விடுவிக்கப்படும்- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி

 மாலைமலர் : ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த அறிக்கை சிறிய மாற்றங்கங்களுடன் ஏற்கப்பட்டது.
மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.16,982 கோடி விடுவிக்கப்படும் என தகவல்
புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று வழங்கப்படும். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,982 கோடியை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து விடுவிக்க உள்ளது.
தமிழ்நாட்டுக்கு  ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.1,201 கோடி கிடைக்கும்.

சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா?

May be an image of 1 person, book and text that says 'மூடநம்பிக்கைகளும் போலி அறிவியலும் முனைவர் எஸ். சேதுராமன்'

Dhinakaran Chelliah  : சிதம்பர ரகசியம்! போலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும்.:
சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா? இந்த மாதிரியான கோவில்களை இப்போது உள்ள அறிவியலால் கட்ட முடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் 'மகா சக்தி' பெற்று சுற்றி உள்ள ஊர்களில் ‘இடி விழாமல்' தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் 'இடி தாங்கியாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த 'அறிவியல் பூர்வமான' அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் சொல்லி இருக்கக்கூடும்.
இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர் வீச்சுக் காரணமாகத்தான் 'சிட்டுக் குருவி' இனம் அழிந்து போவதாகவும்,சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளதாகவும், அம்மை நோயின் போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு 'ஆண்டிபயாடிக்' என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்றும் உங்களிடம் யாரேனும் சொல்லி இருக்கக்கூடும். மேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் போலி அறிவியலுக்குப் பலி ஆனவர்தான்.

சீனாவை புறந்தள்ளி இலங்கைக்கு உதவும் சர்வதேச நாணய நிதியம்!

hirunews.lk : சீனாவின் கடன் மறுசீரமைப்பு இல்லாவிட்டாலும் கூட இலங்கைக்கான நிதியுதவியை அனுமதிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக புலும்பேர்க் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த தகவலை எதிர்வுகூரலாக புலும்பேர்க் தெரிவித்திருந்தது.
இதன்போது சீனா வழங்க மறுக்கும் மறுசீரமைப்புக்கு பதிலாக மேலதிக நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம், மேலும் கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இலங்கைக்கான நிதியுதவியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம், அதன் கடன்கொடுனர்களில் இருந்து மறுசீரமைப்புக்களை எதிர்பார்த்திருந்தது.

டெல்லிக்கு அனுப்பப்படும் ஃபைல்கள்! ஈரோடு தேர்தலுக்குத் தடை?

nakkheeran.in :   ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகள் டெல்லியில் வேகம் எடுத்துள்ளன.
இந்த வேலையில் ஈடுபட்டிருப்பது அமலாக்கத் துறை அதிகாரிகள். ஒன்றிய அரசின் ஏஜென்சிகளான சி.பி.ஐ., வருமான வரித்துறை,
அமலாக்கத்துறை ஆகிய மூன்று ஏஜென்சிகளின் ஒட்டு மொத்த அதிகாரமும் அமலாக்கத்துறை சிறப்புப் பிரிவுகளுக்கு ஒன்றிய அரசு சமீபத்தில் அளித்தது.
அத்துடன் எதற்கும் பயப்படாத கருணையே இல்லாத அதிகாரிகளை அமலாக்கத்துறையில் ஒன்றிய அரசு நியமித்தது.
மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க அரசில் நடந்த ஆசிரியர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அமலாக்கத்துறை விசாரித்து,
அதன் அமைச்சரையே கைது செய்தது.
இதனால் மம்தா பானர்ஜி நிலைகுலைந்து போனார். அப்படிப்பட்ட அமலாக்கத்துறையை ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஒன்றிய அரசு களம் இறக்கியுள்ளது.

பல்கேரியாவில் 18 ஆப்கானிய அகதிகள் - சரக்கு லாரி கண்டெய்னரில் பிணமாக மீட்பு

 மாலை மலர்:  துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் கண்டெய்னர் லாரி ஒன்று நுழைந்தது.
அங்கிருந்து மீட்கப்பட்ட 34 அகதிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சோபியா: ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடி அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்.. துப்பாக்கிச் சூட்டில் தமிழர் பலி

minnambalam.com  - christopher  : தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், தற்போது பாலாறு வழியாக செல்லும் தமிழக – கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் பாலாறு வனப்பகுதி இருக்கிறது. இங்கு காவிரியுடன், பாலாறு இணைகிறது.
இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள மலை கிராமங்களைச் சேர்ந்த சிலர் பாலாற்றை பரிசலில் கடந்து சென்று, கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு விழா | கர்ப்­பி­ணி­யாக போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் குழந்தை பெற்ற கழக போராளி"-

 கலைஞர் செய்திகள் : தி.மு.க.வின் முக்­கிய தலை­வர்­கள் கைது செய்­யப்­பட்ட நேரத்­தில், முத­ல­மைச்­ச­ராக இருந்த இரா­ஜா­ஜி­யின் வீட்டு முன்பு நிறை­மாத கர்ப்­பி­ணி­யாக சத்­தி­ய­வாணி முத்து போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்.
முரசொலி தலையங்கம் (17-02-23)
திரா­விட இயக்­கத்­தின் சலி­யாத பெண் போரா­ளி­யான சத்­தி­ய­வாணி முத்து அம்­மை­யா­ரின் நூற்­றாண்டு விழா தொடங்­கு­கி­றது. ‘திரா­விட இயக்­கத்­தின் நன்­முத்து’ என்று அவ­ருக்­குப் புக­ழா­ரம் சூட்டி இருக்­கி­றார், தமிழ்­நாடு
முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் முதல் பெண் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் – தி.மு.க.வின் முதல் பெண் அமைச்­சர் –- தமிழ்­நாட்­டில் இருந்து ஒன்­றிய அமைச்­ச­ரான முதல் பெண் -– என்ற பெரு­மைக்­கு­ரி­ய­வர் அம்­மை­யார் அவர்­கள்.
தனக்­கென உறு­தி­யான கொள்­கை­யும், அதில் சம­ர­சம் செய்து கொள்­ளாத துடிப்­பும் கொண்­ட­வ­ராக அவர் எப்­போ­தும் இருந்­துள்­ளார்.

காது சிகிச்சைக்காக சென்ற சென்னை மாணவி உயிரிழப்பு -

nakkheeran.in  : சென்னை திருவொற்றியூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் 11 ஆம் வகுப்பு படிக்கும் அபிநயா என்ற மாணவி காது அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அறுவை சிகிச்சையின்போது இதயத்துடிப்பு அதிகரித்ததால் உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுவயதில் இருந்தே காதில் அடிக்கடி சீழ் வடியும் பிரச்சனை இருந்ததால்,
இது தொடர்பாக அபிநயாவின் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
கடந்த 11 நாட்களுக்கு முன்பு காதில் சீழ் வடிந்ததால் அபிநயாவிற்கு திருவொற்றியூர் காவல்நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிபிசியில் சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம்

 மாலைமலர் : புதுடெல்லி: கடந்த 14-ந்தேதி டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
 பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது.
இந்த நிலையில் பி.பி.சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கணக்கில் காட்டிய வருவாயும், பிபிசி நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பிரபாகரன் உயிருடன் இருந்தாலும் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? தொல். திருமாவளவன்


tamil news :  பிரபாகரன் உயிருடன் இருந்தாலும் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? தொல். திருமாவளவன்
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பின்னணியில் இவர்கள் இருக்கலாம் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த தொல். திருமாவளவன், “இந்த அறிவிப்பில் காலப் பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை.
ஏன் இப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்ல வேண்டிய தேவை எழுந்தது. அப்படியே அவர் உயிருடன் இருந்தாலும் இப்போது சொல்ல வேண்டிய தேவை என்ன?

வியாழன், 16 பிப்ரவரி, 2023

திமுக தொண்டன் எவ்வளவு அடிச்சாலும் தங்குவான் ! நம்பள கொள்ளையடிக்கிறதுதான் கவுன்சிலர்களுக்கு சுலபமானது.. சமூகவலையில்

 புகச்சோவ் :  உள்ளாட்சி ஆப்புகள்  !ஆப்பை எடுத்து காக்டிட்ல அடிச்சிக்கிறதுன்னா என்னான்னு தெரியுமா?
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு வேலைசெஞ்சி கவுன்சிலர்களை ஜெயிக்கவச்சதுதான்.
பாஜக ஆளுங்கக்கிட்டே பம்மிக்கிறான்! பெரிய பிரச்சனையாய்டகக்கூடாது, வீண்வம்பு எதுன்குன்னு...!
அதிமுக ஆதரவாளர்களை பாத்தாலே ஓரமா ஒதுங்கிநிக்கிறான்.
ஏன்னா, இவன் சரியாவே செஞ்சாலும் எதிர்கட்சியினரை குறிவைக்கிறதா ஆர்ப்பாட்டம் நடத்துறானுக ப்ளடி அதிமுக குப்பைகள்.
அப்புறமென்ன...!
இருக்கவே இருக்கானுக திமுகவுக்கு பரம்பரை அடிமையாக வாழ்க்கையை கொடுத்த நம்பளமாதிரிப்பட்டவனுக.
நம்பள கொள்ளையடிக்கிறதுதான் திமுக கவுன்சிலர்களுக்கு சுலபமானது. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் திமுக தொண்டன்.
நம்பகட்சி கவுன்சிலரே நம்பளை அடிச்சாலும் வெளியே சொல்லமுடியாது.

தமிழ்நாட்டு மீனவர் மீது , ஆந்திராவும் கர்நாடகாவும் துப்பாக்கி சூடு ..அட்டூழியம்!

 tamil.oneindia.com  - Mathivanan Maran   : தமிழ்நாட்டு தொழிலாளர்கள் மீது அண்டை மாநிலமான ஆந்திரா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டு மீனவர்களும் இலங்கை தமிழ் மீனவர்களும் பாரம்பரியமாகவே இணைந்து மீன்பிடித்தனர். இதன் சாட்சியமாகத்தான் இன்றும் இருக்கிறது கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம்.
தமிழ இலங்கை மீனவர்களால்  கட்டப்பட்டது அந்தோணியார் தேவாலயம். கச்சத்தீவு தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது;
பொருட்கள் மட்டுமேயான பண்டமாற்று சந்தையாக இல்லை.. தமிழ்நாட்டு உறவுகளிடம் இருந்து பெண் எடுப்பதற்கும், பெண் கொடுப்பதற்குமான ஒரு திருவிழாவாக கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவும் இருந்தது என்பது ஒரு காலம்.

ஈரோட்டில் திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்!

மின்னம்பலம் -Kalai : ஈரோட்டில் திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்!
ஈரோட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி அமைக்கப்பட்ட பணிமனைகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் முன் அனுமதி பெறாமல் தேர்தல் பணிமனைகள் இயங்கி வருவதாக இரு தினங்களுக்கு முன்பாக அதிமுகவினர் புகார் மனுக்களை அனுப்பி இருந்தனர்.
இதன் பேரில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர்.
இதன் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவின்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 14 தேர்தல் பணிமனைகள் சீல் வைக்கப்படுகின்றன.

அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் மேலும் சிறைவைக்கப்பட்டு இருந்த 12 பெண்கள் உள்பட 25 பேர் மீட்பு

 மாலைமலர் :விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் 'அன்புஜோதி' என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை சேர்ந்த ஜூபின்பேபி தனது மனைவி மரியாவுடன் இணைந்து 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்த ஆதரவற்ற பெண்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த பெண்கள் என சுமார் 150 பேர் தங்கி இருந்துள்ளனர்.
இவர்களில் ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை சிறைவைத்து சங்கிலியால் கட்டிவிட்டு ஆசிரம நிர்வாகியான ஜூபின் பேபி கற்பழித்து விட்டதாக கூறி இருக்கும் குற்றச்சாட்டுக்கு பிறகே ஆசிரமம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

நெடுமாறன் தந்த நெருக்கடி- முறியடித்த ஸ்டாலின்

 மின்னம்பலம் - ஆரா : “பிப்ரவரி 13 ஆம் தேதி காலை தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மூத்த தமிழ் தேசிய வாதியான பழ.நெடுமாறன் பிரபாகரன் இருக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  
அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது  அவருடன் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், ஈழ  உணர்வாளரான வழக்கறிஞர் நல்லதுரை உள்ளிட்டோர் இருந்தனர்.
 ஆனால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ ஆதரவு  அரசியல் தலைவர்களான வைகோ, திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி போன்றவர்கள் தன்னுடன் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் நெடுமாறன்.
கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலேயே  அவர்களுடன் பேசிவிட்டார்.

ஜப்பான் தீவில் திடீரென ஆயிரக்கணக்கான காகங்கள் மொய்த்தன : இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா?

 மாலை மலர்  :; டோக்கியோ: ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன. அதோடு வானத்திலும் காகங்கள் கூட்டம் கூட்டமாக பறந்தன.
 இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே தீவு முழுவதும் காகங்கள் சூழ்ந்திருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த விசித்திர நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.
அதே சமயம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.
துருக்கியில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பறவைகள் ஒலி எழுப்பியபடி கூட்டம் கூட்டமாக வானத்தில் பறந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் நலத்திட்ட செலவை விட இம்ரான் கானின் பயணச் செலவு அதிகம்

மாலை மலர் : இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த போது, ஏழைகளுக்காக தங்கும் விடுதி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 39 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டன.
இதற்கு பாகிஸ்தான் நாணய மதிப்பில் 189.015 மில்லியன் ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உணவு விநியோகம் செய்வதற்காக 40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் உணவு மற்றும் வாகனங்களுக்கு என 2022 மார்ச் வரை 161.88 மில்லியன் ரூபாய் செலவாகி உள்ளது.

புதன், 15 பிப்ரவரி, 2023

90 காண்டெயினர்களோடு ஓடும் சரக்கு ரெயில் காணாமல் போனது .. ?


ரயில் என்ஜின்,தண்டவாளத்தை தொடர்ந்து காணாமல் போன ஓடிக்கொண்டிருந்த சரக்கு ரயில் - மராட்டியத்தில் அதிர்ச்சி!

Kalaignar Seithigal -p raveen : இந்தியா ரயில் என்ஜின், தண்டவாளத்தை தொடர்ந்து காணாமல் போன ஓடிக்கொண்டிருந்த சரக்கு ரயில் - மராட்டியத்தில் அதிர்ச்சி!
சில மாதங்களுக்கு முன்னர் பீகார் மாநிலம் பரௌஹ்னி நகரில் க்ரஹாரா என்ற ரயில் நிலையத்தில் பயன்படுத்தாமல் இருந்த டீசல் எஞ்சினை பார்ட் பார்ட்டாக கழற்றி மர்ம நபர்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கழித்து கடத்த 10 நாட்களுக்கு முன்னர் அதே பீகாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையம் அருகே 2 கிலோ மீட்டருக்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பெண்கள் மீது கொடுமை .. உடம்பெல்லாம் தழும்புகள் பலர் மீட்கப்பட்டுள்ளனர்

லைசென்ஸ்

  tamil.oneindia.com   Hemavandhana  :  "மர்மதேசம்".. பெண்கள் உடம்பெல்லாம் தழும்பு.. கட்டிவைத்தும், குரங்கை ஏவியும் சீரழிப்பு.. நம்ம ஊர்லதான்
விழுப்புரம்: ஆசிரமம் ஒன்றிற்குள், ஆதரவற்ற பெண்கள் மீது வளர்ப்பு குரங்குகளை ஏவி விட்டு கடிக்க வைத்தும், போதை பொருளை தந்து அவர்களை பலாத்காரமும் செய்து வந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது..
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ளது குண்டலபுலியூர்.. இங்கு அன்பு ஜோதி என்ற ஆசிரமம் ஒன்று இயங்கி வருகிறது.. இந்த ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் 4 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை

hirunews.lk  :  திஸ்ஸமஹாராமவில் சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் காவல்துறை பொறுப்பதிகாரியொருவர் (OIC) உட்பட நான்கு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
திஸ்ஸமஹாராம காவல் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் 2005 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு .. கரூர்

 மாலை மலர் :  சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை மீட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவிகள் 4 பேர் புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்தவர்கள்.
கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை மீட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவிகள் 4 பேர் புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் A. K. சுப்ரமணியம் .. 88 வயத்தில் அரசு மருத்துவமனையில் உதவி கேட்கிறார்

May be an image of 1 person

Dinakar Kasiviswanathan  :  AKS என்ற A. K. சுப்ரமணியம் ஆகிய இந்த 88 - வயது முதியவர்,
மாமியாரா, மருமகளா ?, பிஞ்சு மனம் உட்பட 5 திரைப்படங்களின் டைரக்டர் .
தற்போது, இடுப்பு எலும்பு முறிந்து, ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அனாதை ஆசிரமத்தில் வசித்த ,மிக, மிக வறுமையான  சூழலில் உள்ள இவருக்கு உதவ விரும்பும் நண்பர்கள் பண உதவி அல்லது வேறு உதவிகளை வழங்லாம்.
நன்றி.(GPAY : 9444344440 - B. Manikandan)
இந்தப் பதிவு எனக்கு பிறவா ஆனால் மகனாக நான் எண்ணும் ஐயப்பன் என்ற விஸ்வாமித்திரன்-னது ஃஃபேஸ் புக் பக்கத்தில் பார்த்தேன்.மனம் வருந்தினேன்.
படத்தில் இருப்பவர் டைரக்டர் ஏ.கே.எஸ்.என்று எங்களால் அழைக்கப்பட்டவர்.
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தவர்...
அவர் இயக்கிய வீட்டு மாபபிள்ளை பட பிர்பல ஹீரோயின் அவரை தீவிரமாக காதலிக்கும் அளவிற்கு அழகாக இருந்தவர்..

ஏர் இந்தியா 470 புதிய விமானங்களை வாங்குகிறது ... ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுடன் மெகா ஒப்பந்தம்

மாலை மலர் :புதுடெல்லி: டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும்,
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது.
இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
புதிய விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், ரத்தன் டாடா, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

சீமான் மறுத்த கான்ட்ராக்டை நெடுமாறன் கைப்பற்றினார் நெடுமாறன் பறக்கவிட்ட டாலர் பலூன்

 சீமான் :  மாவீரர் தினத்தன்று எனக்கு ஓர் அழைப்பு. லண்டனில் இருந்து பேசிய ஒருவர் என்னிடம், ‘அண்ணன் இருக்கிறார் என்று நீங்கள் மேடையில் சொல்ல வேண்டும்’ என்று என்னிடம் கேட்டார்கள்!.
அதாவது சீமானை இப்படி கூறுமாறு புலம்பெயர் புலி வசூல் சக்கரவர்த்திகள் நெடுமாறன் மூலம் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார்.
எல்லாம் வசூல் டெக்னீக்தான்
நெடுமாறன் பறக்க விட்ட பலூனை உண்மை என்று நம்பி மகிழ்சியை வெளிப்படுத்தும் அத்தனை சில்லறைகளுக்கும்  ஒரு ஆலோசனை!
ஏன் மிச்சம் மீதி உள்ள ஈழத்தமிழர்களையும் கொல்லவா?
உங்கள் தலைக்குள் இவ்வளவு களிமண் இருக்கிறது என்பது உண்மையிலே அதிர்ச்சியாக இருக்கிறது.   உங்கள் சிந்தையில் இருப்பது அத்தனையும் பொய்தானோ என்ற சந்தேகம் வருகிறது.
நல்ல பல வரலாற்று செய்திகளையும் கருத்துக்களையும் கூறும் நீங்கள் இப்படி ஒரு பாசிஸ்டுக்கு பல்லக்கு தூக்குவது எந்த வகையில் சேர்த்தி?
அறம் என்பது உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லையா?
இவ்வளவு கறைபடிந்த நெஞ்சொடு எப்படி உங்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது?

முக்தார் பேட்டியின் போது வியனராசு கோபித்து கொண்டு ஓடியது ஏன்?

திங்கள், 13 பிப்ரவரி, 2023

சீமான் : லண்டனில் இருந்து ஒருவர் என்னிடம், ‘அண்ணன் இருக்கிறார் என்று நீங்கள் மேடையில் சொல்ல வேண்டும்’ என்று கேட்டார்கள்.

 minnambalam.com : - aran : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு நலமாக இருப்பதாகவும் தற்போதைய இலங்கை சூழ்நிலையில் அவர் விரைவில் வெளியே தோன்றுவார் என்றும்  இன்று (பிப்ரவரி 13) தஞ்சாவூரில் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.
அவருடன்  ஈழத் தமிழரும் கவிஞருமான காசி ஆனந்தனும் உடன் இருந்தார். பழ. நெடுமாறனின் கருத்துக்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்  நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (பிப்ரவரி 13) ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியபோது பழ. நெடுமாறனின் கூற்று பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
“இதற்கு என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள்தான் இருக்கிறது. என் தம்பி சின்னவன் பாலச்சந்திரனை சாகக் கொடுத்துவிட்டு என் அண்ணன் பத்திரமாக தப்பிப் போயிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக நின்று சண்டை செய்தவர் என் அண்ணன்.

பிரபாகரன் உயிருடன் இல்லை- பழ நெடுமாறன் தகவலுக்கு இலங்கை ராணுவம் மறுப்பு


இம்முறை இயேசு வருவது பாஜகவின் உபயத்தில்தான். நெடுமாறனின் இயேசு வரவோடு மக்கள் நல் கூட்டணி பார்ட் 2 உருவாக கூடும்.   இனி வரும் தேர்தல்களில் சில பழைய மநகூக்கள் பாஜகவுக்கு பல்லக்கு தூக்க இயேசு வருகிறார் சுலோகம் உதவும்ன்னு கணக்கு பண்ணுவது போலத்தான் தெரிகிறது.

 மாலை மலர்: தவறான தகவல்களை வெளியிடுகின்றார்கள். எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக பழ நெடுமாறன் கூறிய தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.

கொழும்பு விலங்கியல் பூங்காவில் 'விலங்கு காதல் வாரம் அறிவிப்பு

 hirunews.lk : இலங்கை கொழும்பு விலங்கியல் பூங்காவில் 'விலங்கு காதல் வாரம்' பிரகடனம்
தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் இன்று முதல் 'விலங்கு காதல் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கியல் பூங்கா பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.
காதலர் தினத்தை முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விலங்குகளுக்கு அன்பும் கருணையும் அளிக்கும் நோக்கில் இந்த வாரம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
குடும்பங்கள் மற்றும் தம்பதிகள், விலங்கியல் பூங்காவிற்குச் சென்று செல்ல பிராணிகளுடன் புகைப்படம் எடுக்கலாம்.
விலங்குகளுக்கு உணவளிக்கலாம் மற்றும் அவற்றுடன் நாட்களை செலவிடலாம்.

சுக்கு நூறா நொறுங்குதே! பாஜகவின் ‘திகுதிகு’ கணக்கு.. அவரை வச்சே எடப்பாடியை ‘காலி’ செய்யுதாமே டெல்லி?

இப்படியே இருக்கட்டும்

tamil.oneindia.com -  Vignesh Selvaraj  :  சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதன் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது எனச் சொல்லப்படும் நிலையில்,
"எடப்பாடி பழனிசாமியின் கைகளில் இருந்து அதிகாரம் நழுவிச் செல்கிறது,
தமிழ்மகன் உசேனை தலைமைப் பதவிக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கும்" என பகீர் கிளப்பி இருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி.
ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்துப் போடும் அதிகாரம் தமிழ்மகன் உசேனுக்கு கிடைத்திருப்பதன் மூலம், எல்லோரையும் விட அவரே பலசாலியாகி இருக்கிறார்,

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியது- 50 ஆயிரம் கடக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா தகவல்

 மாலை மலர் :  துருக்கியில் 29,605 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சிரியாவில் 3,574 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 நிலநடுக்கத்தில் சிக்கி மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
துருக்கி - சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது.
நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

நாகப்பட்டினத்தில் ஆசிரியர் தண்டனையால் பறிபோன உயிர் .. சைக்கோ ஆசிரியர்கள்

 tamil.oneindia.com :  பல நிமிடங்கள் ஓடிய பிறகும் கூட, மாணவர்களை நிற்கவிடாமல் ஆசிரியர் ஓடச் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவன் கவிப்பிரியனுக்கு கடுமையாக மூச்சிறைத்துள்ளது. ஒருகட்டத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ஆசிரியர் கொடுத்த இரக்கமற்ற தண்டனையால் மாணவன் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் மாணவர்கள் சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர், அவர்களை மைதானத்தில் ஓட வைத்த போது இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரக்கமற்ற ஆசிரியர்கள்
சமீபகாலமாக, மாணவர்கள் மீது சில ஆசிரியர்கள் அதிகப்படியான வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை பார்க்க முடிகிறது.

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் சரியான மதிப்பு 945 ரூபா மட்டுமே

tamil.goodreturns.in   அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் சரியான மதிப்பு 945 ரூபா மட்டுமே!
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் அதன் 52 வார உச்ச விலையான 4,190 ரூபாய் என்ற உச்சத்தில் இருந்து 62 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறாக இருந்தாலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு இன்னும் மலிவாக இல்லை என்று மதிப்பீட்டு குரு என அழைக்கப்பட்ட அஸ்வத் தாமோதரன் கூறுகிறார். நிதிப் பேராசிரியராக இருக்கும் அஸ்வத் தாமோதரன் தனது பிளாக் பதிவில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு மதிப்பு குறித்து விரிவான கணக்கீட்டை வெளியிட்டு உள்ளார்.
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் மோசடி மற்றும் முறைகேடு தொடர்பான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் கணக்கிட்டாலும் அதானி எண்டர்பிரைசஸ் பங்கின் நியாயமான மதிப்பு ஒரு பங்கு விலை 945 ரூபாய் ஆக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். 

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட விழைகிறேன்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 மாலைமலர் : சென்னை: ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில கவர்னராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட விழைகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

ஆண்களை அதிகம் பாதிக்கும் வயிற்று புற்றுநோய்! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

 zeenews.india.com - RK Spark :  இரைப்பை சுவர்களில் இருந்து உருவாகும் புற்றுநோய் வயிற்று புற்றுநோய் அல்லது இரைப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.  
செரிமான மண்டலத்தின் முக்கியமான பகுதியாக வயிறு உள்ளது,
இதில் புற்றுநோய் ஏற்படுவது பெரியளவில் நமக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.  
உலகளவில் அதிகளவில் இருக்கும் புற்றுநோய்களில் வயிற்று புற்றுநோயும் ஒன்று,
 இது உலகளவில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
 சமீப காலமாக வயிற்றுப் புற்றுநோய் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாக மாறியுள்ளது,
இளைய தலைமுறையினருக்கு கூட வயிற்று புற்றுநோய் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 28,000 ஆக உயர்வு!’

BBC :  துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) வரை 28,000ஐ கடந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்.பி. கே.சி.பழனிசாமியின் கடைகளுக்கு சீல் வைத்து கோவை மாநகராட்சி அதிரடி

 மாலை மலர் :  சொத்து வரி கட்டாததால் சீல் வைத்ததாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். தகவல் அறிந்து வந்த கே.சி.பழனிசாமி மாநகராட்சி அதிகாரி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கோவை: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமிக்கு சொந்தமான கோவையில் உள்ள சேரன் டவரில், மாநகராட்சி அதிகாரிகள் 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
மேலும் சொத்து வரி கட்டாததால் சீல் வைத்ததாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
தகவல் அறிந்து வந்த கே.சி.பழனிசாமி மாநகராட்சி அதிகாரி இடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருந்தபோதும் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.

திருப்பூரின் நிலைமை மோசமாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடையாது

 hindutamil.in : திருப்பூரின் நிலைமை மோசமாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடையாது - சமூக வலைதளங்களில் வைரலாகும் மளிகைக் கடை பதாகை
திருப்பூர்:  நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடையாது என்று திருப்பூரில் மளிகைக் கடை முன்பு வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகை, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொழிலாளர் நகரமான திருப்பூரில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாகத் தொழிலில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக, தொழில்துறையினர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல நிறுவனங்கள் போதிய ஆர்டர்கள் இல்லாமல் தவித்து வருகின்றன.

யாழ்ப்பாணம் - பிரபல வழக்கறிஞரும் அரசியல் வாதியுமான திரு ரெமிடியாஸ் முடியப்பு அவர்கள் காலமானார்

யாழ்ப்பாணம் -  பிரபல மனித உரிமை வழக்கறிஞரும் பல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காரணமாக இருந்தவரும் பிரபல அரசியல் வாதியுமான திரு ரெமிடியாஸ் முடியப்பு அவர்கள் காலமானார்  
இவர் ஒரு விபத்தில் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் யாழ் மாநகர சபையின் பழம்பெரும்  முக்கிய அங்கத்தவராகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாற்று கட்சி உறுப்பினர் மாநகர சபை விவாதத்தின் போது இவரின் ஜாதியை இழிவு படுத்தும் முகமாக இவரை நோக்கி குலத்தளவே ஆகுமாம் குணம் என்று வசைபாடினார்
அப்போது திரு ரெமிடியாஸ் அவர்கள்  நான் அசல் திராவிடன் என்று முழங்கினார்!
இவர் ஒரு சிறந்த  வழக்கறிஞர் ..
போர்காலங்களில் பல பேரை சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்டுள்ளார் ..
பலபேரிடம் பணம் கூட வாங்காது இலவசமாக கூட வாதாடி உள்ளார்
இன்று இவர் காலமான செய்தி அறிந்ததும் இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது

விக்னேஸ்வரன் சிங்கள பெண்ணையே திருமணம் செய்துள்ளார் . பிள்ளைகளும் சிங்கள பெண்களையே திருணம் செய்துள்ளனர்

Sarath Weerasekara is against devolution of power to Tamils: CV Vicky

 சமூகம் மீடியா  :   : விக்னேஸ்வரன் சிங்கள பெண்ணையே திருமணம் செய்துள்ளார் . பிள்ளைகளும் சிங்கள பெண்களையே திருணம்  செய்துள்ளனர்   இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்துக்கு ஓடுங்கள்! – விக்கிக்குப் பொன்சேகா பதிலடி.
“இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச் சொல்லுங்கள்” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையானது ஒற்றையாட்சி நாடாகும். இங்கு சமஷ்டிக்கு இடமில்லை. இங்கு வாழ முடியாவிட்டால் விக்னேஸ்வரனை இங்கிலாந்து போகச் சொல்லுங்கள்.

டாடா, பிர்லா, அம்பானி.. ஒரே நாளில் 1 லட்சம் கோடி முதலீடு-க்கு உத்தரவாதம்..!

டாடா குழுமம்

tamil.goodreturns.in - Prasanna Venkatesh : லக்னோ: இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் இருக்கும் நிலையில்,
இந்தியாவின் 3 பெரிய வர்த்தகக் குழுமங்கள் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா குழுமம், ஆதித்யா பிர்லா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய 3 முக்கிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களும் அடுத்த சில வருடத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் அறிவித்துள்ளனர்.