சனி, 23 நவம்பர், 2019

ஸ்டாலின் :தமிழகத்தில் பாலில் நச்சுதன்மை''- மத்திய அரசின் தகவல்கள் அதிர்ச்சியை தருகிறது

நக்கீரன் :தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக மத்திய அரசு செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
பாலில் நச்சுத்தன்மை குறித்து டி.ஆர்.பாலு எம்பி எழுப்பிய கேள்விக்கு, கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமான AFM1 நச்சுப்பொருள் மாட்டுத் தீவனம் மூலம் பாலில் கலந்திருப்பதாகவும், இதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து. இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். எனக்கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா: பதவிப் பிரமாணத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

மகாராஷ்டிரா:  பதவிப் பிரமாணத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!மின்னம்பலம் : ஒரே இரவில் தேவேந்திர பட்னவிசை ஆட்சி அமைக்க அழைத்து அவருக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தது எப்படி என்று மகாராஷ்டிர மாநில ஆளுநர் பக்த்சிங் கோஷ்யாரிக்கு காங்கிரஸ் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தேவேந்திர பட்னவிஸுக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டதை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று (நவம்பர் 23) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா,
“ஏற்கனவே தங்களுக்கு மெஜாரிட்டி இல்லை என்று தேவேந்திர பட்னவிஸ் பகிரங்கமாக சொல்லியிருந்தது ஆளுநருக்குத் தெரியுமா தெரியாதா? மெஜாரிட்டியே இல்லாத பட்னவிஸை நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து ஆட்சி அமைக்க அழைத்தது ஏன்?

சரத் பவார் எச்சரிக்கை : பா.ஜ.க.வுக்கு ஆதரவு தந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழப்பார்கள்

பா.ஜ.க.வுக்கு ஆதரவு தந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழப்பார்கள் -சரத் பவார் எச்சரிக்கை
உத்தவ் தாக்கரே -  சரத் பவார்.
மாலைமலர் : பாஜகவுக்கு ஆதரவு தந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் பதவியை இழக்க நேரிடும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இன்று காலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இதனால் ஆட்சிக் கனவில் இருந்த சிவசேனாவுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. அஜித் பவார், மகாராஷ்டிர மக்களின் முதுகில் குத்திவிட்டதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.
அஜித் பவாரின் முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என்றும், அவரது முடிவை ஆதரிக்கவில்லை என்றும் கட்சி தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். இதனால் அந்த கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பாஜக தேர்தல் நிதியை மும்பாய் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளிடம் இருந்து பெற்றது அம்பலம் ...

தினமணி : பயங்கரவாதத்துக்கு நிதியளித்ததாகக் கூறப்படும் நிறுவனத்திடம் பாஜக கோடிக் கணக்கில் நன்கொடை பெற்ாக காங்கிரஸ் மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புடன் தொடா்புடைய பயங்கரவாதி இக்பால் மிா்ச்சி என்பவரது சொத்துகளை வாங்கியது தொடா்பாக நிறுவனம் ஒன்றின் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து பாஜக ரூ.10 கோடியை கடந்த 2014-15 ஆம் ஆண்டில் தோ்தல் நிதியாகப் பெற்ாக ஊடகத்தில் தகவல் வெளியானது. தோ்தல் ஆணையத்தில் பாஜக அளித்த தகவலைக் குறிப்பிட்டு, அந்த ஊடகச் செய்தி வெளியாகியிருந்தது.
குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த ஊடக அறிக்கையைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘தோ்தல் நிதிப் பத்திரங்கள், பயங்கரவாத அமைப்புக்கு உதவிய நிறுவனத்திடம் நிதி பெற்றது என பாஜகவின் தோ்தல் நிதி முறைகேடு தொடா்ந்து வருகிறது. பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் உதவியாளா் இக்பால் மிா்ச்சிக்கு நிதி வழங்கிய நிறுவனத்திடமிருந்து பாஜக கோடிக் கணக்கில் நிதி பெற்றது ஏன்? இது நாட்டுக்கு இழைக்கப்பட்ட துரோகம் அல்லவா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

மகாராஷ்டிராவில் பாஜக என் சி பி எம் எல் ஏக்களை கூட்டணி .. பாஜக தேவேந்திர பட்நாயக் முதலமைச்சராக பதவி ஏற்றார் Breaking news

  BBC : மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதாகவும், அந்த கட்சியை சேர்ந்த அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வென்று இருந்தது.
சிவசேனை தலைமையிலான ஆட்சி அமையும் என்று பேசப்பட்டுவந்த சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் மீண்டும் தேவந்திர பட்னாவிஸ் முதல்வராக சனிக்கிழமை காலை பதவியேற்றுள்ளார். உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக உத்தவ் தாக்ரே பதவியேற்பதற்கு கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் நேற்று வெளியாகின.

அழிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் மீண்டும் இடம்பெறும் ..இலங்கை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன்

Mano Ganesan -: · புது அரசு வந்த உற்சாக மிகுதியால், தமிழை அழித்து
விட்டார்கள்.
கடந்த வாரத்துக்குள் நடந்திருந்தால் ஏதோ நான்தான் அழித்தேன் என்பது போல் இங்கே போராளிகள் பொங்கி எழுந்து கேள்வி கேட்டிருப்பார்கள்.
இப்போது நான்தான் பாணந்துறை நகரசபை தலைவர் நந்தன குணதிலகவிடம் கேட்டேன். "இனவாதிகள் வேலை. பொலிஸில் புகார் கொடுத்துள்ளேன். அடுத்த வாரத்துக்குள் மீண்டும் தமிழை எழுத ஏற்பாடு செய்கிறேன்" என எனக்கு உறுதியளித்தார்.

உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!..

 Maha - tamil.boldsky.com :  பலருக்கும் அத்திப்பழம் பற்றி தெரியாது. ஏன் பாத்திருக்கக்கூட மாட்டார்கள். அப்படியே பார்த்தாலும், இதை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்பார்கள். ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும். மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும். பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் 15 நன்மைகள்!!!
பலரும் கடைகளில் முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா உள்ள இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதன் வடிவத்தைப் பார்த்து, இது எப்படி இருக்குமோ என்று நினைத்து வாங்கி சுவைத்திருக்கமாட்டீர்கள். இனிமேல் கடைக்கு சென்றால், தவறாமல் இந்த உலர்ந்த அத்திப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள். 
ஏனெனில் மற்ற உலர் பழங்களை விட, இதில் அலாதியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி, இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம். 

வீடு கட்டும் பறவைகளின் உலகம் .. நம்ப முடியாத அதிசய உலகம் .. வீடியோ


Kishoker Stanislas : Vogelkop Bowerbird என்கிற பறவை கட்டிய கட்டுமானம் தான் இது. கிட்டத்தட்ட ஏழு , எட்டு ஆண்டுகள் செலவழித்து இந்த கூ(வீ)ட்டைக் கட்டுகிறது. கட்டி முடிந்ததும் , பூக்கள் பழங்கள் என்று - குறிப்பாக கவர்ச்சியான நிறமுடைய மற்றும் அழகான வடிவமுடையவற்றை - இந்த கூட்டடியில் கொண்டு வந்து குவிக்கும்.
Bowerbird வகையில் பத்திற்கு மேல் வகையுண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான , மனிதர்களால் கற்பனையே செய்யமுடியாத ஆச்சரியமிக்க கட்டுமானங்களை பூமியின் தளத்திலே வியாபிக்கும் .
Macgregor's bowerbird என்கிற இன்னொரு வகை Bowerbird , நிலத்திலிருந்து ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரமுடைய கோபுரத்தை குச்சிகளால் கட்டுகிறது. ஆறு ஏழு ஆண்டுகளாக... ஒரே கோபுரம். அளவு பிரமாணத்தை எல்லாம் அச்சொட்டாக வைத்து குச்சிகளை உடைக்கிறது. கட்டி முடிந்ததும் , கோபுரத்தின் ஓரங்களில் நீட்டிக்கொண்டிருக்கும் குச்சிகளில் பாசிகளையும், பூக்களையும் ஒடித்துக்கொண்டு வந்து கட்டித் தொங்கவிடுகிறது. அலங்காரம்... !

ராஜீவ்காந்தி படுகொலையின் பின்பு திமுக மீது கொடூர தாக்குதல்கள் ... நெடுமாறன்கள் மீது துரும்பு கூட படவில்லை .. பார்ப்பனீய எடுபிடிகள்

வளன்பிச்சை வளன்-பதிவு - 162 : 
ஈழவிடுதலை வரலாற்றில் தமிழகத்தில் திமுக வின் பங்களிப்பு
அளப்பரியது. அதே நேரத்தில் ஈழவிடுதலை ஆதரவு, புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் திமுக சந்தித்த சோதனைகள் இழப்புகள் ஏராளம். ராஜீவ் படுகொலையயை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக வினர் சொத்துக்கள் சேதப் படுத்தப் பட்டன. தி.மு.க குறிவைத்து ஈழ விடுதலை, புலிகள் ஆதரவை காரணம் காட்டி தாக்குதல் நடந்த போது இந்த புலிவேசக்காரர்கள் கண்டனமே ஒரு அனுதாபமோ தெரிவிக்க வில்லை ஏனெனில் இவர்களது நோக்கம் ஈழவிடுதலையோ புலிகள் ஆதரவை வழுப்படுத்தும் நோக்கமோ அன்று. தி.மு.க மீது வன்ம மான தாக்குதல் நடத்தும் அளவிற்கு தி.மு.க எதிர்ப்பே பிரதான காரணம்.
இந்த புலிவேசக்காரர்கள் மீது எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பது வரலாறு உணர்த்தும் உண்மை.
இந்திய அமைதிப்படை
இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி செய்து கொண்ட ஒப்பந்தப்படி இலங்கை சென்றது இந்திய அமைதிப் படை. இலங்கையில பிரேமதாசா அதிபரானதும் இலங்கை இறையாண்மை க்கு இழுக்கு என இந்திய அமைதிப் படையை வெளியேற நிர்பந்திக்க. ராஜீவ் அதை ஏற்று 30 03 1990 க்குள் வெளியேற முடிவெடுத்த நிலையில். இந்தியாவில் ஆட்சி மாற்றம் வி பி சிங் பிரதமர் திமுக சார்பில் முரசொலி மாறன் மத்திய அமைச்சர். இச்சூழலில் இந்திய அமைதிப் படையின் கடைசி அணி 30 03 1990 ல் இலங்கையில் இருந்து வெளியேறி சென்னை வந்த போது அப்போது தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி சம்பிரதாயப் படி அமைதிப் படையை வரவேற்க செல்லவில்லை. அதற்கு அவர் "எனது தமிழ் மக்களை கொன்று விட்டு வரும் ராணுவத்தை நான் வரவேற்க மாட்டேன்" என தெரிவித்ததை தொடர்ந்து ஈழ விடுதலை எதிர்பாளர்களால் இது ஒரு பெரும் குற்றம் என விமர்சிக்கப் பட்டது.

வெள்ளி, 22 நவம்பர், 2019

சுதந்திரமடைந்த 72 ஆண்டுகளில் தான் இந்தியா அதிகமாக கொள்ளை ... அன்னியரை விட அதிக அநியாயம் .

சாவித்திரி கண்ணன் : இந்த நாட்டை கிரேக்கர்கள்
வந்து ஆட்சி செய்தார்கள்!
முகலாயர்கள் வந்து ஆட்சி செய்தார்கள்!
பிரிட்டிஷார், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுகாரர்கள்..
என பலதரப்பட்ட வெளி நாட்டவர்கள் ஆட்சி செய்துள்ளனர்..அடிமைப்படுத்தியுள்ளனர்....,கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்...!
அப்போதும் கூட இந்த நாடு ஒன்றும் ஓட்டாண்டியாகிவிடவில்லை! இனி மீளவே வழியில்லை என்ற நிலை முன் எப்போதும் ஏற்படவில்லை.ஆம்,ஏற்பட்டதேயில்லை!
ஆனால்,சுதந்திரமடைந்த இந்த 72 ஆண்டுகளில் தான் முன்னெப்போதையும் விட இந்த நாடு அதிகமாக சுரண்டப்பட்டுள்ளது.
இனி மீளவே வழியில்லையோ என்று அச்சப்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்!
ஏனெனில்,முன்பு நாட்டை அடிமைபடுத்தி ஆட்சி செய்தவர்களால் நம்மிடமிருந்து பொன்னையும்,பொருளையும்,தானியங்களையும் தான் கொள்ளையிட்டுச் செல்ல முடிந்தது.

பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் இன் 10 கேள்விகள்.. சென்னை ஐ ஐ டி மீது ....

timestamil : பார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்.
  1. எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..?
  2. ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..?
  3. என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று சொல்கிறார்கள். அவளது அறையிலும் கயிறு இல்லை, வெளியிலிருந்தும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை..அந்த கயிறு எப்படி கிடைத்தது.
  4. மரணிப்பதற்கு முன்பான இரவில் உணவகத்தில் வைத்து 1மணிநேரம் எனது மகள் அழுதிருக்கிறாள். அவளை சக மாணவி தேற்றியிருக்கிறார். யார் அந்த மாணவி.? 1 மணி அழுகிறாள் எனில் அப்படி என்ன தொல்லைகளை எனது மகள் சந்தித்தாள்?
    1. மரணமடைந்த நாளில் கூட எனது மகளின் அறைக்கு வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். எனது மகளின் அறை அலங்கோலமாக களைந்து கிடந்தது.

வைரமுத்துவை திட்ட கூறி.. கெட்ட வார்த்தையை சொல்லி தந்தார் நித்தியானந்தா.. வீடியோ ... மீண்டுவந்த பெண் பேட்டி

Hemavandhana -tamil.oneindia.com:    பெங்களூரூ: "எனக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளை சொல்லி தந்து, வைரமுத்துவை திட்ட சொன்னதே நித்யானந்தாதான்" என்று ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 
பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனா ஷர்மா. இவர் கடந்த 2013-ல் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவுக்குச் சொந்தமான பெங்களூரு கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய 3 மகள்களை கொண்டுபோய் சேர்த்தார். அதில் 2 பேர் மட்டும் அஹமதாபாத் ஆசிரமத்துக்கு இடமாற்றப்பட்டனர். இது அறிந்த ஷர்மா, போலீசார் உதவியுடன் ஒரு மகளை மீட்டுவிட்டார். ஆனால், இன்னும் 2 மகள்கள் நித்யானந்தா ஆசிரமத்தில் அடைந்து வைத்துள்ளதாகவும், மூத்த மகள்கள் லோகமுத்ரா, நந்திதாவை மீட்டு தர வேண்டும் என்றும் சொல்லி, கோர்ட் வாசலில் ஏறி இறங்கி வருகிறார்.  இப்போது ஷர்மா மீட்டு கொண்டு வந்த, 3 பெண்களில் ஒருவரை பற்றின செய்திதான் இது. 
இந்த பெண்தான், ஆண்டாள் விவகாரம் எழுந்தபோது, வைரமுத்துவை திட்டி தீர்த்தவர். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்டுவிட்டாலும், நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து சிறுமிகள் வைரமுத்துவை திட்டி அந்த சமயத்தில் வீடியோ வெளியிட்டிருந்தனர். 
மிக மோசமான, கொச்சையான வார்த்தைகளுடன் அந்த வீடியோவில் அந்த பெண் பேசியிருந்தார். தலையை வெட்டணும் தலையை வெட்டணும் "வே.. மகன், உங்க அம்மா வே.., தலையை வெட்டணும்" என்றெல்லாம் அந்த சிறுமி வைரமுத்துவை திட்டி தீர்த்திருந்ததால், இந்த வீடியோ படுவைரலானது. பலரும் இந்த சிறுமியின் பேச்சை கண்டு அதிர்ந்தனர். அதிலும் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கொதித்தெழுந்துவிட்டார். 
கர்நாடக மாநில டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்தார்.

இலங்கை மீன்வளத்துறை அமைச்சராக திரு டக்ளஸ் தேவானந்தா நியமனம்

Janaki Karthigesan Balakrishnan : கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமைச்சர் பதவி
கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சரான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அமைச்சு அலுவல்களை துரிதகதியில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட போது என அண்மையில் முகநூல் செய்தி வந்தது.
மாண்புமிகு கோத்தபாய ராஜபக்ஸ அவர்கள் நவம்பர் 16, 2019 தினம் சிறீலங்காவின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.
அதைத் தொடர்ந்து மாண்புமிகு மகிந்த ராஜபக்ஸ அவர்கள் பிரதமராக நியமிக்கப்படுவார் எனும் செய்தி அறிந்ததும், கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவியேற்கும் வரை அவரது ஆதரவாளர்களும், கட்சி அங்கத்தவர்களும் அவருக்கு ஏற்கனவே பரிச்சயமான வடமாகாண புனர்வாழ்வும், குடியேற்றமும் அமைச்சின் பொறுப்புகளையும், அத்துடன் அவர் ஓர் இந்து ஆதலால், வழமையாக அதனுடன் இணைந்த இந்து கலாச்சார அமைச்சின் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வார் என பரப்புரை செய்தனர்.  ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்டதோ அனைத்து சிறீலங்காவிற்கும் பொதுவான அமைச்சான கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சாகும்
ஆதரவாளர்களும், கட்சி அங்கத்தவர்களும் அவரை வடக்கிலே முடக்க எண்ணியிருந்தாலும், கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறீலங்காவிற்கும், அதன் மக்களுக்கும் பொதுவானவர் என ராஜபக்ஸ் அரசு அவரைக் கனம் பண்ணி அப்பதவியை அளித்துள்ளதை அனைவரும் வரவேற்க வேண்டும்.

ஈகுவாடரில் நித்யானந்தா: முன்னாள் சிஷியை தகவல்!


ஈகுவாடரில் நித்யானந்தா: முன்னாள் சிஷியை தகவல்!மின்னம்பலம் : குழந்தைகளைக் கடத்தி ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாகச் சாமியார் நித்யானந்தா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அகமதாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக போலீசார் குற்றம்சாட்டும் நிலையில், அவர் ஈகுவாடரில் இருப்பதாக அவரது முன்னாள் உதவியாளர் சாரா ஸ்டீபனி லாண்ட்ரி தகவல் தெரிவித்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த இவர் முன்னதாக பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு உதவியாளராக இருந்தார். நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளைக் கடத்தி வைத்துத் துன்புறுத்துகிறார் என்று இவர் ஏற்கனவே பல வீடியோக்கள் மூலம் குற்றம்சாட்டியிருந்தார்.

கோயில் நிலங்களுக்குப் பட்டா: இடைக்காலத் தடை!

கோயில் நிலங்களுக்குப் பட்டா: இடைக்காலத் தடை!மின்னம்பலம் : கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்குப் பட்டா வழங்கும் அரசாணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 22) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்குப் பட்டா வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை சட்ட விரோதமாக நிலத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருப்பதாகவும், இதற்குத் தடை விதிக்க கோரியும் ராதா கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

முரசொலி நிலம் குறித்து அவதூறு- ஒரு கோடி இழப்பீடு கோரி ஆர்எஸ நீதிமன்றத்தில் ....

 RS Bharati notice for defamation of Murasoli landnakkheeran.in - கலைமோகன் : முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் தந்த விவகாரத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முரசொலி நில விவகாரம் குறித்த கருத்தை உடனே அகற்ற வேண்டும் எனவும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

தமிழகத்தின் 33 வது மாவட்டமாக உதயமானது 'தென்காசி'

nakkheeran.in - ப.ராம்குமார் : திருநெல்வேலி  மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இது தமிழகத்தின் 33வது மாவட்டமாகும்.
புதிய மாவட்டத்தின் துவக்கவிழா தென்காசியில் இன்று கோலாகலமாக நடந்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கான விழாவில் கலந்துகொண்டு புதிய மாவட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டது.
புதிதாக உருவாகும் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோயில் புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. இப்புதிய மாவட்டம் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் கோட்டங்களுடன் தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கேபுதூர், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட 8 தாலுக்காக்களை கொண்டு இயங்கும்.
சட்டமன்ற தொகுதிகளை பொறுத்தவரை தென்காசி, கடையநல்லூர் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆலங்குளம் ஆகிய ஐந்து தொகுதிகள் மாவட்டத்தில் இடம் பெறுகிறது.

மகிந்த ராஜபக்சேவுக்கு நிதி மந்திரி பொறுப்பை ஒதுக்கினார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

மகிந்த ராஜபக்சேவுக்கு நிதி மந்திரி பொறுப்பை ஒதுக்கினார் அதிபர் கோத்தபய ராஜபக்சேதினத்தந்தி : இலங்கை பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சேவுக்கு நிதி மந்திரி பொறுப்பை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒதுக்கினார். கொழும்ப இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே (வயது 70), வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் அதிபர் பதவியை ஏற்றார்.  இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே 20-ம் தேதி பதவி விலகினார்.
அதை தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். அவருக்கு  அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  இந்நிலையில் இலங்கையின் இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்று கொண்டது.  தனது சகோதரர்களான  மகிந்த ராஜபக்சே மற்றும் சமல் ராஜபக்சேவுக்கு முக்கிய பொறுப்புகளை அதிபர் கோத்தபய ராஜபக்சே அளித்துள்ளார்.

BREAKING | மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே - சரத் பவார் அறிவிப்பு


மாலைமலர் : சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிரா முதல் மந்திரியாக ஒருமித்த கருத்து உருவானது என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்தார். பா.ஜ.க. - சிவசேனா இடையிலான முதல்-மந்திரி பதவி போட்டியால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரியாக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள்  கூட்டாக செய்தியாளர்களை நாளை சந்திக்க உள்ளோம்.

நடராஜனின் (சசிகலா) பிரமாண்ட சொத்துக்கள் எங்கே? மன்னார்குடி மாபியாவில் பூகம்பம் ..

நடராசனின் உதவியாளர் பிரபும.நடராசன்விகடன் : நடராசனின் கோடிக்கணக்கான சொத்துகள் எங்கே?!’- தஞ்சை உதவியாளரை நெருக்கும் மன்னார்குடி உறவுகள்"
;`நடராசனின் கோடிக்கணக்கான சொத்துகள் எங்கே?!’- தஞ்சை உதவியாளரை நெருக்கும் மன்னார்குடி உறவுகள் சசிகலா தஞ்சையில் தங்கியிருக்கும்போது, பிரபு உள்ளிட்டவர்களை அழைத்து, `அத்தானை இவர்கள்தான் கவனித்துவந்தனர்’ என அறிமுகம் செய்துவைத்தார் திவாகரன். நடராசனின் உதவியாளர் பிரபு
சசிகலாவின் கணவர் ம.நடராசனின் உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர் பிரபு. இவரை வருமான வரித்துறையினர் சென்னையில் கைதுசெய்து விசாரித்துவருவதாக நடராஜனின் சொந்த ஊரான விளார் மற்றும் தஞ்சாவூரில் சில தினங்களாக தகவல்கள் பரவிவருகிறது.
`சசிகலாவின் கணவர் நடராசன், ஒரு காலத்தில் தமிழக அரசியலில் திரைமறைவில் பல மாயாஜாலங்களைப் புரிந்த வித்தைக்காரர்’ என அவரைப் பாராட்டிப் பலரும் பேசியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரையில், அ.தி.மு.க-வின் அதிகார வளையத்துக்குள் அவரை நுழையவிடவில்லை. சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்களையும் ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார்.

கரூர் பள்ளி மாணவி கோமதி இறப்பில் சந்தேகம் .. மறைக்கப்பட்ட செய்திகள்

பள்ளிக்கூடத்தில் வெறும் ரூ.400 கட்டாததால், தினமும் எல்லார்
முன்னாடியும் திட்டி அவமானப்படுத்துறாங்க. இன்னைக்காச்சு குடுங்களேன்' என கெஞ்சிய 12-ஆம் வகுப்பு பயாலஜி படிக்கும் தனது 17வயது மகள் கோமதியை, டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளியான ஆனந்தன் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியபோது, மணி காலை 8:45.
அடுத்த 45 நிமிடத்தில் சகோதரன் மணி கண்டனுக்கு, '"கோமதி திடீரென மயக்கம் போட்டு விழுந்துட்டா. அரசு மருத்துவமனைக்கு கொண்டு போறோம்' என செல்போனில் அழைப்பு வந்தது. அப்பாவுக்குத் தகவல் சொல்லிவிட்டு, அம்மா ராஜேஸ்வரியையும் கூட்டிக்கொண்டு விரைந்தார் மணிகண்டன். அதிர்ச்சியும் பதட்டமுமாக நின்றிருந்தவர்களிடம் கோமதி வரும்வழியில் இறந்து விட்டதாக தகவல்சொன்னார் கரூர் மருத்துவக் கல்லூரி டீன் ரோசி வெண்ணிலா.
இதயமே வெடித்ததுபோல் அவர்கள் கதறியழுது கொண்டிருந்த நேரத்தில், கலெக்டர் அன்பழகன், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர்வந்து ஆறுதல் கூறினர். அடுத்த சில மணிநேரங்களில் மாவட்ட எஸ்.பி. பாண்டிய ராஜன், டி.எஸ்.பி. சுகுமார் தலைமையிலான டீமை இறக்கி சடலத்திற்கு எரியூட்டி இறுதிச்சடங்கையும் முடித்தனர்.

Kamalhaasan undergo surgery கமல்ஹாசன் காலில் பொருத்தப்பட்ட டைடானியம் கம்பி ஆப்பறேசன் - சில வாரங்கள் ஓய்வு ..

/tamil.indianexpress.com : : நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான
கமல்ஹாசனுக்கு, காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான வியாழக்கிழமை ( நவம்பர் 22ம்...
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு, காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான வியாழக்கிழமை ( நவம்பர் 22ம் தேதி), ஆபரேசன் மேற்கொள்ளப்பட உள்ளது.
2016ம் ஆண்டில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பின் போது, கமல்ஹாசனுக்கு நிகழ்ந்த விபத்தின் போது கால்முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது காலில் டைட்டேனியம் பிளேட் பொருத்தப்பட்டது.

புலிகளை முன்வைத்து சோனியாவுக்கு பாதுகாப்பு கேட்பது நாகரீகம் இல்லையாம் .. திமுக காங்கிரஸ் மீது சீமானும் சிறுத்தைகளும் பாய்ச்சல்


tamil.oneindia.com - mathivanan-maran: சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளை
முன்வைத்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு பாதுகாப்பு கேட்பது நியாயம்தானா? என திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் சோனியாவின் கறுப்பு பூனை படை வாபஸ் குறித்து
திமுகவின் எம்.பி. டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார். அப்போது, விடுதலைப் புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்கிற நிலையில் அவருக்கான பாதுகாப்பு ஏன் வாபஸ் பெறப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
இது தமிழகத்தில் கடும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், திமுகவின் இந்த பேச்சு இனத்துரோகம் என சாடியிருந்தார்.
தற்போது திமுக -காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தமது ட்விட்டர் பக்கத்தில், விடுதலைப்புலிகள் தேசத்தின் காவலர்கள்.சிங்கள பவுத்த பயங்கரவாதத்துக்கு எதிராக தம் மக்களை காப்பாற்றிய மக்கள் இயக்கமே விடுதலைப்புலிகள். அப்படிப்பட்ட புலிகளை அழித்து விட்டதாக அறிவித்த பிறகும், விடுதலைப்புலிகளை வைத்து பாதுகாப்பு கேட்பது நாகரீகமா? என பதிவிட்டுள்ளார்.

கனடாவில் மந்திரி ஆன இந்து பெண் அனிதா ஆனந்த் ..

d மாலைமலர் : கனடா மந்திரிசபையில் முதல் முறை எம்.பி.யாகி உள்ள தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் இடம் பெற்றுள்ளார். கனடாவில் 338 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஸ்கீர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது.  கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது. இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தம் 13 சீக்கிய எம்.பி.க்கள்தான் இருக்கிறார்கள்.  ஆனால் கனடா நாடாளுமன்றத்தில் 18 சீக்கிய எம்.பி.க்கள் அலங்கரிக்கிறார்கள்.

கூடங்குளம் - 9,000 வழக்குகள்: ஸ்டாலின் வைக்கும் கோரிக்கை!

M.K.Stalin : ✔ @mkstalin :  It is shocking that the Government has still not rescinded the politically motivated charges filed against peaceful Kudankulam protestors. The pending cases have affected lives and livelihoods of thousands of people. I demand that these cases be immediately withdrawn. …
கூடங்குளம் - 9,000 வழக்குகள்: ஸ்டாலின் வைக்கும் கோரிக்கை!மின்னம்பலம் : கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டங்கள் இடிந்தகரை என்னும் கிராமத்தில் நடைபெற்றது. அப்போதிருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 9,000 பேர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

நீட் தேர்வு: இனி இட ஒதுக்கீடு இல்லை!

நீட் தேர்வு: இனி இட ஒதுக்கீடு இல்லை!மின்னம்பலம் : ஆண்டுதோறும் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நீட் பிஜி (PG - முதுநிலை) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டுக்கான நீட் பிஜி தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான இடங்களுக்கு (MD, MS) அகில இந்திய நீட் பிஜி தேர்வு ஜனவரி மாதம் மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மொத்தமுள்ள 30,774 இடங்களில் 50 சதவிகிதம் அதாவது, 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் 50 சதவிகிதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவிகிதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவிகிதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்க வேண்டும்.

நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்? வைரமுத்துவை கெட்டவார்த்தைகள் பேசிய சிறுமி வாக்குமூலம்

தினமலர் : ஆமதாபாத்: 'நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்' என குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் நித்யானந்தாவின் 'யோகினி சர்வயக்ஞ பீடம்' செயல்பட்டு வந்தது. இந்த பீடத்தை நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் குழந்தைகள் கடத்தப்பட்டு இந்த பீடத்தில் வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி நான்கு குழந்தைகளை மீட்டனர். இது தொடர்பாக நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் சித்ரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சீடர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆமதாபாத் போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.வி. அசரி கூறியதாவது: கர்நாடகாவில் நித்யானந்தா மீது ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாடுக்கு தப்பியோடிவிட்டார்.

28 மத்திய அரசு நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு ..28 State-owned companies for sale

ரூபின் தியா : நேற்று இந்திய ஒன்றிய அரசு அமைச்சரவைக் கூட்டத்தில்,
28 அரசு நிறுவனங்களைத் தள்ளுபடி விலையில் விற்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.
நீங்கள் இதைத் தோல்வியாகப் பார்ப்பீர்கள்.
ஆனால், இங்க தான் ஒரு Twist.
இப்படி அரசு நிறுவனங்களை விற்பதற்கு என்றே தனியாக ஒரு அமைச்சகம் வைத்திருக்கிறார்கள்.
ஆகவே, அரசைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை. KPI achieved.
நாம் 70 ஆண்டுகள் போராடி இட ஒதுக்கீடு கொண்டு வருவோம். அவர்கள் இருக்கிற நிறுவனங்களை எல்லாம் விற்று இலாபத்தை அம்பானிகளுக்கும் வேலையைப் பார்ப்பனர்களுக்கும் கொடுத்து விடுவார்கள்.
விற்கப்படும் நிறுவனங்கள் பட்டியல்:
1. Project & Development India Ltd
2. Hindustan Prefab Limited (HPL)
3. Hospital Services Consultancy Ltd (HSCC)
4. National Project construction corporation (NPCC)
5. Engineering Project (India) Ltd
6. Bridge and Roof Co. India Ltd
7. Pawan Hans Ltd
8. Hindustan Newsprint Ltd (subsidiary)
9. Scooters India Ltd
10. Bharat Pumps & Compressors Ltd
11. Hindustan Fluorocarbon Ltd (HFL) (sub)
12. Central Electronics Ltd
13. Bharat Earth Movers Ltd (BEML)

இப்படியே திராவிடம் பேசுங்கள், பார்ப்பனர்கள் எல்லாம் நடுத்தெருவில்? அல்ல அல்ல .. ! சமுக வெளியில் ....

Ravishankar Ayyakkannu : அண்மைய தொலைக்காட்சி விவாதத்தில்,
"இப்படியே திராவிடம் பேசுங்கள், பார்ப்பனர்கள் எல்லாம் நடுத்தெருவில் நிற்கிறோம், நாட்டை விட்டுப் போகிறோம்" என்றார் தினமலர் ஆசிரியர் Venkatesh Rathakrishnan.
Sorry, sir.
நீங்கள் நடுத்தெருவில் நிற்கவில்லை.
IIT, IIM, மத்திய அரசு வேலைகளில் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்களை எல்லாம் திருடிக் கொண்டு சொகுசாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.
நீங்கள் நாட்டை விட்டுப் போனாலும்,
ரப்பர் காடுகளுக்கோ, கரும்புத் தோட்டங்களுக்கோ, மரண ரயில் பாதைகளுக்கோ கொத்தடிமைகளாகப் பஞ்சம் பிழைக்கப் போவதில்லை.
அங்கேயும் போய் பேராசிரியர், IT பொறியாளர் போன்ற நல்ல வேலைகளைத் தான் பார்க்கப் போகிறீர்கள்.
ஏன் இந்த ஒப்பாரி?
(தொடர்புடைய செய்தி மறுமொழியில்)
J Balaji : ஆண்ட பரம்பரைகள் மற்றும் கம்பர் இளங்கோ இவர்களை படிக்க வைத்த பரம்பரைகள்  கூட IIM யில் காணவில்லை ?
Anjugaselvan Ramasamy : நானும் அந்த கண்றாவி எபிசோட் பார்த்து தொலைத்தேன்.. அப்படியே மூக்கில் ஒன்னு விடணும் போல இருந்தது.. புடுங்குறது எல்லாம் நல்லா புடுங்கி தின்னுப்புட்டு பேச்சு மட்டும் நல்லா வக்கனையா..!! வாயி மட்டும் இல்லைன்னா நாய் தூக்கிட்டு போயிருக்கும்.. Velu Samy : இந்து மக்களே ஒன்றிணையுங்கள் என சொல்லுவான்.... ஆனால் பாப்பானுக்கு மட்டும் தான் கோயில் முதல் கல்லூரி வரை முன்னுரிமை!!! OBC/SC/ST சமூக இந்துத்துவ ஆதரவாளர்கள் திருந்த வேண்டிய நேரமிது!!

சமுகநீதியால் முன்னேறிய பெற்றோர்களே .. சமுக அநீதியால் உங்கள் குழந்தைகள் தெருவில் .....?. எதிர்காலம்?

Kathir RS :  தேவதை போல மகளையும் இளவரசனைப் போல மகனையும் பெற்று வளர்க்கும் அன்பான
பெற்றோரே..
உங்கள் பிள்ளைகள் இன்டர்நேஷனல் ஸ்கூலிலோ அல்லது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் ஏதாவது ஒரு வித்யாஷ்ரமத்திலோ வித்யாலயாவிலோ இப்போது LKG UKG அல்லது 1,2 வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்கலாம்..
அவர்கள் எதிர்காலம் நீங்கள் வாழும் நிகழ்காலம் அளவுக்கு கூட இருக்குமா என்பது பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கிறதா..?
உங்கள் பிள்ளைகளை அடுத்தடுத்த 3,5 வகுப்புகளில் பொதுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று கூடவே ஐந்தாம் வகுப்பிலிருந்து நீட் தேர்வுக்கோ மற்ற பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வுக்கோ தயார் படுத்த லட்சங்களை கொட்டிக் கொடுக்கவும் உங்கள் பிள்ளைகளை வாட்டி வதைக்கவும் தயாராகி விட்டீர்களா?> அத்தனை பணத்தை கொட்டியும் அவர்கள் ஆசைப்படும் படிப்பு நம்மை சுற்றி நடக்கும் அரசியலால் கிடைக்காமல் போனால் அதை அவர்களுக்கு எடுத்துச்சொல்லி உங்களால் புரியவைத்து கிடைத்த படிப்பில் சேர்த்துவிட மனதளவில் அவர்களை தயார்படுத்த உங்களால் முடியுமா?
நீங்கள் கொட்டிய பணம் வீணாய் போனதை நினைத்து வரெத்தப்படவோ கோபப்படவோ உங்களால் முடியுமா?

வியாழன், 21 நவம்பர், 2019

திருமா - காயத்திரி ரகுராம் ..போர் நடக்க வேண்டிய இடத்தில் moral policing நடக்கிறது ..... Scum = அழுக்கு தீண்டத்தகாதது!

Shalin Maria Lawrence : நேர்மையாக சொல்லவேண்டுமானால் கோவில் சிலை ஆபாசம் என்கின்ற கருத்து சனதான எதிர்ப்பின் ஒரு பகுதியா என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் இரட்டை வேடம் போடும் சனதான வாதிகளை நியாயமாக கேள்வி கேட்கும் வகையில் அது கேட்கப்பட்டிருக்கிறது என்று அனுமானித்து கொள்கிறேன்.
ஏனென்றால் ஹிந்து மதம் வரலாற்றில் எப்படி இருந்தது அந்த சிலைகள் ஹிந்து மதத்தை சேர்ந்ததா இல்லை அது ஆசீவகமா தாந்திரிகமா என்ற ஆய்வுகளை பற்றி நான் இப்பொழுது விவாதிக்கப் போவதில்லை.
ஆனால் இந்த நிகழ்காலத்தில் தற்பொழுது இந்துத்துவ அரசியல் எப்படி இருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்களை விட அந்த மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் கட்சிகள் காமத்தையும்
பாலியலையும் எப்படி பார்க்கின்றன என்கிற விஷயம் மிக முக்கியமானது.
குறிப்பாக கலாச்சாரம் ,அதுவும் பாரத கலாச்சாரம் என்கின்ற பெயரில் இந்த அரசியல் கும்பல் அப்பாவிகளை நடுரோட்டில் வேட்டையாடி இருக்கிறது. சின்னஞ்சிறுசுகள் கொண்டாடும் காதலர் தினத்தின் வெகுளி தனங்களில் கூட அசிங்கத்தையே தேடி தேடி பார்த்து இருக்கின்றது. சினிமா எழுத்து கலை என்று எல்லா இடங்களிலும் கலையை தாண்டி கலாச்சாரம் என்ற பெயரில் moral policing செய்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது.
இது கூட பரவாயில்லை மறைந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஹுஸைன் ஹிந்துக் கடவுள்களை வரைய முற்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட கொலை மிரட்டலும் மன உளைச்சலும் சொல்லி மாளாது.

அமெரிக்கவிலிருந்து 145 பேரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது .. கை கால்களை கட்டி விமானத்தில் ...


145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா மாலைமலர் : விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அமெரிக்கா திருப்பி அனுப்பியது.
புதுடெல்லி: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்த பின்னர் தங்கி இருப்பவர்கள், போலி பெயர்கள் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான வகையில் தங்கி இருப்பவர்களை உள்ளூர் மக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி உள்ளது. இதில் 142 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.
அமெரிக்காவின் அரி சோனா மாகாணத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு  இவர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் நேற்று டெல்லி விமானநிலையம் வந்தனர். இவர்களில் அரியானைவை சேர்ந்த ரவிந்தர் சிங் (25) என்பவரும் ஒருவராவார்.

BBC :பப்புவா நியுகினியாவில் இருந்து பிரிந்து பூகன்வில் சுதந்திர தனி நாடக மாறுமா? வீடியோ


பல தீவுகளின் தொகுப்பாக உள்ள பப்புவா நியூ கினியின் ஓர் அங்கமாக உள்ள பூகன்வில் எனும் தீவுக்கூட்டம் சுதந்திரமான தனி நாடாக வேண்டுமா என்பது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இப்போது பப்புவா நியூ கினியின் ஒரு மாகாணமாக பூகன்வில் உள்ளது. சுதந்திரமான தனி நாடாக மக்கள் வாக்களித்தால் இந்த தீவுக்கூட்டம் உலகின் புதிய நாடாகும் வாய்ப்புள்ளது.
சுமார் மூன்று லட்சம் மக்கள்தொகை மற்றும் 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பூகன்வில் தனி நாடாக உருவானால் உலகிலேயே மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாக அமையும்.
சனிக்கிழமை தொடங்கவுள்ள கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்கேற்க சுமார் 2,07,000 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
நவம்பர் 23 முதல் டிசம்பர் 7 வரை பல கட்டங்களாக இந்த வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதன் முடிவுகள் டிசம்பர் மாத இறுதியில் வெளியாகும்
பூகன்வில் - வரலாறு என்ன சொல்கிறது? பூர்வகுடி மக்கள் வசிக்கும் இந்தத் தீவுக்கு பிரான்ஸ் கடலோடி பூகன்வில் 18ஆம் நூற்றாண்டில் வந்தடைந்தார். அவரது பெயரே இதற்கு சூட்டப்பட்டது.

இலங்கை புதிய பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே

Mahinda Rajapaksa sworn in as new Prime Minister of Srilanka tamil.oneindia.com - mathivanan-maran : கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றார். அவருக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் கோத்தபாய ராஜபக்சே. இதனையடுத்து மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து தமது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.
இதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்க வருமாறு எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சேவை, கோத்தபாய அழைத்திருந்தார். இந்நிலையில் இன்று முற்பகல் கோத்தபாய ராஜபக்சேவை நேரில் சந்தித்து தமது பதவி விலகல் கடிதத்தை ரணில் கொடுத்தார்.
இதன்பின்னர் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றார். இலங்கையின் பிரதமராக 3-வது முறையாக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.
அவருக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு மகிந்த ராஜபக்சேவும் நன்றி தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே பதவி காலம் முடியும் முன்பே தார்மீக பொறுப்பேற்று விலகினர்... பின்னணி...

ராஜபக்‌சே ரணில் விக்ரமசிங்கேvikatan :  ராஜபக்‌சேவின் பகிரங்க அறிவிப்பு; ஒரு மணி நேரத்தில் பதவி! - ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா பின்னணி - த்யா கோபாலன் : இலங்கை அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் ரணில் விக்ரமசிங்கே. இலங்கையில் கடந்த 16-ம் தேதி அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று மறுநாள் 17-ம் தேதியே வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை பொதுஜன முன்னணி கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி கட்சி ஆகிய இரண்டும் மிகப் பெரிய கட்சிகளாக உள்ளன.

மகள் ஷீனா போராவை தாய் இந்திராணிதான் கொன்றார் . .. தடயவியல் அறிக்கை... இவர்தான் சிதம்பரத்துக்கு எதிரான சாட்சியாம் ?

Sheena Bora murder case: Indrani Mukerjea’s DNA matches remains recovered from Raigad in 2015 ...   mumbaimirror.indiatimes.com/utm_campaign=cppstwith
இந்திராணியால் கொல்லப்பட்டவர் மகள் ஷீனா போரா தான்: தடயவியல் அறிக்கையில் உறுதி
ஷீனா போரா
கொல்லாபட்ட ஷீனா போரா
தினத்தந்தி :இந்திராணியால் கொல்லப்பட்டவர் அவரது மகள் ஷீனா போரா தான் என்று தடயவியல் அறிக்கையில் உறுதியாகி உள்ளது. மும்பை மும்பையில் தனது சொந்த மகள் ஷீனாபோராவை கொலை செய்த வழக்கில் பிரபல தொலைக்காட்சி நிர்வாகி இந்திராணி முகர்ஜி, அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கொலைக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் சாம்ராய் ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை, ஷீனாபோரா முறை தவறி காதலித்ததால் இந்த படுகொலை நடந்ததாக கூறப்படுகிறது.
கொலையான ஷீனாபோராவின் உடலை எலும்புக் கூடாக ராய்காட் மாவட்டம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து போலீசார் மீட்டனர்.
பின்னர் இந்த கொலையில் உடந்தையாக இருந்ததாக பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.
நேற்று இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீட்கப்பட்ட உடலில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ஆய்வு குறித்து அறிக்கையை தடயவியல் துறை நிபுணர் நேரில் ஆஜராகி வாக்குமூலமாக அளித்தார்.

மம்தா பானர்ஜி : பண மூட்டைகளோடு வரும் பாஜகவின் கூட்டாளி ஒவைசி ..


தினமலர் : கோல்கட்டா: முஸ்லிம்களின் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு ஐதராபாத்தில் இருந்து பண மூட்டையுடன் வரும் சில தலைவர்கள் பாஜ.,வின் தோழர்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ,சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், ''ஹிந்து மத அடிப்படைவாதிகள் போல, நாட்டில் முஸ்லிம் மக்களிடமும் ஒரு சில பயங்கரவாதிகள் உள்ளனர். ஹிந்து அடிப்படைவாதிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதுபோல், இந்த முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் இருந்தும் மேற்குவங்க மக்கள் விலகி இருக்க வேண்டும். இந்த முஸ்லிம் பயங்கரவாதம், ஐதராபாத்தில் இருந்து திணிக்கப்படுகிறது,'' என்றார்.
இதற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவரும், ஐதராபாத் எம்பி.,யுமான அசாதுதீன் ஓவைசி, ''மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு தகவலை கூறியுள்ளார். அந்த மாநிலத்தில் எங்கள் கட்சி அசைக்க முடியாத சக்தி என்பதால் பயப்படுகிறார்'' எனக் கூறினார். இதனால் இருகட்சிகள் இடையே அரசியல் மோதல் வலுத்தது.

காங்கிரஸ் சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி! ..சோனியா காந்தி சம்மதம்?

மராட்டியத்தில் திடீர் திருப்பம்: சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சோனியா காந்தி சம்மதம்?தினத்தந்தி : மராட்டியத்தில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி. மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதாலும், அதற்கு பாரதீய ஜனதா மறுத்ததாலும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால், கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பாரதீய ஜனதாவுடன் மோதலை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஜனாதிபதி ஆட்சி அமலான பிறகு அந்த முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டியது. இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவுடன் கைகோர்க்க முதலில் தயங்கிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், பின்னர் ஆட்சி அமைக்க சம்மதித்தன. இதற்காக மூன்று கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து பேசி கூட்டணி அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தனர் அது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.

பாமக, தேமுதிக: இரண்டில் ஒன்று போதும் - எடப்பாடி முடிவு! தேமுதிகவை கழட்டிவிட யோசனை?

டிஜிட்டல் திண்ணை:  பாமக, தேமுதிக:  இரண்டில் ஒன்று போதும் - எடப்பாடி முடிவு!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“கூட்டிக் கழிச்சி பாரு... கணக்கு சரியாதான் வரும்” என்ற ரஜினி டயலாக் பேசும் டிக்டாக் காட்சியொன்று முதலில் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது. அதை ரசித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த செய்தியை டைப்பிங் செய்துகொண்டிருந்தது வாட்ஸ் அப்.
“உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு தடாலடி மாற்றங்களை அரசியலில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேயர், நகராட்சித் தலைவர்களுக்கு நேரடி தேர்தல் இல்லை என்பதை அரசு தெளிவுபடுத்திவிட்ட நிலையில் இதை அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளே கடுமையாக எதிர்த்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் இமேஜ் உருவாக்கத்துக்கான மெகா கூட்டணியெல்லாம் தேவையில்லை, மைலேஜ் கொடுப்பதற்காக மினிமம் கூட்டணியே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இளையராஜாவின் இசையால் மட்டுமே படங்கள் ஓடினவா?...பிரபல திரைக்கலைஞர் ரிபெல் ரவி

Rebel Ravi :  இளையராஜா..ஒரு காலத்தில் கோலோச்சியது உண்மையே..
ஆனால்...கோபுரம் தாங்கும் பொம்மை போல், என் இசையால் தான் படம் ஓடியது என அவர் சொன்ன போது..சினிமா உலகம், பின் பகுடியால் சிரித்தது..
சினிமா என்பது..கூட்டுக் கலை..
ஒரு படம் ஓடுவதற்கும் ஓடாம ல் போவதற்கும் ஆயிரம் காரணங்கள்
பெரும்பாலான வணிகப் படங்கள் ஓட, முகப் பெரும் காரணம்..அதில் நடிக்கும் ஹீரோவே...
பிறகு..டைரக்டர்.சில நேரங்களில் சில நடிகர்கள்..(உ-ம்) சந்திரபாபு, என் எஸ் கே, சுருளி, சிலுக்கு, கவுண்டர், வடிவேலு..என அவ்வளவே. மற்ற படி.வெகு அரிதாக வசனகர்த்தாவால் படம் ஓடும்(கலைஞர்)..ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் ..இவர்கள் எல்லாம்..கோபுரத்தில் இருக்கும் பொம்மைகளே..இந்த பொம்மைகள்..கோபுரத்தைத் தாங்குவதாக எண்ணிக் கொண்டால்..அது ஆகப் பெரும் காமெடி..
இதைப் பலமுறை பலரும் நிரூபித்துள்ளனர்..
புது இசையமைப்பாளரை வைத்தே ஷங்கர் ஹிட் அடித்தார்.
கிழக்குச் சீமையிலே..படத்தை புது இசையமைப்பாலரை வைத்தே ஹிட் ஆக்கினார் பாரதிராஜா..வானமே எல்லை படம்..பாட்ஷா..இப்படி நூற்றுக்கணக்கில் உதாரணங்கள் உண்டு.. 

தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் கடந்த மூன்று வருடங்களில் பெண் பிறப்பு வெகுவாக குறைந்துள்ளது. ... பாலின சமத்துவும் பாதிப்பு .

Dr.ஃபரூக் அப்துல்லா : கடந்த வாரம் 17 நாட்களே வயதான ஒரு பெண் சிசுவை
உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர் என்ற செய்தியைப் படித்ததில் இருந்து வெகு நாட்களாக எழுத வேண்டி இருந்த இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன்.
நான் மாவட்ட அளவிலான சுகாதார இயக்கத்தின் துணை மேலாளராக பணி புரிகையில் பல சிசு மரண ஆய்வுகளில்( Infant death audit) பங்கேற்றுள்ளேன்.
அந்த ஆய்வுகளில், ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்களின் மரணங்கள் அனைத்தும் அக்குவேறு ஆணிவேராக ஆராயப்படும்.
ஆட்சியர் , இணை இயக்குநர் சுகாதாரம் , துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் , குழந்தைகள் மற்றும் மகப்பேறு நல துறைத்தலைவர்கள் போன்ற அனுபவத்திலும் அறிவிலும் சிறந்த மக்கள் ஆய்வு செய்வர்.
எங்கு தவறு நடந்தது?
அந்த சிசுவை காப்பாற்றியிருக்க முடியுமா?
யாருடைய தவறால் இது நடந்தது?
என்றெல்லாம் ஆராயப்பட்டு முடிவுகள் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவர்களுக்கு செயல்வடிவமாக மாற்றி அனுப்பப்படும். இதன் மூலம் புது protocol கள் உருவாகும்.
இதில் பல நேரங்களில் அனுபவம் வாய்ந்த மக்கள் கூறக்கேட்டதுண்டு
"Unless proved otherwise , a female infant death should be considered as an infanticide"
அதாவது வேறு காரணங்களினால் மரணமடைந்தது என்று நிரூபணமாகாதவரை, அனைத்து பெண் சிசு மரணமும் சிசுக்கொலையாகவே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கண்ணதாசன் திருட்டு ரெயிலில் வந்தார் ... அதை கலைஞர் என்று மாற்றிய பார்பனர்களும் காங்கிரஸ்காரர்களும் ...

திருட்டு ரயிலில் வந்தது யார் ??
கண்ணதாசனா கலைஞரா..??
திருட்டு ரயில் கருணாநிதி என்று சீமான் தொடங்கி அல்லு சில்லில் இருந்து நேற்றைய கோட்டோவியர் பாலா வரை அவரை பற்றி அவதூறு பரப்பி வருவது அனைவரும் அறிந்ததே.
இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளி கண்ணதாசன் அவர்கள் எழுதிய வனவாசம் என்னும் நூலே. அதில் அவர் அவன் பயணச்சீட்டு இல்லாமல் ரெயிலில் பயணித்தான் என்று குறிப்பிட்டிருப்பார். அதில் அவர் தன்னை பற்றி குறிப்பிடும்போதும் மூன்றாமவன் போல "அவன்" "அவன்" என்றே குறிப்பிட்டுள்ளார்.
இதற்கும் மேல் அவர் கலைஞரை அப்படி குறிப்பிடவில்லை என்பதற்கான விளக்கம் என்னவெனில் கலைஞர் எஸ் எஸ் எல் சி ஃபெயில் ஆனவர். கண்ணதாசன் எட்டாவது முடிக்காமல் வெளியேறியவர். அந்த புத்தகத்தில் படிக்கும் போதே எட்டாவது முடித்தவன் எப்படி எழுத்தாளன் ஆக முடியும் என்று கூறிவிட்டு அடுத்த பத்தியில் தான் அந்த திருட்டு ரயில் விசயத்தை பற்றி கூறியிருப்பார். அதாவது தன்னைப்பற்றி..
ஆனால் இந்த ஊடகங்களும் அரைகுறை அறிவுஜீவிகளும் ஒருவகையில் திட்டமிட்டே தான் இதனை கலைஞர் திருட்டு ரெயிலில் வந்தவர் என்று கதை கட்டி விட்டனர்.
நன்றி- A.Parimalam

புதன், 20 நவம்பர், 2019

சபரிமலை பெண் பக்தர்களை விரட்டி விரட்டி வீடியோ எடுக்கும் ஆர்.எஸ்.எஸ்.. 'மிரட்டல்' உத்தி!

சபரிமலைvikatan.com : இந்த விஷயத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டன ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள். கிட்டத்தட்ட 'ஆர்.எஸ்.எஸ் ஆக்‌ஷன் ஃபோர்ஸ்' என்பதுபோலவே அதிரடியாகக் களத்தில் சுழல்கின்றனர் திருக்கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை..' என்று பக்திப் பரவசத்துடன் சபரிமலைக்குக் கிளம்பத் தயாராகிவிட்டனர் ஐயப்ப பக்தர்கள். ஆனால், கடந்த ஆண்டைப்போலவே பயமும் பதற்றமும் இப்போதும் பக்தர்கள் மனதில் குடிகொண்டிருக்கின்றன. 'ஆர்.ஏ.எஃப்' எனப்படும் அதிரடிப்படை பாணியில், சபரிமலைக்குச் செல்வதற்காக பக்தர்கள் வந்து இறங்கும் கேரளத்தின் முக்கியமான நகரங்களிலெல்லாம் 'ஆர்.எஸ்.எஸ் ஆக்‌ஷன் ஃபோர்ஸ்' கண்கொத்திப் பாம்பாகத் திரிந்துகொண்டிருப்பது பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது.
சபரிமலை தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனுவை கடந்த நவம்பர் 14 அன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் முந்தைய தீர்ப்பான 'அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்யத் தடை ஏதுமில்லை' என்பதையும் உறுதிசெய்தது. எனவே, கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்புடன் பெண்களை சபரிமலைக்கு கேரள அரசு அழைத்துச் செல்லும் என்ற எதிர்பார்ப்பும் எகிறிய சூழலில்தான், கேரள அரசு பின்வாங்கி விட்டது.

இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த உதயநிதி? – இணையத்தில் வலம்வரும் விவகாரம்



Devi Somasundaram : உதயநிதி பத்தி அவர பாராட்டி அப்து அண்ணன் போஸ்ட் போட்டார்ன்னு நாலாப் பக்கம் சம்முவம் பொங்கிட்டு இருக்கு .
முதலில் உதய நிதி அவர் பார்த்து வளர்ந்த பையன் .தன் வீட்டு குழந்தைய அவர் பாராட்டாம யார் பாராட்டுவா ? .அதுல உங்களுக்குலாம் என்னை பிரச்சனை..
அப்து அண்ணன் பி டீ ஆர் பையன் பத்தி போஸ்ட் போட்டு இருக்கார், துரை முருகன் பையன் பத்தி போஸ்ட் போட்டு இருக்கார்.அப்பல்லாம் பதறாத சம்முவம் ஏன் ஸ்டாலின் பையன் பத்தி போஸ்ட் போட்டா மட்டும் பதறுது .? அது ஏன்னு உங்க பார்வைக்கே விட்டுடுறேன்.
இளையராஜா ராஜ்கிரணுக்கு மியுஸிக் போட்டார், ராமராஜனுக்கு மியுஸிக் போட்டார், உதய நிதிக்கும் மியுஸிக் போடறார், ராஜ்கிரணுக்கும் ராமராஜனுக்கும் ரைட்டப் எழுதினிங்களா ...இல்ல தான ? என் உதயனிதிக்கு மட்டும் எழுதனும் ...ஏன்னா உங்களுக்கு உதய நிதி பார்த்து தான் பயம். இதுலயே தெரியுது உதயனிதி உங்கள விட பெரிய ஆள்ன்னு..
இப்டி சும்மா இருப்பவர கைய புடிச்சு இழுத்து நீங்களே அரசியல்ல விட்டு அப்றம் வாரிசு அரசியல்ன்னு பேச வேண்டியது .
அதுக்கு அப்து அண்ணன் பதில் சொன்னா அவர இஸ்லாமியர்ன்னு பேச வேண்டியது ..நீட் தேர்வுகாக அவர் பேசினப்ப அவர் இஸ்லாமியர்காகவா பேசினார் ..புதிய கல்விக் கொள்கைகாக பேசினப்ப அவர் இஸ்லாமியர்காகவா பேசினார்.

BBC இந்து கோயில் சிற்பங்களை ‘அசிங்கம்’ என்று கூறியது ஏன்? - திருமாவளவன் பேட்டி.. வீடியோ

இந்துக்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக தனக்கு எதிராக சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் இடுகைகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப அணியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். அவருக்கு எதிராக சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் சவால் விடுக்கும் வகையில் பதிவிட்ட கருத்துகளுக்குப் பிறகு, அந்த விவகாரம் சர்ச்சையாகி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் திருமாவளவனுக்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இது குறித்து விளக்கம் பெற தொல். திருமாவளவனை பிபிசி தமிழ் சந்தித்தது. அவர் அளித்த பதிலின் முழு விவரம்:
கே: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகையும் நடனக்கலைஞருமான ஒருவர், சமீபத்திய நாட்களில் உங்களின் பெயரை குறிப்பிட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறாரே. அவருக்கு பதில் தரும் நடவடிக்கையாக உங்கள் கட்சியினரும் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்திய விவகாரம் சர்ச்சையாகி வருகிறதே.. சமூக ஊடகத்தில் வார்த்தை போரில் ஈடுபடும் அளவுக்கு நடக்கும் இந்த பிரச்னையின் பின்னணி என்ன? ஏன் இந்த சர்ச்சை உருவானது? அதில் உங்களுக்கு உள்ள தொடர்பு என்ன?

இலங்கை பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே

இலங்கை, பிரதமர், ரணில் விக்கிரமசிங்கே, ரணில், மகிந்த ராஜபக்சே, ராஜபக்சே, கோத்தபய, கோத்தபய ராஜபக்சே, இலங்கை அதிபர், தினமலர் : கொழும்பு : இலங்கை பிரதமராக, தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேயை, நியமித்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். நேற்று முன்தினம்(நவ.,18) அவர் அதிபராக வெற்றி பெற்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து, ரணில் பதவி விலகலாம் என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து , இன்று (நவ.,20) ரணில் தனது, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, அதிபர் கோத்தபயாவிற்கு அனுப்பி வைத்தார்.

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு
மாலைமலர் : மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கன அவசர சட்டத்தை பிறப்பித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்வு செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்துக்கு தமிழகஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளா