சனி, 23 ஜூலை, 2022

: Ranil becomes President, the Phoenix rises, again

 ft.lk  - Raj  Gonsalkorale  : A chattering crow lives out nine generations of aged men,but a stag’s life is four time a crow’s,and a raven’s life makes three stags old,while the phoenix outlives nine ravens,but we, the rich-haired Nymphs
daughters of Zeus the aegis-holder,outlive ten phoenixes.
“The phoenix is an immortal bird associated with Greek mythology (with analogs in many cultures) that cyclically regenerates or is otherwise born again. Associated with the sun, a phoenix obtains new life by arising from the ashes of its predecessor. Some legends say it dies in a show of flames and combustion, others that it simply dies and decomposes before being born again. Exterior to the Linear B mention above from Mycenaean Greece, the earliest clear mention of the phoenix in ancient Greek literature occurs in a fragment of the Precepts of Chiron, attributed to 6th century BC Greek poet Hesiod. In the fragment, the wise centaur Chiron tells a young hero Achilles the following, describing the phoenix’s lifetime as 972 times the length of a long-lived human’s” – Wikipedia.

Prime Minister on six occasions, dead as a Dodo after the last general election, losing his own seat, and the party he led, the once mighty United National Party not securing even a single seat in Parliament and polling less than 250,000 nationally, Ranil Wickremesinghe has outlasted and outwitted all by rising on the Pohottuwa bed of strange bedfellows to be voted in as the next President of the country. He has now taken his oaths.

வாஷிங்டனில் நடந்தால் அனுமதிப்பீர்களா? அமெரிக்க தூதுவரிடம் எகிறி பாய்ந்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கே

 ஜாபினா . காம் : வாஷிங்டனில் நடந்தால் அனுமதிப்பீர்களா? அமெரிக்க தூதுவரிடம் எகிறி பாய்ந்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கே  உங்கள் நாட்டு வெளிநாட்டு தூதுவர்களிடம் சீறிப் பாய்ந்த ஜனாதிபதி
புதிய ஜனாதிபதி அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்களை நேற்று (22) மாலை  அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் சம்பந்தமாக தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொருவரையும் பார்த்து ஜனாதிபதி கேள்வி எழுப்பியதோடு வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியுள்ளார். link President with diplomats

இலங்கை அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்தில் இருந்து 1000 கலைப்பொருட்களை அள்ளிச் சென்ற போராட்டக்காரர்கள்

 மாலை மலர் :  அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் முற்றுகை தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
எம்.பி.க்கள் அவர்களின் கடமையை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்க வேண்டாம் என்று அதிபர் வேண்டுகோள்
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களை அனுபவித்து வரும் பொதுமக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 9ம்தேதி, அதிபர் கோத்தபய பதவி விலக வலியுறுத்தி அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்ததால் அவர்களை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

கோவை ஜக்கியின் ஈஷா யோகமையத்தில் ஆந்திர இளைஞர் கொலை .. தற்கொலை என்று (போலீஸ் உட்பட) கதை அழைக்கிறார்கள்

May be an image of 1 person and text that says 'ஈஷா யோகா மையத்தில் தூக்கில் தொங்கிய இளைஞர் உடல் Jul 22, 2022 20:41 C'

ipdtamil.com  : கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் ஒருவர் தூக்கிடு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஈஷா மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஒரு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞர் ஈஷா யோக மையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞன் சிகிச்சைக்காக வந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தேங்கி நிற்கும் 6.5 லட்சம் கார்கள்...சிப் கருவி தட்டுப்பாடு

மின்னம்பலம் : இந்தியாவில் 6 லட்சத்து 50,000 கார்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணத்தையும் நிலவரத்தையும் விளக்கியுள்ளனர்.
தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ட்ரி லெவல் கார்கள், விலை அதிகமான கார்கள் என அனைத்து வகையான கார்களிலும் செமி கண்டக்டர் ‘சிப்’களின் தேவை என்பது அதிகமாக இருக்கிறது.
ஒரு காரில் இருக்கும் இன்ஜின், ஹெட்லைட், டிரைவிங் அசிஸ்ட் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, பாதுகாப்புக்குத் தேவையான ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளைச் செயல்படுத்துவது என காரின் வெளிப்பக்கத்திலும் சரி, உட்புறத்திலும் சரி பல்வேறு பகுதிகளில் மைக்ரோ சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் திடீர் விபத்து.. லாரி மோதியது.. என்ன நடந்தது?

  Nantha Kumar R  -  :   Oneindia Tamil :  கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி 12ம் வகுப்பு மாணவியின் உடல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் திடீரென்று சாலை விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்தார்.
கடந்த 13ம் தேதி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் கூறினார்.
"யூ டர்ன்".. கள்ளக்குறிச்சி மாணவி உடலை கொண்டு சென்ற போது ஏற்பட்ட குழப்பம்.. கான்வாய் நின்றது ஏன்?

வெள்ளி, 22 ஜூலை, 2022

கேரளாவில் பெண் ஆண் மாணவர்கள் ஒருவர் மடியில் ஒருவர் இருந்து சங்கித்தனத்திற்கு செருப்படி கொடுத்தார்கள்

Rishvin Ismath  :  கேரளா, திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்திருக்கும் பேரூந்துத் தரிப்பிடத்தில் ஆரம்பத்தில் நீண்ட இருக்கை (bench) பொருத்தப்பட்டு இருந்தது,
அதில் ஆண் மாணவர்களும், பெண் மாணவர்களும் அருகருகே அமர்வதுண்டு. அவ்வாறு மாணவர்கள் அமர்வது கலாச்சாரச் சீர்கேடு என்று சொல்லி உள்ளூர்க் காவிச் சங்கிகள் நீண்ட இருக்கையை மூன்று தனித்தனி இருக்கைகளாக மாற்றி அமைத்தார்கள். '
அருகருகே உட்கார்வதே கலாச்சாரச் சீரழிவு' என்று சொன்ன காவிச் சங்கிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து கன்னத்தில் செருப்படி கொடுத்தார்கள் மாணவர்கள்.
.இந்தச் செய்தி சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரவியவுடன், செய்தியறிந்த திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் குறித்த பேரூந்துத் தரிப்பிடம் நவீன மயப்படுத்தப்பட்டு மீண்டும் நீண்ட இருக்கை (bench) அமைக்கப்படுவதுடன்,

ராணுவம் மூலம் ( gotagogama) போராட்டகாரர்கள் துரத்தப்பட்டது ஏன்? அதன் பின்னணி என்ன?

 Ashroff Ali-அஷ்ரப் அலீ  : கோட்டா கோ கம-நடைபெற்றது என்ன?
ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் இன்று நண்பகல் அளவில் அங்கிருந்து அகன்று அதனை மீண்டும் அதிகாரிகளிடம் கையளிக்கவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தனர்.
அதற்கிடையில் இன்று நள்ளிரவு திடீரென்று ராணுவத்தினரைக் களமிறக்கி, போராட்டக்காரர்களை அடித்து நொறுக்கி, ஓடவிட்டும் இழுத்துச் சென்றும் அங்கிருந்து அகற்றி ஜனாதிபதி செயலகத்தை அரசாங்கம் மீட்டெடுத்துள்ளது.
போராட்டக்காரர்கள் தாங்களாகவே அகன்று செல்ல இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் அரசாங்கம் படையினரைக் களமிறக்கி அவர்கள் மீது கடும் தாக்குதல் ஒன்றைத் தொடுத்து அவர்களை அங்கிருந்து பலவந்தமாக வௌியேற்றக் காரணம் என்ன? இதுதான் இன்று பலருக்குள்ளும் எழுந்துள்ள கேள்வி. பதில் தேடிக் கொள்ளத் தெரியாமல் பலரும் பகிர்ந்து கொள்ளும் கேள்வி.
நான் கடந்த ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான  என் பதிவுகளில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு வந்துள்ளேன். அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உற்று நோக்கியவர்களுக்கு இன்று நடைபெற்ற விடயத்தின் பின்னணியில் நான் என்ன சொல்ல வந்தேன் என்ற விடயம் தௌிவாக புரிந்திருக்கும்.

இலங்கை புதிய பிரதமராக திரு தினேஷ் குணவர்தனா மற்றும் 18 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்


 இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் புதிய பிரதமராக திரு தினேஷ் குணவர்தனாவை நியமித்துள்ளார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இடது பக்கத்தில் பிரதமர் தினேஷ் குணவர்ந்தானா அமர்ந்திருக்கிறார்
வலது புறத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமர்ந்திருக்கிறார்
எனக்கு தெரிந்த வரையில் அரசு புரோட்டோகால்  (ஆட்சியியல் நடைமுறை பாரம்பரியம்) அடிப்படையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில ஒரு தமிழர் முதல் முதல் முறையாக வந்திருக்கிறார் என்றெண்ணுகிறேன் 

.jaffnamuslim.com : புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்றைய இடம்பெற்றுள்ளது.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்றுள்ளனர்.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் - தினேஷ் குணவர்தன
கடற்றொழில் வளங்கள் அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா
கல்வி அமைச்சர் - சுசில் பிரேம ஜயந்த

அடிமடியிலேயே" கை வைத்து திமுகவுக்கு டேமேஜ்?..குறிவைத்த பாஜக.. ஆதாரங்களை கேட்கும் விசிக.. என்னாச்சு

  Hemavandhana -  Oneindia Tamil News  : சென்னை: உளவுத்துறையை சீண்டி புகார் சொல்லி வரும் தமிழக பாஜகவுக்கு, விசிக அது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளது.
வழக்கமாக திமுக ஆட்சி செய்தால், அதிமுக கேள்வி கேட்கும்.. அதிமுக ஆண்டால், திமுக விமர்சிக்கும்.. இதுதான் நடைமுறை.. ஆனால், இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக மட்டுமே அரசை கடுமையாக சாடி வருகிறது..
அதிமுக செய்ய வேண்டிய போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களையும் பாஜகவே செய்து வருகிறது. அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து விட்ட நிலையில், பாஜக இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டும் வருகிறது.
அதனால்தான், திமுகவின் ஊழல் புகார்களை மாநில தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த துவங்கினார்.. இனி மாதந்தோறும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்..

தி.மு.க.வுக்கு எதிரான ஃபைல்களுடன் டெல்லி சென்ற ஆளுநர்! மோடியை சந்திக்காமல் அவசரமாக சென்னை திரும்பிய பின்னணி

நக்கீரான் - இரா. இளையசெல்வன் :  தி.மு.க. அரசின் திராவிட மாடலுக்கு எதிராக அடிக்கடி சாட்டையை சுழற்றிவருகிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி.
இதற்கு தகுந்த பதிலடியும் தி.மு.க. அரசு அவ்வப்போது கொடுத்து வருகிறது.
ஆனாலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க. அரசை சீண்டிக் கொண்டே இருக்கிறார் ஆர்.என்.ரவி.
இதனால் தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்குமான முட்டல் மோதல்கள் அதிகரித்தபடியே இருக்கும் நிலையில், மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்ற ஆர்.என்.ரவி, அவசரம் அவசரமாக சென்னை திரும்பியிருக்கிறார்.
கவர்னரின் டெல்லி பயணம் குறித்து விசாரித்த போது, "தனது அதிகாரத்துக்குட்பட்டே இயங்குகிறார் கவர்னர்.

கள்ளக்குறிச்சி மாணவியின் அம்மா .. “She is trying to manipulate the audience”.. லு லு தேவ ஜம்லா

No photo description available.

Lulu Deva Jamla G  :  கள்ளக்குறிச்சி மேட்டர்ல நான் இதுவரை எந்த கருத்தும் சொல்லாமலே கடந்து போயிட்டு இருந்தேன். காரணம் அந்த புள்ளயோட அம்மா பேசுற ஒரு வீடியோவ பார்த்தப்போ என் உள்ளுணர்வு (intuition) எனக்கு சொன்ன ஒரு விஷயம்… “She is trying to manipulate the audience” அப்டீன்னு… அது பாலியல் துன்புறுத்தல் கொலையா தான் இருக்கணும்னு பார்க்கிறவங்களை யூகிக்க வைக்கிற மாதிரியான வார்த்தைக்கோவைகள் அந்தம்மா வாயில இருந்து வந்துது… ரொம்ப செயற்கையா புனையப்பட்ட ஒரு தொனியில…
அந்தம்மாவோட அழுகை கூட genuineஆ தெரியல எனக்கு (ஜெனுவினா இருக்கலாம்! ஆனா எனக்கு அப்டி தெரியலன்னு சொல்றேன்). அந்த புள்ளைய இந்தம்மா ஏதாவது வகையில (புதுசா ஒண்ணும் இல்ல, normalஆ எல்லா சராசரி இந்திய அம்மாக்களும் பண்ணுற மாதிரி தான் 😏) mental torture பண்ணி தான் அது கிட்ட தற்கொலை எண்ணத்தை தூண்டியிருப்பாகளோன்னு வரை தோண வச்சுது அந்த அம்மாவோட attitude in that video.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. மாணவி தங்கியிருந்த பள்ளியின் விடுதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

tamil.asianetnews.com - .Thanalakshmi V  : கள்ளக்குறிச்சியின் கலவரத்திற்கு உள்ளான தனியார் பள்ளியின் விடுதி உரிய அனுமதியின்றி இயங்கியதாக மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். மேலும் பதிவு செய்யப்படாத விடுதியில் 24 மாணவர்களை தங்க வைத்துள்ளனர் என்று இதுக்குறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குனியமூரில் உள்ள சக்திப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: பிபிசி தமிழ் செய்தியாளரும் தாக்கப்பட்டார்

BBC tamil :  இலங்கையில் பாதுகாப்புப் படையினர் தலைநகர் கொழும்புவில் உள்ள முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்ட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கூடாரங்களை அகற்றத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே இருந்த போராட்டக்காரர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்குச் சில மணிநேரத்திற்கு முன்னதாக, நூற்றுக்கணக்கான துருப்புகள் மற்றும் போலீஸ் கமாண்டோக்கள் போராட்டக்காரர்களை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.
பிபிசி செய்தியாளர்கள் மணிகண்டன், அன்பரசன் எத்திராஜன், ஜெரின் சாமுவேல் ஆகியோர் பிபிசி நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, செய்தியாளர் ஜெரின் ராணுவத்தால் தாக்கப்பட்டார். அதோடு, ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைபேசியைப் பறித்து, அதிலிருந்து வீடியோக்களை அழித்தார்.

கள்ளக்குறிச்சி கலவரம் - உளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை

zeenews.india.com: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வாரம் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் இறந்ததாக செய்திகள் வெளியானது.  
பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளியின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து பள்ளியின் முன்பு அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டவர்.
இந்த போராட்டம் கலவரமாக மாறி கல்வீச்சு தாக்குதல்கள் ஏற்பட்டது.
இந்த போராட்டம் வலு எடுத்து கலவரமாக மாறியது.
பள்ளியில் வகுப்பறைகள், பேருந்துகள் மற்றும் காவல் துறை வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இலங்கை அரசியல்... சில கிசு கிசுக்கள்

 திரைக்கு வராத சில கதை வசனங்கள் ..
 இலங்கையின்  மூன்று சின்ன மேள செட்டுகளும்  எந்த விபரமும் இல்லாமல் திடுதிப்பென்று
கூழ்ப்பானைக்குள் போய் விழுந்தது அறிந்ததே
இந்த உந்துதலின் பின்னணி பற்றி அங்கிட்டும் இங்குட்டும் பல கிசு கிசுக்கள் உலா வருகிறது
குஜ்ஜூ மாபியாவின் ஏவல் பேய்களான சங்கிகளின் சொல் கேட்டு இந்த சிறு சிறு சின்னமேள செட்டுக்கள் அங்குட்டு போயி போட்டோ எடுத்தவையாம்   (வேறொன்றும் பேசவில்லை என்பதுவும் கவனிக்க தக்கதே)
சங்கி / குஜ்ஜு அஜெண்டா பற்றி ஏற்கனவே சிங்கத்திடம் மெதுவாக பேசியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்
இப்போதெல்லாம் பெரிய காண்டுல இருக்கிறதாம் அந்த சிங்கம் .
இது தெரியாம முணுமுணுக்க போய்,
 ஹியர் ஆப்ட்டர் டோன்ட் கம் வித் ஸச் எ ரபிஷ் ஐடியாஸ் என்று முகத்திலடித்து பிராண்டி  விட்டதாம்

வியாழன், 21 ஜூலை, 2022

நடிகை ரேகா : செருப்பு பிஞ்சிடும் . திருவான்மியூர் பீச்சில் பயில்வானுக்கு சாத்துப்படி

புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஒன்றிய அரசு".. 13 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை!

 கலைஞர் செய்திகள்  : மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மோடி அரசு மிரட்டி வருகிறது என எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் மீண்டும் இன்று சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் 13 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ பேட்டி : இலங்கையில் போராட்டம் போதும்… முடித்துக்கொள்ள வேண்டும்:

 வீரகேசரி  : இலங்கை ஜனாதிபதி தேர்வு நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பத்திரிகையாளர்கள் உரையாடினர். அப்போது அவர் கூறியது என்ன?
நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். பிபிசி சிங்கள சேவையும் அவரிடம் சில கேள்விகளை எழுப்பியது.
கேள்வி: ரணில் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு 2 லட்சம் வாக்குகளால் வெற்றி

 மாலை மலர்  :  ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது  
புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர்.
பாராளுமன்றம் மற்றும் மாநிலத் தலைநகரங்களில் மொத்தம் 31 இடங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது.

“சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆண்டுக்கு வெறும் 3 ஆயிரம் மட்டுமே ஒதுக்கீடு..” : மோடி அரசின் சதி அம்பலம்

May be an image of 2 people and text that says 'Rajendran KR Palani 13h WAH!! !MODI JI!! Modi's Friend 三 mint New India GeApp e-paper Sign Gautam Adani secures world's fourth richest on Forbes list, his wealth doubles ina year India overtakes Nigeria as world's poverty capital March 2022 TM adan M Gautam Adani, chairman the Adani Group. min read. Jul 2022 /MahuaMoitraFans Gautam Adani surpasses Bill Gates to become Fourth richest in the world India overtakes Nigeria as world's poverty capital'

கலைஞர் செய்திகள்   : சிறுபான்மையினர் நலத்துறைக்கான நிதியை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்த அதிர்ச்சி தகவல் ஆர்.டி.ஐ. மூலம் தெரிய வந்துள்ளது.
சிறுபான்மையினர் நலத்துறைக்கான நிதியை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்த அதிர்ச்சி தகவல் ஆர்.டி.ஐ. மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தலா 3 ஆயிரம் ரூபாய் அளவுக்கே நிதி ஒதுக்கியதும் தெரியவந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக். இவர் ஆர்.டி.ஐ. மூலம் தமிழ்நாட்டிற்கு சிறுபான்மையினர் நலத்துறைக்கான ஒன்றிய அரசின் நிதி விபரங்களை கேட்டிருந்தார். இதில் பல்வேறு அதிர்ச்சித்தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:-

சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழப்பு | தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை


hindutamil.in  : சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழப்பு | தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஜூலை 27-ல் விசாரணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இம்மாதம் 27-ம் தேதி விசாரணை நடத்தவுள்ளது.
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான பிரியங் கானூங்கோ உடன் ஆணையத்தின் 2 ஆலோசகர்கள் இம்மாதம் 27-ம் தேதி கள்ளக்குறிச்சி வருகின்றனர். இவர்களுடன் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வருகை தருகிறார்.
இதுதொடர்பாகத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வரும் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

புதன், 20 ஜூலை, 2022

"ரணில்" நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட (1989) ஒரே இலங்கையர்.. 15 வயதில் ஜப்பானிய மொழியில் ஜப்பானிய நாடாளுமன்றத்தில் ...

May be an image of 1 person and text that says 'யார் இந்த ரணில்'

Anparasi Arulchelvan  :  தோல்விகளை வெற்றியாக்கும்  இராஜதந்திரி இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பற்றிய சிறு தொகுப்பு
*உலகத் தலைவர்களால் மரியாதையாக பார்க்கப்படும் இலங்கையின் தலைவர்களில் ஒருவர்.
*அரசியலில் தோல்வியின் நாயகன் என பலராலும் பேசப்பட்டவர்.
*இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி.
*இலங்கையின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்.
*கட்சியில் ஒரே ஒரு உறுப்பினராக தேசியப் பட்டியல் மூலம்பாராளுமன்றம் சென்று பிரதமராக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகி சாதனை படைத்தவர்.
*அதிகப்படியான கல்வித்தகமை கொண்ட இலங்கையின் ஜனாதிபதி
* SSC (தற்போதைய O/L பரீட்சை ) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம் பெற்றவர்.

இலங்கை தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மீண்டும் மீண்டும் தவறிழைப்பதேன்?

பனங்காட்டான் எழுதிய ''அடுத்த காலடிக்கான வழித்தடம் ஈருருளியா? மீனாட்சியா?  காளியா?'' - www.pathivu.com
புலிகளை சுமந்திரன் விசாரிக்க கோரும் சூட்சுமம் என்ன..? - ஐபிசி தமிழ்

Amirthanayagam Nixon  :  வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும், பௌத்த தேசியத்தைக் காக்கவும். ஒற்றையாட்சி அரசியல் யாப்பைத் திருத்தங்களோடு மாத்திரம் பாதுகாக்கவும். எதிரும் புதிருமாக இருக்கும் பிரதான சிங்களக் கட்சிகள் எப்படி ஒருமித்த குரலில் செயற்படுகிறார்கள் என்பதற்கு, இடைக்கால ஜனாதிபதிக்கான தெரிவு முறை பகிரங்கப் படுத்தியுள்ளது.  
டளஸ் அழகபெருமாவை சஜித் பிரேமதாச முன்மொழிகிறார்.
ரணில் விக்கிரமசிங்கவை தினேஸ் குணவர்த்தன முன்மொழிகிறார்.
இதே மாதிரியான பண்பு, எழுபது வருடங்கள் அரசியல் போராட்டம் நடத்தி இன்றுவரை தீர்வில்லாமல் அரசியல் செய்து கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் எப்போது உருவாகும்?
வெவ்வேறு கட்சிகளாக இருப்பது தவறவல்ல. ஆனால், இன அழிப்பு விசாரணை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்  போன்ற பிரதான விவகாரங்களில் ஏன் ஒருமித்த குரலில் பேச முடியாமல் உள்ளது?

இந்திய குடியுரிமையை துறக்கும் இந்தியர்கள் ஒரே ஆண்டில் 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர்

 Palanikumar M | Samayam Tamil:   : உள்துறை அமைச்சகம் மக்களவையில் வெளியிட்ட தகவலின்படி, 2021 ஆம் ஆண்டில் 1.6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாதது ஆகும். 78,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
இது மற்ற அனைத்து நாடுகளிலும் மிக உயர்ந்தது. இரட்டை குடியுரிமையை இந்தியா அனுமதிக்காது. சீனாவில் வசிக்கும் 362 இந்தியர்களும் சீன குடியுரிமை பெற்றுள்ளனர். ஃபஸ்லுர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “தனிநபர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய குடியுரிமையை துறந்தனர்” என்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
2018 ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் குடியுரிமை விதிகளின் கீழ் XXII படிவத்தைத் திருத்தியது. "விண்ணப்பதாரர் வெளிநாட்டு குடியுரிமையைப் பெறுவதற்கும் இந்தியக் குடியுரிமையைத் துறப்பதற்கும் உள்ள சூழ்நிலைகள்/காரணங்கள்" என்ற பத்தியையும் சேர்த்தது.

அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி! டளஸ் அழகபெரும, அனுர குமார இருவரையும் வீழ்த்தினார்

வீரகேசரி : இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்க சபையில் அறிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இதையடுத்து, சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 14ம் தேதி தனது விலகல் கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பியிருந்தார்.

ரணில் - டளஸ் பலப்பரீட்சை! வெல்லப் போவது யார்?

 Ashroff Ali-அஷ்ரப் அலீ   : ரணில்-டளஸ் பலப்பரீட்சை! வெல்லப் போவது யார்?
இந்நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு இன்று காலை பத்துமணியளவில் நடைபெறவுள்ளது.
இதில் தற்போதைக்கு டளஸ் மற்றும் ரணில் ஆகியோர் மட்டுமே பிரதான வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு டளஸ் பக்கம் சாய்ந்துள்ளதால் அவர் தான் வெல்லக் கூடும் என்ற ஊகம் பலமாக எழுந்துள்ளது. அதே நேரம் இந்தியாவும் ரணிலுக்குப்பதில் டளஸ் ஐ வெல்ல வைப்பதில் தௌிவாக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றது.
டளஸ் சீன சார்பு இடதுசாரி சிந்தனை கொண்டவர். அவர் பதவிக்கு வந்தால் சீனாவின் ஆதிக்கம் தான் இலங்கையில் மீண்டும் நிலைநாட்டப்படும். ஆனால் அவர் பெரியளவாக படிப்பறிவற்றவர் என்பதன் காரணமாக அவருடைய ஆட்சியில் இந்தியாவின் செல்லப்பிள்ளை சஜித்தைப் பிரதமர் ஆக்கிவிட்டால் அவரைக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை தம் கைப்பாவையாக ஆட்டுவிக்கலாம் என்பது இந்தியாவின் எண்ணமாகும்.

செவ்வாய், 19 ஜூலை, 2022

அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெறுவார் - மலையக தலைவர் மனோ கணேசன்

ராஜபக்சக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்பதற்காகவே ரணில் வருகை தந்தார் என்பதே எனது எண்ணப்பாடாகும் என்றும் கூறினார்
Sri Lanka names new PM amid growing crisis | The Examiner | Launceston, TAS

  அரியகுமார் ஜஸீஹரன்  : ராஜபக்சக்களைப் பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தார் என்று கூறினால், அது முட்டாள்தனமான எண்ணப்பாடாகும் எனtதெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்,
ராஜபக்சக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்பதற்காகவே அவர் வருகை தந்தார் என்பதே எனது எண்ணப்பாடாகும் என்றும் கூறினார்.
இதே வேளை, நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வெற்றி பெறுவார் என்றும், அதற்கான சாதக நிலை தற்போது காணப்படடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் மற்றும் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகியவை தொடர்பிலும் கருத்து வெளியிடுகையிலேயே மனோ கணேசன் இதனைக்கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுடன் நீண்டகால அரசியல் தொடர்பிலிருந்து வருகின்றேன்.

அதிபர் தேர்தல் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் டல்லாஸ் அழகபெருமாவுக்கும் இடையே கடும்போட்டி

 kuruvi.lk : இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும்  டல்லாஸ் அழகபெருமாவுக்கும் இடையேதான் போட்டி ! ஜேவிபியின் அனுரா ஒரு அடையாள வேட்பாளர் மட்டுமே
டல்லசுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
ஐக்கிய மக்கள் கூட்டணி – 50
ஐக்கிய மக்கள் சக்தி – 37
தமிழ் முற்போக்கு கூட்டணி – 05
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 04
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 02
அபி ஶ்ரீலங்கா (குமார வெல்கம) – 01
43 ஆம் படையணி (சம்பிக்க)- 01
 சுயாதீன அணிகள் – 31

போலி பாஸ்போர்ட் விவகாரம்: உண்மை என்ன?

மின்னம்பலம்  - PN Badri : போலி பாஸ்போர்ட் விவகாரம் தமிழகக் காவல்துறையைப் புரட்டிப்போட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார்களைத் தெரிவித்து ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
மதுரை மாநகரம் பகுதியில் உள்ள அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து பலர் போலியான முறையில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள்.
இதற்குக் காரணம், அப்போது மதுரை காவல்துறை ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதமும், ஐஎஸ் ஏசியாக இருந்த சிவக்குமாரும்தான் என்று குற்றம் சுமத்தியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
அதைத் தொடர்ந்து உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை விசாரிக்க சிபிஐ வருகிறது, கைது செய்யவும் வாய்ப்புகள் உள்ளது என காவல்துறை வட்டாரத்திலும் ஊடகங்கள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.  இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று தெரிந்துகொள்ள புலன் விசாரணையில் இறங்கினோம்

இலங்கை அதிபர் தேர்தலில்: சஜித் பிரேமதாசா வாபஸ்! .ரணில் - டல்லாஸ் - அனுரா மும்முனை போட்டி

tamil.asianetnews.co -Dhanalakshmi    : இலங்கை அரசியலில் பெரிய மாற்றமாக அதிபர் போட்டியில் இருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஜித் பிரேமதாசா வாபஸ் பெற்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் பார்லிமென்ட் உறுப்பினர் டலஸ் அலஹப்பெருமவுக்கு தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.
இலங்கையில் வரும் 20ஆம் தேதி அதிபருக்கான தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் ஐந்து முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் போட்டியில் இருந்து தற்போது திடீரென சஜித் பிரேமதாசா வாபஸ் பெற்றுக் கொண்டார்.
துவக்கத்தில் இருந்து இவர் அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருகிறார்.

கள்ளக்குறிச்சி வன்முறை - கைதான 108 பேருக்கு நீதிமன்ற காவல்

மாலை மலர் :: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.
இந்த இறப்பிற்கு நீதி கேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் எதிரொலித்தது.
நேற்று முன்தினம் திடீரென ஒன்றுதிரண்ட போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
அங்குள்ள பஸ்களை சூறையாடி தீ வைத்தனர். இதனால் சின்ன சேலம் நகரம் போராட்டக்களமானது. கலவரத்தை தடுக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேரடியாக விரைந்து சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

திங்கள், 18 ஜூலை, 2022

அமெரிக்காவில் முகாமிட்ட அரசு குழு - தங்கம் தென்னரசு தலமையில் நிறுவனங்களுடன் ஆலோசனை

 Noorul Ahamed Jahaber   -  Google Oneindia Tamil :   வாஷிங்டன்: தமிழ்நாட்டில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுதுறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கவும், சர்வதேச நிறுவனங்களை தொழில் தொடங்க அழைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் MADE IN TAMILNADU என்ற பெயரில் தமிழ்நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2 ஏக்கர் வரையுள்ள நெற்செய்கை கடன்கள் ரத்து உட்பட பல அதிரடிகள்! ரணில் விக்கிரமசிங்கா அறிவிப்பு

May be an image of 1 person and sitting

ரணில் விக்கிரமசிங்கா (பதில்  ஜனாதிபதி) விசேட அறிக்கை!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சரியான விசாரணைகள் இன்மையால் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, ​​நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக, பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க விசேட அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.  
அதன் பின்னர் இரண்டு மாதங்களில் மின்சாரம் 3 மணித்தியாலமாக குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் அரசுடைமை... வேல்முருகன் அதிரடி!.. kallakurichi sakthi school:

Giridharan N | Samayam Tamil :  பாலியல் குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பிற்கு காரணமாக யார இருந்தாலும் சட்டத்திற்கு முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.
ஒரு பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருக்கிறார் என்றால், அவரது உடம்பில் எப்படி கீறல் இருக்கும்? மாவட்ட நிர்வாகம் நேற்று வரை இதுதொடர்பாக விசாரணை செய்யவில்லை? மாணவர்களை முன்கூட்டியே பள்ளிக்கு வர வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் என்ன?

Acting President Ranil Wickremasinge facing toug fight in President election

    Darshan Eranga  🟥 POLITICAL SECRETS
    💥 President's battle behind the scenes...
    ✅ By now, a sharp battle has been created to elect the next president from the parliament. Acting President Ranil Wickramasinghe, Sajith Premadasa, Dallas Alahaperuma, Anura Kumara Dissanayake have announced that they are coming for the presidential battle. It is announced that Anura Priyadarshana Yapath will be presented.
    ✅This is a secret election. That means only the ministers can use their votes without party consent. That vote is noted in the sequence of 1, 2, 3, 4 ways. If you want to be elected president, you need to get more than half the votes you voted for. If anyone loses that number, the last two will be removed and the second vote will be considered for them. This is the constitutional method.
    ✅ According to internal information, Ranil Wickramasinghe has the support of Mahinda Rajapaksha party of Pohottuwa. 10 out of 14 Sri Lanka Freedom Party members goes to Ranil. Sajith has the support of 4 including Maithripala. It has been announced that Ranil will get the support of 12 members of the Samagi Janabagekha. It is said that the support of a group that became independent from the Pohottuwa will also be given to Ranil.
    ✅ Dallas Alahaperuma reportedly 16 votes in Pohottuwa. Anyway, one of the two Sajith or Dallas is going to resign before the presidential battle. Similarly, the support of the person who leaves is also given to the other and after he wins, the agreement of getting the Prime Minister post under the winner. Or those two parties have come to an agreement to cast their second vote to the other. Sajith or Dalast has more chances of using the votes of 9 independent people including Wimal.
    ✅ Anura Kumara is not expressing support from any other parties. The second vote of their votes is definitely going to be against Ranil.
    Sources - Inside information      Darshan Eranga ( 2022/07/17 12.15 pm )

ஞாயிறு, 17 ஜூலை, 2022

வீட்டு வேலைக்காரர்களாக 5000 போலீசார் . உலகில் எங்கும் நடக்காத காலனித்துவ அக்கிரமம் தமிழகத்தில் இன்னும்

கள்ளக்குறிச்சி மாணவி பாலியல் பலாத்காரம் கொலை?

ஓரம்போ சுரேஷ் :  மாணவியின் இறப்பிற்க்கு மாணவியின் அம்மா தான் காரணம்
    - பள்ளியின் தாளாளர் சாந்திரவிக்குமார்....
மாணவியின் மர்ம உறுப்பில் ரத்தம் வழிந்ததற்க்கும் மாணவியின் அம்மா தான் காரணமா....?
மாணவியின் பின்னந்தலையில் அடிபட்டு காயம் இருந்ததற்கும் மாணவியின் அம்மா தான் காரணமா...?
மார்பகங்களில் நகக் கீறல்கள் இருந்ததற்கும் மாணவியின் அம்மா தான் காரணமா....?
பள்ளியின் வகுப்பறை சுவர்களில் ரத்தக்கரை படிந்த அந்த மாணவியின் ரேகைகள் பதிந்து இருந்ததற்க்கும் மாணவியின் அம்மாதான் காரணமா....?
மாணவிக்கு காய்ச்சல் என்று கூறி ஆஸ்பத்திரியில் சேர்க்க சென்ற பொழுது  நூற்றுக்கணக்கான போலீஸார்  ஆஸ்பத்திரியில் எதற்காக குவித்து வைக்கப்பட்டனராம்...
காய்ச்சலில் உள்ள மாணவி எப்படி திடீரென உயிரிழப்பார்?...
மாணவி இறந்தது பற்றி உங்களுக்கு வருத்தம் இல்லை பள்ளியின் பொருட்கள் போயிற்றே என்று தான் வருத்தம்...

7 வயது சிறுவனை கொலை செய்த 5 மாணவர்கள்.. டி.வி. சீரியலை பார்த்து கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் ! உத்தர பிரதேசம்

 கலைஞர் செய்திகளை - ரேஷிமா : 16 வயது மாணவர்கள் 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்து ஆற்றில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது தவறுதலாக ரூ.40,000 இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வதென்று குழப்பத்தில் இருந்த அவர், தனது நண்பர்களிடம் புலம்பியுள்ளார். எனவே, இதனை சரி செய்வதற்காக அவரது நண்பர்கள் ஒரு யோசனை வழங்கியுள்ளார். அதன்படி ஒரு சிறுவனை கடத்தி, அவரது பெற்றோரிடம் பணம் வசூலிக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவர்கள் அதே பள்ளியில் படிக்கும் 7 வயதுடைய சிறுவன் ஒருவரை, இரு சக்கர வாகனத்தில் தன்னுடன் அழைத்து கொண்டு அலிகர் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி- செவ்வாய்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு இந்தியா மத்திய அரசு ஏற்பாடு

 தினத்தந்தி : இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் எம். தம்பிதுரை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு... அண்டை மாவட்ட போலீசார் குவிப்பு!

நக்கீரன் செய்திப்பிரிவு  : கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த  பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்பில் மர்மம் நீடிப்பதாக மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறை வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிற நிலையில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.
தற்போது நடைபெற்ற பிரேப் பரிசோதனை அறிக்கையில் தெளிவு இல்லை எனக்கூறி கடந்த ஐந்து நாட்களாக மாணவியின் உடலைப் பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியல் நீளம்

tamil.indianexpress.com : நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேசக்கூடாத வார்த்தைகள்,
ஜூலை 18 ஆம்  தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, மக்களவை செயலகம், லோக் சபா மற்றும் ராஜ்ய சபா இரண்டிலும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாததாக கருதப்படும் வார்த்தைகள் மற்றும் வெளிப்படுத்தல்களை பட்டியலிட்டு புதிய கையேட்டை தொகுத்துள்ளது.

இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, ‘ஜும்லாஜீவி’, ‘பால் புத்தி’, ‘கொரோனா பரவுபவர்’, ‘Snoopgate’ (உளவாளி), ‘அராஜகவாதி’, ‘சகுனி’, ‘சர்வாதிகாரம்’, ‘டனாஷாஹி டனாஷாஹி’ (சர்வாதிகாரம், சர்வாதிகாரம்), ‘வினாஷ் புருஷ்’ (அழிவுகரமான ஆள்), ‘காலிஸ்தானி’ போன்ற வார்த்தைகளை விவாதங்களின் போது அல்லது இரு அவைகளிலும் பயன்படுத்தப்பட்டால் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களை சுயமாக சிந்திக்க விடாத சத்தங்கள் Noise pollution .

 ராதா மனோகர்  :  பார்ப்பனியத்திற்கு மனிதர்கள்  சிந்திப் பது பிடிக்காது . கெட்டகோபம் வரும் .
கோயிலகள தேவாரங்கள் புராணங்கள் மந்திரங்கள் எல்லாமே சிந்திக்கவிடாமல் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க விடப்படும் Noise pollution தான்.
கோயில் களில் எக்கச்சக்கமாக மணிகள் மேளங் கள் கூக்குரல்கள் உரத்த குரலில் எல் லோரும் அரோகரா  போன்ற சத்தங்கள் ஒலிக்கும்.
இந்த சத்தங்கள் எல்லாமே அங்குள்ள மனிதர்களை எள்ளளவும் சிந்திக்கவோ எதையும் ஒழுங்காக கிரகிக்கவோ விட கூடாது என்ற நோக்கத்தில் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.
ஆனால் இந்த ரகசி யம் எவருக்கும் தெரியாது .  
இது தான் பார்பனீயத்தின் குள்ள நரித்தனம்.
அங்கு அவர்கள் மந்திரம் சொல்வது மட்டும் மிகவும் கவனமாக மக்கள் கேட்க வேண்டும் என்ற நடைமுறையை ஒரளவு வலியுறுத்துகிறார்கள் .

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் மட்டுமே இன்றைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியும்

 

 Mahakarunananthesivam Sivakajan : ஜனாதிபதிக்கான போட்டியில் ரணில் விக்கரமசிங்க போட்டியிட்டால் அவரையே ஆதரிப்பேன் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவிப்பு!
நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான போட்டியில் ரணில் விக்கரமசிங்க போட்டியிட்டால் அவரையே தாம் ஆதரிக்க உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் பிரபல ஊடகமொன்றிற்கு வழங்கிய செய்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்..
குறித்த விடயம் தொடர்பில் சஜித் பிரேமதாசா என்னுடன் பேசியிருந்தார்.
 அதன்போது அவர் என்னை தனது தந்தையின் நண்பர் என்றும் தனக்கு குறித்த ஜனாதிபதி போட்டியின்போது ஆதரவு தருமாறும் கோரியிருந்தார்.