வியாழன், 10 நவம்பர், 2016

சிரிப்பாச் சிரிக்கும் பொருளாதாரம்.. நடப்பது ஒரு பொம்மலாட்டம் ..

வணக்கம் சாமி.. என் பேரு மாரியம்மா.. இந்த ஐநூறு ரூவா நோட்டை மாத்திக்
கொடுங்க..
இந்த பணம் எப்படி வந்திச்சு.. Source of income..?
 சோறுல்லாம் இல்லைங்க. காலையில ராவுல இட்லி கடை மட்டும்தாங்க.
ஓ, டிபன் கடையா.. சரி, டின் நம்பர், பேன் நம்பர் சொல்லு..
பேனுல்லாம் மாட்டலைங்க.. மரத்தடியில நாலு கீத்தைக் கட்டி மறைச்சிருக்கேன்.. டின்னுல கைகழுவ தண்ணி வச்சிருக்கேன்..
மரத்தடியா.. ? PWD என் ஓ சி வேணும்.பொல்லுசன் கண்ட்ரோல் போர்டு அப்ரூவல் வேணுமே..
 என் வீட்டுக்காரரை கேட்கறீங்களா..அவரு போய்ட்டாருங்க அய்யா..வேணுகோவாலு முழு பேரு..
அய்யய்யே .. பணத்தை கொடுத்துட்டு போம்மா.
நான் கேட்டதெல்லாம் எடுத்துட்டு வா..அப்புறம் பாத்துக்கலாம்...
வீட்டு நம்பர் சொல்லு..
கதவு இல்லைங்க..சாக்கு மறைப்புதான்.. அதில நம்பர் ஏதுங்க.. தெரு பேரு.. ரோட்ல ஒரு ஓரமா குடிசை போட்ருக்கேன்..அது தெரு இல்லைங்க.. சரி, பின்கோடு ..? மண் ரோடுதாங்க.. ஈ மெயில் இருக்கா..
சாணியக் கரைச்சு வெளக்கமாத்தால சுத்தமா அடிச்சு வச்சிருக்கேன்..
 ஈ எறும்பு ஒண்ணும் அண்டாது.. பேங்கு அக்கவுண்ட் நம்பரை கொடு.. பேங்கு எங்கயிருக்கு சாமீ... ?  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: