tamil.oneindia.com -Rajkumar R : மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவருமான பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை தொடர்பாக மூன்று பேரை கைது செய்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸில் முக்கிய சக்தியாக வளம் வந்தவர் பாபா சித்திக், மகாராஷ்டிரா பொருத்தவரை காங்கிரஸின் பலம் பொருந்திய இஸ்லாமிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.
சனி, 12 அக்டோபர், 2024
NCP தலைவர் பாபா சித்திக் சுட்டு கொலை! மகராஷ்டிராவில் பெரும் பரபரப்பு! 3 பேரை கைது!
ரத்தன் டாடாவுக்கு பாரம்பரிய தமிழ் மருத்துவம் செய்த கோவை வைத்தியர் லட்சுமணன்
bbc.com:- சேவியர் செல்வக்குமார் : “ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வீதமாக, பல மணி நேரம் அவருக்கு அவரது வீட்டிலேயே சிகிச்சை கொடுத்தேன். அந்த நேரங்களில் எத்தனையோ விஷயங்களை எங்களிடம் அவர் பேசினார்.”
இந்த வார்த்தைகளைச் சொல்வது கோவை மருதமலையைச் சேர்ந்த வர்ம வைத்தியர் கோ.மு.லட்சுமணன். அவர் தன்னிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் கூறியது, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவை.
கோவை மருதமலை அடிவாரத்தில் வர்ம முறையிலான தமிழ்ப் பாரம்பரிய வைத்திய சாலை ஒன்றை நடத்தி வருகிறார் லட்சுமணன். கடந்த 2019-ஆம் ஆண்டில், மும்பையில் ரத்தன் டாடாவின் வீட்டில் வைத்தே பல நாட்கள் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார் இவர்.
திருவள்ளூர் அருகே ரயில் விபத்து: சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதின.. தீப்பிடித்த பெட்டிகள்
zeenews.india.com 0 Sripriya Sambathkumar : திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் ஒன்றும் மைசூரு தர்பாங்கா பயணிகள் விரைவு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் குழப்பமும் பதட்டமும் நிலவுகின்றது.
ரயில்கள் மோதிய வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிகின்றன. தீயணைப்புத் துறையினரும் உள்ளூர் மக்களும் தீயை அணைக்க மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மைசூரில் இருந்து சென்னை வழியாக பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நுவரெலியா 12 மாணவிகளை மிக கொடூரமாக தாக்கிய ஆசிரியை
tamilmirror.lk - ஆ.ரமேஸ் : நுவரெலியாவில் பிரபல மகளிர் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் 12 மாணவிகள் தலைமை ஆசிரியை ஒருவரால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டதற்கு நீதி வழங்குமாறு பெற்றோர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையம் மற்றும் கல்வி திணைக்களத்தில் முறையிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான 12 மாணவிகளில் ஒரு மாணவி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் 141 ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் ஆபத்தை தாண்டி தரை இறங்கியது
மாலை மலர் : திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.
திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
விமானத்தில் பயணத்தவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். இந்த நிலையில், நடுவானில் வட்டமடித்த விமானத்தில் நடந்த திக் திக் நிமிடங்களை பயணிகள் விவரித்தனர். அப்போது பேசிய பயணி ஒருவர், நாங்கள் ஷார்ஜாவை நோக்கி பயணம் செய்வதாகவே நினைத்தோம். என்ன நடந்தது என்றே தெரியவில்லை."
வெள்ளி, 11 அக்டோபர், 2024
அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை அதிகாரி அட்மிரல் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சந்திப்பு!
தேசம் நெட் : அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
Lyca - Subaskaran Allirajah’s political maneuvering in Sri Lanka?
Subaskaran Allirajah’s political maneuvering in Sri Lanka is far more dangerous than his business ventures alone. His true goal is to become the puppet master behind the scenes, pulling the strings of the country’s political and economic landscape. By infiltrating the media, gaining control of Sri Lanka Telecom, and aligning himself with political parties, Subaskaran seeks nothing less than the balance of power in Parliament—effectively turning Sri Lanka’s democracy into a front for his personal empire.
1. Media Takeover to Control Public Narrative:
Subaskaran’s acquisition of key media outlets in Sri Lanka isn’t just about expanding his entertainment empire; it’s a strategic move to control the flow of information. By dominating the media, he can manipulate the public discourse, silence critics, and promote politicians who align with his interests. His media networks are already softening the public image of corrupt politicians and shaping narratives that serve his agenda. This kind of influence over media is dangerous in any democracy, but in a fragile country like Sri Lanka, it becomes a weapon of mass manipulation.
டியாகோ கார்சியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் ருமேனியாவுக்கு அனுப்படுவர்! பிரித்தானிய தீர்மானம்
Letchuman Shanmuganathan : டியாகோ கார்சியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள்! பிரித்தானியா எடுத்த தீர்மானம். இந்தியப் பெருங்கடலிலுள்ள பிரித்தானிய - அமெரிக்க இராணுவத் தீவான டியாகோ கார்சியா முகாமில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை தற்காலிகமாக ரொமேனியாவுக்கு அனுப்ப பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆறு மாதங்களுக்குப் பின்னர், அவர்கள் பிரித்தானியாவுக்கு மாற்றப்படலாம் அதேநேரம் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு நிதி சலுகைகள் வழங்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வியாழன், 10 அக்டோபர், 2024
ரட்டன் டாடா - 4 காதல் தோல்விகளால் திருமணமே செய்து கொள்ளாமல் ஒரு உண்மையான துறவியை போல வாழ்ந்தார்
tamil.news18.com -Malaiarasu M : வினையாக வந்த இந்தியா - சீனா போர்... ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை தெரியுமா?
இந்திய தொழில்துறையின் முகமாக அறியப்பட்டவர் தொழிலதிபர் ரத்தன் டாடா. இவர் தலைமையில் டாடா குழுமம் கைவைக்காத துறைகளே இல்லை எனலாம். ஓய்வுக்கு பின்னும்கூட ஸ்டார்ட்அப் துறைகளில் முதலீடு செய்து மற்ற இளம் தொழிலதிபர்கள் மத்தியில் கெத்து காட்டியவர் ரத்தன் டாடா.
பிசினஸ் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இன்ஸபிரேஷனான டாடா, ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
முரசொலி செல்வம் காலமானார்! திராவிட முன்னேற்ற கழகத்தின் முதுபெரும் காவலர்!
கலைஞர் செய்திகள் - லெனின் : அந்தோ… கழகத்தின் கொள்கைச் செல்வம் மறைந்தாரே” : கண்ணீர் மல்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
முரசொலி செல்வம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
”தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்” என முரசொலி செல்வம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.
கொல்கத்தா பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: சஞ்சய் ராய்க்கு எதிராக 11 ஆதாரங்கள்
தினமணி :கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தில், சஞ்சய் ராய்க்கு எதிராக சிபிஐ குற்றப் பத்திரிகையில் 11 ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
டாடா குழுமத்தின் அதிகாரம் யாருக்கு..? டாடா குடும்பத்தின் அடுத்த தலைமுறை..!
tamil.goodreturns.in -Prasanna Venkatesh : டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அக்டோபர் 9ஆம் தேதி இரவு மும்பை மருத்துவமனையில் உடல் நல குறைவால் மறைந்தார். இந்த வாரம் திங்கட்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்க அவர், இன்று மாலை மீண்டும் மோசமான உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவருடைய மறைவு இந்திய மக்கள் மனதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது,
பொதுவாக ஒரு தொழிலதிபரின் மறைவு இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தாது.
ஆனால் டாடா குடும்பமும், டாடா குழுமம் இந்திய மக்களுக்கு கல்வி முதல் சுகாதாரம் வரையில், நாட்டின் வளர்ச்சியிலும், மக்களின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றியிருக்கும் காரணத்தால் ரத்தன் டாடா மீதும், டாடா குடும்பத்தின் மீதும் தீரா அன்பு இப்போதும் இருந்த நிலையில் இவரின் மறைவு கண்ணீராக மாற்றியுள்ளது.
Ratan TATA தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!
நக்கீரன் : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா காலமானார்.
புதன், 9 அக்டோபர், 2024
சாம்சங் தொழிலாளர்கள் கைது: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
dinamani.com : சாம்சங் விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளா்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஜனதா என்ற சொல்தான் சனாதனத்தின் வேர். ஜனதா(Zanatah) ஓர் மேற்காப்ரிக்க சொல் மற்றும் நிலப்பகுதி
புகச்சோவ் புகச்சோவ் : இவர்கள் ஆரியர்கள் கிடையாது! .
ஏனென்றால், ஈரானியர்களே ஆரியரல்லர்.
ஒரிஜினல் ஆரியர்கள் M17 மரபணுவைக்கொண்ட நோர்டிக் பகுதியினர். அது பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மன் காரர்களாவர்.
ஈரானிலும், இந்தியாவிலும் உள்ளவர்கள் ஆரிய கலப்பில் உருவான பூர்வீக ஆப்ரிக்கர்களாவர். இவர்கள் M18 மரபணுவை கொண்டவர்கள்.
இதில் இந்தியாவில் காணப்படும் ஒருசில M17 ஆரியர்கள் மேற்கத்திய படையெடுப்பாளர்களால் விதைக்கப்பட்டவர்களாவர்.
இந்தியாவின் M18 வெள்ளை நிறத்தவர்கள், ஆரிய M17னுடன் பல்வேறு ஆப்ரிக்க மரபணுக்கள் கலந்தபோது, சிறியளவு ஆரிய மரபை கொண்டுள்ள ஆப்ரிக்கர்கள் மட்டுமே தவிர, ஆரியர்களல்ல.
நமது M20 திராவிட மரபணு தோன்றி 45000 - 25000 வருடங்கள் ஆகின்றன.
ஆனால், இந்திய வெள்ளநிறத்தவரின் M18 மரபணு தோன்றி 8000 - 6000 வருடங்கள்தான் ஆகின்றன.
சிங்கப்பூா்: தமிழ் அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு 7 சதுர மீ. பரப்பளவில் தனிச் சிறை
தினமணி : சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரனுக்கு 6.9 சதுர மீட்டா் பரப்பளவிலான தனி சிறை அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், எஸ். ஈஸ்வரன் படுத்துறங்குவதற்கு ஒலைப் பாய் மற்றும் இரு போா்வைகள் தரப்பட்டுள்ளாகவும் மற்ற அனைத்து சிறைக் கைதிகளையும் போல் பற்பசை, செருப்பு, உடை, துண்டு, உணவை உண்பதற்காக பிளாஸ்டிக் கரண்டி ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினா்.
ஹரியானா தேர்தல்: பாஜக சூழ்ச்சி செய்து வெற்றி... காங்கிரஸ் குற்றச்சாட்டு!
மின்னம்பலம் - Selvam : ஜம்மு, காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (அக்டோபர் 8) வெளியாகியுள்ளது. இதில் ஜம்மு, காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அதேவேளையில், பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஹரியானா காங்கிரஸ் வசம் செல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய பல கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், அதற்கு நேர் எதிராக ஹரியானாவில் 48 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், ஹரியானாவில் பாஜக சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றிருப்பதாகவும், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 8 அக்டோபர், 2024
ஹரியானாவில் பாஜகவுக்கு வெற்றி...? காஷ்மீரை கைப்பற்றும் காங்கிரஸ் கூட்டணி!
zeenews.india.com - Sudharsan G : Jammu and Kashmir Election Result 2024 LIVE Update: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஆக. 8) நடைபெறுகிறது. இதுகுறித்து உடனடி தகவல்களை இங்கு அறிந்துகொள்ளலாம்.
: ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) மற்றும் ஹரியானா மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக். 8) நடைபெறுகிறது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த அக். 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் ஆகும். இங்குள்ள 90 தொகுதிகளில் மூன்று கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றன.
இந்தியாவில் விற்பனையாகாமல் நிற்கும் 7.9 லட்சம் கார்கள்...தடுமாற்றத்தில் டீலர்கள்!
minnambalam.com - Kumaresan M : நாடு முழுக்க ரூ.79 ஆயிரம் கோடி மதிப்புள்ள கார்கள் விற்பனையாகாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் புது புது கார்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. புதிய புதிய கார் ரகங்கள் சந்தையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் விற்பனையாகாமல் நிற்கும் 7.9 லட்சம் கார்கள்...தடுமாற்றத்தில் டீலர்கள்!புதிய கார் நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தொழிற்சாலைகளை தொடங்குகின்றன. ஆனால், கார்கள் விற்பனை மட்டும் மந்தமாக இருக்கதாக தகவல் வெளியாகியுள்ளது.
திங்கள், 7 அக்டோபர், 2024
மெரினா விமான விளையாட்டை பார்க்கவந்தவர்கள் உயிரிழப்பு!.. சிகிச்சையில் 97 பேர்".. நேரம் ஆக ஆக கதறும் உறவினர்கள்
dinakaran :
தினகரன் : சென்னை: மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழந்தார். காமராஜர் சாலையில் மயக்கமடைந்த நபருக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் என்பவர் காமராஜர் சாலையில் மயக்கமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாகச நிகழ்ச்சியை காண வந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மயக்கமடைந்த 4 பேர் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
வைணவ முறைப்படி வைகோ வீட்டு திருமண அழைப்பிதழ்? - புயலை கிளப்பிய சர்ச்சை
tamil.samayam.com : திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், மதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருப்பவர் வைகோ.
சுமார் 50 ஆண்டுகாலத்திற்கும் மேலான அரசியல் அனுபவத்துடன், தமிழகத்தின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
தன் கொள்கையை எப்போது விட்டுத் தராத வைகோ, அதற்காக தேர்தல் அரசியலில் கூட சமரசம் செய்துகொள்ளவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
ஞாயிறு, 6 அக்டோபர், 2024
அன்னக்கிளி கதாசிரியர் ஆர்.செல்வராஜ் நூறு படங்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார்..
Kavitha Bharathy : தமிழ்த்திரையுலகைப் புரட்டிப் போட்ட அன்னக்கிளி திரைப்படம் வெளியானது..
அன்னக்கிளி படத்தின் கதாசிரியர் ஆர்.செல்வராஜ் இதுவரைக்கும் நூறு படங்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார்.. அன்னக்கிளி தொடங்கி அலைபாயுதே வரை அதில் பாதிக்கும் மேல் பெருவெற்றிப்படங்கள்.. ஏறக்குறைய ஐம்பதாண்டு காலத்தில் ஆர்.செல்வராஜ் இடத்தை எந்த இலக்கியவாதியும் நெருங்கவில்லை..
ஆனால் திறமையான திரை எழுத்தாளர்கள் என்று பட்டியலிட்டால் சுஜாதா, பாலகுமாரன் என்று சொல்வார்களே தவிர ஆர்.செல்வராஜ் பெயரைச் சொல்லமாட்டார்கள்..
சமகாலத்தின் வெற்றிப்பட எழுத்தாளர்கள் விஜி, பாஸ்கர் சக்தி, பொன்.பார்த்திபன், தமிழ்ப்பிரபா பெயர்களை திரை எழுத்தாளர்களாகக் குறிப்பிடாமல் இருட்டடிப்புச் செய்வார்கள்..
குகையில் இருந்து மீட்கப்பட்ட சாதுவுக்கு வயது 188? 110 ? அதிரும் நெட்டிசன்கள்!
இந்த வீடியோவை மட்டும் 29 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த நிலையில், மீட்கப்பட்ட சந்தியாசி பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவரின் பெயர் சாய்ராம் பாபா என்பது தெரிய வந்துள்ளது.
ஹரியானா ஜம்மு காஷ்மீர் எக்சிட் போல் .. காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக அள்ளுகிறது.. திமுகவின் மகளிர் உரிமை தொகை ஹைலைட்
tamil.oneindia.com - Shyamsundar : மோடிக்கு சிம்ம சொப்பனமாக மாறிய மகளிர் உரிமைத்தொகை! எக்சிட் போல் கணிப்பை பாருங்க.. பாஜகவிற்கு ஷாக்
சென்னை: தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளது. ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் இந்த திட்டம் தேர்தல் சமயத்தில் பெரிய அளவில் கவனம் பெற்றது. காங்கிரஸ் மகளிர் உரிமை தொகை திட்டத்தை வாக்குறுதிகளாக அறிவித்து இருந்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப் பேரவையின் 90 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 3 கட்டங்களாக 2024 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 8, 2024 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.