சனி, 22 அக்டோபர், 2022

கைத்துப்பாக்கி வாங்க, விற்க தடை - கனடா பிரதமர் உத்தரவு! Canada bans new handgun sales

மாலை மலர்  :  ஒட்டாவா:  கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என்றும், இது உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடா பாராளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதித்தனர்.
புதிய கைத்துப்பாக்கி முடக்கம் ஒரு உடனடி நடவடிக்கை என ட்ரூடோ நிர்வாகம் கூறிவந்தது. இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் கொல்லப்படும்போது, ​​மக்கள் பாதிக்கப்படும்போது, பொறுப்பான தலைமை நாம் சிறப்பாக செயல்பட வேண்டும்.

ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!- சாதித்த தி மு க அரசு! செயல்படுத்தியது எப்படி?

tamil.oneindia.com   - Kadar Karay  : சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பே 'நாங்கள் சொன்னதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம்' என்றார். அதன் அடையாளமாக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கி சர்ப்ரைஸ் தந்துள்ளார்.
15,691 நிறுவனங்கள்; 99,989 பேருக்குப் பணி
திமுகவின் கடந்த 15 மாதகால ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள 65 பெரிய கல்லூரிகளில் 882 வேலைவாய்ப்பு முகாம்கள் இதுவரையில் நடைபெற்றுள்ளன. இதுதவிர, தனியாக 817 வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.
'இதுவரை 15,691 நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் 99,989 பேருக்குப் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுவிட்டன' என்று முன்பே முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து வெளியே இட்டுச் செல்லப்பட்ட முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவ்- (வீடியோ இணைப்பு)

BBC தமிழ் : சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து ஹு ஜின்டாவ் வெளியே இட்டுச் செல்லப்படும் காட்சி.
அதிகாரம் மிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், மேடையில் அதிபர் ஷி ஜின்பிங் அருகே அமர்ந்திருந்த முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவ் திடீரென அங்கு வந்த அதிகாரிகளால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கு விளக்கம் ஏதும் தரப்படவில்லை.
2003 முதல் 2013 வரை சீனாவின் அதிபராக இருந்த ஹு ஜின்டாவுக்கு தற்போது வயது 79. இவருக்கு அடுத்தபடியாகவே, ஷி ஜின்பிங் பதவிக்கு வந்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருவார கால மாநாட்டின் இறுதியில் அதிபர் ஷி ஜின்பிங் மீண்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக, அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனப் புரட்சியின் தலைவரும், முதல் அதிபருமான மா சே துங் காலத்துக்குப் பிறகு எவரும் தொடர்ந்து மூன்று முறை அதிபராக இருந்ததில்லை.

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 40 கோடி ரூபாய்... முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றச்சாட்டு

tamil.samayam.com  : தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியின் போது, ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவியது.
அப்போது 2017 ஆம் ஆண்டு, பன்வாரிலால் புரோஹித் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
நான்கு ஆண்டுகள் தமிழக ஆளுநராக இருந்த அவர், 2021 இல் இங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு, பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பு வகித்துவரும், தமிழகத்தின் முன்னாள் ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், பல்கலைக்கழக துணேவேந்தர்கள் நியமனம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது தமிழக அரசியல் அரங்கில் புயலை கிளம்பும் விதத்தில் அமைந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழியில் பைக் விபத்து .. பதறித்துடித்த ஸ்டாலின் - வைரலாகும் வீடியோ

zeenews.india.com -  Sudharsan G  :  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக முகாம் அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சென்னை அண்ணா சாலை ஏஜி டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருர், சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்தார்.
இதனால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட முதலமைச்சர் ஸ்டாலின், தனது கான்வாய் வாகனத்தை உடனடியாக நிறுத்தியுள்லார். வாகனத்தில் இருந்து இறங்கி, காயமடைந்தவரை உடனடியாக அங்கு நின்ற ஆட்டோவில் ஏற்றி, சிகிச்சை மேற்கொள்வதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர்?

nakkeeran  : அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அக்டோபர் 17 ம் தேதி அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது.  காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த இந்த தேர்தலில் பதியப்பட்ட வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு நேற்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
அதில் மல்லிகார்ஜுன் கார்கே 7,897 வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் சுமார் 1000 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறினார்.

வெள்ளி, 21 அக்டோபர், 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மற்றுமொரு அதிரடி வெற்றி .. 22வது அரசியல் அமைப்பு திருத்த சட்டம் நிறைவேறியது

hirunews.lk   : 22ஆவது திருத்தம் மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று மாலை நாடாளுமன்றில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதில், 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக இரண்டாம் வாசிப்பின் போது 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர எதிராக வாக்களித்தார்.
இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மலையக இலக்கிய இமயம் திரு தெளிவத்தை ஜோசப் அய்யா காலமானார்!

May be an image of 1 person and text

Shadagopan Ramiah  : ஒரு மகா விருட்சத்தின் மறைவு.....
மலையகத்தின் எழுத்து இமயமும் மலையகத்தின் தேசிய அடையாளமுமான தெளிவத்தை ஜோசப் என்ற மகாவிருட்சம் மறைந்தது
1980 களில் நாவலப்பட்டி என்ற சிறு நகரத்திலிருந்து தன்னந்தனியாக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வந்த எனக்கு முதல் முதலில் அறிமுகமானவர் அந்தனி ஜீவா .அவர் மூலமாக சிறுகதை எழுத்தாளர் சுபையர் இலங்கீரண் அறிமுகமானார். அதன்பின் எனக்கு படிப்படியாக தெளிவத்த ஜோசப் , பிரேம்ஜி ஞானசுந்தரம் , ராஜஸ்ரீ காந்தன்,  சோமகாந்தன் போன்றவர்கள் அறிமுகமானவர்கள். இவர்கள் அனைவரையும் விடவும் என்னில் மிகவும் ஒட்டிக் கொண்டவர் தெளிவற்றை ஜோசப் அவர்கள் தான் . அதற்கு காரணம்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு ..மீனவர் வீரவேல் படுகாயம் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி .. பிரதமர் மோடிக்கு கடிதம்

kalaignarseithigal.com  Prem Kumar  :  தமிழ்நாடு  “இந்தியக் கடற்படையினர் நிதானத்துடனும் கையாள அறிவுரை வழங்குங்கள்” : பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!
தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச் சூடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
  அக்கடிதத்தில், 10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று (21-10-2022) மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் இம்ரான் கான் 5 ஆண்டு தேர்தலில் நிற்க தடை!

minnambalam.com -  Kalai  :  இலவச பரிசுப் பொருட்கள் தொடர்பான வழக்கில் 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  
“தோஷ்கானா” என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தின் கீழ்  1947ல் உருவாக்கப்பட்டத் துறை. இந்த துறை என்பது நாட்டின் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரிகள் பெறும் பரிசு பொருட்களை பெற்று பாதுகாக்கும்.
தோஷ்கனாவில் இருந்து குறிப்பிட்ட தள்ளுபடி விலையில் பொருளை வாங்கி வைத்து கொள்ளவும் வழிவகை இருந்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் கொலைகள் - டிஎஸ்பி லிங்கத் திருமாறன் சஸ்பெண்ட்.. ஏற்கனவே 4+3.. அருணா ஜெகதீசன் ரிப்போர்ட்டை தொடர்ந்து அதிரடி!

tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை எதிரொலியாக டிஎஸ்பி லிங்கத் திருமாறன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டசபையில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
அதில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், சரக டிஐஜி உள்ளிட்ட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அப்போதைய டிஎஸ்பி லிங்கத் திருமாறனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 4 போலீசார், 3 வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அருணா ஜெகதீசன் ரிப்போர்ட்

உணவளித்த மனிதர் இறப்பு ! முத்தம் கொடுத்து எழுப்பிய குரங்கு.. தேம்பி அழுத மாருதி! நெஞ்சை உலுக்கும் வீடியோ

Vishnupriya R  -  Oneindia Tamil News : இலங்கையில் மட்டக்களப்பில் தனக்கு அன்றாடம் உணவு வைக்கும் நபர் இறந்ததை அடுத்து அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட குரங்கு, அவரை எழுப்புவதற்கு முயற்சித்த காட்சிகள் அங்கிருந்தோரை கலக்கமடைய செய்தது.
மனிதர்களை விட ஐந்தறிவு ஜீவராசிகள் மிகவும் அன்பானவை. உணவு புகட்டி அன்பாக இருக்கும் மனிதர்கள் மீது ஐந்தறிவு ஜீவன்கள் பாசத்துடன் இருக்கும். அவர்களுக்கு ஒரு ஆபத்து என வந்துவிட்டால் தனது உயிரை கொடுத்தும் காப்பாற்றும் பொதுநலவாதிகள் அவை.
அண்மையில் நிறைய செய்திகளை பார்த்துள்ளோம். எஜமானரை கடிக்க வந்த பாம்பை கடித்து உயிர்விட்ட பாசக்கார நாய், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் அருகே சென்ற பாம்பை கடித்துகுதறி உயிரை விட்ட கதையெல்லாம் பார்த்திருக்கிறோம்.
சக மனிதர்களுக்கு கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் நன்றி என்ற ஒன்று அவர்களில் எத்தனை பேருக்கு இருக்கும் என்பதை தெரியாது.

போக்குவரத்து விதி மீறல்: அபராத தொகை பல மடங்கு உயர்வு - உடனடி நடைமுறை!

தினத்தந்தி  : சென்னை போக்குவரத்துவிதிகளை மீறுவதால் விபத்துகள் நேரிட்டு நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அபராத தொகை உயர்வு
போக்குவரத்து விதிகளை பள்ளிக்குழந்தைகளும் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு பாடத்திட்டங்களை இயற்றி வருகிறது. எவ்வளவோ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தாலும், போக்குவரத்து விதிகளை பெரும்பாலானோர் மீறிக்கொண்டுதான் இருக்கின்றனர். சிறிய விதிமீறல் பெரிய இழப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது.
எனவே அபராதத் தொகையை அதிகரித்தால் மட்டுமே விபத்துகளை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்து மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டது.

வியாழன், 20 அக்டோபர், 2022

எம்ஜியாரும் எம் ஆர் ராதாவும் ஒருவரை ஒருவர் ஏன் சுட்டுக்கொண்டார்கள்?

Ananda Vikatan - 07 November 2007 - நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு இது  நூற்றாண்டு விழா! | - Vikatan

ராதா மனோகர் : எம் ஆர் ராதா மட்டும் சுடவில்லை  எம்ஜியாரும் திருப்பி சுட்டார்   
இருவரும் துப்பாக்கி வைத்திருக்கும் பழக்கம் உள்ளவர்கள்   
எம் ஆர் ராதா மறைக்க மாட்டார் ,, எம்ஜியார் கொஞ்சம் மறைப்பார்  
எம் ஆர் ராதாவின் துப்பாக்கியை பறித்து அல்லது தனது துப்பாக்கியால் எம்ஜியாரும் எம் ஆர் ராதாவை சுட்டார்
ஒரு வேளை எம் ஆர் ராதாவுக்கு ஏதாவது பாரதூரமாக நேர்ந்திருந்தால் மாட்டுப்படுவது எம்ஜியார்தான்  
அதனால்தான் மருத்துவ மனையில் ராதா அண்ணேக்கு என்னாச்சு எப்படி இருக்கிறார் என்று எம்ஜியார் பதற்றத்தோடு கேட்டார் .

பேரறிஞர் அண்ணாவை முட்டாள் என்று கூறிய பத்ரி சேஷாத்ரியின் பதவி பறிப்பு!

மின்னம்பலம் - Selvam  : பேரறிஞர் அண்ணா குறித்து சர்சை பேச்சு : பத்ரி சேஷாத்ரி பதவி பறிப்பு!
கிழக்கு பதிப்பக உரிமையாளரும், தமிழ் இணையக்கல்வி கழகத்திற்கான ஆலோசனைக்குழு உறுப்பினருமான பத்ரி சேஷாத்ரி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் தமிழ் இணையக்கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
“மூன்றே மாதங்களில் இந்தி கற்க முடியும். அதன்பிறகு அந்த மொழியில் கற்க ஒன்றுமில்லை” என்று அண்ணா கூறியிருந்தால், அது ஒரு அபத்தமான கூற்று. அண்ணா ஒரு முட்டாள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பத்ரி சேஷாத்ரி கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.

பிரிட்டன் பிரதமர் எலிசபெத் டிரஸ் பதவி விலகினார் .. பதவியேற்ற 45 நாட்களிலேயே..

மாலை மலர்  :  லண்டன்:  பிரிட்டனின் பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது.
கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.
நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார்.
ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

சமஸ்கிருதம் மக்களால் பேசப்பட்ட மொழியல்ல! . ரகசியங்களை பரிமாற பார்ப்பனர்கள் உருவாக்கிய கோடிங் லாங்குவேஜ்

ராதா மனோகர் :  சமஸ்கிருதம் ஒருபோதும் சாதாரண சமூகங்களால் பேசப்பட்ட மொழியல்ல!
அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களுக்கு புரிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இயற்றப்பட்ட ஒரு சங்கேத மொழியாகும்.  
ஏராளமான செக்ஸ் ரகசிய குறிப்புக்களும் கதைகளும் அவற்றில் தாராளமாக உண்டு.
அவை பெண்களுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்காகவே பெண்களுக்கு சமஸ்கிருதம் மறைக்கப்பட்டது.
சாதாரண மக்களுக்கு தங்களின் சுரண்டல் ரகசியங்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே அம்மொழியை ஏனைய ஜாதியினருக்கு ஒரு மறை பொருளாக வைத்திருந்தனர்
ஒருவேளை தப்பி தவறி ஏனைய மக்கள்  சமஸ்கிருதத்தை அறிந்துவிட்டால் அவர்களின் காதில் ஈயத்தை ஊற்ற விதி எழுதிவைத்தார்கள்.
ஒரு ஆதிக்க சமூகம், அல்லது ஒரு அரசியல் சக்தி,
இன்னும் சரியாக சொல்லப்போனால் சாதாரண மக்களை ஆண்டுகொண்டிருந்த ஒரு கும்பல்,
தங்களின் ரகசிய தொடர்பாடலுக்காக உருவாக்கி கொண்ட கோடிங் மொழிதான் சமஸ்கிருதம்

ஆசிரியர்களின் ஜாதி சொற்களால் மனமுடைந்த இரண்டு மாணவர்கள் தற்கொலை! இரா.அதியமான். நிறுவனர் தலைவர்.ஆதித்தமிழர் பேரவை.

May be an image of 1 person, child and sitting
May be an image of 1 person and text

Thangaraj Gandhi  : அய்யா அதியமான் அறிக்கை!  அருந்ததியர் மாணவர் சீனு மரணம்.!
போராடியவர்களை உடனே விடுதலை செய்து, மரண வழக்கை
சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்.!
ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.!
கடவுள் தான் உலகை படைத்தார்,கடவுள் தான் மனிதனை படைத்தார் என்கிற பிற்போக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களால் தான் கல்வி நிலையங்கள் இன்று பாழ்பட்டு கிடக்கிறது .
இது போன்ற சாதிய  பிற்போக்கு தனத்தை டன் கணக்கில் மூளைக்குள் பதிய வைத்து கொண்டதன் விளைவாக தென்காசி மாவட்டம்
கடையல்லூர் தாலுகா அரியநாயகி புரத்தில் செயல்படும் இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்களின் உயிர்களை பறிக்க காரணமாய் அமைந்திருக்கிறது.
கடந்த 14-ந் தேதி அரியநாயகி புரம் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அவர்களின் மகன் சீனு (ஏழாம் வகுப்பு மாணவர்) வின் மரணம் கேட்போரை துடி துடிக்க வைக்கிறது.

புதிய விமான நிலையம் நமக்கு ஏன் தேவை? : புள்ளி விவரத்துடன் பேரவையில் விளக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

கலைஞர் செய்திகள்  : 10 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது என பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் அவை நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மீண்டும் 2வது நாள் சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்திற்கு வரும் 1000 புது பேருந்துகள்! முதல்வர் அறிவிப்பின் விபரம் உள்ளே

kalaignarseithigal.com  -  Prem Kumar  : சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டிற்கு புதிதாக 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைய உள்ளது. முதல் நாளில் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் சட்டமன்ற அலுவல் கூட்டம் நடைபெற்று 19ம் தேதி வரை சட்டமன்றக் கூட்டம் நடைபெறுவதாக அறிவித்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை - டெல்லி மாநில அரசு

நக்கீரன் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் போன்றவைகளை அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டு தொடர்ந்து அறிவுறுத்தல்களை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் காற்றுமாசு காரணமாக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடித்தாலோ அல்லது பட்டாசுகளை வாங்கினாலோ ஆறு மாதம் சிறை, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு எச்சரித்துள்ளது.
அதேபோல் பட்டாசு தயாரிப்போர், விற்பனை செய்வோர், அவற்றை வாங்கி சேமித்து வைப்போருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈபிஎஸ் டீம் சைலண்ட் மோட்.. .. “சிக்கிய புள்ளி விஜயபாஸ்கர் ..”.. எல்லாம் போச்சே!

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  சென்னை : அடித்து ஆடியிருக்க வேண்டிய நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அமைதி காப்பது இதனால் தான் என அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் பரபரக்கின்றன.
ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி பற்றி எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை.
அதேநேரம், ஈபிஎஸ் எதிர்த்து வரும் சசிகலா இந்த விவகாரத்தில் கடுமையாகச் சிக்கியுள்ளார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாத நிலையிலும் கூட மௌனமாகவே இருந்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதற்குக் காரணம், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் சிக்கியிருப்பதால் தான். சசிகலாவுக்கு எதிராக அட்டாக் மோடை எடுக்க வேண்டிய விவகாரத்தில் விஜயபாஸ்கர் காரணமாகவே அமைதியாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது ஈபிஎஸ் டீம்.

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்ற்ம் மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை..

மாலை மலர்  :  னை கேளம்பாக்கத்தில் பள்ளி நடத்தி வரும் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டு,
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சிவசங்கர் பாபா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். இன்றைய விசாரணையின்போது, சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, 3 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யக்கூடிய குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்கை சட்டப்படி தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புதன், 19 அக்டோபர், 2022

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே! கடந்து வந்த பாதை என்ன? New Congress chief , who is Mallikarjun Kharge?

நாங்கள் திராவிடர்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நீங்கள் ஆரிய .... என்று நாடாளுமன்றத்தில் அன்று முழங்கியவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் காங்கிரஸ் தலைவரானது பொன்னெழுத்தினால் பொறிக்கப்பட்ட வேண்டிய நிகழ்வு .. வாழ்த்துக்கள் hindutamil.in  :; புதுடெல்லி: கடந்த 24 ஆண்டுகளாக காந்தி - நேரு குடும்பத்தின் வசம் இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி, தற்போது காந்தி - நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசியாக அறியப்படும் மல்லிகார்ஜுன கார்கே வசம் வந்து சேர்ந்திருக்கிறது. அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம்.

மாணவர் பருவம்: கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் பல்கி வட்டத்தில் உள்ள வரவட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மாபண்ண கார்கே - சபவ்வா தம்பதிக்கு 1942, ஜூலை 21ம் தேதி மகனாக பிறந்தவர் மல்லிகார்ஜுன கார்கே. கர்நாடகாவின் குல்பர்காவில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ பட்டமும், குல்பர்காவில் உள்ள எஸ்.எஸ்.எல் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி பட்டமும் படித்தவர்.

தடையை மீறி போராட்டம் : எடப்பாடி விடுவிப்பு!

minnambalam.com  - christopher   :  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (அக்டோபர் 19) தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததைக் கண்டித்து, இன்று ஒருநாள் வள்ளுவர் கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப் போவதாக கட்சித் தலைமை அறிவித்தது..
ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். எனினும் இன்று காலை முதலே வள்ளுவர் கோட்டம் பகுதியில் அதிமுக தொண்டர்கள் திரண்டனர். அதனால் அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

1500 ரூபாவுக்காக மோட்டார் சைக்கிளில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் . ஒடிசாவில் அக்கிரமம்

நக்கீரன் : ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜெகநாத் பெஹ்ரா(22). இவரின் தாத்தா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்ததாக கூறப்படுகிறது.  
தாத்தாவின் இறுதிச் சடங்கை நல்ல முறையில் செய்வதற்கு பணம் தேவைப்பட்டதால் இவருடைய நண்பர்களிடம் 1500 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன் மூலம் ஜெகநாத், தாத்தாவின் உடலை நல்லடக்கம்  செய்துள்ளார்.
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு வந்துள்ளனர்.
ஆனால், ஜெகநாத்தின் நிலைமை வறுமையிலிருந்ததால், ஒரு மாத காலம் ஆகியும் அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள், ஜெகநாத்தை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மலையகமும் நூலகமும்! வாசிப்பில் பின்தங்கும் மலையகம்?

  Esther Nathaniel மலைநாட்டு ஆதங்கம்!
கொழும்பிலுள்ள எனது நண்பனிடம் கிட்டத்தட்ட 300 நூல்கள் கைவசமிருந்தது கொழும்புத் தமிழ்ச்சங்கத்துக்கு சிலவற்றைக் கொடுத்துவிட்டான்.
பின் மலையகத்தில் உள்ள ஒரு மூத்த அறிவாளியிடம் அவரும் கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில் வேண்டப்பட்டவர் அவரை தொடர்பு கொண்டூ என்னிடம் ஒரு தொகை நூல்களுண்டூ அதை மலையக பாடசாலை நூலகத்துக்காகக் கொடுக்க விரும்புகிறேன் .
அதற்குரிய அனுப்பும் செலவையும் தருகிறேன் என மிகவும் வினயமாகக் கேட்டுக்கொண்டார் அந்த மூத்த அறிவாளியும் நாளைக்கே ஏற்படுத்தி தருகிறேன் என உறுதியளித்துவிட்டார்.
உறுதியளித்ததோடு மட்டுமே தனது பணியை முடித்துக்கொண்டார். நண்பனும் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தான் தன்னிடமிருந்த நூல்களை மலையக பிள்ளைகளிடத்தில் சேர்ப்பிக்க, மூத்த அறிவாளியோ இதோ இப்ப அதோ அப்ப என மூன்றுமாதமாக அவரால் ஒழுங்குப்படுத்த முடியவில்லை.

மல்லிகார்ஜுனை கார்கே காங்கிரஸ் தலைவராக தெரிவானார் கார்க்கேக்கு 7,897 வாக்குகளும், சசிதரூருக்கு 1,072 வாக்குகளும் கிடைத்தன

தினகரன் : புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்த நிலையில், இன்று டெல்லியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நாடு முழுவதும் அந்த மாநில தலைமையகத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடத்தப்பட்டது. தேர்தலில் தகுதியான 9,915 பிரதிநிதிகள் வாக்களித்தனர்; 96 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டிகள் மூடி சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன.

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதில்லை என்று டாக்டர்கள்தான் முடிவெடுத்தார்கள்!. எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன்- சசிகலா விரிவான அறிக்கை

30 - 9- 2016 ஒரு போட்டோ அல்லது வீடியோ போதுமே
உண்மை என்றைக்கும் மாறாது

tamil.oneindia.com  -  Vignesh Selvaraj : சென்னை : ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்பல்லோ மருத்துவனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது என ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள் அவரது மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை யாரும் இனிமேல் ஆதரிக்கமாட்டார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை விடுத்துள்ளார் விகே சசிகலா.  விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? என்றும் சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.

கனடாவில் கஞ்சாவுக்கு சட்டபூர்வ அனுமதி! uber eats மூலம் வீடு தேடிவரும் கஞசா!

விகடன் : ஊபர் ஈட்ஸ் லீஃப்லி என்ற நிறுவனத்துடன் இணைந்து, கனடாவின் டொரன்டோ பகுதியிலுள்ள வீடுகளுக்கு கஞ்சாவை நேற்று முதல் விநியோகம் செய்துவருகிறது.
கனடாவில் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான உபர் ஈட்ஸ் (Uber Eats), சட்டபூர்வமாக வீட்டுக்கே கஞ்சாவை டெலிவரி செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கஞ்சா போதைப்பொருள்களை, உணவு ஆர்டர் செய்வதுபோல ஆர்டர் செய்பவருக்கு, நேற்று முதல் கனடாவின் டொரன்டோ பகுதியில் உள்ள வீடுகளுக்கு டெலிவரி செய்துவருகிறது.

புக்கர் பரிசு மேடையில் ஒலித்த தமிழ் குரல் .. ஷெஹான் கருணாதிலக்க மேடையில் தமிழில் பேசினார்

 Thiagarajah Wijayendran :  புக்கர் மேடையில் ஒலித்த தமிழ்!
உலகின் மிகச்சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான `புக்கர்` விருதுமேடையில் நேற்றுத் தமிழ் ஒலித்தது. இலங்கையரான ஷெஹான் கருணாதிலக இம்முறை இந்த விருதுக்குத் தெரிவாகியிருந்தார். அவரது உரையின் இறுதி வரிகளில் "இலங்கை சொந்தங்களே, நாம் எமது கதைகளைக் கூறுவோம். கூறிக்கொண்டே இருப்போம்" எனத் தமிழிற் கூறி முடித்தார். அதற்கு முன்னர் சிங்களத்திற்  சில வரிகளை அவர் தனது உரையிற் சேர்த்திருந்தார். அவரது நன்றியுரை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது.
நோபற்  பரிசுக்கு அடுத்ததாக உயர்ந்த இலக்கிய விருது எனக் கணிக்கப்படும் புக்கர் பரிசு பெறும் முதலாவது இலங்கையர் ஷெஹான் கருணாதிலக. இலங்கையிற் பிறந்த மைக்கேல் ஒண்டாச்சி முப்பது வருடங்களுக்கு முன்னர் இவ்விருதை வென்றிருந்தாராயினும் அவர் கனடியப் பிரசையாகவே கணிக்கப்படுகிறார்.

செவ்வாய், 18 அக்டோபர், 2022

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சம்பவம் . கலெக்டர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க ஜெகதீசன் விசாரணை ஆணையம் பரிந்துரை

 தினத்தந்தி  ; , தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது.
இந்த ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கையை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழு இன்று நடைபெற்ற சட்டசபை சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்தது. சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக நடந்த பிரச்சனை காரணமாக இபிஎஸ் தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்றி சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோவை தவிர்க்க தந்திரம் செய்த மருத்துவர்’ – ஆறுமுகசாமி அறிக்கை.. BBC Tamil

BBC Tamil :  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு  குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது தனக்கு அளிக்கப்படவிருந்த சிகிச்சை தொடர்பாக ஒப்புக்கொண்டது என்ன, சசிகலா தவிர வேறு யார் மீதெல்லாம் விசாரணை செய்யப்பட வேண்டும் என வழங்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை” : வழக்கு தள்ளுபடி

  கலைஞர் செய்திகள்  -Prem Kumar  :  கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், ஆ.ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Facebook கில் லைவ் வீடியோ; ‘நாம் சாகப்போகிறோம்’ 230 கி.மீட்டர் மின்னல் வேகத்தில் லாரிக்குள் பாய்ந்த கார் – 4 பேரும் பலி

tamil.asianetnews.com ; 300 கி.மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டுமென சொகுசு காரில் பயணித்த நபர் கூறுவதும் லைவ் வீடியோவாக பேஸ்புக்கில் பதிவாகியுள்ளது.
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் லக்னோ – காசிபூர் மாவட்டத்தை இணைக்கு பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த 15-ம் தேதி லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். விபத்து ஏற்படுவதற்கு முன்பு காரில் பயணித்த 4 பேரும் பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
பிஎம்டபுள்யு சொகுசு காரில் உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் இருந்து டெல்லி நோக்கி 4 பேர் பயணித்துள்ளனர்.

திங்கள், 17 அக்டோபர், 2022

இலங்கை இந்து தமிழர்களுக்கு குடியுரிமை : நீதிமன்றம் யோசனை!

 minnambalam.com - Kavi  :  இலங்கையில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் இந்துக்களை இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தின் கீழ் கொண்டு வரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன வெறியால் பாதிக்கப்பட்டுள்ள ‘இந்து – தமிழர்களையும்’ இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தின் கீழ் கொண்டுவரலாம் எனவும் இதை யோசனையாக மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
திருச்சியை சேர்ந்த அபிராமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது தாயும் தந்தையும் 1990 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு,

ஆசிட் கலந்த குளிர் பானம் குடித்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆசிட் கலந்த குளிர் பானம் குடித்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாலைமலர் : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில்.
இவரது மகன் அஸ்வின் (11) அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அஸ்வினுக்கு அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவன், குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவர் மரியானோவை சுற்றி சமூகவலையில் சில விவாதங்கள்

நிலவினியன் மாணிக்கம்  : இவருடைய குற்றச்சாட்டை ஏன் கடந்து போயிட்டாங்க நம்மவர்கள்?
Chendur Vel  :  என்னங்க LRJதான் எதோ கோவத்திலே எழுதராரு என்றால் அதை அதை ஷேர்செய்கின்ரீர்களே!
நிலவினியன் மாணிக்கம் Chendur Vel  : அது வன்மம் என நாமாகவே எப்படி ஒரு முடிவுக்கு வருவது
Chendur Vel  நிலவினியன் மாணிக்கம் : நான் வன்மம் என்று சொல்லவில்லையே !
நிலவினியன் மாணிக்கம் Chendur Vel எப்படி கோபமுன்னு கடந்து போறது?
Madhav Anandhan  நிலவினியன் மாணிக்கம் :  திமுகவை ஆதரிக்கும் ஒரு குழுவினரை தாக்கி பேசுவதால் யாருக்கு இலாபம்?
Madhav Anandhan  :  இந்த பதிவில் தனிப்பட்ட வன்மம் தவிர எதுவும் இல்லை. LRJ தன்னுடைய பிழைப்புக்காக எழுதுகிறார்.
மற்றவர்கள் அப்படி அல்ல. அவர்கள் அனைவருக்கும் வேறு வேலை (பொறியாளர்கள், மருத்துவர்கள், மற்றும் பல துறைகளில்)செய்கிறார்கள்.
Antriya  அண்ணா இதுக்கு பல பேர் பதில் சொல்லிட்டாங்க
நிலவினியன் மாணிக்கம்  Antriya : அந்த பதிலில் டேக் பண்ணுயா என்னை
Madhav Anandhan  :  The post starts with "மருத்துவர் மரியானோவின் அடியாள் கும்பலுக்கு" and ss of DMK - MP is attached!!! What is the purpose of this kind of post?
நிலவினியன் மாணிக்கம்  : madhav Anandhan ஒரு எழுத்தாளரின் விமர்சனம்....
Madhav Anandhan  நிலவினியன் மாணிக்கம் :  ஒரு திமுக ஆதரவாளனாக, திமுகவின் எந்த குழுவினரையும் அவமதிக்கும், அவதூறு செய்யும் எந்த பதிவையும் நான் பகிர்வதில்லை. எனக்கு அந்த கருத்து சரி என்று தோன்றினால் கூட அதை கடந்து சென்று விடுவேன்.main topic

 LR Jagadheesan  :  மருத்துவர் மரியானோவின் அடியாள் கும்பலுக்கு
முன்னெச்சரிக்கை:
இந்த பதிவு மருத்துவர் மரியானோ மீதான வழக்கு பற்றியதல்ல. அந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் அவரை தண்டித்த தீர்ப்பும் உச்சநீதிமன்றம் அவரை அந்த தண்டனையில் இருந்து விடுவித்த தீர்ப்பும் முழுமையாய் இணையத்தில் இருக்கின்றன.

திருவிளையாடல் புராணம் “ஹலாஸ்ய மகாத்மியம்” என்ற வடமொழி நூலின் மொழி மாற்றமே! ~ தினகர ஞானகுருசாமி

Dhinakaran Chelliah  : இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் எழுப்பிய கேள்விகளில், திருவிளையாடல் புராணம் எப்படி வடமொழியாகும்.மதுரைக் கதைக் களம் எப்படி வடநாடு ஆகும்?  
என்ற கேள்வியும் ஒன்று.
மதுரையைக் கதைக் களமாகக் கொண்டு வடமொழியில் எழுதப்பட்ட நூல்தான் “ஹலாஸ்ய மகாத்மியம்” எனும் நூல்.
இந்த நூலின் தமிழ் வடிவமே “திருவிளையாடற் புராணம்”. இந்த ஒரு புராணம் மட்டுமே வடமொழியிலிருந்து எழுதப்படவில்லை,
ஏகப்பட்ட நூல்கள் உண்டு. முடிந்த வரையில் எனது முகநூல் பக்கங்களில் பழைய வடமொழி புராணங்களை (புராணங்கள் மற்றும் தல புராணங்கள்) பதிவு செய்துள்ளேன்.
இனியும் பதிவு செய்ய நூற்றுக் கணக்கில் நூல்கள் உண்டு. ஹலாஸ்ய மகாத்மியம் நூலின் அட்டைப் படத்தை பிண்ணூட்டத்தில் இணைத்துள்ளேன்.
வாழ்த்துகள்

காவிகளுடன் கூட்டணி அமைத்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம்!

vinavu.com  : சமீபத்தில் தி வயர் இணையதளம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி இது!
‘Superhumans of Cringetopia’ (@cringearchivist) என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் அரசியல் நையாண்டி செய்யும் பக்கமாகும். அப்பக்கத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிலையை ஒருவர் வழிபடுவது போன்றதொரு பதிவு வெளியானது. அந்தப் பதிவை உடனடியாக ‘ஆபாசமானது’ (nudity and sexual content) என்று வரையறுத்து இன்ஸ்டாகிராம் நீக்கியது.‌
ஆனால் அந்தப் பதிவை ஆபாசம் என்று சித்தரிக்க அதில் எதுவுமே இல்லை.
யோகி சிலையும்சரி அதை வழிபட்டவரும்சரி ஆடையுடனேயே காட்சியளித்தனர்.
Algorithm-ல் பிழை ஏற்பட்டு தவறுதலாக அந்தப் பதிவு நீக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் உரிமையாளர் ஆரம்பத்தில் நினைத்தார்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

வெளிநாட்டு சுற்றுலா தேவையா?. செல்வம் என்பது வெறும் பணம் மட்டுமல்ல நல்ல நினைவுகளும் அனுபவங்களும் கூட செல்வம்தான்

May be an image of 5 people and people standing

Karthikeyan Fastura  :  இவ்வளவு செலவழித்து வெளிநாட்டு சுற்றுலா செல்வது தேவைதானா.. அதை சேர்த்து வைக்கலாமே.. என்று கேட்ட மூத்த சொந்தங்கள் உண்டு. சில பொருளாதார ஆலோசகர்களும் அவ்வாறு கூறுவதை கேட்டு இருக்கிறேன்.
நானும் பொருளாதார ஆலோசகன் தான். ஆனால் என் பார்வையில் செல்வம் என்பது பணத்தை, சொத்துக்களை சேர்த்து வைப்பது மட்டுமல்ல, நினைவுகளை சேர்த்து வைப்பதும், அறிவை சேர்த்து வைப்பதும், மனிதர்களை சேர்த்து வைப்பதும் கூட செல்வம் தான்.

இந்தி திணிப்பிற்கு எதிராய் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்

நக்கீரன் : ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
1976ம் ஆண்டு அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு முதல் முறையாக அலுவல் பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. மக்களவை உறுப்பினர்கள் 20 பேர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேர் என 30 பேர் இக்குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை(?)... அமெரிக்க டாலர்தான் உயர்கிறது - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

tamil.news18.com  :  இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்புதான் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக நிர்மலா சீதாராமன் அமெரிக்க சென்றுள்ளார்.
அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம்,  இந்திய ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத சரிவைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

கனடாவில் கோர விபத்து! தமிழ் அண்ணன் தங்கை உயிரிழப்பு


நியூ தமில்  : கனடாவின் மார்க்கமில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தை பின்னணியாக கொண்ட இருவர் உயிரிழ்ந்துள்ள நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் விபரங்களை குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்து தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட டாஷ்போர்டு கேமரா காணொளியை உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கின் வடக்கே மார்க்கம் ரோடு மற்றும் எல்சன் வீதியில் டிரக் வண்டி கார் மீது மோதியதை காணொளி காட்டுகிறது. பிற்பகல் 2:05 மணியளவில் அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

குழந்தை திருமணம் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கைது! 20 தீட்சிதர்கள் மீது சட்டம் பாயும்

மின்னம்பலம் - Prakash  :  குழந்தை திருமணம் சிதம்பரம்  நடராஜர் கோயில் தீட்சிதர்கள்  கைது!
குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் இன்று (அக்டோபர் 15) கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடஜர் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் மீது சமீபகாலமாக பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும் எழுந்துவருகின்றன.
அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு சிறு வயதில் திருமணம் செய்துவைப்பதாக புகார் எழுந்து வருகிறது.
இதுதொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை மற்றும் காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.
அந்த புகார்களின் அடிப்படையில் 2020 மற்றும் 2021ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்ததாக 20க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக விசாரணை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில், குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

தேர்வின்போது ஆடைகளை கழற்ற சொன்ன ஆசிரியர்.. தீக்குளித்து உயிரை மாய்த்த பள்ளி மாணவி : ஜார்கண்டில் பயங்கரம்!

Kalaignar Seithigal -  KL Reshma  : ஜார்கண்ட் . தேர்வின்போது சோதனை செய்ய வேண்டும் என்று, பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியை ஆடைகளை கழற்ற வற்புறுத்தியதால், மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜார்கண்ட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் என்ற பகுதியில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இங்கு பயிலும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஆசிரியர் ஒருவர் மாணவி பேப்பர் சீட்டுகளில் இருந்து காப்பி அடிப்பதாக எண்ணி கண்டித்துள்ளார்.
மேலும் அவரது இடத்தில் பிட் பேப்பரை தேடியுள்ளார். ஆனால் அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் ஆடைக்குள் பிட் பேப்பரை மறைத்து வைத்திருப்பதாக கூறி ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை தனியார் பள்ளியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. அலட்சியம் காட்டிய பள்ளி.. ‘உயிர் முக்கியம்’.. கதறிய குழந்தையின் தந்தை

இது பெரிய பிரச்சனையா
படியில் தவறி
tamil.oneindia.com  -  Vignesh Selvaraj   :  சென்னை : ஆவடி அருகே தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, பள்ளியில் படியில் விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் இரண்டாவது தளத்தில் அமரவைக்கப் படுவதாகவும், கழிவறை தரை தளத்தில் இருக்கும் நிலையில், உதவிக்கு கூட யாரும் செல்வதில்லை என்றும் குழந்தையின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். குழந்தை பாதிப்பு குறித்து கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்ததாகவும், குழந்தையின் தந்தை ஆடியோ வெளியிட்டு குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், முறையாக முதலுதவி அளிக்காமல் குழந்தையை பைக்கிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பாதிப்பை இன்னும் தீவிரமாக்கியுள்ளதாகவும், குழந்தையின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.