சனி, 2 செப்டம்பர், 2017

தன்னெழுச்சியான மக்கள் போரே நீட் அரக்கர்களை வெல்லும்! அனிதாக்களின் உயிரை பறித்தவர்கள்!

நந்தன் ஸ்ரீதரன் : முகநூல் வரவே அச்சமாக இருக்கிறது. இரவு முழுக்க அனிதாவின் மரணம் உறங்க விடாமல் அடித்துக் கொண்டிருந்தது..
முல்லைப் பெரியாறு பிரச்சினையின்போது தேனி மாவட்டத்தில் ஓர் எழுச்சி தோன்றியது. பெண்கள் முல்லைப் பெரியாறுக்காக பொங்கல் வைத்தார்கள். லட்சக் கணக்கில் மக்கள் திரண்டு கேரள எல்லை நோக்கி சென்றார்கள்..
அதைக் கண்டு ஜெயா அரசு நடுங்கியது. ஜெயா அரசு மட்டும் அல்ல. இவ்வளவு நாளும் தமிழர்களை அடித்து உதைத்தே பழக்கப்பட்ட மலையாளிகளும் நடுங்கிப் போயினர். அதன் பின்னர்தான் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் எல்லை மலையாளிகள் தமிழர்களை மரியாதையுடன் நடத்தத் துவங்கினர்.. அது மாதிரி ஓர் எழுச்சிதான் இப்போதைய தேவை.. எந்த மயிரானும் தலைமை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கிருக்கும் அரசியல்வாதி எவனும் ஊழல் செய்யாதவன் இல்லை.ஊழல் செய்யாத ஒரு சில அரசியல்வாதியும் தமிழர்களுக்கு ஆதரவானவன் இல்லை.. நல்ல அரசியல்வாதிகளையும் இந்த டெட்பாடி அரசு சிறையில் வைததிருக்கிறது..

அனிதாக்கள் இனி சாகமாட்டார்கள்..! எங்காவது கூலி வேலை செய்து வயிறு வளர்ப்பார்கள் ...

krishnavel.T.S  :  அனிதாக்கள் இனி சாகமாட்டார்கள்
அரியலூரில், +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று மருத்துவ கனவு உடைந்து அனிதா தற்கொலை செய்து இந்த நாட்டுக்கு NEET ஏன் தேவையில்லை என்று சொல்லிவிட்டாள், என் சொந்த மகளை பறிகொடுத்த மனநிலையில் இருக்கிறேன்.
இந்த நாட்டில் நடக்கும் புரட்டு பார்பன உயர் சாதி அரசியலுக்கு இன்னும் எத்தனை அனிதாகளின் உயிர் தேவைப்படும் என்று எண்ணிப்பார்க்கிறேன்.
இந்த கேவல அரசியலை, உற்றுநோக்கினால், எனக்கு ஒன்று தெரிந்தது, இன்னும் ஐந்து ஆண்டுகளில் NEET தேர்வு இருக்காது, IIT நுழைவு தேர்வான JEEE இருக்காது, இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் இன்னும் 10 வருடங்களில் எந்த நுழைவு தேர்வும் இருக்காது என்றே தோன்றுகிறது.
நீங்கள் சொல்வது ஒன்று புரியவில்லையே, என புருவத்தை தூக்கவேண்டாம்.
நம் செல்ல மகள் அனிதாவின் மரணத்தின் துக்கத்தில், நாம் NEET-க்கு எதிராக ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க. இந்த பார்பன ஆதரவு அரசுகள், வேறு ஒரு நெடுங்கால கல்வி ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுகொண்டிருப்பது நம்மில் பலரின் கவனத்துக்கு வரவேயில்லை.

எந்த ஒரு பில்லியனரும் ஜாதகம் நட்சத்திரம் பார்த்து தொழில் தொடங்கியதில்லை

kkarthikeyan Fastura : ஜோதிடம், ஜாதகத்தை விட அயோக்கியத்தனம் எதுவும் இல்லை. மனிதர்களுக்குள் எழ வேண்டிய இயல்பான தன்னம்பிக்கையை உடைத்து, செய்ய வேண்டிய முயற்சிகளை முடக்கி அல்லது தள்ளிபோட்டு, உனக்கு இது தான் வரும் என்று மைன்ட் செட்டை உருவாக்கி வளரவே விடாமல் செய்வது தான் இதன் தந்திரம்.
ஜாதகமும் பார்ப்பேன், தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்களையும் படிப்பேன் என்பதை விட முட்டாள்தனம் எதவும் இருக்க முடியாது.
ஜாதகம் என்ற உளவியல்சதியை காப்பாற்றவே அர்ச்சனை செய்யும்போது என்ன ராசி, என்ன நட்சத்திரம் என்று கேட்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி என்று கதை அடிக்கிறார்கள். அதையே பார்ப்பனீயம் போற்றும் எல்லா பத்திரிக்கைகளும் பிரசுரிக்கின்றன.
நீங்கள் உண்மையிலேயே முன்னேற விரும்பினால் ஜாதகம் ஜோதிடம் போன்ற ஒரு மயிரும் வேண்டாம். தூக்கி எறியுங்கள். எல்லா காலமும் நல்ல காலமே.

நீட் கொலைகாரர்கள் இனிக்க இனிக்க பேசுகிறார்கள் ... பார்ப்பனர்கள் பாதி பார்ப்பன நக்கிகள் மீதி!

கூலித் தொழிலாளியின் மகள் அனிதா, பனிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல்போனதால் தனது மறைந்த தாய் ஆனந்தியின் படத்தின் முன்பு தூக்கிலிட்டுத் தற்கொலைசெய்துகொண்டார்.
பெரியார் நகர் காலனியில் வசிக்கும் சண்முகம், திருச்சி மார்கெட்டில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஆனந்திக்கு ஐந்து பிள்ளைகள், ஐந்தாவது பெண்தான் அனிதா. டாக்டராக வேண்டும் என்பது இவரது கனவு.
குடும்பம் ஏழையாக இருந்தாலும், பெரியாரியச் சிந்தனையும், கம்யூனிஸ்ட் சிந்தனையும், கல்வித் தகுதியும் அனிதா குடும்பத்தில் நிறைந்திருக்கின்றன. மனைவியை இழந்த தந்தைக்குப் பிள்ளைகள் முன்வந்து வாசகி என்பவரைத் திருமணம் செய்துவைத்தார்கள்.
பாட்டி பெரியம்மாள் மற்றும் சகோதரர்களுடன் வசித்துவந்த அனிதா, தன்னம்பிக்கை கொண்டவர். படிப்பில் திறமையானவர். கடந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். “எம்.பி.பி.எஸ். படிக்கப்போகிறேன். இல்லையென்றால் பி.எஸ்.சி அக்ரி படித்து சிவில் சர்விஸ் எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, மக்களுக்கு நலப் பணிகள் செய்யப்போகிறேன்” என்று தன் நெருங்கிய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லியிருக்கிறார். மருத்துவம் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார்.

மாநிலதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களால் ஏன் கல்விதரம் குறையும்? பித்தாட்ட பாஜக நக்கிகள்!

மின்னம்பலம் : கல்வித்தரம் மேம்படுத்தப்பட வேண்டுமா? நிச்சயமாக என்பதில் ஐயமில்லை. ஆனால் கல்வித்தரம் என்பது என்னவோ மாநிலப்பாடத்திட்டத்தில் மட்டுமே மோசம் என்பதைப் போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இப்படிப் பேசுபவர்கள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் பெரும்பாலானோர் நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களுக்குச் சென்றவர்கள் என்பதை வசதியாக மறைக்கிறார்கள்.
மாநிலத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக்கல்லூரிக்குள் நுழையும் ஒரு மாணவரால் எப்படி மருத்துவக் கல்வியின் தரம் தாழ்ந்து போகிறது? இந்தியாவிலேயே பொது மருத்துவத்தில், சுகாதார சேவையில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்று. நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்கு ஆதரவானவர்கள் என்று வேறு பேசுகிறார்கள். நீட்டை எதிர்த்தவர்கள் யாரும் தனியார் கல்லூரிகளுக்கு விலக்கு அளியுங்கள் எனக்கோரவில்லை. அரசு மருத்துவக்கல்லூரியில் முந்தைய முறையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மட்டுமே குரல் கொடுத்தார்கள்.

மோதியே வீழ்த்துவோம் அனிதா! விடமாட்டோம்! சமுகவலையில் ....

மத்த ஸ்டேட்காரங்கள்லாம் கம்முன்னு இருக்கும் போது இந்த தமிழ்நாட்டு காரங்க மட்டும் தான் நீட் வேணான்னு உயிரைவிடுறாங்க. சரியான மொழி வெறியனுங்க’ன்னு அடுத்த ஸ்டேட்காரங்க சொல்றதைவிட இங்க உள்ள சில டிக்கெட்டுகளும் சொல்லிக்கிட்டு திரியுறாங்க. மாநில சுயாட்சி வேணும்னு 60 வருசமா பேசுறவங்கய்யா நாம. 50 வருசத்துக்கு முன்னாலேயே இந்தியை எதிர்த்தவங்க. இப்ப தான் கர்நாடகக்காரங்களுக்கு அது புரிய ஆரம்பிச்சுருக்கு. கொஞ்சம் கண்ணை திறந்து பார்த்தா மத்த ஸ்டேட்டை விட வளர்ச்சியிலயும் சமூக நீதிலேயும் நாம 50 வருசம் முன்னால இருக்கோம்னு தெரியும். இந்த நீட்டோட பாதிப்பு எவ்வளவு மோசமாயிருக்குங்கிறதை அவங்க பீல் பண்ணும் போது வைத்தியம் பார்க்க வசதியில்லாம பாதிபேர் பரலோகம் போயிருப்பாங்க. அந்த பச்ச புள்ள உசுர குடுத்து இத உணர்த்திட்டு போயிருக்கு. இன்னும் ஒரு குரூப்பு ‘அந்த புள்ள இஞ்சீனியருக்கு படிச்சுருக்கலாம்ல’ன்னு கிளம்பி வருது. அவங்களுக்கு இந்த குமாரை விட அப்டேட் தான் சரியா பதில் சொல்லும்.

ஹரியானா .. வகுப்பறையில் மாணவர்கள் துப்பாக்கி சூடு!


மின்னம்பலம் : ஹரியானாவில் ஐ.டி.ஐ. மாணவரை சக மாணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் சோனிப்பட்டில் உள்ள ஐ.டி.ஐ.யில் பயிலும் இரு மாணவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், (இன்று செப்.1) காலை வகுப்பில் இருந்த சக மாணவரை மற்றொரு மாணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இரண்டு மாணவர்களுக்குமே 16 அல்லது 17 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவர் உடனடியாக ரொஹ்தக் பகுதியில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சோனிபட் துணை கண்காணிப்பாளர் ராகுல் செய்தியாளர்களிடம் கூறியதாவது, துப்பாக்கிச்சூடு தொடர்பான சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளது.

வெள்ளத்துக்கு எலியே காரணம்: பீகார் அமைச்சர்கள்! அங்கும் செல்லூர் ராசு?


வெள்ளத்துக்கு எலியே காரணம்: பீகார் அமைச்சர்கள்!பீகாரில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு எலிகளே காரணம் என இரு அமைச்சர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கடும் தண்டனைச் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. தடையை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது சாராயம் காய்ச்சினாலோ பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்ட விரோதமாக கள்ளச் சாராயம், வெளிநாட்டு மது மற்றும் பீர்கள் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலைய கிடங்கில் வைத்துவந்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பலகோடி ரூபாய் மதுக்களை எலிகள் குடித்துவிடுவதாகவும், பாட்டில்களை உடைத்துவிடுவதாகவும் போலீஸார் கடந்த மே மாதம் குற்றம்சாட்டினர். அது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”.. ஆதித்தமிழர் பேரவை

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் அறிக்கை:
நிகழ்ந்தது மரணம் அல்ல மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை. அடிப்படை வசதிகளற்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு படித்து உயர் மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க முடியவில்லையே என்று சட்டப் போராட்டங்களை நடத்தி, தீர்வு கிடைக்காத காரணத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாகி மரணத்தை தழுவிய மாணவி அனிதாவை இழந்து வாடும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக இருக்கும் தந்தைபடும் துயரம், இத் தலைமுறையோடு போகட்டும் என, 12 ஆம் வகுப்பில் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து, படித்து 1,176 மதிப்பெண்களைப் பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் செல்லும் கனவுகளோடு காத்திருந்த அரியலூர் மாணவி அனிதாவை, மார்ச்சுவரிக்குள் தள்ளி இருக்கும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

தர்மம் வென்றதாம்... பார்பனீயம் கொக்கரிப்பு... நம் குழந்தை அனிதா .. கொன்றது யார்?


பார்ப்பன பாஜக-வின் தர்மம் வென்றதில், தமிழச்சி நம் சகோதரி அனிதா பலியானாள்.
இது தற்கொலை அல்ல. நீட்-னால் செய்யப்பட்ட பச்சைப் படுகொலை. 1176 மதிப்பெண் எடுத்தும் 196.75 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தும், பார்ப்பனருக்காகவும், பணக்காரர்களுக்காகவும் மட்டுமே நீட்-ஐ நீட்டி முழங்கி உன் உயிரை எடுத்திருக்கிறார்கள்.
தரம் தரம் என்று சொல்லி, 2000 ஆண்டுகளாக பார்ப்பன நீதியே அனைவருக்குமான நீதியாக சொல்லி நீ மருத்துவம் படிக்கும் உரிமையை மறுத்திருக்கிறார்கள். நீ உனக்காக மட்டும் போராடவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காக, குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக போராடினாய்.
நீ நிமிர்ந்த நடையோடு டெல்லிக்கு பயணப்பட்ட போது, நாங்கள் மகிழ்ச்சியோடு கண்டோம் உன்னை. உன்னை முடித்துக் கொண்ட போது வெட்கப்பட்டு நிற்கிறோம். இது அடிமைகளின் தேசம்.

ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்?'- பார்த்திபன்

tamil.thehindu.com.. Bharathi-parasuraman_ தானே... செய்துகொண்டால்தானே அது தற்கொலை? ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்? என மாணவி அனிதா மறைவு குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில்... அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின் குடும்பத்தார்க்கு வருத்தச் செய்தி மட்டும் வாசித்துவிட்டு நகர்தலும் வன்முறையே.

அனிதாவின் தற்கொலை - சமூக அநீதிக்கான சாவோலை: கி.வீரமணி

அரியலூர் அனிதாவின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்கப் புறப்படுவதற்குமுன்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:அரியலூர்ப் பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா என்னும் மாணவியின் தற்கொலை அதிர்ச்சிக்குரியது, ஆழ்ந்த துயரத்திற்குரியது.
;தற்கொலை ஏற்புடையது அல்ல. என்றாலும்......தற்கொலையை ஏற்க முடியாது என்றாலும் தற்கொலைக்கு அனிதா விரட்டப்பட்டதற்கான காரணம் என்ன-? பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு 2007 முதல் கிடையாது; மாநிலக்கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரித் தேர்வு  நடைபெற்றுவந்திருக்கிறதுஇதன்காரணமாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஏராளமானர்கள் டாக்டர்கள் ஆனார்கள்! எவ்வளவு பெரிய சமூகப்புரட்சி இது!

தமிழகம் எங்கும் வெடித்தது மக்கள் போராட்டம் ... அண்ணாசாலை... தலைமை செயலகத்தை முற்றுகையிட..

நீட் தேர்வினால் தனது டாக்டர் கனவு நிறைவேறாததால், மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவருகிறது.
மாநிலப் பாடத்திட்டத்தின்படி மருத்துவம் படிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட மாணவியான அனிதாவின் டாக்டர் கனவு, மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வினால் தகர்ந்து போனது. நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று சில மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜராகி வாதாடினார். இதில் எதிர் மனுதாரராக தன்னை இணைத்துக்கொண்ட அனிதா, ‘நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறி போய்விடும்’ என்று மனு அளித்தார். ஆனால் நீட் தேர்வின் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனிதாவுக்கு அமெரிக்காவில் அஞ்சலி கூட்டங்கள் வாஷிங்டன் , அட்லாண்டா, நியூ ஜெர்சி, டெட்ராய்ட், டல்லாஸ், செயிண்ட் லூயிஸ், நெவார்க்(டெலவர்)

American Tamils organize candle light vigil for Anitashankar. Oneindia Tamil வாஷிங்டன்(யு.எஸ்): நீட் தேர்வினால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத, பள்ளி மாணவி அனிதாவின் மரணம் அமெரிக்காவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. இன்று சனிக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் கூட்டங்கள் நடைபெற உள்ளது. நீட் தேர்வு மூலம் , தமிழக மாணவர்களுக்கு பெரும் தீங்கிழைக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு விலக்கு கிடைக்கும் என்று நம்ப வைத்து மத்திய மாநில அரசுகள் மாணவர்களை ஏமாற்றி விட்டார்கள். கோச்சிங் க்ளாஸ் செல்ல முடியாத வசதியற்ற ஏழை மாணவர்களின் கனவுகளை சிதைத்து விட்டார்கள். உரிய மதிப்பெண் பெற்று இருந்தும் மாணவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது என ஆவேசமான கருத்துக்களை சமுக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

American Tamils organize candle light vigil for Anitaஅனிதாவின் துயரச் செய்தி கேட்டவுடன், மத்திய மாநில் அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று சமூக வலைத் தளங்களில் குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இரங்கல் செய்திகளில் டாக்டர்.அனிதா என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனர்.
உடனடியாக மெழுவர்த்தி ஏந்தி இரங்கல் கூட்டங்கள் நடத்துவது எனவும், அடுத்த வார இறுதியில் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

கல்வி எங்களுக்கு அடிப்படை ! கல்வி உங்களுக்கு சொகுசு பங்களா... டான் அசோக்

என்னடா சும்மா, "பார்ப்பன பையன் தற்கொலை பண்ணிருந்தா இப்படி பொங்கிருப்பீங்களா?"ந்னு கேக்குறீங்க? பெரியாரும், அம்பேத்கரும், கலைஞரும், வி.பி.சிங்கும் எங்களுக்கு பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீட்டால எந்த பார்ப்பன பையன்/பொண்ணுடா கல்வி கிடைக்கலனு தூக்குல தொங்கிருக்கான்? இட ஒதுக்கீட்டுல உங்களுக்கான நியாயமான இடத்தை கொடுத்து எங்களுக்கு நியாயமான இடத்தைதானடா எடுத்துக்கிட்டோம். அதுனாலதான் இன்னும் உங்களால டாக்டரா, நீதிபதியா, இஞ்சினியரா வலம் வர முடியுது. உங்களுக்கு 2000 வருஷமா கல்வி கிடைக்குது. அது உங்களுக்கு சாதாரணமா கிடைக்கிற விஷயம். உங்க அப்பனும், தாத்தனும், பத்து தலைமுறையா படிச்சவங்க. எங்களுக்கு அப்படி இல்ல. கல்வி எங்களுக்கு அடிப்படை தேவை. கல்வி உங்களுக்கு சொகுசு பங்களா. எங்களுக்கு கரைசேர உதவும் கட்டுமரம். அனிதா கஷ்டப்பட்டு புடிச்சு கரைசேர நினைச்ச கட்டுமரத்தை நீட்டுங்கிற பேருல புடுங்கித்தான் அவளைக் கொன்றுக்கீங்க. நாங்களாம் கோழியும், ஆடும், மாடும் தின்னு அதோட நிப்பாட்டிக்கிறோம். நீங்க இன்னமும் மனுசக்கறி கேக்குறீங்களேடா.. ச்சீ..
-டான் அசோக்

அகிலா மதம் மாறி ஹாதியாவான கதை!

சிறப்புக் கட்டுரை: அகிலா ஹாதியாவான கதை!
மின்னம்பலம் :கேரளாவில் நடைபெற்றுவரும் ஒரு சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் குழப்பங்கள் காரணமாக இந்தச் செய்தி நம் கவனத்துக்கு வருவதற்கு வாய்ப்பில்லைதான். கேரளாவைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ளதும் அதன் தொடர்ச்சியான சம்பவங்களும்தான் இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணம்.
‘இது லவ் ஜிகாத்’ என்று பெண்ணின் தந்தை கூறுகிறார். ‘அவர் மனப்பூர்வமாகத்தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ளார்’ என்று பெண்ணின் கணவர் கூறுகிறார். உண்மையில் இந்த வழக்கில் நடந்ததுதான் என்ன?
கேரளாவில் உள்ளது திருமணி வேங்கடபுரம் என்ற டி.வி.புரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மற்றும் பொன்னம்மாவின் ஒரே மகள்தான் அகிலா.

திரையுலகில் கடும் அதிர்ச்சி .. அனிதாவின் மரணம் ...

அனிதா மறைவு: திரைத்துறையினர் ரியாக்ஷன்!நீட் தேர்வை எதிர்த்து அனிதா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக திரைத்துறையினர் தங்களது வருத்தங்களை இரங்கல் செய்தியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு குறித்து திரையுலகினர் தெரிவித்திருப்பதாவது:
நடிகர் கமலஹாசன், கோபப்படுவதற்கு அக்ஷராவோ, ஸ்ருதியோ மட்டும் எனக்கு மகளாக இருக்க வேண்டியதில்லை. அனிதாவும் எனக்கு மகள்தான். மாணவி அனிதா மரணத்தைப் போல் இனியும் நடக்காமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், அனிதாவுக்கு ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய தீவிர முடிவை அவர் எடுப்பதற்கு முன்னால் அவரை ஆட்கொண்ட வலி மற்றும் வேதனையை என் இதயம் உணர முடிகிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன், இந்த தேசம் ‘தகுதி’யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது... என் தங்கைக்குக் கண்ணீர் அஞ்சலி என்றும்,
நடிகர் விஜய் சேதுபதி, துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. என் சகோதரி அனிதாவின் பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்... இதுவும் அரசியலா? என்றும்,
நடிகர் விவேக், உன் குடும்பத்தைத் தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி. ஆயினும் உன் வலி புரிகிறது. எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்? இதற்கு மேல் என்ன படிக்க? ஓர் அருமை மாணவியை, அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது என்றும்,
நடிகர் சூரி, படிப்பை இழந்தது நீயல்ல... இந்த தேசம்தான் ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது. கண்ணீர் அஞ்சலி தங்கையே... என்றும் நடிகர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

தெற்காசியாவின் மருத்துவ தலைநகரம் தமிழ்நாடு ..... ஆக்கிரமிப்பு ஆயுதம்தான் நீட்!

நீட் வெறியர்களின் தரம் தகுதி என்கிற பொய் பிரச்சாரத்தில் சிக்கி அறியாமை இருளில் இருக்கிற நம் மக்களிடம் மீண்டும் மீண்டும் இதை பொறுமையாக சொல்லி புரியவைக்க முயல்வோம்!
கடந்த 15 வருடங்களாக, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. அதற்கு முன்பு சுமார் 15 ஆண்டுகள் மாநில அரசு நடத்திய நுழைவுத் தேர்வின் மதிப்பெண்ணுடன் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் இணைத்து, அதன் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.
கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தமிழக மருத்துவக்கல்லூரிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
எம்.பி.பி.எஸ் முடித்தபிறகு, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்காக இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள்தான் அதிக இடம்பிடிக்கிறார்கள். அதாவது, மாநில பள்ளி பாடத்திட்டத்தில் படித்து, அதில் 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவக்கல்லூரிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ் முடித்தப்பின் நடக்கிற மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறார்கள்.

தடைகளை உடை தமிழா ! ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியவர்கள் நீட் வடிவில் வருகிறார்கள்!

நீட் தேர்வு புதியதல்ல. அது நுழைவுத்தேர்வும் அல்ல ... தகுதித் தேர்வு ! நீ என்றுமே தகுதி பெறக்கூடாது என்ற தேர்வு ! என்ன தகுதி? நாம் எப்போதும் அடைய முடியாத தகுதி. சமத்துவத்தை சீர்குலைக்கும் பழையகால ஆயுதமே நீட்.
நாம் உலகின் முதல் பெண் மருத்துவரை உருவாக்கினோம்.
நாம் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை உருவாக்கினோம்.
நாம் பலரையும் உருவாக்கினோம்.

அவர்கள் மீண்டும் நம்மீது போர் தொடுத்துள்ளனர்மருத்துவ சேவைகளை பொறுத்தவரையில் தமிழ்நாடு எப்பொழுதுமே முதன்மையாகவே உள்ளது. அது பலர் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம் மட்டும் அல்ல. பல தடைகளை உடைத்து சமூக நீதியை நிலைநாட்டிய முன்னோடி ! மருத்துவத்துறை வளர்ந்து கொண்டிருந்த 18,19ஆம் நூற்றாண்டுகளில் அதை பெண்கள் பயில தடை செய்யப்பட்டிருந்தது. 1878ல் மருத்துவம் படித்த மேரி ஸ்கார்லீப் உலகின் முதற்சில பெண் மருத்துவர்களுள் ஒருவர்.
எங்கே நடந்ததென தெரியுமா? சென்னை மருத்துவக் கல்லாரியில். பிரிட்டனிலேயே வாய்ப்பு மறுக்கப்பட்ட அவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரி வாய்ப்பு வழங்கியது. முத்துலக்ஷ்மி ரெட்டி என்று அறியப்பட்ட மருத்துவர் முத்து லட்சுமி இந்தியாவின் ஒரு சில முதல் பெண் மருத்துவர்.
ஆனால் இருவருக்குமான பிரச்சனைகள் வேறானவை. பெண் என்பதே ஒரு தடையாக இருந்த நேரத்தில், முத்துலட்சுமிக்கு வேறு பிரச்சனைகளும் இருந்தன. மருத்துவக் கல்லூரியில் பயில சமஸ்கிருதம் தெரிய வேண்டும். அதாவது பூணூலும் சமஸ்கிருதமும் மருத்துவக் கல்லூரியில் சேரத் தகுதிகள்.

நாம் ஏன் நமது உரிமையை மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும்...


நீட் தேர்வால் விளைந்த பலன் இது தான். பல மோடி பக்தர்கள் நீட் தேர்வு ஏன் கண்டிப்பாக வேண்டும் என்று கட்டுரைகள் எழுதினார்கள். ஆனால் ஒன்றை சவுகரியமாக மறந்து விட்டார்கள். தமிழகத்தில் 90 சதவீத மாணவர்கள் ஸ்டேட் போர்டில் தான் படிக்கிறார்கள். ரெண்டு சதவீத சென்ட்ரல் போர்டு மாணவர்களின் பாடத்திற்கு ஏற்ப, தொண்ணூறு சதவீத மாணவர்களையும் தயார் செய்ய சொல்வது எந்த விதத்தில் நியாயம்? நீட் தேர்வால், பிரைவேட் கல்லூரிகளின் டொனேஷன் பணம் ஒன்றும் குறையவில்லை. இன்னும் அதிகம் தான் ஆகி உள்ளது என்று இது சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள். மெடிக்கல் டூரிசம் என்று இந்தியாவை அழைக்கிறார்கள். அதற்கு காரணம் சென்னை தான். இந்தியா அல்ல. இந்த பாழாய் போன தமிழ்நாட்டு ஸ்டேட் போர்டில் படித்த மஹா மண்டு மாணவர்கள் தான் இந்தியாவிலேயே சிறந்த டாக்டர்களாக உள்ளார்கள். வெளிநாட்டுக்காரர்கள் கூட, சென்னைக்கு வந்து தான் இதய சிகிச்சை செய்து கொள்கிறார்கள்.மோடி ஆண்ட குஜராத்திற்கு சென்று யாரும் சிகிச்சை செய்து கொள்வதில்லை. அதனால் முதலில் நமது வலிமையின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நமது தமிழ்நாட்டு பாடத்திட்டங்களை சீரமைத்திட சொல்லுங்கள். அதற்காக, அதை மத்திய அரசிடம் அந்த உரிமையை விட்டு கொடுக்க சொல்லாதீர்கள். நமது ஸ்டேட் போர்டில் படித்த மாணவர்களை, எப்படி மேலும் திறமையாக்குவது என்பது நமது கடமை. அதை நாம் மத்திய அரசிற்கு கொடுக்க முடியாது. இது மாநில அரசின் உரிமை. நீட் தேர்வு செய்து தான், தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டளை இடுவது, மாநில அரசின் உரிமையை பறிப்பதே. ஏனனில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒட்டுமொத்த மத்திய அரசின் செயல்பாடு, மாநில அரசை விட கேவலமாக உள்ளது. பல மாநில அரசுகள் தமிழ்நாட்டை விட மேம்பட்டதாகவும் உள்ளது.

மாணவி அனிதா ’ படுகொலை ’- தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

தமிழகத்தின் உரிமையைப் பறித்து, தற்போது மாணவியின் உயிரையையும் பறித்துள்ள நீட்-ஐ எதிர்த்து ”தமிழகமே திரண்டெழு, மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை உருவாக்குவோம்” என அறைகூவி நாளை செப்-2 ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன

செப்-2, கண்டன ஆர்ப்பாட்டம்
ரியலூர் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில்  1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட்-ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால்,  நீட் தேர்வு எழுதினார். அதில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே அவர் எடுத்திருந்தார்.
மோடி – எடப்பாடி குற்றவாளிகள்
இதனால் அவருடைய மருத்துவ வாய்ப்பு பறிபோய், இறுதியில் தற்போது தற்கொலைக்கு தள்ளப்பட்டார்.  இது தற்கொலையல்ல – படுகொலையே!  ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்த்த போதும், நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்துவிட்டன மோடி – எடப்பாடி கும்பல். இவர்கள் தான் அனிதாவைக் கொன்ற குற்றவாளிகள்.
இந்தக் குற்றவாளிகளை உழைக்கும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டவும், தமிழகத்தின் உரிமையைப் பறித்து, தற்போது மாணவியின் உயிரையையும் பறித்துள்ள நீட்-ஐ எதிர்த்து ”தமிழகமே திரண்டெழு, மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை உருவாக்குவோம்” என அறைகூவி நாளை செப்-2 ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மாணவர்களே! இளைஞர்களே! தொழிலாளர்களே! ஜனநாயக சக்திகளே! கொதித்தெழுந்து வாருங்கள்!
சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்: அண்ணாசாலை, பெரியார்சிலை, சிம்ப்சன், சென்னை,
செப்டம்பர் – 2, காலை 11 .30 மணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 9445112675
——————————————

அனிதா வீடு அருகே இயக்குநர் கவுதமன் தலைமையில் போராட்டம்

Veera Kumar Oneindia Tamil திருச்சி: நீட் தேர்வு திணிப்பு காரணமாக தற்கொலை செய்துகொண்ட, மாணவி அனிதா வீடு அருகே திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அரியலூரை சேர்ந்த குழுமூரில் அனிதா வீடு உள்ளது. அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று காலை இயக்குநர் கவுதமன் அங்கு வந்தார். இதன்பிறகு வீடுக்கு சற்று தூரத்தில் அவர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தார். சுமார் 100 பேர் அவருடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். Gowthaman and around 100 people enter protest near Anitha house நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

மாபா பாண்டியராஜன் ! ஜெயலலிதா அப்போலோவில் இருந்த நேரம் பார்த்து நீட் கையெழுத்து போட்டவன் இவன்!

காங்கிரஸ் தான் நீட் தேர்வை கொண்டு வந்ததுன்னு சொல்லும் அறிவாளிகளுக்காக.. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையில், மாநிலங்கள் விரும்பினால் விலக்கு அளிக்கப்பட்டது.. ஆனால், மோடி பிஜேபி ஆட்சியில் அதை திருத்தி கட்டாயம் என மாற்றினார்கள்.. அப்படி இருந்தும், மத்திய மெடிகல் கவுன்சிலில் சேரவில்லையெனில், இப்போதும் நீட் கட்டாயம் கிடையாது.. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இப்போதும் நீட் தேர்வு கிடையாது.. இங்கே தமிழ்நாட்டில், திமுக ஆட்சி இருந்தவரை, பின்பு ஜெயா இருந்தவரை, கட்டாய நீட் முறைக்கு கையெழுத்து போடவில்லை.. அவர் அப்பலோவில் அட்மிட் ஆகியவுடன், பிஜேபியின் பினாமி ஓபிஎஸ்  அப்போது அமைச்சராக இருந்த பிஜேபியின் ஒற்றன் மாபா பாண்டியராஜன் இருவரும் சேர்ந்து தமிழ் நாட்டை மத்திய பிஜேபி அரசிடம் அடகு வைத்து கையெழுத்து போட்டார்கள்.. சும்மா, ஒன்னும் தெரியாமல் அரசியல் பேசக்கூடாது.. Via: Prakash JP

மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்க மறுப்பு தம்பிதுரை, மைத்ரேயன் அதிர்ச்சி


மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்க பிரதமர் மோடி மறுத்துள்ளதால், அதிமுக எம்பிக்கள் மு.தம்பிதுரை, வி.மைத்ரேயன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், கே.பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவியேற்றனர். இந்த இணைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் முக்கியப் பங்காற்றியதாக தினகரன் ஆதரவாளர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. அதனை உறுதிப்படுத்துவதுபோல கடந்த ஒன்றரை மாதங்களில் முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் பிரதமர் மோடியை 5 முறை சந்தித்துப் பேசியுள்ளனர்.

தோழர்களே .. வீரவணக்கங்கள் வேண்டாம். வீதிக்கு வாருங்கள் .. தமிழகமெங்கும் கொந்தளிப்பு!

JALLIKATTU-Veeravilaiyattu · மாணவர்கள் அண்ணா சாலையில் போராட்டத்தில்
இறங்கி உள்ளனர்! மதுரையிலும் போராட்டம் துவங்கி உள்ளது! திருவாரூர் மாணவர்கள் மதியம் முதலே போராட்டம் துவங்கி விட்டனர்! நாளை :- மதுரை பாஜக அலுவலகம் முற்றுகை! தஞ்சை இரயிலடி போராட்டம் துவக்கம்! திருச்சி - நாளை முதல் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம்! மேலும் மற்ற ஊர்களின் தகவல்களை தோழர்கள் பகிரவும் update செய்து கொள்ளலாம்!

விதைகள் நாளை காலை 9 மணியளவில் காரைக்குடி ஆரியபவனிடம் தங்கை அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும்.கையாளாகாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களால் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. உணர்வுள்ளோர்கள் ஒன்று  கூடுவோம்.
விதைகள் துணை நிற்போம் தோழர்களே... சென்னையில் பாஜக அலுவலகம் முற்றுகை. செப்டம்பர் 3, 2017 ஞாயிறு காலை 10 மணி 1176 மதிப்பெண் எடுத்து, நீட் தேர்வினை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணம் பார்ப்பன பாஜக அரசின் பச்சைப் படுகொலை. தமிழக மாணவர்களை வஞ்சித்த பாஜக எடுபிடி அதிமுக அரசே! பதவி விலகு! கல்வி உரிமை மாநிலத்திற்கே சொந்தம். இந்திய அரசே! ஒற்றைக் கல்வி முறை என்ற பெயரில் பார்ப்பனியத்தை திணிக்காதே. 196.75 கட் ஆஃப் எடுத்த அனிதாவுக்கு மருத்துவக் கல்வி இல்லையென்றால் என்னங்கடா உங்கள் நியாயம்? பார்ப்பன CBSE படித்தவனுக்குத்தான் மருத்துவக் கல்வி என்றால் மருத்துவக் கல்லூரிகளை இழுத்து மூடு. - மே பதினேழு இயக்கம்

BBC :பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம் (சிறப்பு கட்டுரை)

பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம்விவேக் கவுல் பொருளியல் வல்லுநர்: கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை’ பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ப்பட்ட இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைத் திட்டமாகும்.
இத்திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை பொருளியல் வல்லுநர் விவேக் கவுல் ஆராய்கிறார்.
கடந்த பத்து மாதமாக பல இந்தியர்கள் இது தொடர்பாகக் கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கு இந்திய ரிசர்வ வங்கியின் ஆண்டறிக்கையின் 195வது பக்கத்தில் பதில் உள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றி பெற்றதா, தோல்வியடைந்ததா? ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தின்படி அது ஒரு இதிகாச அளவிலான தோல்வி அடைந்தது என்று சொல்வதே சரி.

எடப்பாடி பழனிசாமி நீட்' என்ற வார்த்தையே தவிர்த்து இரங்கல் உரை அறிக்கை!


நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியால் மனமுடைந்து, மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அனிதா (17). மூட்டைத் தூக்கும் கூலித்தொழிலாளியின் மகளான இவர் +2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்களும், மருத்துவப் படிப்பின் கலந்தாய்வுக்கான கட் ஆஃப் 196.50 மதிப்பெண்களும் எடுத்திருந்தார். இவர், நீட் தேர்வை எதிர்த்து, +2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வுகளை நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அனிதாவின் தற் "கொலை" பின்னணியில் இருந்த நம்பிக்கை துரோகிகள் இவர்கள்தான்!


நல்லதே நடக்கும்... தம்பிதுரை!‘நீட் விலக்குக்குக்கோரி தீவிர முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் இராதாகிருஷ்ணன் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் என்று தொடர்ந்து செய்திகள் வந்தபோதும்கூட மாணவர்கள் ஓரளவுக்குத்தான் நம்பிக்கொண்டிருந்தார்கள். “நீட் தேர்விலிருந்து விலக்கு பெறவே தமிழக அரசு பாடுபட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே முயற்சித்து வருகிறோம்.மத்திய அரசிடம் ஓராண்டு விலக்கு கேட்கவில்லை. நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கேட்டே ஆலோசித்து வருகிறோம். நல்லதே நடக்கும் இதனை மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. அதனால்தான், மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்கப்படாமல் உள்ளது. தொடர்ந்து, முயற்சி செய்து வருவதால் நல்லதே நடக்கும்” என்று எதிர்பார்க்கிறோம் மக்களவை துணைசபாநாயகரும், அதிமுகவின் மூத்த தலைவருமான தம்பிதுரை அறிவிக்க நம்பிக்கை துளிர்த்தது.
ஓராண்டு விலக்கு- நிர்மலா சீதாராமன்!   ;நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்று அடம்பிடிக்கும் பா.ஜ.கவின்… நீட் தேர்வு விலக்கு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட மத்திய தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென்று, “நீட்டிலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு தரும்”என்று அறிக்கையிட ஐ.சி.யூவில் உயிருக்குப்போராடிக்கொண்டிருந்த நோயாளி உயிர்பிழைத்ததுபோல் மாணவர்கள்- பெற்றோர்கள் மத்தியில் பெருமூச்சு ஏற்பட்டது.

ஏன் அனிதா போன்ற தமிழக அடித்தட்டு மக்களை படிக்க விடாம தடுக்கிறீர்கள்?

அந்த கண்ணாடி போட்ட பய டாக்கடர் ஆனா அவங்க வீட்ல அவன் மூனாவது டாக்டர்.... ஆனா அனிதா மாதிரி ஆளுங்க எல்லாம் டாக்டர் ஆனா அவங்க தலைமுறைக்கே அதான் முதல் டாக்டர்.... இப்ப சொல்லுங்க யார் டாக்டர் ஆவுறது முக்கியம்??? இத்தனைக்கும் அனிதாவுக்கு டாக்டர் ஆக தகுதியான மதிப்பெண் இருக்கு!!! அநியாயமா கொண்ணுட்டீங்களேடா...

roll Trousers 2.0 அவன யாரும் இங்க படிக்க வேண்டாம்னு சொல்ல வரல? ஏன் அனிதா மாதிரி ஆளுங்கள படிக்க விடாம தடுக்கனும்னுதான் கேட்குறேன்

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

உடுமலை கவுசல்யா :ஜாதி ஒழிப்பாளர்கள் ஆயுதமாக போராட என்னை நான் ஒப்படைத்துவிட்டேன்


கீற்று :ஜாதிய ஆதிக்கக் குடும்பத்தில் வளர்த் தெடுக்கப்பட்ட நான், அதிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு ஜாதி ஒழிப்புப் போராளியாகி விட்டேன் என்றார், ஜாதி வெறிக்கு தன் துணைவரை பலி கொடுத்த உடுமலை கவுசல்யா.
ஆக.20ஆம் தேதி சிதம்பரத்தில்; விடுதலை கலை இலக்கியப்பேரவை நடத்திய ‘திருமா-55’ நிகழ்வில் பங்கேற்று அவர் நிகழ்த்திய உரை.
நீங்கள் எனக்குத் தந்திருக்கும் இந்தத் தலைப்பு என் வயதிற்கும், அனுபவத்திற்கும் பொருத்த மில்லாதது; சுமக்கமுடியாத கனம் பொருந்தியது.
திருமாவளவன் என்கிற ஒரு அரசியல் ஆளுமை குறித்து சிறியவளான நான் பேசுவதற்கு இனிமேல் தான் என்னை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும், நான் இந்த நிகழ்விற்கு வந்தமைக்குக் காரணம் நான் உங்களில் ஒருத்தி, உங்கள் குடும்பத்தில் ஒருத்தி என்பதைப் பறைசாற்றுவதற்குத்தான். என் குடும்பம், என் பெற்றோர் முத்துராமலிங்கத் தேவரின் வம்சம் எனச் சொல்லிக் கொள்பவர்கள். அவர் குறித்து பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அந்த உருவம் சாதிவெறியைத் தூக்கிப் பிடிக்கிறவர்களின் அடையாளமாகவும், குறியீடாக வும் நடைமுறையில் திகழ்கிறது என்பதை நான் தினம்தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

உறவாடிக் கெடுப்பவர்களை உணர்ந்துகொண்டேன்!’ - கலங்கும் நடிகை மதுமிதா

நடிகை மதுமிதா‘பக்கத்து வீட்டுப் பெண்ணின் கையை எதற்காகக் கடித்தேன்' என்று நகைச்சுவை நடிகை மதுமிதா விரிவாக விளக்கமளித்துள்ளார்.
சென்னை, வளசரவாக்கம், அன்பு நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர், நகைச்சுவை நடிகை மதுமிதா. இவரது பக்கத்து வீட்டில் குடியிருப்பவர், உஷா. இவர்கள் இருவருக்கும் நடந்த தகராறில் நடிகை மதுமிதா, உஷாவின் கையைக் கடித்ததாக கோயம்பேடு போலீஸில் உஷா புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடந்துவருகிறது.
இந்தத் தகவல் கிடைத்ததும் நடிகை மதுமிதா வீட்டுக்குச் சென்று, நடந்தது என்ன என்று விசாரித்தோம். அப்போது, அவர் நம்மிடம் விரிவாகப் பேசினார். ''நான் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாக என்னைப்பற்றிய நல்ல கமென்ட்ஸ்தான் கேட்டிருப்பீர்கள். ஆனால், நேற்று மாலையிலிருந்து தவறான தகவல் பரப்பப்பட்டுவருகிறது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு குடிவந்து ஆறு மாதங்களாகின்றன. எனக்கு ஆக்டிவ் டிரைவராக வந்தவர்தான் பாலாஜி. அப்போது, நான் வாடகை வீட்டில் குடியிருந்தேன். டிரைவர் பாலாஜி, அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு விற்கப்படுவதாகத் தெரிவித்தார். டிரைவர் பாலாஜியின் மனைவி உஷா, வீட்டு புரோக்கர். அவர்தான் எனக்கு வீடு வாங்கிக்கொடுத்தார். அதற்கு, கமிஷனாக 60 ஆயிரம் கொடுத்தேன். வீடு பராமரிப்புப் பொறுப்பு, உஷாவிடம் இருந்தது. அப்போது, பராமரிப்புக்கான தொகை அதிகமாக இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

கமல் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அரசியல் பாடம்?

என் நிறம் காவி அல்ல!கோட்டைக்குப் புறப்படுவோம் என்று நேற்று ஆகஸ்டு 30 ஆம் தேதி கோவையில் இருந்து அழைப்பு விடுத்த நடிகர் கமல்ஹாசன், இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்திருக்கிறார். இதன் மூலம் அவரது அரசியல் நகர்வின் காய்களை வேகமாக நகர்த்தி வருகிறார் கமல்ஹாசன்.
நேற்றிரவு கேரளாவுக்குப் பயணமான கமல்ஹாசன் இன்று மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பகல் உணவு அருந்தினார். சில மணி நேரங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.
முதல்வரை சந்திக்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‘நான் திரு.பினராயி அவர்களிடம் கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன். எனக்குத் தேவையான பாடங்களை இங்கிருந்து எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன்’’ என்றார்.

நகரங்களில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள்!

நகரங்களில் மீண்டும் மதுக்கடை!
மின்னம்பலம் : மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் மதுக்கடைகள், பார்களை மீண்டும். திறக்கத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
'தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுபான விற்பனைக் கடைகளால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. இந்தக் கடைகளை அகற்ற வேண்டும்'' என்று வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், 'தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள கடைகளை அகற்ற வேண்டும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குக் கடைகளை அமைக்கக் கூடாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !

நம் மீது நம்பிக்கை இழந்த அந்தத் தருணத்தில் தான் அனிதா பாசிஸ்டுகளால் ‘கொல்லப்பட்டார்’. என்ன செய்யப் போகிறோம்?
னிதா, அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவி. இவரது தந்தை, சுமை தூக்கும் கூலித் தொழிலாளி . பத்தாண்டுகளுக்கு முன்னரே தனது தாயை இழந்த அனிதா, மருத்துவப் படிப்பையே தனது கனவாகக் கொண்டிருந்தார். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், அடிமை எடப்பாடி கும்பலும், உச்சநீதிமன்றமும் இணைந்து அனிதாவின் கனவில் ’நீட்’ என்னும் கொள்ளி வைத்து கனவைக் கருக்கி விட்டனர்.
தனது மருத்துவராகும் கனவைச் சுமந்தபடி, அதற்கான முழு முயற்சிகளையும் செய்து படித்தார் அனிதா. அதன் விளைவாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவக் கல்விக்கான சேர்க்கைக்கு கட்- ஆஃப் மதிப்பெண்ணாக 196.75 பெற்றிருந்தார்.

திருமாவளவன் பிரகடனம் : மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான யுத்தமே அனிதாவின் மரணம்

Mayura Akilan o Oneindia Tamil மதுரை: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான யுத்தமே
அனிதாவின் மரணம் என்று குற்றம் சாட்டியுள்ள திருமாவளவன், அனைத்து ஜனநாயக சக்திகளும் மாணவர்களும் அணி திரள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.  மாணவி அனிதாவின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இது குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலையும் அரசுக்கு எதிராக கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், மத்திய அரசின் நடவடிக்கை, மாநில அரசின் மெத்தனமே அனிதாவின் மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

ஊழல் நிறைந்த ஆசிய நாடுகள்: இந்தியா முதலிடம்.. அடுத்த இடத்தில் வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர்

புதுடில்லி: ஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகள் குறித்து போர்ப்ஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.ஆசிய பசிபிக் நாடுகளில் ஊழல் குறித்து வெளிப்படை தன்மைக்கான சர்வதேச அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. 16 நாடுகளில் இருந்து 20 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை தற்போது போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில், ஊழல் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளன.இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் பள்ளி, மருத்துவமனை, அடையாள அட்டை ஆவணங்கள் பெற, போலீஸ் மற்றும் சேவை பணிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அரசு பள்ளிகளில் லஞ்சம் கொடுப்பதாக 58 சதவீதம் பேரும், சுகாதார திட்டத்திற்கு 59 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். அதேநேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருவதாக 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 41 சதவீதம் பேர் ஊழல் அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். தினமலர்

டாக்டர் அனிதா... ஒரு கோடி தரம் உரத்து கூவுவோம் டாக்டர் அனிதா !அனிதாவின் மரணத்துக்கு யார் பொறுப்பேற்பார்கள் ? அனிதாவின் உடலை
யார் கையில் கொடுப்பது. பதவிக்காகவும், பணத்துக்காகவும் பேரம் பேசி குனிந்தே கிடக்கும் தமிழக ஆட்சியாளர்கள் கையில் அனிதாவைக் கொடுக்கக்கூடாது. நீட் என்ற பயங்கரவாதத்தைச் செலுத்தி மறைமுகமாகக் கொன்றிருந்தாலும், கையில் இரத்தக் கரையுடன் ஃபோட்டோக்களில் சிரித்துக்கொண்டிருக்கும் அரசாங்கத்திடமும் கொடுக்கக்கூடாது. அன்று மெரினாவிலும், நெடுவாசலிலும் கூடியிருந்த மக்களின் கையிலிருக்கும் மொபைல் டார்ச் லைட்டுகளைப் பிடுங்கிவிட்டு அனிதாவை சேர்ப்பது ஒன்றே அனிதாவுக்குச் செலுத்தும் அஞ்சலி. நூறு முறை சொல்வோம் டாக்டர். அனிதா என்று. வங்கக் கடலின் அலைகளும், காற்றும் அனிதாவின் டாக்டர் பட்டத்தை உலகம் முழுக்க கொண்டுசேர்க்கட்டும்.
Thameem Tantra
நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய அனிதா நல்ல மதிப்பெண் வாங்கியும், நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காததால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டாள்.
நிற்க ! அனிதா செத்ததிற்கு பிறகு இரங்கல் தெரிவிப்போம்..
இப்போ "இதற்கெல்லாமா தற்கொலை செய்து கொள்வார்கள்", "மருத்துவம் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கா நம் கல்வி தரம் இருக்கிறது" என்று சில நாய்கள் சைக்கோலஜி கிளாஸ் பதிவு போடும்.. அவனை முதலில் செருப்பால் அடி ... அனிதா இறந்ததிற்கு அந்த கொலைகாரர்கள் தான் காரணம்.

டாக்டர் கிருஷ்ணசாமி : ஏழு கேள்விகளில் ஒரு கேள்விக்கு கூட பதில் எழுத முடியாதவர் எப்படி நல்ல மருத்துவர் ஆகமுடியும்?

அனிதாவின் தற்கொலையில் அனுதாபம் கொள்ளலாம், அங்கீகரிக்க முடியாது: கிருஷ்ணசாமி:
;அனிதாவின் தற்கொலையில் அனுதாபம் கொள்ளலாம் ஆனால் அங்கீகரிக்க முடியாது என புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ; இது குறித்து இன்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, எழு கேள்விக்கு ஒரு கேள்வி பதில் அளித்தாலே மருத்துவராக தகுதியாகி விடலாம். அந்த ஒரு கேள்விக்குக்கூட பதில் அளிக்காதவர்களை எப்படி மருத்துவராக தேர்ந்தெடுக்க முடியும் என்பது தான் என் கேள்வி?
இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏற்கனவே தமிழக அரசாங்கம், எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் தொடர்ந்து தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தேவையற்ற அழுத்தத்தை கொடுத்து எங்களுக்கு விதிவிலக்கு தாருங்கள், விதிவிலக்கு தாருங்கள் என்று நீதிமன்றம், சட்டமன்றம் சென்று அழுத்தம் கொடுத்ததின் விளைவாக தமிழக மாணவர்கள் சிலர், அனைவரும் கிடையாது, ஒரு சிலர், ஒருவேளை இப்படியும் வருமோ என்ற அவநம்பிக்கையில் இருந்து விட்டார்கள். ஆனால் நீட் தேர்வின் மூலமாக தான் தேர்வு நடைபெறும் என உச்சநீதிமன்றம் இறுதியாக கூறிவிட்டது. இப்போது நீட் தேர்வின் அடிப்படையில் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.

கமல் :கனவுகளோடு வாழ்ந்த பெண்ணை கண் மூடவைத்து மண்ணோடு மண்ணாக ஆக்கிவிட்டோம்:

கனவுகளோடு வாழ்ந்த பெண்ணை கண் மூடவைத்து மண்ணோடு மண்ணாக ஆக்கிவிட்டோம் என நடிகர் கமல் மாணவி அனிதா தற்கொலை குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அனிதா தற்கொலை போன்ற துயரம் இனி நிகழக்கூடாது. இதை விட அவலம் வேறு வேண்டுமா? அந்த பெண் எந்த ஊர்? என்ன ஜாதி? எல்லாம் முக்கியமல்ல. அவர் என் மகள், அந்த பெண்ணின் பெயர் அக்க்ஷராவோ, சுருதியாகவோ இருந்தால் தான் நான் கோபப்பட வேண்டுமா? ஜாதி, கட்சி, மாநில எல்லை கடந்து நாம் போராட வேண்டியதிருக்கும். நியாயத்திற்காக போராட வேண்டியதிருக்கும். கனவுகளோடு வாழ்ந்த பெண்ணை கண் மூடவைத்து மண்ணோடு மண்ணாக ஆக்கிவிட்டோம். இந்தோ வருகிறது நல்ல செய்தி என்று குடுகுடுப்பை குலுக்கியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்.
அந்த பெண்ணும்தான். தோழர் திருமாவளவன் வெகுண்டு எழவேண்டும்.

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு போராட திராவிடர் கழகம் அழைப்பு!

அனிதாவின் முடிவை வேறு எந்த மாணவர்களும் எடுக்கவேண்டாம்!*- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி* அனிதாவின் முடிவை வேறு எந்த மாணவர்களும் எடுக்கவேண்டாம் - நாம் போராடி வெற்றி பெறுவோம் என்கிற அந்தத் துணிவும், ஒரு வைராக்கிய உணர்வும், உறுதியும் தேவையே தவிர - தங்களுடைய இழக்கக்கூடாத உயிரை இதற்காக இழக்கக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனியார்
தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். பேட்டியின் விவரம் வருமாறு: அனிதாவின் தற்கொலை செய்தி நம் உள்ளத்தை வெகுவாக உலுக்குகிறது! இந்தச் செய்தி அவருடைய பெற்றோர் எவ்வளவு வேதனை அடைகிறார்களோ, அந்த அளவிற்கு சொல்லொணா துயரத்தையும், வேதனையையும் எங்களுக்கெல்லாம் ஏற்படுத்தியிருக்கிறது. அனிதா போன்ற கிராமப்புற மாணவிகள் தங்களுடைய கனவுகள் நினைவாக்கப்படவில்லையே என்பதற்காக, இப்படிப்பட்ட ஒரு இறுதி முடிவை எடுத்துவிட்டார்களே என்கிற வேதனை, தேள் கொட்டுவதுபோல கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், இதற்கு முழுக்காரணம் யார்? நம்ப வைத்து கழுத்தை அறுத்தது மத்திய அரசும் - மாநில அரசும்!