NDTV.com :
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே கடந்த 26-ம் தேதி
அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த
ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, அதிபர் மைத்திரிபால சிறிசேனா
பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதேநேரம் சபாநாயகர் கரு ஜயசூர்ய, `ரணில்
பிரதமராக தொடர்வார்’ என அறிவித்தார். இதேபோல் தமிழ் அமைப்புகளும் ரணிலுக்கே
ஆதரவு என அறிவித்தனர். இதனால் இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவி
வந்தது.
இதனால், கடந்த 7-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை
நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். இதற்கு
சபாநாயகர் கரு ஜயசூர்ய, அந்நாட்டு எதிர்க்கட்சிகள், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச
அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஒருவழியாக எதிர்ப்புக்குப் பணிந்த
சிறிசேன வரும் 14-ம் தேதியன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தைக் கூட்ட
உத்தரவு பிறப்பித்தார்.