சனி, 19 ஜூன், 2021

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்! லண்டனில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கு கொள்கிறார்?

 Hemavandhana - tamil.oneindia.com :  சென்னை: டெல்லி பயணம் முடிந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் லண்டன் போக போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது..
இதற்கு என்ன காரணம்? ஏன் முதல்வர் வெளிநாடு செல்கிறார்? ஆட்சிக்கு வந்த இந்த 2 மாத காலமாகவே திமுக, கொரோனா தடுப்பு விவகாரங்களை தீவிரமாக கையிலெடுத்தது..
மற்றொது புறம், தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் முனைப்பு காட்டி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லி பயணம் அமைந்தது.. எந்த ஆட்சியாக இருந்தாலும் பதவியேற்ற ஒரு மாதத்தில் டெல்லி சென்று, பிரதமர், உள்துறை மற்றும் முக்கிய துறைசார்ந்த அமைச்சர்களை சந்தித்து, தங்களது மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை கேட்டு வாங்கி வருவது வழக்கம்.
தொற்று ஆனால், இங்கு தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால், டெல்லி பயணம் தள்ளி போனது.. இப்போது தமிழ்நாட்டுக்கு தேவையானவைகளை எடுத்து சொல்லி, அதற்கான கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் தந்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. ஸ்டாலின் டெல்லி சென்றதில் இருந்து, பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு அளித்த வரவேற்பும், முதல்வருக்கு வழங்கிய பாதுகாப்பும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

ஆகமம் சாஸ்திரம் வேதம் எல்லாம் எங்கே போயின? திருட்டு சாமியார்களுக்கு பூஜை புனஸ்காரம் ...

May be an image of 1 person and standing

Swaminathan V Vaithilingam  :   எதற்கெடுத்தாலும் எல்லாம் ஆகம விதிகள் படிதான்  நடக்கனும், தர்ம சாஸ்திரத்தை மீறக் கூடாது என்றெல்லாம் புலம்பும் வைதீக பெருமக்கள்,  எந்த சாஸ்த்திரம் படி மனிதனுக்கு ஆராதனை செய்கிறார்கள்.
எந்த மனிதனும்  தெய்வமாக முடியாது.
தெய்வமும் மனித பிறவி எடுக்க முடியாது என்பதே உண்மை.
எவராவது தன்னை தெய்வப் பிறவி என்று சொல்லிக் கொண்டால் அவரது நோக்கம் மக்களை ஏமாற்றுவது தான் என்பதை உணர்ந்து ஆரம்பத்திலேயே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர் போன்ற ஏமாற்றுக் காரர்களை வளர விட்டு பல காலம் கழித்து நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை.
பிரேமானந்தா, நித்தியானந்தா, கல்கி சாமியார் போன்றவர்கள் ஏமாற்றி சொத்து குவித்தார்கள் என்று தெரிந்த பிறகும் மக்கள் இவர்களை நம்பி மோசம் போவது வேதனையான செய்தி.
இது போன்ற கயவர்கள் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து மக்களை மாயையிலிருந்து காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும்

சிறையில் நளினி எழுதிய ... அந்த ஏழுபேர் பற்றிய முகநூல் லீக்ஸ்

May be an image of 1 person, flower and text

நெற்றிக்கண் மனோஹரன் : சிறையில் நளினி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார் என ஏக அலப்பறைகள்,  அவள் எழுதியதெல்லாம் உண்மையாம்
அதில் முருகன் வெளிநாடு செல்ல இந்தியா வந்ததாகவும், சிவராசனை ஒரு ஏஜன்ட் என்ற முறையில் சந்தித்ததாகவும், இன்னும் ஏராளமான பொய்மூட்டைகளை அவிழ்த்திருக்கின்றார்
இன்னொரு இடத்தில் பேரரிவாளனை காப்பாற்ற இவர் சொல்லியிருக்கும் ஒரு பொய், இவரது புத்தகத்தை அப்படியே தூக்கி தூர எறிய வைக்கின்றது
அதாவது பேரரிவாளனும் புகைப்பட கலைஞனாம், அவனும் ஹரிபாபு போலவே குற்றமில்லாதவனாம், இதில்தான் வசமாக சிக்குகின்றார் நளினி
பேரரிவாளன் சிறுவயது முதல் புலி தொடர்பு உள்ளவர் என்பதும், அவர் புலிகளுடன் நேரடியாக பழகியவர் என்பதும் ரகசியம் அல்ல, நிரூபிக்கபட்ட விஷயம்.
பத்மநாபா கொலைக்கு சிவராசன் தமிழகம் வரும்போதும் இதே பேரரிவாளன் உதவியிருக்கின்றார், அதன் பின்புதான் சிவராசனுக்கு பைக் வாங்க உதவுதல், வயர்லெஸ் இயக்க கார் பேட்டரி வாங்க உதவுதல் என அவரின் வலது கரமாகவே மாறி இருந்தார்.

இந்த விஷயத்திலுமா.. ஆபாச மதன் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. மிரண்டு போன போலீசார்

 Hemavandhana -  tamil.oneindia.com :  சென்னை: சென்னை கொண்டுவரப்பட்ட பப்ஜி மதனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதில், பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைனில் ஆபாசமாகப் பேசி பேசியே கோடி கோடியாக சம்பாதித்துள்ளார் மதன்..
தன்னை எல்லாம் போலீசாரால் பிடிக்கவே முடியாது என்று கெத்து காட்டி கொண்டிருந்தார்.. கடைசியில் மதனை சிக்க வைத்ததே அவர் அப்பாதான்.
அவர் கொடுத்த தகவலின்படிதான், தர்மபுரி ஹோட்டலில் பதுங்கி இருந்தவரை கொத்தாக அள்ளி தூக்க வந்தனர் நம் போலீசார்.
இவரிடம் இரவெல்லாம் விடிய விடிய விசாரணை நடந்தது.. அப்போது, போலீசாரிடம் மதன் அளித்த பல்வேறு விஷயங்கள் தொடர்பாக வாக்குமூலம் தந்துள்ளார்.. அந்த வாக்குமூலங்கள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.. மதன் தினமும் 20 மணி நேரம் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் நேரம்.. இவர் ஆன்லைனில் இருக்க இருக்க, பணம் கொட்டி கொண்டே இருக்குமாம்..

இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 4,000 நிவாரணம்!'

nakkeeran : தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 4,000 நிவாரணம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (19/06/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு நிவாரணத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக ஐந்து பேருக்கு நிவாரணம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.< இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் மூலம் 13,553 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரூபாய் 5.42 கோடியை ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.

மீண்டும் சாத்தான்குளம் போலீஸ் கொலை ... மார்ட்டின் கொலை .. வீடியோ

 News18 Tamil :  சாத்தான்குளம் போலீசார் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மார்ட்டின் என்பவர் உயிரோடு இருக்கும் போது வெளியிட்ட வீடியோ தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான மார்டின். வேன் ஓட்டுநரான இவர், ஃபைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மீரான் மைதீன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 10ம் தேதி அன்று இரவு மார்ட்டின் தனது சகோதரரான மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தின் சாத்தான்குளம் பள்ளிவாசல் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாபு சுல்தான், மைதீன் மீரான், புகாரி உட்பட 10க்கும் மேற்பட்டோர் மார்ட்டினை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்தனர்.

மேகதாட்டு அணை: கர்நாடக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மேகதாட்டு அணை: கர்நாடக அரசுக்கு முதல்வர் கண்டனம்!

minnambalam : மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காகக் கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது, "டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பை அதிகரிப்பதே இந்த அரசின் இலக்கு. வழக்கம்போல் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதனிடையே கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணைகட்ட முயற்சி செய்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு  விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதனால் அணை கட்டுவதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பண்டிதர் அயோத்தி தாஸரின் ஒரு பைசாத் தமிழன் இதழ் தொடங்கி 114 ஆம் ஆண்டு நிறைவு! 19.06.1907

No photo description available.

இலக்கியன் சூனாம்பேடு  : பண்டிதர் அயோத்தி தாஸரின் ஒரு பைசாத் தமிழன் இதழ் தொடங்கி 114 ஆம் ஆண்டு நிறைவு.
இன்றைக்கிருந்து 114 ஆண்டுகளுக்கு முன் சரியாக 19.06.1907 ஆம் நாளில் பண்டிதர் அயோத்திதாசரால் ஒரு பைசாத் தமிழன் என்ற பெயரில் இதழொன்று தொடங்கப்பட்டது.
இன்றைக்கு போல் கிடையாது. அன்றைக்கு இதழ்களைத் தொடங்குவதும் நடத்துவதும் இயக்கம் நடத்துவதற்கு ஒப்பானதாகும்.
எந்த ஒரு சமூக நடவடிக்கையின் தொடக்கமாகவும் பிரதான பணியாகவும் இதழ் நடத்துவதாகவே இருந்தன. அயோத்திதாசர் தமிழன் ஏடு மூலம் இயக்கமாக செயல்பட்டார்.
19-ம் நூற்றாண்டின் இறுதி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று நவீனத்தின் இன்றியமையாத காலக்கட்டத்தில் இவ்விதழ் வெளியானது.
பாரம்பரிய மதிப்பீடுகளை கொண்டாழுகிய நம் சமூகத்தில் காலனியத்தின் வழி அறிமுகமான புதிய விசயங்களை ஒட்டி நடந்த விவாதங்கள் புரிதல்கள் நிலை பெறல்கள் இதழ்கள் வழியாகவே நடந்தன. எனவே தான் அக்கால இதழ்கள் சமூக வரலாற்று ஆவணங்களாக இருக்கின்றன. தமிழன் ஏடு அத்தகையவற்றுள் முதன்மையானது.

கந்துவட்டி- முகம்மதலி தற்கொலை! மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் மற்றும் நால்வர் கைது

May be an image of 1 person and standing

ஜெ. அப்துர் ரஹ்மான்  : மதுரை: `யாரையும் டார்ச்சர் பண்ணாதீங்க!’ - கந்துவட்டிக் கொடுமையைச் சொல்லும் மரண வாக்குமூலம்.  
மரண வாக்குமூலம் என்று கூறி வீடியோவில் பேசும்போதே முகமது அலி கதறி அழுகிறார். பார்ப்பவர்களுக்கு நெஞ்சம் பதறுகிறது.
‘‘நான் கடனில் சிக்கிட்டேன். வக்கீல் செல்வகுமார்கிட்ட அஞ்சு லட்சம் கடன் வாங்கி ஆறு லட்சம் வரை வட்டி கட்டியிருக்கேன். ஆனா, இன்னும் அதிக வட்டி கேட்டு டார்ச்சர் செய்றாங்க. ரொம்ப அசிங்கமா பேசுறாங்க. வெத்துப் பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்திருக்கேன். என்னோட, என் மனைவியோட செக் லீஃப் கொடுத்திருக்கேன். அவங்க ரொம்ப மோசமா நடந்துகிறாங்க. நான் சாகறதுக்கு அவங்களே காரணம்.

வெள்ளி, 18 ஜூன், 2021

இரு ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் (கறுப்புப்?) பணம் 6,625 கோடியில் இருந்து 20 ஆயிரத்து, 706 கோடி ரூபாவாக பாய்ச்சல்

 தினமலர் :புதுடில்லி : கடந்த இரு ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் பன்மடங்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக திகழ்கின்றன. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஆண்டிற்கான நிதி சார்ந்த வருடாந்திர தரவுகளை, சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. அதில், இந்த வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள நிதிகள் குறித்த தகவல்களும் கிடைத்து உள்ளன.

திமுக ஐ டி விங் பதவி பிடிஆரிடம் இருந்து கைமாறுகிறது? என்ன நடக்கிறது மேல் மட்டத்தில்?

marihangaraj Jeyapal - Samayam TamilUpdated: : பழனிவேல் தியாகராஜன் பதவிக்கு சிக்கல் இருப்பதாக கட்சி வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரவலைக் வேகமாக கட்டுக்குள் கொண்டு வந்தது, நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தியது ஆகியவை அரசுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அத்துடன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.
இவை எல்லாவற்றையும்விட ஸ்டாலின் சரியான ஆள்களை சரியான இடத்தில் நியமித்து வேலை வாங்குகிறார் என்ற பேச்சை பரவலாக கேட்க முடிகிறது. அந்த வகையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பழனிவேல் தியாகராஜன் பம்பரமாக சுழன்று வருகிறார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற வங்கிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிடிஆரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறிவருவதாக கோட்டையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் லைம் லைட்டுக்கு வந்த கனிமொழி..! மு.க.ஸ்டாலின் – மோடி சந்திப்பு..

asianetnews.com : மு.க.ஸ்டாலின் – மோடி சந்திப்பு..! டெல்லியில் லைம் லைட்டுக்கு வந்த கனிமொழி..!

ஸ்டாலின் பொன்னாடை போத்த அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட மோடி, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மிகவும் நலம் என்று ஸ்டாலின் கூற, ஹவ் இஸ் யுவர் சிஸ்டர் என்று அடுத்த கேள்வியை கேட்க, ஸ்டாலின் கனிமொழி இஸ் பைன் என்று பதில் அளித்ததாக கூறுகிறார்கள்....முதலமைச்சராக பதவி ஏற்று சுமார் நாற்பது நாட்களுக்கு பிறகு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார் மு.க.ஸ்டாலின். பொதுவாக முதலமைச்சராக பதவி ஏற்பவர்கள் முதல் வேலையாக டெல்லி சென்று பிரதமராக இருப்பவர்களை சந்திப்பது தான் மரபு. ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற போது தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக வீசிக் கொண்டிருந்தது. இதனால் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்க முடியவில்லை. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

திரு கக்கன்! இந்தி எதிர்ப்பு போராட்டம்.. துப்பாக்கி சூட்டுக்கு 700 மாணவர்கள் வரை .. (June 18, 1908)

Yasir RM : கக்கனின் மறுபக்கமும், திராவிட இயக்க தலைவர்களின் மாண்பும்:  திராவிட ஆட்சியாளர்களை பிடிக்காதவர்கள், கக்கனை போன்று எளிமையான எம்.எல்.ஏ வர வேண்டும் என்று வாதம் வைப்பதுண்டு.

கக்கன் உண்மையில் எளிமையானவர் தான். ஆனால் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, 70 மாணவர்கள் இறந்ததற்கு காரணமும் அவர் தான். அவர் தான் அப்போதைய தமிழக உள்துறை அமைச்சர்.
1963 ஆம் ஆண்டு அலுவல் மொழி சட்டம் நேரு கொண்டு வந்த போது, பெ.சீனிவாசன், கா.காளிமுத்து, நா.காமராசன், பா.செயபிரகாசம், ரவிசந்திரன், திருப்பூர்.சு.துரைசாமி, சேடப்பட்டி முத்தையா, துரைமுருகன், கே.ராஜா முஹம்மது, நாவளவன், எம்.நடராசன், எல்.கணேசன், உலோ.செந்தமிழ்கோதை, சி.ப.வேந்தன் உள்ளிட்ட பதினெட்டு மாணவ இயக்கங்களின் தலைவர்கள் ஒன்று கூடி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்கள். ஒரு புறம் அண்ணா தலைமையில் 3000 பேர் கைதானார்கள்.
1965 ஜனவரி 25 ஆம் தேதி, மதுரை திலகர் திடலை நோக்கி மாணவர் பேரணி நடைபெற்றது. வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரஸ் அலுவலகத்திற்கு அருகில் பேரணி சென்ற போது, காங்கிரஸ் காரர்கள் மாணவர்களிடம் மோதலில் ஈடுபட்டனர். வன்முறை வெடித்தது.

சொந்த கட்சிக்காரரை போட்டுத்தள்ள பணம் கொடுத்த பா.ம.க நிர்வாகி: 4 பேரை கைது செய்த போலிஸ்!

சொந்த கட்சிக்காரரை போட்டுத்தள்ள பணம் கொடுத்த பா.ம.க நிர்வாகி: 4 பேரை கைது செய்த போலிஸ்!

கலைஞர் செய்திகள் :பா.ம.கவில் முக்கிய நிர்வாகியாக வளம் வந்தவர் காடுவெட்டி குரு. இவர் மறைந்த பிறகு பா.ம.கவுக்குள் பல்வேறு குழப்பங்கள் வெடித்து வருகிறது. மேலும் அண்மை காலமாக கட்சி நிர்வாகிகள் ஒருவர்மீத ஒருவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
சட்டமன்ற தேர்தலின் போதுகூட, பா.ம.கவில் நடிக்கறவங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நான் காட்சியிலிருந்து விலகுறேன் என வைத்தி தெரிவித்திருந்தார். இப்படியான செயல்கள் பா.ம.க தலைவர் ராமதாஸ் மீது முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதைக் காட்டுகிறது.
இதையடுத்து பா.ம.க தலைவர் ராமதாஸ், "அண்மைக்காலமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு இயக்கங்களின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடம் போக்கு அதிகரித்துள்ளது. இதை அனுமதிக்க முடியாது. இத்தகைய ஒழுங்கீன செயல்களில் ஈடுபவடுவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்" என எச்சரிகை விடுத்திருந்தார். இவரின் இந்த அறிக்கை கட்சிக்குள் குழப்பம் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது.

சிவசங்கர் பாபாவுக்கு திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி..

 Shyamsundar  -  tamil.oneindia.com :  சென்னை: செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில்தான் சிவசங்கர் பாபா தேடப்பட்டு வந்தார். அங்கு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இவர் அத்துமீறியதாக புகார் வைக்கப்பட்டது.
இவர் டெல்லிக்கு தப்பி ஓடி ஒளிந்திருந்த நிலையில் போக்சோ சட்டத்தில் தமிழ்நாடு சிபிசிஐடி நேற்று அவரை கைது செய்தது.
இவர் மாணவிகளிடம் தவறாக பேசிய வீடியோ மற்றும் ஆடியோவும் வைரலானது. பல்வேறு மாணவிகளிடம் இவர் தவறாக பேசிய ஆதாரங்கள் வெளியானது. டேராடூனில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை முடிந்த பின் டெல்லிக்கு தப்பி ஓடினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி & ராகுல் காந்தியை சந்தித்தார்!

சோனியா- ஸ்டாலின் சந்திப்பு!

 minnambalam :திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று (ஜூன் 18) காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும், ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று முதல் முறையாக நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அவரிடம் தமிழ்நாட்டுக்கான 25 கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவை அளித்தார். சுமார் 25நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்புக்குப் பின் தமிழ்நாடு இல்லம் திரும்பினார் ஸ்டாலின்.

நேற்று இரவு டெல்லியில் தங்கிய ஸ்டாலின் இன்று (ஜூன் 18) காலை ஜன்பத் சாலையில் அமைந்திருக்கும் சோனியாகாந்தியின் இல்லத்துக்குச் சென்றார். ஸ்டாலினோடு அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார்.

பப்ஜி மதனை கைது செய்தது போலீஸ்

maalaiamalar : பப்ஜி மதன் மீதான புகார்கள் தொடர்பாக சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்தன.>இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Robert Ashe கலெக்டர் ஆஷ்துரை! பார்ப்பன ஜாதி வெறியன் வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்ட நாள் - – 17 June 1911

Robert William d'Escourt Ashe I.C.S. (23 November 1872 – 17 June 1911) was the acting Collector and District magistrate of Tirunelveli district in Tamil Nadu 

thurukal.blogspot.com :  ஆஷ் துரை vs  வாஞ்சிநாதன்:
நவம்பர் 23, 1872ல் தந்தை ஐசக் ஆஷ், தாயார் சாராள் ஆஷ் இருவருக்கும் மகனாக அயர்லாந்தின் ஸ்பிராக்பர்ன் என்ற இடத்தில் பிறந்தவர் ராபர்ட் வில்லியம் டி' எஸ்கோர் ஆஷ்.
ஆஷின் தந்தை ஒரு மருத்துவர். டன்டிரன் என்ற ஊரின் மன நல விடுதியில் மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அந்த விடுதியின் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி தாக்கியதில் இறந்துபோனார்.
ஆஷ், டப்ளின் உயர்நிலைப் பள்ளியில் படித்து தேர்கிறார். 1892ல் டப்ளின் டிரினிட்டி கல்லூரியில் சேர்கிறார். பின்னர் கல்லூரி வாழ்க்கையும் ஆரம்பமாகிறது. கவிதை எழுதும் பழக்கமும் கொண்டவர்.  பின்னர் ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று 1895ல் பணிக்காக இந்தியா வருகிறார்.
முதல் பணி, இன்றைய ஒரிசா மாநிலத்தில், அன்றைய கஞ்சம் மாவட்டத்தில். பின்னர் சென்னையில் சிறப்பு அலுவலராக பணிமாற்றம், வட ஆற்காட்டில் துணை ஆட்சியராக பணி என்று பல இடங்களில் சுற்றி கடைசியாக 1910  திருநெல்வேலியின் பொறுப்பு ஆட்சியராக பணியில், தென்னிந்தியாவின் கடைகோடிக்கே வந்து சேர்கிறார் ஆஷ்.

புலியா, பூதமா? திமுக - நாதக குழு மோதல்!.. அரக்கர்கள் ஆர்எஸ்எஸ் கைக்கூலிகளா ?

abas  Karthikeyan Fastura  :   அரக்கர்கள் ஆர்எஸ்எஸ் கைக்கூலிகளா ?
நிச்சயமாக இல்லை. அவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் சமூகநீதியால் பலன் அடைந்தவர்கள். தான் போராடி பெற்றவைகளை அடுத்த தலைமுறையினர் எளிதாக கிடைக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறார்கள்.
அவர்களிடம் இரண்டு பிரச்சினைகள் உள்ளன
1. புதிய நடுத்தர வர்க்க சிந்தனை: தன்னுடைய சூழலிலிருந்து சமூகத்தை பார்ப்பது, தன்னுடைய நலனை முதலில் வைத்து சமூகத்திற்கான தீர்வை முன்வைப்பது இந்த சிந்தனை முறையின் குணமாக இருக்கிறது. தோழர் மனோஜ் ஒரு பதிவில் குறிப்பிட்டது போல் சோறு சோறு சுகம் சுகம் பணம் பணம் இதைத்தாண்டி உரிமை, போராட்டம், விடுதலையுணர்வு போன்றவற்றை சிந்திக்கும் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.
2. இவர்கள் அடைந்த பலன்கள் அனைத்திற்கும் திமுக (கலைஞர்) மட்டுமே காரணம் என்று நம்புகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் பெரியார் இளைஞர்கள் மத்தியில் ட்ரண்ட் ஆகாமல் போயிருந்தால் இவர்களுக்கு பெரியார் கூட தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆணி தான். பெரியாரை நடைமுறைக்கு ஒத்துவராத ஆள் என்று பர்னிச்சர் உடைக்க கிளம்பி இருப்பார்கள்.

கடலுக்குள் கொட்டப்படும் பழைய பேருந்துகள் சுற்று சூழலுக்கும் மீன் பெருக்கத்துக்கு ஏற்றதா?

May be an image of outdoors
கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?
-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை)
உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும் அமிழ்த்தப்படுகின்றன.
2007ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை, நியுயோர்க்கில் பாவித்து ஒதுக்கப்பட்ட2500 க்கும் மேற்பட்ட நிலக்கீழ் ரயில்பெட்டிகள், அத்திலாந்திக் சமுத்திரப் பகுதிகளில் அமிழ்த்தப்பட்டிருக்கின்றன. இது உலகம் முழுவதும் நெடுங்காலமாக செய்யப்படும் ஒரு நடைமுறையாகும். இதன் மூலம் மீன்கள், சிலந்திரேற்றாக்கள், முருகைக் கற்பாறைகள், அதனை நம்பிய உயிரினங்கள், மற்றும் கடற்தாவரங்கள் வளர்ந்து, நிலைத்துநிற்கக்கூடிய ஒரு சூழற்றொகுதியை உருவாக்குகின்றன.

வியாழன், 17 ஜூன், 2021

ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க.வினருக்குமான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. (சமூக வலைத்தளங்களில்)

Suguna Diwakar - soodram.con :  சமூக வலைத்தளங்களில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க.வினருக்குமான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியினரும் சில ஈழத்தமிழர்களும் கலைஞரையும் தி.மு.க.வையும் தனிப்பட்ட முறையில் வசைபாடி பின் பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகளையும் வசைபாடும் நிலைக்குச் சென்றதையும்
அதற்கு எதிர்வினையாகத் தி.மு.க.வினரில் ஒருபிரிவினர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் விமர்சனம் என்பதைத் தாண்டி தனிநபர் இழிவுபடுத்துதல் என்ற எல்லைக்குச் செல்வதையும் காணமுடிகிறது.
ஈழப்பிரச்னைக்கும் தமிழக அரசியலுக்குமான உறவு என்பதற்கு நீண்டகால வரலாறு உண்டு.
குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கும் திராவிட அரசியலுக்குமான தொடர்பு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கால உறவு. 1932ல் இலங்கைக்குச் சென்ற பெரியார் அங்குள்ள தமிழர்களிடம் ஆற்றிய உரை, ‘ஈ. வெ. இராமசாமியின் இலங்கை உபந்யாசம்’ என்ற பெயரில் நூலாக வெளியானது. பிறகு ‘தந்தை பெரியாரின் இலங்கைப்பேருரை’ என்ற பெயரில் பல பதிப்புகள் கண்டது அந்த நூல். கடவுள், சாதி, மதத்தைப் போலவே அந்த உரையில் தேசியம் குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருப்பார் பெரியார். ஒற்றை அடையாளத்தின்கீழ் நிறுவப்படும் தேசியம் குறித்து நாம் இப்போது பேசுகிறோம். ஆனால் இதை 30களில் பேசி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருப்பார் பெரியார்.

யாகவா முனிவர் vs சிவ சங்கர் பாபா.. ஞாபகம் இருக்கா அந்த சண்டை.. பெண்ணால்தான் சிறைன்னு அப்பவே சொன்னார்

Veerakumar  - tamil.oneindia.com : சென்னை: சிவ சங்கர் பாபா பெண்கள் விஷயத்தால் சிறைக்கு போவார் என்று 23 வருடங்களுக்கு முன்பே, யாகவா முனிவர் கூறியுள்ளார்.
சன் டிவியில் அவர் கொடுத்த நேர்காணல் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. 1949 ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் என்ற ஊரில் பிறந்தவர் தான் சிவசங்கர்.
சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வேதியியல் துறையில் இளங்கலை படிப்பு மட்டும் போக்குவரத்து கையாளுதல் பிரிவில் முதுகலை படிப்பு படித்தவர்
சென்னை மண்ணடியில் லாரி புகிங் ஏஜன்ட் ஆக பணியை ஆரம்பித்தார். 1973 முதல் 1983 வரை ரியல் எஸ்டேட் ஒப்பந்தம், ஆவணப்படத் தயாரிப்பாளர் என பல விஷயங்களில் அடையாளப்படுத்திக் கொண்டார்.
சிவ சங்கர் ஆரூட நிலையம் சிவ சங்கர் ஆரூட நிலையம்
சென்னை அண்ணாநகர் ரோட்டரி கிளப், ஆந்திரா வர்த்தக சம்மேளன நிர்வாகக்குழு, இந்தியன் வங்கி நிர்வாக குழுவில் சிவசங்கர் இடம்பெற்றார்.
சரக்கு போக்குவரத்து சங்க தலைவர் பதவியையும் பிடித்தார்.
1980களில் சென்னை மண்ணடியில் சிறிய அளவில் ஆருடம் சொல்ல ஒரு நிலையத்தை தொடங்கினார் .

நடிகை ரோகிணி கிஷோர் கே.சாமி மீது போலீசில் முறையீடு : "ரகுவரன் பற்றியும் என்னைப் பற்றியும் அவதூறாக பதிவிட்டார்"

BBC :தன்னைப் பற்றியும் மறைந்த தன் கணவர் ரகுவரன் குறித்தும் அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே. சுவாமி என்பவர் மீது சென்னை நகரக் காவல்துறையில் திரைக்கலைஞர் ரோகிணி புகார் அளித்துள்ளார். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தொடர்ந்து எழுதி வந்த கிஷோர் கே சுவாமி, பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் எழுதிவந்த நிலையில், அவர் மீது பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் புகார்களை அளித்தனர். இவற்றில் சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி, ஜாமீனில் விடப்பட்டார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை குறித்து சில நாட்களுக்கு முன்பாக அவதூறான கருத்து ஒன்றைப் பதிவுசெய்தார். இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில், அவரை சென்னை சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில்சிறையில் அடைக்கப்பட்டார்.

7பேர் ... நீண்டகால பரோல் வழங்க தமிழக அரசு முடிவு?

puthiyathalaimurai.com : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதில், மத்திய அரசு முடிவெடுக்காத நிலையில், அவர்களுக்கு நீண்ட நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன், முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுவிப்பது என கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்த தீர்மானத்தை செயல்படுத்த வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அதில் இதுவரை எவ்வித முடிவும் வெளியாகாத நிலையில், 7 பேருக்கும் நீண்டகால சிறைவிடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 7 பேரில், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள், இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியாது என்பதால், அகதிகள் சான்றிதழ்களுடன், இலங்கை அகதிகளுக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

டெல்லியில் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இல்லத்தில் அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார் !

dailythanthi.com : மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார். பதிவு: ஜூன் 17, 2021 13:07 PM புதுடெல்லி, தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர் முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலினை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விளை நிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் : தமிழ்நாடு அரசு!

 விளை நிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் : தமிழ்நாடு அரசு!

minnambalam :விளை நிலங்களுக்கே நேரிடையாக சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதால் விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்தனர். மழையில் நெல்மூட்டைகள் நனையாமல் இருக்க நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்க ஆலோசனை'' - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

 நக்கீரன் செய்திப்பிரிவு :    தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள், கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பதினோராம் வகுப்பு சேர்க்கையும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் முழு விபர பட்டியல்

கலைஞர் செய்திகள் Vignesh Selvaraj :  : பிரதமர் மோடி உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரின் முன்வைத்த கோரிக்கைகள் குறித்துத் தெரிவித்தார்.
“கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திடுக” - பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள்!
 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாட்டிற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் வலியுறுத்தினார்.

பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமருடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

நீட் தேர்வால் பாதிப்பு... பொதுமக்கள் கருத்து கூறலாம் - ஏ.கே. ராஜன் குழு அறிவிப்பு!

nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு :
Impact of NEET exam; Public can comment - AK Rajan Committee announcement!

  நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர், ''சமூகநீதியை நிலைநாட்டும் கடமை தமிழக அரசுக்கு எப்போதும் உண்டு. எனவே நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை சரி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் இந்தக் குழு ஆய்வு செய்யும். இதன் மூலம் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பை அகற்ற தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்'' என தெரிவித்திருந்தார்.

பெண் பக்தரை வைத்தே வீசிய வலையில் சிக்கிய சிவசங்கர் பாபா

 /tamil.oneindia.com - Veerakumar :  டெல்லி: பாலியல் சாமியார் சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து தமிழக போலீசாரால் எப்படி கைது செய்யப்பட்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உதவி செய்த பெண் பக்தராலேயே வளைத்து பிடிக்கப்பட்டுள்ளார் சிவசங்கர் பாபா
இந்த நிலையில்தான், டெல்லியில் உள்ள காசியாபாத் என்ற பகுதியில் சிவசங்கர் பாபா, சிபிசிஐடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் பாடி வாரண்ட் பெற்றுக்கொண்டு சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து வருவதற்கு காவல் துறை திட்டமிட்டுள்ளது.
பாலியல் சீண்டல் சில்மிஷ சாமியார், சிவ சங்கர் பாபா மீது அவர் நடத்தி வந்த சுஷில் ஹரி பள்ளி மாணவிகள் பாலியல் புகார்களை கொடுத்ததன் அடிப்படையில் மாமல்லபுரம் போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேநேரம், சிவ சங்கர் உத்தரகாண்ட் மாநிலம் தப்பியோடிவிட்டதாக தகவல் கிடைத்தது. வெளி மாநிலங்களுக்கு போலீசார் செல்ல தேவையுள்ளதால் வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டது.

ஸ்டாலின் டெல்லி பயணம்: முழு விவரம்! ஸ்டாலின் டெல்லி பயணம்: முழு விவரம்!

ஸ்டாலின் டெல்லி பயணம்: முழு விவரம்!

 minnambalam :தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 17) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார். ஸ்டாலினின் இந்த டெல்லி பயணம் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முதல்வரின் பயண விவரம்:

7.00 மணி: சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்குப் புறப்படுதல்.

7.20 மணி: சென்னை விமான நிலையத்தை அடைதல்.

7.30 மணி: சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்படுதல்.

காலை10 மணி: டெல்லி விமான நிலையம் அடைதல்.

வரவேற்புக்குப் பின் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் செல்கிறார். அங்கே தமிழக எம்.பி.க்களுடன் ஆலோசனை, அதிகாரிகளுடன் ஆலோசனை, மதிய உணவு, ஓய்வு...

நள்ளிரவில் சென்னை அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா

நக்கீரன் -பி.அசோக்குமார் - ஸ்டாலின் :   பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர். ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
 இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.  இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

கிளப் ஹவுசில் அரசியல் கூத்து பட்டறை ? . தி விக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை!

தமிழர்களின் தன்மானத்தைக் காக்க திமுக வுக்கு ஆதரவு – கொளத்தூர் மணி அறிவிப்பு  – தமிழ் வலை

தோழர் கொளத்தூர் மணி  : - திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும் திமுக ஆதரவாளர்கள் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் திராவிடம் 2.0. (தற்போது அரக்கர் கூட்டம்) எனும் கூட்டம் குறித்து சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறோம்.
இந்திய ஒன்றிய அரசும், அவர்களின் உளவுத்துறையும்,  பார்ப்பன ஆதிக்க சக்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றியும்,தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழிவுபடுத்தி பரப்பி வரும் அதே பாணியில், அதே மொழியில் திமுக ஆதரவாளர்கள் எனும் பெயரில் ஒளிந்துகொண்டு பரப்புரை செய்பவர்களின் நோக்கத்தை அடையாளம் காண வேண்டிய அவசியம் இருக்கிறது என்று கருதுகிறோம்.
உண்மையில் இவர்கள் திமுக ஆதரவாளர்களா ?
திமுக ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு கலைஞரிஸ்ட்  என்ற புது சொல்லால்  தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டு திமுகவினுடைய கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும், திமுகவிற்கு ஆதரவான தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பெரியார் இயக்கங்கள்,பெரியார் இயக்கத் தலைவர்களை இழிவுபடுத்தியும் பேசிவரும் திராவிடம் 2.0 (தற்போது அரக்கர் கூட்டம்)  எனும் கூட்டத்தினரின் உள்நோக்கம் இந்துத்துவவாதிகளின் நோக்கம் போலவே இருக்கின்றன என்றுதான் தோன்றுகிறது.

புதன், 16 ஜூன், 2021

பாளையம் புதூர் ஊர் வலசு பட்டி புரம் பதி எல்லாம் ஊர்களின் பெயர்கள்

May be an image of text that says '1828 பாளையம் என முடியும் ஊர்கள் புதூர் என என முடியும் ஊர்கள் ஊர் என முடியும் ஊர்கள் வலசு என முடியும் ஊர்கள் 565 561 493 185 90 55 54 பட்டி என முடியும் ஊர்கள் புரம் என முடியும் ஊர்கள் பதி என முடியும் ஊர்கள் காடு என முடியும் ஊர்கள் கரை என முடியும் ஊர்கள் குட்டை என முடியும் ஊர்கள் மங்கலம் என முடியும் ஊர்கள் நல்லூர் என முடியும் ஊர்கள் புத்தூர் என முடியும் ஊர்கள் 33 33 26 18 10 ஒடு, தொழுவு, குறிச்சி, நிலை, பாடி, கயம், மி, வாவி என முடியும் ஊர்களும் உள்ளன. பயர்கள் உடையவை.'

Magudeswaran Govindarajan  : பாளையம், பட்டி என்று முடியும் ஊர்ப்பெயர்களைக் குறித்து அண்மையில் நானெழுதிய பதிவொன்று நினைவிருக்கலாம். கோவைப் பகுதி ஊர்ப்புறப் பெயர்கள் பெரும்பாலும் ‘பாளையம்’ என்றே முடியும் என்றும், கற்பனையாய் இப்பகுதியின் ஓர் ஊர்ப்பெயரைக் குறிப்பிட நேர்ந்தால் பட்டி என்பதனைவிடவும் பாளையம் எனல் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவின் முதல் பின்னூட்டத்திலேயே “இங்கும் பட்டிகள் இருக்கின்றன. அவை குறைவாகத்தான் இருக்கும்.’ என்றிருந்தேன். இன்னோரிடத்தில் பத்துப் பாளையங்கள் இருக்குமிடத்தில் இரண்டு பட்டிகள் இருக்கின்றன என்றும் கூறியிருந்தேன்.
அந்தப் பதிவானது ‘திரைப்படத்தில் புனைவாய் ஓர் ஊர்ப்பெயர் வைப்பதைப் பற்றியது’ என்பதால் அதற்குமேல் நான் இடையீடு செய்யாமல் நண்பர்கள் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். என்னுடைய கருத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊர்ப்பெயர்களையும் மாவட்டத்து இணையத்தின் வழியாகச் சரிபார்த்தேன். இருநூற்றுத் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிப் பெயர்களில் ( ஓர் ஊராட்சியில் ஏழெட்டுச் சிற்றூர்கள் இருக்கும்) பாதிக்கும் அருகிலான எண்ணிக்கையில் பாளையங்கள் இருந்தன. நான் சொன்னதுபோலவே பத்துக்கு இரண்டு பட்டிகளும் இருந்தன. அதனை எடுத்தெழுத நேரமின்மையால் விடுபட்டுவிட்டது.

‘பப்ஜி’ மதன்.. தலைமறைவான யூடுப் பதிவர் ..மனைவியை கைது செய்து விசாரிக்கிறது போலிஸ்!

 கலைஞர் செய்திகள் :யூடியூபில் மிகவும் பிரபலமான கேமரான மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலிஸில் புகார் அளிக்கப்பட்டு, அவர் தலைமறைவான நிலையில், அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பப்ஜி, ஃப்ரீ பயர் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். பப்ஜி விளையாட்டு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை மன அழுத்தம், வன்மம் நோக்கித் தள்ளிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தியாவில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டாலும், வி.பி.என் மூலம் இன்னும் இந்த விளையாட்டு ரகசியமாக புழக்கத்தில் இருப்பதாக புகார்கள் எழுகின்றன.
அதே நேரத்தில் பப்ஜிக்கு மாற்றாக ஃப்ரீ பயர் எனும் விளையாட்டு அதிகமாகத் தரவிறக்கம் செய்யப்படுகிறது. இந்த விளையாட்டுகளில் அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறி அதனை வீடியோவாக யூ டியூபில் பதிவிட்டு வருபவர் மதன்.

யாருக்கும் சொல்லாமல்.. முதல்வர் திடீர்... வந்திருப்பது CM ஸ்டாலின்.. .. பரபரத்த ரேஷன் கடை

 Veerakumar  - tamil.oneindia.com : சென்னை, ராயப்பேட்டையில் உள்ள நியாயவிலை கடை ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
மக்களுக்கு உரிய வகையில் 14 வகை மளிகை பொருட்கள் சென்று சேர்கிறதா, 2000 ரூபாய் நிவாரணத் தொகை சரியாக கொடுக்கப்படுகிறதா என்பதை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நிவாரணத் தொகையாக அரசு சார்பில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் ஒரு தவணையாக 2000 ரூபாய் கடந்த மாதம் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டதுகொரோனா ஊரடங்கு காலத்தில் நிவாரணத் தொகையாக அரசு சார்பில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் ஒரு தவணையாக 2000 ரூபாய் கடந்த மாதம் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டது

சிவசங்கர் பாபா டெல்லியில் கைது

 மாலைமலர் :சிவசங்கர் பாபாவை கைது செய்து அழைத்துவர, துணை போலீஸ் சூப்பிரண்டு குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர்.
புதுடெல்லி:    
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள புத்துப்பாக்கம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார். இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிவசங்கர் பாபா, உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தி பின்னர் கைது செய்து அழைத்துவர, துணை போலீஸ் சூப்பிரண்டு குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு விமானத்தில் டேராடூன் விரைந்தனர்.

கோபிகான்னு அழைத்தால்.. அந்த மாணவியை அடையாமல் விடமாட்டார் சிவசங்கர் பாபா.. முன்னாள் மாணவி பகீர்

மது

  Vishnupriya R  - /tamil.oneindia.com :  சென்னை: சிவசங்கர் பாபாவுடன் டேட்டிங் செல்ல விருப்பப்பட்டால் அதற்கென ஒரு தனி செஷனே இருக்கிறது என முன்னாள் மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் முன்னாள் மாணவி கூறுகையில் சிவசங்கர் பாபாவை கிருஷ்ணராக பக்தர்கள் பாவிக்கிறார்கள். மாணவிகள் அனைவரும் கோபிகாக்கள்.
இதில் கோபிகா என அவர் வாயை திறந்து கூப்பிட்டு விட்டால் அந்த மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்யாமல் விடமாட்டார்.
 இதில் யாரை அவர் அழைப்பார் என்றால், பொதுவாக சிவசங்கர் பாபா குறிவைப்பது சிங்கிள் மதரின் குழந்தையாக இருப்பார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகள், பயந்த சுபாவம் கொண்ட மாணவிகள் ஆகியோரைத்தான்.
சிவசங்கர் பாபா எப்போதும் மாணவிகளிடம் கூறுவது நான்தான் உனது தந்தை, நான்தான் உனது பாய் பிரண்ட், நான்தான் உனது கணவர், நான்தான் உனக்கு எல்லாமே என கூறுவார்.
பாபாவுடன் டேட்டிங் செல்ல விரும்பினால் அதற்கென ஒரு செஷனே இருக்கிறது.

சிவசங்கர் பாபா டேராடூன மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

 தினத்தந்தி : டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா தப்பியோடியுள்ளார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.  
இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு சட்ட மீறல் அல்ல. சட்ட வழிகாட்டுதலே.

May be an image of 1 person, map and text that says 'அகண்ட_பாரதம் பாரதம்'

Surya Xavier  :  ஒன்றிய அரசு என்று சொல்லக்கூடாது.
தமிழ்நாடு அரசு என்று சொல்லக்கூடாது.
அகண்ட பாரதம் அமைப்போம் என்று சொல்லலாமா?
அது சட்டவிரோதம் இல்லையா?
அகண்ட பாரதம் என்றால் என்ன?
1922இல் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனரான விநாயக் தாமோதர் சவர்க்கார் என்பவர் எழுதிய நூலின் தலைப்பு இந்துத்வா என்பது. அதற்கு முன் அந்தச் சொல் புழக்கத்தில் இல்லை. இந்தியாவில் இரண்டே தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று இந்து, மற்றொன்று முசுலிம் என்ற பாகுபாட்டை அந்த நூல் கூறியது.
அந்த அடிப்படையில் சித்பவனப் பார்ப்பனர்களால்  இந்துமதவெறித் தத்துவம் தோற்றுவிக்கப்பட்டது. 1925இல் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் எனப்படும் இயக்கம் உருவாக்கப்பட்டது. இதை உண்டாக்கியவர் சித்பவன் பார்ப்பனரான கேசவராம் பலிராம் ஹெட்கோவர்.

திமுக எம்பிக்களுக்கு.. டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியாகும் "தலை"கள்.. பிஸியில் அறிவாலயம்

 Hemavandhana - tamil.oneindia.com :    சென்னை: எல்லா எம்பிக்களும் டெல்லிக்கு வர வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாம்..
இதனால் திமுக வட்டாரமே படுபிஸியாகி உள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக முக ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்..
பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் நிர்வாக ரீதியாக ஒரு மணி நேரம் சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது..
அப்போது தமிழக நலன் சார்ந்த விஷயங்களை ஸ்டாலின் பிரதமருக்கு எடுத்துரைக்ககூடும். இதற்கு பிறகு இருவரும் தனியாக 10 நிமிடங்கள் வரை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது
 ஸ்டாலினின் டெல்லி சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதற்காக திமுக மூத்த தலைவரான எம்பி டிஆர்பாலு முன்னதாகவே டெல்லி சென்றுவிட்டார்..
இன்று அமைச்சர் துரைமுருகனும் செல்ல உள்ளார்.. அதேபோல, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏகேஎஸ் விஜயனும் இன்று இரவு டெல்லி செல்கிறார்.. இவர் நாளை முறைப்படி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு 3,691 கோடி ஒதுக்கீடு செய்தது ஒன்றிய அரசு!

 நக்கீரன் : தமிழ்நாட்டுக்கு 3,691 கோடி ஒதுக்கீடு செய்தது ஒன்றிய  அரசு!
இது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பில், "ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீட்டை ரூபாய் 3,691 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
நீர்வள  அமைச்சகத்தின் 'தேசிய ஜல் ஜீவன் திட்டம்' தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூபாய் 614.35 கோடியை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு இந்நீர் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 4 மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள ஒன்றிய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங், 2024- ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழ்நாட்டுக்கு  முழு உதவியும் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில்  மொத்தம் உள்ள 1.26 வீடுகளில், 40.36 லட்சம் வீடுகளுக்கு (31.80 சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கியபோது, 21.65 லட்சம் (17.06 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் (14.74 சதவீதம்) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வுக்கு இப்போது தேனிலவு காலம்- குஷ்பு சொல்கிறார்

MeToo campaign: Actress Kushboo Tweets supporting Sandalwood actor  Ravichandran

மாலைமலர் : கடந்த ஆண்டு மே மாதம் ஊரடங்கு தளர்வில் எடப்பாடி பழனிசாமி மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டதற்கு ஸ்டாலின் நடத்திய போராட்டம், விமர்சனம், வெளியிட்ட கார்ட்டூன்கள் மறந்து போகுமா?
பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ‘ஜூம்’ மூலம் தினமும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கட்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
தி.மு.க. இப்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை முதல் 3 மாதம் வரை தேனிலவு காலமாக நினைத்து எதுவும் சொல்லமாட்டோம். அதே போல்தான் கட்சிகளுக்கும். ஆட்சிக்கு வந்ததும் தேனிலவு காலம் போல்தான். எனவே இப்போது விமர்சிப்பது சரியாக இருக்காது.
ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு எது தேவை? எது நல்லது என்பது பற்றி யோசிக்க வேண்டும்.

செவ்வாய், 15 ஜூன், 2021

லியர் மன்னன் ராஜநாயஹம் : சாரு நிவேதிதா

May be an image of 5 people, including R.p. Rajanayahem, people standing and indoor

லியர் மன்னன்  ராஜநாயஹம்   : சாரு நிவேதிதா
25-05-2008
திருப்பூர் வரை சென்று வந்தேன். மரங்களே இல்லாத ஊரைப் பார்க்க மிக வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.
 பல வெளிநாடுகளைப் பார்க்கும் போது இந்தியாவில் மரங்கள் மிகவும் குறைவு.
நூற்றில் ஒரு மடங்கு கூட இல்லை என்று சொல்லலாம். அதன் காரணமாகவே இந்தியாவில் இயற்கை உற்பாதங்களும் அதிகமாக உள்ளன.
 ஆனால் எவ்வளவு அழிவு வந்தாலும் சரி , நாங்கள் திருந்த மாட்டோம் என்ற மனவுறுதி படைத்தவர்கள் இந்தியர்கள். திருப்பூரில் உள்ள சாயப் பட்டறைகளின் காரணமாகவே நொய்யல் நதி
சாக்கடையாகி செத்தே விட்டது.
இந்த ஊரிலிருந்துதான் மேல் நாட்டுக்காரர்களுக்காக சட்டை உற்பத்தியாகிப் போகிறது. படுபாவிகள், அதற்காக ஒரு நதியையே கொன்று விட்டார்கள்.
திருப்பூரில் பெயருக்குக் கூட ஒரு மரம் இல்லை. அடுத்த பயங்கரம் ஆட்டோ. ஒரு பர்லாங் தூரத்துக்கு 100 ரூ. கேட்டார்கள்.
நானும் நண்பரும் சாப்பிடச் சென்றோம். இருவருக்கும் சேர்த்து 450 ரூ. ஆயிற்று.
அது ஒன்றும் நட்சத்திர ஓட்டல் அல்ல. மொத்தத்தில் வாழ்வதற்குத் தகுதியே
இல்லாத ஊர் திருப்பூர்.

எம்ஜியார் பிரபா கூட்டாக அரங்கேற்றிய ஸ்ரீ சபாரத்தினம் உட்பட சகோதர போராளிகளின் படுகொலைகள் .

May be an image of 4 people and people standing

(தோற்றம் 28-08-1952  கொல்லப்பட்டதாக கருதப்படும் தேதி  06-05-1986.)

 செல்லபுரம் வள்ளியம்மை : :  ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் கொஞ்சம் வசதியான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராகும்.. அவரது ஆரம்ப அரசியல் ஈடுபாடு அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் இளைஞர் ஆதரவு தளத்தில் இருந்ததான் ஆரம்பமாகிற்று .
அரசியல் கட்சிகளின் ஜனநாயக பாதை இனி ஏற்புடையது அல்ல என்ற பொதுக்கருத்து எல்லோர் மனதிலும் அப்போது உருவாகி இருந்தது.
ஈழ விடுதலையை நோக்கமாக கொண்டு பல சிறு சிறு அமைப்புக்கள் இயக்கங்கள் ஆங்கும் இங்குமாக தோன்றிகொண்டு இருதது.
அவற்றில் பலம் வாய்ந்த இயக்கங்களாக டெலோவும் ஈரோசும் பிளாட்டும் புலிகளும் உருவானார்கள்.
பின்பு ஈரோசில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பத்மநாப டக்ளஸ் தேவனாந்தா ஆகியோர் ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தை தொடங்கினர்கள்.
கொள்கை அளவில் இந்த இயக்கங்கள் இடையே கொஞ்சம் தனித்துவமான வேறுபாடுகள்  இருந்தன.
அவற்றின் கொள்கைகள் பற்றிய ஆய்வுகளை கூறப்புகின் அதுவே ஒரு பெரிய நூல் ஆகிவிடும்.
டெலோ இந்திய நலனை சார்ந்துதான் ஈழம் அமைய முடியும் என்ற அடிப்படை கொள்கையை கொண்டிருந்தது..இந்தியாவை விரோதித்து கொண்டு ஈழத்தை அமைத்து விட முடியாது என்ற  கருத்தை  மிகத் தெளிவாக வெளிப்படையாக  அறிவித்த ஒரே விடுதிலை இயக்கம்  டெலோ மட்டும்தான்  
ஈ பி ஆர் எல் எப் இயக்கமும் டெலோவை போலவே  இந்திய நலனை மீறி போராட்டத்தை தொடர முடியாது என்ற கொள்கையை ஓரளவு கொண்டிருந்தது.
புளட் , புலி .. ஈரோஸ் போன்றவரை வெளிப்படையாகவே இந்தியாவை நம்ப முடியாது என்று போராட்டம் தொடங்க முன்பே தெரிவித்து  கொண்டவையாகும்.

ஆர்எஸ்எஸ் துணை அமைப்பின் விழாவில் திமுக அமைச்சர்கள் கலந்து கொள்ளலாமா?

May be an image of one or more people, people standing and text that says 'Venkat Prabu @venkateshprab.. ஆர் எஸ் எஸ் ஸின் தென்பாரத சேவாசங்க அமைப்பின் சார்பில் நடந்த விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு திமுக எம்எல்ஏ செல்வராஜ் மற்றும் தென்பாரத சேவாசங்க அமைப்பாளர் .பத்மகுமார் ஆகியோர் கலந்து கொண் விழாவை சிறப்பித்தனர் பாரத்ஹார்ட்புல்ளள் மயம்'
Shalin Maria Lawrence : தங்களின் உரிமைகளை நியாயமாக கேட்கும் பட்டியல் இன மக்களை சங்கிகள் என்று அவதூறாக தொடர்ச்சியாக பேசிவிட்டு இப்படி ஆர்எஸ்எஸ் நிகழ்வில் அரசின் சார்பில் கலந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்? ஆரியர்களின் பாரதமாதா தமிழ்நாட்டை காலில் போட்டு மிதித்து கொண்டிருக்கிறார் அது கூட புரியாமல் ஆதிதிராவிட அமைச்சர் படத்திற்கு சூடம் ஏற்றுகிறார். முடிந்தால் சனாதனம் என்றால் என்னவென்றும் திராவிடம் என்றால் என்னவென்றும் இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கு கட்சி சொல்லி கொடுக்கட்டும்.

Bilal Aliyar  :    ஆர்எஸ்எஸ் அமைப்பின், அதன துணை அமைப்பின்  விழாக்களில், அரசின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொள்ளலாமா?
தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மக்களுக்கும், அனைத்து தரப்பினருக்குமானதே.
சேவாபாரதி போன்ற அமைப்புகள் உள் நோக்கம் கொண்டவையாக இருந்த போதிலும், மக்கள் சேவை என்ற ஒரு அடையாளத்தில் அமைச்சர்களை அணுகும் போது அவை மறுக்கப்படக்கூடாது. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

இட ஒதுக்கீடு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது.!

May be an image of Kandasamy Mariyappan, beard and eyeglasses

Kandasamy Mariyappan  :  இடஒதிக்கீடு நெறிமுறை படுத்தப்பட வேண்டும் என்று நான் கூறியதை பல நண்பர்கள் தவறு என்று கூறுகின்றனர்.!
கண்டிப்பாக அவர்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும்.! அதனால்தான் இவ்வளவு ஆணித்தரமாக மறுக்கின்றனர்.!
ஒருவேளை அவர்கள் கூறுவது போன்று அதனை சரி என்று பார்த்தாலும், எதிர்காலத்தில் இது ஒரு ஆபத்தாகத்தான் இருக்கும் என்பதுதான் எனது பார்வை.!
காரணம் இட ஒதுக்கீடு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது.! அதனை நமது அரசுகள் நீட்டித்துக் கொண்டே வந்தது.! இதனால் பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.!
70களுக்கு முன்பு வரையில் அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், மின்துறை, போக்குவரத்து, வங்கி, காப்பீடு, நீதிமன்றம்  மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர்சாதியினரே பணியில் இருந்தனர்.!
இது எப்படி சாத்தியமானது.!
முன்பே பணியில் இருக்கும் உயர்சாதியை சேர்ந்த ஒருவரது உறவினர்களை அல்லது அவரின் நண்பர்கள் அல்லது நண்பர்களின் உறவினர்களை பணிக்கு அமர்த்துவார். அது ஒரு சங்கிலித் தொடராக இருக்கும்.!
இதனை 70களுக்குப் பிறகு நமது ஆட்சியாளர்கள் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியது மட்டுமல்லாமல் அதனை உறுதி செய்து, வாரியம் மற்றும் TNPSC மூலமாக எல்லா தரப்பு மக்களுக்கும் அந்த பணிகள் கிடைக்க வழி செய்கின்றனர்.!

தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு வருமா?

  Hemavandhana - tamil.oneindia.com :   சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனை வர போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. காரணம், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜனை, லாட்டரி அதிபர் மார்ட்டின் சந்தித்து பேசியதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. டாஸ்மாக் எப்படி அரசுக்கு நிதி வருவாயை பெருக்க உதவுகிறதோ, அதுபோலவே லாட்டரி விற்பனையும் பெருமளவு நிதியை தமிழக கஜானாவுக்கு வாரி தரும்
குடிமகன்களுக்கு டாஸ்மாக் ஒரு போதை என்றால், பலருக்கு இந்த லாட்டரியும் ஒரு போதையாக இருந்தது.. பலர் பித்து பிடித்து போயிருந்தனர்.
விமர்சனம் எத்தனையோ குடும்பங்கள் இதனால் நடுத்தெருவுக்கு வந்தன.. எத்தனையோ உயிர்கள் தற்கொலை செய்து கொண்டன. ஒருகட்டத்தில் நிறைய விமர்சனங்கள் எழுந்ததால், இந்த லாட்டரி சீட்டு திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.. இப்படிப்பட்ட சூழலில், சமீபத்தில் ஒருநாள் திடீரென கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி தந்திருந்தார்..

ரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000- 14 மளிகை பொருட்கள் வினியோகம்

கொரோனா 2வது தவணை ரூ 2000, மளிகை பொருட்கள் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் பெண்கள்
ரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000- 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது
கொரோனா 2வது தவணை ரூ 2000, மளிகை பொருட்களை பெற்றுக்கொண்டவர்கள்
சென்னை:   தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதனால் பொதுமக்கள் பாதிக்கக்கூடும் என்பதால் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டது. 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் ஜூன் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மளிகைப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி – விலை சரிவுக்கு காரணம் என்ன?

கெளதமன் முராரி - பிபிசி தமிழுக்காக : இன்றைய மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.15% (76 புள்ளிகள்) அதிகரித்து 52,551 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி50 0.08% (12.5 புள்ளிகள்) ஏற்றம் கண்டு 15,811 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. ஆனால் அதானி குழும நிறுவன பங்குகள், இந்த சந்தை சூழலுக்கு பொருந்திப் போகாமல் கொஞ்சம் அதிகமாகவே விலை வீழ்ச்சி கண்டிருக்கின்றன.

இந்திய பங்குச் சந்தைகளில் கெளதம் அதானிக்குச் சொந்தமான அதானி குழுமத்தின் ஆறு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.  ஆறு பங்குகளில், அதானி க்ரீன் எனர்ஜி மட்டுமே 0.68% விலை அதிகரித்து 1,226 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

மற்ற ஐந்து பங்குகளும் 4.9 சதவீதம் முதல் 9.2 சதவீதம் வரை விலை வீழ்ச்சி கண்டிருக்கின்றன. அதானி பவர், அதானி டோடல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய பங்குகள் லோயர் சர்க்யூட் விலையைத் தொட்டிருக்கின்றன.

சிவசங்கர் பாபாவை தேடி டேராடூன் விரைந்தது சி.பி.சி.ஐ.டி!! வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

 நக்கீரன் செய்திப்பிரிவு  :    ஆன்மீகவாதி போர்வையில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவசங்கர் பாபா மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியான நிலையில்,
இந்த வழக்கு நேற்று (14.06.2021) சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. தற்போது டேராடூனில் உள்ள அவரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.

பழைய பேருந்துகளை கடலில் இறக்கும் இலங்கை: மீன்களின் இனப்பெருக்கத்திற்கு? கேள்வி எழுப்பும் மீனவர்கள்!

பழைய பேருந்துகளை கடலில் இறக்கும் இலங்கை: மீன்களின் இனப்பெருக்கத்திற்குதானா? கேள்வி எழுப்பும் மீனவர்கள்!

கலைஞர் செய்திகள் :இலங்கை அரசு, மீன்கள் இனப்பெருக்கத்தைப் பெருக்குவதாகக் கூறி, பயன்படுத்த முடியாத பழைய பேருந்துகளைக் கடலுக்குள் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதுவும், குறிப்பாக இலங்கை காங்கேசன் துறைமுகம் முதல் மன்னார் வரை உள்ள கடல் பகுதியில்தான் பழைய பேருந்துகள் இறக்கப்பட்டு வருகிறது. மேலும் பயன்படுத்த முடியாத 40 பழைய பேருந்துகளைக் கடலில் போட இலங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதில், முதல் கட்டமாக ஜூன் 12ம் தேதி முதல் பழைய பேருந்துகள் கடலில் இறக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில், 20 பேருந்துகள் கடலில் இறக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஒரு நாளைக்கு ஐந்து பேருந்துகள் வீதம் கடலில் இறக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு, 1970க்கு முன்பு இருந்த நிலைக்கு மாற்றப்பட வேண்டும்? .. கந்தசாமி மாரியப்பன்

May be an image of Kandasamy Mariyappan, beard and eyeglasses

  Kandasamy Mariyappan   :  தமிழ்நாட்டில்...
இடஒதுக்கீடு, 1970க்கு முன்பு இருந்த நிலைக்கு மாற்றப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் மற்றும் எனது பார்வை.!
அதாவது 41% இடஒதுக்கீடு மட்டுமே இருக்க வேண்டும். BC 25%, SC 15%, ST 1%, OC 59% என்ற நிலை வர வேண்டும்.
MBC முறை நீக்கப்பட வேண்டும். இஸ்லாமியர்கள் BC உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு BC ஒதுக்கீட்டிலேயே வைக்க வேண்டும்.! அருந்ததியர்கள் உள் இடஒதுக்கீடு 2.5% என்று மாற்றி தொடர வேண்டும்.!
கிருஷ்ணசாமி உருவாக்கிய புதிய வேளாளர்கள் உட்பட அனைத்து வேளாளர்கள் (முதலியார் BC, பிள்ளைகள் BC, கார்காத்த, கவுண்டர், சோழிய, துளுவ,  etc.), செட்டியார்கள் BC, உடையார்கள், அகமுடையார்கள் (தேவர்கள்) அனைவரையும் பொதுப் பட்டியலுக்கு (OC) கொண்டு வர வேண்டும்.!
இரண்டு தலைமுறைக்கு மேலாக இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களை பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்ல வேண்டும்.! இதுதான் அந்த சாதியை சேர்ந்த ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளவரை உயர்த்தி விட வழி வகுக்கும்.!
ஒருவேளை இடஒதுக்கீடு உள்ள குறிப்பிட்ட பிரிவில் தகுதியான ஆட்கள் இல்லையென்றால்.., அதே பிரிவில் உள்ள பொதுப் பிரிவினரை கொண்டு அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.!

இடஒதிக்கீடு நெறிமுறை படுத்தப்பட வேண்டும்! கந்தசாமி மாரியப்பன்

May be an image of Kandasamy Mariyappan, beard and eyeglasses

Kandasamy Mariyappan  : இடஒதிக்கீடு நெறிமுறை படுத்தப்பட வேண்டும் என்று நான் கூறியதை பல நண்பர்கள் தவறு என்று கூறுகின்றனர்.!
கண்டிப்பாக அவர்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும்.! அதனால்தான் இவ்வளவு ஆணித்தரமாக மறுக்கின்றனர்.!
ஒருவேளை அவர்கள் கூறுவது போன்று அதனை சரி என்று பார்த்தாலும், எதிர்காலத்தில் இது ஒரு ஆபத்தாகத்தான் இருக்கும் என்பதுதான் எனது பார்வை.!
காரணம் இட ஒதுக்கீடு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது.! அதனை நமது அரசுகள் நீட்டித்துக் கொண்டே வந்தது.! இதனால் பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.!
70களுக்கு முன்பு வரையில் அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், மின்துறை, போக்குவரத்து, வங்கி, காப்பீடு, நீதிமன்றம்  மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர்சாதியினரே பணியில் இருந்தனர்.!
இது எப்படி சாத்தியமானது.!
முன்பே பணியில் இருக்கும் உயர்சாதியை சேர்ந்த ஒருவரது உறவினர்களை அல்லது அவரின் நண்பர்கள் அல்லது நண்பர்களின் உறவினர்களை பணிக்கு அமர்த்துவார். அது ஒரு சங்கிலித் தொடராக இருக்கும்.!
இதனை 70களுக்குப் பிறகு நமது ஆட்சியாளர்கள் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியது மட்டுமல்லாமல் அதனை உறுதி செய்து, வாரியம் மற்றும் TNPSC மூலமாக எல்லா தரப்பு மக்களுக்கும் அந்த பணிகள் கிடைக்க வழி செய்கின்றனர்.!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

 minnambalan : அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் உட்பட பத்து எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 14)அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தலைமை கழகத்துக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காரில் தளவாய் சுந்தரம், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகிய நான்கு பேரும் வந்தனர்.

இன்றைய கூட்டம் குறித்து அதிமுக வட்டாரத்தில் நாம் விசாரித்த போது,

“தலைமை கழகத்துக்கு வந்ததும், ஓபிஎஸ், ஈபிஎஸ், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி முனுசாமி ஆகியோர் தனி அறைக்குச் சென்று பேசினார்கள். அதன் பிறகு ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவர் மட்டும் தனியாகப் பேசினார்கள்.

மின்னல் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி!

May be an image of standing, outdoors and text that says 'vimara'

Rubasangary Veerasingam Gnanasangary  : மின்னலின் காந்த அலையால் தாக்கப்பட்ட எனது அனுபவம்.
பல வருடங்களுக்கு முன்னர், நான் pizza டெலிவரி செய்வதற்காக காரில் இருந்து பீட்சாவை காவிக்கொண்டு அந்த வீட்டின் கதவை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.
வீட்டின் பக்கத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்ட  கரவன் வண்டி (caravan - படத்தில் உள்ளது) மீது மின்னல் தாக்கியது.
அந்த கரவனுக்கும் எனக்கும் சுமார் பதினைந்து அடி தூரம்தான் இருக்கும். சலீங் என்று கண்ணாடிகள் உடையும் சத்தம், நான் நிதானமாகத்தான் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஆனால் எனது கால்கள் விறுவிறு என்று அடிகள் வைக்கத் தொடங்கின. என்னை ஏதோ இழுப்பது போன்று உணர்ந்தேன். நானும் அதை எதிர்க்க முயற்சிக்கிறேன் ஒரு நொடிக்குள்ளேயே சடார் என்று  என்னை குப்பற விழுத்தியது. அதே வேகத்தில் நானும் எழுத்துவிட முயற்சித்தேன் ஆனால் தொடர்ந்து சில நொடிகளுக்கு என்னை இழுத்துப் பிடித்தவண்ணமே இருந்தது.
எனது கைவிரல்கள் இரண்டில் இரத்த உறைவு சிறிதாகவும் முழங்கால்கள் கொஞ்சம் பலமாகவும் அடிபட்டதை காரில் ஏறி அமர்ந்த பின்னரே உணர்ந்தேன்.
Dr. கனகசபாபதி வாசுதேவா அவர்களிடம் "மின்னல் தாக்கி அநியாய இறப்புகள் ஏற்படுகின்றனவே, அதுபற்றிய தங்கள் ஆலோசனையை எழுதுங்களேன்" என்று கேட்டிருந்தேன். அவரும் எழுதி உள்ளார்.

பணிக்கன் குளம் பாலைப்பழம் ... தள்ளாடும் வாழ்வாதாரம்

May be an image of one or more people, people standing, road, tree and grass

திருகோணமலை சந்தையில் பாலைப்பழம்
N.K. Kajarooban  :    யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன்.
பனிக்கன்குளம் பகுதியில் பையில் ஏதோ வைத்து , வழிமறித்து விற்க முயன்றாளொரு பெண்!
“பாலைப்பழம்!”
பார்த்ததும் வாகனத்தை நிறுத்தினேன்.
மாஸ்க்கை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டு கேட்டேன்
“என்ன விலை?”
“ஒரு Bag நூறு ரூபா!”
அருகில் வீதியோரமாக அவள் கணவனாக இருக்க வேண்டும். ஒரு பெரிய சட்டியிலிருந்த பாலைப் பழங்களை பைகளில் போட்டுக் கொண்டிருந்தார்
ஒரு Bag ஐப் பணங்கொடுத்து வாங்கிவிட்டேன். அப்பெண் விடுவதாயில்லை.
“அண்ணே இன்னும் இரண்டு வாங்குங்கண்ணே!”
“வேணாம் போதும்!”

 இப்பொழுது அவளது கணவர் எழுந்து என்னருகில் வருகின்றார்.
“விடியேல இருந்து நிற்கிறமண்ணே! ஒருத்தரும் வாகனத்தை நிற்பாட்டுகினமில்லை. வீட்டில சரியான கஸ்ரமண்ணே! நாங்கள் விறகு வெட்டி றோட்டில வைச்சு விற்கிறது. இப்ப ஆட்கள் வாறயில்லை விறகு யாவாரமுமில்லை! அதோட பாலைப்பழம் விற்கத் தொடங்கினம் இந்தக் கொறோனாக்குப் பயந்தோ தெரியா சனங்கள் வாகனத்தை நிற்பாட்டுதுகளில்லை! நீங்கள் தானண்ணே முதல் யாவாரம்.”

சசிகலா அதிமுக! 700 கிளைச்செயலாளர்கள் தயார்... தேனி கர்ணன் அதிரடி..!

 நக்கீரன் -வே.ராஜவேல் : அதிமுக, அமமுக கட்சியினரிடம் சசிகலா பேசும் ஆடியோ தொடர்பாக சசிகலாவின் ஆதரவாளரும் அண்ணா திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவருமான தேனி கர்ணனை தொடர்புகொண்டோம்.
சசிகலா பேசும் ஆடியோக்களை வெளியிடுவது யார்? இந்த நேரத்தில் ஏன் வெளியிட வேண்டும்?
இந்த ஆடியோக்களை வெளியிடுவது தொண்டர்கள்தான்.
சென்னையில் தங்கியிருக்கும் சசிகலாவுக்கு தொடர்ந்து தொண்டர்கள் கடிதம் எழுதிவருகின்றனர். கரோனா காலம் என்பதால் பதில் கடிதம் போய் சேருமா, சேராதோ என்பதால் கடிதத்தில் உள்ள தொண்டர்களின் எண்களுக்குத் தொடர்புகொண்டு சசிகலா பேசுகிறார்.
சசிகலா சம்மதம் இல்லாமல் வெளியிட முடியுமா? அல்லது சசிகலாதான் வெளியிட சொல்கிறாரா?
சசிகலா வெளியிட சொல்லவில்லை. மிகப்பெரிய ஆளுமை தன்னிடம் பேசியதைத் தொண்டர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அதனால் அதனை வெளியிட்டுவருகிறார்கள். தான் எழுதிய கடிதத்திற்கு சசிகலா ஃபோனில் பேசிவிட்டார் என்பதை சந்தோசமாக நினைக்கிறார்கள். அதனால் தொண்டர்களே வெளியிடுகிறார்கள்.