சனி, 17 ஜூலை, 2021

சபரீசனிடம் பஞ்சாயத்து - சோளிங்கர் பார்த்திபன் (தினகரன்குரூப்) வருவதற்கு ராணிப்பேட்டை காந்தி எதிர்ப்பு!

அமமுக புள்ளிக்கு அமைச்சர் எதிர்ப்பு: சபரீசனிடம் பஞ்சாயத்து!
minnambalam.com : அமமுகவில் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை திமுகவுக்குக் கொண்டுவருவதில் அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிரமாக இருக்கிறார். கடந்த ஜூன் 25 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களான மாரிப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

அதே நாளில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சோளிங்கர் பார்த்திபனும் இருந்ததையும் அவர் செந்தில்பாலாஜியை சந்தித்துவிட்டுத் திரும்பும்போது மாரியப்பன் கென்னடியை அங்கே வைத்து சந்தித்ததையும் மின்னம்பலத்தில் அமமுகவில் அடுத்த விக்கெட் என்ற தலைப்பில் விரிவாக வெளியிட்டிருந்தோம்.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் மலையக சிறுமி (தொடர் கற்பழிப்பு) எரிகாயங்களுடன் மருத்துவ மனையில் உயிரிழப்பு

12 அல்லது 13 வயதில் இருந்து இச்சிறுமி பாலியல் வன்புணர்வு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார் என்று உடல் கூற்று ஆய்வில் தெரியவந்துள்ளது . The post-mortem revealed that she had been raped since 12-13 years. She had come to Rishad Bathiudeen’s house about eight months ago to work as a servant. After a while, the girl had repeatedly complained to Bathiudeen’s family and her parents that she wanted to go home.


malayagam.lk  : மலையகத்தை ரஞ்சினி ஜூட் தம்பதிகளின் மக்கள் செல்வி ஹிஷாலினி வயது 15 முன்னாள் அமைச்சரின் வீட்டில் தீக்காயங்களோடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்  
சிகிச்சை பலனளிக்காமல் அவர் தற்போது உயிரிழந்துள்ளார்முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு – பொரளை, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
16 வயதும் 8 மாதங்களுமான குறித்த சிறுமி, கடந்த ஜூலை 03ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் (15) மரணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் 5 பேர் தப்பி ஓட்டம்

 மாலைமலர் :சிவசங்கர் பாபாவின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியைகள் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. ஆசிரியைகள் சிலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர்.
இதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகள் அவர் மீது பாய்ந்துள்ளது. இதனால் சிவசங்கர் பாபா உடனடியாக வெளியில் வர முடியாத நிலையில் உள்ளார்.

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்

 மாலைமலர் : கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் அடுத்த மாதம் இறுதியில் இருந்து கொரோனா 3-வது அலை பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
சென்னை: நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கொரோனா முதல் அலை பரவலின்போது ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாகவே கொரோனா பாதிப்பு குறைந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ரஷியா நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை சில தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கட்டணம் அடிப்படையில் பொதுமக்களுக்கு போட்டு வருகின்றன.

தாலிபானுக்கு பாகிஸ்தான் உதவுகிறது! குற்றம் சாட்டும் ஆப்கான் துணை அதிபர்

zeenews.india.com :  காந்தஹார்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. தாலிபான் கிளர்ச்சியாளர்கள் வடக்கில் தங்கள் பிடியை இறுக்கிக் கொண்டுள்ளன. பாகிஸ்தானுடனான முக்கிய எல்லைத் தளத்தை கைப்பற்ற வெள்ளியன்று ஆப்கான் படைகள் தாலிபான் போராட்டக்காரர்களுடன் மீண்டும் மோதின.
இரவு முழுவதும் நடந்த கடுமையான சண்டைக்குப் பிறகு, பலத்த காயமடைந்த தாலிபான் போராளிகள் எல்லைக்கு அருகிலுள்ள பாகிஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சம்பவ இடத்திலுள்ள ஏ.எஃப்.பி நிருபர்கள் தெரிவித்தனர்.
ஜோவ்ஸ்ஜனின் துணை ஆளுநர் தாலிபான்கள் (Taliban) அந்த மாகாண தலைநகரின் வாயில்களை அடைந்துவிட்டதை உறுதிப்படுத்தினார். எனினும், அரசாங்கப் படைகள் போராளிகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் பீதியும் பதட்டமும் ஆக்கிரமித்துள்ள நிலையில், காபுல் மற்றும் இஸ்லாமாபாத் இடையில் வாக்குவாதம் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் துணை அதிபர், பாகிஸ்தான் இராணுவம் சில பகுதிகளில் தாலிபான்களுக்கு உறுதியான வான்வழி ஆதரவை வழங்குவதாக குற்றம் சாட்டியதை அடுத்து, இந்த வாக்குவாதம் இன்னும் அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்; முற்றிலும் அழிந்த கிராமங்கள்

BBC :மேற்கு ஐரோப்பாவில் பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் குறைந்தது 120 பேர் இறந்துள்ளனர்.
வரலாறு காணாத மழையால் நதிகளில் உடைப்பு ஏற்பட்டு, அப்பிராந்தியமே பெருமளவு சேதமடைந்துள்ளது.
ஜெர்மனியில் பலி எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தீர்க்கமான போருக்கு அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல் அழைப்பு விடுத்துள்ளார்.
பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மோசமான வெள்ளப்பெருக்கிற்கு பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், பருவநிலை மாற்றத்தால் வளிமண்டலம் சூடாகி மிக கனமழை பெய்வதுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ஜூலை 20 ஆம் தேதியன்று தேசிய துக்க நாளை பிரகடனம் செய்துள்ளார் பெல்ஜியப் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ.

ம.பி.யில் குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

 மாலைமலர் : கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
ம.பி.யில் குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
போபால்:  மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்தக் குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர்.
அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்தது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளி, 16 ஜூலை, 2021

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் திரு ஸ்டாலின் 2வது பினராயி விஜயன், 3 வது நவீன் பட்நாயக் ...

May be a Twitter screenshot of 3 people and text

ஆலஞ்சியார்  : ஆட்சி பொறுப்பேற்று இரண்டே மாதங்களில் இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதலிடம் பெறுவதென்பது சாதாரண காரியமில்லை
கடின உழைப்பு தகுதியான அமைச்சர்கள், அதிகாரிகள் என நிர்வாகத்தின் திறன்காட்டி இந்திய ஒன்றியமே உற்றுநோக்க வைத்திருக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்பிமை ஸ்டாலின் அவர்கள்
வாக்களித்தவர்கள் மட்டுமல்ல எதிர்த்தவர்களும் சிறந்த ஆட்சியென புகழதக்கவகையில் நல்லாட்சியை தந்து தமிழகத்தை உயர்த்தி நிறுத்தியிருக்கிறார்..
ஆட்சிபொறுப்பிற்கு வந்த போது பெருந்தொற்றின் பிடியில் தமிழகம் சிக்கி சீரழிந்துக்கொண்டிருந்தது அதிமுக  மடையர்களின் ஆட்சியில் நிர்வாக குளறுபடிகள் ,கொரோனா வயதானவருக்குதான் வருமென எள்ளிநகையாடி தன் "ஆண்டைகளின்" மனம்குளிற தமிழகத்தை குட்டிசுவராக்கி நிறுத்தியிருந்தார்கள் .. அரைகுறைகள் கால்நக்கிகள் தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தை ஒன்றிய அரசிடம் கொடுத்துவிட்டு கைப்பிள்ளையாக இருந்தார்கள் ..

ஆப்கானிஸ்தானில் இந்திய ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் உயிரிழப்பு - தாலிபன் - ராணுவம் மோதல்

 நக்கீரன் :danish siddiqui  :  இந்தியாவை சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திகி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் பணியாற்றி வந்தார்.
தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள், தொடர் தாக்குதல் நடத்தி அந்தநாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வரும் நிலையில்,
டேனிஷ் சித்திகி ஆப்கான் இராணுவத்துடன் இணைந்து தங்கி இராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்குமிடையேயான மோதல்களை பதிவு செய்து வந்தார்.
இந்தநிலையில் அவர், தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார்.
ரோஹிங்கியா அகதிகளின் இன்னல்களை ஆவணப்படுத்தியதற்காக ஊடக உலகின் மிக உயரிய விருதான புலிட்சர் விருதினை வென்றுள்ள டேனிஷ் சித்திகி,

தமிழ்நாட்டில் 33 பேரூராட்சிகள்.. நகராட்சிகளாக தரம் உயர்கிறது? அரசு ஆலோசனை பட்டியல் ..

செங்கல்பட்டு மாவட்டம்

Velmurugan P - /tamil.oneindia.com சென்னை: தமிழகத்தில் குன்றத்தூர், மாங்காடு, மாடம்பாக்கம், பெருங்களத்தூர், அவினாசி, பெருந்துறை, கருமத்தம்பட்டி33 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழ்நாடு  அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன்,
அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாக அறிவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 148 நகராட்சிகள் உள்ளன.
இந்நிலையில் ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட அந்த பேரூராட்சியில் 30 ஆயிரம் அல்லது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 33 பேரூராட்சிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகையை பெற்றிருப்பதால்,
அந்த பேரூராட்சிகள் அனைத்தையும் நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழ்நாடு  அரசு திட்டமிட்டுள்ளதாம்- செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம் எந்தெந்த மாவட்டத்தில் எந்த பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது

மேகதாது அணை கட்ட சாத்தியமில்லை: தமிழக பிரதிநிதிகளிடம் ஒன்றிய அமைச்சர்!

minnambalam.com : மேகதாது அணை கட்டுவது தொடர்பாகக் கர்நாடகாவுக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என ஒன்றிய அமைச்சர் கூறியதாகத் தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். .. கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக சட்டப்பேரவைக் கட்சிகள் குழு நேற்று டெல்லி சென்றது. தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், ம.தி.மு.க. சார்பில் வைகோ, பா.ம.க சார்பில் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பாலகிருஷ்ணன், விசிக சார்பில் திருமாவளவன், மமக சார்பில் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தமிழக சட்டப்பேரவை கட்சிகள் குழு ஒன்றிய அமைச்சரைச் சந்திப்பதற்கு முன்னதாக, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், துரைமுருகன் தலைமையில் ஆலோசனை நடத்தியது.

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் -அரசு அறிவிப்பு

 மாலைமலர் : பிளஸ்2 மாணவர்கள் 22ம் தேதி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது.
 இந்த அடிப்படையில், மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில்,
வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 22ம் தேதி மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மக்களை சிந்திக்க அனுமதிக்காத மதங்களின் கூச்சல்கள்...


 செல்லபுரம் வள்ளியம்மை
: பார்ப்பனர்களுக்கு ஏனையோர் சிந்திப் பது பிடிக்காது . கெட்டகோபம் வரும் .
கோயில்களில்  தேவாரங்கள் புராணங்கள் மந்திரங்கள் எல்லாமே சிந்திக்கவிடாமல் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க விடப்படும் Noise pollution தான்.கோயில் களில் எக்கச்சக்கமாக மணிகள் மேளங் கள் கூக்குரல்கள் உரத்த குரலில் எல் லோரும் அரோகரா போன்ற சத்தங்கள் ஒலிக்கும்.
இந்த கடூர சத்தங்கள் எல்லாமே அங்குள் ள மனிதர்களை எள்ளளவும் சிந்திக்க வோ எதையும் ஒழுங்காக கிரகிக்கவோ விட கூடாது என்ற நோக்கத்தில் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.ஆனால் இந்த ரகசி யம் எவருக்கும் தெரியாது . இது தான் பார்ப்பனர்களின் குள்ள நரித்தனம்.
கோயில்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவ தேவாலயங்கள் மசூதிகள் பௌத்த விகாரைகள் எல்லாமே சத்தங்கள் அதிகமாக உற்பத்தி செய்யும் இடங்கள்தான்
மக்களை சுயமாக சிந்திக்க இடமளிக்காது தந்திரம்தான்

அவர்கள் மந்திரம் சொல்வது மட்டும் மிகவும் கவனமாக மக்கள் கேட்க வேண்டும் என்ற நடைமுறையை ஒரளவு வலியுறுத்துகிறார்கள் . அதாவது எல்லா சத்தங்களும் உங்கள் பாவங்களை போக்கும்....
.அதிலும் பார்ப்பன முணுமுணுப்புக்கள் மகா புனிதமானவை . 

ஆப்கானில் தாலிபான் காட்டுமிராண்டி ஆட்சி ஆரம்பம்.. பெண்கள் கடைக்கு போக, ஆண்கள் ஷேவ் செய்ய தடை.. ஷரியா சட்டமே இனி ...

Veerakumar  -  Oneindia Tamil News: காபூல்: இரண்டு தசாப்த கால யுத்தத்தைத் தொடர்ந்து,
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்ளாக அமெரிக்க படைகள் மொத்தமாக ஆப்கானிஸ்தானிலிருந்து,  வெளியேற தயாராகி வரும் நிலையில்,
தாலிபான்கள் நாடு முழுவதும் பல பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்துள்ளனர்.
ஈரான், பாகிஸ்தான் என பல நாட்டு எல்லைகளிலுள்ள முக்கிய பிராந்தியங்கள் அடுத்தடுத்து தாலிபான்கள் வசம் வீழ்ந்து கொண்டு இருக்கின்றன.
தாலிபான்கள் ஆப்கானிய அரசை மீண்டும் கைப்பற்றி இப்போதுள்ள அரசை தூக்கியெறிவார்கள் என்ற கவலை அங்கு ஏற்பட்டுள்ளது.
அப்படி தாலிபான்களில் எழுச்சி ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்குச் சென்றால், ஆப்கானியர்களிடையே, மீண்டும் பழைய கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தாலிபான்கள் அமல்படுத்துவார்கள் என்பது உறுதி என்கிறார்கள்.
உதாரணத்திற்கு, அண்மையில் வடக்கு ஆப்கானிஸ்தானில் ஒரு மாவட்டம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து,
தாலிபான்கள் தங்களது முதல் உத்தரவுகளை மாவட்டத்தின் இஸ்லாமிய இமாமுக்கு கடிதம் வடிவில் வெளியிட்டனர்.
அந்தக் கடிதத்தில் பெண்கள், தங்கள் வீட்டு ஆண்கள் துணையில்லாமல், தனியாக பஜார் செல்ல கூடாது என்றும், 

ஆண்கள் தாடியை ஷேவ் செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. புகைபிடிக்க அனுமதி கிடையாது என்றும் விதிகளை மீறும் எவரும் "தீவிரமாக கையாளப்படுவார்கள்" என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

திருச்சி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 10 பேர் விடுதலை !

 தேசம்நெட்  : திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 10 பேர் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற,எல்லை மீறி மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 9 ம் திகதி தொடக்கம் ஆரம்பித்திருந்தனர். தங்களது தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைக்கப்பட்டிருப்போர் உடனடியாக விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ் நாடு முதலமைச்சருக்கு இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வாழ் - Tomorrow is Tomorrow! அருவி இயக்குனரின் அடுத்த படம்

Vaazhl the Film Sivakarthikeyan Arun Prabu Purushothaman- Dinamani

கார்த்திக் புகழேந்தி  :  வாழ் - Tomorrow is Tomorrow!
அருவி திரைப்படம் வெளியானபோது, நீண்ட நாட்களாக மனதில் இருந்து அகலாமல் இருந்த சொல் “உச்சம் தொடும் அன்பின் கொடி.”
எதிர்பாரா விதமாக நோய்மையினால் தாக்குண்டு, குடும்பச் சூழலைவிட்டு வெளியேற்றப்படும் அருவி, அவளினும் நோய்மைகளும் கீழ்மைகளும் கொண்ட இந்தச் சமூகத்தை எப்படி எதிர்கொண்டு அன்பால் சாத்துகிறாள் என்பதை அருவியில் பேசியிருந்தார்
இயக்குநர் அருண் பிரபு. “கடைசியாக எப்போ அழுதீங்க?” என்று அருவி கேட்கிற காட்சியில், அதற்கான காரணத்தை விவரிப்பவரின், ‘பணியாரக் கிழவியின் கதை’ இன்றும்கூட நினைவில் வந்துபோகிறது.

20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியது வாட்ஸ்அப்

 மாலைமலர் :முன்று கட்டங்களாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கு முடக்கப்படும் என வாட்ஸ்அப் கூறி உள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், புதிய விதிகளுக்குட்பட்டு மே 15-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதிக்குள் வாட்ஸ்அப் பயனர்களின் இருபது லட்சம் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி உள்ளது.
இதுபற்றி வாட்ஸ்அப் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் "நாங்கள் தவறுகள் நடக்கும் முன்பாக தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். ஒருவரின் கணக்கில் முன்று கட்டங்களாக ஆராய்ந்து அதாவது, பதிவு செய்தல், தகவலை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையான கருத்துக்களை பெறும் போது கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கு முடக்கப்படும்.

வியாழன், 15 ஜூலை, 2021

வடிவேலு மீண்டும் திமுகவில் ...10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைமை செயலகம் வருகை

tamil.news18.com : மீண்டும் திரைத்துறையில் நடிகர் வடிவேலுக்கு வாய்ப்புகள் பெருகும் எனவும் நகைச்சுவையில் நாமெல்லாம் வயிறு குலுங்க சிரிக்கும் காலம் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கலாம்
மீண்டும் திரைத்துறையில் நடிகர் வடிவேலுக்கு வாய்ப்புகள் பெருகும் எனவும் நகைச்சுவையில் நாமெல்லாம் வயிறு குலுங்க சிரிக்கும் காலம் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கலாம்
திமுகவின் நட்சத்திர பேச்சாளராக 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வலம் வந்தவர் நகைச்சுவை நாயகன் நடிகர் வடிவேலு ஆனால் அந்த தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத சூழல் ஏற்பட்ட பிறகு அவர் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி அமைதியாக இருந்தார். குறிப்பாக அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்பும் வெகுவாக குறையத் துவங்கியதும் அப்போதுதான் என  சினிமாவுலகம் அறிந்திருக்கும்.

ஒன்றிய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது! தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒன்றிய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது!

minnambalam :ஒன்றிய கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடனான தமிழ்நாடு பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து, தடுப்பூசி தட்டுப்பாடு,எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 13 கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பேசுவதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜூலை 15) மாலை டெல்லி சென்றார்.

காமராஜர் படித்தவர்தான் ! பெருந்தலைவரை படிக்காத மேதை என்பது பார்ப்பன தந்திரம்

Karthikeyan Fastura : காமராஜரை பற்றி சொல்லும் போது படிக்காத மேதை என்பார்கள்.
ராஜாஜி காலத்தில் பார்ப்பன ஊடகங்கள் தொடங்கி வைத்திருந்த தந்திரம். என்னமோ எழுதப்படிக்கவே தெரியாத ஆள் மாதிரியான ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பார்கள். உண்மையில் அவர் பள்ளிப்படிப்பை முடிக்காதவர் என்றாலும் எண்ணற்ற நூல்களை படித்திருக்கிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவராக இருந்திருக்கிறார். இந்தியும் அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அகில இந்திய காங்கிரஸ்க்கு தலைவராக இருந்திருக்கிறார். அவரது அறையில் நூலகம் அளவிற்கு ஏராளமான நூல்கள் இருந்திருக்கின்றன. இவருக்கு பின் வந்த முதல்வர்களில் அறிஞர் அண்ணா மட்டுமே பட்டப்படிப்பை படித்தவர்.
கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று எவரும் பள்ளிப்படிப்பை தாண்டியவர்கள் அல்லர். ஆனால் நிறைய வாசிப்பு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். கலைஞர் பல நூல்களை எழுதியவர். பள்ளிப்படிப்பை தாண்டாதது இவர்களின் ஆளுமையில் ஒரு பிரச்சனையாகவே இல்லை.
காமராஜருக்கு மட்டும் ஏன் இந்த தோற்றம் என்பதை சிந்தித்து அந்த பிம்பத்தை உடைப்பது அவசியம். படித்ததலைவர் தான் காமராஜர்.

சில்லறை வணிகம் தற்கொலைப் பாதையில்...

May be an image of food and outdoors

Villavan Ramadoss  :   தற்கொலைப் பாதையில் சில்லறை வணிகம்...
கொரோனா இரண்டாவது அலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் அத்தியாவசிய பொருட்களின் விலையில் நிகழ்ந்திருக்கிறது.
கொள்முதல் விலை படுமோசமாக சரிந்திருக்கிறது. தக்காளி, பூசணிக்காய், மா, கொய்யா என பல அழுகும் பொருட்கள் வண்டிக் கூலிக்குகூட காணாததால் அழுகி வீணாகிப்போன செய்திகள் பரவலாக வந்தன.
ஆனால் சில்லறை விலையில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. ஓசூரில் காய்கறிகளில் பெரும்பாலானவை கிலோ 20 ரூபாய்க்குள் கிடைக்கும். இப்போது சராசரியாக 40 ரூபாய்க்கு வந்துவிட்டது.
விவசாயிகளிடம் மாம்பழத்தை வாங்க ஆளில்லாமல் இருந்தபோது இங்கே 50 ரூபாய்க்கு குறையாமல் விற்றது.
போன ஆண்டு புளியின் கொள்முதல் விலை 45 ரூபாய். வழக்கமாக ஒரு ஆண்டு வரை ஸ்டாக் வைக்கலாம்.போன வருடம் வாங்கிய புளி இன்றும் இருப்பில் இருக்கிறது, அடுத்த ஆண்டுவரை அதுவே தாங்கும் என்பதாக நிலை இருக்கிறது. கொள்முதல் விலை இப்போது 35 ரூபாய். இருப்பு வைத்த வியாபாரிகளுக்கு இன்றைய நட்டமே கிலோவுக்கு 10 ரூபாய். அதனால் புதிய புளியை யாருமே வாங்குவதில்லை. இது விவசாயிகளுக்கு நட்டம். ஆனால் சந்தையில் புளி விலை அப்படியேதான் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் தாலிபான்களின் கொடி பறக்கிறது

BBC :

 ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே இருக்கும் எல்லைச் சாவடி ஒன்றை கைப்பற்றிய தாலிபன்கள் அங்கு தங்கள் கொடியை ஏற்றி உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கந்தஹார் அருகே இருக்கும் ஸ்பின் போல்டாக் எனும் எல்லைச் சாவடி அருகே வெள்ளை நிறக் கொடிகயை ஏந்திக்கொண்டு தாலிபன்உறுப்பினர் ஒருவர் ஆட்டுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த எல்லைச் சாவடியை தாலிபன்கள் கைப்பற்றி உள்ளனர் என்பதை ஆஃப்கன் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
எல்லையின் மறுபுறம் இருக்கும் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் ஸ்பின் போல்டாக் எல்லைச் சாவடியை கைப்பற்றியுள்ள தாலிபன் தீவிரவாதிகள் உரையாடிக் கொண்டிருக்கும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
ஆஃப்கன் படையினரிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் தாலிபன்கள் இந்த எல்லைச் சாவடியைக் கைப்பற்றியுள்ளனர் என்று பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது.

மாஸ்டர் கார்டு நிறுவன ஏடிஎம் கார்டுகளுக்கு தடை -ரிசர்வ் வங்கி அடாவடி

 மாலைமலர் :வாடிக்கையாளர்களின் தரவை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக மாஸ்டர்கார்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இதன்மூலம் புதிய  வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஜூலை 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அதேசமயம், ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்துவோருக்கு புதிய தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் தரவை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு அதிகமான அவகாசம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதிலும், பணம் செலுத்தும் முறை தொடர்பான தரவுகளை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது: துரைமுருகன் அறிவிப்பு

 மாலைமலர் :r :சென்னை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்படவேண்டும்?
என்பது குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 16-ந்தேதி (நாளை) மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாக கூட்ட அரங்கில் நடைபெறும்.
அப்போது தி.மு.க. மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவது, 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்துவது, மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட அம்சங்களையும், தமிழக நலன் சார்ந்த விவகாரங்களை வலியுறுத்துவதிலும் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேசம் 5 மணி நேரத்துக்கு ஒரு என்கவுன்டர்; லவ் ஜிகாத் கைதுகள் – யோகி ஆதித்யநாத்தின் அரசின். சாதனைகள் BBC

BBC "

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகள், அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.
போலி என்கவுன்டர்கள், லவ் ஜிகாத், கோவிட் பேரிடர் அலட்சியம் என பல விஷயங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். என்ன நடக்கிறது உ.பியில்?
இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி, காவல், வெளியுறவு, வனத்துறை, வருவாய் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், `அரசியலமைப்புச் சட்டத்தின்வழி நடக்க வலியுறுத்தும் குழு (constituition conduct group)’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.

`அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியே ஆட்சி நடக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி அரசுக்குப் பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளனர்.
விவசாயிகள் போராட்டம், லட்சத்தீவு விவகாரம் போன்றவற்றில் சிசிஜி எழுதிய கடிதங்கள், அதிர்வலைகளை ஏற்படுத்தின.

புதன், 14 ஜூலை, 2021

கிழக்கு கடற்கரை சாலை.. பேரரசர் ராஜராஜ சோழன் சாலை ! கல்வெட்டு ஆதாரம்! ... முதல்வரிடம் கோரிக்கை

May be an image of one or more people and text

tamil.oneindia.com : சென்னை: கிழக்கு கடற்கரை சாலைக்கு தமிழ் சோழ பேரரசர் ராஜராஜ சோழன் பெயரை சூட்டும்படி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை(East Coast Road) அமைந்துள்ளது.
சுமார் 777 கி.மீ நீளமுள்ள இந்த சாலையில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள், ஆன்மிக தலங்கள் குவிந்து கிடக்கின்றன.
இந்த சாலையில் அமைந்துள்ள பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலம் என்பது நமது அனைவருக்கும் தெரியும்.
இதனை தொடர்ந்து வெளிநாட்டினர் வந்து குவியும் மலிவு விலை மதுக்கூடங்கள் நிறைந்த பாண்டிச்சேரியும் கிழக்கு கடற்கரை சாலையில்தான் உள்ளது.
பெருமை வாய்ந்த கிழக்கு கடற்கரை சாலை இதை விட்டால் தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவில், வேளாங்கன்னி மாதா கோவில், நாகூர் தர்கா, குலசை முத்தாரம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், புகழ்பெற்ற கடற்கரைகள் என்று கிழக்கு கடற்கரை சாலை செல்லும் இடமெல்லாம் சிறப்பு வாய்ந்த இடங்கள், கோவில்கள், தேவாலயங்கள் அமைந்துள்ளன.

“ஏய், படத்துலே சின்ன பாண்டியா நடிச்சவரு அவருதாண்டா” .. கத்தியபடியே கூட்டம் சூழ்ந்தது... பாண்டியராஜன்

May be an image of 2 people and text

Krishprasad   Krish  :  அதிகாலை இரண்டு மணி.   பாக்யராஜ் வீட்டிங் காலிங்பெல் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.
சற்றுமுன்னர்தான் தூங்கப் போயிருந்தவர் கண்களை கசக்கியபடியே கதவைத் திறந்தார்.
திருதிருவென்று விழித்துக் கொண்டு வெளியே பாண்டியராஜன் நின்றுக் கொண்டிருந்தார்.
“என்னய்யா இந்த நேரத்துலே?”
“உங்க கிட்டே முக்கியமான ஒரு விஷயம் பேசணும் சார்”
அப்போது ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜரூராக நடந்துக் கொண்டிருந்தது. ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் பாக்யராஜ் நெருப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பில் சின்ன சின்ன தடங்கல் நடந்தாலும், அவருக்கு அப்போது அசோசியேட்டாக இருந்த பாண்டியராஜனை பிடித்து காய்ச்சி எடுத்துவிடுவார். அன்றும் அப்படிதான் தேர்ட் டிகிரி லெவலில் பாக்யராஜ் திட்டியிருந்தார். அது சம்பந்தமாகதான் தன்னை பாண்டியராஜன் பார்க்க வந்திருப்பார் போலிருக்கிறது என்று பாக்யராஜ் நினைத்தார்.

தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா சிறையில் .. இந்தியர்களுக்கு எதிராக வெடித்துள்ள கலவரம்

Durban, South Africa

.vikatan.com : ஜூமா சிறையிலடைக்கப்பட்டதை எதிர்த்துவரும் அவரின் ஆதரவாளர்கள், நாடு முழுவதும் வன்முறையில் இறங்கியுள்ளனர். இதில் அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்' என்ற வரிகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு, நிற வெறிக்கு எதிராகப் போராடியவர் நெல்சன் மண்டேலா. வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு, தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, 27 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்தவர் அவர். விடுதலைக்குப் பிறகு, ஜனநாயக வழியில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமை பெற்ற தலைவர், மண்டேலா.

தாயகம் திரும்பிய மலையக அகதிகளுக்கு இந்திய குடியுரிமை! ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு :

 தினகரன் : தமிழகத்தில் அகதிகள் முகாம் நரகம் போல உள்ளது இலங்கை தோட்ட தொழிலாளர் வாரிசுகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை:  தமிழகத்தில் அகதிகள் முகாம்கள் நரகம் போல உள்ளது.
எனவே இலங்கை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் தனி முகாமில் உள்ள ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட  65 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
நாங்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எங்களின் மூதாதையர்கள் பிழைப்புக்காக இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களுக்கு கூலி தொழிலாளர்களாக சென்றனர். அதன்பிறகு, அவர்களது வாரிசுகள்  அங்கேயே இருந்தோம்.

குழந்தை மித்ராவின் மருந்து இறக்குமதி வரியை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவிப்பு முதலமைச்சர் கோரிக்கை ஏற்பு

கலைஞர் செய்திகள் :  குழந்தை மித்ராவின் மருந்து இறக்குமதி வரியை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவிப்பு
முதலமைச்சர் கோரிக்கை ஏற்பு .. மித்ராவின் உயிர்காக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த ஒன்றிய அரசு!
நாமக்கல் மாவட்டம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், பிரியதர்ஷினி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு வயதில் மித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு குழந்தை மித்ரா நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர் குழந்தை மித்ராவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் முதுகுத் தண்டுவட சிதைவு நோயால் மித்ரா பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நோயைக் குணப்படுத்த 16 கோடி ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் சதீஷ்குமார், பிரியதர்ஷினி தம்பதியிடம் தெரிவித்துள்ளனர்.

பழனியில் கேரள பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை- பணம் பறிக்க நடத்திய நாடகம்? - போலீஸ் டி.ஐ.ஜி. பரபரப்பு பேட்டி

பழனியில் கேரள பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை - போலீஸ் டி.ஐ.ஜி. பரபரப்பு பேட்டி

மாலைமலர் : பஸ் போக்குவரத்தே இல்லாத சமயத்தில் கண்ணூரில் இருந்து அந்தப் பெண் பழனிக்கு கணவருடன் ஏன் வந்தார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பழனியில் கேரள பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை - போலீஸ் டி.ஐ.ஜி.  விஜயகுமாரி பேட்டி.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த 40 வயது பெண் பழனியில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தனிப்படை போலீசார் கண்ணூர் சென்று அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தனிப்படை போலீசார் கண்ணூர் சென்று நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணுக்கும், அவருடன் வந்த நபருக்கும் திருமணமாகவில்லை என்பது தெரியவந்தது.

நடிகர் வடிவேலு :கொரோனாவை உலகமே பாராட்டும் வகையில் கட்டுப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்! 5 லட்சம் நிவாரண நிதி.....

tamil.filmibeat.com - Kalaimathi : சென்னை: நடிகர் வடிவேலு முதல்வர் கொரோனா நிதிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.
உச்ச நட்சத்திரங்கள் முதல் கடைக்கோடி கலைஞர்கள் வரை பலரும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் வடிவேலு முதல்வர் ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, முதல்வர் ஸ்டாலினுக்கு புகழராம் சூட்டினார்.

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பெயர் வாங்கி தரும் அளவுக்கு ஸ்டாலின் ஆட்சி நடத்துவார் என்றார். உலகமே உற்று நோக்கும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தியுள்ளார் முக ஸ்டாலின் என்றும் பாராட்டினார் வடிவேலு.

மேலும் தமிழ்நாட்டை பிரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த வடிவேலு நல்லா இருக்குற தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள். நாடு நாடு என பிரித்தால் என்னாவது. நான் அரசியல் பேசவில்லை. இதையெல்லாம் கேட்கும் போது தலைசுத்துது என்றார்.

சோனியா-ராகுல்-பிரியங்காவுடன் சந்திப்பு: பிரசாந்த் கிஷோரின் ‘பெரிய’வியூகம்!

சோனியா-ராகுல்-பிரியங்காவுடன் சந்திப்பு: பிரசாந்த் கிஷோரின் ‘பெரிய’வியூகம்!

minnambalam : தேர்தல் உத்தி ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், அந்தப் பணியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தாலும்...அவரது சமீபத்திய சந்திப்புகள் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படுகின்றன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இருமுறை சந்தித்துப் பேசினார் பிரசாந்த் கிஷோர். அதையடுத்து நேற்று (ஜூலை 13) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருடனும் பிரசாந்த் கிஷோர் முக்கிய ஆலோசனை நடத்தியிருப்பது தேசிய அரசியலின் கவன ஈர்ப்புப் புள்ளியாக அமைந்துள்ளது.

நீட் தேர்வு முறையில் மாற்றம்.. சாய்ஸ் அடிப்படையில் பதில் அளிக்கும் முறை அறிமுகம்!

tamil.oneindia.com - vishnu-priya : டெல்லி: நீட் தேர்வு முறையில் வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு சாய்ஸ் அடிப்படையில் பதில் அளிக்கும் முறை இந்த ஆண்டு முதல் அறிமுகமாகியுள்ளது.மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.இதையடுத்து இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆகும். ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம்.

வழக்கமாக நீட் தேர்வில் 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்போது இந்த ஆண்டு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கியூபாவில் கம்யூனிஸ அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் – சரிகிறதா காஸ்ட்ரோ எழுப்பிய சாம்ராஜ்ஜியம்?

BBC : கியூபாவில் நெடுங்காலத்துக்குப் பிறகு கம்யூனிஸ அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரச் சரிவு, உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருந்தனர்.
இப்போது கொரோனாவை கையாண்ட விதமும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கியூபாவில் அரசுக்கு எதிராகப் பேசுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதால் அங்கு நடந்திருக்கும் போராட்டங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
போராட்டங்களுக்கு எதிராகச் சண்டையிடும்படி கியூபாவின் அதிபர் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“இங்கு உணவு இல்லை, மருந்து இல்லை, சுதந்திரமும் இல்லை” என போராட்டத்தில் ஈடுபட்ட அலெஜான்ட்ரோ என்பவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுகொள்வது ஆபத்தானது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 மாலைமலர் : தொற்றை தடுப்பதற்கு கொரோனா தடுப்பூசிகளை கலந்து போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் காணொலிக்காட்சி வழியாக நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “பல நாடுகளில் கொரோனா 2-வது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. 3-வது அலை குறித்த எச்சரிக்கையும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதம் ஆகும். இங்கே கொரோனா தடுப்பூசிகளைப் பொருத்தமட்டில் ஒரு ஆபத்தான போக்கு உள்ளது. கொரோனா தடுப்பூசிகளை கலந்து போடுவது, பொருத்திப்பார்ப்பதெல்லாம் நடக்கிறது. இது ஆபத்தானது. இது தொடர்பாக நம்மிடம் தரவுகள் இல்லை. ஆதாரங்கள் இல்லை. 2-வது, 3-வது, 4-வது டோஸ் தடுப்பூசிகளை எப்போது யார் போட்டுக்கொள்வது என்று மக்கள் தீர்மானிக்கத்தொடங்கினால், அது நாடுகளில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். இது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன, அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

திரைக்கதை, கதை சுருக்கம் Logline ... உங்களுக்கு திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வம் இருந்தால்....

No photo description available.

Singara Velan  :  logline.  : சில வாரங்களுக்கு முன்பு லைகா நிறுவனம் எல்லோரிடமும் கதை சுருக்கம் (Synopsis) கேட்டிருந்தது. ஆனால் நிறைய பேரிடம் திரைக்கதை மட்டுமே இருந்ததால் அவசரம் அவசரமாக கதை சுருக்கத்தை எழுதி அனுப்பி இருப்பீர்கள்.
அதேபோல் நிறைய பேர் கதை சுருக்கத்தை அனுப்பும் போது கூடவே Logline ம் சேர்த்து அனுப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்திருப்பீர்கள். ஏனென்றால் இந்த Logline என்பது மிக முக்கியமானது. அதேசமயம் நிறையப் பேருக்கு இது அவ்வளவு சுலபத்தில் எழுத வந்துவிடாது என்பதுதான் பிரச்சினை.
நிறைய பேர் நினைக்கலாம். திரைக்கதை, கதை சுருக்கம் இருந்தால் போதும் Logline அவ்வளவு முக்கியம் இல்லை என்று. ஆனால் இது உண்மை அல்ல. முன்பெல்லாம் எந்த நிறுவனமும் யாரிடமும் திரைக்கதைகளை கேட்பது கிடையாது. ஆனால் இன்று கதை சுருக்கத்தை அனுப்புங்கள் என்று கேட்கும் அளவிற்கு காலம் முன்னேறியுள்ளது. நிச்சயம் நாளை கதை சுருக்கம் வேண்டாம். Logline மட்டும் அனுப்புங்கள் போதும் என்று சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான பேர் நாளை கதை சுருக்கத்தை அனுப்பும் போது அவற்றை படிப்பதற்கு அவர்களுக்கு நேரம் இருக்காது.

மகளிர் வாழ்வில் ஒரு பாய்ச்சல் முன்னேற்றம்! ... இலவச பேருந்து பயணம்!

No photo description available.

 Sowmian Vaidyanathan :  தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சியை பற்றி நாம் எதுவுமே பேசாமல் வெற்றுக் கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றோமோ என்று தோன்றுகிறது.
இணைய திமுகவினர் கூட அதிகமாக இதை கண்டு கொள்ளாமல் மேம்போக்காக கடந்து செல்கின்றார்களோ என்ற ஐயமும் ஏற்படுகின்றது.
பெண்ணியம் பேசுபவர்கள், பெரியாரியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட இதை கண்டுகொள்ளவில்லையோ என்ற கவலையும் உண்டாகிறது..!
கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு தினமும் ஒன்றிரண்டு பெண்கள் வந்து கொண்டிருந்தனர்.
இன்று காலை ஒரே ஊரிலிருந்து ஐந்து பெண்கள் வந்திருந்தார்கள்.
ஏன் இப்படி என்று அவர்களிடம் விவரம் கேட்ட பொழுது... மயிலாடுதுறை ஒன்றியத்தின் கடைகோடியான மணல்மேட்டையும் தாண்டி ஒரு குக்கிராமம். இரண்டு பஸ் மாறி வர வேண்டும்.

செவ்வாய், 13 ஜூலை, 2021

நானும் தமிழன் தான்!'.. 'என் பூர்வீகம் கடலூர்!'.. இங்கிலாந்து பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சன் பரபரப்பு கருத்து!.. DNA ஆய்வில் உறுதி!!

richard branson tamil roots cuddalore virgin galactic spaceflight

tamil.behindwoods.com - Manishankar :  உலகின் பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவரும், தற்போது விண்வெளி சுற்றுலா சென்றிருப்பவருமான ரிச்சர்ட் பிரான்சனின் மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்தவர்கள் என்ற வியக்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளி சுற்றுலா குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த வரலாறு படைக்கப்பட்டுள்ளது. Virgin Group தலைவரும் உலகின் பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவருமான இங்கிலாந்தின் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 11 பேர் இன்று அவருடைய Virgin Galactic விண்வெளி நிறுவனத்தின் VSS Unity விண்வெளி ஓடம் மூலமாக நேற்று நியூ மெக்சிகோவில் இருந்து விண்வெளிக்கு பயணத்தை தொடங்கினார்கள்.
2000ம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தான் முதலில் விண்வெளி நிறுவனத்தை தொடங்கினார். மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது அவருடைய கனவாக இருந்தது. இந்த கனவை அவருடைய புளூ ஆரிஜின் நிறுவனம் மூலமாக நிறைவேற்ற இருக்கிறார். ஜூலை 20ம் தேதி ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் செல்ல இருக்கிறார். எனினும், பெசோஸுக்கு பின்னர் 2004ம் ஆண்டு விண்வெளி நிறுவனத்தை தொடங்கிய ரிச்சர்ட் பிரான்சன் இன்றைய பயணத்தின் மூலம் விண்வெளி பந்தயத்தில் முந்தியிருக்கிறார்.

நடிகர் விஜய்க்கு நீதிமன்ற அபராதம்! ! ரீல் ஹீரோவாக இருக்காமல் ரியல் ஹீரோவாக இருங்கள்! நீதிமன்றம் அறிவுரை!

ரியல் ஹீரோவாக இருங்கள் : விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை!

மின்னம்பலம் : நடிகர் விஜய் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் ரஜினிகாந்த்துக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருப்பவர். நடிகர் விஜய் இயல்பாகவே புதிய மாடல் கார்களை வாங்கி குவிப்பது அவரது வழக்கம்.
இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பதைக் கௌரவமாகக் கருதுகிற மனோநிலை வசதி படைத்தவர்கள் மத்தியில் நிலவுகிறது. அந்த காரை ஓட்டி செல்வதற்கான தரம் மிக்க சாலைகள் இந்தியாவில் இருக்கிறதா என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பது கிடையாது. வெளிநாடுகளுக்கு கார்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் நிலையில் 2018ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார்.

டிவி விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது! உண்மை காரணம் என்ன?

மின்னம்பலம் : ஊடக விவாதங்களில் அதிமுக கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ... யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என அதிமுக தெரிவித்துள்ளது.
தற்போது தொலைக்காட்சி விவாதங்கள் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும், விவாதம் நடத்தி தங்களது கருத்துகளைப் பதிவு செய்வார்கள். இதுபோன்ற விவாதங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் பேச்சாளர்கள் அல்லது நிர்வாகிகள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இனி தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 12) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,   உண்மை காரணம் என்ன? விரிவான கட்டுரை

தமிழ்நாடு அரசின் நீட் ஆய்வுக்குழுவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம்: நீட் கேள்வி எழுப்ப நீங்கள் யார்? .. கரு நாகராஜனுக்கு கண்டனம் ..

Velmurugan P e Oneindia Tamil : சென்னை : நீட் தேர்வின் தாக்கம் குறித்து தமிழ்நாடு அரசின் மக்கள் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்? என்று பாஜகவின் கரு.நாகராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியதுடன் அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்த குழுவுக்கு எதிராக வழக்கு தொடுத்ததன் மூலம் கரு.நாகராஜனுக்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க,
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
அரசியல் கூடாது மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவை நூறு யூனியன் பிரதேசங்காளாக்குவதே ஆர்.எஸ்.எஸ் நோக்கம்! – பசுபதி தனராஜ்

aramonline.in : இந்தியாவை 100 பகுதிகளாகப் பிரித்து, அவையாவும் டில்லியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வால்கர் வலியுறுத்தி வந்தார்! மாநில அரசுகளே இருக்கக்கூடாது என சொல்லி வந்தார். ஆர் எஸ் எஸ்ஸும், அதன் அரசியல் முகமான பாஜகவும் கூட்டாட்சி முறைக்கும், மொழிவழி மாநிலங்களுக்கும் எதிரானவை !மாநில கலாச்சார ,மொழி அடையாளங்களை, அவற்றின் தனித்தன்மைகளை அழித்து ” ஒரே நாடு, ஒரே மக்கள்” என கோஷமிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க வேண்டும் என்பது தான் அவர்கள் நோக்கம் !

தமிழ்நாட்டை  இரண்டாக  அல்லது மூன்றாக பிரிக்க வேண்டும் !  அதில் முதல் கட்டமாக கொங்கு நாடு பகுதியை யூனியன் பிரதேசமாக ஆக்க வேண்டும் என பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்களின் ஒரு குரலை தினமலர் நாளிதழ் மூலமாக ஒலிக்க  வைத்திருக்கிறார்கள்  !

இங்கே அரசியலுக்கு ஆள் சேர்க்கப்படுகிறார்கள்..! -சாவித்திரி கண்ணன்

aramonline.in : கட்சிமாறிகளின் கைலாயமாக மாறிக் கொண்டுள்ளது திமுக! எதற்காக மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள்..? அதிமுக ஊழல் ஆட்சிக்கு மாற்று வேண்டும் என்று தானே..?

அந்த ஊழல்களுக்கு காரணமான அதிமுகவினர் பலரே திமுகவில் வந்து ஐக்கியமானால், திமுகவின் நிறம் மாறாதா..?

ஏதோ ஸ்டாலின் முன்னிலையில் சேர்கிறார்கள் என்பதைக் கடந்து, ஆங்காங்கே மாவட்டங்களிலும் அங்குள்ள முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்! முன்னாள் எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.சுந்தரம் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி, அமமுக நெல்லை மாவட்ட தலைவர் பரமசிவன் அய்யப்பன்…இப்படிப் பலர் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

நடன பெண்களை வேட்டையாடும்.. - பிகார், உ.பி-யில் நடக்கும் கொடுமை

திருமணம் நடனம்

சிங்கி சின்ஹா - பி பி சி நிருபர் : அது ஒரு சிறிய ஒலிப்பதிவு அறை. சில பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கதைகளை பதிவு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர்களிடம் கூறப்பட்டது. அவர்களின் கதைகளைப் படிப்பவர்கள், கேட்பவர்களில் யாராவது அவர்களைக் காப்பாற்ற முன்வரலாம். அவர்களுக்கு இது ஒரு நம்பிக்கைக் கீற்றாகத் தோன்றியது.முப்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் ஒரு பெண் இந்தச் சிறுமிகளை அறிமுகப்படுத்துகிறார். இந்த பெண்கள் பீகாரின் சில பகுதிகளின் திருமணங்கள் அல்லது விருந்துகளில் சிறப்பு வகையான ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுக்களில் நடனமாடுகிறார்கள், பாடுகிறார்கள். ஆனால் அவர்களது கலை அரங்கேறும் நேரம், பெரும்பாலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தப்படுகிறார்கள்.

அவர்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள். தகாத சீண்டல்கள் சில சமயங்களில் வன்புணர்வு வரை செல்கிறது.<span>

திராவிடம்` என்றால் என்ன? :வி.இ.குகநாதன்

இனியொரு : ‘திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது, `திராவிடம்` என்பது தென்னிந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைக் குறிப்பது என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இச் சூழ்நிலையில் உண்மையில் `திராவிடம்` என்பது என்ன? அச்சொல் வரலாற்றுரீதியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.`திராவிடம்` என்பது உண்மையில் தமிழினைக் குறிக்கும் ஒரு திசைச் சொல்லாகும். எளிமையாகச் சொன்னால் தமிழினை ஆங்கிலத்தில் `தமிழ்` என ஒலிக்க முடியாமல் `Tamil  ` என்கின்றோம் அல்லவா, அது போன்று தமிழ் குறித்த ஒரு திசைச் சொல்லே திராவிடமுமாகும்.  `தமிழ்`என்பது ஒரு இயல்புச் சொல் (Endonym ) , அது குறித்த ஒரு திசைச் சொல்லே  (Exonym  ) `திராவிடம்` என்பதுமாகும். இதோ பாவாணர் குறிப்பிடுகிறார்: “இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” [சான்று: ஒப்பியன் மொழி நூல், பக்கம் 15].

திங்கள், 12 ஜூலை, 2021

எப்படி எங்களுக்கு அவ்வளவு Refund வருகிறது? நல்ல Refund வாங்கித்தருவது குற்றமா?

May be an image of 1 person
May be a cartoon of 1 person and text that says 'S TAX RETURN 5'

Karthikeyan Fastura :  Intaxsevaவில் சில வாடிக்கையாளர்களின் ஒரு கேள்வி ரெம்ப Wierd ஆக இருக்கும். " எப்படி சார் எங்களுக்கு அவ்வளவு Refund வருகிறது ?
இதில் ஏதும் தப்பு இல்லையே..? "
(நல்ல Refund வாங்கித்தருவது குத்தமாயா..?
அரசே இதை Tax RETURNS fling என்று தான் சொல்கிறது)
எங்களோட பதில் :  அது நீங்கள் வரியாக கட்டிய உங்களுடைய பணம்.
இதுவரை முறையாக தாக்கல் செய்திருக்க மாட்டீர்கள். income tax தளம் கொடுத்திருக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திருக்க மாட்டீர்கள். உங்கள் நிறுவனங்கள் 80C தவிர சில செக்சன்களை முயற்சித்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவை ஒவ்வொருசமயமும் மாறிக்கொண்டே இருப்பவை. ஆனால் அவற்றிற்கெல்லாம் எந்த தரவுகளும் வைக்க வேண்டிய அவசியமும் இருக்காது. உதாரணத்திற்கு  உங்கள் பெற்றோருக்கு ஆகும் மருத்துவ செலவீனங்களை 55000 வரை கணக்கில் காட்டலாம். இதற்கான தரவுகள் எதையும் அவர்கள் கேட்பதில்லை. இப்படி நிறைய வழிகள் இருக்கின்றன.

சிபிஎஸ்சி தமிழ் பாட நூலையும் நாங்களே அச்சடிப்போம்! திண்டுக்கல் லியோனி

 மின்னம்பலம் :தமிழ்நாட்டு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரான திண்டுக்கல் லியோனி அண்மையில் நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வரை எதிர்ப்பு தெரிவித்தனர்.
லியோனி முன்பு பட்டிமன்றங்களில் பேசிய சில கருத்துகளை முன் வைத்து, லியோனியை இந்தப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து எந்த பதிலும் அளிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 12) பாடநூல் கல்விப் பணிகள் கழகத் தலைவராக லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று லியோனியை அவரது இருக்கையில் அமரவைத்தார்.

ரஜனி மக்கள் மன்றத்தை கலைத்தார்! அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை .. நற்பணி மன்றமாக மட்டுமே செயல்படும்

May be an image of 1 person and text that says 'னம உண்மைகடனுக்தடம் உறுக்துடா UUT 0557 SANNG அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: ரஜினி வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என்பதால் மக்கள் மன்றம் கலைப்பு கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை'

 மாலைமலர் :மக்கள் மன்றத்தை கலைத்து, இனிவரும் காலங்களில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும். என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

மத்திய அரசுக்கு எதிராக சீறும் நடிகை ரோகிணி. எனக்கு இப்போதுதான் துணிச்சல் வந்திருக்கிறது!

எனக்கு இப்போதுதான் துணிச்சல் வந்திருக்கிறது! - மத்திய அரசுக்கு எதிராக சீறும் நடிகை ரோகிணி
vikatan.com - த.கதிரவன் : எல்லாமே இங்கே பரிணாமம்தான். 10 வருடங்களுக்கு முன்புவரையில், ‘நான் உண்டு; என் வேலை உண்டு’ என்று மட்டுமே இருந்திருக்கிறேன். மத்திய பா.ஜ.க அரசின் சட்டத் திருத்த வரிசையில் சமீபத்திய வரவு... ‘ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு-2021.’ இதன்படி, “மக்களுக்கு ஏற்ற கலைப் படைப்பு எது என்பதை இனி மத்திய அரசே முடிவு செய்யும். மேலும், ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களில்கூட திருத்தம் செய்யவும், படத்தை ஒரேயடியாகத் தடை செய்யவும் முடியும்!’ என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், நடிகையுமான ரோகிணி இந்தப் புதிய சட்டத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்துவருபவர்களில் முக்கியமானவர். நாள் முழுவதும் பிஸியாக இருந்தவரால், இரவு 10 மணிக்கு பிறகே நம்மிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்க முடிந்தது. அவரிடம் பேசியதிலிருந்து...

பெண்களுக்கு இன்று முதல் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு

 Manikandaprabu S | Samayam TamilU : இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கொரோனாவால் மேலும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன
வழித்தடத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்பதை அறிய டிக்கெட் தரப்படுவதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது
20,000 பேருக்கு மேல இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா? நீங்களே பாருங்க
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கொரோனா நிவாராணம் ரூ.4000, ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து
பயணம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களை தொடங்கும் கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.

ஆந்திராவுக்கு 11.5 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது :

(file video) .hindutamil.in :  வாணியம்பாடி மற்றும் குடியாத்தம் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 11.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் 2 பேரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திரா மாநிலத்துக்கு டன் கணக்கில் கடத்தப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினர் குடியாத்தம் மற்றும் வாணியம்பாடி பகுதி களில் கடந்த சில நாட்களாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்றாம் பள்ளி அடுத்த பச்சூர் கூட்டுச் சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தபோது, அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை யிட்டதில், அதில் 2.5 டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்திச்செல்வது தெரிய வந்தது.

தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு ஒன்றிய அரசின் சான்று கட்டாயம்!

 நக்கீரன் செய்திப்பிரிவு :  "தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் 'Fit India Movement' சான்று கட்டாயம்.
 www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்றிதழ் பெற வேண்டும்.
மிகக் குறைந்தப் பள்ளிகளே பதிவு செய்துள்ள நிலையில் இது ஏற்புடையதல்ல.
பள்ளிகள் ஜூலை 20- ஆம் தேதிக்குள் பதிவு செய்து 'Fit India Movement' சான்று பெற்றாக வேண்டும்.
பள்ளிகள் சான்று பெறுவதைக் கண்காணித்து அறிக்கைத் தர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு அனுப்பியதை விட கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் தடுப்பூசி”:அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj :  “ஒன்றிய அரசு அனுப்பிய தடுப்பூசியை விட கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என திண்டுக்கல்லில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக குழந்தைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டை திறந்து வைத்தும்,
குழந்தைகளுக்கான புதிதாக வாங்கப்பட்ட இன்குபேட்டரை பார்வையிட்டும், திருநங்கைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “கொரோனா மூன்றாவது அலை வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 11 ஜூலை, 2021

எம்.ஏ. ஆங்கிலம் படித்த தலித் பெண் தற்கொலை! ஆதிக்க ஜாதி இளைஞர்களால் தொடர் பாலியல் துன்புறுத்தல்


 Vincent Raj 
ஆதிக்கசாதி இளைஞர்களால் தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தல்
மனமுடைந்த எம்.ஏ. ஆங்கிலம் படித்த தலித் பெண் தற்கொலை
இறந்து போன பெண்ணின் மீது அவதூறு பரப்பிய பிரபல தமிழ் நாளிதழ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
தஞ்சாவூர், பேராவூரணி தாலுகா, திருச்சிற்றம்பலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆவணம் கிராமத்தில் வசித்து வந்த 26 வயது தலித் பெண்,
கடந்த 03.07.2021 அன்று இரவு சுமார் 7.00 மணியளவில் தூக்கிட்டு இறந்து போயுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் இறந்து போன பெண்ணுக்கு 3 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக தமிழகத்தின் முக்கிய தமிழ் நாளிதழ் ஒன்று புகைப்படத்துடன் மாநில அளவில் செய்தி வெளியிட்டிருந்தது. பத்திரிகைகளின் பொய்ச்செய்தி

5 சவரன் நகை கடன் தள்ளுபடி ; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு?

5 சவரன் நகை கடன் தள்ளுபடி - விரைவில் அரசாணை - YouTube

தினமலர் : சென்னை : கூட்டுறவு வங்கிகளில், நகை கடன் வாங்கியவர்களிடம் இருந்து 'ஆதார்' எண் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் வாங்கி வருகின்றனர்.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், குறைந்த வட்டியில் தங்க நகை அடமான கடன்களை வழங்குகின்றன.
தேர்தல் வாக்குறுதி : அவை 2011 முதல் 2020 டிச., வரை, 6.60 கோடி பேருக்கு 2.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, நகை கடன் வழங்கியுள்ளன. சட்டசபை தேர்தலின் போது தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியாக, 'கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.இதன்படி, தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டிற்கு வருகை கூடவே அமைச்சர் துரைமுருகன்! சமாதானமாயிட்டாங்களா? திருப்பம் வருமா?

Shyamsundar - tamil.oneindia.com :  சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜய்காந்த்தை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பில் நடந்த சம்பவம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுகவினர், தேமுதிகவினர் இடையே இந்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜயகாந்தின் வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அதோடு தேமுதிக சார்பாக விஜயகாந்த ரூ. 10 லட்சம் கொரோனா நிவாரண நிதியும் வழங்கினார்.
சில நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் விஜயகாந்தின் சமீபத்திய சிகிச்சைகள் குறித்தும், தேமுதிக கட்சி குறித்தும், ஸ்டாலின் விசாரித்ததாக கூறப்படுகிறது
இந்த சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடன் இருந்தார். முன்னதாக கடந்த லோக்சபா தேர்தலின் போது துரைமுருகன் மற்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துரைமுருகனும், பிரேமலதாவும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர்.

காங்கிரசுக்கு தாவத்துடிக்கும் தமாக வாசன் கேங்

தேர்தலில் நின்றதாக வரலாறு இல்லை... ஆனாலும் மீண்டும் மீண்டும் எம்.பி.யாகும்  வாசன் | There is no history that gk vasan contest for election - Tamil  Oneindia

மின்னம்பலம் :நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரசின் பல்வேறு நிர்வாகிகள் காங்கிரஸுக்கும் வெவ்வேறு கட்சிகளுக்கும் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வாரத்தில் இருந்து மாவட்டம் தோறும் பயணம் மேற் கொண்டிருக்கிறார்.வாசன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் 12 தொகுதிகள் கேட்டார்.
ஆனால் அதிமுகவோ வெறும் 6 தொகுதிகள்தான் கொடுத்தது.
அதுவும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே நிற்க வேண்டும் என்று நிர்பந்தமும் செய்தது. அதுவும் தமாகாவுக்கு வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளாகவே அந்த ஆறு தொகுதிகளும் இருந்தன. இதெல்லாம் தமாகா நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது.

புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிக்கு 13 துறைகள்..

 மாலைமலர் :அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை, மின்துறை, கல்வி, தொழில் மற்றும் வர்த்தகம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மற்றும் சைனிக் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இலாகா ஒதுக்கீடு குறித்த பட்டியலை ஆளுநரிடம் வழங்கிய முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் தொடர்பான பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம்  முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார்.
ஆளுநர் ஒப்புதலையடுத்து அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டது.
முதல்வர் ரங்கசாமிக்கு கூட்டுறவுத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை, துறைமுகம், அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் மற்றும் விளம்பரம் உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஈழ ஏதிலியர்களின் உரிமைகளுக்காக யார் பேசுவது? அவர்களின் குரல் கேட்கப்படுவதில்லை ?

ந. சரவணன்  : ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் (ORGANIZATION FOR EZHAM REFUGEES REHABILITATION - OFERR) எனும் அமைப்பு தமிழக வாழ் இலங்கை  அகதி மக்களுக்கு செய்த பணிகள் அளப்பறியது.
பல்வேறு பன்னாட்டு தொண்டு நிறுவனகளுடன் இணைந்து மருத்துவம், சுகாதாரம், கல்வி போன்ற அடைப்படை தேவைகளை  மிகுந்த அக்கரையோடு  கணிவுடன் நிவர்த்தி செய்தமை பாராட்டுக்குறியது.ஆனால்.....
தமிழக வாழ் இலங்கை அகதி மக்களின்  சார்பாக ஒரு  தலைமைக்கான  எந்த ஒரு தேர்தலும் நடக்கவில்லை, யாரும் தலைமையேற்கவுமில்லை,
எந்த ஒரு சூழ் நிலையிலும் அகதி மக்கள் ஒன்றிணைந்து, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் எனும்  நிறுவனம் எங்களது பிரதி நிதியாக இருந்து எங்கள் சார்பாக எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யலாம் எனவோ, தேவைகளினடைப்படைகளில்  எங்களுக்காக மற்றவர்களிடம் எங்கள் அனுமதியின்றி இந்நிறுவனம்  வாக்குறுதிகளை வழங்கலாம் என்றோ,
நாங்கள் இங்கு அகதியாகவே இருப்பது, அல்லது நாங்கள் தாயகம் திரும்புவது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்பதுப போன்றோ,
எந்தவித உத்திரவாதத்தையும் யாரும் வழங்கி விட வில்லை.

உத்தரப் பிரதேசம்: இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, சலுகைகள் ரத்து – புதிய சட்டம்

BBC : உத்தரப் பிரதேச மாநிலம் புதிய மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் நலச் சட்டம் 2021 குறித்து, பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் அரசு சலுகை போன்றவற்றை ரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தின் சட்ட ஆணையம் ‘உத்தரப் பிரதேச மக்கள் தொகை கட்டுப்பாடு, நிலைப்படுத்தல் மற்றும் நலச் சட்டம் 2021’-ன் முதல் முன்வரைவை வெளியிட்டு இருக்கிறது. இம் மாதம் 19ஆம் தேதிவரை இந்த சட்டம் தொடர்பான கருத்துக்களை சமர்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
“மாநில சட்ட ஆணையம் உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சில திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறது. இரண்டு குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு அனைத்து அரசு சலுகைகளும் வழங்க பரிந்துரைத்திருக்கிறோம். அவர்களால் அரசின் அனைத்து நலத்திட்ட சலுகைகளையும் பெற முடியும்” என ஏ.என்.ஐ முகமையிடம் கூறியுள்ளார் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் ஆதித்யநாத் மித்தல்.

போயஸ்கார்டனில் ஜெயலலிதா ஏன் மயங்கி விழுந்தார்? அப்பல்லோவில் நடந்தது என்ன? ... சசிகலா!

ibc tamil :அதிமுகவில் அம்மா என்று ஜெயலலிதாவை அழைத்ததற்கு அடுத்தபடியாக சின்னம்மா என்று அழைக்கப்பட்டவர்தான் சசிகலா. அந்த அளவிற்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் உடன்பிறவா சகோதரிகளாக இருவரும் இணைந்து இருந்து வந்தார்கள். ஜெயலலிதா இருக்கும் வரை அக்கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. எந்த சலசலப்பும் இல்லை.ஆனால், ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகுதான் அதிமுகவில் பெரும் சர்ச்சையும், சலசலப்பும் பூகம்பமாக வெடித்தது. இந்த குளறுபடிகளால்தான் சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு தலைமை ஏற்க போவதாக அதிமுகவினரிடையே ஆடியோவில் பேசிக் கொண்டு வருகிறார். இந்நிலையில், சசிகலா ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா பேசியுள்ள அந்த பேட்டியில், சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையிலான உறவு குறித்தும், ஜெயலலிதாவுடன் இருந்து வந்த அரசியல் அனுபவங்கள் குறித்தும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த இறுதி நாட்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

திண்டுக்கல் திரு. I. லியோனி M Sc (Physics), M phill, B Ed

May be an image of 1 person and text that says 'BREAKING NEWS SUN /NES 다” தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராகிறார் ஐ.லியோனி தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்!'

Kandasamy Mariyappan  : திரையில் பார்ப்பதை, உண்மை என்று நம்பக்கூடிய உளவியல் குறைபாடு மக்களிடத்தில் உள்ளது.!
மிகச்சிறந்த அய்யப்ப பக்தரான திரு. MN. நம்பியார் அவர்கள் சினிமாவில் வில்லனாக நடித்ததால்.., உண்மை வாழ்க்கையிலும் அவர் அப்படித்தான் என்று நம்புகிறோம்.!
அதேவேளையில் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த திரு. எம்.ஜி. ராமச்சந்திரன், சினிமாவில் ஹீரோவாக நடித்ததால்.., நல்லவர் என்றும் கடவுள் என்றும் நம்பி விடுகிறோம்.!
அதேபோன்று திண்டுக்கல் I. லியோனி அவர்களை காமெடி கலந்த பேச்சாளராக, பட்டிமன்ற நடுவராக பார்த்துப் பழகியதால்.., உண்மை வாழ்க்கையிலும் அவர் படிக்காத காமெடியனாக பார்க்கின்றனர்.!
உண்மையில் அவர், M Sc (Physics), M phill, B Ed படித்த அறிவியல் ஆசிரியர்.! மிக எளிதாக மாணவர்களுக்கு புரியக்கூடிய அளவில் பாடம் நடத்துபவர்.
இவற்றுக்கெல்லாம் மேலாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த, மக்களின் தேவையை, தமிழ்நாட்டின் தேவையை உணர்ந்த, புரிந்த, இடதுசாரி சிந்தனையாளர்.!

தாய், தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

parents incident childrens tamilnadu government
nakkheeran.in - பகத்சிங் :ஒரே நாளில் இரண்டு குடும்பங்களில் பெற்றோரை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் 5 குழந்தைகள் அரசு உதவிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் வடக்கு தொண்டைமான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு வயது 50. இவர் மர வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கலையரசி, கடந்த 2013-ஆம் ஆண்டு விட்டு இறந்துவிட்டார். அதன் பிறகு தனது ஒரு பெண் குழந்தை மற்றும் கோபிநாத் (வயது 17) வீரகபிலன் (வயது 15) ஆகியோரை தந்தை சிவராஜ் வளர்த்து வந்தார்.மகள் அரசு கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வரும் நிலையில், கடந்த ஜூலை 6- ஆம் தேதி தனது பிள்ளைகள் ஆதரவில்லாமல் தவிப்பார்கள் என்பதைக் கூட நினைக்காமல் சிவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்போது ஒரு பெண் மற்றும் 2 சிறுவர்களும் (அதில் ஒருவருக்கு மனநிலை சரியில்லை) மனநலம், கண்பார்வை பாதிக்கப்பட்ட நடக்க முடியாத 80 வயது பாட்டியுடன் பாதுகாப்பு இல்லாத பழைய உடைந்த வீட்டில் வசித்து வருகின்றன. 

Sulli Deals: முஸ்லிம் பெண்களை விற்க உருவாக்கப்பட்ட ஓப்பன் சோர்ஸ் செயலியால் அதிர்ச்சி

Sulli Deals

BBC : கீர்த்தி துபே - பிபிசி செய்தியாளர் : "சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணை கேலி செய்வது மக்களுக்கு எளிதான விஷயம். இந்த கேலி பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியதாக இருக்கிறது. ஆனால் முஸ்லிம் பெண்களை துன்புறுத்துவதற்காக கீழ்மையின் அனைத்து வரம்புகளும் உடைக்கப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது. சில சமயங்களில் நான் ஏன் சமூக ஊடகங்களில் இருக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பிக்கிறேன். நான் பேசுவதையும் எழுதுவதையும் நிறுத்திவிடவேண்டுமா?

எங்களை சாடும் வசவு சொற்கள், பெண்மையின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இஸ்லாமுக்கு எதிரான அச்சுறுத்தலும் கூட."

இதை நஸ்ரின் (பெயர் மாற்றப்பட்டது) கூறும்போது, அவருடைய குரலில் பயத்தை விட கோபமே அதிகம் தெரிகிறது.

கொங்குநாடு - சங்கிகளின் சதி

May be an image of map and text

Raja Rajendran : "கொங்குநாடு - சங்கிகளின் சதி" -1
[இந்த அரசியலை உடைக்க விரும்புவோர் மட்டும் தயவுசெய்து முழுமையாக நிறைவுவார்த்தை வரை படிக்கவும்]
2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தூசிதட்டி எடுத்துப் பார்த்தால் "கொங்கு நாடு" சங்கிகளின் சதி நிர்மூலம் ஆகும்.
அனைவரும் பொதுபுத்தியில் நம்புவது போல கொங்குநாடு என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதிகமில்லை என்பது அம்பலமாகும்.
"கொங்கு நாடு" என்றும் அந்தப் பகுதியில் திமுக முழுக்க வாஷ் அவுட் என்றும் முதல்வருக்கு தரப்படுகிற செய்தியினை அவர் அவ்வாறே நம்பக்கூடாது.
(அனைவரும் கவனிக்க.)
கடந்த நான்கு ஆண்டுகள் அடிமைகள் ஆட்சியில் அந்த அரசு
சாக்கடை காண்ட்ராக்ட் முதல் எல்லாவிதமான காண்ட்ராக்களிலும் ஈடுபடுத்திய 'ஜாதி' அஜெண்ட்டாதான் சங்கிகளின் "கொங்கு நாடு" அரசியலின் மூலம்.
எனவே அடிமை வகையறாக்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் அனைத்துவித காண்ட்ராக்களையும் கொடுத்து கணக்கு வழக்கில்லாது அளவில்லாத ஊழல் பணத்தில் குளிக்கும்படி செய்தனர்.
இந்த நான்கு ஆண்டுகளில் குவிந்துள்ள தவறான காண்ட்ராக்களால் பணமலைக் குவியல்கள் அவர்களிடம் உள்ளது.