சனி, 9 மார்ச், 2019

தப்பியோடிய நிரவ் மோடி லண்டனில் சொகுசு வாழ்க்கை! - வீடியோ


ndtv.com : பிங்க் நிற சட்டையும் அதற்கு மேல் கருப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்து சென்ற நிரவ் மோடியை பார்த்த டெலிகிராப் நிருபர் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினார், எதற்கும் பதிலளிக்காமல் மெளனம் காத்து சென்றார் நிரவ் மோடி. தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோடி லண்டன் சாலையில் நடந்து சென்றபோது காணப்பட்டார்.<தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டன் நகரில் இருப்பதாகவும் அங்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை நேரில் பார்த்த பிரிட்டனில் உள்ள தி டெலிகிராப் நாளிழிதழ் நிருபர் அவரிடம் கேள்விகள் எழுப்பியபோது அவர் பதிலளிக்காமல் சென்றுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ ஒன்றை டெலிகிராப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், நிரவ் மோடியிடம் அந்த நிருபர் தொடர்ந்து கேள்விகள் எழுப்புகிறார். எவ்வளவு நாள் லண்டனில் இருக்க திட்டமிட்டுள்ளீர்கள் போன்ற கேள்விகளை 6 முறையாவது அவர் கேட்டிருப்பார். எனினும் எதற்கும் அவர் பதிலளிக்காமல் அமைதியாக சென்றுவிட்டார்.

வைரப்பெண் ஜெயலலிதாவின் வைரங்களை எப்படி பணமாக மாற்றினார்கள்? .over one lakh carat of +11 diamond

ரவி பாடகலிங்கம் : ஜெயலலிதா கொஞ்ச நஞ்சமல்ல 11000 கோடிக்கு
வைரத்தை சூரத் வியாபாரிகளிடம் வாங்கியிருக்கிறார்.எப்போது என்றால் பண மதிப்பிழப்பிற்கு பின்பு நாம பிச்சைக்காரன் மாதிரி ATM வாசலில் நிற்கும் போது.
இப்ப வைரம் மேட்டர் ஏன் வெளியில் வந்திருக்குன்னா ஜெயலலிதா இறந்தப் பிறகு அந்த வைரங்களை சார்ந்தோர் வைர மார்க்கெட்ல வித்து காசாக்கிய போது சூரத் வைர மார்க்கெட் 30% வீழ்ச்சியடைந்து ஸ்தம்பித்ததாம்.
11000 ஆயிரம் கோடி வைரம், கண்டெய்னர் லாரி பணம், 2000 கோடி தியேட்டர் மால் அப்பப்பா சூறையாடியிருக்காங்க. எல்லாம் நம்ம காசு. Prices of the +11 diamond size manufactured by the small and medium diamantaires in the Surat world’s largest diamond cutting and polishing centre has crashed by nearly 30% in the last two days after the diamond brokers in Mumbai in Tamil Nadu. 
Market sources alleged that more than two lakh carats of +11 diamonds was purchased by late former chief minister of Tamil Nadu, J Jayalalitha from Mumbai’s diamond market during the demonetisation. The huge purchase by Tamil Nadu’s heavy weight politician was made by select diamond brokers and companies in Mumbai in 2016, immediately after demonetisation was announced by the Centre.

தமிழகத்தை மிரட்டும் வட இந்தியவாக்கு வங்கி...தயங்கும் தமிழக வேட்பாளர்கள்!

ஈரோட்டிலும் வடஇந்தியர்கள் நிறைந்து விட்டார்கள்”
tamil.thehindu.com- கா.சு.வேலாயுதன் : “மோடியை நேசிக்கும் வட இந்தியர்களின் வாக்கு வங்கி அதிகரித்து இருப்பதால் ஈரோடு, திருப்பூர்
தொகுதிகளில் களமிறங்க திமுக, காங்கிரஸ் கட்சியின் விஐபி வேட்பாளர்களே தயக்கம் காட்டுகிறார்கள்” கொங்கு தேசத்தில் இப்படியொரு பேச்சு பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
திருப்பூர் மக்களவை தொகுதியைப் பொறுத்தவரை நகர்புற தொகுதிகளில் டெக்ஸ்டைல், பனியன், சாயத் தொழிலுக்கு பெயர் பெற்றது. இங்கெல்லாம் உள்ளூர்காரர்களை விட வெளியூர் மக்களே அதிகம் வசிக்கிறார்கள். அதிலும், கடந்த இருபது வருடங்களில் பிஹார், உபி, மணிப்பூர், ஒடிசா, அஸ்ஸாம், மணிப்பூர் என  வெளி மாநிலங்களில் இருந்து வந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. . இவர்களில் பெரும்பாலானவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தும் பெற்று திருப்பூர் வாசிகளாகவே மாறி விட்டனர். இப்படி வந்தவர்களின் வாக்கு மட்டுமே ஒரு லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள்.

மீண்டும் பிரேமலதா அதிமுகவுக்கு தூது!. தினகரன் கைவிரிப்பு;..

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை:  தினகரன் கைவிரிப்பு; மீண்டும் பிரேமலதா அதிமுகவுக்கு  தூது!“தேமுதிக விஷயத்தில் எடப்பாடி தொடர்ந்து பிடி கொடுக்காமலேயே இருக்கிறார். திமுக, அதிமுக இரண்டும் கழுத்தறுத்துவிட்டது என்ற நிலையில் தேமுதிக மாநிலச் செயலாளர் சுதீஷ் அமமுக தரப்பில் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வனிடம் பேசியதையும், அதற்கு தினகரன், ‘சரி பேசுவோம்’ என்று பதில் அளித்திருந்ததையும் நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் தெரிவித்திருந்தேன். நேற்று இரவே தினகரன் தனது பதிலை தேமுதிகவுக்குத் தெரிவித்துவிட்டாராம்.
‘எங்களோட தனிப்பட்ட பலம் என்னங்குறதை தெரிஞ்சுக்கறதுக்காகவே தனியா போட்டியிடலாம்னு இருக்கோம். அதனால கூட்டணி பத்தி நாங்க நினைக்கவே இல்லை’ என்று தினகரன் தரப்பில் இருந்து சுதீஷிடம் சொல்லிவிட்டார்களாம். அதனால், தேமுதிக இப்போது வேறு வழியின்றி அதிமுகவிடமே திரும்பியிருக்கிறது.

கலைஞரோடு ஊடகவியலாளர்கள் ... ஒரு நிருபரின் நேரடி அனுபவங்கள்

LR Jagadheesan : அது ஒரு கனாக்காலம். யாரையும் எளிதில் அணுக முடிந்த,
யாரிடமும் எதையும் கேட்க முடிந்த, எல்லாவற்றையும் எழுத்தால் மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை நிரம்பியிருந்த காலம்.
செய்தியாளருக்கான தமிழக அரசின் இலவச பேருந்து பாஸில் பல்லவனில் பயணித்த; செய்தியாளர் சந்திப்பு முடிந்தபின் அருகில் இருக்கும் டீக்கடையில் அரட்டை அடித்தபடி அரசியலையும் இதழியலையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் துடிப்பும் மிக்க மாணவர்களாக செய்திப்பசியும் வயிற்றுப்பசியும் சேர்ந்து அலைக்கழித்த காலமது.
எங்களுக்கு கைபிடித்து கற்றுக்கொடுக்க இதழியலிலும் அரசியலிலும் நல்ல ஆசிரியர்கள் வாய்த்தது எங்களுக்கு வாய்த்த வரம். 
நாங்கள் அப்படியான ஆசான்களாக இல்லாததும் அரசியலிலும் அத்தகைய ஆளுமைகள் இல்லாததும் இந்த தலைமுறை இளம் செய்தியாளர்கள் சந்திக்கும் சாபம்.
இந்த படங்களில் இருக்கும் சிலர் இன்று உயிரோடில்லை. பலர் பத்திரிக்கைத்துறையிலேயே இல்லை. ஆனால் அவர்களோடு சேர்ந்தலைந்த நினைவுகள், மனம் விட்டு சிரித்த சிரிப்புகள் மல்லுக்கட்டிய தருணங்கள் இறுதிவரை உயிர்ப்போடிருக்கும் இனிய நினைவுகளாக.
நினைத்தமாத்திரத்தில் கண்களை கசியச்செய்யும் எத்தனை எத்தனை நினைவுகள். சம்பவங்கள். சண்டைகள். சமாதானங்கள்.

ஜெயலலிதாவின் 13,000 கோடி பெறுமதியான 2,00,000 காரட் .. மும்பை வைர மார்க்கெட் ஆட்டம் கண்டது ..

SURAT: Prices of the +11 diamond size manufactured by the small and medium diamantaires in the Surat — world’s largest diamond cutting and polishing centre — has crashed by nearly 30% in the last two days after the diamond brokers in Mumbai were flooded with the fresh stocks from few brokers in Tamil Nad
Surat: Prices of +11 diamonds crash after stock from Tamil Nadu flood Mumbai market
V Jeyaganapathi : இனறு மாலை எனக்கு கிடைத்த ஒரு செய்தி, உள்ளபடியே #Demonitisation சமயத்தில் மும்பை சந்தையில் வாங்கியுள்ளார், அன்றைய தமிழக முதல்வர் #ஜெயலலிதா." (ஆதாரம் கடைசியில் உள்ளது.)
என்னை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அது இதுதான், "13,000 கோடி பெருமானமுள்ள 2,00,000 காரட் வைரத்தை திமுக ஆட்சியில் ஊழல், திமுக ஊழல் கட்சி, கலைஞர் ஊழல்வாதி, என்று சொல்லி சொல்லியே கடந்த 40 வருடங்களாக தமிழகத்தை கொள்ளையடித்தது யாரென்று பார்த்தால், #அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, தினகரன் , அதிமுக முன்னாள்/இந்நாள் அமைச்சர்கள், MLA க்கள், MP க்கள், முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை இவர்கள் தான்.
"வாய் புளித்ததோ மங்காய் புளித்ததோ" என்று சொல்லவில்லை. 30 வருடங்களுக்கு முன்னர் எம்ஜி அமைச்சரவையில் இருந்த #காளிமுத்து 35 லட்சம் அன்றைய கணக்கில் ஊழல் செய்ததாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் தீர்ப்பு வந்தது. பல்கேடியா கப்பல், எரிசாராய ஊழல் என்று எம்ஜி ஆட்சியில் தொடங்கி, விசாரணைக்கு முன்பே அவர் மறைந்து, அதன் பின்னர் வந்த ஜெயலலிதா கொள்ளையடித்து குவித்த சொத்துகளை மீட்க, வழக்கு போட்டு, அவர் தண்டனை பெற்றது வரை, பல பல அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களும் பெற்ற தண்டனைகளும் கண்கண்ட சாட்சிகள்.

ரஃபேல் ஆவணங்களை இன்னும் வெளியிடுவேன் - இந்து என்.ராம் சவால்


editors guild of indianakkheeran.in - athanurchozhan: 'தி ஹிண்டு' நாளிதழ் ரஃபேல் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது குறித்து மத்திய அரசு வழக்கறிஞர் கூறியிருக்கும் கருத்துகள் ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் முயற்சி என்றும், 1923 ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அரசு ரகசிய காப்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
“ஊடகங்களுக்கு எதிராக அரசு ரகசியக் காப்பு சட்டத்தை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கதுடன் பத்திரிகையாளர்கள் தங்களுக்கு செய்தி கொடுப்பவர்களை காட்டிக்கொடுக்கும்படி கேட்பதாகும். இத்தகைய மிரட்டல்கள் ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்துவதுடன், ரஃபேல் விமான பேரம் தொடர்பான செய்திகளை வெளியிடும் சுதந்திரத்தையும் அது தொடர்பான விமர்சனங்களையும் தடுக்கும் முயற்சியாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதில் இருந்து அரசு விலகியிருக்க வேண்டும்” என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.

கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ... வீடியோ


மாலைமலர் : அதிமுகவில் மீண்டும் கே.சி.பழனிசாமி- ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் இணைந்தார்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.கவின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கூறியதால், அவர் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், கே.சி.பழனிசாமி இன்று அதிமுகவில் இணைந்தார். அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு, கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது<

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும்.... மு.க.ஸ்டாலின் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும்தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும்மு.க.ஸ்டாலின் பேட்டிdailythanthi.com நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
 ஆதரவு கட்சி தலைவர்களுடன் ஆலோசனை< நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. தி.மு.க. 20 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் என சரிபாதியாக போட்டியிட இருக்கின்றன. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்கள், இயக்க தலைவர்கள் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

BBC: பருவநிலை மாற்றம்: பொழியும் மழை, உருகும் பனி - உயரும் கடல் மட்டதால் ஆபத்தில் புவி


டேவிட் ஸ்கூமன் -அறிவியல் ஆசிரியர் : கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால், பனி உருகுவதும் அதிகமாகி உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. ஆர்க்டிக்கின் நீண்ட பனிகாலத்திலும், மழை பொழிவது "ஆச்சரியமாக" இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள், பெரும் அளவிலான உறைந்த நீர் இருக்கும் இடமாகும். இது நெருக்கமான கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அங்கிருக்கும் அனைத்து பனிக்கட்டிகளும் உருகினால், கடல்மட்டம் ஏழு மீட்டர் அளவிற்கு உயரும். இதனால், உலகில் உள்ள கடலோர மக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
காற்றில் உள்ள ஈரப்பதம்தான் மழைக்கு பதிலாக பனியாக பொழிகிறது. இதனால், வெயில் காலத்தில் பனி உருகுவதை இது சமநிலைப்படுத்தும். எந்தெந்த இடங்களில் எல்லாம் பனி உருகுகிறது என்று காண்பிக்கும் செயற்கைக்கோள் படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
மழை பொழிவு பதிவு செய்யப்பட்டபோது, 20 தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளோடு, இந்தப் புகைப்படங்களை சேர்த்தனர்.

அயோத்தி தீர்ப்பு : மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்!

tamil.indianexpress.com :அயோத்தி தீர்ப்பு : அயோத்தி வழக்கு விவகாரத்தில் மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகியது.அயோத்தி நிலப் பிரச்னையை நீதிமன்றம் நியமிக்கும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்தி. இங்குள்ள ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. மார்ச் 5ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம், ‘ராம ஜென்மபூமி – பாபர் மசூதி விவகாரம் என்பது நிலத்தைப் பொறுத்தது அல்ல நம்பிக்கையைப் பொறுத்தது’ என்று கருத்து தெரிவித்தது.

தேமுதிக தினகரன் கட்சியோடு பேச்சு வார்த்தை ...பணமும் தொகுதிகளும் கௌரவமான (?) அளவு தேவையாம் ....


டிஜிட்டல் திண்ணை: பிரேமலதாவுக்கு தைரியம் தந்த தினகரன்மின்னம்பலம் : தேமுதிகவில் நடக்கும் மூவ்களை இன்ச் பை இன்ச் ஆக மின்னம்பலத்தில் எழுதி வருகிறோம். ஏழு சீட்டுகளுக்கும் மேல்
என்பதில் தொடங்கிய தேமுதிக இப்போது எப்படியாவது 4 சீட் கொடுத்தால் போதும் என்ற நிலைமைக்கு இறங்கிவிட்டது. டெல்லிக்கு நேற்று மாலையில் இருந்தே தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார் சுதீஷ். டெல்லியில் இருந்து பேசியவர்களோ, 'எடப்பாடியிடம் பேசிவிட்டு சொல்வதாக சொன்னார்கள். இன்று காலையில் தான் எடப்பாடி தரப்பிடம் டெல்லியில் இருந்து பேசி இருக்கிறார்கள். 'தேமுதிகவில் இருந்து தொடர்ந்து கேட்டுக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எந்த தொகுதி என்பது முக்கியம். இல்லை. 4 சீட்டுக்கு இறங்கி வந்திருக்காங்க. அதைக் கொடுத்துடலாம். கூட்டணியில் அவங்களும் இருந்தால் பலம்தானே...' என சொல்லியிருக்கிறார்கள்.

துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகை ..சுமார் பத்து பேர்கள் .?

துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகை!மின்னம்பலம் : தேமுதிக கூட்டணி தொடர்பாக துரைமுருகன் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காட்பாடியிலுள்ள அவரது இல்லத்தை தேமுதிகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டணி தொடர்பாக நேற்று முன்தினம் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்திவந்த அதே நேரத்தில், சென்னை கோட்டூர்புரத்திலுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்துக்கு இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் வருகை தந்தனர். இருவரும் கூட்டணி தொடர்பாக பேச வந்ததாகவும் ஆனால் எங்களிடம் சீட் இல்லையென கூறிவிட்டதாகவும், இதுதொடர்பாக சுதீஷும் தன்னிடம் போனில் பேசியதாகவும் துரைமுருகன் பேட்டியளித்தார்.

சந்திரகுமார் : கலைஞரை பார்க்க விஜயகாந்தை ஸ்டாலின் அனுமதிக்கவில்லை என்று பிரேமலதா கூறுவது தவறானது

சந்திரகுமார் : கீழ்த்தரமான அரசியல்வாதியாக மாறிவிட்டார் பிரேமலதா. அப்புறம், திமுகவையும், திமுகவினரையும் தரக்குறைவாக கடுமையாக விமர்சிக்கிறார். நானும் ஒருகாலத்தில் தேமுதிகவில் இருந்தவன். அப்படி இருந்தும் சொல்கிறேன். அதைவிட தரங்கெட்ட வார்த்தையில் தேமுதிக என்பதற்கு ஆபாசமாக, அறுவறுக்கத்தக்க வார்த்தையில் அர்த்தம் சொல்ல முடியும். ஆனால், ஒரு அரசியல் இயக்கத்தை பற்றி அப்படியெல்லாம் அநாகரீகமாக பேசக்கூடாது.
THE HINDU TAMIL : பத்திரிகையாளர்களை ஒருமையில் அழைத்துப் பிரேமலதா விஜயகாந்த் பேசியது கடும் விமர்சனங்களுக்கு  ஆட்பட்டு வரும் நிலையில் முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ.வும் தற்போது திமுகவில் இருப்பவருமான சந்திரகுமார், பிரேமலதா விஜயகாந்த் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார் கூறியதாவது:
வன்மையாக நான் கண்டிக்கிறேன். பத்திரிகையாளர்களை அழைத்தால் என்ன விஷயமோ அதைக் கூற வேண்டும்.  அதைவிடுத்து ஏதோ பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் அவர் பேசுவதும் அங்கு கைதட்டிச் சிரிப்பதும் பத்திரிகையாளர்களை கேவலப்படுத்துவதாகும்.
அவர் கூறியதிலேயே அதிர்ச்சியானது எதுவெனில், ‘தலைவர் கருணாநிதியை பார்க்க நாங்கள் அனுமதி கேட்டோம் ஆனால் ஸ்டாலின் மறுத்துவிட்டதாக அவர் கூறினார். ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறிவருகிறார்.  மருத்துவமனையில் கருணாநிதியைப் பார்க்க வேண்டும் என்று இவர்கள் கேட்கவே இல்லை. ஏனெனில் அன்றைக்கு விஜயகாந்த் உடல்நிலை நேரில் வந்து பார்க்கும் நிலையில் இல்லை. இதுதான் உண்மை.

வெள்ளி, 8 மார்ச், 2019

முகிலன் மீண்டும் ரயில் நிலையத்துக்குள் எதற்காக நுழைந்தார் புதிய சிசிடிவி வீடியோ

வெடித்த பிரச்சனை tamil.oneindia.com - hemavandhana : சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீண்டும் நுழையும் சிசிடிவி காட்சி கிடைத்துள்ளது.
மணல் கொள்ளை, ஜல்லிக்கட்டு, அணுஉலைக்கு எதிர்ப்பு போராட்டம் போன்ற போராட்டங்களை முன்னெடுத்தவர் முகிலன்... கார்பரேட் கம்பெனிக்கு எதிரான போராட்டங்களையும் நடத்தி வருபவர்.. இதனால் போலீஸ் தடியடி.. வழக்குகள் பதிவு... குண்டர் சட்டம்.. இன்னும் எத்தனை எத்தனையோ இவர் மீது திணித்து கொண்டிருந்தாலும் இந்த நிமிடம் வரை ஒலித்து கொண்டிருப்பது முகிலனின் பெயர்தான்!
கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு திட்டமிட்டுதான் நடத்தப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார். ஆனால் அப்போதே தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையும் அங்கு பதிவிட்டார்.

பிரேமலதா செய்தியாளர்களை தரக்குறைவாக .. நீ வா போ ... ... வீடியோ


.dinakaran.com/ கூட்டணி சேர முடியாததால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விரக்தி : செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா அநாகரீக பேச்சு
சென்னை : எந்த கூட்டணியிலும் சேர முடியாத நிலையில் உள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா அது குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களை ஒருமையில் பேசி, அநாகரீகமாக நடந்து கொண்டதிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தனது சகோதரர் சுதீஷுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதாவிடம் கூட்டணி தொடர்பாக சரமாரி கேள்வி எழுபப்பட்டது. இதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பிரேமலதா, கேள்வி கேட்டவர்களை ஒருமையில் பேசியதற்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

லக்னோவில் காஷ்மீரிகள் மீது இந்துத்வாக்கள் தாக்குதல் வீடியோ


.ndtv.com- esakki"> லக்னோவின் பரபரப்பான சாலையில் 2 காஷ்மீரி பழ விற்பனையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.>உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவின், பரபரப்பான சாலையில் பழ விற்பனை செய்து விந்த 2 காஷ்மீரிகளை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம், லக்னோவில் நேற்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றுள்ளது. 2 காஷ்மீரிகளை தாக்கும் அந்த வலதுசாரி குழுவினர், அவர்கள் காஷ்மீர்கள் என்பதாலே தாக்குகிறோம் என்று கூறுகின்றனர். இவை அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவில், காவி உடை அணிந்த 2 பேர், சாலையின் ஓரமாக அமர்ந்திருந்த 2 காஷ்மீரி பழ விற்பனையாளர்களை கட்டையால் கடுமையாக தாக்குகின்றனர். மற்றொரு வீடியோவில் அடி வாங்கும் நபர் தனது தலையில் கையை வைத்து தடுத்து தாக்குதல் காரர்களிடம் அடிப்பதை நிறுத்தமாறு கெஞ்சுகிறார்.

பாமக வேட்பாளர்கள் பட்டியல் ... சௌமியா தருமபுரி.விழுப்புரம் வடிவேல்.....

Soumiya anbumani will be participate at dharmaburi PMK Listதர்மபுரி - சவுமியா அன்புமணி
விழுப்புரம் - வடிவேல் இராவணன்
திண்டுக்கல் - திலகபாமா
 கடலூர் - டாக்டர். கோவிந்தசாமி
ஶ்ரீபெரும்புதூர் - டாக்டர் வைத்தியலிங்கம்
அரக்கோணம் - ஏ.கே. மூர்த்தி
ஆரணி - அன்புமணி ராமதாஸ்
tamil.asianetnews.com- sathish-k :பிஜேபி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக ஏழு கித்தொகுதிகளை வாங்கியதுமில்லாமல், எந்தெந்த தொகுதியில் நிற்பது யார் யாரை வேட்பாளராக நிறுத்துவது என களத்தில் குதித்து வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இதில் இன்னும் கூட்டணியே யாருடன் என்று தெரியாமல் தேமுதிக, தமாகா குழப்பத்தில் இருக்கும் நிலையில் பாமக வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
பிஜேபி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக ஏழு கித்தொகுதிகளை வாங்கியதுமில்லாமல், எந்தெந்த தொகுதியில் நிற்பது யார் யாரை வேட்பாளராக நிறுத்துவது என களத்தில் குதித்து வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இதில் இன்னும் கூட்டணியே யாருடன் என்று தெரியாமல் தேமுதிக, தமாகா குழப்பத்தில் இருக்கும் நிலையில் பாமக வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

பனிமலர் மீது வழக்கு .. நடிகர் வடிவேலுவின் .. அல்ல அல்ல இந்துக்களின் மனதை புண்படுத்தினாராம்

Devi Somasundaram :சிவராத்திரி ஈஷா யோகா தியான மண்டப நிகழ்வ ஒட்டி வடிவேல் முகத்தை
போட்டோ ஷாப் செய்து வெளியிட பட்ட படத்தை தோழர் பனி மலர் பன்னீர்செல்வம் பகிர்ந்து இருந்தார் ,
அது இந்துக்கள் மனதை புண்படுத்துவதா அவர் மேல வழக்கு போட்டு இருக்கிறார்களாம்..
இந்த வழக்கு நிக்காதுன்னு கேஸ் போட்ட வக்கிலுக்கே தெரியும். அப்றம் ஏன் போடுகிறார்..
இதே படத்தை நான் , சவுக்கு சஙகர் அண்ணன் உட்பட பலர் போஸ்ட் செய்திருந்தோம் .ஏன் சவுக்கு மேல, என் கேஸ் தர படல .(.சரி என்னை விடுங்க , நான் எப்ப வம்பு வரும்னு எப்பவும் கம்போட நிக்றவ சவுக்கு போஸ்டர் பாத்து இந்துக்கள் மனது புண்படலன்னா பனி மலர் போஸ்ட் பாத்து மட்டும் புண்பட்டுச்சா ..
இதென்ன பார்ஷியல் புண்ணு .
இவர்களுக்கு இந்து கடவுள் மேல அக்கறை இருந்தா எல்லார் மேல கேஸ் குடுத்து இருக்கனும்...இவர்கள் பக்தி வெறும் வெளி வேஷம் பனிமலர் பெரியாரிஸ்ட், திமுக ஆதரவாளர் , துணிச்சலான பெண் என்பது இவர்களுக்கு உறுத்திகிட்டே இருக்கு ..

சாரு நிவேதிதா .. எழுத்தாளனுக்கு வருமானமும் இல்லை.. மரியாதையும் இல்லை ?

Charu Nivedita : தமிழ்ச் சமூகத்துக்கும் எழுத்துக்கும் என்றைக்குமே
தகராறுதான். சங்க காலத்தில் புலவர்கள் மன்னர்களிடம் பிச்சை எடுத்த கதையையெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் தெம்பாகத்தான் இருக்கிறது – சரி, உள்ளதுதானே என்று. ஆனால் என் நண்பர்களின் உதவியால் கடந்த பத்து ஆண்டுகளாக நான் அந்தப் பிரச்சினை இல்லாமல் இருந்தேன். இப்போது ஜனவரி முதல் தேதியிலிருந்து பண வரத்து நின்று போனதால் யோசித்துக் கொண்டிருக்கிறேன். பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த போது பல மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. வீட்டு ஓனர் செட்டியார் வந்து பயந்து பயந்து கேட்கிறார். ”அடப் போம் ஐயா, இந்தியாவுக்கு சீக்கிரமே சுதந்திரம் கிடைத்து விடும்; தருகிறேன்” என்கிறார் பாரதி. செட்டியாரும் பின்னாலேயே நகர்ந்து வெளியேறுகிறார். காந்தியின் எதிரே கால் மேல் கால் போட்டு அமர்ந்து மிஸ்டர் காந்தி என்று அழைத்து உங்கள் போராட்டத்தை ஆசீர்வதிக்கிறேன் என்று சொன்னவர் பாரதி. சொல்ல முடிந்தது என்பதுதான் விசேஷம். இந்தக் காலத்தில் கமலை கடவுள் என்று சொல்லிக் கூனிக் குறுகி சலாம் போட்டால் எனக்குப் பணக் கவலை இருக்காது. இந்தக் காலத்திலும் பாரதி போல் வாழ வேண்டும் என்றால் கஷ்டம்தான். பாரதி காலத்தில் கவிஞனை வறுமையும் தரித்திரமும் மட்டுமே துரத்தியது. ஆனால் இப்போது எழுத்தாளன் என்பதற்கான மரியாதையும் இல்லாத காலம்.
இப்படி எழுதுவது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஏனென்றால், என் வாசகர்கள் என்னைக் கொண்டாடுகிறார்கள். நான் மட்டும் அல்ல; எல்லா எழுத்தாளர்களுமே அப்படித்தான். ஆனால் புத்தகம் என்னவோ நூறு பிரதிதானே விற்கிறது?

மன்னார் மனித புதைகுழி 266 எலும்புக் கூடுகள் இந்திய கத்தோலிக்கருடையவை?.. கி.பி. 1400 முதல் 1650 ம் ஆண்டளவில்

Jeevan Prasad : மன்னார் மனித புதைகுழி எலும்புக் கூடுகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பரவா கத்தோலிக்கருடையவை!
(மன்னார் புதைகுழி குறித்து சிங்கள கட்டுரை ஒன்றிலிருந்து)
இன்று கிடைக்கப் பெற்ற அமெரிக்க புளொரிடா இராசாயன கூட அறிக்கை மன்னார் புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் கி.பி. 1400 முதல் 1650 ம் ஆண்டளவில் உள்ளவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்த்துகீசர்கள் தமது ஆட்சி காலத்தின் போது (1505 - 1658) மன்னார் கடலில் முத்தெடுப்பதில் ஈடுபட்டிருந்தனர். அதற்காக இந்தியாவிலிருந்து 'பறவா? (பாண்டியனின் பாரத குல) கத்தோலிக்கர்களை கொண்டு வந்ததாக குறிப்புகள் உள்ளன. இதற்கிடையே கோட்டை இராச்சியத்தின் , சீதாவக இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் யாழ்பாண இராச்சியத்தோடு மிக நெருக்கமான நட்பில் இருந்தார்கள். இன்னொரு புறத்தே யாழ்பாண இராச்சியம், றோமன் கத்தோலிக்க மிசனரி செயல்பாடுகளுக்கு எதிராக இருந்தது. மிசனரியினரது வேலை போர்த்துகீசருடைய தேவைகளை செய்வதாகும். கண்டி இராச்சியத்துக்கு தென் இந்திய யுத்த உதவிகள் யாழ்பாண இராச்சியத்தின் ஊடாக கிடைக்கப் பெற்றமை போர்த்துகீசருக்கு பெரும் பிரச்சனையாக அப்போது இருந்தது.

காங்கிரசில் சேர்கிறார் ஹர்திக் படேல் : மக்களவை தேர்தலில் குஜராத்தில் போட்டி


.ndtv .com : கடந்த 2015-ல் பட்டேல் இனத்தவர் நடத்திய போராட்டத்தை முன்னின்று வழிநடத்திச் சென்றவர் ஹர்திக் படேல். பிற்படுத்த மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் படேல் இனத்தவருக்கும் கிடைக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
கடந்த 2017 சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியை ஹர்திக் ஆதரித்தார். இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் காங்கிரஸ் 81 தொகுதிகளை கைப்பற்றியது. 2014 மக்களவை தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
குஜராத்தில் பட்டேல் சமூகத்தின் இளம் தலைவர் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் மக்களவை தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்... உள்குத்து ஆரம்பம்

tamil.thehindu.com - மு.அப்துல் முத்தலீஃப் : கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக
கூட்டணியில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. இதனால் அதிமுக பலனடைந்தது. அதன் பின்னர் அதன் கள நிலவரத்தைப் புரிந்துண்ட காங்கிரஸ் பின்னர் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் இணைந்தது.
அதனால் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. இதில் கன்னியாகுமரியில் மட்டும் 3 சட்டப்பேரவை தொகுதிகளை காங்கிரஸும், 3 தொகுதிகளை
திமுகவும் வென்றது. அதன் பின்னர் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மற்ற கட்சிகளும் இணைந்தன. திமுக கூட்டணியில் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் தொகுதிகளைத் தேர்வு செய்வதில் அனைத்துக் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் இடங்களில் மற்ற கட்சிகளும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் சிக்கல் நீடிக்கிறது.

வியாழன், 7 மார்ச், 2019

தனியாக தேர்தலை சந்திக்கும் தினகரன், சரத்குமார். சீமான் , கமலஹாசன் ..

மாலைமலர் :திமுக அதிமுக கூட்டணிகளுக்கு எதிராக சரத்குமார் , தினகரன் , சீமான்,  
கமல்ஹாசன்  ஆகியோர் தனித்து களம் காண்கிறார்கள்.
சென்னை: தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன், சீட் கிடைக்காததால் தனித்து போட்டியிடுகிறார்.
புதுவை உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் சீமான் தினகரன் கமல் போன்றோர் விருப்பமனு வாங்கி வருகிறார்.
தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளையும் தொடர்ந்து விமர்சித்து வரும்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரனும் தனியாக களம் காண்கிறார். கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கிவிட்டு மீதி உள்ள 39 தொகுதிகளிலும் தினகரன் தனது கட்சி வேட்பாளர்களையே நிறுத்துகிறார்.
அ.தி.மு.க.வில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் தங்கள் பக்கமே இருக்கிறார்கள் என்று கூறிக்கொள்ளும் தினகரன் இதன்மூலம் தாங்களே வெற்றிபெறுவோம் என்று தொடர்ந்து கூறிவருகிறார்.

கொடுப்பதற்காக கேட்டால் கிடைக்காதது எதுவுமில்லை - ப்ளூம்பெர்க்

Karthikeyan Fastura : சந்தை நிலவரம் குறித்து அறிய ப்ளூம்பெர்க் வெப்சைட்டை
தினமும் பார்ப்போம். ஆனாலும் அது உருவான கதையை பற்றி யோசிக்கவே இல்லை. ஒரு சனிக்கிழமை சந்தை இல்லாத போதும் கைவிரல்கள் பழக்கதோசத்தில் ப்ளூம்பெர்க் சைட்டுக்கு சென்றது. அன்று சனிக்கிழமை என்று நினைவுக்கு வர சிரித்துக்கொண்டேன். அந்த நிறுவனத்தின் அதிபர் மைக்கேல் ப்ளூம்பெர்க் பற்றி படிக்க ஆரம்பித்தேன். வாவ். படிக்க படிக்க அவ்வளவு மகிழ்ச்சி.
மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பிரைட்டன் என்ற ஊரில் மிக சாதாரண ஒரு கணக்கர் உத்தியோகத்தில் இருந்த வில்லியம் ஹென்றி தம்பதியருக்கு பிறந்தார் மைக்கேல். அவர் தாத்தா ரஷ்யாவில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர். மைக்கேல்லின் இளவயது நடுத்தர மக்களின் போராட்டங்களுக்கு மத்தியில் தான் சென்றது. ஆனாலும் நன்றாக படித்தார். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தில் இளங்கலை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்தார். பின்னர் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் MBA படித்தார்.

உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை - கணவர் கைது

உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை - கணவர் கைதுமாலைமலர் : உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி தக்கலை அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- குமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த 1½ வருடத்துக்கு முன்பு திவ்யாவுக்கும், தக்கலை அருகே வெள்ளிகோடு புதுவிளை பகுதியை சேர்ந்த பெர்க்மான்ஸ் மகன் பெல்லார்மினுக்கும் (33) திருமணம் நடந்தது. பெல்லார்மின் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஒரே நாளில் மொத்த மானத்தையும் வாங்கிய பிரேமலதா - சுதீஷ்


வெப்துனியா : நாடாளுமன்ற தேர்தலுக்கான தேமுதிக - அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகமல் இழுபறியில் உள்ளது.
இந்த கூட்டணிக்காக பிரேமலதாவும், சுதிஷூம் செய்யும் செயல்களால் கேப்டன் அப்டெட்டில் உள்ளாராம். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார், கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதாவும், சுதீஷூம் கவனித்து வருகின்றனர். இவர்கள் எடுக்கும் பல முடிவுகளால் தேமுதிக தொண்டர்களே அதிருப்தியில் உள்ளனர். அதிமுகவிடம் 7 தொகுதிகளை கேட்டது தேமுதிக இதற்கு அதிமுக தரப்பு சம்மதிக்காததால், இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த திமுக அவர்களுடன் கூட்டணி குறித்து பேசியது. அதுவும் ஒத்துவராத நிலையில் திமுக, தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என முடிவு செய்து ஒதுங்கியது.
இதன் பின்னரும் அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடுகள் இழுபறியிலேயே பல நாட்களுக்கு நீடித்தது. நேற்று மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் தேமுதிகவின் கூட்டணி குறித்து முடிவு எடுத்துவிட வேண்டும் என அதிமுக உறுதியாக இருந்தது.

நான் ராஜ்யசபாவுக்கு போக வேண்டுமா?: வைகோ

நான் ராஜ்யசபாவுக்கு போக வேண்டுமா?: வைகோமின்னம்பலம் : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் என்று பங்கீடு செய்யப்பட்ட பிறகு மார்ச் 7 ஆம் தேதி மதிமுகவின் பொதுக்குழு நடந்தது.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி ஈரோட்டில் மதிமுக நடந்த நிலையில் இந்த ஆண்டு பொதுக்குழுவை தேர்தலை முன்னிட்டு சென்னையிலேயே நடத்துவது என முடிவானது.
மதிமுகவின் 27-ஆவது பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இன்று (மார்ச் 6) சென்னை அண்ணா நகரிலுள்ள விஜயஸ்ரீ மஹாலில் கூடியது. முதலில் மதிமுக தலைவர்கள் எழுதிய நூல்களின் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதன்பின்பு 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் சிலரே பேசினாலும் அதில் நெல்லை மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் பேசும்போது,

ஈமச்சடங்கு செலவுக்காக கொத்தடிமையான மகன்!

ஈமச்சடங்கு செலவுக்காக கொத்தடிமையான மகன்!மின்னம்பலம் : தஞ்சாவூர் மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை பார்த்துவந்த பத்து வயது சிறுவனை, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மீட்டுள்ளனர் தமிழக அரசு அதிகாரிகள். தந்தையின் ஈமச்சடங்கு செலவுக்கு வாங்கிய கடனுக்காக, அவரது தாயே அந்த சிறுவனைக் கொத்தடிமையாக விற்றது தெரிய வந்துள்ளது.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள சூரப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சூர்யா. 10 வயதான இந்த சிறுவன், 5ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கஜா புயலின்போது மரம் முறிந்து விழுந்ததில், இவரது தந்தை நடராஜ் மரணமடைந்தார். அவரது ஈமச்சடங்கு செலவுக்காக, பொட்டலங்குடியைச் சேர்ந்த மகாலிங்கம் என்ற நிலக்கிழாரிடம் இருந்து 6,000 ரூபாய் பெற்றார் சூர்யாவின் தாய் சித்ரா. ஆனால், அதனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், தன்னுடைய மகன்களில் ஒருவர் அவரிடம் கொத்தடிமையாகப் பணியாற்றச் சம்மதித்தார். அதற்காக, சூர்யா பலிகடா ஆக்கப்பட்டார்.

. தேமுதிக ..இப்போ இருக்கும் சூழ்நிலையில் 2 சீட்டுக்கு மேல் கொடுப்பது கஷ்டம்’.. எடப்பாடிக்கு ராமதாஸ் நெருக்கடி!

டிஜிட்டல் திண்ணை:  விஜயகாந்த் வேண்டாம்- எடப்பாடிக்கு ராமதாஸ் நெருக்கடி!மின்னம்பலம் : “தேமுதிகவின் நிலையை தொடர்ந்து மின்னம்பலத்தில் பதிவு செய்து வருகிறோம். இது லேட்டஸ்ட் அப்டேட். திமுக பக்கம் இனி தேமுதிக போகவே வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ‘என்கிட்ட தனிப்பட்ட முறையில் பேச என்ன இருக்கு? ‘ என்று துரைமுருகன் போட்டு உடைத்துவிட்டார்.
இன்று காலை கே.பி.முனுசாமி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்துப் பேசியிருக்கிறார். பாமகவுடனான கூட்டணிக்காக தொடர்ந்து ராமதாஸோடு பேசிக்கொண்டிருந்தவர் கே.பி.முனுசாமிதான். இப்போதும் அதிமுகவில் இருந்து அவர்தான் ராமதாஸோடு டச்சில் இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று முதல்வரிடம் பேசிய கே.பி.முனுசாமி, ‘நாலு சீட் கொடுக்கிற அளவுக்கு கூட தேமுதிகவுக்கு செல்வாக்கு இல்லை. நாலு நாளைக்கு முன்பு தேமுதிக செல்வாக்கு பற்றி பாமக தரப்பில் இருந்து ஒரு சர்வே எடுத்திருக்காங்க. அதில் தேமுதிகவுக்கு 2 சதவீதம் ஓட்டு கூட இல்லைனு தெளிவாக இருக்கு. அவங்க எடுத்த சர்வே அப்படிதான் இருக்கும்னு நாம சந்தேகப்பட்டா கூட, , அதிகபட்சமாக போனாலும் 3 சதவீதத்தை தாண்டாது. அப்படி இருக்கும் போது அவங்களை இனி நாம தாங்கிப்பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு ஆதரவாக அதிகாரி அசோக் கேம்காவை தூக்கியடித்த பாஜக அரசு

“நான் யாருடைய விருப்பத்தை பாதுகாப்பது? உங்களுடைய விருப்பத்தையா அல்லது மக்களுக்கானதையா?  உங்களுடைய அகந்தை, என்னை காலில் போட்டு மிதிக்கிறீர்கள்
அனிதா-vinavu : ழல் செய்த காங்கிரஸ் கட்சியை நாட்டை விட்டே துரத்த ‘அவதாரம்’ எடுத்திருப்பதாக பாஜக-வினர் வாய்கிழிய பேசுவதுண்டு.  உண்மையில் ஊழல், முறைகேடுகள் செய்வதில் காங்கிரசுக்கே பாடம் எடுக்கக்கூடியவர்கள் பாஜக-வினர்.  தங்களுடைய முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் நேர்மையான அதிகாரிகளை பந்தாடுவதில் பாஜக – காவிகள் சளைத்தவர்கள் அல்ல.
அரியானா மாநிலத்தில் பாஜக அரசின் முறைகேடுகளுக்கு துணை போகாத அசோக் கெம்கா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி 2014-ஆம் ஆண்டு அந்த அரசு அமைந்ததிலிருந்து ஆறு முறை துக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.
1991-ஆம் ஆண்டிலிருந்து இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும் அசோக் கெம்கா, கடந்த 27 ஆண்டுகளில் 52 முறை பணிமாற்றத்துக்கு ஆளாகியிருக்கிறார். அரியானாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் முதன்மை செயலராக பணியாற்றிக் கொண்டிருந்த அவரை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் முதன்மை செயலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் 19 தொகுதிகளில் - மதசார்பற்ற ஜனதா தளம் 9 தொகுதிகளில் போட்டி .. உடன்பாடு


  • ndtv.com/tamil/ :JDS, which initially wanted 12 seats, has scaled down
  • HD Devegowda says focus is to win polls with as many seats for alliance
  • He had indicated earlier that his party, JDS, is ready to be flexible
  • கர்நாடகாவில் மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கர்நாடக அரசியலில் மாநில ஆட்சியை பொறுத்தவரையில் காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றன. இதே கூட்டணி தற்போது மக்களவை தேர்தலிலும் நீடிக்கிறது.
    இங்கு மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் 19-லும், மதசார்பற்ற ஜனதா தளம் 9 தொகுதிகளிலும் போட்டியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவ கவுடாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    முக அழகிரி மகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்... அஞ்சுக செல்வி எழும்பூர் பொருளாதார குற்ற ..

    வெப்துனியா : முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கு ஒன்றில்
    முன்னாள் திமுக அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் அஞ்சுக செல்விக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
    இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின்  பேத்தி மற்றும் மு.க.அழகிரியின் மகளுமான அஞ்சுகச் செல்வி அழகிரி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    வைகோ மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார் .. வரும் ஜூன்

    கே.எஸ்.இராதாகிருஷ்ணன். : நான்காவது முறையாக மாநிலங்களவைக்கு
    செல்லும் திரு வை.கோ அவர்களுக்கு வாழ்த்துகள்.. வைகோ அவர்கள் 1978இல் முதன்முதலாக மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டார். தற்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டில் வைகோ அவர்களுக்கு கூட்டணியின் மிக முக்கியத் தலைவர் என்ற நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக வரும் ஜூன் மாதம் நடக்கும் தேர்தலில் அறிவிக்கப்பட உள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. கூட்டணியின் தலைவரான கழகத் தலைவரோடு ஏற்பட்ட உடன்பாட்டில் இந்த முடிவு எட்டப்பட்டது.
    ஈழப்போர் 1984இல் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். இரண்டாம் தடவை மாநிலங்களவை உறுப்பினராக வைகோ போட்டியிட்ட சமயம்; அதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு போடும் தேர்தல் சட்டமன்ற வளாகத்தில் நீண்டகாலத்திற்கு பின் நடந்தது. ஆற்காடுவீராசாமியும்போட்டியிட்டார்.

    தமிழருவியா ....? தமிழ் தேசியத்திற்குள் ஒழிந்திருக்கும் காவி சாயம்

    தமிழருவி மணியனின் காவி முகம்
    தமிழருவி காவி அருவியான மர்மம் என்ன? மஞ்சை வசந்தன் தமிழ் இந்து நாளிதழ் தேர்தல் களம் - 2019 பகுதியில் தமிழருவி மணியனின் பேட்டி.
    பா.ஜ.க. ஆட்சி குறித்து கேட்கப்பட்டதற்கு, பிரதமர் மோடி நல்ல பல திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார். இந்த நல்ல திட்டங்கள் மக்களிடம் சென்ற சேருவதை, ஒரே இனம், ஒரே தேசம், ஒரே மொழி போன்ற பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் முழுவதுமாக மறைத்துவிடுகின்றன. எனினும், வரும் தேர்தலிலும் பா.ஜ.க.தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.
    என்று பதில் அளித்துள்ளார். அதே தமிழருவி மணியன் எடப்பாடியின் இரண்டாண்டு ஆட்சி பற்றி கேட்டதற்கு,
    தமிழகம் மாறி மாறி சந்தித்துவரும் தி.மு.க. - அ.தி.மு.க ஊழல்மலிந்த ஆட்சியின் தொடர்ச்சியாக இந்த அரசும் இருக்கிறது. பா.ஜ.க பின்புலத்தில் இருந்து தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசு. என்று பதில் கூறியுள்ளார்.
    ஆக, இவர் கூறிய கருத்துகளின் சாரம், பா.ஜ.க. மோடி ஆட்சி நல்ல திட்டங்களை முன்னெடுத்துள்ளது; எடப்பாடி ஆட்சி ஊழல் ஆட்சி என்பதுதான். அத்தோடு நிறுத்தியிருந்தால்கூட தமிழருவி மணியன் தப்பித்திருப்பார். ஆனால், அவரே ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார்.

    காலையிலேயே ஸ்டாலினுக்கு போனை போட்ட சுதீஷ்.. திகிலடிக்கும் தேமுதிக அரசியல்!

    tamiloneindia :சென்னை: தேமுதிகவின் பலே பல்டிதான் இன்று தமிழகத்தின் பெரும் பரபரப்பு. மக்கள் மத்தியில் தேமுதிகவை அம்பலப்படுத்தி விட்டது அதன் பேர அரசியல்.
     உண்மையில், அதிமுகவிடம் முதல் ஆளாக போய் பாமக சீட் வாங்கி விட்டதுதான் தேமுதிகவின் முக்கியப் பிரச்சினையாக கருதப்படுகிறது. அந்தக் கடுப்பில்தான் தனது நிலையை விட்டு இறங்கி வராமல் பிடிவாதம் பிடித்ததாக தெரிகிறது. ஆனால் மறுபக்கம் அதிமுக இதை பொருட்படுத்தவே இல்லை... இறங்கவும் தயாராக இல்லை. பாஜக போட்டு அணத்தியதால்தான் தேமுதிகவிடம் அது பேசவே முன்வந்தது. அப்படி
    வந்தும் கூட தேமுதிக இறங்கிவிராமல் வீம்பு பிடித்ததால்தான் அதிமுக தரப்பும் சற்று இறுக்கமாக மாறியதாம்.
     இந்த நிலையில் இன்று காலை தேமுதிக நடத்தியதுதான் மிகப் பெரிய டிராமா. பியூஷ் கோயலை சந்திக்க போகிறார் சுதீஷ் ஆனால் அதற்கு முன்பாகவே அவர் ஒரு வேலையை செய்துள்ளார். அதுதான் கிளைமாக்ஸ் காட்சியின் தொடக்கம்.
    ஸ்டாலினுக்கு போன் ஸ்டாலினுக்கு போன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டுள்ளார். ஸ்டாலினிடம், நாங்க அங்க திருப்தியா இல்லை. அங்கிருந்து வெளியேற விரும்புகிறோம். உங்களது அணியில் எங்களைச் சேர்க்க முடியுமா என்று சுதீஷ் கேட்டதாக தெரிகிறது.

    காஞ்சிபுரம் இளைஞன் வெட்டிகொலை ..10 பேர் கும்பல் .. ஜாதி ஆணவகொலை

    Dhanraj Danger : காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரம் கிராமத்தில் வசித்து வந்த
    பழங்குடி சமூகத்தை சேர்ந்த மதுசூதனன் என்கிற பட்டதாரி ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை விரும்பினான் என்ற குற்றத்திற்காக நேற்று மார்ச் 5- ஆம் தேதி இரவு 10 மணி அளவில் 10 பேர் கொண்ட ஆதிக்க சாதி வெறி கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    மு.க, அழகிரி : எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயரை சூட்டவேண்டும் ..பிரதமர் மோடிக்கு கடிதம்!

    tamilthehindu.com :சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர்
    கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மு.க.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி இன்று எழுதிய கடிதத்தில், ''சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறைந்த தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்டி பெருமைப்படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    இதேபோல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற அன்புக் கோரிக்கையைத் தங்களிடம் வேண்டுகோளாக வைக்கக் கடமைப்பட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    புதன், 6 மார்ச், 2019

    நளினி சிதம்பரம் : நீட் தேர்வில் தமிழகம் விலக்கு பெற்றால், வழக்கு தொடர்வோம் ..Aug 14, 2017 flashback

    tamil.samayam.com : டெல்லி: நீட் தேர்வில் தமிழகம் விலக்கு பெற்றால், வழக்கு
    தொடர்வோம் என்று நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கு நீட் எனப்படும் ஒரே நுழைவுத் தேர்வை >மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் உள் ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்திலும் அனுமதி கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவசர சட்டம் இயற்றினால், ஓராண்டிற்கு தமிழக அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
    இந்நிலையில் நீட் தேர்வில் தமிழகம் ஓராண்டு விலக்கு பெற்றால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரம் என்று கூறியுள்ளார்.

    ரபேல் தொடர்பான ஆவணங்கள் திருடு போய்விட்டதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு

    Devi Somasundaram : ரபேல் தொடர்பான ஆவணங்கள் திருட பட்டதா நீதி
    மன்றத்தில் சொல்ல பட்ட தகவலின் பின்னாடி இந்து என் ராம் குறி வைக்க படுகிறார் என்பதை கவனிக்க தவற கூடாது .
    கோர்ட்ல சொல்ல பட்டது ஹிந்துல எழுதபட்ட கட்டுரை இரகசிய ஆவணங்களின் தகவல் அடிப்படையில் எழுத பட்டது அவை பாதுகாப்பு துறையில் இருந்து திருட பட்டதாக அரசு நீதி மன்றத்தில் கூறி இருக்கு என்று TOI கட்டுரை சொல்கிறது .
    இது எதிர் பார்த்தது தான்... 2 ஜீ வழக்கில் ஆரம்பம் முதல் உண்மை தகவலை மட்டும் எழுதிய பத்திரிக்கை த ஹிண்டு மட்டுமே .
    தொடர்ந்து ராஜா அவர்களின் இண்டர்வியுகளை எழுதி அவர் பக்க நியாய்ம் பொது சமுகத்தை எட்ட என் ராம் மட்டுமே துணை நின்றார் .

    பாகிஸ்தான்ல அதிபரா இருந்து கொண்டு அடிப்படைவாத மத வாதிகளின் அழுதத்தை மீறி அபி நந்தனை விடுவிக்க இம்ரான் எத்த்தகைய எதிர்ப்பை உள்ளுரில் சந்தித்தாரோ அதே மாதிரியான் அழுத்தம் என் .ராம்க்கும் உண்டு .
    பார்ப்பனரா இருந்து கொண்டு பார்ப்பனிய எதிர்ப்பு நிலை எடுப்பது அத்தனை சுலபமில்லை .உள்ளிருந்தும் எதிர்ப்பு வரும் ,பார்ப்பனர் என்ப்தற்காக வெளியில் இருந்தும் எதிர்ப்பு வரும் நிலையில் இந்து என் ராம் கடைசி வரை நிலை தடுமாறாமல் உண்மையின் பக்கம் நின்றார் .

    சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்.பெயர் .. மோடியின் தான்தோன்றித்தனம்

    தமிழர்களுக்கு ஒன்று என்றால் ஓடோடி வருவோம்.. வருவேன்.. காஞ்சிபுரத்தில் மோடி கர்ஜனை!  தமிழர்கள் உலகில் எங்கே பிரச்சனைகளை சந்தித்தாலும் நாங்கள் உதவுவோம் என்று பிரதமர் மோடி சென்னையில் பேசி இருக்கிறார்.
    ஒகி புயலுக்கு ஓடிவந்த மோடி..
    தூத்துக்குடியில் தடவி கொடுத்த மோடி குரங்கணி தீவிபத்தில்..... சாதனைகள் ரொம்ப ரொம்ப அதிகம் .. gobackmodi 
    வெப்துனியா :இன்று சென்னை வந்துள்ள நம் நாட்டின் பிரதமர் மோடி பாஜக
    அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறுகின்ற தேர்தல் பரப்புரை அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிவருகிறார். தற்போது இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிக் கொண்டிருந்த மோடி யாரும் எதிர்பார்க்காத வகையில் அறிவித்திருக்கிறார். அதில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னை ரயில் நிலையத்தில் அறிவிக்கப்படும் தகவல் இனி தமிழில் அறிவிப்படும் என்று கூறியுள்ளார்.

    தேமுதிக-அதிமுக கூட்டணி.....பேரம் தொடர்கிறது ... டபிள் கிராஸ் ? .

    மின்னம்பலம் : பிரதமர் இன்று சென்னை வருவதற்கு முன்பாக
    கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. ஆனால் தேமுதிகவின் நிபந்தனைக்கு அதிமுக ஒப்புக்கொள்ளாததால் கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்துக் கொண்டே இருக்கிறது.
    தேமுதிக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அதிமுகவைவிட அதிகம் விரும்புவது பாஜகதான். ஏனெனில் 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்த், கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். விஜயகாந்தின் உழைப்பை பிரதமரே பாராட்டியிருந்தார். எனவே இந்தத் தேர்தலிலும் விஜயகாந்த் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. டெல்லி தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் நேரில் சந்தித்திருந்தார். பிரதமரின் பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் உறுதியாகக் கலந்துகொள்வார் எனவும் தெரிவித்திருந்தார்.

    40 தொகுதிகளிலும் வீறுகொண்டு பணியாற்றுவோம்: மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

    40 தொகுதிகளிலும் வீறுகொண்டு பணியாற்றுவோம்: மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!மின்னம்பலம் : வரும் மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வீறுகொண்டு பணியாற்றுவோம் என்று மதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு 1+1(மாநிலங்களவை உறுப்பினர்) தொகுதி வழங்கப்பட்டு நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த நிலையில் மதிமுகவின் 27-ஆவது பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இன்று (மார்ச் 6) சென்னை அண்ணா நகரிலுள்ள விஜயஸ்ரீ மஹாலில் கூடியது. முதலில் மதிமுக தலைவர்கள் எழுதிய நூல்களின் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதன்பின்பு 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    முதல் தீர்மானத்தில், “இந்துத்துவ சனாதனச் சக்திகளை, மக்களவைத் தேர்தல் களத்தில் வீழ்த்தி புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்காக, திராவிட இயக்கங்களின் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கரம் கோர்த்துள்ளன.

    மோடி :திமுக ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் திமுக வைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி

    மாலைமலர் : காஞ்சிபுரத்தின் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கருணாநிதியின் ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் திமுக வைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி என குற்றம்சாட்டினார். சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியில் 19,000 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும், இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு 14000 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை
    எடுக்கப்பட்டு வருகிறது.
    ஆப்கானிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டு வந்தது. சவுதி இளவரசரிடம் பேசி அங்குள்ள தமிழர்களை
    விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாகிஸ்தானிடம் சிக்கிய தமிழக விங் கமாண்டர் அபிநந்தன் இரண்டு நாட்களிலேயே எப்படி மீட்கப்பட்டார் என்பது உலகிற்கே தெரியும். உலகில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மத்திய அரசு ஓடோடி செல்கிறது.