சனி, 30 அக்டோபர், 2010

யாழ். கஸ்தூரியார் வீதி சிறீ ஹயூரன் நகை மாடத்தில் திருட முயற்சித்த இருவரில் ஒருவர் சிக்கினார்..!

யாழ்ப்பாணத்தின் நகரப்பகுதியில் கஸ்தூரியார் வீதியில் உள்ள சிறீ ஹயூரன் நகை மாடத்தில் பகல் 11.30 மணியளவில் இருவர் திருட முயற்சித்துள்ளனர். இதை அவதானித்த நகைக்கடை உரிமையாளர் அங்கு இருந்த இளைஞர்களின் உதவியுடன் திருடர்களை பிடிக்க முற்பட்டபோது இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல ஒருவர் பிடிபட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் ஆனால் பொலிசாரின் நடவடிக்கைகள் மந்தமாக இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கன்றனர்.

அவன் இவன் - பாலாவின் ப்ளான்



ஆர்யா விஷால் அண்ணன் தம்பியாக நடிக்கும் 'அவன் இவன்' படத்தை பாலா தேனியில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இது வரை மிரட்டலான படங்களை கொடுத்த பாலா முதல் முறையாக ஒரு குதூகலமான குடும்ப படத்தை எடுத்துவருகிறார்.



இது பற்றி பேசிய ஆர்யா, 'நான் கடவுள்' படத்தில் நாற்பது நாளாச்சு இன்னும் ஒரு ஷாட் கூட எடுக்கலையே என என் கூட நடிக்கிறவர்கள் கேட்பது உண்டு. ஆனால் 'அவன் இவன்' படத்தில் அப்படி இல்லை. பாலா சார் காலையில் ஏழு மணிக்கே ஸ்பாட்டுக்கு வர்றார். ஒன்பது மணிக்கெல்லாம் முதல் ஷாட். பக்கா பிளானோட இறங்கி இருக்கிறார் பாலா சார் என செம உற்சாகம் காட்டினார். 

காமெடி கலந்த இந்த படத்தில் விஷாலும் ஆர்யாவும் அரவாணியாக நடிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கப் பட்டது. ஆனால் என்ன வித்யாசமான கதாபாத்திரம் என்பது இன்னும் சஸ்பென்சாகவே இருக்கிறது. ஆர்யாவும் விஷாலும் கிளீன் ஷேவோடுதான் இருக்கிறார்கள். எந்த விழாவுக்கும் வெளியே தலை காட்டாத விஷால். சமீபமாக நடந்த இயக்குனர் சங்க விழாவுக்கு வந்திருந்தார். 

அம்பிகா அம்மாவாக நடித்துவருகிறார். சூர்யா ஒரு கௌரவத் தோற்றத்தில் வருகிறார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகும் அவன் இவன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இளமை இசை வழங்கியிருக்கிறார். இது என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாலா சார் ரொம்ப சூப்பரா படத்தை கொண்டுவருகிறார் என்று தான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிவருகிறாராம் விஷால். ஏற்கெனவே ஹீரோயினாக ஜனனி ஐயர் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகை மது ஷாலினி இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறாராம்.

காணாமற்போய் ஒரு வருடம் கடந்த அனைவருக்கும் இறப்பு அத்தாட்சி பத்திரம்: பொது நிர்வாக அமைச்சு

காணாமற்போய் ஒரு வருடத்துக்கு மேலாக உயிர் வாழ்வதான எந்தத் தகவலும் இல்லாதவர்கள் அனைவரும் மரணமடைந்ததாகக் கருதி இறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவிக்கின்றது. அது தொடர்பான விசேட சட்டமூலம் ஒன்று எதிர்வரும் 09ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் சிங்களத் திரைப்படமொன்றின் கதாநாயகன் ஆகின்றார்


முன்னாள் புலி உறுப்பினராகவிருந்து, புனர்வாழ்வு பெற்ற சாந்தலிங்கம் கோகுல் ராஜா என்ற இளைஞர் சிங்களத் திரைப்படமொன்றின் கதாநாயகனாக நடிக்கும் வரம் பெற்றுள்ளார்.
பிரபல சிங்களத் திரைப்பட இயக்குனர் சஞ்சய லீலாரத்தினவின் நெறியாள்கையில் உருவாகி வரும் பிரஸ்தாப திரைப்படம் தற்போதைக்கு யாழ்ப்பாணத்தின் கீரிமலைப் பகுதியில் படமாக்கப்பட்டு வருகின்றது.
புலிகள் அமைப்பிலிருந்த ஒரு இளைஞர் அதிலிருந்து விலகி சிங்கள யுவதியொருவரைக் காதலிக்கும் விடயமே திரைக்கதையாக இருக்கப் போகின்றது என்பதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
ஆயினும் எந்த இனத்தினதும் உணர்வுகளைப் புண்படுத்தாத வகையில் திரைப்படம் அமைந்திருக்கும் என அதன் இயக்குனர் லீலாரத்தின தெரிவிக்கின்றார்.

விஜயகலா மகேஷ்வரன் அரசாங்கத்துடன் இணையப் போகின்றார்



ஐ.தே.க.வின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஷ்வரன் மிக விரைவில் அரசாங்கத் தரப்புடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் அடிபடுகின்றன.
திருமதி விஜயகலா மகேஷ்வரன் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் இந்து சமய கலாசார அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தியாகராசா மகேஷ்வரனின் மனைவியாவார்.
ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாணத்துடன் அரசாங்கத்தரப்பில் இணைந்து கொள்ளவுள்ள விஜயகலா மகேஷ்வரனுக்கு அதற்கடுத்து வரும் சில நாட்களுக்குள்ளாக பிரதியமைச்சுப் பதவியொன்றுடன் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் பொறுப்பும் உத்தியோகப் பற்றற்ற ரீதியில் வழங்கப்படும் என்று தெரிகின்றது.
இவ்வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகலா மகேஷ்வரன், தனது கன்னியுரையில் திரு. மகேஷ்வரனின் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசாங்கம் அசமந்த போக்குடன் செயற்படுவதாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது கணவனின் கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத நிலையிலேயே அவர் அரசாங்கத்துடன் இணைந்து பிரதியமைச்சர் பதவியொன்றைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

நெருக்கடி-குளறுபடி:விருதுநகரில் ராமதாஸ் பேட்டி




விருதுநகர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் ராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக  ராமதாஸ் இன்று காலை ராஜபாளையம் வந்தார்.

அங்கே அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது அவர்,   ‘’சட்டமன்ற தேர்தலுக்கு எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி வருகின்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
தென்மாவட்டங்களில் பாமக போதிய வளர்ச்சி பெறவில்லை என்ற புகார்கள் அடிக்கடி வருகின்றன. எனவே அதனை கருத்தில் கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் பா.ம.க. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும்,  ‘’தமிழகத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் 44 ஆண்டுகளாக நதிநீர் பிரச்சனை நீடித்து வருகிறது. தற்போது வரை அது தீர்க்கப்படவில்லை.

32 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. 10 பிரதமர்கள், தமிழகத்தில் 5 முதல்வர்கள், கர்நாடகத்தில் 11 முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

கடந்த 1991-ம் ஆண்டு காவிரி பிரச்சனையில் இடைக்கால தீர்ப்பும், 2008-ம் ஆண்டு இறுதி தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனாலும் சுமூகமான நிலை தற்போது வரை கிடைக்கவில்லை.
தமிழக அரசு இதுவரை ரூ.1218 கோடி செலவு செய்துள்ளது.

இதில் வக்கீல்களின் கட்டணமாக மட்டும் ரூ.1142 கோடி வழங்கப்பட்டுள்ளது. நதிநீர் பிரச்சனையால் தமிழகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகளில் நிலவி வரும் கட்டண குளறுபடியை சரி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

 

அழகிரி - ஸ்டாலின் வருகையால் டில்லி பரபரப்பு

சென்ற வாரம் மத்திய அமைச்சர் அழகிரியும், துணை முதல்வர் ஸ்டாலினும் ஒன்றாக டில்லி வந்திருந்தனர். இது டில்லியில் பத்திரிகை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் இருவரும் ஒன்று சேர்ந்து பிரதமரைச் சந்தித்தது மேலும் வியப்பை ஏற்படுத்தியது. அழகிரியின் மகன் திருமண அழைப்பை இருவரும் பிரதமரிடம் அளித்தனர். பிறகு சோனியா, அத்வானி உட்பட பல தலைவர்களை சந்தித்து பத்திரிகை அளித்தார் அழகிரி. அப்போது ஸ்டாலின் உடன் செல்லவில்லை.சில ஆங்கில தொலைக்காட்சிகள், ஸ்டாலின், அழகிரி இருவரும் ஒன்றாக செல்வது போல காட்சிகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்தனர்.  ஏமாற்றம்தான் மிஞ்சியது. பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் தனித்தனி கார்களில் வந்தனர். பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து யாரையும் சந்திக்காததால் மீடியாவிற்கு பெரும் ஏமாற்றம்.

பிரதமர் -  சோனியா  உறவில் விரிசல்? பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கும் இடையே உறவு சரியில்லை என்று டில்லி அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே ஒரு பேச்சு உண்டு. இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பாக டில்லியில் பேசப்படுகிறது. அமைச்சரவை விவகாரங்கள் மற்றும் நாட்டுநடப்பு ஆகியவற்றை மட்டுமே பிரதமர் கவனித்துக் கொள்கிறார். மற்றவை எல்லாம் சோனியாதான் பார்த்துக் கொள்கிறார். ஒரு அமைச்சர் தன் மாநில காங்கிரஸ் கமிட்டி தொடர்பாக பிரதமரிடம் பேசினார். "கட்சி விவகாரம் தொடர்பாக என்னிடம் பேச வேண்டாம். மேடத்திடம் பேசுங்கள். உங்கள் இலாகா தொடர்பான பிரச்னையாக இருந்தால் சொல்லுங்கள்' என, கறாராக சொல்லிவிட்டார் பிரதமர்.   சென்றவாரம் உ.பி., முதல்வர் மாயாவதி, பிரதமரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. பிரதமரை சந்திக்க அசாம் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகோய் நெடு நேரமாக காத்துக் கொண்டிருக்க, பிரதமரோ மாயாவதியிடம் பேசிக் கொண்டிருந்தார். உ.பி., மாநில திட்டங்களுக்கு பிரதமர் அனுமதி தர வேண்டும் என்று, மாயாவதி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், காங்கிரசிலோ எதற்கு பிரதமர் இவ்வளவு நேரம் அந்த அம்மணியுடன் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர். சோனியாவும், ராகுலும், மாயாவதிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் என்பதால், முதல்வர்களை சந்தித்து பேச வேண்டும். அதற்காக, எதற்கு இவ்வளவு முக்கியத்துவம். ஒரு வேளை அரசியல் ஏதாவது பேசினார்களா என்று சந்தேகப்படுகின்றனர் காங்கிரசார்.

மராட்டி மானுஸ் : பா.ஜ.,  தலைவர் நிதின் கட்காரி, காமன்வெல்த் விளையாட்டு தொடர்பாக, பிரதமர் அலுவலகம் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். இது தொடர்பாக  சில ஆவணங்களையும் வெளியிட்டு, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், இந்த ஆவணங்கள் ஏற்கனவே மீடியாவில் வெளியானவைதான்.இதற்கிடையே, காங்கிரசில் அரசல், புரசலாக பேசப்படும் விஷயம்  கட்காரி சுத்தமான மராட்டி ஆசாமி. சிவசேனாவைப் போல, தன் மாநிலத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர். மராட்டியர் என்றாலே ஒரு தனிப்பிரியம்.இன்னொரு பக்கம் காமன்வெல்த் ஊழல் விவகாரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர் சுரேஷ் கல்மாடி. இவரும் மராட்டியர். அட நம்ம ஊரா என்று இங்கே சொல்வது போல, இரு மாராட்டியர்கள் சந்தித்துக்கொண்டால், "அட நம்ம மராட்டி மானுஸ்' என்று சொல்வர். மராட்டிக்காரரான கட்காரிக்கு அவருடைய மாநிலத்துக்காரர் கல்மாடி மறைமுகமாக காமன்வெல்த் தொடர்பான விவகாரங்களை  போட்டுக் கொடுக்கிறாரோ என்று காங்கிரசார் சந்தேகப்படுகின்றனர்.

பராமரிக்க முடியாமல் திண்டாட்டம் : ஊழல் பிரச்னைகளுக்கு மத்தியில் எப்படியோ காமன்வெல்த் விளையாட்டை நன்றாக நடத்திக் காட்டிவிட்டது மத்திய அரசு. ஆனால், பிரச்னை இனிமேல்தான். காரணம், இதற்காகக் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கங்களை பராமரிப்பதுதான்.பத்துக்கும் மேற்பட்ட ஸ்டேடியங்கள் நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பராமரிக்க ஒரு ஸ்டேடியத்திற்கு மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும். இந்த பணத்திற்கு எங்கே போவது என்று, டில்லி அரசும் மற்ற அமைப்புகளும் கவலையில் ஆழ்ந்துள்ளன. இதற்காக ஒரு திட்டமும் தயாராகிவிட்டது. இந்த விளையாட்டு அரங்கங்களை தனியார் நிறுவனத்திடம் கொடுத்துவிடுவது, அவர்கள் பராமரிப்பர், அரசுக்கு பணமும் கிடைக்கும்,  விளையாட்டு அரங்குகளும் நன்றாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அந்த தனியார் நிறுவனங்கள் இந்த அரங்குகளை விளையாட்டு அல்லது வேறு விவகாரங்களுக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்துக் கொள்ளலாம். அதே சமயம் அரங்குகளுக்கு எந்தவித சேதமும் வரக்கூடாது. இது எப்படி இருக்கு?

Facebook பேஸ்புக் பார்ப்பதால் ஊழியர்களுக்கு உற்சாகம் பிறக்கிறது

அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் எந்நேரமும் கம்ப்யூட்டரை பார்த்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அச்சமயத்தில் அவர்களின் மனதில் ஒரு வித இறுக்கம் தோன்றுகிறது. இதனை தவிர்ப்பதற்காக பல்வேறு காலகட்டங்களில் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு உத்திகளை கூறியுள்ளனர். உதாரணமாக ஒரு மணிக்கு ஒரு தடவை ஐந்து நிமிடம் கம்ப்யூட்டரை பார்ப்பதை தவிர்த்தால் மூளை சுறுசுறுப்படையும் என தெரிவிக்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் பேஸ் புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணையதளங்களை ஊழியர்கள் பார்ப்பதால் அவர்களின் வேலை சுறுசுறுப்பாக உள்ளது எனஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பெரிண்ட் கோகர் தெரிவித்துள்ளார். இதற்காக 300 ஊழியர்களிடம் அவர் ஆய்வை நடத்தினார், அதில் 20 சதவீதம் பேர் மேற்கண்ட இணையதளங்களை காண்பதாகவும், அதனால் பணிச்சுமையால் ஏற்படும் சோர்வில் இருந்து விடுபட்டு உற்சாகம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களிடம் எரிக் சொல்ஹெய்ம் மன்னிப்பு கோர வேண்டும் ‐ கொமின் தயாசிறி !

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அப்பாவி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பிரபல சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அவலங்களுக்கு எரிக் சொல்ஹெய்மும் ஒர் முக்கிய பொறுப்பாளி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு ஆதரவான முறையில் செயற்பட்டு வந்தாகவும், அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளுடன் சொல்ஹெய்ம் நட்புறவினைப் பேணியதாகவும், சமாதான ஏற்பாட்டாளராக செயற்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். புலிகளுடனான சமாதான முனைப்புக்களின் போது நோர்வேயை சமாதான ஏற்பாட்டாளராக தெரிவு செய்தமை பாரிய தவறாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய கலாச்சாரத்தையோ, நாகரீகங்களையோ நோர்வே சமூகம் அறிந்திருப்பதற்காக நியாயம் கிடையாது எனவும் இதனால் சமாதான ஏற்பாட்டாளராக மேற்குலக நாடொன்றை தெரிவு செய்தமை பொருத்தமற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கை வீழ்ச்சியடைந்தமைக்கான ஏதுக்களை விளக்கிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள மக்களின் மனநிலையை நோர்வே அரசாங்கமோ அல்லது எரிக் சொல்ஹெய்மோ அறிந்திருக்க வாய்ப்பில்லை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்
Current events

Naxals LTTE of India இந்தியாவின் புலிகளாக நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர்


இந்தியாவின் புலிகளாக நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர் என்று தெரிவித்து ஆசிரிய தலையங்கம் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் இருந்து வெளியாகும் centralchronicle என்கிற ஆங்கில பத்திரிகை.Naxals LTTE of India என்கிற தலைப்பில் இவ்வாசிரியர் தலையங்கம் பிரசுரம் ஆனது
இந்தியாவின் புலிகளாக நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர் என்று தெரிவித்து ஆசிரிய தலையங்கம் ஒன்றை தீட்டி உள்ளது அந்நாட்டின் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் இருந்து வெளியாகும் centralchronicle என்கிற ஆங்கில பத்திரிகை.Naxals LTTE of India என்கிற தலைப்பில் இவ்வாசிரியர் தலையங்கம் பிரசுரம் ஆனது.

அதில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:- கடந்த 25 ஆண்டு காலப் பகுதியில் புலிகள் மிகவும் ஸ்திரமான நிலையில் சொந்தமாக அரசு ஒன்றை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஸ்தாபித்து ஆட்சி நடத்தி இருக்கின்றனர். தரைப்படை, கடல் படை, வான் படை ஆகியவற்றையும் வைத்திருந்தனர். அரசு மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதும , அரசுடன் சமாதான பேச்சில் பேசுவதும் அவர்களின் சந்தர்ப்பவாத உபாயமாக இருந்து வந்துள்ளது.

நக்சலைட் தீவிரவாதம் நக்சல்வாடி பிரதேசத்தில் 1967 ஆம் ஆண்டு தோன்றியது. கடந்த 42 வருடங்களில் இந்தியாவின் 16 மாநிலங்களில் இவ்வியக்கம் விஸ்தரித்துள்ளது.முன்பு கட்டுப்பாட்டில் இருந்திராத புதிய இடங்களில்கூட ஸ்திரமாக கால் ஊன்றி நிற்கின்றார்கள். அதில் ஒன்றுதான் Bhopal நகரம். அங்கு ஒரு தொழில்சாலையை அமைத்து இருந்தனர். 16 மாநிலங்களில் இருந்தும் மொத்தமாக 40000 சதுர கிலோ மீற்றர் பரப்பு உடைய நிலம் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 'Red Corridor' என்று இது அழைக்கப்படுகின்றது. 16 மாநிலங்களில் உள்ள 194 மாவட்டங்களில் இவர்களின் பிரசன்னம் உண்டு.

அவற்றில் 58 மாவட்டங்களில் சொந்தமாக அரசு ஒன்றை ஸ்தாபித்து ஆட்சி நடத்துகின்றனர். இங்கு சொந்தமாக நீதிமன்றங்கள் வைத்திருக்கின்றார்கள். இங்கு இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் இவர்களுக்கு வரி செலுத்துகின்றனர். வருடாந்த இந்திய ரூபாயில் 200 கோடி வரி இவர்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது. இவர்கள்
இந்தியாவின் புலிகளாக உள்ளனர்.

Malavika மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பிவிட்டார் மாளவிகா.

Malavikaகல்யாணம் பண்ணி, குழந்தை பிறந்து, ஓய்வு முடிந்து மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பிவிட்டார் மாளவிகா.

எம்.ஜி.ஆர் நம்பி தயாரித்து இயக்கும் படம் பொறுத்திரு என்ற படத்தில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போடுகிறார்.

எம்ஜிஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம் பெற்ற 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாளவிகா நடனமாடுகிறார். எம்ஜிஆர் நம்பியே ஹீரோவாகவும் நடிக்கிறார்.

"நான் பால்காரன் வேடத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். மாளவிகா திருமணத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகை மாளவிகாவாகவே நடிக்கிறார். கிராமத்துக்கு டீக்கடை திறக்க வரும் அவரை, ஊர் பெரிய மனிதர் என்ற முறையில் வரவேற்கிறேன். மாளவிகாவையும் என்னையும் இணைத்து எனது அத்தை மகள் கனவு காண்பதாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாட்டுக்கு புதிதாக ட்யூன் போடாமல், 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம்பெற்றுள்ள நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்... பாடலையே ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளோம்.

மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு கடைசி படம்..." என்றார் இயக்குநர் எம்ஜிஆர் நம்பி.

சீனாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலத்த வரவேற்பு


ஜனாதிபதி மஹிந்த   ராஜபக்ஷ் இன்று சீனாவுக்கு இரண்டு நாள்   உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஷங்காய் விமான நிலையத்தில் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. சீன மாணவா்களும் அணியாகத் திரண்டு ஜனாதிபதிக்கு வரவேற்பளித்தனர்.
ஷங்காயில் நடைபெறவுள்ள 2010 ஆம் ஆண்டுக்கான எக்ஸ்போ கண்காட்சியில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். ஆயிரம் பார்வையாளர்கள் பங்கு பற்றும் இக் கண்காட்சியில் உலக நாடுகளின் இருபது தலைவர்கள் பங்கு கொள்ளவுள்ளனர். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சீன ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

32 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானால் சிறைபிடிப்பு

இஸ்லாமாபாத்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 32 இந்திய மீனவர்களை அத்துமீறி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக்க கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்திய மீனவர்கள் நேற்று பாகிஸ்தான் எல்லைக்குள் 60 மைல் தூரம் நுழைந்துவிட்டதாக மாரி டைம் செக்யூரிட்டி ஏஜென்சி தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை கராச்சிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்களின் அடையாளம், எதற்காக பாகிஸாதன் எல்லைக்குள் நுழைந்தனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாரிடைம் எல்லையைத் தாண்டுவதாகக்கூறி இந்தியாவும், பாகிஸ்தானும் மாறி மாறி மீனவர்களை கைது செய்வது வழக்கம். இதில் விந்தை என்னவென்றால் தண்டனைக் காலம் முடிந்தும் மீனவர்கள் வருடக் கணக்கில் சிறையில் வாடுவது தான்.

பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து பாகிஸ்தான் 442 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது. அண்மையில் கராச்சியில் உள்ள நீதிமன்றம் மேலும் 142 மீனவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

குழந்தையை கிணற்றில் வீசி கொலைசெய்த விதவைத்தாய் கைது

பெற்ற குழந்தையை கிணற்றில் வீசிக் கொலைசெய்த விதவைத்தாயார் (38 வயது)குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
வயிற்றுவலி காரணமாக இப்பெண்ணை சங்கானை ஆஸ்பத்திரியில் அனுமதித்தபோது அவர் குழந்தையை பிரசவித்தது டாக்டரால் கண்டறியப்பட்டது.   அப்போதுதான் இவர் குழந்தையை பிரசவித்த விடயமும் சகோதரிக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக அப்பெண்ணிடம் விசா ரணை செய்தபோது    குழந்தை பிறந்து அதனைப் புதைத்துவிட்டதாகக் கூறினார்.
இதுகுறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பொலிஸார் குழந்தை புதைக்கப்பட்டதா என்பது குறித்து தேடுதல் மேற்கொண்டனர். அப்போது குழந்தையின் சடலம் கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்துக்கு இதனை அறிவித்ததையடுத்து நீதிவான் பி.கஜநிதிபாலன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட நிலையில் இப்பெண் யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இப்பெண்ணின் கணவர் மரணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட

ரிஷான நபீக்கிற்காக இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் கடிதம்

ரிஷான நபீக்கின் மரண தண்டனையை தவிர்க்க, அவருக்கு மன்னிப்பு வழங்கி உதவுமாறு, நபீக் கொலை செய்ததாக கூறப்படும் சிசுவின் பெற்றாருக்கு கொழும்பில் அமைந்திருக்கும் இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் சார்பில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ரிஷான நபீக்கிற்கு வேலை வழங்குனரின் மனைவி அவரது குழந்தைக்கு பால் வழங்குமாறு குழந்தையை வழங்கியுள்ளார் இதன் பின்னரே அவர் குழந்தையை கொன்றுள்ளார் என உயர் நீதிமன்றம் தெரிவித்து மரணதண்டனை வழங்கியது.

விடுதலைப்புலிகளின் ஆயுத களஞ்சியம் ஒன்று செட்டிக்குளம் பகுதியில் கண்டுபிடிப்பு

யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் அரச முக்கியஸ்தர்களின் வாகனங்களை தகர்க்க பயன்படும் காந்த குண்டுகள் உள்ளிட்ட வைக்கப்பட்டிருந்த  ஆயுத களஞ்சியம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் செட்டிக்குளம் கண்டுபிடித்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிரடிப்படையின் வவுனியா பிராந்திய கட்டளை அதிகாரி சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் கே.எச்.ஜயவீரவிற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பிரதேசத்திற்கு சென்ற அதிரடிப்படையினர், இந்த களஞ்சியத்தை கண்டுபிடித்துள்ளதுடன், அதில் இருந்த ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். 

வாகனங்களில் ஒட்டக் கூடிய காந்தங்களுடான 7 வெடிக்குண்டு பொதிகள், 130 டெட்டநேட்டார்கள், தலா இரண்டு கிலோ கிராம் எடைக்கொண்ட இரண்டு குண்டு பொதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

நமீதா - அஞ்சலிக்கு நடந்த கதி! நடிகைகள் புது முடிவு!!

Actress Namitha, Anjali`s new planகரூரில் நடந் தஒரு விழாவில் பங்கேற்க சென்ற நடிகை நமீதாவை திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் கடத்த நடந்த முயற்சி, நடிகை அஞ்சலி கன்னியாகுமரி மாவட்டத்தில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் சூட்டிங்கில் இருந்தபோது நடந்த தாக்குதல்... போன்ற சம்பவங்களால் வெலவெலத்துப் போயிருக்கின்றனராம் நம் நடிகைகள். இந்த சம்பவங்களுக்கு பிறகு வெளியூர் சூட்டிங் என்றாலே தயக்கம் காட்டும் அளவுக்கு அம்மணிகள் பயந்துபோய் இருக்கிறார்கள். அதேநேரம் பயந்தால் ஒண்ணுமே நடக்காது என கருதிய சில நட்சத்திரங்கள், இனி வெளியூர் சூட்டிங், நடிகர் - நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்றாலே போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையை சந்திக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள். நமீதா, அஞ்சலி உள்ளிட்ட இன்னும் சில நடிகர்- நடிகைகளுக்கோ காவல்துறையுடன் படப்பிடிப்பு மற்றும் விழாக்களுக்கு போனால் ரகசியங்கள் அம்பலத்திற்கு வந்துவிடுமே என்கிற தயக்கமும் இருக்கிறதாம்! அட!!

China.காஷ்மீருக்குத் தனி விசா தரும் சீனாவின் போக்குக்கு

இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் பொறுப்புடன் நடக்க சீனாவுக்கு இந்தியா கோரிக்கை இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் சீனா பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

வியட்நாமில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் ஹனோய் சென்றுள்ளார். அங்கு மாநாட்டுக்கு இடையே சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்துப் பேசினார். முக்கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது காஷ்மீருக்கு தனி விசா தருவது, எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமர், வென்னுடன் விவாதித்தார்.

காஷ்மீருக்குத் தனி விசா தரும் சீனாவின் போக்குக்கு அப்போது பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்ததாக தெரிகிறது.

இந்தியா தொடர்பான முக்கியப் பிரச்சினைகளில் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடக்க சீனா முன்வர வேண்டும் என்று சீனப் பிரதமரை அப்போது பிரதமர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளும் தத்தமது எல்லைக்குள் சுதந்திரமாக உலக அரங்கில் செயல்படுவதற்கு போதுமான வாய்ப்புகளும், வழிகளும் உள்ளதை ஜியாபோவிடம் பிரதமர் சுட்டிக் காட்டினார். இதை சீனப் பிரதமரும் ஏற்றுக் கொண்டார். மேலும் இரு நாடுகளும் உலக அரங்கில் இணைந்து செயல்படவது எனவும் ஒத்துக் கொண்டன.

பேச்சுவார்த்தையின்போது தான் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருவதாக ஜியாபோ தெரிவித்தார். இதை பிரதமர் வரவேற்றார்.

மேலும், வருகிற நவம்பர் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் சீனா செல்வது எனவும், அதன் பின்னர் ஜியாபோவின் வருகைக்கு முன்பாக இரு நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்கும் எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவது என்றும் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டது.

காஷ்மீரை தனி நாடு போல சீனா பாவித்து வருகிறது. அதை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க மறுத்து, காஷ்மீரிலிருந்து வருவோருக்கு தனி விசாவை அளித்து இந்தியாவை கடும் எரிச்சலுக்குள்ளாக்கி வருவது நினைவிருக்கலாம்.
  Read:  In English 
கடந்த ஜூலை மாதம் வடக்கு ஏரியா பகுதி ராணுவ அதிகாரி ஜஸ்வால் சீனா செல்ல விண்ணப்பித்தபோது அவருக்கு தனி விசாவை அளிக்க முடிவு செய்தது பெரும் சர்ச்சையை எழுப்பியது நினைவிருக்கலாம்.

இதையடுத்து ஜஸ்வாலின் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.
பதிவு செய்தவர்: periyaar
பதிவு செய்தது: 30 Oct 2010 1:10 am
அட அநியாயமே .... மீண்டும் ஒரு மலையாளியா பாதுகாப்பு ஆலோசகர் ?....வேறு இனத்தவன் தகுதியாக இல்லையா ?.... இதெல்லாம் சோனியாவின் ரகசிய ஆலோசகர் ஜோர்ஜின் அறிவுரையா ?

மக்கள் தப்பி ஓடும் அவசியத்தை நிறுத்திவிடும் ஓரிடமாக ஸ்ரீலங்கா மாறிவிடும் என நாங்கள் நம்பலாம்.


ஆக்கம்: சச்சினி வீரவர்தனா
“எவராவது ஏன் எந்தவித அச்சமும் இல்லாதபோது ஸ்ரீலங்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்கு எந்த வித காரணமும் இல்லை. எங்கு வாழ்வதற்கும் அவர்களுக்குச் சுதந்திரம் உள்ளது.” – கோத்தபாய ராஜபக்
புகலிடம் தேடுபவர்களைப் பற்றியும் வெளிநாடுகளுக்கு கடந்து செல்ல வேண்டி அவர்கள் எடுக்கும் அதிபயங்கர ஆபத்து நிறைந்த சொந்த முயற்சிகள் பற்றியும் நிறையவே எழுதியாகி விட்டது. 1951ம் ஆண்டின் அகதிகள் நிலை சம்பந்தமான ஒப்பந்தத்தின் பிரிவு (1) ல் சொல்லப்பட்டிருப்பது: ஒரு அகதி என்பது ஒரு ஆள் “ கீழ் காணும் ஏதாவது காரணங்களினால் தாம் துன்புறுத்தலுக்கு ஆளாகலாம் என்கிற நியாயமான அச்சத்தை கொண்டிருந்தால் - அவையாவன சாதி,மதம், இனம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் அங்கத்தவர், அல்லது அரசியற்காரணம், அவரது தேசிய இனத்துக்குச் சொந்தமான நாட்டக்கு வெளியில் இருத்தல், மற்றும் இயலாத நிலை அல்லது அச்சமுற்ற நிலையில் தன்னை அந்த நாட்டின் பாதுகாப்புக்கு உட்படுத்திக் கொள்ள விருப்பம் அற்றவராக இருத்தல்…..”. மற்றும் புகலிடம் தேடுபவர் எனப்படுவது ஒரு நபர், அவருடைய அல்லது அவளுடைய விண்ணப்பம் அகதி அந்தஸ்தின் அங்கீகாரத்துக்கு வேண்டிக் காத்திருப்பது ஆகும்.உலகின் சரித்திரத்தில் மக்கள் அகதிகளாகப் புகலிடம் தேட நிர்ப்பந்திக்கப் பட்ட ஏராளமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வெளிநாட்டவர் ஒருவருக்கு அகதி அந்தஸ்து வழங்கும் ஒரு நாடு அகதி அடைக்கலம் வழங்கும்போது கவனிக்கவேண்டிய மிக உயர்ந்த சட்டங்களில் ஒன்று மானிடத்தின் இரக்கம் ஒவ்வொருவருக்கும் நல்லவண்ணம் கிட்டவேண்டியது என்பதாகும். அது தகுந்த பாதுகாப்பை வழங்குவதுடன் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள், இறுதியாக வாழ்ந்து தாங்கள் அனுபவித்த பயங்கரக் கதைகளை உலகிற்கு சொல்வதற்கும்.
டெய்லிமிரர் பத்திரிகை சமீபத்தில் பாதுகாப்புச் செயலர் சொன்னதாக வெளியிட்டிருப்பது, “அவுஸ்திரேலிய அரசாங்கம் தாங்கள் புகலிடம் வழங்குவதற்காக கவனத்திலெடுக்கும் எவரிடத்தும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் புகலிடம் வழங்குவதை நிறுத்தி விட்டால் இந்த நடைமுறைகளை நிறுத்துவது மிக எளிதாக இருக்கும்’ என்பதாக. அந்தக் கட்டுரை மேலும் சொல்வது இராணுவத்தினர் அவ்வாறான படகுகள் ஸ்ரீலங்கா கரையை விட்டு புறப்படுவதை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி விட்டதால் அந்த மக்கள் வேறுநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து புகலிடம் தேட முயல்கிறார்கள். எனவே அது எடுத்துக் காட்டுவது, சில ஸ்ரீலங்கா வாசிகள் இங்கிருந்து வெளியேறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்கிறார்கள் என்பதனையே.
எப்படியாயினும் கேள்வி என்னவெனில் ஏன் இந்த அரசாங்கங்கள்” புகலிடம் கோரும் ஸ்ரீலங்கா வாசிகள் மீது அனுதாபம் காட்டுகின்றன, அதை நிறுத்துவதற்கு முயற்சிகள் எதையும் மேற்கொள்ளுகிறதா” எனும் சரியான பிரச்சினைகளை எடுத்துக் கொள்வதுதான்.துரதிருஸ்டவசமாகக் காணப்படும் நாங்கள் குழப்பமடைந்திருக்கும் விடயமானது ஏன் இந்த மக்கள் நாட்டிலிருந்து சென்று தாமாக விலகிச் செல்பவர்களுடன் ஒன்றுசேர்ந்து புகலிடம் தேடும் குழுக்களாக முயற்சிக்கிறார்கள் என்பதுதான்.
இந்த ஒழுங்கு முறையானது இந்த முயற்சியினால் ஆதாயம் ஈட்ட முயல்பவர்களுடன் தீர்த்து வைக்கப் படவேண்டியது. இதன் கருத்து புகலிடம் வழங்குவதை நிறுத்திவிட வேண்டும் என்பதாகுமா? உண்மை என்னவெனில் எத்தனையோ பேர்களுக்கு புகலிடம் வழங்கப் பட்டது சிலவற்றைக் கருத்தில் கொண்டே.எப்படியாயினும் புகலிடம் தேடுபவர்களின் அடையாளமானது சொகுசு வாழ்க்கை வேண்டி பசுமையைத் தேடி ஓடும் மற்றவர்களைப் போல நகைப்புக்கிடமானதாகவோ குழப்பமானதாகவோ இருக்கக் கூடாது.
படிப்புக்காரணமாகவும் மற்றும் தொழில் நிமித்தம் உள்ள தொடர்புகள் காரணமாக வெளிநாடுகளில் வதிவிடம் தேடியவர்களில் சிலர் நாடு திரும்புவதைத் தெரிவு செய்ய விரும்புவார்கள். மற்றும் சிலர் அங்கேயே தங்கிவிட விரும்புவார்கள். இதில் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது,அவர்களுக்கு தங்களுக்கு வேண்டியதைத் தெரிவு செய்யும் சுதந்திரம் உள்ளது. அதற்கான காரணங்கள் அச்சம் காரணமாகவோ,சூழ்நிலையினாலோ அல்லது சாதாரணமாக அவர்களுக்கு ஒரு சிறப்பான வாழ்க்கை வேண்டியோ எதுவானாலும் அது குடியேற்ற அதிகாரிக்கும் தனிப்பட்டவர்களுக்கும் இடையில் உள்ள விடயம்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவர் நிலையம் நிரல் படுத்தியிருப்பது, ஒரு பொருளாதாரக் குடியேற்றவாசி எனப்படுபவர்,”தனது மனச்சாட்சியின் தெரிவுப்படி தனது சொந்த நாட்டை விட்டுப் பிரியவும், எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் மீண்டும் அங்கு செல்லக் கூடியவர்” என்பதாகும்.சிறந்த பொருளாதார வளங்களை அடைய முயன்ற போதிலும்கூட பெரும்பாலான ஸ்ரீலங்கா வாசிகள் இந்தப் பிரிவுக்குள்ளேயே அடங்குவதைக் காணமுடிகிறது. ஆனால் புகலிடம் தேடுபவர்கள் விடயத்தில் அது உண்மையாக இருப்பின் இந்த இரு பகுதியினரையிட்டும் குழப்பமடையும் தவறை நாம் செய்து விடக்கூடாது. நாம் இரண்டு வழிகளையும் கொண்டிருக்க முடியாது.
ஸ்ரீலங்கா தசாப்தங்கள் நீண்டு நின்ற தனது போரின் வடுக்களிலிருந்து மீண்டு வருவதற்கு சிறிது காலமெடுக்கும். மக்கள் தங்களின் வாழ்க்கையை காவல்காத்துக் கொண்டு சுகமான ஒரு வாழ்க்கையைப் பெறுவதற்காக,தலைமுறைகளாகக் காத்திருக்க வேண்டுமா? தகுந்த வேலைப் பயிற்சிகள் சிறந்த கல்வித் தகைமைகள் போன்ற நம்பிக்கைகள் எதுவும் இல்லாமல் ஸ்ரீலங்கா அவர்களுக்கு எதைக் கொடுத்து விட முடியும். இதில் இன்னமும் கவர்ச்சிகரமான விடயம் அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டின் வாழ்க்கைமுறையோடு நம்மதை ஒப்பிடுவது.
இறுதியாக அபிவிருத்தி அடைந்த நாடுகளை வெற்றிகரமாகச் சென்றடைந்தவர்கள் அவர்களுக்கு இங்கு கிடைத்திருப்பதைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கையை அங்கு வாழ்கிறார்கள்.அவர்களின் பிள்ளைகள் நம்பிக்கையுடனும் வாழ்க்கையில் ஒரு பிடிப்புடனும்,வெறுப்பு,பாரபட்சம் எதுவும் எஞ்சியிருக்காமல் வாழ்வார்கள். இனிவரும் காலங்களில் கட்டாயமாக மக்கள் வெளியேறுவதை நிறுத்திவிட்ட ஒரு நாடாக ஸ்ரீலங்கா மாறிவிடும்,அனைத்து ஸ்ரீலங்கா வாசிகளும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் நம்பலாம்.
சில வேளைகளில் புகலிடம் வழங்கும் விடயம் அந்தந்த நாடுகளின் குடியேற்ற அதிகாரிகளின் எண்ணப்படியான விடயமாக இருக்கலாம். அவர்கள் அதன் பின்விளைவுகளை அல்லது நடைமுறைகளை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் தன் தாய்நாட்டை விட்டு வெளியேறுவது அத்தனை சுலபமான காரியமல்ல. அதிலும் மோசமானது ஒரு நபர் தனது உயிரைப்பற்றிய எந்த விதப் பயமும் இல்லாமல் அகதியாக தப்பி ஓட நிர்ப்பந்திக்கப் படுவது. ஏனெனில் மக்கள் சாதாரணமாக சுகவாழ்வு வேண்டி பசுமையான இடங்களைத் தேடி ஓடுவதால் புகலிடம் தேடிப் போகிறவர்களும் அதே காரணத்துக்காகத்தான் போகிறார்கள் என அர்த்தமாகி விடாது. அநேகமானவர்கள் இப்படிச் செய்வதனால் இன்னமம் ஸ்ரீலங்காவில் நிறைய வேலைகள் செய்யவேண்டி உள்ளது என்பது தெளிவாகிறது.
தமிழில்: எஸ்.குமார்

புலம்பெயர்ந்தோர் தமது கருத்தை மாற்றிக்கொள்ளும்வரை தமிழர்கள் காத்திருக்க முடியாது

புலம் பெயர்ந்த தமிழர் செய்ய வேண்டியது என்ன?
என்.சத்தியமூர்த்தி
இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோரின் தனித்தியங்கும் குழுவொன்று சட்ட நிபுணர் உருத்திரகுமாரனை தனிநாட்டின் பிரதமராக பெயர்குறிப்பிட்டமை கவலைக்குரிய விடயமாகப் பார்க்கப்பட வேண்டும். இதை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பார்க்கப் போகின்றது என்பது மட்டுமல்ல பிரச்சினை. இப்படிச் செய்வதன் மூலம் புலம்பெயர்ந்தோர் இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்குரிய வாய்ப்புகளை எவ்வளவு தூரம் கெடுக்க கூடும் என்பது முக்கியமானது.
யுத்தம் முடிந்த நிலையில் 'சமாந்தர அரசாங்கம்''; என்பதன் பாத்திரம் குறித்து புலம் பெயர்ந்தோரிடையே வெளிப்படையாகவே தெரியும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்தக் குழுவிற்குள்ளும் வெளிப்படையாக தெரியாத கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவே தெரிகிறது. இது ஒரு நேரம் வெளியே தெரியவரும்.
புலம்பெயர்ந்தோரில் உற்சாகமாக இயங்கியவர்கள் குறிப்பாக உணர்வூட்டல், நிதிசேகரித்தலில் வெளிநாட்டில், ஈடுபட்டவர்கள் யுத்தத்துக்கு பின்னரான யதார்த்தங்களை புரிந்து செயற்பட வேண்டிய நிலைமை உள்ளது. அதிகமான உணர்வூட்டல் எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாகரனை கடவுளாக்குவதை மையப்படுத்தியிருந்தது. அநேகமான நிதிசேகரிப்பு, எதிர்ப்பு காட்டுவோரின் உறவினர்களுக்கு இலங்கையில் தண்டனை வழங்கும் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இன்று பிரபாகரன் எம்மோடு இல்லை. வலுக்கட்டாயப்படுத்தும் எல்.ரி.ரி.ஈ.யின் ஆளணியும் இலங்கையில் இல்லை. யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் எல்.ரி.ரி.ஈ.க்கு கருணாவும், பிள்ளையானும் இலங்கையில் செய்ததை கே.பி. யுத்தம் முடிந்த பின் வெளிநாட்டில் செய்துள்ளார். எல்.ரி.ரி.ஈ. உச்சம் பெற்றிருந்த காலத்தில் சத்தமில்லாதிருந்த வேறு புலம் பெயர்ந்தோர் குழுக்களும் காணப்பட்டன. இவர்கள் நிச்சயமாக வெளிப்படுவர். எல்.ரி.ரி.ஈ.க்கு ஆதரவான புலம் பெயர்ந்தோரும் தொழிற்படத் தொடங்குவர்.
யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது வெளிநாடுகளில் பொருத்தமான சூழ்நிலை உருவாகியிருந்ததால் புலம் பெயர்ந்தோர் எல்.ரி.ரி.ஈ.க்கு ஆதரவை திரட்ட முடிந்தது. 1983 இனக்கலவரத்தின் நினைவுகள் பல நாடுகளில் நிலைத்திருந்தன. எல்.ரி.ரி.ஈ யின் வழிமுறைகளை ஏற்றவர்களோ ஏற்காதவர்களோ முன்வைத்த வாதங்கள் மறுப்பின்றி ஏற்கப்பட்டன.
அரசாங்கங்கள் இலங்கை அரசுடன் அல்லது புலம்பெயர்ந்தோருடன் சம்பந்தப்படும்போது தமது தேசிய நலனையே முதன்மை படுத்துகின்றன.
வேறு நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய அவர்களது அக்கறையை, தமது நாட்டு நலன்மீதுள்ள அவர்களது ஈடுபாட்டுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. இலங்கையின் புலம் பெயர்ந்தோரைப் பொறுத்தவரையில் அவ்வாறான ஈடுபாடு, அவர்கள் வாழும் நாட்டு அரசாங்கங்கள் தமது சொந்த மக்களின் பாதுகாப்பையும் நலனையும் முதன்மைப்படுத்துவதாகவே உள்ளது. தமது சொந்த மக்கள் என கூறும்போது அது அந்த நாடுகளின் பிரஜைகளாகவுள்ள புலம் பெயர்ந்தோரையும் கருதுகின்றது. எல்.ரி.ரி.ஈ .முற்றாக அழிந்த நிலையில் கட்டாயப்படுத்தி நிதி சேர்த்தல் தொடர்பான முறைப்பாடுகள் முன்னரைவிட அதிகமாக புலம்பெயர்ந்து வாழ்வோரால் மேற்கொள்ளப்படலாம்.
புலம்பெயர்ந்தோரும் இலங்கையில் வாழும் தமிழ் சமூகமும், அரசியல்வாதிகளும், அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரை நியூயோர்க்கில் சந்தித்து பேசிக்கொண்டதை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அமைச்சரான எரிக்சொல்ஹெய்ம் இலங்கைக்கு  விஜயம் செய்து வர்த்தகம் முதலீடு பற்றி பேசப் போவதையும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவர்கள் எரிக் சொல்ஹெய்மை அன்ரன் பாலசிங்கத்துடன் தனிப்பட்ட நட்பை கொண்டிருந்த சமாதானம் பேசும் தூதுவராகத்தான் அறிந்திருந்தனர்.
சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தையும் இலங்கை அரசியல் தலைவர்களையும் மக்களால் தெரியப்பட்டவர்களாக ஏற்று நடக்கும் காலம் தூரத்தில் இல்லை. சரத் பொன்சேகாவின் சகாப்தமான தற்போதைய கட்டத்தில் வெளிநாட்டு ஆதரவை நம்பியிருந்தவர்கள் அதற்கான விலையை செலுத்தியுள்ளனர்.
புலம்பெயர்ந்தோரிலிருந்து இரண்டாம், மூன்றாம் தலைமுறையிலும் புத்திஜீவிகளும், உணர்வுமிக்க அனுதாபிகளும் உருவாகியுள்ளனர். யுத்தத்தில் இறுதிமாதத்தின்போது பொறுப்பு அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பொறுப்பை ஏற்றவர்கள் தொடர்ந்து அதை வைத்திருப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புலம்பெயர்ந்தோரில் ஒவ்வொரு நாட்டிலும் தொடர்ந்து செயற்படுபவர்களும், புதிதாக உருவாகி வருவோரும் உள்ளனர். இவர்களிடையே சமூக, அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாலான முரண்பாடுகளும் உண்டு. எல்.ரி.ரி.ஈ. காலத்தில் அநுபவித்த அந்தஸ்து சௌகரியங்கள் மீதான பங்கு தொடர்பில் சச்சரவுகள் உண்டு. இது ஒட்டுமொத்தமாக தமிழ் சமூகத்துக்கு கெட்ட பெயரையே கொண்டுவரும்.
புலம்பெயர்ந்தோருக்கோ, தமிழ் சமூகத்துக்கோ இவை எதுவும் தேவையில்லை. இவர்களுக்கு தேவையானவர்கள் சிந்தனையுடன் செயற்படும் அரசியல் தலைவர்களே அல்லாமல் தேநீர் அருந்திக் கொண்டோ பியர் அருந்திக்கொண்டோ பேசிக் கொண்டிருப்பவர்கள் அல்லர். ஆனால், இப்போது அப்படியான எவரும் தென்படவில்லை. பாலசிங்கத்தை, புலம்பெயர்ந்தவர் தலைவரென கொண்டால், அவர் சிறந்த பேச்சுவார்த்தை நடத்துபவராகவும், நல்ல, வெளியில் புலப்படாத ஆலோசகராகவும் மட்டும்தான் இருந்தார் எனலாம்.
பாலசிங்கத்திடம், சுயாதீனமான தலைமைத்துவ பண்புகள் இருந்திருந்தாலும், அவர் அதை வெளிப்படுத்தவில்லை. பிரபாகரன் தனக்கு சமமாக யாரையும் வைத்திருக்க விரும்பவில்லை. அவருக்கு தேவைப்பட்டவர்கள் அவர் வழிச் செல்பவர்களே. அப்படியானவர்கள் அவருக்கு கிடைத்தனர். யாரை ஆலோசகராக வைத்திருப்பது என்பதையும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பிரபாகரனே தீர்மானித்தார்.
வெளிநாட்டிலும் சரி, உள்நாட்டிலும் இரண்டாம் கட்ட தலைமையில் இருந்தவர்களை பொறுத்தவரையிலும் சரி , இதே நிலைமைதான் காணப்பட்டது. கருணாவும் பிள்ளையானும் எல்.ரி.ரி.ஈ.யை விட்டு விலகினர். மாத்தையா தனது உயிரை விலையாக கொடுத்தார். இவர்கள் யாவரையும் இலட்சியத்துக்கு துரோகமிழைத்தவர்கள் என முத்திரை குத்தலாம். ஆனால் இதன் பின்னால், ஜனநாயகம், இராஜதந்திரம், அரசியல், அரசியல் தீர்வு என பல விடயங்கள் உண்டு.
இலங்கைத் தமிழ் சமூகம், தமக்கு வழிகாட்ட புலம்பெயர்ந்தோரிடமிருந்து புதிய தலைமைகள் உருவாகிவரும் என காத்திருக்க முடியாது. எல்.ரி.ரி.ஈ,க்கு புறம்பாக, யுத்த சகாப்தத்துக்கு முன்பிருந்தே இன்று வரை தலைவர்கள் இருந்துள்ளனர். இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உண்மையான அக்கறை புலம் பெயர்ந்தோருக்கு இருக்குமாயின் இலங்கை வாழ் தமிழரிடமே பொறுப்பை வழங்கவேண்டும்.
இவ்வருடன் ஜனவரியில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள், கிழக்கு மாகாண சபை தேர்தல், யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் என்பன மிதவாத அரசியலில் காணப்பட்ட இடைவெளிகளை நிரப்பும் தலைமையை உருவாக்கியுள்ளது.
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கான சமநீதி, சமத்துவம் தொடர்பில் புலம்பெயர்ந்தோர் உணர்வு பூர்வமாக ஈடுபாடுடையவர்களாக இருப்பினும், அவர்கள் தமிழ் அரசியலிலிருந்து விலகுவது நல்லதென்பதற்கு உரிய காரணம் உண்டு. புலம் பெயர்ந்தோரிடையேயாயினும் சரி, இலங்கையினும் சரி, தமிழ் அரசியல் தலைமை முக்கிய திருப்பு முனையில் உள்ளது. குறைந்தப் பட்சம், மிதவாத அரசியல் தலைமை புலம்பெயர்ந்தோரை பிரதிநிதித்துவப்படுத்தும். ஆளுமைமிக்கவர்களை இனங்கானமுடியும்.
ஆனால், எதிர்காலத்தில் இவ்வாறு இல்லாது போகலாம். புலம்பெயர்ந்தோரின் முதலாம் தலைமுறையே இறுதிக்கட்ட யுத்தத்தின் முன் இவ்வாறு காணப்பட்டது. அவர்களுக்கும் தத்தம் சொந்த பிரச்சினைகள் முக்கியமாக இருந்துள்ளன. புலம் பெயர்ந்தோருக்கும் இலங்கையில் உள்ள தமிழ் தலைமைகளுக்குமிடையில் உள்ள தொடர்புகள், மெதுவாக, முற்றாக அற்றுப் போகலாம்.
இலங்கைத் தமிழர்களுக்கு, புலம்பெயர்ந்தோரின் பொருளாதார உதவி தேவை. இலங்கை தமிழ் சமூகத்துக்கு அரசியல் இணக்கப்பாட்டுக்கு முன் புனர்வாழ்வு, புனரமைப்பு என்பவை முக்கியமாக தெரிகிறது. இதுவே நடைமுறைச் சாத்தியமானதும் அரசியல் ரீதியாக பொருத்தமாகவும் தெரிகிறது.
ஆனால் புலம்பெயர்ந்தோர் எதிர்திசையில் யோசிக்கின்றனர். இங்கு வாழும் தமிழர்களின் சூழ்நிலை, தேவைகள் எனப் பார்க்கும்போது புலம்பெயர்ந்தோர் தவறாக உள்ளனர். இப்படித்தான் இவர்களால் பார்க்கமுடியும். இதை பிழை சொல்லமுடியாது. அவர்கள் மாற வேண்டும். இவர்கள் இங்குள்ள தமிழ் மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்புக்கு தமது உதவியை வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு உருவாக்கம், சுகாதாரம், என்பவை தொடர்பில் அநாதரவாகியுள்ளவர்களுக்கு தமது சொந்த நிதியை வழங்க புலம்பெயர்ந்தோர் முன்வரவேண்டும்.
புலம்பெயர்ந்தோர் தமது கருத்தை மாற்றிக்கொள்ளும்வரை தமிழர்கள் காத்திருக்க முடியாது. புலம்பெயர்ந்தோர், தாம் வகுத்த தவறான முன்னுரிமைகளால் இங்கு வாழும், தமிழர்களின் அரசியல் கருத்தை அலட்சியம் செய்ததனால், அவர்கள் பொருளாதார ரீதியில் வளம் பெற உதவாது விட்டமையால், இங்கு வாழும் தமிழர்கள் துன்பப்பட்ட நேரின் புலம்பெயர்ந்தோர் தம்மைத்தான் குறை சொல்ல வேண்டும். புலம்பெயர்ந்தோர் தமது முன்னுரிமை பட்டியலை ஆராய்ந்து பூரணமாக மாற்றியமைக்க வேண்டும்.
நன்றி: தமிழ் மிரர்

யாழ். ஆதார வைத்தியசாலைகளுக்கு சத்திரசிகிச்சை படுக்கைகள் கையளிப்பு

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்காவின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்திலுள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகளுக்கு அவசர சத்திரசிகிச்சைப் படுக்கைகளும் மற்றும் நோயாளர்களின் படுக்கைகளும் யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள படைகளின் பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சத்திரசிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. சாவகச்சேரி வைத்தியசாலைக்கு இரண்டு சத்திரசிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. பருத்தித்துறை வைத்தியசாலைக்கு ஒரு சத்திரசிகிச்சை படுக்கையும் இன்று வழங்கப்பட்டன.அவுஸ்திரேலியா சிட்னி நகரில் இயங்கும் லக்சலிய அறக்கட்டளை நிறுவனம் இப்பொருட்களை வழங்கியிருந்தது. யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கா, இந்தப் படுக்கைகளை தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைப் பணிப்பாளர்களிடம் கையளித்தார். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி அதிபர், பயிற்சித் தாதியர்கள் உட்பட மற்றும் பலரும் படைத் தரப்பினரும் கலந்து கொண்டனர்.

போலி சான்றிதழ்களை வழங்கிய கல்வி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

இது தொடர்பான இணையத்தளத்திலும் தேடினோம். ஆனால் இப்படி ஒரு நிறுவனத்தை காண முடியவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜராகும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரங்கன் தேவராஜன்  கூறினார்.
ஐக்கிய இராச்சியத்தின் பிரபல கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படும் பட்டங்களை வைத்து மேற்கு நாடுகளில் வேலை வாய்ப்பையும் பெற்றுத் தருவதாக மாணவர்களை நம்ப வைத்து பல மில்லியன் ரூபாய்களை ஏமாற்றிப் பெற்ற யாழ். குடாநாட்டில் உள்ள கல்வி நிறுவனமொன்று சட்டத்தின் பார்வைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.

யாழ்பாணம், சங்காணை ஆகிய இடங்களில் உள்ள தனது கிளைகளில் இந்த நிறுவனம் ஒரு வருட டிப்ளோமா நெறியை நடத்தி வந்துள்ளது. இந்த பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு அயர்லாந்து சர்வதேச பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

டிப்ளோமா சான்றிதழ் "கேம்பிறிட்ஜ் அசோஸியேசன் மனேஜர்ஸ்" எனும் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தில் இல்லை என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த டிப்ளோமா சான்றிதழ்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் போலியானவை என்று நிராகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரங்கன் தேவராஜன் ஆஜராகியுள்ளார்.

இது தொடர்பான இணையத்தளத்திலும் தேடினோம். ஆனால் இப்படி ஒரு நிறுவனத்தை காண முடியவில்லை என ரங்கன் தேவராஜன் கூறினார்.

"பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் வதிவிட விஸாவும் வேலை வாய்ப்பும் பெற்றுத் தருவதாக இந்த போலி கல்வி நிறுவனத்தினால் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் உள்ளூர் பத்திரிகைகளிலும் விளம்பரங்களையும் செய்துள்ளனர். அந்த பத்திரிகைகள் இந்த நிறுவனங்களை பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டன என்றார் அவர்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாண நீதவான் முன் வந்த போது உரிமையாளருக்கு பிணை வழங்கப்பட்டது.

இவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாமென நீதிமன்றத்தால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தமிழ் மிரர்

தாய்லாந்திலிருந்து கனடா நோக்கிப் புறப்படவிருந்த அகதிக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது

தாய்லாந்திலிருந்து புறப்படவிருந்த கப்பலொன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தாய்லாந்து செய்தியூடகங்களை மேற்கொள்காட்டி ரொறன்ரோ சண் பத்திரிகையின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.இச் செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது, 114 இலங்கையர்கள் இன்று கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் அனைவரும் கப்பலொன்றில் ஏறுவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போதே இக் கைதுச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கனடிய அதிகாரிகள் தாம் இச் சம்பவம் பற்றி அறிந்துள்ளோம் என்றும் ஆனால் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களிற்கு முன்னரும் தாய்லாந்தில் 155 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் அகதிகளிற்கு எதிரான சட்டம் நடைமுறைக்கு வரவிருக்கும் காலத்தை அண்மித்ததாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடிய அரசு இச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்த போதும் எதிர்க்கட்சிகள் இச் சட்டத்திற்கு எதிராகவே வாக்களிக்கும் எனத் தெரியவருகிறது.  இதற்கான காரணம் யாதெனில் இச் சட்டம் குழுவாக வரும் அகதிகளை ஏனைய அகதிகளிடம் இருந்து வேறுபடுத்தவே என்பதேயாகும். கனடாவில் இயங்கிவரும் கனடியத் தமிழர் காங்கிரஸ் இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவங்கள் தொடர்பாக

எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலை ஏற்படாதவாறு நாம் நடவடிக்கை எடுப்போம். - யாழ். நூலகத்தில் இடம்பெற்ற பகிரங்க கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
கடந்த 23ம் திகதி யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத சில சம்பவங்கள் தொடர்பாக உண்மை நிலைமையினைக் கண்டறியவும் எதிர்காலத்தில் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் முகமாகவும் பொதுக்கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
யாழ். பொது நூலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். மாநகர ஆணையாளர் மு.சரவணபவ யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் யாழ். பொதுநூலக பிரதம நூலகர் உட்பட ஏனைய நூலகர்கள் பணியாளர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் பொலிஸ் உயர் அதிகாரிகள் புத்திஜீவிகள் நலன்விரும்பிகள் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வினை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இம்மாதம் 23ம் திகதி மாலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவங்கள் தொடர்பாக இங்கு வருகை தந்தோர் தமது அபிப்பிராயங்களையும் எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாவண்ணம் மேற்கொள்ளக்கூடியதான நடவடிக்கைகள் தொடர்பான தமது அபிப்பிராயங்களையும் தெரிவிக்கும்படி வேண்டிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அன்றைய சம்பவங்கள் தொடர்பாக யாழ். பொதுநூலகத்தின் பிரதம நூலகர் எஸ்.தனபாலசிங்கம் விடுத்த அறிக்கை முழுமையாக வாசிக்கப்பட்டது. இதன்பிரகாரம் மருத்துவ சங்கத்தின் அகில இலங்கை மாநாடு பொதுநூலகத்தில் இடம்பெற்றதன் காரணமாகவே சுற்றுலாப் பயணிகளை உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் அச்சமயம் சுமார் 37 பஸ்களில் வருகை தந்த சுற்றுலாப்பயணிகள் நூலக வாயிலில் திரண்டிருந்தமையே நெரிசலுக்கும் குழப்பத்திற்கும் முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதம நூலகரின் அறிக்கையினைத் தொடர்ந்து ஏனையோர் தமது அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏராளமானோர் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
இதில் மாநகரசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களான சங்கையா விந்தன் கனகரட்ணம் அஸ்கர் கிறேஷியன் பரஞ்சோதி மனுவல் மங்களநேசன் மேரி அம்மா அருளப்பு கொர்னேலியஸ் றெமீடியஸ் முஸ்தாபா விஜயகாந்த் நிஷாந்தன் ஆகியோரும் முன்னாள் யாழ். பல்கலைக்கழக பிரதம நூலகர் மரியநாயகம் சட்டத்தரணி ரங்கன் உள்ளிட்ட பொதுமக்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி திசேரா தெரிவிக்கையில் அன்றையதினம் யாழ். நூலக வாயிலில் அசம்பாவிதம் இடம்பெறுவதாக யாழ். மாநகர முதல்வரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து உடனடியாகவே தான் அங்கு சென்றதாகவும் அச்சமயம் பெருந்தொகையான சுற்றுலாப்பயணிகள் வாயிலில் திரண்டிருந்த அதேவேளை பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறினார். உரியதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வாயில் திறக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அனைவரும் நூலகத்தை பார்வையிட்டதாகவும் இறுதி பயணி வெளியேறிச் செல்லும்வரை தான் அங்கேயே தங்கிநின்று அதனை உறுதிப்படுத்தி முதல்வருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்த பின்னரே அங்கிருந்து அகன்றதாகவும் உறுதிபடத் தெரிவித்தார். ஆயினும் பத்திரிகைகளில் மாறுபட்ட செய்திகள் வெளிவந்தமை குறித்து தனது மனவருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
பொலிஸ் பொறுப்பதிகாரியை தொடர்ந்து தமது கருத்தினை வழங்கிய 512 பிரிவின் யாழ் நகர கட்டளை அதிகாரி கேணல் பலவில்ல அன்றைய சம்பவம் தொடர்பாக விபரிக்கையில் பொலிஸார் கேட்டுக்கொள்ளும் பட்சத்திலேயே பொதுமக்கள் அசம்பாவிதம் தொடர்பாக இராணுவத்தினர் அழைக்கப்படுவார்கள் எனத்தெரிவித்ததுடன் குறிப்பிட்ட சம்பவத்தில் அவ்வாறானதொரு தேவை ஏற்பட்டிருக்கவில்லை என்றும் வழமையாக அப்பகுதியில் கடமையிலிருந்த இராணுவத்தினரே பிரசன்னமாகி இருந்ததாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர் தற்போதைய அமைதிச்சூழலில் யாழ். குடாநாட்டில் பல்வேறு சேவைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு தென்னிலங்கை சுற்றுலா மீளக்குடியேறும் மக்களுக்கு வீடமைத்துக் கொடுத்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் இவை தொடர்பான செய்திகள் உள்ளுர் பத்திரிகைகளில் வெளியிடப்படுவதில்லை என்பதுடன் வதந்திச் செய்திகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துக்கொண்டார்.
இப்பொதுக் கலந்துரையாடலின் நிறைவாக உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிய ஏற்பாடுகள் அறிவித்தல்கள் வழங்கப்படாத நிலையில் அன்றைய தினம் ஏற்பட்ட குழப்பத்திற்கு சகல தரப்பினரிடமும் ஓர் அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் சார்பாக தான் மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார். நடந்தவை நடந்வையதாக இருக்கட்டும் எனத் தெரிவித்த அமைச்சரவர்கள் இத்துடன் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனத்தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் இப்படியான சூழல் ஏற்படாதவாறு அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியதுடன் யாழ் பொது நூலகத்திற்குள் வரும் பார்வையாளர்களை ஒரு தடவைக்கென வரையறை செய்து ஒரு தொகையினர் வீதம் உள்வாங்குவதற்கான ஏற்பாடுகளை பொதுநூலக அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்டு பொலிஸாரினதும் ஒத்துழைப்பைப் பெற்று அதை நடைமுறைப்படுத்தும் படியும் ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

சவூதி மன்னரின் அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் கடிதம் கையளிப்பு

இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு எழுதிய கருணை மனு மன்னரின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கையெழுத்திட்ட கருணை மனு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக கருணை மனுவை ஏற்கும் மன்னரின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார். இது தொடர்பில் சவூதி அரசிடமிருந்து பதிலை எதிர்பார்த் திருப்பதாகவும் அவர் கூறினார்.
திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஷானா நஃபீக் சவூதியில் பணிப் பெண்ணாகத் தொழில் புரிந்த வீட்டு எஜமானரின் கைக்குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டி அவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து ரிஷானாவின் மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு பல மனித உரிமை அமைப்புகள் மனுச் செய் திருந்தன.
இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இவற்றை நிராகரித்த சவூதி உயர் நீதிமன்றம் ரிஷானாவுக்கான மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்நிலையில், ரிஷானா எந்தவேளையிலும் தூக்கிலிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு ரிஷானாவை மன்னிக்குமாறு சவூதி மன்னருக்கு கருணை மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார். இந்த மனு இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்திற்கும் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
சவூதியிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள், மன்னரின் அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் அவர் கூறினார்.

அரசைக் கவிழ்க முயன்றவர் விடுதலை.

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது சிறைவாசம் அனுபவிப்பவருமான சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசாங்கத்தினை கவிழ்க முற்பாட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சரத் பொன்சேகாவின் செயலாளர் கப்டன் சேனக சில்வா குறித்த குற்றச்சாட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளர்ர்:

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அறிக்கை ஒன்றை நீதிமன்றிற்கு சமர்பித்த இரகசிய பொலிஸார், சந்தேகநபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு சமர்பித்துள்ளதாகவும், அந்த அறிக்கையினை பரிசீலித்த சட்டமா அதிபர் சந்தேகநபர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க போதுமான சாட்சியங்கள் இல்லையெனக் கூறியதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

ரஜினியின் அடுத்த டூயட் யாரோடு?



        ரஜினியை இன்னும் அதே இளமையோடு தான் ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை எந்திரன் மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறது. இந்த நிலையில் ரஜினியோடு அடுத்து டூயட் பாடப்போகும் ஹீரோயின் யார் என்ற பரபரப்பு சினிமா வட்டாரத்தில் துவங்கிவிட்டது.

 

ரஜினியின் 'ஹரா' (சுல்தான் தி வாரியர்) படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பார் என செய்திகள் கசிகின்றன. இந்தியில் வெளியான சந்திரமுகி ரீமேக்கில் சந்திரமுகியாக  நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எந்திரனின் இந்தி பதிப்பான ரோபோ படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட பாலிவுட் இளம் நடிகைகள் ரஜினியுடன் நடிக்க தன் விருப்பத்தை தெரிவித்துக்கொண்டனர். சோனக்ஷி சின்ஹா 'ரஜினியுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தால் நான் சந்தோஷப்படுவேன்' என்று சொன்ன போது அருகில் இருந்த பிரியங்கா சோப்ரா 'ரஜினியோடு சேர்ந்து நடித்தால் அதை விட சந்தோஷம் என் வாழ்வில் எதுவும் இல்லை. என் முதல் படம் தமிழில் தான் அமைந்தது. ரஜினி இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று சொல்லி துள்ளி குதித்தார். ஆனால் எல்லோரும் வாயில் கை வைக்கும்படி அந்த வாய்ப்பு வித்யா பாலனுக்கு வாய்த்திருக்கிறது. 

இதுகுறித்து வித்யா பாலன் பேசுகையில் 'ரஜினியோடு நடிப்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் அந்த வாய்ப்பு வந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். இந்த செய்தியை கேட்டதும் என்னைவிட என் பெற்றோருக்கு தான் அதிக மகிழ்ச்சி. ரஜினியோடு நடிக்க நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்' என்று பரவசத்தோடு தன் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.  

'மன்மதன் அம்பு' ஷூட்டிங் முடிந்திருப்பதால். 'ஹரா' பணிகளில் இறங்கிவிட்டார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அனிமேஷன் ரஜினிக்கு விஜயலட்சுமி ஜோடியாக நடித்துக்கொண்டிருக்க, ஒரிஜினல் ரஜினிக்கு ஜோடி யாரு என்பது விரைவில் தெரிய வரும்..!

குறும்பு செய்யும் குழந்தைக்கு எறும்புக்கடி : தனியார் பள்ளிகள் குரூரம்

கோவையில் உள்ள சில தனியார் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் மாணவர்களை வழிக்கு கொண்டு வர, காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளை கடைபிடிக்கின்றன. இதன் உச்சகட்டமாக, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், குறும்பு செய்யும் குழந்தைகளை மரத்தில் கட்டி போட்டும், எறும்பால் கடிக்கச் செய்தும், தண்டித்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாணவர்களை அடிப்பது, உடல் ரீதியாக துன்புறுத்துவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது ஆகியவை, நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் உள்ள சில தனியார் பள்ளி ஆசிரியர்கள், இதுகுறித்து கவலைப்படுவதே இல்லை. இவர்கள், மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனைகள் விபரீதமானவை. மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைப்பது, ஸ்டீல் ஸ்கேலால் கை, கால் முட்டி, தலையில் அடிப்பது என தண்டனைகளின் பட்டியல் நீள்கிறது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் துவக்கப் பள்ளி அளிக்கும் தண்டனை கொடூரத்தின் உச்சகட்டமாக உள்ளது. மாணவர்களை வழிக்கு கொண்டு வர, இப்பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தும் யுக்திகள் பதற வைக்கின்றன. சரியாக படிக்காத, குறும்பு செய்யும் சிறு குழந்தைகளுக்கு இப்பள்ளி ஆசிரியர்கள் அளிக்கும் தண்டனை தான் "எறும்புக்கடி!' சொல்படி கேட்காத சிறு குழந்தைகளை, இங்குள்ள ஒரு சிறு மரத்தில், கயிற்றால் கட்டிப் போட்டு விடுகின்றனர். மரத்தின் அடிப்பகுதியில் உள்ள சிவப்பு எறும்புகளின் கடி தாங்காமல் குழந்தைகள், கால்களை மாற்றி, மாற்றி வதைபட்டு கதறுவதை பார்க்கும் பிற குழந்தைகள், மனதளவில் மிரண்டு விடுகின்றனர்.

இதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் கூறுகையில், "சினிமாவில் கூட இதுபோன்ற கொடுமையை பார்க்க முடியாது. சிறிது நேரத்தில் கட்டுகள் அவிழ்த்து விடப்படும் மாணவனுக்கு, கடும் எச்சரிக்கை விடுக்கின்றனர். பெற்றோரிடம் சொன்னால், "டிசி' கொடுத்து அனுப்பி விடுவதாக மிரட்டுகின்றனர். மிரட்டலால் மிரண்டு போகும் குழந்தைகள், இதுகுறித்து பெற்றோரிடம் மூச்சு விடுவதில்லை. வேறு வழியில்லாமல் இங்கு வேலை செய்கிறோம்' என்றார். பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இல்லை. இதனால், இதுபோன்ற தண்டனைகள் குறித்து பெற்றோர் கூட்டாக கேள்வி எழுப்ப முடிவதில்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பல ஆசிரியர்கள், முறையான ஆசிரியர் பயிற்சி முடிக்காத பட்டதாரிகள். இதனால், ஆசிரியர் பயிற்சியின் போது கற்றுத் தரப்படும், "சைல்டு சைக்காலஜி' குறித்தெல்லாம் இவர்களுக்கு தெரிவதில்லை. ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகமோ, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களோ கண்டு கொள்வதில்லை என்பதே பெற்றோரின் குற்றச்சாட்டு.
kumaravel - mysore,இந்தியா
2010-10-29 17:52:03 IST
the above news is a shocking one.whether we are liviing in a civilized world. the whole blame goes to parents .they think just put the kid in a so called reputed schools paying thro their nose,they think they had done their job.they never follow up.with the kids and never discuss with them what problem they are facing in the school,what type of teachers they have.the ladies spend their time watching t.v.serials and gents spend their time in bars. the kids left to their own ,suffering...
2010-10-29 17:34:07 IST
Highly ridiculous -. the school should be ashamed for doing this to the innocent children . I request Tamil Nadu Government to take immediate steps to stop this nonsence and to reveal the name of the school following this practice....
கண்ணன் நாராயணசாமி - ஆலமரத்துப்பட்டி...சிவகாசி,இந்தியா
2010-10-29 16:55:27 IST
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், police should register a complaint take action against school. குழந்தைகளிடம் அன்பு காட்டுங்கள் ப்ளீஸ்...
Raja - uk,இந்தியா
2010-10-29 16:19:39 IST
these kids are not animals. I have come across many idiots like this as my teachers. Raja...
அருண் Gulf - Gulf,இந்தியா
2010-10-29 16:05:48 IST
மிக்க நன்றி தினமலர் . நல்ல சேவை செய்கிறிர்கள் ....
augustin - Chennai,இந்தியா
2010-10-29 16:04:46 IST
Is it true? It might be a single incident. Why should a teacher take such a big risk? Who is the benificiery?...
ராம் - chicago,இந்தியா
2010-10-29 15:57:40 IST
வெட்கம் கெட்ட இந்திய வில் மட்டும் இது போன்ற சய்திகள் , ஒரு பள்ளி என்று எழுததிர்கள் பள்ளி இன் பெயர் ரய் வலிய்டவும்...
said mohamed - coimbatore,இந்தியா
2010-10-29 15:48:43 IST
what is this ,all of u thing goverment empoly u make dutty corrctly...
Sangeetha - chennai,இந்தியா
2010-10-29 15:47:44 IST
ஐயோ! பாவம் அந்த குழந்தைகள்! பொறுமை அற்ற ஆசரியர்கள். அடிப்பதும், தண்டிப்பதும் சுலபம், அதனால் இது எல்லோராலும் வரவேற்க படுகிறது. குழந்தைகளை சமாளிக்கும் திறமை, அவர்களை புரிந்துகொள்ளும் அறிவு ஆசிரியர், பெற்றோர் இருவருக்கும் குறைவு. எந்த பெற்றோர் தன் குழந்தயை அடிக்காமல் வளர்கிறார்கள்? அங்கே ஆரம்பிகிறது அடிப்பது சரி என்னும் எண்ணம். அதனால் பெற்றோர்களே தயவு செய்து உங்கள் குழந்தைகளை அடிக்காதீர்கள். நாளய சமுதாயம் நல்ல திறமையுள்ள சமுதாயமாக வல்லாரும். Please parents learn to handle kids without slapping and beating...
கணேஷ் - மாலத்தீவுகள்,மாலத்தீவு
2010-10-29 15:29:05 IST
""எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிரக்கைய்லே"" அவை நல்லவராவதும், தீயவராவதும், அன்னை வளர்ப்பதிலே.... """அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்""".........
c.ramasamy - tup,இந்தியா
2010-10-29 15:12:05 IST
இந்த மாதிரி கொடுமை பண்ணுவதற்கு..பேசாம டிசி..குடுத்து அனுப்சரவேண்டியதுதானே....ii...
Manimegalai Sureshkumar - Karaikudi,இந்தியா
2010-10-29 14:51:50 IST
அந்த பள்ளி யின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்ய பட வேண்டும்....
பவுல்raj - Singapore,சிங்கப்பூர்
2010-10-29 14:49:44 IST
கோயம்புத்தூர் வாசகர் சொல்வது சரி தான். பள்ளியின் பெயரை வெளியிடுங்கள். அப்பொழுது தான் மற்ற பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும்....
த.கர்ணன் - சென்னை,இந்தியா
2010-10-29 14:32:16 IST
இது சிஸ்டம் failure அரசு இயந்திரத்தின் சிஸ்டம் சரிசெய்யப்பட வேண்டும்....
siva - Bangalore,இந்தியா
2010-10-29 14:31:12 IST
இந்த செய்தியை படிக்கும் போதே அதிர்ச்சியாக இருக்கிறது. இது போன்ற தண்டனைகள் குழந்தைகள் மனதில் ஒரு வன்மத்தை ஏற்படுத்தி விட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. வருத்தமாக இருக்கிறது....
முத்து siva - Bangalore,இந்தியா
2010-10-29 14:25:09 IST
Congratues to தினமலர் , first எல்லா பாரேன்ட்சம் ஒண்ட பேசி நல்ல mudivu எடுக்க வேண்டும்...
KALPANA - coimbatore,இந்தியா
2010-10-29 14:21:20 IST
கொடுமையான இந்த செயல்களை செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . பெற்றோர் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளை அவ்வப்போது சென்று பார்க்க வேண்டும் . பெற்றோரே விழித்திடுங்கள் ....
சத்யா - சென்னை,இந்தியா
2010-10-29 13:50:53 IST
பனிஷ்மென்ட் என்ற பெயரில் குழந்தைகளை துன்புறுத்தும் அடாவடி டீச்சர்களை பெற்றோர்கள் உதைத்தால்தான் அவர்களுக்கு புத்தி வரும். செய்வார்களா?...
பிரபு - நியூஜெர்சி,இந்தியா
2010-10-29 13:39:18 IST
இது போன்று செய்பவர்களை மன நல காப்பகத்தில் சேர்த்துவிட வேணும். ஏன் பிள்ளை படிக்கும் பள்ளி, பெற்றோறரை பள்ளிக்கு வர அனுமதி மறுக்கிறது. ஏன் என்று புரியவில்லை ?...
சிதம்பரம். Ct - Kabul,ஆப்கானிஸ்தான்
2010-10-29 13:31:34 IST
இது போன்ற அசுரப் பள்ளிகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும். கோவையில் உள்ள நல்ல உள்ளம் கொண்ட வழக்கறிஞர் யாராவது பொதுநல வழக்கு தொடரலாம். அல்லது தினமலர் செய்தியை அடிபடையாக கொண்டு " தன் சுய வழக்காக" (Suo Motto ) ஏதாவதொரு நீதிபதி எடுத்துக்கொண்டு விசாரணைக்கும் தகுந்த நடவடிக்கைக்கும் உத்தரவிட வேண்டும்...
பஹீமின் தந்தை இ.ஹ.மைந்தன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-29 13:13:55 IST
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில என்பார்கள். கோவை தனியார் பள்ளிகளின் செய்கை குழந்தைகளின் வாழ்வில் திண்டாத்தத்தை ஏற்படுத்திவிடும். அன்பு ஒன்றுதான் குழந்தைகள் கொண்டாத்தத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த அறிவிலிகள் உணர வேண்டும்....
சு. ராகவன் - chennai,இந்தியா
2010-10-29 12:59:14 IST
இது போன்ற பள்ளிகளின் லைசென்சை கான்செல் செய்வதோடு குற்றம் புரிந்த ஆசிரியருக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும். பெற்றோர்களே!, உங்கள் கவனத்திற்கு !, தினமும் பள்ளி முடிந்து வரும் உங்கள் குழந்தைகளை, அன்றைக்கு பள்ளியில் நடந்த விஷயங்களை கேட்டு அறிவதனால் உங்கள் குழந்தைக்கு நடக்கும் இது போன்ற அக்கரமங்களை தட்டி கேட்க இயலும். இப்படிக்கு, சு. ராகவன்....
கருத்து நய்யாண்டி.. - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-10-29 12:44:04 IST
கல்வி தொழிலின் போட்டி,மற்றும் பொறாமையால் எவனோ ஒரு பயபுள்ள கிளப்பிவிடுகிற பொரளியாக இருக்கும்.இப்படி யாராவது செய்வார்களா?... அதை நம்ம புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு ஆசிரியர் சொல்கிறார் என்று இது எல்லாம் உண்மை என்று எப்படி நம்புவது. இந்த ஆசிரியையும் ஒரு உதாரணம் கொடுக்கிறது,அதவும் இந்த கோமாளி தொழில் சினிமாவில் கூட இப்படி செய்வதில்லை என்று.இந்த ஆசிரியை ஒரு சினிமா பைதியகாரியாக பொம்பளையாக இருக்கும் போல் தெருகிறது....

வரதட்சணை கொலைகளுக்கு மரண தண்டனை!



உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கீதா என்ற பெண் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி அவரது மாமியார் மற்றும் கணவரால் தீவைத்துக் கொளுத்தப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

வரதட்சணை கொடுமையால் கீதா கொலை செய்யப்பட்டதாக கணவர் சத்யநாராயண் மற்றம் அவரது தாயார் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கில் பஞ்சாப் ஐகோர்ட் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தாயும் மகனும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் ஜி.எஸ்.மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் விசாரித்து, இருவருக்கும் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
வரதட்சணை கொலைகளை மிக மிக அரிதான கொடிய கொலை குற்றமாக கருதி மரண தண்டனை விதிக்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து நீதிபதிகள்,
’’வரதட்சணை கொலைகள் சமூக குற்றங்களாகும்.

ஒட்டுமொத்த சமுதாயத்தை சீர்குலைப்பதாகும். நமது சமூகம் வர்த்தக மயமாகிவிட்டது. பணத்தின் மீதுள்ள பேராசை, மனைவியை கொலை செய்யும் அளவுக்கு கொண்டுபோய் விடுகிறது. இந்த தீய பழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
வரதட்சணை கொலைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இத்தகைய குற்றங்கள் அரிதான குற்றங்களாக இல்லாவிட்டாலும் அதன் கொடூரம், பயங்கரம் கருதி வரதட்சணை கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கலாம்’’என்று தெரிவித்தனர்.


போர்நிறுத்த உடன்படிக்கையின் அனைத்துப் பிரிவுகளும் புலிகளை பலப்படுத்துவதாகவே அமைந்திருந்தன.

போர்நிறுத்த உடன்படிக்கையின் அனைத்துப் பிரிவுகளும் புலிகளை பலப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. போர்நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் நோர்வேயை பங்கெடுக்க வைப்பதற்கு அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் தவறானது. ஆசியாவின் எண்ணக்கருவை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியாது. மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளின் நண்பராகவே செயற்பட்டார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசும் நோர்வே இவ்வாறு செயற்படுவதா? போர்நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் நேர்வேயை பங்கெடுக்க வைப்பதற்கு அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் தவறானது. ஆசியாவின் எண்ணக்கருவை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியாது. சிங்கள தமிழ் மக்களின் எண்ணங்களை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் புலிகளின் நண்பராகவே செயற்பட்டார். புலிகள் தவறு செய்கின்றனர் என்பதனை பவர் என்பவர் உணர்ந்தார். ஆனால் எரிக் சொல்ஹெய்ம் அவ்வாறு இல்லை. எத்தியோப்பியா இஸ்ரேல் விடயங்களில் நோர்வே புறந்தள்ளப்பட்டது. நேபாளத்துக்கு அனுமதிக்கப்படவுமில்லை. ஆனால் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மட்டத்தில் நோர்வேயுடன் தொடர்புகள் பேணப்படுவதாக தெரிகின்றது. அரச சேவை சுயாதீனமாதாக இயங்கவேண்டும். அரச ஊழியர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும். அந்த வகையில் 18வது திருத்தச் சட்டம் சிறந்தது. காரணம் அனைத்து விடயங்களும் இறுதியாக ஜனாதிபதியிடம் செல்கின்றது. எனவே மக்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை நோக்கி விரல் நீட்டும் நிலைமை வரலாம். அதாவது அவர் பொறுப்புள்ளவராக இருக்கின்றார். இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படையினர் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டு நட்டஈடுகள் வழங்கப்படுவது அவசியமாகும். அவர்களின் பிள்ளைகள் பற்றியாவது சிந்திக்கவேண்டும். புலிகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் நட்டஈடுகள் அவசியமாகும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செஞ்சி சிறையில் இளம் பெண் கற்பழிப்பு-3 சிறைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

சென்னை: செஞ்சி கிளைச் சிறையில் ரீட்டா மேரி என்ற பெண்ணை கற்பழித்த வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 சிறைக் காவலர்களுக்கு, அதை உறுதி செய்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2001ஆம் ஆண்டு திண்டிவனத்தில் இளம்பெண் ரீட்டா, பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டார். செஞ்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணை, சிறைக்காவலர்களே கற்பழித்த கொடுமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சிறை காவலர்கள் மீது திண்டிவனத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், செஞ்சி கிளை சிறையின் தலைமை காவலர் நாசர் மற்றும் சிறைக்காவலர்கள் ஜெயபாலன், அன்பழகன், ராமசாமி ஆகிய 4 பேருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதித்து 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஒரு வார்டன் மட்டும் விடுவிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து தண்டனை பெற்ற 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுதந்திரம், சிறை காவலர்கள் ராமசாமி, ஜெயபாலன், அன்பழகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், தலைமை சிறைக்காவலர் நாசர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவரை மட்டும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை இரத்துச் செய்யக்கோரும் பொன்சேகாவின் மனு நிராகரிப்பு..!

2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை இரத்து செய்யக்கோரி ஜனநாய தேசிய கூட்டணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழுவே இந்த மனுவை நிராகரித்துள்ளது.

திருச்சி கல்லறையில் ஜாதி வெறி-இடிக்கப்பட்டது தீண்டாமைச் சுவர்

திருச்சி சிறையில் ஜாதி ரீதியாக கல்லறையைப் பிரித்துக் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரை இடிக்கும் போராட்டம் இன்று நடந்தது. இதில் ஈடுபட்ட தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தினரை போலீஸார் அப்புறப்படுத்திக் கைது செய்தனர்.

பெரியார் காலத்திலிருந்தே இந்த தீண்டாமைச் சுவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மேலபுதூரில் உள்ள உத்திரமாதா கோயில் கல்லறையில் தலித் மக்களுக்காக ஒரு பகுதியும், பிள்ளைமார் உள்ளிட்ட பிற ஜாதியினருக்கு தனி இடமும் ஒதுக்கி கல்லறையே இரண்டாகப் பிரித்து வைத்து சவ அடக்கங்களை நடத்தி வருகின்றனர். கல்லறைக்குப் போகும் இடத்திலும் நிலவி வந்த இந்த ஜாதி வெறி இன்று நேற்றல்ல பல காலமாக இருந்து வருகிறதாம்.

இதைக் கண்டித்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் நிலவன் தலைமையில், 10 பேர் கொண்ட கும்பல் கடப்பாறை, சம்மட்டி, சுத்தி ஆகியவற்றை கொண்டு சுவரை இடித்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் நிலவன்,

திருச்சி மாநகரில் மைய பகுதியில் மேலபுதூரில் அமைந்துள்ளது உத்திரமாதா கோயில் கல்லறை. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லறையில் ஆயிரக்கணக்கானோர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தில்லை மாநகர், தருமநாதபுரம், செங்குலம் காலணி, செந்தநீர்புரம், நாசிங்பேட்டை, வரகநெரி, ராஜாபேட்டை, மன்னார்புரம், ஜங்ஷன், காஜாமலை உள்ளிட்ட 32 பகுதிகளைச் சேர்ந்த கிருத்துவ மக்களுக்கு சொந்தமான இந்த கல்லறையில், தீண்டாமை சுவர் ஒன்றை எழுப்பி, நாங்கள் மேல் ஜாதி என்று அழைத்துக்கொள்ளும் பிள்ளைமார், ஆசாரி ஜாதியை சேர்ந்த கிருத்துவர்களை அடக்கம் செய்வதற்கு தனியாகவும், தாழ்த்தப்பட்ட கிருத்துவ மக்களை அடக்கம் செய்ய தனியாகவும், ஜாதிக் கண்ணோட்டத்தில் கல்லறையை இரண்டாக பிரித்து சுவர் எழுப்பியுள்ளனர்.

மதம் மாறிய பிறகும் ஜாதிக் கொடுமையா?

இந்த இரண்டு பிரிவினரும் ரோமன் கத்தோலிக்க (ஆர்.சி) பிரிவை சேர்ந்தவர்கள். இந்த இரண்டு பிரிவினரும் ஒரே கோயில் பங்கு உடையவர்கள். இந்து மதம் சாதியின் பெயரால், கொடுமை பிடியில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காக கிருத்தவ மதத்தை தழுவிய லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை, அதே சாதி கொடுமையினால் வாட்டி வதைப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாது, கிருத்துவ மதத்திற்கு அவமானத்தையும், துயரத்தையும் வழங்குவதோடு தங்களை பழைய சாதி அடையாளங்களை தக்க வைத்துக்கொள்வது மூலம் கிருத்துவ மதத்தை இந்துத்துவ படுத்தும் வேலையாக ஆதிக்க சாதிவெறி பிடித்த கிருத்தவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

பெரியார் காலத்திலிருந்தே இருக்கும் ஜாதி வெறி

இவர்கள் சாதிவெறிக்கு இந்த மேலபுதூரில் கல்லறையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவர், பெரிய எடுத்துக்காட்டாகும். 1960ல் மேலபுதூரில் உள்ள ஜாதி சுவரை இடித்து தள்ளுவேன் என பெரியார் கூறினார். ஆனால் கிருத்தவ வெள்ளாளர்களுக்கும், ஆசாரிகளுக்கும் சில தாழ்த்தப்பட்ட கிருத்தவர்கள் கை கூலியாக மாறியதால், பெரியாரின் முயற்சி தோல்வி அடைந்தது என்றார்.

பின்னர் நிலவன் தலைமையில், 10 பேர் கொண்ட கும்பல் கடப்பாறை, சம்மட்டி, சுத்தி ஆகியவற்றை கொண்டு சுவரை இடித்தது. அப்போது பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் வந்த போலீசார், 10 பேரை கைது செய்தனர். அப்போது அவர்கள், இறந்து பின்னும் சாதி எதற்கு? மரியே நியாயமா? என்ற கோஷங்களை எழுப்பினர்.

மதுரை மாவட்டத்தில் இருந்து வந்த ஒரு தீண்டாமைச் சுவருக்கு சில காலத்திற்கு முன்புதான் தீர்வு காணப்பட்டது. இருந்தாலும் அங்கு இன்னும் தீண்டாமை ஒழியவில்லை. இந்த நிலையில் மரணத்திற்குப் பின்னர் அனைவரும் சமம் என்ற நிலையிலும், அங்கும் ஜாதி வெறி தலைவிரித்தாடும் செயல் பரபரப்பையும், வேதனையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
பதிவு செய்தவர்: மனிதன்
பதிவு செய்தது: 29 Oct 2010 6:39 pm
எல்லோரும் ஒரு பிடி சாம்பல்தாண்டா ....

பதிவு செய்தவர்: கிறுக்கு மேரி
பதிவு செய்தது: 29 Oct 2010 6:33 pm
செத்த பின்னும் சாகாத சாதி... ஆம் இயேசு கூட அப்பன் வழியில் பார்த்தால் ஆசாரி சாதியை சார்ந்தவன் என்று ஒரு பிரிவும், இல்லை இல்லை ஆத்தா வழியில் பார்த்தால் அவுசாரி சாதியை சார்ந்தவன் என்று இன்னொரு பிருவும் உரிமை கொண்டாடுகிறார்களாம். எங்கே போய் சொல்வது இந்த உரிமை போரை?

பதிவு செய்தவர்: முருகன்
பதிவு செய்தது: 29 Oct 2010 6:03 pm
பார்.பானை எல்லாம் கொன்னு போட்டாதான் ஜாதி ஒழியும்

பதிவு செய்தவர்: மனிதன்
பதிவு செய்தது: 29 Oct 2010 5:57 pm
பிணம் தின்னும் நாய்களே என்று நீங்கள் மாறுவிர்கள்?