மோடியின்பிம்பத்தைப்பெரிதுபடுத்திக்காட்டும் இணையதளமோசடிகள்அம்பலம்!
தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தில்லுமுல்லுகள்!
தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தில்லுமுல்லுகள்!
புதுடில்லி, நவ.30- தொழில் நுட்பத்தில்
நெளிவு சுளிவுகளைப் பயன்படுத்தி இணைய தளங்களில் பொய்யான வற்றையும், கற்பனை
களையும் கலந்து நரேந் திரமோடியைத் தூக்கி நிறுத்தும் முகத்திரை தில்
லுமுல்லு அம்பலத்துக்கு வந்துள்ளது.
கோப்ரா போஸ்ட் எனும் இணையதள ஏடு 'ஆபரேசன்
புளு வைரஸ்' என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவ
னங்களின் செயல்பாடு களை ஆய்வுசெய்தது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில்
போலியாகப் புகுந்த இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவ
னங்களில், 12 நிறுவனங்கள் மற்றவர்களின் முக வரிக்குள் கடுமையான முறையில்
உருவாக்குகிற ஒவ்வொரு கருத்துக்கும், ஏராளமானோர் ஆத ரித்து கருத்து
எழுதுவது போல் ஓர் அறையில் அமர்ந்துகொண்டே எழுதித்தள்ளுகிறார்கள் எனத்
தெரியவந்ததாக, கோப்ரா போஸ்ட் ஆசிரியர் அனிருத்தா பஹல் தெரிவிக்கிறார்.
அவதூறில் பா.ஜ.க.வே முன்னணி! இந்த மோடி ஒரு டுபாக்கூர் ஆசாமி !சாயம் ஒரு நாள் வெளுக்கும்