Uma Pa Se : Not to sound pessimistic.
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட Projectகளை நைச்சியமாக ஆள்பவர்கள் தலையில் கட்டப்படும்போது அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்துவிட்டு அதை own செய்வது நன்று.
இல்லாவிட்டால் யாருடைய மோசமான திட்டமிடலுக்காகவோ பழியும் ஏசலையும் சந்திக்க நேரிடும்.
ஏனெனில் கடந்த ஆட்சியில் நடந்த 80% மேற்பட்ட முன்னெடுப்புகள் மக்களுக்காக தொடங்கப்பட்டவை அல்ல.
எதற்காக யாருக்காக என்று ஊருக்கே தெரியும்.
ஏனெனில் வேலூர் ஜோலார்பேட்டையில் கடும் வரட்சியும் தண்ணீர் பஞ்சமும் நிலவிய காலத்தில்,
அங்கிருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டுவரும் "மகத்தான " யோசனையை,
ஒரு நடைக்கு 8.6 லட்சம் ரெயில்வேவுக்கு கட்டி தண்ணீர் கொண்டுவரும் திட்டம் கொண்டுவந்ததும்,
smart city என்ற பெயரில் நடந்த கூட்டுக் கொள்ளை நடந்ததும் கடந்த ஆட்சியில் தான்.
அந்த கட்சியின் முன்னோடி ஆவியாகிவிடும் ஆறுகளுக்கு asbestos sheet போட்டு மூட முடியுமா என்று யோசித்த பொன்மனச்செம்மல்.
சனி, 30 டிசம்பர், 2023
பழைய தவறான Projectகளை ஒழித்துவிட்டு well planned and thoroughly feasibility ensured projectகள் தொடங்குவது சிறந்தது.
அதர்மம் மனோஜ் குமாருக்கும் மதி மாறனுக்கும் கொள்கை முரண்பாடா? தனிப்பட்ட மோதலா
Manoj Kumar : மதிமாறன் என்ற மண்டை வீங்கி ஒன்னு,,தனக்கு மட்டும் மூளை இரட்டிப்பு மடங்குங்கற கற்பனை உலகுல வாழக் கூடிய ஒரு ஜந்து,,
பெரியார் இயக்கத்துக்கே தான் தான் அம்பேத்கரை அறிமுகப்படுத்தியது போலவும்,
அதற்கு முன்னர் எல்லாம் பெரியார் இயக்கங்கள் ஏதோ தலித் விரோதிகளாக இருந்தது போல எல்லாம் பேசிய போதும்,
அவங்க பெரியாரை திட்டுனா,நீங்க பிரபாகரனை திட்டுங்க என லூசுத்தனமாக பரிந்துரைத்த போதும்,
சீமான் சொல்வது போல பெரியார் இயக்கத்தினருக்கு தெலுங்கு பாசம் என கேனத்தனமாக உளறிய போதும்,,,,
இதற்கெல்லாம் எதிர்வினையாற்றிய காரணத்தால் அப்போதிருந்தே என் மீது ஜீரணிக்க முடியாத அளவு வன்மத்தை வைத்திருக்கும் ஒரு பீசு,,,
மேலும் இவருடைய விசம அரசியலை புரிந்து கொண்ட இயக்கங்கள் இவரை மேடை ஏற்றுவதை நிறுத்தி விட்டனர்,,
விஜயகாந்த் மகன் 10 அடியாட்களை ஏவி விட்டு வடிவேலுவை தாக்கினார்! வடிவேலு விஜகாந்த் பகை flash back
VS Maran : வடிவேலு பத்தி விமர்சனம் செய்பவர்களுக்கு
பிரேமலதா உறவினர்கள் ஒரு முறை விஜயகாந்த் வீட்டிற்கு விருந்துக்கு வந்த விருந்தாளிகள்
அதே தெருவில் உள்ள வடிவேலு வீட்டின் முன் கார்களை நிறுத்தி விட்டார்கள்
அவர் (பீக் காக இருந்த காலகட்டத்தில்)
அவர் கார் வெளியே எடுக்க முடியாத சூழ்நிலை
கேப்டன் வீட்டிற்கு உதவியாளரை அனுப்பி காரை நகர்த்த சொல்கிறார்
(விஜயகாந்த் ஊரில் இல்லை)
அதற்கு விஜயகாந்த் மகன் அவன் என்ன பெரிய மைரா கார்கள் அங்கு தான் நிற்கும் என்று பௌன்சர்ஸ் ஏவி விட்டு வடிவேலுவை தாக்குகிறார்கள்!
அவரும் விஜயகாந்த் ஊரில் இல்லை என்பதை அறிந்து அடிபட்ட கையோடு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சென்றுவிட்டார்
(இதெல்லாம் ஜெயலலிதா ஆட்சியில்)
வடிவேலு திமுக ஆதரவாளர் என்பது ஊரறிந்த ரகசியம்...
ஆனாலும் ஆய்வாளர் வடிவேலுவை தாக்கிய பத்து குண்டர்களை கைது செய்கிறார்.
இனி விஜயகாந்த் படத்தில் நடிப்பதில்லை என்று வடிவேலு முடிவெடுத்தார்.
பிரேமலதா : ஆட்சியில் அமர வேண்டும்.. கேப்டன் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிரேமலதா போட்ட சபதம்.. !
tamil.asianetnews.com - Raghupati R : சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த 26ம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். பல பிரபலங்களும், மக்கள் கூட்டமும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் மதியம் 2.30 மணியளவில் ஊர்வலமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் வாகனத்தில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சேர்ந்து வடிவேலுக்கு திரைபடங்களில் வாய்ப்புக்கொடுக்கக்கூடாது...
ஆனால் அதற்காக மானங்கெட்டு மண்டியிடலும் ஆகக்கூடாது என்கிற சுயமரியாதை இருப்பதையும் இழந்து விடக்கூடாது என்று உறுதியாக வடிவேல் இருப்பதில் என்ன தவறு கண்டீர்?
சக நடிகராக இருந்தால் எல்லாவற்றிற்கும் சென்றுதான் ஆகவேண்டும் என்கிற சட்டமேதும் இருக்கிறதா? சொல்லுங்கள்!
2011-2021 காலகட்டத்தில் விஜயகாந்தை விமர்சித்தமைக்காக!
திமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஒரே காரணத்திற்காக வடிவேலுவை பழிதீர்க்க ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சேர்ந்து வடிவேலுக்கு திரைபடங்களில் நடிக்க வாய்ப்புக்கொடுக்கக்கூடாது!
இம்மியளவுகூட திரையில் வடிவேலின் முகம் தெரியக்கூடாது என கங்கணம் கட்டி!
வடிவேலின் திரைவாழ்க்கையை மட்டுமல்ல!
வெள்ளி, 29 டிசம்பர், 2023
ஸ்ரீ சபாரத்தினம் கொலையின் முக்கிய சூத்திரதாரி எம் ஜி ஆர்! முழு விபரமும் வெளியானது!
இன்றும் பல பல இலங்கை தமிழர்கள் குறிப்பாக விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார் என்று எழுதுகிறார்கள் பதிவுகள் போடுகிறார்கள்.
எம்ஜிஆர் ஆதரித்தது தனது சொல் கேட்டு TELO இயக்கத்தையும் அதன் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் விடுதலைப் புலிகள் இயக்கம்அழித்து, அதன் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தை கொலை செய்ததும் எம்ஜிஆர் மனம் மகிழ்ந்து அளவில்லா பணமும் அளவில்லா உதவிகளும் செய்தார்.
தனிப்பட்ட முறையில் எல்லா இயக்கங்களும் தங்கள் சக சகோதரர்களை கொலை செய்து வந்தாலும்,
ஒரு பெரிய இயக்கத்தை அழித்து , தொடர்ச்சியாக மற்ற விடுதலை இயக்கங்களையும் அழித்து மறைமுகமாக சிங்கள அரசுக்கு உதவிகள் புரிந்து விடுதலைப்புலிகளை மட்டும் ஒரு சர்வாதிகார இயக்கமாக மாற வைத்து கடைசியில் அவர்களும் அழிய ஆரம்ப புள்ளி வைத்து கொடுத்தவர் எம்ஜிஆர் அவர்கள்.
மரணம் அடைந்து 40 நிமிடங்களுக்கு பிறகு மீண்ட பெண்.. இறந்ததற்கு பிறகு நடந்தது என்ன..? பகீர் பேட்டி
tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் : விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் பல லட்சம் கி.மீ. தூரம் இருக்கும் கிரகங்களை நாம் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு மனிதன் மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை இன்று வரை எந்த ஆராய்ச்சியாலும் கண்டறிய முடியவில்லை.
ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியின் வாக்குமூலம் இந்த ஆராய்ச்சியின் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
uk woman dead alive
லண்டன்: என்னதான் விஞ்ஞானத்தில் நாம் உச்சத்தை அடைந்திருந்தாலும் இன்னமும் மனிதனின் மூளைக்கு எட்டாத பல விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.
1 ஸ்பூன் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டா போதும்! யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வெந்தயம்..
zeenews.india.com - Malathi Tamilselvan : யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வெந்தயம்: உணவுகளே, நமது உடலில் சத்தை கூட்டவும், குறைக்கவும் காரணம் என்பதுபோலவே, நாம் உண்ணும் உணவும், அதில் பயன்படுத்தப்படும் பொருட்களும் உடலின் கழிவான யூரிக் அமிலத்தின் சுரப்பை நிர்ணயிக்கிறது.
யூரிக் அமிலம் என்பது பூயூரின் என்ற வேதிப்பொருளினால் உருவாகிறது.
பொதுவாக, நமது சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை வடிகட்டுகின்றன.
அப்படி வடிகட்டும்போது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது,
அது மூட்டுகளில் குவியத் தொடங்குகிறது. உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால், மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம், எலும்புகளில் வலி, நடப்பதில் சிரமம் என பல பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.
எனவே, உடலில் சுரக்கும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது.
மம்தா பானர்ஜி : நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி போட்டியிடும்:
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் நகரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, "இண்டியா கூட்டணிக்கு திட்டம் இல்லை; தலைமை இல்லை; வியூகம் இல்லை. நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம்.
தேர்தலின்போது, பாஜக வெற்றி பெற்றால் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சி கூறியது. 2021ல் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றதில் இருந்து நமது அரசு அனைத்து ஏழைகளுக்கும் 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.
விஜயகாந் 1986 பேட்டி : இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்'னு சொல்வாங்களே?
Jæs J Wiki : 1986 இல் விஜய்காந்த் கொடுத்த ஒரு பேட்டியிலிருந்து...
இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்'னு சொல்வாங்களே அதுதான்.
சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன்.
அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம்
அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகப்படுத்தினார்.
அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்' தான் இருந்தது.
அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரிய வர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார்.
வியாழன், 28 டிசம்பர், 2023
விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அன்பிற்கினிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.
நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர்.
உடல்நலம்: உங்கள் மலம் நீரில் மூழ்காமல் மிதப்பது ஆபத்தான அறிகுறியா? -
bbc.com - , ரிச்சர்ட் கிரே - பிபிசி ஃபியூச்சர் : சில நேரங்களில் நாம் கழிக்கும் மலம் கழிவறை நீரில் மூழ்காமல் நீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும். அப்படி நடந்தால், அது உங்கள் செரிமான அமைப்பில் ஏதேனும் பிரச்னை இருப்பதைக் குறிப்பதாகும் என்ற அறிவியல் உண்மை சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கு முன், நாகராஜ கண்ணன் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.
"உங்களது கழிவு மிதக்கிறதா அல்லது கழிவறை நீரில் மூழ்குகிறதா?"
மின்னஞ்சல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளும் ஒருவரிடம் இவ்வாறு கேட்பது ஆச்சரியமாக இருக்கலாம்.
கட்டார் 8 இந்திய கப்பல் படை அதிகாரிகள் தலை தப்பியது
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கத்தார் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அதிகாரிகளின் குடும்பத்தினரும், உறவினரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கடிதங்கள் எழுதினர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் காலமானார்.. கதறி அழும் தொண்டர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு அடுத்தடுத்த சறுக்கல்கள் ஏற்பட்டது.
விஜயகாந்த் எப்படி இருக்கிறார்.. சாலிகிராமம் வீடு முன் கண்ணீருடன் குவிந்த தொண்டர்கள்! விஜயகாந்த் எப்படி இருக்கிறார்.. சாலிகிராமம் வீடு முன் கண்ணீருடன் குவிந்த தொண்டர்கள்!
புதன், 27 டிசம்பர், 2023
தமிழருவி மணியனும் மூன்று லட்சம் தொண்டர்களும்!
Suba.Veerapandian : தமிழருவி மணியனும் மூன்று லட்சம் தொண்டர்களும்!
அரசியல் துறவரத்தை மீண்டும் துறந்து விட்டு, களத்திற்கு வந்திருக்கிறார் தமிழருவி மணியன்! அன்றாடம் தி.மு.கழக ஆட்சியை, திமுக கழகத்தைக் கடுமையாகத் தன் காணொளிகள் மூலம் விமர்சித்து வருகிறார். அது அவர் விருப்பம், அவர் உரிமை!
அவருடைய பேச்சில் தவறாமல் மூன்று கூறுகள் இடம்பெறுகின்றன. 1. தற்பெருமை 2. காழ்ப்புணர்வு 3. விரக்தி!
உலகத்தில் உள்ள வரலாற்று நூல்களை எல்லாம், தேடித்தேடி துருவித் துருவிப் படிக்கிறவன் நான் என்று சொல்கிறார்.
அவரிடம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை அவர் பேச்சு எடுத்துக்காட்டுகிறது.
மகிழ்ச்சி, படிப்பது நல்ல பழக்கம்தான்.
ஆனால் அதைத் தானே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது அவ்வளவு நல்ல பழக்கமில்லை!
சத்தீஸ்கர் காங்கிரசுக்கு உலை வைத்த Mahadev Betting App. துபாயில் அதிரடி கைது.. சிக்கிய உரிமையாளர்.. பின்னணி
tamil.oneindia.com -Nantha Kumar R : துபாய்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி தொடர்பாக அதன் மற்றொரு உரிமையாளரான சவுரப் சந்திரகர் துபாயில் சிக்கி உள்ளார்.
வடஇந்திய மாநிலங்களில் பெரிதாக பேசப்பட்டு வரும் மோசடி என்றால் அது மகாதேவ் சூதாட்ட செயலி மோசடியாகும். இந்த மோசடியில் பல அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு எல்லாம் முக்கிய காரணம் யார் என்றால் 2 பேர்.
Mahadev Betting App another owner cum promoter Sourabh Chandrakar secured in Dubai after Ravi Uppal
எண்ணூர் அமோனியா கசிவு! ? 8 கிராமங்களில் நடந்தது என்ன
இந்தத் தொழிற்சாலையில் உரம் தயாரிப்பதற்கான திரவ அமோனியம் நேரடியாக கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு கடலுக்கு அடியில் உள்ள குழாய் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு, திரவ அமோனியாவை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டதால் வாயு கசிந்துள்ளது.
மலையக தமிழரா இந்திய தமிழரா? அடையாள சிக்கலின் பின்னணியில் இந்திய ரோ RAW அமைப்பு?
பெருமாள் கணேசன் : இந்திய தமிழர்கள் இலங்கைக்கு பதிவில் வந்தது 1817 களில் அவர்களை முதன்முதல் பணிக்கமர்த்தப்பட்டது கொழும்பில். இன்றும் அவர்களின் சந்ததி நீள்கிறது மலையில் செறிவாக வாழ்வது ஒரு அதிகாரம் என சிலர் தலைகீழாக ஆடுகிறார்கள் இன அடையாளச் சொல்லை அழிக்க. யாரோடு கூட்டு எனில் பூர்வீகத்தமிழருக்கே அதிகாரம் கொடுக்க மறுக்கும் இனவாதிகளுடன்
Manju Ganesh Thevar : தமிழர்கள் பன்னெடுங்காலமாக நாவல்தான் என்கிற இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளனர்.பாண்டிய,சேர சிங்கள மன்னர்களுடன்,நட்பும் மண உறவும் உண்டு. பிற்கால சோழர்கள் காலத்தில் இலங்கையி்ல் உண்டு. மலையகத் தமிழர்கள்,கிழக்கிந்திய கம்பனி இலங்கையை கைப்பற்றிய பிறகு,தமிழர்களை மலைப்பகுதிகளில் குடியமர்த்தி வனங்களை,எஸ்டேட்டுகளாக மாற்றினர்.மகாராணி விக்டோரிய காலத்தில் காலனி ஆட்சியில் இலங்கை சென்னை மாகாணத்தின் தொடர்ச்சியாகத்தான் இலங்கையை பிரிட்டிஷ் அரசு நிர்வகித்து.
சங்க காலம் தொட்டு தமிழர்கள் இலங்கையில் ஆட்சி,நிர்வாகம்,வணிகம் செய்துள்ளனர்.
Sundar Sundaralingam : I am agreeing with your point. People should move out of the estate and live independently, if they want let them work in the estate
koose munisamy veerappan கூஸ் முனுசாமி வீரப்பன் சீசன் 1- நடுநிலையான தொடரா?
Jaison Prathish · : கூஸ் முனுசாமி வீரப்பன் சீசன் 1-நடுநிலையான தொடரா?
ஒரு கொலைகாரனை வீரன் என்று சொல்லக்கூடாது ஆனாலும் வீரப்பன் வீரன்தான் என்று நக்கீரன் கோபால் சொல்லத் தொடங்குகிறது இந்த தொடர்.
இந்த தொடர் பற்றி பேசுவதற்கு முன்பு இந்த தொடர் வருவதற்கான காரணம் பற்றி பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.
K.விஜய் குமார் Special Task Force(STF) தலைமை அதிகாரி Veerappan: Chasing the Brigand என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் 2017-ல் எழுதுகிறார். அது பெரிதாக அறியப்படவில்லை.
அதனுடைய Audio Book PodCast வடிவில் 100 எபிசோடுகளாக டிசம்பர், 2022 ஆன்லைனில் வெளியாகி பரபரப்பாகிறது.
அந்த ஆடியோ புக்கின் அடுத்த கட்டமாக ஆகஸ்ட்,2023 நெட்ப்ளிக்ஸ் The Hunt For Veerappan- The Most Notorious Criminal of Indian History ரிலீசாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
விசாரணைக்கு ஆஜராகாத ED அதிகாரிகள்: போலீஸ் எடுத்த முக்கிய முடிவு!
minnambalam.com - Monisha : அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (டிசம்பர் 26) விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் பெறும் போது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அவரை சிறையில் அடைத்தது.
பின்னர் அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனிடையே அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
திமுக ஐடி விங் தோல்வியுற்றதா? எங்கே? எப்படி? ஏன்?
Pa Prem : திமுக ஐடி விங் எங்கே தொல்வியுற்றது?
எம்.எம்.அப்துல்லா
டான் அசோக்
டாக்டர் புருனோ
எல்.ஆர்.ஜகதீசன்
சாய் லட்சுமிகாந்த்
ராஜராஜன்
பிலால் அலியார்
விக்னேஷ் ஆனந்த்
கார்த்திக் ராமசாமி
ரவிசங்கர் அய்யாக்கண்ணு
இன்னும் பலர் உள்ளிட்ட பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரில் தனித்தனி முகங்களை போர்த்திக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக தலித் தரப்பிலிருந்து மேலெழுந்து வந்த குரல்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, ஆன்லைனில் மிகப்பெரிய அளவில் இடதுசாரி, தலித் வெறுப்பை முன்னெடுத்ததன் விளைவை இன்று திமுக சந்தித்துக் கொண்டிருக்கிறது.
பல முக்கியமான திமுக அனுதாபி, தலித் சோசியல் மீடியா செயற்பாட்டாளர்களை ஓரம் கட்டியதில் மேற்குறிப்பிடப்பட்டவர்களின் பங்கு மிக மிக மிக முக்கியமானது..
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், தனி நபர் தாக்குதல்களை ஒருங்கிணைத்து பல தலித் திமுக அனுதாப சோசியல் மீடியா இன்ஃபுலுயன்ஸர்களைத் துரத்தி விட்டிருக்கிறார்கள்.
அவர்களைத் துரத்தி விட்டு, இன்று இந்த நபர்கள் எல்லாம் நம் வரலாற்று எதிரிகள் மீது வலிமையான தாக்குதல்களை துல்லியமாக முன்னெடுக்கிறார்களா? என்றால், அதுவும் இல்லை..
ஜம்மு காஷ்மீர்: ராணுவம் விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேர் மரணம் - முகாமில் என்ன நடந்தது?
அவர்களில் மூவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்ததையடுத்து, இராணுவம் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியது.
மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மக்கள் எருமைப் பகுதியின் டோபா கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தற்போது கிராமத்தின் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே திங்கள்கிழமை பூஞ்ச் பகுதிக்கு சென்று பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் கைது!
சேலம் ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஜெகன்நாதன் பணியாற்றுகிறார்.
இவர் மீது அவ்வப்போது சர்ச்சைகளும் புகார்களும் எழுந்து வந்தன. இந்நிலையில் ஜெகன்நாதன் நண்பர்களுடன் இணைந்து வர்த்தக நிறுவனத்தை தொடங்கியதாகப் புகார் எழுந்தது. மேலும் போலி ஆவணங்களை தயாரித்து தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.
பெரியாரை இரட்டைமலையார், அயோத்திதாசர் போன்றவர்களோடு ஒப்பிடமுடியுமா?
Thiru Nila Virumandi ; இரட்டைமலையார், அயோத்திதாசர் என்று தூங்கிக் கொண்டு வருபவர்கள் பெரியாருக்கு முன்னாடியே இவர்கள் புரட்சி செய்துவிட்டார்கள் என்றோ திராவிடம் இருட்டடிப்பு செய்துவிட்டது என்றோ அழுவார்கள்.
அதற்கு முதன்மைய காரணம் தாழ்வு மனப்பான்மை. தமிழ்நாடே பெரியாரைத் தூக்கிக் கொண்டாடுகிறதே, எந்த வேற்றுமையும், சாதி மதப் பிரிவும் அதற்குத் தடையாக இல்லையே என்ற பொறாமை. தொன்னூறுகளுக்குப் பிறகான தன் சாதி அடையாள அரசியல் போக்கில் தலைவர்களும் தன் சாதியில் இருந்துதான் வர வேண்டும் என்ற தேவையில் இருந்து இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.
இந்த இடத்தில் தான் சில அறிவுக்குடி அறிஞர்களின் அருமையான தேவை ஏற்படுகிறது. கருப்பு வெள்ளையாக தெளிவுபட்டு அறியப்பட்ட வரலாற்றை இந்த அரிப்பாளர்கள் நோண்டி நோண்டி தங்கள் சாதிக்கு சேர்த்தியான துண்டு துக்கடாக்களை கவ்வி வந்து வாந்தி எடுத்து அதை பின் நவீனத்துவ வண்ண ஓவியமாக வரைந்து வைத்தனர்.
வரலாற்றைத் தொகுப்பாகப் பார்க்க வேண்டும் என்பது ஒரு தேவை எனில் அதை எந்த நோக்கத்துக்காக பார்க்கிறோம் என்பது அதை விட பார்க்க வேண்டியது.
செவ்வாய், 26 டிசம்பர், 2023
இந்திய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலில் 3 இந்திய போர்க்கப்பல்கள் பாதுகாப்பு பணியில்
இதேபோன்று செங்கடலில் பயணித்த கபோன் நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் மீது 23-ந்தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் இந்திய எல்லையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3 குற்றவியல் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.. இனி ஐபிசி, சிஆர்பிசி இல்ல!
இந்தியாவில் பல ஆண்டுகளாக குற்றவியல் சட்டங்கள், தண்டனை சட்டங்கள், சான்று சட்டங்ளான ஐபிசி, சிஆர்பிசி, எவிடன்ஸ் ஆக்ட் போன்றவை நடைமுறையில் இருந்து வந்தன. ஆனால், சில நிமிடங்களுக்கு முன்பிருந்து அவர் முழுமையாக மாற்றப்பட்டு உள்ளன. இனி அவற்றின் பெயர் இந்தியில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா என்று அழைக்கப்படும். இந்தியில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே பெயர்களைதான் இனி பயன்படுத்த வேண்டும்.
இலங்கையில் 1000 கைதிகள் விடுதலை! கிறிஸ்மஸ் .. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிரடி
இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவுக்கு உள்ளேயே இருக்கிற ஆர்எஸ்எஸ் பிடிஆரைத் தூக்கி அடிச்சது? social media musings
Vimalaadhithan Mani : அண்ணண் PTRன் ஆளுமையை புரிந்து கொள்ளாத சில அரக்க தற்குறிகளில் இவரும் ஒருவர்.
இவர்களை போன்றவர்களிடம் பேசி புண்ணியமில்லை.
அதிகார வர்க்கத்துக்கு வலிக்கக்கூடாது என்று மயிலிறகால் தடவி கொடுப்பதை போன்ற பதில்கள் அடித்து வெளுத்து துவைத்தலில் சேராது.
அண்ணன் PTR போன்று தரவுகளுடன் பிரதமரை கூட துவம்சம் செய்தலே அறிவார்ந்த திராவிட பதிலடியாக இருக்கும்!
Skp Karuppanna Samy - Vimalaadhithan Mani Yes 100%
Gnana Bharathi : ஒரு மனுஷன் உண்மையான கொள்கையோட ஊழல் பண்ணாம இருந்தா அவர ஒதுக்கி வெச்சிட்டு....
அப்பன் வீட்டு காசையா கேக்கறோம் னு பேசறது ok. Strong language.
அதுக்காக PTR ah இன்னும் ஒதுக்கி வைக்கறது கொஞ்சம் கூட நியாயம் இல்ல
Nilan Vajram : ஹிந்தி தெரிந்த வடக்கன் இங்கே தமிழ் நாடு வந்து கட்டடம் கட்டி, கக்கூஸ் கழுவுறான்,
இதான் அவனுங்க. இந்த பொன்னான வார்த்தைகளை பேசியது தயாநிதி மாறன் MP, இதான் இவனுங்க கற்றுக்கொண்ட சமூக நீதியா?
அந்த வேலைகளை எல்லாம் மட்டம் என்று சொல்ல வரானா?
ஒரே கேள்வி அவர்கள் அந்த வேலைகளை செய்யாமல் ஒரே ஒரு நாள் நிறுத்தினால் என்ன ஆகும்?
திங்கள், 25 டிசம்பர், 2023
மசினன்குடி மக்களின் அவலம் . எங்கே செல்வது என தெரியாமல் தவிக்கிறார்கள்!
vikatan.com - எம்.குமரேசன் : மலைகள், அருவிகள், கொஞ்சம் ஆபத்து... மனதை மயக்கும் மசினகுடி!
கோடை காலம் நெருங்குகிறது. மக்கள் குளிர்பிரதேசங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்குவார்கள். ஊட்டி செல்பவர்கள் பூங்காக்களையும், தேயிலைத் தோட்டங்களையும், சிகரங்களையும் பார்த்துவிட்டு, கொஞ்சம் குளிரையும் அனுபவித்து விட்டு ஊர் திரும்பி விடுகிறார்கள். இந்த இடங்கள் மட்டும்தான் நீலகிரியா? நீலகிரியில் பார்க்க வேண்டிய, அனுபவிக்க வேண்டிய பகுதிகள் நிறைய இருக்கிறது. அப்படி ஒரு ஊர்தான் மசினகுடி.
மனதை மயக்கும் ஒரு ஊர். இந்த ஊருக்குச் செல்லும் சாலையே நம்மை மிரள வைக்கும். உதகையில் இருந்து சரியாக ஏழாவது கிலோ மீட்டரில் தலைக்குந்தா என்ற இடம் வரும். இங்கிருந்து கல்லட்டிக்கு சாலை பிரிந்து செல்கிறது. இதனை கல்லட்டி பாதை என்பார்கள். சிறிய ரக பேருந்துகளில் மட்டுமே இந்த சாலையில் செல்ல முடியும். பெரிய பேருந்துகளால் ஏற முடியாது. சாலை அவ்வளவு செங்குத்தாக இருக்கும்.
மீண்டும் வாக்குச்சீட்டு! ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் விசிக!
பெரியாரின் 50வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
VCK announced protest
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து சதிகார போக்கோடு செயல்பட்டு வருகிறது.
வடிவேலுவை படையெடுக்கும் மாமன்னன் பாணி கண்ணீர் கதைகள் .. கதைகளை கேட்டு கதறும் வடிவேலு
சென்னை: வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாமன்னன் படத்தில் ரொம்பவே சீரியஸ்ஸான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கண் கலங்க வைத்தார்.
இந்நிலையில், மாமன்னன் படத்தில் நடித்ததால் எல்லாமே சோகமாகிவிட்டதாக வடிவேலு மனம் திறந்துள்ளார்.
மாமன்னன் படத்தால் சோகமாகிவிட்டது
தமிழ்த் திரையுலகில் வடிவேலுவின் காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ஞாயிறு, 24 டிசம்பர், 2023
தயாநிதி மாறன் பழைய பேச்சு-இந்தியா கூட்டணியில் புகைச்சல்- பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சாடல்!
tamil.oneindia.com - Mathivanan Maran : பாட்னா: உத்தரப்பிரதேசம், பீகார் மாநில மக்கள் தமிழ்நாட்டில் வந்து கழிவறை கழுவுகின்றனர் என திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் பேசிய பழைய பேச்சு "இந்தியா" கூட்டணியில் கடும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த பேச்சை பாஜக திரித்து, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்வோம் என பேசியதாக பரப்பியது. இது வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களும் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
சென்னை: என்ஜினியர் நந்தினி உயிரோடு எரித்துக் கொலை, திருநம்பி கைது - என்ன நடந்தது?
நந்தினி |
வெற்றிமாறன் |
BBC News தமிழ் : சென்னை புறநகர் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இரவு பெண் மென்பொறியாளரை கை, கால்களைக் கட்டிப்போட்டு உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயில் கருகி உயிருக்குப் போராடிய பெண்ணை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். போலீசாரின் விசாரணையில், ஒருதலையாக காதலித்து வந்த அந்தப் பெண்ணின் பள்ளிப்பருவ நண்பர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன நடந்தது?
சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில், சிறுசேரியை அடுத்த பொன்மார் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது, கை கால்கள் கட்டப்பட்டு, பாதி எரிந்த நிலையில், ஒரு பெண் உயிருக்குப் போராடியுள்ளார்.
2024 தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளர்களை அதிரடியாக அறிவிக்க ராகுல் காந்தி திட்டம்
அதில் இருந்து கட்சியை மீட்டு புத்துணர்ச்சி கொடுக்க ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இன்னமும் 100 சதவீத பலன் கிடைக்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செயல்பாடு ராகுலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நகுறைவால் சென்னையில் காலமானார்
சென்னை பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்தநிலையில் நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திமுக சுயபரிசோதனை செய்ய தவறினால்.. கொந்தளிக்கும் உடன்பிறப்புக்கள்
Vimalaadhithan Mani : இறையன்பு தலைமை செயலாளராக, அறிவார்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக, பேராசிரியர் ஜெயரஞ்சன் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட போதெல்லாம் நாம் அனைவரும் திமுக அரசுக்கு தாராளமாக சில்லறையை சிதறவிட்டோம்.
ஆனால் நடந்தது என்ன?
ஒன்றியத்தின் முட்டாள்தனமான கொள்கை முடிவுகளை, ஜக்கியை தரவுகளுடன் தைரியமாக, கடுமையாக எதிர்த்த PTR வேறு டம்மியான ஒரு துறைக்கு தூக்கியடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு அமைதியாக்கப்பட்டார். முற்போக்கு இயக்கங்கள் தெருமுனை கூட்ட அனுமதி பெறுவதே குதிரைக்கொம்பாக இருக்கையில், ஆர்எஸ்எஸ் ஊட்டியில் எவ்வித இடையூறும் இன்றி பகிரங்கமாக ரகசியக்கூட்டம் நடத்துகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிசூடு விசாரணை அறிக்கை மீதான நடவடிக்கை என்ன?
இந்திய மேற்கு கரையில் எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்.. பின்னணியில் ஈரான்?
இந்த தாக்குதலில் கப்பலில் தீ பிடித்தது. கப்பலில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இதில் கப்பலில் இருந்த 20 இந்தியர்கள் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்நிலையில், தாக்குதல் நடத்த பயன்பட்ட டிரோன் ஈரானில் இருந்து ஏவப்பட்டது என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
300 இந்திய பயணிகளுடன் பிரான்சில் விமானம் தடுத்து நிறுத்தம். அமெரிக்காவுக்கு மனித கடத்தல்!
இந்த விமானம் மனித கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே அது தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஏர்பஸ் ஏ340 விமானம் துபாயில் இருந்து நிகரகுவாவின் தலைநகரான மனகுவாவுக்குச் சென்று கொண்டிருந்ததாக பிரான்சில் உள்ள வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
கண்ணப்பனை கரையேற்றிய உதயநிதி. சின்னவரை நம்பினார் கைவிடப்படார்-
மின்னம்பலம் -]Aara : “சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று வருடம் சிறை தண்டனை 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட பொன்முடி அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த நிலையில் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு அளிக்குமாறு முதலமைச்சர் பரிந்துரை செய்ய அதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
பொன்முடி குற்றவாளி என்று டிசம்பர் 19ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்த போது அவரது துறையை நிர்வகிக்க போகும் அடுத்த அமைச்சர் யார் என்ற கேள்வி திமுகவுக்குள் எழுந்து விட்டது.
உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த பொன்முடிக்கு பதிலாக அதே உடையார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை அமைச்சராக ஆக்குவாரா முதலமைச்சர் ஸ்டாலின் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்தது.