மின்னம்பலம் :அனைத்துத்
தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களை
ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தஞ்சாவூரில் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான வாகன நிறுத்தம் அமைப்பதற்காக அங்குள்ள மன்னர் சரபோஜி கல்லூரியின் விளையாட்டுத் திடல் சீரழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்களின் புகழ்பாடுவதற்காக நடத்தப்படவிருக்கும் அரைக்காசுக்குக் கூடப் பயனற்ற விழாவுக்காக அரசுக்கல்லூரியின் விளையாட்டுத் திடலை சீரழிப்பதா எனக் கண்டித்துள்ளார்.
விளையாட்டுத்திடலில் குறுக்கும் நெடுக்குமாக சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், அதன் பெரும்பகுதி கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிந்த பின்னர், லட்சக்கணக்கில் செலவு செய்தாலும் கூட மன்னர் சரபோஜி கல்லூரியின் விளையாட்டுத் திடலை அதன் பழைய பொலிவுக்குக் கொண்டு வருவது சாத்திய மற்றது என வேதனை தெரிவித்துள்ளார்.