மாலைமலர் : பாஜக தேர்தல் அறிக்கையின் 90 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்தார்.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தயாரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வழக்கம்போல் அதிருப்தி தலைவர்கள் கட்சி தாவும் சம்பவமும் அரங்கேறத் தொடங்கி உள்ளது.
அவ்வகையில், பாஜகவைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளனர். கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில், அவர்கள் தங்களை சமாஜ்வாடி கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
சனி, 30 அக்டோபர், 2021
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு தாவிய 7 எம்எல்ஏக்கள்
மோடி வலிமையடைய காங்கிரஸ் தான் காரணம் - மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
மாலைமலர் : மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக மோதாமல் என்னுடனும், என் கட்சியை எதிர்த்தும் காங்கிரஸ் மோதினர் என்று மமதா பானர்ஜி கூறினார்.
பனாஜி: கோவாவில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பா.ஜ.க. எங்கும் போகாது. மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். அங்குதான் அவருக்குப் பிரச்சினையே இருக்கிறது. ஆனால், அது நடக்காது.
பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது என கூறினார்.
உத்தர பிரதேசத்தில் மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர் கைது
BBC : உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சக மாணவனை கடித்த சோனு யாதவ் என்கிற இரண்டாம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா அழைத்து கண்டித்துள்ளார். பிறகு சக மாணவனிடம் மன்னிப்பு கேட்குமாறு சோனுவிடம் அவர் கூறியுள்ளார்.
ஆனால் சோனு மன்னிப்பு கேட்காததால் ஆத்திர மடைந்த தலைமை ஆசிரியர் அச்சிறுவனை தரதரவென்று பள்ளி மேல் தளத்துக்கு இழுத்துச் சென்று,சிறுவனின் காலை பிடித்துக் கொண்டு அச்சிறுவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு, மன்னிப்பு கேட்குமாறு பயமுறுத்தியுள்ளார்.
ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாலைமலர் : எல்லைப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்று, தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன.
2019 முதல் நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
வெள்ளி, 29 அக்டோபர், 2021
எம்ஜியார் ஒரு சிறந்த புகைப்பட கருணாநிதி .. அதிமுக பொன்விழா மலர் கூத்து ..
Diwa : அதிமுக பொன்விழா சிறப்பு மலர் புத்தகத்தை அச்சடிக்கும் முன்பாக அச்சகத்தின் ப்ரூப் ரீடரை வர வைத்த அதிமுக இணை துணை இயக்குநர்கள் நல்ல கவனமா ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக படிச்சு பாத்து ப்ரூப் ஒக்கே செய்ங்க ...
ஏன்னா நம்முடைய அதிமுக கட்சியின் வரலாற்றை பதிவு செய்யும் பொன்விழா மலரில் , பழைய நிகழ்வுகளை எழுதும்போது MGR-ன் வாழ்க்கை வரலாறும் வரும்!
அப்படி அந்த வரலாற்றை எழுதும்போது
கலைஞருடன் - அறிஞர் அண்ணா...
கலைஞருடன்- MGR என அப்போது நடந்த சில வரலாற்று நிகழ்வுகளையும் எழுத வேண்டி இருக்கும் அப்படியான இடத்தில் மறந்தும் கூட கலைஞர்ன்னு எழுதிடாதீங்க... கலைஞரை கருணாநிதி... கருணாநிதி என எழுதிடுங்க என ஆளூமைகள் ப்ரூப் ரீடருக்கு உத்தரவிட...
இரட்டை ஆளூமைகளின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுத்திய ப்ரூப் ரீடர்...கலைஞர் என அச்சிட வேண்டிய இடத்தில் எல்லாம் கருணாநிதி கருணாநிதி என அச்சு பிசகாமல் அச்சிட்டு பொன்விழா மலரை வெளியிட்டும்விட்டனர்......
உணவு மறுக்கப்பட்ட நரிக்குறவர் பெண்ணோடு உணவருந்திய அமைச்சர் சேகர் பாபு
சமீபத்தில் நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி பேசும் பொருளானது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வீடியோவில்,”ஒரு மாசத்து முன்ன, நான் என் தங்கச்சி, அத்தை எல்லாரும் கரெக்ட் டைத்துக்கு வந்து நின்னோம்..
அதான் கவர்மெண்ட் லேடிஸ் பஸ்ஸூன்னு சொல்றாங்களே…அது வந்தது..கையை காட்டி நிப்பாட்டினோம். ஆனால் வண்டி நிக்காம வேகமாக போயிருச்சு…..
கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் காலமானார்! மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்
கலைஞர் செய்திகள் : மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“கோபாலபுரம் இல்லம் வந்தது நெஞ்சில் நிழலாடுகிறது” : புனீத் ராஜ்குமார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் இன்று காலமானார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த புனித் ராஜ்குமார், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தளங்களில் பணிபுரிந்தவர்.
Face book - Meta பேஸ்புக் நிறுவனத்திற்கு மெட்டா என புதிய பெயரை சூட்டிய மார்க் ஜூக்கர்பெர்க்
தினத்தந்தி : வாஷிங்டன், சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேசிய அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் , பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி உள்ளதாகத் தெரிவித்தார்.
ரஜினிக்கு ரத்த குழாய் திசுக்கள் இறக்கும் இன்பார்க்சன் பாதிப்பு ! ICUல் சிகிச்சை..
Mathivanan Maran - Oneindia Tamil : சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த குழாய் திசுக்கள் இறந்துவிடக் கூடிய இன்பார்க்சன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஜினிகாந்துக்கு ஐ.சி.யூ.வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதன்பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் மீட்கப்பட்ட பெண் : யார்னே தெரியாத ரெண்டு பேர் வெள்ளத்துல குதிச்சு வந்தாங்க”
கலைஞர் செய்திகள் : ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து யாரென்றே அறியாத இளைஞர்களால் மீட்கப்பட்ட இளம்பெண் தானும், குழந்தையும் காப்பாற்றப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குழந்தையுடன் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பச்சை பொய் கூறியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினார் சிஏஜி தலைவர் வினோத் ராய் .. வெறும் மன்னிப்பு போதுமா?
Rayar A - Oneindia Tamil : டெல்லி: கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக முன்னாள் சிஏஜி வினோத் ராய் புகார் கொடுத்தார்.
இதன் பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
பெகாஸஸ்: 'உளவு பார்த்தவர்கள் சர்வதேச அளவில் அம்பலப்படுவார்கள்' - 'தி இந்து' என்.ராம்
முரளிதரன் காசி விஸ்வநாதன் - பிபிசி தமிழ் : பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் பின்னணி குறித்தும் தீர்ப்பு குறித்தும் வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் என். ராம் பிபிசி தமிழிடம் பேசினார். பேட்டியிலிருந்து.
கே. பெகாசஸ் வழக்கில் நிபுணர் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நீங்கள் என்ன கோரியிருந்தீர்கள்?
ப. இரண்டு விஷயங்களைக் கோரியிருந்தோம். முதலாவதாக, இந்தியக் குடிமக்கள் மீது என்.எஸ்.ஓ பெகாசஸ் உளவு செயலியை மத்திய அரசு பயன்படுத்தியிருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டுமெனக் கோரியிருந்தோம். இதற்கு மத்திய அரசு பதிலளிக்கும்போது, இது குறித்து நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை என்று சொன்னதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அடுத்ததாக, சுயேச்சையான ஒரு நிபுணர் குழுவை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலோ, தற்போதைய நீதிபதி தலைமையிலோ அமைக்க வேண்டும் எனக் கோரியிருந்தோம். அதை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது.
அரசு தானே ஒரு நிபுணர் குழுவை அமைப்பது, இது தொடர்பான தவறான கருத்துகளைப் போக்குவதாகச் சொன்னது. ஆனால், இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது மிக முக்கியமானது.
கர்நாடகாவில் அதிவேகமாகப் பரவி வரும் புதிய AY.4.2 வைரஸ்... தமிழ்நாட்டுக்கு ஆபத்து?
கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj : கர்நாடகாவில் அதிவேகமாகப் பரவி வரும் புதிய AY.4.2 வைரஸ்... தமிழ்நாட்டுக்கு ஆபத்து?
கர்நாடகாவில் AY.4.2 தொற்று பரவுவதால் அதை ஒட்டியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் மீண்டும் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. AY.4.2 உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கொடநாடு விவகாரம்: தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல்!
மின்னம்பலம் : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் கொடநாடு கொலை வழக்கு தூசிதட்டி எடுக்கப்பட்டு மீண்டும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்படும் கனகராஜ், கொடநாடு சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் சேலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கார் மோதி உயிரிழந்தார்.
அவர் விபத்தால் உயிரிழந்தாரா அல்லது இது திட்டமிட்ட கொலையா என்று போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, கனகராஜ் உறவினர் ரமேஷ் ஆகியோரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வியாழன், 28 அக்டோபர், 2021
தோழர் நன்மாறன் காலமானார் . 'கண்டக்டர்' முதல் 'கம்யூனிஸ்ட்' வரை!
நக்கீரன் பாரதி நேசன் : எளிமையான ஆளுமைகளுக்கு எல்லாம் முகவரி தருவது மரணம் மட்டுமே. அப்படி, மரணம் அறிமுகப்படுத்தி வைத்துள்ள புதிய ஆளுமை நன்மாறன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மதுரை கிழக்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான நன்மாறன், உடல்நலக் குறைவால், அரசு மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.
இரண்டு முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த ஒருவரின் மரணம், அரசு மருத்துவமனையில் நிகழ்வது என்பது, அரசியல் அதிசயம். காலமெல்லாம் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த நன்மாறன், தனி வீட்டில் குடியேற நினைத்தார். ஆனால், அந்த எண்ணம் இறுதிவரை கைகூடவே இல்லை.
சாதாரண குடும்பத்தில் பிறந்த நன்மாறன், 12-ம் வகுப்பைத் தாண்டவில்லை. பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், கண்டக்டராக சில காலம் பணியாற்றினார்.
இத்தாலியில் இரண்டு பிள்ளைகளை கொன்ற பின் ஆற்றில் பாய்ந்த இலங்கைப் பெண்!
எழுகதிர் .காம் : இத்தாலியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு ஆற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இத்தாலியின் வடக்கு வெனெற்றோ பிராந்தியத்தில் (Veneto region) Verona நகரில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சபாடி(Sabadi) மற்றும் சந்தனி (Sandani) ஆகிய பெயர்கள் கொண்ட 11, 3 வயதுகளுடைய இரண்டு பெண் குழந்தைகளுமே கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களது சடலங்கள் வீட்டின் படுக்கை அறையில் காணப்பட்டுள்ளன.
இருவரும் மூச்சுத் திணறலால் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சடலங்கள் கிடந்த அறையில் கொலைக் குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் எதுவும் காணப்படவில்லை. குழந்தைகள்இருவரும் தலையணை மூலம் மூச்சிழக்கும் வரை அழுத்திக் கொல்லப்பட்டிருக்கவேண்டும் என்று விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். Click here mother kills 2 kids
கள்ளக்குறிச்சி பட்டாசு விபத்து! தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகள் காரணமா? ... மக்கள் கோரிக்கை!
மின்னம்பலம் : கள்ளக்குறிச்சி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்குச் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அருகே உள்ள பட்டாசு கடையில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து அறிந்த முதல்வர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஸ்டாலின் ஆட்சியை கலைக்க திருமாவளவன் உள்ளடி வேலை..! TN பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
Veerakumar - Oneindia Tamil : சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவின், நட்புக் கட்சியா? எதிரிக்கட்சியா? தனிக் கொடி, தமிழர் இறையாண்மை இதெல்லாம் கம்பி எண்ண, களி சாப்பிட முதல் படி, ஸ்டாலின் ஆட்சியை கலைக்காம விட மாட்டாரோ திருமாவளவன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்,
தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி அடிப்படையில் மாநிலம் பிரிந்த நாள் என்பதை குறிப்பிட்டு, இந்த ஆண்டு முதல் தமிழக அரசு இந்த நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு அரசின் இலங்கை தமிழர் நலன் ஆலோசனை குழுவில் கலாநிதி ஆற்காடு வீராசாமி எம்பி நியமனம்
Arsath Kan - e Oneindia Tamil News சென்னை: இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் கனிமொழி எம்.பி.க்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஆற்காடு வீராசாமியின் மகனை நியமித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இது கனிமொழியின் ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதோடு இந்த நியமனம் அதிருப்தியையும் அளித்துள்ளது.
இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த சூழலில், அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்
Mageshbabu Jayaram | Samayam Tamil : முல்லை பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசு செய்த அதிர்ச்சி செயல்!
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் - கேரளா இடையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. கேரளாவில் மழை கொட்டித் தீர்க்கும் போதெல்லாம், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை, அதனை இடிக்க வேண்டும், நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.
தமிழ்நாடு மேல்சபை ! மீண்டும் அமைகிறது- அடுத்த கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேறுகிறது
மாலைமலர் : தமிழ்நாடு மேல்சபை ! மீண்டும் அமைகிறது- அடுத்த கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேறுகிறது
தமிழ்நாட்டில் மேல்-சபையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பா.ஜனதா எம்.எல்ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: : தமிழகத்தில் 1986-ம் ஆண்டு வரை மேல்-சபை இருந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மேல்-சபையை கலைத்து விட்டார்.
அதன் பிறகு இதுநாள்வரை தமிழகத்தில் மேல்சபை கொண்டு வரப்படவில்லை. கடந்த 2006-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மீண்டும் மேல்- சபையை கொண்டுவர முயற்சி செய்தார்.
தமிழர்களின் மதமாற்ற வரலாறு சிவசேனாவுக்கு பதிலடி திரு ரத்னஜீவன் ஹூல் Dr. S. Ratnajeevan H. Hoole
ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்? துரோகி கதிர் ஆனந்த் ஒழிக, அதிமுகவின் கைகூலி கதிர் ஆனந்த் ஒழிக’ என்று...
மின்னம்பலம் : துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?
தமிழ்நாட்டிலேயே வேறு எங்குமில்லாத அளவுக்கு சேர்மன் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக மறுதேர்தல் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு சவால் விடும் வகையில் இந்த கோரிக்கை மனு அனுப்பப்பட்டிருப்பது திமுக வட்டாரத்தில் அடுத்த கட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6, 9 தேதிகளில் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை 12 ஆம் தேதி எண்ணப்பட்டது. வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் 20 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அதன்பின் அக்டோபர் 22ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்தல் நடந்தது.
மிகப் பெரும்பாலான இடங்களில் திமுகவே சேர்மன் பதவியைக் கைப்பற்றிய நிலையில் சில இடங்களில் மட்டும் திமுகவுக்குள்ளேயே போட்டா போட்டி நிலவியது. அதிலும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சொந்த மாவட்டமான வேலூரையடுத்த திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரிய கலாட்டாவே நடந்தது.
புதன், 27 அக்டோபர், 2021
இல்லம் தேடி கல்வி: கி.வீரமணிக்கு ஸ்டாலின் பதில்.. இதுதான் திராவிடத்தின் கொள்கை மறந்துவிடக் கூடாது!
மின்னம்பலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் “இல்லம் தேடி கல்வித் திட்டத்தை” இன்று (அக்டோபர் 27) தொடங்கி வைத்தார்.
கொரோனா காரணமாகப் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் கல்வியில் இடைவெளி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க, 1 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.
இந்த திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி முதலில் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கல்வியின் மிக்கதாம்
செல்வமொன்று இல்லையே
கண்மணி கேளடா நீ என்றன்
flash back நக்கீரன் : சத்துணவு முட்டையில் சத்துணவு அமைச்சர் சரோஜா கமிஷன் நிக்காலோ!
நக்கீரன் : :வியாழன், 23 நவம்பர், 2017 :குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுங்க என்று உலக சுகாதார நிறுவனம் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறது."
ஏழைக் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பை சத்துணவுக் கூடங்களில் வழங்கினார் கலைஞர். ஆனால் இப்போது அதற்கும் ஆபத்து என்று அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.
ஒருபக்கம் முட்டை உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்துவிட்டதாக சொல்கிறார்கள். அதன்காரணமாக முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக செய்திகள் பீதியைக் கிளப்புகின்றன. தமிழகத்தில் 4 ரூபாய்க்கு விற்ற முட்டை 7.00 ரூபாய் முதல் 7.50 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலை உயர்ந்தது உயர்ந்தபடி இருக்க, இப்போது முட்டை விலையும் உயர்ந்திருப்பது ஏழை எளிய நடுத்தர மக்களின் அசைவ உணவுக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது.
அதிமுக அமைச்சர் டாக்டர் சரோஜா ( முட்டை ஊழல் புகழ்) சிக்குகிறார் .. வழக்குப்பதிவு செய்து அதிரடி காட்டும் போலீஸ்..!
tamil.asianetnews.com - வினோத் குமார் : சேலம் மாவட்டம் சங்ககிரிபகுதியை சேர்ந்தவர் டாக்டர் சரோஜா. அதிமுக மாநில மகளிரணி இணை செயலாளரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் பகுதியில் புதுப்பாளையம் சாலையில் வீடு கட்டி வசித்து வருகிறார்.
வேலை வாங்கித் தருவதாக ரூ.76.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரிபகுதியை சேர்ந்தவர் டாக்டர் சரோஜா. அதிமுக மாநில மகளிரணி இணை செயலாளரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் பகுதியில் புதுப்பாளையம் சாலையில் வீடு கட்டி வசித்து வருகிறார்.
பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியரை பணி நீக்கம் செய்த பாஜக அரசு .. ராஜஸ்தான்
தினமலர் : ஜெய்பூர்: கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய, ராஜஸ்தான் ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், 'டி 20' உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இதன் வாயிலாக, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான தன் முதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்தது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் நபீசா அட்டாரி. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும், 'வாட்ஸ் ஆப்'பில், 'நாம் வெற்றி பெற்றுவிட்டோம்' என பதிவு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்தார்.
ஆர்எஸ்எஸ் திட்டத்தை அமல்படுத்தும் திமுக அரசு: கி.வீரமணி சாடல்!
மின்னம்பலம் : ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கல்விக் கொள்கையைப் பரப்புவதே தமிழ்நாடு இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இன்னும் பெருமளவில் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் மாணவர்கள் இழந்த கற்றலை மேம்படுத்திட பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார்.
கொடநாடு: சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி வழக்கு?
மின்னம்பலம் : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில் முதன் முறையாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கிய நகர்வுகளில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 2017 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நள்ளிரவு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் கொலை கொள்ளைகள் அரங்கேறியது.
காட்பாடி ஒன்றிய வள்ளிமலை வேல்முருகன் (தி.மு.க- ) ! உடம்பில் கிலோக் கணக்கில் தங்க நகை; ரூ.22 கோடி சொத்து! -
விகடன் : வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழுவின் தலைவராக, தி.மு.க-வைச் சேர்ந்த வள்ளிமலை வேல்முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பில் இல்லாத வேல்முருகன் தலைவராகியிருப்பதுதான் ஆச்சர்யமே. (எம்பி கதிர் ஆனந்திற்கு கார்வாங்கி கொடுத்தாரோ?)
கழுத்தில் கொத்துக் கொத்தாக கிலோக் கணக்கில் தங்க செயின்களையும், உருளை போனற் பிரேஸ்லெட்களையும் அணிந்துகொள்வதில் வேல்முருகனுக்கு அலாதிப் பிரியமாம்.
ஒன்றியத் தலைவராவதற்கு முன்பு வரை நடமாடும் நகைக்கடையாகவே இருந்தார் வேல்முருகன்.
நம்மிடம் பேசிய காட்பாடியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘``வள்ளிமலை வேல்முருகன் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. இப்படியொருவர் இருக்கிறார் என்று உள்ளாட்சித் தேர்தலில்தான் தெரியும். 5-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சீட் கிடைத்ததிலும் பெரிய புள்ளியின் ஆதரவு இருக்கிறது
சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை - கணவன், மனைவிக்கு 4 தூக்கு ; 2 ஆயுள் தண்டனை! திண்டிவனம்
நக்கீரன் செய்திப்பிரிவு : சொத்துக்காகப் பெற்றோரைக் கொலை செய்த மகன் மற்றும் மருமகளுக்கு நான்கு தூக்குத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திண்டிவனம் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானார்கள், ஏசி வெடித்ததில் இந்த விபத்து நடைபெற்றதாக அந்த விபத்தில் உயிர் இழந்த நபரின் மகன் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை செய்ததில், சொத்துக்காக அப்பா,அம்மா, தம்பி உள்ளிட்ட மூவரை மனைவியுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
செவ்வாய், 26 அக்டோபர், 2021
வடகிழக்கு போல தமிழகத்திலும் வெளிமாநிலத்தவருக்கு Inner Line Permit முறை- வலுக்கும் கோரிக்கை
Mathivanan Maran - Oneindia Tamil : சென்னை: வெளிமாநிலத்தவர் குடியேற்றங்களைத் தடுக்கும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல இன்னர் லைன் பெர்மிட் -Inner Line Permit முறையை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொழில் - வணிக நிறுவனங்களைத் தொடங்கிட தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது;
வெளிமாநிலத்தவர் சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும்.
வெளி மாநிலத்தவருக்கு Inner Line Permit வழங்கும் பட்டியலில் தமிழ்நாடு சேர்க்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேகோரிக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ.வும் வலியுறுத்தி உள்ளார்.
வேல்முருகன் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.
ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் “தாய், குழந்தையை மீட்ட தீரமிக்க இளைஞர்கள்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
கலைஞர் செய்திகள் :ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தாய் மற்றும் குழந்தையை மீட்ட இளைஞர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார்.
காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, பெரும் பாறைகள் கொண்ட இடத்தில் சிக்கிக்கொண்ட அந்த தாயையும் குழந்தையையும் மீட்க இளைஞர்கள் சிலர் முயற்சி செய்தனர்.
குழந்தையையும், தாயையும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வரும்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் இருவர் பிடிமானம் இல்லாமல் வெள்ளநீரில் விழுந்தனர்.
சிவசங்கர் பாபாவுக்கு இரண்டாவது வழக்கில் ஜாமின் வழங்கியது செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம்
மாலைமலர் : 3 போக்சோ வழக்கில் இரண்டாவது வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்கியது செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம்
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். மேலும், போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்திய – இலங்கை கடற்படைக் கப்பல்கள் கொழும்பு, திருகோணமலையில் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபடத் திட்டம்
பிபிசி தமிழ் : இந்திய – இலங்கை கடற்படைக் கப்பல்கள் கொழும்பு, திருகோணமலையில் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபடத் திட்டம்
இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை நேற்று (24) மேற்கொண்டுள்ள இந்திய தெற்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவ்லா, இன்று (25) இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோரை சந்தித்துள்ளார்.
இந்திய கடற்படையின் ஒன்றாவது கடற்படை பயிற்சிப் பிரிவின் 6 பயிற்சிக் கப்பல்கள், இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியை நடத்துவதற்காக நேற்று (24) இலங்கையை வந்தடைந்த போது, இந்திய தெற்கு கடற்படைத் தளபதியும் இலங்கைக்கு நேற்றைய தினம் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கை கடற்படைத் தளபதியை, கடற்படைத் தலைமையத்தில் இன்று சந்தித்த – இந்திய தெற்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவ்லாவுக்கு, சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் சசிகலா இணைப்பு? தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
Veerakumar - e Oneindia Tamil : மதுரை: சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். Sasikala இணைப்பு பற்றி தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு - OPS அதேநேரம், "இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது" என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரையில், இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ஓபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார். ஓபிஎஸ்சுக்கு அந்த விஷயத்தை நினைவுபடுத்துகிறேன்!
அதிமுகவில் வலுக்கும் மோதல்! ஏற்குமா இல்லையா ஏற்குமா இல்லையா சசிகலாவை அதிமுக ஏற்குமா? என்று பன்னீர் செல்வத்திடம் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம்; ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு என்று தெரிவித்தார்.
கணவனால் கைவிடப்பட்ட, தனியாக வாழும் பெண்களுக்கு தனியான ரேஷன் கார்ட் .. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு.!
tamil.asianetnews.com : ஒரு பெண்மணி கணவரால் நிராதரவாகக் கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரைச் சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்யப்படும்.
கணவனால் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முறிவுற்று தனியாக வாழும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- கணவனால் நிராதரவாகக் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முறிவுற்றுத் தனியாக வசிக்கும் பெண்களின் பெயர், கணவனின் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள காரணத்தினாலும், அவரது கணவர் அப்பெண்மணியின் பெயரை நீக்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முன்வராத காரணத்தினாலும், நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்பந்தப்பட்ட பெண்மணிக்குக் குடும்ப அட்டை வழங்கப்படாத நிலையில், அத்தகைய பெண்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
தமிழரா? திராவிடரா? களப்பிரர்கள் காலம் இருண்ட காலமல்ல! அது ஒரு பொற்காலம் - சொன்னவர் பாபாசாகேப் அம்பேட்கர்
Devi Somasundaram : ;வேந்தன். இல. நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்த தமிழரா? திராவிடரா? கருத்தரங்கில் ம.செந்தமிழன் பேசிய 'தமிழர் மெய்யியல் - இறையுரை'யை எனக்கு நாம் தமிழர் தோழர் அனுப்பி இருந்தார்.
தோழர் மன்னிக்கவும். அது இறையுரையல்ல. பொய்யுரை.
இப்படி சொல்வதற்கு காரணம் அந்த உரையில் முழுதும் மலிந்து கிடந்த பொய்கள். அவர் சொன்ன ஒவ்வொரு கருத்திலும் உள்ள பொய்கள். ஆதாரங்களோடு மறுக்கலாம். ஆனால் அதற்கு முகநூல் பதிவு இடம் தராது.
கழுகு பார்வையில் (கழுகு பார்வையே கூரிய பார்வைதானே) மேலெழுந்த வாரியாக சில புள்ளிகளை தொட்டுக்காட்டினாலே அவரின் பொய்களும் அறியாமையும் அம்பலமாகும்.
1. ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதியும் குண்டலகேசியும் குப்பை என்கிறார். ஏனெனில் அது சமண (ஜைன) காப்பியமாம். அதில் மறுபிறவி குறித்து தான் அதிகம் பேசப்பட்டுள்ளன. ஆனால் சிலப்பதிகாரம் தமிழரின் மரபை பேசிய காப்பியம் என்கிறார்.
ஐயோ பாவம். சிலப்பதிகாரத்தில் மறுபிறவி கூறும் வஞ்சி காண்ட பகுதிகளை மட்டும் கிழித்து விட்டு யாரோ அவருக்கு புத்தகத்தை தந்திருக்கிறார்கள் போலும்.
திங்கள், 25 அக்டோபர், 2021
"Mother Lu" சீனாவின் முதல் பெண் புரட்சியாளர். கிபி 900 த்தில் அரசவம்சமாக இருந்த ஹான் பேரரசின் வம்சாவளி!
புகச்சோவ் : Mother Lu....! (தாய் லூ) .. Red eyebrows...! (செம்புருவ போராளிகள்)
மதர் லூ சீனாவின் முதல் பெண் புரட்சியாளர். கிபி 900 த்தில் அரசவம்சமாக இருந்த ஹான் பேரரசின் வம்சாவளி. கிபி 1400 களில் ஆட்சியை இழந்த லூவின் பரம்பரை, அதன்பிரகு மதிப்புமிக்க பிரபுக்களாக வாழ்ந்துவந்தனர்.
கிபி 1700 களின் இறுதியில் ஜின் வம்சத்தினர் ஆண்ட, ஹோண்டாங் மற்றும் ஜியாங்சு பகுதிகளின் மஞ்சளாறு பாய்ந்து விவசாய நிலங்களை சின்னாபின்னமாக்கியது.
இதனொல் விவசாயம் அழிந்து உழைக்கும் மக்கள் தவித்தபோதும், கெங்ஷி பேரரசர் லியூசுவான் கண்டுகொள்ளாமலேயே இருந்தார். அதை பயன்படுத்திக்கொண்ட ஜின் மாநில அரசான வாங்மாங் வரிகளை வசூலிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து வக்கிர நடவடிக்கைகளை செய்துவந்தார். இதனால் விவசாயிகள் கொத்துகொத்தாக மடிந்துவீழ்ந்தனர். எஞ்சியிருந்தவர்கள் வாங்மாங்கை எதிர்க்கத்துணிந்தனர்.
முஸ்லிம் காதலனை கொன்ற இந்து குடும்பம் !கூலிப்படையை ஏவியது அம்பலம்
இளைஞரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இளைஞர் கடுமையாக சித்ரவதைக்கு உள்ளானது தெரியவந்தது.
மகளை காதலித்த இளைஞரை இந்து அமைப்பினரை ஏவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியைச் சேர்ந்த 24 வயதான அர்பாஸ் அஃதாப் என்ற இளைஞர் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி மாயமானார். இளைஞர் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் செப்டம்பர் 28-ம் தேதி கானாபுரா அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் அர்பாஸ் அஃதாப் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இஸ்லாமிய பெண்ணை காதலித்த இந்து இளைஞர் ஆணவக் கொலை- கர்நாடகாவில்
BBC : கர்நாடகாவில் விஜயபுரா அருகே முஸ்லிம் பெண்ணை காதலித்த இந்து இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் அலமேலா அருகேயுள்ள பெக்கனூருவைச் சேர்ந்தவர் ரவி நிம்பரகி (32). இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணுக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமண ஏற்பாடுகள் நடந்த போது, ரவி தனது பெற்றோருடன் சென்று பெண்ணின் குடும்பத்தாரிடம் பேசியுள்ளார்.
அப்போது அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என பெண்ணின் பெற்றோர் மறுத்துள்ளனர். மேலும், காதலை கைவிடுமாறும் மிரட்டியதாக தெரிகிறது. ஆனாலும் அவர்களின் காதல் தொடர்ந்தது.
கேரளாவில் வெள்ள அபாயம் .. முல்லைப்பெரியாறு நீரை அதிகமாக எடுத்து கொள்ளுமாறு . கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை
தினமலர் : திருவனந்தபுரம்-'முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச அளவுக்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்' என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.இங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்து உள்ளது
முல்லைப் பெரியாறு அணை. ஆனால், அதை நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் உரிமை தமிழகத்திடம் உள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2,109 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.
தி.மு.க ஆட்சிகாலம் சுயநிதிக் குழுக்களின் பொற்காலம்” : வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
"மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்களே!மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களே! தலைமைச் செயலாளர் அவர்களே!நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களே!இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் அவர்களே! அரசு அதிகாரிகளே!வங்கி அதிகாரிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து - ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் நீங்கள் இதுவரை தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஞாயிறு, 24 அக்டோபர், 2021
கூழாங்கல் ! நயன்தாரா Queen of Kollywood! வசூல் ஹீரோக்கள் வெறும் குப்பைகள்தான் .
Singara Velan : தமிழ், தெலுங்கில் ஹீரோக்களை தாண்டி ஹீரோயின்களால் எதுவுமே செய்ய முடியாது. ஏதாவது எதிர்த்து பேசிவிட்டால் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகள் போய்விடும். இன்று இதையெல்லாம் உடைத்தவர் என்று நடிகை நயன்தாராவை சொல்லலாம்.
Lyca, விஜய், முருகதாஸ் உருவாக்கிய படம் கத்தி. இதில் மீஞ்சூர் கோபியின் கதைக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் இயக்குனர் முருகதாஸால் எப்படி ஏமாற்றப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். கோபிக்கு உதவவே நிறைய பேர் பயந்தனர். ஏனென்றால் கத்தி படத்தில் இருப்பவர்கள் எல்லாருமே பெரிய ஆட்கள். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோபிக்கு ஆதரவு தந்தவர் நயன்தாரா. கோபியையே இயக்குனராக்கி நயன்தாராவே அந்த படத்தில் நடித்தார். அறம் என்கிற படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது.
நயன்தாரா இதோடு நிற்காமல் தொடர்ந்து நிறைய இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை தந்தார். இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் தயாரிப்பில் உருவான கூழாங்கல் என்கிற படம் Best International Film என்கிற பிரிவில் அகாடமி விருதை வெல்லும் அளவுக்கு சென்றிருக்கிறது கூழாங்கல். மேலும் இப்படம் Cannes, Venice, Berlin போன்ற மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் கலந்துக் கொள்ளவில்லை என்றாலும் இதற்கு அடுத்த நிலையில் உள்ள விழாக்களில் கலந்துக்கொண்டு நிறைய விருதுகளை வென்றிருக்கிறது இப்படம். இயக்குனர் வினோத் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்
ஆர்யன் கானுக்காக ரூ.18 கோடி பேரம்.. அதிகாரிக்கு 8 கோடி” - வழக்கில் திடீர் திருப்பம்!
கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்ய்யப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் சாட்சி ஒருவர் தன்னிடம் வெற்று ஆவணத்தில் கையெழுத்து வாங்கியதாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை 18 லட்சத்திற்கு விற்ற 17 வயது கணவன்! செல்போன் வாங்குவதற்காகவாம்.. ராஜஸ்தானில்
.tamilmirror.lk : மனைவியை விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, ஆடம்பர கையடக்க அலைபேசியை வாங்கி, ஆடம்பரமாக வாழ்ந்த கணவனை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த சம்வமொன்று ராஜஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
ஒடிசா மாநிலம் ராய்ப்பூர் பாலங்கீரியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.
பின்னர்,இத்தம்பதியினர் ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தானிலுள்ள செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர். அங்கு சிறுவன் (கணவன்) தனது மனைவியை ரூ.18 இலட்சத்துக்கு பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது நபருக்கு விற்பனை செய்துள்ளான். click here teen-sells-wife
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தனின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம்? திமுகவில் அதிரடி..!
tamil.asianetnews.com - vinoth kumar : திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமாரின் உறவினர் சத்யானந்தம் ஓர் அணியாகவும், அனங்காநல்லூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமார் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர்.
கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்த திமுக கவுன்சிலர்கள் உட்பட 6 பேர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமாரின் உறவினர் சத்யானந்தம் ஓர் அணியாகவும், அனங்காநல்லூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமார் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர்.
சீன பில்லியனர்கள் ரத்த கண்ணீர்.. சம்பாதித்தது எல்லாம் கோவிந்தா..! கோவிந்தா
ஆஸ்கார் விருது போட்டிக்கு கூழாங்கல் திரைப்படம் அதிகாரப்பூர்வ தேர்வு
தினத்தந்தி : இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம் 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் பார்வையிட்டனர்.
94-வது அகாடெமி விருதுகள் (ஆஸ்கார்) அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழ் படங்களான ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’ உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.