savukkuonline.com:
தமிழன் என்றோர் இணமுன்டு,
தனியே அவற்கொரு குணமுண்டு
மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்
என்றார் நாமக்கல் கவிஞர்.
அந்த கவிஞரின் வாக்குகள் பொய்யில்லை என்பதை 12 ஏப்ரல் 2018, இந்தியாவுக்கு அல்ல. உலகுக்கே நிரூபித்துள்ளது.
ஒருவன் அரசியல்வாதியாவதற்கு, ஒரு குறிப்பிட்ட அளவு நாசிஸ்சிஸ்ஸம் எனப்படும் சுயமோகம்
என்கிற குணம் தேவை. தன்னை நேசிக்கும் அத்தகைய குணம் இல்லாதவனால்,
அரசியல் தலைவனாக முடியாது. அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு இது
இருக்கும். அந்த சுயமோகத்தின் அளவு ஒரு எல்லையைக் கடந்து போகையில், அது
நோயாகும். அந்த நோயை Narcissistic Personality Disorder என்று
வைப்படுத்துகிறார்கள்.
அந்த நோய் மிகவும் முற்றிப் போனால் எப்படி
இருக்கும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள்
என்பதற்கான வாழும் உதாரணம்தான் நரேந்திர மோடி. துளியும் கூச்ச நாச்சம்
இல்லாதவர். ஆசூயை அற்றவர்.
2013 முதல் மோடியை தொடர்ந்து பார்த்து
வருபவர்களால் இதை நன்றாக புரிந்து கொள்ள முடியும். எந்த நிகழ்வாக
இருந்தாலும், நான், நான் நான் மட்டுமே.
ஒரு தேர்தல் நடக்கையில்
வாக்குச் சாவடியில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை, தேர்தல் சின்னத்தை
காட்டுவது தவறு என்பது தெளிவான விதி. பெரிய தலைவர்கள் யாரும் இதை
மீறியதாக தகவல்கள் இல்லை.
ஆனால் 2014 தேர்தலின்போது, தேசிய
சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்பதை நன்றாகவே உணர்ந்து,
வாக்களித்து விட்டு, வாக்குச் சாவடியின் வாயிலிலேயே, தாமரை சின்னத்தை
எடுத்து கையில் வைத்துக் கொண்டு செல்பி எடுத்துக் கொண்ட கேவலமான பிறவிதான்
மோடி.