சனி, 20 ஜூலை, 2013

10 கி.மீட்டர் தூரம் நடந்துசென்று ஷூட்டிங்கில் பங்கேற்றனர்

அழகு மகன்‘ படத்திற்காக ஹீரோ, ஹீரோயின் 10 கி.மீட்டர் தூரம்
நடந்துசென்று ஷூட்டிங்கில் பங்கேற்றனர். இதுபற்றி இயக்குனர் அழகன் செல்வா கூறியது:பெற்றோரின் உணர்வை புரிந்துகொள்ளாமல் நண்பர்கள்தான் வாழ்க்கை என்று இருக்கும் வாலிபன் வாழ்வில் காதல் பிறக்கிறது. நட்பா, காதலா என்ற சூழல் எழும்போது அவன் எடுக்கும் முடிவுதான் கிளைமாக்ஸ். புதுமுகம் உதய் ஹீரோ. மாளவிகா வேல்ஸ் ஹீரோயின்.இதன் ஷூட்டிங் பெரும்பகுதி அகமலை, புலிக்குகை போன்ற இடங்களில் நடந்தது. ‘பிதாமகன்‘, ‘பரதேசி‘ போன்ற பாலாவின் படங்கள் ஷூட்டிங் நடந்த இடங்கள் மற்றும் அதற்கும் உயரமான இடங்களில் ஷூட்டிங் நடந்தது. இந்த இடத்துக்கு செல்ல வாகன வசதி கிடையாது. எனவே உதய், மாளவிகா வேல்ஸ், பட டெக்னீஷியன் என எல்லோருமே 10 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று ஷூட்டிங் நடத்தினோம். அக்கு அஜ்மல் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். ஞானதேஸ் அம்பேத்கர், ஆர்.செல்வி தயாரிக்கின்றனர்.tamilmurasu.org

Chennai பெண் கடத்தி கொலை கள்ளக்காதலனை பிடிக்க 3 தனிப்படை

சென்னை:சென்னை திருநின்றவூரை சேர்ந்தவர் கங்காதேவி (28). இவருக்கும் திருவான்மியூரை சேர்ந்த சரவணனுக்கும் 2005&ம் ஆண்டு திருமணம்
நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 13&ம் தேதி காலை பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் செல்லவில்லை.அன்று பிற்பகல் 3 மணிக்கு தனது அண்ணன் ரவிச்சந்திரனுக்கு போன் செய்த கங்காதேவி, சென்ட்ரலில் உள்ள ஒருவரது செல்போனில் இருந்து பேசுவதாகவும், தன்னை கார்த்திக் என்பவர் அடித்து, உதைத்து கடத்தி செல்வதாகவும் கூறிவிட்டு போனை வைத்து விட்டார். சிறிது நேரத்தில் ரவிச்சந்திரனுக்கு மீண்டும் போன் வந்தது. அதில் பேசிய கார்த்திக், ‘‘உன் தங்கையை நான்தான் கடத்தியுள்ளேன். முடிந்தால் பிடித்து பார்’’ என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருநின்றவூர் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார். ‘உன் தங்கை சென்ட்ரலில் இருந்துதான் பேசியுள்ளார். அதனால் பெரியமேடு போலீசில் புகார் செய்யுங்கள்’ என்று போலீசார் கூறிவிட்டனர்.

பெரியமேடு போலீசில் புகாரை கொடுத்தபோது, அவர்களும் வாங்கவில்லை. ‘திருவான்மியூரில் இருந்துதான் பெண் காணாமல் போயுள்ளார். அங்கே சென்று புகார் செய்யுங்கள்’ என்று கூறிவிட்டனர். 2 நாள் அழைக்கழிப்புக்கு பிறகு கடந்த 15 ம் தேதி திருவான்மியூர் போலீசில் புகார் செய்தனர்.

பாகிஸ்தானில் இந்து பெண்களை கற்பழிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு: அமெரிக்க ஆய்வறிக்கை

பாகிஸ்தானில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களுக்கு இந்து பெண்கள் தான்
இலக்காகி வருகின்றனர் என அமெரிக்காவின் ஆய்வறிக்கை கவலை தெரிவித்துள்ளது. சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் உலகளாவிய அளவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த அறிக்கையின் முடிவுகளின்படி பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களை குறிவைத்து கடந்த 18 மாதங்களில் 16 தாக்குதல் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்களில் 3 இந்துக்கள் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இதே போல், கடந்த 1 1/2 ஆண்டுகளில் மட்டும் 7 இந்து பெண்கள் பாகிஸ்தானியர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சீக்கியர்களில் ஒருவரும் மதவெறி தாக்குதலில் பலியாகியுள்ளார். ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையில் நடைபெற்ற 203 இன மோதல் சம்பவங்களில் 717 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 635 பேர் ஷியா பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய மதப்பிரிவான கிறிஸ்தவர்கள் மீது 37 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 11 பேர் பலியாகியுள்ளனர். 36 பேர் படுகாயமடைந்தனர். 5 கிறிஸ்தவ பெண்கள் பாகிஸ்தானியர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

பாஜக மாநில நிர்வாகி ரமேஷ் படுகொலை! !

19.07.2013 வெள்ளிகிழமை இரவு 9.40 அளவில் சேலம் மரவனேரி முதல் கிராசில் உள்ள அலுவலக வாசலில் உடல் சரிந்து கிடந்தார் பா.ஜ.க மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ். உடலெங்கும் பலத்த வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருக்க ‘எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பாரே நம்ம தலைவரை சிதைச்சுட்டானுங்களே!’ என திரண்ட பா.ஜ.க.வினர் கதறி அழுதனர். அந்த அக்ரகார வீதியில் அனைவரும் கதவை சாத்தியபடி உள்ளே இருக்க ‘உங்களுக்காகவும் தான போராடினார்’ என கதறினர்நாம் சேலம் மாவட்ட செயலாளர் கோபிநாத்திடம் நம் இரங்கலை தெரிவித்துவிட்டு பேசினோம்.‘யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவரு. ரொம்ப தங்கமான மனுசர். அவரை கோபமான தோற்றத்தில் யாரும் பார்துருக்கவே முடியாது. எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பார். ல்லோரையும் அனுசரித்து செல்பவர். கொள்கை வேறு நட்பு வேறு என மாற்று கொள்கை கொண்ட அமைப்பினரிடமும் நட்பு பாராட்டுபவர். கிட்டத்தட்ட இருவத்தி அஞ்சு வருஷமா இயக்கத்தில இருக்காரு. இந்துகளின் வளர்ச்சிக்காகவே எந்நேரமும் சிந்திசுகிட்டே இருப்பாரு. ரோட்டுல போகும் போது வீட்டு வாசல்களில் கோலம் போடப்பட்டு இருந்தால் அதில் கார் சக்கரம் ஏறாதபடி எப்படியாவது தள்ளி செல்வாரு.

மதிய உணவு நிதி 500 கோடியை பீகார் அரசு திருப்பிக் கொடுத்துள்ளது ! விளைவு 27 மாணவர்கள் உயிரிழப்பு

புதுடில்லி : மதிய உணவு திட்டத்திற்காக மத்திய அரசு அளித்த சுமார் ரூ.500 கோடி நிதியை பீகார் அரசு கடந்த ஆண்டு திருப்பிக் கொடுத்துள்ளது. சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் சிறிய அளவில் பணம் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பீகாரில் மத்திய உணவு கான்டிராக்ட் அல்லது பாத்திரம் வாங்கியது குறித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. 2006-07 மற்றும் 2009-10 ஆண்டுகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.462.78 கோடியையும், தங்களால் மதிய உணவு திட்டத்திற்காக செலவிட முடியவில்லை என பீகார் அரசு திருப்பி அளித்துள்ளது. 2012ம் ஆண்டு வரை மதிய உணவிற்காக ஒதுக்கப்பட்ட நிதித் தொகை பயனற்றதாக வங்கியிலேயே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அளித்த நிதியை திருப்பிக் கொடுத்த பீகார் அரசு தற்போது மதிய உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டி, அதன் விளைவாக 27 மாணவர்கள் உயிரிழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வெள்ளி, 19 ஜூலை, 2013

2ஜி வழக்கில் அரசு தரப்பு சாட்சியாகிறார் அனில் அம்பானி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அலைக்கற்றை லைசென்ஸ் பெறுவதற்காக, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் இதுதொடர்பாக 2011ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி உள்ளிட்ட சிலரை அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்க விரும்புவதாகவும், இதற்காக அவர்களுக்கு 'சம்மன்' அனுப்ப வேண்டும் என்றும் கோரி சி.பி.ஐ. சார்பில், டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மற்றொரு திவ்யா - இளவரசன் ? காவல்துறை என்ன செய்கிறது?

தருமபுரி, ஜூலை 19- தருமபுரி மாவட்டம் பொம்மிடி காவல் சரகத் திற்குட்பட்ட வேப்ப மரத்தூர் கிராமத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோபால் மகன் சுரேஷ் என்பவரும் அரூர் வட்டம் பறையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ப வரின் மகள் சுதா என்ப வரும் (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்) காதலித்து கடந்த மூன் றாண்டுகளுக்கு முன் 21.4.2010-ஆம் தேதி சின்ன திருப்பதி கோயிலில் திரு மணம் செய்து கொண்டு அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டுள்ள னர்.
கடந்த 3 ஆண்டு களாக சுரேஷ் பெற்றோ ருடன் கூட்டுக் குடும்ப மாக வாழ்ந்து வந்ததோடு ஜாதி மறுப்புத் திரு மணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் காதலின் சாட்சி யாக ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.
மூன்றாண்டுகளுக்குப் பிறகும்...
இந்த நிலையில் இவர் கள் செய்து கொண்டது. காதல் திருமணம் என்று நம்பிய ஊரார். காலப் போக்கில் சுதாவின் சமூகம் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் சமூ கத்தை சார்ந்தவர் என்று தெரிய வரவே ஜாதியின் கோர முகம் தெரிய வந்தது. 3 ஆண்டுகளாக வேப்பமரத்தூரில் கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த நிலையில் நத்தம் இளவரசன் - திவ்யா காதல் விவகாரத்தில் ஜாதி வெறியர்களின் பிடி இறுகியது.

ஆசிட் வீச்சில் இருந்தும் ஆணாதிக்க சினிமாவிலிருந்தும் பெண்களை காப்பாற்றுமா உச்ச நீதிமன்றம் ?

னிமேல் அமில விற்பனையை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமிலத்தை வாங்கி வைத்திருக்கும்
நிறுவனங்கள் அதன் பயன்பாடு குறித்த பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்றும், அமிலத்தின் பொறுப்பாளராக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் ஆர் எம் லோதா மற்றும் இப்ராஹிம் கலிஃபுல்லா அடங்கிய அமர்வு ஒன்று விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த பதிவேட்டை உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். அமிலம் பயன்படுத்தப்படும் ஆய்வகங்களுக்கு வந்து போகும் மாணவர்களையும், மற்ற நபர்களையும் கண்டிப்பாக சோதனை செய்து அனுப்ப வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது வட்டார மாஜிஸ்ட்ரேட் ரூ 50,000 அபராதம் விதிக்கலாம் என்றும் வழிகாட்டல் அளித்துள்ளது. சகல தமிழ் சினிமா நாயகர்களும் கதாநாயகியை ஏதாவது ஒரு கட்டத்தில் ஓங்கி அறையும் காட்சியில் நடித்து குருர ரசனையை வளர்க்கிறார்கள் , பெண்களுக்கு எதிரான மிகபெரும் தாக்குதல் இந்த சினிமா காட்சிகள்தான் முதலில் பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகளை தவிருங்கள்

குடித்துவிட்டு காரோட்டி குழந்தையை கொன்ற முதலாளிவீட்டு பையன் ! சட்டத்தின் ஆட்சியா ? வர்க்கத்தின் ஆட்சியா ?

முனிராஜ்டந்த மே மாதம் 23-ஆம் தேதி அதிகாலையில் எம்.பி. குழும நிறுவனத்தின் குலக்கொழுந்து ஷாஜி புருஷோத்தமன் குடிபோதையில் காரை அதிவேகமாகவும் தாறுமாறாகவும் சென்னை – எழும்பூர் பாந்தியன் சாலையில் ஓட்டிவந்து, நடைபாதையோரமாகத் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது ஏற்றியதில் சிக்கிக் கொண்ட சிறுவன் முனிராஜ் மறுநாள் காலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனான். அச்சிறுவனின் உடம்பில் கார் ஏறி இறங்கியதில் அவனது இடுப்புப் பகுதி முறிந்து போய், உள்ளுறுப்புகளும் சிதைந்து போயிருந்தன. ஷாஜியின் கார் ஏறி இறங்கியதில் கொல்லப்பட்ட சிறுவன் முனிராஜ்; மகனை இழந்து வாடும் பெற்றோர் தியாகு மற்றும் மாலினி.
இது எதிர்பாராதவிதமாக நேர்ந்துவிட்ட சாலை விபத்தல்ல; நண்பர்களோடு சேர்ந்து குடித்து கும்மாளமடித்துவிட்டு, தலைக்கேறிய போதையோடு ஒருவித வெறித்தனமான இன்பத்தை அனுபவிப்பதற்காக நெடுஞ்சாலைகளில் தமது சொகுசுக் காரை அதிவேகமாகவும் தாறுமாறாகவும் ஓட்டிக் கொண்டு போகும் மேட்டுக்குடி கும்பலின் பொறுக்கி கலாச்சாரத்தில் ஊறிப்போன தறுதலை செய்திருக்கும் படுகொலை இது.

ராமதாசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் பதிலடி! நாகராஜன் - இளவரசன் மரணம் இயற்கை மரணமல்ல -கௌரவக் கொலைகள்!


தருமபுரி நாகராஜன் - இளவரசன் மரணம் இயற்கை மரணமல்ல -கௌரவக் கொலைகள்! என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,  ’’பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு 18.07.2013 அன்று தாங்கள் ஏதோ தவறாகசிலுவையில் அறையப் பட்டதாகவும் அதற்காக தமிழக கட்சிகள் பாவங்களை சுமப்பார்களா என்றும் ஒரு பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளார்.
குற்றம் செய்வதை விட குற்றம் நடந்த பிறகு அதைப் பற்றிய குற்ற உணர்வின்றி இருப்பது மிகவும் கொடூர மானது.
இளவரசன் மரணத்தைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 04.07.2013 அன்று வெளியிட்டிருந்த அறிக்கையில் “தமிழக மக்கள் மத்தியில் தர்மபுரி இளவரசனின் மரணச் செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் ஒருங்கே உருவாக்கியுள்ளது. இது இளவரசன் திவ்யாவின் சாதி மறுப்புத் திருமணத்தை ஒட்டி நடந்துள்ள இரண்டாவது உயிர் பலியாகும்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ! வாலியின் சகாப்தம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை:கவிஞர் வாலியின் உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் தகனம் நடக்கிறது.காவிய கவிஞர் என்று திரையுலகினரால் பாராட்ட பெற்றவர் வாலி (82). கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த மாதம் 14&ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். 2 தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு வாலி மரணம் அடைந்தார். அவரது உடல் ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி,  நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் வாலியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கண்கலங்கினர்.

சென்னை மாணவி ஜார்ஜினாவின் உடல் லண்டனில் மறுபரிசோதனை

Georgina Thomsson, a first-year student of bachelor of engineering in aerospace at the University of Liverpool, was found dead in her hostel last Friday. The university later said she was found hanged in her room.
But Georgina's father S Thomsson, a police inspector (law and order) at J J Nagar in Chennai, found no hanging marks on her neck. "I suspect foul play," he told TOI. "After I arrived in the UK and investigated, I found out my daughter was supposedly not in her hostel room from June 28 to July 11. The rule is that the hostel is supposed to inform the family or the UK Border Agency if an international student is missing. They didn't even inform the local police station. Also, she supposedly slipped into her room on the night of July 11 and committed suicide by hanging. How come no one saw her entering the premises?"
லண்டன்: இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த சென்னையை சேர்ந்த மாணவி ஜார்ஜினாவின் உடல் இன்று மறு பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் எஸ்.தாம்சன் என்பவரின் மகள் ஜார்ஜினா தாம்சன். இவருக்கு விண்வெளி வீராங்கனை கல்பானா சாவ்லா போன்று விண்வெளி ஆய்வில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே இருந்து வந்தது. மிகவும் புத்திசாலி பெண்ணான ஜார்ஜினா, லண்டனில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஏரோஸ்பேஸ் இன்ஜியரிங் படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில், ஜூலை 12ம் தேதி பல்கலைக்கழக விடுதியில் தான் தங்கி இருந்த அறையில் ஜார்ஜினா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டெல்லி கற்பழிப்பு வழக்கு: சிறுவன் மீதான திருட்டு குற்றம் நிரூபணம்

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இளம் குற்றவாளி மீது டெல்லி சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சிறுவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக அவருக்கு 3 ஆண்டுகள் வரைதான் தண்டனை கிடைக்கும். ஆனால், மற்ற குற்றவாளிகளை விட அந்த சிறுவன் கொடூரமாக நடந்து கொண்டதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. எனவே, அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.< இந்நிலையில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் மீது திருட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியை பலாத்காரம் செய்வதற்கு முன்னால், அதே பஸ்சில் அழைத்து வந்த தச்சுத் தொழிலாளியிடம் பணத்தை கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.malaimurasu.com

அம்மாவின் காலடியில் நாஞ்சில் சம்பத்தும் பரிதியும் தள்ளு முள்ளு

கருணாநிதியின் குடும்ப சுயநலத்தால், அறிஞர் அண்ணாவால்
உருவாக்கப்பட்ட தி.மு.க.வின் கொள்கைகளை தற்போது நடிகை குஷ்பு போன்றவர்கள் விளக்கி பேசும் அளவிற்கு தி.மு.க.வின் நிலமை சென்றுவிட்டது” என்று கூறியுள்ளார், குஸ்பு தி.மு.க.வில் இணைந்த பின்னரும் அக்கட்சியில் இருந்துவிட்டு, தற்போது அ.தி.மு.க.வில் இணைந்துள்ள பரிதி இளம்வழுதி.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசின் இரண்டாண்டு கால சாதனைகள் குறித்த விளக்க பொதுக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி பேசியதுபோல ஒரிஜினல் அ.தி.மு.க.வினரே பேசவில்லை.
அப்படி என்னதான் பேசினார் பரிதி?
இந்திய திரு நாட்டினையே ஆளப்போகும் சத்தியினை பெற்றுவரும் அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தில் தலைமை செயற்குழு உறுப்பினராக என்னை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளது. 27 ஆண்டு கால சிறை வாழ்கையினை விட்டு வெளியே வந்த நெல்சன் மண்டேலோ அடைந்த மகிழ்ச்சியினை போன்று எனக்கு உள்ளது.

பரிதி :பிரதமராகும் தகுதி படைத்த ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டுமே! ம்ம் நமக்கு வாய்த்த அடிமைகள்

ஸ்ரீரங்கம்: நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் ஆட்சி செய்து வருகிறார்
முதல்வர் ஜெயலலிதா. பிரதமர் பதவிக்குத் தகுதி படைத்த ஒரே தலைவர் அவர் மட்டுமே என்று ஸ்ரீரங்கத்தில் நின்று உரக்கப் பேசியுள்ளார் சமீபத்தில் திமுகவிலிருந்து அதிமுகவுக்கு இழுத்து வரப்பட்ட பரிதி இளம்வழுதி. முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடந்த சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில்தான் இப்படிப் பேசினார் பரிதி. சமீபத்தில்தான் திமுகவிலிருந்து அதிமுகவுக்குக் கொண்டு வரப்பட்டார் பரிதி. அதன் பிறகு தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், ஸ்ரீரங்கத்திலும் அவர் பேசினார். என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க இருந்த மத்திய அரசை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தி தமிழக அரசுக்கே பங்குகளை விற்க போராடி மத்திய அரசையும் முதல்வர் ஜெயலலிதா பணிய வைத்துள்ளார் இந்த பிரச்சினை மட்டுமல்ல, ஈழத்தமிழர் பிரச்சினை, காவிரி நதி நீர் பிரச்சினையிலும் தனியாக போராடி மத்திய அரசை பணிய வைத்து சாதனை புரிந்துள்ளார்தற்போது இந்தியாவே வியந்து திரும்பி பார்க்க கூடிய அளவில் ஜெயலலிதா தனித்தன்மையோடு ஆட்சி செய்து வருகிறார்.  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை வருங்காலத்தில் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் முதல்வர் ஜெயலலிதா ஒருவர் மட்டும் தான் என்பதை நாடே அறியும் என்றார் பரிதி

சுதாகரன் திருமணத்திற்கு செலவு செய்த பணம் யாருடையது?

பெங்களூர் : சுதாகரன் திருமணம் உட்பட எந்த தேவைக்கும் அ.தி.மு.க.
கட்சியை சேர்ந்தவர்கள் பணம் செலவு செய்யவில்லை. ஜெயலலிதாதான் செலவு செய்துள்ளார்  என்று தனி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஆடிட்டர் சண்முகத்திடம் அரசு வக்கீல் பாவனி சிங் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, ‘‘வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன் திருமணத்திற்கான செலவை பெண் வீட்டார் ஏற்று கொண்டதாக கூறி இருப்பது, வீட்டில் பறிமுதல் செய்த பரிசு பொருட்கள் கட்சி தொண்டர்கள் கொடுத்ததாக கூறியிருப் பது, இது தொடர்பாக வருமான வரித்துறை யிடம் ஆவணம் கொடுத்தது அனைத்தும் தவறான தகவல்கள்.
சுதாகரன் திருமணம் உள்பட அனைத்து செலவுகளும் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சொந்த பணத்தில் செய்ததுதான். வழக்கில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்கிறீர்கள்’’ என்றார்.

மதிய உணவை தலைமை ஆசிரியர்கள் ருசித்த பிறகே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் கடந்த 16-ந்தேதி மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சமையலர்கள் சாப்பிட்டு பார்த்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்கள் மற்றும் சமைத்த உணவுகளின் தரத்தை தொடக்க கல்வி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு அதிகாரியும் மாதம் 4 பள்ளிகளிலாவது ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.உத்தரபிரதேச பள்ளிகளில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வாரத்தில் 4 நாட்கள் அரிசி உணவும், 2 நாட்கள் கோதுமை உணவும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க<

வியாழன், 18 ஜூலை, 2013

கவிஞர் வாலி காலமானார் ! தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற கவிஞன்


சென்னை: தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 82. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார். மறைந்தார் காவியக் கவிஞர் வாலி... திரையுலகம் கண்ணீர் எம்ஜிஆருக்காக நல்லவன் வாழ்வான் படத்தில் முதல் முதலாக பாடல் எழுதினார் வாலி. பின்னர் எம்ஜிஆரின் தர்பாரில் ஆஸ்தான கவிஞராக கடைசி வரை இருந்தார். திரையுலகில் அதிக பாடல்களை எழுதிய சாதனையாளர் வாலி. இதுவரை 10000 பாடல்களுக்கும் மேல் அவர் எழுதியுள்ளார். ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வாலிக்கு, நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 40 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். சில படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ள வாலி, தமிழ் இலக்கியத்துக்கு தன் பங்களிப்பாக அவதார புருஷன் உள்ளிட்ட பல அரிய நூல்களை எழுதியுள்ளார். பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பாராட்டுப் பெற்றுள்ளார். வாலியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார். வயது வித்தியாசம், ஈகோ மோதல் எதுவுமின்றி அனைவருடனும் இனிமையாகவும் உரிமையாகவும் பழகிய கவிஞரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
tamil.oneindia.in

தபுவிடம் கண் கலங்கிய மனிஷா கொய்ராலா

சென்னை:கேன்சர் நோயால் பாதித்த தன்னை நேரில் சந்தித்து ஆறுதல்
சொல்ல தோழி நடிகைகள் யாரும் வரவில்லையே என்று தபுவிடம் கண் கலங்கினார் மனிஷா.‘இந்தியன், ‘மும்பை எக்ஸ்பிரஸ், ‘மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. கடந்த ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். உடல் ஆரோக்கியத்துடன் அவர் நடித்துக்கொண்டிருந்தபோது நட்பு கொண்டாடிய பல நடிகைகள் கேன்சர் என்று தெரிந்தபிறகு அவருடன் பழகுவ தையே நிறுத்திவிட்டார்களாம். ஆனால் நடிகை தபு மட்டும் தனது நட்பை தொடர்ந்தார். மருத்துவமனையிலிருந்தபோது அடிக்கடி அவரிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறி வந்தார்.சமீபத்தில் மனிஷா மும்பை திரும்பினார். ஆனால் யாரும் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பார்க்கவில்லை. அவரை நேரில் சென்று பார்த்த ஒரே தோழி தபுதான். இது மனிஷாவுக்கு ஆறுதல் அளித்தது. என்ன சாப்பிட வேண்டும், உடலை எப்படி ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்று அவருடன் மனம் விட்டு பேசும் தபு, விரைவில் மனிஷாவுடன் டூர் கிளம்பவும் திட்டமிட்டிருக்கிறார். சிக்கிம் செல்ல இருவரும் முடிவு செய்துள்ளனர்.

நள்ளிரவில் 8ம் வகுப்பு மாணவி பலாத்காரம் பணம் வாங்கி கொண்டு கதவை பூட்டி காவல் காத்த அம்மா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதிருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம் 8ம் வகுப்பு மாணவி நள்ளிரவில் பலாத்காரம் பணம் வாங்கி கொண்டு கதவை பூட்டி காவல் காத்த கல்நெஞ்சு அம்மா கைது
தஞ்சை:திருமணத்துக்கு மறுத்த 8 வகுப்பு மாணவியை நள்ளிரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்த டெய்லர் போலீசில் சிக்கினார். பணம் வாங்கிக் கொண்டு, கதவை பூட்டி காவல் காத்த கொடூர அம்மாவும் கைது செய்யப்பட்டார். தஞ்சையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் கோமதி (43). தஞ்சை ரெட்டிபாளையத்தில் வசிக்கிறார். கணவர் இறந்துவிட்டார். இவரது மூத்த மகள் பிளஸ் 2 படிக்கிறார். அம்மாவின் நடவடிக்கை பிடிக்காததால், அருகில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார். அம்மாவுடன் தங்கியுள்ள 2&வது மகள் அஞ்சலி (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.அதே ஊரை சேர்ந்த டெய்லர் லட்சுமணன் (27), கோமதிக்கு உறவினர். அஞ்சலியை திருமணம் செய்து கொடுப்பதாக லட்சுமணனிடம் கோமதி கூறியுள்ளார். அதற்காக அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் வாங்கியுள்ளார். அம்மாவின் திட்டத்துக்கு அஞ்சலி ஒப்புக்கொள்ளவில்லை. ‘எனக்கு இப்போது திருமணம் வேண்டாம். நான் நிறைய படிக்கணும்’ என அடம் பிடித்தார். ஆனால் கோமதியோ, ‘இதற்குமேல் உன்னை என்னால் படிக்க வைக்க முடியாது. ஒழுங்காக திருமணம் செய்து கொள்’ என கட்டாயப்படுத்தி வந்தார்.

N L C :நான் நான் எனது எனது அடேயப்பா இவ்வளவு தற்புகழ்ச்சி கொண்ட முதலமைச்சரா ஜெயலலிதா ?

பங்குச் சந்தைஎன்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான விவகாரம் இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்), தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம் (டுபிட்கோ), தமிழ்நாட்டு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (பவன்பின்) ஆகியன மத்திய அரசு விற்கவிருக்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் 5% (சுமார் 8.38 கோடி பங்குகள்) பங்குகளை வாங்கலாம் என்று இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்திருக்கிறது.
எனது தலைமையிலான அரசின் நடவடிக்கை மூலம் என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், எனது தனிப்பட்ட முயற்சிக்கும், தொழிலாளர்களின் போராட்டத்துக்கும், ஒற்றுமைக்கும், தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்”
என்று மூன்று வாக்கியங்களில் மூன்று ‘எனது’ போட்டு தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளும் அறிக்கையையும் ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறார். ஆமாமா, இது ஜெயலலிதாவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தனது தலையங்கத்தில் புகழாரம் பாடுகின்றது தினமணி.
உண்மையில் நடந்திருப்பது என்ன?

இந்­தியா தனது வாயா­லேயே தனது பலவீனத்தை வெளிப்­ப­டுத்தி விட்ட நிலை! -ஹரி­கரன்

இந்­தி­யாவின் பிராந்­திய அர­சியல்  இராஜ­தந்­தி­ரத்­துக்கு இப்­போது மிகப் பெரிய சோதனை ஏற்­பட்­டுள்­ளது.  இலங்கை விவ­கா­ரத்தில், இந்­தி­யா­வுக்கு உள்ள செல்­வாக்கு எத்­த­கை­யது என்ற கேள்வி எழுப்­பப்­படும் சூழல் ஏற்­பட்­டுள்­ளதே அதற்குக் காரணம். தென்­னா­சியப்  பிராந்­தி­யத்தில், இந்­தியா  கொண்­டி­ருந்த செல்­வாக்கும், ஆதி­பத்­தி­யமும், 2009 மே 18ஆம் திக­தி­யுடன் கேள்­விக்­குள்­ள­ாக்­கப்­பட்டு விட்­டது.  இந்­தி­யா­வுடன் நேரடி நட்புக் கொண்­ட­தாக,  புலிகள் இயக்கம், இல்லா­விட்­டாலும், தென்­னா­சியப்  பிராந்­தி­யத்தில், இந்­தி­யா­வி­னது  அதி­கார சம­நி­லையைப் பேணு­வ­தற்கு   மறை­முக கார­ணி­யாக அந்த இயக்கம் இருந்து வந்­தது என்­பது ஆச்­ச­ரி­ய­மான உண்மை  புலிகள் இயக்கம் இருந்த­வ­ரையில், இந்­தி­யா­வினால், இந்த உண்மை உண­ரப்­ப­ட­வில்லை.  புலிகள் இயக்­கத்­தினால் ஏற்­படக் கூடிய தீமை­களை மட்­டுமே இந்­தியா கணக்குப் பார்த்­தது.  அதற்கு அப்பால், இந்தியாவின் பாது­காப்பில் செல்­வாக்குச் செலுத்­தத்­தக்க கார­ணி­யாக  இருந்­துள்­ளது என்­பது,  புலி­களால்  ஏற்­பட்ட  வெற்­றி­டத்­துக்குப் பின்­னரே இந்­தி­யா­வினால் உண­ரப்­ப­டு­கி­றது.
விடு­தலைப் புலி­களின் வீழ்ச்­சிக்குப் பின்னர், தெற்­கா­சி­யாவில் ஏற்­பட்­டுள்ள, பிராந்­திய, அர­சியல், இரா­ஜ­தந்­திர, பொரு­ளா­தார மாற்­றங்கள், இந்­தி­யா­வுக்கு சாத­க­மான அம்­சங்­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை.  இலங்­கையின் மீது கொண்­டி­ருந்த செல்­வாக்கு உடைந்து போனது அதற்­கான மிகப்­பெ­ரிய காரணம்.

ராயல்டியை திருடுகிறார்கள்.. ஜி.வி.பிரகாஷ் குற்றச்சாட்டு ! பழைய இசையமைப்பாளர்களின் டியுன்களை திருடும் இளம் இசையமைப்பாளர்கள்

சில ஆடியோ நிறுவனங்கள் இசை அமைப்பாளர்களிடமிருந்தும், பாடல் ஆசிரியர்களிடமிருந்தும் ராயல்டியை திருடுகின்றனர்" என்று எனது தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார். சில ஆடியோ கம்பெனிகள் ராயல்டி விவகாரத்தில் இசை அமைப்பாளர்களை ஏமாற்றுகின்றனர். என்று ஜி.வி.பிரகாஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். சில ஆடியோ நிறுவனங்கள் இசை அமைப்பாளர்களிடமிருந்தும், பாடல் ஆசிரியர்களிடமிருந்தும் ராயல்டியை திருடுகின்றனர்.
ராயல்டி என்பது ஒரு படைப்பாளையின் அடிப்படை உரிமை. அதை திருடுவது நாகரீகமற்ற செயல் மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றமுமாகும்
ஜி.வி.பிரகாஷ் குமாரின் குற்றச்சாட்டு பெரும்பாலான இளம் இசை அமைப்பாளர்கள் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். மூத்த பாடலாசிரியர்களான நா.முத்துக்குமார், யுகபாரதி, தாமரை போன்றோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பாடலாசிரியர்கள் சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கலாமா என்று யோசித்து வருகின்றனர்
இந்த  ஜிவிபிரகாஷ்  மற்றும்  ரஹ்மான்  போன்ற  இளம் இசையமைப்பாளர்கள்  முதலில்  தங்கள்  திருட்டுதனத்தை  நிறுத்திகொள்ளவேண்டும் !  பழைய இசையமைப்பாளர்களின்  டியுன்களை திருடி ரீமிக்ஸ் செய்து  கூத்தாடி வித்தை காட்டி கொண்டு எதோ பிறவி மேதை போல பாவனை பண்ணுவது சகிக்கலை ! கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிய வேண்டாம் நாறிவிடுவீர்கள்

புலம்பெயர் தமிழர்களின் சந்தையை இழக்க விரும்பாமையால் யாழில் தமிழ் புத்தக திருவிழாவை ரத்து செய்த தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கம்

யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் புத்தக திருவிழா ரத்து : பதிப்பாளர்களுக்கு  பபாசி கடிதம்இலங்கை யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப்புத்தக திருவிழா நடத்த போவதில்லை என்று தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) பதிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அக்கடிதத்தில்,   புலி ஆதரவாளர்கள் பலரும் நமது அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு புத்தக் காட்சியை நடத்துவதை தவிர்க்கிறோம் என்றும், அது குறித்த 23.7.2013 ஆலோசனைக் கூட்டத்தையும் தவிர்ப்பதாகவும் அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு எப்படியாவது காசு வந்தால் சரிதான். யாழ்பாணத்தில் நடத்துவதிலும் பார்க்க வேறு நாடுகளில் புத்த கண்காட்சி நடத்துவது மிகவும் லாபகரமானதே !

டெல்லி கற்பழிப்பு மைனர் குற்றவாளி தப்பிவிடுவான் ? வயது உச்சவரம்பை 16 ஆக குறைக்க முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


புதுடெல்லி: சிறார் வயது சிறார் நீதி சட்டத்தின்படி அதிகபட்சமாக அவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும். இதன் காரணமாக சிறார் வயது வரம்பை 18ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் கொடூர குற்றங்களை புரியும் மைனருக்கான வயது வரம்பையாவது 16 ஆக குறைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் பல பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் மூலம், கொடூர குற்றங்களை புரியும் சிறுவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க இயலும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டது. இதற்கு சிறுவர் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் மொத்தமாக விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அதில், ÔÔசிறாருக்கான வயது வரம்பை நிர்ணயம் செய்யும் சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் கூறினர்.

சென்னை மாணவி லண்டனில் மர்ம மரணம் ! லண்டன் போலிசின் நடவடிக்கையில் சந்தேகம்

 லண்டனில் உள்ள லிவர்புல் பல்கலைக்கழகத்தில் 'ஏரோனாட்டிக்கல்
சயின்ஸ் மற்றும் ஸ்பேஸ் சயின்ஸ்' எனப்படும் விண்வெளி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர், பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கி, படித்து வந்தார். அந்த விடுதியில் ஒவ்வொரு மாணவிகளுக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டு அதில் தங்கி இருந்தனர். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி லிவர்புல் பல்கலைக்கழகத்தில் இருந்து தாம்சனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய பல்கலைக்கழக நிர்வாகம், 'உங்கள் மகள் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்' என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாம்சன், மறுநாள் 14-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். உறவினர்கள் சிலரும் அவருடன் சென்றனர். ஆனால், அவர் லண்டன் போய் சேர்வதற்குள் ஜியார்ஜியன்னாவின் உடலை லண்டன் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டனர். பிரேத பரிசோதனைகள் முடிந்து மகளின் முகத்தை மட்டும் தாம்சன் பார்க்க முடிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், லண்டன் போலீசாரிடம், 'எனது மகளின் உடலை எனது அனுமதி பெறாமல் எப்படி பிரேத பரிசோதனை செய்யலாம். என்னிடம் கையெழுத்து வாங்காமல் பிரேத பரிசோதனைக்கு எப்படி அனுப்பலாம்?' என்று கேட்டார்.

ஓடும் ரயிலில் அடிபட்டு இளவரசன் இறப்பு: "எய்ம்ஸ்' டாக்டர்கள் அறிக்கை

தர்மபுரி: "ஓடும் ரயிலில் அடிபட்டு, இளவரசனின் இறந்துள்ளார்' என, இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்த டில்லி, "எய்ம்ஸ்' டாக்டர்கள் அறிகையில் தெரிவித்துள்ளனர்.காதல் கலப்பு திருமணம் செய்த இளவரன் கடந்த, 4ம் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவரது தந்தை இளங்கோ மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற, "டிவிஷன் பெஞ்ச்', டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனையை சேர்ந்த மூன்று தடயவியல் டாக்டர்கள் மூலம் கடந்த, 13ம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

பீகார் குழந்தைகள் மரணம்: பூச்சிக் கொல்லி மருந்து கலந்த உணவே காரணம் ?

பாட்னா: பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் 22 பேரின் மரணத்திற்கு, பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டதால் குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் ஆர்கானோபாஸ்பேட் என்ற அரிசி மற்றும் கோதுமை பயிர்கள் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தே காரணம் என்று தெரியவந்துள்ளது.இந்த பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி கழுவப்பட்ட பாத்திரத்தை சரிவர கழுவாமல் அதில் உணவு பரிமாறப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாகவே அந்த உணவு விஷமாக மாறி உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதாகவும் மாநில கல்வித் துறை அமைச்சர் அமர்ஜீத் சிங் பி.கே. சாகி தெரிவித்துள்ளார்.

புதன், 17 ஜூலை, 2013

வளர்த்த பூனையின் சோகம் தாளாது நெருப்பில் கருகிய ஆந்திரா பெண்


Anger, indignation and disbelief. These words sum up the emotions that the family members of Swarnalatha gave vent to after they were informed that the 25-year- old had committed suicide after the death of four kittens, which she was forced to let go by her house owner.
“She did not commit suicide because of the fact that those kittens died, but because of mental torture inflicted on her by the our house-owners,” said an angry Hima Bindu (26), the deceased’s elder sister, adding that their house-owners started harassing them even after they got rid of the kittens. “Once they noticed those animals they just never stopped picking on us. In fact, because my sister used to come back late from work -- around 10 pm daily, they would question her character,” said Hima, who works at a steel factory on the City outskirts.
திருப்பதி:ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டா மாருதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லட்சுமி (50). இவரது மகள்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் கொண்டுவந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அம்பர்பேட்டை போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயில் கருகிய சுவர்ணலதா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

போலி நீதிமன்றம் போலி நீதிபதி ! அந்த நீதிமன்றமே போலியாக இருந்தால் !!!

கோவை ஒக்கிலியர் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(71). இவர் கோவை
ஆர்.எஸ்.புரம் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:
எனக்கு சொந்தமாக 9 சென்ட் நிலத்தை ஆர்.ஜி.வீதியை சேர்ந்த திலகராஜ் என்பவருக்கு ரூ.38 லட்சத்துக்கு விற்பனை செய்ய கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி திலகராஜ் முதல் தவணை தொகையாக ரூ.10 லட்சம் தந்தார். மீதி பணத்தை விரைவில் தருவதாக உறுதியளித்தார். ஆனால் பல நாட்கள் ஆகியும் பணம் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, திலகராஜ் முறையாக பதிலளிக்கவில்லை. இதுகுறித்த வழக்கு தற்போது சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி எனது வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் 10.7.2013 அன்று தடாகம் சாலையில் உள்ள இசைவு தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நானும் எனது மகன் அரவிந்த்குமாரும் கடந்த 10ம் தேதி தடாகம் சாலையில் உள்ள இசைவு தீர்ப்பாயத்தில் ஆஜரானோம். அங்கு சண்முகம் (51) என்பவர், தன்னை இசைவு தீர்ப்பாய நீதிபதி எனக்கூறி எங்களது வழக்கை விசாரித்தார். பிறகு, இந்த வழக்கை 19ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறினார். பிறகு வழக்கு தள்ளிவைப்பு தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கூறினார். நான் கையெழுத்திட மறுத்தேன். பின்னர் அவரும் அவருடன் இருந்த சிலரும் என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர். அவர்கள் மீது சந்தேகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.யாரும் தப்பு செஞ்சா நீதிமன்றத்தில் முறையிடலாம் அந்த நீதிமன்றமே போலியாக இருந்தால் !!! பேசாம டாஸ்மாக்கிற்கு போகவேண்டியதுதான்

பீகாரில் மற்றுமொரு பள்ளிகூட உணவில் விஷம் ! 15 குழந்தைகளில் 3 பேரின் நிலை கவலைக்கிடம்

பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரசு
தொடக்கப்பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மயங்கி விழுந்த குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் குழந்தைகள் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உணவில் விஷம் கலந்திருப்பதாக மாநில மந்திரி கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. மதுபானியில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் 13 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதுபானிக்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

22 குழந்தைகள் பலி ! உணவில் விஷம் இருந்ததாக பீகார் கல்விதுறை அமைச்சர் தகவல்

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில், அரசு துவக்கப் பள்ளியில், செவ்வாயன்று
மதியம் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.அவர்களை அருகில் உள்ள சாதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.இந்நிலையில் மாணவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக அம்மாநில கல்விதுறை அமைச்சர் ஷாகி கூறுகையில் உணவு பொருளில் பாஸ்பரஸ் என்ற வேதிப்பொருள் இருந்ததாகவும்,இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசை பலவீனப்படுத்தும் சதிச் செயலாகவும் இச்சம்பவம் இருக்கலாம் என்று கூறினார்.

கவிஞர் வாலியின் உடல்நிலை கவலைக்கிடம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கவிஞர் வாலியின் (82)
உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வாலிக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த ஜூன் 7-ம் தேதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நூரையிரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட அவருக்கு சளி பிரச்னையும் இருந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரக் காலத்துக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். உடல் நிலை முன்னேற்றத்துக்கு போதிய ஓய்வு தேவைப்பட்டதால், வாலியை மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கியமானவர்கள் மட்டுமே வாலியை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.கடந்த இருபது நாள்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாலியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து வாலியின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.

யாழ்பாணத்தில் தமிழ் புத்தக கண்காட்சி ! 30 வருடங்களில் முதல்முறையாக

யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்த வருமாறு அங்கு வாழும் தமிழர்கள் கேட்டுக் கொண்டதால், அது குறித்து தங்களது உறுப்பினர்களின் கருத்தறிய வரும் 27–ந்தேதி சென்னை தியாகராயர் நகரில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.யாழ்ப்பாணத்தில் இந்த புத்தக விழாவை நடத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தருவதற்கு யாழ்ப்பாண மாவட்ட நிர்வா\கம், யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியன மட்டு மின்றி, யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் இந்திய துணைத் தூதரகமும் முன்வந்திருப்பதாக, தனது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புத்தக விழாவை செப்டம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்தடவையாக  ஏராளமான தமிழ் புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்க கூடிய வாய்ப்பு யாழ் மக்களுக்கு கிடைக்க இருப்பதை  சீமான் போன்ற வயிற்று பிழைப்பு அரசியல் விபச்சாரிகள் விரும்ப மாட்டார்கள் , சீமான் இப்போதே வழக்கமான தனது புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு இந்த புத்தக கண்காட்சிக்கு எதிரான அறிக்கையை விட்டுள்ளது , மக்கள் எப்போதும் தன்னை விட பாமரனாக இருக்கவேண்டும் என்றுதான் படிக்காத பிரபாகரனும் அவனது கூட்டமும் விரும்புவது புரிகிறது

செல்வராகவன்: யாராவது என்கடன்களை செட்டில் செய்தால் சினிமாவை விட்டே விலக தயார்

சென்னை: 'யாராவது பணக்காரர் ஒருவர் என்னைத் தத்தெடுக்க முன்வந்தால், சினிமாவை விட்டே விலகிக் கொண்டு குடும்பம் குழந்தை என்றிருந்துவிடுவேன்!' -இப்படிச் சொல்லியிருப்பவர் இயக்குநர் செல்வராகவன்! ஏன்... என்னாச்சு? 13 ஆண்டு திரை வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் அவரது உடல்நிலையும்தான் இப்படி அவரைச் சொல்ல வைத்திருக்கிறது. சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு என் அடுத்த படம் பற்றி நிறைய பேர் கேட்கிறார்கள். அடுத்து நான் என் தம்பியுடன் சேர்ந்து படம் பண்ணலாம்... அல்லது ராணாவுடன் இணையலாம்... ரொம்ப நாளாக தாமதமாகிக் கொண்டிருக்கும் என் இந்திப் படத்தைத் தொடங்கலாம்... ஏன், நான் இந்த சினிமாவை விட்டே கூட விலகலாம்! என் உடல்நிலை சரியில்லை. அதனால்தான் ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப மெதுவாகச் செய்கிறேன். குடும்பத்தோடு நிறைய நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. என் மகள் என்னை வீட்டைவிட்டு நகரவிடமாட்டேன் என்கிறாள். யாராவது பணக்காரர் ஒருவர் என்னைத் தத்தெடுத்துக் கொண்டு, எனது கடன்களை செட்டில் செய்ய ஒப்புக் கொண்டால் நிச்சயம் சினிமாவிலிருந்து விலகி, குடும்பத்தோடு செட்டிலாகி, இன்னும் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன்!," என்று கூறியுள்ளார்
tamil.oneindia.in

மேல்மருவத்தூர் பெண் எஸ்ஐ கொலையை மறைக்க பல லட்சம் கைமாறியது !

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை: மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான பெண் எஸ்ஐ கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையை மறைக்க உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 2 பேர் சிக்குகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ கலைவாணி (25). கடந்த 2010 ஆகஸ்ட் 26ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் கணவர் சுரேஷ் குமார் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் கலைவாணி பற்றி துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பழைய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

அமெரிக்காவில் இந்திய பாதிரியார் Leo Koppala பாலியல் குற்ற வழக்கு

An Indian Catholic priest, who was accused of sexually assaulting a girl in the US, would remain behind bars
after an appearance in the court Monday afternoon in which he was advised of his rights. Father Leo Koppala, 47, is charged with second degree criminal sexual conduct after an alleged fondling incident involving a 12-year-old girl in the basement of one of his parishioners. Bond has been set at US$ 75,000 for Fr. Koppala, who who belongs to Nellore diocese in Andhra Pradesh. Fr. Koppala has been serving at Saints Peter  Paul Catholic Church in Blue Earth for nearly four years.
வாஷிங்டன் : அமெரிக்காவில் 13 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக இந்தியாவை சேர்ந்த பாதிரியார் மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாதிரியார் லியோ கொப்பலா(47), அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் ப்ளூ எர்த் பகுதியில் உள்ள தேவாலயத்தில் சேவை செய்து வந்தார். அதோடு, ஆந்திராவில் உள்ள ஏழை மற்றும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு நிதி திரட்டும் பணியிலும் அவர் ஈடுபட்டு வந்தார். தேவாலயத்துக்கு வழக்கமாக வரும் ஒரு குடும்பத்தினர், லியோவை தங்கள் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பேரில், கடந்த மாதம் 7ம் தேதி, அவர்கள் வீட்டுக்கு சென்றார் லியோ. அனைவரிடமும் அன்பாக பேசிக் கொண்டிருந்த லியோ, அந்த வீட்டில் இருந்த 13 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார். அதன்பின் அவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பெயரும் வேண்டாம் பில்டப்பும் வேண்டாம்: அஜீத் அதிரடி

 அஜீத் குமார் தனது படத் தலைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு தெரிவித்துள்ளார். அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படத்திற்கு வலை என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தனர். இந்நிலையில் அஜீத் படத்திற்கு புதிய தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
அஜீத் படத்தின் தலைப்பு வலை இல்லை பறவை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தலைப்பையும் யாரும் இதுவரை உறுதி செய்யவில்லை.
விஷ்ணுவர்தன் படத்தின் தலைப்பில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரியவில்லை. தலைப்பை அறிவிப்பேனா என்று அடம்பிடிக்கிறார்களே
தனது கதாபாத்திரத்தின் பெயரையோ அல்லது பில்டப் கொடுக்கும் தலைப்பையோ தனது படத்தின் தலைப்பாக வைக்கவே கூடாது என்று அஜீத் குமார் இயக்குனர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.
tamil.oneindia.in

பீகார்:மதிய உணவு சாப்பிட்ட 11 குழந்தைகள் பலி - 48 பேருக்கு தீவிர சிகிச்சை

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 11 குழந்தைகள் பரிதாபமாக இறந்து விழுந்தனர். மேலும் 48 குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாப்ரா நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தர்மாசதி கண்டமான் என்ற கிராமத்தில் அரசு தொடக்க பள்ளிக்கூடம் உள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு நேற்று இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட அனைவரும் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில், ஏறத்தாழ 80 மாணவர்களுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இந்த தகவல் ஊருக்குள் பரவியதும், பெற்றோர்கள் அலறியடித்தபடி பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர். மயங்கி விழுந்த மாணவர்கள் அனைவரும், உடனடியாக அருகில் உள்ள சாதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 11 குழந்தைகள் பலி ஆனால், அவர்களில் குஞ்சன் குமார், அன்ஷு குமார் ஆகிய 2 பேர், வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். மற்ற குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மேலும் 9 குழந்தைகள் இறந்துவிட்டனர்.

அம்மா மினரல் வாட்டர்” தண்ணீர் தனியார்மய சூழ்ச்சி !

05-private-waterகாற்றும் ஒளியும் போன்ற உயிரின் ஆதாரமும், உயிரினங்களின் உரிமையுமான தண்ணீரை, அரசாங்கமே விற்பனைப் பண்டமாக்கி புட்டியில் அடைத்து விற்று இலாபம் பார்க்கும் கேடுகெட்ட நடவடிக்கையை, மாபெரும் சாதனையைப் போல அறிவித்திருக்கிறார், ஜெயலலிதா.
“ஏழை, எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிடவேண்டும் என்ற நோக்கத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா மினரல் வாட்டர்’ உற்பத்தி நிலையங்களை அமைத்திட நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று பிரகடனம் செய்துள்ளார்.
‘அம்மா’ ஆட்சியில் குடிநீர்த் தட்டுப்பாட்டில் தவிக்கும் தலைநகரம்.
தண்ணீர் லாரி“மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து கொண்டே செல்வதாகவும், இதன் விளைவாக ஏழை, நடுத்தர மக்கள் செய்வதறியாது விழி பிதுங்கி தவிப்பதாகவும், தமிழக மக்களை வாழ வைக்கும் வகையிலும் விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும்” இட்லிக் கடை, கத்தரிக்கா கடைக்கு அடுத்தபடி ‘அம்மா வாட்டரை’ அம்மாவின் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறதாம்.
இந்தப் “பாதுகாப்பான” குடிநீரின் விலை லிட்டர் பத்து ரூபாயாம். அரசு போக்குவரத்துக் கழகங்களின் பொறுப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுமாம். மொத்தம் பத்து இடங்களில் தண்ணீர் கம்பெனிகள் திறக்கப்படும் என்றும், எல்லா பேருந்து நிலையங்களிலும் ‘அம்மா வாட்டர்’ விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பு கூறுகிறது.
தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, கொள்ளை இலாபம் பார்க்க அனுமதிப்பதும், நீர்வளத்தை தனியார் முதலாளிகளின் தனியுடைமை ஆக்குவதும் மறுகாலனியாக்க கொள்கையின் விளைவுகள். தண்ணீர் தனியார்மயத்தைத் தீவிரப்படுத்துவதற்காகத்தான் “தேசிய நீர்க்கொள்கை – 2012″ மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கொள்கை அறிவிக்கப்படுவதற்கு முன்னமே தமிழகத்தில் தண்ணீர் தனியார்மயக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. 2001-2006 -ல் ஜெ. அரசுதான் அன்றாடம் பல இலட்சம் லிட்டர் தாமிரவருணித் தண்ணீரை லிட்டர் ஒண்ணேகால் பைசா விலையில் கோகோ கோலா நிறுவனத்துக்கு கொடுக்க உத்தரவிட்டது.

செவ்வாய், 16 ஜூலை, 2013

டிசல் மண்ணெண்ணை கசிவு: குடிக்கவோ, குளிக்கவோ முடியாமல் தவிக்கிறோம்

சென்னை மணலியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை சென்னை துறைமுகத்துக்கு கப்பல் மூலம் வருகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கச்சா எண்ணை கொண்டு செல்லப்படும் இந்த குழாயில் கடந்த சில மாதங்களாக கசிவு ஏற்பட்டு உள்ளது. இது நிலத்தடி நீரில் கலப்பதால் குடிநீர் மாசுபட்டு உள்ளது. தண்டையார்பேட்டை, திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள வரதராஜ கோவில் தெரு, பகுதியில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உள்ளது.
அங்கும் வசிக்கும் 100–க்கும் அதிகமான குடும்பங்கள் தண்ணீரை உபயோகப்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அமிலம் போன்று கறுப்பு நிறத்தில் உள்ளது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடம், வாளிகளில் அந்த தண்ணீரை பிடித்து வைத் தால் சிறிது நேரத்தில் கறுப்பு வண்ணமாக மாறி விடுகிறது. தண்ணீரில் எண்ணை பசையும், டிசல், மண்ணெண்ணை நெடியும் வீசுகிறது.

Mumbai BAR களில் பெண்கள் நடனம்: உச்ச நீதிமன்றம் அனுமதி!


மும்பை பார்களில் பெண்கள் நடனம்: உச்ச நீதிமன்றம் அனுமதி! டெல்லி:
மும்பையில் மதுபான விடுதிகளில் பெண்கள் நடனமாட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மகராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பெண்கள் நடனமாடும் பார்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்தன. இதற்கு எதிராக மும்பை போலீசார் கடந்த 2005-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உயர் நிதிமன்றம் நடன பார்கள் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து 7 ஆண்டுகள் மும்பையில் பெண்கள் பார்களில் நடனமாடவில்லை. இந்த தடையை எதிர்த்து மதுபான விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

உயிர் பாதுகாப்பு கோரி இன்னுமொரு காதல் ஜோடி தஞ்சம் ! அரிவாளுடன் அலையும் ராமதாசுகள்





தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன் என்ற கல்லூரி மாணவரும், திவ்யா என்ற நர்சிங் கல்லூரி மாணவியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.>இந்த நிலையில் இதே போல் ஒரு காதல் கலப்பு திருமண ஜோடி நேற்று தஞ்சை வந்தனர். காதல் கலப்பு திருமணம் செய்த கொண்ட ஜோடியின் பெயர் செந்தமிழ்ச்செல்வி (வயது 19) விமல்ராஜ் (27). இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆகும்காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜனிடம் ஒரு மனு கொடுத்தனர்.;பின்னர் செந்தமிழ்ச்செல்வி செய்தியாளர்களிடம், ’’எனது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே உள்ள மணக்கரை கிராமம் ஆகும். எனது தந்தை பெயர் செல்வராஜ். நான் கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி 2ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கும், உடையார்பாளையம் தென்கச்சி பெருமாள்நத்தம் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் விமல்ராஜ் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகிய இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தோம்.
எங்களது காதல் விவகாரம் எனது பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் சாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் வீட்டைவிட்டு வெளியேறி விமல்ராஜிடம் சென்றுவிட்டேன். அவர் என்னை கடந்த மாதம் 25ந்தேதி பதிவுத்திருமணம் செய்து கொண்டார். திரும ணம் முடிந்து நானும், என் கணவர் விமல்ராஜும் திருப்பனந்தாள் வடக்குத்தெருவில் வசித்து வருகிறோம்.

கறுப்பு என்றால் அசிங்கம், சாத்தான், இருட்டு, அழிவு; வெள்ளை என்றால் தூய்மை, அழகு, அமைதி, சமாதானம்

ஜிம்மர்மேன், மார்ட்டின்மெரிக்காவில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கறுப்பின இளைஞன் மார்ட்டின் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. கொலை செய்த வெள்ளையர் ஜார்ஜ் ஜிம்மர்மேன் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெள்ளை இனவெறிக்கு ஆதரவாக அமெரிக்க நீதித்துறை செயல்படுவதை தான் இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
ஜிம்மர்மேன், மார்ட்டின்
டிரேவான் மார்ட்டின் எனும் கறுப்பின இளைஞன் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரை சேர்ந்தவன். 17 வயது இளைஞன். தன் தந்தையைக் காண சான்போர்ட் நகருக்கு வந்திருந்தான். சில நாட்கள் சான்போர்ட் நகரில் தங்கியிருந்தான். 2012-ம் வருடம் பிப்ரவரி 26-ம் தேதி இரவு, கடைக்கு சென்று இனிப்புகள், தேனீர் போன்ற சிலவற்றை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான் மார்ட்டின். அப்போழுது பக்கத்துக் குடியிருப்பு காவலாளியாக இருந்த 27 வயதான ஜார்ஜ் ஜிம்மர்மேன், மார்ட்டினை துரத்தத் தொடங்கியுள்ளார், அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற மார்ட்டினை சுட்டுக் கொன்றுவிட்டார்.

குஷ்பூ விலகுகிறார் ? திமுக வில் ஸ்டாலின் ஜால்ராக்கள் மட்டுமே நிலைக்க முடியும் !

ஜால்ரா அடித்துதான் சேவை செய்ய வேண்டும் என்றால் போயும் போயும்  ஸ்டாலினுக்கா ஜால்ரா அடிக்கவேண்டும் ? மானமுள்ளவன் செய்வானா ?
 திமுகவில் குஷ்பு சேர்ந்தது முதல் செய்திகளில் எப்படியாவது இடம்பெற்றே வருகிறார்.. அண்மைக்காலமாக திமுகவில் தலை காட்டாமல் இருக்கும் அவருக்கு விரைவில் ‘கல்தா' கொடுக்கப்படும் என்கிறது அறிவாலய வட்டாரங்கள். ஜெயா தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகை குஷ்பு, ‘கற்பு'பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர் காங்கிரஸில் இணைவார் என்று சொல்லப்பட்ட நேரத்தில் திமுக ‘உறுப்பினரா'னார். பின்னர் திமுகவின் தலைமைக் கழகம் அறிவிக்கின்ற சிறப்பு பொதுக் கூட்டங்களில் குஷ்புவும் கலந்து கொண்டார். இந்நிலையில் திமுக தலைவர் பதவி பற்றிய விவகாரத்தில் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவர் கருத்து தெரிவிக்கப் போய் ‘அடிவாங்க' நேரிட்டது. அன்று முதல் திமுகவில் இறங்குமுகமாகவே இருந்து வருகிறார் குஷ்பு. இருப்பினும் அவ்வப்போது ஏதாவது ஒரு கூட்டத்தில் தலையைக் காட்டி தமது இருப்பை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அண்மையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பான கூட்டங்கள் நடந்த போது குஷ்பு கலந்து கொள்ளவில்லை. திமுக தலைமைக் கழக அறிவிப்பிலும் குஷ்பு பெயர் இல்லையாம்.. இதேபோல எம்.பி. ஆன கனிமொழியை வாழ்த்துவதற்கும் அவர் வரவில்லை. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அனேகம் குஷ்பு அவராகவே திமுகவை விட்டு வெளியேறிவிடுவார் அல்லது கல்தா கொடுக்கப்பட்டு விடும் என்கிறது திமுக வட்டாரங்கள். tamil.oneindia.in

தனுஷ் : சிவகார்த்திகேயனுக்கு ஈசியா என்னோட இடத்தை குடுத்திர மாட்டேன் !


தற்போது தயாராகும் படங்களில், ‘ஓடக்கூடிய படம்’ என்று
கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடும் படங்களில் ஒன்றான, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் சத்யம் தியேட்டரில் நடந்தபோது, சுவாரசியமான காட்சிகளுக்கு பஞ்சமில்லை. சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் பட ஆடியோ ரிலீஸூக்கு, தனுஷ் வந்திருந்தார். தனது தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்த தனுஷ், வராமல் இருந்தால்தான் ஆச்சரியம். அத்துடன் விழாவில் சத்யராஜ், விமல், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பிரபு சாலமன், செந்தில்குமார், பாண்டிராஜ், மியூசிக் டைரக்டர் டி.இமான், தயாரிப்பாளர் எஸ்.மதன் உட்பட பல திரையுலக பிரபல முகங்கள் தென்பட்டன. விழாவில் தனுஷ் பேசியது சுவாரசியம். “இந்தப் படத்தோட தயாரிப்பாளர் பேசும்போது என்னை ‘ஹிந்தி நடிகரே..’ என்று அழைத்தார். யுகபாரதி ‘கவிஞரே’ என்று சொன்னார். சிவகார்த்திகேயன் பேசும்போது ‘நீங்க எதுவுமே பண்ணாம ஊர்ல வெட்டியா இருக்கிற ஹீரோ ரோல்களை பண்ணிக்கிட்டிருக்கீங்க, இப்போ நான் அதை பண்ணிக்கிட்டிருக்கேன்’னு சொன்னாரு…
ஸோ அதுக்குள்ள என்னை பேக்கப் பண்ண ரெடி பண்ணிட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

கருப்பர் இன சிறுவனைக் கொன்றவர் விடுதலை !. அமெரிக்காவில் பெரும் போராட்டம்

நியூயார்க்: அமெரிக்காவில் 17 வயது கருப்பர் இன சிறுவன் டிராய்வன் மார்ட்டின் என்பவனை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வாட்ச்மேன் ஜார்ஜ் சிம்மர்மேன் மீதான கொலை வழக்கிலிருந்து அவரை கோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடந்து வருவதால் அமெரிக்காவில் பதட்டம் எழுந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்தது. அப்போது புளோரிடாவின் சான்போர்ட் நகரில் ஒரு இடத்தில் வாட்ச்மேனாக பணியில் இருந்தார் சிம்மர்மேன். அப்போது அங்கு வந்த மார்ட்டினுக்கும், சிம்மர்மேனுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதையடுத்து ஆயுதம் ஏதும் இல்லாத நிராயுதபாணியான மார்ட்டினை தனது துப்பாக்கியால் விரட்டிச் சென்றார் சிம்மர்மேன். அந்த சிறுவனை விரட்டி விரட்டி சுட்டார். இதில் மார்ட்டின் பரிதாபமாக உயிரிழந்தான்.

சமசீர்கல்விக்கு எதிரான புகார்கள் தவிடு பொடி! புதிதாக 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.

"சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமாக இல்லை' என, ஒரு சாரார் குறை கூறிக்கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.ஆண்டுக்கு ஆண்டு: முந்தைய, தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பாடத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்தப்பட்டன. எனினும், "சமச்சீர் கல்வி பாடத்திட்டம், முந்தைய மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டங்களுக்கு நிகராக இல்லை. தற்போதைய பாடத் திட்டத்தை, மேலும் மேம்படுத்த வேண்டும்' என, தனியார் பள்ளிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அதிகளவில் துவங்கப்பட்டு வருவதையும், தனியார் பள்ளி நிர்வாகிகள் கோடிட்டு காட்டுகின்றனர். கடந்த, இரண்டு ஆண்டுகளில், 200 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சராசரியாக, ஆண்டுக்கு, 50 பள்ளிகள் முதல், 75 சி.பி.எஸ்.இ., பள்ளிகள், புதிதாக முளைத்தபடி உள்ளன.

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம் குலுக்கல் முறையில் வழங்கப்படும்

சென்னை:வார்டு தோறும் 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொடுத்தால், குலுக்கல் முறையில் அரை கிராம் தங்கம் மற்றும் கைக்கடிகாரம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்த உள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, அதை துகள்களாக்கி, சாலை அமைப்பதில் பயன்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. முதலில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தனித்தனியாக தொட்டி வைக்கப்பட்டது. எனினும், இந்த திட்டத்தை மாநகராட்சி, பெரிய அளவில் செயல்படுத்தாமல், கைவிட்டது.இதையடுத்து, வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் குப்பையை, பள்ளி மாணவர்கள் மூலம் சேகரிக்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகம் செய்தது. அதிலும், குறைவான அளவு பிளாஸ்டிக் தான் சேகரிக்க முடிந்தது. தற்போது, பிளாஸ்டிக் குப்பைக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி, வீடுகளில் இருந்து 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, வார்டு அலுவலகங்களில் நேரில் சென்று கொடுக்க வேண்டும்.

குஜராத் ஒளிரவில்லை கல்வியில் 14வது இடத்தில் ! மோடி 10 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார்.

புதுடில்லி:பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட உள்ள, குஜராத் முதல்வர், நரேந்தி மோடி, மத்திய அரசையும், காங்கிரசையும், போகும் இடமெல்லாம் வசை பாடி வருகிறார்; உணவு பாதுகாப்பு மசோதா குறித்து, கேள்வி எழுப்பி வருகிறார். இந்நிலையில், மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர்களும் பதில் கொடுத்து வருகின்றனர் பாரதிய ஜனதாவின், லோக்சபா தேர்தல் பிரசாரக் குழு தலைவராகி, பிரதமர் வேட்பாளராவதற்கு அனைத்து நிலைகளிலும் முன்னிறுத்தப்பட்டு வரும் குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, போகும் இடமெல்லாம், மத்திய அரசை வசை பாடி வருகிறார். உணவு பாதுகாப்பு மசோதாவை, அவசர அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டியதன் காரணம் என்ன என, கேள்வி எழுப்பி இருந்தார்.சமீபத்தில், கல்லூரி விழா ஒன்றில் பேசிய மோடி, "நாடு முன்னேற, கல்விக்கு அதிகம் செலவிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். மோடியின் இந்த பேச்சுகளுக்கு, காங்கிரஸ் தரப்பில் இருந்து, கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள், மோடியை, பல வழிகளில் வறுத்தெடுக்கத் துவங்கியுள்ளனர்.

திங்கள், 15 ஜூலை, 2013

வழக்குகளுக்கு பயந்து பாகிஸ்தான் திரும்ப சர்தாரி தயக்கமா?

வழக்குகளுக்கு பயந்து பாகிஸ்தான் திரும்ப சர்தாரி தயக்கமா? அதிபர் அலுவலகம் மறுப்பு
பாகிஸ்தானில் கடந்த 2008ம் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோது, அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது 5 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து சமீபத்தில் துபாய் சென்ற சர்தாரி, அங்கிருந்து லண்டன் செல்ல உள்ளார். < இந்நிலையில் ஊழல் வழக்குகளுக்குப் பயந்து அவர் வெளிநாட்டில் தங்கியிருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பதவிக்காலம் முடியும்வரை அவர் லண்டனிலேயே தங்கியிருப்பார் என்றும் செய்திகள் பரவின. இந்த தகவலை அதிபரின் செய்தித் தொடர்பாளர் பர்காத்துல்லா பாபர் மறுத்துள்ளார். அதிபர் சர்தாரி நிச்சயம் நாடு திரும்புவார். பதவிக்கலம் முடியும் வரை அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். 2-வது முறையாக அவர் அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டார் என்றும் பாபர் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக திராவிடர் கழக போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள்

ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள் என தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (13.7.2013) வெளியிட்டுள்ள கடித அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உடன்பிறப்பே, 1970ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள்      தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்கள்.  ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதிப் பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்ட வனைத் தொழுதிட வேண்டுமென்றும், அனைவருக்கும் சமமாக சாதி உயர்வு தாழ்வு இன்றி அர்ச்சகராகும் உரிமை வேண்டுமென்றும் வலியுறுத்துகிற அடிப்படையில் அந்தக் கிளர்ச்சி அமையுமென்று பெரியார் போர் முரசு கொட்டினார்.

உத்தரகாண்ட்டில் காணாமல் போன 5700 பேரும் இறந்து விட்டதாக அறிவிப்பு

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி காணாமல் போனவர்கள் என
அறிவிக்கப்பட்டிருந்த 5700 பேர் இறந்து விட்டதாக உத்தரகாண்ட் அரசு இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. காணாமல் போன இவர்களை கண்டுபிடிக்க இன்றுவரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் நிலச் சரிவுகளில், புனிதப்பயணம் மேற்கொண்ட பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த மழையால் பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய புனித தலங்களும், நூற்றுக்கணக்கான கிராமங்களும் அழிந்தன.

பார்பனரல்லாத மாணவர்களின் கல்வி எழுச்சியை பார்த்து நடுங்கும் தினமணி வகையறா !

macaulayசமசீர் கல்வி :பார்ப்பனரல்லாத மாணவர்களின் இன்றைய கல்வியெழுச்சியைப் பார்த்து, ‘ச்சீ.. இது ஒரு கல்வி.. இந்தக் கல்விமுறையையே மாற்ற வேண்டும்’ என்று சமூக அக்கறையுடன் பொங்கி இருக்கிறது தினமணி.

மெக்காலே’ வின் கல்வியும் ‘தினமணி’ யின் தகுதி, திறமையும்

ந்தியக் கல்விமுறை மனப்பாடம் செய்யும் முறையாக இருப்பதும், மாணவர்களின் தனித்தன்மையை ஊக்குவிக்கும் முறையாக சமூக பொறுப்பை, எளிய மக்களின் பால் அக்கறையை ஏற்படுத்துகிற கல்வியாக இல்லாமல் இருப்பதும் பெரும் குறைதான்.
வெள்ளைக்காரர்கள் தங்களுக்கு குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக கொண்டு வந்த கல்விமுறை இது. சரியாக சொல்ல வேண்டுமானால் அடிமைகளை உருவாக்க வந்த கல்விமுறை. பிறகு அந்தக் கல்வியில் எப்படி விடுதலை உணர்வை எதிர்பார்க்க முடியும்?
ஆனாலும், வெள்ளை மெக்காலே கொண்டு வந்த இந்த அடிமைக் கல்வியை; இன்னொரு கோணத்தில் புரட்சிகர கல்வி என்றும் அழைக்கலாம்.
குருகுலக் கல்வி, ஆதிக்க ஜாதிக்கார்களுக்கு மட்டும் கல்வி, பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்ட இந்திய இந்து சமூகத்தில், எல்லோருக்குமான ஒரே கல்வி என்று வந்தது மெக்காலேவின் கல்வி திட்டம்.
அதுவரை இந்து புராணங்களையும், பார்ப்பன ஆதிக்கத்தையும், ஜாதி வேறுபாட்டையும் நியாயப்படுத்தி வந்த கல்விமுறையிலிருந்து அறிவியல்  அடிப்படையில் வந்த மெக்காலே கல்வி முறையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் மெக்காலேவின் கல்விமுறை புரட்சிகரமானதுதான்.

மோடியின் குஜராத்தி புத்தியில் நிறுவப்பட்டிருக்கும் இசுலாமிய வெறுப்பு

ளராத கால் சட்டை கும்பலான ஆர்.எஸ்.எஸ் பற்றியோ நரவேட்டை மோடி பற்றியோ கட்டுரை வெளியிடப்படும் போதெல்லாம் “அது ஏன் எங்களை மட்டும் கரம் வைத்து கும்முகிறீர்கள்? மற்றவர்களெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டார்களா?” – என்பதாக சில ‘இந்தியப் பையன்கள்’ சடைத்துக் கொள்வதுண்டு. இந்த ‘சிலர்’ என்பது ஒரு நபரின் பல பெயர்களா அல்லது பல பெயர்கள் கொண்ட ஒரு நபரா என்பதில் எப்போதும் ஐயமுண்டு. போகட்டும். இந்தியாவில் ‘நாய் வாலை ஆட்டும்’ சம்பவங்கள் அதிகம் நடப்பது காவி கும்பலில் தான் எனும் போது எங்களை மட்டும் நொந்து கொண்டு என்ன பயன்?
சோட்டா பீம்
போகோ சேனலின் ‘சோட்டா’ பீமே பீதியில் உறைந்து போயிருப்பதாக கேள்வி.
மோடி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சமீப காலங்களில் மேற்படியாரின் விளம்பர வெறியின் விளைவாக காவி முகாமில் நாயின் வால் மட்டுமல்ல, நாயின் எஜமானரையே ஆட்டுவது போன்ற திடுக்கிடும் காட்சிகள் அரங்கேறி வருகின்றது. உத்திர காண்ட் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட குஜராத்திகளை காப்பாற்ற மோடி எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி ஊடகங்களில் பரப்பப்பட்ட கார்ட்டூன் கதைகளின் யோக்கியதை தெரியும் தானே. மோடி, தனது இடது உள்ளங்கையில் 7,500 பேரையும் வலது உள்ளங்கையில் 7,500 பேரையும் சுமந்து கொண்டு குஜராத் வரை அனுமாரைப் போல் பறந்து சென்ற சாகசத்தைக் கேள்விப் பட்டு போகோ சேனலின் ‘சோட்டா’ பீமே பீதியில் உறைந்து போயிருப்பதாக கேள்வி.

மழையில் நடனம் ஆடியதற்காக கொல்லப்பட்ட சிறுமிகள் பாகிஸ்தானில் கௌரவக் கொலைகள்


 தகப்பன், சகோதரன், கணவன், மகன், மாமன் என்று சகல வடிவிலான ஆண் உறவுகளும் நொடிப்பொழுதில் கொலை வெறித்தாக்குதலை தன் குடும்பத்து பெண்கள் மீது ஏவுவதற்கான உரிமையை அளித்திருக்கின்றன இந்த இஸ்லாமிய தேசத்தின் சட்டங்கள். ஜனநாயக சக்திகளுடன் பெண்கள் இணைந்து அரசியலிலிருந்து மதத்தை தூக்கியெறிய போராடாவிடில் இந்த புள்ளிவிவர எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதை தவிர்க்கவே முடியாது.
பஸ்ரா, சேசாபாகிஸ்தானின் கில்கிட் பகுதியில் உள்ள சிலாஸ் சிறுநகரத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயது நிரம்பிய சகோதரிகள் நூன் பஸ்ரா மற்றும் நூர் ஷெஸா இருவரும் அவர்களது தாயும் ஐந்து நபர்களைக்கொண்ட கூலிப்படையினால் ஜீன் 23 அன்று கொலை செய்யப்பட்டுள்ளனர். சகோதரிகளின் மாற்றந்தாய் மகனான குதோரே என்பவன்தான் இக்கொலைகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளாதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் செய்த தவறு என்ன?
தமது வீட்டுக்கு வெளியில் மழையில் விளையாடியதை வீடியோ பிடித்த சகோதரிகள் கொலை செய்யப்பட்டனர்.
தாங்கள் சிரித்த முகமாய் மழையில் ஆடி மகிழ்ந்ததை அந்த சகோதரிகள் செல்போன் கேமிராவில் படம் பிடித்து நண்பர் வட்டத்தில் சுற்றுக்கு விட்டுள்ளனர். வீடியோவில் இருந்ததோ பாராம்பரிய உடை அணிந்த இரண்டு குழந்தைகள் சேரந்து விளையாடும், பார்ப்போர் உதட்டில் புன்னகை பூக்க வைக்கும் காட்சிகள்தான். ஆனால் பாகிஸ்தான மத வெறியர்களைப் பொறுத்த வரை, பெண்கள் ஆடுவது என்பது குடும்ப கௌரவத்திற்கும், இஸ்லாமிய மதத்திற்கும் இழுக்கானதாகும்.

ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் போட்டியிடமுடியுமா ?

ஐதராபாத்:"சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட ஜாமின் கோரி, கீழ் நீதிமன்றத்திலும், ஆந்திர ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும், இவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், "சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களோ அல்லது போலீஸ் காவலில் உள்ளவர்களோ தேர்தலில் போட்டியிட முடியாது' என, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, ஜெகன் மோகனின் அரசியல் எதிர்காலத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலை, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை ஆட்கொண்டுள்ளது. அதனால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கு முன், ஜெகன் மோகன் ரெட்டி, ஜாமினில் வெளிவர வேண்டும். இல்லையெனில், அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும்.

ஞாயிறு, 14 ஜூலை, 2013

கல்யாணமே வேண்டாம் ! எல்லாரும் ஏமாத்துறாங்க ! நயன்தாரா அதிரடி!

நயன்தாரா மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர் அதனால்தானோ என்னவோ அவருக்கு வாய்த்த சினிமா காதலர்கள் எல்லாம் அவரை நோகடித்து ஏமாற்றி விட்டார்கள். எல்லா கூத்தும் ஆடிவிட்டு இப்போ தத்துவம் பேசும் கேடி பிரபுதேவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “ என் வாழ்வில் இதுவரை நடந்தெல்லாம் விதியின் வசத்தால் நடந்தது. மனிதனுக்கென விதியொன்றை எழுதி அதன்படி மனிதனை ஆட்டிவைக்கிறார் கடவுள். என் விதிப்படி எல்லாம் நடந்துவிட்டது. இப்போது நன் சந்தோஷமாக இருக்கிறேன். இனி என் வாழ்க்கையை என் மகன்களுக்காக வாழ்கிறேன்” என்று கூறிவிட்டார்.பிரபுதேவா கூறியதைப் போலவே நயன்தாராவும் “என் வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்கள் நடந்துவிட்டன. அவற்றிலிருந்து வெளியே வந்து இப்பொழுது நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.ஆர்யா எனக்கு நல்ல நண்பன் மட்டும் தான். ஆனால் பலரும் எங்களைப் பற்றி தவறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.என் வாழ்க்கையில் இனி காதலுக்கு இடமில்லை. ;தனியாக இருக்கும்பொழுதே நான் நிம்மதியாக இருக்கிறேன். கடைசி வரை இப்படியே இருந்துவிடலாம் என நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறாராம்.