சனி, 8 ஜூன், 2013

செருப்பு அணிந்து வந்ததால் தலித் மாணவன் தலையில் செருப்பு வைத்து தண்டித்த ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செருப்பு அணிந்து நடமாடிய தலித் மாணவனை தலையில் செருப்பை சுமக்க செய்து தண்டனை வழங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அருண். இவர் 6அம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இந்த மாணவர் தேர்வு முடிவுகள் குறித்து அறிய நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வேறுபிரிவைச் சேர்ந்த நிலமாலை என்ற நபர், அருண்குமாரை அழைத்து செருப்பு அணிந்து வந்ததற்காக திட்டியுள்ளார். பின்னர் ஊர் எல்லைவரை காலில் போட்ட செருப்பை தலை மேல் சுமந்து செல்லும்படி கூறியுள்ளார். இந்த தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், தனது தாய் நாகம்மாளிடம் நடந்தவற்றை கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள், நிலமாலையிடம் சென்று கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்நிலையத்தில் நாகம்மாள் அளித்த புகாரின் பேரில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் நிலமாலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
tamil.oneindia.in

ஸ்டாலின் கேள்வி : வைகோ தா. பாண்டியன் ஆகியோரும் சேது சமுத்ரம் பற்றி வாய் திறக்காதது ஏன்?

சேது சமுத்திரத் திட்டம் குறித்து வைகோ, தா. பாண்டியன் ஆகியோர் வாய் திறக் காதது ஏன் என்று மு.க. ஸ்டாலின் கேள்வி விடுத் துள்ளார். மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டம் இரவு அய்யர் பங்களா அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செய லாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் ரூ.2.34 கோடி நிதி வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
சேது சமுத்திரத் திட்டம் தமிழர் களின் 150 ஆண்டு கால கனவு திட்ட மாகும். 2004ஆம் ஆண்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நடந்தது. விழாவில் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, கலைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமின்றி வைகோ, கம்யூ. தலைவர் கள் தா. பாண்டியன், வரதராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் செந்தமிழ் நாடு செழிக்கும் என்று அப்போது வைகோ பேசினார். சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத் தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் வைகோ வும், தா. பாண்டியனும் இப்போது சேது சமுத்திரம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். நாடாளு மன்ற தேர்தலில் ஏதாவது தொகுதி கிடைக்குமா என்று இவர்கள் ஏங்குகிறார்கள்.  அட நீங்க ஒண்ணு அவுங்க நொந்து போய் கிடக்கிராய்ங்க  விட்டுருங்க

ஓடுமீன் ஓட வாடியிருக்கும் விஜயகாந்த் ! திமுகவை கவிழ்க்க ப்ளான்

ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி. பதவி பெறுவதற்காக தே.மு.தி.க., தி.மு.க.
இடையே பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்று மீடியாக்களில் கதை பலமாக அடிபட்டுக் கொண்டிருக்க, தி.மு.க. வட்டாரங்களில் வேறு மாதிரியான கதை சொல்கிறார்கள்.
கோபாலபுரத்துக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவர், “விஜயகாந்த என்ன நினைக்கிறார் என்று எங்களுக்கு புரியலை. அவரை சுற்றி இருப்பவர்களுக்காவது, அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது” என்கிறார் சலிப்புடன்.
தென் மாவட்டத்தை சேர்ந்த இந்த முன்னாள் அமைச்சரின் கூற்றுப்படி, தி.மு.க. சார்பில் விஜயகாந்தை அப்ரோச் செய்தது நிஜம். கனிமொழிக்கு ஆதரவு தாருங்கள் என்று தி.மு.க. தரப்பில் நேரடியாகவே கேட்டார்களாம். நெல்லை தொழிலதிபர் ஒருவர்தான், தி.மு.க. சார்பில் கேப்டனை சந்தித்திருக்கிறார்.
அவர் திரும்பி வந்து, “கேப்டனின் பேச்சு பாசிட்டிவ்வாக இருந்தது. ஓரிரு நாட்களின் போன் பண்ணுகிறேன் என்று அனுப்பி வைத்தார்” என்று ரிப்போர்ட் செய்திருக்கிறார்.
இவர்கள் இரண்டு நாட்களென்ன, ஒரு வாரம் காத்திருந்தும் பதில் இல்லை. திமுக கனிமொழிக்காக எவ்வளவு தூரம் அலைகிறது என்பதை வேடிக்கை பார்கிறார். மறுபுறத்தில் தான் பதவிக்கு அலையவில்லை என்று வேஷம் போட இந்த  மௌனம் பின்பு உதவும் என்று நினைக்கிறார், மொத்தத்தில் மீண்டும் திமுகவை  உருட்டி விளையாடுகிறார்  

தகவல் அறியும் சட்டம் அரசியல் கட்சிகளுக்கு கூடாதாம் ! கம்யுனிஸ்ட் சேட்டன் பிரகாஷ் காரத் அலறல்

டெல்லி: நாட்டின் அரசியல் கட்சிகளும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்புக்கு உள்பட்டவையே என அறிவித்திருப்பதன் மூலம் மத்திய தகவல் ஆணையம் தனது வரம்பபை மீறி செயல்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், அரசியல் கட்சிகளை பொது அமைப்புகள் என்றும் மறைமுகமாக அரசின் நிதியுதவியைப் பெறுகின்றன என்றும் ரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்கு உள்பட்டவை என்றும் தகவல் ஆணையம் கூறுகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டபோது அதை நாங்கள் வரவேற்றோம். ஆனால் தற்போது வெளியாகியுள்ள மத்திய தகவல் ஆணையத்தின் அறிவிப்பு அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்ட நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது. சாரே எந்தாணு ஈச்சட்டம் கண்டு பேடிக்கிண்ணது ?

அழகிரியின் கல்லூரிக்கு அனுமதி வழங்காததால் அண்ணா பல்கலை கழகத்திற்கு ரூ.25000 அபராதம்

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தயா பொறியியல் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்காததால், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளையின் தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இதற்கு, தேசிய தொழில்நுட்ப கல்வி கழகம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கவில்லை. இதனால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் கல்லூரி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தனி நீதிபதி, அனுமதி வழங்கி உத்தரவிட்டார். டிவிஷன் பெஞ்சும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கவும், பொறியியல் கவுன்சலிங்கில் பங்கேற்கவும் அனுமதி வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளையை சேர்ந்த ஜெயகரன் குரூப், ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிறப்பித்த உத்தரவு வருமாறு: கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க ஏற்கனவே உயர் நீதிமன்றமும், பின்னர் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுகளை மதித்து கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதிலிருந்தே பல்கலைக்கழகத்தின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. இதற்காக அண்ணா பல்கலை. பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை கல்லூரிக்கு பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்து பல்கலைக்கழகம் மே 20ம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும், பொறியியல் கவுன்சலிங்கில் பங்கேற்கவும் அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
tamil.oneindia.in

மாணவிகளை CCTV கமெரா மூலம் ரசித்த தாளாளர் குண்டர் சட்டத்தில் உள்ளே

திருத்தணி: திருவள்ளூர் டிடி மருத்துவக் கல்லூரி தாளாளர் தீனதயாளன் நாயுடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் குன்னவலத்தில் உள்ள டி.டி மருத்துவக் கல்லூரியின் தலைவர் தீனதயாளன் நாயுடு அனுமதியின்றி மருத்துவக்கல்லூரி தொடங்கி மாணவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூல் செய்தார் என்பது தீனதயாளன் மீதான புகாராகும். இதனையடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி தீனதயாளனை கைது செய்த போலீசார் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல் மூன்று ஆண்டுகள் அட்மிசன் நடத்தி மாணவர்களை மோசடி செய்துள்ளார். அதேபோல் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியது, கட்டுமானப் பொருட்கள் சப்ளை செய்தவர்கள் என பலருக்கும் பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக காவல்நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவிகள் புகார் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி நாயுடு மீது அவரது மருத்துவக் கல்லூரி மாணவிகள் 38 பேர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி ரூபேஸ்குமார் மீனாவிடம் புகார் அளித்துள்ளனர். கல்லூரிக்குச் சொந்தமான மாணவிகள் விடுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி அவற்றை தனது அறையில் பார்த்து ரசித்துள்ளார். பாத்ரூம் அருகில் பொருத்தப்பட்ட கேமராவில் இருந்து பல படங்களை ஜூம் செய்து பார்ப்பதுதான் டி டி நாயுடுவின் வேலையே என்கின்றனர் மாணவிகள்.

Kingfisher ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க விஜய் மல்லையாவிடம் பணம் இல்லையாம்


கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில்
பணியாற்றி வந்த
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க தன்னிடம் பணமில்லை என்று கூறியுள்ளார் விஜய் மல்லையா. கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணியாற்றி, பல மாத ஊதிய நிலுவையில் உள்ள ஊழியர்கள், தங்களது சம்பளத்தைக் கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேசிய மல்லையா, உங்களுக்கு ஊதியம் அளிக்க என்னிடம் பணமே இல்லை என்று கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிலுவையில் இருக்கும் ஊதியத்தைத் தரக் கோரி மல்லையாவின் வீட்டு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கிங்பிஷர் ஊரியர்கள்.
பெரும் காப்ரேட் முதலாளிகள் எப்படி எப்படி எல்லாம் பொது மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க முடியும் என்பதை கண்முன்பாகவே காட்டி கொண்டிருப்பவர்தான் இந்த விஜய மல்லையா . இவர் தனது விஸ்கி தொழிலை வெற்றிகரமாக செய்து விமான சேவை தொழிலதிபராக முன்னேற்றம் அடைந்தார் , முதலில் பெரும் கவர்சிகரமான விளம்பரங்கள் மூலம் மிக பெரும் வர்த்தக புரட்சி செய்ததாக பாவனை பண்ணி  அரசாங்க தனியார் வங்கிகளிலும் பங்கு மார்கட்டிலும் தனது ஊரை அடித்து உலையில் போடும் கைங்கரியத்தை செய்துள்ளார். இவரிடம் பெரும் பெரும் அரசிலவாதிகள் எல்லாம் கைநீட்டி உள்ளனர், அம்மா உட்பட,

காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை வருகிற 17–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி கோர்ட்டில் தலைமை நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 9 பேர் ஆஜராயினர். ஜெயந்திரர் உள்பட 14 பேர் ஆஜராகவில்லை.
வழக்கு விசாரணை தொடங்கிய உடன் தலைமை நீதிபதி முருகன், “சங்கரராமன் கொலை செய்யப்பட்ட 2004–ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பிரேம்குமார் அரசால் புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டாரா? எப்போது ஓய்வு பெற்றார்? எப்போது இறந்தார்? போன்ற விவரங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்“ என்று அரசு வழக்கறிஞர் தேவதாசுக்கு உத்தரவிட்டார்.

நல்ல மெசேஜ் சொல்ல முயன்ற சோக்காலி இயக்குனர்

படத்தின் டைட்டிலை வைத்தே கதை என்னவாக இருக்கும் என்பதை கணிக்க
முடியும். பெண்களை கரெக்ட் பண்ணி பின்னர் கல்தா கொடுக்கும் ஒரு ப்ளே-பாயின் கதை தான் சோக்காலி.டி.வி தொகுப்பாளராக இருக்கும் புதுமுக ஹீரோ சைதன்யா.இவருக்கு போன் பண்ணி பிடித்தபாடலை போடச்சொல்வதும், அந்த பாடலை அவருக்கே டெடிகேட் பண்ணுவதும் தான் தமிழ்நாட்டில் பாதி பெண்களின் வேலையாக படத்தில் காட்டுகிறார்கள். தனக்கு பெண் விசிரிகள் அதிகமாக இருப்பதால் அதை பல வழிகளில் தன் ஆசைகளை தீர்த்துக்கொள்ள நினைக்கிறார் ஹீரோ.அப்படி இவர் மேல் ஆசைப்படும் ஒரு இளம் பெண் தான் படத்தின் ஹீரோயின் சுவாசிகா. ஹீரோவின் மொபைல் நம்பரை தேடி பல பெண்கள் ஏங்கிக்கொண்டிருக்க. அந்த அபூர்வ நம்பர் ஹீரோயின் கைக்கு கிடைக்கிறது.

கேரள அரசு கெடு முடிகிறது : சிறுவாணி மூடப்படும் அபாயம்

கோவை: கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, கேரளாவில்
உள்ளது. மழை இல்லாததால், அணையில் நீர் வற்றிவிட்டது. நிலத்தடி மற்றும் பழங்கால தடுப்பணைகளில் தேங்கிய நீரை ஜூன் 10ம் தேதி வரை பெறலாம். அதற்கு பிறகு குடிநீரை உறிஞ்சி எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு கேரள அரசு நிபந்தனை விதித்துள்ளது. நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கும் பணி கடந்த மாதம் 6ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. தினமும் 3.4 கோடி லிட்டர் குடிநீர் உறிஞ்சப்படுகிறது. பருவ மழை தொடங்கிய போதிலும், அணை நீர்மட்டம் உயரவில்லை. கேரள அரசின் கெடு முடிய 3 நாட்களே உள்ளன. அதற்கு பிறகு  அணையில் இருந்து ஒரு சொட்டு நீர்கூட உறிஞ்ச முடியாது. எனினும் அணையில் உள்ள பழங்கால தடுப்பணை மற்றும் நீர் பள்ளத்தில் மேலும் 2 மீட்டர் ஆழத்துக்கு 23 நாட்களுக்கு தேவையான நீர் உள்ளது. நீரை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரள அரசு ஒப்புதல் தராவிட்டால் சிறுவாணி அணை மூடப்படும் நிலை ஏற்படும்.

தலிபான் தலைவரை மறைத்து வைத்திருக்கிறது, பாக். உளவுத்துறை ஐ.எஸ்.ஐ

தலைமறைவாக உள்ள(தாக கூறப்படும்) தலிபான் தலைவர் முல்லா ஓமரை பாதுகாப்பான இடம் ஒன்றில் வைத்துப் பாதுகாக்கிறது, பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.” என்று கூறியுள்ளார், தென்னாசிய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி ஒருவர்.
முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியும், தற்போது ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆய்வாளருமான புரூஸ் ரிடெல், “கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் தலிபான் தலைமையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகித்தது, பாகிஸ்தான் உளவுத்துறையும் ராணுவமும்தான்.
தலிபான்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்தது, பாக். ராணுவம். தலிபான் தலைமைக்கு புகலிடம் கொடுத்தது, பாக். உளவுத்துறை.
இன்றுகூட அமெரிக்காவால் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளார் முல்லா ஓமர். அவரையும், மற்றைய தலிபான் தலைவர்களையும் பாதுகாப்பான மறைவிடங்களில் வைத்து பராமரிப்பது, பாக். உளவுத்துறைதான். இந்த மறைவிடங்கள் கராச்சியிலும், குவேட்டாவிலும் உள்ளன” என்று கூறியுள்ளார்.
viruvirupu.com

ஒசாமாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட யுக்தி கண்டுபிடித்த சிவனாதனுக்கு விருது

நியூயார்க் :சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லேடனை, கொல்லப்
பயன்படுத்தப்பட்ட, "நைட்விஷன்' டெக்னாலஜியை கண்டுபிடித்த, அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு, அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில், ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், அந்நாட்டு அரசு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கி, கவுரவிக்கிறது.இந்த ஆண்டு, அமெரிக்க வாழ் இலங்கை தமிழரான, சிவலிங்கம் சிவனாதனுக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச பயங்கரவாதியான, ஒசாமா பின்லேடனை கொல்ல மேற்கொள்ளப்பட்ட, "நைட்விஷன்' தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக இந்த விருது, இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், யாழ்பாணத்தில் உள்ள, சாவகசேரியில் பிறந்தவர். தன் உயர் கல்விக்காக, 1982ம் ஆண்டு அமெரிக்கா சென்ற சிவனாதன், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்று, இலினாய்ஸ் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார்.
R.Subramanian - Chennai,இந்தியா இலங்கை தமிழரிடம் இருந்து ஒரு ஆக்க பூர்வமான செய்தி வாழ்த்துகள். வரும் காலத்திலாவுது இலங்கை தமிழர்கள் இம்மாதிரி நல்ல செயல்களை செய்து உலக மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் அது தான் இலங்கை தமிழருக்கு உண்மையில் பெருமை தரும் அதற்கு சிவனாதனு போன்றவர்களின் செயல்கள் அந்த மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்...

வெள்ளி, 7 ஜூன், 2013

திவ்யா – இளவரசனைப் பிரித்த பாமக வெறியர்கள் !

இளவரசன், திவ்யா‘தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு வன்னியர் பெண்களை திட்டம் போட்டே மயக்கி விடுகிறார்கள். வன்னியர்களின் சொத்துக்களை கைப்பற்ற இப்படி சதி செய்கிறார்கள். திருமணம் செய்து சில மாதங்களில் பெண்ணை கொடுமைப்படுத்தி துரத்தி விடுகிறார்கள். பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அப்படி ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நாடகக் காதல்களை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்.’
என்று தமிழ் நாடு முழுவதும் ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களை கூட்டி இயக்கம் நடத்தினார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். நாடகக் காதல் மூலம் பெண்களையும், சமூகத்தையும் சீரழிக்கும் இளைஞர்களை தடுப்பதற்காக வன்னிய சங்கத்தின் மூலம் மாமல்லபுரத்தில் சித்திரை நிலவு கூட்டம் நடத்தினார்.

Jiah Khan தற்கொலை குறித்து திவ்யா கருத்து

சென்னை: ஜியா கான் தற்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் திவ்யா.
அவர் கூறியது: ஹீரோயினாக நீடிப்பது கடினமான விஷயம். அழகாகவும், உறுதியாகவும் இருப்பதுபோல் தோன்றினாலும் உள்ளுக்குள் மனம் உடைந்துபோகும் தன்மைதான் அதிகம் இருக்கும். சமீபத்தில் இறந்த ஜியா கான் பார்ப்பதற்கு அழகாகவும், திறமையாகவும் இருக்கிறார். இந்த தன்மை மட்டுமே சினிமாவில் நீடித்திருக்க உதவுவதில்லை என்பது அவரது முடிவு உணர்த்துகிறது. அதிர்ஷ்டமும், ஹிட்டும்தான் நடிகையின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு ஹீரோயினும் தன் வாழ்வில் ஒரு நாள் கதறி அழும் நிலை வருகிறது. 10 வருடங்கள் கடந்து நான் சினிமாவில் இருந்தாலும் என்னைபற்றி தாழ்வாக சிலர் எண்ணும்போது கதறி அழுதிருக்கிறேன். நடிகையின் வாழ்க்கை சொகுசானது என்றால் அது பொய். தோல்வியின்போது உடனிருப்பவர்கள் செய்யும் பரிகாசம் மனதை பாதிக்கிறது. அதற்காக உயிரை மாய்த்துக்கொள்வது சரி அல்ல. வாழ்க்கை ஒரு சக்கரம். வெற்றி தோல்வி மாறி மாறி வரும் என்பதை உணர வேண்டும்.

இன்ஜினியரிங் மாணவனை கொன்ற சக இன்ஜினியரிங் மாணவர்கள் கைது

கொலையாளிகளை பிடிக்க ஓசூர் டிஎஸ்பி கோபி மேற்பார்வையில்
தனிப்படை அமைத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவிட்டார். விசாரணையில், அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் பிரவீன்குமார், முதலாம் ஆண்டு மாணவர் பிரணவ் சச்சின் ஆகியோர் ராகவை கொலை செய்தது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கொலையான ராகவ், பிரவீன்குமார், பிரணவ் சச்சின் ஆகிய 3 பேரும் நண்பர்கள். பிரவீன்குமார் ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்தவர். பிரணவ் சச்சின் கோவை பட்டகாரனூரைச் சேர்ந்தவர். பிரவீன்குமாரின் காதலியுடன் ராகவ் பேஸ்புக் மூலம் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். இதனால், ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், தனது நண்பர் பிரணவ் சச்சின் உதவியுடன் ராகவை தீர்த்துக் கட்ட திட்டமிட்டுள்ளார். கடந்த 5ம் தேதி இரவு அவர்கள் ராகவ் அறைக்கு வந்துள்ளனர். அங்கு ‘‘சூது கவ்வு’’ பட டிவிடியை லேப் டாப்பில் போட்டு பார்த்துள்ளனர். அதிகாலையில் ராகவிடம் தகராறு செய்து, அவரை கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். தடயங்களை மறைக்க அறை முழுவதும் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். மேலும், ரத்தக் கறையை அங்குள்ள தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

விஜயின் நிகழ்ச்சி திடீர் ரத்து ! பின்னணியில் யார் ? இன்னுமா புரியலை ?

சென்னையில் நடைபெறுவதாக இருந்த நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட
நலத்திட்ட விழா திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.  விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம்  போடும் நிகழ்ச்சியாக இது அமையும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நிகழ்ச்சி ரத்தானது ரசிகர்களை மிகவும் அப்செட் ஆக்கியிருக்கிறது.விழா ரத்தானது குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.நடிகர் விஜய்க்கு ஜூன் 22ம் தேதி 39வது பிறந்தநாள்.   பிறந்தநாளுக்கு முன்னதாகவே ஜூன் 8ம் தேதி சென்னையில் ஏழைகளுக்கு 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜய் இவ்விழாவில் பங்கேற்று 3 ஆயிரத்து 900 ஆயிரம் ஏழைகளுக்கு நல உதவிகள், ஏழை மாணவ - மாணவி களுக்கு கல்வி உதவி தொகை, கம்ப்யூட்டர்கள், ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றை வழங்குவதாக இருந்தது. இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பஸ், வேன்களில் சென்னை புறப்பட தயாரானார்கள். விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்தன. ரசிகர்கள் விஜய்யின் கட்-அவுட்களையும்  அமைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று இவ்விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

வியாழன், 6 ஜூன், 2013

இந்திய கிரிகெட்டு வாரியமே உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பு

ஐபிஎல் : முதலாளிகளின் மங்காத்தா – 4  
ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வயது 85. முதல் 60 ஆண்டுகளாக பார்க்காத ஊழல்களும், சூதாட்டங்களும், சதித் திட்டங்களும், மர்மங்களும் கடந்த 25 ஆண்டுகளில் வாரியத்துக்குள் எப்படி புகுந்தன?
கடந்த 30 ஆண்டுகளில் மூன்று பெரும் தலைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஜக்மோகன் டால்மியா அணி, மகாராஷ்டிரா சங்கத் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் அணி, இப்போது ஆதிக்கம் செலுத்தும் சென்னை கிரிக்கெட் சங்கத் தலைவரும் இந்திய சிமென்ட்ஸ் முதலாளியுமான என் சீனிவாசன் ஆகியோர் அவர்கள்.
இந்திய கிரிக்கெட்டை பணம் கொட்டும் மரமாக மாற்றி, இந்திய கிரிக்கெட் வாரியத்தை உலகத்திலேயே பணக்கார விளையாட்டு அமைப்பாக மாற்றிய பெருமை இந்த முதலாளிகளைச் சேரும் என்று விளையாட்டு மற்றும் வர்த்தக அறிஞர்கள் பாராட்டுகிறார்கள்.

போலீஸ்தான் ஜெயாவின் உற்ற கூட்டாளியாக செயல்பட்டு வருகிறது

jayalalithaஅதிமுக பொதுக்குழுவோ, செயற்குழுவோ, அமைச்சரவை கூட்டமோ அனைத்திலும் இடுப்பு வளைய குனிந்தும், மூளை பயந்து வணங்கியும், அம்மா புகழ் போற்றி மந்திரங்களை கேட்டு ரசிப்பவர் ஜெயா. அப்பேற்பட்டவரை சென்ற ஆண்டு தில்லிக் கூட்டத்தில் கொடுத்த நேரத்திற்கும் அதிக நேரம் பேசினார் என்று மணியடித்து ‘அவமானப்படுத்தியதை’ அவர் மறக்கவில்லை. அதனாலேயே இந்த ஆண்டு மத்திய அரசு நடத்திய மாநில முதல்வர்கள் மாநாட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஜெயா சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் முனுசாமி கலந்து கொண்டு அம்மாவின் உரையை வாசித்தார். அந்த உரையில் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் எதிர்த்திருக்கிறார் ஜெயா.
இந்தத் தடுப்பு மையம் வரும் பட்சத்தில் மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள் இந்தியாவெங்கும் சந்தேகத்துக்குரிய நபர்களைக் கைது செய்யவும், பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரத்தையும் பெற்றிருப்பார்களாம். இதை மாநில அரசுகளை மதிக்காத பெரியண்ணன் போக்கு என்றும், ஜனநாயக முறைகளை கேலிக்கூத்தாக்குவதாகவும் ஜெயா கூறுகிறார்.
சட்டசபையில் அதிமுக அடிமைகளைப் போலவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆடவேண்டும், இல்லையேல் சஸ்பெண்ட், வெளியேற்றம் என்று தூள் பறத்தும் நடவடிக்கைகளெல்லாம் எந்த ஊர் ஜனநாய முறையில் வருகிறது? ஜெயாவை ஏதாவது எதிர்த்து பேசி விட்டால், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி, ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்தாலும் சரி உடனே அவதூறு வழக்கு பாய்கிறதே, இந்த ‘ஜனநாயகம்’ கூட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இந்த அளவு இல்லை.

ஸ்பாட் பிக்சிங் புகார்! நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு விரைவில் கைது செய்யப்படலாம்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் சென்னை, கோவை உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, சூதாட்ட கும்பலின் தலைவர்கள், தரகர்களை பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பனும் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.
மற்றுமொரு அதிர்ச்சி தகவலை காவல்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு உரிமையாளர்களான ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி உட்பட இருவருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளன. ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓனரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ரா, வெளிநாடு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இதையடுத்து, அவர் தனது பாஸ்போர்ட்டை போலீசாரிடம் இன்று ஒப்படைத்தார். குந்த்ராவிடம் 10 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தள்ளுவண்டி டிபன் கடைகளுக்கு கெடுபிடி! சிறுவியாபாரிகள் அச்சம்

சென்னை: பிளாட்பாரம் மற்றும் தள்ளுவண்டிகளில் இயங்கும் டிபன்
கடைகளில் அதிரடி சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் சிறு வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். ஏழை எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கும் இடமாக இருப்பது கையேந்திபவன் எனப்படும் பிளாட்பார மற்றும் தள்ளுவண்டி டிபன் கடைகள். குறைந்த விலைக்கு டிபன் மற்றும் சாப்பாடு கிடைப்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த கடைகளை மொய்க்கின்றனர். இவற்றில் பெரும்பாலான கடைகளில் சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்கும் நிலை காணப்படுகிறது. சாக்கடை, பஸ் நிறுத்த பிளாட்பாரம், மரத்தடி என்று அசுத்தம் நிறைந்த இடங்களில்தான் பெரும்பாலான டிபன் கடைகள் இயங்குகின்றன. சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள்தான் விற்கப்படுகிறது என தெரிந்தாலும் விலை குறைவு என்பதால் கூலித் தொழிலாளர்களுக்கு இந்த கடைகளை விட்டால் வேறு வழி கிடைப்பதில்லை. பெரிய ஓட்டல்களில் ஒரு காபி குடிக்கிற காசில், இங்கே டிபனை முடித்து விடுகின்றனர்.

அந்தணர்கள் அறிவிலும் ஆன்மீகத்திலும் ஆ(ரிய)னந்த விகடன் விஷ பிரசாரம் !

- கி. தளபதிராஜ் viduthalaidaily.blogspot.com/
"தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்" என்பது போல்
ஆனந்த விகடனுக்கு தலைக் கொழுப்பு ஏறிவிட்டதால் அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. அந்தணர்  மற்ற பிரிவினர்களை விட அதிகமான சடங்குத்தூய்மை உடையவர்களாம். சில தொழில்களிலிருந்து விலகியி ருத்தல் மூலம் ஆச்சாரத்தூய்மை களைக் காப்பாற்றி வருகின்றனராம். மலம் அள்ளுவதும், நாற்று நடுவதும், கல்லுடைப்பதும் எமது இனத்திற்கே உரிய தொழிலா? இந்தத் தொழில்களிலிருந்து விலகியிருத்தல் மூலம் ஆச்சாரத்தூய்மைகளைத் தாங்கள் காப்பாற்றிக் கொள்வதாக கொழுப்பெடுத்து எழுதியிருக்கிறது 
மானங்கெட்ட,சொரணையற்ற தமிழர் பலர் அதை ஆதரிப்பதும், அயோக்கியத்தனமான பணத்தாசை யால் அதை வாங்கி சூதாட நினைப் பதுமே ஆனந்த விகடனின் ஆண வத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. (குடிஅரசு -10.10.1937) வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரி திராவிடர்கழகம் நடத்திவந்த போராட்டங்களை எதிர்த்து அது பிரிவினை வாதம் என்றும் இனத் துவேஷம் என்றும் தொடர்ந்து எழுதிவந்த ஆனந்தவிகடனைக் கண்டித்து குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகள்!    முக்காலும் உணர்ந்த முழுஞாயிறு தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரே கணித்த ஆனந்த விகடன் மீதான மதிப்பீடு!.    ஆச்சாரியார் காலத்தில் துவக்கிய ஆரியக் கூத்தை அம்மையார் ஆட்சிக்காலத்திலும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது ஆனந்த விகடன்!.

Viagra வயக்ரா மாத்திரையின் காப்புரிமை முடிகிறது ! இனி மலிவு விலை

லண்டன் : ஆண்மை ஊக்கி மருந்தான வயாக்ராவின் காப்புரிமை, இங்கிலாந்தில் வரும் 21ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு குறைந்த விலையில், உள்நாட்டு நிறுவனங்களின் மருந்துகள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனம் பைசர். இதன் முக்கியமான தயாரிப்பை சொன்னால்தான், அதன் பெருமை புரியும். உலகம் முழுவதும் சக்கைபோடு போட்டு வரும் வயாக்ரா மாத்திரையை தயாரிப்பது இந்நிறுவனம்தான். ஆண்களின் வயது, உடல்வாகைப் பொருத்து அவர்களின் ஆண்மை ஊக்கிக்காக பல்வேறு அளவுகளை கொண்ட வயாக்ரா மாத்திரை அளிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் இந்த மாத்திரை ஒன்றின் விலை ஸி730. விலை அதிகமாக இருந்தாலும், செயல்திறன் அதிகம் எனறு இதை பயன்படுத்திய அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். இதனால் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆறு நொடிக்கு ஒரு மாத்திரை வீதம் வயாக்ரா விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிகெட் போட்டி தொடரை வாடகைக்கு அல்லது குத்தைக்கு விட்டால் எவ்வளவு கிடைக்கும்?

ஐபிஎல் : முதலாளிகளின் மங்காத்தா – 3

ந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டின் 300 ஆண்டு வரலாறு இந்தியாவின் ஆளும் வர்க்கங்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. 18-ம்
நூற்றாண்டில் ஆசியாவுடனான இங்கிலாந்தின் வர்த்தகத்திற்கு ஏகபோக உரிமையை பெற்று இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகர்கள் கிரிக்கெட்டையும் தம்முடன் கொண்டு வந்தனர். 1721-ம் ஆண்டு கட்ச் கடற்கரையில் (பரோடா சமஸ்தானம்) வந்து இறங்கிய ஆங்கிலேய மாலுமிகள் இந்திய மண்ணில் முதன் முதலாக கிரிக்கெட் விளையாடினர். அடுத்த 3 நூற்றாண்டுகள் இந்திய மக்களின் வாழ்வாதாரங்களை கொடூரமாக அழித்து தமது வர்த்தக சுரண்டலை நடத்துவதற்கு முன்பான போர் நடனமாக வேண்டுமானால் அதை வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்களிடையே புரிந்துணர்வுக்கு குழிபறிக்கும் தமிழக அரசு

பிரித்தாளும் பாலியல் nisaptham.com
தமிழ்நாட்டில் இனிமேல் பெண்கள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்கள்தான்
அதேபோல வகுப்புகளில் பேராசிரியர்கள் கேட்கும் கேள்விக்கு பதில்
தெரியவில்லை என்றாலோ அல்லது அசைன்மெண்ட் செய்யாமல் வந்துவிட்டாலோ மற்ற எந்த அவமானத்தையும் விடவும் பத்து பெண்களுக்கு முன்னால் அவமானப்படுகிறோமே என்பதுதான் பெரிய வருத்தமாக இருக்கும். இந்த ‘எதிர்பாலின’ தயக்கம் என்பது அவ்வளவு சீக்கிரம் போய்விடுவதுமில்லை. வேலைக்கு போகும் வரைக்குமோ அல்லது ஆயுட்காலம் முழுவதற்குமோ சிரமப்படும் நபர்களும் இருக்கிறார்கள். பெண்கள் பள்ளியில் படித்த பெண்களுக்கும் இதே சிக்கல்கள் இருக்கும் என நினைக்கிறேன்.
டீச்சராக இருக்கப் போகிறார்களாம். நம்மவர்கள் செமத்தியாக யோசிக்கிறார்கள்.

மைக்கேல் ஜாக்சன் மகள் paris jackson தற்கொலை முயற்சி

உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய
போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன்(16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்(11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன்(15) என்ற மகளும் உள்ளனர்.மைக்கேல் ஜாக்சனின் கடைசி மகள் பாரிஸ் ஜாக்சன் (15) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கலிபோர்னியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதன், 5 ஜூன், 2013

CULT அடிமைத்தனம் தமிழர்களை வீழ்த்தி விட்டது


The modern definition of a mind control cult is any group which employs mind control and deceptive recruiting techniques. In other words cults trick people into joining and coerce them into staying. This is the definition that most people would agree with. Except the cults themselves of course!

கூடுதல் கூட்டம் குழு குலம் போன்ற  சொற்களில்  இருந்துதான்  cult என்ற ஆங்கில சொல் உருவானதோ தெரியவில்லை , இருக்கலாம்,
இந்த  Cult  எனப்படும் அமைப்புக்கள்  தமிழர்களின் வரலாற்றில் தாராளமாகவே காண கிடைக்கின்றது ,  அதிலும் குறிப்பாக கடந்த ஒரு சில ஆயிரம் வருடங்களில் இந்த cult கலாச்சாரம் அதிகமாக மேலோங்கி இருந்திருக்கிறது என்றே கருத வேண்டி உள்ளது , இதற்கு உதாரணமாக பல தகவல்களை கூறலாம் , தமிழர் இலக்கியங்களில் மன்னர்களை புகழ் பாடும் இலக்கியங்கள் எல்லாமே ஏறக்குறைய ஒரு cult கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்றே கருத வேண்டி இருக்கிறது ,
மன்னர்களையும் போர் வீரர்களையும் அளவுக்கு மீறி புகழ்வது வாந்தி வரும் அளவுக்கு இடம்பெற்று இருக்கிறது,
அவர்களை ஒரு தெய்வ ஸ்தானத்தில் வைத்து வழிபடும் கலாசாரம் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும்  சம்பவங்களை தாராளமாக காணலாம் .அந்த மன்னர்களையும் போர் வீரர்களையும் அல்லது செல்வந்தர்களையும் தெய்வ அவதாரங்கள் என்ற அளவில் புகழ்ந்து பாடும் எண்ணற்ற செய்திகள் நமது அடிமை மன நிலையை காட்டுகிறது என்றே கருத வேண்டி உள்ளது,
சில விதி விளக்குகள் உண்டு , குறிப்பாக களப்பிரர் காலத்தில் வெளிவந்ததாக கூறப்படும் சிலப்பதிகாரத்தில் மட்டும் சாதாரண மக்களின் மேன்மையை காட்டும் விபரங்கள் உள்ளன ,
அரசனின் அநியாய ஆட்சியை ஒரு சாதாரண பெண் துவம்சம் செய்த காட்சியானது அன்றைய Cult கலாசார பாரம்பரியத்திற்கு முற்றிலும் மாறான ஒரு செய்தியாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது ,
இந்த ஒரே காரணத்திற்காகவே சிலப்பதிகாரத்தை ஒரு உலக புரட்சி நூலாக அறிவித்து விடலாம்.
வல்லானின் காலடியில் தமிழர்கள்  எதோ  தாசிகளாக கிடந்ததாக  காட்டப்பட்டு  கொண்டிருந்த  இலக்கியங்களில்  சிலப்பதிகாரம் மட்டுமே சுயமாக சிந்திது தனது உரிமைக்காக போராடிய ஒரு கதாபாத்திரத்தை படைத்துள்ளது ,

6 வாலிபர்களை ரயிலில் இருந்து ராணுவ வீரர்கள் கீழே தூக்கி வீசினர்.! உபியில் அடாவடி

லக்னோ: ரயில் கிளம்பிய அவசரத்தில் ராணுவ வீரர்களுக்கான பெட்டியில் தவறுதலாக ஏறிய 6 வாலிபர்களை ராணுவ வீரர்கள் கீழே தூக்கி வீசினர். அவாத் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸில் ராணுவ வீரர்களுக்கு என்று ஒரு பெட்டி முன்பதிவு செய்யப்பட்டது. உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 340 கிமீ தொலைவில் உள்ள மொராதாபாத் அருகே 6 வாலிபர்கள் நேற்று இரவு ரயிலில் ஏறினார்கள். அவர்கள் ஏறும் முன்பு ரயில் கிளம்பத் துவங்கியதால் அவர்கள் அவசரத்தில் ராணுவ வீரர்களின் பெட்டியில் ஏறிவிட்டனர். தாங்கள் தவறான பெட்டியில் ஏறியதை அவர்கள் உணர்வதற்குள் ரயில் நிலையத்தை தாண்டி ரயில் சென்றுவிட்டது. உடனே அங்கு இருந்த ராணுவ வீரர்கள் இது தங்களுக்கான பெட்டி என்று கூறி அந்த 6 பேரையும் வெளியே போகுமாறு கூறியுள்ளனர். அடுத்த நிறுத்தம் வந்ததும் வேறு பெட்டிக்கு சென்றுவிடுகிறோம் என்று அந்த வாலிபர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ராணுவ வீரர்களோ அந்த 6 வாலிபர்களையும் ரயிலில் இருந்து கீழே தூக்கி எறிந்துவிட்டனர். இதில் 5 பேர் காயம் அடைந்தனர். ஒருவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. வழக்கு போட்டால் மேலும் பிரச்சனை வருமோ என்று அடிபட்ட வாலிபர்கள் அஞ்சுகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்
tamil.oneindia.in

ஷாஜி : பணக்கார குடிக்கார கார்களின் கொலைகள் ! தண்டனைகள் மிகவும் குறைவு ! லஞ்சம் லஞ்சம்

பெங்களூர் ஆடி கார்சட்ட வல்லுனர்கள் ஆய்வுப்படி, இத்தகைய பணக்கார குடிக்கார ஓட்டுனர்களினால் ஏற்படும் அபாயமான விபத்துகளுக்கு, தண்டனை வழங்கப்படும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
மே 22, இரவு. நள்ளிரவு நிசப்தத்தில் மூழ்கியிருந்த சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை கோரமான சாலை விபத்தொன்று எழுப்பிய மரண ஓலத்தால் அதிர்ந்தது.

ஷாஜியின் கொலைகார மெர்சிடிஸ்
பேய் வேகத்தில் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார், எழும்பூர் அரசு மருத்துவமனை திருப்பத்தில், போலீஸ் ரோந்து வாகனத்துடன் மோதி, பேருந்து நிலை மேடையின் மேலேறி, அங்கே உறங்கிக்கொண்டிருந்த நபர்களோடு சேர்த்து ஐவரை இடித்துத் தேய்த்து அருகில் நின்றிருந்த ஆட்டோவில் மோதி நின்றது.
60 வருடங்களாக மருத்துவமனை வாயிலில் இரவு உடை மற்றும் துண்டுகளை விற்றுவரும் சந்திரா என்பவரின் மூன்று பேரக் குழந்தைகளும் அன்று இரவு பேருந்து நிலைமேடையில் தூங்கிக் கொண்டு இருந்தனர். கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வந்த கார் அவர்களை நசுக்கியது.
அதில் 13 வயதான முனிராஜ், இடுப்பு எலும்பு முறிவு மற்றும் வயிறு பகுதியில் ஏற்பட்ட படுங்காயங்களினால் அவதிப்பட்டு, சிகிச்சை பலனின்றி மே 24 அன்று இறந்துவிட்டான். வாசு (8) இடுப்பு பகுதியில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சுபா (10)வின் மண்டை எலும்பு உடைந்து, அதை நான்கு மணிநேர அறுவை சிகிச்சை மூலம் தைத்து இருக்கிறார்கள். மேலும் வலது கை நான்கு இடங்களில் முறிந்து, வலது முழங்கை நசுங்கி, இடது தோளில் உள்ள ஒரு எலும்பும் முறிந்த நிலையில், மிக ஆபத்தான நிலையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறாள்.

பான்மசாலா குட்கா தடை கூடாதாம் BJP வேண்டுகோள் ! கர்நாடகத்தில் காவிகளின் போதை

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் குட்கா மற்றும் பான்மசாலாவுக்கு
விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பாஜ முன்வைத்த கோரிக்கையை முதல்வர் சித்தராமய்யா திட்டவட்டமாக மறுத்துள்ளார். குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இவற்றுக்கு தடை விதித்தன. கடைசியாக தமிழக அரசும், அதை தொடர்ந்து கர்நாடக அரசும் குட்கா பான்மசாலாவுக்கு தடை விதித்தன. கர்நாடகாவில் பாக்கு விளைச்சல் அதிகம். பாக்கு விவசாயிகளின் நெருக்கடி காரணமாக அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த முந்தைய பாஜ அரசு குட்காவுக்கு தடைவிதிக்காமல் இருந்தது.

Vijya TV புகழ் பவர் ஸ்டார் ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி!!

பவர் ஸ்டார் போலீஸ் பாதுகாப்புடன் டில்லி பயணம்! ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி!!

Viruvirupu,ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.5 கோடி கமிஷன் பெற்றுக் கொண்டு டில்லி தொழில் அதிபரை ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கோடிக்கணக்கில் கடன் வாங்கித்தர லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் என்பது பவர் ஸ்டார் சீனிவாசன் மீது லோக்கலில் உள்ள புகார். ஆந்திரா தொழிலதிபர் ஒருவருக்கு 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 26-ம் தேதி பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

சவூதி இளவரசர் disney land இல் பிறந்த நாள் கொண்டாடினார்! வாழ்க மதவாதிகள்

Prince Fahd al-Saud reportedly spent nearly $20 million at Disneyland Paris.

Saudi prince reportedly spends $20 million at Disneyland Paris

ரியாத்: பட்டம் பெற்ற மகிழ்ச்சியை விமர்சையாக கொண்டாட திட்டம் போட்ட சவுதியின் இளவரசர் 'டிஸ்னி லேண்ட்' ல் கோடிக்கணக்கில் செலவு செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார். சவுதி அரேபியாவின் மன்னரான நயீப் பின் அப்துல்-அஜீஸ் அல் சவுப்-ன் மகனான இளவரசர் ஃபஹ்த் அல்-சவுத். அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த ஃபஹத், சமீபத்தில் பட்டம் பெற்றார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள டிஸ்னி லேண்டில் ஜாலியாக பொழுதைக் கழிக்க திட்டமிட்டார் ஃபஹத். அதற்கேற்ப மே மாதம் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை டிஸ்னி லேண்ட் கேளிக்கை பூங்காவை முற்றிலுமாக புக் செய்தார். டிஸ்னி லேண்டிற்கு சென்ற ஃபஹத்திற்கு சிறப்பு கலைஞர்கள் மூலம் சிறப்பு காட்சிகள் நடத்தப்பட்டது. சந்தோஷமாக சென்ற அந்த மூன்று நாட்களின் செலவு மட்டும் கிட்டத்தட்ட 12.5கோடி பிரிட்டிஷ் பவுண்டுகளாம்.ஹ்த் அல்-சவுத் செலவிட்டுள்ளார். இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் சுமார் 110 கோடிக்கு சமமாம். அம்மாடியோவ்...
tamiloneindia.in

பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பாகிஸ்தான் இந்துக்கள் முன்வருவதில்லை

பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பாகிஸ்தான் இந்துக்கள் முன்வருவதில்லை: பொதுநல நிறுவனம் அறிக்கை பாகிஸ்தானில் வாழும் தாழ்த்தப்பட்ட இந்து மக்களில் பலர் தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்து சேவா பொதுநல நிறுவனம் நடத்திய புள்ளி விவர கணக்கெடுப்பில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கராச்சியில் நிருபர்களிடம் பாகிஸ்தான் இந்து சேவா பொதுநல நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தர் கோஹ்லி கூறியதாவது:- சிறுமிகள் கடத்தல், பலவந்த மதமாற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தாழ்த்தப்பட்ட (தலித்) மக்கள், தங்களது பெண் குழந்தைகளை ஆரம்ப பள்ளிகளில் கூட சேர்ப்பதில்லை. பள்ளிக்கு அனுப்புவதைவிட வயல் வேலைகளிலோ, ஆடு, மாடு, கோழி, வாத்து போன்றவற்றை மேய்க்கும் வேலைகளிலோ சிறுமிகளை ஈடுபடுத்தவே பெற்றோர் விரும்புகின்றனர்.

அவசர சட்டமாக உணவு பாதுகாப்பு மசோதா அமலாகிறது?

ஜனநாயக நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு, தங்களின்
விருப்பத்திற்கு ஏற்ப, "உணவுப் பாதுகாப்பு மசோதா'வை, அவசர சட்டமாக நிறைவேற்ற, காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இதன்மூலம் நினைத்ததை சாதிக்க அக்கட்சி மும்முரமாக களமிறங்கியுள்ளது.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு, குறைந்த விலையில், உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற, பல மாதங்களாக, காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனாலும், மற்ற அரசியல் கட்சிகள், போதிய ஒத்துழைப்பு தராததால், மசோதா நிறைவேறுவது தள்ளிப்போனது.
எதிர்க்கட்சிகளால் முடங்கியது:

நடிகை ஜியா கானின் தற்கொலைக்கு நடிகர் சூரஜ் தான் காரணம் ? ஏமாற்றப்பட்டதால் மனமுடைந்தார்

கடந்த ஓராண்டு காலமாக சூரஜ்-ஜுடன் ஜியா கான் நெருக்கமாக இருந்துள்ளார். புதிய தோழியுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம் தந்த
மயக்கத்தில் ஜியா கானை சூரஜ் சில நாட்களாக புறக்கணித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, சமீப காலமாக புதிய பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் ஜியா கான் விரக்தியடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 1ம் தேதி புதிய தமிழ் படம் ஒன்றில் நடிப்பதற்கான நேர்காணலுக்கு ஜியா கான் ஐதராபாத் சென்றபோது உடல் எடை அதிகமாக இருந்ததால் வாய்ப்பு கைநழுவிப் போனது. அன்று மாலை 7 மணியளவில் மும்பை திரும்பிய அவர் இரவு 9 மணியளவில் காந்திராம் சாலையில் உள்ள சூரஜ் வீட்டிற்கு சென்று அன்றிரவை அவருடன் கழித்தார்.

UN REAL எஸ்டேட் விளம்பரங்களை வெளியிடும் அதிபர்களுக்கு ஜெயில்

ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் ‘ரியல் எஸ்டேட்
(ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) மசோதாவுக்கு’ மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, ஒரு கட்டுமான திட்டம் தொடர்பான அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகளையும் பெற்ற பிறகே, அத்திட்டத்தை ரியல் எஸ்டேட் அதிபர்கள் தொடங்குவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அனுமதிகளை ஒழுங்குமுறை அமைப்பிடம் சமர்ப்பித்து,
அதை இணையதளத்தில் வெளியிட்ட பிறகே கட்டுமானத்தை தொடங்க வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அந்த அனுமதிகளை பெற்ற பிறகே, வீடு வாங்குவோரிடம் பணம் வாங்க வேண்டும். மேலும், திட்டம் தொடர்பாக பொய் விளம்பரங்களை வெளியிட்டால், அந்த திட்டச்செலவில் 10 சதவீதம்வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே தவறை செய்தால், ஜெயில் தண்டனை அளிக்கப்படும்.

ஐ.ஐ.டி.,யில் சேர நுழைவு தேர்வு: தமிழக மாணவர்களிடையே ஆர்வமின்மை ஏன்?

பாடப்பளு, போதிய பயிற்சி மையங்கள் இல்லாத நிலை உள்ளிட்ட காரணங்களால், ஜெ.இ.இ., எனப்படும் ஒரே நுழைவு தேர்வில், தமிழக மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதில்லை என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும், 16 ஐ.ஐ.டி.,யில், 9,647 இடங்களும், 36 என்.ஐ.டி., யில், 20 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு ஒரே நுழைவு தேர்வு(ஜெ.இ.இ.,) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுழைவு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,யில் சேர முடியும். வடமாநிலங்கள் முன்னணி:

செவ்வாய், 4 ஜூன், 2013

மதிமாறன் பார்வையில் தமிழக மலையாளிகள், அதிமுக, பார்பனர்கள் ,,,,

திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர் கலைஞர் மு. கருணாநிதியையும் பார்ப்பனர்கள் ஆதரிப்பது அரிது.
இத்தனைக்கும் திமுகவோ அதன் தலைவரோ, தங்களை பார்ப்பனர்களுக்கு நெருக்கமானவர்களாகவே காட்டி வருகிறார்கள். அல்லது ‘நாங்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்களோ, இந்து மத எதிர்ப்பாளர்களோ அல்ல’ என்றும் அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இருந்தாலும் அவர்களை ‘அவாளு’க்கு அறவே பிடிப்பதில்லை.
அப்படியும் தேடி பிடித்து பார்த்தால், தனிப்பட்ட முறையில் தலைமையோடு தொடர்பு உள்ளவர்கள், லாபம் அடைந்தவர்கள் என்று ஒன்றிரண்டு பேரையாவது திமுக ஆதரவாளர்களாக பார்ப்பனர்களில் பார்க்க முடிகிறது.
ஆனால் தமிழகம் வாழ் மலையாளிகளில், ஒரே ஒரு திமுக மற்றும் கலைஞர் ஆதரவாளரை பார்ப்பது முடியாததாகவே இருக்கிறது.
திமுக ஆட்சியில் ஓணத்திற்கு தமிழ்நாட்ல லீவெல்லாம் விட்டப் பிறகும் அதே நிலைதான்.
மலையாளிகள் கேரளாவில் காங்கிரஸ், பாஜக, சிபிஎம் என்று பல கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும்; தமிழகத்திற்கு வந்தால், அவர்கள் கருணாநிதி எதிர்ப்பாளர்களாகவும் எம்.ஜி.ஆர் மேல் ஈடுபாடு கொண்டாவர்களாகவும் அண்ணா திமுகவின் ஆதரவாளராகவுமே இருக்கிறார்கள்.
திராவிட இயக்கத்தையும், மலையாளிகளையும் கடுமையாக விமர்சிக்கிற தமிழ்த்தேசியவாதிகளும், தமிழகம் வாழ் மலையாளிகளும் ஒரே மாதிரியான அரசியல் நிலைபாட்டை தமிழகத்தில் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஆனாலும் ஆச்சரியமாகவே இருக்கிறது.
சமச்சீர் கல்வி எதிர்ப்பு, தமிழ்வழி கல்வி எதிர்ப்பு, தமிழ்த்தேசிய எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு,  மூவரை தூக்கிலிடுவதில் பேரார்வம் காட்டுகிற பார்ப்பனர்கள், பார்ப்பன பத்திரிகைகள் குறிப்பாக தினமணி போன்றவைகளோடு இணைந்து,
திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு ( நல்ல திறமைசாலியா இருக்கேளே..) மற்றும் எம்.ஜி.ஆர் மீது ஈடுபாடு, அண்ணா திமுக ஆதரவு என்று செயல்படுகிற தமிழ்த்தேசியவாதிகள், மலையாளிகளுடன் இணைந்து தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்காமல் இருப்பது?
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. mathimaran.wordpress.com/

Herbalife நிறுவனர் மார்க் ஹியூக்ஸ் ! மோசடி தொழில், மர்ம மரணம் !

04-herbalife-5எம்.எல்.எம் பாணியிலான பிரமிட் வணிக முறையோடு மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் சேர்த்து தனது ஊட்டச்சத்து பானங்களை சந்தைப் படுத்திய ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்
"ஹெர்பாலைஃப் : குண்டு – ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி !"
 சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடந்த துரத்தல் அது. நான் தினசரி காலையில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். பூங்காவின் நுழைவாயில் அருகே அந்தப் பெண்ணையும் டிப்டாப் இளைஞரையும் பார்க்க முடியும். வெள்ளைக் கோடுகளும் நீலக் கோடுகளும் போட்ட ஒரு சிறிய நிழற்குடையை பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். அதன் கீழே ஒரு எடை பார்க்கும் கருவி இருக்கும். கையில் ஒரு சிறிய கருவியை வைத்திருப்பார்கள். முகத்தில் மாறாத புன்னகை.
  • “சார் வாங்க சார், இலவசமா உடல் எடை பாருங்க, உங்க கொழுப்பு அளவு என்னானு சொல்றோம் சார். இலவசம் தான் வாங்க சார்” தேனில் சர்க்கரையைக் கலந்தது போன்ற இனிமை.

பெங்களூருவில் பெற்றோரே மகளை தனி அறையில் 5 ஆண்டுகளாக சிறைவைத்துள்ளார்கள்

 In a shocking revelation in Bangalore, a 35-year-old woman, allegedly locked up in a room by her parents for about four years, was rescued by police from her residence in the city today. Hemavathi, a graduate in Commerce, was found in a traumatised state when police visited the house after receiving a tip off.
She was lying on the floor looking unkempt and not even properly clothed, police said.
பெங்களூரில் பெற்றோர்களே தனக்களது மகளை 5 ஆண்டுகளாக தனி அறையில் சிறை வைத்துள்ள கொடுமை நடந்தேறியுள்ளது. ஹேமாவதி என்ற அந்த 35 வயது பெண்ணை போலீசார் மீட்டனர்.காதலை கைவிட மறுத்ததால் பெற்ற பெண்ணை நிர்வாணமாக சிறை வைத்து கொடுமை செய்துள்ளனர். போலீஸ் சித்தரவதை கூட மேலும் என்றுதான் நினைக்கவேண்டியுள்ளது.தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் அந்தப் பெண் தனி அறையில் சிறைவைக்கப்பட்டிருந்தாள்.

ஆண் வாரிசுக்காக தினமும் சித்ரவதை . 5 மகள்களுடன் தீக்குளித்த பெண் மரணம்

லக்னோ: ஆண் வாரிசு வேண்டும் என்று கூறி கணவர் அடித்துத் துன்புறுத்தியதால் வெறுத்துப் போன உ.பி. பெண் ஒருவர் தனது 5 மகள்களுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்லி என்ற கிராமத்தில்தான் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் பிரேமா தேவி. 38 வயதான இவரது கணவர் பெயர் ஜெகதாம்பா பிரசாத் லோத். இவர்களுக்கு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் வாரிசு இல்லை என்று கூறி பிரேமா தேவியை தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார் பிரசாத். இதனால் வெறுத்துப் போன பிரேமா தேவி, தனது மகள் கள் சுதா 12, ரேகா 10, நிஷா 7,. ரூபா 5, ஷிகா 2 ஆகியோருடன் தீக்குளித்து விட்டார். இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அனைவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் பரிதாபமாக 6 பேரும் தீயில் கருகிப் போய் பிணமானார்கள். பிரேமாவின் சகோதரர் ஸ்ரீசந்த் கொடுத்த புகாரின் பேரில் பிரேமாவின் கணவர் கைது செய்யப்பட்டார்.
tamil.oneindia.in

தமிழ்நாடு மாணவர் காங்கிரஸை கலைத்தார் ராகுல் காந்தி

டெல்லி: தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து விட்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இதற்கான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். தமிழக மாணவர் காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் பெரும் மோசடிகள், குளறுபடிகள் நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. தலைவர் தேர்தலில் கலையரசன் வெற்றி பெற்றார். ஆனால் அவர் மாணவரே இல்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து உத்தரவிட்டுள்ளார் ராகுல் காந்தி. மேலும் கலையரசனை தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார் ராகுல் காந்தி. தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் ராகுல் காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamil.oneindia.in

சஞ்சய் தத் சிறையில் காகித பைகள் செய்கிறார் தினமும்.25 ரூபாய் கூலி பெறுகிறார்

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான
வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உறுதி செய்தது.இப்போது சஞ்சய் தத், மராட்டிய மாநிலம், புனே எரவாடா மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். பிற தண்டனை கைதிகளைப்போலவே சஞ்சய் தத்தும் நடத்தப்படுகிறார். இவருக்கு சிறையில், பழைய செய்தித்தாள்களை மூலப்பொருளாகக் கொண்டு காகிதப் பைகள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும் என சிறை சூப்பிரண்டு யோகேஷ் தேசாய் அறிவித்துள்ளார். சஞ்சய் தத்துக்கு, சிறையில் காகிதப்பைகள் தயாரித்து அளிப்பதற்காக தினக்கூலி ரூ.25 வழங்கப்படும். இந்த வேலையை செய்வதற்காக சஞ்சய் தத் சிறைக்குள் இருக்கிற தொழிற்சாலைக்கு செல்ல வேண்டியதில்லை. தனது அறையில் இருந்து கொண்டே செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சிறையில் பிற கைதிகளுடன் சேர்ந்து வேலை செய்யுமாறு சஞ்சய் தத்துக்கு உத்தரவிடப்பட மாட்டாது என சிறை சூப்பிரண்டு யோகேஷ் தேசாய் தெரிவித்துள்ளார். சஞ்சய் தத் இன்னும் 42 மாத காலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி உள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் கத்தரிகோலை வயிற்றுக்குள் வைத்து தைத்த டாக்டர்ர்ரர்கள்

மதுரை கே.கே.நகரை சேர்ந்த ஆறுமுகம், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஐகோர்ட் கிளையில் ஆறுமுகம் தாக்கல் செய்தார். அம்மனுவில்,' என் மனைவி இந்திராணி(62). வயிற்று வலிக்காக மதுரை அரசு மருத்துவமனையில் 1989ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் வலி நிற்கவில்லை. பின்னர் தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், இந்திராணி வயிற்றில் கத்திரிகோல் இருப்பதும், கத்திரிகோலை சுற்றி சதை வளர்ந்திருப்பதும் தெரியவந்தது. மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள், அறுவை சிகிச்சையின் போது கவனக்குறைவாக, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய கத்திரிகோலை என் மனைவியின் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ளனர். இதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மனைவிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் உள்ள கத்திரிகோலை அகற்ற அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். ஆறுமுகத்தின் மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், 'உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் உள்ள கத்திரிகோலை அகற்றுமாறு மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அரசு மருத்துவமனை டீனுக்கு பதில் மனு கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

நடிகை ஜியா கான் தூக்கு போட்டு தற்கொலை actress Jiah Khan has been found dead

 Bollywood actress Jiah Khan has been found dead at her home in the Indian city of Mumbai, police say. They did not say how Khan died, but said they were seeking information from Khan's neighbours.
The 25-year-old actress made her debut in 2007 opposite Amitabh Bachchan, and went on to act with stars including Aamir Khan and Akshay Kumar.
மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர் ஜியா கான்(25). இங்கிலாந்தில் வளர்ந்த அவர் அண்மையில் தான் தனது தாயுடன் மும்பை ஜுஹு பகுதியில் செட்டிலானார். கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். அவர் அண்மை காலமாக சொந்த பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. படங்களில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது புதிய வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தாராம். இந்நிலையில் அவர் நேற்று இரவு 11 மணிக்கு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் சாகும் முன்பு கடிதம் எழுதி வைக்கவில்லை. அவர் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நிஷப்த் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in

விறு விறு துரு துரு ரூபா மஞ்சரியின் ரவுண்ட் ஆரம்பம்

சென்னை: கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்த ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்ய
சிவா அடுத்து இயக்கும் படம் ‘சிவப்பு’. இதுபற்றி அவர் கூறியதாவது: சிவப்பு என்பது ஒரு நிறமாக தெரிந்தாலும் அதில் வறுமை, கோபம், காதல், வன்முறை என நிறத்தை மீறிய அம்சங்களும் புதைந்திருக்கிறது. அடிமைகளாக அவதிப்படுபவர்களின் உள்ளுணர்வை பிரதிபலிப்பதுடன் கட்டிடம் கட்டும் தொழிலாளர் களின் மறுவாழ்க்கை பதிவாக இக்கதை அமைக் கப்பட்டுள்ளது. ராஜ்கிரண், நவீன் சந்திரா ஹீரோக்கள். ரூபாமஞ்சரி ஹீரோயின். தம்பி ராமையா, செல்வா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மது அம்பாட் ஒளிப்பதிவு. என்.ஆர்.ரகுநந்தன் இசை. முக்தா கோவிந்த், பிரியதர்ஷினி தயாரிப்பு..tamilmurasu.org

போட்டுத் தள்ளுங்க! மாவோயிஸ்ட்களுக்கு ரகசிய தகவல் கொடுத்த நான்கு காங்கிரஸ்காரர்கள்!

சத்தீஸ்கரில் அண்மையில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக இவ்வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு என்.ஐ.ஏ. (NIA – National Investigation Agency) தெரிவித்துள்ளது.
கடந்த மே 25-ம் தேதியன்று, சத்தீஸ்கரில் காங்கிரஸ் பிரச்சார வாகன பேரணி மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில், 28 பேர் பலியானார்கள்.
அன்றைய தினம், நான்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், நக்சலைட்டு அமைப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள்தான், காங்கிரஸ் பேரணி பாதை மாறி வேறு வழியில் செல்வது குறித்து நக்சலைட்டுகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை விசாரித்ததில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடடா.. உள்கட்சி விவகாரம்தானா இது! கொலை வரைக்கும் போயிருக்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்!
viruvirupu.com

கலைஞருக்கு பார்பனீயத்தின் வஞ்சப்புகழ்ச்சி

http://idlyvadai.blogspot.com
இன்று 90வது பிறந்த நாள் காணும் கலைஞரை இட்லிவடை வாழ்த்துகிறது. 50+ ஆண்டு அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் கொஞ்சமல்ல. ஆனால் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ராமதாஸ் தற்போது அவர் குடும்பம் என்று இன்று வரை போராட்டம் தொடர்கிறது. இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் ஒடுக்குமுறைகளை சந்தித்திருக்கிறார். ஆனாலும் இன்று வரை திமுக என்ற இயக்கம் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு இவரே காரணம். "ராமானுஜருக்கு உள்ள வைராக்கியம், தமிழ்நாட்டில் இன்றைக்கு எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருந்தால் இடம்பெயராமல், இதயம் மாறாமல், கொள்கை கோணாமல், அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், இந்த நாடு என்றைக்கோ இன்னும் அதிகமான முன்னேற்றத்தை பெற்றிருக்கும்" என்று கலைஞர் சொன்னாலும் மத்தியில் காவி ஆட்சியானாலும், காங்கிரஸ் ஆட்சியானாலும் நல்ல உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது அரசியல் சாணக்கியத்தை ஜெயலலிதா போன்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.உலகத் தமிழர்களிடையே தமிழின் அடையாளமாக கலைஞரின் பெயரே நிலை பெற்றிருக்கிறது.  செம்மொழி, குமரியில் வள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம் என்று எதை சொன்னாலும் கலைஞர் நினைவு வருவது தவிற்க முடியாத ஒன்று. அரசியல்வாதியாக மட்டுமல்ல ஒரு எழுத்தாளராகவும் அவர் தன்னை தொடர்ந்து அடையளப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். அவருடைய திருக்குறள் உரை திருக்குறளுக்கு எழுதப்பட்ட மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நேற்றுவரை உரைநடை கவிதை எழுதி தன் ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்த தவறியதில்லை. அதே போல் கேள்வி பதில் இலக்கியம். யாரும் கேள்வி கேட்க வில்லை என்றால் தானே கேள்வியும் கேட்டு பதிலும் எழுதிவிடுவார். இவர் இல்லாமல் பத்திரிக்கை உலகமும் ( இட்லிவடையும் தான் ) என்ன செய்திருக்கும் என்று யோசித்துக் கூட பார்க்கமுடியவில்லை.

சசிகலா உறவினர் நடிகர் பாஸ்கரன் கைது கொடுக்கல் வாங்கல் ப்ராப்ளம்

சென்னை: சசிகலா உறவினர் பாஸ் என்ற பாஸ்கரன் இன்று திடீரென கைது
செய்யப்பட்டார். சசிகலா உறவினர் பாஸ்கரன் மீது கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மோசடி தொடர்பாகவும், சமீபத்தில் வெளியான திரைப்பட தயாரிப்பு தொடர்பான மோசடி புகாரின் பேரிலும் இரு வழக்குள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் சென்னை நீலாங்கரையில் அவரை கைது செய்தனர். முன்னதாக இவர் தலைவன் என்ற திரைபடத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வீட்டிலும் இன்று காலை போலீசார் குவிக்கப்பட்டனர்.

கிரிக்கெட் போட்டி முடிவை மாற்றி கோடிக்கணக்கில் பணம் பார்த்த புரோக்கர்கள்


டில்லி தரகர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, கிரிக்கெட் போட்டிகளின்
முடிவை மாற்றிச் சொல்லி, சென்னையில் உள்ள பலரிடம், கோடிக்கணக்கில் சென்னை சூதாட்ட புரோக்கர்கள் ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னையில், ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக, பிரசாந்த், கிட்டி, சஞ்சய் பாவ்னா, ஹரிஷ் பஜாஜ் உள்ளிட்ட, பத்துபேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆறு பேர் இந்தவழக்கில் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், பிரசாந்த் உள்ளிட்ட, ஆறு பேரிடம் போலீசார், விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.மேலும், விசாரணை முடிந்த நிலையில், கிட்டி, சஞ்சய் பாவ்னா தவிர மற்றவர்கள் அனைவரும், ஜாமினில் வெளியில் வந்து, தினசரி, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, பிரசாந்த் உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட, தலைமறைவாக உள்ள புரோக்கர்கள் அனைவரும், "சிண்டிகேட்' அமைத்து செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், டில்லியைச் சேர்ந்த, சஞ்சய் ஓஜா, கரண்குமார் என்ற இரு புரோக்கர்களும், தற்போது தலைமறைவாக உள்ளனர். இவர்களது பெயரும், வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள், டில்லியில் உள்ள புரோக்கர்களுடன் இணைந்து, போட்டியின் முடிவை முன்கூட்டியே நிர்ணயித்து, சென்னையில் உள்ள புரோக்கர்களுக்கு தெரிவித்து விடுகின்றனர். அதன் பின் தான், சென்னை புரோக்கர்களின் விளையாட்டு ஆரம்பிக்கிறது.இவர்கள், போட்டியில் ஜெயிக்கும் அணியின் பெயரை மாற்றி, இங்கு சூதாட்டத்தில் பங்கேற்பவர்களிடம் கூறிவிடுவர். இதனால், அவர்கள் ஜெயிக்கும் அணியின் மீது, பணம் கட்டுவர். ஆனால், எதிர் அணி ஜெயித்து விடும். இதில், கட்டப்பட்ட பணம் முழுவதும், சூதாட்ட புரோக்கர்களுக்கு சென்றுவிடும்.இந்த வகையில், கடந்த மாதம், 28 மற்றும், 29ம் தேதிகளில் நடந்த போட்டிகளில், கோடிக்கணக்கில், சூதாட்ட புரோக்கர்கள் பணம் பார்த்துள்ளதாகவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ளவர்களை, விரைவில் பிடிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவெடுத்துள்ளனர். விக்ரம் ஆஜர்: சென்னை, சி.பி.சி.ஐ.டி., தேடிவந்த நிலையில், கடந்த, 31ம் தேதி, மும்பை போலீசில் ஆஜரான, சென்னை ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை, சென்னைக்கு கொண்டு வந்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., முடிவெடுத்தது. மேலும், சென்னையில் இருந்து, தனிப்படை போலீசாரை அனுப்பவும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை, விக்ரம் அகர்வாலின் மனைவி, வந்தனா அகர்வால், ஒரு கடிதத்தை, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அதில், இம்மாதம் ஐந்தாம் தேதி, விசாரணைக்கு ஆஜராகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, விக்ரமை தேடி, தனிப்படையனர் மும்பை செல்வதை நிறுத்திவிட்டு, விக்ரம் அகர்வாலிடம் விசாரிக்க வேண்டிய தகவல்கள் குறித்து, ஆலோசித்து வருகின்றனர். - நமது நிருபர்- dinamalar.com

சேது சமுத்ரத்தை கையில் எடுக்கும் தி மு க

சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் 90 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் தலைமை வகித்தார். பல தலைவர்கள் வாழ்த்தி பேசினர். கருணாநிதி ஏற்புரையாற்றி பேசியதாவது: கடந்த 3 நாட்களாக தூக்கம் இல்லாத இரவுகளாக சென்றன. தூங்கி வழியும் கருத்துக்கள் இருந்தால் விலக்கி விட்டு, போர் வீரர்களாகும் கடமைக்கு ஆட்பட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். திமுக என்பது சாதாரண, சாமான்ய மக்களால், தோழர்களால் நிர்வகிக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இயக்கம். தற்போது  மு.க.ஸ்டாலின் பொருளாளராக இருக்கிறார். அண்ணா காலத்தில் நான் பொருளாளராக இருந்தேன். இரண்டு பொருளாளர்கள் சேர்ந்து எப்படி உழைக்க வேண்டியுள்ளது என்பதற்காக சில செய்திகளை சொல்ல வேண்டியுள்ளது.
காலையில் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து, தள்ளிக் கொண்டு, நிர்வாகிகளிடமும், உண்டியலில் நிதியளித்தனர்.  மாலையில் எண்ணப்பட்ட போது உண்டியலில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 158 சேர்ந்துள்ளது. சில காசோலைகளும் உள்ளன.

தகவல் அறியும் சட்டம் மூலம் இனி அரசியல் கட்சிகளை குடையலாம்

புதுடில்லி :"தகவல் அறியும் உரிமைச் சட்டம், காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட, ஆறு அரசியல் கட்சிகளுக்கும் இனி பொருந்தும்' என, மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், இந்த ஆறு அரசியல் கட்சிகளும், தாங்கள் பெற்ற நன்கொடை, தேர்தல் செலவு உள்ளிட்ட விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பொதுமக்கள் கேட்டால், அதற்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும். சீர்திருத்தம்: சமூக ஆர்வலர், சுபாஷ் அகர்வால், "ஜனநாயகத்துக்கான சீர்திருத்தம்' என்ற அமைப்பை சேர்ந்த, அனில் பெய்ர்வால் ஆகியோர், மத்திய தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய தேசிய கட்சிகள், ஏராளமாக நன்கொடைகள் பெறுகின்றன. இந்த நன்கொடைகள் யார், யாரிடமிருந்து கிடைத்தன என்பது பற்றிய விவரத்தை அளிக்கும்படி, இந்த கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால், இந்த ஆறு கட்சிகளுமே, "நாங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் வரவில்லை. எனவே, நன்கொடை விவரங்களை தெரிவிக்க முடியாது' என, கூறின. இது தொடர்பாக, மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர், சத்யானந்த மிஸ்ரா, ஆணையர்கள், எம்.எல்.சர்மா, அன்னபூர்னா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய முழு,"பெஞ்ச்' விசாரணை நடத்தியது.

திங்கள், 3 ஜூன், 2013

சூப்பர் சிங்கரில் மீண்டும் வேதாளங்கள் வந்து விட்டன உன்னி சுஜாதா ஸ்ரீகாந்த்

மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உன்னிகிருஷ்ணன் சுஜாதா ஸ்ரீ காந் ஆகிய மூன்று நடுவர்களும் ஆஜாராகி விட்டனர்,  நம்ம தலை எழுத்து
 இவர்களை ஏன்தான் மீண்டும் மீண்டும் சுப்பர் சிங்கர் நிகழ்சிகளுக்கு அழைக்கிறார்களோ தெரியவில்லை .
இந்த மூன்று பெரும் சென்ற முறை சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செய்த அலப்பறை மறக்க கூடியதா?
சாய் சரண் தோற்க வேண்டும் என்று தலையால் நின்று பார்த்தார்கள்  , அது முடியாமல் போகவே அவரது வெற்றியை கொச்சை படுத்தினார்கள் ,
இவர்களை மன்னிக்கவே முடியாது ,
இவர்கள் தூக்கி பிடித்த பூஜாவும் சத்யா பிரகாசும் நான்காவது மூன்றாவது இடங்களையே பிடிக்க முடிந்தது , அது மக்களின் வாக்கு அடிப்படையில் நிகழ்ந்தது ,
அதை ஏற்று கொள்ளகூடிய பண்பு இல்லாமல் மகா மட்ட ரகமாக நடந்து கொண்டார்கள். தமிழ் ரசிகர்களின் அளப்பெரிய வாக்கினையே கேலியாக்கினர் , போதாக்குறைக்கு கண்ணீர் வேறு சிந்து டிராமாவும் போட்டனர்
இவர்களை நடுவர்களாக கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சியை பார்ப்பது சுத்த வேஸ்ட் . 

பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டுமே..

சென்னை: மாணவிகள் பாலியல் பிரச்சினைக்குள்ளாவதைத் தடுக்கும்
வகையில், இனிமேல் பெண்கள் பள்ளிகள் பெண் ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முதலே இது அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பெண்கள் பள்ளிகளில் பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியைகளும் பெண்களாகவே இருக்க வேண்டும். இந்த உத்தரவையே பின்பற்றி அரசு ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். அதே நேரத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு சமீபத்தில் நடந்த கவுன்சிலிங்கின்போது கடைசி நாளில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த கவுன்சிலிங்கின்போதும் அமுல்படுத்தப்படும். மேலும் பதவி உயர்வு, புதிய ஆசிரியர்கள் நியமனம், டிரான்ஸ்பர் ஆகியவற்றில் இந்த உத்தரவு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

நக்கீரன் கோபால் மீது மீண்டும் ஜெயலலிதா வழக்கு ! நற்பெயர் களங்கமாம்

ஜெ ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை, தமிழகத்தை சுட்டெரிக்குது ஊழல்
சென்னை: அவதூறு செய்தி வெளியிட்டதாக நக்கீரன் வார இதழ் மீது முதல்வர்’ என்ற தலைப்பில் செய்தி நக்கீரன் இதழில் ஏப்ரல் 13ம் தேதி கட்டுரை வெளிவந்துள்ளது. அதில், ‘ஜெ ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை, தமிழகத்தை சுட்டெரிக்குது ஊழல்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. , வெளியிடப்பட்டுள்ளது. அதில்‘பொதுப்பணித் துறை கான்ட்ராக்ட் வேலை என்றால் 10 சதவீதம் தர வேண்டும். துறையில் 3 பி.ஏ.க்கள் இருக்கின்றனர். அதில், கிங் மாதிரி இருப்பவர் டெக்னிக்கல் பி.ஏ.காமராஜ். அடுத்த நிலையில் ஸ்பெஷல் பி.ஏ. பாலசுப்பிரமணியன் மற்றொரு பி.ஏ. கோபாலகிருஷ் ணன். அவரும் காமராஜும்தான் அத்தனை கோல்மால்களுக்கும் ரூட் போடுகிறவர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி, தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் பொது மக்களிடையே உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் உள்ளிட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500ன் கீழ் அவதூறு செய்ததாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நீதிபதி கலையரசன் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.

தண்ணீர் ஒரு அடிப்படை உரிமை ! Bottle களில் இருந்து தண்ணீரை மீட்போம்

வீட்டுக்குள் குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறது என்ற வசதி உலகில் சுமார் 50% மக்களுக்கு இன்னும் போய்ச் சேராத நிலைமை. இவர்கள் வீட்டில் அந்தக் கவலை எல்லாம் இல்லை. சமையலறை, கழிவறை, குளியலறை, முகம் கழுவும் வாஷ் பேசின், தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்ற என்று எல்லா இடங்களிலும், எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது.
ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (எதிர் சவ்வூடு பரவல்) முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மாடியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பப்பட்டு, குடி தண்ணீர்க் குழாய்களில் வருகிறது. குடிக்க, சமைக்க, குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ அதையே பயன்படுத்திக் கொள்கிறார்கள். சுத்திகரிக்கப்படாத தண்ணீரில் குளித்தால் ஒத்துக் கொள்வது இல்லை.
சமையலறையிலும், குளியலறையிலும் சுடு தண்ணீர்க் குழாய், குளிர்ந்த தண்ணீர்க் குழாய் என்று இருபுறமும் இருக்கும். தேவைக்கேற்ற சூட்டில் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவசரமாக இருந்தால் ஷவரில் குளித்து விட்டுப் போய் விடுவார்கள். மாலை வேளையில் அலுப்புத் தீர முழுகிக் குளிப்பதற்காக குளியல் தொட்டி(பாத் டப்)யில் நீரை நிரப்பி, அதில் அழுந்திக் குளித்து புத்துணர்ச்சி பெற்றுக் கொள்வார்கள்.
துணி துவைப்பதற்கான எந்திரத்தில் தினமும் ஒரு சுமை துணி துவைக்கப்படும். 4 பேரின் இரவு உடை, ஜிம் உடை, அலுவலக உடை, மாலை உடை என்று குறைந்த பட்சம் ஆளுக்கு 4 செட் துணிகளைத் தினமும் துவைக்க வேண்டும். கூடவே, படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், தலை துவட்டும் துண்டுகள், கை துடைக்கும் துண்டுகள் என்று சில நாட்களில் இரண்டு லோடு கூட எந்திரத்தில் போட வேண்டி வரும்.

கிருஷ்ணகிரியில் பவித்ரா கௌரவ கொலை என சந்தேகம்


கிருஷ்ணகிரி அடுத்த மோரமடுகு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நடராஜன். இவரது மகள் பவித்ரா (17). ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி ப்ளஸ் 2 படித்து வந்த இவர் 960 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கிய பவித்ரா நேற்று காலையில் எழுந்து பார்த்த போது, பவித்ராவை காணவில்லை.இந்நிலையில், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் உள்ள ஆலப்பட்டியை அடுத்த வெப்பாலம்பட்டியில் பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இளம் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., சந்தானபாண்டியன் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், எஸ்.ஐ., சுரேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தபோது, இறந்து கிடந்தது மாணவி பவித்ரா என்பது தெரியவந்து,

Television விளம்பர நேரங்களில் புதிய கட்டுப்பாடு! விளம்பர நேரம் குறைகிறது மத்திய அரசு கடிவாளம்

புதுடில்லி:"டிவி' சேனல்களில், நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்க முடியாத
வகையில், அடிக்கடி குறுக்கிடும் விளம்பரங்களை பார்த்து, வெறுப்படைத்த நேயர்கள், அக்டோபர் மாதம் முதல் நிம்மதி அடையும் வகையில், அதிரடி மாற்றம் வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங் களை இடம் பெறச் செய்ய வேண்டும், என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.கோரிக்கை : "டிவி' மற்றும் ரேடியோவில், நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும், வர்த்தக விளம்பரங்கள், நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்கள் நேயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதையடுத்து, விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.இது தொடர்பாக, நடவடிக்கை எடுப்பது பற்றி, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, "டிராய்' ஆலோசித்து வந்தது. தற்போது, "டிவி' சேனல்களில், ஒரு மணி நேரத்திற்கு, 20 முதல் 25 நிமிடங்களுக்கு விளம்பரங்களும், இது தவிர்த்து, நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்களும், அதிகம் இடம் பெறுகின்றன.

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி கழுத்து நெரித்து கொலை ! பாலியல் வன்முறை

Krishnagiri: A 17-year-old girl was found murdered with her neck strangulated in a mango orchard in Veppalapatty, Krishnagiri district on Sunday. The deceased had secured 960 out of 1200 in the class 12 examinations, police sources said.
The victim has been identified as N Pavithra, daughter of V Natarajan (49) from Moramadugu village in Krishnagiri taluk. "She was a student of a private school near Perundurai in Erode district. She was residing at the school hostel and had come home after her examinations," said Krishnagiri taluk police.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மோரமடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜன்.  இவரது மகள் பவித்ரா (17). இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். நடந்து முடிந்த பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள இவர் தேர்வில் 960 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் வீட்டில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்தாராம். ஞாயிற்றுக் கிழமை காலையில் எழுந்து பார்த்தபோது அவரை காணவில்லையாம். இதனால் பெற்றோர் பல்வேறு இடங்களில் பவித்ராவை தேடி வந்தனராம்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அடுத்த வேப்பாலப்பட்டி கிராமத்தில் பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இளம் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்தபகுதி மக்கள் கிருஷ்ணகிரி வட்டார காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

கலைஞர் 90 வது பிறந்த நாள் செய்தி: என்னை வாழ்த்துவது போல் எல்லோரும் ஒருவரை ஒருவர் வாழ்த்த வேண்டும்


நெஞ்சு இருக்கும் வரை, நீதி நிலைக்கும் வரை எழுதிக் கொண்டே இருப்பேன் என்று சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி கூறினார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம் (முதல் பதிப்பு) மற்றும் சிறுகதைப் பூங்கா ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ச.மோகன் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டார்.
முதல் பிரதியை பேராசிரியர் மா.நன்னன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தி.மு.க.வினர் மேடையில் தி.மு.க. தலைவர் கலைஞரிடம் பணம் செலுத்தி புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் கலைஞர் ஏற்புரை வழங்கி பேசியதாவது:-

டெல்லியில் மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைகள் தொடர்கிறது

டெல்லியில் நங்க்லோய் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், நேற்று
இரவு சாப்பிட்ட பின் நடைபயிற்சி சென்றார். அப்போது ஒரு காரில் வந்த 3 பேர் அந்த பெண்ணை கடத்திச் சென்று, காரிலேயே வைத்து >கற்பழித்தனர். இன்று காலை அந்த பெண்ணை அவரது வீட்டின் அருகே வீசிவிட்டு சென்று விட்டனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அன்வர் (வயது 30), சந்தீப் (32), அனீஷ் (35) என்ற 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தன்னை கடத்திச் சென்று கற்பழித்த நபர்கள் யார் என தனக்கு தெரியாது என்று அந்த பெண் கூறியதாகவும்போலீசார் தெரிவித்தனர்.