Loganayaki Lona : பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக வாழ வாழ்த்தும் கம்யூனிஸ்டுகளே!
பாரதி வாழ்நாளில் புதுமைப்பெண்ணை உருவாக்கவும் இல்லை,பார்க்கவும் இல்லை.கண்ணம்மாவே வாழ்நாள் அடிமை வாழ்க்கைக்கு ஒரு சாட்சி..
இது தமிழ்நாடு இங்கு உருவாகியிருக்கும் அனைத்து புதுமைப்பெண்ணும் திராவிடத்தின் வார்ப்புகள்.தந்தை பெரியார் களம் கண்டு போராடி தன் வாழ்நாளில் பல புதுமைப்பெண்களை உருவாக்கி பார்த்து விட்டு மறைந்த நாடு.
இங்கு கனவு கண்டவர்களையும்,கவிதை எழுதியவர்களையும் வைத்து பெண்களை வாழ்த்துவது அரசியல்படுத்தப்பட்டவர்களின் அரசியல் நேர்மையற்ற செயல்.
கோவிலுக்கு சென்று கொண்டிருந்த தன் இணையரை,தன் சகோதரியை கள்ளுக்கடை மறியல் போராட்ட களத்திற்கு தலைமையாக்கியவர் தந்தை பெரியார்.
சனி, 6 மே, 2023
தந்தை பெரியாரே புதுமைப்பெண்ணை உருவாக்கினார் .. பாரதி உருவாக்கியது கண்ணம்மாவைத்தான்!
இந்த ஆட்சியின் முகம் சனாதனமல்ல சமூகநீதி”.. ஆளுநருக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?: ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கே
Kalaignar Seithigal - Lenin : தமிழ்நாடு சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?
ஆளுநர் கூறுவது போல சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறவில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மணிப்பூர் வன்முறையில் 54 பேர் பலி - கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது ராணுவம்
மாலை மலர் : மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையின் பிணவறையிலும், 15 பேரின் உடல்கள்
இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த மணிப்பூர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது.
மணிப்பூரின் இம்பால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் ஓடத்துவங்கியுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம், மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது மக்கள் இன்று காலை முதலே காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரத்துவங்கினர்.
தென்னிந்தியாவில் தமிழ்நாடு தான் மிக வலிமையான மாநிலம் . ரிசர்வ் வாங்கி அறிவிப்பு
tamil.goodreturns.in - Prasanna Venkatesh : தமிழ்நாடு, ஆந்திரா பிரதேசம், கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஐந்து மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இந்த 5 மாநிலங்களில் எந்த மாநிலம் வலிமையான பொருளாதாரத்தை கொண்டு உள்ளது என ரிப்போர்ட்-ஐ இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.
தென்னிந்தியாவில் தமிழ்நாடு தான் கெத்து.. அப்போ கர்நாடகா..? RBI வெளியிட்ட ரிப்போர்ட்..!
இந்திய ரிசர்வ் வங்கி தென்னிந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் 2023 ஆம் நிதியாண்டில் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வுகள் அடிப்படையில் GSDP தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. GSDP என்பது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அல்லது மாநில வருமானம் - இது ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கான மிக முக்கியமான அளவுகோளாக உள்ளது.
சட்டவிரோதமான 221 கடன் செயலிகள முடக்கம் ... 'சைபர் கிரைம்' போலீசார்
மாலை மலர் : சென்னை :சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை 'சைபர் கிரைம்' போலீசார் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரையில் 'பேஸ்புக்', 'இன்ஸ்ட்ராகிராம்', 'டுவிட்டர்', 'யூடியூப்' போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து 40 சட்டவிரோத பதிவு கள், கருத்துகள் 'சைபர் கிரைம்' போலீசார் நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் முக்கிய பிரமுகர்கள் பற்றி 386 அவதூறு 'வீடியோ' பதிவுகள் இருப்பதை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த 'வீடியோ' பதிவுகளை முடக்க வேண்டும் என்று 'யூடியூப்' நிறுவனத்துக்கு 'சைபர் கிரைம்' போலீசார் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பி உள்ளனர்.
வெள்ளி, 5 மே, 2023
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய அதிகாரி Pradeep Kurulkar கைது
மாலை மலர் : புனே புனேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) பணியாற்றி வரும் விஞ்ஞானி ஒருவர், பாகிஸ்தான் ஏஜெண்டுகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் செய்யப்பட்டுள்ளார்.
அவர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்டுடன், வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பில் இருந்திருக்கலாம் என பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தன்னிடம் உள்ள ரகசியங்கள் எதிரி நாட்டுக்கு கிடைத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிந்திருந்தும், அந்த விஞ்ஞானி, தனது பதவியை தவறாக பயன்படுத்தி, தகவல்களை எதிரி நாட்டுக்கு வழங்கி உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனை அருகே செவிலியர் உயிரோடு எரித்து கொலை- கணவர் போலீசில் சரண்
மாலை மலர் : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.
இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இவர்கள் குடும்பத்துடன் பாளையங்கோட்டை அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வந்தனர்.
நேற்று காலை அய்யம்மாள் வழக்கம்போல் பணிக்கு சென்றார். இரவு 7 மணியளவில் பணி முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்.
அவரை கணவர் பாலசுப்பிரமணியன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
வியாழன், 4 மே, 2023
இருளை விரட்டிய 2 ஆண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது..” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரின் மடல் !
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
பத்தாண்டுகால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம் விடியல் தருவோம் என்ற நம்பிக்கையுடன்,
தமிழ்நாட்டு மக்கள் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை தந்து,
ஆட்சி செய்வதற்கான அனுமதியை வழங்கினார்கள்.
ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து,
அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7-ஆம் நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
ஷேர் ஆட்டோ- அரசு பேருந்து நேருக்குநேர் மோதி விபத்து: 6 பேர் பலி
சென்னையில் இருந்து இன்று பிற்பகல் புதுச்சேரி நோக்கி அரசு விரைவு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதேசமயம் கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி பயணிகளுடன் ஷேர் ஆட்டோ வந்துகொண்டிருந்தது.
மாமல்லபுரம் அருகே மணமை என்ற இடத்தில் வந்தபோது, அதிவேகத்தில் வந்த அரசு பேருந்து, ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ஆட்டோ முற்றிலும் சிதைந்தது. அதில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் .maalaimalar
இலங்கையில் தமிழ் மஹாயான பௌத்த அடையாளங்கள் சிங்கள தேரவாத பௌத்த அடையாளங்கள் ஆகிறது?
Thanam Vettivelu : நண்பா்களே! இன்று 03.05.2023 புதன் கிழமையன்று உடுவிலின் ”சித்தாவத்தை” என்ற இடத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோயிலின் (இன்று மீனாட்சி சுந்தரேசர் கோயில் என அழைக்கப்படுவது) ஒன்பதாவது திருவிழாவான சப்பறத் திருவிழா ஆகும்.
இந்தக் கோயிலானது உடுவில் பெரு வயலின் தெற்கு நடுப்பகுதியில் அமைந்துள்ளது.
உடுவில் பெரு வயலைச் சுற்றி அமைந்துள்ள உடுவில், கந்தரோடை, கொத்தியவத்தை, சுண்ணாகம் என்ற இடங்களில் மஹாயாண பௌத்தத்தை மக்கள் பண்டைக் காலத்தில் தழுவி வந்திருந்த நிலையில், இவ்விடங்களில் 7 -8 அடி உயரமுடைய புத்தர் சிலைகள், சிறிய தகோபாக்களின் கூட்டம், பண்டைய பலவகைப்பட்ட நாணயங்கள், சிறு சிலைகள், பிராமி எழுத்து மட்பாண்டங்கள், மணிகள், ஏனையவைகள் என மஹாயாண பௌத்த எச்சங்கள் 1917 முதல் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
திமுக அமைச்சரவையில் 4 பேருக்கு கட்சிப்பணி? துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு வாய்ப்பு?
tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து 4 சீனியர்கள் நீக்கப்படலாம், துணை முதல்வர் பதவி கொண்டு வரப்படலாம் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.
Is CM Stalin planning for a debuty chief minister post and What are the 4 changes expected in cabinet?
முக்கியமாக அமைச்சரவை மாற்றம் பற்றி இதில் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இந்த அமைச்சரவை கூட்டம் நடக்க முதல் காரணம், முதல்வர் ஸ்டாலின் கைக்கு சென்று இருக்கும் பர்பார்மன்ஸ் ரிப்போர்ட். பொதுவாக அமைச்சர்களின் செயல்பாடுகள், குறைகள் பற்றி ரிப்போர்ட் முதல்வர் கைக்கு குறிப்பிட்ட மாத இடைவெளியில் செல்வது வழக்கம். எல்லா மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ளது.
ஐடி சோதனையில் ரூ.3.50 கோடி பறிமுதலா?: ஜி ஸ்கொயர் விளக்கம்!
மின்னம்பலம் - Kavi : ஜி ஸ்கொயருக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தின் முன்னணி ரியஸ் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயரின் சொத்து மதிப்பு 38 ஆயிரம் கோடி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிறுவனத்துக்காக நில அப்ரூவலுக்கான விதிகள் திருத்தப்படுவதாகவும்,
ஜி ஸ்கொயர் பெயர் வெளியே வந்ததால் புதிதாக 6 நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும், அதன் இயக்குநராக முதல்வரின் மகள், மருமகன் உள்ளனர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஜி ஸ்கொயருக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில், 6 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
லண்டன் சிவன் கோவில் ஐயருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு!
தேசம் நெட் - அருண்மொழி : லண்டன் லூசியம் சிவன் கோவில் ஐயருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு ஏப்ரல் 28 வூல்விச் கிரவுன் கோட்டில் விசாரணைக்கு வந்துள்ளது.
இவ்வழக்கில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட சிசிரிவி பதிவு தெளிவானதாக இல்லாமல் இருந்ததால் சாட்சியங்களை பலப்படுத்தி வருவதற்காக இவ்வழக்கு இன்னுமொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது பற்றித் தேசம்நெற் க்குத் தெரியவருவதாவதுஇ லூசியம் சிவன் கோவில் மடப்பள்ளி ஐயர் இராமச்சந்திரசர்மா சிறிதரசர்மாஇ லூசியம் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் 273 பஸ்ஸில் தகாதமுறையில் நடந்துகொண்டார் என்ற அடிப்படையிலேயே வழக்கு நடைபெறுகின்றது. இவ்வழக்கு மீண்டும் மே நடுப்பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றது.
மடப்பள்ளி ஐயர் இராமச்சந்திர சர்மாஇ சில சமயங்களில் பூசைகளிலும் ஈடுபடுபவர்.
புதன், 3 மே, 2023
Manobala ஒரு நாளைக்கு 200 சிகரெட்.. மனோபாலாவுக்கு கல்லீரல் பாதிப்படைய காரணமே இதுதானா?
tamil.filmibeat.com - Mari S : சென்னை: நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோபாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நலக்குறைவால் மே 3ம் தேதி காலமானார்.
வெறும் 69 வயதிலேயே மனோபாலா உயிரிழந்தது அவரது குருநாதர் பாரதிராஜாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்துக்கே பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
கர்நாடக .. காங்கிரஸ் சித்தராமையா மீண்டும் முதலமைச்சராகிறார் .. அறுதி பெரும்பான்மையுடன் ..
மாலைமலர் : பெங்களூர - கர்நாடகாவில் வருகிற மே 10-ந் தேதி வாக்குப்பதிவும், மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை கைப்பற்றும்.
இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு உள்ளன. அதன்படி பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் வெற்றி பெறும் என்றே தெரிவிக்கின்றன.
அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியும் சி.எஸ்.டி.எஸ். நிறுவனமும் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தி இருக்கின்றன.
கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் ஏப்ரல் 28-ந் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
இயக்குனர் மனோபாலா காலமானார் .. புகழ் பெற்ற நடிகரும் இயக்குனருமான
மாலைமலர் : பிரபல நடிகரும், இயக்குநருமான மனோ பாலா உடல்நலக்குறைவால் தனது 69 வயதில் இன்று (03) காலமானார்.
கல்லீரல் பாதிப்பால் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
40 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சி தொடர்கள் 3 தொலைக்காட்சி படங்கள் உள்ளிட்டவற்றை அவர் இயக்கி உள்ளதுடன் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் கம்ல்ஹாசனின் பரிந்துரையால் 1979ஆம் ஆண்டு ’புதியவார்புகள்’ படத்தில் இயக்குநர் பாரதி ராஜாவின் உதவியாளராக தனது திரை வாழ்கையை மனோபாலா தொடங்கினார்.
1982ஆம் ஆண்டு முதல் இயக்குநரான மனோ பாலா, ஆகாய கங்கை- (1982),
நான் உங்கள் ரசிகன்- (1985),
பிள்ளைநிலா- (1985),
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்புதல்
Hindu Tamil : சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கேட்டர்பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா, பட்ஜெட் அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழக பொருளாதாரத்தை வரும் 2030-ல் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வரும் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த முடிவெடுத்து,
பஞ்சாப் அரசின் புதிய அலுவலக நேரம் காலை 7.30 மணி - மதியம் 2 மணிவரை
மாலை மலர் : பஞ்சாப் மாநில அரசின் புதிய அலுவலக நேரம் நேற்று (மே, 2ம் தேதி) முதல் செயல்பட தொடங்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு அலுவலக நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.
பொதுவாக பஞ்சாப் மாநில அரசுத் துறைகளின் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில்,
நேற்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 2 மணிவரை செயல்பட்டன.
இந்த புதிய அலுவலக நேரம் ஜூலை 15ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மாநில அரசு ஊழியர்கள் உள்பட பலருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் நடைபெறும் ஜி20 செயற்குழு கூட்டம் Srinagar G20 summit:
மாலை மலர் : இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜி20 அமைப்பின் செயற்குழு கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
ஆனால், சமீபத்தில் பூஞ்ச் பகுதியில் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு,
5 துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து,
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்யலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
செவ்வாய், 2 மே, 2023
PTR ஆடியோ விவகாரம் : மட்டமான அரசியல்.. அண்ணாமலைக்கு தரமான பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Kalaignar Seithigal - Prem Kumar தமிழ்நாட்டில் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள முட்டிமோதும் நிலைமைக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தள்ளப்பட்டுள்ளார்.
குறிப்பாக, பா.ஜ.க மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை ஊடகங்களில் தன்னுடையே பெயர் எப்படியாவது வரவேண்டும் என்பதற்காக தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதையே தனது உத்தியாக கடைபிடித்து வருகிறார்.
ஐ.ஏ.எஸ் வரை படித்து பட்டம் பெற்ற அண்ணாமலை, தான் பேசுவதில் துளியும் உண்மை இல்லை என்பதை தெரிந்தும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி, ஊடகங்களில் பிரபலமானார்.
தமிழ்நாடு அரசு பல சிறப்புத் திட்டங்களை கொண்டுவந்தாலும் எதையாவது பேசி, தன்னுடையே இருப்பை காட்டிக்கொள்ள அற்ப அரசியலை மேற்கொள்ளும் நபராக அண்ணாமலை இருக்கிறார் என்ற எண்ணம் சொந்தக் கட்சிக்காரர்களிடமே உள்ளது.
வரம்பு மீறி பேசும் அநாகரிக அண்ணாமலை.. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு” : சீறும் பத்திரிகையாளர் சங்கம்!
Kalaignar Seithigal - Prem Kumar : தமிழ்நாடு அண்ணாமலையின் பேச்சுக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியும்"" - (இப்படி நாம் கூறவில்லை; திருப்பூரில் அவரது கட்சிக்காரர்களே சூட்டியபட்டமிது!) புதிதாக தலைமைப் பொறுப்பை ஏற்று தமிழக பா.ஜ.க.வுக்கு வந்ததிலிருந்து, அண்ணாமலை நடத்தி வரும் அரைவேக்காட்டுதன அரசியலைக் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது, தமிழக அரசையும், கழகத்தையும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவரின் அரசியல் அரை வேக்காட்டுத் தனத்தால், பா.ஜ.கவினரை வெளியே தலைகாட்ட முடியாது நிலைக்கு தள்ளியிருக்கிறது.
பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் திமுக வழக்கு தொடுக்காது.. தனிப்பட்ட விவகாரம்": டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!
tamil.oneindia.com - Vignesh Selvaraj சென்னை : "ஆடியோ விவகாரம் தனிப்பட்ட விவகாரம் என்பதால் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வழக்கு தொடுக்க வேண்டும், திமுக வழக்கு தொடுக்காது எனத் தெரிவித்துள்ளார் திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பேசுவதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தீயாகப் பரவியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது முன்னோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை விட இந்த 2 ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் சம்பாதித்து விட்டதாக பிடிஆர் பேசுவது போன்ற ஒரு ஆடியோவை அண்ணாமலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கேள்வி எழுப்பினார்.
திங்கள், 1 மே, 2023
பிடிஆர் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டும் அதை பிடிஆர் ஏற்கவில்லை?
மின்னம்பலம் 0 ஆரா : ஸ்டாலினை சந்தித்த பிடிஆர்: ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (மே 1) நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தித்துள்ளார். நாளை மே 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நிதியமைச்சர் பிடிஆர் பேசியதாக கடந்த ஏப்ரல் 19, 25 ஆகிய தேதிகளில் வெளியான ஆடியோக்கள் திமுகவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
அந்த ஆடியோவில் உதயநிதி, சபரீசன் ஆகியோர் பற்றிய சர்ச்சைக்குரிய உரையாடல்கள் இருந்தன.
இந்த இரு ஆடியோக்களையும் பிடிஆர் திட்டவட்டமாக மறுத்தார். தொழில்நுட்ப ரீதியாக செய்யப்பட்ட மோசடி என்றும் அவர் விளக்கம் கொடுத்தார்.
பிடிஆர் குறித்த ஆடியோக்களை மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜகவினர் ஆளுநரை சந்தித்து முறையிட்டனர்.
தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைக்கும் நோக்கம் இல்லை- வைகோ பேட்டி
மாலைமலர் : சென்னை: தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி சில நாட்களுக்கு முன்பு வைகோவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த கடிதம் ம.தி.மு.க.வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தாயகத்தில் இன்று நடந்த மேதின நிகழ்ச்சியில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:-
தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைக்கும் நோக்கம் இல்லை. திருப்பூர் துரைசாமியின் இணைப்பு கோரிக்கையை நிராகரிக்கிறோம்.
இனிமேல் அவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்.
2 வருடங்களாக கட்சிக்கு வராமல் தற்போது அறிக்கை விடுத்திருப்பது எந்த நோக்கத்துடன் இருக்கும்? ம.தி.மு.க.வினர் வற்புறுத்தியதால்தான் என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வந்தார். ஜனநாயக முறைப்படி கட்சியில் அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்
ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு தீ வைத்த விவகாரம் – ஜெ. ஸ்ரீ ரங்காவுக்கும் தொடர்பு ?
தேசம் நெட் -அருண்மொழி : ;ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயரிட்டுள்ளனர்.
இதனால், ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேசமயம், கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை .. .. பாஜக, ஜனதா தளத்தை அலறவிடும் புது கருத்து கணிப்பு
tamil.oneindia.com - Nantha Kumar R :; பெங்களூர்: மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட கூடுதலாக வரலாற்று வெற்றியை பெறலாம் எனவும், பாஜக பெரிய அளவில் சறுக்கலை சந்திக்கும் எனவும் தற்போது புதிய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்தி கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஞாயிறு, 30 ஏப்ரல், 2023
திமுக- மதிமுக இணைப்பு: துரை வைகோ பதிலால் கடுப்பான துரைசாமி
மின்னம்பலம் - christopher : மதிமுகவை, திமுகவுடன் இணைத்து விடலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு அக்கட்சியின் அவைத் தலைவர் துரைசாமி கடிதம் எழுதினார். இந்நிலையில்,
மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ திமுக-மதிமுக இணைப்பில் உடன்பாடில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, நேற்று (ஏப்ரல் 29) வைகோவுக்கு எழுதிய கடிதத்தில்,
மகனை ஆதரித்து அரவணைப்பதும்,
தங்களின் சந்தர்ப்பவாத அரசியலும் தமிழ்நாடு மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதை தாங்கள் இன்னமும் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது.” என்று அவர் தெரிவித்தார்.
டிஆர்பி ராஜா VS அண்ணாதுரை.. அடுத்த அமைச்சர் யார்? டெல்டாவில் போட்டி - “அந்த” 2 அமைச்சர்கள் நீக்கமா?
tamil.oneindia.com Noorul Ahamed Jahaber Ali ; சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில்,
அதில் 2 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு புதியவர்கள் இருவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் அவர்கள்? விரிவாக பார்ப்போம்.
வரும் மே 7 ஆம் தேதியுடன், முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆட்சியமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3 வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்படுவது மட்டுமின்றி, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும், சிலர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி ரணிலின் கோரிக்கையை ஏற்று பொதுநலவாய நாடுகளின் மாநாடு மூடி சூட்டு விழாவிற்கு முதல்நாள் ...
hirunews.lk : பொதுநலவாய பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்கொட்லாண்ட் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து,
அரசர் மூன்றாம் சார்லஸ் தனது முடிசூட்டு விழாவுக்கு முதல் நாளான மே 5 ஆம் திகதி பொதுநலவாய தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களின் சிறப்புக் கூட்டத்தை நடத்த உள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க அண்மையில், ஸ்கொட்லாண்டுக்கு எழுதிய கடிதத்தில்,
பொதுநலவாயத்தின் புதிய தலைவராக சார்லஸ் மன்னன் அரியணை ஏறியதன் மூலம்,
பலமான பொதுநலவாயத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை நோக்கிய எதிர்காலக் கண்ணோட்டம் தொடர்பில் ஆழமான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஒரிஜினல் ஆடியோவும் உள்ளது- அண்ணாமலை பேட்டி
மாலைமலர் : சென்னை நடுக்குப்பத்தில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மன நிலையை வாக்குகளாக மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க.வும் உள்ளது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை கைப்பற்றுவதுதான் எங்கள் இலக்கு.
தி.மு.க.வினர் மீது நான் சொத்துப் பட்டியல் வெளியிட்டதற்காக கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
கலைஞர் டிவியும் நானும்: கனிமொழி
கலைஞர் செய்திகள் - Selvam : சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ஆம் தேதி திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை அண்ணாமலை சுமத்தியதாக ரூ.1 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.