சனி, 15 மார்ச், 2025

இதுதான் தமிழ்நாட்டின் இருமொழி கொள்கை” - - Bar Association 160-வது விழாவில் நீதிபதிகளின் பேச்சு

 கலைஞர் செய்திகள்  : Bar Association 160-வது விழாவில் நீதிபதிகளின் பேச்சு: “இதுதான் தமிழ்நாட்டின் இருமொழி கொள்கை” - முதல்வர்!
நமது திராவிட மாடல் அரசு, அரசியல் சாசனத்தின் வார்த்தைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. - சென்னை பார் அசோசியேசன் 160-வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Bar Association 160-வது விழாவில் நீதிபதிகளின் பேச்சு: “இதுதான் தமிழ்நாட்டின் இருமொழி கொள்கை” - முதல்வர்!
KL Reshma

இலங்கை தமிழ் பௌத்தர்கள் பற்றிய முக்கிய கட்டுரை இது!

May be an image of temple
May be an image of text
ராதா மனோகர் : இலங்கையில் வாழ்ந்த தமிழ் பௌத்தர்கள் பற்றிய முக்கிய கட்டுரை இது!
கழுவேற்றிகளின் பௌத்த சமண இனவழிப்புக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ் பௌத்தர்களின் பல அடையாளங்கள் இலங்கையில் உள்ளன!
இந்த வகையில் பருத்தி துறையில் உள்ள வல்லிபுர ஆழ்வார் கோயில் பௌத்தர் சிலை பற்றி முன்பே பதிவிட்டிருந்தேன். அது பற்றி பலரும் ஏற்கனவே எழுதியுள்ளார்கள்.
தென்னிந்தியாவில் பார்ப்பன ஆக்கிரமிப்பினால் அடியோடு துடைத்தெறியப்பட்ட பௌத்த சமண சமயங்கள் தற்போது மீழெழுச்சி கண்டு வருகின்றன!
அந்த கோணத்தில்தான் இலங்கை பௌத்ததையும் நோக்க வேண்டும்
12 நூற்றாண்டுவரை  கழுவேற்றிகளின் படையெடுப்புக்கள் தமிழ் பௌத்தர்களை துரத்தி கொண்டே வந்துள்ளது.
12 ஆம் நூற்றாண்டில்  நிசங்க மல்லா  அல்லது கீர்த்தி நிசங்க  (இலங்கை - பொலநறுவை கி.பி. 1187–1196 வரை 9 ஆண்டு கால ஆட்சி) மன்னர்  காலத்தில்தான்  இன்றைய சிங்கள மொழியினை ஆக்கம் இடம்பெற்றது!

தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் பட்ஜெட் : திமுக கூட்டணி தலைவர்கள் வரவேற்பு!

Tamil Nadu Budget 2025 key features

 மின்னம்பலம் : 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். leaders reaction on tn budget 25-26
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை!
மும்மொழித் திட்டத்தை ஏற்கவில்லை என்றால் பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தாலும், இன்றைய நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ரூபாய் 46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூபாய் 2152 கோடி, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்காக ரூபாய் 2,000 கோடி ஒன்றிய அரசு வழங்க மறுத்த நிலையில், பள்ளிகளின் செயல்பாட்டிற்கு மாநில அரசின் சொந்த நிதியிலிருந்தே நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு முதலமைச்சருக்கு இருக்கிற கொள்கை பற்றை வெளிப்படுத்துகிறது.

வெள்ளி, 14 மார்ச், 2025

தமிழக பட்ஜெட் - சென்னைக்கு அருகில் புதிய நகரம்! தங்கம் தென்னரசு அறிவிப்பு!

 தினமலர் :  சென்னை: சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொல்லியல் ஆய்வுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபை இன்று (மார்ச் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், 'இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழகம். பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாமல் வழி நடத்துவோம்' என்றார்.

தமிழக மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம் இலங்கை, மீனவர்கள்

BBC :  தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்னை வலுப் பெற்றுள்ள பின்னணியில், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை தரப்பு முன்னெடுத்துள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை(மார்ச் 14) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 15) நடைபெற உள்ளது.
இந்த நிலைமையில், இந்த முறை நடைபெறுகின்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தில் தாம் பங்கேற்க போவதில்லை என யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தை கண்டித்து இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நட்குணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சு வெங்கடேசன் MP: ஹிந்தியா அல்ல இந்தியா! இந்தித் திணிப்பை எதிர்த்தால் தான்இந்தியா பலப்படும்

 Su Venkatesan MP :  பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும் , பகுத்தறிவும் கொண்ட தமிழ்சமூகம் உங்களுக்குப் பாடம் புகட்டும்
ஒன்றிய நிதிமானியக் கோரிக்கையில் எனது உரை ;
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே ,
வணக்கம் .
எனக்கு முன்னால் குறுக்கீடு செய்து பேசிய மாண்புமிகு அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் இந்தியை எதிர்த்தால் அது இந்தியாவை எதிர்ப்பது என்று அவர் கூறினார். இந்தித் திணிப்பை எதிர்த்தால் தான் அது இந்தியாவைப் பலப்படுத்துவது என்பதை அமைச்சருக்கு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

ரூ விவகாரம்: பேரினவாதம் என தமிழக அரசு மீது நிர்மலா ஆவேசம்!

 tamil.asianetnews.com - Balasubramanian Krishnan : தமிழக அரசின் பட்ஜெட் ஆவணங்களில் '₹'என்ற குறியீட்டுக்கு பதில் ரூ.  என்று குறிப்பிடப்பட்டதற்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஆபத்தான மனநிலை; பிராந்திய பேரினவாதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்டிருப்பதாவது:  தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான '₹' ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது.
திமுகவிற்கு உண்மையிலேயே '₹' உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக  இருந்தபோது, ​​இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே. அப்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

வியாழன், 13 மார்ச், 2025

ஹோலியை முன்னிட்டு தார்பாய்களால் மூடப்படும் மசூதிகள் : வட மாநிலங்களில் அட்டாவடி

 மின்னம்பலம் - Kavi : ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டு வருகின்றன. Mosques covered with tarpaulins
நாடு முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ரமலான் மாதத்தின் இரண்டாம் வெள்ளிக் கிழமை அன்று ஹோலி பண்டிகை வருகிறது.
அதாவது ஹோலியும், முஸ்லீம்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையான ரமலான் வெள்ளி தொழுகையும் ஒரே நாளில் வருகிறது.

‘ரூ’ தமிழ் எழுத்து - தமிழக அரசின் பட்ஜெட் இலச்சினையில் ₹ குறியீட்டுக்கு பதிலாக இனி "ரூ "

May be an illustration of map and text that says 'ரூ.'

hindutamil.in  : தமிழ்நாடு  அரசின் பட்ஜெட் இலச்சினையில் ₹ குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’ தமிழ் எழுத்து!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பான இலச்சினையில், தமிழ் எழுத்தான ‘ரூ’ இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது.

திமுகவில் தொகுதி பங்கீடு ஆரம்பம் - யாருக்கு எத்தனை?

 மின்னம்பலம் -  Aara  ;  “சட்டமன்ற தேர்தலுக்கு திமுக இப்போதே தயாராகிவிட்டது.
 மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிப்ரவரி 15ஆம் தேதி காசியில் கொடுத்த பேட்டி, அதற்குப் பிறகு மார்ச் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சு இவை எல்லாம் திமுகவுக்கு மாநில உரிமைக்கான போராட்ட ஆயுதமாக மட்டுமல்ல… அரசியல் ஆயுதமாகவும் பயன்பட்டு வருகின்றது.
இந்த வகையில் தொகுதி மறு சீரமைப்பு விஷயத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை கண்டித்தும், கல்வி நிதி உட்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசால் நிதி வழங்கப்படாததை கண்டித்தும், மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயல்வதை கண்டித்தும் தொடர்ந்து திமுக பொதுக்கூட்டங்களையும் அரங்க கூட்டங்களையும் நடத்தி வருகிறது.

அந்த வகையில்தான் இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளார். dmk election incharge appoint

புதன், 12 மார்ச், 2025

சிலை கடத்தலை விசாரித்த பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு! சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

 Hindu Tamil : மதுரை: நீதிமன்ற உத்தரவுபடி சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த ஐஜி பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அனுமதி பெறாமல் வழக்குப் பதிவு செய்தது எப்படி? என சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொன்.மாணிக்கவேல். சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி தீனதயாளனை தப்பிக்க வைக்க உதவியது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐ-க்கு உத்தரவிடக்கோரி அதே பிரிவில் டி.எஸ்.பியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காதர்பாட்ஷா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

ஆரிய ஹிந்தி உருது காலனியின் அடிமையாக இருப்பதை உணராத வடஇந்திய மக்கள்

 ராதா மனோகர் : இப்போதெல்லாம் நான் சந்திக்கும் ஹிந்திக்காரர்களிடம்  உங்கள் தாய் மொழி எது?
மூதாதையர் மொழி எது?
என்றெல்லாம்   கொஞ்சம் துருவி துருவி கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்!
பதிலுக்கு அவர்கள் ஏராளமான மொழிகளின் பெயர்களை வரிசையாக சொல்கிறார்கள்!
நீங்களும் கேட்டு பாருங்கள்!  வியந்து போவீர்கள்!
முந்தா நாள்கூட ஒரு ஹிந்திக்காரரிடம் மெதுவாக தொடங்கினேன்.
(அவரின் பெயர் விகாஸ்)
அவர்  தன் அப்பாவின் அம்மா ஒரு மொழி அப்பாவின் அப்பா வேறு ஒரு மொழி,
தன் அம்மாவின் அப்பாவும் அம்மாவும் கூட வேறு வேறு மொழிகள் என்று என்னென்னவோ மொழிகளின் பெயரை எல்லாம் சந்தோஷமாக அடுக்கினார்.
நான் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன்.
அவர் கூறிய பல மொழிகள் அல்லது வெறும் டயலாக்குகள் எல்லாம் எனக்கு புதிதாக இருந்தன.
ஒரு வேளை அவர் அவற்றை உச்சரித்த பாணி கொஞ்சம் திரிபடைந்து இருக்கலாம்.

செவ்வாய், 11 மார்ச், 2025

பெங்களூரில் 14 மணி நேர வேலை கட்டாயமா? கொந்தளிக்கும் ஐடி ஊழியர்கள்! தீவிரமாகும் போராட்டம்.!!

 tamil.goodreturns.in -Vignesh Rathinasamy :  பெங்களூரு, இந்தியாவின் மிகப்பெரிய ஐடி மையமாக விளங்குகிறது. பல்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இங்குள்ளது.
மேலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இத்துறையில் வேலை செய்கின்றனர்.
ஆனால், வேலை நேர கடுமை, கூடுதல் வேலைச் சுமை மற்றும் இதனால் ஏற்படும் உடல் நல குறைவு, மன அழுத்தம் ஆகியவை ஊழியர்களை கடுமையாக பாதிக்கின்றன.
அதே நேரத்தில், கர்நாடக அரசு "கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961" திருத்தம் மூலம், தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரமாக உயர்த்தும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

பீஹார் வங்கியில் கொள்ளை! துப்பாக்கியோடு நகைக்கடையில் நுழைந்த இளைஞர்கள் . 90 வினாடிகளில் மொத்தமாக கொள்ளை

 tamil.abplive.com - சுதர்சன் :  பீகார் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. வங்கியில் நுழைந்த இரண்டு சிறார்கள், 90 வினாடிகளில் 1.5 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறி இருக்கின்றனர்.
பீீகாரில் முகமூடி அணிந்து வங்கியில் நுழைந்த இரண்டு சிறார்கள், 90 வினாடிகளில் 1.5 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு, சாந்தமாக அங்கிருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் என்கவுண்டர் நடந்த ஒரு சில நாள்களிலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தி திணிப்பு.. தலைப்பு செய்தியான திமுக! DMK Hindi Imposition home ministry

 tamil.oneindia.com - Rajkumar R : டெல்லி: மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயல்வதாக நாடாளுமன்றத்தில் இன்று திமுக எம்பிக்கள் அனல் பறக்க பேசியது தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஊடகங்களிலும் இரு தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. இது ஒரு புறம் இருக்க இந்துமொழியை குறிப்பிட்ட தக்க வகையில் முன்னெடுத்துச் சென்றதற்காகவும் அலுவல் மொழிக் கொள்கையை திறம்பட செயல்படுத்தியதாக உள்துறை அமைச்சகத்தை நாடாளுமன்ற நிலை குழு பாராட்டி உள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் கட்ட அமர்வு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது திமுக எம்பிகள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசினர். குறிப்பாக கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்காது என பேசினார்.

திராவிடம் Vs ஆரியம் - 25 குறிப்புகள்

 புகச்சோவ் புகச்சோவ் :  ஒழுங்கீன விலங்குகளுக்கே முன்னோடிகள், நீங்களே! இந்தியைத்திணிக்கும் நீங்களே!
1, ஐந்து பேருக்கு ஒரு பொண்டாட்டி என்பது, எங்கள் நாகரிகமில்லை!
2, காட்டுமானை புணர்ந்ததை மறைக்க, மான் குட்டிபோட்டதாக கதையெழுதுவது எங்கள் நாகரிகமில்லை!
3, குரங்குடன் புணர்ந்ததை மறைக்க அஞ்சனை, ரிஷிசிரவசு, அனுமனென்னு பாத்திரங்கள் படைப்பது எங்கள் நாகரிகமில்லை!
4, சுய இன்பம் செய்து ஆற்றில் விட்டதை மறைக்க, மச்சகந்தி கதை புனைவது எங்கள் நாகரிகமில்லை!
5,  கள்ள உறவில் குழந்தை பெறுவதும், அதைமறைக்க பாயாசம் தின்று கர்ப்பமுற்றதாய் கதை எழுதுவதும், எங்கள் நாகரிகமில்லை!
6, அத்தையை, மாமிகளை காதல் செய்வது எங்கள் நாகரிகமில்லை!
7, குளத்தில் நிர்வாணமாய் குளிக்கிற பெண்களை, ஆடைகளை திருடிவைத்து, பலான சீன் பார்ப்பது எங்கள் நாகரிகமில்லை!
8, விதவைகளை பொதுவெளியில் புணரும் வாஜபேய யாகம்செய்வது எங்கள் நாகரிகமில்லை!
9, கடவுள் வேஷம்போட்டு, ரிஷிகளின் பொண்டாட்டிகளை புணர்வது எங்கள் நாகரிகமில்லை!

திங்கள், 10 மார்ச், 2025

Chennai மெட்ரோ - போரூர் - பூந்​தமல்லி உயர்​மட்ட கடைசி பாலத்​தின் கட்​டு​மான பணி நிறைவு

 hindutamil.in : சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் போரூர் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்டப் பாதையில், கடைசி பாலத்தின் கட்டுமானப்பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைகிறது.

பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க : . இலங்கையில் யாழ் தேஷ் இற்கு இடமில்லை - அர்ச்சுனா ராமநாதன்

May be an image of 1 person
May be an image of 1 person

ராதா மனோகர் ; யாழ் தேஷ் - பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க - அர்ச்சுனா ராமநாதன்
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தேசிய தலைவர் போராட்டம் தியாகம்  தமிழ் என்று ஓயாது கரகாக்கும் அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் தன்னையும் அறியாமல் ஒரு வரலாற்று உண்மையை  படீரென்று போட்டுடைத்துள்ளார்!
தெரிந்தோ தெரியாமலோ உண்மையை கூறியதற்கு நன்றி
ஒரு ப்ளஸ் பேக் : 1971 இல் பங்களாதேஷ் தேசம் சுதந்திரம் பெற்றது!
அதை யாழ்ப்பாணத்தில் கொண்டாடும் முகாமாக தமிழரசு கட்சி ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது!.
அந்த வேளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்  அன்றைய பொதுநிர்வாக உள்நாட்டு உள்ளூராய்ச்சி நிதி நீதி அமைச்சராக இருந்த திரு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அவர்கள்.

லண்டனில் சிம்பொனி இசையில் லயிக்க வைத்து.. நாடு திரும்பும் இளையராஜா! அரசு சார்பில் நாளை வரவேற்பு

 tamil.oneindia.com - Mani Singh S: லண்டன்: இசை ஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்திருக்கிறார். உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து இசை மழையில் ரசிகர்களை நனையவைத்தார்.
தமிழகத்தை பொருத்தவரை முதன்முதலில் சிம்பொனியை இசைத்தவர் இளையராஜாதான். தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஆசிய கண்டத்திலேயே முதலில் சிம்பொனியை எழுதி அதை அரங்கேற்றம் செய்தவர் என்ற பெருமையை இளையராஜா பெற்று இருக்கிறார்.
இளையராஜா நாளை விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இன்று உலகம் முழுவதும் இசையால் போற்றப்பட்டு கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா

 ராதா மனோகர் : இன்று உலகம் முழுவதும் இசையால் போற்றப்பட்டு கொண்டிருக்கும் திரு இளையராஜா அவர்கள் நம் மண்ணின் பெருமைக்கு உரிய சொத்து!
கலைஞரால் இசைஞானி போற்றப்பட்ட இளையராஜா அவர்கள்  இசை தவிர்ந்த வேறு விடயங்களில் ஒரு வகை அப்பாவி!
இவர் மட்டுமல்ல இசை மேதைகளான கே வி மஹாதேவன் எம் எஸ் விசுவநாதன்  போன்றவர்களும் கூட இசையில்தான்  மேதைகள்.
 ஆனால் வேறு விடயங்களில் விபரம் குறைந்தவர்கள்தான்
கே வி மஹாதேவன் தெலுங்கிலும் தமிழிலும் கொடிகட்டி பறந்தவர்
இவரின் சாதனைகளை இன்று வரை எவரும் முறியடிக்கவில்லை!
இவர் ஏ பி நாகராஜனோடு சேர்ந்து திரைப்படங்களை தயாரித்தார்.
இவர்கள் தயாரித்த புராணப்படங்கள் வசூலில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியது