சனி, 11 நவம்பர், 2023

திமுகவை காப்பியடித்த பாஜக - மத்திய பிரதேச தேர்தல் வாக்குறுதி free education and breakfast scheme

tamil.oneindia.com - Nantha Kumar R : போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தைலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் திமுகவின் திட்டம் காப்பியடிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சமையல் எரிவாயு ரூ.450க்கு வழங்கப்படும். பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்பன உள்பட பல திட்டங்களை பாஜக அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் வரும் 17 ம் தேதி ஒரே கட்டமாக மத்திய பிரதேச மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
Madhya Pradesh Election: BJP manifesto says Gas subsidy, free education and breakfast scheme

ராஜஸ்தானில் - 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் கைது

மாலைமலர் : ஜெய்ப்பூர ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட ராகுவாஸ் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பூபேந்திர சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது போலீஸ் நிலையத்தை ஒட்டிய வீட்டில் வசிக்கும் கான்ஸ்டபிள் ஒருவரின் மகளான 4 வயது சிறுமி அங்கு விளையாட சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியை ஒரு அறைக்கு அழைத்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி திடீரென இடைநீக்கம் செய்தது ஏன்? இதன் பாதிப்பு என்ன?

BBC News, தமிழ் ரஞ்சன் அருண் பிரசாத்  :  இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்புரிமையை உடன் அமலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் தமது கடமைகளை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று கூடிய போது இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம், அரசியல் தலையீடு ஆகிய காரணங்களே சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

வெள்ளி, 10 நவம்பர், 2023

மஹூவா மொய்த்ராவை MP தகுதி நீக்கம் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துர- திடீர் வாக்கெடுப்பு!

minnambalam.com - selvam : திருணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இன்று (நவம்பர் 9) கூடிய நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதானி குழுமத்தின் கார்ப்பரேட் முறைகேடுகள், அதானிக்கும்- பிரதமர் மோடிக்குமான உறவுகள் பற்றி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக தொடர்ந்து பேசி வந்தவர் திருணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவாய் மொய்த்ரா.
அவரை சிக்க வைக்க சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த பாஜகவுக்கு எம்பிக்களின் மக்களவை லாக் இன் விவகாரம் உதவியது. அதாவது எம்.பி. மஹுவா மொய்த்ராவின் நாடாளுமன்ற இணையத் தளத்தின் லாக் இன் அணுகல், தொழிலதிபர் தர்ஷன் ஹிரா நந்தியினிடம் சென்றது எப்படி என்று பாஜக தரப்பில் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது.

ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு மனு: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

மின்னம்பலம் christopher : சட்டமன்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 ’ஏன் கோப்புகளின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார்?’ என உச்சநீதிமன்றத்திற்கு அவர் சார்பில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து வருவதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “ஆளுநர் தனது செயலற்ற தன்மையால், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் முடக்கி வைத்து, அரசு நிர்வாகத்துடன் ஒத்துழைக்காமல், விரோத போக்கை உருவாக்கி வருகிறார்.

கமலஹாசன் திமுக கூட்டணியில்? இரண்டு இடங்களை கேட்கிறாராம்!

மாலைமலர் : சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் 2018-ம் ஆண்டு கட்சியை தொடங்கிய ஓராண்டிலேயே பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார்.
அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நான்கு சதவீத வாக்குகள் கிடைத்தன.
அதன் பின்னர் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அந்த கட்சி பெற்றது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கமல்ஹாசன் இணைந்து போட்டியிட தயாராகி வருகிறார்.
இதை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில் கட்சியினருக்கு பல்வேறு கட்டளைகளை அவர் பிறப்பித்துள்ளார்.

திடீரென பிரேக் பிடித்த ஓட்டுநர் : பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தெலங்கானா முதல்வரின் மகன்

Kalaignar Seithigal - Praveen ; இந்தியா  தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கேடி ராமராவ் பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் நவம்பா் 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சந்திர சேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.
தெலங்கானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி பெரிதாக பேசப்படாத நிலையில், ராகுல் காந்தியின் யோடோ யாத்திரை தெலுங்கானாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகள் அங்கு நிலைமையை தலைக்கீழாக மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - கூடுதலாக 7.35 லட்சம் பேருக்கு ரூ.1000.. இன்றே வழங்கும் ஸ்டாலின்!

tamil.oneindia.com - Shyamsundar :  சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழா சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலும், இதர மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையிலும் இன்று நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்  கருணாநிதி வழிநின்று மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மட்டுமின்றி,
மகளிர் நலன் காக்கும் திட்டங்களையும் மிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
மகளிருக்கு அதிகாரம் வழங்கும் முயற்சியில் இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களையும், பின்னுக்கு தள்ளி முந்தி நிற்கிறது தமிழ்நாடு அரசு.

வியாழன், 9 நவம்பர், 2023

கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை: மேல் முறையீடு செய்த இந்தியா

மாலை மலர் : கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அதுதொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த 8 பேர் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் 8 பேரும் கத்தார் நாட்டின் சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்களை இஸ்ரேலுடன் பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவுத்துறையால் தோஹாவில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கைது விவரம் இந்திய அரசுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மத்தியில்தான் தெரிவிக்கப்பட்டது. அந்த 8 பேரின் குடும்பத்தினருடனும் அவர்கள் பேச வைக்கப்பட்டனர்.

கோவை: மாணவரை ராகிங் செய்த சீனியர்கள் - பாதிக்கப்பட்டவர் என்ன கூறுகிறார்?

bbc.com- ச.பிரசாந்த்  :    கோவையில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான பி.எஸ்.ஜி தனியார் பொறியியல் கல்லூரியில், ஜூனியர் மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டி விடுதியில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி மொட்டை அடித்து ‘ரேகிங்’ செய்ததாக, ஏழு மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
அந்த ஜூனியர் மாணவருக்கு என்ன நடந்தது?
கோவை பீளமேடு பகுதியில், பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் ஒருவரை, மது குடிக்க பணம் தர மறுத்ததற்காக விடுதி அறையில் கட்டி வைத்து தாக்கி, மொட்டை அடித்து, கொடூரமாக ராகிங் செய்ததாக, செப்டம்பர் 8ஆம் தேதி ஏழு மாணவர்களை பீளமேடு போலீஸார் கைது செய்தனர்.

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 6-வது நாளாக வருமான வரி சோதனை

hindutamil.in :  திருச்சி/ சென்னை/ கோவை: தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் தொடர்புடைய இடங்களில் 6-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவுடன் தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி தென்னூர் கண்ணதாசன் தெருவில் உள்ள மணப்பாறை தொழிலதிபர் சாமிநாதனின்(57) வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை சோதனை மேற்கொண்டனர்.
சாமிநாதன் மற்றும் அவரது மனைவியை அழைத்துச் சென்று, அவர்களது வங்கி லாக்கர்களிலும் சோதனை நடத்தினர்.

மஹுவா மொய்த்ரா எம்பி பதவியை பறிக்க பாஜக திட்டமிடுகிறது?

தினத்தந்தி : மஹுவா மொய்த்ரா எம்பி பதவியை பறிக்க மோடியரசு திட்டமிடுகிறது?
தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹிவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என பாஜகவின் சர்ச்சைக்குரிய எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா.
 மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவர் மஹுவா மொய்த்ரா.
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார்.
நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக மஹுவா மொய்த்ரா பேசும் அனல் பேச்சுகள் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளாலும் வரவேற்கப்பட்டு கொண்டாடப்படும்.அதே நேரத்தில் மஹுவா மொய்த்ராவை பரம எதிரியாக பாஜக எம்.பி.க்கள் எதிர்கொள்வர்.

மயில்சாமி அண்ணாதுரை : பெரியாரின் அறிவியலை நான் எப்படி பார்க்கிறேன்?


A Sivakumar :   போரூர் பிரதான சாலையின் இரண்டுபுறமும் சேர்ந்தார் போல மொத்தம் 22 வீடுகள். எல்லாமே சொந்தக்காரங்க தான். ஒட்டுமொத்த போரூரின் 70 சதவிகத நிலங்கள் இந்த 22 குடும்பங்களுக்கு சொந்தமானது தான்.
என் தந்தைக்கு ஈடான தலைமுறையில் இந்த 22 குடும்பத்துக்கும் சேர்த்தே,  
♦ ஒரே ஒரு Engineer  
♦ ஒரே ஒரு SBI Bank Employee  
♦ 2 Teachers  
♦ 4 Government Servants  
மட்டுமே இருந்தாங்க.
ஒரே ஒரு  டாக்டராே, வழக்கறிஞராே கிடையாது.
Forward Caste என்ற அடையாளமிருந்தும், சொத்துக்கும், சோத்துக்கும்  பஞ்சமில்லைன்னாலும் கல்வி பரவல் என்பது இவ்வளவு தான்.
இதே ஊரில் இருந்த OBC, SC & Women பட்டதாரிகளின் எண்ணிக்கை ZERO.

புதன், 8 நவம்பர், 2023

தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் : முதலமைச்சர் உத்தரவு!

 Kalaignar Seithigal - Lenin : தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் உரிமைகளைக் காப்பதோடு, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது வழியில் செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு, தொழிலாளர்கள் நலனை கண்ணின் இமைபோல் காத்து வருகிறது.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக்கொண்டு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமானது (TANTEA) 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

பார்ப்பனர்கள் பிடியில் இருந்து கோயில்களை மீட்கவேண்டும்! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பரபர வாதம்

 tamil.oneindia.com - Mathivanan Mara  டெல்லி: தமிழ்நாட்டு கோவில்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கவேண்டும்  என சென்னை காளிகாம்பாள் கோவில் வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான வாதத்தை முன்வைத்தது.
சென்னை காளிகாம்பாள் கோவில் நிர்வாக குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
Temples Should free from Brahmin Clutches: TN govt told Supreme Court
பரவலாக்கமே சரி: இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, கடவுள் நம்பிக்கை எனக்கும் உண்டு.
ஆனால் ஒரு பிரிவினரே கோவில்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சரி அல்ல. கோவிலுடைய நிர்வாகமும் வழிபாட்டு சுதந்திரமும் பரவலாக்கப்படுவதுதான் சரியானதாகவும் இருக்கும்.

இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுக்கு பதில் 1 லட்சம் இந்தியர்களை பணி அமர்த்த முடிவு

Maalaimalar .:டெல்அவிவ்  இஸ்ரேல்- ஹமாஸ் படை இடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதால் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேறும் படி அந்நாடு உத்தரவிட்டது.
இஸ்ரேலில் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பணியாற்றி வருகின்றனர்.
போர் தொடங்கியதும் இவர்களின் பணி உரிமத்தை இஸ்ரேல் ரத்து செய்து விட்டது.
உடனடியாக அங்கு வேலை பார்த்து வந்த பாலஸ்தீனர்கள் வெளியேறிவிட்டனர்.
இதையடுத்து வேலை வாய்ப்பு கொள்கைகளில் இஸ்ரேல் அரசு திருத்தம் கொண்டு வந்து மாற்றி அமைத்தது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. கட்டுமான பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும்,

அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன் : அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து இன்று (07) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர், “அதிமுக பொதுச்செயலாளர் என என்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளன.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார்.

பீகாரில் 65% இடஒதுக்கீடு அமைச்சரவை ஒப்புதல்.. Bihar Caste Quotas Raised To 65% விரைவில்

tamil.oneindia.com - Mani Singh S : பாட்னா: பீகாரில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு அளவை 65 சதவிகிதமாக உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் விவரங்களை சட்டப்பேரவையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று அம்மாநில சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
சாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.
பின்னர் சட்டசபையில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், பீகாரில் 60%க்கும் அதிகமாக பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். ஆகையால் அவர்களுக்கான இடஒதுக்கீடு 30%-ல் இருந்து 43% ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்தார்.

செவ்வாய், 7 நவம்பர், 2023

அமெரிக்காவில் கேரளா கணவன் மனைவி மீது காரை ஏற்றி கத்தியால் குத்தி கொலை

Accused and his wife

  Oneindia  - Hemavandhana :  நியூயார்க்: கட்டின மனைவி மீது இந்த அளவுக்கு ஒரு நபருக்கு வன்மம் இருக்குமா? ஒரு மனிதன் இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா? என்று கிலியை கிளப்பிவிட்டுள்ளார் அதிசய கணவன். அமெரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வருகிறார் பிலிப் மேத்யூ..
இவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்..
இவரது மனைவி பெயர் மெரின் ஜாய்.. இவர்களுக்கு திருமணமாகி சில வருடங்களாகிறது..
 மனைவி ஜாய், ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார்.

பல்லவர்கள் தமிழர்களா?


 மணி மணிவண்ணன் :
பல்லவர்கள் தமிழர்களா என்று ஒரு கேள்வி எழுந்திருக்கிறது.
பல்லவர்கள் தமிழர்கள் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.
அவர்கள் ஆட்சி சரிந்த பிறகு பல்லவர்கள் எங்கு போனார்கள்? என்ன மொழி பேசினார்கள்? எந்தச் சமயத்தைப் பின்பற்றினார்கள்? எந்தச் சாதியோடு மணவுறவு கொண்டார்கள்?
சரி, வேளிர்கள் தமிழர்களா?
இதென்ன கேள்வி?
பாரி, இருங்கோவேள், நன்னன், அதியமான் இவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா என்ன?
வேளிர்கள் அன்றைய துவாரகைப் பட்டினம் வீழ்ந்தவுடன் தென்னாடு நோக்கி வரத் தொடங்கினார்கள் என்று கபிலர் இருங்கோவேளைப் போற்றிப் பாடும் பாடலில் இருந்து தெரிகிறது.
சாளுக்கியர் வேளிர் மன்னர்கள். கொங்கண அரசர்கள் வேளிர். இவர்கள் குஜராத்திகளா இல்லை தமிழர்களா?
தொடக்க காலப் பல்லவர்கள் ஆந்திராவில் சாதவாகனப் பேரரசின் கீழ்ச் சிற்றரசர்களாக ஆண்டவர்கள். மெல்லத் தமிழநாட்டுக்கு வந்து காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

இலங்கை விழாவில் ஸ்டாலினின் வாழ்த்து இடம்பெறாததற்கு மத்திய அரசின் தலையீடா? தங்கம் தென்னரசு பதில்

tamil.oneindia.com - Mani Singh S : விருதுநகர்: இலங்கையில் மலையக தமிழர்களின் 200வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவின் போது,
 தமிழக முதல்வரின் வாழ்த்து செய்தி என்ன காரணத்திற்காக ஒளிபரப்பப்படவில்லை என்பது எனக்கு தெரியவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இலங்கையில் கடந்த 2ம் தேதி மலையக தமிழர்களின் 200ம் ஆண்டு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொள்வதாக இருந்தது. முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த விழாவில் தங்கம் தென்னரசு கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடைசியில் அவரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதையடுத்து விழாவில் முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து செய்தி ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டது.

திங்கள், 6 நவம்பர், 2023

கர்நாடக அதிகாரி பிரதிமா கொலை- பணி நீக்கத்தின் எதிரொலி

கொலையில் முடிந்த பணி நீக்கம் : சுங்கத்துறை பெண் அதிகாரி வழக்கில் அதிர்ச்சி திருப்பம்- கர்நாடகாவில் பகீர்!

கலைஞர் செய்திகில் -Lenin : இந்தியா  கர்நாடகாவில் பெண் அதிகாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதிமா. இவர் பெங்களூருவில் சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறையின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பணியை முடித்து விட்டு அரசு வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். பிறகு இவரது அண்ணன் பிரதீஷ், தங்கைக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

பாஜக தலையீடு... ஸ்டாலின் உரை புறக்கணிப்பு?: இலங்கை அரசு விளக்கம்!

 மின்னம்பலம் - christopher ; மலையக தமிழர்கள் விழாவில் தமிழ்நாடு முதல்வரின் உரை புறக்கணிக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் இன்று (நவம்பர் 6) விளக்கம் அளித்துள்ளார்.
மலையக தமிழர்கள் ஆங்கிலேயர்களால் இலங்கையில் குடியமர்த்தப்பட்ட 200வது ஆண்டை முன்னிட்டு “நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் 3 நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்ட தொழில் துறை மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் நடத்தியது.
மலையகத் தமிழர் விழாவில் தமிழக முதல்வரின் காணொலிக்கு தடை: இந்திய அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம் - லங்காசிறி நியூஸ்
மலையக தமிழர்களின் சார்பில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழ்நாட்டிலிருந்தும் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அதிமுக எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன் , பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ராம் மாதவ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தனியாக இருந்த சுரங்க துறை பெண் துணை இயக்குனருக்கு நேர்ந்த பயங்கரம் .. கர்நாடகா

மாலை மலர் :   கர்நாடகா மாநிலத்தின் சுரங்க மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குனராக பதவி வகித்தவர் பிரதிமா. இவர் அம்மாநிலத்தில் உள்ள சுப்ரமணியபுர காவல் எல்லைக்கு உட்பட்ட தொட்டகள்ளசண்ட்ராவில் தனது இல்லத்தில், தன் மகன் மற்றும் கணவருடன் சுமார் 8 வருடங்களாக வசித்து வந்தார்.
அவர் கணவரும், மகனும் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதியில் ஒரு வேலையாக சென்றிருந்தனர். பிரதிமாவின் கார் டிரைவர் நேற்று முன்னிரவு சுமார் 08:00 மணியளவில் அவரது பணி முடிந்ததும் அவரை வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார்.

ஞாயிறு, 5 நவம்பர், 2023

ஜி ஜி பொன்னம்பலத்தின் உரிமை குரலை ராஜாஜி ஏன் புறந்தள்ளினார்? மறைக்கப்பட்ட வரலாறு


 ராதா மனோகர் 
: மதராஸ் மாகாண முதலமைச்சர் ராஜகோபாலச்சாரி   திரு  .ஜி ஜி பொன்னம்பலத்தின்
கோரிக்கையை  ஏன்  புறந்தள்ளினார்?
மலையக வாக்குகளின் பலத்தை வைத்து பிரிட்டன் இந்தியா அமெரிக்காவுக்கு
சவால் விட்ட  இடதுசாரிகளின் வரலாறு  ஏன் இதுவரை மறைக்கப்படுகிறது?
இலங்கையில்  பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி நிலவிய காலத்தில்,
 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் சுதந்திர இயக்கம் மிகவும் தீவிரமாக வளர்ந்தது
இந்த சுதந்திர உணர்வானது 1888 இல் முதல் சுதந்திரத்திற்கான இயக்கமாக இலங்கை தேசிய சங்கம் உருவானது
இதை தொடர்ந்து 1917 இல்  சிலோன் சீர்திருத்த கழகம் உருவானது
மேற்கண்ட அமைப்புக்களின் பின்னால் 1919 டிசம்பர் 11 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் Ceylon National Congress  ஒரு அரசியல் கட்சியாக உருவானது

ஹரியானா 60 மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல்: பள்ளி முதல்வர் கைது!...

தினமணி : ஹரியாணா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 60 சிறுமிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல் செய்து, தலைமறைவாக இருந்த அப்பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி, பள்ளி முதல்வர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, 15 மாணவிகள் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு 5 பக்க கடிதம் அனுப்பியதைத்
தொடர்ந்து அக்டோபர் 31-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ மற்றும் ஐபிசி 354-வது பிரிவின் கீழ் உச்சனா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழக மருத்துவ மாணவர் ஜார்கண்ட்: மாநிலத்தில் பாதி எரிந்த சடலமாக அடையாளம் காணப்பட்டது

ஜார்கண்ட் மருத்துவ மாணவர்
ஜார்கண்ட் மருத்துவ மாணவர் மதன்குமார்

பி பி சி - நந்தினி வெள்ளைச்சாமி :  ஜார்கண்ட் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம், வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மேலகவுண்டன்பட்டியைச் சேர்ந்த 28 வயதான மதன்குமார் என்பவர், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திர இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸில் (RIMS) தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை (நவ. 2) அன்று மருத்துவமனையின் விடுதி எண் 5இன் பின்புறத்தில் பாதி எரிந்த நிலையில் மதன்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இறப்பதற்கு முன் கடைசியாக புதன்கிழமை இரவு 10 மணியளவில் விடுதியில் இருந்துள்ளார் மதன்குமார்.

“மலையகத் தமிழர்கள் வாழ்வில் உயர வழிவகை செய்தோம் !” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

கலைஞர் செய்திகள் KL Reshma :  தமிழ்நாடு  மனிதன் வாழ்ந்திராத மலைக் காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றி கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையின் நல்வாழ்வுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர் மலையகத் தமிழர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் (1823 - 2023) ஆவதை நினைவுகூரும் வகையிலும், அவர்கள் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளையும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டியும் நாம் 200' என்ற தலைப்பிலான தேசிய நிகழ்வு இன்று நடைபெற்றது.
இலங்கை மத்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டடு வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு :

திருமதி சோனியா காந்தி ஆசிரியர் கி.வீரமணிக்கு கடிதம் : பெரியார்தான் அடித்தளம்”:

May be an image of 2 people and text that says 'JUSTIN செய்திகள் தந்தை பெரியாரின் கொள்கை வழிநடத்தட்டும்! "நாடு தழுவிய சமூகநீதி இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த பிணைப்பிற்கு, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் போராடியதுதான் அடித்தளமாக அமைந்துள்ளது. மக்களை பிரித்தாளும் பிஜேபியின் கருத்தியலை முறியடிக்க தந்தை பெரியாரின் கொள்கைதான் அடித்தளமாக உள்ளது. பெரியாரின் தொலைநோக்கும், கொள்கையும் நம்மை வழிநடத்தட்டும்!" ஆசிரியர் கி.வீரமணிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம்! Kalaignar News O www.kalaignarseithigal.com 04.11.2023'

  மின்னம்பலம் - Kavi : “பெரியார்தான் அடித்தளம்”: கி.வீரமணிக்கு சோனியா காந்தி கடிதம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி சென்னையில் திமுக மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் அகில இந்திய பெண் தலைவர்கள் வந்து கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார்.
இதில் பேசிய சோனியா காந்தி, ”கடந்த 70 ஆண்டுகளில் நாம் கொண்டு வந்த உரிமைகளை பாஜக சீரழித்துவிட்டது” என்றார். தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

நேபாளம்: நிலநடுக்கம் உயிரிழப்பு 57 ஐ தாண்டுகிறது

தினத்தந்தி : காத்மாண்டு இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
 உள்ளூர் நேரப்படி இரவு 11.47 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 500 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மேற்கு மாவட்டமான ஜாஜர்கோட்டை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
காத்மாண்டு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதன்படி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் நேபாளத்தையொட்டி அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.

அறிஞர் சைமன் காசிச்செட்டி! (Simon Casie Chetty) நவம்பர் , 5 , (1860)

May be an image of 1 person and text that says 'சைமன் காசிச்செட்டி (21-3-1807/5-11- -1807/5- 1860)'

Thulakol Soma Natarajan :   53 அகவைக்குள் அளப்பரிய சாதனைகள் புரிந்த அறிஞர்  சைமன் காசிச்செட்டி நினைவுநாள்-  நவம்பர் , 5 , (1860)
சைமன் காசிச் செட்டி(Simon Casie Chetty) 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில்  வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில்  ஒருவர் ஆவார்.
அரசாங்கத்தில் பல உயர்பதவிகளை  வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின்
பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார்.
இவை தவிர தான் எழுதிய நூல்கள்மூலம் காசிச்செட்டி அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப்  பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில்  21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் இலங்கையின் மேற்குக் கரையில்
உள்ள புத்தளம் என்னும் நகருக்கு அண்மையில் கற்பிட்டியில் கவிரியேல் காசிச்செட்டியின் புதல்வராகப் பிறந்தார்.