சனி, 4 பிப்ரவரி, 2017

கச்சா எண்ணெய் அகற்றும் தன்னார்வலர்களுக்கு: அதற்குரிய கையுறைகள், ஆடைகள் பாதுகாப்பு தேவை!

எண்ணூரில் கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் கடல் சார் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டு களத்தில் இறங்குவது அவசியமாகிறது எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி இரு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கப்பலிலிருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் கடலில் சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு எண்ணெய் படலம் பரவியது.
அவ்வாறு பரவிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தங்களுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்படுகளை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

nisaptham.:க.சீ.சிவக்குமார்... அவருக்கு இன்னமும் காலம் இருந்தது

நேற்றிரவு ஒன்பது மணியளவில் செல்லமுத்து குப்புசாமி அழைத்து க.சீ.சிவக்குமார் இறந்துவிட்டதாகச் சிலர் சொல்வதாகச் சொன்னார். சிவக்குமாரின் எண் இருந்தது. ஆனால் அவருடைய எண்ணுக்கே எப்படி அழைப்பது என்று குழப்பம். சில மாதங்களுக்கு முன்பாகத்தான் அதிகாலை நேரத்தில் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் நண்பர் ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரும் போது சாலைப் பகுப்பானில் அடிபட்டு முக்கால் மணி நேரம் யாரும் கண்டுகொள்ளாமலேயே கிடந்து பிறகு மருத்துவமனை வாசத்திலிருந்து மீண்டெழுந்து வந்திருந்தார். மரணத்தை வெகு அருகில் பார்த்துவிட்டு அந்த மனிதருக்கு எதுவுமாகியிருக்காது என்ற நம்பிக்கை இருந்தது.

கடல் எண்ணெய் சுத்தம் செய்ய பணம் இல்லை ! சிவாஜி சிலைக்கு 4500 கோடிகள்.. பட்டேல் சிலைக்கு 2500 கோடிகள்

Venkat Ramanujam :
 1000 MT #Oil #Spill divide by 20 Litres Bucket = 5 Crores times
1000 people 10 buckets/hour @ 10 hours / day = 600 days ( say approx 2 years)
For Shivaji Statue 4500 Crores allocated
For Patel Statues 2500 Crores allocated
For Important Crude oil Spill Problem = Zero Rupees allocated
#digitalindia #makeinindia #swatchbharat Good Governance Narendara modi Ji

சசிகலா முதல்வராக இரண்டு நாட்களில் ... செய்திகள் கசிகின்றன ... அதற்குள் கைது வதந்தியும் உலா ..

தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா நாளை மறுதினம் பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கசிகின்றன. இதற்காக நாளை மாலை அவரசமாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். சசிகலா அந்த கட்சியின் பொதுச்செயலாளரானார். ஆனால் சசிகலா முதல்வராக வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள் வெளிப்படையாக ஊடகங்களில் கூற ஆரம்பித்தனர். அவரும் முதல்வர் ஆவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார். ஆனால் பல தடங்கல்கள் வந்து அது தடைபட்டு போனது. இந்நிலையில் மீண்டும் பல தடைகளை தாண்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் முதல்வராக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கும் ட்ரம்ப் உத்தரவு: அமெரிக்க நீதிபதி தற்காலிக தடை

அகதிகள் மற்றும் ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடை ஆணையை அமெரிக்கா முழுவதும் தற்காலிகமாகத் தடை செய்வதாக அமெரிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சீட்டல் மாகாண நீதிபதி, ஜேம்ஸ் ராபர்ட் என்பவர்தான் ட்ரம்ப்பின் ஆணைக்கு எதிரான இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
டிரம்பின் தடை ஆணைக்கு சவால் விடுப்பதற்கு வாஷிங்டன், மினஸ்சோடா போன்ற மாகாணங்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்ட நிலையில், ட்ரம்புக்கு எதிரான இத்தகைய உத்தரவை ஜேம்ஸ் பிறப்பித்துள்ளார்.
ட்ரம்ப்பின் உத்தரவுப் படி, சிரியா அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டது.
மேலும் ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி: டிஜிடல் இந்தியாவில் வாளியால் கடலை தூய்மையாக்கும் கொடுமை !


இரண்டு சரக்கு கப்பல்கள் நேருக்குநேர் மோதியதால் கடலில் கச்சா எண்ணெய் கொட்டிய பகுதியான எண்ணூர் பகுதியில் திமுக-வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., கனிமொழி நேரில் சென்று இன்று ஆய்வு செய்து, அங்குள்ள மீனவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கடலில் இருந்து எண்ணெய்யை அகற்ற பல வாரங்கள் ஆகும். சில வெளிநாடுகளில் பல மாதங்கள்கூட ஆகியிருக்கிறது. அதனால் இதை 2 அல்லது 3 நாட்களில் அகற்றப்பட்டுவிட்டது என்று சொல்லிவிட்டுப்போனால் அது நியாயம் இல்லை.
இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு என்ன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு வந்தால் அதை வாங்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் அவர்களுடைய எதிர்காலம் மற்றும் அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே, அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

டொனால்ட் ட்ரம்ப் ... ஒரு லட்சம் விசாக்கள் ரத்து! (அமெரிக்க மோடி?)


ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடைவிதித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில் ஒரு லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்றும், தீவிரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமையன்று 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டார். இதனடிப்படையில், 1 லட்சம் விசாக்‍களை அமெரிக்‍கா ரத்து செய்துள்ளது.
ஏமனைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், கடந்த சனிக்கிழமையன்று டல்லஸ் விமான நிலையத்தில் இருந்து எத்தியோப்பியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் மூலம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள விபரம் குறித்து தெரியவந்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்
விசா ரத்து குறித்து அமெரிக்கா மறு ஆய்வு செய்துவருவதாக அரசு வழக்கறிஞர் அலெக்சாண்ட்ரியா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னம்பலம்

சசிகலா முதல்வராக சு.சாமி ஆதரவு ... நடராஜனின் பே லிஸ்டில் இந்த ஆளும் உள்ளார்?


மின்னம்பலம் :நாளை நடைபெறவுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஒப்புதலை பெற்றபின் திங்கட்கிழமை(பிப்.6) அன்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், “வரும் திங்கட்கிழமை அன்று சசிகலா முதல்வராக பதவியேற்றுக்கொண்டால் அவர் பொறுக்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து தனது, ட்விட்டர் பக்கத்தில் பொறுக்கிகள் என்று குறிப்பிட்டு வருகிறார். ஆனால் இதுவரை யார் பொறுக்கிகள் என்பதை அவர் தெளிவாக தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி ஒரு சர்வாதிகாரி : கெஜ்ரிவால்...


மின்னம்பலம் : டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்துகிறது. அவருக்கும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்குமிடையே மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் முறைகேடு நடந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்ததில், நன்கொடை தொகையில் ரூ.27 கோடி முரணாகவும், தவறாகவும் இருப்பதாகத் தெரிவித்தது. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு வருமான வரித்துறை பரிந்துரை செய்தது.
இதுகுறித்து பிரதமர் மோடியை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய மோடி துடிக்கிறார். அவர் வெட்கம்கெட்ட சர்வாதிகாரி. மோசமான, அசிங்கமான தந்திரத்தை கையாள்கிறார். கோவா, பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா மோசமான தோல்வியைத் தழுவும். வெற்றிபெறும் கட்சியான ஆம் ஆத்மியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய முயற்சிக்கிறார்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஸ்டாலின் :ஷீலா பாலகிருஷ்ணன் விலகல் - பனிப்போரின் தொடக்கம்


minnambalam.com : தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், திடீரென்று தனது பதவியிலிருந்து விலகியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணனின் திடீர் விலகல் என்பது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சிக்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சித் தலைமைக்கும் ஏற்பட்டுள்ள பனிப்போரின் தொடக்கமாகவே தெரிகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டியும், ஏற்கனவே இருக்கிற தடுப்பணைகளின் உயரத்தைக் கூட்டியும் சீமாந்திர மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளார்கள். விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்துக்கும் பேராபத்து ஏற்படுத்திவிட்டதாக கவலையடைந்துள்ளார்கள். சீமாந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலேயே இதுபோன்று தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளதை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

கடலில் கழிவை கொட்டுவது பன்னாட்டு கம்பனி., சுத்தம் செய்வது நம் மாணவர்களா?

நியாண்டர் செல்வம்thetimestamil.com: நியாண்டர் செல்வம்;
பத்து ஆண்டுகளுக்கு முன் லூசியானா கடலில் ப்ரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனி உலகின் மிகப்பெரிய ஆயில் கசிவை நிகழ்த்தியது.
ennore-2அதற்கு தண்டனையாக ஆயிலை சுத்தபடுத்தும் செலவை ஏற்றதுடன், ஆயில்கசிவால் பாதிப்படைந்த கடற்கரைகள், கடற்கரையோர வீடுகள், உணவகங்கள் என அனைவரின் வணிக பாதிப்பையும் ஈடுகட்ட 20 பில்லியன் டாலர் நஷ்ட ஈட்டையும் கொடுத்தது. கம்பனியின் சி.இ.ஓ பதவி விலகினார்.
எக்ஸான் கம்பனி இதுபோல அலாஸ்காவில் வால்டேஸ் எனும் கப்பலில் ஆயில்கசிவை நிகழ்த்தியதால் ஆர்ட்டிக் கடலையும் அவர்கள் சுத்தம் செய்து தந்தார்கள்.
நம் ஊராக இருந்தால் மாணவர்கள் கையில் பக்கட்டை கொடுத்து வடதுருவத்துக்கு அனுப்பி சுத்தம் செய்துதர சொல்லி இருப்பார்கள்.
ஆயில்கசிவுக்கு காரணமானது ப்ரிட்டிஷ் கப்பல்..ஆக குப்பையை அவன் போடுவான், சுத்தம் செய்வது நம் மாணவர்களா?
கடலில், கரையில் மாணவர்கள் ஆயிலில் வழுக்கி விழுந்து உயிர்துறந்தால் பிணத்துக்கு மலர்வலையம் வைக்க கூட எவனும் வரமாட்டான். பேஸ்புக்கில் ஒரு சோக சிரிப்பான் போட்டுவிட்டு தல 57 பட விமர்சனம் எழுதிக்கொண்டு இருப்பார்கள்.

சுப்பிரமணியசாமியை கண்டித்து சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் தமிழ்ப் பொறுக்கிகள் என்று தொடர்ந்து எழுதி வரும் சு.சாமியைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (சனிக்கிழமை) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சு.சாமி ட்விட்டரில் பதிவேற்றியுள்ள பதிவுகள் சிலவற்றைப் பாருங்கள்:

 1. மெரினாவில் மாணவர்கள் தடியடிக்கு உள்ளான அன்று அவர் இட்ட பதிவு "Today the TN govt has thrashed all porukkis who tried flouting SC stay order on Jallikkattu. Are OPS and VKS also not Tamil anymore. Ha!ha! (23 Jan 17/ 6.30 pm) (இன்று, சல்லிக்கட்டு மீதான உச்ச நீதிமன்றத் தடை ஆணையைக் கவிழ்க்க . முயன்ற 'பொறுக்கிகள்' அனைவரையும், தமிழக அரசு அடித்து நொறுக்கியது. இனிமேல் ஓபிஎஸ், விகேஎஸ் (சசிகலா) ஆகியோரும் தமிழர்கள் இல்லையா? ஹா! ஹா!)

மெரீனா 144 தடை நீக்கம்

சென்னை மெரினாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் வன்முறையை தூண்டிவிட்டு கலவரமாக மாற்றினர். இதனால் மெரினா கடற்கரை சாலை முதல் மீனவர்கள் வசிக்கும் நடுக்குப்பம் வரை போர்க்களமாக மாறியது. இதனையடுத்து 144 தடை உத்தரவு பிப்.12ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், மெரினாவில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறுவதாக கமிஷனர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கின்றது. ஆனாலும் மெரினாவில் கூட்டம் நடத்தவோ அல்லது ஆர்ப்பாட்டம் செய்யவோ தடை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நக்கீரன்

முதல்வர் ஆகிறாரா சசிகலா? சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். அப்போதே கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் இட்டனர். ஆனால், என்ன காரணத்தாலோ அதற்கான வேலைகள் அதோடு நின்றுபோனது. சட்டப் பேரவையில்கூட ஆளுங்கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலாவை கட்சி உறுப்பினர்கள் புகழ்ந்தார்களே தவிர, வேறு எதையும் வலியுறுத்தவில்லை. அதன்பின் அதிமுக இலக்கிய அணியினர் நடத்திய ஆலோ சனைக் கூட்டத்திலும் இதுதொடர் பாக எந்த தீர்மானமும் நிறை வேற்றப்படவில்லை.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (நாளை) மாலை நடப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழைகளை நடுத்தெருவில் நிறுத்திய பட்ஜெட் .. ப.சிதம்பரம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்ஜெட்டில் எந்த இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளளார்.
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற பட்ஜெட் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ப. சிதம்பரம், வரும் நிதியாண்டில் வருமான வரி எவ்வளவு வசூலிக்கப்படும் என்று கூட நிதியமைச்சரால் குறிப்பிட முடியவில்லை என தெரிவித்தார்.
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ரொக்கப் பணத்தை நம்பியே உள்ளதாக கூறிய சிதம்பரம், தினசரி வருமானத்தை நம்பியே 30 முதல் 50 கோடி மக்கள் வாழ்க்கையை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.
 பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விவசாயம், தொழிற்சாலைகள், சிறு குறு நிறுவனங்கள் பயன் அடையும் வகையில் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என சிதம்பரம் புகார் தெரிவித்தார். மறைமுக வரியை குறைப்பதன் மூலம் ஏழை எளிய மக்கள் பாதிப்படைவது குறையும் என பட்ஜெட்டுக்கு முன்பே தாம் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம், இந்த பிரச்சனையில், மத்திய அரசு மிகப் பெரிய தவறை செய்து விட்டதாகவும் சிதம்பரம் விமர்சித்தார்.  நக்கீரன்

பஞ்சாப் கோவா சட்டமன்ற தேர்தல் இன்று .. பஞ்சாபில் பாஜகவுக்கு மரண அடி??? மார்கண்டேய கட்ஜு .

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் மாலையுடன் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த நிலையில், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 403 தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 11ஆம் தேதி தொடங்குகிறது. மணிப்பூரில் மார்ச் 4, மற்றும் 8ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகிற 15ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்திலும், 40 தொகுதிகள் அடங்கிய கோவாவிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதனையொட்டி இரு மாநிலங்களிலும் , இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. ரூபாய் நோட்டு நடவடிக்கை இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். லைவ்டே

அழகிரி வீட்டு விசேசம் எல்லா உறவினர்களும் கலந்து கொண்டனர் .. ஸ்டாலின் வரவில்லை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதிக்கு கடந்த 2009ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.  கடந்த பல ஆண்டுகளாக மகனுக்கு வாரிசு உருவாக வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தில் இருந்தார் அழகிரி. இந்நிலையில் கர்ப்பினியாக இருக்கும் மறுமகள் அனுசுயாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சென்னை அடையாறில்  உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கலாநிதிமாறன், தயாநிதிமாறன், செல்வி, முரசொலி செல்வம், ராஜாத்தி அம்மாள் , கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், கீர்த்திகாஉதயநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். கட்சிப்பிரமுகர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை. மு.க.ஸ்டாலின் இந்த விஷேசத்திற்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு கடைசிவரை இருந்தது.  ஆனால் வரவேயில்லை. – முகில் nakkeeran</

அமைச்சர் ஜெயக்குமார் பொய் சொல்கிறார் .. எண்ணை கசிவு.. மீனை உண்ணவே முடியாது


திருவொற்றியூர்: பொதுமக்கள் அச்சமின்றி மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எண்ணூரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதியதில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த எண்ணெய் எண்ணூர் பாரதியார் நகரில் 200 மீட்டர் தூரத்திற்கு தேங்கி நிற்கிறது. தொடர்ந்து திருவான்மியூர், பெசன்ட் நகர் வரை எண்ணெய் பரவி வருகிறது. இந்த இடத்தை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். Minister of fisheries visited Ramakrishna nagar kuppam beach பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலோரக் காவல் படையின் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டு கடற்பரப்பில் உள்ள படலங்கள் அகற்றப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று கூறினார்  முகநூல் பதிவு

அன்புமணி ராமதாசுக்கு திடீர் நெஞ்சுவலி! பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி

pmk youth wing leader anbumani hospitalisedதர்மபுரி: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாமக இளைஞரணித் தலைவரும், எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தர்மபுரிக்கு வந்தார். அங்கே கட்சி நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனிடையே அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் சில நிகழ்ச்சிகளை பாதியில் ரத்து செய்துவிட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றார்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

எழுத்தாளர் கா.சீ.சிவகுமார் காலமானார்

Image may contain: 1 person, textகா.சீ.சிவகுமார் இனி நம்முடன் இல்லை என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், மனம் அலைபாய்ந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு செல்கிறது. மதுரை நகரத்தில் மினி பஸ் நடத்துனராக, தள்ளு வண்டியில் பொருட்கள் விற்பவராக, தெரு தெருவாக ஜவுளி வியாபாரம் செய்பவராக என் நண்பன் எனக்கு அறிமுகமானான். 1993ல் பார்த்த அதே புன்னகை, அதே பிரியம், அதே வசீகரம், அதே தெனாவட்டு, அதே விட்டேத்தியுடன் திரிந்த அலாதியான மனிதன். இலக்கிய சூழலில் எதிரிகள் இல்லாதவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது க.சீ.சிவக்குமார் மட்டுமே. கா.சீ யார் மீது வெறுப்பு கொண்டதில்லை, யார் பற்றியும் புறம் பேச மாட்டான். அவனால் யார் மீது அன்புகொள்ள முடியும், யார் மீதும் இறக்கம் கொள்ள முடியும். கா.சீ ஒரு கணமும் Material-ஆக இருந்ததில்லை, பணம்-காலம் எல்லாம் அவனிடத்தில் மதிப்பு கோரி பிட்சை எடுத்து நின்றது.

ஸ்டாலின் கேள்வி :சர்க்கரை மானிய இழப்பு! பன்னீர்செல்வம் வாயை திறக்காமல் இருப்பது ஏன்? டயபெட்டீசை கட்டுப்படுத்தவோ?

சர்க்கரை மானிய இழப்பு குறித்து மத்திய அமைச்சரே எதிர்த்திருக்கின்ற சூழலில் அதிமுக அரசு வாய் திறக்காமல் இருப்பது கவலையளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “மத்திய நிதி நிலை அறிக்கையில் சர்க்கரை மானியத்திற்கு வெறும் 200 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பதால், இனி மாநில அரசுகளுக்கு சர்க்கரைக்கு வழங்கும் மான்யத்தை மத்திய அரசு நிறுத்தி விடும்” என்று வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு சர்க்கரை வழங்கும் திட்டத்திற்கு எதிர்காலத்தில் மாபெரும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே சிறந்த முறையில் பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தும் மாநிலம் தமிழகம் என்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது உச்சநீதிமன்றமே பாராட்டியது. அப்படியொரு சிறந்த பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாக இந்த “மான்ய ரத்து அமைந்து விடக்கூடாது” என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

இருநூறு டன் கேரட்டை அழித்த ஒரு விவசாயியின் துயரம் !

அறுவடை செய்ய வேண்டுமானால் தினமும் சில பத்து தொழிலாளர்ளுக்கு ரொக்கமாக சம்பளம் தர வேண்டும்,மோடியின் கற்பனை தேசத்தில் இருக்கும் ஸ்விப்பிங் மெஷின் கொண்ட பிச்சைகாரர்களோ, மோடி பக்கதர்கள் சினிமா காட்டுவதைப்போல வங்கிக்கணக்கு, ஸ்மார்ட் ஃபோன் ,பான் கார்டு,டெபிட்கார்டு, கிரடிட் கார்டு சகிதம் இருக்கும் விவசாயியோ அந்த பிராந்தியத்திலேயே இல்லை.
அசோக்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது மற்றும் பணமதிப்பு நீக்கம் என இரண்டு கத்திகளை மோடிஅரசு தமிழக விவசாயிகளின் முதுகில் பாய்ச்சியிருக்கிறது. காவிரி விவசாயம்தான் இம்முறையும் மத்திய அரசின் துரோகத்தால் சுடுகாடாகிவிட்டதென்றால் ஏனைய பகுதிகளின் விவசாயிகளின் விளைபொருட்களை விதைப்பதற்கும், அப்படியே விதைத்தாலும் பராமரிப்பதற்கும், தப்பித்தவறி விளைந்துவிட்டால் அதை அறுவடை செய்யவதற்கும் , அறுவடையே செய்தாலும் அதை விற்பதற்கும், தடையை உருவாக்கி விவசாயிகளின் எல்லா வழியிலும் தாக்கி  “செக் மேட்” செய்திருக்கிறது மோடி பாசிச கும்பல்.

R.S.S.பாஜக ஆகிய நான் தமிழக ஆளுங்கட்சியாக ...

மோடி வழங்கிய பன்னீரின் "அதிமுக"!.. பயத்தில் மன்னார்குடி . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக பதவியேற்ற பன்னீர்செல்வம், தனது அதிரடி நடவடிக்கைகளால் ஜெயலலிதாவை போல் உருமாறி வருவதை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்கிறது மன்னார்குடி கும்பல். மத்திய அரசின் உதவியுடன் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் பன்னீர்செல்வத்திற்கு மன்னார்குடி கும்பல் நெருக்கடி கொடுத்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றபோது அவரது காலில் விழுந்து அதிரவைத்தார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் பன்னீர்செல்வத்தின் இந்த பணிவை மத்திய அரசு ரசிக்கவில்லை. பன்னீர்செல்வம் சமீபத்தில் டெல்லி சென்ற போது, நீங்கள் ஒரு மாநிலத்தின் முதல்வர்; எதற்காக சசிகலா உறவினர்களிடம் பயப்படுகிறீர்கள்? நாங்கள் இருக்கிறோம் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து திரும்பியபோது போயஸ் கார்டன் போனார். ஆனால் அதன்பின்னர் அந்த பக்கமே முதல்வர் ஓபிஎஸ் எட்டிப்பார்க்கவில்லை. அத்துடன் தன்னுடைய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக மனைவியுடன் குடியரசு தின நிகழ்ச்சிக்கு மேடையேறினார் முதல்வர் ஓபிஎஸ்.

கடலில் கச்சா ... தென்கோடி தீய்ந்து போவது டிஜிடல் முட்டாள்களுக்கு தெரியல்லையா?

டிஜிட்டல் முட்டாள்களே எங்கே போய்விட்டீர்கள்...😄😄😄
இன்று நீங்கள் எங்கள் மீது கொட்டியிருக்கும் இந்த எண்ணெய் கழிவுகள் இத்தனை காலங்களாக இதே கடலில்தான் இருந்தது, நாங்களும் இதே கடலில்தான் வாழ்கிறோம். இப்போது மட்டும் நாங்கள் அழிக்கப்படுகிறோம், உங்களின் அதிமேதாவித்தனத்தினால். படைப்பில் எப்போதும் முதலில் பாதுகாப்புதான் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் டிஜிட்டல்வான்களே! நீங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றை "உரு" மாற்றம் செய்பவர்கள் மட்டுமே. உங்களால் ஒருபோதும் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாது. இறக்கும் தருவாயிலும் உங்களைப் பார்த்து எங்களுக்கு சிரிப்புதான் வருகிறது. பல கோடி ஆராய்ச்சிகள் செய்து ஆழ்கடலுக்கு அடியில் இருக்கும் எண்ணெய் வளத்தை எடுக்க திட்டமிட்டு செயல்படுத்திய நவீனத்தின் பிள்ளைகளாகிய நீங்கள், இன்னும் கழிவறைக்கு எடுத்து போகும் நெகிழிக் குடுவைகளை வைத்து கடலைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். கடலின் ஆழத்திலிருந்து எண்ணெய்யை பிரித்து எடுக்கத் தெரிந்த உங்களுக்கு அதன் அகலத்திலிருந்தும் அல்லவா பிரித்து எடுக்கத் தெரிந்திருக்கவேண்டும்.

வங்கக் கடலை வாளியில் அள்ள முடியாது... அரசை நிர்பந்தியுங்கள்! கச்சா எண்ணெய் தோலில் படுவது மிகவும் ஆபத்து

எண்ணூர்
விகடன் ; வங்கக் கடலை வாளியால் அள்ளிக் கொண்டிருக்கிறது தமிழகம். இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டன... யாருக்கும் காயமில்லை சாதரண விபத்துதான் என்று தொடங்கிய வழக்கமான சமாதானங்கள். இன்று, “கொஞ்சம் எண்ணெய் சிந்திவிட்டது. எல்லாம் சரியாக இன்னும் ஆறு மாதங்களாவது ஆகும்” என்ற அளவில் நிற்கிறது. சாதாரணமாக ஒரு கப்பல் ஆழ்க்கடலில்  மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றால், கப்பல் விபத்துக் குறித்து நம் அரசின் செயல்பாடுகள் மணிக்கு 4.5 கி.மீட்டர் வேகத்தில் கூட இல்லை. ஏதோ, கச்சத்தீவுக்கு அப்பால் கச்சா எண்ணெய் சிந்தியது போல மெளனியாக இருக்கிறது தமிழக அரசும், அதன் மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும். பாவம், அப்பாவி தமிழன்தான் நடந்த விபரீதங்கள் புரியாமல் சமுக விரோதியென்ற பட்டத்தை ஏந்திக் கொண்டு வாளியுடன் கடலை அளந்துக் கொண்டிருக்கிறான்.  என்ன சொல்ல...? எப்போதும் மனதிலிருந்து சிந்திக்க பழகியவன் அவன்.

செத்து மடியும் உயிரினங்கள் : பீட்டாவுக்கு விஜயகாந்த் கேள்வி!

மின்னம்பலம் :எண்ணூர் அருகே நடந்த கப்பல் விபத்தால், கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியை தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
ஈரானிலிருந்து சமையல் எரிவாயு ஏற்றிக்கொண்டு, எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்துவிட்டு திரும்பிய எம்.டி.பி.டபிள்யூ மாப்பிள் என்ற கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும் எண்ணூர் துறைமுகத்திலிருந்து 1.8 நாட்டிக்கல் மைல் தொலைவில், கடந்த 28ஆம் தேதி நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலக்கத் தொடங்கியது. இதன்காரணமாக, சென்னை எண்ணூர் துறைமுகத்தையொட்டி 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது. புதுச்சேரிக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் படலம் கடல்நீரை மூடியுள்ளதால் மீன், ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இதனால் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் மக்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

தீ வைத்த போலீசார் விவரம்! - நக்கீரன் முழு அறிக்கை !

சென்னை போலீஸ் வன்முறையின்போது அப்பாவிகளின் ஆட்டோக்களுக்கு போலீசாரே தீவைத்த சம்பவத்தை தொலைக்காட்சிகளிலும் கைபேசிகளிலும் வீடியோவாகப் பார்த்து நாடே அதிர்ந்துபோனது. இது தொடர்பாக 3 போலீசாரை துறைரீதியாக விசாரிக்கிறார்கள். மூவருக்கும் அழைப்பாணை கொடுக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது. சம்பவம் நிகழ்ந்த மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் சிட்டிசெண்டர் அருகே பக்கிங்ஹாம் கால்வாயின் கரையில் அமைந்துள்ளது ரூதர்புரம். முன்னூறு போலீசுடன் சென்ற அண்ணாநகர் துணை ஆணையாளர் பெரோஸ்கான் அப்துல்லா, திருமங்கலம் உதவி ஆணையாளர் காமில் பாஷா, தென்சென்னை போக்குவரத்து உதவி ஆணையாளர் யுவராஜ் ஆகியோர் ரூதர்புரத்திற்கு வந்தார்கள். வந்தவர்கள் முதலில் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்தார்கள். அதன்பிறகு அந்த வழியாக வந்த பத்திரிகையாளர்களை "ஓடிவிடுங்கள்'' என மிரட்டினார்கள்.
ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என ஓடிவந்த பத்திரிகையாளர்களை காமில் பாஷாவும், யுவராஜும் தாக்க ஆரம்பித்தார்கள். தினகரன் பத்திரிகையின் தலைமைச் செய்தியாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரேஷை அவரது காரில் வைத்தே கடுமையாகத் தாக்கினார்கள்.

நந்தினி கொலை... இந்து முன்னணி மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது


அரியலூர்: தலித் சிறுமி நந்தினி கொலை வழக்கில் தொடர்புடையைதாக கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி, அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17), ஆதிக்க சமூகத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கிணற்றில் சடலமாகக் கிடந்தார். இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து இந்து முன்னணி ஒன்றியச் செயலர் மணிகண்டன், அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியான இந்து முன்னணி ஒன்றியச் செயலர் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட ஆட்சியர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதையடுத்து இன்னும் ஒரு ஆண்டுக்கு மணிகண்டனால் ஜாமீனில் கூட வெளியே வர முடியாது. தினமணி

திண்டுக்கல்லில் ரவுடி அமிர்தானந்தமாயி கூட்டத்துக்கு ஆள்பிடிக்க காசு சோறு போக்கு வரத்து ... அரசியல் கட்சிகளை மிஞ்சிய தில்லுமுல்லு


மாதா அமிர்தானந்தமாயி திண்டுக்கல் கூட்டத்துக்கு ஊர் ஊராக சென்று ஆட்களை திரட்டுவதை பார்த்து அரசியல் கட்சிகளே ஆச்சரியப்பட்டு போய் நிற்கின்றன. திண்டுக்கல்லுக்கு மாதா அமிர்தானந்தமாயி இன்று வருகை தருகிறார். திண்டுக்கல் அங்குவிலாஸ் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகளை அனுப்பி ஆட்களைத் திரட்டி வரும் பணியில் அமிர்தானந்தமாயி சீடர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு கிராமத்துக்கு 2 பேருந்துகள் என அனுப்பி வைத்து காலை முதலே ஆட்களை திரட்டும் பணியில் தீவிரமாக இருந்து வருகின்றனர். பேருந்து வசதி மட்டுமின்றி இரவு சாப்பாடும் போடுகிறோம் வாருங்கள் என கூவி கூவி அழைக்கின்றனர்.
பாஜக ஆதரவாளர்களே அமிர்தானந்தமாயி கூட்டத்துக்கான ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் பணம், சாப்பாடு கொடுத்து கூட்டங்களுக்கு ஆட்சேர்க்கின்றனர். இந்த அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் அமிர்தானந்தமாயி கோஷ்டியினர் பேருந்துகளை அனுப்பி சாப்பாடு போடுவதாக கூறி ஆட்சேர்த்து வருவது ஆச்சரியப்பட வைத்துள்ளது.லைவ்டே

ஜனவரி 13 ஆம் தேதி சுமந்திரனை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டம்? .. தேதி மாறியதால் தப்பினார்?

sumanthiran-964854 சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்ய வெளிநாட்டு புலிகள் தீட்டிய திட்டம் ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வந்தது!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி – 2) சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்ய வெளிநாட்டு புலிகள் தீட்டிய திட்டம் ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வந்தது!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி – 3) sumanthiran 964854பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றி டிசம்பர் 24ல் எச்சரிக்கை செய்யப்பட்டது</ பின்னர் நான் ஜனவரி 13ல் திட்டமிடப்பட்ட தாக்குதல் பற்றியும் அதன் பின்னர் என்ன நடந்தது என்றும் சுமந்திரனிடம் கேட்டேன். நான் விசேடமாக அவரிடம் கேட்டது வடக்கிற்கான பயணத்தை அவர் இரத்துச் செய்தது ஏனென்றால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று முன்கூட்டியே அவர் எச்சரிக்கை செய்யப்பட்டதாலா என்று.;அதற்கு சுமந்திரன் பின்வருமாறு பதிலளித்தார்: “இல்லை, இல்லை, நான் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக எனது பயணத்தை இரத்து செய்யவில்லை.
 கடந்த வருடம் டிசம்பர் மாதம்  24ந் திகதி ஜனாதிபதி செயலகத்தால் எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்று எச்சரிக்கை செய்ததும் மற்றும் எனது பயணத்தை இரத்து செய்யும்படி ஆலோசனை வழங்கியது என்று சொல்லப்படுவதும் சரியான தகவல்தான். ஆனால் நான் அப்பொழுது  பயணத்தில் பாதிவரைக்கும் வந்துவிட்டேன் மற்றும் திரும்பிச் செல்ல விரும்பவில்லை.   / டிசம்பர் கடைசி வாரமும் மற்றும் ஜனவரி முதல் வாரமும் நாட்டை விட்டு வெளியே சென்றிருந்தேன், திரும்பி வந்தது முதல் நான் எனது வழக்கமான கடமைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தேன்”.
மேலும் பேசுகையில் சுமந்திரன் சொன்னது” என்ன நடந்தது என்றால், நான் திட்டமிட்டபடி ஜனவரி 13ல்கடல் நீர் சுத்திகரிப்பு பற்றிய கருத்தரங்கில்  கலந்து கொள்வதாகத்தான்  இருந்தேன்.

சென்னையில் 2,000 டன் மீன்கள் தேக்கம்.... கடலில், கசடு எண்ணெய்... கப்பல் கம்பனிகளிடம் லஞ்சம் .. ?

கொடுமையா இருக்கு... 😢😢 இதே வெளிநாட்டுல இப்படி நடந்து இருந்தா கப்பல் நிறுவனம் மேல அபராதம் போட்டு அந்த கப்பல் கேப்டனை உள்ள புடிச்சி போட்டு இருப்பாங்க
கடலில், கசடு எண்ணெய் கலந்துள்ள நிலை யில், மீன் சாப்பிடுவது ஆபத்து' என, பரவிய தகவலால், சென்னை காசிமேடு மீன்பிடி துறை முகத்தில், 2,000 டன், மீன்கள் விற்காமல் தேங்கி உள்ளன. சென்னை, எண்ணுார் துறைமுகம் அருகே, ஜன., 28ல், இரு சரக்கு கப்பல்கள் மோதி கொண்டன. சேதமடைந்த கப்பலில் இருந்த கசடு எண்ணெய், கடலில் பரவியது.இதனால், எண்ணுார் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதிகளில், கசடு எண்ணெய் படர்ந்துள்ளது. அவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது. 'கசடு எண்ணெய் கலப்பால், மீன்களில் விஷத் தன்மை பரவி இருக்கும்; அதை சாப்பிடுவது ஆபத்தானது' என, சில சுற்றுச் சூழல் ஆர்வலர் கள், கருத்து தெரிவித்தனர். இது, மீன் பிரியர் களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சென்னை, காசிமேடு மீன்பிடி துறை முகத்தில், ஐந்து நாட்களில், 2,000 டன் மீன்கள், விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.

நடராஜன் லெக்சஸ் கார் விவகாரம் பிடி இருக்கிறது

சொகுசு கார் இறக்குமதி வழக்கு  நடராஜன் மீதான பிடி இறுகுகிறத சென்னை:வெளிநாட்டில் இருந்து, சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டது குறித்து, அமலாக்க துறை தொடர்ந்த வழக்கில், சசிகலா கணவர் நடராஜன் மீதான பிடி இறுகுகிறது. விசாரணை, 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன்; லண்டனில் இருந்து, 'லெக் சஸ்' என்ற சொகுசு காரை, 1994ல் இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக்கூறி, இறக்குமதி செய்ததில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், 1994ல் வெளியான புதிய ரக கார் என, தெரிய வந்தது. வரி ஏய்ப்பு மூலம், 1.06 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய தாக, நடராஜன், அவரது உறவினர் வி.என். பாஸ்கரன், காரை அனுப்பிய லண்டன்
தொழில திபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், இந்தியன் வங்கியின், அபிராமபுரம் கிளை மேலாளர் சுசுரிதா ஆகியோர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சசிகலா மட்டும் தானா ஸ்டாலினையும் கூப்பிடுங்க; அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்

 மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் பிப்., 10 ம் தேதி நடக்கும், ஜல்லிக்கட்டில் பங்கேற்க அ.தி.மு.க., பொது செயலர் சசிகலா விற்கு, அழைப்பு விடப்பட்டுள்ளதால், இதற்காக முதலில் அலங்காநல்லுார் வந்து போராடிய தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும் எனகிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர். உச்சநீதிமன்ற தடையால் இரண்டு ஆண்டு களாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. ஜல்லிக் கட்டு நடத்தக் கோரி கிராம கமிட்டியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இதற்காக முதன் முதலாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், பின்னர் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், த.மா.கா., தலைவர் வாசன் உட்பட அனைத்து கட்சியினரும் அலங்காநல்லுார் சென்று போராடினர்.
தி மு க ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஏது தடை.. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தானே (2014ல் உச்ச நீதி மன்ற உத்திரவிற்கு பின்) ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது....தி மு க ஆட்சியில் இருந்தபோது சட்டசபையில் மத்திய சட்டத்தில் இருந்து விலக்கு பெற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்றினார்கள். ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் பெறுவதற்குமுன் அவர்கள் ஆட்சி போய் அ தி மு க ஆட்சி வந்துவிட்டது....

கூர்வாழின் நிழலில் ! சிங்கள மக்களின் இதயத்தை வென்ற தமிழினியின் வாழ்க்கை வரலாறு

rishantranslations.: தமிழினியின் உயிர்க் கொடை ;இதை ஏன் எழுத வேண்டும்? என என்னை நானே பல தடவைகள் கேட்டுக் கொண்டேன். என்னை எழுத ஊக்குவித்தது ஒரே ஒரு பதில்தான். அது, நான் உயிராக நேசிக்கும் மக்களிடம், எனது குரல்வளைக்குள் சிறைப்பட்டிருக்கும் சில உண்மைகளை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்பதாகும். இலங்கை சமூகத்துக்கு விலை மதிப்பற்ற கொடையாகக் கருதப்படுகிறது முன்னாள் போராளியும், புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தலைவியாகவுமிருந்த தமிழினி எழுதிய அவரது வாழ்க்கைச் சரிதத்தின் சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுப்பு. இந்திய காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்த ‘ஒரு கூர் வாளின் நிழலில்’ தொகுப்பானது,  ‘Thiyunu asipathaka sevana yata’ எனும் தலைப்பில் திரு.சாமிநாதன் விமலினால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 260 பக்கங்களில், எழுத்தாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொகுப்பே அண்மைக்காலமாக இலங்கையில் அதிகம் விற்பனையான சிங்கள மொழி புத்தகமாக அறியப்பட்டுள்ளது. சுரஸ பதிப்பகத்தால் வினியோகிக்கப்படும் இத் தொகுப்பானது, ஒரு மாதத்துக்கு இரண்டு பதிப்புக்களென அச்சிடப்படுகிறது எனும்போது, இப் புத்தகம் சிங்கள மொழி வாசகர்களை எந்தளவுக்கு ஈர்த்துள்ளதென்பதை அறியக் கூடியதாக இருக்கிறது.

திண்டுக்கல் லியோனிக்கு 500 மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் .. பாமகவினர் அராஜகம்

Dindigul I.Leoni got life threaten from PMK cadersதிண்டுக்கல்: திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு பாமக பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பழனியில் நேற்று நடிகரும், திமுக பிரமுகருமான, வாகை சந்திரசேகரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார் லியோனி. ஆனால் மதியத்திற்குள், லியோனியின் செல்போனுக்கு பாமக தரப்பில் இருந்து 500க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக தலைமைக்கு லியோனி தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் திண்டுக்கல் டிஎஸ்பியிடம் லியோனி புகார் கொடுத்தார். இதுகுறித்து கூறிய லியோனி, "பாமகவின், காடுவெட்டி குரு பிறந்தநாள் வரப்போவதாகவும், அவரை நான் பட்டிமன்றங்களில் தவறாக பேசிவிட்டதாகவும் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள்.

2-2-2000 இல் தர்மபுரியில் எரிக்கப்பட்ட மூன்று வேளாண் பல்கலை கழக மாணவிகள்


மெரினா மாணவ புரட்சியாளர்களும்” அவர்களின் அதி தீவிர ஆதரவாளர்களும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய மூன்று முக்கிய தேதிகள்.
2-2-2000: முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து, அந்த கட்சிக்காரர்கள் மாநிலம் தழுவிய அளவில் “ஆர்பாட்டங்கள்” செய்யவேண்டுமென கட்சித் தலைமை பிறப்பித்த அவசர உத்தரவைத் தொடர்ந்து, அதிமுகவினர் மாநிலம் முழுவதும் நடத்திய மாபெரும் வன்முறையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் மூன்றுபேர் பேருந்தில் வைத்து உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டனர். அதற்காக அந்த பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஜெயலலிதா கொடும்பாவி கொளுத்தப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.

உன்னை யார் என்று நீ அறியமுடியாதவாறு உன்னை அடக்கி வைத்திருப்பது யார்?

பண்பாடு, வாழ்வியல், உணவு, வாழ்க்கை சார் கலாசாரம், இசை என இவையெல்லாமே தலையோங்கி, உழைக்கும் வர்கம் என்றுமே அதன் மீது பெருமிதம் கொள்ள கூடாது, அவர்களது அருமை அவர்களுக்கு விளங்க கூடாது என திட்டமிட்டு, தன் திறமையை, தொழிலை, உணவை, பண்பாட்டை, மிகைப்படுத்தப்படாத கலாசாரத்தை இழிவாக்கி, அடிமையாக்கி, பிரித்தாண்டு, இம்மக்களுக்கு புலப்படாத ஒன்றை அறிமுகப்படுத்தி அதை அவர்களுக்கு கிடைக்க விடாமலும் செய்து, ஒரு கீழ் நிலையிலேயே............

வாசுகி பாஸ்கர்: காட்சி 1 : சென்னையின் பரோட்டா கடை முதலாளிகள் ஊரில் இருந்து வரும் போதே சிறுவர்களை கடை வேலைக்கு பிடித்து கொண்டு வந்து விடுவார்கள், காலை பதினொன்று, பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் வேலை, இரவு பாத்திரத்தை கழுவி விட்டு படுப்பதற்குள், ஒன்று இரண்டு ஆகி விடும். இந்த சிறுவர்களின் வேகம் அசாத்தியமானது, களங்கமற்றது, சொல்லி முடித்த நேரத்தில் கேட்ட உணவு இலையில் கிடக்கும். வயது, சுறுசுறுப்பு, நெல்லை மதுரை பாஷை, படிக்கும் வயதில் சம்பாதிக்கிறார்களே என்கிற எமோஷன் என எல்லாமும் ஒன்றாக சேர்ந்து நமக்கு பொதுவாகவே அவர்கள் மீது கொஞ்சம் ஈர்ப்பு ஏற்படும், நல்ல டிப்ஸும் வாங்குவார்கள். ஆனால், நீங்கள் கவனித்தால், அதே கடையில் வேலை செய்யும் பெரியவர்கள், இந்த சிறுவர்களை மட்டம் தட்டி கொண்டே இருப்பதை பார்க்கலாம், சின்ன தவறுக்கும் ஓவராக ரியாக்ட் செய்வார்கள், தவறுகள் நடக்காத கிரகத்தில் இருந்து வந்தவர்களாய் இருப்பர், முதலாளியிடம் சிறுவர்கள் வாங்கி இருக்கும் நற் பெயரையும் களங்க படுத்தும் வேலையையும் அவ்வப்போது செய்வர்.

தமிழ்நாடு இளைஞர் கட்சி.... நோக்கம் என்ன? மெல்லிய சந்தேக கோடுகள்?

Tamilnadu youth party : திராவிட கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும், இளைஞர்கள் ஒரு வாக்கு வங்கி மட்டுமே. வாக்கை தாண்டி அவர்கள் எந்த அரசியல் தெளிவையும் பெற்றுவிடக்கூடாது என்பதில் கட்சி வேறுபாடுகள் தாண்டி மிக கவனமாக இருக்கிறார்கள்.ஏன் இவர்கள் இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த அஞ்சுகிறார்கள்...? அவர்களுக்கு நன்கு தெரியும், இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால், அனைத்தையும் கேள்வி கேட்பார்கள் என்று. தமிழக இளைஞர்களை அரசியலற்றவர்களாக ஆக்கியதில் பெரும் பங்கு, திராவிட கட்சிகளுக்கு உண்டு.
திராவிட கட்சிகள் என்று எழுந்த மானத்திலே தாங்கள் ஆரம்பித்து இருப்பது நல்லதல்ல. தங்களின் குறி திராவிட முன்னேற்ற கழகம்தான் என்று கருதுவதற்கு போதிய இடம் இருக்கிறது .ஏனினில் அதிமுகவை ஒரு திராவிட கட்சியாக எம்ஜியாரோ ,ஜெயலலிதாவோ அல்லது சசிகலா பன்னீர்செல்வமோ எந்த காலத்திலும் காட்டி கொண்டதில்லை. எம்ஜியாரின் அண்ணாஇசமும் ஜெயலலிதாவின் மண்சோறு காலில் விழுவதுவும் திராவிட கட்சி பாரம்பரியமா?  பாஜக அல்லது காங்கிரசுக்கு ஒரு பீ டீம் போன்றுதான் அவர்களின் வரலாறு இருக்கிறது.    திராவிட கட்சிகள் என்று தாங்கள் ஆரம்பிப்பது நிச்சயம் பார்ப்பன, ஆதிக்க சாதி இந்துத்வா பின்னணியில் இருப்பதாக சந்தேகம் எழுவது இயல்பு.  தற்போது தமிழின உணர்வாளர்கள் என்று கூவி கொள்வோரும் இது போன்ற ஒரு  பின்னணியில் உள்ளதாகவும்  சந்தேகம் வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை . திராவிட முன்னேற்ற கழகம், திராவிட கழகம் போன்றவைதான் மக்கள் மத்தியில் அரசியல் உணர்வை வளர்த்தது . நீங்கள் அதிமுகவிற்கு பொருந்த கூடிய குற்றச்சாட்டுகளை திராவிட கட்சிகள் என்ற கணக்கில் சேர்ப்பது மிகவும் கபட நோக்கம் கொண்டது . நல்ல நோக்கங்களுக்காக முன்வந்த லட்சோப லட்சம் இளைஞர்களை    மக்களை ஏமாற்றி அரசியல் செய்து விடலாம் என்று கணக்கு போட்டால் அது ஏமாற்றமாகி விடும் . மக்கள் இப்போது அந்த அளவு முட்டாள்கள் அல்ல.. அந்தரங்க சுத்தி இல்லாவிடில் நோக்கம் எதுவுமே நிறைவேறாது. வெறும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்?

இளைஞர் படை மீண்டும் கடலை நோக்கி! எண்ணூர் எண்ணெய் கசிவு

கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணி தீவிரம்." இதன் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...
chennaiOilSpill பிரச்சினைக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது கடல் சார் வாழ்க்கையை நேரடியாகவும், மீனவர்களை மறைமுகமாகவும் பாதிக்கிறது.
Sarfaraz Khan ‏@Itsme_sarfaraz
கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை எடுக்க வாளியைப் பயன்படுத்தும் அதிகாரிகளின் அறிவை எண்ணி வியக்கேன்.
sakthi ‏@sakthi1964
#ChennaiOilSpill குறித்து முயற்சிகள் போர்க்கால வேகத்தில் எடுக்கப்பட வேண்டும், சுற்றுப்புறச் சூழல் காக்கப்பட வேண்டும். தேவையான கருவிகளை பயன்படுத்த வேண்டும்.
Ankit Singh ‏@ankitking
2010-ல் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஏராளமான எண்ணெய் கொட்டியபோது, ஒபாமா கண்டனம் தெரிவித்து, அபராதம் விதித்தார். ஆனால் இங்கு?
Dr. Mugdha Singh ‏@IMMugdhaSingh
#ChennaiOilSpill-ன் விளைவு வருடக்கணக்கில் நீடிக்கும். இதைப் போக்க வழிகளைக் கண்டறிய வேண்டும்.

கச்சா எண்ணெய் கடலில் ..ஏராளமான உயிரனங்கள் செத்து கொண்டிருக்கின்றன ... எங்கே அந்த பீட்டா? எங்கே அந்த சுற்றுப்புற ஆர்வலர்கள்?

கடற்பரப்பு முழுவதையும் ஆட்கொண்ட கச்சா எண்ணெய்யால் ஏராளமான கடற்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இதனை சுத்தம் செய்ய க்ளீன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஜகவினரோ அல்லது ஜல்லிக்கட்டுக்க மல்லுக்கட்டிய பீட்டா அமைப்போ இதுவரை முன்வரவில்லை. கடந்த 28ஆம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எண்ணெய்க் கப்பலில் இருந்த 40 டன் கச்சா எண்ணெய் கசிந்து கடற்பரப்பு முழுவதும் பரவியது. இதனால் சென்னை எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய்யால் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் படலத்தை அகற்ற எந்திரங்கள் கைகொடுக்காததால் கடலோர காவல் படையினரும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்கெட் கொண்டே ஊழியர்கள் கச்சா எண்ணெயை அகற்றி வருவதால் 7 நாட்களாகியும் சுத்தம் செய்யும் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

வியாழன், 2 பிப்ரவரி, 2017

தி.மு.க. பலவீனமாக இருக்கும் சில பிரிவுகள் .. திமுகவின் Think tank ஆலோசனைகள் ?

வனத்தையன் தமிழரிமா எழுத்துகளுக்கு salutes 💐 இந்த மாதிரி think tank தன்னை தானே சுய ஆராய்ச்சி செய்வது தான் #திமுக வின் பலமே ... இனி அவர் சொல்லும் வழிமொழிய வேண்டிய பலவீனம் என்று சொல்லி நிறுத்தி விடாமல் ., திருத்த வேண்டிய என்று முன்னுரையோடு :
*************
தி.மு.க. பலவீனமாக இருக்கும் சில பிரிவுகள் :
🔷 பெண்கள்:
தி.மு.க. எப்போதுமே பெண்கள் பார்வையில் தள்ளிவைத்தே பார்க்கப்படுகிறது. அதற்கு முதல் காரணம் தி.மு.க.வில் பெண்கள் கண்ணியமாக நடத்தப்படவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு.
எதிர்தரப்பு பெண்ணாக இருப்பதாலும், அவர்களை நம்மவர்கள் விமர்சிப்பதும் நமக்கு பலமல்ல... பலவீனமே ! நம் கட்சியில் பெண்களுக்கான இடம் மிகக் குறைவுதான். அப்படியே இருந்தாலும் அது கட்சி முன்னணியினரின் உறவினர் அல்லது கள்ளத் தொடர்பாளர்களாகவே இருப்பது வேதனை.
எல்லா துறைகளில் மட்டுமல்லாது , குடும்ப பாரத்தையும் சுமக்கும் நிலைக்கு பெண்கள் துணிந்து விட்ட நிலை அவர்கள் கண்ணியமாக நடத்தப் படுவது அவசியமாகிறது.
பெண்ணுக்கு சொத்துரிமை, மதுவிலக்கு என்பது மட்டுமே தி.மு.க. அவர்களுக்கு கொடுத்த மிகப்பெரிய உரிமைகள். அதைத் தாண்டி அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது மரியாதை மற்றும் கண்ணியமான நடத்தைகளை ...!!
🔷 காவல் துறை :
காவல் துறை பல்வேறு காலகட்டங்களில் தி.மு.க. வுக்கு எதிராகவே இருந்து வருகிறது. அதற்கு காரணம் கட்சி முன்னணியினர்களின் வரம்பு மீறிய தலையீடு.

போலீஸ் உடையில் 'பொம்மை' ஆட்சி!

ப.திருமாவேலன் சசிகலா, நடராசன், திவாகரன் மூவருக்கும் இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையைவிட, ஜார்ஜ், சேஷசாயி, சங்கர் போன்ற காவல் துறை அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புதான் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. ‘இதுதான்டா போலீஸ்’ ராஜசேகர் போல ஜார்ஜும், ‘சாமி’ விக்ரம் போல சேஷசாயியும், ‘சிங்கம்’ சூர்யா போல சங்கரும் பேட்டி மேல் பேட்டி கொடுப்பதைப் பார்த்தால், அரசாங்கமே இவர்களைக் காப்பாற்ற இயங்குவதுபோலத் தெரிகிறது. ஜெயலலிதா வளர்த்துக் கொடுத்த கட்சியையும், கைப்பற்றிக் கொடுத்த ஆட்சியையும் இவர்கள் வைத்துக் காப்பாற்ற மாட்டார்கள் என்பதற்கு, பட்டவர்த்தனமான உதாரணம் ஆகிவிட்டது சென்னை கடற்கரையில் நடந்த காளைப் புரட்சியைக் காக்கிக் களங்கமாக ஆக்கிய நிகழ்ச்சி. ஆளும் தலைமையும் சரி இல்லை, ஆளும் கட்சியின் தலைமையும் சரி இல்லை என்பது எதிர்க்கட்சிகளைவிட காவல் துறைக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனால்தான் தனது `லத்தி ஆட்சி'யைக் கூச்சமே இல்லாமல் நடத்துகிறது. எல்லா அராஜகங்களையும் செய்துவிட்டு, அதற்குப் பொய்யான ஆதாரங்களைப் புதிது புதிதாக அடுக்குகிறது.

குவைத் தடை :சிரியா, ஈராக்,பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகளுக்குத் குவைத் அரசு தடை உத்தரவு .


மின்னம்பலம் :அமெரிக்காவைத் தொடர்ந்து சிரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாட்டு அகதிகளுக்குத் தடைவிதித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று தீவிரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு உலக நாடுகள் அனைத்தும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தன. இந்நிலையில், அமெரிக்காவைத் தொடர்ந்து சிரியா, ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய ஐந்து முஸ்லிம் நாட்டு மக்களும் குவைத்துக்குள் நுழையத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட 5 நாடுகளிலிருந்து வருவோருக்கு விசா வழங்குவதை நிறுத்திவைத்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு ஒருபோதும் குவைத் மண்ணில் இடம் இல்லை என்றும் அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.

தேஜ்பகதூர் யாதவ் விஆர்எஸ் ரத்து! ... எல்லை பாதுகாப்புப் படை வீரரின் விஆர்எஸ் ரத்து!


மின்னம்பலம் : எல்லை பாதுகாப்புப் படை வீரர் தேஜ்பகதூர் யாதவை கைது செய்து கொடுமைப்படுத்துவதாக அவரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த மாதம், எல்லை பாதுகாப்புப் படையின் 29வது பட்டாலியனில் பணியாற்றிவரும் தேஜ்பகதூர் யாதவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தினமும் குளிரில் 11 மணி நேரம் கால்கடுக்க தாங்கள் நிற்பதாகவும், பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்கச்செல்வதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தங்களுக்கு அரசு வழங்கும் உணவுப் பொருட்களை, உயர் அதிகாரிகள் சட்ட விரோதமாக விற்பனை செய்து பணமாக்கிக் கொள்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, தேஜ்பகதூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர்மீது பலமுறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது என்றும் குடிகாரர் எனவும் பாதுகாப்புப் படை கருத்து தெரிவித்தது.

மதுரையில் நூற்றுக்கணக்கான செல்போன்,பர்ஸ்,ஏடிஎம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டன! மதுரை உண்மையறியும் குழு அறிக்கை

madurai-thamukkamthetimestamil.com :சல்லிக்கட்டு போராட்டத்தையொட்டி மதுரை அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகர் தத்தனேரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான செல்போன்கள், பணம், பர்ஸ், ஏடிஎம், ஆதார், வாக்காளர் அட்டைகள் எவ்வித சட்டநடைமுறைகளும் பின்பற்றப்படாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை உரியவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கவேண்டும் என வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
பேராசிரியர் முரளி மற்றும் பல்வேறு அமைப்புகளின் – அமைப்புகளைச் சாராத வழக்கறிஞர்கள் 18 பேர் அடங்கிய உண்மை அறியும் குழு கடந்த 24ஆம் தேதியன்று அலங்காநல்லூரிலும், 28ஆம் தேதி மதுரை நகரிலும் மக்களிடம் விசாரித்தது. பின்னர் அக்குழுவினர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி வாக்குமூலங்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியான கள ஆய்வு, காவல்துறை அதிகாரிகளின் பதில்கள், பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, 23.01.2017 அன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் மதுரை மாநகரில் இரயில்மறியல் நடந்த தத்தனேரி – மேல அண்ணாத்தோப்பு – தாகூர் நகர் – செல்லூர் பகுதிகளில் நடந்த காவல்துறை தடியடி குறித்து கீழ்க்கண்ட உண்மைகளைக் கண்டறிந்துள்ளோம்.
  1. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டக்களத்தில் இருந்து வெளியூர் இளைஞர்களோ, ஊர் மக்களோ வன்முறையில் ஈடுபடவில்லை. ஊர்க்கமிட்டியில் உள்ள உள்ளூர் அ.தி.மு.க.வினர் முதலில் கல்லால் எறிந்து வன்முறையைத் தூண்டியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நூற்றுக்கணக்கானோரை கடுமையாக அடித்துள்ளனர். வீடுகளில் இருந்தவர்கள், போராட்டத்தில் இல்லாதவர்களையும் தாக்கி கைதுசெய்துள்ளனர். மக்கள் திருப்பித் தாக்கவில்லை.

ரேஷன் கார்டுக்கு சர்க்கரை கிடையாதா இனிமேல்?; யாரை மகிழ்வூட்ட சர்க்கரை மானியத்தை ரத்து செய்கிறது மத்திய அரசு?

dc-cover-td6b4vhicb2rcea1bsr7efv893-20160213070211-medithetimestamil.com :தமிழகத்தில் இயங்கும் 33 ஆயிரத்து  973 ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி,  குறைந்த விலையில் சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, டீ தூள், உப்பு, சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள கிராமப்புற குடும்பங்கள் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களையே நம்பியுள்ளன.
வெளிக்கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.ஆனால்,  வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மலிவு விலையில் சர்க்கரை கிடைக்கச் செய்வதற்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

சித்தப்பா கலைஞரிடம் கெஞ்சிய ராதாரவி – சசிகலா அதிர்ச்சி?

நடிகர் ராதாரவி திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். திடீரென திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானார். அதிமுகவில் சேர்ந்த பிறகு ஜெயலலிதா அவரை எம்.எல்.ஏ.வாக்கினார். 2009ல் மீண்டும் அதிமுகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் ராதாரவி. பின்னர் டெல்லியில் ராகுல்காந்தியையும், திமுக தலைவர் கருணாநிதியையும் சந்தித்தார். ஆனால் 2010ல் அதிமுகவில் இணைந்தார். தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியில் நடந்து குழப்பமான அரசியலால் அதிமுகவில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்நிலையில், பழனியில், நடிகரும் திமுக நிர்வாகியுமான வாகை சந்திரசேகர் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதாரவி பேசுகையில், தற்போது நான் எந்த தலைமையும் ஏற்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

Aircell Maxis ஏர் செல்-மக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள உட்பட அனைவரும் விடுதலை!

A timeline is here for  Aircel-Maxis case மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உட்பட குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரையும் கோர்ட் விடுதலை செய்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் இருந்து கலாநிதிமாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் விடுவிப்புஇந்த வழக்கு கடந்து வந்த பாதை:
2011 அக்டோபர்: ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்த சிவசங்கரன், அதை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார் என்று சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை மேக்சிஸ் குரூப் வாங்கியிருந்த நிலையில் அதற்கு பிரதி உபகாரமாக ரூ.742 கோடியை சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.