சனி, 15 பிப்ரவரி, 2020

பாசிச அரசு வீழ்வது உறுதி ... ஆனால் எத்தனை உரிமைகளையும் உயிர்களையும் ....

சுமதி விஜயகுமார் : டெல்லி தேர்தலில் பாஜக தோல்வியில் பெரிதாக
மகிழ்ச்சி அடைய ஒன்றுமில்லை. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலில் தோல்வி அடைந்த பின்பு தான் caa, npr, nrc யை பாஜக அரசு சட்டம் ஆக்கி இருக்கிறது. டெல்லி தேர்தலில் தோல்வி அடைத்ததினால் தங்கள் மதவாத அரசியலையோ மாட்டு அரசியலையோ நிறுத்தப்போவதில்லை. மக்களின் எந்தவித நல திட்டங்களையும் கொண்டு வரப்போவதில்லை.
பாஜக என்று மட்டுமில்லை. நம்மை ஆண்ட எந்த அரசிற்கு எதிராகவும் நம்மில் ஏதோ ஒரு பிரிவினர் போராடிக்கொண்டு தான் இருந்திருக்கிறோம். ஆளும் வர்க்கம் அத்தி பூத்தாற்போல் எப்போதாவதுதான் மக்களுக்கானதாய் அமையும். அப்படி அமைந்த அரசு கொண்டு வரும், அல்லது மக்கள் போராடி பெரும் ஒரு சில உரிமைகளையும், சட்டங்களையும் தவிடு பொடியாய் ஆக்கிவிடும் அடுத்து வரும் அரசு.
முகநூலில் நண்பர்கள் பட்டியலில் 90% பாஜக எதிர்ப்பாளர்கள் தான் இருக்கிறார்கள். கிணற்று தவளை போல் இந்தியா முழுவதும் அப்படிதான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். ஒருவரை காணும் வரை.
கணவரின் நண்பர். அழகான குடும்பம். 2 அழகான குழந்தைகள். அவர் தொழில் பற்றி பேச்சு வர, முன்பு போல் இல்லை கொஞ்சம் தொழில் முடங்கி விட்டது என்றார். Gst யாலா என்று கேட்ட பொழுது. ஆமாம், ஆனால் அது மிக அருமையான திட்டம். அந்த திட்டம் வந்த பிறகு யாராலும் வரி ஏய்க்க முடியவில்லை என்று பிஜேபி புகழ் பாடினார். நண்பர்களிடம், உறவினர்களிடம் வழிய சென்று அரசியல் பேசுவதில்லை என்ற முடிவில் இருந்ததினால் எதுவும் சொல்லாமல் கேட்டு கொண்டிருந்தேன். இணையரோ ' இவங்க பிஜேபி supporter தான்' என்று கோத்துவிட அப்படியா என்று நண்பருக்கு மகிழ்ச்சி.

இது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சனை அல்ல.... ஒன்றாக சேர்ந்து போராடியே தீரவேண்டும் .


Shalin Maria Lawrence : நேற்று வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மேல் நடந்தது மிக பெரிய வன்முறை.
கூட்டத்தில் குழந்தைகள் இருப்பது தெரிந்தும் அவர்களை அடிக்க முற்பட்டது அவர்களை இந்த அரசாங்கம் மனிதர்களாக கூட மதிக்கவில்லை என்பதனை காட்டுகிறது.
இந்திய அரசியலமைப்பு ஆர்ட்டிகள் 19(1)(b) ஆயுதமில்லாமல் அமைதியான முறையில் போராட்டதுக்காக மக்கள் கூடுவது அவர்களது உரிமை என்று சொல்லுகிறது. ஆனால் இந்த பாசிச அரசோ திரும்ப திரும்ப இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி வருகிறது.
காலம் காலமாக பாஜக பல போராட்டங்களை நிகழ்த்தியுள்ளது.காங்கிரஸ் ஆட்சியின் போது அவர்கள் ரோட்டில் புரளாத நாள் கிடையாது .அப்படி இருந்தும் இப்போதைய போராட்டகாரர்களை அவர்கள் முடக்குவது பாஜகவின் ரெட்டை வேஷத்தை வெளிபடுத்துகிறது.
இங்கே அனைவரும் சமம் எனும்போது சிறுபான்மையினருக்கு மட்டும் போராட வாய்ப்பு கொடுக்காதது ஏற்கனவே சமமற்ற நிலையை உறுதி செய்கிறது.ஆகவே NCR எனும் ஆயுதமும் சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஜோதி மணி மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமனம்? : காங்.மேலிடம் திடீர் ஆலோசனை

தினகரன் : சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக ஜோதி மணி
எம்பியை நியமிக்க டெல்லி மேலிடம் ஆலோசித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஜான்சி ராணியின் பதவி காலம் முடிவடைந்துள்ளது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் எடுத்து வருகிறது. இதற்காக மகிளா காங்கிரசின் தமிழக மேலிட பொறுப்பாளர் சவுமியா சென்னையில் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் நேர்முக தேர்வு நடத்தினார். அதில் 10 பேரை தேர்வு செய்து அவர்களை டெல்லி வரவழைத்துள்ளார். அவர்களுக்கு டெல்லியில் மகிளா காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் நேர்முக தேர்வு நடத்தியுள்ளனர். இதில் இருந்து ஒருவரை தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

தர்பார் பட விநியோகஸ்தர்களை காணவில்லை?.. வருமான வரித்துறை மிரட்டல்?


வெப்துனியா : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தால் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என்றும் ரஜினிகாந்த் அதற்காக நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் ஒரு சில வினியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் இயக்குனர் முருகதாஸ் போராட்டம் நடத்துபவர்களிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
;இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் போராட்டம் நடத்திய விநியோகிஸ்தர்கள் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை வரும் என்றும் அப்போது தர்பார் படத்தின் உண்மையான வசூல் தொகையை அவர்கள் கணக்கில் காட்ட வேண்டிய நிலை வரும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 6 பேர் உயிரிழப்பு .. சீனாவில்

கண்ணீருடன் வுகான் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 6 பேர் பலிமாலைமலர் : சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவ ஊழியர்கள் 6 பேர் அதே வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. பீஜிங்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது.
இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,380 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 60 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவியுள்ள வுகான் நகரில் உள்ள மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் என அனைத்து மருத்துவ ஊழியர்களும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இவர்களில் பலரும் தங்கள் குடும்ப உறவுகளை பிரிந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 

CAA Protest: அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்பினர்


BBC : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற்ற மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை, இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிதம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், இன்று, சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.
அப்போது அனைத்து இஸ்லாமியர் இயக்க கூட்டமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திடீரென, சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியபோது காவல்துறையினர் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டு, அதிமுக கூட்டம் நடைபெற்ற தனியார் திருமண மண்டப வாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிராஃபிக் ராமசாமிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

Traffic Ramaswamy, டிராஃபிக் ராமசாமி, டிராஃபிக் ராமசாமிக்கு பிடிவாரண்ட், ஜெயலலிதாவை அவதூறு செய்ததாக வழக்கு, Traffic Ramaswamy non bailable warrant, jayalalitha defamation casetamil.indianexpress.com : ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்தாக தொடரப்பட்ட வழக்கில் சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்டு பிறப்பித்து சென்னை முதன்மை...
ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்தாக தொடரப்பட்ட வழக்கில் சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்டு பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி நபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த நிவாரண பொருட்கள் வழங்கபட்டது.

சீன வுகான் மீட்பு பணி குறித்து ஏர் இந்தியா கேப்டன்.... இது தான்...ஏர் இந்தியா.... ரிபெல் ரவி


Rebel Ravi ; இது தான்...ஏர் இந்தியா...🇮🇳....
மரண அமைதி.. சாலைகள் வெறிச்.. அச்சமூட்டிய அனுபவம்.. வுகான் மீட்பு பணி குறித்து ஏர் இந்தியா கேப்டன்
மனிதர்கள், வாகனங்கள் இல்லாமல் பிரகாசமாக எரியும் தெருவிளக்குகள், நிசப்தமான சூழல் ஆகியவற்றை அனுபவித்ததாக சீனாவில் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமானி அமிதாப் சிங் தெரிவித்தார்.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 1500- க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 65ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியுள்ளது.
சீனாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் அங்கு பணி நிமித்தமாகவும் கல்விக்காகவும் சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதையடுத்து தங்களை மீட்க வேண்டும் என அந்தந்த நாட்டு அரசிடம் சீனாவில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. நோய் எல்லா இடங்களிலும் பரவுவதற்கு முன்னர் சீனாவில் பல்வேறு இடங்களில் இருந்த பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை அந்தந்த நாடுகள் மீட்டன.

ஏர் இந்தியா விமானம் இரு முறை வுகான் நகரத்திற்கு சென்றது. பிப்ரவரி 1-ஆம் தேதி 324 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அது போல் அடுத்த நாள் இன்னொரு விமானத்தில் 323 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
இந்தியர்கள்
இந்தியர்களை மீட்க வேண்டும்

சென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்டத்தில் குதித்த இஸ்லாமிய அமைப்புகள்

tamil.oneindia.com :  சென்னை  வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
 குடியுரிமை சட்டத் திருத்தம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்று மாலை முதல்  போராட்டம் நடத்தி வந்தனர். 
இந்த தர்ணா போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் பங்கேற்றனர். 5 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களை கலைந்து போகுமாறு காவல்துறையினர் எச்சரித்தனர். அப்போது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. 
காவல்துறையினர், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதாகவும், சிலரை அடித்து உதைத்ததால் கூறி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த களேபரங்களுக்கு நடுவே சுமார் 120 பேரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். 
அவர்களை விடுதலை செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை தொடருவோம் என்று பிற போராட்டக்காரர்கள் வண்ணாரப்பேட்டை பகுதியில் அமர்ந்து விட்டனர். இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவன்.. ஆவடியில் திறந்த நிலையில் கிடந்த தொட்டி

sumuganns7.tv : ஆவடியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போன 6 வயது சிறுவன் இறந்த நிலையில் கழிவு நீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
sewageசென்னை, ஆவடி காந்திநகர் அன்பழகன் தெருவை சேர்ந்தவர் காந்தி வள்ளி தம்பதியரின் 6 வயது குழந்தை சுமூகன். மாலை 5 மணியளவில் தெருவில் தனது அக்காவுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என ஆவடி காவல் நிலையத்தில் இரவு 9 மணிக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் காணாமல் போனதாக கூறப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சிறுவன் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமா? என்ற சந்தேகத்தில் தேடி வந்த நிலையில், காந்தி நகர் பகுதியில் உள்ள அன்பழகன் நகர் அதனை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள cctv காட்சிகளை சுமார் 2 மணிநேரம் ஆய்வுசெய்த காவல்துறையினர்,

CAA, NRC NPR இஸ்லாமியர்களுக்கு மட்டுல்ல ... கடந்து சென்றால் ஹிட்லரின் ஜெர்மனியில் நடந்ததுதான் ...

Karthikeyan Fastura : வரலாற்றில் பல இடங்களில் மனிதர்கள் செய்யும் மிகப்
பெரும் பிழை தன்னை பாதிக்கும் வரை நாட்டில் என்ன அநியாயம்
நிகழ்ந்தாலும் கண்டும் காணாது செல்வது. உயிர்போகும் பிரச்சனை நிகழ்ந்து கொண்டிருந்தாலும் என்னை பாதிக்கவில்லை என்ற அளவில் அமைதியாகி விடுவது.
ஜெர்மனியில் நாசிசம் பரவிக் கொண்டு இருந்தபோது யூதர்கள் அதை பற்றிய பெரிய அக்கறை இன்றி பொருள் சேர்ப்பதில் குறியாக இருந்தார்கள். என்னவாயிற்று? அவர்கள் தலைமுறை தலைமுறையாக சேர்த்த தொழில், செல்வம், வீடு என்று அத்தனையும் இழந்து முகாம்களுக்கு இழுத்து செல்லப்பட்டார்கள்.
அடுத்து அவர்கள் அவ்வாறு இழுத்து செல்லப்படுவதையும், கூட்டம் கூட்டமாக, கொத்து கொத்தாக கொல்லப்படுவதை பார்த்து கண்டும் காணாதிருந்தார்கள் ஜெர்மானியர்கள். நாசிச வெறி உச்சகட்டத்திற்கு சென்று ஹிட்லர் கண்ணுமண்ணு தெரியாத அதிகார வெறியில் மிகப்பெரும் வல்லரசாக இருந்த ஜெர்மனியை உலகத்தின் வெறுப்புக்கு ஆளாக்கினார்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

காதலர் தினம் Feb 14 உரிமை இல்லையா? CAA Protest | Chennai | Valentine 2020

தமிழகத்தில் பல இடங்களில் CAA க்கு எதிரான போராட்டம்- போலீசார் தடியடி ஒருவர் இறப்பு .. .


பா. சந்தோஷ் - நக்கீரன் :  சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து
செல்ல மறுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தினர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை விடுவிக்க கோரியும் இஸ்லாமிய பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான சூழல் நிலவுவதால் அந்த பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் நடந்த கல்வீச்சில் படுகாயமடைந்த சென்னை மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. . இதனிடையே சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். .

மாதவிடாயை நிரூபிக்க 68 மாணவிகளின் உள்ளாடையை கழற்றிச் சோதனை குஜராத் கல்லூரி

.kalaignarseithigal.co: மாதவிடாயை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடையை கழற்றிச் சோதனை செய்த கல்லூரி” : குஜராத்தில் கொடூரம்! குஜராத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதா எனச் சோதிக்க, உள்ளாடைகளை கழற்றச்சொல்லிக் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் பகுதியில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது ஸ்ரீ சஜ்ஜானந்த் மகளிர் கல்லூரி. இந்தக் கல்லூரியில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
2012ல் நிறுவப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம் கடந்த 2014லில் ஸ்ரீ சுவாமிநாராயண் கன்யா மந்திர் கோவிலுக்குச் சொந்தமான பகுதியில் இருக்கும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்து மாணவர்களை கட்டாயப்படுத்திவருகிறது.
குறிப்பாக கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவில், உணவகம் போன்ற பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் .. ஒன்றரை ஆண்டுகள் 16 உறவினர்களால் பாலியல் வன்கொடுமை ... சிறுமி.மரணம்...!


tamil.news18.com :விழுப்புரம் மாவட்டத்தில், தாய்மாமன் உள்ளிட்ட உறவினர்கள் 16 பேரால் ஒன்றரை ஆண்டுகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி சென்னையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உடன் பிறந்த சகோதரியின் இரண்டு பெண் குழந்தைகளை தாய்மாமன் உள்ளிட்ட 16 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையில் இருந்த சிறுமி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். உறவினருடன் அந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் பிறந்தன. கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரைப் பிரிந்தார் அந்தப் பெண்.
பின்னர் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்த அவர், அங்குள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு உடன் பணியாற்றிய ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது; முதல் கணவருக்கு பிறந்த இரு பெண் குழந்தைகளும் சொந்த ஊரில் பாட்டியிடம் வளர்ந்து வந்தனர். 9 வயது மற்றும் 7 வயதான இரு சிறுமிகளும் தாயின் சொந்த ஊரிலேயே உள்ள பள்ளியில் படித்து வந்தனர்

இலங்கைக்கு விசா தேவையில்லை ... ஏப்ரல் 30வரை இந்தியா உட்பட பலநாடுகளுக்கு இந்த சலுகை


மாலைமலர் :விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வரும் திட்டம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விசா இல்லாமல் சுற்றுலா வரும் திட்டம் ஏப்ரல் 30வரை நீட்டிப்பு - இலங்கை அரசு அனுமதி சுற்றுலா பயணிகள் கொழும்பு: இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட அண்டை நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக பரிசீலிக்க இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நிர்ணயித்தார். இந்த திட்டத்தின் மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விசா இன்றி சுற்றுலா பயணிகள் இலங்கை சென்று வருகின்றனர். இந்நிலையில், விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வரும் திட்டம் ஏப்ரல் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

நெல்லை ... மாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து.. பிளந்த துண்டு முத்தரசி கண்ணில் பார்வை கேள்வி குறி

ஆதிநாராயணன் tamil.oneindia.com - hemavandhana.: நெல்லை: மாணவியை ஆசிரியர் அடித்த அடியில் அந்த பிரம்பு முறிந்து... பிய்ந்து கொண்டு போய்.. பக்கத்தில் உட்கார்ந்திருந்த இருந்த இன்னொரு மாணவி முத்தரசியின் கண்ணை துளைத்து சென்றது.. முத்தரசியின் கண்ணிர் ரத்தமாய் வழிந்தது.. இப்போது பார்வை பறி போகும் அபாயத்தில் உள்ளார்!
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வன்... இவரது மகள் முத்தரசி... 10 வயது சிறுமி.. 5-ம் வகுப்பு படிக்கிறார்!
முத்துசெல்வன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், பாட்டி வீட்டில்தான் முத்தரசி தங்கி படித்து வருகிறார்... கூடங்குளத்தில் உள்ள புனித அன்னம்மாள் தொடக்கப்பள்ளி... இதுதான் முத்தரசியின் ஸ்கூல்... ஆதிநாராயணன் என்பவர் இவரது கிளாஸ் வாத்தியார்!

Tamil Nadu Budget 2020: எந்தெந்த திட்டம், துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

BBC :தமிழக அரசின் 2020-2021ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதை பல்வேறு துறைசார் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட்டியல் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது தொகுக்கப்பட்டுள்ளது.
திட்டம்/ துறை நிதி ஒதுக்கீடு (கோடி ரூபாய்களில்) 2020 -2021 நிதி ஒதுக்கீடு (கோடி ரூபாய்களில்) 2019-2020



தமிழ் வளர்ச்சித் துறை 74 54



பள்ளிக் கல்வித்துறை 34,181 28,757



உயர் கல்வித்துறை 5,052 4,584



வேளாண்துறை 11,894 10,550



சுகாதாரத்துறை 15,863 12,563



காவல்துறை 8,876 8,084

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு!

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு!மின்னம்பலம் : 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட இந்த 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சக்கரபாணி.

கொரோனா வைரஸ்.. அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை சீனா மேற்கொள்கிறது

Chinniah Kasi : கொரோனா வைரசும் புதிய பனிப்போரும் ! தீக்கதிர்கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகமே அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை மக்கள் சீனம் எடுத்துக் கொண்டிருக்கிறது. பத்தே நாட்களில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டியதோடு மேலும் 12,500 படுக்கைகளுக்கான ஏற்பாட்டையும் செய்துவிட்டது. சீனாவின் மற்ற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் உஹான் நகரத்திற்கு விரைந்துள்ளனர். நோய்க்குள்ளானவர்களை ‘தனிமைப்படுத்தி மீட்கும்’ (quarantine) மிகப்பெரிய காரியமும் விரைந்து நடந்துள்ளன. மேலை நாட்டு ஊடகங்களும் நம் நாட்டு பத்திரிகைகளும் ‘சீனாவின் பெரும் நகரங்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன’ என்று எழுதுவது உண்மையிலேயே அந்த மக்களின் கட்டுப்பாட்டைத்தான் காட்டுகின்றது. இதற்கும் மேலாக, வைரசின் மரபணு (genome) கட்டமைப்பை மிக விரைவாக கண்டறிந்தது மட்டுமல்லாமல் அதை எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாக பொது தளங்களில் பதிவேற்றியுள்ளார்கள். அதனால் தான் உலக சுகாதார கழகத்தின் செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரியான் அதை ‘வரலாற்றுச் சிறப்பு மிக்கது’ என்றும் அதன் மூலம் விரைவான தீர்வுகளைக் கண்டறிய முடியும் என்றும் பாராட்டியுள்ளார்.

கொரோனா பாதிப்பு சந்தேகம்.. தொழிலதிபர் சுட்டுக்கொலை ... இது வடகொரியா 'ஸ்டைல்’


கொரோனா பாதிக்கப்பட்ட நபர் (கோப்பு படம்)கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை - இது வடகொரியா 'ஸ்டைல்’மாலைமலர் : வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் பொது குளியல் அறைக்கு சென்றதால் வைரஸ் பரவாமல் இருக்க அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சியோல்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது.
இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,370 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் 60 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், சர்வாதிகார ஆட்சிக்கு பெயர்போன வடகொரியா கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகத்திற்கு உள்ளான நபரை சுட்டுக்கொன்றுள்ளது.

சீனவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை:! ... கொரொனோ வைரஸ் அபாயம் ...

பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை: அரசின் அறிவிப்பால் அதிர்ச்சிவெப்துனியா:  சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது >இதனை அடுத்து கொரோனாவைரஸ் பாதிப்பால் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள சர்வதேச கால்பந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டது. அது மட்டுமின்றி உலக மொபைல் மாநாடு சீனாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மாநாட்டில் நோக்கியா, வோடோபோன் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் கொரோனாவைரஸ் அச்சத்தின் காரணமாக வர மறுத்து விட்டதால் இந்த மாநாடும் ரத்து செய்யப்பட்டது

கொரோனா..வைரஸ் சீனாவில் 1487 பேர் உயிரிழப்பு ... கைமீறி போகிறது?


பலி எண்ணிக்கை
என்ன வேகம் tamil.oneindia.com - shyamsundar : பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலி எண்ணிக்கை 1487 ஆக உயர்ந்துள்ளது. இது அந்நாட்டு மக்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. நோய் தாக்கியவர் தொட்டால் அந்த வைரஸ் இன்னொருவருக்கும் பரவும்.
மத்திய சீனாவில் தோன்றினாலும் தற்போது அந்நாடு முழுக்க இந்த வைரஸ் வேகமாக பரவி விட்டது. அதேபோல் மிக முக்கியமாக சீனாவை போலவே 22 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.
கொரோனா கோரத் தாண்டவம்.. இந்தியர்கள் பீதியடைய வேண்டாம்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் நம்பிக்கை

இந்துமதத்தில் சுயமரியாதை இல்லை 430 தலித்துகள் இஸ்லாமியராக மதம் மாறினர்.. கோவை மேட்டுப்பாளையத்தில்


இந்து மதத்தில் சுயமரியாதை இல்லை எனக் கூறி இஸ்லாமியர்களாக மதம் மாறிய தலித் மக்கள்
tamil.news18.com : இந்து மதத்தில் சுயமரியாதை இல்லை என்று கூறி சுமார் 430 தலித்துகள்  கோவை மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமியர்களாக  மதம் மாறியுள்ளனர
; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தலித் குடும்பங்களை சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் துணிக்கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியம் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்திய தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
நாகை திருவள்ளுவன் மீது அடுத்தடுத்து பல ஊர்களில் வழக்குகள் போடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலித் மக்களுக்கு உரிய சுயமரியாதை இந்து மதத்தில் கிடைக்காததால், தமிழ் புலிகள் அமைப்பினர் 3000 தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறப் போவதாக அறிவித்திருந்தனர்.

பிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராயண மூர்த்தி மருமகன் ரிஷி சுனக்

பிரதமர் போரிஸ் ஜான்சன் - பதவி விலகிய நிதியமைச்சர் சஜித் ஜாவித்ரிஷி சுனாக்   BBC : இன்ஃபோசிஸ் கம்பெனி நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேன்சலர் ஆஃப் எக்ஸ்செக்கர் என்ற பதவி, பிற நாடுகளில் நிதியமைச்சர் என்று சொல்லப்படும் பதவிக்கு இணையானது. இந்தப் பதவியில் இருந்து வந்த சஜித் ஜாவித் தனது பதவியை ராஜினாமா செய்து அதிர்வலைகளை உருவாக்கினார். அவருடைய உதவியாளர் குழுவை பதவி நீக்கும்படி பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டார். இதையடுத்து, “சுயமரியாதையுள்ள எந்த அமைச்சரும் இந்த நிபந்தனையை ஏற்க முடியாது” என்று கூறி தாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.
நான்கு வாரத்தில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருந்த நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்தார்.
இதையடுத்து கருவூலத்துக்கான தலைமைச் செயலாளர் (சீஃப் செக்ரட்டரி டூ எக்ஸ்செக்கர்) பதவியில் இருந்த 39 வயது ரிஷி சுனாக் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியது சிங்கப்பூர் வழியாக? BBC


கரிஷ்மா வாஸ்வானி - ஆசிய வணிகச் செய்தியாளர், பிபிசி.:
சீனா தவிர்த்த பிற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, சிங்கப்பூர் சில விடைகளைத் தருகிறது.< கடந்த புதன்கிழமை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வங்கியில் பணியாற்றிய 300 ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதற்காக ஒட்டுமொத்த அலுவலகத்திற்கே விடுமுறை அளிக்கும் நிலையில்தான் சிங்கப்பூரில் கொரோனா குறித்த அச்சம் மேலோங்கி வருகிறது.
ஏனெனில் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சிங்கப்பூரும் ஒன்று. அங்கு 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கண்டறியப்பட்டாலும், சிங்கப்பூரில் இந்த எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

டொனால்டு டிரம்ப் வருகை.. குடிசைகளை மறைக்க ஏழு அடிக்கு சுவர் ... குஜராத் குல்மால்

டொனால்டு டிரம்ப் வருகையின்  போது  குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடிக்கு  சுவர் தினத்தந்தி : டொனால்டு டிரம்ப் வருகையின் போது குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு சுவர் எழுப்பும் குஜராத் அரசு புதுடெல்லி. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு  டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியா வரும் ஜனாதிபதி  டிரம்பையும் அவரது மனைவியையும் வரவேற்கும் விதத்தில் வெளியுறவு அமைச்சக டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவுகளை வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், டிரம்பை வரவேற்று பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
டிரம்புக்கு  சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு குஜராத் மாநில அரசும், இந்திய அரசும் தயாராகி வருகிறது. இந்த நிலையில், குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது.

காதலர் தினத்துக்கு எதிராக இந்து முஸ்லிம் தீவிரவாதிகளின் அடாவடி பிரசாரம்

    ஆலஞ்சியார் : காதல் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் இணைந்து சுற்றுவது விபச்சாரம்
..தவ்ஹீத்ஜமாத் ..
ஆணும் பெண்ணும் தனியாக பீச் பார்க்கில் இருந்தால் திருமணம் செய்துவைத்து லாட்ஜ் புக் செய்து கூடவே 25,000 பணமும் தருவோம் இந்துமுன்னணி.. ..
இந்து முன்னணிகாரர்களின் பேச்செல்லாம் செல்லாகாசு என்பதால் அதை காரியமாக்க தேவையில்லை ..
ஆனால் தாங்கள் நேர்வழியில் என்பவர்களிடத்தில் தான் பேச வேண்டியிருக்கிறது .. இவர்கள் யார் எது விபச்சாரமென முடிவு செய்ய ஒருவரின் தனி சுதந்திரத்தில் தலையிட இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ..
காதல் ஏதோ கெட்ட காரியம் போலவும் இவர்கள் மட்டுமே ஒழுக்கமானவர்கள் போலவும் இவர்கள் மட்டுமே சிறந்தபாதையில் செல்வது போலவும் எத்தனைகாலம் ஏமாற்றி திரிவார்கள் .. ஒரு பெண்ணும் ஆணும் தனித்திருந்தாலே அவர்கள் கெட்டவர்கள் என்பதைபோல இவர்கள் பேசி திரிவது எந்தவகை நாகரீகம் . ..
காதல் புனிதமானதென்றெல்லாம் சப்பைகட்ட வரவில்லை மாறாக காதல் இயல்பானது ..
ஒவ்வொருவர் மனதிலும் வந்து போகும் உணர்வு .. யாரை யாரை வேண்டுமானாலும் விரும்புவதற்கோ வெறுப்பதற்கோ தடைபோட நாம் யார் .. எது தேவையென உணரும் போது அவர்கள் தங்களுக்கு நம்பிக்கை தருகிறவர்களை நேசிப்பது ஏதோ மிகப்பெரிய குற்றம் போல சித்தரிக்கிறார்கள்

வியாழன், 13 பிப்ரவரி, 2020

தமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கடன் சுமை ..பி டி ஆர் பழன்வேல் தியாகராஜன்

மின்னம்பலம் :தமிழக அரசு வாங்கும் கடனில் 18 சதவிகிதத்தை வட்டி கட்டவே செலவிடுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
தமிழகத்திற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. காலை 10 மணிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து, புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் வெளியிடுகிறார். ஆனால், தமிழக அரசின் கடன் மட்டுமே 4 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாகவும், நிதிச் சுமையில் தமிழக அரசு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “அதிமுக ஆட்சிக்கு வரும்போது தமிழக அரசின் கடன் தொகை 1 லட்சம் கோடியாக இருந்தது. ஜெயலலிதா மறைவின்போது 2 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 4 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 23, 500 கோடியாக உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

`மனிதனை மனிதன் சுமப்பதா?!’ -பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்த தருமபுர ஆதீனம்


தரும்புர ஆதீனம்.
vikatan.com - மு.இராகவன் - பா.பிரசன்ன வெங்கடேஷ் : மனிதர்கள் சுமந்துசெல்லும் பல்லக்கில், தருமபுரம் ஆதீனகர்த்தர் செல்வதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டதால் பல்லக்கில் செல்வதைக் கைவிட்டு, ஆதீனகர்த்தர் கோயிலுக்கு நடந்தே சென்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
protestநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இவர், ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்திவருகிறார். அப்போது, பக்தர்கள் அவரை ‘பட்டினப்பிரவேசம்’ எனப்படும் நிகழ்ச்சியாக, பல்லக்கில் அமர வைத்து, தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்துச்செல்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். “ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச்சென்றால் போராட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தார்.

பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

மாலைமலர் : தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பயணிகளை பரிசோதிக்கும் நிபுணர்கள் கொல்கத்தா: சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 1,357 உயிர்களை பலி வாங்கி உள்ளது.
மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சீனாவில் இருந்து 25க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள், சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவின் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணித்து கொல்கத்தா திரும்பிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீட் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடிய போலீஸ்

நீட் தேர்வுநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடிய போலீஸ்மாலைமலர் : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளை பிடிக்க சிபிசிஐடி போலீசார் பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடி உள்ளனர்.
சென்னை: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தமிழக மாணவர்கள் பலர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது.
தேனி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த சென்னை மாணவர் உதித் சூர்யா, தனது தந்தையும் டாக்டருமான வெங்கடேசன் மூலமாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டது முதலில் அம்பலமானது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் சிக்கிய உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
மேலும் பல மாணவர்கள் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலமாக டாக்டர் படிப்பில் சேர்ந்து இருப்பது வெட்ட வெளிச்சமானது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காஞ்சி சங்கரமடத்துக்கு வீடு தானம்

tamil.indianexpress.com : பாடகர்  எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெல்லூரில் உள்ள தனது பூர்வீக வீட்டை வேத பாடசாலை அமைப்பதற்காக விஜயேந்திரரை சந்தித்து சங்கர மடத்துக்கு தானமாக அளித்துள்ளார்.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என பல மொழி சினிமாக்களில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவருடைய இசை சேவையை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருந்து வழங்கி கௌரவித்துள்ளது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும் இவர் ஒரு தமிழ் சினிமா பாடகராகவே அறியப்படுகிறார். திரைப்பட பின்னணி பாடகராக வளர்ந்த பின் அவர் சென்னைக்கு குடியேறிவிட்டாலும் அவருடைய பூர்வீக வீடு நெல்லூரில் அப்படியே இருந்து வந்தது.

துருக்கியில் எச்சில் துப்பி பீட்ஸா டெலிவரி செய்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை! -(வீடியோ


 வெப்துனியா :  துருக்கியில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த பீட்ஸாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் மத்திய அனடோலி பகுதியில் உள்ள எஸ்கிசர் நகரை சேர்ந்தவர் புராக்ஸ். இவர் பீட்ஸா டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டுக்கு சென்று ‘பீட்ஸா’ டெலிவரி செய்தார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர் தனது அப்பார்ட்மெண்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவான வீடியோவை போட்டு பார்த்தார். அதில் இவர் டெலிவரி செய்த பீட்ஸாவின் மீது எச்சில் துப்பியது பதிவாகி இருந்தது. இது குறித்து புராக்ஸ் மீது பொலிஸாரிடம் புகார் செய்தார். பொலிஸார் இவரை கைது செய்து இஸ்தான்புல் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் புராக்ஸ்சுக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: கவர்னரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: கவர்னரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியதுதினத்தந்தி :  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் கவர்னரின் எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி, புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடியை சந்தித்து மனுவும் கொடுத்தனர். இதையடுத்து கவர்னர் கிரண்பெடியும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்பாக புதுவை சட்டசபையில் விவாதிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

வீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்?

வீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்?
 மின்னம்பலம் :  பிப்ரவரி 3 ஆம் தேதி திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, மாநில தேர்தல் பிரிவு செயலாளர் என்ற டம்மி பதவிக்கு மாற்றப்பட்டார் வீரபாண்டி ராஜா. இந்த ஆபரேஷன் நடந்து பத்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வீரபாண்டி ராஜா கூடாரத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வருகின்றன. அதேநேரம் ராஜா மீதான தலைமையின் கோபம் தீரவில்லை என்பதற்கான நிகழ்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ராஜாவின் மாவட்டப் பொறுப்பு பறிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சிலர் சேலத்திலுள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து அங்கே தலைமைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். ராஜா மீதான நடவடிக்கையை பரிசீலனை செய்யுமாறு தலைமைக்கு கோரிக்கையும் வைத்தனர். இந்நிலையில் வீரபாண்டி ராஜாவின் பதவிப் பறிப்பைக் கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோரும் பதவி விலகினார்கள். இந்நிலையில் பிப்ரவரி 6 ஆம் தேதி சந்திரமோகனை இளைஞரணியில் இருந்து நீக்கி முத்தனம்பாளையம் பி.அன்பழகனை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமித்தார் உதயநிதி. இதேபோல ஐடி விங் நிர்வாகிகளும் பிப்ரவரி 10 ஆம் தேதி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு - அதிர வைக்கும் கொரோனா வைரஸ்

ஒரே நாளில் 242 பேர் பலி - அதிர வைக்கும் கொரோனா வைரஸ் மாலைமலர் :  சீனாவில்  நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1357 ஆக அதிகரித்துள்ளது.
பீஜிங சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி  மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த  வைரஸ் பரவியுள்ளது.
சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த  வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.; இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 1,113 பேரும், ஹாங்காங் மற்றும் பில்ப்பைன்சில் தலா ஒருவரும் என மொத்தம் ஆயிரத்து 115 பேர் உயிரிழந்திருந்தனர்.

ஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க ". "ஒன்..டூ ..." நிசப்தமானது! .ஆஸ்பத்திரி டைரி- பாகம் 1.

Shalin Maria Lawrence : ஆஸ்பத்திரி டைரி- பாகம் 1
நேரம் சரியாக காலை 7 மணி 8 நிமிடங்கள் .அந்த உயர்தர அதிநவீன ஆஸ்பத்திரியின் மூன்றாம் தளத்திலுள்ள லேபர் வார்டிலிருந்து பச்சை நிற கவுன் உடையணிவித்து தலையில் பிளாஸ்டிக் உறையில் மூடப்பட்டு ஒரு நீண்ட ஸ்ட்ரெச்சரில் என்னை வைத்து ஒரு வார்டுபாய் தள்ளி கொண்டு இரண்டாம் தளத்திற்கு சென்றுகொண்டிருந்தார். இதயம் திக் திக் என்று அடித்து கொண்டிருந்தது .காலையில் நடந்த ஆஸ்பத்திரி சடங்குகளில் இந்த நிலை ஏற்பட்டிருந்தது .
உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் வாய்த்திருக்கும் என்று தெரியாது .அதிகாலை கண் விழித்ததும் ஆசனவாயில் நெருப்பு மாத்திரைவைக்கப்படும் .காலை கடனை முடித்து ,குளித்து முடித்த பின்னே அந்தரங்க இடங்களில் சர்.... சர்... என்று சவரம் செய்வார்கள் .பொதுவாக சோப்பைக்கொண்டு ஈரப்படுத்தி செய்யும் சவரம் போல் இது கிடையாது .காய்ந்த தோளின்மேல் ஒரு மெல்லிய பிளேடால் சிறு முடிகளை மழிக்கும்போது சர்..சர்..சர்..என்கிற சத்தம் அந்த அதிகாலை நிசப்தத்தை கிழிக்கும் .யாரோ ஒருவர் நமது அந்தரங்கத்தை எந்த ஒரு விருப்பும் வெறுப்பும் இல்லாமல் பார்த்துக்கொண்டு அதை சுத்தப்படுத்தி கொண்டிருக்கிறார் என்கிற ஒரு சிந்தனை அப்படி ஒரு ஆசுவாசத்தை கொடுக்கும் .அந்த நொடியில் நாம் என்ன பாலினம் என்று மறந்துபோவோம் .ஆணும் இல்லை பெண்ணும் இல்லை நான் ஒரு உடல் மட்டும். .

ஆம் ஆத்மி வெற்றியும் அரசியல் புரிதலும் .. காங்கிரஸ், பிஎஸ்பி உள்பட 10% இடத்திருட்டை ஏன் ஆதரித்தார்கள் என்று புரிகிறதா?

மாநிலங்களில் பார்ப்பனர்கள் விகிதாசாரம்  
பா.ச. பாலசிங் ; கேஜ்ரிவால் வெற்றியும், நம் அரசியல் புரிதலும்...
97% Vs 3% இது நமக்கு மிகப் பரிச்சியமான கணக்கு. ஆனா, இது இந்தியாளவிலான கணக்கு. மாநில வாரியாக பார்ப்பனர்கள் கணக்கை இணைத்துள்ளேன். FC கணக்கு தனி.
இதில் இருந்து புரிவது?
1% பார்பனர்கள் இருக்கும் தமிழ்நாட்டிலேயே சமூக நீதி அரசியலை பேசுவதற்கு நாக்கு தள்ளுது, 10% கிட்டத்தட்ட 2 கோடி பார்ப்பனர்கள் + மற்ற FC உள்ள உத்தரப் பிரதேசத்தில் சமூக நீதி பேசுவது எவ்வளவு கடினமாக இருக்கும். விளங்குதா?
ஏன் பிஎஸ்பி துணைத் தலைவர்களாக பார்ப்பனர்கள் உள்ளார்கள் என்பது புரிகிறதா?
ஏன் காங்கிரஸ், பிஎஸ்பி உள்பட 10% இடத்திருட்டை ஆதரித்தார்கள் என்று புரிகிறதா?
எங்கெல்லாம் பார்ப்பனர்கள் குறைந்தது 5% உள்ளார்களோ, அங்கெல்லாம் சனாதனா ஆட்சியே நடைப் பெறுகிறது. இல்லையா?
இதற்கு எதிராக எந்த அரசியலை நாம் முன்வைக்கிறோம்?
பார்ப்பனரல்லாத அரசியல் மட்டும் சரியாக வருமா? மற்ற FC, பானியாக்களை எதிர்கொள்வதற்கு என்ன அரசியல் நம்மிடம் உள்ளது?

இலங்கையில் 2 வருடங்களில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள் ராகிங் காரணமாக வெளியேறி உள்ளனர் ..


Kamali Teps : கடந்த இரண்டு வருடங்களில் சுமார் இரண்டாயிரம் மாணவ மாணவிகள் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். அவர்களின் கல்வியை தொடர வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்ததுள்ளது. அப்படியானால் இன்னும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் பயம் காரணமாக பல்கலைக பக்கம் போகாமல் இருந்திருப்பார்கள்? எத்தனை ஆயிரம் மாணவர்கள் தங்கள் கல்விக் கனவு மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவமானங்களை சகித்துக் கொண்டு கல்வியை தொடர்ந்திருப்பார்கள்.இந்த முகநூலில் பதிவிறக்கி உள்ள இதற்கு முந்தைய வீடியோ பதிவை பாருங்கள்.
சட்டத்தின் ஆட்சிக்கு அப்பால் ஒரு அராஜக சாம்ராஜ்யத்தை இந்த பகிடிவதை மனநோயாளிகள் நடத்துகிறார்கள் என்று புரியும். நாளைக்கு உங்கள் ஊரில் உங்கள் உறவில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படலாம். சக மாணவர்களின் கல்வியை சிதைப்பவர்களை இந்த சமூகம் மெளனத்தின் ஊடாக ஊக்குவிக்க முடியாது.

ஆம் ஆத்மி .. பாஜகவின் பி டீம்? அனுமான் கருணையால் வென்றோம் அர்விந்த் கேஜ்ரிவால்

Jeeva Sagapthan : வென்றது ஆம்ஆத்மி, தோற்றது காங்கிரஸ், தடுக்கப்பட்டது பாஜகவின் வெற்றி.
டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றியில் , நாம் கவனிக்க வேண்டிய நுட்பமாக அம்சங்கள் இருக்கின்றன. .
ஆம் ஆத்மி கட்சி தொடங்குவதற்கு முன்பு பாஜகவின் வாக்கு விழுக்காடு 36.3.ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது பாஜகவின் வாக்கு விழுக்காடு 38.4. ஆம் ஆத்மி தொடங்கிய பிறகு, கட்சி அளவில் பாஜகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை. இரண்டு விழுக்காடு வாக்கு அதிகரித்திருக்கிறது.
ஆம் ஆத்மி தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் வாக்கு விழுக்காடு 48.1. ஆம் ஆத்மி தொடங்கி ஏழாண்டுகள் கழித்து, காங்கிரஸ் கட்சி வெறும் 4 விழுக்காடாக சுருங்கி விட்டது.
ஆம் ஆத்மிக்கு சிறுபான்மையினரின் ஆதரவு முழுமையாக கிடைத்திருக்கிறது. அதே சமயம் காங்கிரசுக்கு கிடைத்து வந்த இந்துக்களின் வாக்குகளையும் முழுமையாக எடுத்துக் கொண்டது. அந்த இந்துக்கள் யாரென்றால், சிறுபான்மை ஆதரவு மனநிலையில்லாமல், அதே சமயம் பாஜகவிற்கும் வாக்களிக்க மனமில்லாதவர்கள். அதாவது ஊழல் ஒழிப்பு என்ற மனநிலையில் வாக்களித்தவர்கள்.

பாலுமகேந்திரா கையில் எடுத்த ஆயுதம்! 13.2.2014 அன்று மறைந்தாலும்,என்றும் மறையாத ஆளுமை!


nakkheeran.in -t;கதிரவன் : கேமரா கவிஞர் என்று கொண்டாப்படும் பாலுமகேந்திரா இலங்கையில் பிறந்த தமிழர்.  ஆனாலும், அவர் ஈழப்பிரச்னை பற்றி எதையும் அவர் தனது படைப்புகளில் பதிவு செய்ய வில்லை என்ற விமர்சனம் உண்டு.
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு,  ’’பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. ஆனால், அதிகபட்ச நேர்மையுடன் சொல்லப்பட வேண்டிய விசயம் இது. வியாபாரத்தைத் தாண்டியது. படைப்பாளிகள் தயார் தான். அப்படி ஒரு படத்தை தாங்கும் தயாரிப்பாளர் எங்கே?’’என்று பதிலளித்திருக்கிறார்.
’’சாவதற்குள் ஈழப்பிரச்சனை பற்றி ஒரு திரைப்படத்தை எடுத்துவிட வேண்டும்.  அதுதான் எனது கடைசி படைப்பாக இருக்க வேண்டும்’’ என்றும் சொல்லிவந்தார்.  அது கடைசிவரை நடக்கவே இல்லை.   சிங்களர்களால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டதை சிறு வயதிலேயே அறிந்தவர் பாலுமகேந்திரா. கவிஞர் காசிஆனந்தனும், கேமரா கவிஞர் பாலுமகேந்திராவும் இலங்கை மட்டக்களப்பில் இருந்த போது பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவரும் இணைபிரியா நண்பர்கள். கல்லூரியிலும் இருவரும் ஒன்றாக படித்தவர்கள்.  அழியாத கோலங்களில் வரும் மூன்று சிறுவர்களின் ஒருவர் காசி ஆனந்தன் என்று பாலுமகேந்திராவே சொல்லியிருக்கிறார்.

புதன், 12 பிப்ரவரி, 2020

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

tamil.indianexpress.com :ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை! பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, அவரை சேவை வரி செலுத்தும்படி, ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு...
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, அவரை சேவை வரி செலுத்தும்படி, ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஒருவர் தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ளார். பின், அந்த உரிமையை பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கி விட்டால், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., ஆணையர், கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த அப்பாவு

மின்னம்பலம் : ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் தான் வெற்றிபெற்றதாக அப்பாவு தெரிவித்துள்ளார்.
ராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த அப்பாவு
2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகளையும் 19,20,21 சுற்றுகளின் வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எனினும் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை விசாரிக்கப்படாமலேயே பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாலை­தீவில் நீச்­ச­லு­டை பெண்ணின் உடலை மறைக்கக் முயன்ற பொலிஸார்!- (வீடியோ)

metronews.lk:  மாலை­தீவில் நீச்­ச­லு­டை­யுடன் காணப்­பட்ட வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­yinயின்  உடலை மறைப்­ப­தற்கு பொலிஸார் பல­வந்­த­மாக நட­வ­டிக்கை மேற்­கொண்­டமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
இதனால் மாலை­தீவு பொலிஸ் திணைக்­க­ளத்தின் தலை­வ­ரான பொலிஸ் ஆணை­யாளர் மன்­னிப்பு கோரி­யுள்ளார்.
 Cecilia Jastrzembska மேற்­படி யுவதி பிரிட்­டனைச் சேர்ந்த தொலைக்­காட்சிப் பிர­ப­லங்­களில் ஒரு­வ­ரான சிசி­லியா ஜஸ்­டிர்­ஸெம்ஸ்கா என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.> உல்­லாசப் பய­ணத்­துக்குப் பிர­சித்தி பெற்ற நாடு­களில் ஒன்­றான மாலை­தீவின் உல்­லாசப் பகு­தி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட இடங்­களில் பெண்கள் பிகினி எனும் நீச்­ச­லு­டைய அணிய அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர். ஆனால், சுற்­றுலாப் பிர­தே­சங்கள் தவிர்ந்த இடங்­களில் நீச்­ச­லுடை அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை.
Cecilia-Jastrzembska-1 மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) Cecilia Jastrzembska 1Police-commissioner மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) Police commissionerஇந்­நி­லையில் மாலை­தீவின் தீவு­களில் ஒன்­றான மாபு­ஷி­யி­லுள்ள கடற்­க­ரையில் கடந்த வியா­ழக்­கி­ழமை நீச்­ச­லு­டை­யுடன் சிசி­லியா காணப்­பட்டார்.
அப்­போது மாலை­தீவு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலர் அவரின் உடலை மறைப்­ப­தற்கு முயற்­சித்­தனர்.
துவாய் ஒன்றின் மூலம் சிசி­லி­யாவின் உடலை மறைப்­ப­தற்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் முயற்­சித்­தனர்.
இதனால், மேற்­படி ஆண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் சிசி­லி­யா­வுக்கும் இடையில் இழு­பறி நிலை ஏற்­பட்­டது.

தமிழக வேளாண் மண்டலம்- நாடகமாடும் எடப்பாடி அரசு!

tamil.news18.com : ஏற்கனவே உள்ள ஹைட்ரோகார்பன் குழாய்கள் என்ன ஆச்சு...எடுத்தாச்சா...? - ஸ்டாலின் கேள்வி
இதற்கு சென்னையில் திருமண விழாவில் பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், இதனை திமுக வரவேற்கின்றது. காவிரி வேளாண் மண்டல அறிவிப்பிற்கு முன்னரே திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால் அந்த அறிவிப்பு மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்,மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் எங்கு ஏற்கனவே உள்ள ஹைட்ரோகார்பன் குழாய்கள் என்ன ஆச்சு, அதனை எடுத்தாச்சா? என கேள்வி எழுப்பினார்.>மேலும் இன்றை காலகட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்னை போல் பணியாற்ற வேண்டும் என சொல்கிறார். ஊழல், அராஜகம் செய்வதை சொல்வதா என கூறிய அவர் விவசாயிகள் என்று சொல்லி விவசாயிகளை துன்புறுத்துகிறார் எட்பாடி என தெரிவித்தார்.

ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்தியருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்தியருக்கு கொரோனா பாதிப்புமாலைமலர் :யோகோஹாமா துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 2 இந்தியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டோக்கியோ: ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு 3,711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் பலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  நேற்றைய தகவலின்படி சொகுசு கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

"டயர்" தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்கும்- முதலமைச்சர் பேச்சு

சியேட் டயர் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மாலைமலர் : சென்னை: ஸ்ரீபெரும்புத்தூர் கண்ணன் தாங்கல் பகுதியில் “சியேட் டயர்” தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
இன்று நான் துவக்கி வைத்துள்ள இந்தத் தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந்தேதி எனது முன்னிலையில் செய்யப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு பதினெட்டே மாதங்களில், உத்தரவாதம் அளித்த மொத்த முதலீடான 4,000 கோடி ரூபாயில், முதல்கட்டமாக, 1,400 கோடி ரூபாயை முதலீடு செய்து, இன்று முழு அளவிலான வணிக உற்பத்தியை துவக்கியுள்ளது சியேட் நிறுவனம்.
வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைமையகமாக விளங்கும் தமிழ்நாடு டயர் உற்பத்தியிலும் முதலிடம் பெற்றுள்ளது. அப்பல்லோ, ஜே.கே., மிஷ்லின், எம்.ஆர்.எப்., டி.வி.எஸ்., யோகோ ஹாமா என திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை, பல டயர் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

கேரளா ..பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வழக்கு

மாலைமலர் : கேரளாவில்  கடந்த 4 ஆண்டுகளில் இதுபோன்றோர் மீது 15 ஆயிரத்து 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
திருவனந்தபுரம்: வயதான மற்றும் நோய் பாதித்த பெற்றோரை பிள்ளைகள் பராமரிக்காமல் அவர்களை தவிக்க விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் பலர் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் அவலமும் நடந்து வருகிறது.
அதேபோல பெற்றோரின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டு அவர்களை நடுவீதியில் விட்டுச் செல்கிறார்கள். இதுபோன்ற புகார்கள் சமீபகாலமாக அதிகரித்து உள்ளதால் பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேரளாவிலும் வயதான பெற்றோரை பிள்ளைகள் ஆதரவற்ற நிலையில் விடும் சம்பவங்கள் நடைபெறுவதால் அதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரள சட்டசபையில் சமூக நலத்துறை மந்திரி சைலஜா பேசும்போது கூறியதாவது:- வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உண்டு.

கொட நாடு கொலை ..காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்.. சூடுபிடிக்கும் வழக்கு!

kodanadkodanad casevikatan.com - சதீஸ் ராமசாமி = கே.அருண் காணாமல் போனதாக தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த கொடநாடு கொலை வழக்கின் முதல் சாட்சியான கிருஷ்ண தாப்பா நீதிமன்றத்தில் இன்று திடீரென ஆஜரானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நுழைந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்து மற்றொரு காவலாளியைத் தாக்கிவிட்டு உள்ளே சென்றது.
பின்னர் பங்களாவில் இருந்த சில ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகில் வாகன விபத்தில் உயிரிழந்தார். அன்றைய தினமே பாலக்காட்டில் ஏற்பட்ட விபத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய சயான் காயங்களுடன் தப்பினாலும் சயானின் மனைவி, மகன் உயிரிழந்தனர்.

ராமேஸ்வரம் ..`கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்டி!’ – மிரளவைக்கும் கடத்தல் கதைகள்

கடத்தல் பீடி இலைகளை கைப்பற்றிய கடலோரக் காவல்படை.;கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்டி!’ – சுங்கத்துறையை மிரளவைக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் vikatan.com = இரா.மோகன்; = உ.பாண்டி : கடத்தல் பீடி இலைகளை கைப்பற்றிய கடலோரக் காவல்படை.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து கஞ்சா மற்றும் கடல் அட்டை, கடல் பல்லி போன்றவையும் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளிலிருந்து பீடி இலைகளும் கடத்தப்பட்டு வருகின்றன.
ராமேஸ்வரம் கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக அடுத்தடுத்து பீடி இலை மூட்டைகள் ஒதுங்கி வருகின்றன. கடல் பகுதி கண்காணிப்பினை உறுதி செய்யும் ‘சாகர் கவாஜ்’ ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொடர்ந்து பீடி இலை மூட்டைகள் சிக்கி வருவதால் கடத்தல் வேட்டையைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும் சுங்கத்துறையினரும் திணறி வருகின்றனர்.

சீனாவில் 1,110 பேர் கொரொனோ வைரஸ் தாக்குதில் உயிரிழப்பு .. மேலும் தொடரும்?

தினமலர் : பீஜிங்; அண்டை நாடான சீனாவில் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவுவதால் இதுவரை 1,110 பேர் பலியாகியுள்ளார்.
சீனாவில் 'கொரோனா' எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 42,200 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் மூன்று எச்சரிக்கைகள்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் மூன்று எச்சரிக்கைகள்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனுக்கு வந்தது.
“திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதை ஒட்டி திமுக மீது பல்வேறு விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாந்த் கிஷோர் திமுகவை வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கான வியூகப் பணிகளைத் தொடங்கிவிட்டார்.
ஸ்டாலினுடன் பிகே நடத்தியிருக்கும் முதல் கட்ட உரையாடலில், ‘தமிழ்நாட்டில் திமுகவுக்கு இப்போது சாதகமான அம்சங்களே இருக்கின்றன. ஆனால் கட்சி அளவில் சில வேலைகளை செய்ய வேண்டும். எல்லா விஷயங்களுக்கும் தலைவரான உங்களையே முன்னிலைப்படுத்தும் போக்கு இருப்பதாக நிர்வாகிகள் நினைக்கிறார்கள். இதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு


தினத்தந்தி : டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
புதுடெல்லி, 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் மெஹ்ராலி தொகுதியில் இருந்து புதிய எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.

பழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு .. 28 January 1997 நினைவு நாள்

palanibaba_340கீற்று.com : எண்பதுகளின் துவக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஆளும் வர்க்கதிற்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தூக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...
தனக்கென பெரிய அமைப்பில்லை... தனியான அலுவலகமில்லை... பின்பற்றி வரக்கூடிய தொண்டர்படையில்லை... சொந்த சமுதாயதிற்குள்ளும் பெரியளவில் ஆதரவில்லை... எந்தவிதமான அதிகாரப் பதவியும் இல்லை... ஆனால் மேற்குறிபிட்ட அனைத்தும் இருப்பவர்களால் சாதிக்க முடியாத பலவற்றை சாதித்த தனிமனித இராணுவம்தான் பழனிபாபா...
கண்ணியத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை, உரிமைகளை அரசுக்குக் கொண்டு செல்லக்கூடிய வீரியமான தலைமை வெற்றிடமாகிப் போனபோது... முஸ்லிம்களுக்கு எதிராக சங் பரிவாரங்கள் தங்களது கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டபோது தட்டிக் கேட்க யாருமே இல்லையா என்கிற ஏக்கப் பொருமல்கள் முஸ்லிம் சமுதாய சாமானிய மக்களிடம் பரவிவந்தபோது, தனது வீரியமான வீரமான உரைகளால் தமிழக முஸ்லிம்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தைரியமூட்டியவர் பழனிபாபா. "நாங்கள் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு இந்திய தேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த கூட்டமல்ல... இந்த மண்ணின் மைந்தர்கள்... ஆரிய அடிமைத்தன‌த்தில் இருந்து எம்மக்களை மீட்டெடுக்க இஸ்லாம் என்கிற மார்க்கத்தைத்தான் நாங்கள் இறக்குமதி செய்துகொண்டோம். மாறாக நாங்களே இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் அல்ல..." என வீரியமாக முழங்கி இஸ்லாமிய மக்களின் இந்தியப் பற்றை பறைசாற்றியவர் பழனிபாபா.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

ஆம் ஆத்மியின் வெற்றிக்கு .. தண்ணீர் மின்சாரம் கல்வி ஆகிய மூன்று முக்கிய .. ..

Shalin Maria Lawren : இன்று உலக வாக்குறுதிகளின் நாள் (global promise day)
இந்தியாவில் அதிகமாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு அவை
நிறைவேற்றப்படாத இடமாக அரசியல் இருக்கிறது. அரசியல் என்றாலே கொடுத்த வாக்குறுதிகளை நிவர்த்தி செய்யாத ஒரு இடமாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் என்றாலே பொய் வாக்குறுதிகள் என்று மக்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது.
இத்தகைய சூழலில்தான் 2015ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் மொத்தம் 70 வாக்குறுதிகளை கொடுத்து இருந்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அதில் 30 சதவிகிதம் நிறைவடைந்து உள்ளதாகவும், 60 சதவிகிதம் வேலைகள் நடந்து வருவதாகவும், 10 சதவிகிதம் எதுவும் நடைபெறவில்லை என்றும் இந்தியா நடத்திய ஆய்வு கூறுகிறது.
தில்லியில் காங்கிரஸ் கட்சி செய்த சேதாரம் மிக பெரியதாக இருந்தது. அந்தக் காரணத்தினால்தான் கேஜ்ரிவால் முதல்முறை இராஜினாமா செய்துவிட்டு சென்ற போதும் அதற்கு அடுத்த தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார்.
அப்பொழுது அவர்கள் மூன்றே மூன்று விஷயத்தை திரும்பத் திரும்ப கூறினார்கள்
"நாங்கள் உங்களுக்கு தண்ணீர் கொடுப்போம், உங்கள் மின்சாரத்தை பாதுகாப்போம் மற்றும் கட்டணங்களை குறைப்போம், உங்கள் கல்வி தரத்தை உயர்த்துவோம்".