ஐரோம் சர்மிளா 1949 அக்டோபரில் மணிப்பூர் மன்னரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஷில்லாங்கில் அவரை வீட்டுக்காவலில் வைத்து, மணிப்பூரில் இராணுவத்தை குவித்து அவரை மிரட்டி இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது இந்திய அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும் கலைக்கப்பட்டன. இதுதான் மணிப்பூரை இந்தியா ஆக்கிரமித்ததன் சுருக்கமான வரலாறு.
ணிப்பூரில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமலில் இருக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக்கோரும் ஐரோம் சர்மிளாவின் உண்ணாநிலை போராட்டம் பதினைந்தாம் ஆண்டை எட்டியுள்ளது.
ஐரோம் சர்மிளா (படம் : நன்றி http://indianexpress.com )
கடந்த நவம்பர் 6-ம் தேதியன்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தியுள்ளன. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட மனித உரிமை ஆர்வலர் மருத்துவர் பினாயக் சென் “ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ஜனநாயகத்தின் சாரத்தையே அழிக்கிறது, நியாயத்தின் பாதையை தடுக்கிறது. மணிப்பூரில் இரண்டு தலைமுறையினர் சுதந்திரத்தின் பொருள் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.