மின்னம்பலம் -christopher : தாய்க்கு சொத்தில் பங்கு இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
”திருமணமான மகன் உயிரிழந்துவிட்டால், அவரது சொத்தில் தாய்க்கு பங்கில்லை” என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 18) உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் திருமணமான நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அவரது தாயார் பவுலின் இருதய மேரி தனது மகனின் சொத்தில் பங்கு கேட்டு நாகை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உள்ளது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
சனி, 18 நவம்பர், 2023
மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் சட்டசபையில் நிறை
மாலை மலர் : சென்ன தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உடனுக்குடன் ஒப்புதல் கொடுக்காமல் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
கவர்னர் ரவி வசம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் அனுமதி வழங்கக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.
அதில் அவர் "அனுமதி இல்லை" என்று மட்டும் ஒற்றை வரியில் குறிப்பிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒப்புதல் அளிக்காததற்கான காரணத்தை கவர்னர் விரிவாக தெரிவிக்கவில்லை.
நடிகை ஜெயந்திக்கும் செல்வநாயகத்திற்கும் என்ன தொடர்பு?
Annesley Ratnasingham : துன்பம் மலையகத்தை தேடி செல்கிறதா ?? அல்லது துன்பத்தை மலையகம் விலைக்கு வாங்குகிறதா ??..
ஜெயந்தி" என்ற சொல்லே சிக்கல் ....மலையக மக்களையும் கடவுளும் காப்பாற்ற முடியாது ..ச.செ .ச .இளங்கோவன் என்ற SJV செல்வநாயகத்தின் பேரனின் அரசியல் பிரவேசத்துக்கு பாவிக்கப்படும் நிகழ்வு ...பேரனை போலவே மலையக மக்களை பகடை காயாக வைத்து ஆரம்பம் நடக்கிறது ...
Rathnakumar Se : மலையக மக்கள் வீண் வம்பை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
Annesley Ratnasingham : Rathnakumar Se ...அநியாயமாக போக போகிறார்கள் .
Letchuman Shanmuganathan : மலையகத்தானுக்கு அரசியல் என்று ஒன்று இல்லை. அரசியல் செய்வதற்காக எதையும் செய்வார்கள். புதிய கற்ற சமூகமும் அரசியல் செய்வதற்கு இவர்கள் பின்னால் செல்வது வருத்தமாகவே இருக்கிறது.
Annesley Ratnasingham : Letchuman Shanmuganathan ....மிகவும் மிகவும் கவலைக்குரிய விடயம்....I think Money talks...
Letchuman Shanmuganathan : Annesley Ratnasingham yes, செல்வநாயகம் பவுண்டேசன் மலையகத்தில் ஏன் மூக்கை விடுகிறது என்று யோசிக்க வேண்டும்.
Annesley Ratnasingham
Letchuman Shanmuganathan ...இது திட்டமிட்ட ஒரு சதி ...இதை பற்றி சரியாக ஆராய்ந்து நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் ...
Vinoth Balachandran : ஆபத்தின் அறிகுறி.
Annesley Ratnasingham : Vinoth Balachandran ...இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் ....Saumiyamoorthy Thondaman அவர்களின் பெயருக்கு கேடு ..
Letchuman Shanmuganathan : இப்போ எதற்கு செல்வநாயகம்.. மலையகத்தில் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.
இலைங்கை 2030 ஆம் ஆண்டில் அனைவருக்கும் ஆங்கிலம்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
தேசம் நெட் --அருண்மொழி : 2030 ஆம் ஆண்டாகும்போது அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடை முறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்நேற்று(16) நடைபெற்ற, டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபகரும் தலைசிறந்த கல்வியலாளருமான மறைந்த ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெள்ளி, 17 நவம்பர், 2023
உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: 22 மீட்டர் வரை துளையிட்ட மீட்பு படையினர்
800 மி.மீ மற்றும் 900 மி.மீ விட்டம் கொண்ட குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே செலுத்தி, அதன் வழியாக தொழிலாளர்களை மீட்பதற்கு 60 மீட்டர் வரை துளையிட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அன்ஷு மனீஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீட்பு படையினர் அதிக சக்திவாய்ந்த இயந்திரத்தின் மூலம் இரவு முழுவதும் துளையிட்டதில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 22 மீட்டர் வரை துளையிட்டுள்ளதாகவும், இன்னும் 38 மீட்டர் வரையில் துளையிட வேண்டும் என மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
30 குண்டுகள் முழங்க தகைசால் தமிழர் சங்கரய்யாவிற்கு பிரியா விடை
Kalaignar Seithigal - Lenin : தமிழ்நாடு விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாகத் திங்களன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து சங்கரய்யா மறைவுக்குக் கட்சி தொண்டர்கள் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரடியாக வந்து சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மலையக மாநாட்டில் ஸ்டாலின் பேச்சை ஏன் ஒளிபரப்பவில்லை? இலங்கையில் கலைஞர் வருகை ஏன் நடக்கவில்லை
தி இந்து : கலைஞர் கருணாநிதி கைவிட நிர்ப்பந்தித்த எதிர்ப்பு
(‘நாம் 200’ நிகழ்வில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் காணொளிச் செய்தி ஔிபரப்பப்படாததை அடுத்து மூண்ட சர்ச்சையின் பின்புலத்தில் ஒரு பார்வை)
இலங்கைத் தீவுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் வருகைதந்து 200 வருடங்கள் நிறைவுபெறுவதை நினைவுகூருமுகமாக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ நாம் 200’ நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செய்தி பதிவுசெய்யப்பட்ட காணொளி ஔிபரப்பப்படாதமை குறித்து இம்மாத ஆரம்பத்தில் சர்ச்சை ஒன்று மூண்டது.
அந்த நிகழ்வில் இறுதி நேரத்திலேயே ஸ்டாலினின் செய்தி சேர்க்கப்பட்டதை இந்திய அரசாங்கம் ஆட்சேபித்ததன் காரணத்தினாலேயே அது ஔிபரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.
வரலாற்று ரீதியாக எப்போதுமே தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் இலங்கையுடனான அவர்களின் உறவுகளைப் பொறுத்தவரை மிகவும் எச்சரிக்கையான பாதையிலேயே நடக்கவேண்டியிருந்திக்கிறது.
வியாழன், 16 நவம்பர், 2023
மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டு வரப்பட்டால் கிழக்கில் வஹாபி , வடக்கில் தீவிரவாதி பாடத்திட்டங்களும் ஆரம்பமாகும்.! வீரசேகர எச்சரிக்கை!
தேசம் நெட் - அருண்மொழி : மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் என வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் அன்றி, மாகாணசபைகளினால் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால், அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். 13 ஆவது திருத்தச்சட்டத்தில் கல்விக்கான அதிகாரம் கூறப்பட்டுள்ளதே ஒழிய, பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைக்கும் - புது சர்வே பாஜகவுக்கு தோல்வி1
நடப்பு மாதமான நவம்பரில் மட்டும் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதில் மிசோராம் சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு வரும் 25ம் தேதியும், தெலங்கானாவுக்கு வரும் 30ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
விவசாயிகள் மீது குண்டாஸ்: தலைவர்கள் கண்டனம்
மின்னம்பலம் - Selvam : திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இன்று (நவம்பர் 16) கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3-வது அலகை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
தமிழக அரசு மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் 125 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் மருத்துவ மனையில் செந்தில் பாலாஜி- ‛நானே வரேன்! செந்தில் பாலாஜியை சந்திக்கும் ஸ்டாலின்?
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியது.
புதன், 15 நவம்பர், 2023
புலிகள் முஸ்லீம்களுக்கு எதிராக செய்த இனச்சுத்திகரிப்பு இன்றும் தொடர்கிறது.” – ரிஷாட் பதியுதீன் MP
தேசம் நெட் - அருண்மொழி : வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
“வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை.
33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை.
மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்குள்ள அரச அதிகாரிகளும் ஒரு சில அரசியல்வாதிகளும் தடுத்து நிறுத்தவே முயற்சிக்கின்றனர்.
புதுடெல்லி- தார்பாங்க எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயங்கர தீ விபத்து
இதில், 4 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் அவை தீக்காயங்களாக இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக எட்டாவா போலீஸ் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.
மேலும் , தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருதாக தகவல் தெரியவந்துள்ளது.
தீ விபத்து குறித்து சஞ்சய் குமார் கூறுகையில், "டெல்லியில் இருந்து பீகார் சென்றுக் கொண்டிருந்த ரெயிலில் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் வழங்கப்படும்" என்றார்.
வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் பலத்த மழை தொடரும்...
புதன்கிழமை (நவ. 15) 9 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த புயல் சின்னம் புதன்கிழமை (நவ. 15) தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வியாழக்கிழமை (நவ. 16) ஒடிஸா கடற்கரைக்கு நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ். பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீதியரசர் சந்துருவின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்
நக்கீரன் : இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்திறன்களை மேம்படுத்தும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்ட குழு ஒன்று உருவாக்கப்படும் என்று 6.2.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
மலையகத்தில் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
வீரகேசரி : மலையகத்தில் பலாங்கொடை என்ற இடத்தில மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு காணாமல்போயிருந்தவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களின் பின் குறித்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம்: இலங்கை உச்ச நீதிமன்றம்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. இதுதொடர்பாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரும் பொறுப்பு என இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
செவ்வாய், 14 நவம்பர், 2023
இலங்கையில் நிலநடுக்கம் - 6.2 ரிச்டர் அளவில் இலங்கையின் தென் கிழக்கு பகுதியில்
மாலைமுரசு : இலங்கையில் நிலநடுக்கம் - 6.2 ரிச்டர் அளவில் இலங்கையின் தென் கிழக்கு பகுதியில்
இலங்கை தலைநகர் கொழும்புக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கொழும்பு நகரின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ஏனைய பகுதிகளிலும் உணரப்பட்டது என ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது
பாதிப்பு விபரங்கள் வெளியாகவில்லை
உத்தரகான் சுரங்கப்பாதை விபத்து: 40 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மீட்புப் பணி - 40 பேரின் கதி என்ன?
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) அதிகாலை இந்தச் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா - தண்டல்கான் கிராமங்களை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு வெளியில் இருந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் இன்னும் தொடர்பு ஏற்படவில்லை.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா அதிரடி
சீனாவின் பெல்ட் ரோட் திட்டத்திற்கு பதிலடியாக அமேரிக்கா,
இலங்கை துறைமுகத்தில் 553 மில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்துள்ளது!
சர்வதேச அபிவிருத்தி நிதியுதவியில் சீனாவுடன் அமெரிக்க போட்டியில் குதித்துள்ளது
இதன்படி இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கான 553 மில்லியன் டாலர் திட்டத்தை அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.
யு.எஸ். இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் படி,
இந்த திட்டம் தெற்காசிய நாட்டிற்கு முக்கியமான உள்கட்டமைப்பை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்திற்கான தனியார் கடனாக இது வழங்கப்படுகிறது sri-lanka-colombo-port
இது கொழும்பு துறை முகத்தின் கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்தும்,
திங்கள், 13 நவம்பர், 2023
சுப்ரமணியன்சாமி என்னும் அரசியல் குள்ளநரி!
Vimalaadhithan Mani : சுப்ரமணியன்சாமி என்னும் அரசியல் குள்ளநரி
வெளிதோற்றத்தில் காமெடியன் போன்று தோன்றும் பாஜகவின் சுப்ரமணியன்சாமி ஒரு சர்ச்சைக்கு உரிய அரசியல்வாதி என்பது நம் அனைவருக்கும் தெரியும் .
ஆனால் இந்திய அளவில் ஒரு மிகவும் அபாயகரமான பின்னணி கொண்ட அரசியல் சதுரங்கத்தில் கைதேர்ந்த ஒரு அரசியல் குள்ளநரி அவர் என்பது நிறைய பேருக்கு தெரியாது.
அவர் சார்ந்த பிராமண இனத்தின்பால் அவருக்கு இருக்கும் வெறித்தனமான பிடிப்பை தவிர அவருக்கென்று ஆழ்ந்த அரசியல் கொள்கைகளோ, தத்துவார்த்த சிந்தனைகளோ எதுவும் கிடையாது.
அவருக்கு எப்போதும் ஒரே ஒரு குறிக்கோள் மட்டும்தான்.
பதவி மற்றும் அதிகாரத்தில் அவர் இருக்க வேண்டும்.,
மற்றவர்களை அவருடைய அதிகாரத்துக்கு கீழ் அடக்கி வைத்து இருக்க வேண்டும் என்ற பச்சை மனு நீதிதனம் மட்டுமே. முதலில் கலைஞருடன் சேர்ந்து கொண்டு ஜெயலலிதாவை எதிர்த்தார்.
பின் பதவிக்காக ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டு திமுக ஆட்சியை 1989 ல் அநியாயமாக பழி சுமத்தி கலைக்க வைத்தார்.
இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தொடங்கிய பிறகு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் போராட்டங்களும் நடந்து வருகிறது.
Rishi Sunak sacked Suella Braverman from UK home secretary post after pro-Palestine march
அப்படி தான் பிரிட்டனிலும், கடந்த சில நாட்களாக மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. இதற்கிடையே பாலஸ்தீன போராட்டம் குறித்து பிரிட்டன் உள் துறை துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கூறிய கருத்துகள் சர்ச்சையானது.
யாழ். மாவட்டத்தில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!
veerakesari : யாழ். மாவட்டத்தில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்களால் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்படும் அப்பாவிப் பொதுமக்கள்
எறும்பு போல் உழைத்து தேனீ போன்று சேமிக்கப் பழக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண மாவட்ட மக்கள். ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்தி தமது எதிர்கால நலன்கருதி சிறுகச்சிறுகச் சேமிப்பவர்களும் இந்த மக்களே.
பொருளாதார நெருக்கடியால் அனைத்து பொருட்கள், சேவைகளுக்கும் ஏற்பட்ட விலையேற்றம் காரணமாக நாட்டு மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்தவே பெரும்பாடு படுகின்றனர். அதிலும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
‘பெரியார்” என்று மட்டுமே அழைக்கவேண்டும்! 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 : தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு! நிறைவேற்றிய தீர்மானம்!
Annamalai Arulmozhi : தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு! நிறைவேற்றிய தீர்மானம்!
‘பெரியார்” என்று மட்டுமே அழைக்கவேண்டும். ‘
1938ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 அன்று சென்னை ஒற்றை வாடை அரங்கில் நடைபெற்றது தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு . மாநாடா அது ? சென்னையில் மையம் கொண்ட இந்தி எதிர்ப்புப் புயல்! .
சுயமரியாதை இயக்கத்தின் மூத்த பெண் தலைவர்கள் முன்னெடுத்த இன, மொழிப் போருக்கான அறைகூவல் ,உரிமைக் குரல்களின் எழுச்சியாய் ஒலித்தது .
மேடையிலும் அரங்கத்திலும் நிறைந்திருந்தனர்.
ஆளுமை மிக்க திராவிட இயக்கப் பெண் போராளிகள். அந்த மாநாட்டின் அமைப்பாளர்கள் மூன்றுபேர் . டாக்டர் தருமாம்பாள், மூவலூர் ராமாமிர்தம், மலர்முகத்தம்மையார்.
அந்த மாநாட்டின் அலுவலகம் அமைந்த இடம் 330, தங்கசாலை, சென்னை. இரவும் பகலும் தோழர்கள் கூடி விவாதம் செய்து மாநாட்டுப் பணிகளை மேற்கொண்ட அந்த முகவரி டாக்டர் தருமாம்பாள் அவர்களின் இல்லமாகும்.
தீபாவளி கொண்டாட்டமும் Parallel society கோட்பாடும்!
Annesley Ratnasingham !...."Parallel Gesellschaft" என்ற "Parallel society" யை உருவாக்குவது அல்லது ஏற்கனவே உருவாக்கி இருக்கும் "Parallel society" குணாம்சங்களை வலுவடைய செய்வது சமூகத்துக்கு பெரிய கேடாக அமையும் !
."தீபாவளி" என்ற திருநாள் 15 ம் நூற்றாடுகளில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதாக சில தகவல்கள் சொல்கிறது ..
அந்த கொண்டாட்டம் சரியா பிழையா தெரியாது..
எமக்கு புத்தி தெரிந்த காலத்தில் இருந்து பழக்கப்பட்ட ஒரு நிகழ்வு ...
ஆனால் தற்போது கடந்த 10,15 வருடங்களாக வாழ்த்தை சொல்லலாமா அதனால் விமர்சனத்துக்கு உள்ளாவோமா என்ற அச்சம் கடுமையாக வருகிறது...
அனைத்து மத திருநாட்களையும் நாம் ஆராட்சி செய்து கொண்டாட முயல்வோம் ஆனால் அனைத்திலும் பல விமர்சனங்களும் ,கற்பனை கதைகளும் உண்டு .
ஞாயிறு, 12 நவம்பர், 2023
மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் திடீர் தீ விபத்து.. நடந்தது என்ன..
சென்னை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் சாய்பாபா கோயில் ஒன்று அமைந்துள்ளது. தமிழகத்தில் பல சாய்பாபா கோயில்கள் அமைந்திருந்தாலும், மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்கள் என சில மட்டுமே இருக்கின்றன. அப்படி ஒரு கோயில் தான் இந்த மயிலாப்பூர் சாய்பாபா கோயில். இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். குறிப்பாக, வியாழக்கிழமைகளில் மயிலாப்பூர் முழுவதுமே சாய்பாபா பக்தர்களால் நிரம்பி இருக்கும்.
மாணவனின் செவிப்பறை பாதிக்கும் வகையில் தாக்குதல் ; 4 மாணவர்கள் கைது – யாழ்.நகரில் சம்பவம்
வீரகேசரி : மாணவனில் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வரில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஏனைய மூவரும் இன்று மாலை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நகரில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவனே தாக்கப்பட்டுள்ளார். அவரது செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் முறைப்பாடு பதியப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் நேற்றைய தினம் மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தீபாவளி பட்டாசால் தமிழ்நாடு முழுவதும் மோசமான காற்று மாசு! சென்னை உள்ளிட்ட நகரங்களில் அபாய நிலை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசு காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.
தலைக்கேறிய கஞ்சா போதை.. தந்தையை கொன்று வெறிதீர்த்த மகன்..
tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் : சென்னை: தனது அடாவடித்தனங்களை தட்டிக் கேட்ட தந்தையை கஞ்சா போதையில் ஓட ஓட விரட்டி குத்திக் கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
போதை தெளிந்ததும் அவன் கேட்ட கேள்வியால் போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு மனிதனை எந்த அளவுக்கு தன்னிலை மறக்கச் செய்கிறது என்பதையும், அது ஒரு பெரிய குற்றங்களுக்கு எப்படி காரணமாக இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே எடுத்துக்காட்டாக உள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கொலை, வழிப்பறி, பலாத்காரம் போன்ற குற்றச்சம்பவங்களும் பெருகி வருகின்றன. கஞ்சா போதையில் போலீஸ் எஸ்ஐயை துரத்தி துரத்தி சிறுவர்கள் தாக்கிய சம்பவமும், போலீஸ் ஏட்டை அரிவாளால் கஞ்சா இளைஞர்கள் விரட்டிய சம்பவமும் தமிழகத்தையே அதிர வைத்தன.
இதுதவிர, நாள்தோறும் கஞ்சா போதையால் குடும்பங்களில் நிகழும் குற்றச்சம்பவங்களும் நம்மை குலைநடுங்க வைக்கின்றன.