சனி, 20 அக்டோபர், 2018

அதிர்ச்சி! இந்திய ரூபாய் அமெரிக்க கரன்சி பட்டியலில் இருந்து நீக்கம் .. உபயம் காவிகள் .. would be removed currency monitoring list.

Swathi K : அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய
ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்.
The US said that if India continued with the same practices as in the last six months, it would be removed from its next currency monitoring list.
இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில் தற்போது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் டிரேஷரி டிபார்ட்மென்ட் உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு பணங்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டை சேர்ந்த பணங்கள் மட்டுமே இந்த லிஸ்டில் வைக்கப்பட்டு இருக்கும். அந்த பணத்தின் சர்வதேச மதிப்பை, தாக்கத்தை வைத்து இந்த லிஸ்டில் சேர்க்கப்படும்.

கேரளா பினராயி விஜயன் அரசை கலைக்கவேண்டும் ... அர்ஜுன் சம்பத்

வெப்துனியா :சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அங்கு ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பல தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பின்வருமாறு பேசினார். கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டின் பல தீர்ப்புகளை உதாசீனப்படுத்தி உள்ளது. ஆனால், சபரிமலை விவகாரத்தில் மட்டும் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த ஆர்வமாக உள்ளது.
நேற்று 2 பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்கு முதல்வர்  பினராய் விஜயனே காரணம். இதன்மூலம் நாடு முழுக்க கலவரம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.மேலும், சபரிமலை கோவில் பிரச்சினைக்காக போராடிய பந்தளம் மன்னர் குடும்பத்தினர், தந்திரிகள் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக கேரள அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

தண்டவாளத்தில் அத்தனை பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை .. ரயில் டிரைவர் சாட்சியம்

punjap1தினமணி :தண்டவாளத்தில் அத்தனை பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை: ரயில் ஓட்டுநர் ரயில்வே தண்டவாளத்தில் அத்தனை பேர் நின்றிருப்பார்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை என அமிருதசரஸ் விபத்து குறித்து ரயிலை இயக்கிய ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் நேற்று தசரா விழாக் கொண்டாட்டத்தின் போது ரயில் மோதியதில் 61 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில், ரயிலை இயக்கிய ஓட்டுநரைப் பிடித்த காவல்துறையினர், லூதியாணா ரயில் நிலையத்தில் வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ரயிலை இயக்க எனக்கு பச்சை சமிக்ஞை கிடைத்தது. வழக்கம் போலவே ரயிலை இயக்கினேன். ஆனால், தண்டவாளத்தில் அத்தனை பேர் நின்றிருப்பார்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வைரமுத்து .. சின்மயி ... திமுகவின் மௌனத்தால் வைரமுத்து வருத்தம்?

நக்கீரன் ; தன் மீது எழுந்துள்ள பாலியல் புகார்களுக்கு திமுக தரப்பில் ஆதரவு கிடைக்காதது கவிஞர் வைரமுத்துவுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுவரை எந்த புகாரில் சிக்காத கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என தொடர்ந்து புகார் கூறியது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. என்  மீது தவறிருந்தால் வழக்கு தொடுக்கலாம். காத்திருக்கிறேன் என வைரமுத்து கூறிவிட்டார்.>ஆனாலும், அவர் மீது தொடர் புகார்கள் குவிந்து வருகிறது. பாடகர் மலேசியா வாசுதேவன் மருமகளான ஹேமாமாலினியும் வைரமுத்துக்கு எதிராக டிவிட் போட இந்த விவகாரம் டிவிட்டரில் பற்றி எரிகிறது.

சபரிமலையில் காணமல் போன நடிகர்களும் மீ டூக்களும்

indurkcnakkheeran.ஆதனூர் சோழன்:  அடுத்தடுத்து மீடியாக்களில் மூன்று விதமான பேட்டிகளை பார்க்க நேர்ந்தது.
முதல்பேட்டி கமல்ஹாஸனுடையது. அவரிடம் சபரிமலை விவாகரத்தில் அவருடைய கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்கிறார்கள். உடனே அவர், “இந்த விவகாரம் குறித்து என்னிடம் கேட்பது சரியாக படாது” என்று சொல்லிவிடுகிறார். ஒரு அரசியல் கட்சியின் தலைவராகிவிட்டவர், உச்சநீதிமன்றத் தீர்ப்பை
அமல்படுத்தவிடாமல் காவிப்பண்டாரங்கள் தூண்டுதலில் நடக்கும் வன்முறையையும், பெண்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் அட்டூழியத்தையும் பற்றி கருத்துக்கேட்கிறார்கள். ஆனால், இதுகுறித்து தன்னிடம் கேட்பது சரியாக இருக்காது என்றால், பிறகு எதைப்பற்றித்தான் இவரிடம் கருத்துக் கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
நாட்டில் அப்போது நடக்கும் பரபரப்பான விவாகரங்கள் குறித்துத்தானே ஒரு அரசியல் தலைவரிடம் கேள்வி கேட்பார்கள் என்ற குறைந்தபட்ச ஞானம் கூட இல்லாதவரா கமல்?
அடுத்து ரஜினி செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அப்போது அவரிடம் ஐயப்பன் கோவில் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த ரஜினி, “காலங்காலமாக கடைப்பிடிக்கும் பழக்கங்களை மாற்றக்கூடாது” என்று கூறியிருக்கிறார். எத்தனை காலமாக பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மைகூட தெரியாமல் தனது இஷ்டத்துக்கு கருத்துத் தெரிவித்திருக்கிறார் ரஜினி.

அமிர்தசரஸ் ரயில் விபத்து ..அமைச்சர் மனோஜ் சின்ஹா : எங்கள் மீது தவறு இல்லை! ராவணன் மீதுதான் தவறோ?

THE HINDU TAMIL : அமிர்தரசரஸில் 59 பேர் ரயில்மோதி பலியான விபத்தில் ரயில் டிரைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது, ரயில்வே துறையின் மீது எந்தவிதமான தவறும் இல்லை என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அமிர்தரஸில் உள்ள ஜோதா பதக் எனும் இடத்தில் தசரா பண்டிகையின் இறுதிநாளான நேற்று ராவணன் வதம் நடந்தது. அப்போது ராவணன் உருவபொம்மை எரிக்கப்பட்டு, பட்டாசுகள் கொளுத்தப்பட்டபோது,அதைப் பார்க்க மக்கள் அருகே இருக்கும் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தனர். அப்போது, அந்த வழியே சென்ற ரயில் மோதி 59 பேர் பலியானார்கள், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1969 வரை பெண்கள் செல்ல தடை இல்லை 1995 பெண்கள் பதினெட்டாம் படி வழி மட்டுமே தடை விதிக்கப்பட்டது.

சபரிமலை தென்னிந்தியாவின் அயோத்தி: விஹெச்பி! பூனை குட்டி வெளியில் வந்தது
Kathiravan Mumbai: சபரிமலை விவகாரத்தில் அவிழும் உண்மைகள் :
சபரிமலை தென்னிந்தியாவின்  அயோத்தி: விஹெச்பி!1969 வரை பெண்கள் செல்ல எந்த தடையும் இல்லாமல் இருந்தது. 1995 பெண்கள் பதினெட்டாம் படி வழியாக செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டது. மாற்று வழியில் அனுமதிக்கப்பட்டார்கள்..
1991 வரை மாதத்தின் முதல் 5 நாட்கள் இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முறையாக உணவு அளிக்கும் "அன்னபிரசன்னம்" விழாவுக்கு அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்த தகவல்கள் அனைத்தும் தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் செய்த அபிடவிட்டில் உள்ள தகவல்கள்.

மின்னம்பலம் :“சபரிமலை தென் இந்தியாவின் அயோத்தி” என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த மாதத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு பக்தர்களின் யாத்திரைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.

ரயில் மோதி 60 பேர் உயிரழந்த போதும் பேசிக்கொண்டே இருந்த சித்துவின் மனைவி ,, காங்கிரஸ் கூட்டம்


ANI ✔ @ANI # Eyewitness at #Amritsar accident site says, "Congress had organised Dussehra celebrations here without permission. Navjot Singh Sidhu's wife was the chief guest at the celebrations and she continued to give a speech as people were struck down by the train."
Navjot Singh Sidhus wife continued to give a speech as people were struck down by the train in Punjab tamil.oneindia.com/authors/veerakumaran.: சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா விழாவில் பங்கேற்றவர்கள் மீது ரயில் மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த விழாவிற்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் அம்மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து மனைவி நவ்ஜோத் கவுர் சித்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். அப்போது ராவணன் உருவ பொம்மை மீது நெருப்பு வைக்கும் முக்கிய நிகழ்ச்சி அரங்கேறியது. ஆனால், அப்போது ஏற்பட்ட தீ விபத்து விழாவில் பங்கேற்றவர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடி உள்ளனர். அப்போதுதான் வேகமாக வந்த ரயில் மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ஆனால் இந்த விபத்து நடைபெற்று மக்கள் கூக்குரலிட்டபோது சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த மேடையில் நின்று நவ்ஜோத் கவுர் சித்து சிறப்புரையாற்றி கொண்டிருந்துள்ளார்.

கோடீஸ்வரர்கள் 50 ஆண்டுகளுக்குபின் கிடைத்த இழப்பீட்டு தொகை அருணாச்சலப் பிரதேச கிராம மக்கள்

tamilthehindu : அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வெஸ்ட் காமெங் மாவட்ட மக்கள் ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளனர்.
துப்கேன் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஏதும் பங்கேற்கவில்லை, மாறாக, 50 ஆண்டுகளுக்குமுன் ராணுவத்துக்கு வழங்கிய நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை இப்போது வழங்கப்பட்டுள்ளது.< அருணாச்சலப்பிரதேசம், வெஸ்ட் காமெங் மாவட்டத்தில் உள்ள துக்பென் கிராமத்தில் உள்ள பிரேம் தோர்ஜி கிரிமேவுக்கு கோடிக்கணக்கில் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், சிங்சாங் கிராமத்தைச் சேர்ந்த புன்ஷோ காவா, காண்டு குளோ ஆகியோருக்கும் கோடிக்கணக்கில் இழப்பீடு தரப்பட்டது.

தமிழிசை: பெண்பாடு முக்கியமில்லை, பண்பாடுதான் முக்கியம்!

தமிழிசை: பெண்பாடு முக்கியமில்லை, பண்பாடுதான் முக்கியம்!மின்னம்பலம் : இந்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கு, பிற மதத்தினர் சமூக ஆர்வலர் என்ற பெயரில் செல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது எனத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்துப் பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல முற்பட்டுவருகின்றனர். இந்நிலையில், ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழிகளான பம்பை, நீலக்கல்லில் ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும் பெண்களை மறித்துப் போராட்டத்தில் ஈடுபடுவதால் அங்கு பதற்றம் நிலவிவருகிறது. இதற்கிடையே, தெலங்கானாவைச் சேர்ந்த தனியார் டிவி செய்திவாசிப்பாளர் கவிதாவும் கொச்சியைச் சேர்ந்த ரஹானா பாத்திமாவும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை கோயிலுக்குச் சென்றனர். அவர்களை உள்ளே அனுமதிக்காததால் இருவரும் ஊர் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

நடிகர் சிவகுமார் எச்சரிக்கை : சபரிமலைக்கு பெண்கள் போனால் விளைவுகளை சந்திக்க நேரிடும் ..

ஐயப்பனை சபரிமலை கோயிலுக்கு சென்று வணங்க விரும்பினால் நிச்சயமாக விளைவுகளை சந்திக்க நேரிடும் . மக்கள் கோபமாக இருக்கிறார்கள் என நடிகர் சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தினமணி: வடபழனியில் திரைப்பட பாடல்பதிவு நிலையத்தை திறந்து வைத்த பிறகு பேசிய அவர், பெண்கள் விசேஷ நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் சபரிமலைக்கு செல்லலாம் எனக் கூறியுள்ளார்.
சென்னை: பைத்தியம் பிடித்தது போல் ஐயப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்று பெண்கள் மீது நடிகர்  சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசனம் செய்யயச் சென்ற இரண்டு பெண்கள் வெள்ளியன்று திருப்பி அனுப்பப்பட்டனர்,. இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பைத்தியம் பிடித்தது போல் ஐயப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்று பெண்கள் மீது நடிகர்  சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் சபரிமலை விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

சபரிமலை பெண் போராளி திருப்தி தேசாய் கைது

சபரிமலை பெண் போராளி திருப்தி தேசாய் கைது
தினத்தந்தி : பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்களை மறிக்கப்போவதாக அறிவித்த சபரிமலை பெண் போராளி திருப்தி தேசாய் கைது செய்யப்பட்டார்.
சீரடி, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள், பிரம்மச் சாரியான அய்யப்பனை வழிபட அனுமதிக்கக்கூடாது என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி, எந்தவொரு மதத்தினரின் நம்பிக்கையிலும் கோர்ட்டு தலையிடக் கூடாது என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் பல்வேறு பெண் உரிமை ஆர்வலர்கள் சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசிப்பதில் உறுதியாக உள்ளனர். அந்த வகையில், பூமாதா பிரிகேட் என்னும் அமைப்பின் தலைவரும், பெண் உரிமை போராளியுமான திருப்தி தேசாய், சபரிமலைக்கு சென்று பெண்களை சாமி தரிசனம் செய்ய வைப்பதில் தீவிரமாக உள்ளார்.

S B I வங்கியின் 1300 கோடியை ரிலையன்ஸ்ஸுக்கு கொடுத்துவிட்டு ரிட்டையர் ஆகிய ரிலையன்ஸ்ஸுக்கே நிர்வாக இயக்குனர் ஆகிய கொள்ளைக்காரி

Vaali Ravi : சின்மயியைத் தெரிந்த அளவுக்கு இவரைப்
பற்றித் தெரிய நமக்கு
வாய்ப்பில்லை.......
இவர் தான் "State Bank of India"-வின் முன்னாள் இயக்குநர் திருமதி அருந்ததி பட்டாச்சார்யா.....
சென்ற ஆண்டில் ₹1300 கோடி ரூபாய்களை எடுத்து "ரிலையன்ஸ் குழு"-மத்திற்கு கடனாக வழங்கியவர
தன்னுடைய பதவிக் காலம் முடிந்த நிலையில், இன்று முதல் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்....
தன்னுடைய பதவிக் காலத்தில் மக்களின் சேமிப்புகளை எல்லாம் தனியாருக்கு வாராக் கடனாக வாரிக் கொடுத்து விட்டு, இன்றைக்கு அதே கம்பெனியில் பதவி சுகத்தை அனுபவிக்கத் தயாராகி விட்டார்.
இது போன்ற " தில்லாங்கடி " வேலைகளை எல்லாம் நம் கவனத்தில் படாமல் மறைக்கத்தான் இந்த "#Mee_too" ஒப்பாரிகள் எல்லாம்....

சபரிமலை ஐயப்பன் சிலையை வழங்கியது பி டி ராஜன் .. திமுக MLA திரு பி டி தியாகராஜனின் தாத்தா

Present Panchaloka idol of load Ayyappn was install by Sir Ponnambala Thiaga Rajan (12 April 1892 – 25 September 1974) was the Chief Minister of Madras Presidency from 4 April 1936, to 24 August 1936 Known as P. T. Rajan, a leading non-Brahmin leader, ( Father of late DMK minister P.T.Pazhanivel Rajan and grand father of present DMK MLA P.T.R.Thiyagarajan ) By his effort Lord Iyappan was install and a procession was taken all over Madras state. A road in K. K. Nagar, Chennai has been named in his memory as "Sir P.T. Rajan Road
பி.டி,ராஜன் முன்னாள் முதல்வர்
தினகரன் :முன்னாள் முதலமைச்சர் பெருமைக்குரிய மதுரையைச் சேர்ந்தவர்
பி.டி.ராஜன். சபரிமலையில் இருக்கிற ஐயப்பன் விக்கிரகம், 1950களில் இவர் மூலமே மதுரையிலிருந்து வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனி வேல்ராஜனின் தந்தையான பி.டி.ராஜன், மதுரை மீனாட்சியம்மன் கோயில் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்ட செயல் வீரர்.
‘அக்னி சாபம்’கொண்டது சபரிமலை ஐயப்பன் ஆலயம் என்றொரு கருத்துண்டு. இங்கு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தீவிபத்து ஏற்பட்டு, இதனால் ஆலயம் புனரமைத்ததும் மூல விக்கிரகம் மாற்றப்பட்டதும் அறியப்படுகிறது. கிபி 978ல் இப்படியொரு தீவிபத்து ஏற்பட்டு, கோயில் புதுப்பிக்கப்பட்ட தும், ஸ்ரீப்ரபாகரசாரியார் என்பவரால் மூல விக்ரகம் புனர்

ஆட்டிசம் .... தமது own way புத்திசாலிகள். ஒரு லண்டன் தமிழ் தாயின்.

தீபன்
தீபன் வரைந்தது
ஆட்டிசமும் தீபனும் நானும்😁
தீபன் என்னை காணும் விதம் என் மகனின் வாழ்க்கையில் முக்கியமானவராக நான் இருக்கிறேன். பல சந்தர்பங்களில் அதனை தீபன் வெளிப்படுத்தி உள்ளார்.
எனக்கு இருமினால் தீபனுக்கு பயம். Amma don’t die என்பார். நான் இறந்தால் யார் தன்னை பார்ப்பது என்ற பயம் இருக்கக் கூடும். Live long 100 years என்பார். இப்படித்தான் சொற்களை பொருத்தி பேசுவார். தீபனின் புத்திசாலித்தனத்தையும் புரிதலையும் பல இடங்களில் சந்தர்பங்களில் கண்டுள்ளேன்.
ஓட்டிசம் என்பதை நாம் புரிந்து கொள்ளாமல், ஓட்டிசம் உள்ளவரை குறையுள்ள மூளை வளர்ச்சி அற்றவராக காண்பது எவ்வளவு தவறு.
சொற்களை கோர்வையாக்கி பேசத் தெரியவில்லை என்பதால் மொத்தத்தில் மூளை வளர்ச்சி குன்றியவர் என நினைக்கலாமா?
சில விடையங்களில் புரிதல் குறைவே அன்றி , brain damaged person அல்ல.
சில நாட்களுக்கு முன்பு ஆஸ்மா

ஜமால் கசோகியை மேசையொன்றில் படுக்க வைத்து உடலை வெட்டி துண்டுகளாக்கிய சவூதி .

Turkey Has Recording From Saudi Journalist's Apple Watch of His Own Torture and Killing,
Ajeevan Veer : பத்திரிகையாளர் ஜமால் கசோகி வெட்டி படுகொலை
செய்யப்பட்டதைக் காட்டிக் கொடுத்த அப்பல் கடிகாரம்.
துருக்கி இஸ்தம்புல் நகரில் உள்ள சௌதி (கொன்சல்) தூதுவர் காரியாலயத்துக்கு ஜமால் கசோகி வரும் வரை கொலையாளிகள் காத்திருந்துள்ளனர். ஜமால் கசோகி கொன்சல் ஜெனரலை சந்திக்க உள்ளே சென்ற போது அவரை கொன்சல் காரியாலயத்துக்குள்ளேயே துன்புறுத்தி விசாரணை செய்யும் போது அவர் இறந்தார் என சீ.என்.என். கடந்த 16ம் திகதி செய்தி வெளியிட்டது.
ஆனால் மிடில்ஈஸ்ட் ஐ பத்திரிகை நடந்ததை கீழ்க் கண்டவாறு விபரித்துள்ளது. அது மனதை திகில் கொள்ள வைப்பதாக உள்ளது. துருக்கியின் புலனாய்வு துறையினர் நடத்திய விசாரணையில் கண்டறிந்த தகவல்களையே மிடில்ஈஸ்ட் ஐ வெளியிட்டுள்ளது.
ஜமால் கசோகி எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை என்றும் , நேரடியாகவே
சௌதி அரேபியாவின் சல்மான் அரச குமாரனது கட்டளையின்படி துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அது தெரிவித்துள்ளது.
கொலையாளிகள் ஜமால் கசோகியை, நேரடியாக கொன்சல் அதிகாரியின் பக்கத்து அறைக்கு பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள் . அங்கே இருந்த மேசையொன்றில் படுக்க வைத்து உடலை வெட்டி துண்டுகளாக்கியுள்ளார்கள். அதன் வேதனை தாளாது ஜமால் கசோகி உரத்து சத்தமிட்டுள்ளார்.

வெள்ளி, 19 அக்டோபர், 2018

பார்ப்பனியத்தால் பலியிடப்படுகிறார் வைரமுத்து

BBC : இந்து முஸ்லிம் என பிரிந்து நிற்கிறதா இந்திய ராணுவம்? அதிர்ச்சிதரும் புத்தகம்

இந்திய ராணுவம். இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான லெப்டினெண்ட் ஜெனரல் ஜமீருதீன் ஷா 'தி சர்காரி முஸ்லிம்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். குஜராத் கலவரங்களின் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றியவர் ஜமீருதின் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ராணுவப் பணிகளைப் பற்றியும் குஜராத் கலவரத்தின் போது தான் சந்தித்த அனுபவங்களைப் பற்றியும் ஜமீருதீன் ஷா தனது புத்தகத்தில் விரிவாக விவரித்திருக்கிறார். பிபிசி உடனான நேர்க் காணலில் ஜமீருதீன் ஷா பகிர்ந்துகொண்ட தகவல்கள்:
நான் அரசுக்கு ஆதரவான முஸ்லிம் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அரசில் பணிபுரியும் முஸ்லிம்களில் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் உண்டு.
அரசு ஊழியர்களாக பணிபுரியும் முஸ்லிம்களில் ஒரு வகையினர் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என குற்றம்சாட்டப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தை மதிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள்.
இரண்டாவது வகையினர் பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும், தங்கள் மனசாட்சியை விற்றவர்கள். அவர்கள் இஸ்லாமுக்கு எதிராக எழுதுகிறவர்கள்.

ராகுலிடம் கூட்டணியில் சேர கமல் விருப்பம் தெரிவித்தார் .. திருநாவுக்கரசர் பேட்டி!

tamilthehindu : காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ராகுலிடம் கூறியிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கமல்ஹாசன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். காங்கிரஸுடன் கூட்டணி வைக்க கமல் விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை ஆதரித்ததோடு, கூட்டணிக்குள் வர விரும்பும் கமலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் வாழ்த்து தெரிவித்து வரவேற்கிறேன். அவரின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ரபேல் விமான ஊழல் .. ரிலையன்ஸ் பத்தாயிரம் கோடி. என்.டி.டிவி தொலைக்காட்சி மீது நஷ்ட ஈடு வழக்கு

ரிலையன்ஸ் கேட்கும் பத்தாயிரம் கோடி: என்.டி.டிவிக்கு நெருக்கடி!மின்னம்பலம்:  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக என்.டி.டிவி மீது ரிலையன்ஸ் நிறுவனம் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.
ரஃபேல் விவகாரம் தொடர்பாக, என்.டி.டிவி Truth vs Hype என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் என்.டி.டிவி நிறுவனத்திடம் ரூ.10 ஆயிரம் கோடி கேட்டு அகமதாபாத் நீதிமன்றத்தில் நேற்று (அக்டோபர் 18) மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 26ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
ஊடகங்களை ஒடுக்கவும் தனது பணியை செய்யவிடாமல் தடுக்கவுமே இந்த மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் என்.டி.டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் 50 பேர் உயிரழப்பு .. ரெயில் விபத்து ... தசரா ராம்லீலா ...வெடிச்சத்தத்தால் ரெயில் வருவதை கவனிக்காத மக்கள்

Amritsar: At least 50 people have died in a train accident in Amritsar today. According to initial reports, the accident took place at Joda Phatak area in the city, where Ravan effigy was burnt near the tracks. The people who were hit could not hear the train due to the exploding crackers.At least 60 people have been hospitalised. The police said that the injured are being moved to a hospital. Punjab Chief Minister Amarinder Singh has expressed shock at the accident. He wrote on Twitter: "Shocked to hear of tragic rail accident in Amritsar. Have asked all govt & pvt hospitals to stay open to help in this hour of grief. District authorities have been directed to take up relief and rescue operations on a war footing." The Punjab government has announced Rs. 5 lakh compensation to the families of the accident victims

சண்டிகர்:பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 50 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து கூறப்படுவதாவது: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜோடாபதக் என்னுமிடத்தில் தசாரா விழா கொண்டாடப்பட்டு வந்தது. ரயில் தண்டவாளம் அருகே, விழாவில் கலந்து கொண்ட மக்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வந்த நிலையில், அதிலிருந்து தப்பிப்பதற்காக ரயில் பாதை அருகே மக்கள் ஒடினர் , அப்போது அவ்வழியே வந்த ரயில் மக்களின் மீது மோதியது.இச்சம்பவத்தில் 100பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதற்கட்டமாக 50 வரை என பலியாகி இருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். தினமலர்

சபரிமலை ரவுடி ராகுல் ஈஸ்வர தாந்திரியின் பாஜக பின்னணி .. ஒரு flashback

Image may contain: one or more people
Prakash JP : வயது வேறுபாடின்றி, பெண்கள், சபரிமலை சன்னிதானம் சென்று, தர்ம சாஸ்த்தாவை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும், எப்போதும் அனுமதிக்க முடியாது என்றும், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன..
ஆனால், உண்மை அது தானா?
2012-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம்6-ம் தேதி, மலையாள பத்திரிகைகள் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தன. 

ஆபிரகாம் தடியூர் என்ற மலையாள பத்திரிகை நிருபர், இப்போது, அந்த செய்தியையும், அதன் பின்னர் நிகழ்ந்தவற்றையும் நினைவு கூர்கிறார்...
"அன்று, சபரிமலை சன்னிதானத்தில், சில பெண்கள் கூட்டமாக வந்து, தர்ம சாஸ்த்தாவை தரிசித்ததை கண்டேன்; அந்த பெண்களுக்கு, போலீஸ் காவல் இருந்தது.. பத்திரிகையாளர் எவரையும், புகைப்படங்கள் எடுக்க, முதலில் அனுமதிக்கவில்ல; ஆனாலும், நாங்கள், பெரும் பாடுபட்டு, புகைப்படங்கள் எடுத்தோம்.. பத்திரிகைகளில் செய்தியும் வந்தது!

நாங்கள் சபரிமலை தந்திரிகளிடம், விசாரித்த போது, அந்த பெண்கள் அனைவரும், கொல்லம் நகரைச் சேர்ந்த, தொழில் அதிபர், சுனில் சுவாமி என்பவரோடு, மும்பையிலிருந்து வந்த பெண்கள் என்று தகவல் சொன்னார்கள்!

சபரிமலை தேவசம் போர்டு பாரம்பரியத்தை விட்டுத் தராது ..தலைவர் பத்மகுமார்

    பெண்கள் ஐயப்பன் தரிசனம் பெறுவது ரகசியம் அல்ல .
Picture of young women spotted in Sabarimala Temple who are these ladies? These are from Mumbai with Kollam based Industrialist Sunil Swamy, BJP now is Governor of one of the Northern state | The picture which went viral on the social media with claims like the women in the picture do not look like they were in 50s How these women gotEntry? Why These Sangeefellows kept quite that time?
nakkheeran.in- kathiravan : சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தை அணுக
ப்1
பத்மகுமார் தேவசம் தலைவர்
தேவசம்போர்டு முடிவு எடுத்துள்ளது.  இதை தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிதால் ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில்,  சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து,  சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் தேவசம்போர்டு தலைமையகத்தில் தலைவர் பத்மகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.  சபரிமலை பிரச்சனையில் எந்த முடிவையும் எடுக்க தேவசம் போர்டுக்கு கேரள அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் திருப்பி அனுப்பட்டனர்

Raj Dev: சபரிமலைக்கு சென்ற இரு பெண்கள் மறுபடியும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் கேரள அரசு காட்டும் சுணக்கம் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியா டுடே செய்தி ஓடையின் கூற்றுப்படி ஐயப்பன் சன்னிதானத்தில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை 60-லிருந்து 80 வரை தான் இருக்கிறது. அவர்களுடன் மிகவும் கீழிறங்கி பேசுகிறார் போலீஸ் டி.ஐ.ஜி. போலீசின் எண்ணிக்கை 200 -ஆக உள்ளது. தேவையற்ற மோதல் தவிர்க்கப்பட வேண்டியது தான் என்றாலும் இரு பெண்களையும் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து விட்டு பின்னர் திரும்ப அனுப்புவது இந்துத்துவ வன்முறை கும்பலுக்கு தங்கள் நோக்கம் வெற்றி பெறுதல் சம்பந்தமாக பாதி வெற்றியை பரிசளிப்பதாகும்.
தேவஸம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் சபரிமலைக்கு சென்றிருக்கும் இரு பெண்களில் ஒருவரை குறை கூறியிருக்கிறார். 'இது ஆன்மீக பூமி. எல்லோரும் வந்து விட முடியாது' என்கிறார். இது அப்படியே ஆர்.எஸ்.எஸின் குரலாக இருக்கிறது. எல்லா பெண்களும் இயல்பாக சென்று வரும் சூழல் இருந்தால் எதற்காக பெண்ணிய செயல்பாட்டாளர்கள் செல்கிறார்கள்? இரண்டாவது, சபரிமலையில் பாதுகாப்பான சூழல் நிலவுகிறது என்ற செய்தி பரவினால் மட்டும் தான் பல பெண்கள் செல்ல தயாராவார்கள். அதற்கு முதலில் ஒன்றிரண்டாக செல்லும் பெண்கள் தாக்கப்பட்டால் அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்ற செய்தி உறுதிப்பட வேண்டும்.

போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் சபரிமலை பயணம்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் சபரிமலை பயணம்; அய்யப்ப பக்தர்கள் முழக்கம்
தினத்தந்தி :அக்டோபர் 19, 2018 09:07 AM பம்பை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களின் போராட்டம் தொடர்கிறது. கோவிலுக்கு செல்ல முயற்சி செய்யும் பெண்கள், பெண் பத்திரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீஸ் தெரிவித்தது. இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்கள் கோவிலுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டு உள்ளார்கள்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கியுள்ளனர். சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் இருவரும் அடைந்தனர்.
அவர்களுடைய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி வருகின்றனர். பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து, சன்னிதானம் அருகே ஐயப்ப பக்தர்கள் முழக்கமிட்டு வரும் நிலையில் போலீசார் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இரு பெண்களையும் கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் பேசப்படுகிறது. இரு பெண்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிவிக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளன<

என் டி திவாரி காலமானார் ..

திவாரி, காலமானார், காங்கிரஸ்,தினமலர் :புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி காலமானார். அவருக்கு வயது 93.
1925 அக்., 18 ல் பிறந்த நாராயணன் தத் திவாரி, 1984 - 85,1988 - 89 ஆண்டுகளில் உ.பி.,யிலும், 2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட் முதல்வராக பதவி வகித்து உள்ளார். அமைச்சர் பதவி வகித்துள்ளார். இரண்டு மாநிலங்களில் முதல்வராக பதவி வகித்துள்ள பெருமைக்குரியவர். மாநில அரசில் பல அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார். 1986 -87 ல் ராஜிவ் அமைச்சரவையில், வெளியுறவு, 2007 - 2009 ல் ஆந்திர கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். ஆரம்பத்தில் பிரஜா சமாஜ்வாதி கட்சியில் இருந்த அவர், 1963 ல் காங்கிரசில் இணைந்தார். 1995 ல் காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி துவக்கி நடத்தினார். ஆனால், 2 ஆண்டுகளில் மீண்டும் காங்கிரசில் இணைந்தார். உடல்நலக்குறைவால் டில்லியில் உள்ள சாக்கேட் மருத்துவமயைில் சிகிச்சை பெற்று வந்த அவர், பிறந்தநாளான இன்று(18 அக்., 2018) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் ஆந்திராவில் ஆளுநராக இருந்த பொழுது பல பெண்களோடு பாலியலில் ஈடுபட்ட விடியோக்கள் வெளியானதால் பதவி விட்டு விலகினார். இவருக்கு இரகசிய குடும்பம் ஒன்று இருந்தது .முதலில் அதை மறுத்து வந்த பின்பு அதை ஏற்றுக்கொண்டு ரோஹித் என்ற இளைஞரை தனது மகன்தான் என்று ஏற்றுகொண்டார்.

சபரிமலை ஐயப்ப தர்மசேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கைது

ராகுல் ஈஸ்வர் - இவர்தான் ஐயப்பனின் புனிதம் காக்கும் வீரர்
Easwar is the son of Easwaran Nampoothiri and Mallika Namboothiri, and grandson of Kandararu Maheshwararu, senior Supreme Priest of Sabarimala.[4] He studied Global Leadership at the London School of Economics
Rahul_Easwar
ராகுல் ஈசவர்
தினமணி :சபரிமலை ஐயப்பன் கோயிலில்
அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக புதன்கிழமை மாலை 5 மணியளவில் முதல்முறையாக திறக்கப்பட்டது. இதனிடையே, சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும் அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

நானே இறங்கி செய்றேன்: சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் அதிரடி!

webdunia :உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐய்யப்ப பக்தர்களும் இந்து வலதுசாரி அமைப்புகளும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வந்தன.
இந்நிலையில், நேற்று சபரிமலை நடை ஐப்பசி மாத சிறப்பு வழிபாட்டுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.">இதனால் பெண் பக்தர்கள் கோயிலுக்குள் வருவதை தடுக்க போராட்டக்காரர்கள் சபரிமலையை முற்றுகையிடத் துவங்கினர். இதனால், கலவரத்தை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், என்ன பிரச்சனை வந்தாலும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்போம் என்று முடிவெடுத்துவிட்டார் பினராயி விஜயன். சபரிமலை செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

வியாழன், 18 அக்டோபர், 2018

பெண் நிருபரின் காரை அடித்து நொறுக்கி விரட்டிய சபரிமலை பக்தர்கள் என்கின்ற குண்டர்கள்


tamil.oneindia.com - veerakumaran.: போராட்டக்காரர்கள் பெண் நிருபரின் காரை அடித்து உடைக்கும் திக் திக் கட்சி- வீடியோ பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரிப்போர்ட்டிங் செய்ய சென்ற பிரபல ஆங்கில செய்தி சேனலின் பெண் நிருபர், திரளான பக்தர்கள் கூட்டத்தில் சிக்கி தாக்குதலுக்கு உள்ளான திக் திக் காட்சிகள் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதன்பிறகு, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் முதல் முறையாக நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து பெண்கள் சிலரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.
இவர்களை நிலக்கல் பகுதியில் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். பெண் பத்திரிகையாளர்கள் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. பல ஆங்கில டிவி சேனல்களும் பெண் நிருபர்களை கள நிலவரத்தை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தது.
அப்படி ஒரு ஆங்கில செய்தி, சேனலின் நிருபரான ராதிகா ராமசாமி, நேற்று நிலக்கல் பகுதியில் காரில் சென்றார். அவர் மேற்கொண்டு சபரிமலைக்கு செல்வதை பக்தர்கள் தடுத்தனர்.

அம்பானிக்காக பிரான்சை நிர்பந்தித்து மாமா வேலை பார்த்து ரபேல் விமானத்தை அதிக ...

சவுக்கு : போர்ட்ரைல் ஏவியேஷன்
வலைப்பதிவு
பிரான்ஸ் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைமை செயலதிகாரி இடையிலான ஆலோசனை விவரங்களை வெளியிட்டுள்ளது
பிரெஞ்சு ஏவியேஷன் வலைப்பதிவு ஒன்று, இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்களை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும், விமானத் தயாரிப்பு நிறுவனமான, டசால்ட் ஏவியேஷன் முன்னணி அதிகாரிகள் மற்றும் இரண்டு தொழிற்சங்கள் இடையிலான ஆலோசனை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ், இந்தியா விமான படைக்கு 36 ரஃபேல் விமானங்களை விற்பதற்கான ஒப்பந்ததில் 2016இல் கையெழுத்திட்டன.
போர்ட்ரைல் ஏவியேஷன் எனும் வலைப்பதிவு, 2017, மே 11இல் நடைபெற்ற கூட்டம் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், டசால்ட்டின் முதன்மைச் செயல் அதிகாரி லோய்க் செகாலென், இரண்டு தொழிற்சங்கங்களிடம் விமானங்களுக்கான ஒப்பந்ததைப் பெற, இந்தியாவின் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வது கட்டயாமானது எனத் தெரிவித்தார்.

Facbook இல் பிரபாகரன் படத்தை Like செய்த இளைஞர் 10 மாதங்களுக்கு பின் ஜாமீனில் விடுதலை

BBC : புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட
வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு இன்று (10) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவொன்றை மையப்படுத்தி இரத்தினபுரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் வாழ்த்துச் செய்தியொன்று பேஸ்புக்கில் பதியப்பட்டுள்ளது. தினேஸ் குமார் என்ற இளைஞனே குறித்த சர்ச்சையான பதிவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பதிவை லைக் செய்ததாகவே விதுசன் என்ற இளைஞனும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

ஆன்லைன் விற்பனையில் போலி பொருட்கள்... முறைப்பாடுகள்

ஆன்லைன் ஷாப்பிங்: அதிகரிக்கும் புகார்கள்!மின்னம்பலம்: இந்தியாவின் ஆன்லைன் விற்பனைச் சந்தை வேகமாக வளர்ந்து வரும் சூழலில், அந்நிறுவனங்கள் மீதான புகார்களும் அதிகரித்துள்ளன.
அக்டோபர் மாத ஆன்லைன் சில்லறை விற்பனையில் குறைபாடுகள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனைத் தொடர்புகொண்டு அதிகளவில் புகார்கள் தெரிவித்துள்ளனர். ஃபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் உட்பட பல்வேறு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மீதும் புகார்கள் குவிந்துள்ளன. இதனால் அக்டோபரில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மீதான வாடிக்கையாளர்களின் புகார்கள் 20 விழுக்காடாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் இது 18 விழுக்காடாக மட்டுமே இருந்தது.

'ஒன்று சேர்’ - தினகரன், எடப்பாடிக்கு பாஜக நெருக்கடி!

டிஜிட்டல் திண்ணை: 'ஒன்று சேர்’ - தினகரன், எடப்பாடிக்கு பாஜக நெருக்கடி!மின்னம்பலம்: ”இந்திய அளவில் பிஜேபிக்கான செல்வாக்கு குறைந்தபடியே இருக்கிறது என்று மத்திய அமைச்சர்கள் பலருக்கும் தொடர்ந்து பல தரப்பிலிருந்தும் ரிப்போர்ட் வந்தபடியே இருக்கிறதாம். அதிலும், குறிப்பாக ரஃபேல் விமான ஊழல், தேர்தல் சமயத்தில் பிஜேபிக்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்ட பிறகுதான், வரப்போகும் தேர்தலில் கூட்டணி விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது பிஜேபி. அதற்கான வேலைகளிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
உதாரணத்துக்கு உத்திரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் சித்தப்பாவை தனித்துக் கொண்டு போய் தனிக் கட்சியும் தொடங்க வைத்துவிட்டார்கள். மாயாவதியிடம் இருந்து காலி செய்ய வைத்த அந்த வீட்டை இப்போது அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
தொகுதிக்கு 4 ஆயிரம் ஓட்டைப் பிரித்தாலே போதும். அதுவே நமக்கு வெற்றி என்பது பிஜேபி போடும் கணக்கு.
தமிழகத்திலும் அவர்கள் கணக்குப் போடாமல் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வந்த சர்வே படி, ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் வாக்கு வங்கி 27 சதவிகிதம் இருந்தது. அதில் 8 சதவிகிதம் இப்போது தினகரன் பிரிக்கிறாரு. தென் மாவட்டங்களில் 12 சதவிகிதம் தினகரன் பிரிப்பதாகவும் டெல்லிக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. இதுதான் அதிமுக நிலவரம். தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி என்பது நடக்காத விஷயமாகிவிட்டது.

இதுவரை எந்த பெண்ணையும் உள்ளே விடாத ஐயப்ப குண்டர்கள் .. அரசு என்ன செய்கிறது?

20 மணி நேரமாகியும் எந்தப் பெண்ணும் செல்லவில்லை!மின்னம்பலம்: சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் போராட்டக்காரர்களுடன் சமசர பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பெண்களைக் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுத்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், கடந்த இரண்டு நாட்களும் சபரிமலையில் பதற்றம் நிலவி வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் நிலக்கல் பகுதி பல்வேறு குழுக்களின் போராட்டக் களமாக மாறியுள்ளது. போலீஸ் பாதுகாப்பை மீறியும் போராட்டக்காரர்கள் பெண்களைக் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர். இதனால்,போராட்டக்காரர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

சபரிமலை - தீர்ப்பை எதிர்த்து பார்ப்பனர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்

சபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்மாலைமலர்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தீர்ப்பை எதிர்த்து பார்ப்பனர்கள்  சங்கம் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. புதுடெல்லி சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இதுநாள் வரை இருந்த பாரம்பரிய நடைமுறைக்கு மாறாக, அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என கூறிவிட்டது. எனவே, அவசர சட்டமாவது இயற்றி இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டம் என தொடர்ந்து இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களை அங்கு செல்ல விடாமல் போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் சபரிமலை செல்லும் பாதைகளில் பதற்றம் நீடிக்கிறது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதையடுத்து தடியடியும் நடத்தப்பட்டது.

BBC : சபரிமலையில் தற்போதைய நிலவரம்

கேரளாவில் சபரிமலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி இருப்பதாக களத்தில் இருக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் தெரிவிக்கிறார். சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக இந்து அமைப்புகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.
சன்னிதானம், நிலக்கல், இலவுங்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இந்து அமைப்புகளின் கடை அடைப்பு அழைப்புக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளிப்பதாக கூறுகிறார் பிபிசி செய்தியாளர்.
"நேற்று இருந்த நிலைமையை காட்டிலும் முற்றும் மாறாக இன்று (வியாழக்கிழமை) பத்தனம்திட்டா பகுதிகளில் பேரமைதி நிலவுகிறது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கிறது." என்கிறார் பிபிசி செய்தியாளர்.
சாமானியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்
"இந்த கடையடைப்பால் சாமானியர்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பெரும் பணம் படைத்தவர்களுக்கு இது மற்றொரு விடுமுறை நாள்" என்கிறார் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த பிரிட்டோ. "சட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட வேண்டிய விஷயத்தை, வீதிக்கு கொண்டு வந்து மக்களை வஞ்சிப்பது சரியல்ல" என்கிறார் நிலக்கல் பகுதியை சேர்ந்த பெயரிடப்பட விரும்பாத ஒருவர்.

கேரளா அமைச்சர் கே கே சைலஜா:சபரிமலை போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல

சபரிமலை - அரசியல் நடக்கிறது: கேரள அமைச்சர்கள்!
மின்னம்பலம்: சபரிமலை விவகாரத்தில் அரசியல் நடப்பதாக கேரள அமைச்சர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனிடையே நேற்று முதல் வரும் 22ஆம் தேதி வரை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நேற்று கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் கோயிலுக்குப் பெண்கள் செல்ல அனுமதி மறுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பம்பையில் போராட்டம் நடைபெற்றது. சபரிமலைக்குப் பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களைச் சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இரு பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

பந்தளம் மன்னர் குடும்பத்தினர் திடீர் கைது.. சபரிமலை போராட்டத்தில் கல் வீச்சு, தடிய

சபரிமலை,போராட்டம்,கல்வீச்சு,தடியடி,மன்னர்,குடும்பத்தினர்,  கைதுதினமலர்  :சபரிமலை ; கேரள மாநிலம், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப் பதை எதிர்த்து,நடந்த போராட்டத்தால், கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நிலக்கல் என்ற பகுதி போர்க்களமானது. போராட்டக்காரர்கள், கல் வீசி தாக்கியதால், போலீசார் தடியடி நடத்தினர். பம்பையில் போராட்டம் நடத்திய, பந்தளம் மன்னர் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். இத்தனை பரபரப்புக்கு இடையில், சன்னி தானத்தில் அமைதியாக நடை திறப்பு நடந்தது கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இதற்கு எதிராக, கேரளா வில் பெரிய அளவில் போராட்டம் நடக்கிறது.

சபரிமலை குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை

வெப்துனியா :சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இதனையடுத்து இன்று சபரிமலை நடை திறக்கப்பட்டது. இன்று ஐயப்பனை வழிபட வந்த பெண்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்ததால் சபரிமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சபரிமலை பிரச்சினையால் குருசாமி இராமகிருஷ்ணன் என்பவர் ரயில்முன் நின்று தற்கொலை செய்து கொண்டார்.

கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைது

கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைதுதினத்தந்தி: சபரிமலைக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர்.
இதைத் தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருவனந்தபுரம், கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை அமல்படுத்துவோம் என கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்தது. கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். யாரும் தடுத்து நிறுத்தப்படமாட்டார்கள் என்று அறிவித்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மற்றும் கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வதை அனுமதிக்கமாட்டோம் என்று போராட்டம் நடத்தியவர்கள் கூறினார்கள்.

சபரிமலை ...ஆர் எஸ் எஸ் இன் இரட்டை வேடம் .. அனுமதி கோரி வழக்கும் போட்டு தற்போது எதிர்க்கும் நாடகம்

பெண்களை சபரிமலையில் அனுமதிக்கமாட்டோம் கேரள-பாஜக. பெண்களை இலவசமாக சபரிமலைக்கு அழைத்துச் செல்வோம்.! தெலுங்கானா-பாஜக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை*
பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம்!
சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி வேண்டும் என்று
2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்!
பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்!
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குப் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே ஆர்.எஸ்.எஸ்.தான்; அதற்கு மாறாக இப்பொழுது போராட்டம் நடத்துவதும் அதே கும்பல்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
2006 இல் வழக்குப் போட்டதே ஆர்.எஸ்.எஸ்.தான்?
அய்யப்பன் கோவிலுக்குப் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறி, கேரளாவில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் அன்றாடம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து கேரள அமைச்சர் தெரிவித்துள்ள தகவல் முக்கியமானது.