சனி, 17 மார்ச், 2018

2019க்குள் அனைத்து ரயில்களிலும் மலக்கழிவுகள் மறுசுழற்சி... பயோ டாய்லெட்!

2019க்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட்!மின்னம்பலம்: கடந்த மூன்றாண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயோ டாய்லெட்டுகளை அமைத்துள்ளதாகப் பாராளுமன்றத்தில் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயிலில் இருந்து வெளியேறும் மனித கழிவுகளால் சுற்றுப்புறச் சூழல் மாசுக்கேடு அடைகிறது என குற்றச்சாட்டு வந்தபோது அதற்கு மாற்றாக அரசு எடுத்த முடிவுதான் இந்த பயோ டாய்லெட் வசதி. இந்திய ரயில்வே அமைச்சகம் 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரையில் 87,000 பயோ டாய்லெட்டுகளை அமைக்க இலக்கு நிர்ணயித்து, இதுவரை 1,00,663 பயோ டாய்லெட்டுகளை அமைத்துள்ளதாக மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜென் கோஹய்ன் மாநிலங்களவையில் நேற்று தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்திற்காக 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரையில் ரூ.513.97 கோடி செலவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
ரயில்வே அமைச்சகம் 2015-2016ஆம் ஆண்டு 17,000 பயோ டாய்லெட்டுகளை அமைக்க இலக்கு நிர்ணயித்து, 15,442 மட்டுமே நிறுவியது.
2016-2017 காலகட்டத்தில் 30,000 பயோ டாய்லெட்டுகள் அமைக்க இலக்கு நிர்ணயித்து, 34,134 அமைத்தது. அதே போல 2017-2018ஆம் ஆண்டு பிப்ரவரி வரை 40,000 ஆக இருந்த இலக்கைக் கடந்து 51,087 பயோ டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டது.

காங்கிரஸ் மாநாட்டில் சிதம்பரத்துக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை ?

மின்னம்பலம்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில், மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை யாரும் கண்டுகொள்ளாத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் சீனா, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா, பாலஸ்தீனம் என சர்வதேச அளவில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன.
காங்கிரஸ் மாநாட்டில் சிதம்பரத்துக்கு அவமரியாதை? நேரடி ரிப்போர்ட்!தலைமைப் பொறுப்பேற்று முதல் மாநாடு நடத்தும் ராகுல் காந்திக்குத் துணையாக அவரது சகோதரி பிரியங்கா இருந்துள்ளார். மாநாடு அரங்கத்துக்குள் தலைவர்கள் இருக்கைகள், ஒலி பெருக்கிகள் எங்கெங்கே பொருத்தப்படவேண்டும், ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என அனைத்தையும் பார்த்து பார்த்துச் செய்தவர் பிரியங்கா காந்திதான். ஆனால், இன்றைய மாநாட்டில் அவர் கலந்துகொள்ளவில்லை.
மாநாட்டு அரங்கத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

திருப்பதியிலிருந்து திருமலை வரை மின்சார பேருந்து

திருப்பதி: எலெக்ட்ரிக் பேருந்து!மின்னம்பலம்: ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அதிநவீன எலெக்ட்ரிக் பேருந்து போக்குவரத்து இன்று காலை (மார்ச் 17) தொடங்கியது.
ஏழுமலையானைத் தரிசிக்க திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்காக ஆந்திர அரசு சார்பில் திருப்பதியிலிருந்து திருமலை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், திருமலையில் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், பக்தர்களின் வசதிக்காகவும் முதன்முறையாக பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை ஆந்திர அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக 1,500 பேட்டரி பேருந்துகளை இயக்க முடிவு செய்தார். இந்தப் பேருந்துகள் திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இயக்க தீர்மானிக்கப்பட்டது. ரூ. 3 கோடிக்கு ஒரு எலெக்ட்ரிக் பேருந்தை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக மத்திய அரசு ஒரு பேருந்துக்கு ரூ. 87,000 மானியம் அளிக்கவும் முன்வந்தது.

நடிகை ஸ்ரேயா ரகசியத் திருமணம்! ரஷ்ய விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கொசெவ்

ஸ்ரேயா ரகசியத் திருமணம்!மின்னம்பலம் : நடிகை ஸ்ரேயா-ஆண்ட்ரே கோசேவ் திருமணம் மும்பையில் ரகசியமாக நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரேயாவுக்கும் ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோசேவுக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாக செய்திகள் வெளியாயின. இவர்களது திருமணம் இந்து முறைப்படி மார்ச் 17, 18, 19 ஆகிய மூன்று தினங்கள் உதய்பூரில் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஸ்ரேயா மறுத்திருந்தார்.
இந்த நிலையில் அவர்களின் திருமணம் ரகசியமாக நடந்துவிட்டதாக 'மிட்-டே' வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது. அதில், “கடந்த 12ஆம் தேதி மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரேயாவின் வீட்டில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஷ்யையின் ஒப்புதலோடுதான் பாலியல் உறவு நிகழ்ந்தது .. நித்தியானந்தா வழக்கில் திருப்பம்

நித்யானந்தா பாலியல் வழக்கில் புதிய திருப்பம்!மின்னம்பலம்: நித்யானந்தா பாலியல் வழக்கில், இருவரின் ஒப்புதலுடன் தான் உடலுறவு நடந்தது என்றும் அது வன்புணர்வல்ல என்றும் அவருடைய வழக்கறிஞர் சிவி.நாகேஷ் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
முன்னாள் பெண் சீடர் ஒருவரை நித்யானந்தா பலாத்காரம் செய்ததாக அவருக்கு உதவியாளராக இருந்த லெனின் கருப்பன் வழக்குத் தொடர்ந்தார். அதில், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை பலாத்காரம் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
2010 ஆம் ஆண்டில், நித்யானந்தாவுக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டபோது, அவர் குற்றமற்றவர் என்றும், தான் ஆறு வயது சிறுவன் (அதாவது ஆண்மையற்றவர்) என்றும் குற்றவியல் புலனாய்வு துறையினரிடம் தெரிவித்தார்.

ஏர்வாடி பள்ளிகூட 100 மாணவர்கள் கண்பாதிப்பு .. பவர் பல்பு வெளிச்சம் ஏற்படுத்திய பாதிப்பு ?

விகடன் இரா.செந்தில் குமார் :

கண் பாதிப்பு
எல்.இ.டி விளக்குகள்
நெல்லையில், பள்ளி மாணவர்கள் 70 பேர் , அவர்களின் பெற்றோர்கள் 30 பேர்... என மொத்தமாக 100 பேருக்குக் கண் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்பது அதிர்ச்சித் தகவல். நெல்லை மாவட்டம், ஏர்வாடியிலிருக்கிறது, `எஸ்.வி.இந்து தொடக்கப் பள்ளி’. நேற்றிரவு பள்ளியின் ஆண்டுவிழா. அதில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சிலருக்குத்தான் இப்போது கண் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. `ஆண்டுவிழாவில், பயன்படுத்தப்பட்ட அதிக வெளிச்சத்தை உமிழும் விளக்குகள்தான் கண் பாதிப்புக்குக் காரணம்’ என்று சொல்லப்படுகிறது.
விழா நடைபெற்றபோது, கலந்துகொண்டவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காலையில் தூங்கி எழுந்தபோதுதான் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது; தாரை தாரையாக நீர் வழிந்திருக்கிறது. கண்கள் சிவந்து போய், திறப்பதற்கே கூச்சம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, பாதிக்கப்பட்டவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு ஒரு தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இன்றைய வடக்கு தெற்கு பிரச்னையை அன்றே கணித்த அண்ணல் அம்பேத்கார்

Sivasankaran Saravanan : இந்திய தேசத்தின் மிகப்பெரிய பொருளாதார மேதை அவர்!
1930 களின் ஆரம்பத்திலேயே பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் தர முடிவெடுத்துவிட்டது! அதன்பிறகு நடந்ததெல்லாம் சும்மா அதிகாரப்பகிர்வுகளே!
அந்த காலகட்டத்தில் இந்தியத்துணைக்கண்டத்தின் பரந்து விரிந்த நிலப்பரப்பையும் அதன் சூழலியல் தன்மையையும் நன்கு ஆய்ந்து உணர்ந்த அந்த அறிஞர் தனக்கிருக்கும் பொருளாதார அறிவை பயன்படுத்தி ஆழமாக சிந்திக்கிறார்!
ஒருவேளை இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டால் அதன்பிறகு ஒரே ரூபாய் மதிப்பை வைத்து ஒட்டுமொத்த தேசத்தையும் இவர்கள் ஒருங்கிணைப்பார்கள் என்பதை கண்டறிகிறார்!
விந்திய மலைத்தொடருக்கு வடக்கே ஒரு இந்தியாவையும் தெற்கே ஒரு இந்தியாவையும் அவர் காண்கிறார். ரூபாய் மதிப்பெண்பது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதை துல்லியமாக கணிக்கிறார் அந்த பொருளாதார மேதை!
எப்படியும் சுதந்திரத்திற்கு பிறகு இவர்கள் ஒரே ரூபாய் மதிப்பை வைத்துத்தான் ஒட்டவைக்கப் பார்ப்பார்கள். விவசாயம் தான் பிரதான வருமானம், நாட்டின் ஜிடிபி விவசாயத்தை மட்டுமே முன்னிறுத்தி இருக்கும் என்ற நிலை இருக்கும்வரை, விந்திய மலைத்தொடருக்கு வடக்கே உள்ள பகுதிகள் விந்திய மலைகளுக்கு தெற்கே உள்ள இந்தியாவை ஏமாற்றி பிழைப்பை ஓட்டும் என கணிக்கிறார்!

அணு விஞ்ஞானி "மேகநாத் சாஹா" இந்திய வரலாற்றில் ஏன் மறைக்கப்பட்டார் .... ஜாதி ...


Palanivel Manickam : மாபெரும் அறிவியலாளர் ஸ்டீபன் ஹோக்கிங் மறைந்த இந்த துயரமான நாளில் இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட மாபெரும் அறிவியல் மேதையும்,சிந்தனையாளருமான தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த "மேகநாத் சாஹா" எனும் அணுசக்தி அறிவியலாளர் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். அணு விஞ்ஞானி என்றாலே தொழிலதிபர் டாடாவின் உறவினர் ஹோமி பாபா என்பவர் தான் என இந்திய மனங்கள் நம்பும் காலங்களில் அதற்கு முன்னரே அணு ஆற்றல் துறையில்(அணுசக்தி துறையில் நமக்கு மாறுபட்ட கருத்துகள் உண்டு) பல ஆராய்ச்சிகள் செய்தவர் மேகநாத் சாஹா,உண்மையில் இந்திய அணு ஆற்றலின் தந்தை என போற்றப்படவேண்டியவர் இவரே.1936-லேயே 'அணு இயற்பியல் "(Atomic Physics) பாடத்தை கல்லூரி பாடத்தில் புகுத்தியவர்(காலம் பிரிட்டிஷ்க்காரன் காலம்)அதே நேரம் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியவர்,
தன் தன்னம்பிக்கை மற்றும் அறிவாற்றலால் இந்திய அறிவியல் துறைக்கு பல கொடைகளை வழங்கியவர்,ஆனால் ஏன் அந்த அறிவியலாளர் இந்திய வரலாற்றில் ஏன் மறைக்கப்பட்டார் என்பதற்கு இரு காரணங்கள் முகமுக்கியமானவை.
1)தன் கல்வி அறிவால் அறிவியல் துறையில் முன்னேறி இந்து வேத மதத்தை, அதன் கொடூர வர்ணாசிரம கொடுமை தன் வாழுங்காலத்தில் எதிர்த்து போராடிய வர்ணாசிரம தர்மத்தின் படி பிரம்மனின் காலில் பிறந்தவர் என்பதாலும்,

எம்.ஜி.ஆர் ஆட்சியில் ரஜினிக்கு நடந்தது என்ன? கைது... கலாட்டா... பில்லா!

எம் ஜி ஆர்  ஜெயலலிதா vikatan : எஸ்.ஏ.எம். பரக்கத் அலி  ஆர்.எம்.முத்துராஜ்<  ராஜமுருகன்</ கேள்வி: ''நீங்கள் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறதே. உண்மையா?''
(ஏ.பி.பன்னீர்செல்வம், ஐ.சி.எப் காலணி, சென்னை)
மாலைமுரசுஜெயலலிதா: ''ஒரு படத்தில் அவருடன் நடிக்க மறுத்தது உண்மைதான். ஆனால், அதற்கு காரணம் என் வேடம். அந்த வேடம் என் மனதுக்கு திருப்தி அளிக்கும் வகையில் பொருத்தமாக அமையவில்லை. அதைத் தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை. நல்ல படம் கிடைத்தால் அவருடன் நடிப்பதில் ஆட்சேபணை இல்லை.''
- 1979-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி 'மாலை முரசு' நாளிதழில் வெளியான ஜெயலலிதாவின் பதில் இது. வாசகர்கள் கேட்ட நிறைய கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில்கள் அளித்திருந்தார். அதில் ரஜினியைப் பற்றிய இந்த பதில் முக்கியமானது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றிய முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்: கே.சி.பழனிசாமி காட்டம்

tamilthehindu : என்னைக் கட்சியை விட்டு நீக்கிய ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றிய முக்கிய ஆதாரங்களை நாளை வெளியிடுவேன் என்று கே.சி.பழனிசாமி காட்டமாக பதிலளித்துள்ளார்.
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்து முக்கியப் பொறுப்பில் இருப்பவர் கே.சி.பழனிசாமி. அதிமுகவில் எம்.பி., எம்எல்ஏ என பதவி வகித்தவர். ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து வெளியேறி தனி அணி அமைத்தபோது உடனிருந்தவர். இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கருத்து தெரிவித்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
தனது நீக்கம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கே.சி.பழனிசாமி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பாக கே.சி.பழனிசாமி கூறியதாவது:
''இவர்கள் யார் என்னை நீக்க? நான் எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பவன், எனக்குப் பிறகு அதிமுகவுக்கு வந்தவர்கள் தான் இந்த இருவரும்,

மத்திய அரசுக்கு எதிராக ஒன்று கூடிய தென்னிந்திய மாநிலங்கள்..

ஆந்திர பிரதேசம் 50 ஆண்டுகள்: Prasanna VK tamiloneindia  : மோடி அரசு 4 வருட ஆட்சியில் பணமதிப்பிழப்பால் மக்களுக்கும், ஜிஎஸ்டியால் வர்த்தகர்களுக்கும், அரசு திட்டங்களின் தொடர் தோல்வியின் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் தொய்வு என பல இருந்தாலும் தொடர்ந்து ஆட்சியை காப்பாற்றி வருகிறது.
தற்போது இந்த நிலை மோசமடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 282 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை அமைத்தது.
பாஜக ஆட்சியில் அமர்ந்த பின் நடைபெற்ற 17 லோக்சபா இடைத் தேர்தல்களில் பாஜக 3-ல் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. 2014-ல் வீசியதாக சொல்லப்பட்டு மோடி அலை புஷ்வானமாகி உள்ளது.

வெள்ளி, 16 மார்ச், 2018

களப்பிரர் காலம் தமிழரின் பொற்காலம்,.. உண்மையில் பார்ப்பனரின் இருண்ட காலம்.

களப்பிரர் காலம், தமிழரின் இருண்ட காலம் அல்ல, பார்ப்பனரின் இருண்ட காலம். உண்மையில் தமிழரின் பொற்காலம்,
Krishnavel T S : களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி
களப்பிரர் காலம் தமிழ் வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 - 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்.
தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப் பட்ட காலம் கி.மு. 1 - முதல் கி.பி.5 - ஆம் நுற்றாண்டு வரையே.
ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்ட காலம், களப்பிரர் என்ற வேறு ஒரு இனம் தமிழரை அடிமை படுத்திய காலம் என்று ஏன் கூறுகிறது.
களப்பிரர் வேறு இனம் என்றால் அவர்கள் ஏன், தமிழில் இப்படி பட்ட இலக்கியங்களை படைக்க வேண்டும் அல்லது படைக்க உதவ வேண்டும்.
உண்மையில் நடந்தது என்ன வென்று பார்ப்போம். கி.பி.1ஆம் நூற்றாண்டு மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட முடிவை நெருங்கிய காலம். அந்த கால கட்டத்தில் பெரும் பான்மையான மக்கள் கொண்டிருந்த வழக்கம், முன்னோர் வழிபாட்டு முறையான நடுகல் வழிபாடு(போரில் இறந்த முன்னோருக்கு கல்நட்டு வழிபடுதல்) மற்றும் சாத்தன் வழிபாடு(போரில் இறந்த முன்னோரில் குதிரை ஏறி புரிந்தவர், குதிரை வைத்திருந்த வீரன் சிறு வசதியான குடும்பமாக இருப்பர், அவர்கள் சிறு கோயில் கட்டி வழிபட்டனர்), இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் பல சாதிகளை சேர்ந்தவர்கள் பங்குனி மாதம் உத்திரம் நாளில் தங்கள் குடும்ப சாத்தான் கோயிலுக்கு சென்று வழிபடுவர். அதாவது அவர்கள் பல சாதிகளை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் மூத்த முப்பாட்டன் ஒருவனே என்று பொருள்

ஆவடியில் கொத்தடிமைகளாக இருந்த 147 பேர் மீட்பு!... செங்கல் சூளையில்

கொத்தடிமைகளாக இருந்த 147 பேர் மீட்பு!
மின்னம்பலம் :ஆவடியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 147 பேர் மீட்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பாண்டேஸ்வரம் பகுதியில் தனியார் செங்கல் சூளை ஒன்று இயங்கிவருகிறது. இந்தச் செங்கல் சூளையில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்துவருவதாகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை (மார்ச் 14), திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் செங்கல் சூளையில் சோதனை நடத்தினர். அப்போது, 63 ஆண்கள், 49 பெண்கள், 35 குழந்தைகள் என 147 பேர் கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் வேலை பார்த்துவருவது கண்டறியப்பட்டது. விசாரணையில் இவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

லாலு வழக்கு: மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட தீர்ப்பு!

லாலு வழக்கு: மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட தீர்ப்பு!மின்னம்பலம் :பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான தும்கா கருவூல மோசடி வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 1991-96 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்தபோது சுமார் 900 கோடி மதிப்பளவில் கால்நடைத் தீவன ஊழல் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது சிபிஐ.
இந்த ஊழல் தொடர்பாக, மூன்று வழக்குகளில் இதுவரை ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடைசி வழக்கான தியோஹர் கருவூல மோசடி வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ராஞ்சி பிர்ஸா முண்டா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் லாலு.

குரங்கணி காட்டுத் தீ:உயிரழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு !

குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை உயர்வு!மின்னம்பலம் : குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சென்னை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, மதுரையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா என்ற பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கண்ணன், அனுவித்யா இருவரும் சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 16) உயிரிழந்தார்.

நடிகை ஸ்ரீ வித்தியாவின் வீடு ஏலத்திற்கு வருகிறது ...

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்!மின்னம்பலம் :வரி ஏய்ப்பு செய்ததால் வருமானத் துறையினர் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வீட்டை ஏலத்தில் விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்தவர் ஸ்ரீவித்யா. 80களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் பல்வேறு குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வசித்துவந்த இவர், 2006ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார். இவரின் இறப்புக்குப் பிறகு, இவரது அபிராமபுர வீட்டை அவரின் சகோதரர் கே.பி.கணேஷ்குமார் என்பவர் நிர்வகித்துவந்தார். அந்த வீடு தற்போது மாதம் 13,000 ரூபாய்க்கு வழக்கறிஞர் உமாசங்கர் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து கே சி பழனிசாமி நீக்கம் ... மோடி அரசுக்கு எதிராக எதிரான கருத்து ... எடப்பாடிக்கு மோடி நெருக்கடி

மத்திய அரசுக்கு எதிராக ஆந்திரா எம்பிக்கள் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களிப்பர் என்று தொலைக்காட்சியில் கூறியது மோடி அரசை அதிர்ச்சி உள்ளாக்கியதாக தெரிகிறது !
வெப்துனியா :மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் பொம்மையாகவும், பினாமியாகவும் தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் கடந்த ஒரு வருடமாக இருந்து வருகிறது. அதற்கேற்ப அதிமுக அமைச்சர்களின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் இருந்தாதால் பொதுமக்களுக்கும் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். இந்த தீர்மானத்தை தேவைப்பட்டால் ஆதரிப்போம் என்று தெலுங்கு தேசம் மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூறியுள்ளது. இந்த நிலையில் பாஜகவின் தலையாட்டும் பொம்மை என்று விமர்சனம் செய்யப்பட்ட அதிமுகவும் தேவைப்பட்டால் இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் என்று முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கூறியுள்ளது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும்' என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக, பாஜகவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிரான YSR - TDP நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ள மறுப்பு ... செவ்வாய் கிழமை மீண்டும் ....

tamilthehindu :தெலுங்குதேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் கட்சிகளின் முயற்சியால்
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தால், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை அசைத்துவிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
ஏனென்றால், அந்த அளவுக்கு தனியாக அசுர பலத்துடனும், கூட்டணியுடன் கணக்கிடும்போது, மூன்றில் 2 பங்குக்குஅதிகமாக எம்.பி.க்கள் பாஜக அரசுக்கு இருப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும், அது வீணாகத்தான் போகும்.
கடந்த 4 ஆண்டுகள் ஆண்ட பாஜக தலைமைக்கு எதிராக ஒரே முறை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்ததாக வரலாறு இருக்குமே தவிர அந்த தீர்மானத்தால்,மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எந்தவிதமான நெருக்கடியும் ஆட்சியில் ஏற்படுத்தப் போவதில்லை.
ஒருங்கிணைந்த ஆந்திரமாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஆந்திராவுக்கு சிறப்பு நிதித்தொகுப்பு, சிறப்பு அந்தஸ்து தருவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.
அதே கடந்த 4 ஆண்டுகளாக நிதித்தொகுப்பு அளிக்கப்படாததைக் கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதற்கிடையே கடுமையான நிலைப்பாட்டை எடுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்தார்.

தோழர் ஃபாரூக் நினைவேந்தல் .. இஸ்லாமிய அடிப்படை வாதத்தை பெரியார் இயக்கங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை?

நாளை சென்னையில், மனிதநேயப் போராளி தோழர் ஃபாரூக் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ! திராவிடர் விடுதலைக்கழகம் சென்னை மாவட்டம் சார்பில். நாள் : 16.03.2018, வெள்ளிக்கிழமை நேரம் : காலை 9 மணி இடம் : பெரியார் படிப்பகம்,தோழர்.பத்ரி நாராயணன் நினைவு நூலகம், லாயிட்ஸ் ரோடு, இராயப்பேட்டை, சென்னை. தொடர்புக்கு : 7299230363
Thameem Tantra  திராவிடர் விடுதலை கழகத்தை சார்ந்த பாரூக் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையை செய்ததாக அஸ்ரத் என்பவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். பாரூக் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தீவிரமாக எதிர்த்தவர். அதை பொறுத்துகொள்ளமுடியாமல் அமைதி மார்க்கத்தின் வழியில் பாரூக்கை அல்லாஹ்விடம் பேச அனுப்பிவைத்தார் அஸ்ரத். சரி இந்த கொலைக்கு எந்த அளவு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமோ, அதே அளவு பெரியாரிய இயக்கங்களும் காரணம் என்று நான் உறுதியாக சொல்லுவேன்.
பெரியாரிய இயக்கங்கள் சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் செய்யும் மடத்தனங்கள் அளவற்றது. இந்தியநாட்டில் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதில் எனக்கு துளியளவுகூட ஐயமில்லை... அவர்களுக்கு ஆதரவு அவசியம் என்பதிலும் எனக்கு ஐயமில்லை ஆனால் பெரியாரிய இயக்கங்கள் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்கிறோம் என்று யாருடன் கைகோர்க்கார்களோ அவர்கள் பெண்களை மிக கேவலமாக விமர்சிக்கும் பச்சை பொறுக்கிகளாகவும்,இஸ்லாமிய பெண்களை தொடர்ந்து ஒடுக்கிவரும் அயோக்கியர்களாவும் இருக்கிறார்கள்.
உதாரணம் : பெண் விடுதலை என்று தாலி அகற்றும் போராட்டத்தில் புர்கா ஆதரவாளர் முஸ்லீம் அடிப்படைவாதி ஜவாஹிருல்லாஹ்வை மேடையில் வைத்து கொண்டு நடத்துவது !...இதை கோமாளித்தனம் என்று சொல்வதைவிட எனக்கு வேறு வார்த்தைகள் இல்லை.

தென்மாநிலங்கள் முன்வைக்கும் திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு: ஸ்டாலின்

DMK to support Dravida Nadu, says MK Stalin mathio Oneindia Tamil<: br=""> மத்திய அரசுக்கு எதிராக தென்மாநிலங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் குரல் கொடுத்து வருகின்றன. தென் மாநிலங்களின் வரி வருவாயை கொண்டு வடமாநிலங்களை வளப்படுத்துகிறது மத்திய அரசு என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.< கேரளாவில் ஏற்கனவே திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்பட்டது. கர்நாடகாவில் இந்தி திணிப்புக்கு எதிராகவும் நாம் இந்துக்கள் என்பதற்கு எதிராகவும் கிளர்ச்சி குரல்கள் கேட்கின்றன. தெலுங்கானாவில் இருந்து, பாஜக- காங்கிரஸ் அல்லாத 3-வது அணி என்கிற முழக்கம் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம், தென்மாநிலங்களில் திராவிட நாடு கோரிக்கையை முன்வைக்கின்றனவே என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஸ்டாலின், தென் மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து திராவிட நாடு என்ற கோரிக்கை எழுந்தால் ஆதரிப்போம் என்றார்.

உ.பி பீகார் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வி ஏன் ?

த்திரப் பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பாஜக கடும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதே போல பீகாரில் நடைபெற்ற ஒரு பாராளுமன்றம் மற்றும் இரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி  2-ல் கடும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது
உத்திரப்பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, யோகி ஆதித்யநாத்தை முதல்வராக அமர்த்தினார்கள் மோடி மற்றும் அமித்ஷா. அதற்காக தனது கோரக்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் யோகி ஆதித்யநாத். அதைப் போலவே அம்மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவியேற்ற கேசவ் பிரசாத் மவுரியாவும், பல்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். கோரக்பூரில் தனது மதவெறி மற்றும் ரவுடித்தனத்தின் செல்வாக்கோடு மக்களை மிரட்டி ஐந்து முறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார், ஆதித்யநாத். சமாஜ்வாதி, பகுஜன் கூட்டணியை வீழ்த்த இப்போது ஆதித்யநாத் திட்டம் தீட்ட ஆரம்பித்திருப்பார்.

அசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை ? பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி !

ஓசூர் அசோக்லேலண்ட் தொழிற்சாலையின் அனுபவத்தைக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்க வேண்டிய தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்கள் ஆகியோரின் ஐந்தாம் படை வேலைகளை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
தொழிலாளர் வர்க்கத் தலைமையே தொழிற்சங்கத்தின் உயிர் ! கி. வெங்கட்ராமன் போன்றவர்களின் தலைமையால் தொழிற்சங்க இருப்புக்கே ஆபத்து!அசோக் லேலண்ட் தேசம் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம். நாடு முழுமைக்குமான பயணிகள் மற்றும் கனரக வாகன சந்தையில் 35% கைப்பற்றி வைத்திருக்கிறது. கடந்தாண்டு 2016 – 17 மட்டும் 21,232 கோடிகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இலாபமாக 1,223 கோடிகள் மட்டும் காட்டப்பட்டுள்ளது. ஒசூரில் மூன்று யூனிட்களும், சென்னை எண்ணூரில் ஒரு யூனிட்டும், வடமாநிலங்களில்  மூன்று யூனிட்களும் என உற்பத்தி தளங்கள் உள்ளன.
நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டுவதையும் தொழிலாளர் சட்டபூர்வ உரிமைகளை பறித்து நவீன கொத்தடிமைகளை உருவாக்குவதையும் கொள்கையாக கொண்டு இடைவிடாது செயல்படுகிறது, AL நிர்வாகம் . 16,000 நிரந்தரத் தொழிலாளர்களை 5,000 மாகவும் குறைத்துவிட்டு உரிமைகள் ஏதுமற்ற காண்ட்ராக்ட் , தற்காலிக, பயிற்சித் தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் நேரடி உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாலைகளில் INTUC போன்ற பொம்மை மாடல் சங்கமாக இல்லாத போதும் கடந்த 25 ஆண்டுகளில் தொழிற்சங்களின் பேரம் பேசும் உரிமைகளை பறித்து, நிர்வாகத்தின் ஓர் அங்கமாக தொழிற்சங்கத் தலைமைகளை மாற்றி விட்டது, நிர்வாகம்.

சாதி மறுப்பு – காதல் திருமணங்களை ஒழிக்க எடப்பாடி அரசு .. கிரிஜா வைத்தியநாதன் ....


மிழகத்தில் இனி காதல் திருமணங்கள் பெற்றோர் அனுமதியின்றி நடக்க முடியாதவாறு புதிய விதிகளை திருமண பதிவாளர் அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது எடப்பாடி அரசு.
கடந்த செப்டம்பர் 28, 2017 அன்று இது குறித்த உட்சுற்றறிக்கை ஒன்று பதிவுத்துறை ஐ.ஜி அலுவலகத்தில் இருந்து அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், இந்துத் திருமண சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்கையில் மேலும் சில முக்கிய விதிகளைப் பின்பற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு.
இதன்படி திருமணப் பதிவின் போது ஏற்றுக் கொள்ளத்தக்க அடையாள அட்டைகளின் பட்டியலில் ஆதாரையும் இணைத்துள்ளது. அடுத்ததாக, பெற்றோர், சாட்சிகள் மற்றும் தம்பதிகள் சமர்ப்பிக்கும் அடையாள அட்டையின் அசலை வைத்து சரிபார்த்த பின்னர்தான் திருமணம் பதிவு செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறது.

லாலு வழக்கில் இன்று தீர்ப்பு?

லாலு வழக்கில் இன்று தீர்ப்பு?மின்னம்பலம் : கால்நடை தீவன ஊழல் தொடர்பான தும்கா கருவூல மோசடி வழக்கின் தீர்ப்பு, இன்று (மார்ச் 16) ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கால்நடை தீவன ஊழல் தொடர்பாக, பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. முதல் மூன்று வழக்குகளில் தீர்ப்பு வெளியாகி, அவற்றில் லாலுவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1995-96ஆம் ஆண்டுகளில் தும்கா கருவூலத்தில் ரூ.3.13 கோடி மோசடி செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட நான்காவது வழக்கின் விசாரணை கடந்த 5ஆம் தேதியன்று முடிவுற்றது.
இதனையடுத்து, நேற்று (மார்ச் 15) இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகுமென்று ஏற்கெனவே அறிவித்திருந்தார் ராஞ்சி சிபிஐ நீதிமன்ற நீதிபதி சிவபால்சிங். ஆனால், இந்த வழக்கு விசாரணையில் பீகார் மாநில அக்கவுன்டென்ட் ஜெனரல் அலுவலகத்தின் விளக்கம் கேட்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியது லாலு தரப்பு. இதுதொடர்பாக, இரண்டு நாள்களுக்கு முன்பு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

தமிழக பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்தார்.

விவசாயத்துக்கான தமிழக பட்ஜெட்! மின்னம்பலம் : 2018-19 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதித் துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்தார். இதில் வேளாண் துறைக்கு ரூ.8916 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க ரூ.200 கோடியும், 400 புதிய மானாவாரி தொகுப்புகளை ஏற்படுத்த ரூ.321 கோடியும், புதிய வேளாண் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்த ரூ.100 கோடியும், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்துக்கு ரூ.50 கோடியும், பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.632 கோடியும், வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடியும், கூட்டுறவு விற்பனைக் கூடங்களுக்கு ரூ.159 கோடியும், நுண்ணீர்ப் பாசன மேம்பாட்டுக்கு ரூ.715 கோடியும், பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.100 கோடியும், சென்னை கிண்டியில் அம்மா பசுமைப் பூங்கா அமைக்க ரூ.20 கோடியும் இன்னும் பல்வேறு திட்டங்களுக்கென மொத்தம் ரூ.8,916 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பஜக வின் சதி வலையில் காஞ்சி மடம் சீக்கிரம் விழப்போகிறது?

Vicky Kannan : நேற்று நடந்து முடிந்த நித்யானந்தா ஸ்வாமிகள்
தலைமையிலான காவிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சி தொண்டை மண்டல  ஆதினத்தின்  232 ஆவது ஆதினம் ஞானப்ரகாச ஸ்வாமிகள் , பஜக வின் பாதுகாவலர் எச்.ராஜா மற்றும் பஜக வின் பிற மாநில ,மாவட்ட பெரும் புள்ளிகள்.
கூட்டத்தின் முக்கிய நோக்கம்,நாடு முழுக்க இருக்கும் ஹிந்து கோவில்களை பாதுகாப்போம். ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒன்று திரள்வோம் என்பதே.
இதில் ஏற்கனவே நித்யானந்த ஸ்வாமிகள் மதுரை ஆதினத்தை பிடிக்க சில பல வேலைகள் செய்து, கடந்த வாரம் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை ஆதினத்திற்குள் நுழைய தடை விதித்தது.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள மடமும், திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஒரு குன்றில் சிறு வயதில் ஞானம் அடைந்தேன்னு சொல்லி அந்த மலையையும் தனது சீடர்களை கொண்டு ஆக்கிரமித்தபோது ,பொது மக்களே காவல் துறையிடம் புகார் அளித்து காலி செய்தனர்.

வியாழன், 15 மார்ச், 2018

சரஸ்வதி மாமியை மனிததிற்கு மாற்றிய ஹாஜீரா பீவி

தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த ஒரு பார்ப்பனப் பெண் தனது ஆதிக்க பண்புகளை தவறென உணர்ந்து மறுவாழ்வு பெற்ற கதை இது! அவசியம் படியுங்கள், பகிருங்கள்!
vinavu :எளிய மனிதர்களை சந்திக்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போங்கனு சொல்லுவாங்க…அது உண்மைதான். ஒரு உறவினரைப் பார்க்க செங்கல்பட்டில் இருக்கும் தொழுநோய் மருத்துவமனைக்கு போனேன். அங்கயே ஒரு நாள் காத்திருக்கும் போது பல கதைகள் கிடைத்தன. அதுல ஒரு செவிலியர் சொன்ன கதையைக் கேட்டு அதிர்ச்சியா இருந்ததோடு சந்தோசமாகவும் இருந்தது. கதைன்னா ஏதோ கற்பனைன்னு நினைக்காதீங்க, இது அங்க உண்மையிலேயே நடந்த சம்பவம். இனி அந்த செவிலியர் வார்த்தையிலேயே கேளுங்கள்!

தொழு நோய் மருத்துவமனை, செங்கல்பட்டு
ஐயர்வீட்டு மாமி என்றால், ஆச்சாரம் பாப்பாங்க.. கவுச்சிய கண்ணுல பாக்க மாட்டாங்க…  தன் சொந்த சாமிய சுத்தி சுத்தி  கும்பிடுவாங்க…மத்தவங்க சாமிய பழிப்பாங்க….சக மனிதர தொட்டு பேசமாட்டாங்க.. இப்படித்தான் நாம், பொது வெளியில காலம்காலமா பாக்குறோம்.
ஆனா,  அய்யங்கார் சாதியில் பிறந்த சரஸ்வதி மாமிக்கு வந்த தொழுநோய், அவங்கள பண்படுத்தி , சக மனுஷியா மாத்துச்சி. அவருக்கு வயது, 65.  தபால் துறையில் வேலை பார்த்தவங்க…. வயதான காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலது கால் கட்டைவிரல் புண்ணாகி, அழுகிய  நிலையில,தாங்க முடியாத நாத்தத்தோட தொழுநோய் ஆஸ்பத்திரிக்கு, எங்களிடம் வந்தாங்க.. சா்க்கரை நோய்னு நினைச்சி, வருடக்கணக்கா வைத்தியம் பாத்திருக்காங்க…. கடைசியில அது தொழுநோய்னு தெரிந்ததும். சொந்தக்காரங்க, ஆஸ்பத்திரியில் விட்டுட்டு அவசரமா ஓடிட்டாங்க….
சரஸ்வதி மாமியால், இந்த, தொழுநோய் ஆஸ்பத்திரிய ஏத்துக்கவே முடியல…. வேற வழியில்ல… இங்க மட்டும்தான் அந்த புண்ண ஆத்துவாங்க என்று அவரது டாக்டரோட சொல்லையும் தட்ட முடியல…  வீட்டுக்குப் போனா ,சொந்தக்காரங்க கவனிக்க தயாரில்ல…. ஏதோ அரைகுறை, மனசோட  இருந்தாங்க…

தமிழ் ராக்கர்ஸ்... குழுமத்தைச் சேர்ந்த 5 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட தமிழ் ராக்கர்ஸ்!
மின்னம்பலம் :திரையுலகத்தையே மிரட்டிவந்த தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டிவிடி ராக்கர்ஸ் நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவு செய்து திரையுலகத்திற்கே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்கள் தமிழ் ராக்கர்ஸ் குழுமம். இதனால் பெருமளவில் நஷ்டமடைந்துவந்த தயாரிப்பாளர்கள் இதற்கு முடிவுகட்டும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பைரசி என்ற குழுவை உருவாக்கினார்கள்.
இதன் மூலம் தமிழ் ராக்கர்ஸ் குழுவினை விரைவில் கண்டறிவோம் என விஷால் குழுவினர் சூளுரைத்திருந்தனர். அதன்படி தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டிவிடி ராக்கர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 5 பேரை கேரள பைரசி பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மோடிக்கு சந்திரபாபு எச்சரிக்கை: இது தமிழ்நாடு அல்ல!

இது தமிழ்நாடு அல்ல: மோடிக்கு சந்திரபாபு எச்சரிக்கை!
மின்னம்பலம் :தமிழகத்தில் செய்ததைப் போன்று
ஆந்திராவிலும் செய்ய பிரதமர் மோடி முயற்சிப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜக கூட்டணியில் நீடிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய தெலுங்கு தேசம் கட்சியின் அவசரக் கூட்டம் நாளை (மார்ச் 15) நடைபெறவுள்ளது.
ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரம் காரணமாக அம்மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துவருகிறது. ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அம்மாநில எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் இன்று (மார்ச் 15) உரையாடினார். அப்போது, “ஆந்திர மக்கள் நியாயமாகக் கேட்பதை கொடுப்பதற்குப் பதிலாக, எங்களுக்கு எதிராக பாஜக திசைதிருப்பிவருகிறது. தமிழ்நாட்டில் செய்ததைப் போன்று ஆந்திராவிலும் செய்ய மோடி முயற்சிக்கிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

குரங்கணி ..அனுமதி கொடுத்து விட்டு ஏன் வைத்தீர்கள் .. அரசே காட்டு தீ பரப்பியதாக மக்கள் சந்தேகம்?

Venkat Ramanujam :  பொட்டிபுரம் மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே India-based Neutrino Observatory (INO)அமைக்க மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும்
அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி (டிடெக்டர்) அமைக்கப்படும். மரங்களை வெட்டாமல் இதனை செய்ய முடியாது .
இந்தப் பகுதியைச் சேர்ந்த டி.புதுக் கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன் பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் தேனி மாவட்ட வருவாய் அதிகாரியிடம், "இந்த ஆய்வு மையம் அமைந்தால், எங்கள் ஊர்களை காலி செய்து விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். இந்த மையத்தை எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என தொடர் போரட்டம் செய்தும் மனுவும் அளித்துள்ளனர்.
நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். இங்கு இத்திட்டத்தை உள்ளூர் மக்கள் எதிர்த்ததால் சமீபத்தில் அரசே காட்டு தீ பரப்பியதாக ஒரு சந்தேகம் வலுபெற்றுள்ளது.
கடுமையான வெயில் காலத்தில் மலைகளின் காடுகளில் தீப்பிடிக்கும், பொதுவாக அக்னி வெயிலில் - ஏப்ரல் இறுதி, மே மாதம். இப்போது அதற்க்கான வெப்பநிலை ஒன்றும் இல்லை என்கிறார்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் .இதன் மூலம் 12 பேரை பலிகொண்ட தேனி குரங்கணி காட்டு தீ அதன் நீட்சியே என கருத வேண்டியுள்ளது.
இந்த கட்டுரையின் நோக்கம் நியூட்ரினோ திட்டம் சரியா தப்பா என்பதில்லை. பிரான்ஸ் இந்த சோதனை நிறுத்தி விட்டது ஏன் என்றெல்லாம் கேக்க போவதில்லை
ஆனால் நமது வரி பணத்தில் ஓளிவு மறவின்றி செயல் பட வேண்டிய அரசாங்கம் ..
பொய் பொய்யாக சொல்லி புளுகி தள்ளி இருக்கிறது என்பதே உண்மை
தேனியில் நாங்க மலை எறும் போது காட்டுத்தீ கிடையாது ., முறையாக நபர் ஒருவருக்கு 200 ரூ கட்டி அனுமதி பெற்றே மலை எற செய்தோம் என்கிறது chennai trekking club (CTC)
இந்த செய்தி வெளிட்ட சில மணி நேரத்தில் 10 வருடமா செயல்பட்டு வரும் CTC நிறுவனர் , ஊழியர் வீடுகள் சோதனை கைது அதிரடியாக சென்னை காவல்துறை செய்கிறது .

மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா பிரேரணை .. ஜெகன் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு !


Chandrababu Naidu May Not Just Quit PM's Coalition But Back Rival Jagan The TDP's support to the no-confidence motion moved in parliament today by Jagan Reddy's YSR Congress is designed as a signal that the party is willing to back its political rival for the sake of Andhra Pradesh.
நியுஸ் 18 :ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் மத்தியில் ஆளும் மோடி அரசு மீது நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒய்எஸ்ஆர் கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல்கள் மூலம் பாஜக தனது தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது தெரிந்ததே 
  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ‘பிரஜா சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில் ஆந்திராவில் நடைபயணம் மேற்கொண்டார். நெல்லூர் மாவட்டம் கலிகிரியில் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி  கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில அவர் பேசுகையில், “ ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் போராடி வருகிறார்கள். ஏப்ரல் 5-ந் தேதி வரை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், அதுவரை எங்கள் கட்சி எம்.பி.க்கள் போராடுவார்கள்.  அதன்பின்னரும் சிறப்பு அந்தஸ்து அளிக்காவிட்டால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு ஊர் திரும்புவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

BBC : 23 ரஷிய தூதரக அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றியது ,,, விரைவில் பிரிட்டன் அதிகாரிகளை வெளியேற்றுவோம்' : ரஷ்யா பதிலடி


பிரிட்டனில் பணியாற்றும், ரஷ்யாவைச் சேர்ந்த 23 ராஜீய அலுவலர்களை
வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரஷ்யாவில் பணியாற்றும் பிரிட்டன் அலுவலர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. e>இந்த வெளியேற்றம் நிச்சயம் நடக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறியுள்ளார்.
முன்னதாக முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஷ்யா அளிக்காததால் தங்கள் நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றும் என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே புதனன்று அறிவித்தார்.
அந்தத் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று கூறியுள்ள ரஷ்யா, பிரிட்டனின் நடவடிக்கை பொறுப்பற்றது என்றும், அடிப்படை ஆதாரங்களின்றி எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறியுள்ளது.

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்“ தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்- டிடிவி தினகரன் சபதம்

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்“ தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்- டிடிவி தினகரன் சபதம்thinathanthi :“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்“ என்ற பெயரில் இனி நாம் செயல்படுவோம். இந்த இயக்கம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என தினகரன் கூறினார். மதுரை மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பெயரை அறிவித்து டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:<;கடந்த ஆண்டு மார்ச் 22-ந் தேதி துரோகிகள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் கொடுத்த மனுவால் தேர்தல் ஆணையம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரையும், நமது வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தையும் முடக்கிவிட்டு நீங்கள் கட்சியின் பெயரை தெரிவியுங்கள். அதில் செயல்பட அனுமதிக்கிறோம் என்றது.< அதன் பேரில் கழக பொதுச் செயலாளர் சின்னம்மா அனுமதியுடன் அ.தி.மு.க. அம்மா என்ற பெயரில் இயங்க தொடங்கினோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அம்மா என்ற பெயரிலேயே நாம் இயங்கி தொப்பி சின்னத்தில் நான் போட்டியிட்டேன்.

நடிகர் சஞ்சய் தத் இற்கு சொத்துக்களை உயில் எழுதிய அமரதத்துவ ரசிகை ... குடும்பத்தாருக்கே திருப்பி கொடுத்த சஞ்சய்

Mumbai fan leaves all her money to actor Sanjay Dutt
பாலிவுட்டின் புகழ்ப்பெற்ற நட்சத்திர ஜோடியான சுனில் தத் நர்கீஸ் ஜோடியின் மூத்த மகன் சஞ்சய் தத். குழந்தை நட்சத்திரமாக திரை உலகிறகு அறிமுகமாகி, திறமையான நடிகராக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார். சாஜன், கல்நாயக், முன்னாபாய் எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 1971-ம் ஆண்டு முதல் நடித்து வரும் சஞ்சய் தத் வேடமிட்டு நடிக்காத கதாபாத்திரமே கிடையாது எனும் அளவுக்கு ஹீரோ, வில்லன், காமெடியன், கேமியோ, நடிகன், தீவிரவாதி, என எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு நடிப்பில் பல உச்சங்களைத் தொட்டவர்.
  இதுவரை சிறந்த நடிப்பிற்காக 19 விருதுகளைப் பெற்றுள்ள சஞ்சய் தத் சர்ச்சைகளில் சிக்கி சிறைவாசம் சென்றிருக்கா விட்டால், பாலிவுட்டில் மிகப் பெரிய அளவில் முன்னணியில் இருந்திருப்பார். ஆனால் அவரது சகவாச தோஷத்தால் வீட்டில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தாக, 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.

பதிவு திருமணம் செய்ய பெற்றோரின் அடையாள அட்டை தேவையாம் ... அரசியல் சாசனத்துக்கு முரணான ஜாதி அறிக்கை

வெப்துனியா :பதிவு திருமணம் செய்பவர்கள் தங்களது பெற்றோர்களின் அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ரகசிய சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.
 பதிவுத்துறை இயக்குநர் அனைத்து அலுவலங்களுக்கு ரகசிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், இருவர் திருமனம் செய்துக் கொள்ள அவர்கள் பெற்றோர்களின் அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பெற்றோர் அடையாள அட்டை சமர்பித்தால். அடையாள சரிபார்க்க பெற்றோர்கள் பதிவு திருமணம் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும். இதன்படி இனி பெற்றோர் அனுமதி இருந்தால் மட்டுமே பதிவு திருமணம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்பு திருமன வயது நிரம்பியவர்கள் பெற்றோர்கள் தம்பந்தமின்றி திருமணம் செய்துக்கொள்ளலாம். திருமணம் செய்பவர்களின் அடையாள அட்டை மற்றும் சாட்சி கையெழுத்து போடுவர்களின் அடையாள அட்டை இருந்தால் போது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள விதி திருமண உரிமைக்கு எதிரானது. இதனால் சாதி மறுப்பு திருமணம் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

தமிழகத்தை சீண்டினால் ... இந்தியா உலகின் ஏழை நாடுகளின் ஒன்றாக மாறும் ,,,, ? ஆங்கில இணையம் ரிப்போர்ட்

டீக்கடை பெஞ்ச் : இது ஒன்றை கழித்துவிட்டால் நிர்வாகமே ஆட்டம் கண்டுவிடும்..!!அவர்களை சீண்ட வேண்டாம், ஆங்கில இணையம் கொடுத்த அதிரடி ரிப்போர்ட்
மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..! தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்..தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்..
ஒட்டுமொத்த இந்தியாவின் ஜி.டி.பி அளவையும் ஒப்பிடும் போது வடகிழக்கு மாநிலங்கள் மொத்தமாக சேர்ந்து அளிக்கும் வருமானத்தை விட தமிழ்நாட்டின் வருமானம் அதிகம் என்கின்றது புள்ளிவிவரம்
இந்தியாவிலேயே செல்வ வளம் கொழிக்கும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து 155 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வருமானத்தை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.
1960-ல் இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு. இன்று இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்பது குறிபிடத்தக்கது
ஒருவேளை இந்தியா தமிழ்நாட்டை தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்று ஆங்கில இணையதள ஆய்வு தெரிவிக்கிறது.

கோவை வேற்று மாநிலத்தவர்கள் கைகளுக்கு போகிறது ?

கோவையின் நிலைமை என்னவென்று தெரியுமா ?
மெல்ல மெல்ல அனைத்தும் வேற்று மாநிலத்தவரின் கையில் சென்று கொண்டிருக்கிறது.
இதை நான் சொல்லவில்லை ஒரு வடமாநிலத்தவர் இன்று காலை எனது கடையில் சொன்னது.
அவர் சொல்கிறார்.
1999ல் இங்கே கோவை வந்தேன்.
நான் வந்தபொழுது இத்தனை தொழிற்சாலைகள் இங்கே இல்லை (தங்க தொழிற்சாலை)
தற்போது நான் பார்க்கிறேன், எங்கே பார்த்தாலும் பெங்காலிகள், பிஹாரிகள், வட மாநிலம் உத்திரபிரதேஷ், ராஜஸ்தான், குஜராத் மக்கள் இருக்கிறார்கள்.
வியாபாரம் கூட எல்லாம் வட மாநிலத்தவர் கையில் சென்று கொண்டிருக்கிறது.
நான் பார்க்கும் கடைகளில் பாதிக்குமேல் வடமாநிலத்தவர் கையில் உள்ளது.
அவை அனைத்தும் அவர்கள் சொந்தமாக வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர்.
என்ன நடக்கிறது இந்த தமிழ்நாட்டில்?
நாங்கள் எங்கள் ஊரில் இந்த மாதிரி வேறு மாநிலத்தவர்களுக்கு பஜாரில் கடைகளை கொடுக்க மாட்டோம். வீடுகளை விற்க மாட்டோம்.
இங்கே நீங்கள் எல்லாரும் வடமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொடுத்து விட்டு சாப்பாட்டு என்ன செய்வீர்கள்.

புதன், 14 மார்ச், 2018

செம்மரத் தோப்பு அதிபர்' தனசேகரன் கடத்திக் கொலை ! - பின்னணி இதுதான்

 செம்மரம்விகடன் :ந.பா.சேதுராமன்- திருவள்ளூரை அடுத்த தாங்கல் காலனியைச் சேர்ந்த தனசேகரன் என்ற செம்மரக் கடத்தல் அதிபர் கடத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.செம்மரம் கடத்தல் தொடர்பான வழக்கில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோக ஒவ்வொரு நாளும் செம்மரக் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவில் கைதாகி வருகின்றனர். கடந்த 13-ம் தேதி திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரி மெட்டு- கோட்டாலா வனப்பகுதியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், பாபு ஆகியோர், கைது செய்யப்பட்டுள்ளனர். 'செம்மரங்களைத் திருட்டுத் தனமாக வெட்ட முயன்ற 10 பேரில் இவர்கள் மட்டுமே சிக்கினர்' என்று இதுகுறித்து ஆந்திர போலீஸ் தெரிவித்துள்ளது.

ஐ டி நிறுவனங்களின் கண்ணை சுற்றும் சம்பளம்

Prasanna VK - GoodReturns Tamil இந்தியாவில், ஏன் உலகளவில் அதிகளவிலான சம்பளம் அளிக்கும் துறை என்றால் இது ஐடி அல்லது டெக் துறை என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம். இத்துறையில் யார் அதிகமாகச் சம்பளம் தருவது என்று நிறுவனங்கள் மத்தியில் பல வருடங்களாகப் போட்டி போட்டு வருவது எத்தனை பேருக்கு தெரியும்?. கூகிள் நிறுவனத்திற்குப் போட்டியாக மைக்ரோசாப்ட்டும், அதற்குப் போட்டியாகப் பேஸ்புக்கும் என இந்தப் போட்டி தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. அட இந்த 3 நிறுவனங்கள் மட்டும்தான் அதிகம் சம்பளம் கொடுக்கிறதா என்றால் இல்லை, உலகில் பல நிறுவனங்கள், பேஸ்புக், கூகிள் நிறுவனங்களுக்கு அதிகமான சம்பளத்தை அளிக்கிறது. இந்த வகையில் 2017ஆம் ஆண்டில் எந்த நிறுவனம் எவ்வளவும் சம்பளம் அளிக்கிறது என்பதைத் தான் இப்போது பார்க்கபோகிறோம். கடுப்ப கிளப்பாதீங்க பாஸ்.. கடுப்ப கிளப்பாதீங்க பாஸ்.. இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக சம்பள உயர்வு மிகவும் குறைவான அளவே அளித்து வரும் நிலையில், இத்துறை ஊழியர்களுக்கு அடுத்து எந்த நிறுவனத்திற்கு மாறலாம் என்பதற்கு இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பார்போம். கிளாஸ்டோர் கிளாஸ்டோர் உலகளவில் இருக்கும் நிறுவனங்களின் சம்பளம், ஊழியர்கள், பணியிடம் எனப் பலவற்றையும் அந்த நிறுவனத்திற்குள் போகாமலேயே பிற ஊழியர்களின் வாயிலாகப் பல விஷயங்களை அளித்து வரும் கிளாஸ்டோர். 2017ஆம் ஆண்டுக்கான அதிகச் சம்பளம் அளிக்கும் 25 நிறுவனங்களைப் பட்டியல்போட்டுள்ளது. 

மாறன் சகோதர்கள் விடுவிப்பு 323 திருட்டு தொலைபேசி இணைப்புக்கள் வழக்கில் ....

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!
பிஎஸ்என்எல் 323 residential lines were allegedly in the name of BSNL General Manager connecting the Boat House residence of Maran with the office of Sun TV through a dedicated underground cable during his tenure as Telecom Minister. 
பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!" பேசி இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேரை விடுவிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2004-2007ஆம் ஆண்டுகளில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகத் தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள தனது வீட்டுக்குச் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும், பின்னர் இந்த இணைப்புகளை சன் டிவிக்குப் பயன்படுத்திய வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் மீது சிபிஐ சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

சென்னை: சாலையோர வாகனங்கள் பறிமுதல்!

சென்னை: சாலையோர வாகனங்கள் பறிமுதல்!சென்னையில் சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும், தெருக்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மின்னம்பலம்: உபயோகமற்ற மற்றும் பழுதடைந்த வாகனங்களை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முக்கியச் சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பைக், கார்,ஆட்டோ உள்ளிட்ட பழைய வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்
இந்நிலையில், பழைய வாகனங்களை 15 நாட்களுக்குள் அகற்றச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அவ்வாறு அகற்றப்படும் வாகனங்கள் 3 இடங்களில் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வடசென்னை 1 முதல் 5 மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ராயபுரம் மண்டலம்,சூளை அவதான பாப்பையா தெருவில் உள்ள மாநகராட்சி இடத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

சமூக நீதி காக்க கௌசல்யாவுடன் இணைந்து நிற்போம்!' - சங்கர் சமூகநீதி அறக்கட்டளை நிகழ்வில் சூளுரை


சங்கர் சமூகநீதி அறக்கட்டளை
விகடன் -தி.ஜெயப்பிரகாஷ், வீ.சிவக்குமார் ,ல.அகிலன்: தமிழகமே பதறித் துடித்த உடுமலை சங்கரின் ஆணவப் படுகொலை நிகழ்ந்து 2 வருடம் கடந்துவிட்டது. தற்போது சங்கரின் 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், சங்கர் சமூகநீதி அறக்கட்டளைத்  தொடங்கியிருக்கிறார் அவர் மனைவி கௌசல்யா. இந்நிகழ்வில், சாதிய ஆணவக் கொலைகளை எதிர்க்கும் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கௌசல்யாவுடன் கைகோத்திருக்கிறார்கள்.
வளர்மதி , சங்கர் சமூகநீதி அறக்கட்டளைநிகழ்வில் பேசிய, பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், "சாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  விளிம்புநிலை மனிதர்களுக்காகவும் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, என்னால் அனைவருக்கும் உதவ முடியும் என்றுகூறி, தலை நிமிர்ந்து நடமாடும் இந்தப் பெண்ணை நாம் வாழ்த்தியாக வேண்டும். இந்தச் சிறுவயதில், ஒரு பெரிய மனப்பான்மையை அவர் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டியது என்றார்.

உடுமலையில் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை... கௌசல்யா சங்கர் எழுச்சி உரை !

Thagadoor Sampath : பெண்ணுரிமைப் போராளி கௌசல்யா சங்கர் அவர்களின்
எழுச்சியுரை. என் வாழ்வின் மிக முக்கியமான தருணம் இது. உங்கள் எல்லோருக்கும் இது சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! என்னைப் பொருத்தவரைக்கும் இது சங்கருக்கு இரண்டாம் பிறப்பு! இதே மண்ணில் சங்கரோடு கைகோர்த்து நெஞ்சம் நிறைய காதலும் கனவும் சுமந்து திரிந்திருக்கிறேன். மீண்டும் என் சங்கரோடு கைகோர்த்து அன்று போல் காதலும் காமமும் சுமந்து நடைபோட ஆசைப்படுகிறேன். அதற்காகவே அவனை மீண்டும் உயிர்ப்பிக்கிறேன். அன்று சுமந்திருந்த காதல் இன்றும் அப்படியே இருக்கிறது. ஆனால் அன்று சுமந்திருந்த கனவு இன்று அடியோடு மாறியிருக்கிறது. அன்று எங்கள் இருவரின் தனிப்பட்ட எதிர்காலம் குறித்த கனவு மட்டுமே இருந்தது. இன்று என் கனவு என்பது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் விடுதலையும் சமத்துவமும் தான். அன்று சங்கர் மட்டுமே என் உலகமாக இருந்தான். இன்று நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகமாக மாறியிருக்கிறது. நான் என்பது இனி என் லட்சியம் தான்! சாதி ஒழிக! தமிழ் வெல்க என்கிற முழக்கம்தான்.

உபி முதல்வரின் சொந்த தொகுதியை வென்ற சமாஜவாதி .ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணி ..

ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார் ! அறிவியல் உலகின் பொக்கிஷம்!

ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் உலகின் பொக்கிஷம்!மின்னம்பலம் :அறிவியல் உலகின் ஜொலிக்கும் நட்சத்திரமாக உலகம் முழுவதும் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 76) இன்று காலை மரணமடைந்தார்.
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜில் உள்ள இல்லத்தில் இன்று காலை அவரது மரணத்தை உறுதி செய்த அவரது பிள்ளைகள் லூசி, ராபர்ட் மற்றும் டிம் வருத்தத்துடன் இந்தச் செய்தியைத் தெரிவித்தனர். மூளையும் இதயமும் நுரையீரலும் கை விரல்களும் தவிர்த்துப் பிற உறுப்புகள் செயலிழந்து எப்போதும் கணினியோடு இணைக்கப்பட்ட எந்திரக் குரலுடன் சக்கர நாற்காலியிலேயே சுற்றிவந்தவர், விவாதங்கள் தன்னைச் சுற்றி வரவைத்தவர். பேரண்டம் பற்றிய உண்மைகளைப் பேசுவோருக்கு நம்பிக்கையளித்தவர். சாதனைகளுக்கு உடற்குறைபாடுகள் தடையல்ல என்று தன்னம்பிக்கை தந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.