சனி, 6 ஜூன், 2020

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த அரசாணை வெளியீடு !

வெப்துனியா : பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை கூறியுள்ளதாவது :
 வீட்டிற்கு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத்தேர்வில் விடுபட்ட தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் ; காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். கைதொடா கருவி மூலம் காலையிலும் மாலையிலும் அவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆனையிறவு முகாம் தாக்குதல் எப்படி சாத்தியமானது ? கிழக்கு போராளிகளின் குரல் ..

எதிரிகளின் சிம்ம சொப்பனம் உண்மையான சமர்க்கள நாயகன் மட்டக்களப்பு மண் ஈன்றெடுத்த மாவீரன் கருணா அம்மான் புலிகளின் வரலாற்றை எழுதுவதென்றால் கருணா என்ற கதாநாயகன் இல்லாமல் எப்படி எழுத முடியும் பெரும் சமர்க்கள நாயகனாக கிழக்கின் விடிவெள்ளியாக இளைஞர்களின் ஹீரோவாக ஜெயசிக்குறு இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எங்கள் மட்டு மண்ணின் மைந்தன் உண்மையாக இருந்த இந்த காவல் தெய்வத்தையும் இவன் படையையும் சீண்ட அந்த புலிப்படையையே காணாமல் போனது வரலாறு ஆக இத்தனை காலமும் புலிகளை பாதுகாத்த காவல் தெய்வம
Reginold Rgi : ஆனையிறவு பெரும் தளத்தை கைப்பேற்றியது யார்ர தலைமையில் என்று IBC தமிழ் ஆவணப்படுத்தினால் அது பால்ராஜ்
அதே மட்டக்களப்பில் இருந்தது ஒரு சாமானியன் Reginold
ஆவணப்படுத்துகிறான் பால்ராஜ்யே கப்பாற்றியவன் கிழக்கான் கருணாவும் அவண்ட வீரம்மிக்க கிழக்கு போராளிகளும் என்று
நிச்சயமாக ஆனையிறவு பெரும் தளத்தை கைப்பேற்றுவது என்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல 20000 மேற்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணிகள் நிலை கொண்டிருந்த முகாம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் ஆனையிறவு விழும் என்று உண்மையிலே ஆரம்பத்தில் கருணா தலைமையிலான கிழக்கு போராளிகளை தலைவர் ஒதுக்கிதான் வைத்திருந்தார் பானு தான் தலைமை தாங்கினார் என்னதான் முயற்சித்தும் ஆனையிறவு புலிகளுக்கு கனவாகவே இருந்தது 19 நாட்கள் முயற்சித்தும் புலிகளால் கைப்பேற்ற முடியவில்லை சுதாரித்துக் கொண்ட தலைவர் கருணாவிடம் பொறுப்புகளை கொடுத்தார் கருணா தலைமையிலான ஜெயந்தன் படையணி ஆனையிறவு

ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்கும் .. வெறும் ஒரு சில போலீஸ் மட்டும் இதை செய்யவில்லை .


tamil.oneindia.com/- Hemavandhana : நியூயார்க்: முகமெல்லாம் கோபம்.. கண்கள் முழுக்க ஆத்திரம்.. நடையில் ஒரு ஆவேசம்.. ஜார்ஜ் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் செல்லும் சிறுமி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.. "நீதி இல்லை என்றால், அமைதி இல்லை" என்ற சிறுமியின் முழக்க வீடியோ உலக மக்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில், கள்ள நோட்டு பயன்படுத்தியதாக ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின நபர் போலீசாரால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
ஜார்ஜை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கருப்பு மாஸ்க் அணிந்தபடி.. 9 நிமிடங்கள் முழங்காலிட்டு கருப்பினத்தவர்களுக்கான பேரணியில் கனடா பிரதமர்

ரஜனியை விட விஜய் அதிக சம்பளம் .. இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள்!

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்!மின்னம்பலம் : தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்கள் வசூல் சாதனை நிகழ்த்துகிறதோ இல்லையோ யார் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்கிற விவாதங்களுக்கு சமூக வலைதளங்களில் குறைவிருக்காது.
இதனை ரஜினி, அஜித், விஜய் ரசிகர்கள் ஒரு வேலையாக, பிரச்சாரமாக செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் ரஜினிகாந்த் என நீண்ட காலமாகவே சொல்லி வருகிறார்கள். ஆனால், அவரை விட நடிகர் விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பது தான் மாஸ்டர் படத்துக்கு பிந்தைய நிலைமை.
அதனை ரஜினி இனி மேல் சமன் செய்வதற்கு கூட வாய்ப்புகள் இல்லை என்கிறது தமிழ் சினிமா வட்டாரம். தமிழ் சினிமா தகவல் இப்படியிருக்க இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் யார் என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்தவர் அக்‌ஷய் குமார்.

நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் .. அந்த புரட்சி பேச்சு வீடியோ இதுதான்


நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார்news18.com/tamil : திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.
தமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் செய்யப்பட்டது. தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்
முன்னதாக சிவகுமாரின் மருமகளும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன.விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, “எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்திருந்தார்.

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு

மாலைமலர் :தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணமாக வசூலிக்கலாம்.
தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம். மேலும் நிர்ணயிக்கப்பட்டது அதிகபட்ச கட்டணம் என்பதால் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

கணவனும் 5 நண்பர்களும் .. கேரளாவில் பாலியல் அக்கிரம்

   தினத்தந்தி : கேரளாவில் 24 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெட்டுத்துறா கடற்கரை பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துள்ளார். பிறகு தனது அவரது குழந்தைகள் கண் முன்பே, நான்கு நண்பர்களுடன் சேர்ந்து தனது மனைவியையே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தையையும் அந்த மனிதாபிமானமற்ற கும்பல் அடித்துத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் ஊடகத்திடம் அளித்த தகவலில் கூறி இருப்பதாவது:- என்னையும் என் இரு குழந்தைகளையும் என் கணவர் புதுக்குறிச்சி கடற்கரை அருகேயுள்ள ஒருவரின்(கணவரின் நண்பர்)  வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அங்கு எனக்கு வலுக்கட்டாயமாக மதுவைக் கொடுத்தனர்.

Dr. புருனோவின் கிண்டில் வெற்றி ... அதிர்ச்சி ? ரவிஷங்கர் அய்யாக்கண்ணு

Ravishankar Ayyakkannu : Dr. புருனோவின் கிண்டில் வெற்றி அதிர்ச்சி
அளிக்கிறது!
நமக்குச் சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போது நண்பர்கள் ஆனார்கள், எப்படி நம் வாழ்க்கையில் வந்தார்கள் என்பதே மறந்து போயிருக்கும். எனக்கு மருத்துவர் புருனோ அப்படிப் பட்ட ஒரு நண்பர்.
Gmailல் அவர் எனக்கு முதல் மின்மடல் எப்போது அனுப்பி இருக்கிறார் என்பதைத் தேடிப் பார்த்துத் தான் குத்துமதிப்பாக எப்போது இருந்து பழகத் தொடங்கினோம் என்று எண்ணிப் பார்க்கிறேன். அது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இழுத்துச் செல்கிறது.
2005-2006 காலக்கட்டத்தில் வலைப்பதிவில் எழுதினேன். அப்போது இருந்து அவரது அறிமுகம் உள்ளது. பிறகு, விக்கிப்பீடியாவில் ஒரு தன்னார்வலராகப் பங்களித்த போது இன்னும் நெருங்கிப் பழகினார்.

ஊராட்சித் தலைவரை கட்டாயப்படுத்தி சவக்குழி தோண்ட வைத்த ஜாதி ..

Kathiravan Mayavan : நீ குழி வெட்டத்தான் லாயக்கு - திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர் ஒருவரை கட்டாயப்படுத்தி சவக்குழி தோண்டும்படி கூறியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் இருக்கிறது அரியாக்குஞ்சூர் ஊராட்சி. சுமார் 700 வாக்காளர்கள் இருக்கும் இந்தக் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த இருளர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியின மக்களுக்காக இந்தப் பகுதி ஒதுக்கப்பட்டதால், சின்னகல்தாம்பாடியைச் சேர்ந்த இருளர் பிரிவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஒருசில மாதங்களில் கான்ட்ராக்ட்டுகள், கரன்சிக் கட்டுகள் என்று புரளும்போது, ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முருகேசன் மின் இணைப்புகூட இல்லாத வீட்டில்தான் தற்போதும் வசித்து வருகிறார்.

வெள்ளி, 5 ஜூன், 2020

ஈழத் தமிழர் சார்பாகப் பேசும் உரிமை, எவருடையது?.. ஒடுக்கியோரும் . ஒடுக்கப்பட்டோரும்

Reginold Rgi : ஒருமித்த கருத்தோடு, ஒரே பயணத்தில் இணைய எல்லோரையும் அழைக்கிறார்கள் இப்போது கொஞ்சக் காலமாய் ஓரே குரலில் பேச வேண்டியதன் அவசியம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. போதாக்குறைக்கு தமிழர்களின் மகுடவாசகம், ‘ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்’ என்ற
அலப்பறைகள் வேறு.
இதில் பிரதானமாய்க் கேட்க வேண்டிய வினா, எந்தத் தமிழர்களின் மகுடவாசகம் அது என்பதுதான்; கோவிலுக்குள் நுழைய இயலாமல் வெளியே நிற்கின்ற தமிழன், தோட்டக்காட்டான் என்று புறக்கணிக்கப்படும் தமிழன், மட்டக்களப்பான் என்று ஒதுக்கப்படும் தமிழன் ஆகியோர், நிச்சயமாக
இவர்கள் குறிக்கின்ற தமிழர்களுக்குள் அடங்கமாட்டார்கள். தமிழ்த்தேசிய அரசியலின் செல்செறி அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.
ஓரே குரலில் பேசுவதில் உள்ள ஆபத்துகளில் முதலாவது, அந்த ஒரே குரல், யாரின் குரல் என்பதுதான் பிரதானமான கேள்வி.
அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்; போரில் பாதிக்கப்பட்டவர்களின் குரலும் அல்ல, மாறாக, அது அதிகாரத்தின் குரல்; சீரழிந்துபோன தமிழ்த் தேசிய நாடாளுமன்றக் கதிரை அரசியலின் குரல்; இது எவ்வாறு எல்லோரினதும் குரல் ஆகும்.

அமெரிக்க .. தங்கப்பேழையில் ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் உடல்! கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்திய நகர மேயர்

மதன் சிவா : தங்கப்பேழையில் ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் உடல்! கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்திய நகர மேயர்
அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் உடல் தங்கமுலாம் பூசப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஃபிளொயிட்டிற்கான அஞ்சலி நிகழ்வுகள் நேற்று ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் 3 நகரங்களில் ஆறு நாட்கள் ஜோர்ஜ் உடலுக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று , ஹூஸ்டனில் இறுதிச்சடங்குகள் இடம்பெறவுள்ளது.
நேற்று முதலாவது அஞ்சலி நிகழ்வு மினியாபொலிஸ் நகரத்தில், ஃபிளொயிட் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வடமத்திய பல்கலைகழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
அந்தவகையில் இன்று ஃபிளொயிட்டின் பிறந்த இடமான வட கரோலினாவின் ரேஃபோர்டில் அஞ்சலி நிகழ்வு நடக்கும்.
நேற்று நடந்த அஞ்சலி நிகழ்வில் 8 நிமிடம் 46 விநாடிகள் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நேர அளவு, ஃபிளொயிட், பொலிசாரின் பிடியில் உயிருக்கு போராடிய நேரமாகும்.

வேலுமணியின் 3 ஆயிரம் கோடி ஊழலை பட்டியலிட்டு...: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

mks
நக்கீரன் : முதலமைச்சருக்கு வேண்டிய கப்பத்தைக் கட்டிவிடுகிறோம் என்ற ஆணவத்தில் ஆட்டம் போடும் அமைச்சர் வேலுமணியின் ஊழல்களை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இதே போக்கு தொடருமானால், வேலுமணியின் 3 ஆயிரம் கோடி ஊழலை பட்டியலிட்டு மாபெரும் போராட்டத்தைக் கோவையில் நடத்துவோம் என எச்சரிக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் துறை அமைச்சராக மட்டுமல்லாமல் தன்னை 'சூப்பர் முதலமைச்சரைப்' போல நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர் 'ஊழல் மணியான' அமைச்சர் வேலுமணி. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த உடனேயே சிறைக்குப் போவதற்கான அனைத்துக் காரியங்களையும் நித்தமும் செய்து வரும் அமைச்சர்கள் வரிசையில் முதலாவது இடம் அவருக்குத்தான்.

நடிகர் செந்தில் :கொரோனா கத்துக்கொடுத்த பாடம்... இயற்கை விவசாயம் செய்யப்போறேன்!

vikatan.com - கு.ஆனந்தராஜ் : `என்னை நடிகராத்தான் மக்களுக்குத் தெரியும்.
உண்மையில் நான் விவசாயி. எங்க குடும்பம் விவசாயக்குடும்பம். பல வருஷமா இயற்கை விவசாயம் செய்திருக்கேன். இந்த விஷயம் பெரிசா யாருக்குமே தெரியாது.
இப்போ விவசாய வேலைகள் குறைஞ்சிருக்குதே தவிர, அதை முற்றிலுமா கைவிடலை. திரும்பவும் விவசாயத்தில தீவிரமா இறங்கப்போறேன்." - யதார்த்தமாகப் பேசுகிறார் நடிகர் செந்தில்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்த செந்தில், தற்போது சென்னை சாலிகிராமத்தில் வசித்துவருகிறார். சத்தமில்லாமல் 23 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்திருக்கிறார். 2016-ல் சென்னையைத் தாக்கிய வர்தா புயலால், செந்திலின் ஐந்து ஏக்கர் விவசாய நிலம் பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது, மீண்டும் இயற்கை விவசாயத்தில் தீவிரமாக இறங்கப்போவதாகச் சொல்கிறார்.

ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- மருத்துவர் தகவல்

மாலைமலர் : திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார். சென்னை:< திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் தொலைபேசி மூலம் ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.>
இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

மனோ பாலா : என்னை மன்னித்து விடு வடிவேலு ... அப்போலாம் வராத கோபம், வடிவேலுவுக்கு இப்ப மட்டும் வருதா?

manobala/tamil.samayam.com/ : வடிவேலு தன் மீது நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்ததால் மனோபாலா அதிருப்தி தெரிவித்துள்ளார். நடிகர் மனோபாலா நடத்தி வரும் வேஸ்ட்பேப்பர் யூடியூப் சேனலுக்கு நடிகர் சிங்கமுத்து பேட்டி அளித்தார். அந்த பேட்டியின்போது சிங்கமுத்து வைகைப்புயல் வடிவேலு மற்றும் அவரின் குடும்பத்தார் பற்றி பேசினார். வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்து தற்போது எதிரிகளாகிவிட்டனர். அவர்களுக்கு இடையே நில பிரச்சனை உள்ளது.
அந்த நில மோசடி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சிங்கமுத்து வடிவேலு பற்றி பேட்டியில் பேசியது பிரச்சனையாகிவிட்டது. அந்த பேட்டியை பார்த்த வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது புகார் அளித்தார்.

ஸ்டாலின் : சென்னையி ல் 5 மண்டலங்களின் நிலை அச்சத்தை தருகிறது... அரசு உணர்ந்ததா இல்லையா?

dmk stalin reportநக்கீரன் : சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு, வீடாய் சென்று பரிசோதனை செய்யவேண்டும். சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழு சிந்தனையும் பயன்படுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் ராயபுரம் உள்ளிட்ட ஐந்து மண்டலங்களில் கரோனா எண்ணிக்கை அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேச மாநில பாதிப்பைவிட சென்னையில் பாதிப்பு அதிகம் என்பதை அரசு உணர்ந்ததா இல்லையா என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் மாநில பாதிப்பைவிட ராயபுரத்தில் பாதிப்பு மிகமிக அதிகம். உரிய சோதனைகள் உடனே செய்யப்படுவதில்லை. சோதனை முடிவுகள் உடனே சொல்லப்படுவதும் இல்லை. மக்களைக் காக்கும் பணியில் உள்ள மருத்துவ துறையினரை போராடும் நிலையில் அரசு வைத்து இருப்பது வேதனை என தெரிவித்துள்ளார்

நடிகர் பிரசன்னா: தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது

ஹைவோல்டேஜ் வார்த்தைகள்: பிரசன்னா விளக்கம்!மின்னம்பலம் : மின்சார வாரியம் குறித்து தான் ட்விட்டரில் இட்ட பதிவு குறித்து நடிகர் பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் நடிகர் பிரசன்னா, ‘இந்த கோவிட் பொதுமுடக்க நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பதை உங்களில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறீர்கள்’என்று கேட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். வழக்கத்தை விடவும் பல ஆயிரம் ரூபாய் அதிகமாக தனக்கு மின்கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டதால் தான் அவ்வாறு குறிப்பிட்டதாக பிரசன்னா பேட்டி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தார். பிரசன்னாவின் ட்விட்டர் பதிவின் கீழ் பலரும் தங்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதாகக் கூறி மின்சார வாரியத்தைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியது. இது தொடர்பாக மின்னம்பலத்தில் மின்சார வாரியத்தின் கொள்ளை: பிரசன்னா கேள்வி!என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
தொடர்ந்து நடிகர் பிரசன்னா வீட்டிற்கு மின்கட்டணம் அதிகமாக வந்ததன் காரணத்தைக் குறிப்பிட்டு மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ‘பிரசன்னா வீட்டில் நான்கு மாதத்தில் 6920 யூனிட் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ஜெ.அன்பழகன்... கொரோனா தொற்று... இப்போது எப்படியிருக்கிறார்

ஜெ.அன்பழகன்vikatan.com- அ.சையது அபுதாஹிர் : கொரோனா தொற்றுக்கான அறிகுறி அவருக்கு இருந்துள்ளதால் உடனடியாக அதற்கான சோதனையும் நடந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே  அன்பழகனுக்குக்  கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு  வெளிநாட்டுக்குச் சென்று அறுவை சிகிச்சையும் செய்துவந்துள்ளார். தி.மு.க வின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகனுக்குக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உடல்நிலை குறைபாட்டினால் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கபட்டுவருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கை ரிக்சாவும் கம்யுனிஸ்டுகளும் .. 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்ட கம்யுனிஸ்டுகள்

  மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தோழர் ஜோதி பாசு அவர்கள் 1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் இந்தியாவில் நெடுநாள் முதலமைச்சராக இருந்தார் .
அவருக்கு பின்பும் அதே கட்சியை சேர்ந்த புத்த தேவ்  பட்டாச்சாரியா பதவி ஏற்றார்
2011  ஆம் ஆண்டு தேர்தலில் மாக்சிஸ்ட் கம்யுனிஸ்டு கட்சி ஆட்சியை இழந்தது
1977ஆம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மேற்கு வங்காளம் இடது சாரி கட்சிகளால் ஆளப்பட்டு வந்தது.
ஒரு காலத்தில் மும்பையை விட பெருமை வாய்ந்த வர்த்தக நகரமாக கல்கத்தா விளங்கியது .
பின்பு படிப்படியாக அது தனது எல்லா பெருமைகளையும் இழந்து வறுமையின் கோரபிடியில் சிக்கி இன்று மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது.
சுமார் 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக மாக்சிஸ்ட் கம்யுனிஸ்டுகளின் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை .
இடத்தில் இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால்  பெரும்பாலான மாக்சிஸ் கம்யுனிஸ்டு கட்சியனர் தற்போது பாஜகவில் ஐக்கியம் ஆகி  விட்டனர்.

வியாழன், 4 ஜூன், 2020

குமுதம் வழக்கு கடந்து வந்த பாதை ... flashback

கதிர்:   குமுதம் கேஸ் என்னது என்று மீடியாவுக்கு வெளியே உள்ள நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக சுருக்கம்.
எஸ்.ஏ.பி.அண்ணாமலை செட்டியார் தொடங்கியது குமுதம். நிர்வாகியாக வேலைக்கு வந்த நண்பர் பி.வி.பார்த்தசாரதி அய்யங்காரை பார்ட்னர் ஆக்கினார். 2/3 செட்டியாருக்கு, 1/3 அய்யங்காருக்கு. நல்ல நண்பர்கள். சண்டை வரவில்லை.
அண்ணாமலையின் மகன் ஜவகர் பழனியப்பன் டாக்டர். அமெரிக்காவில்
செட்டிலானார். இதய சிகிச்சையில் ஓகோ என்று தொழில் போனது. பார்த்தசாரதியின் மகன் வரதராஜன் இங்கே நிர்வாகத்தை கவனித்தார். நாள்போக்கில் எடிட்டோரியல் ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டார். வேறு பல வேலைகளும் செய்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார்.
அந்த வேலைகள் ஜவகர் பார்வைக்கு சென்றதும் அவர் கணக்கு கேட்டார். விவகாரம் வெடித்தது. சமூக, அரசியல் பெரியவர்கள் சமாதானம் பேசினார்கள்.
உடன்பாடு ஏற்பட்டது. ரிப்போர்ட்டர், சிநேகிதி வரதராஜனுக்கு; குமுதம் உள்ளிட்ட ஏனைய 7ம் ஜவகருக்கு. இருவரும் கையெழுத்து போட்டனர். பார்ப்பான் வரதராஜனிடம் இருந்து பழநியப்பன் குமுதத்தை மீட்பாரோ இல்லையோ தெரியாது ஆனாலும் குமுதம் போன்ற போதைகளிடம் இருந்து மக்கள் மீளவேண்டும்

குமுதம் நிர்வாகம் மீண்டும் ஜவஹர் பழனியப்பன் பொறுப்புக்கு செல்கிறது :.. கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பு

தமிழ் இந்து : குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகம், மீண்டும் டாக்டர் ஜவஹர் பழனி யப்பன் பொறுப்புக்கு செல்லும் வகையில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம்
தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குமுதம் பப்ளிகே ஷன்ஸ் தற்காலிக தலைவராக கே.கே.பாலுவை நியமித்தும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
‘குமுதம்’ வார இதழை தொடங்கிய எஸ்.ஏ.பி.அண்ணா மலை செட்டியாரின் மறைவுக்கு பிறகு, அந்தக் குழுமத்தின் அனைத்து இதழ்களுக்கும் நிர்வாக ஆசிரியராகவும், உரிமையாளராகவும் அவரது மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் பொறுப்பு வகித்தார். ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் பிரபல டாக்டராக பணிபுரிவதால் அவரது தாயார் கோதை ஆச்சி, குமுதம் குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். முதுமை காரணமாக அவரால் அப்பதவியை வகிக்க இயலாத சூழலில் குமுதத்தில் பதிப்பாளராக இருந்த பி.வி.பார்த்தசாரதியின் மகனான என்.வரதராஜன் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.

குஷ்பூ... லாக்டவுனில் எடைகுறைப்பு 50 வயதிலும் ...


சுடிதாரில் ஃபிரி ஹேர் படு பிஸி... Kalaimathi- tamil.filmibeat.com/ : சென்னை: நடிகை குஷ்புவின் க்யூட் எக்ஸ்பிரஷன்களை பார்த்த நெட்டிசன்கள் பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மும்பையை பூர்விகமாக கொண்ட நடிகை குஷ்பு, இந்தி படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்த அவர், தமிழில் வெற்றி கொடியை நாட்டினார். 80, 90களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்த குஷ்பு, ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பலருடனும் ஜோடி போட்டுள்ளார்.
பின்னர் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக்கொண்டு தமிழ் நாட்டிலேயே செட்டிலான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ளார்.

அமெரிக்க பிளாய்டுக்கு நினைவஞ்சலி: ஆயிரக்கணக்கானோர் பேரணி


latest tamil news
latest tamil newsதினமலர் : ஹூஸ்டன்: அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவருடைய சொந்த ஊரான, ஹூஸ்டனில், பிரமாண்ட பேரணி நடந்தது. இதில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்நிலையில், பிளாய்டின் சொந்த ஊரான ஹூஸ்டனில், நேற்று அவருக்கு நினைவஞ்சலி பேரணி நடத்தப்பட்டது. இதற்கு, பிரபல ராப் பாடகர்கள், ட்ரே தா டுரூத், பன் பி ஏற்பாடு செய்திருந்தனர்.

நள்ளிரவு பூஜை, நரபலியான சிறுமி: புதையலுக்காக மகளையே கொன்ற தந்தை

நள்ளிரவு பூஜை, நரபலியான சிறுமி: புதையலுக்காக மகளையே கொன்ற தந்தைBBC : புதையல் கிடைக்க வேண்டும் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு 13 வயது மகளை தந்தையே நரபலி கொடுத்த சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.
முதல் மனைவி இந்திராவுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது மனைவி மூக்காயிக்கு இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த மே 18ஆம் தேதி பன்னீரின் முதல் மனைவியான இந்திராவின் இளைய மகள் வித்யா (13) அருகில் உள்ள பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றார். வெகுநேரமாகியும் அவரைக் காணாததால் பெற்றோரும் உறவினர்களும் வித்யாவைத் தேடினர்.

சென்னை தடை செய்யப்பட்ட மண்டலமாகுமா?

தடை செய்யப்பட்ட மண்டலமாகுமா சென்னை? மின்னம்பலம் :  சென்னையில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென விசிக வலியுறுத்தியுள்ளது.
ஊரடங்கு காரணமாக அரசியல் கட்சிகள் நிகழ்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், வீடியோ கான்பரன்சிங் வழியாக கட்சிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று (ஜூன் 4) வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்றது.
கொரோனா பாதிப்புகள், அதுதொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால் ஏழை மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து அதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜெ. அன்பழகன் உடல் நிலை கவலைக்கிடம்.. 80% செயற்கை சுவாசம்:

 80% செயற்கை சுவாசம்: ஜெ. அன்பழகன் உடல் நிலை கவலைக்கிடம்!மின்னம்பலம் : திமுக மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று சென்னை ரேலா மருத்துவ ஆய்வு நிலையம் அதிகாரபூர்வமாக இன்று (ஜூன் 4) தகவல் வெளியிட்டிருக்கிறது.
“61 வயதான தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் ஜூன் 2 ஆம் தேதி சென்னையிலுள்ள டாக்டர் ரேலா மருத்துவ ஆய்வு மையத்தின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுவாசப் பிரச்சினைகளோடு வந்தார். அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் பாசிட்டிவ் என்று முடிவு வந்தது.
ஆரம்பத்தில் அன்பழகனுக்கு ஃபேஸ்மாஸ்க் மூலம் ஆக்சிஜன் தெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. நேரம் செல்லச் செல்ல அவரது சுவாசிக்கும் ஆற்றல் மோசமடைந்ததால், செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது.

யானை,குற்றவாளிகள் ,கடும் நடவடிக்கை: பினராயி,

தினமலர் : புதுடில்லி: கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரிடம் விசாரணை நடக்கிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில், பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் உள்ள, வெள்ளியார் ஆற்றில் கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரிடம் விசாரணை நடப்பதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் கூறியது,
பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணையை நடந்து வருகிறது. குற்றவாளிகள் நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுவர். இதற்கானஅனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் என்றார்.

இந்தியா கொண்டு வரப்பட்டாரா விஜய் மல்லையா? – உண்மை நிலவரம் என்ன?

vijay mallyaவெப்துனியா :லண்டனில் தலைமறைவாய் இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையா கைது செய்து இந்தியா கொண்டுவரப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திரும்ப  செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டதாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது வழக்கு உள்ளது. இதை தொடர்ந்து லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவை லண்டன் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. விஜய் மல்லையாவை திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு திரும்பாமல் இருக்க மல்லையா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு

"ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது" இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்புdailythanthi.com: ஒரு சிறிய கூட்டம் சீனாவிற்கு எதிராக செயல்பட முடியாது என இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு அமெரிக்காவை சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பெய்ஜிங். இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.இதனால் சீனாவிற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் அமெரிக்கா தீவிரமாக செய்து வருகிறது.
உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த தேவையான விஷயங்களை அமெரிக்கா செய்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக ஜி7 மாநாட்டை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

டான் அசோக் ..புலி பிரசாரம் .... சமுக வலையில் சில கருத்துக்கள்

Don Ashok -: super sir. நான் உங்களோடு முற்றிலும் உடன்படுகிறேன். பல பெரியாரிஸ்டுகள் என்னைத் திட்டிக்கொண்டிருப்பதற்கு காரணம் நீங்கள் சொன்ன எல்லா விமர்சனத்தையும் அவர்கள் மீது நான் துணிச்சலால வைத்ததால்தான் சார். நீங்கள் இன்னும் சத்தமாகப் பேச வேண்டும். ஈழத்தமிழர்கள் வேறு புலிகள் வேறு என்பதை நாம் சொல்வதைவிட நீங்கள் எல்லாம் சத்தமாக சொல்ல வேண்டும். செருப்பால் அடிததாற்போல சொல்லவேண்டும். அப்படி நீங்கள் சொல்லி, உங்களைப் போன்றவர்களின் குரல் ஓங்கும்போது நானெல்லாம் அதைப் பற்றி பேசவே மாட்டேன் சார். பேசவும்  தேவை இருக்காது. என் கருத்தையும் திரும்ப பெற்றுக்கொள்கிறேன் சார்
Radha Manohar : நன்றி தோழர் பதிவை நீக்கி விட்டேன் .தமிழகத்தில் இருந்து புலி பஜனை நிறுத்தப்படும் வரை கலைஞர் மீதான துர்பிரசாரத்தை அவர்கள் தொடரவே செய்வார்கள் . ஏனெனில் திமுக எதிர்ப்பாளர்களால் திட்டமிட்ட ஒரு ஆயுதமாகவே புலிகளின் பிரசார இயந்திரம் உருவாக்கப்பட்டது . நெடுமா , சீமா மற்றும் பெரியார் இயக்கங்கள் இந்த வேலை திட்டத்தை இன்று வரை முன்னெடுக்கிறார்கள் . புலம்பெயர் புலிகளின் ஆக்சிஜன் விநியோகஸ்த்தர்களே இவர்கள்தான் . தமிழகத்தில் புராஜெக்ட் செய்யப்படும் புலி பிம்பம்தான் அவர்களுக்கு ஆக்சிஜன்

பாலங்கள் கட்டிய கலைஞர் .. 80 பாலங்கள் பற்றிய விபர பட்டியல்

திருநெல்வேலி திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்
Muralidharan Pb : தற்கால தமிழ்நாட்டின் தந்தை என்பது ஏன்?
தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களுக்கு சாலை போக்குவரத்து இன்றியமையாத ஒன்று.
கோவை அவினாசி ரோடு மேம்பாலம்
அப்படி இருக்கையில் பாலங்கள், மேம்பாலங்கள் கட்டினால் தான் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க ஏதுவாக இருக்கும் என்பதை உணர்ந்து தலைவர் கலைஞர் கட்டிய 2000 ஆண்டு வரை பாலங்கள்.
A Sivakumar :  கலைஞரும் மேம்பாலங்களும்
தலைநகர் சென்னைக்கு வெளியே தலைவர் கலைஞர் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கிய பாலங்கள்,
1) தஞ்சை திருச்சி மாவட்டங்களை இணைத்து கொள்ளிடம் ஆற்றில் திருமானூர் மேம்பாலம், 1969
2) குளித்தலை - முசிறி காவேரிப் மேம்பாலம், 1969
3) திருநெல்வேலியில் திருவள்ளுவர் பெயரில் ஓர் ஈரடுக்கு மேம்பாலம், 1970
4) கோவையில் ஓர் மூன்றடுக்கு மேம்பாலம், 1971
5) ஈரோடு சத்தியமங்கலம் சாலையில் ஓர் மேம்பாலம், 1972
6) ஒக்கேனக்கல் சாலையில் சின்னாற்றுக்கு குறுக்கே ஓர் மேம்பாலம், 1973
7) பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் ஓர் மேம்பாலம், 1973
8) தேவிப்பட்டினம் திருப்பாலக்குடி சாலையில் ஓர் மேம்பாலம், 1973
9) ராமநாதபுரம் பொய்யேரி செல்லும் சாலையில் ஓர் மேம்பாலம், 1973
10) முத்துப்பேட்டை - மீமிசல் சாலையில் அம்புலியாற்றின் மீது ஓர் மேம்பாலம், 1974

முள்ளிவாய்க்காலில் கிழக்கு மக்கள் அஞ்சலி செலுத்த தடை போட்ட வடக்கு ஆதிக்க வெறியர்கள்

Reginold Rgi : இந்த சம்பவத்தை சாதாரண ஒரு சம்பவமாக கடந்து செல்ல முடியாது. கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயமாகும்.
மட்டக்களப்பு அம்பாறையை சேர்ந்த முன்னாள் போராளிகள், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுமாக சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் நான்கு பஸ்களில் அஞ்சலி செலுத்துவதற்காக 17ஆம் திகதி புறப்பட்டு 18ஆம் திகதி காலையில் முள்ளிவாய்க்காலை சென்றடைந்தனர்.
இவர்கள் இம்முறைதான் முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்கள் அல்ல. கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு மே 18ஆம் திகதியும் முள்ளிவாய்க்காலுக்கு சென்று அங்கு ஒரு இடத்தில் அந்த மண்ணில் மடிந்த தங்கள் உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

புதன், 3 ஜூன், 2020

ஜெ. அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை: .... முழு விபரம்

மின்னம்பலம் :மாவட்டச் செயலாளர்கள் கூட்டங்களின்போதும், தனிப்பட்ட
முறையில் மாவட்டச் செயலாளர்களிடம் பேசும்போதும் திமுக தலைவர், ‘நிவாரண உதவிகள் வழங்கும்போது ரொம்ப கவனமா இருங்க. சமூக இடைவெளியோட நிகழ்ச்சிகளை நடத்துங்க. கிளவுஸ், மாஸ்க் எல்லாம் போட்டுக்கங்க’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.
ஐபேக்கை எதிர்த்து அன்பழகன் பேசிய மே 16 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட, ஜெ. அன்பழகனைப் பார்த்த ஸ்டாலின், ‘என்ன முகத்துல கொப்புளமா இருக்கு?’ என்று கேட்க. ‘வெப்பக் கட்டிண்ணே’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அன்பழகன். உடம்பைப் பாத்துக்கங்க என்று அப்போதும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அன்பழகனிடம் தனியாகப் பேசும்போதும், ‘ஏற்கனவே உங்களுக்கு ஆபரேஷன் நடந்திருக்கு. அதனால நீங்க ஊரடங்கு நேரத்துல பாத்து நடந்துக்கணும்’ என்றும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஏற்கனவே சுமார் இருபது வருடங்களுக்கு முன் கல்லீரல் தொடர்பான அறுவை சிகிச்சையை அமெரிக்காவில் செய்துகொண்டார் அன்பழகன்.

திரு.துரைமுருகன், மீண்டும் பொருளாளராகவே தொடருவார்!...திமுக தலைவர் .ஸ்டாலின்.

கதைய முடிச்சிட்டாங்கய்யா... கலங்கிய  துரைமுருகன்மின்னம்பலம் : திமுக பொருளாளராக இருந்து, பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு உயர்த்தப்படுவதாக இருந்த துரைமுருகன், மீண்டும் பொருளாளராகவே தொடருவார் என்று அறிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சில நாட்களுக்கு முன்னே இது அரசல் புரசலாக துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டபோதிலும் அது அறிவிப்பாக வெளிவந்ததில் குறிப்பாக ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டதில் துரைமுருகன் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்..
ஜூன் 2 ஆம் தேதி காலை மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணையில் பொதுச் செயலாளர் பதவி: துரைமுருகனுக்கு ஷாக் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் குறிப்பிட்டிருந்தவாறே இன்று (ஜூன் 3) துரைமுருகன் பொருளாளர் பதவியிலேயே தொடர்வதாக அறிவித்துள்ளார் ஸ்டாலின்.

கர்ப்பிணி யானைக்கு "வெடி" அன்னாசி பழம் கொடுத்து கொன்ற மனிதர்கள்

தினத்தந்தி : பாலக்காடு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான 1கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது. இதனைப் பார்த்து பயந்த மக்கள், தங்களுக்கும் தங்கள் ஊருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என எண்ணி, யானையை விரட்ட அன்னாசிப்பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர்.
பழத்துக்குள் வெடிமருந்து இருப்பதை அறியாது பசியில் இருந்த யானை, அதனைவாங்கிச் சாப்பிட்டது. சிறிது நேரத்தில் வயிற்றுக்குள் பழம் வெடித்து தாங்க முடியாத வலியை அனுபவித்துள்ளது கர்ப்பிணி யானை. இறுதியில் அங்குள்ள நதி நீரில் நின்றபடியே தனது குட்டியுடன் உயிரை விட்டது.
இந்த கொடூர சம்பவம் குறித்து நிலாம்பூர்  வன அதிகாரி மோகன் கிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-<
அந்த கர்ப்பிணி யானை அங்குள்ள அனைவரையும் நம்பியது அது சாப்பிட்ட அன்னாசிப்பழம் வெடித்தபோது கண்டிப்பாக அதிர்ச்சியடைந்திருக்கும்.  ஏனென்றால் அது இன்னும் 18 முதல் 20 மாதங்களில் ஒரு குட்டியை) பெற்றெடுக்கப் போகிறது

கலைஞர் எங்கள் கட்டுமரம் ..

எந்த பக்கம் பார்த்தாலும் எந்த வெளிச்சமும் தெரியாத அந்த நாட்கள்..
உலகத்தின் கண்களில் தென்பட்டு விடாத இருளுக்குள் ஒழிந்து கொண்டிருந்த அந்த நாட்கள்.
எல்லா பக்கமும் இனவாதிகள் மூட்டிய தீக்குள் மெல்ல மெல்ல விழுங்கப்பட்டு கொண்டிருந்த அந்த நாட்கள்.
முட்டி மோதிக்கொண்டு வெடிக்க தொடங்கிய வேதனை மிகு நாட்கள்.
ஒரு பெரிய பெரும்பான்மை இனமும் முற்று முழுதாக அவர்களே ஆண்டு கொண்டிருந்த நாட்கள்
எப்படி பார்த்தாலும் எட்டி விட முடியாத ஒரு உயரத்திற்கு எட்டியே தீரவேண்டிய தீர்மானத்திற்கு எல்லோரும் வந்து விட்ட அந்த நாட்கள்.
அந்த சின்னிசிறு தீவுக்குள் வைத்தே வெறும் சிறுகதை போல முடிந்து விடுமோ என்று ஏங்கி கொண்ட்ருந்த அந்த நாட்கள் ...
இத்தனை சஞ்சலங்கள் எல்லாவற்றையும் போக்கும் வல்லமை கொண்ட ஒரு சத்தம் கடலை தாண்டி எங்கள் காதுகளை தடவ தொடங்கியது.
எமது எல்லா திசைகளும் கோபாலபுரத்தை மட்டுமே நோக்கி எட்டி பார்த்த அந்த நாட்கள் .
நாங்கள் நாதி அற்றவர்கள் அல்ல .. என்ற நம்பிக்கை ஒளியை எங்கள் பக்கம் வீசியது அந்த தென்னகத்து திராவிட கலங்கரை விளக்கம் .
எம்மால் எட்டவே முடியாது என்று ஏங்கிகொண்டு இருந்தவை எல்லாம் எம்மை நோக்கி வரத்தொடங்கியது ..

கலைஞருக்கு இன்று 97வது பிறந்த நாள்


தினகரன் :முத்தமிழறிஞர் கலைஞருக்கு இன்று 97வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை: முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நம் உயிருடன் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி(இன்று) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி-வட்ட-பேரூர்- கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் - திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

நிசர்கா': 138 ஆண்டுக்கு பின் மும்பையை தாக்கும் புயல்.. இன்று பகல் கரையை கடக்கிறது

latest tamil newsஇன்று பகல் கரையை கடக்கிறது 'நிசர்கா': 138 ஆண்டுக்கு பின் மும்பையை தாக்கும் புயல்தினமலர் : மும்பை : 'தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள 'நிசர்கா' புயல் இன்று பகல் மஹாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1882ம்
ஆண்டுக்கு பின் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை புயல் தாக்க உள்ளது.தென் மேற்கு பருவமழை நேற்று முன்தினம் துவங்கியது. இந்தநிலையில் தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.இது புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 'நிசர்கா' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் இன்று பகல் மகாராஷ்டிரா

புலிகளின் பெரு வெற்றிகள் அனைத்தும் கருணாவின் தலைமையில்தான்...? கிழக்கின் குரல் ...


Reginold Rgi : நீங்கள் வடக்கில் இருக்கும் துரோகிகளை போற்றி புகழும் போது நாங்கள் ஏன் எங்கள் மண்ணின் மைந்தன் கருணாவை போற்றி புகழக் கூடாது என்பது மட்டும் என்ன நியாயம் ?
கருணா இல்லாமல் எந்த சண்டையில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறிர்கள்? தீச்சுவாலையை  வென்றவர் கருணா அம்மான் !
குடாரப்பில் தரையிறங்கிய பால்ராஜ் தலைமையிலான புலிபடை ஸ்ரீலங்கா இராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திக்குமுக்கு ஆடியது ஞாபகம் இருக்கிறதா?
ஆனையிறவையும் வென்று பால்ராஜ் மற்றும் தரையிறங்கிய போராளிகளையும் காப்பாற்றியது  கருணா அம்மான்!
 வன்னி நிலத்தை விழுங்க வந்த ஜெயசிக்குறு படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வாழ்வா சாவா என்று போராடிக்கொண்டிருந்தது இயக்கம்!ஸ்ரீலங்கா இராணுவத்தின் முதுகெலுப்பை உடைத்து புலிகளின் வெற்றிக்கு ஏறுமுகம் காண வைத்தவர்  கருணா அம்மான் !
மணலாற்று காட்டுக்குள் இந்திய இராணுவம் தலைமையை நெருங்கிய போது தப்பினோம் பிழைத்தோம் என்று வன்னி தளபதிகள் ஓட இரும்பு வேலி அமைத்து உங்கள் தலைமையை காப்பாற்றியவர் கருணா அம்மான்!
புலிகளின் வரலாற்றை எழுதுவதென்றால் கருணா என்ற ஒரு கதாநாயகன் இல்லாமல் எப்படி எழுத முடியும்?

தஞ்சாவூர் .. மே.வங்க பெண்ணை வீட்டில் அடைத்து பாலியில் விடுதி நடத்திய தம்பதிகள்


tamil.oneindia.com :
செங்கிப்பட்டி அருகே பூதலூர் பிரிவு சாலை அருகே ஓடும் காரில் இருந்தே பெண்ணை வீசி விட்டு சென்றனர்" என்று தெரியவந்துள்ளது
வயிற்றை பிடித்து கொண்டே அழுதவாறே இந்த தகவல்களை பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அந்த பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் அந்த பெண் தங்கி இருந்த வீட்டின் ஓனர் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மாதர் சங்கத்தினர் வலுவான வேண்டுகோளை வைத்து வருகின்றனர்
 அப்போதுதான் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின.. சம்பந்தப்பட்ட பெண் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்.. பெங்களூருவில் குடும்பத்தினருடன் தங்கி இருந்துள்ளார்... அப்போது அங்கிருந்து அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு, வீட்டு வேலைக்காக ஒருவர் அழைத்து சென்றிருக்கிறார்.. 5 மாதமாக அந்த வீட்டில்தான் பெண் வேலை பார்த்து வந்துள்ளா

செவ்வாய், 2 ஜூன், 2020

கலைஞர் தொடக்கிய திட்டங்களால்தான் இன்றுவரை தமிழகம் தப்பி பிழைக்கிறது

Devi Somasundaram : என்னப்பா பிரச்சனை,
இது செய்தா எல்லார்க்கும் கிடைக்குமா,
சரி விடு எல்லார்க்கும் செய்துடலாம் .
இது ஒரு மந்திரம் .. கலைஞரின் மந்திரம்..
என்ன பிரச்சனை என்று அறிந்து அதற்கான தீர்வு அனைவருக்குமானதாக இருக்கனும் என்பதில் தெளிவு செய்து ...அந்த எல்லாருக்கும் என்பதில் எத்தனை அர்த்தம் இருக்கு ..
யாருக்கு, என்ன சாதி, நம்ம ஆளா, என்று பார்த்து செய்வதில்லை...வானத்திற்கு கீழ அத்தனை பேரும் மக்கள் என்ற அடிப்படை ..
கலைஞர் ஒரு சித்தாந்தம் .. ஒன்றை உருவாக்க இன்னொன்றை அழிப்பது தான் உலக இயல்பு, மண்ணை அழித்து தான் கல், காட்டை அழித்து தான் வயல், .
கலைஞர் அழிக்காமலே உருவாக்கியவர்...விவேகானந்தரை அழிக்காமல் அதை விட பெரிய வள்ளுவர் சிலை வைத்து விவேகானந்தர் பாறையை வள்ளுவர் பாறை ஆக்கியவர்.
சீதையை சிலையை அழிக்காமல் கண்ணகிக்கு சிலை வைத்து சீதா தேவி கோட்டங்களை கண்ணகி கோட்டம் ஆக்கியவர்.
பாப்ப்பனரை அழிப்பது நோக்கமல்ல , தமிழை,தமிழரை வளர்ப்பதே நோக்கமாய் செயல்பட்ட தலைவன் .

சலூனில் முடிவெட்ட ஆதார் கட்டாயம்!

சலூனில் முடிவெட்ட ஆதார் கட்டாயம்!மின்னம்பலம் : முடிவெட்டச் செல்வதற்கு ஆதார் கண்டிப்பாக கொண்டுசெல்ல வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஐந்தாம் கட்டமாக ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக சலூன் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

சுப. வீரபாண்டியன் : பச்ச மட்டைக்குப் பயந்தவர்கள் இல்லை நாங்கள்!

-சுப. வீரபாண்டியன் : ஆபாசமும், வன்முறையும் நிறைந்த அந்த முகநூல்
பதிவு, சில நாள்களுக்கு முன் வெளிவந்துள்ளது. நான் நேற்று மாலைதான் பார்த்தேன்.
ஒரு செருப்பை எடுத்து ஒருவர் உயர்த்திக் காட்டி, "என்ன தெரியுதா இது, தேய்ந்துபோன பழைய...."என்று அந்தக் காணொலி தொடங்குகிறது. 11 நிமிடங்கள் தொடரும் அந்தக் காணொலியில், தோழர் சுந்தரவள்ளியைப் பற்றிய இழிவான, தரக்குறைவான வசைகள் நிறைந்துள்ளன. வசைகளுக்கு இடையிடையே மிகக் கடுமையான வன்முறை மிரட்டல்கள் இடம் பெற்றுள்ளன. திமுக தலைவர் தளபதி, தி,க தலைவர் ஆசிரியர் ஆகியோரைப் பற்றியும், என்னைப் பற்றியும், இழிவான சில சொற்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
எதற்காக இந்தக் காணொலி? சுந்தரவள்ளி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்துத் தவறாகப் பேசிவிட்டாராம். அப்படி என்ன பேசிவிட்டார்? "தோழர் பிரபாகரன்" என்று சொன்னாராம். அதற்குத்தான் அவ்வளவு வசையாம். "நீ யாருடி அவர தோழான்னு சொல்றதுக்கு?" என்று தொடங்கி, சுந்தரவள்ளியின் உருவ அமைப்பு, நடத்தை பற்றியெல்லாம் பல அவதூறுகள்.
தோழர் என்னும் சொல் அவ்வளவு இழிவானதா? மிக உயர்ந்த சொல்லாயிற்றே அது!

பொதுச் செயலாளர் பதவி.. . துரைமுருகனுக்கு ஷாக்!

டிஜிட்டல் திண்ணை: பொதுச் செயலாளர் பதவி... துரைமுருகனுக்கு  ஷாக்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“கொரோனா மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏகப்பட்ட நெருக்கடிகளைத் தருகிறது என்றால் அரசியல் கட்சிகளுக்குள்ளும் பல்வேறு குழப்பங்களை உண்டாக்கி வருகிறது. திமுகவில் ஏற்கனவே நிறைய குழப்பங்கள் இருக்க, கொரோனா ஊரடங்கு மேலும் சில முக்கிய குழப்பங்களுக்கு வித்திட்டிருக்கிறது.
திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகன் அக்கட்சியின் பொதுச் செயலாளராகப்பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையில்தான்... ஊரடங்கால் பொதுக்குழு தள்ளிக்கொண்டே போகிறது. இந்த நிலையில்தான் துரைமுருகனுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தலைமை முடிவாக எடுத்திருக்கிறது என்கிறார்கள்.