![]() |
Tamilarasu J - GoodReturns Tamil : அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.
2020-ம் ஆண்டு கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 8.9 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே 2022-ம் ஆண்டு மே மாதம் 105.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
யார் இந்த கவுதம் அதானி? எப்படி இவருக்கு இந்த வெற்றி கிடைத்தது? விளக்கமாக இங்கு பார்க்கலாம்.
20 வயதில் லட்சாதிபதி
மும்பைக்கு 17 வயதில் வைரம் விற்பனை செய்யும் தரகராக வந்த கவுதம் அதானி அடுத்த 3 வருடத்தில், தனது வயது 20 ஆகும் போதே லட்சாதிபதியாக உருவாகினார்.
அதானி எண்டர்பிரைஸ் தொடக்கம்
1988-ம் ஆண்டு, 26 வயதாகும் போது ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்ய அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனங்கள் உள்பட அதானி குழுமம் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உருவாகியுள்ளது.