சனி, 2 ஜூன், 2012

ஜெயாவின் பொய் வழக்கு போலிஸ் வாங்கிய அவமானம்


ஐ.பெரியசாமி வீட்டில், போலீஸ் படைக்கு தி.மு.க. வழங்கிய ராஜோபசாரம்!

Viruvirupu
தமிழக காவல்துறைக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ஏற்பட்ட அவமானம் போல, வேறு எங்காவது ஏற்பட்டதா என்று தெரியவில்லை. அதிகார தோரணையில் ரெயிடு நடத்தச் சென்ற போலீஸ், தி.மு.க.-வினரால் அடைத்து வைக்கப்பட்டு, “ரெயிடு வேணாம், ஆளை விடுங்க” என்று பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு, ஓடி வந்திருக்கிறார்கள்.
ரெயிடு சென்ற போலீஸ் படை, ஒரு டி.எஸ்.பி. தலைமையில் சென்றது. அதனால் என்ன? டி.எஸ்.பி.யும் மற்றைய போலீஸாருடன், ஐ.பெரியசாமி வீட்டில் அடைபட்டு இருந்துவிட்டு, மீண்டு வந்திருக்கிறார்.
நல்ல வேளையாக எஸ்.பி. செல்லவில்லை.

கலைஞருக்கு ஆ. ராசா எழுதிய கடிதம்

தி.மு.க. தலைவர் கலைஞரின் 89- பிறந்த நாளையொட்டி அவருக்க முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
அக்கடிதத்தில்,   ‘’தனக்கு உவமை இல்லா தலைவர் கலைஞருக்கு வணக்கம். நேரில் வந்து வணங்கிட இயலாத நிலையில் உங்கள் 89-வது பிறந்தநாளில் என் நினைவுகள் மீண்டு வந்து உங்களை பணிந்து வாழ்த்திட தலைப்படுகின்றன. கால் நூற்றாண்டு கடந்து போய் விட்ட அந்த காலத்து கணங்களை நினைவு கொள்கிறேன்
கடற்கரை வெளியில் நெருங்க முடியாத தூரமும் ஆக்கிரமித்து இருந்த அந்த இரவு வெளிச்சத்தில் நடந்த உங்களின் மணி விழாவில்,

ஜாமீனுக்கு கோடி கோடியாக வாங்கிய நீதிபதி... மாட்டும் மற்றொரு நீதிபதி

 Pattabhi Fixed Bail Deal Rs 15 Crore
ஹைதராபாத்: சுரங்க முறைகேட்டு ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுத்த விவகாரத்தில் சிபிஐ நீதிபதி மட்டுமல்ல. பல பெருந்தலைகளின் பெயர்களும் வரிசையாக அடிபட்டு வருகின்றன. ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிபிஐ நீதிபதி பட்டாபி ரூ15 கோடி பேரம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனைவியால் சித்ரவதையை அனுபவிக்கும் கணவர் விவாகரத்து பெற உரிமை உண்டு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: மனைவி துன்புறுத்துவதை காரணம் காட்டி விவாகரத்து பெறுவதற்கு கணவனுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகத்தின் மகள் ஹேமலதா. இவருக்கும், கே.ரமேஷ் என்பவருக்கும் 2000-ம் ஆண்டு சென்னை மகாலிங்கபுரம் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு வேளச்சேரி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்தனர். இருவரிடையே பிரச்சனை ஏற்பட ரமேஷை வரதட்சணை வழக்கில் சிறைக்கு அனுப்பினார் மனைவி ஹேமா. இதனால் விவகாரத்து கோரி ரமேஷ் தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில் ரமேஷ் மீதான வரதட்சணை கொடுமை வழக்கையும் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

யாரோட ஆட்சி நடக்குது?யாருடைய பணம்?

தே.மு.தி.க., சார்பில், பெட்ரோல் விலை உயர்வில் மக்கள் விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, திருச்சி ஜங்ஷன் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தாக்கியும், அறிவுரை கூறியும் பேசியதாவது: ‘’தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க; மக்கள் வரிப்பணத்தில் இந்தியா முழுவதும் தமிழக அரசு விளம்பரம் செய்கிறது. இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? கட்சி பணமா? இல்லை. மக்களின் வரிப்பணம். சட்டசபையில் யாரோ அமைச்சர் மூனுசாமியோ முனுசாமியோ பேசினாராம், ’உங்க தலைவர் ஊரே சுத்தி வந்து பேசினாரு.

விஜயகாந்த் என்றால் பயமா?ஜெயலலிதாவால் பதில்கூற முடியாத கேள்வி

Viruvirup
“சங்கரன்கோவிலில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டன. நாங்களும் போட்டியிட்டோம். அங்கே ஜெயிப்பதற்காக ஜெயலலிதா அமைச்சர் பட்டாளத்தை அனுப்பி வைத்தார். இப்போது புதுக்கோட்டையில், நிலைமை வேறு. அ.தி.மு.க.-வுக்கு எதிராக போட்டியிடும் ஒரே கட்சி தே.மு.தி.க.-தான். ஆனால், சங்கரன்கோவிலுக்கு அனுப்பியதைவிட அதிக அமைச்சர்களை புதுக்கோட்டைக்கு அனுப்பியிருக்கிறார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? எங்களைப் பார்த்து ஜெயலலிதா பயப்படுகிறார் என்று தெரியவில்லையா?” இப்படி லாஜிக்காக கேட்டிருக்கிறார், விஜயகாந்த். அது நிஜமோ, இல்லையோ, அ.தி.மு.க.-வால் பதில் கூற முடியாத கேள்வி.

ஆ. ராசா- சொந்த தொகுதிக்கு செல்ல மனுத்தாக்கல்?

 Raja Will Seek Permission Go Nilgiris
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தமது சொந்த தொகுதியான நீலகிரிக்கு செல்ல அனுமதி கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளையொட்டி அவரை சந்திக்க சென்னை செல்ல ஆ.ராசா அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்வார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் ராசா மனுத்தாக்கல் செய்யவில்லை.

விஸ்வநாதன் ஆனந்த்திற்கு ரூ.2 கோடி ஜெயலலிதா அறிவிப்பு

 Tn Govt Offer Rs 2 Crore Cash Award Chess Anand
சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக வென்ற விஸ்வநாதன் ஆனந்த்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் நடைபெற்ற உலக சேஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பான்ட்டை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். இதனையடுத்து பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெயலலிதா உட்பட பல தலைவர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடத்த சென்ற போலீசார் சிறை பிடிப்பு- வாரண்ட் இல்லாமல் வந்ததாக புகார்

 Police Try Raid I Periyasami House
திண்டுக்கல்: முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் திண்டுக்கல் வீட்டில் போலீசார் சோதனை நடத்த முயற்சித்தனர். வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்த வந்ததாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட போலீசாரை ஐ. பெரியசாமியின் ஆதரவாளர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஆட்சிக்காலத்தில் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஐ. பெரியசாமி. அண்மையில் இவரது வீடு, மகன் மற்றும் மகள் வீடுகளிலும் நூற்பாலைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியிருந்தனர்.

வழக்கு..சரத்குமார், ராதாரவி விதி மீறி பதவி

Case Against Sarathklumar Radharavi Retain நடிகர் சங்கத் தேர்தலில் விதிகள் மீறல்: நிர்வாகிகளாக சரத்குமார், ராதாரவி நீடிக்க தடை கோரி வழக்கு


சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விதிகளை மீறி, நிர்வாகிகளாக சரத்குமார், ராதாரவி ஆகியோர் நீடிப்பதற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் எஸ்.முருகன் என்ற பூச்சி முருகன் தாக்கல் செய்த மனுவில், "நான் 2006-ம் ஆண்டில் இருந்து தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறேன். இந்த சங்கத்தின் 2012-15-ம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிக்கை 30.4.12 அன்று வெளியானது. தேர்தல் அலுவலராக பிறைசூடன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் ஜுன் 10-ந் தேதி நடக்க உள்ளது.

காஷ்மீர் ஜிஹாத் கிளர்ச்சியை கைவிட்டு இந்தியா திரும்ப விருப்பு

இந்திய ஆட்சி எதிர்த்து சண்டையிடும் நோக்கில் இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரத்திலிருந்து எல்லை கடந்து பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் காஷ்மீருக்குள் சென்றிருந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர், தாங்கள் ஆயுதக் கிளர்ச்சியை கைவிட்டு இந்தியா திரும்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளதன் காரணம் என்ன?காஷ்மீரப் பள்ளத்தாக்கு இந்திய ஆளுகையின் கீழ் இருப்பதை எதிர்த்து பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுதம் ஏந்தச் சென்ற கிளர்ச்சிக்காரர்களில் பலர் "காஷ்மீர் ஜிஹாத்" என்று தாங்கள் கூறும் இந்த இயக்கம் இலக்கை நோக்கிப் பயணிப்பதாகத் தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

கவர்ச்சியாக நடிக்க முடியாது.. கார்த்திகா

சுந்தர்.சி இயக்கும் ’மதன கஜ ராஜா’ படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். கதை எழுத துவங்கும் போது மூன்று கெட்டப்புகளில் இருந்த விஷால் கதாபாத்திரம் கதையின் முடிவில் ஒரே ஒரு ரோலாக மாற்றப்பட்டுவிட்டதாம். 
ஹீரோயினாக ஹன்ஸிகா மோத்வானியிடம் பேசிய போது கால்ஷீட்டையும், கதையையும் காரணம் காட்டி மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள் ஹன்ஸிகா மோத்வானி தரப்பினர். தெலுங்கில் ஹிட்டான ‘டம்மு’ படத்தில் நடித்த கார்த்திகாவிடம் கதையை கூறியிருக்கிறார்கள். 
கதையை பொறுமையாக கேட்டுவிட்டு படத்தில் தன் கதாபாத்திரத்தை கவர்சிக்காக மட்டுமே பயன்படுத்துவது போல் தோன்றியதால், நடிக்கவிருப்பமில்லை என்று கூறிவிட்டாராம் கார்த்திகா

வெள்ளி, 1 ஜூன், 2012

பிரதமர் மீதான ஊழல் புகார் விசாரணை நடத்த சி.பி.ஐ நிலக்கரி சுரங்க முடிவு? Cvc Refers Coal Block Allocation Case Cbi
பிரதமர் மன்மோகன் சிங் மீதான ரூ1. லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐக்கு மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ ஆராய ஆரம்பித்துள்ளது.
2008-2009ம் ஆண்டில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றது என்பது தணிக்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ள புகார். இந்தப் புகாரை கையில் எடுத்துக் கொண்டுள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவினர் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி வந்தனர்.

ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள பெண்களைப் பேசவிடு!

”தயவு செய்து கணவனே கண்கண்ட தெய்வமென்று உங்கள் மகள்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள். சிறுமிகளை வளர்ப்பதை நீங்கள் அளவுக்கதிகமாக வெறுக்கிறீர்கள் என்றால், அவர்களைப் பிறப்பதற்கு அனுமதிக்காதீர்கள். அப்போதுதான் பல சிறுமிகள் கொல்லப்படுவதற்குப் பதில் ஒரேயொரு பெண் மட்டும் இறந்து போவாள்!”
என்று நீண்ட நெடிய பெண் வாழ்வின் அவலத்தை நான்கு வரியில் சொல்கிறார் ஷகீலா. ஷகீலாவின் கதை என்ன?
அவரது சகோதரி வகிதா ஒரு மருத்துவர். அவளும், அவளது மூன்று மகள்களும் கணவனால் அமிலம் ஊற்றிக் கொல்லப்பட்டார்கள். வகிதாவின் குற்றம் என்ன? ஆண் வாரிசுக்குப் பதிலாகத் தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதும், அது குறித்து அடிக்கடி அடித்துச் சண்டையிடும் கணவனைச் சகித்துக் கொண்டு அவனோடு வாழ்ந்ததும்தான் அவளது குற்றங்கள்.

அமீர்கானுக்கு எதிராக டாக்டர்கள் போர்க்கொடி

தனியார் டி.வி. நடத்திய சத்யமேவ ஜயதே என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தி நடிகர் அமீர்கான், டாக்டர்கள் குறித்து விமர்சனம் செய்தார்.
மருத்துவ சிகிச்சையில் முறைகேடுகள் நடக்கின்றன. 
மெத்தனம், லஞ்சம், தவறான சிகிச்சை, முறை தவறிய நடத்தைகள் போன்றவை டாக்டர் தொழிலில் காணப்படுகின்றன என்று விமர்சனம் செய்தார்.  பெண் சிசு கொலைக்கு டாக்டர்கள் வழிவகுக்கின்றனர் என்ற உண்மையை ஆதாரங் களுடன் அம்பலப்படுத்தினார்.இந்த கருத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். 21 மருத்துவக்கல்வி நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுள்ள மெட்ஸ்கேப் இந்தியா என்ற அமைப்பு, நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, அந்த அமைப்பு அமீர்கானுக்கு எழுதி யுள்ள பகிரங்க கடிதத்தில்,

’’எல்லா டாக்டர்களையும் ஒரே மாதிரியாக பாவித்து, அவதூறான கருத்துக்களை தாங்கள் வெளியிட்டது, வெட்கக் கேடானது.

Bihar உயர் ஜாதி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார் ரன்வீர் சேனையின்

பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில், இன்று அதிகாலை ரன்வீர் சேனையின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை நேருக்கு நேராக பலதடவை சுட்டுக் கொன்றார் என்கிறது போலீஸ்.
ரன்வீர் சேனை தலைவர் ‘முக்ஹியா ஜி’
இந்த ரன்வீர் சேனை என்பது கொஞ்சம் வில்லங்கமான அமைப்பு!
ரன்வீர் சேனையின் தலைவர் ப்ரமேஷ்வர் சிங், வழமைபோல காலையில் வாக்கிங் சென்றபோதே, சுடப்பட்டுள்ளார். தலை, மற்றும் மார்பில் பலதடவைகள் அவர் சுடப்பட்டதில் இருந்து, எக்காரணம் கொண்டும் அவர் உயிர் தப்பக் கூடாது என்ற நோக்கம் புலனாகிறது.
சூடு பட்டு கீழே விழுந்த சிங், அந்த இடத்திலேயே இறந்து போனார்.
இந்தச் சம்பவம், நவாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கதிரா மொஹாலா பகுதியில் நடைபெற்றுள்ளது. பட்னாவில் இருந்து 71 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த இடம்.

Ertica Desire அபாரம் But மாருதி விற்பனையில் சரிவு

Small Cars Push Maruti Suzuki May Sales Down
கடந்த மாதம் மாருதியின் கார் விற்பனை கடும் வீழ்ச்சி கண்டது. மாருதியின் அஸ்திவாரமாக கருதப்படும் ஆல்ட்டோ உள்ளிட்ட சிறிய கார்களின் விற்பனையில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கிய காரணம். அதேவேளை, சமீபத்திய அறிமுகங்களான டிசையர் மற்றும் எர்டிகா கார்கள் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டதால் மாருதி பெரும் சரிவை ஓரளவு தவிர்த்தது.
கடந்த ஆண்டு மே மாதம் மாருதி நிறுவனம் ஏற்றுமதி உள்பட மொத்தமாக 1,04,073 கார்கள் விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த மாதம் 98,884 கார்களை மட்டுமே மாருதியால் விற்பனை செய்ய முடிந்தது. இது கடந்த ஆண்டு கார் விற்பனையை ஒப்பிடும்போது 5 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டிருக்கிறது.

INDIA உலகத்தரம் வாய்ந்த ராணுவ / நாடாளுமன்ற சேவை


இந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு நல்ல, விரிவான யோசனையை பத்ரி சேஷாத்ரி அளித்திருக்கிறார் – படிப்படியான தனியார்மயமாக்கல். ரயில்வேயில் உள்ள ஊழலை ஒழிக்கவும், லாபம் கொழிக்கும் நிறுவனமான அதை மாற்றியமைக்கவும் ‘உலகத் தரம் வாய்ந்த ரயில்வே சேவை நமக்குக் கிடைக்கவும்’ இந்தத் திட்டம் பயன்படும் என்பது பத்ரியின் நம்பிக்கை. அவர் பாணியிலேயே சிந்தித்தபோது, மேலும் சில திட்டங்கள் உதயமாயின. ரயில்வே துறையை உடைத்த கையோடு இவற்றையும் அமல்படுத்தினால், கூடிய விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும்.
1. இந்திய ராணுவத்தை உடைக்கவேண்டும்
இந்திய ராணுவத்தின் தரம் மோசமாக இருக்கிறது. சமீபத்தில் மீடியாவில் கசிந்த வி.கே. சிங் கடிதத்தின்படி பார்த்தால், இந்திய ராணுவம் இன்னொரு டி.என்.ஈ.பி. யாக மாறிவிட்டது. பீரங்கி இல்லை, ரவை இல்லை, விமானம் இல்லை என்று தொட்டதற்கெல்லாம் ஷார்டேஷ் கணக்கு வாசிக்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக இந்திய ராணுவத்தை அரசாங்கம்தான் நடத்தவேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறார்கள்.  இதை உடனடியாக மாற்றவேண்டும். இந்திய அரசியல்வாதிகளை நம்பமுடியாது.

புதுக்கோட்டை தேர்தல்: தேமுதிகவுக்கு DMK ஆதரவு? ப்ளான் B'?

 Dmk Support Dmdk The Pudukottai Poll
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஆளும் அதிமுகவிற்கு கடும் நெருக்கடியை கொடுக்க தேமுதிகவும் திமுகவும் ரகசிய கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது..
புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூன் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக, தேமுதிக, ஐ.ஜே.கே. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக போட்டியிடவில்லை.

நீதிபதி சஸ்பெண்ட்! சுரங்க ஊழல் ஜாமீன் 5 கோடி லஞ்சம்

 Hc Suspends Cbi Court Judge சுரங்க ஊழல்': ஜாமீன் பெற நீதிபதிக்கு ரூ. 5 கோடி லஞ்சம் தந்த ஜனார்த்தன ரெட்டி-நீதிபதி சஸ்பெண்ட்!

ஹைதராபாத்:  சுரங்க ஊழலில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க, சிபிஐ சிறப்பு நீதிபதி பட்டாபி ராமா ராவ் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நீதிபதி பட்டாபி ராமா ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது மகனின் வங்கி லாக்கரில் சிபிஐ நடத்திய சோதனையில் ரூ.2 கோடியை கைப்பற்றப்பட்டுள்ளது. மீதி ரூ. 3 கோடியை அவர் எங்கே பதுக்கினார் என்ற விசாரணை நடக்கிறது.

சாமியார்கள் தேர்தலில் போட்டியிட தடை புத்த, இந்து, கிறித்துவ, இஸ்லாமிய சகலரும் தேர்தலில்

 இலங்கையில் புத்த துறவிகள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவதை தடை செய்யக் கோரும் மசோதா ஒன்று நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து, எந்தவொரு மதத் தலைவரும், எம்.பி.-யாவதை தடை செய்ய வேண்டும் என்று கோருகிறது இந்த மசோதா.
இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷே, இந்த மசோதாவை சமர்ப்பித்திருக்கிறார். இது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாலே, சட்டமாகும்.
இலங்கை அரசியல் சட்டத்தின் 19-வது சட்டப்பிரிவாக இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரியிருக்கிறார் விஜேதாச ராஜபக்ஷே. தற்போதுள்ள 17-வது நாடாளுமன்றம் கலைக்கப்படும் முன்னர் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
“மதங்கள், தத்தமது கௌரவத்தையும், பெருமையையும் காத்துக் கொள்ள வேண்டும். மதத் தலைவர்கள் அல்லது மதகுருக்கள் தமது மதப் பணிகளை செய்வதே, மதத்துக்கு அவர்கள் ஈட்டிக் கொடுக்கும் கௌரவமாக இருக்கும். அதை விடுத்து மதத் தலைவர்கள் அரசியல்வாதிகளாக செயல்படுவது, மதத்தின் மீதுள்ள மரியாதையை கெடுத்துவிடும்” எனவும் விளக்கம் கொடுத்திருக்கிறார் அவர்.

புதுக்கோட்டை பிரசாரம்: நடிகர் சரத்குமார் சென்னையில் இருந்து பல்லக்கில் வருகிறார்!

Viruvirupu, Friday 01 June 2012, 02:05 GMT
புதுக்கோட்டையில் 32 அமைச்சர்கள் முகாமிட்டு உள்ளனர், பிரச்சாரம் செய்ய முதல்வர் ஜெயலலிதாவும் வந்திறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும், தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் என்பவரை ஜெயிப்பதற்காக மற்றைய வேலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, புதுக்கோட்டையில் புகுந்து விளையாடுகின்றனர்.
அவர்களது சொந்தத் தொகுதிகளில்கூட இந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள்! புதுக்கோட்டையில் வெயில் அனல் பறக்கிறது. தாகத்துக்கு கோலி சோடாதான் கிடைக்கிறது. சைனீஸ் ரெஸ்டாரன்ட் ஏதுமில்லை. அமைச்சர் சீஸ் பர்கர் ஆர்டர் செய்தால், குழிப்பணியாரம் கொடுக்கிறார்கள்.

வரலாற்று ஆராய்ச்சிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை

ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று சென்றிருந்தேன். நிகழ்ச்சியின் நோக்கம், ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்ற ஆங்கிலேயர், சென்னை பல்லாவரம் அருகே கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்து 149 ஆண்டுகள் முடிவடைந்து, 150-வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாட.
சென்னை பல்லாவரம் மலையடிவாரத்தில் தோண்டிய இடமெல்லாம் கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. விதவிதமான கற்கோடரிகள். இவை ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தவை அல்ல. லட்சக்கணக்காண ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. 2 லட்சம் ஆண்டுகள் முதல் 25 லட்சம் ஆண்டுகள் வரை இருக்கலாம். பழைய கற்காலம் (பாலியோலித்திக்) என்று சொல்லப்படும் இந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஹோமினின் இனங்கள் பூமியில் வாழ்ந்தன.

Indian Railway ஐம்பதாண்டுகள் கழித்தும் இதே நிலையில் பின்தங்கி

இந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு திட்டம் 

 சமீபத்தில் நான் லண்டன் மாநகரம் சென்றிருந்தேன். பெரும்பாலும் தரையடி ரயில் வண்டிகளைப் பயன்படுத்தியே ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்றோம். தொலை நகரங்களுக்கும் (உ.ம்: லண்டன் கிங்ஸ் கிராஸ் => கேம்பிரிட்ஜ்) ரயிலிலேயே சென்றோம்.

ஹீத்ரூ விமான நிலையத்தில் இறங்கியதும் ரயில் அட்டை (ஆய்ஸ்டர் கார்ட்) ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டோம். அதைக்கொண்டு அங்கிருந்த எட்டு நாள்களும் உள்ளூர் ரயில், பேருந்து என எதிலும் வேண்டிய அளவு பயணம் செய்ய முடிந்தது. ஓரிரு நாள்கள் கழித்து என் மகள் ரயில்வே மேப்பை வைத்துக்கொண்டு எங்கு இறங்கி எந்த வரிசைக்கு மாற்றிச் சென்றால் சேரவேண்டிய இடத்துக்குப் போகலாம் என்பதை நன்கு அறிந்துகொண்டுவிட்டாள். அவ்வளவு எளிது, இந்தச் சேவையைப் பயன்படுத்துவது.
அவ்வப்போது நெரிசல் இருந்தாலும், பொதுவாக தரையடி ரயில்களில் பயணம் செய்வது மிகவும் வசதியானதாகவே உள்ளது.

Bihar ஓராண்டுத் தடை குட்கா, புகையிலையால் ஆன ஜர்தா பான் விற்பனைக்கு

புகையிலை எதிர்ப்பு நாளான மே 31 ஆம் தேதி, பிகார் அரசு துணிந்து நல்லதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குட்கா, புகையிலையால் ஆன ஜர்தா பான் விற்பனைக்கு ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் பிகார் அரசின் அந்த அறிவிப்பு.
 மிக அதிக அளவில் குட்காவும், கைணி எனப்படும் புகையிலையும், ஜர்தா பீடாவும் பழக்கத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் இப்படியொரு அறிவிப்பு அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் துணிந்து தடை விதித்திருக்கும் முதல்வர் நிதீஷ் குமார் பாராட்டுக்குரியவர்.இந்தியாவில் பான், குட்கா விற்பனைக்குத் தடை விதித்துள்ள 3-வது மாநிலம் பிகார். ஏற்கெனவே, மத்தியப் பிரதேசமும், கேரளமும் குட்கா, ஜர்தா பான் விற்பனைக்குத் தடை

சிக்கன நடவடிக்கை: ஓட்டல்களில் கூட்டங்கள் நடத்த மத்திய அரசு கட்டுப்பாடு

புதுடில்லி: செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதனால், மத்திய அரசு துறைகளில் புதிதாக பதவிகளை உருவாக்கவும், நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்களை நடத்தவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
வாகனம் வாங்க தடை: இதுதொடர்பாக, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும், மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும், திட்டமில்லா செலவில், 10 சதவீதத்தை குறைக்க வேண்டும். எந்த துறையைச் சேர்ந்தவர்களும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்தக் கூடாது.

Advani:பா.ஜ., மீது மக்கள் அதிருப்தி


thangairaja - Dammam,சவுதி அரேபியா
e
அத்வானி அவர்களே இப்படி புலம்ப வேண்டிய நிலையிலிருந்தால் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பினை தெரிந்து கொள்ளலாம். அத்வானி எதிர்பார்ப்பதை போல பிஜேபி ஆர் எஸ் எஸ் நிர்பந்தமில்லாத சுய சார்பு தன்மையுடன் செயல் பட வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் மோடியை முன்னிலை படுத்துவதை நிறுத்துவதோடு அத்வானியையும் பிரதமர் வேட்பாளர் பட்டியலிலிருந்து வெளியேற்றி விட்டு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் ஒருவரை முன்னிலை படுத்தினால் வாய்ப்பு பிரகாசமாகும். அதற்கான வாய்ப்பு இல்லாததால் மீண்டும் காங்கிரசுக்கே ஜெயம்... வசப்படும்.
புதுடில்லி: ""பாரதிய ஜனதா கட்சி மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்,'' என, அந்தக் கட்சியின் மூத்த தலைவரான அத்வானியே கூறியுள் ளார்.
இது தொடர்பாக அத்வானி, தன் இணையதளத்தில் கூறியுள்ளதாவது: பல்வேறு ஊழல்கள் காரணமாக, மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது, மக்கள் இப்போது கடும் கோபத்தில் உள்ளனர். அதேநேரத்தில், மக்களின் கோபத் தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி முற்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்களை பா.ஜ., கட்சியில் சேர்த்ததன் மூலம், பா.ஜ., கட்சியின் ஊழலுக்கு எதிரான பிரசாரம் தடைபட்டுள்ளது. பா.ஜ., கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.

வியாழன், 31 மே, 2012

தரம் தாழ்ந்த அரசியலுக்கு ஜெயலலிதா மட்டுமல்ல தி.மு.க கூடத்தான் காரணம்.

வினவு
பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பதின் பெயரில் எதிர்ப்பே இல்லாமல் ஒரு சடங்கு ஆர்ப்பாட்டத்தை தி.மு.க நேற்று – 30.5.2012 – நடத்தியது. அதில் காங்கிரசு கூட்டணி அரசிலிருந்து தி.மு.க விலகுமென கருணாநிதி பேசியதாக சில தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே கிளப்பிவிட்டிருக்கின்றன. அதிர்ச்சியடைந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கிறார்.
“பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று எங்களால் நிபந்தனை விதிக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவோம் என்றும் கூற முடியாது. ஏனென்றால் திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால் மத்தியில் வரவிருக்கும் ஆட்சி பிற்போக்கான மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம்.

புதுக்கோட்டை: பளபள அமைச்சர்கள் பவ்வியம் காட்ட, எதிராளி மிஸ்ஸிங்!!

புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரச்சாரம் தமாஷாகவே நடக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டமான் முழுமூச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தொகுதி முழுவதும் சுற்றிவர, தே.மு.தி.க. வேட்பாளரின் பிரச்சாரம் டில்லடித்து காணப்படுகிறது.
அ.தி.மு.க. வேட்பாளருக்காக 32 அமைச்சர்கள் பளபளவென வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஓட்டுக் கேட்டு வருகின்றனர். தே.மு.தி.க. வேட்பாளரோ தன்னந்தனியே சுற்ற வேண்டியதாக உள்ளது. அவருடன் துணைக்குச் செல்வதற்குகூட, கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை. மற்றைய மாவட்டங்களில் இருந்து தே.மு.தி.க.-வினர் யாரும் பிரச்சாரத்துக்கு இதுவரை வரவில்லை.

சிறிய பெட்ரோல் எஞ்சின்: அதிக மைலேஜ் கார் நிறுவனங்கள் தீவிரம்


கூடுதல் மைலேஜ், அதிக திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட சிறிய பெட்ரோல் எஞ்சின்களை தயாரிக்கும் பணிகளை மாருதி, ஃபோர்டு நிறுவனங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அனைத்து கார் நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கார் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கும் கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

டீசல் எஞ்சின் தொழில்நுட்பம் வேகமாக மேம்பட்டு வரும் நிலையில், நம் நாட்டு மார்க்கெட்டில் பெட்ரோல் விலை உயர்வு பெட்ரோல் கார் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில்கொண்டு, அதிக மைலேஜ் தரும் புதிய பெட்ரோல் எஞ்சின்களை தயாரிக்க முன்னணி கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
ஈக்கோபூஸ்ட் என்ற பெயரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளது.

பெட்ரோல் விலைஉயர்வு மோட்டார்சைக்கிள்,ஸ்கூட்டர்கள் பக்கம் வாடிக்கையாளர்கள்

பைக் மார்க்கெட்டில் அடிக்கப் போகும் அதிர்ட காற்று!

பெட்ரோல் விலை அதிகரித்து வருவதன் காரணமாக கார் வாங்கும் திட்டத்தை கைவிட்டு, மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். இதனால், அடுத்து வரும் மாதங்களில் இருசக்கர வாகன விற்பனை கணிசமாக உயரும் என்று கருதப்படுகிறது.
சமீபத்திய பெட்ரோல் விலை உயர்வு கார் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. மேலும், டீசல் விலையை அதிகரிக்கவும், டீசல் கார்கள் மீது ரூ.80,000 வரை கூடுதல் வரி விதிக்கவும் மத்திய அரசு தி்ட்டமிட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் கார் கனவு மெல்ல கலைந்து வருகிறது.

கட்சி துரோகிகளை பட்டியலிட்டு கொன்றதாக பேசிய CPI (M) செயலாளர் தலைமறைவு

திருவனந்தபுரம்: கட்சி துரோகிகளை பட்டியல் போட்டு கொன்றதாக பேசி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் மணி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகரன் என்பவர் சில வாரங்களுக்கு முன் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வருகிறது.

20 வயது மூத்த மனைவியை கொலை செய்தேன்

20 வயது மூத்தவர் என்பதால் மனைவியை கொலை செய்தேன்: ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்

பரமக்குடி: என்னை விட 20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் தான் அவளைக் கொன்றேன் என்று போலீசில் ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பரமக்குடி அருகே காட்டுபரமக்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரன் (20). இவருக்கும் சொரூபராணி என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் பிரபாகரனின் குடும்பத்தினர் கொடுத்த தொல்லையால் சொரூபராணி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
ஆனாலும் மனைவியை பிரபாகரன் அடிக்கடி சந்தித்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியை வீட்டுக்கே அழைத்து வந்து செக்ஸ் உறவு வைத்து வந்தார்.

கலைஞர் டிவியின் ‘மானாட மயிலாட’ கடந்து வந்த பாதைசினிமாவில் மட்டும்தான் நடனம், பாடல் என்றிருந்த ட்ரெண்ட் மாறி சின்னத்திரையிலும் கடந்த சில ஆண்டுகளாக டைட்டில் பாடல்கள், நடிகைகளின் நடனம் என கலர்புல்லாக களைகட்டி வருகிறது.
தொடர்களில் மட்டும்தான் நடனமாடவேண்டும் அவர்களை வைத்தே ஒரு நிகழ்ச்சியே நடத்தலாமே என்று டான்ஸ் மாஸ்டர் கலா யோசிக்கத் தொடங்கியதன் விளைவே ‘மானாட மயிலாட’ (சுருக்கமாக எம்எம்). (சொல்லப்போனால் இது ஒன்றும் அவரது சொந்த யோசனை அல்ல அப்போது விஜய் டிவியில் சின்னத்திரை நட்சத்திரங்களை வைத்து ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சி வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தது அந்த நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி என்று கூட இதை சொல்லலாம்).கலைஞர் தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்பட்ட நேரம் அந்த தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகவேண்டுமே? நடன நிகழ்ச்சி என்று முடிவு செய்தாகி விட்டது அதற்கு ஏற்றார்போல நடுவர்களும் கலர்புல்லாக இருக்க வேண்டுமே என்று நினைத்த கலா, பெரிய திரையில் கவர்ச்சி நட்சத்திரங்களாக கலர் கலராக உலா வந்த சிம்ரன், குஷ்பு, ரம்பா, நமீதா போன்ற நாயகிகளை களம் இறக்கிவிட்டார். நிகழ்ச்சியின் வெற்றிக்கு இது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது.

அகிலேஷை சந்தித்த பில்கேட்ஸ்

 Bill Gates Meet With Uttar Pradesh Cm உ.பி வளர்ச்சிக்கு உதவ 'ரெடி'!


மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் ஒருநாள் பயணமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு வந்தார். மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை அவரது அலுவலக இல்லத்தை சந்தித்து பேசிய பில்கேட்ஸ், உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள பல நலத்திட்டங்களை குறித்து ஆலோசித்தார். இந்த சந்திப்பின் போது, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

DMK:மனக் கசப்புடன் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்போம்


 Karunanidhi Rolls Back Pull Out Threat
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அண்ணா அறிவாலயத்தில் நிருபகளுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: மத்திய அரசை விட்டு வெளியேற தயங்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே..
பதில்: நான் எங்கே அப்படிச் சொன்னேன். மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று என்னுடைய பேச்சில் எங்கேயாவது இருக்கிறதா? என்னிடம் பேச்சு `ஆடியோ' செய்யப்பட்டதே இருக்கிறது.

உருமி இந்தியாவின் 15-ம் நூற்றாண்டின் வரலாற்றை


இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என தனக்குள் பல முகங்களை கொண்டுள்ளவர் சந்தோஷ் சிவன். உலக அளவில் பல விருதுகளை பெற்றுள்ள சந்தோஷ் சிவன், ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘உருமி’. 
இந்தியாவின் 15-ம் நூற்றாண்டின் வரலாற்றை தனது சிறந்த ஒளிப்பதிவின் மூலம் கண்முன்னே கொண்டுவந்து பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்துள்ள சந்தோஷ் சிவன் American society of cinematographers என்ற அமெரிக்காவின் ஒளிப்பதிவாளர்களுக்கான அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்.

MGR புலிகள் ஆதரவு? கலைஞர் ஆதரவில்லை? ஜெயலலிதா எதிர்ப்பு?


 http://mathimaran.wordpress.com/

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல; ஆனால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் கணிசமான பேர் திமுக காரர்கள்தான்.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, நன்கொடை தருவது என்பதை திமுகவின் தமிழ் உணர்வு கொண்ட தொண்டர்களிடம்தான் இன்றும் காண முடிகிறது.
தலைமையை மீறிய இந்த அரசியல் உணர்வு மரியாதைக்குரியதாக இருக்கிறது.
ஈழப் பிரச்சினையின் காரணமாகவே பல தொண்டர்கள் திமுகவிலிருந்து வெளியேறியும் இருக்கிறார்கள். (வைகோ மற்றும் அவரை ஆதரித்தவர்கள்)
இதற்கு நேர் எதிராக, அதிமுகவின் தலைவர் எம்.ஜி.ஆர் தீவிரமான விடுதலைப் புலிகளின் ஆதரவாளர், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிறைய பண உதவி செய்தவர் என்று அவரை பற்றிய புகழுரை இன்றும் பேசப்படுகிறது.
அதற்கு நேர் மாறாக, ஒரே ஒரு அதிமுக காரரைக்கூட விடுதலைப் புலிகள் ஆதரவாளராகவோ, ஈழ விடுதலை ஆதரவாளராகவோ பார்க்க முடியவில்லை.

Cellphone..Walking 838 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில், 838 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். இவர்களில், அலைபேசியில் பேசியபடி கவனக்குறைவாக ரயில் பாதையை கடந்தவர், 62 சதவீதம் பேர் இறந்தனர். இது தவிர, 45 பேர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ரயில் நிலையங்களில், நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டியும்; மொபைல் போனில் பேசியபடி, ரயில் பாதையை கடக்கக் கூடாது; ஆளில்லா ரயில்வே கேட்டுகளில், ரயில் வரும் பாதையை கவனித்து கடக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே போலீசார் பொது மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்; விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர்.இருப்பினும், கவனக்குறைவால் ரயிலில் அடிபட்டு உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தமிழகம் முழுவதும், 2010 ஆண்டு, 2,309 பேரும்; 2011ல், 2,318 பேரும்; இந்த ஆண்டு இதுவரை, 838 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா இடைத் தேர்தலில் காங்கிரஸ் காலி?

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் 18 சட்டசபை தொகுதி மற்றும் ஒரு லோக்சபா தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு, ஆளும் இடைத் தேர்தலில் கட்சிக்கு ஆதரவாக இல்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஆந்திர மாநில சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் அடுத்த மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில், மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிகளவு சொத்து குவித்த வழக்கில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை சி.பி.ஐ., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

என் கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது: ராஜசேகர ரெட்டி மனைவி பரபரப்பு புகார்

ஐதராபாத்:""என் கணவர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விஷயத்தில் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், இந்த சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டும்''என, ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி, பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பிரசாரம்:ஆந்திராவில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன், 30 மே, 2012

கேரள சி.பி.எம்: அடி, குத்து, கொல்லு! கம்யூனிசம்!!

 வே.தினகரன்
கேள்வி 1:
திரு. மணி அவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு எதனை நோக்காக கொண்டிருக்கிறது..?
சி.பி.எம் இடுக்கி மாவட்ட செயலர் மணி
கேராளவின் இடுக்கி மாவட்ட சி.பி.எம் கட்சி செயலாளர் எம்.எம்.மணி கடந்த சனிக்கிழமையன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, ” 1980களில் நமது கட்சி எதிரிகளை பட்டியல் போட்டு அழித்தது. இந்தக் கொலைகளெல்லாம் சி.பி.எம்முக்கு புதிததல்ல, ஏறக்குறைய 13 காங்கிரஸ் ஊழியர்களை 1980களின் ஆரம்பத்தில் முடித்திருக்கிறோம். முதல் கொலை சுட்டு நடத்தப்பட்டது, இரண்டாவது சாகும் வரை அடித்து முடிக்கப்பட்டது, மூன்றாவது குத்திக் கொன்றது. இதன் பிறகு எஞ்சிய காங்கிரசு ஊழியர்கள் பயந்து ஓடி விட்டார்கள். பின்னர் திரும்பினாலும் நமது கட்சி தலைவர்களிடம் அனுமதி வாங்கித்தான் இருந்தார்கள் “.
இந்த பேச்சு ஊடகங்களில் வெளியான பிறகு பரவலான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் நர வேட்டை புகழ் மோடியும் உண்டு. தற்போது மணியின் பேச்சை வைத்து கேரள போலீஸ் கொலை வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. மணி குறிப்பிட்ட கொலைகளுக்காக அப்போது நடந்த வழக்குகளில் போதிய சாட்சிகளில்லை என்று சி.பி.எம் கட்சியினர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

காஞ்சிபுரம்: வைணவப் பார்ப்பனர்களின் தீண்டாமை வெறி!

வரதராஜ பெருமாள் கோவில் : பெருமாளுக்கு மரியாதை! சூத்திரனுக்கு அவமரியாதை
இந்தியாவின் சமூக வாழ்வில் பல்வேறு தளங்களில் சாதி கடைபிடிக்கப்படுகிறது என்பதற்கு இந்தப் பிரச்சினை ஒரு சான்று. அதுவும் இறைவன் சன்னிதியிலேயே நடக்கிறது என்றால் மற்ற இடங்களில் அதன் பரிமாணங்களை உணர முடியும்.
நாடெங்கிலும் இருக்கும் இந்து மத கோயில்களில் ‘பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பூசாரி ஆக முடியும்‘ என்பதில் ஆரம்பித்து பிரசாதம் செய்வதற்கு கூட பார்ப்பனர்கள்தான் தகுதி உடையவர்கள் என்று சாதி முறை அமல் படுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம்.

அன்பே சிவம் – 2 மாற்றுத் திரைக்கதைக் குறிப்பு


இந்தப் படத்துக்கான மாற்றுத் திரைக்கதைக் குறிப்புகளை எழுதுவதற்கு முன்பாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும் (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்) என்ற பெயரில் நிழல் பதிப்பகம் சார்பில் வெளியாகியிருக்கும் எனது புத்தகத்துக்கு தமிழ் ஸ்டூடியோ வலைதளத்தில் வெங்கட் சாமிநாதன் விமர்சனம் எழுதியிருக்கிறார். அவரைப் போன்றவர்கள் பொருட்படுத்திப் பேசத் தகுந்த விதத்தில் எழுத ஆரம்பித்திருப்பது குறித்து சந்தோஷமாக இருக்கிறது. பல விஷயங்கள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், மாற்றுத் திரைக்கதைக் குறிப்புகள் எழுதுவது நரைத்த தலைக்கு டை அடிப்பதைப் போன்ற வேலை என்று குறிப்பிட்டிருந்தார். நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. ஓர் அழகான குழந்தைக்கு அலங்காரம் செய்யப் புறப்பட்ட தமிழ் திரையுலகத்தினர் கண் மையை முகமெல்லாம் அப்பி, உதட்டுச் சாயத்தை கண்ணில் போட்டு, பவுடர் முழுவதையும் தலையில் கொட்டி படு விகாரமாக ஆக்கிவைக்கிறார்கள். நான் அந்தக் குழந்தையை முதலில் அழகாகக் குளிப்பாட்டுகிறேன். மிதமான பவுடரை முகத்திலும் கண் மையைக் கண்ணிலும் லேசான உதட்டுச் சாயத்தை  உதட்டிலும் பூசி, தலை முடியை அழகாக வாரி அலங்காரம் செய்கிறேன். என்னைவிட சிறப்பாக அலங்காரம் செய்ய இலக்கிய உலகில் பலரால் நிச்சயம் முடியும். ஆனால், என்னுடைய அலங்காரம் திரையுலகத்தினரின் அலங்கோலத்துக்கு எவ்வளவோ மேல் என்பதுதான் என் நம்பிக்கை.

அன்பே சிவம் – 1 ரகசிய ரீ மேக் by Kamal Hassan

Planes, Trains and Automobiles என்ற படம் 1987-ல் எடுக்கப்பட்டது. தான் பெற்ற இன்பத்தைப் பெறுக வையகத் தமிழர்களும் என்ற உயரிய நோக்கில் அதை அன்பே சிவம் என்ற பெயரில் ரகசியமாக ரீ மேக் செய்திருக்கிறார் கலைஞானி கமல்சார்.
ஆங்கிலப் படத்தில் மாறுபட்ட குணாம்சங்களைக் கொண்ட இரண்டு ஆண் பாத்திரங்கள், தற்செயலாக இரண்டு மூன்று நாள் பயணத்தை இணைந்து மேற்கொள்ள நேருகிறது. தமிழிலும் நல்லசிவம், அன்பரசன் என்ற இரண்டு கதாபாத்திரங்கள் அந்த சாகசத்தைச் செய்கின்றன. ஆங்கிலப் படத்தில் ஒரு கதாபாத்திரம் தேங்க்ஸ் கிவ்விங் டே என்ற முக்கியமான நிகழ்வுக்காக வீடு திரும்பியாக வேண்டிய நிலையில் இருக்கிறது. அதைத் திருமணமாக அழகாகத் தமிழ்ப்படுத்தியிருக்கிறார் நம்மவர்.
ஆங்கிலத்தில் ஒரு கதாபாத்திரம் அட்வர்டைஸ்மெண்ட் தொழிலில் இருப்பவராக வருகிறது. தமிழிலும் அப்படியே. ஆங்கிலப் படத்தின் தொடக்கத்தில் அந்த அட்வர்டைஸ்மெண்ட் நபர் போக வேண்டிய விமானம் ரத்தாகிறது. தமிழில் அதை புயலால் ரத்தாவதாக காட்டுகிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு அதிகம் பேசக்கூடிய ஒரு ஓட்டைவாய் கதாபாத்திரத்துடன் ஒரு ஹோட்டல் அறையில் தங்க நேருகிறது. அட்வர்டைஸ்மெண்ட் பார்ட்டியின் பணம் திருடு போகிறது. தமிழிலும் டிட்டோ. ஓட்டை வாய் கதாபாத்திரம் தனக்கு குடும்பம் இல்லாத நிலையிலும் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறது.

தங்கர் பச்சானின் 'தங்கக் கைக்கு' வந்து சேர்ந்த சாந்தனு, இனியா!

Shanthanu Iniya Pair Thankar S Amma
தமிழிலில் பிரேக்கே கிடைக்காமல் தவித்து வரும் பாக்யராஜ் மகன் சாந்தனுவும், பாரதிராஜாவின் கைக்குப் போயும், கடைசியில் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் கை நழுவிப் போன இனியாவும் இப்போது தங்கர் பச்சான் என்ற சிறந்த படைப்பாளியிடம் வந்து சேர்ந்துள்ளனர். இதனால் இருவரும் இப்போதே பெரும் வெற்றிப் புன்னகையுடன் காணப்படுகின்றனர்.
தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த நல் முத்துக்களில் ஒருவர்தான் தங்கர். இவரது படத்தில் சின்ன வேடத்தில் நடித்தால் கூட போதும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் எத்தனையோ பேர். உணர்ச்சிகரமான இவரது படங்கள் அனைத்துமே வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவையே.
இப்போது அம்மாவி்ன் கைபேசி என்ற புதிய படத்தை இயக்கப் போகிறார் தங்கர். இதில் சாந்தனு நாயகனாக நடிக்கிறார். இனியா நாயகியாக வரப் போகிறார்.

வீட்டுல இருந்தே வொர்க் பண்ணுங்க.. ஐடி நிறுவன ஐடியாக்கள்!

சென்னையில் நிலவும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சாப்ட்வேர் நிறுவனங்களையும் விடவில்லை.
சென்னையில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஜெனரேட்டர்களை வைத்துத் தான் சாப்ட்வேர் நிறுவனப் பணிகள் சமாளிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏசி, லிப்ட்களின் இயக்கமும் அடக்கம்.
ஆனால், கடந்த சில நாட்களாக டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அட்மின் மேனேஜர்களும், பெசிலிடீஸ் மேனேஜர்களும் அல்லோலப்பட்டு வருகின்றனர். டீசல் வாங்க ஆபிஸ் பாஸ்களுடன் ஒவ்வொரு பெட்ரோல் நிலையமாக ஏறி இறங்கி வருகின்றனர்.
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு டீசல் கிடைக்கவில்லை. இதையடுத்து பல சாப்ட்வேர் நிறுவனங்களில் நேற்றும் இன்றும் லிப்ட்கள் இயங்கவில்லை, ஏசிக்களும் இயங்கவில்லை. மின்சாரம் இருக்கும்போது மட்டுமே அவை இயக்கப்பட்டன. மற்ற நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டன.
தரமணி எஸ்டிபிஐ பார்க்கில் டீசலை முன்பே வாங்கி வைத்ததால் தப்பிவிட்டனர். ஆனால், டைடல் பார்க்கில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் படிக்கட்டுகளில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தனர்.

பந்த்: தமிழகத்தில் பஸ்-ரயில்கள் ஓடும்- ஆட்டோக்கள் ஓடாது- கடைகள் திறந்திருக்கும்

சென்னை: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை பாஜக சார்பில் 'பாரத் பந்த்துக்கு' அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பாஜக ஆளும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும், இடதுசாரிகளும் ஆளும் கேரளாவிலும் பந்த் முழு அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பந்த் பெரிய அளவில் வெற்றி பெறாது என்று தெரிகிறது.
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்து நேற்று மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏமி ஜாக்சன் லண்டனில் ஸ்கை டைவிங் Expert

’மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகை ஏமி ஜாக்சனை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் விஜய். தற்போது விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‘தாண்டவம்’ படத்திலும் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். தாண்டவம் ஆக்‌ஷன் படம் என்பதை, படத்தின் விளம்பர போஸ்டர்களே நிரூபிக்கின்றன. 
ஆனால் ஹீரோவின் ஆக்‌ஷனை விட இப்போது பரபரப்பாக பேசப்படுவது ஹீரோயின் ஆக்‌ஷன் தான். தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்துவருகிறது. லண்டனில் உள்ள மிக உயர்ந்த அடுக்கு மாடிக்கட்டிடத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சியில் ஏமி ஜாக்சன் நடித்திருப்பதாக தெரிகிறது.

வாலியிடம் நியாயம் கேட்ட அப்துல் ரகுமான்!

எம்.ஜி.ஆர் யாருக்கு வீடு கொடுத்திருப்பார்?
வாலியிடம் நியாயம் கேட்ட அப்துல் ரகுமான்!

    அம்மி கல் குத்துவதற்கு சிற்பி எதற்கு என்று சொல்லி சினிமாவில் பாடல் எழுத மாட்டேன் என்ற உறுதியோடு இருப்பவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.  இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் அழைத்தும் அந்த வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். 

ஊழல் தலைவிரித்தாடும் BJP/காங்கிரஸ் இட்லிவடையின் சில கேள்விகள்


பம்பாயில் பாஜகவின் தேசிய செயற்குழுவில் யார் பலமாகத் தும்மல் போடுகிறார்கள்,  Racists நரேந்திர மோதி வருவாரா?  corruption எதியூரப்பா வருவாரா? அத்வானி கடைசிநாள் பேரணியில் கலந்து கொள்வாரா என்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த, இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகின்ற தேசியப் பிரச்சனைகளை மாய்ந்து மாய்ந்து எழுதியும், பேசியும் வருகிறார்கள்.

பெட்ரோலியத் துறை: பொன் முட்டையிடும் வாத்து!

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் போது மத்திய அரசு முன்வைக்கும் ஒரே காரணம், சர்வதேச எண்ணெய் விலை உயர்ந்து விட்டது, விலை உயர்த்தாமல் பெட்ரோலியப் பொருட்கள் வழங்கப்படுவதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி இத்தனை கோடி ரூபாய் நட்டத்தில் செயல்படுகின்றன, இனியும் இந்த சுமையை தாங்க முடியாது….என்பதை பல முறை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தக் காரணம் அப்பட்டமான பொய் என்பதோடு, வரிகள், அம்பானிக்கு மானியங்கள், உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கும் சர்வதேச விலை என்று ஏராளமான முறையில் மக்களை ஏமாற்றி வருகிறது மத்திய அரசு. அத்தகைய விவரங்கள ஆதாரங்களோடு முன்வைக்கும் புதிய ஜனநாயகம் கட்டுரை ஏறத்தாழ நான்கு வருடங்களுக்கு முன்வந்ததை இங்கு வெளியிடுகிறோம். இந்தக் கட்டுரையில் உள்ள விலைகள், புள்ளி விவரங்கள் இன்று கூடியிருக்கின்றன என்பதைத் தாண்டி மற்றவை அனைத்தும் இன்றைக்கும் பொருந்துகின்றன. படியுங்கள்!

சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது: ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஹைதராபாத்: கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு 4.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை ஆந்திர உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று 2011-ம் ஆண்டில் வழிகாட்டு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
இதை எதிர்த்து ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பிற்படுத்துப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆர். கிருஷ்ணய்யா வழக்குத் தொடர்ந்தார்.

தமிழ் பள்ளிகளிலும் கட்டண கொள்ளை கொடிகட்டிப் பறக்கும் வசூல்

திருநெல்வேலி: ஆங்கிலம் வழிப் பள்ளிகளில்தான் கட்டணக் கொள்ளை கோலோச்சுகிறது என்றில்லை.. திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்வழிப் பள்ளிகளிலும் கூட கல்விக் கட்டணம் என்ற பெயரில் வசூல் வேட்டை கொடிகட்டிப் பறப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, தென்காசி கல்வி மாவட்டங்களில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என 2500 தமிழ்வழி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆங்கில பள்ளிகளுக்கு இணையாக இத்தகைய தமிழ்வழி பள்ளிகள் தங்களின் தரத்தை உயர்த்தி கொள்வதாக கூறி ஏழை, எளிய மாணவ, மாணவிகளிடம் கல்வி கட்டணம் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்து வருகின்றன.
மெட்ரிக் பள்ளிகளில் உள்ளதை போல் பெரும்பாலான தமிழ்வழி தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வர வேன், பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாத கட்டணமாக ஒரு சில பள்ளிகளை தவிர்த்து பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களிடம் ரூ.200 முதல் ரூ.300 வரை வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளி அருகில் நடந்து செல்லும் தூரத்தில் இருந்து வரும குழந்தைகளிடமும் ரூ.100 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Google எச்சரிக்கை: உங்கள் இணையதளம் முடக்கப்படலாம்


உங்கள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் பரவவிட்டதை அடுத்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களிலிருந்து அரசு கம்ப்யூட் டர்களை பாதுகாப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை அமெரிக்காவின் எப்பிஐ அமைத்தது. ஆனால் அந்த அமைப்பு ஜுலை 9-ம் தேதி அன்று, தனது பாதுகாப்பு வளையத்தை மூட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று

France, US,UK சிரியா தூதர்களை வெளியேற உத்தரவு

பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் மூன்று ஐரோப்பிய நாடுகள், தத்தமது நாடுகளில் இருந்து சிரியா நாட்டு தூதர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளன.
கடந்த வார இறுதியில் ஹாமா பகுதிக்கு அருகே ஹவுலா என்ற இடத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டதன் எதிரொலியாகவே தூதர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது சிரியா நாட்டு ராணுவம் என்பதில் ரகசியம் ஏதுமில்லை. ஆனால், அந்தத் தாக்குதலை தமது ராணுவம் நடத்தவில்லை என்று சூடமதெ்து சத்தியம் செய்யாத குறையாக தெரிவித்துள்ள சிரியா நாட்டு ஜனாதிபதி பஷார் அல்-அசாத், “அந்தத் தாக்குதல் தீவிரவாதிகளின் கைங்கார்யமாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்” என்கிறார்.

நிதி'யமைச்சர் பன்னீர்செல்வம் தேர்தல் கமிஷன் கழுகு பார்வையில்

புதுக்கோட்டை,: இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, புதுக்கோட்டையில் முகாமிட்டுள்ள தமிழக நிதியமைச்சரின் காரை, நான்கைந்து ஜீப்புகளில், பறக்கும் படையினரும், வீடியோ கண்காணிப்பு குழுவினரும், பின்தொடர்ந்தபடி விரட்டிச் சென்று கண்காணித்து வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக, தமிழக அமைச்சர்கள் 32 பேர் உள்ளிட்ட, 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு, புதுக்கோட்டையில் தங்கி, அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, தீவிர பிரசாரம் செய்து வருகிறது.தமிழக நிதியமைச்சரும், அ.தி.மு.க., பொருளாளருமான பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர், தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்து, கட்சியினர் மூலம், அதை செயல்படுத்தி வருகின்றனர்.அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில், தமிழக அமைச்சரவையையே களமிறக்கியுள்ளதால், தேர்தல் பிரசாரத்தில் விதிமுறை மிறல், முறைகேடு, பணப் பட்டுவாடா ஆகியவை நடக்காமல் இருக்க, தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

செவ்வாய், 29 மே, 2012

அழகிரியின் கை ஓங்கிறது கொதி நிலையில் ஸ்டாலின்

Viruvirupu
தி,மு.க.வில் தற்போது ஒரே அழகிரி பேச்சாகவே இருக்கிறது. ஸ்டாலின் லண்டன் சென்றதை அழகிரி நன்றாக பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் உள் விஷயம் அறிந்தவர்கள். சென்னை அறிவாலய வட்டாரங்களில் கூட, அழகிரியின் கை ஓங்கியிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
சென்னை அறிவாலயம் எப்போதும் ஸ்டாலின் ஆதரவு மையமாக திகழ்ந்த இடம்.கடந்த வாரமே கருணாநிதியைச் சந்தித்து, முதலில் மதுரையில் தமது ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பைசல் பண்ணிக் கொண்டார் அழகிரி.“இங்கே நாங்கள் ஆளும் கட்சியாகவும் இல்லை. மத்தியிலும் முன்பு போல செல்வாக்கு கிடையாது. இந்த நேரத்தில் கட்சியில் இருப்பவர்களையும் வெளியே விரட்டி விட்டு என்ன செய்ய உத்தேசம்?” என்று அவர் நேரடியாக கேட்டபோது, கருணாநிதியால் பதில்கூட சொல்ல முடியவில்லையாம்.

நித்தி :ஆயிரம் சீடர்களை பறிகொடுத்தாவது

ஆயிரம் சீடர்களை பறிகொடுத்தாவது
ஆதீனம் சொத்துக்களை மீட்டெடுப்போம் : நித்தி

பொதுமக்கள் கடும் எதிர்ப்பார் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கஞ்சனூர் வந்திறங்கினார் நித்தி.  செய்தியாளர்களிடம் பேசும்போது ஆவேசமானார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ளது கஞ்சனூர். இங்கு உள்ள சுக்கிரன் கோவில் மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமானது. இது நவகிரக தலங்களில் ஒன்று.
இந்த கோவிலுக்கு நித்தியின் சீடர்கள் இரண்டு பேர் 29.05.2012 அன்று காலை 7 மணிக்கு வந்துள்ளனர். அங்கு கோவில் நிர்வாகத்திடம் சென்று, இந்த ஆண்டுக்கான கணக்கு வழக்குகளை கேட்டுள்ளனர். அப்போது கோவில் நிர்வாகத்திற்கும், ஆதினத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் சொல்ல, சலசலப்பு ஏற்பட்டது.

மூத்த பத்திரிகையாளர் சோலை காலமானார்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை (வயது 81) இன்று (29.5.20120 மாலை காலமானார்.கம்யூனிஸ்ட்வாதியாகவும்,  பின்னர் எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராகவும் இருந்தவர் சோலை ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக இருந்து விலகினார். திமுக தலைவர் கலைஞருடன் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தார்.  அரசியல் விமர்சனக் கட்டுரைகளை அதிக அளவில் எழுதி தனக்கென ஒரு தனி இடம் கொண்ட பத்திரிகையாளர் சோலை. நக்கீரன் வாரமிருமுறை இதழ் உட்பட பல்வேறு இதழ்களில்  தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார ண்டுக்கல் மாவட்டம் அய்யன்பாளையத்தை பிறப்பிடமாகக் கொண்ட சோலை,  சென்னையில் வசித்து வந்தார்.

மயங்கினேன் தயங்கினேனில் 100 இடங்களில் கை வைத்த சென்சார்


Mayanginen Thayanginen Faces 100 Cuts In Censor மயங்கினேன் தயங்கினேன் படத்தை பார்த்த சென்சார் போர்டு வெறும் 100 இடங்களில் மட்டுமே காட்சிகளை நீக்கச் சொல்லியுள்ளனர்.
நிதின் சத்யா, திஷா பாண்டே நடித்துள்ள படம் மயங்கினேன் தயங்கினேன். திஷா பாண்டே தமிழ்ப் படம் மூலம் பிரபலமானவர். இன்னொரு நாயகனாக தருண் சத்ரியா நடித்துள்ளார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, புதுமுகம் பாலா, தேஜாஸ்ரீ, அஜய் ரத்னம், டிபி கஜேந்திரன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
பெண்கள் மனநல விடுதிகளில் நடக்கும் பாலியல் அக்கிரமங்களை சொல்லும் இந்த படத்தில் சஞ்சனா சிங் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். படத்தை முடித்து சென்சாருக்கு அனுப்பினர். அவர்களோ வெறும் 100 இடங்களில் மட்டுமே காட்சிகளை கட் செய்தால் போதும் என்றும், 10 இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகளை மியூட் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.

DEATH for Dancing at Wedding in Pakistan-TV9


ஹாலிவுட்- அமெரிக்க இராணுவம் : கள்ளக் கூட்டணி !

பாதி நேரம் படப்படிப்பு! மீதி நேரம் ஆக்கிரமிப்பு !!
அமெரிக்காவில் உள்ள ஒரு சிறு நகரம், மதிய நேரம். டாப் கன் என்ற திரைப்படம் ஓடும் திரையரங்கின் மக்கள் வெளியேறும் வாசற்படி அருகே அமெரிக்க ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பங்களுடன் ராணுவ அலுவலர்கள் இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இந்த ஊரில் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதும் இந்தத் திரைப்படம் ஓடும் ஊர்களில் ராணுவ அலுவலர்கள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள். ஏன்?
வியட்நாம் போரில் வாங்கிய அடிக்குப் பிறகு சொந்த நாட்டு மக்களே அமெரிக்க ராணுவத்தை எதிர்த்துப் போர் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்திய போது, அமெரிக்க அரசு ஒன்றை மட்டும் எதிர்பார்க்கவில்லை. அதுதான் ராணுவத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு.

சசிகலாவின் ‘விக்ரமாதித்தன் ட்ரை’ மீண்டும் ஊத்திக் கொண்டது!


Viruvirupu,

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமதம் செய்யும் நோக்கத்துடன் சசிகலா தரப்பு செய்த மற்றொரு முயற்சியும் ஊற்றிக்கொண்டு விட்டது. சசிகலா தாக்கல் செய்த மனு ஒன்றை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதனால், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், ஜூன் 6-ம் தேதி, சசிகலா கட்டாயம் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னித்தீவு கதை போல பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. முடிந்தவரை இழுஇழுவென இழுக்கப்பட்ட இந்த வழக்கில் ஒரு வழியாக, ஜெயலலிதா தமக்குரிய கேள்விகளுக்கு பதில் அளித்து முடித்துவிட்டார். இப்போது சசிகலாவின் டர்ன்.

ஷாருக்கானுக்காக நிர்வாணமாக போஸ்..பூனம் பாண்டே


ஷாருக்கானுக்காக சகலத்தையும் களைந்த பூனம் பாண்டே!

  நல்ல கிரிக்கெட்டுக்காக நாலையும் செய்யலாம் என்று புதுத் தத்துவத்தைக் கக்கியுள்ளார் பூனம் பாண்டே.ஷாருக்கானின் கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றதுமே பூனம் பாண்டே கிளம்பி விட்டார் தனது கவர்ச்சி களேபரத்துடன். ஷாருக்கானுக்கும், அவரது அணிக்கும் தனது வாழ்த்துக்களை தனது வாளிப்பான உடலைக காட்டி தெரிவித்து அசத்தியுள்ளார்.
ஒரு துண்டு துணி கூட உடலில் இல்லாமல் மொட்டைக் கோலத்துடன படுத்தபடி போஸ் கொடுத்து அந்தப் புகைப்படத்தையும் வெளியி்ட்டுள்ளார் பூனம். இது கொல்கத்தா அணிக்கு நான் கொடுக்கும் பரிசு என்றும் விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.

காங்கிரஸுக்கு அழிவு காத்திருக்கிறது: ஜெகன் அம்மா ஆவேசம்

 Jagan S Mom Ends Fast Poll Campaign இடைத்தேர்தலில் சூறாவளி பிரச்சாரம்ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை திட்டமிட்டு சிறையில் அடைத்திருக்கும் நிலையில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டு இடைத்தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக ஜெகனின் தாயார் விஜயலட்சுமி அறிவித்திருக்கிறார்.

ஜெகன் கைதான நாளில் அம்மா விஜயலட்சுமி, ஜெகனின் மனைவி பாரதி உள்ளிட்டோர் சி.பி.ஐ. அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் ஜெகனின் தாயார் வீட்டில் இருந்தபடியே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். ஆனால் கட்சி நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக ஜெகனின் அம்மா விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.