சனி, 17 செப்டம்பர், 2016

ஞானதேசிகன் கைதாக வாய்ப்பு ? நிலக்கரி இறக்குமதி ஊழல்: நத்தம் விஸ்வநாதன் மற்றும் ..

Coal import scam: Natham Viswanathan, Gnanadesikan will be arrest?சென்னை: வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறி முன்னாள் தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் கைது செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய அதிமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறையினரும் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்த நதியா ஐ.நா.வின் நல்லெண்ண தூதுவராக நியமனம்

இதுதொடர்பில் தனது வலைத்தளத்தில் கருத்து பதிவசெய்துள்ள நதியா, இனப்படுகொலை மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதிய வாழை்வை அமைத்துக்கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். அதுமாத்திரமின்றி மனித கடத்தலை இல்லாது ஒழிப்பதே தனது பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2014 ஆம்  ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற போரின் போது நதியாவின் கண் முன்னர் அவரது தாய் மற்றும் சகோதரர் ஐ.எஸ். தீவிரவாதிகாளால் கொல்லப்பட்டனர். பிறகு நதியாவும் தனது 19 ஆவது வயதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக ஆக்கப்பட்டார்.
நதியா பலமுறை தப்பிக்க முயன்றும் அவரால் தப்பிக்க இயலவில்லை. ஒருமுறை 6 ஐ.எஸ். தீவிரவாதிகள் அவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். இதனால் சுயநினைவை இழந்தார். ( அது சரி நம்ப ரஜினி பொண்ணு இதுவரை மனிதகுலத்துக்கு என்ன சேவை பண்ணிச்சு? அதுவும் இப்போ ஐ நா தூதராமே?   அய்நாவையே காசு கொடுத்து அவா வாங்கிட்டாளா?)

பெரியாரை நாம் ஏன் படிக்க வேண்டும்?.. பெண்கள் வாசிக்க வேண்டும்!

thetimestamil.com : ராஜராஜன்: பெரியாரை எந்த அளவுக்கு நாம் புரிந்து வைத்து
இருக்கிறோம் என்ற கேள்வி நேற்று முழுவதும் என்னுள் இருந்தது. பெரியார் வெறும் கடவுள் மறுப்பாளரா? கடவுள் மீது தீவிர பக்தியுள்ளவர்கள் அனைவருமே பெரியாரை வெறுப்பவர்களா? பெரியாரை வெறுக்க பல காரணங்கள் இருக்கலாம்… பிடிக்க சில காரணங்களே போதும். கமல் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்.. தமிழை எல்லாம் படிக்க சொல்லி கட்டாயபடுத்த வேண்டாம். ஒரு முறை “தமிழ்க்கொக்கி” விழுந்து விட்டால் அது நம்மை விட்டு போகாது என்று கூறி இருப்பார். அதே போன்றது தான் பெரியாரின் கொக்கியும். இந்த வெண்தாடி வேந்தரின் கொச்சை மொழியும்,
எளிய கருத்தும்.. நம்மை எளிதாக கவரக்கூடியது. அவை நம்முள் எழுப்பும் கேள்விகள்.. உள்ளுக்குள்ளே எதிரொளித்துக்கொண்டே இருக்கக்கூடியவை!"

Indo Pak வாகா எல்லை மாதிரி ஆகிவிட்ட இரு மாநில எல்லைகள்!


minnambalam.com  : உலகில் அதிக அரசியல் பதற்றம் உள்ள நாடுகள் இந்தியாவும், பாகிஸ்தானும். அதிக பதற்றம் உள்ள எல்லை, வாகா எல்லை. அதுபோல இந்தியாவுக்குள் அதிக பதற்றம் உள்ள எல்லையாக தமிழக - கர்நாடக எல்லை மாறிவிட்டது. காவிரி விவகாரத்தில் கலவரம் தொடங்கி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்றும் இரு மாநிலங்களுக்கு இடையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து கடந்த 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ச்சியாக தமிழக அரசு பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கப்படவில்லை. இந்த பஸ்கள் அனைத்தும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள். ஆனால், தமிழக பயணிகள் ஓசூருக்குப் போய் அங்கிருந்து கர்நாடக பேருந்துகளை பிடித்து பயணம் போனார்கள். இப்போது அதுவும் இல்லை.

தமிழகத்துக்கு மானிய விலை அரிசி கிடைக்காது: மத்திய அமைச்சர்


minnambalam.com : தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தாத தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு, மானிய விலையில் அரிசி வழங்குவதை நிறுத்தப் போவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் உணவு வழங்குவதை அடிப்படை உரிமையாக வரையறை செய்யவும் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோ கோதுமை அல்லது அரிசி, கிலோ ரூபாய் ஒன்று முதல் ரூபாய் மூன்று விலையில் வழங்கப்படும். இந்த சட்டம் 2013இல் நிறைவேற்றப்பட்ட போதிலும், இதற்கு பல மாநிலங்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தன.

சாதனை: நேற்று பிச்சைத் தொழில்; இன்று கேம்ப்ரிட்ஜ் படிப்பு!


minnambalam.com : ‘கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற கூற்றுக்கேற்ப சென்னை தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஜெயவேல் (22), இப்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது பொய்யாகவில்லை. ஏனெனில் ஜெயவேல் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் சோதனை நிறைந்த தன் வாழ்வை சாதனை மிகுந்ததாக மாற்றியுள்ளார்.
விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், நெல்லூரில் இருந்து சென்னைக்கு ஜெயவேலுவின் குடும்பத்தினர் வந்தனர். எந்த வேலையும் கிடைக்காத நிலையில், அவர்களின் பெற்றோர் வாழ்வாதரத்துக்காக சென்னை தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பெங்களூரில் 42 கே.பி.என். பஸ்களை தீக்கிரையாக்கிய 22 வயது இளம் பெண் கைது!


பெங்களூர்: காவிரிக்காக பெங்களூரில் நடந்த கலவரத்தின்போது கே.பி.என்
டிராவல்சுக்கு சொந்தமான பஸ்களை எரித்த பெண் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பெங்களூரில் கடந்த 12ம் தேதி, திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது, பெங்களூர், ராஜராஜேஸ்வரி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட, டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் 42 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
தீ வைப்பு சம்பவம் மாலை 4 மணியிலிருந்து 4.30க்குள் நடந்துள்ளது. 22 டிரைவர்களும், 2 கிளீனர்களும், ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்குள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இரவில் பணியாற்ற வேண்டும் என்பதால் அவர்கள் அயர்ந்து தூங்கியுள்ளனர்.

வானதி சீனிவாசனிடம் பூ கொடுத்து காதலை தெரிவித்தவரை ..... இன்னொரு வம்பு?


பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கோவை புளியங்குளம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுவதற்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கோணியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு திரும்பிய அவரிடம், ஒருவர் திடீரென பூக்கொடுத்து தனது காதலை தெரிவித்தார். வானதி சீனிவாசன் அதிர்ச்சி அடைந்து நின்றார். பின்னர் அங்கிருந்த பாஜகவினர் சுதாரித்துக்கொண்டு, அந்த நபரை அடித்து உதைத்தனர். பின்னர் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அந்த நபரை கடைவீதி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் மதுரையைச் சேர்ந்த முத்துவேல் என்று தெரிய வந்தது
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வானதி, பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பங்கு அனைவருக்கும் உண்டு எனவும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முதலில் வரவேண்டும் எனவும் கூறினார்.

மாறன் சகோதரர்கள் கோரிக்கை நிராகரிப்பு - டெல்லி சிபிஐ கோர்ட் உத்தரவு

கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தயாநிதிமாறன் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டியதாகவும், ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியதாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு வலுக்கட்டாயமாக விற்கச் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டைரக் நிறுவனத்திற்கு 742.58 கோடி ரூபாய் சட்டவிரோதமாக அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த பெருமளவு தொகை மொரிசீயசைச் சேர்ந்த கலாநிதி மாறனின் கட்டுப்பாட்டில் செயல்படும் சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டைரக்ட் டிவி மற்றும் சவுத் ஏரியா எப்எம் நிறுவனங்கள் மூலம் பரிமாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கப் பிரிவு விசாரித்து வருகின்றன.

கரூரில் கைப்பற்றப்பட்ட ரூ. 5 கோடி நத்தம் விஸ்வநாதன் குடும்பத்திற்கு சொந்தமானது என அதிகாரிகள் தகவல்?

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் கரூர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அன்புநாதன் வீடு மற்றும் குடோனில் சோதனை நடத்தினர். சோதனையில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணம் 5 கோடி, அப்போதைய அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள வேம்பார்பட்டியில் கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வசாதன் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய கோரி வழக்கு

புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரீகன் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடந்த பேரணியில் விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததிருந்தது திட்டமிட்டு நடந்திருக்கலாம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. பேரணியில் ஏராளமானோர் இருக்கும் போது உயிரிழப்பை தடுக்கவில்லை என மனுவில் ரீகன் தெரிவித்துள்ளார்.தினகரன்.com

11 அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் ..

விகடன்.காம் :ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் குளிர்சாதன வசதி
கொண்ட ‘அம்மா திருமண மண்டபங்கள்’ 11 இடங்களில் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து தரப்பு மக்களும் குடியிருப்பதற்கு சொந்த இல்லம் பெற்றிட வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் அரசு பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில், தமிழ்நாடு குடிசைப் பகுதி வாரியம் மூலம் 59,023 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 10,537 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து தரப்பு மக்களின் நலன் பேணும் வகையில், பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

வடிவேலு தமன்னா விஷால் சூரி ... கலக்க வரும் கத்தி சண்டை

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா முதன்முறையாக இணைந்து
நடித்துள்ளப் படம் 'கத்திச் சண்டை' . இதில் வடிவேலு, சூரி என மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளது. வருகின்ற தீபாவளி யன்று திரைக்கு வர தயாராக உள்ள இந்த படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'துப்பறிவாளன்' படத்தில் விஷால் நடிக்க உள்ளார். விஷாலே தயாரித்து நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங், முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கவிருக்கிறார்கள் .

அருணாச்சல் ஆட்சி மீண்டும் கவிழ்ந்தது 45 எம் எல் ஏக்களில் 43 எம் எல் ஏக்கள் கட்சி மாறினர்!


இட்டாநகர்: அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்து வரும் அருணாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு உட்பட, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், 43 பேர் கட்சியில் இருந்து விலகினர்;
அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தனர். இதனால், அம்மாநிலத்தில், காங்., மீண்டும் ஒருமுறை ஆட்சியை, 'அம்போ'வென பறிகொடுத்து, படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அருணாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் நபாம் துகி தலைமையில், காங்., ஆட்சி நடந்து வந்தது. சட்டசபையில் மொத்தமுள்ள, 60 பேரில், காங்கிரசுக்கு, 45 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். முதல்வர் நபாம் துகிக்கு எதிராக, ஜனவரி மாதம், 30 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி அமலானது. காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., ஆதரவுடன், கலிகோ புல் தலைமையில், புதிய அரசை அமைத்தனர்.

ஜேஎன்யு தேர்தலில் இடது ஒற்றுமை முன்னணி அனைத்து பொறுப்புக்களையும் கைப்பற்றியது

theekkathir.in 'தில்லி ஜவஹர்லால்நேரு பல் கலைக்கழக மாணவர் பேரவை
தேர்தலில் எஸ்எப்ஐ – ஏஐஎஸ்ஏ இடது ஒற்றுமை முன்னணி அனைத்து பொறுப்புகளையும் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பி னர் மகேஷ்கிரி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் தேச விரோதி களின் கூடாரம் என குற்றம்சாட்டி யதோடு தேசவிரோதிகளை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்தார். நரேந்திரமோடி தலைமையி லான அரசு, இதைப் பயன்படுத்தி கொண்டு அடுக்கடுக்கான தாக்கு தலை தொடுத்தது. இது தேசிய அளவிலான பிரச்சனையாக  முன்னெ டுக்கப்பட்டது. இடதுசாரிகள் அனைவருமே தேசவிரோதிகள் என முத்திரை குத்துவதற்கான முயற்சியில் பாஜக – ஆர்எஸ்எஸ் கூட்டணி இறங்கியது.

முதல்வரைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்!


மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  
தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளை மேம்படுத்தி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கும் நான்குவழிச் சாலையாக மாற்றுவதற்கும் எங்களுடைய விருப்பத்தை முதல்வரிடம்
தெரிவித்திருக்கிறோம். அதற்கான முழு ஆதரவையும் தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார்" என்று கூறினார். காவிரிப் பிரச்சனை தொடர்பாக, தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக முதல்வரிடம் பேசினீர்களா என்ற கேள்விக்கு, காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறார், மிகப் பொறுமையாக கையாண்டிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
அதாகப்பட்டது கூட்டு  களவாணிகள் இருவரும்( Bjp+Admk) கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சி , சொத்துகுவிப்பு வழக்கில் இஷ்டப்பட்ட  தீர்ப்பு கர்நாடக தேர்தல் செலவுக்கு போதியளவு பணம் மற்றும் இதர குண்டர் தொண்டர் படை ஆதரவு போன்ற நாட்டுக்கு ரொம்ப முக்கியமான  விடயங்களில்  டீல்கள் ஒகே என்று  குண்டர்களுக்கு  காட்டுவதற்கு உள்ளூரு குலதெய்வம் இதய தெய்வத்திடம் சரண்டர் என்ற ஒரு காட்சி காட்டி இருக்காங்க

சுவாதி கொலை... பைக்கில் தப்பி சென்ற இருவர் மீது விசாரணை....

விகடன்.காம் மென்பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கின் சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. ' படுகொலையான அன்று பைக்கில் வந்த இரண்டு பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடக்கத்தில் இருந்தே, ' ராம்குமார் குற்றவாளியில்லை; உண்மைக் குற்றவாளிகளை போலீஸ் தப்பவிட்டுவிட்டது என்பன போன்ற தகவல்கள் வெளியாகின. சிறையில் இருக்கும் ராம்குமாரிடம் போலீஸ் விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. அரசுத் தரப்பில் வழக்கை விசாரித்து வந்த கொளஞ்சிநாதன் என்பவர் மாற்றப்பட்டு, தற்போது கோபிநாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கின் விசாரணைக்காக, கூடுதல் ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர் போலீஸார். இந்நிலையில், ' ராம்குமாருக்காக ஆஜராவதில் இருந்து வழக்கறிஞர் ராமராஜ் விலகிவிட்டார்' என்பன போன்ற செய்திகள், ஃபேஸ்புக் பதிவர் தமிழச்சி மூலம் பரப்பப்பட்டது. 

யார் அண்ணா? “கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு”

14332925_10209099562458452_2319313134999675690_nஆண்டது இரண்டே ஆண்டு என்றாலும் அவர் உருவாக்கிய அரசியல்
அமைப்பின் தாக்கம் இன்றும் தமிழகத்தின் சமூக – பொருளாதார வெளியில் காண்கிறோம் . மத்திய அரசாங்கத்தின் முதலீட்டை, காமராஜர் தான் தமிழகத்திற்கு கொண்டு வந்தார் என்று சொன்னாலும் திராவிட கட்சிகளின் தொடர் Policy Interventions யினாலும் கொள்கை முடிவுகளில் இருந்த Continuity னாலும் தான் பொருளாதாரத்தில் பின் இருந்த தமிழகம் இன்று இந்தியாவில் எத்துறையிலும் முதல் மூன்று இடத்தில இருக்கிறது (இல்லை என்று ஒற்றை வார்த்தையில் சொல்லுபவர்கள் தகுந்த ஆதாரத்துடன் வந்தால் நலம் ).
அதனை விட முக்கியமானது , உண்மையான தலைவனுக்கு தேவையென அவர் உணர்திருந்த குணம் , தன் மக்களின் சமூக – பொருளாதார நிலை குறித்த வரலாற்றுப்பூர்வ புரிதலும் , உலக அரசியல் பற்றிய அறிதலும். அந்த புரிதல் இருந்ததால் தான் , இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் இருந்த இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவினை திராவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கையில் முதலீடு செய்யாமல், காலத்தின் தேவைக்கேற்ப திராவிட நாடு கோரிக்கையை சற்று தள்ளிவைத்தார் . இல்லையெனில், காஷ்மீரில், நாகாலாந்தில், மணிப்பூரில் தற்பொழுது என்ன நடக்கிறதோ அதுவே தமிழகத்திலும் நடந்திருக்கும் என்பதே நிதர்சனம்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஸ்டாலின் : இதுவே கடைசி தீக்குளிப்பாக இருக்கட்டும்

காவிரி நீர் பிரச்சினைக்காக உயிர் தியாகம் செய்துள்ள இளைஞர் விக்னேஷின்
எண்ணத்திற்கும் தியாகத்திற்கும் வீரவணக்கம் செலுத்தும் அதேநேரத்தில் இதுவே கடைசித் தீக்குளிப்பாக இருக்கட்டும்” என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ் இளைஞர் சமுதாயத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்இது குறித்து அவர்,  ‘’காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கவும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளைக் கண்டித்தும் ஒட்டுமொத்த தமிழகமும் திரண்டு நடத்திய கடையடைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் காவிரி உரிமைக்காகத் தீக்குளித்து, தன்னைத்தானே மாய்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

திமுக: விதை விருட்சமான வரலாறு! -பகுதி-2

மின்னம்பலம்.காம் : இப்பிரச்னையில் எம்.ஜி.ஆர். அரசு இரட்டை வேடம் பூண்டது. ஒருபுறம் சட்டமன்றத்தில் அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவை திருத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றியது. மறுபுறம் தனது அதிகாரத்திற்கு “வானமே எல்லை’’ என்று மார்தட்டிக் கொண்ட சபாநாயகர் துணையுடன், இந்திய அரசியல் சட்டத்தை அவமதித்ததாக கூறி 10 தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தது. சட்டமன்ற விதிகள் 312-ஐ ஏதேச்சதிகாரமாக பயன்படுத்தி பேராசிரியர் அன்பழகன் உட்பட 10 உறுப்பினர்கள் பதவி பறிக்கப்பட்டது. அண்ணாவின் தம்பி என்று கூறிக் கொண்டே அன்னை தமிழுக்கு துரோகம் செய்த எம்.ஜி.ஆர். அரசுக்கு எதிராக தி.மு.கழகம் சிங்கம் போல் நிமிர்ந்து சீறி சிலிர்த்து எழுந்தது. 20,000-க்கு மேற்பட்ட கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர் அரசின் இரட்டை வேடம் கலைந்தது. அடுத்து வந்த 1989 பொதுத் தேர்தலில் மீண்டும் தி.மு.கழகம் அரியணை ஏறியது.

சசிகலா புஷ்பா மேல் முறையீடு!

அதிமுக உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற
உறுப்ப்பினரான சசிகலா புஷ்பாவின் வீடு தூத்துக்குடியில் உள்ளது .சில நாட்களுக்கு முன் மதுரை போலீசார் அவர் மீதும் அவரின் கணவர்,தாயார்,மகன் பேரிலும் வீட்டிலல் வேலை பார்த்த பெண்களை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியதாக கூறி வழக்கு பதிவு செய்தனர்.
அதனையொட்டி சசிகலா புஷ்பா தரப்பில் முன்ஜாமின் கோரி மதுரை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த கிளை உயர்நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.இது குறித்து சசிகலா புஷ்பாவை தொடர்பு கொண்ட பொழுது அவர் கூறியதாவது ;

கர்நாடக கலவரம்: கொள்ளைக் கும்பல் பின்னணி அம்பலம்!

மின்னம்பலம்.காம் :கடந்த திங்கட்கிழமையன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்த சிலமணி நேரங்களில் பெங்களூரு, மாண்டியா, மைசூர் ஆகிய நகரங்கள் பற்றியெரிந்தன. மாலை ஐந்து மணியளவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு கலவரக்காரர்கள் இறந்தபோதிலும் பின்பு, உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. ஆனால் பேருந்துகள், லாரிகள் தீவைக்கப்பட்டன, வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன, வழியில் மறிக்கப்பட்ட பல மக்களிடமிருந்து பணமும் நகைகளும் கடிகாரங்களும்கூட கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. கலவரம் நடந்து சில நாட்கள் ஆகிவிட்டநிலையில், காவிரி தொடர்பாக எழுந்த உஷ்ணத்தை சட்டவிரோதக் குழுக்களும் கொள்ளையர்களும் சமூக விரோதிகளும் பயன்படுத்தியிருக்கும் உண்மை வெளியாகியிருக்கிறது. கலவரம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தபோது கொள்ளையை ஒன்றே நோக்கமாகக் கொண்ட கும்பல்கள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்து, அவர்களை வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது கர்நாடக காவல்துறை.

bogusvotescm ஜெயா 91 ஆயிரம் கட்சி மாறிகளை இருகரம் நீட்டி வரவேற்கிறார்

ஒரே தேசத்துக்குள் இருக்கிற இரண்டு
மாநிலங்கள்
இந்தியா பாகிஸ்தான் போல தகிக்கிறது. காவிரி தண்ணீர் கேட்டதற்காக கர்நாடகாவில் தமிழர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இங்கேயோ அதே நாளில் பன்னீர் தெளித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழக வாகனங்களும் தமிழர் நிறுவனங்களும் கடைகளும் அடித்து நொறுக்கப்படுகின்றன. ‘கர்நாடக்கே ஜெயம்... காவிரி... கர்நாடக்கே சொத்து’ என சொல்லி லாரி டிரைவர் களையும் கல்லூரி மாணவர் களையும் அடித்து சொல்ல வைத்தது எல்லாம் அநியாயத்தின் உச்சம். 144 தடை, ஊரடங்கு உத்தரவு, கொளுந்துவிட்டு எரியும் வன்முறை என ஜம்மு காஷ்மீரை கண் முன் நிறுத்துகின்றன. அங்கே கொலையாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தமிழகத்தில் ஆளும் கட்சி கொண்டாட்டம் நடத்தியது விமர்சனங்களை விதைத்திருக்கிறது.

மிஸ்டர் கழுகு : காவிரி... ஜெயலலிதா... கள்ள மெளனம்! விகடன்.காம்

கழுகார் அனுப்பிய தலைப்பு வாசகங்கள் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன. லே அவுட்டுக்குத் தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். 2011, 2015-ம் ஆண்டுகளுக்கான டைரிகளைக் கையோடு கொண்டுவந்த கழுகார் அதனைப்  புரட்டிவிட்டு பேச ஆரம்பித்தார். ‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் மேக்கேதாட்டூவில் கர்நாடகம் அணை கட்ட களமிறங்கியது. இதை எதிர்த்து அப்போது விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட ‘பந்த்’தில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றாகக் கைகோர்த்தன. பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் அந்த பந்தில் பங்கேற்கவில்லை. ‘பந்த்’தில் பங்கெடுக்காமல் போனால் தங்கள் மீது ‘கறை’ படிந்துவிடும் என அஞ்சியோ ‘பந்த்’துக்கு முந்தைய தினம் சட்டசபையில் தனித் தீர்மானம் ஒன்றையும் ஏகமனதாக நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசு. தீர்மானம் போட்டதிலும் ‘சாஃப்ட் அப்ரோச்’தான். தீர்மானத்தில் கர்நாடகாவைக் கண்டிக்கும் கடுமையான வாசகங்கள் இல்லை. பந்த் நடந்தபோது சட்டசபை கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்தது. அப்போது சட்டசபையில் பேசிய துரைமுருகன், ‘‘அரசே பந்த் நடத்தினால்தான் அது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது. ஆனால், அ.தி.மு.க. பங்கேற்கலாம். பந்த் அன்று நாம் மட்டும் சட்டசபையில் உட்கார்ந்திருந்தால் அது நியாயமாக இருக்காது.

காவிரி நீரை வீணாக்கும் பெங்களூரு நகரம்

பெங்களூரு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடச் சொன்னால் அய்யோ போச்சே போச்சே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது கர்நாடகம். ஆனால் பெங்களூருக்கு வழங்கப்படும் காவிரி குடிநீர் பாதி தண்ணீரை அது வீணாக்கி வரும் அவலச் செய்தியைப் பாருங்கள்.
கர்நாடகத்தில் காவிரி நீரைப் பயன்படுத்துவதில் பெங்களூரின் பங்கு 50 சதவீதமாகும். பெங்களூர் மக்கள் காவிரி நீரைத்தான் குடித்து வருகின்றனர். அதில் 49 சதவீத அளவு தண்ணீரை கர்நாடகம் வீணடித்து வருகிறதாம். இதை எந்தக் கணக்கிலும் கர்நாடக அரசு சேர்ப்பதில்லை. அதாவது காந்திக் கணக்கு என்று சொல்வார்களே அது போல.
ஒரு சொட்டைக் கூட தமிழகத்துக்காக கொடுக்க மாட்டோம் என்று யோக்கிய சிகாமணிகள் மாதிரி பேசும் கர்நாடக அரசுத் தரப்பு உண்மையில் பெங்களூருக்கு குடிநீருக்காக அனுப்பும் நீரில் பாதியை வீணாக்கி வருகிறார்களாம். இந்தத் தகவலை இந்தியாஸ்பெண்ட் ஆய்வுச் செய்தி அம்பலப்படுத்தியுள்ளது.
மிகப் பெரிய அளவில் இப்படி குடிநீரை வீணடிக்கும் நகரம் கொல்கத்தாதான். அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் பெங்களூரும் காவிரி நீரை வீணாக்கி வருகிறதாம்.

இயக்குனர் பிரியதர்ஷன் நடிகை லிசி விவாகம் ரத்து ! பிரியதர்சன் காட்டுமிராண்டி தனமாக.. லிசி குற்றச்சாட்டு!

இன்று பிரியதர்ஷன் உடனான எனது விவாகம் அதிகார்வபூர்வமாக ரத்து
செய்யப்பட்டு விட்டது. நாங்கள் இருவரும் அதற்க்கான அதிகார்வபூர்வ படிவங்களில் கையெழுத்திட்டுவிட்டோம். விவாகரத்திற்க்காக விண்ணப்பித்து விட்டு நான் காத்திருந்த காலம் எனக்கு மிகவும் சோதனையாக அமைந்தது. சமீப காலங்களில் ஹிரித்திக் ரோஷன் - சுசேன், திலீப் - மஞ்சு, விஜய் - அமலா பால் ஆகியோ விவகாரத்திற்க்கு விண்ணப்பித்ததாக வந்த தகவல்கள் அறிந்து நான் அவர்களுக்காக பெரிதும் வருந்தியிருக்கிறேன். அது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கும் மன வருத்ததையே அளித்திருக்கும். இருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதையளித்தே பிரிந்தனர். ஆனால் எனது நிலையோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

பலுசிஸ்தான் தலைவருக்கு இந்திய குடியுரிமை வழங்க தீர்மானம்! புதிய யுத்த முனை திறக்கப்படுகிறது?


புதுடில்லி: பலுசிஸ்தான் போராட்ட குழுவின் தலைவருக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.மேலும், இது தொடர்பாக பலுசிஸ்தான் தலைவர் பிரஹூம்தாக் புக்டி, இந்திய அதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் புக்டி, ஜெனிவாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அடைக்கலம் கோருவார் எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக போராட்டக்குழு நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. புக்டிக்கும், அவரது குழுவினருக்கும் குடியுரிமை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தலாய் லாமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் அளித்து, சீனாவுக்கு எதிராக உலகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்யும் வகையில் பாஸ்போர்ட் வழங்கியது போல், புக்டிக்கும் இந்தியா அடைக்கலம் அளிக்கும் எனக்கூறப்படுகிறது. இதன் மூலம் புக்டி, உலகில் உள்ள பல நாடுகளுக்கு சென்று பலுசிஸ்தான் பிரச்னை குறித்து எடுத்துரைக்க எளிதாக அமையும் எனக்கூறப்படுகிறது.

மாரியப்பன்தான் கதாநாயகன் ! காலை அகற்ற சொன்ன டாக்டர்கள் .. எதிர்த்த நின்ற தாயின் இமாலய வெற்றி!

vegetableரியோ பாரா-ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து, தமிழக அரசு  2 கோடியும், மத்திய அரசு 75 லட்சமும் பரிசாக அறிவித்தள்ளன. அது மட்டுமில்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் நன்கொடை அறிவித்து வருகின்றன.
மஹிந்திரா நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பான THAR SUV காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அதே போல்,  ஹிந்தி திரையுலகின் மிக பெரும் தயாரிப்பு நிறுவனமான YRF ஸ்டூடியோவும் பத்து லட்சம் ரூபாய் அளிக்கவுள்ளது.
மாரியப்பனுக்கு பரிசுகள் குவிந்து கொண்டிருக்கும், தந்தை தவிக்கவிட்டு போன குடும்பத்தை தனியொரு மனுஷியாக உணவிட்டுக்கொண்டிருக்கும், தாயார் சரோஜாவின் பக்கமும் ஊடக வெளிச்சம் பரவலாக விழத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக சரோஜாவை, ஏராளமானோர் நெகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்பு ... ஸ்டாலின், கனிமொழி ,திருமா ,வைகோ கைது (படங்கள்)

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது.
சென்னையில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. தனியார் பள்ளிகள் ஒருசில இயங்குகின்றன. கடைகள் பரவலாக அடைக்கப்பட்டுள்ளது. தனியார் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், கொருக்குப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் ரயில் மறியல் நடைபெற்றதால் மின்சார ரயில்கள் தாமதமாகின.

திமுக: விதை விருட்சமான வரலாறு! - பகுதி 1


மின்னம்பலம்.காம் : திமுக உருவான தினம் இன்று. திமுக-வைத் தவிர்த்து விட்டு தமிழக வரலாற்றை பேசவோ, எழுதவோ முடியாது. தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்தில் இருந்து அறிஞர் அண்ணாவும் வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டம்பர் 17, 1949இல் கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என முடிவெடுத்தனர். அன்று தொடங்கி இன்று வரை தமிழக மக்களின் வலுவான மக்கள் இயக்கமாக நிற்கிற திமுக-வின் வரலாறு என்ன?
திராவிட இன மக்களின் உரிமைகளை, தன்மான உணர்வுகளை, தனித்தன்மையை, தன்னிகரற்ற சிறப்பினைப் பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், நாடு வாழ, நலிவுகள் தீரப் போராடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) 1949 செப்டம்பர் 17இல் அறிஞர் அண்ணா என அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் சி.என்.அண்ணாதுரை தொடங்கினார். தி.மு.கழகத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்தின், மறுமலர்ச்சி இயக்கத்தின் வரலாறாகும்.

கர்நாடகாவில் விரைவில் பாஜக ஆட்சி....? கூட்டி கழிச்சி பாருங்க... கணக்கு சரியா வரும்....

மிக நுணுக்கமாக, ஆழமாக மத்திய அரசின் உளவுத்துறை கர்நாடகத்தில்
செயல்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சித்தராமய்யாவின் ஆட்சியை குலைக்கவும், அடுத்து வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு மட்டுமல்ல...
நீண்ட கால நோக்கில், தமிழக கர்நாடக மக்களின் பகை நெருப்பை ஊதி தக்க வைக்கவும், பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் பகைமையை கூர்மைப்படுத்துவதன் மூலம் இந்திய தேசியத்திற்கெதிரான குரலை ஒடுக்கவும், மத்திய அரசின் இந்துத்துவ நடவடிக்கைகளுக்கு எதிராக களமிறங்கும் தமிழகத்திற்கு நெருக்கடி கொடுக்கவும் இத்தகைய பணிகளில் மத்திய உளவுத்துறை ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.< கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கலைக்கவும், விரைவில் நடைபெறப்போகும் தேர்தலில் பிஜேபி ஆட்சியை பிடிக்கவும் பிஜேபி கும்பல் அங்கே கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை விரைவில் எதிர்நோக்கியுள்ள சொத்துகுவிப்பு வழக்கின் பிராதான மனுதாரரான இப்போதைய காங்கிரஸ் கர்நாடக அரசை பதவியிலிருந்து அகற்றுவது ஜெயாவுக்கு மிகவும் தேவையான ஒன்று (need of the hour). அங்கே பிஜேபியின் ஆட்சி அல்லது கவர்னர் ஆட்சி அமைத்தால், ஆச்சாரியாவுக்கு பதிலாக ஜெயாவுக்கு தோதான அரசு வக்கீலை நியமித்து சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சுலபமாக வெளியே வந்துவிடலாம்.
Special Correspondent FB Wing's

காவிகளின் நேரடி வழிகாட்டலில் அரங்கேறிய காவிரி கலவரங்கள் .. பெங்களூரு சாட்சிகள்

வெள்ளியன்றே பந்த் அறிவிக்கப்பட்டு விட்டது. நண்பர் ஒருவர் வீடு
திரும்புகையில் பந்த்தின்போது லாரி ஓட்டிக் கொண்டிருந்த லாரியோட்டியை சாலையில் இறக்கி விட்டு நண்பரின் கண் முன்னால் அடித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த லாரி டிரைவர் ஒரு கன்னடிகர்..
வெள்ளி முழுக்க தமிழர் கன்னடர் என்ற பாகுபாடு இல்லாமல் போட்டு அடித்திருக்கிறார்கள்..
நண்பர் பார்த்தவரை அடித்த கும்பல் வழக்கமாக அவர் சாலையில் பார்ப்பவர்கள் அல்லர். இதற்கென்று தனியாக தயார் செய்யப் பட்டு அழைத்து வரப் பட்டவர்கள்.. ஒவ்வொரு கும்பலை மேற்பார்வை பார்க்கவும் காவி தலைப்பாகையோடு ஒருவர் அங்கே இருந்திருக்கிறார்..

ஜெயலலிதாவுக்கு தெரியாமல்தான் பன்னீர் நத்தம் வகையறாக்கள் கொள்ளை அடித்தார்களா?

அவசர அவசரமாக அதிகாலை வேளையில் 40 வீடுகளின் கதவைத் தட்டியது வருமானவரித்துறையின் ரெய்டு படை. செப்டம்பர் 12-ந்தேதி நடந்த அதிரடியில் சென்னை மாநகர மேயர் சைதை துரை சாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கீர்த்திலால் என்கிற பிரபல வைர வியாபாரி மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகிய நான்கு பேரின் நாற்பது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடங்கும்.செப்டம்பர் 12, 13 ஆகிய இரண்டு தினங்களில் நடந்த ரெய்டுகளில் சுமார் 150 கோடி ரூபாய் பணம் மற்றும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ""இந்த ரெய்டு இத்துடன் நிற்காது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தற்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வீடுகளில் தொடரும் நாங்கள் மேலிடத்தின் அனுமதி வேண்டி காத்திருக்கிறோம். அவர்கள் அனுமதி கிடைத்தால் வைத்திலிங்கம், ஓ.பன்னீர் வீடுகளுக்கு பாய்வோம்' என்கிறார்கள் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள்.

நான் மாரியப்பன் தங்கவேலு அல்ல.. மாரியப்பன் மட்டுமே!' - மனம் வெதும்பும் தங்கமகன்

விகடன்.காம் :  இந்த உலகத்திலேயே இப்போதைக்கு  நான்தான் சந்தோஷமான மனிதன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ரியோவில் ஒவ்வொரு இரவிலும் நான் தூக்கம் வராமல் தவிக்கிறேன். இங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயத்துடன்தான் இருக்கிறேன். எனது தாயாருக்கு போன் செய்யும் போதெல்லாம் அவர் அழுகிறார்.  மிகுந்த பயத்துடன் எனது தாயார் இருக்கிறார். எனது வெற்றிக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவர்கள் இப்போது என்னைத் தேடி வருகின்றனர் '' என்கிறார் பாராலிம்பிக் நிறைவுவிழா அணி வகுப்பில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிச் செல்லப் போகும் மாரியப்பன்.

எம்.எச்.370 விமானத்தின் உதிரிப்பாகம் தன்சானியாவில் ஒதுங்கியது .. அவுஸ்திரேலியா உறுதி!

ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள படம்.| ஏ.எஃப்.பி.
ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள படம்.| ஏ.எஃப்.பி. தான்சானியா தீவு ஒன்றில் கரையொதுங்கிய விமான இறக்கையின் பாகம் மாயமான மலேசிய எம்.எச்.370 விமானத்தினுடையது என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் வியாழனன்று தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூன் மாதத்தில் தான்சானியாவின் பெம்பா தீவுகளில் கடற்கரையில் ஒதுங்கிய இந்த உதிரிபாகத்தை அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள் அடையாளம் கண்டனர். இதனை ஆராய்ந்த ஆஸ்திரேலியா போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் இந்த பாகம் எம்.எச்.370 விமானத்தினுடையதே என்று உறுதி தெரிவித்துள்ளனர். மார்ச் 8, 2014, உலகை உலுக்கிய அன்றைய தினத்திலிருந்து இந்தியப் பெருங்கடலின் பல்வேறு கடற்கரைகளில் சில பாகங்கள் ஒதுங்கியது மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று சந்தேக அளவில் இருந்து வருகிறது.

வியாழன், 15 செப்டம்பர், 2016

தீக்குளித்த விக்னேஷ் மரணம் .. நாம் தமிழர் பேரணியில் ..

உடலில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துக் கொண்ட  விக்னேஷ் , சக தொண்டர்களும், காவல்துறையினரும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் மேலவீதியை சேர்ந்தவர் பாண்டியன் (விவசாயி).  அவரது மனைவி கண்ணகி, வீட்டில் தையல் மிஷின் வைத்து தைத்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (26) இவர் மன்னார்குடி அர்பன் வங்கி பள்ளியில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, லார்டு செவன் ஹில்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். பின்னர் நாமக்கல் சுரபி பாலிடெக்னில் டி.எம்.இ. படித்துவிட்டு சென்னையில் டிவிஎஸ் கம்பெனியில் 1வருடம் பணிபுரிந்து, பின்னர் டி.ஐ. சைக்கிள் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து 1.5 வருட காலமாக தன்னை இணைத்து கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். ;இன்று(15.9.2016) நாம் கட்சி தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடந்த, கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து நடந்த கண்டன பேரணியில் கலந்துக்கொண்டு தனக்கு தானே தீவைத்துக்கொண்டதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்து அருகில் உள்ளவர்கள் அவர்மீது பற்றி எரிந்த தீயை அணைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஓடும் ரயில் தள்ளி விழுத்தி பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளி கோவிந்தசாமியின் தூக்கு ரத்து.. உச்சநீதிமன்றத்தின் "நியாயம்"



டெல்லி: கேரளாவில் இளம் பெண் செளம்யாவை ரயிலிலிருந்து கீழே தள்ளி
விட்டு அவர் படுகாயமடைந்த நிலையிலும் கூட கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு விதிக்கப்ட்ட தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து விட்டது. அதற்குப் பதில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக நீதிமன்றம் மாற்றியுள்ளது. படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த செளம்யா பாலியல் பலாத்காரம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தில் வைத்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டார் கோவிந்தசாமி. SC cancells hanging to Govnidasamy 23 வயதான செளம்யா எர்ணாகுளத்தில் உள்ள ஒரு வர்த்தக மையத்தில் பணியாற்றி வந்தார்.

காவிகளின் கையில் சிக்கியிருக்கும் அரசியல் ஆயுதம் ‘காவிரி’! ஆதிக்க சாதி ஒக்கலிகர் (கௌடர்கள்), லிங்காயத்துகள்..

thetimestamil.com :கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் வாழ்வியல் பண்புகளில்
பெரிய அளவில் வேறுபாடுகள் ஏதுமில்லை, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் தொல் குடிகளாக வசிக்கும் கன்னட உழைக்கும் மக்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் பெரிய அளவில் அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்கள், அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி குரல் கொடுக்கவும் இயலாமல் இருப்பவர்கள்.
அங்கிருக்கும் ஆதிக்க சாதிகளான ஒக்கலிகர் (கௌடர்கள்) மற்றும் லிங்காயத்துகள் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை தங்கள் பிறவித் தகுதிகளால் பெற்றுக் கொண்டு ஆளுமை செய்பவர்கள். மற்றபடி தமிழக ஒடுக்கப்பட்டவனுக்கும், கன்னட ஒடுக்கப்பட்டவனுக்கும் எந்த ஒரு வேறுபாடுகளும் இல்லை. கன்னட மக்கள் தொகையில் ஏறத்தாழ 30 விழுக்காடு இருக்கும் இவர்கள் வெறுப்பு அரசியல் செய்வதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை.

91,308 சுயநலவாதிகள் bogusvotescm ஜெயலலிதாவிடம் சரண்டர்... காவேரியா? கர்நாடகமா? அப்படீன்னா? கொர்ர் கொர்ர் கொர்ர்

பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 91,308 பேர் முதல்வரும், அதிமுக பொதுச்
செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர். மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுக-வில் ஆயிரக்கணக்கானோர் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. திருவிழா கூட்டம் போல் ஒய்.எம்.சி.ஏ. மைதானமே காட்சியளித்தது. அதிமுக-வில் புதிதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
“கடந்த காலங்களில் திமுக, மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளில் பணியாற்றி வந்த 91,308 பேர் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

சித்தராமய்யாவை சந்திக்க மறுத்த மோடி!

உச்சநீதிமன்றம் அளித்த அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளால் கர்நாடக
மாநிலத்தில் வெடித்த கட்டுக்கடங்காத கலவரம் கர்நாடக மாநிலத்தை நிலைகுலைய வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமய்யாவுக்கு இது மிகப்பெரிய அதிருப்தியை உருவாகிக் கொடுக்க, அவரோ அமைச்சரவைக் கூட்டத்தையும், கட்சியின் மூத்தத் தலைவர்களையும் கூட்டி ஆலோசித்தார். அதில், சித்தராமய்யாவை ராஜினாமா செய்யுமாறு சிலர் கோர, இந்த நெருக்கடியான நேரத்தில் ராஜினாமா கோரிக்கை வேண்டாம் என கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதால் அது கைவிடப்பட்டது.

காவேரி .. பிரதமரின் கள்ள மௌனத்தை கண்டித்து திருமாவளவன் ரயில் மறியல்!


காவிரி பிரச்னை தொடர்பாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களில் மத்திய
அரசு தலையிடாமல் ஒதுங்கி இருப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். சென்னையில் தலைமை தாங்கி இந்த போராட்டங்களை நடத்தவுள்ள திருமாவளவன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் , “கர்நாடகாவில் உள்ள சில இனவெறிக் குழுக்களால் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக மிகப்பெரிய வன்முறை தூண்டிவிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு காங்கிரஸ் உயர்நீதிமன்றில் மனு!


மின்னம்பலம்.com : உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தலுக்கு முன்பாகவே உரிய முடிவை எடுக்குமாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலரான குமார் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த உள்ளாட்சி தேர்தலின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ் நாட்டில் 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 32 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 2,618 ஊராட்சிகள் உள்ளன. மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த உள்ளாட்சி தேர்தலில் மாவட்டக் கலெக்டர்கள் அந்தந்த மாவட்டத்தின் தேர்தல் அதிகாரிகளாக செயல்படுவார்கள்.

18,000 தனியார் பள்ளிகள் நாளை மூடல்!


கர்நாடக மாநிலத்தில் நடந்த வன்முறைகளைக் கண்டித்து நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்பு நடைபெறவுள்ளது. வணிகர் சங்க தலைவர்களுள் ஒருவரான விக்கிரமராஜாவின் இந்த முழு அடைப்பு போராட்டத்தை திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரித்திருக்கின்றன. முக்கியமான தொழிற்சங்கங்களும், அரசு ஊழியர் சங்கங்களும் ஆதரித்திருக்கும் இந்த போராட்டத்தால் நாளை தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் என பல போராட்டங்கள் நடக்க இருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகள் ஆதரித்திருக்கும் நிலையில் நாளை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் வெளியேறியதால் பரிதவிக்கும் கர்நாடகம்

வெறிச்சோடி கிடக்கும் பெங்களூரு நகரத்தின் முக்கிய வர்த்தக பகுதிகளில் ஒன்று | கோப்புப் படம்: கே.கோபிநாதன்.
வெறிச்சோடி கிடக்கும் பெங்களூரு நகரத்தின் முக்கிய வர்த்தக பகுதிகளில் ஒன்று | கோப்புப் படம்: கே.கோபிநாதன்.
பெங்களூருவில் வெடித்த வன்முறை காரணமாக அங்கு வசித்து வந்த ஏராளமான தமிழர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.
மேலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அச்சம் காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் கட்டுமானம் உட்பட பல்வேறு தொழில்களுக்கு ஆள் கிடைக்காமல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.