போலீசாரும் அப்படிப்பட்ட நபர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கு என்ற வழக்கை பதிந்து விடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இப்போது திமுக அரசு புதியதொரு நடைமுறையை பின்பற்ற தொடங்கியிருக்கிறது.
சனி, 13 நவம்பர், 2021
அண்டார்டிகா பென்குயின்: 2,000 கிலோமீட்டர் பயணித்து வந்தது ஏன்? கடல் சூழலில் மாற்றம் காரணமா?
உள்ளூர் மக்களால் தற்போது ‘பிங்கு’ என்று அழைக்கப்படும் அடேலி பென்குயின் கடற்கரையில் தொலைந்து போனது போல் காணப்பட்டது.
பிங்கு பென்குயினை முதலில் கண்ட உள்ளூர்வாசியான ஹாரி சிங், அவர் முதலில் அதை ஒரு பொம்மை என்றே கருதியதாகக் கூறினார்.
நியூசிலாந்து நாட்டின் கடற்கரையில் அடேலி ரக பென்குயின்கள் மூன்றாவது முறையாக கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிரைஸ்ட்சர்ச் நகருக்கு தெற்கே உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் ஹாரி சிங் மற்றும் அவரது மனைவி, பேர்ட்லிங்ஸ் ஃப்ளாட் என்கிற கடற்கரையில் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வெளியில் நடந்து சென்றபோது பென்குயினை முதலில் கண்டனர்.
சாட்டை துரைமுருகனை வெளியே விடக்கூடாது.. திமுக அரசு "சீக்ரெட் மூவ்?
Hemavandhana - Oneindia Tamil : சென்னை: சாட்டை துரைமுருகன் ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சை திருப்பனந்தாள் போலீசார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.. இதையடுத்து, துரைமுருகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? மறுக்கப்பட்டு விடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக செயல்பட்டுவந்தவர்...
பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். "சாட்டை" என்ற பெயரில் தனியாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே, சோஷியல் மீடியாவில் முக்கியத் தலைவர்களை ஆபாசமாக சித்திரித்து, விமர்சித்து, பல்வேறு வீடியோக்களை வெளியிடும் போக்கு தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது...
வழக்கு பாயலாம் என்கிற அச்சமா?
அதில் முக்கியமான ஒருவராக இருப்பவர் சாட்டை துரைமுருகன்.. ஒருமுறை மறைந்த கலைஞர் கருணாநிதியையும் மிக மோசமாக சித்திரித்து வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், திமுகவினருக்கு இன்றுவரை அந்த கொதிப்பு இருக்கிறது.
கோவை பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் பாய்ந்தது போக்சோ சட்டம்! பாலியல் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க தவறினார்
கலைஞர் செய்திகள் : பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீதும், பள்ளி முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழனன்று மாலையில் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட மாணவி தமக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து கடிதமும் எழுதி வைத்துள்ளார்.
அந்த மாணவி படித்து வந்த பள்ளியில் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரிடமிருந்து தப்பவே பள்ளியில் இருந்து விலகியதாகவும், இருப்பினும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.
விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்ச் லண்டன் சிறையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி
BBC : பிரிட்டனின் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ்ச் தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனர், ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோருக்கு ஏற்கெனவே இரண்டு மகன்கள் உள்ளனர், அசாஞ்ச் லண்டனின் எக்வடோர் தூதரகத்தில் இருந்தபோது தான் கருத்தரித்ததாக ஸ்டெல்லா கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனது திருமணம் தொடர்பான அசாஞ்சின் விண்ணப்பம் “சிறை நிர்வாகியால் வழக்கமான முறையில் பரிசீலிக்கப்பட்டது” என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது.
நேர்மையான நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியையை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவதா?"
கலைஞர் செய்திகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வழக்கறிஞர்கள் 237 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
வங்க கடலில் புதிய காற்றழுத்தம் - 4 நாட்களுக்கு கனமழை - குமரி, நீலகிரியில் மழை வெளுக்கும்
Jeyalakshmi C - Oneindia Tamil : சென்னை: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இன்று காற்றழுத்தமாக மாறி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
கரூரில் பூஜை செய்வதாகச் சொல்லி 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் 25 ஆண்டு சிறை
கலைஞர் செய்திகள் : கரூரில் பூஜை செய்வதாக கூறி வரவழைக்கப்பட்ட 3 சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவத்தில் 61 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கணபதி (61) . இவர் தனது வீட்டில் அவ்வப்போது பூஜைகள் நடத்துவது வழக்கம். அதே பகுதியில் தந்தையை இழந்த 14 , 15 , 17 வயதுடைய சகோதரிகளான 3 சிறுமிகள் கரூரில் டெக்ஸில் வேலை பார்க்கும் தாயின் பராமரிப்பில் இருந்துள்ளனர். கணபதி நடத்தும் பூஜைகளுக்குச் சிறுமிகள் 3 பேரும் அடிக்கடி சென்று வந்துள்ளனர்.
வெள்ளி, 12 நவம்பர், 2021
ஹார்லிக்ஸ் விளம்பர பாணி .. காகித புலி எம் பி ஏக்களின் அலப்பறைகள்
RS Prabu : இந்த இரண்டு ad film-களுமே நிச்சயமாக MBA படித்த நபர்களை வைத்துதான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கரண்டி, கத்தி, திருப்புளி, வீல் ஸ்பேனர் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சரியாகப் பிடிக்கவில்லை என்றால் efficiency குறையும் என்பதைவிட அது ஒரு serious safety hazard. கழண்டு வந்து நம் மீதே அடிக்கும் அல்லது பக்கத்தில் இருப்பவரைப் பதம் பார்க்கும். சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம்.
வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு உதவியாளராக நின்று பொருட்களை எடுத்துக் கொடுக்கும்போது அதை சரியாகக் கைக்குக் கொடுக்க வேண்டும். திருப்புளியைக் கேட்டால் கைப்பிடியை நம் கையில் பிடித்துக்கொண்டு கம்பியை நீட்டக்கூடாது. நல்ல மாஸ்டராக இருந்தால் அப்படியே கம்பியைப் பிடித்து அந்த கைப்பிடியாலேயே ஒரு சாத்து சாத்துவார்கள்.
ஆப்கானில் 600 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது – தாலிபான்கள் அறிவிப்பு.!
Matale News : ஆப்கானில் 600 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது – தாலிபான்கள் அறிவிப்பு.!
ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று மாதங்களில் 600 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது அங்கு ஆட்சியை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தாலிபான்கள், பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி, பசி, பட்டினி போன்ற அவலங்கள் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தற்போது தாலிபான்கள், கடந்த 3 மாதங்களில் 600 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு நிலவரமும் மேம்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் திகதி காபூல் சர்வதேச விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தி ஐஎஸ் தீவிரவாதிகள் தலிபான்களுக்கு சவால்விடுத்தனர்.
ஷாருக்கானின் மகன் விஐபிகளின் மகள்களை சின்னாபின்னமாக்கினார் ? பின்னணியில் மாஃபியாக்கள்?
tamil.asianetnews.com - Thiraviaraj RM ஆர்யான் கான் சென்ற சொகுசு கப்பலில் என்ன நடந்தது..? ஆர்யான் கான் தனது எட்டு பணக்கார நண்பர்களுடன் ஒரு டிக்கெட்டுக்கு தலா 3 லட்சம் வீதம் கொடுத்து விவிஐபி என்ற கோச்சில் பயணம் செய்திருக்கிறான்.
ஆர்யான் கான் சென்ற சொகுசு கப்பலில் என்ன நடந்தது..? ஆர்யான் கான் தனது எட்டு பணக்கார நண்பர்களுடன் ஒரு டிக்கெட்டுக்கு தலா 3 லட்சம் வீதம் கொடுத்து விவிஐபி என்ற கோச்சில் பயணம் செய்திருக்கிறான். இந்த டிக்கெட் விலை ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்த ஒன்பது பேருக்கும் மூன்று லட்ச ரூபாய் வீதம் 27 லட்சம் கொடுத்து பயணம் செய்திருக்கிறார்கள். Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?
அந்த கோச்சுக்கு முன்பாக சப்ளையர், கஞ்சா எக்ஸ்டஸி என சொல்லப்படும் எம்டிஎம்ஏ., அதற்குமேல் பெண்களை விஐபிகளுக்கு சப்ளை பண்ணும் ஒரு குழு. இதில் எக்ஸ்டஸி என சொல்லப்படும் எம்டிஎம்ஏ போதைப்பொருளை நிப்பூர் சதீஷ் என்ற பெண்ணிடம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
கோவை மாணவி தற்கொலை ! பள்ளியை விட்டு விலகிய பின்பும்.. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் கொடுமை!
இதற்கிடையில், குற்றம்சாட்டப்படும் ஆசிரியர் மிதுன் மீது அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் இன்னும் சிலர் புகார் எழுப்பி இருந்ததாக கூறப்படுகிறது.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி, 11 ம் வகுப்பு வரை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.
ஆனால், அந்த ஸ்கூலில் தனக்கு படிக்க விருப்பமில்லை என்று சொன்னதால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அம்மணியம்மாள் என்ற பள்ளிக்கு மாறினார்.
அந்த பள்ளியில் 12 ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்ட மாணவி, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்...
மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி தொடரும் கொடுமை காப்பாற்றிய அக்கா
BBC Tamil :தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை அதன் அக்காவே காப்பாற்றிய சம்பவம் பலருக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளதோடு, அந்த அக்காவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சோகம் அவ்வப்போது நடக்கிறது. விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் பல மணி நேர பெரு முயற்சிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை.
ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவோர் அதனை உரிய முறையில் மூடாமல் செல்வதற்கு தண்டனை விதிக்கவேண்டும் என்று ஒருபுறம் குரல்கள் எழுகின்றன. மறுபுறம் இப்படி விழும் குழந்தைகளை மீட்பதற்கு என்றே வடிவமைக்கப்பட்டதாக கூறப்படும் கருவிகள் கூட இந்த பிரச்னையில் பெரிய அளவில் பயன்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில்,
அப்படி ஒரு அபாயகரமான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தம் தங்கையை உடனடியாக,
சமயோசிதமாக செயல்பட்டு அந்தக் குழந்தையின் அக்கா மீட்டதாக கூறப்படும்
சம்பவம் பலருக்கும் ஆசுவாசத்தையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர
ஏற்படுத்தியுள்ளது.
மழைநீரை அகற்றும் மோட்டார் நிறுத்தப்பட்டது .. கமல் வருகையால்....
மின்னம்பலம் : கமல் வருகையால் மழைநீரை அகற்றும் மோட்டார் நிறுத்தப்பட்டதா?
கனமழையால் சென்னை மாநகரில் சூழ்ந்துள்ள மழைநீரைச் சென்னை மாநகராட்சி ராட்சத பம்புகள் மூலம் வெளியேற்றி வருகிறது. இந்தசூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று காலை முதல் சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
வேளச்சேரி, தரமணி, தி.நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆய்வு மேற்கொண்டு, பிரட், பிஸ்கட் மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
தரமணி தந்தை பெரியார் நகரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற போது, அங்கு மழைநீரை வெளியேற்றிக்கொண்டிருந்த மோட்டார் நிறுத்தப்பட்டிருந்தது. கமலின் வருகையால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தான், மோட்டாரை இயக்க விடாமல் 3 மணி நேரம் தடுத்து நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
கோயில்களை அரசியல் கூடாரமாக்கிய பாஜக: எதிர்த்தவருக்கு கொலை மிரட்டல்
ஆனால் இந்து மக்களின் மிக முக்கிய வைணவத் திருத்தலமான ஸ்ரீரங்கம் கோவிலை பாஜக தனது கட்சிக் கூடாரமாக ஆக்கி ஒட்டுமொத்த இந்துக்களையும் இழிவுபடுத்திவிட்டதாக அந்த பாஜக மீதே ஆக்ரோஷமாக குற்றம் சாட்டியிருக்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வைணவ செயற்பாட்டாளர் ரங்கராஜ நரசிம்மன்.
ஸ்ரீ ராம பானம் என்ற அமைப்பை நடத்தி வரும் ரங்கராஜ நரசிம்மன், ஸ்ரீரங்கம் கோவிலில் அரசு நிர்வாகத்தின் அத்துமீறல்கள், திருப்பணி என்ற பெயரில் டிவிஎஸ் நிறுவனம் நடத்திய அத்துமீறல்களை எல்லாம் எதிர்த்து களத்திலும் சட்ட ரீதியாகவும் போராட்டம் நடத்தி வரும் வீர வைணவர். இவர் தமிழக பாஜக மீது குற்றம் சாட்டியதற்காக இந்து மத நம்பிக்கக்காக போராடும் அவருக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் திடீர் ஆலோசனை வெள்ளநிவாரணம் வழங்குவது பற்றிய ஆய்வு?
Josephraj V - Samayam Tamil : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், தண்ணீரால் ஏற்பட்ட மக்களின் கண்ணீரை துடைக்க சூப்பர் உத்தரவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திடீரென காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால், தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
முதலில் இடைவிடாமல், லேசானது முதல் மிதமானது வரை பெய்த மழை நேற்று மாலை வேகம் பிடித்தது. இதன் பின்னர் விடிய விடிய மழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மோடி, அமித் ஷா புது அசைன்மென்ட்!
வியாழன், 11 நவம்பர், 2021
இறந்து விட்டார் என்று கருதப்பட்டவரை தோளில் சுமந்து காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்ராஜேஸ்வ குவியும் பாராட்டுக்கள்
மாலைமலர் : இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, கொரோனா காலக்கட்டத்தில் ஓட்டேரி பகுதியில் சாலையோரம் வசித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார் . நேற்று இரவு பெய்த மழையில் நனைந்ததால் இன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டு கல்லறை மீது மயங்கி விழுந்துள்ளார்.இது குறித்து தகவலறிந்து டி.பி.சத்திரம் பெண் போலீஸ்
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார்
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சென்னையில் ஓய்வெடுக்கும் மழை.. முழுவீச்சில் மீட்பு பணிகள்.. இந்த 10 சுரங்கபாதைகளில் மழைநீர் அகற்றம்
Rayar A - Oneindia Tamil : சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது.
அதுவும் சென்னையில் கடந்த 5 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
2015-ம் ஆண்டுக்கு பிறகு அதிகனமழை கொட்டியுள்ளது.
இந்த பேய்மழை காரணமாக சென்னையின் எழும்பூர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி என நகரின் முக்கிய இடங்களும், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கின.
கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மாலைமலர் : சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா- வட தமிழகம் இடையே சென்னை அருகில் கரையை கடக்கும் என வானிமை மையம் தெரிவித்திருந்தது. 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் 4 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. சென்னையில் இருநது 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை மையம் அறிவித்திருந்தது.
களப்பணியில் 12000 மின் ஊழியர்கள்!
மின்னம்பலம் : பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களிலும் மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ஓட்டேரி, குக்ஸ் ரோடு பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மின்சார பாதிப்பு தொடர்பாக அவர் கூறுகையில், “சீரான மின் வினியோகத்தை வழங்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 34,047 மின்மாற்றிகளில் 34,006 மின்மாற்றிகள் செயல்பாட்டில் உள்ளன. 41 மின்மாற்றிகளின் மின் விநியோகம் பொது மக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளன.
புதன், 10 நவம்பர், 2021
நடனம் கற்கும் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறிய மூன்று (இஸ்லாமிய) சிறுமிகள் ..... காவல் துறையினர் மீட்டனர் ..இலங்கை
விவகாரம்.. நடந்தது என்ன என்பதை விளக்கமாக அறிவித்தார் போலிஸ் ஊடக பேச்சாளர்.
2021,November 10
பெண்கள் மிகவும் கடுமையான மற்றும் பழமைவாத வீடுகளில் இருந்து வருகிறார்கள், எனவே அவர்கள் இசையைக் கேட்கவோ அல்லது தொலைக்காட்சியைப் பார்க்கவோ அனுமதிக்கப்படவில்லை
8ஆம் திகதி காணாமல் போயிருந்து நேற்று (09) வீடு திரும்பிய 3 சிறுமிகளும் நடன நட்சத்திரங்களாக ஆவதற்கு வீட்டை விட்டு சென்றதாக காவல்துறை வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டி The Morning பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பத்திரிகையிடம் பேசிய போலீஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ, 3 சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்ற விவரங்களை தெரிவித்துள்ளார். clic -link .themorning.l
”நிரந்தரமாக சேதாரமில்லாத சென்னையாக மாற்றுவோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
ஜனனி - கலைஞர் செய்திகளை : அதிமுகவினர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரைகுறையாக பணிகளை செய்ததால்தான் தியாகராய நகரில் மழை நீர் சூழ்ந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
சென்னை, தியாகராய நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.11.2021) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: தி.நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டீர்களே ஸ்மார்ட் சிட்டி திட்டம் எப்படி இருக்கிறது?
முதலமைச்சர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து, கமிஷன் பெற்று அரைகுறையாக பணிகளை செய்திருக்கிறார்கள். அதனால்தான் தி.நகரில் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை மழைக்கு 22 பேர் உயிரிழப்பு - முப்படைகளும் தயார் நிலையில்
BBC - KRISHANTHAN : இலங்கையில் மழையுடனான சீரற்ற வானிலையினால், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு, வெள்ளப் பெருக்கு என பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளார்.
17 மாவட்டங்களைச் சேர்ந்த 17,481 குடும்பங்களின் 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம்
10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
கொடநாடு வழக்கின் முக்கிய ஆதாரத்தை கைப்பற்றிய போலீஸ்.. தாமோதரன் பிரகாஷ் அதிரடி
நக்கீரன் -தாமோதரன் பிரகாஷ் : கொடநாடு கொலை வழக்கில் பல முக்கிய திருப்பங்களை கனகராஜ் குடும்பத்தின் மூலமாகவே வெளிக்கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதனால்தான் கனகராஜ் சித்தி மகன் ரமேஷின் போலீஸ் கஸ்டடியை ஒருவாரம் நீட்டித்து கேட்டது போலீஸ். நீதிபதி 5 நாட்கள் அவரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
மொத்தம் 10 நாட்கள் விசாரிக்க ரமேஷிடம் என்ன உள்ளது என போலீஸ் வட்டாரங்களில் கேட்டோம்.
இதில் 2 வழக்குகள் உள்ளன. ஒன்று, கொடநாடு கொள்ளை வழக்கு, இன்னொன்று கனகராஜின் மர்ம மரணம். இந்த இரண்டிலும் ரமேஷ் சம்பந்தப்பட்டுள்ளார். கனகராஜ் இறப்பதற்கு முன்பு அவருடன் ஒன்றாக இருந்த ரமேஷ், கனகராஜ் இறப்பதைப் பார்த்துள்ளார்.
ஆனால் மர்ம மரணம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மகாபலிபுரம் அருகே நாளை கரையை கடக்கும்: வானிலை மையம்
மாலைமலர் : காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூரையொட்டி கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது திசை திரும்பியுள்ளது.
தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஐந்து மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், நேற்றில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூரை ஒட்டி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.
எதிர்பார்த்ததை விட அதிக வேகம்.. வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இனி புயலாக மாறுமா?
Shyamsundar - Oneindia Tamil : s சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் தீவிர மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. நேற்று பிற்பகல் 12 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. எங்கெல்லாம் ஆரஞ்சு அலர்ட்?
இதையடுத்து இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 36 மணி நேரத்தில் உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டது.
செவ்வாய், 9 நவம்பர், 2021
கொலை வழக்கில் கைதான கடலூர் எம்பி ரமேஷுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை
Veerakumar - e Oneindia Tamil : சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் தொகுதி திமுக எம்பி ரமேஷுக்கு நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் கிராமத்தில் கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு 7ஆண்டுகாலமாக பணியில் இருந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தியதில் எம் பி ரமேஷ் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக கடலூர் தொகுதி திமுக எம்பி ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ், சக தொழிலாளிகள் வினோத், கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு!
கலைஞர் செய்திகள் -Vignesh Selvaraj : பருவமழைக் காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
சென்னையில் சாலைகளிலும் குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையின் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் நாளாக இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
கனமழை! சென்னை உள்பட 9 மாவட்டங்களில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாலைமலர் : நாளையும், நாளை மறுநாளும் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: சென்னை உள்பட 9 மாவட்டங்களில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கோப்புப்படம்
வடகிழக்கு பருவமழை காரணமாகவும், குறைந்த காற்றழுத்தத்தாழ்வு உருவாகியுள்ளதாலும் நாளையும், நாளை மறுநாளும் (நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11) கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுகிறது... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
நக்கீரன் -இளையராஜா : மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அதன் வழியாக மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
திங்களன்று (நவ. 8) காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 27,600 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 117.610 அடியாகவும், நீர் இருப்பு 89.71 டிஎம்சி ஆகவும் இருந்தது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 100 கன அடியும், கால்வாய் வழியாக 350 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
மலேசிய இளைஞருக்கு அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம் - முழு விவரம்
போதைப்பொருள் வழக்கில் நாகேந்திரனுக்கு நவம்பர் 10ஆம் தேதியன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு கருணை காட்டுமாறு சிங்கப்பூர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
பாமகவினர் மீது கொலை முயற்சி வழக்கு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி .. பாமக வட்டாரம் அதிர்ச்சி
குறவரை இருளராக்கி, தலித் கிருஸ்தவரை வன்னியராக்கி, தங்களில் ஒருவரை ஹீரோவாக்கி NGO விளம்பரமும் வருமானமும்.. ஜெய் பீம் பற்றியது
ராஜேஸ் : ஜெய்பீம் என்ற பெயரில் நடந்துள்ள மோசடி!
எல்லாரும் பார்த்து, வியந்து, ரசித்து, நெகிழ்ந்த ராசாகண்ணுவின் லாக்கப் மரணம் தொடர்பான உண்மைக் கதையில் மூன்று மாற்றங்கள் உண்மைக்கு மாறாக செய்யப்பட்டிருக்கிறது,
1) கொலை செய்யப்பட்டவரின் சாதி
2) கொலை செய்தவரின் சாதி
3) கொலைக்கு எதிராக கடைசி வரை போராடியவரின் சாதி
நமக்கு காட்டப்பட்டது என்ன?
♦ கொலை செய்யப்பட்டவர் இருளர்
♦ கொலை செய்தவர் வன்னியர்
♦ கொலையை எதிர்த்துப் போராடியவர் வழக்கறிஞர் சந்துரு
உண்மையில் நடந்தது என்ன?
♦ கொலை செய்யப்பட்டவர் குறவர்
♦ கொலை செய்தவர் தலித் கிருஸ்தவர்
♦ கொலையை எதிர்த்து போராடியவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்த கோவிந்தன் என்கிற கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்
♦ வழக்கை நடத்தியவர் வழக்கறிஞர் சந்துரு மட்டுமல்ல
♦ ஒன்றுக்கு பல வழக்கறிஞர்கள் வழக்காடியுள்ளனர். அவர்களை எல்லாம் ஏற்பாடு செய்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த கோவிந்தன்
இதில் நடந்துள்ள மோசடி என்ன?
கொலை செய்யப்படவர் குறவராக இருக்கும் நிலையில் இருளராக காண்பிக்கப்பட்டு இருப்பதை திரைக்காக செய்யப்பட்ட புனைவாக நாம் ஏற்கலாம்.
சீமானுக்கு பொறந்த நாள் வாழ்த்துகளா? திருந்தவே மாட்டீங்கடா-ஃபேஸ்புக்கில் கொந்தளித்த நடிகை விஜயலட்சுமி
Mathivanan Maran - Oneindia Tamil : சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாளை முன்னிட்டு அவரை மிக கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.
சீமான் தம்முடன் குடும்பம் நடத்தி கைவிட்டுவிட்டார் என்பது விஜயலட்சுமியின் நீண்டகால குற்றச்சாட்டு. ஆனால் சீமான், இதுபற்றி எதுவும் பேசாமல் மவுனமாக கடந்து வருகிறார்.
அதேநேரத்தில் சீமானின் ஆதரவாளர்கள் நடிகை விஜயலட்சுமியுடன் சமூக வலைதளங்களில் மல்லுக்கட்டுவது வாடிக்கை.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல நூறு வீடியோக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு சீமானை விமர்சித்து வருகிறார் விஜயலட்சுமி.
திங்கள், 8 நவம்பர், 2021
அமைச்சர் காந்தியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்: துரைமுருகன் மீது அதிருப்தி?
மின்னம்பலம் : தமிழ்நாடு அரசின் முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேர் கடந்த நவம்பர் ஆறாம் தேதி மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து மின்னம்பலத்தில் முக்கிய அதிகாரிகள் மாற்றம்: அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆடிய ஆடுபுலி ஆட்டம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம் இதில் அதிகாரிகளின் மாற்றத்திற்கு காரணமான அமைச்சர்களின் கோரிக்கைகள் அதற்கு முதல்வர் ரியாக்ஷன் உள்ளிட்டவை பற்றி விரிவாக எழுதியிருந்தோம்.
அதிலும் குறிப்பாக கைத்தறித் துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி முதல்வரிடம் சென்று கோரிக்கை வைத்தது பற்றி குறிப்பிட்டிருந்தோம்.
தொடர் கனமழை... மீண்டும் மிதக்கும் சென்னை...
நக்கீரன் : நேற்றிரவு முதலே சென்னையில் பல இடங்களில் கனமழை தொடர்ச்சியாகத் தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு கொரோனா பாதிப்பு.. அப்போலோவில் அனுமதி!
Rayar A - Google Oneindia Tamil : சென்னை: தமிழகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் அவரது மனைவி மோகனாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Dravidar Kazhagam leader K. Veeramani has been diagnosed covid 19 infection
இதனை தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், அவரது மனைவி மோகனாவும் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் சிறிய அளவில் கொரோனா தொற்று தென்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சில நாட்களில் இருவரும் வீடு திரும்புவர் என்றும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படுகின்றன எனவும் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
திருமதி :கனிமொழி MP : இங்கேயே பிறந்து .. தமிழ்நாட்டை தவிர வேறு எதுவுமே தெரியாத பல குழந்தைகள் அந்த முகாமிலேயே... .
இலங்கை மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்கள் பற்றி திருமதி கனிமொழி எம்பி அவர்கள் நக்கீரன் காணொளிக்கு வழங்கிய விரிவான பேட்டி :
கேள்வி : ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் அவர்களின் வாழ்வியலுக்காகவும் நிறைய குரல் கொடுத்து வந்திருக்கிறீர்கள் . நிறைய போராடியிருக்கிறீர்கள்
சமீபத்தில் கூட தூத்துகுடி அகதிகள் முகாமில் நிறைய ஆய்வுகள் நடத்தி அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றை நிறைவேற்றி இருக்கிறீர்கள்
இலங்கை அகதிகள் என்பது தற்போது இலங்கை மறுவாழ்வு முகாம் என்று தமிழக அரசு மாற்றம் செய்திருக்கிறது .இதற்கான கோரிக்கை கூட உங்க கிட்டே இருந்து எழுந்ததாக அறிகிறோம்
இப்போ தமிழகம் இந்த மாதிரியான ஒரு மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறதல்லவா? இதை எப்படி பார்க்கிறீங்க?
திருமதி .கனிமொழி : தொடர்ந்து வந்து நான் மட்டுமில்லை . கலைஞர் ஆட்சி பொறுப்பில் இருந்த போது அதற்காக ஒரு குழுவை நியமித்து ரவிக்குமார் எம்பி உட்பட அங்கு போய்வந்து அங்கிருக்கிற நிலைமைகளை ஆய்வு செய்து அங்கிருக்கிற பிரச்சனைகளை அறிந்து என்னன்ன செய்யவேண்டுமோ அவற்றை செய்ய தொடங்கி இருந்தாங்க
ஜெய் பீம் - ஒரு மலையக கவிஞரின் (எஸ்தர்) பார்வையில்
எஸ்தர் : இரவு திறந்தே இருக்கிறது : ஜெய்பீம் திரைப்படத்தை இப்போதுதான் பார்த்து முடித்தேன் ஆனாலும்
கண்ணீர் முடியவில்லை
தமிழ் சினிமாவில் எப்போதும் நான் நம்பிக்கையிழந்தவள் வேற்று தேசத்து படங்களை தேடி ஓடி உணர்ச்சிவசப்பட்டு அழுவேன்
இப்படி சிலவருடம் முன் பரியேறும் பெருமாளை பார்த்து என்னால் மோட்டர் சைக்கிள் ஓடமுடியவில்லை எத்தனை தூரம் ஓடுவேன் பரியேறும் பெருமாளில் எங்கும் புகழ் துவங்க பாடல் கூடவே வரும் கண்ணீர் மழையோடு ஓடுவதை நிறுத்துவேன் இன்று அதே நிலை உணர்வு
நிராகரிக்கப்படும் போது ஒருவனின் வலி இருக்கிறதே அது காயத்தில் காட்டும் உப்பைப் போன்றது
இவ் இருளரைப்போல்தான் மலையக மக்களும் அப்பாவிகள் உலகம் அறியாதவர்கள் காலில் செருப்பில்லாமலே வாழ்ந்து மரித்தவர்கள் ஜெய் பீம் என்பது இருளிலிருந்து ஒளியை தேடிச் செல்வது ஆம் செங்கேணி இருளைவிட்டு வெளியேறுகிறாள் உலகமெங்கும் பழங்குடி மக்கள் ஒடுக்கப்பட்டும் அழிக்கப்பட்ட வரலாறுமே உண்டு
ஞாயிறு, 7 நவம்பர், 2021
அண்ணாத்தே ... வசூல் விபரம் .. கூடினாலும் மகிழ்வு குறைந்தாலும் மகிழ்வு .. யாருக்கு?
சாவித்திரி கண்ணன் : அண்ணாத்தே விமர்சனங்களும், அபாரமான வசூல் கணக்கும்! என்னமோ இடிக்குதே..!
கதைக்கு ஏற்றார் போல நடிகர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளும் படங்கள் பெரிய வெற்றி பெறுகின்றன! நடிகருக்காக கதை உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் பிளாப் ஆகின்றன!
அந்த வகையில் அண்ணாத்தே படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இதை முதல் ஷோ பார்த்துவிட்டு வந்த ரஜினி ரசிகர்களே கழுவிக் கழுவி ஊத்திவிட்டனர். படம் பார்த்தவன் எல்லாம் தங்கள் எதிரிக்கும் கூட இந்த அனுபவம் ஏற்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தானே போன் போட்டு எல்லோருக்கும் பரப்பிவிட்டனர்.
போதாக்குறைக்கு யூடுபர் வேறு முதல் ஷோ பார்த்துவிட்டு வந்த ரசிகர்களை பேட்டி கண்டு படத்தை பீஸ்பீஸாக கிழித்து தொங்கவிட்டுவிட்டனர்.
10.5% ரத்து, பஸ் உடைப்பு- பாமக பகீர் திட்டம்: போலீஸ் அலர்ட்!
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியது கடந்த அதிமுக ஆட்சி. அடுத்து வந்த திமுக ஆட்சியும் இந்த ஒதுக்கீட்டைஉறுதி செய்து அரசாணை வெளியிட்டது. இதற்கிடையே 10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகளும் மாற்றுச் சமூக அமைப்புகளும் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட்டு வந்தது. நவம்பர் 1ஆம் தேதி, நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் கே.முரளிசங்கர் அடங்கிய இருவர் அமர்வு இருதரப்பு வாதங்களையும் கூர்ந்துகேட்டு 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
தலைமை கோபம்: அமைச்சர் அனிதா தப்புவாரா?
மின்னம்பலம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வலது கரமும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான பில்லா ஜெகன் நேற்று (நவம்பர் 6) கைது செய்யப்பட்ட நிலையில், அமைச்சருக்கு எதிரான புகார்கள் தலைமையிடம் அணிவகுத்துள்ளன.
தீபாவளி திருநாள் அன்று தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் பில்லா ஜெகனும் அவரது நண்பர்களும் அந்த வளாகத்திலேயே மது அருந்திக்கொண்டிருந்தனர்.
தற்காலிக ஊழியரான சதாம் சேட், ‘இங்கே மது அருந்தக் கூடாது’ என்று அவர்களைத் தடுக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறையைத் திறந்து விடுமாறு ஜெகன் வற்புறுத்தினார்.
Breaking News சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
மாலைமலர் : 10, 11ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் தத்தளிக்கின்றன. சென்னையில் நேற்று முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
சென்னை பேசின் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரெயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. விரைவு ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை : செம்பரம்பாக்கம் ஏரி மீது கண் இருக்கட்டும்..அதிகாரிகளுக்கு உத்தரவு
Rayar A - Oneindia Tamil : சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க..ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் வரும் 9.11.2021 அன்று வங்கக்கடலில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் தகவல் வந்துள்ளது.
ரஞ்சித்துகளும், மாரி செல்வராஜ்களும், ஞானவேல்களும் பிச்சை காசுகளுக்காக தமிழ்நாட்டை மீண்டும் ஜாதிய போர்க்களமாக மாற்ற கூடாது
Kandasamy Mariyappan : நேற்று ஜெய் பீம் பற்றிய எனது பதிவை தொடர்ந்து சில நண்பர்கள், எனது பார்வை சரி என்றும் சிலர் தவறு என்றும் கூறினர்.
மகிழ்ச்சி.
எனது எண்ணம் போன்று மற்றவர்களின் சிந்தனை இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால்.., எனக்கு உறவுகளே இருக்காது.!
ஆனாலும், நேற்று மாலை, தோழர். கோவிந்தன் (((வன்னியர்))) பேட்டி அளித்த Video பார்த்தேன்.
1. கொலை செய்யப் பட்டவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
2. கொலை செய்தவர் ஆரோக்கியசாமி (((கிறித்துவர்))) என்ற மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.!
குருமூர்த்தி (((வன்னியர்))) இல்லை.!
3. இந்தக் கொலையை எதிர்த்து சமூக போராட்டம் செய்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தோழர். திரு. கோவிந்தன் என்ற வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.!