சனி, 17 ஆகஸ்ட், 2013

மணப்பெண் தற்கொலை ! திருமணத்தை தடுத்த காதலன் தானும் திருமணம் செய்யாமல் ஏமாற்றினான்

நிச்சயம் செய்த திருமணத்தை காதலன் மணிகண்டன் தடுத்து நிறுத்தினான் பின்பு தான் திருமணம் செய்வதாக சொல்லி இந்த பெண்ணை ஏமாற்றி விட்டான் . மாப்பிள்ளையும் கைவிட்டதோடு, காதலன் மணிகண்டனும்  திருமணம் செய்ய மறுத்ததால் அப்பெண் விரக்தி அடைந்து தீமூட்டி தற்கொலை செய்துகொண்டார் ! இந்த பொறுக்கி மணிகண்டனுக்கு யாராவது தக்க தண்டனை கொடுக்கவேண்டும்  தற்கொலைஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர்
முத்து. இவரது மகள் ருக்குமணி (வயது 21). திருச்சியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். செந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மணிகண்டன் (24). இவரும் திருச்சியில் ருக்குமணி படித்து வந்த அதே கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தெரிந்தது. இதை அவர்கள் கண்டித்தனர்.
இதற்கிடையே ருக்மணியின் பெற்றோர் வருகிற 26–ந்தேதி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ருக்மணியை திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த மணிகண்டன் ருக்குமணியின் பெற்றோரிடம் ருக்குமணியை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.
இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மணிகண்டன் திருமணம் நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு போன் செய்து தான் கடந்த 3 ஆண்டுகளாக ருக்குமணியை காதலிப்பதாக கூறியதாக தெரிகிறது.

புதிய தலைமுறை பச்சமுத்து – BJP கூட்டணிக் கனவுகள் ! இதில்தான் தலைவாவும் சிக்கியுள்ளதாக தெரிகிறது

பச்சமுத்துஇனி பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள், அரவிந்தன் நீலகண்டன் போன்ற ‘ஆய்வாளர்கள்’ அனைவரும் புதிய தலைமுறையை இந்து தலைமுறையாக மாற்றுவார்கள்
இஜக - பாஜகன்றைய தினமணியின் மூலையில் வந்த செய்தியொன்றை எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் தெரியவில்லை. மூலையில் வந்தாலும் இந்த செய்தியின் நாயகர்கள் அதிகார அளவில் மையத்தில் இருப்பவர்கள். செய்தி என்ன?

இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் டி.ஆர் பச்சமுத்து, அதாவது புதிய தலைமுறை, வேந்தன் மூவிஸ் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் முதலாளி, ‘சுதந்திர’ தினமன்று கமுக்கமாக புதுதில்லி சென்றிருக்கிறார். இங்கே வேட்டி, பனியன், மண்வெட்டியோடு பிளக்ஸ் பேனரில் போஸ் கொடுக்கும் ‘உழைப்பாளி’ அங்கு விக்டோரியன் கோட்டு சூட்டு டை சகிதம் பாஜக தலைமை அலுவகம் சென்று தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்திருக்கிறார்.
இது ஏதோ காமோ சோமோ சந்திப்புதானே, இதற்கு என்ன முக்கியத்துவம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது சாதாரண சந்திப்பு அல்ல, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதால் பத்திரிகையாளர்களும் உடனே பச்சமுத்துவை சந்திருக்கின்றனர். புதுதில்லியில் இருக்கும் செய்தியாளர்கள் இத்தகைய சந்திப்புகளையெல்லாம் கவர் செய்யுமளவு அவலத்தில் உழலுகிறார்களா இல்லை இது உண்மையிலேயே ‘கவர்’ சம்பந்தப்பட்டதா தெரியவில்லை.
போகட்டும், அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பச்சமுத்து உதிர்த்த கருத்துக்களைப் பார்ப்போம்.

இந்திய ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் மூன்று ஆண்டுகளாக தோழமையோடு இருந்து வருகின்றன.
“இந்திய ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் மூன்று ஆண்டுகளாக தோழமையோடு இருந்து வருகின்றன. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு அளித்தது. இவ்விரண்டு கட்சிகளின் கொள்கைகளும், நோக்கங்களும் ஒன்றுதான்.

367 இந்திய கைதிகளை விடுதலை செய்கிறது பாகிஸ்தான்

இந்திய எல்லையில் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இருதரப்பு ராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் அணி, கார்கில் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அடுத்த மாதம் ஐ.நா. பொதுசபை கூட்டத்தின்போது, இருநாட்டு பிரதமர்களும் சந்திப்பது, நம்பிக்கையை உருவாக்குவதற்கும் உறவுகளை ஒருங்கிணைக்கவும் பயனுள்ள வாய்ப்பாக இருக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஈரான் ஜனநாயகம் : அழகாக இருக்கிறாய் பயமாக இருக்கிறது ? அழகாக இருப்பதால் பதவி இழந்த பெண் அரசியல்வாதி

Nina Siakhali Moradi, Iranian Councilwoman-Elect, Disqualified For Being 'Too Attractive':
Report டெஹ்ரான்: மிகவும் அழகாக இருந்த ஒரே குற்றத்திற்காக ஈரானில் ஒரு பெண் கவுன்சிலரின் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பேரழகு கொண்டவர்களுக்கு இங்கு வேலை இல்லை என்று அந்தப் பெண்ணுக்கு அதிகாரிகள் காரணம் கூறியுள்ளனராம்.  இத்தனைக்கும்  நகராட்சித் தேர்தலில்  அதிக அளவில் வாக்குகள் வாங்கியிருந்தார். ஆனால் ஆணாதிக்க அதிகாரிகளால் தற்போது பதவியை தொடர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுஅவரது பெயர் நினா சியகாலி மொராடி என்பதாகும். வயது 27 ஆகிறது. குவாஸ்வின் நகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றவர்.இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 10,000 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். >ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிந்து, ரிசல்ட்டையும் அறிவிக்க தயாரான நிலையில் திடீரென அவர் தகுதி இழந்து விட்டதாக அறிவித்து விட்டனர். இவ்வளவு அழகு கூடாது… இதற்கு அவரிடம் சொல்லப்பட்ட காரணம், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட பெண்கள் இந்த வேலைக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பதாம்.

ஜே .அன்பழகன் 300 திரையரங்குகளில் தலைவாவை வெளியிட அன்பு பிக்சர்ஸ் தயார் ? குரல்கொடுக்காத நடிகர் சங்கத்தை கலைக்கவேண்டும்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இப்படம் கடந்த 9-ந் தேதி தமிழகத்தை தவிர மற்ற நாடுகள், மாநிலங்களில் வெளியாகி உள்ளது.
படம் வெளியாக ஒத்துழைக்குமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் அறிக்கையாகவும், வீடியோவிலும் வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் திமுக எம்எல்ஏவும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜெ.அன்பழகன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் எங்களிடம் 300 திரையரங்குகள் உள்ளன. விஜய் விரும்பினால் தலைவா படத்தை வெளியிட தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
தலைவா திரைப்படக்குழு என்னிடம் கேட்டால், நான் கண்டிப்பாக தலைவா திரைப்படத்தை அன்பு பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுவேன்.

DMK mla ஜே .அன்பழகன் காட்டம் ! சரத்குமாரால் ஜெயலலிதாவிடம் இருந்து ஒரு அபாயின்ட்மென்ட் கூட வாங்கிதரமுடியாதா ?

சரத்குமாரால் விஜய்க்கு ஜெ.விடம் ஒரு அபாயின்ட்மென்ட் கூட வாங்கித் தர முடியாதா?: அன்பழகன்  சரத்குமார் முதல்வர் ஜெயலலிதாவின் வலது கரமாக இருந்தும் அவரால் விஜய்க்கு ஒரு அபாயின்ட்மென்ட் வாங்கித் தர முடியாதா என்று திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். தலைவா படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை உள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் விரும்பினால் தனது தயாரிப்பு நிறுவனமான அன்பு பிக்சர்ஸ் படத்தை வெளியிடும் என்று திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் மேலும் கூறியிருப்பதாவது, தலைவா விவகாரத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஏன் அமைதி காக்கிறார்?. நடிகர் சங்கத் தலைவராக இருந்தும், முதல்வரின் வலது கையாக செயல்பட்டும் அவரால் விஜய் முதல்வரை சந்திக்க ஒரு அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்க முடியாதா?. நடிகர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கும் சரத்குமார் நடிகர் சங்கத்தை விட்டு வெளியேறி, மற்றொருவர் பதவியேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தலைவா விவகாரத்தில் விஜய்க்கு உதவி செய்து வருவதாக சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.in

சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு கடும் நெஞ்சுவலி ! அம்மாவின் புகழ் பாடிய ரஜனி வகையறா எங்கே போய்விட்டார்கள் ?

தலைவா பட தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி சென்னை: தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் நெஞ்சுவலியால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் நடித்துள்ள தலைவா படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் சில பிரச்சனைகளால் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. படத்தை வெளியிட உதவி செய்யக் கோரி நடிகர் விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர். சந்திரபிரகாஷ் ஜெயின் படத்தை வெளியிட உதவி செய்யுங்கள், இல்லை என்றால் நான் கடனாளியாகிவிடுவேன் என்று ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டடார். பின்னர் படத்தை ரிலீஸ் செய்யக்கோரி படக்குழுவினருடன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி அவர் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தார். ஆனால் போலீசார் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நேற்று மாலை அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் ஜெயினுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தலைவா பட பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்ததால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
  tamil.oneindia.in

உண்ணாவிரத அனுமதி மறுப்புக்கு கலைஞர் பதில் :ஒரு படைப்பாளி என்ற முறையில் பதைக்கிறேன் !

சென்னை: தலைவா படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை கேட்டு பதைக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தலைவா படம் ரம்ஜான் அன்று ரிலீஸாக வேண்டியது. ஆனால் தேதி 17 ஆகியும் படம் வெளிவரவில்லை. இந்நிலையில் படத்தை வெளியிட உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய்யும், படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படத்தை வெளியிடக் கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியது தலைவா படக்குழு. ஆனால் உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் தலைவா படக்குழுவினருக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஒரு படைப்பாளி என்ற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதைக்கிறேன் என்று பதில் கூறினார்.
tamil.oneindia.in

அம்பானிக்கு நீதிமன்றம் குட்டு ! சட்டத்தின் முன் அனைவரும் சமமே ! ஆஜாராகியே தீரவேண்டும் !

2ஜி அலைக்கற்றை வழக்கில் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய
சம்மனை எதிர்த்து, அனில் அம்பானி தம்பதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.இது தொடர்பான மனுவை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது அம்பானி தம்பதி சார்பில் வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார்,சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் வாதாடினார்,இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், "சட்டத்தின் முன்பு குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒரே மாதிரியாகவே கருதப்படுவர். சமூகத்தில் செல்வாக்குப் படைத்தவர்கள், செல்வாக்குக் குறைந்தவர்கள் என பேதம் பார்க்கப்படுவதில்லை.

கலைஞர்: கோஷ்டி பூசலில் ஈடுபடாவிட்டால் பெருவெற்றி பெறுவோம் ! சட்டசபை தோல்விக்கு கோஷ்டிகளே காரணம்

 தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. "கூட்டணி தொடர்பாக, மாவட்டச் செயலர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்தார்."லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என, தென் மாவட்டங்களைச் சேர்ந்த, தி.மு.க., மாவட்டச் செயலர்களும், "தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என, வட மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டச் செயலர்களும் விருப்பம் தெரிவித்தனர்.அனைவரின் கருத்துக்களை கேட்ட பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கூட்டணியின் முடிவு பற்றி, நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் கோஷ்டி பூசலில் ஈடுபடாமல், ஒற்றுமையாகப் பணியாற்றுங்கள்' என, அறிவுரை கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாக் சிறையில் உள்ள இந்தியகைதிகள் மோசமாக தாக்கப்படுகிறார்கள் ! கருணைகொலை செய்யுமாறு கைதிகள் வேண்டுகோள்

Eleven Indian prisoners languishing in Kot Lakhpat Jail of Lahore have sought death to get rid of their "sorrowful lives".புதுடில்லி : பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியர்கள், 11 பேர், தங்களை கருணைக் கொலை செய்யும்படி, இரு நாட்டு அரசுகளுக்கும், கடிதம் எழுதியுள்ளனர்.பாகிஸ்தானின், லாகூர் நகரில் உள்ள, கோட் லாக்பாட் சிறையில், ஏராளமான இந்தியர்கள், கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சக கைதிகளாலும், சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகளாலும், கடுமையாக துன்புறுத்தப்படுவதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சிறையில் கொடுமையை அனுபவிக்க முடியாத, 11 இந்தியர்கள், தங்களை கருணைக் கொலை செய்து விடும்படி, பாக்., மற்றும் இந்திய அரசுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளனர். இந்தியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தின் நகலை, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., அவிநாஷ் ராய் கண்ணா நேற்று வெளியிட்டார்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

விஜயின் latest பஞ்சு டயலாக்: தெரியலை புரியலை நானில்லை அவரில்லை ! தலைவா படக்குழுவின் விபரமான பேட்டி !


விஜய் நடித்து, தமிழகத்தில் வெளியாக
காத்திருக்கும் ‘தலைவா’ படம்
தொடர்பாக விஜய் வீடியோ அறிக்கை ஒன்றை விட்டு, “தலைவா வெளியாக கருணை புரிக முதல்வா” என கோரிக்கை விட்டுவிட்டு காத்திருக்க, படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும், டைரக்டர் ஏ.எல்.விஜய்யும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்.
அதன் பின்னரும், தலைவா படத்துக்கு நிஜமாக என்ன பிரச்னை என்று கூற முடியாமல் மென்று விழுங்கினர்கள் தயாரிப்பாளரும், டைரக்டரும். பிரஸ் மீட்டில் இருவராலும் பெரும்பாலும் மழுப்பலான பதில்களே கூறப்பட்டன.
இதோ.. செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் கூறிய பதில்
கேள்வி: படத்தில் சில டயலாக்குகள் ஆளும் கட்சியை தாக்குவது போல இருப்பதாக சொல்லப்படுகிறதே?
தயாரிப்பாளர்: யார் வேணும்னாலும், எப்போ வேணாலும் இந்தப் படத்தை பார்க்கலாம். அப்படிப்பட்ட எந்த டயலாக்கும் படத்துல கெடையாது.
அப்படி யாரோட மனசையாவது புண்படுத்தும்படியான டயாலாக் இருந்தா, அது உடனடியா வெட்டப்படும். ஏன்னா… எங்களுக்கு டயலாக் முக்கியமில்ல, படம் வெளிவரணும்.. அதுதான் முக்கியம்.
கேள்வி: (படத்தை வெளியிடுவதற்கு) காவல்துறையில பாதுகாப்பு கேட்டிருக்கலாமே?

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ! ரூபாய் மதிப்பு சரிவு ! சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்தது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக் காலமாக தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத வகையில் ரூ.62.03ஆக சரிந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் கெட்டுபோன குழந்தைதான் அதிமுகவும் ஜெயலலிதாவும்


டெரர் ஜெயாவிஜய், வடிவேலுவறானவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன் வைத்து சரியான கொள்கைகளை ஆதரிக்குமாறு கோரினால் தவறானவர்களை தண்டித்த அநீதியான நடவடிக்கையே மேல் என்று மக்கள் முடிவு செய்யக் கூடும்.
சான்றாக ஊர் மக்கள் பலரை கொன்று போட்ட ஒரு நாடறிந்த ரவுடியை ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக போலி மோதலில் போலிஸ் கொல்கிறது. பொதுவில் போலி மோதலை எதிர்ப்பது வேறு, இந்த ரவுடியின் ஜனநாயக உரிமையை முன் வைத்து எதிர்ப்பது வேறு. பின்னதை நாடினால் மக்கள் பாசிசமே மேல் என்று முடிவு செய்வார்கள். எனவே சாதாரண மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை வைத்தே போலிசின் காட்டுமிராண்டி தர்பாரை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் மக்களிடம் போலிசு குறித்த உண்மையை உணர வைக்க முடியும். தன் படத்தை தமிழக அரசுதான் மறைமுகமாக தடை செய்திருக்கிறது என எங்கேயாவது விஜய் சொல்லியிருக்கிறா? தற்போது ‘தலைவா’ படப் பிரச்சினையை முன் வைத்து சிலர் ஜனநாயக உரிமை பேசுகிறார்கள். சினிமா எனும் முதலாளிகளின் தொழிலை முன் வைத்துதான் ஒரு நாட்டின், சமூகத்தின் ஜனநாயக உரிமை பேசப்படும் என்றால் அந்நாட்டில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே உரிமை இல்லை என்று பொருள். அதன் பொருட்டே சிட்னி நகரில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிடுவதற்கு கருத்துரிமை இல்லை என்று பேச முடிகிறது. விஜய் ஆஸ்திரேலியாவில் ஆடும் சலித்துப் போன நடனமும், சந்தானம் சதா முணுமுணுக்கும் லொள்ளு சபா மொக்கைகளும் நம் பார்வைக்கு வர இயலாததுதான் கருத்துரிமைக்கு அடையாளம் என்றால் இப்பேற்ப்பட்ட கருத்துரிமையே நமக்கு வேண்டாம்.

மோடிக்கு அமெரிக்க விசா மறுப்பு ! குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசனம்

உயர் 
<div class=Modi shall not be granted the privilege of US visa because of the very serious doubts that remain and that hang over Modi relative to his role in the horrific events of 2002 in Gujarat," said Katrina Lantos Swett, vice chairwoman of the United States Commission on International Religious Freedom. குஜராத்தில் 2002-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் காரணமாக, முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா கொடுக்க மறுத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், மோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.< அதேசமயம், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால், அமெரிக்கா தன் நிலையை மாற்ற தீர்மானித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் பேட்டி அளித்த அமெரிக்க அரசுத்துறை செய்தி தொடர்பாளர், விசா கேட்டு மோடி விண்ணப்பித்தால் பரிசீலனை செய்வோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், மோடிக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்காவின் உயர் அதிகாரி கேத்ரினா லான்டோஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு ! தலைவாவை நிஜமாகவே தலைவராக்கும் முயற்சியில் ஜெயலலிதா ?

சென்னை: தலைவா படம் ரிலீசாகாததால் தமிழக அரசுக்கு எதிராக விஜய் தரப்பில் வழக்குத் தொடரப் போவதாக பரபரப்பாக செய்திகள் கிளம்பியுள்ளன. தலைவா படம் பழசாகிவிட்டாலும், அதைச் சுற்றியுள்ள பிரச்சினைகள், அதற்கு விஜய் தரப்பு எதிர்த்தும் எதிர்க்காமலும் காட்டும் எதிர்வினைகள்தான் சுவாரஸ்யமான செய்திகளாக உலா வருகின்றன. நாளை இந்தப் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விஜய் தரப்பு அறிவித்து, அரசிடம் அனுமதியும் கோரியது. ஆனால் கேட்ட சில மணி நேரங்களில அனுமதி மறுத்துவிட்டது தமிழக அரசு. என்னது... தமிழக அரசுக்கு எதிரா விஜய் கேஸ் போடப் போறாரா? வழக்கு? இப்போது புதிய திருப்பமாக, கமல்ஹாஸன் ஸ்டைலில் தமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடரப் போகிறார் என செய்திகள் கிளம்பியுள்ளன. நாளை உண்ணாவிரதம் கேன்சலான நிலையில், படத்தை வெளியிடும் சூழலை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடரப் போகிறார்களாம் விஜய் தரப்பில். இதுகுறித்து வழக்கறிஞர்களுடன் விஜய் விவாதித்து வருகிறாராம். இந்த முடிவு உண்மைதானா என அறிய விஜய்யின் மேலாளர் பிடி செல்வகுமாரைத் தொடர்பு கொண்டோம். அவரோ தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக மறுமுனையில் அறிவிப்பு வந்தது!
tamil.oneindia.in

தங்கம் விலை ஒரே நாளில் 1,024 உயர்ந்தது ! மார்வாடிகளுக்கும் மல்லுகளுக்கும் கொண்டாட்டம்

சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு
மேல் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.23,232க்கு விற்பனையாகிறத சென்னையில் வெள்ளிக்கிழமை காலை 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.23,232க்கு விற்பனையாகிறது. கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.2,904க்கு விற்பனையாகிறது.கேரட் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.137 உயர்ந்து ரூ.3,106க்கு விற்பனையாகிறது.அதேப்போல, ஒரு கிராம் வெள்ளி விலையும் ரூ.4.40 காசு உயர்ந்து ரூ.55க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4,085 உயர்ந்து 51,385க்கு விற்பனையாகிறது.<

விஜய் உண்ணாவிரதம் இருக்க போகிறாராம் ! சும்மா பஞ்சு வசனம் பேசியே ஜெயாவை தாஜா பண்ணி பாருங்க பாஸ்

சென்னை: 'தலைவா' படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளியாகாததால் நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி மாநகர காவல்துறையிடம் படத்தின் இயக்குநர் மனு அளித்துள்ளார். இந்த உண்ணாவிரதத்தில் நடிகர் சத்யராஜ், நடிகை அமலா பால் உட்பட படக் குழுவினரும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கடந்த 4 வருட முயற்சிக்கு பிறகு விஜய் கால்ஷீட் பெற்று பல கோடி ரூபாய் கடன் வாங்கி ‘தலைவா‘ படத்தைத் தயாரித்திருக்கிறேன். கடந்த 9ம் தேதி படத்தை வெளியிடுவதாக வினியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறேன். படம் வெளி யாவதற்கு 2 நாள் முன்பு, பட த்தை திரையிடக்கூடாது என்று தியேட்டர்களுக்கு யாரோ வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஆதலால் அனைத்துத் தரப்பினரும் காதல் செய்வீர் !பார்க்க வேண்டிய படம்... தவறவிடாதீர்கள்..

ராஜபாட்டையில் படுபயங்கரமாக சறுக்கிய சுசீந்திரன் மீண்டும் ஃபார்முக்கு
திரும்பியிருக்கும் படம். இன்றைய இளசுகளின் காதல் எப்படி தன்னைத் தவிர மற்ற எதையும் பார்க்க மறுக்கிறது என்பதை பொட்டில் அடித்த மாதிரி படம் சொல்கிறது.தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத டீன் ஏஜ் பருவத்து காதலால் எப்படி பெற்றோர்களும் மற்றவர்களும் அவமானத்துக்கு உள்ளாகிறார்கள். டீன் ஏஜ் ஈகோவால் அடுத்த தலைமுறை எப்படி அனாதையாக்கப்படுகிறது என்பதை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் சுசீந்திரன்.சமீபமாக ஒருவரி துணுக்கு காமெடியில் தமிழ் சினிமா தன்னை இழந்துவிட்டதோ என்று கவலைப்பட்ட நேரத்தில் கலங்கரை விளக்கமாக, அப்படியெல்லாம் இல்லை என்று சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர் அடையாளம் காட்டியிருக்கிறது. அதனை கொண்டாடுவதும், துணுக்கு காமெடிப் படங்களைத் தாண்டி ஓட வைப்பதும் ஒவ்வொரு ரசிகனின் கடமை.அனைத்துத் தரப்பினரும் பார்க்க வேண்டிய படம்... தவறவிடாதீர்கள்     tamil.webdunia.com

கூட்டணி பற்றி முடிவு செய்ய தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் இன்று நடந்த தி.முக. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ‘‘பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பற்றி முடிவு செய்ய கருணாநிதி, அன்பழகன் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரவாயல் பறக்கும் சாலை மற்றும் 9,300 கோடி நெடுஞ்சாலை துறை திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்பதால் இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை. இப்போக்கை கண்டிக்கிறோம்.
சுதந்திர தின உரையில் தமிழகத்திற்கு குரல் கொடுத்த பெரியார், காமராஜர் ஆகியோர் பெயர்கள் விடப்பட்டது ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதவாத சக்திகளின் முயற்சிகளை முறியடித்து தாதமாகும் சேது சமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தலைவாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவரால் தலைவிக்கு கோபம் கூடிவிடுமோ ? மேலும் பயப்படும் ஹீரோ

திரையில் பேசும் வீர வசனங்களை எல்லாம் உண்மை என்றும் நம்பும் ரசிகனின் நெற்றியில் பெரிய முட்டாள்  என்ற நோட்டிசை ஜெயலலிதா ஓட்டியுள்ளார் தலைவா படப்பிரச்சனையில் தளபதி பயந்ததே, ஆதரவு என்ற பெயரில் யாரும் குட்டையை குழப்பிவிடக் கூடாதே என்பதற்குதான்.நல்லவேளையாக திரையுலகிலிருந்து எந்த குழப்படியும் வரவில்லை. மாறாக அரசியலில் இருந்து வந்தது பெரியதொரு ஆப்பு. ஆதரவு என்ற பெயரில் தளபதிக்கும் தலைவிக்கும் இடையிலான உறவு விரிசலை அரைப்பக்க அறிக்கையில் இன்னும் அதிகப்படுத்திவிட்டார் அரசியல் சாணக்கியர்.அய்யோ இவரிடம் யாருப்பா ஆதரவு கேட்டது?தலையில் அடித்துக் கொள்கிறார்கள் தளபதி தரப்பில்.

நவாஸ் ஷெரிப் இந்தியாவுடன் பேச ஆவல் ! ஆனால் மோதவைக்க பாக் ராணுவம் சதி ?

Nawaz Sharif was confident that he had majority in the assembly thus he ruled with considerable confidence. He had disputes with three successive army chiefs.பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : நவாஸ் ஷெரீப் தகவல் இஸ்லாமாபாத்: காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 6ம் தேதி பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உறவில் சிக்கல் பெரிதாகி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன், இரு நாடுகளும் விரும்பினால் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஐநா உதவ தயாராக உள்ளது என்று தெரிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், பான் கி மூன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இருவரும் இணைந்து இஸ்லாமாபாத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நவாஸ் ஷெரீப் கூறியதாவது:

அதிகாரிகளை காப்பாற்ற ஜெயலலிதா வரப்போவதில்லை: அன்புமணி ராமதாஸ்

வந்தவாசியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர்,
தருமபுரி இளவரசன் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்துகின்றனர். ஆனால் மரக்காணத்தில் வன்னியர் இருவர் இறந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் மீது வழக்கு போட்ட அதிகாரிகள் மீது நாங்கள் வழக்கு போடுவோம். அப்போது அதிகாரிகளை காப்பாற்ற ஜெயலலிதா வரப்போவதில்லை. பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற இந்த இரு கோரிக்கைகளை மக்களிடம் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு

சென்னை: தலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி நடக்கும் உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். எவ்வளவோ முயற்சி செய்தும் தலைவா படம் வெளியாகவில்லை. நாளைக்குள் வெளியாக வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தினசரி ஒரு பேட்டி, பிரஸ் மீட் வைத்து வருகின்றனர். அரசு இதில் தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என தெளிவுபடுத்திவிட்டது. போலீசாரோ இது தங்கள் வேலையல்ல என்றும், சினிமாத் துறையினர் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்றும் கூறிவிட்டது. வெளியிட வேண்டிய தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள்.

சீனாவில் பெருகி வரும் "நிர்வாண திருமணம்': சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் என இளைஞர்கள் நம்பிக்கை

சென்னை: தலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி நடக்கும் உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். எவ்வளவோ முயற்சி செய்தும் தலைவா படம் வெளியாகவில்லை. நாளைக்குள் வெளியாக வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தினசரி ஒரு பேட்டி, பிரஸ் மீட் வைத்து வருகின்றனர். அரசு இதில் தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என தெளிவுபடுத்திவிட்டது. போலீசாரோ இது தங்கள் வேலையல்ல என்றும், சினிமாத் துறையினர் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்றும் கூறிவிட்டது. வெளியிட வேண்டிய தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். விஜய் படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களுக்குப் பழி வாங்கவே தியேட்டர்காரர்கள் இப்படிச் செய்வதாகவும் பேச்சு நிலவுகிறது. இந்த நிலையில், தலைவா படத்தை வெளியிட முதல்வர் அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்யும் அவரது குழுவினரும் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பூமிகாவின் பொழுதை களவாடியது எதுவோ ?


தங்கர் பச்சான் என்றாலே
சர்ச்சை என்று ஒரு
முகம் உண்டு. மற்றொரு முகம்,
வித்தியாசமான டைரக்டர். கடைசியாக வெளியான சில படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும், அழகியில் தொடங்கி, தங்கரின் முத்திரை பதித்த படங்கள் சில இன்னமும் பேசப்படும் படங்களாக உள்ளன.
தங்கர் கடைசியாக இயக்கி, தற்போது வெளியாக தயாராக உள்ள படம் களவாடிய பொழுதுகள். இந்தி சினிமாவில் பிரபல இயக்குனராகி விட்ட நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா, தமிழில் கடைசியாக நடித்த படமும் களவாடிய பொழுதுகள்தான்.
இந்த படத்தில் பிரபுதேவாவுடன் பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் நன்றாக வந்திருக்கிறது என்று இன்ட்டஸ்ட்ரியில் ஒரு பேச்சு உள்ளது. ஆனால், வர்த்தக ரீதியில் நன்றாக போகுமா என்ற பயம், விநியோகஸ்தர்களுக்கு உண்டு. இதனால், படம் முடிந்த நிண்ட காலமாகியும், இன்னமும் ரிலீஸ் செய்யப்படாமலேயே உள்ளது.
திரைக்கு வர முடியாத சில சிக்கல்களில் சிக்கியிருந்த இப்படத்தை தற்போது மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வெளியே கொண்டு வருகிறார்கள்.

91,202 வரதட்சணை கொலைகள் ! இதில் நாம்தான் முதலில் உள்ளோம் ! யாரவது கின்னசுக்கு சொல்லுங்கப்பா ?

வரதட்சணை மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கு எதிராக கடுமையான
சட்டங்கள் இந்தியாவில் உள்ளன. வரதட்சணை என்ற சமூக நோய்க்கு எதிராக பலரும் பிரச்சார இயக்கங்கள் நடத்துகின்றனர். இருப்பினும் கடந்த 12 ஆண்டுகளில் இந்த கொடிய பழக்கம் தொடர்பான மரணங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 1, 2001 முதல் டிசம்பர் 31, 2012 வரையிலான 12 ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் 91,202 வரதட்சணை தொடர்பான மரணங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் 84,013 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டன. எஞ்சியவை விசாரணை கட்டத்திலோ அதற்கு முன்பாகவோ அரசால் கைவிடப்பட்டன. 5,801 வழக்குகள் விசாரணைக்குப் பிறகு பொய்யானவை என்று பதிவு செய்யப்பட்டன.
21-ம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போயிருக்கின்றது.

சந்திர பிரகாஷ் ஜெயின் கண்ணீர் கதறல் ! ஜெயலலிதா என்ற மனநோயாளியை வளர்த்துவிட்டது யார் ? (படங்கள்)

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின்  இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து,   இனியும் படம் வெளியாகிற சூழல் இல்லையென்றால் நானும் என் குடும்பமும் நடுரோட்டிற்கு வந்துவிடுவோம்’’ என கண்ணீர் விட்டார்.
எத்தனை தரம் பட்டாலும் திருந்தவே மாட்டார் ஜெயலலிதா,

பெப்சி அறிவிப்பு : ராதிகா தலைமையிலான சின்னத் திரை சங்கத்துக்கு இனி ஒத்துழைப்பில்லை

 ராதிகா தலைமையிலான சின்னத் திரை சங்கத்துக்கு இனி ஒத்துழைப்பில்லை - பெப்சி அறிவிப் பு சென்னை: தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து, சங்கத்தை உடைக்க முயற்சிக்கும் நடிகை ராதிகா தலைமையிலான சின்னத் திரை தயாரிப்பாளர்களுக்கு நாளை முதல் எந்த வித ஒத்துழைப்பும் தருவதில்லை என பெப்சி அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் ராதிகாவின் தன்னிச்சையான போக்கையும் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து இன்று சென்னையில் பெப்சி தலைவர் இயக்குநர் அமீர் தலைமையில் நடந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை: சின்னத்திரை தயாரிப்பளர்களிடம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஒப்பந்தம் போடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஒப்பந்த காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை.

பெந்தெகொஸ்தே தேவாலயங்களை மூட உத்தரவு !போலியான அதிசயங்களை நிகழ்த்தி மக்களைக் கொல்லும் மதகுருமார்கள்

கேமரூன் நாட்டில் ஏறத்தாழ 500 பெந்தெகொஸ்தே தேவாலயங்கள் இயங்கிவருகின்றன. ஆனால், அவற்றுள் 50 மட்டுமே முறையான அனுமதி பெற்று நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பமென்டாவில் உள்ள வின்னர்ஸ் பிரார்த்தனை மையத்திற்கு வந்திருந்த ஒன்பது வயது சிறுமி சரிந்து விழுந்து இறந்து போனார். அவருடைய உடலில் இருந்த கெட்ட ஆவிகளை விரட்டியதாக அந்தப் பாதிரியார் இதற்கு பதிலளித்துள்ளார். தாங்கள் அதீத சக்தி பெறவேண்டும் என்பதற்காக இதுபோன்ற செய்கைகள் நடைபெறுவது தடை செய்யப்படவேண்டும் என்று அந்த சிறுமியின் தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் காட்டு தர்பார் ! தலைவா தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் கண்ணீர்

படம் வெளிவராவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன்: ஜெயலலிதாவுக்கு
'தலைவா' தயாரிப்பாளர் வேண்டுகோள் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின்  வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:–
அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன். நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.
கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.

வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிவிட்டோமோ? பயப்படும் தனுஷ்?

சென்னை: ரம்ஜானுக்கு வர வேண்டிய படம் இன்னும் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில் அந்த படத்திற்கு ஆதரவாக பேசிய மாப்பிள்ளை நடிகர் தானாக வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிவிட்டோமோ என்று புலம்புகிறாராம். தளபதியின் லீடர் படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இது குறித்து மாப்பிள்ளை நடிகர் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இது போன்று படங்களை தடை செய்வதற்கு செலவழிக்கும் நேரத்தை நாட்டை முன்னேற்ற செலவழித்திருந்தால் நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்தை படித்த அவரது நலம்விரும்பிகள் பெரிய, பெரிய நடிகர்களே இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக பேச பயந்து கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் இது எல்லாம் உங்களுக்கு தேவையா என்று தெரிவித்துள்ளனர். உடனே மாப்பிள்ளை நடிகர் நான் அரசுக்கு எதிரானவனே இல்லை. நான் கூறிய கருத்தை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு தெரிவித்துவிட்டன என்று பல்டி அடித்துவிட்டார். ஆனால் நலம்விரும்பிகள் கூறியது அவருக்கு இன்னும் பயத்தை அளிக்கிறதாம். அதனால் வீணாக வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிவிட்டோமோ என்று புலம்பித் தள்ளுகிறாராம்.
tamil.oneindia.i

மத்திய அரசு: வெங்காயத்தை பதுக்கினால் கடும்தண்டனை ! ஏராளமான வெங்காயங்கள் பாராளுமன்றத்திலேயே உள்ளனவே ?

அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் வெங்காயத்தின் விலை கடந்த சில
தினங்களாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தை உரிக்கும் போது வரும் கண்ணீரை விட அதன் விலை உயர்வு தாய்மார்களுக்கு அதிகமான கண்ணீரை வரவழைத்து உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளின் வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ. 80 வரை விற்கப்படுகிறது. டெல்லி, மும்பையில் ஏற்கனவே ரூ. 80-ஐ தொட்டு விட்டது. இன்னும் சில தினங்களில் கிலோ ரூ. 100-க்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்துதான் அதிகமான வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு பெய்த அதிகமான மழையால் சேதம் ஏற்பட்டது. இதே போல மராட்டிய மாநிலத்திலும் வெங்காய உற்பத்தி குறைவாகவே இருந்தது. இதன் காரணமாகவே வெங்காய விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்: முல்லை பெரியாறு அணையை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை!

முல்லை பெரியாறு அணையை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் முன் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. தமிழக, கேரள அரசுகள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடி வருகிறார்கள்.  நேற்று முன்தினம் விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறி கேரள அரசு அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததை நீதிபதிகள் கண்டித்தனர். அப்போது அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது தவறுதான் என்று கேரள அரசு வக்கீல் ஹரீஸ் சால்வே ஒப்புக்கொண்டார். நேற்று 6வது நாள் விசாரணை நடந்தது. அப்போது கேரள அரசு வக்கீலின் வாதத்தின் போது நீதிபதிகள் இடைமறித்து முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. அதற்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்தினால் எந்தவித பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேரளாவுக்கு உத்தரவிட்டனர்

இளைய தளபதி விஜய் இப்போ பவ்வியமாக, தலைகுனிந்து அமைச்சர்கள் போல் பேசுகிறார் ! இனி எல்லாம் ஜெயமே


படங்களில் வில்லன்களை புரட்டிப் போட்டு , வீர வசனங்கள் பல பேசி ரசிகர்களின் விசில் சத்தங்களை வாங்கி விலாசம் காட்டிய.. இளைய தளபதி விஜய் இப்போ எப்படி பவ்வியமாக, தலைகுனிந்து பேசுகின்றார் என கொஞ்சம் கண்ணால பாருஙக… ஆனானப்பட்ட உலக நாயகன் எனச்சொல்லிக்கொள்ளும் கமலஹாஸனே.. ‘விஸ்வரூபம்’ படத்தை தமிழ் நாட்டில் திரையிடுவதற்கு அம்மா ஜெயாவின் காலில் வீழ்ந்தவர் என்பது தமிழ் நாட்டுக்கே தெரியும். அவருக்கே அந்த  நிலைன்றால்.. பாவம்! பச்சை பிள்ளை விஜய் அம்மாவை எதிர்க்க முடியுமா? அம்மா யாரு? அம்மாவுக்கு எதிராக நீங்கள் முதல்வராக முடியுமா? ‘தலைவா’ என்று படத்தின் தலைபை வைத்ததற்கு பதிலாக ‘அம்மாவின் தொண்டன் ’ என்ற  தலைப்பை  வைத்திருந்தால்  இப்போ இப்படி  தலைகுனிய  வேண்டி வந்திருக்குமா..? இப்ப…நான் யார் என்று தெரிகிறதா..? நான் யாருக்கு பயமென்று புரிகிறதா..?

ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக்' என்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது !18 வீரர்கள் பலி

மும்பை:மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, "ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக்' என்ற, பிரமாண்ட நீர்மூழ்கி கப்பல் திடீரென, தீப்பிடித்து, வெடித்துச் சிதறி, கடலுக்குள் மூழ்கியது. இதில் இருந்த, 18 வீரர்கள், பலியாயினர். இந்த விபத்து, இந்திய கடற்படைக்கு, மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.நம் கடற்படைக்கு சொந்தமான, போர் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள், பெரும்பாலும் ரஷ்யாவிடமிருந்து தான் வாங்கப்படுகின்றன. இதே போல், ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட, ஐ.என்.எஸ்., சிந்துரக்ஷக் என்ற, பிரமாண்ட நீர்மூழ்கி கப்பல், மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில், கடற்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள், 18 பேர் இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், சிந்துரக்ஷக் கப்பல், திடீரென பலத்த சத்தத்துடன், வெடித்து, தீப்பிடித்தது. 18 வீரர்கள் பலி:இதனால், அந்த பகுதி முழுவதும், புகை மண்டலம் சூழ்ந்து, கப்பல் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், பல அடி உயரத்துக்கு, தீ ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்பு படையினர், அங்கு விரைந்தனர். கப்பல் நிறுத்தப்பட்டிருந்த பகுதியை, அவர்களால் நெருங்க முடியவில்லை.சிறிது நேரத்தில், கப்பலின் ஒவ்வொரு பாகமும், வெடித்துச் சிதறின. கப்பலின் சிறிய பகுதி மட்டுமே, வெளியில் தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில், கப்பல் முழுவதும், கடலில் மூழ்கியது.

புதன், 14 ஆகஸ்ட், 2013

சு. சுவாமி: நரேந்திர மோடிக்கு துணையாக இருக்கவே BJP யில் சேர்ந்தேன் !

மோடி தலைமையில் மறுமலர்ச்சி ஏற்படவிருக்கிறது : சுப்பிரமணிய சாமி ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சாமி, பாஜகவில் இணைந்தார்.  இந்நிலையில் அவர்  டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ’’பாஜகவும், ஜனதா கட்சியும் ஒத்த கொள்கை உடைய கட்சிகள். நரேந்திரமோடி எனது நெருங்கிய நண்பர். நிர்வாக திறமை கொண்டவர். அவரது தலைமையில் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட உள்ளது. அதற்காக நரேந்திரமோடிக்கு உறுதுணையாக இருக் கவே நான் பாஜகவில் இணைந்தேன்’’என்று தெரிவித்தார்.அவர் மேலும்,  ‘’இந்திய ராணுவம் திறமையானதுதான். பகலில் துப்பாக்கியால் சுடக்கூடாது என ராணுவ வீரர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இது காங்கிரஸ் ஆட்சியின் அவல நிலை. மத்தியில் புதிய ஆட்சி மலரும் போது இதற்கு தகுந்த பதிலடி வழங்கப்படும்’’என்று கூறினார்.

அதிர்ச்சியில் இருக்கிறோம் என்கிறார் விஜய் ! வாய்தா ராணியை ஆட்சியில் அமர்த்தினால் நாட்டில நல்லது நடக்கும் என்று சொன்னதாக ஞாபகம்

அதிர்ச்சியில் இருக்கிறோம்; இது தர்மத்தின்படியும் தவறாகும் :விஜய் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு பல்வேறு பிரச்சனைகளால் விஜய் நடித்த தலைவா படம் தமிழகத்தில் வெளியாகவில்லை.  ஆனால், மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.  தமிழகத்தில் வெளியிட தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நடிகர் விஜய் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அப்பதிவில் அவர்,  ’’ தலைவா படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழகத்தில் வெளியாக வில்லை. படம் வெளியாவதற்கு இரண்டு நாளுக்கு முன்னர் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.இந்த நேரத்தில் தலைவா படம் வெளியானால் பிரச்சனை வரும் எனக் கருதியதால், படம் வெளியாக வில்லை. இதைக் கேட்டு படக்குழுவினர் உட்பட அனைவரும் ஆடிப்போய் உள்ளனர். படம் வெளியாகாததால் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம். இப்பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்து விரைவில் சந்தித்து பேசுவோம் என நம்புகிறோம்.

ஆர்.எஸ். பாரதி: திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று விஜய் பாடுபட்டார் ! இதுவல்லவோ பரிசு

சென்னை: திமுகவுக்கு எவன் துரோகம் செய்தாலும் அவனுக்கு நடிகர் விஜய்யின் கதி தான் ஏற்படும் என்று அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். பாமக முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் அக்கட்சியினர், தேமுதிக மற்றும் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சி நேற்று மாலை மறைமலை நகரில் நடந்தது. அவர்கள் அனைவரும் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ஸ்டாலின் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி வாழ்த்தினார். அப்போது திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சட்டசபை தேர்தலில் நாம் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று குரல் கொடுத்தவர்கள் இன்றைக்கு எந்த கதிக்கு ஆளாகியுள்ளனர் என்பதை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. சினிமாக்காரர்கள் ஒன்று திரண்டு நமக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று பாடுபட்டனர். ஆனால் தற்போது அவர்கள் படம் ரிலீஸாக முடியாத அளவுக்கு அல்லல்படுகிறார்கள். திமுகவுக்கு எவன் துரோகம் செய்தாலும் அவனுக்கும் இதே கதி தான் என்றார்.
tamil.oneindia.in

மாயாவதி : வதேராவின் ஊழலுக்கு சோனியா எப்படி பொறுப்பாகும் ? மாயம்மா திடீர் சோனியா பாசம் புரியல்லையே ?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர், அரியானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கி, பத்திரப்பதிவு துறையை ஏமாற்றி, பல கோடி ரூபாய் சம்பாதித்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா குற்றம் சாட்டி உள்ளார்.
பாராளுமன்றத்தில் திங்கள்கிழமை இந்த விவகாரத்தை எழுப்பி பா.ஜனதா அமளியில் ஈடுபட்டது. செவ்வாய்க்கிழமை இந்த விவகாரம் எதிரொலித்தது.
இந்த பிரச்சினைக்கு சோனியா காந்தி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கோரி பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் பாராளுமன்றத்திலும், மேல் சபையிலும் தெரிவித்தன.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், இந்த பிரச்சினைக்கு சோனியா காந்தி பொறுப்பு ஏற்க முடியாது. ஒருவர் தவறு செய்தால் அவரது உறவினரை தண்டிக்க முடியாது. ராபர்ட் வதேரா மீது கூறப்படும் புகாருக்கு சோனியாகாந்தி எப்படி பொறுப்பு ஏற்க முடியும் என்றார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், ஒரு மாநில பிரச்சினையை பாரதீய ஜனதா கட்சி அரசியல் ஆக்குகிறது. சோனியா காந்தி மீதும் பழி சுமத்துகிறது. இதை ஏற்க முடியாது என்றார்.nakkheeran.in

பிளாக் டிக்கெட் விற்பனை ருசிகண்ட ரசிகர்மன்றங்களுக்கு திருட்டு சிடி பெரும் சோதனை ! தலைவா சிடிக்களை தேடும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் திரைக்கு வரும் முன்னே பிரச்சணைக்கு வந்துவட்டது. ஆதனால் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டு நாட்கள் தள்ளிக் கொண்டே போகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெளிமாநிலங்களில் இருந்து தலைவா சி.டிகள் விற்பனைக்கு வந்துவிட்டது.
துலைவா படம் வரும் முன்பே அந்த படத்தின் சி.டிக்கள் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்த திருட்டு சி.டிக்களையும் விற்பனை செய்பவர்களையும் பிடிக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் தமிழக காவல் துறைக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து விஜய் ரசிகர்களே களமிறங்கி சி.டி விற்பனைக் கடைகளில் சோதனை செய்து தலைவா திரைப்பட சி.டிக்களை கைப்பற்றி வருகின்றனர்
செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் தலைவா படத்தின் சி.டிக்களை விஜய் ரசிகர்களே கைப்பற்றினார்கள்.
அதே போல திங்கள்கிழமை அறந்தாங்கியில் தலைவா சி.டி விற்பனை செய்யப்பட்ட கடையை விஜய் ரசிகர்கள் காவல் துறையிடம் புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்காததால் கடையை உடைத்து சூரையாடினார்கள். சி.டி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, கடை மீது தாக்குதல் நடத்திய விஜய் ரசிகர்கள் 5 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதே போல இன்னும் சி.டிக்கள் விற்பனைக்கு வந்தால் அனைத்து கடைகளிலும் ரசிகர்களே சோதனை செய்து அவற்றை கைப்பற்றுவோம் என்று புதுக்கோட்டை மாவட்ட விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

ராஜ்யசபா தி.மு.க., தலைவராக கனிமொழியை நியமிக்க பரிந்துரை

ராஜ்யசபா தி.மு.க., தலைவர் பதவிக்கு, தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவு
பேரவையின் மாநில செயலர் கனிமொழியை பரிந்துரை செய்வதாக, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரிக்கு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், கடிதம் எழுதியுள்ளார்.ஜூன் மாதம், ராஜ்யசபா தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில், மைத்ரேயன் உட்பட, நான்கு எம்.பி.,க்களும், தி.மு.க., சார்பில் கனிமொழியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தேசிய செயலர், டி.ராஜாவும் பதவி ஏற்றனர்.பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்கியதும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பதவி ஏற்றனர். ஆனால், அவர்களுடன் சேர்ந்து, கனிமொழி பதவி ஏற்காமல், தனியாக பதவி ஏற்றார்; தமிழில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்.
ராஜ்யசபாவில், தமிழகத்திலிருந்து தற்போது, 19 எம்.பி.,க்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வில் மைத்ரேயன், பாலகங்கா, ரபி பெர்னாண்ட், மனோஜ் பாண்டியன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜுனன்; தி.மு.க., சார்பில் கனிமொழி, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, கே.பி.ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு இடம் பெற்றுள்ளனர்.காங்கிரஸ் சார்பில், மத்திய அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், வாசன், சுதர்சன நாச்சியப்பன் மற்றும் மணிசங்கர் அய்யர்; இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா; மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜனும் இடம் பெற்றுள்ளனர்.ராஜ்யசபா தி.மு.க., தலைவராக, திருச்சி சிவா பணியாற்றி வந்தார்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் ஏன் திமுக வாதாட அனுமதி கேட்கிறது? டான்சிக்கு நடந்தது மாதிரி ஆகிடகூடாதில்லை ?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக தரப்பில் திடீரென மனுத்தாக்கல் செய்யப்பட்டு தங்களையும் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி இறுதிக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் சார்பாக திமுக எம்.பி. டி.எம். செல்வகணபதி ஒரு மனுவை பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

மதுரவாயில் Fly Over திட்டம் கிடப்பில் ! தினமும் 30 விபத்துகளை தவிர்க்க முடியும் ! ம்ம்ஹும் அது திமுக திட்டம் ?

மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம் செயலாக்கம் பெற்றால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்; ஒவ்வொரு நாளும் தற்போது 30 விபத்துகள் அங்கே நடைபெறுகின்றன; இந்தப் புதிய திட்டம் வருமானால், இந்த விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.
2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நான் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கழக ஆட்சியில் விரைவாக நடைபெற்று வந்த இந்தத் திட்டத்தை தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்துவிட்ட காரணத்தால் தான், இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த “சோமா” நிறுவனம், தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்று கோரியது.

பண்ருட்டி ராமச்சந்திரன் விரைவில் அதிமுகவில் ஐக்கியம் ?

தேமுதிகவில் விஜயகாந்துக்கு அடுத்த ராங்கில் இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் விரைவில் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை சந்தித்து தொகுதி அபிவிருத்தி பற்றி பேச இருப்பதாக நம்பகமான செய்திகள் வந்துள்ளன . ஆமானப்பட்ட புரட்சி தலைவரால் பண்ருட்டி  பாஸ்கரராவ் (NTR ஐ காலவாரிவிட்டவர் ) என்று சந்தேக நாம சூட்டப்பட்டுள்ள இவருக்கு கப்டன் ராஜ்யத்தில் உரிய அந்தஸ்து அண்மைகாலங்களாக வழங்க படவில்லை என்று கவலையில் உள்ளாராம் . தள்ளாத வயதில் தள்ளாடாத பதவி ஆசை , விரைவில் அமைச்சராகவோ கொபசெயாகவோ உயர வாழ்த்துக்கள்

CAG:ஹெலிகாப்டர் AgustaWestland கொள்முதலில் பெரிய அளவில் விதிமீறல் ! புயலைக் கிளப்பியது சிஏஜி !


India auditor says finds irregularities in AgustaWestland deal

டெல்லி: இந்திய விமானப் படைக்கு இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்யதில் எந்த ஒரு விதியையுமே பின்பற்றவில்லை என்று அதிரடியாக மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம்சாட்டியுள்ளது. இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான கணக்காய்வு அறிக்கை இன்று நாடாளுனன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாதுகாப்பு தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கென வகுக்கப்பட்ட விதிகள் இந்த கொள்முதலில் பின்பற்றப்படவில்லை. 2006ஆம் ஆண்டு பாதுகாப்பு தளவடா கொள்முதல் விதி, 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட கொள்முதலுக்கு முந்தைய பரிசீலனை வேண்டுகோள் என அனைத்துமே இந்த கொள்முதலில் மீறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் அரசுக்கு சாதகமாக பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுன. ராசா கனிமொழி மாதிரி யாராவது கிடைப்பாங்க பேசாம எஸ்கப் ஆயிடுங்க

முதலீடு இல்லாமல் கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி? வதேரா கற்று கொடுப்பார் : பா.ஜ.க

புதுடெல்லி: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது கூறப்படும் நிலமோசடி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் அமளியில் இறங்கினர். இந்தப்பிரச்னையுடன் ஜம்மு கலவரம், கேரள மாநிலத்தில் சோலார் பேனல் ஊழல் விவகாரமும் சேர்ந்து கொண்டதை தொடர்ந்து இரு அவையும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல பிரச்னைகள் குறித்து பேச தொடங்கினர்.

தமிழ் கோயில் உள்பட 40 இந்திய கிராமங்கள் மியான்மருக்குள் போகும் அபாயம்

இம்பால்: இந்தியா- மியான்மர் எல்லையில் முறையான அளவீடு மேற்கொள்ளப்படாமல் எல்லை வேலி அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் மோரே தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்கள் மணிப்பூருக்குள் போகும் அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மணிப்பூர் ஐக்கிய கமிட்டியினர் கூறுகையில், மியான்மருடனான எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு காணாமல் எல்லை வேலி அமைப்பதால் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் மியான்மருக்குள் போகக் கூடிய அபாயம் இருக்கிறது. இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதனால் எல்லை வேலி அமைக்கும் பணியை உடனே நிறுத்தி இருநாட்டு அதிகாரிகளும் இணைந்து கூட்டு சர்வே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். இதனிடையே மோரேவில் அமைக்கப்பட்டு வரும் எல்லை வேலியை கண்காணிப்பதற்காக மணிப்பூர் மாநில அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது
tamil.oneindia.in

தங்கம் வெள்ளி பிளாட்டினம் விலை மீண்டும் உயர்கிறது

தங்கம் இறக்குமதி வரியை 8% இருந்து 10%ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. வெள்ளி இறக்குமதி வரியையும் 6% இருந்து 10%ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி பிளாட்டினம் இறக்குமதி வரியையும் 10%ஆக மத்திய அரசு உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி வரி உயர்வால் தங்கம், வெள்ளி விலை மேலும் உயரும் எனக் கூறப்படுகிறது

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் பயங்கரவாதம் !

போஸ்டர்
"சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் பயங்கரவாதம் !" சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் 1-8-2013 அன்று சிதம்பரம் மேல வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. சிதம்பரம் நகர தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்டத்தலைவர் வெங்கடேசன், செயலாளர் கலையரசன், பாதிக்கப்பட்ட பெற்றோர் செல்வக்குமார், மனித உரிமை பாதுகாப்பு மைய செயலாளர்கள் வழக்றிஞர்கள் செந்தில், கடலூர் செந்தில் குமார் ஆகியோர் உரையாற்றினர்.

California Hyperloop transport அமெரிக்காவில் ஹைபர்லூப் போக்குவரத்து திட்டம்

California billionaire Elon Musk took the wraps off his vision of a futuristic "Hyperloop" transport system on Monday, proposing to build a solar-powered network of crash-proof capsules that would whisk people from San Francisco to Los Angeles in half an hour.
 சான்பிரான்சிஸ்கோ:  எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ்-இன் நிர்வாக இயக்குனரான எலோன் மஸ்க் தனது எதிர்காலத் திட்டமான ஹைபர்லூப் போக்குவரத்து திட்டத்தைப் பற்றிய அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். கன்கார்ட், அதிவேக ரயில், ஏர் ஹாக்கி டேபிள் போன்றவற்றை கலந்தாற்போன்ற மாதிரியில், சூரிய சக்தியின் உதவியுடன் உடைந்துவிடாத தன்மை கொண்ட காப்ஸ்யூல் வடிவத்தில் உள்ள இந்த போக்குவரத்து சாதனத்தில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு அரை மணி நேரத்தில் செல்ல முடியும். இது வெற்றியடையும் பட்சத்தில், நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் ஒரு புதிய சாதனையே நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். ஆயினும், பொருளாதாரம் மற்றும் இதன் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் இதில் இன்னும் உறுதி செய்யப்பட வேண்டும்.

கிங்பிஷர் நிறுவனத்தின் Head Office பறிபோகிறது!! மும்பை ஹவுஸ்! கோவா ஹவுஸூம் பறிபோகிறது

மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு கடன் கொடுத்த வங்கிகள் தற்போது அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடங்களை கையகப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மும்பை விமான நிலையம் அருகே கிங்பிஷர் ஏர்லைன்ஸின் தலைமையகம் செயல்பட்டு வந்த கட்டிடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கிங்பிஷர் நிறுவனத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ1,600 கோடியும் பிஎன்பி வங்கி ரூ800 கோடியும் ஐடிபிஐ வங்கி ரூ800 கோடியும் கடன் கொடுத்துள்ளன. இந்தக் கடனை திருப்பி செலுத்தாதால் அந்த நிறுவனத்தின் கட்டிடங்களை கையகப்படுத்தி விற்பனை செய்ய வங்கிகள் முடிவு செய்துள்ளன. தற்போது மும்பை ஹவுஸ் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து கோவாவில் உள்ள மற்றொரு கட்டிடமும் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இவற்றை விற்பனை செய்து தங்களது கடன் தொகையை வசூலித்துக் கொள்ள வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
tamil.oneindia.in

Kerala மீது Contempt of Court குற்றச்சாட்டு பாயுமா ?

முல்லை பெரியாறு அணை வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் வாதம் முடிவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கேரள தரப்பில் வாதம் நடந்தது. கேரளா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ்சால்வோ ஆஜரானார்.அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியது, கடந்த 2006-ம் ஆண்டு முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 144 அடியாக உயர்த்தலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை மதிக்காமல், கேரளாவில் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது ஏன், இது சுப்ரீம் கோர்ட்டை செயலற்றதாக்குவதாக உள்ளது என்றனர். "இதற்கு சால்வே கூறுகையில், மக்கள் நலன் கருதியே சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் கேரள சட்டசபையி்ல் நிறைவேற்றப்பட்டது. எனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காதது தவறு தான் என்றார்.

தமிழ்நாட்டில் இந்து தலைவர்களை கொல்ல பணம் உதவி செய்த போலீஸ் பக்ருதீன்

  மதுரை: தமிழகத்தில் இந்து தலைவர்களை கொல்ல லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு வசூலித்து பதுக்கி வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் நெல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் 18 கிலோ வெடி மருந்தை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை கொலை செய்யவும், அதற்கான வழக்கு செலவுக்காகவும் ரூ.6 லட்சம் வரை பணம் வசூல் செய்யப்பட்டதும் தெரியவந்தது.இந்த பணத்தை மேலப்பாளையத்தை சேர்ந்த கட்டை சாகுல் வீட்டில் பதுக்கி வைத்து இருந்தனர். இதையறிந்த சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் கட்டை சாகுல் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி ரூ.6 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

தலைவா திருட்டு சி டியை கண்டும் காணாமல் நடிக்கும் தமிழக போலீஸ்

நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் திரைக்கு வருவதில் பல சிக்கல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தலைவா படம் திருட்டு சி.டிகளாக விற்கப்படுகிறது. மற்ற சி.டிகளை விட 10 ரூபாய் விலை அதிகமாக விற்கிறார்கள் அவற்றை தடுக்க வேண்டும் என்ற அறந்தாங்கி காவல் நிலையத்தில் விஜய் ரசிகர்கள் புகார் சொல்லியும், தலைவா சி.டி விற்கவில்லை அங்கு சிங்கம் 2 சி.டி தான் விற்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் பொருப்பாக இருக்கும் அதிகாரி பதில் சொல்லி அனுப்பியுள்ளார். (சிங்கம் 2 சி.டி யும் திருட்டு சி.டி தான் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத அந்த அதிகாரி.)
இதைப் பார்த்த ரசிகர்கள், தலைவா சி.டி விற்பனை செய்யும் கடைக்கு முன்பு திரண்டு கடைக்குள் நுழைந்து கடையை அடித்து நொறுக்கியதுடன், அனைத்து சி.டி களையும் வெளியில் அள்ளிவந்து உடைத்தார்கள். திருட்டு சி.டி விற்ற குணசேகரன் மீது நடவடிக்கை எடு என்று கோஷமும் போட்டனர். ஆனால் அதன் பிறகும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனியும் காவல் துறையை நம்பி பயனில்லை. நாமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விஜய் ரசிகர்கள் அடுத்த ஊர்களில் சி.டி விற்பனை நடக்கிறதா என்று கண்காணிக்க புறப்பட்டுவிட்டனர்.
- செம்பருத்திnakkheeran.in

குஜராத் போலி என்கவுண்டர் Police பிபி பாண்டே இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்

டெல்லி: குஜராத் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில்
தலைமறைவான போலீஸ் அதிகாரி பிபி பாண்டே இன்று விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பிபி பாண்டேவுக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இம் மனு நீதிபதி பி.எஸ். செளகான் தலைமையிலான பெஞ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த என்கவுன்ட்டர் வழக்கில் அவர் இன்னும் தலைமறைவாகத் தான் உள்ளார்.அவரது இந்த நடத்தையே, முன்ஜாமீன் கோரும் உரிமையை தடுக்கிறது. இதுபோன்ற நபர்களுக்கு உச்ச நீதிமன்றம் பாதுகாப்புக்கான புகலிடமாக உள்ளது. மேலிடத்தினர் நிவாரணம் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகுகின்றனர். இதன் மூலம், நீதிக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஏழை மக்களின் நேரத்தை அவர்கள் வீணடிக்கின்றனர் என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இனியும் தலைமறைவாக முடியாத நிலையில் இன்று காலை விசாரணை நீதிமன்றத்தில் பிபி பாண்டே சரணடைந்தார்
tamil.oneindia.in<

வெற்றியை நோக்கி திமுக? பா ம க , தே மு தி க மற்றும் பல கட்சியினர் திமுகவை நோக்கி யாத்திரை !

சென்னை: காஞ்சீபுரம் மாவட்ட பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3,000 பேர் இன்று திமுகவில் சேர்கின்றனர். காஞ்சீபுரம் மாவட்ட பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி இன்று திமுகவில் சேர்கின்றனர். இன்று மாலை மறைமலை நகரில் நடக்கும் விழாவில் அவர்கள் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து, கட்சி உறுப்பினர் அட்டைகளை ஸ்டாலின் வழங்கி உரை நிகழ்த்துகிறார். இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பாமக துணைத் தலைவருமான து.மூர்த்தி மற்றும் தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் தி.மு.கழகத்தில் இணையும் மாபெரும் விழா மறைமலைநகர் அண்ணா திடலில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. திமு கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் து. மூர்த்தி, தேமுதிக பிரமுகர் தமிழ்வேந்தன் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைகிறார்கள்.

குத்துபாட்டுக்கு ஆடுபவர்களுக்கே ஹீரோயின் வாய்ப்பு: பேரரசு முடிவு

சென்னை:‘அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானம் தங்கையாக நடித்தவர்
அகன்ஷா புரி. இவர் பேரரசு இயக்கும் திகார் படத்தில் ஹீரோயினானார். இது பற்றி பேரரசு கூறியது:என்னுடைய படத்தில் குத்தாட்ட பாடலுக்கு ஏற்ப துள்ளல் ஆட்டம் ஆடும் ஹீரோயின்களையே தேர்வு செய்வேன். ‘திகார் படத்திற்கும் அதுபோன்ற ஹீரோயின் தேவைப்பட்டார். ஹீரோ முகுந்தன் புதுமுகம் என்பதால் ஹீரோயினும் புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.

மாட்டினார் உம்மன் சாண்டி ! பேரம்பேசும் சரிதா நாயர் ! பதவி விலக சொல்லும் கேரள மக்கள் !

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட
சரிதா நாயர், ஒரு விழாவில் முதல்வர் உம்மன் சாண்டியுடன் மிக நெருக்கமாக காதில் ரகசியம் பேசுவது போல வெளியான புகைப்படம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோலார் பேனல் மோசடி விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலகக் கோரி இடது முன்னணி சார்பில் பல்வேறு
போராட்டங்கள் நடந்து வருகின்றன. தனக்கும் இந்த மோசடிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும், சரிதாநாயரை எனக்கு தெரியவே தெரியாது என்றும் முதல்வர் உம்மன் சாண்டி கூறி வந்தார்.

நிறைகுடம் பால்குடம் மலர்கொத்து ஏந்தி விடுமுறையிலிருந்து வரும் ஜெயலலிதாவை வரவேற்க காத்திருக்கும் அடிமை கூட்டம்

கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவை மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் போயஸ்கார்டன் பகுதியில்  கூடியிருந்து வரவேற்ற காட்சி.

கமலுக்கு எழுந்த விஸ்வரூப முழக்கம் விஜயின் தலைவாவுக்கு ஏன் எழவில்லை ?

கமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...?

தலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை ??? என்று தொடர்ந்து நிறைய பேர்   முக நூலிலும்  டுவிட்டரிலும்   அறிவுபூர்வமான கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்...பொதுவா இதற்கு தமிழ் திரைஉலகம் பொங்கி இருக்க வேண்டும்... காரணம் பாதிக்கப்பட்டது அவர்களில் ஒருவர்....  நாளை  இது யாருக்கும் நேரலாம்  எந்த ஆட்சியிலும் நடக்கலாம்... அதனால் ஒட்டு மொத்த திரைஉலகமும் பொங்கி இருக்க வேண்டும்...நடிகர்  விஜய் நடிகர் சங்க உறுப்பினர் ...  நடிகர் சங்கம் பொங்கி இருக்க வேண்டும்.. ஆனால்  பொங்கவில்லை... காரணம்... இங்கே சந்தோஷம், பெருமை என்றால் மட்டுமே என்னால் ...என்னால் ...இது நடந்தது என்று மார்தட்டிக்கொள்வது ,இங்கே காலம் காலமாய் நடைபெற்று வருகின்றது... பிரச்சனை என்றால் ஒரு பயலும் கிட்டே வரமாட்டார்கள்...

இலவசங்களுக்கு தடை கூடாது ! தேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதா எதிர்ப்பு

தேர்தலின் போது விலையில்லா பொருட்கள் அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தலையிடு வதற்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், ’’ஜனநாயக நாட்டில் கொள் கைகள், நோக்கங்கள் வகுக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆட்சிக்கு வரும்போது செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த கருத்தை உருவாக்க சுதந்திரம் உண்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் கட்சிகளின் அறிக்கைகளை கட்டுப்படுத்துவதில்லை. தேர்தல் அறிக்கைகளை வெளியிட கட்சிளுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். தங்களது பிரதிநிதிகளை தேர்ந் தெடுப்பதில் மக்களுக்கு உரிமை உண்டு. தேர்தல் அறிக்கையில் விலையில்லா பொருட்கள் வழங்குவது குறித்த கட்டுப்பாடு ஏழைகள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் . ஏழைகள் முன்னேற்றத்துக்கான நடவடிக்கையை இலவசங்கள் என கூறுவது பொருத்தமானதல்ல. சமுதாய ஏற்றதாழ்வுகளை போக்கவே அரசால் திட்டங்கள் வகுக்கப்படுகிறது. ஜனநாயக நாட்டில் தீர்மானி க்கும் உரிமை மக்களுக்கு தான் உண்டு. தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் தலையிடக்கூடாது’’ என கூறியுள்ளார்; nakkheeran.in<

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

ஜெயலிதாவின் காலில் விழுந்து கதறிய விஜய் என்ற செய்தியை எதிர்பார்க்கலாமா?

டெரர் ஃபேஸ்லங்காரங்களால் சவடால் அடிக்கும் பொய்கள், தங்களை உண்மைகளுக்கும் மேலானவை என்று எப்போதும் காட்டிக் கொண்டாலும், அவற்றின் ஆயுள் அற்பமென்பதால், அவை சிதறி விழும் போது மீண்டும் மீண்டும் அவலத்திற்கு தள்ளப்படுவது இயற்கை. இது பஞ்ச் டயலாக்கிற்கு போட்டியாகச் சொல்லப்படும் பஞ்ச் தத்துவமென்றாலும் “காவலனி”ல் முறைத்து, பிறந்த நாளில் தடுமாறி, “தலைவா”வில் தள்ளாடுகிறது விஜயின் சினிமா மேக்கப். “Time to lead” எனும் தலைவா படத்தின் ‘கம்பீர’ முழக்கம் இப்போது “Time to run” என்பதாக சரிந்து விழுந்திருக்கிறது.
“Time to lead” எனும் தலைவா படத்தின் ‘கம்பீர’ முழக்கம் இப்போது “Time to run” என்பதாக சரிந்து விழுந்திருக்கிறது.
சென்ற தேர்தலில் விஜய் அன் கோ தமக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை என்பதிலிருந்து ஜெ-வுக்கும் வி-வுக்குமான முரண்பாடு ஆரம்பிக்கிறது. பிறகு தமிழ்நாட்டில் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், அந்தக் காலத்தில் பாக்யராஜ், டிஆர் (இவர் இப்போதும் களத்தில் உள்ளார் என்றாலும் அதன் பரப்பளவு 2க்கு 2 அடி) துவங்கி பிறகு விஜய் வரைக்கும் ஆளாளுக்கு அடுத்த முதல்வர் என்று பிளக்ஸ் வைப்பது ஜெவுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டவுட்டுக்கு மற்ற உருவங்களெல்லாம் வித்தவுட்டாகத்தான் தெரியும் என்பது பாசிசத்தின் பாலபாடம்.
இதில் ரஜினி அரசியல் ஆட்டத்துக்கு வரவில்லை என்று ஓட, சரத்குமார் காலில் விழ, விஜயகாந்த் போயஸ் தோட்டத்திலிருந்து தனது வாழ்வைத் துவக்கி தற்போது அங்கேயே முடிக்குமளவு விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளார். மீதமிருப்பவர் விஜய். இதில் இளைய தளபதியே சும்மா இருந்தாலும் அவரை உசுப்பி விட்டு, அவரது படத்தைக் காட்டி அரசியல் ஆசைகளை ரசிகர்களுக்கு வளர்த்து விட அப்பா சந்திரசேகர் முயல்வதால் ஜெவின் கண்கள் கோபத்தில் சிவப்பானது.

இந்திய வம்சாவளி டாக்டர் தற்கொலைக்கு இங்கிலாந்து மருத்துவ அதிகாரிகள் டார்ச்சர் காரணம்

லண்டன்:இங்கிலாந்தில் இந்திய பல் டாக்டர் ஒருவர், சுகாதார துறை
அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் யார்க்ஷயர் பகுதியில் வசித்தவர் ஆனந்த் காமத் (42). இவரது மனைவி ரஜினிபிரசாத். இருவரும் பல் டாக்டர்கள். யார்க்ஷயர் அருகே லீட் என்ற பகுதியில் உள்ள ரோத்வெல் டெண்டல் சர்ஜரி மருத்துவமனையில் பணியாற்றினர். இந்த மருத்துவமனை இங்கிலாந்தின் தேசிய மருத்துவ சேவை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. லீட் பகுதியிலேயே பல் டாக்டர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, ரோத்வெல் மருத்துவமனையில் பணியாற்றிய ஆனந்த், ரஜினி பிரசாத்துக்கு பணிச்சுமை அதிகரித்தது.

தலைவாவுக்கு ஏன் தடை? நமக்கு வாய்த்த அடிமைகள் லிஸ்டில் அப்பனும் பிள்ளையும் இல்லையாமே ?

சென்னை: நான் என்ன பாவம் செய்தேன்.... என் மகனுக்கு ஏன் இத்தனை மனக்கஷ்டம் வரவேண்டும், என தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர்காரர்களிடம் எஸ்ஏ சந்திரசேகர் வாய்விட்டுப் புலம்பியுள்ளார். தலைவா படத்துக்கு வந்துள்ள நெருக்கடி விஜய் மற்றும் அவரது தந்தையை நிலைகுலைய வைத்துள்ளன. தலைவா படம் உலகமெங்கும் வெளியாகிவிட்டாலும், விஜய்யின் சொந்த மாநிலமான தமிழகத்தில் மட்டும் எவ்வளவோ முயற்சி செய்தும் வெளியாகாமல் போய்விட்டது. முன்பு கமல்ஹாஸனின் விஸ்வரூபத்துக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது. ஆனால் தனக்கேற்பட்ட நிலையை தொடர்ந்து மீடியா மற்றும் மக்கள் முன் எடுத்துச் சொல்லி, நீதிமன்றம் போய் தீர்த்துக் கொண்டார் கமல். ஆனால் நடிகர் விஜய் அல்லது இயக்குநர் விஜய் அல்லது படத்தின் தயாரிப்பாளர் யாருமே குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களைக் கூட சந்தித்து நிலைமையைச் சொல்ல முடியாத சூழல். முன்பு கமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதே திரையுலகம் இப்போது மவுனம் காக்கிறது. அரசியல் பின்னணியில் ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், தன் மகனுக்கும் அவர் படத்துக்கும் இப்படி ஒரு நிலை வந்தது அப்பாவாக மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கத்துக்கு இப்போதும் தலைவராக உள்ள எஸ்ஏ சந்திரசேகரனுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் சர்வ பலம் பொருந்தியதாக, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் முதலாளிகளின் அமைப்பாக இருக்கிற தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரால் தன் மகன் படத்தையே சிக்கலின்றி வெளியிட முடியவில்லையே என்ற பேச்சு கடந்த ஒரு வாரமாக வெளிப்படையாகவே ஒலித்து வருகிறது. அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில், "நான் என்ன பாவம் செய்தேன், என் மகனுக்கு ஏன் இத்தனை மனக்கஷ்டம் வரவேண்டும்?" என்று சக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் சொல்லி வருந்தியுள்ளார். இவ்வளவு பிரச்சினைக்கும் எஸ்ஏ சந்திரசேகர் பேசியதாகக் கூறப்படும் சில விஷயங்களே காரணங்களாகக் கூறப்படுகிறது. தன்னை அண்ணாவுக்கும் தன் மகன் விஜய்யை எம்ஜிஆருக்கும் ஒப்பிட்டு எஸ் ஏ சந்திரசேகரன் பேசியதற்கான ஆதாரங்களை மேலிடத்தின் கவனத்துக்கு திரையுலகைச் சேர்ந்த சிலரே கொண்டு போயுள்ளனர். அடுத்து தலைவா படத்துக்கு வந்த சிக்கல்களைப் பார்த்து, "எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனுக்கு வராத சோதனையா... இதுவும் அப்படித்தான்," என்று கமெண்ட் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
tamil.oneindia.in