சனி, 17 டிசம்பர், 2011

கேரள அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள்!- இளங்கோவன் பேச்சு


EVKS Elangovan
சென்னை: கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள் என சோனியா காந்திக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாள் விழா, கூடங்குளம்- முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்த விளக்கக் கூட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மத்திய அமைச்சர்கல் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுனர்.
கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியது.

கிராமத்து ஆளு மாதிரி இருப்பாரு. ஆனால் வில்லங்கமானவர். சிக்கிடாதே

சோனா பாப்பா.. மாமா வந்திருக்கேன் பாரு.. எந்திரிம்மா’’

இன்டர்நெட்டில் வந்த என்னுடைய ஆபாசப் படங்களை எடுப்பதற்குள் நான் அடைந்த மன உளைச்சலை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஒரே வாரத்தில் லட்சக்கணக்கானவர்கள் என் படங்களை நெட்டில் பார்த்திருந்தார்கள். ஹோட்டலில் டிரெஸ்ஸிங் டேபிளுக்குக் கீழே சிறிய கேமராவை மறைத்து வைத்து, அந்தப் படங்களை எடுத்திருந்தது தெரிய வந்தது. எனக்குத் தெரிந்த ஒரு இயக்குநரிடம் சொல்லி, அவர் உதவியுடன் பெரும்பாடுபட்டு அந்த போட்டோக்களை நெட்டில் இருந்து நீக்கினேன்.
எனக்கு மட்டுமல்ல, பல நடிகைகளுக்கும் இதுபோல் நடந்திருக்கிறது. அதற்குப் பிறகு எந்த ஹோட்டலில் தங்கினாலும் அந்த அறையை ஒருமணி நேரம் சோதித்த பிறகுதான் எனக்கு நிம்மதி வரும்.
அடுத்து சில மாதங்களில் பிரபல இயக்குநர் ஒருவரின் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. ‘சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தில் காமெடி நடிகரின் ஜோடியாக நடிக்க முடியுமா?’ சூப்பர் ஸ்டார் படம் என்றவுடன் சந்தோஷம் வந்துவிட்டது.

ரயிலில் நடிகை ரோஜாவிடம் கைவரிசை: பல லட்சம் ரூபாய் வைர நகைகள் கொள்ளை!

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஓடும் ரயிலில் நடிகை ரோஜா தூங்கிக் கொண்டிருந்த போது அவரது வைர நகைகள் கொள்ளை போயின.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நடிகையுமான ரோஜா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் அங்கிருந்து மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு 10 மணிக்கு ஏறினார். ரயிலில் படுத்ததும் நன்றாக தூங்கி விட்டார். அப்போது அவர் தனது வைர காதணி, ரூபி மற்றும் வைர கற்கள் பதித்த 5 பவுன் நெக்லஸ் ஆகியவற்றை கைப்பையில் வைத்திருந்தார்.
நள்ளிரவில் அவரது பெட்டிக்குள் புகுந்த மர்ம மனிதன், ரோஜாவின் கைப்பையில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டான்.

Facebook... பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது

திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்.
கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள்
பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதையிலும் சிலர் செல்ல வழிவகை ஏற்பட்டு விடுகிறது. சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ஒரு பெண் தொடர்புகளை ஏற்படுத்தி பலரை ஏமாற்றி பணம் பறித்த தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்துவருகிறார்.

மலையாள சினிமா சூட்டிங்கிற்கு எதிர்ப்பு – படக்குழுவினர் ஓட்டம்

No 66 Madhura Bus
நெல்லை:  முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் நெல்லை அருகே நடிகர் பசுபதி நடிகை பத்மபிரியா நடித்த மலையாள சினிமா படப்பிடிப்பு நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து படப்பிடிப்பை நிறுத்திய பட குழுவினர் உடனடியாக கேரளாவிற்கு திரும்பிச் சென்றனர்.
நெல்லை அருகே சுந்தரபாண்டியபுரத்தில் பஸ் நம்பர் 66 மதுரை என்ற மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. நாயகன் பசுபதி, நாயகி பத்மபிரியா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

துக்ளக் cho:கேரளாவிலும், இடுக்கி அணைக்குப் பக்கமாக உள்ள பகுதிகளில்தான் இந்த அதிர்வுகள் தோன்றுகின்றன

துக்ளக் பகுதிகள்
கேள்வி : ‘முல்லைப் பெரியாறு அணைக்கு நில அதிர்வால் பாதிப்பில்லை’ – என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளாரே! இதற்குப் பிரதமரின் முடிவு என்னவாக இருக்கும்?

பதில் : ‘நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவது 1974-ல் கேரள அரசினால் நிரப்பப்பட்ட இடுக்கி நீர்த்தேக்கத்தினால்தானே தவிர, முல்லைப் பெரியாறு அணையினால் அல்ல’ என்று சில விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். ‘ஒரு அணை கட்டி நூறு ஆண்டுகளைக் கடந்து, இந்த மாதிரி அதிர்வுகள் தோன்றாது. மஹாராஷ்டிரத்தில், கொய்னா அணை கட்டி சில ஆண்டுகளில், நில அதிர்வுகளும், அதைத் தொடர்ந்து விபத்தும் நேரிட்டன. கேரளாவிலும், இடுக்கி அணைக்குப் பக்கமாக உள்ள பகுதிகளில்தான் இந்த அதிர்வுகள் தோன்றுகின்றன. இடுக்கி நீர்த்தேக்கத்தில், உள்ள நீரின் அளவு அதிகமாகும்போதுதான் இந்த அதிர்வுகள் அதிகமாகின்றன. ஆகையால், இடுக்கி அணைக் கட்டில், நீர்த் தேக்கத்தின் அளவு குறைக்கப்பட வேண்டும்’ என்ற கருத்து அந்த விஞ்ஞானிகளால் கூறப்பட்டிருக்கிறது. இது சரியானதுதானா என்று சொல்லக் கூடிய தகுதி நமக்கு இல்லை. ஆனால், இந்த மாதிரி கருத்துக்களை விவரம் அறிந்தவர்கள் கூறுகிறபோது, அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆகையால், இந்தக் கருத்தை ஒட்டிய ஆய்வு நடத்தப்படுவது நல்லது.

கே : முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழப்பது போல தயாரிக்கப்பட்டுள்ள ‘டேம் 999’ திரைப்படம் பற்றி?

1979 எம்.ஜி.ஆர் - அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது

முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு! - ஞாநி


முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை என்பது என்ன?

‘தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 வருடமாகிவிட்டது. இந்த அணை பலவீனமாகிவிட்டது. எனவே உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து. புதிய அணை கட்ட வேண்டும். இப்போதுள்ளதை உடைக்க வேண்டும்’ என்பது கேரள அரசின் நிலை. ‘அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. புதிய அணை தேவையில்லை. இருக்கும் அணையை அழித்து புது அணை கட்டுவதில் இறங்கினால், தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரிலும் விவசாயம் பாதிக்கப்படும்’ என்பது தமிழக அரசின் நிலை.

இரண்டில் எது உண்மை?

ப.சிதம்பரம் ‘ஹோட்டல்’ விஷயத்தில் முதல் தடவையாக வாய் திறக்கிறார்!

 டில்லி அரசியலில் ஒரு சிறு குழந்தைக்கும் புரியக்கூடிய அளவில் ஒரு விஷயம் நடக்கின்றது என்றால், அது ‘சில சக்திகள்’ உட்துறை அமைச்சர் சிதம்பரத்தை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றாமல் விட போவதில்லை என்பதுதான்.
ஸ்பெகட்ரம் வழக்கில் அமைச்சர் சிதம்பரத்தை தொடர்புபடுத்தி, அந்த ரூட்டில் அவரை அமைச்சரவையில் இருந்து தூக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கமாக conflict of interest குற்றச்சாட்டு இப்போது சூடு பிடிக்கிறது.
Conflict of interest குற்றச்சாட்டு, அமைச்சர் தனது பதவியைப் பயன்படுத்தி, தனது துறை சார்ந்த உதவி ஒன்றை, தாம் வக்கீலாக ஆஜராகிய கட்சிக்காரருக்கு செய்தார் என்ற வகையில் உள்ளது.

Hotel Saravanabhavan ராஜகோபாலுக்குப் புதுச் சிக்கல் வந்துள்ளது

Rajagopal
சென்னை பிரபல சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்குப் புதுச் சிக்கல் வந்துள்ளது. அவர் மீது ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றவர் ராஜகோபால். ஜீவஜோதி என்ற பெண்ணின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை செய்யப்பட்டு கொடைக்கானல் மலையில் அவரது பிணத்தைப் போட்டு விட்டனர். இந்த வழக்கில் சிக்கி கைதானார் ராஜகோபால்.

ராமதாசுக்கு பெட்டி போச்சா? போட்டு உடைக்கிறார் வேல்முருகன்

பண்ருட்டி: ""பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், யார் யாரை மிரட்டிப் பணம் பறித்தார் என்பதற்கு என்னிடம் டேப், வீடியோ ஆவணங்கள் உள்ளன'' என்று, முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.

கடலூர் மாவட்டம், காடாம்புலியூரில், இளம்புயல் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. அந்த கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசியதாவது: நான் 1996ல் தான் கட்சிக்கு வந்தேன் என்றும், எப்படி எனக்கு பணம் வந்தது என்றும் கேட்டு, துரோகி எனவும் பழிசுமத்துகின்றனர். ராமதாஸ் 1990ல், டி.எஸ்.ஈ.1850 என்ற ஒரு அம்பாசிடர் கார் தான் வைத்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக, தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகளிடம், அவர் பெட்டி ஏதும் வாங்கவில்லை எனக் கூறட்டும். நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது வசூல் செய்தது இல்லை. கட்சி நிர்பந்தத்திற்காக சிலர் வசூல் செய்தனர். அவர்களும் இப்போது என்னிடம் இல்லை. கடந்த தேர்தலில் ஜி.கே. மணி, நான், குரு தவிர, மற்ற 27 பா.ம.க., வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடம், 2 கோடி சொத்துக்கு பவர் எழுதி வாங்கப்பட்டது. தகவல் உரிமைச் சட்டத்தில், 27 வேட்பாளர்களின் சொத்துக்கள் கேட்டால், யாருடைய பெயருக்கு மாறியுள்ளது எனத் தெரியும்.

ராமதாஸ், யார் யாரை மிரட்டி பணம் பறித்தார் என்பதற்கு டேப், வீடியோ ஆவணங்கள் உள்ளன. அரசியல் நாகரிகம் கருதி, அமைதி காத்து வருகிறேன். விரைவில் என் அமைதியை கலைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

மம்முட்டி, மோகன்லால் படங்கள் நிறுத்தம்

முல்லைப் பெரியாறு பிரச்சினையால் மலையாள படங்களை திரையிட தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி நடித்த வெனிசில் வியாபாரி, மோகன்லால் நடித்த அரபியும் ஒட்டகமும் ஆகிய இரு படங்களும் இந்தியா முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் மம்முட்டி, மோகன்லால் படங்கள் வசூல் ஈட்டுவதால் நிறைய தியேட்டர்களில் இப்படங்களை திரையிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் மலையாள படங்கள் திரையிடப்படும் தியேட்டர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

அண்ணா நூலக இடமாற்றத்தடையை நீக்க முடியாது-உயர்நீதி மன்றம் கண்டிப்பு

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவதற்கு விதிக்கப்பட இடைக்காலத் தடை நீடிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போதைய நிலையில், நூலகத்தை சீராகப் பராமரிக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும் நூலகமானது நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு மாற்றப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு தமிழ்ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இடைக்கால தடை உத்தரவும் பெற்றனர்.

தமிழர்களின் உயிரை காப்பாற்றுங்கள் : கருணாநிதி கடிதம்!

சென்னை: கேரளாவில் உள்ள தமிழர்களின் உயிரை காப்பாற்றுமாறு குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேக்ஸ் மூலம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவும், சுமுகமான தீர்வு காணவும் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கைகளும், உத்தரவாதங்களும் கொடுத்துள்ள போதிலும் நெடுங்கண்டம், கைலாசபாறை, உடுமன்சாலை போன்ற கேரள கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சில சமூக விரோதிகளால் அவர்களது குடியிருப்புகளிலிருந்து கட்டாயமாக விரட்டியடிக்கப்படுகின்றனர்.
கேரளா எல்லையில் வாழும் தமிழர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது கற்கள் வீசப்படுவது, தீயிடப்படுவது போன்ற செய்திகள் கேரளாவில் பல பகுதிகளிலிருந்து வருகின்றன. கேரளாவைத் தங்களது சொந்த நாடாக கருதி நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வர மறுத்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கும் அளவுக்கு சென்று விட்டனர்.

தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 வீழ்ச்சி!

சென்னை: தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ 608 வரை குறைந்தது.
தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகரித்தது. அதே நேரம் தங்க விற்பனையும் இந்த ஆண்டு உச்சத்தை எட்டியது. ஒரே ஆண்டில் பவுனுக்கு சுமார் 6 ஆயிரம் வரை கூடிய தங்கம், நடுத்தர மக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதே நேரத்தில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ரூ.21 ஆயிரத்தை கடந்த தங்கம், அதற்கு பிறகு வந்த மாதங்களில் தங்கத்தின் விற்பனையில் ஒரு நிலையற்ற தன்மை காணப்பட்டது. ஒருநாள் கூடுவதும் மறுநாள் குறைவதுமாக இருந்து வந்தது. இருப்பினும் டிசம்பர் மாதத்தில் பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்தை கடக்கும் என்று தங்க விற்பனையாளர்கள் தெரிவித்து வந்தனர்.

விஜயகாந்த்: சபரிமலைக்கு யாரும் போகக் கூடாது

தமிழகத்திலிருந்து யாரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் போகக் கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பது தவறு. சபரிமலைக் கோவிலில் நமக்குள்ள உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் போராட்டம் நடத்துவதற்கு தேனி சென்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்கு சென்று சபரிமலையில் தான் ஐயப்பனை தரிசிக்க வேண்டுமா? தமிழ்நாட்டில் சுவாமி ஐயப்பன் கோவில்கள் கட்டி இங்கேயே தரிசனம் நடத்தலாம். அங்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்பது போல் பேசியுள்ளார்.

கம்பத்தில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி!


Cumbum
கம்பம்: கேரளாவில் தமிழர்களைத் தாக்கி விரட்டியடிப்பதைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் தமிழர்களைக் காப்பாற்றக் கோரியும், கம்பத்தில் இன்று பெரும் திரளான பெண்களின் தலைமையில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர்.
இன்று காலையிலிருந்தே மக்கள் அணி அணியாக இதில் பங்கேற்க திரண்டு வந்தனர். பெருமளவில் பெண்கள் வந்திருந்தனர். கம்பம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாரை சாரையாக திரண்டதால் கம்பத்தில் பரபரப்பு நிலவியது.
நாலாபுறமும் இருந்து ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் குவிந்து வந்ததைப் பார்க்கும்போது அரபு நாடுகளில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய மக்கள் கிளர்ச்சியைப் போல இருப்பதாக அங்கிருந்து நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் மலையாள சினிமாக்களை வெளியிடுவதில் சிக்கல்


Malayalam Film
முல்லைப் பெரியாறு பிரச்சனையால், தமிழகத்தில் புதிய மலையாள சினிமாக்களை ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகளவில் மலையாளிகளும், கேரளாவில் தமிழர்களும் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதனால் கேரளாவில் தமிழ் படங்களும், தமிழகத்தில் மலையாள படங்களும் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சனையால், தமிழகத்தில் மலையாள படங்களை திரையிட, தியேட்டர் உரிமையாளர்கள தயக்கம் காட்டி வருகின்றனர்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த 'வெனீசிலே வியாபாரி', மோகன்லால் நடித்த 'அரேபியனும் ஒட்டகவும் பி.மாதவன் நாயரும்' உள்ளிட்ட மலையாள சினிமாக்கள் நாளை கேரளாவிலும், தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது.

சில்க்கின் உண்மைக்கதை - வினுச்சக்கரவர்த்தி அதிரடி!

நடிகை ”சில்க் ஸ்மிதா”வின் வாழ்க்கையை ”தி டர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டுள்ள ஏக்தா கபூர் பெற்றுக்கொண்டிருக்கும் படத்தின் வசூல் சாதனையை குறிப்பிடுகிறார்கள். படம் ரிலீஸ் ஆன முதல் வாரமே ஐம்பது கோடி வசூலித்துள்ளதாம்.

 இந்நிலையில் சில்க் ஸ்மிதாவிற்கு சினிமா உலகத்தை காட்டிய நடிகரும் இயக்குனருமான வினுச்சக்கரவர்த்தியிடம் படம் பற்றி கேட்ட போது, “சில்க் ஸ்மிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவன் நான். சில்க் பற்றி முழுவதும் அறிந்தவன் நான். சில்க்கின் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் நான் உடன் இருந்திருக்கிறேன். இது போல் சில்க் வாழ்க்கையை படமாக எடுக்கிறார்கள் என்று அறிந்ததும் எக்தா கபூரை தொடர்பு கொண்டு, சில்க் பற்றி அதுவும் தெரியாமல் படம் எடுத்தால் அது செக்ஸ் படமாகத் தான் இருக்கும். எனவே அது பற்றிய தகவல்களை நான் தருகிறேன், அதுமட்டுமில்லாமல் கோ-டைரக்டராக வேலை செய்கிறேன்.அதற்காக எனக்கு ஒரு பைசா கூட சம்பளம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அது பற்றி மேற்கொண்டு எந்த விதமான பதிலும் வரவில்லை.

பள்ளி குழந்தைகளுக்கு புதிய ‘யு ட்யூப் ஸ்கூல்’

புதுடெல்லி : முற்றிலும் கல்வி தொடர்பான வீடியோக்களை மட்டுமே பார்க்கக்கூடிய ‘யு ட்யூப் ஸ்கூல்’ என்ற புதிய இணைய தளத்தை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களை உடனுக்குடன் வீடியோவாக யாரும் இடம்பெறச் செய்யக்கூடிய வகையில் யு ட்யூப் இணைய தளம் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிக வரவேற்பு பெற்ற வீடியோ இணைய தளமான அதில் எல்லா துறைகளை சேர்ந்த கோடிக்கணக்கான வீடியோக்களை பார்க்க முடியும். அதில் பள்ளி கல்வியும் அடங்கும்.
ஆனால், நம்நாட்டில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ என்ற பெயரில் இணைய தள வழி கல்வி அளிக்கும் பள்ளிகள் இருந்தாலும், யு ட்யூப் பார்க்க பள்ளி மாணவர்களுக்கு தடை உள்ளது. ஏனெனில், அதில் குழந்தைகளின் வயதுக்கு பொருந்தாத விஷயங்களும் இடம்பெறுகிறது. எனவே, நல்ல வீடியோக்க ளை குழந்தைகள் வீட்டு கம்ப்யூட்டரிலோ, ஐபேட் போன்ற கருவிகளிலோ தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதை தவிர்க்கும் வகையில், யு ட்யூப் ஸ்கூல் என்ற பெயரில் இணைய தளத்தை கூகுள் இப்போது தொடங்கியுள்ளது.

கேரளத்தவரின் அனைத்து கடைகளையும் மூடவும்” மதுரையில் கோரிக்கை!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தில் பதட்டம் ஓயாத நிலையில், கேரளத்தைச் சேர்ந்தவர்களின் வர்த்தக நிலையங்களின் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. மதுரை, ஈரோடு, ஆகிய இடங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள கேரளத்தவரின் நிறுவனங்கள் முழுவதையும் பாதுகாப்பு கருதி மூட உத்தரவிட வேண்டும் என மாவட்ட கலெக்டர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை பெற்ற கலெக்டர், “இந்த மனுவை அரசுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கும் தமிழ் உணர்வு உண்டு” என்றார்.
“கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுகின்றார்கள். பாதுகாப்பு காரணமாக அவர்கள் இடம்பெயர்ந்து

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்?

தமிழகத்தில், 2011ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கடந்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய அளவில், குழந்தைகள் பாலின விகிதாசாரப் படி, 31 லட்சம் பெண் கருக்கொலைகள் நடந்திருக்கலாம் என, கணிக்கப் படுகிறது.

"பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம்' என்ற தன்னார்வ நிறுவனம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், பெண் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

14 மாவட்டங்கள்: அதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம், 1,547 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 434 நிலையங்களில், பெண் பிறப்பு விகிதம், 900க்கும் குறைவாக உள்ளது. இயற்கை பெண் பிறப்பு விகிதமான, 952யை விட, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய, 14 மாவட்டங்களில், குறைவாக உள்ளது. இந்த விவரங்கள், கருவிலேயே பெண்கள் கொல்லப் படுவதையே காட்டுகிறது.

அணையை உடைக்க அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

புதுடில்லி: "முல்லைப் பெரியாறு அணையை உடைக்க அனுமதிக்க முடியாது' என, அணையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களில் ஒன்பது பேர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்தது.

முல்லைப் பெரியாறில் தற்போதுள்ள அணை மிகவும் பலவீனமடைந்து விட்டதாகவும், அது எந்நேரத்திலும் உடைந்து விடும் என, கேரளாவில் பீதியை மாநில அரசும், எதிர்கட்சியினரும் பரப்பி விட்டனர். அதற்கேற்றார் போல், அணையைச் சுற்றி உள்ள பகுதிகளில் அவ்வப் போது நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அணையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களில் ஒன்பது பேர், "பொதுமக்களின் அச்சத்தை போக்கிடும் வகையில், தற்போதுள்ள அணையை உடைக்க வேண்டும், புதிய அணை கட்ட உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை, நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது. விசாரணை முடிவில், "பொதுமக்களின் பீதி காரணமாக, அணையை உடைக்க அனுமதிக்க முடியாது.

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உய‌ர்‌த்த வே‌ண்டு‌ம்- தமிழக சட்டசபை சிறப்பு தீர்மானம்


சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 வரை உயர்த்தும் வகையில் எதிர்காலத்தில் அணையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமையை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்றும் அந்த தீர்மானத்தில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீரை 120 அடியாக குறைக்க கேரள சட்டப்பேரவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

ஹோட்டல் அதிபருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வற்புறுத்தினாரா ப.சிதம்பரம்?

P Chidambaram
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு பெரிய ஹோட்டல் அதிபருக்கு எதிரான 3 வழக்குகளை வாபஸ் பெறுமாறு டெல்லி போலீசாரை வற்புறுத்தினார் என்று குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
2ஜி ஊழல் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பங்கு உள்ளது என்று கூறி அவரை பதவி விலகுமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் ப. சிதம்பரம், சுனைர் ஹோட்டல்களின் அதிபர் எஸ்.பி. குப்தாவுக்கு எதிரான 3 வழக்குகளை வாபஸ் பெறுமாறு டெல்லி போலீசாரை வற்புறுத்தினார் என்றும், அவரது தலையீட்டின்பேரில் வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டன என்றும் செய்தி வெளியானது. ப.சிதம்பரம் 1999-2003ம் ஆண்டு வரை எஸ்.பி. குப்தாவுக்கு வழக்கறிஞராக இருந்துள்ளார்.

இந்த செய்தியைப் படித்த எதிர்கட்சிகள் இன்று நாடாளுமன்றம் கூடியதும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ப. சிதம்பரம் பதவி விலகக் கோரி அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதற்கிடையே ப. சிதம்பரம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லி ஆளுநரின் உத்தரவின்பேரில் வாபஸ் பெறப்பட்ட 3 வழக்குள் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு.. மேனேஜர் மர்ம சாவு வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ்!


Vadivelu
வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல் ஆரம்பித்துள்ளது. இவரிடம் மேனேஜராக வேலைப் பார்த்து தற்கொலை செய்து கொண்ட வேலுச்சாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் மனைவி தொடர்ந்த வழக்கில் ஒரு வாரத்துக்குள் பலளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் வேலுச்சாமி கொலை குறித்து வடிவேலுவிடம் விசாரணை நடத்துவது உறுதியாகியுள்ளது.மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நடிகர் வடிவேலுவிடம் எனது கணவர் வேலுச்சாமி மேனேஜராக வேலை பார்த்தார்.கடந்த 4.2.2009-ல் வேலுச்சாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வடிவேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏடிஜிபி ஜார்ஜை டிஸ்மிஸ் செய்யக்கோரி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு


ADGP George
திண்டுக்கல்: கம்பம் மெட்டுப் பகுதியில் கேரள அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு காரணமான கேரளத்தைச் சேர்ந்தவரான டிஜிபி ஜார்ஜை உடனே பணிநீக்கம் செய்யக் கோரி திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்றும், அதனால் அதன் அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு பிடிவாதமாக உள்ளது. அவ்வாறு புதிய அணை கட்டவிட மாட்டோம் என்று தமிழக அரசு தீர்மானமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களு்ககு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தேனி மாவட்டம் கம்பம் மெட்டில் திரண்டு போராட்டம் டத்தினர்.
அப்போது பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கேரள கூடுதல் ஏடிஜிபி ஜார்ஜ் தான் காரணம் என்று கருதப்படுகிறது.

வியாழன், 15 டிசம்பர், 2011

அணையில் உண்ணாவிரதம்... டேம் 999 இயக்குநரின் அடுத்த ட்ராமா!


Sohan Roy
முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால்தான் ஆச்சு என்று முரட்டுப் பிடிவாதம் காட்டும் மலையாளிகளை இன்னும் உசுப்பேற்றும் விதமாக டேம் 999 என்ற படத்தை எடுத்த சோஹன் ராய், தன் படத்துக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.
இந்த உண்ணாவிரதத்தை சர்ச்சைக்குரிய முல்லைப்பெரியாறு அணையில் வரும் டிசம்பர் 18-ம் தேதி இருக்கப் போவதாகக் கூறி அரசியல் விளையாட்டில் குதித்துள்ளார் சோஹன் ராய்.

WOW பாரதத்தாய் ஐஸ்வர்யா ராயிக்கு குழந்தை பிறந்திருக்கிறது!!

“ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொண்டதன் மூலம் இந்த நாட்டுக்கே முன்மாதிரியாய் விளங்குகிறார்” என்கிறார் மும்பை லீலாவதி மருத்துவமனையின் பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் கிரண் கொயல்லோ. மறுநாளே இதை முன்மொழிந்து வழிமொழிந்து இடைமொழிந்து குதூகலித்துள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை. நடுத்தர வயதைக் கடந்த பெரும்பாலான பெண்கள் சிசேரியன் செய்து கொள்ளவே விரும்புவதாகவும், இந்நிலையில் சுகப்பிரசவமே வேண்டும் என்கிற ஐஸ்வர்யா ராயின் மன உறுதி நாட்டுமக்களுக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக நிற்கிறது என்கிறது அந்த செய்திக் கட்டுரை.

இந்தியாவிலுள்ள ‘விசா’ ஆலயத்தில், அமெரிக்க டாலருக்கு விசேட பூஜை!

Viruvirupu,

Hyderabad, India: Known as the visa temple, the Chilkur Balaji temple, about 35 km west of Hyderabad, has a large following of people for whom the rise and fall in the value of the dollar matters a great deal. The temple yesterday (Wednesday) launched a special daylong prayer to alleviate the dollar crunch and in the process arrest the fall of the rupee vis-à-vis the US currency.

“ஸ்ரீ ந்ருசிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணா முக்தாயே..” என்ற மந்திரம் ஹைதராபாத்துக்கு அருகேயுள்ள (அமெரிக்க) விசா ஆலயத்தில் 11 தடவைகள் உச்சரிக்கப்பட்டு, அமெரிக்க டாலருக்கு சிறப்பு பூஜை நேற்று (புதன்கிழமை) நடாத்தப்பட்டுள்ளது. உலக பொருளாதார பின்னடைவு காரணமாக, அமெரிக்க டாலர்-இந்திய ரூபா கரன்சி எக்ஸ்சேஞ்ச் ரேட் கீழே போகாமல் இருக்க நடாத்தப்படும் பூஜை இது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
விசா ஆலயத்தில் பக்தர்கள்!

அனைத்துக் கட்சியினரும் உம்மன் சாண்டி சொல்வதை கேட்பார்களா

Viruvirupu

Trivandirum, India: The Kerala Pradesh Congress Committee (KPCC) has called off all agitations against Tamil Nadu in the Mullapperiyar issue following Prime Minister Dr Manmohan Singh’s appeal to the two states to maintain restraint. The prime minister made the appeal when an all-party delegation led by State Chief Minister Oommen Chandy called on him in New Delhi. 

 கேரளாவில் நடாத்தப்படும் போராட்டங்களில், தமது கட்சியினர் (காங்கிரஸ்) இனி ஈடுபட மாட்டார்கள் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.“முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் போராட்டங்களை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றைய கட்சிகள் நடாத்தும் போராட்டங்களை நிறுத்துமாறு என்னால் கூற முடியாது. நிறுத்துவதும் தொடர்வதும் அவர்களது இஷ்டம்” என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

சென்னை – சர்வதேச திரைவிழா – 14 டிசம்பர் 2011


இந்த துவக்க நாளில் இரண்டு திரைப்படங்களை மாத்திரமே என்னால் காண முடிந்தது. சினிமாவில் மாத்திரம் ஆர்வமுள்ளவர்கள் துவக்க விழா அபத்தங்களை தவிர்த்து விட வேண்டும் என்பதுதான் அன்று எனக்கு கிடைத்த நீதி. அதைப் பற்றி பின்னால்.

பிலிம் சேம்பரில் மழைக்கு ஒதுங்கிய சோகையான கூட்டத்துடன் முதலில் பார்த்தது Varjoja paratiisissa என்கிற 1986 பின்லாந்து திரைப்படம். குப்பை அள்ளும் தொழிலாளியின் அகச்சிக்கலயும் காதலையும் பற்றியது. பின்லாந்தில் மருந்திற்குக் கூட யாரும் சிரிக்க மாட்டார்கள் என்பதை அன்றுதான்  அறிந்து கொண்டேன். ‘போய் வருகிறேன்’ என்பதைக் கூட ‘தொலைஞ்சு போ நாயே’ என்கிற தீவிர முக பாவத்துடன் படம் முழுவதும் இறுக்கமாகத்தான் சொல்கிறார்கள். இதை  பிளாக் காமெடி என்று எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்கிற வழக்கமாக எனக்கு ஏற்படுகிற சந்தேகம் அன்றும் ஏற்பட்டது. ‘இந்த ஆபிஸ்ல எத்தனை வருஷமா குப்பை கொட்டறீங்க?’ என்று கேட்கப்படக்கூடிய அந்தத் தொழிலாளியின் தனிமையில் வாழ்வில் இனிமையாக குறுக்கிடுகிறாள் சூப்பர் மார்க்கெட் பணிப்பெண் ஒருத்தி.

கூடங்குளம் அணு மின் திட்டத்திற்கு அமோக ஆதரவு

கோவை: ""கூடங்குளம் மின் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய சந்தேகங்களை விளக்க அங்கு பணியாற்றும் அதிகாரிகள் தயாராக உள்ளனர்'' என, கொடிசியா தலைவர் கந்தசாமி தெரிவித்தார்.

கூடங்குளம் அணு மின் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் தலைமையில், கோவையில் உள்ள 30 தொழில் அமைப்புகள் இணைந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. இதில், அகில இந்திய கிரில் உற்பத்தியாளர்கள் சங்கம், கிரில் வேலை செய்வோர் நலச்சங்கமும் பங்கேற்க உள்ளன.
கோவையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க பொதுமக்களும் பலர் கொடிசியா வை தொடர்பு கொண்டு வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நுகர்வோர் நல அமைப்புகள் பலவும் கொடிசியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கொடிசியா தலைவர் கந்தசாமி கூறியதாவது: கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைய வேண்டும் என்பதே கோவை மக்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட எட்டு அணு உலைகள், இந்தியாவில் எவ்வித ஆபத்தும் இல்லாமல் தற்போதும் பாதுகாப்பாகவே செயல்பட்டு வருகின்றன. விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சி மேம்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், எவ்வித ஆபத்தும் நேராது என நம்பலாம்.
இயற்கை வளங்களான நிலக்கரியின் தேவை அதிகரித்து வருகிறது. உற்பத்தி குறைந்து வருகுகிறது. இந்த இடைவெளி ஆண்டுக்கு இரண்டு கோடி டன் அளவுக்கு அதிகரித்து வருகிறது. நிலக்கரி பயன்பாடும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக உள்ளது. வேகமான வளர்ச்சியை எட்டிய நாடுகள் எல்லாம், அணு மின் சக்தியை பயன்படுத்தி வருகின்றன. நாட்டின் வளர்ச்சியை எதிர்ப்போரே இத்தகைய அணு மின் நிலையத்தை எதிர்ப்பவர்கள். இதன் பின்னணியை அரசு ஆராய்ந்து, கண்டுபிடித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த ராசா முடிவு



A Raja
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சிகளிடம் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா விரைவில் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசா உள்பட 17 பேர் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் மீதான சாட்சிகள் விசாரணை, கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கியது.
அப்போது அரசுத் தரப்பில் சாட்சி அளிப்பவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய ராசா மறுத்து விட்டார். சிபிஐ தனது 3வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யும் வரையிலும், புலன் விசாரணை முடிந்து விட்டதாக அறிவிக்கும் வரையிலும் சாட்சிகளை குறுக்கு விசாரணை நடத்த மாட்டேன் என்று ராசா கூறிவிட்டார்.
ஆனாலும் தொலைத்தொடர்பு கொள்கை குறித்து சாட்சிகள் சாட்சியம் அளிக்கும்போது, குறுக்கு விசாரணை செய்வேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந் நிலையில் தனது 3வது குற்றப்பத்திரிக்கையை இரு தினங்களுக்கு முன் சிபிஐ தாக்கல் செய்தது. இதையடுத்து, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய ராசா முடிவு செய்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து மிகக் கடும் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை 52 ரூபாய் 84 காசு என்ற அளவைத் தொட்ட ரூபாயின் மதிப்பு, செவ்வாய்க்கிழமை 53 ரூபாய் 74 காசு அளவுக்குக் குறைந்தது.
இந் நிலையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரை வாங்குவதில் வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடம் கடும் போட்டி நிலவுவதால், டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவகிறது.
இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்திலேயே இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா குறைந்துவிட்டது. அதாவது ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.54.17 என்ற அளவை எட்டிவிட்டது.
இது வரலாறு காணாத சரிவாகும்.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இதுவரை இந்திய ரூபாயின் மதிப்பு 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில், ஆசிய நாடுகளின் கரன்சிகளிலேயே இந்திய ரூபாயின் மதிப்பில்தான் மிக அதிகமான சரிவு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் 1973ம் ஆண்டில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு 52.72 என்ற அளவுக்குச் சரிந்தது. இப்போது அதைவிட கீழ்மட்ட அளவை எட்டியுள்ளது இந்திய ரூபாய்

மதுரையில் மலையாளிகள் நிறுவனங்களை மூட நடவடிக்கை?

மதுரை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தீரும் வரை மதுரையில் உள்ள மலையாளிகளின் நிறுவனங்களை மூடுவது குறித்து அரசுக்கு தெரிவித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் சகாயம் கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மலையாளிகளின் கடைகள், நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. மதுரையிலும் மலையாளிகளின் கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். இதனால் மலையாளிகளின் கடைகளை அரசே மூட வேண்டும் என்று மதுரை வழக்கறிஞர்கள் அம்மாவட்ட ஆட்சியர் சகாயத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராமசாமி தலைமையில் 200 வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் சகாயத்தை நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். மலையாளிகள் நடத்தும் தனியார் நிறுவனங்களை உடனே மூட உத்தரவிட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தீரும் வரை அந்த நிறுவனங்களைத் திறக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
அதற்கு சகாயம் கூறுகையில், எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது. அதனால் இதை அரசின் கவனத்திற்கு கொண்ட சென்ற பிறகு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இடுக்கியில் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள்: தமிழகர்களை விரட்டியடிக்கும் மலையாளிகள்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் மீது மலையாளிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உயிருக்கு பயந்து தமிழர்கள் தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக கேரளாவில் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளாவில் உள்ள உடுப்பஞ்சோலை, ஆணைக்கல்மெட்டு, ஆட்டுவாரை, மணத்தோடு, தலையங்கம், சதுரங்கப்பாறை, நெடுங்கண்டம் உள்பட பல இடங்களில் 10,000 தமிழர்கள் தங்கள் குடும்பத்தோடு வாழ்கின்றனர். அவர்கள் ஏலத்தோட்டங்கள், காப்பித்தோட்டங்கள், மிளகு தோட்டங்களில் தங்கி வேலை செய்கின்றனர்.

புதன், 14 டிசம்பர், 2011

விஜயகாந்த் கருணாநிதி, ஸ்டாலினை தாக்கிப் பேசியதும் நேரடி ஒளிபரப்பை நிறுத்திய சன் நியூஸ்

தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனியில் நடந்து கொண்டிருக்கும் தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் மு.க. ஸ்டாலினை தாக்கிப் பேசியதும் அந்த நிகழ்ச்சியை நிறுத்தியது சன் நியூஸ்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மோதல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும், பிடிவாதமாக இருந்து வரும் கேரள அரசையும் கண்டித்து தேனியில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த ஆர்ப்பாட்டத்தின் நேரடி ஒளிபரப்பு உங்கள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அப்போது முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக விஜயகாந்த் கேரள அரசையும், வாக்களித்த மக்களை வாட வைக்கும் அதிமுக அரசைத் தாக்கிப் பேசிய போதும் ஒளிபரப்பு தெள்ளத் தெளிவாக இருந்தது. ஆனால் அவர் திமுக பொருளாளர் மு. க.ஸ்டாலினைப் பற்றி பேசியபோது டிவியில் விஜயகாந்த் வாய் அசைவது மட்டும் தான் தெரிந்தது. பேசியது கேட்கவில்லை. காரணம் சன் நியூஸ் நிறுவனம் ஒலியை முழுவதுமாகக் குறைத்துவிட்டது.

கேரளாவுக்கு எதிராக மூணாறில் தமிழர்கள் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டம்

மூணாறு: கேரள மாநிலம் மூணாறில், போலீஸாரின் தடையையும் மீறி நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு, கேரள அரசைக் கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மூணாறில் எங்கு பார்த்தாலும் தமிழர்கள்தான். அந்த அளவுக்கு இங்கு தமிழர்கள் அதிகம். முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரச்சினை இருந்து வந்தபோதிலும், மூணாறில் அமைதி நிலவி வந்தது.
இந்த நிலையில், மூணாறைச் சேர்ந்த கார், டாக்சி, ஆட்டோ டிரைவர்களை கேரளாவின் பிற பகுதிகளில் அசிங்கமாக பேசி அவமரியாதை செய்ததாக மூணாறில் தகவல் பரவியது. இதனால் மூணாறில் தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Chennai 20/20 விளம்பரத் தூதுவராக அமலா பால்!

அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ட்வென்ட்டி-ட்வென்ட்டி கிரிக்கெட் போட்டிகளின் விளம்பரத் தூதுவராக முதலில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்திருந்தனர் ஐபிஎல் நிர்வாகிகள். ஆனால் தற்போது அமலா பாலை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வரத் தொடங்கியுள்ளதால் த்ரிஷாவை விட அமலா பாலே பொருத்தமான விளம்பரத் தூதுவராக இருப்பார் என்பதால்தான் இந்த முடிவு.

பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதி அமெரிக்க நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா பாகிஸ்தானின் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதி உதவியில் 700 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமையைப் பார்த்தால், இது வெறும் ஒரு ஆரம்பம் போலவே தோன்றுகின்றது. மேலும் மேலும் பாகிஸ்தானுக்கான நிதியுதவிகள் வெட்டப்படுவதற்கு சான்ஸ் அதிகமாக உள்ளது.
பாகிஸ்தானுக்கு வருடாவருடம் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் நிதியுதவியில் இந்த 700 மில்லியன் டாலர் ஒரு சிறு பகுதிதான். அமெரிக்கா வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியில் மிகப்பெரிய பங்கு செல்வதே பாகிஸ்தானுக்குதான். ஒருவகையில் சொன்னால், பில்லியன் கணக்கில் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் நிதியுதவியிலேயே பாகிஸ்தான் என்ற நாடே இயங்குகிறது.
சமீபகாலமாக பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது. ராணுவ ரீதியில் பாகிஸ்தான் அமெரிக்காவை முறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது. இரு நாட்டு உளவுத்துறைகளுக்கும் இப்போது ஏழாம் பொருத்தம். தவிர, பாகிஸ்தானிய மக்கள்வேறு அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை நடாத்தத் தொடங்கியுள்ளனர்.
இவை எல்லாம் ஒன்று சேர்ந்தே, அமெரிக்க நிதியுதவிகளுக்கு வேட்டு வைக்கத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க நிதியுதவிகள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும்போது, சும்மா வழங்கப்படுவதில்லை.

2G ராஜா தன் தரப்பு வாதத்தை, கோர்ட்டில் தெரிவிக்க முடிவு

புதுடில்லி: "2ஜி' ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அடுத்த வாரத்தில் இருந்து, தன் தரப்பு வாதத்தை, கோர்ட்டில் தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு, டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த நவம்பர் 1ம் தேதி, துவங்கிய விசாரணையின்போது, ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில், மூன்றாவது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ., அதிகாரிகள் தாக்கல் செய்து, விசாரணை முடிவடைந்து விட்டதாக, அறிக்கை தாக்கல் செய்யாதவரை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யப்போவது இல்லை' என்றார். இந்நிலையில், இந்த வழக்கின் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கோர்ட்டில், தன் தரப்பு வாதத்தை தெரிவிக்க, ராஜா முடிவு செய்துள்ளார்.

பெரியார் இஸ்லாமிய மதமாற்றத்தை முன்வைத்தார் என்பதைவிட தீண்டப்படாதவர்களின் ‘சுபாவ மனமாற்றத்தை


www.tamilpaper.net
இந்து மதத்தையும் பார்ப்பனீயத்தையும் கடுமையாக விமரிசனம் செய்த இரு பெரும் தலைவர்களான அம்பேத்கரும் பெரியாரும் மத மாற்றம் குறித்து உரையாடியிருக்கிறார்கள். இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்கள் மதத்தில் இருந்த வெளியேறி பௌத்தத்தைத் தழுவவேண்டும் என்றார் அம்பேத்கர். ஏன் பௌத்தம் என்பதற்கான காரணங்களை விரிவாகவும் ஆழமாகவும் அம்பேத்கர் பதிவு செய்திருக்கிறார். மத மாற்றத்துக்கு அம்பேத்கர் முன்வைத்த காரணங்களை பெரியார் ஏற்றுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கரைப் போல் அவர் பௌத்தத்தை ஒரு தீர்வாக முன்வைக்கவில்லை. மாறாக, அவரது தேர்வு இஸ்லாமாக இருந்தது என்று படித்திருக்கிறோம். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. மதங்களை நிராகரித்து பகுத்தறிவை முன்வைத்த பெரியார், இஸ்லாத்தை ஏன் தேர்வு செய்யவேண்டும்? இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளே கிடையாதா? இஸ்லாத்தை பகுத்தறிவு ஏற்றுக்கொள்கிறதா?
இந்தக் கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்னால், மதம் குறித்த பெரியாரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் எப்படி இருந்தன என்று பார்ப்போம்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

தமன்னா..கவர்ச்சியாக திருப்பதி /திருமலைக்கு வந்து சாமி ...



Tamanna
பல லட்சம் பக்தர்கள் கூடும் புனித இடமான திருமலைக்கு ஜீன்ஸ் - டி சர்டில் கவர்ச்சியாக வந்து சாமி கும்பிடுவதா என நடிகை தமன்னாவுக்கு வபக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர.
தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணியில் உள்ளார் நடிகை தமன்னா. ராம் சரண் தேஜாவுடன் நடிக்கு ரச்சா உள்பட 5 தெலுங்கு படங்கள் அவர் கைவசம் உள்ளன.

குமுளியில் லட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – நேரடி ரிப்போர்ட்!

முல்லைப் பெரியாறு: குமுளியில் 1 இலட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – நேரடி ரிப்போர்ட்!கடந்த 11-ம் தேதி முன்மாலை நேரத்தில் கே டி.வியில் பதிவு செய்யப்பட்ட பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. மேடையின் முன்னே தெலுங்கு, கன்னட திரையுலகத்தினரோடு தமிழ் மற்றும் மலையாள திரையுலகினரும் முகத்தில் ஒட்டவைத்த ஒரு உறைந்து போன போலிச் சிரிப்போடு அமர்ந்திருந்தனர். மேடையில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்திற்காக எழுதப்பட்ட பாடல் ஒன்றுக்காக கவிஞர் தாமரைக்கு விருது வழங்கிக் கொண்டிருந்தனர். தமிழ் ஆர்வலரான கவிஞர் தாமரை படத்தின் இயக்குனர் பற்றி ஏதோ போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தார்.
சரியாக அதே நேரத்தில் தமிழக கேரள எல்லையான தேனி -கம்பம் -கூடலூர்-  குமுளி பகுதியில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தமிழக மக்களோ தங்களது உரிமைக்காக அணையை நோக்கி போர்க் கோலத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தனர். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சி.பி.எம் இறுதியாக ஒளிந்து கொள்ள எத்தனிக்கும் முழக்கம் தான் “கேரளாவுக்கு பாதுகாப்பு – தமிழகத்துக்குத் தண்ணீர்”. தற்போதைய நிலையில் கேரள மக்களின் பாதுகாப்பிற்கு முல்லைப் பெரியாறு அணையால் எந்தவிதமான பங்கமும் இல்லையென்பது பல்வேறு வல்லுனர்களின் ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் இந்த முழக்கத்தின் உண்மையான நோக்கம் புதிய அணை கட்டுவதை தமிழக மக்கள் ஏற்கச் செய்ய உளவியல் ரீதியில் தயாரிக்கும் நரித்தனமான நோக்கம் தான்.

முல்லைப் பெரியாறு: யாருடைய சதி? தினமணியின் சாணக்கியக் கவலை!


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தில் எழும் போராட்டத்தை “பிரிவினைவாதம், பயங்கரவாதம்,” என்று முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் தினமணியின் நோக்கம். அதற்குத்தான் இந்த சாணக்கிய கவலை!
கம்பம் – கூடலூர் – குமுளி தமிழக கேரள எல்லையில் கடந்த சில நாட்களாக பெருந்திரளான மக்கள் போராடி வருகிறார்கள். இது குறித்து “இதனால் யாருக்கு லாபம்” என்றொரு தலையங்கத்தை தினமணி நேற்று 12.12.2011 எழுதியிருந்தது.
எப்படி இவ்வளவு மக்கள் போராடினார்கள், போலீசாரால் அதை தடுக்க முடியவில்லை என்பதும் தினமணியின ஆதங்கம். முல்லைப் பெரியாறு போராட்டத்தில் தமிழக மக்களிடையே இப்படி தன்னெழுச்சியான போராட்டங்கள் வளர்ந்து வருவது குறித்து தினமணி ‘பல’விதங்களில் கவலைப்படுகின்றது.
முதல் கவலை இதை யார் செய்தார்கள் என்பதை விட யாரெல்லாம் செய்திருக்கவில்லை என்று ஆய்வு செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் இருமாநில மக்களின் நலன் கருதி எந்தவொரு பிரிவினை சக்திக்கும் இடம் தராமல் இருக்க வேண்டும் என்று ஜெயா விளம்பரம் கொடுத்திருந்ததை வைத்து இந்த போராட்டத்தை அ.தி.மு.க நடத்தவில்லை என்று நிம்மதி அடைகிறார் தினமணியின் ஆசிரியரான வைத்தி மாமா.

தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம்

முல்லைப் பெரியாறு பிரச்னை எதைச் சாதிக்கிறதோ இல்லையோ, மாநிலக் கட்சிகளுக்கு இணையான குறுகிய கண்ணோட்டத்துக்கு, தேசியக் கட்சிகளும் விதிவிலக்கில்லை என்பதைக் காட்டிவிட்டது.
கர்நாடகாவில் உள்ள கன்னட சலுவலி என்ற கட்சியைத் தெரிந்திருக்காவிட்டாலும், அக்கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜை அனைவருக்கும் தெரிந்திருக்கும். காவிரி பிரச்னை தலையெடுக்கும் போதெல்லாம், இரு மாநில அரசுகளுக்கும் பெரும் தலைவலி தரும் வேலைகளைச் செய்வதில் வித்தகர். மாநிலக் கட்சிகள், தங்கள் மாநில நலனுக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும், இத்தகைய செயல்களில் இறங்குவது, தவறான விஷயம் என்றாலும், புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், தேசியம் பேசியே வளர்ந்த காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, அதே குறுகிய வட்டத்துக்குள் இயங்கி வருவது, அதிர்ச்சி தரும் விஷயம். முல்லைப் பெரியாறு பிரச்னையில், மூன்று கட்சிகளுமே ஓட்டு வங்கியைக் குறிவைத்து செயல்படுகின்றன.கையேந்தி உள்ள காங்கிரஸ் : கேரளாவில், தற்போதைய ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற அளவில் தான், அதன் சட்டசபை பலம். மொத்தம், 141 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட, கேரளா சட்டசபையில், வெறும் 39 எம்.எல்.ஏ.,க்களைத் தான் பெற்றிருக்கிறது அக்கட்சி. எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட், 45 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் தயவில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் வண்டி.

பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரும் மனு-டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் டிஸ்மிஸ் செய்வோம் என்று நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து மனுவை கேரள வக்கீல் வாபஸ் பெற்றார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி தமிழக மற்றும் கேரள அரசுகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சி.கே. பிரசாத் மற்றும் ஏ.ஆர். டேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இது தவிர இந்த விவகாரம் தொடர்பாக திமுக தாக்கல் செய்துள்ள மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

கேரளாவில் 8 தமிழக மீனவர்கள் கைது: என்ஜின்களை பறித்துச் சென்ற போலீசார்


Fishermen
திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரை அடுத்து உள்ளது பிளாங்கட் கடற்கரை. அந்த பகுதியில் தமிழக மீனவர்கள் 8 பேர் மீன் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களை கேரள போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைதானவர்கள் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் வைத்திருந்த காலி பிளாஸ்டிக் பாட்டில்கள், மீன் பிடி வலைகள், படகில் இருந்த என்ஜின்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் மீண்டும் இணைக்க வேண்டும்-பிரதமரிடம் 2 காங். எம்பிக்கள் கோரிக்கை


NSV Siddhan and JM Haroon
டெல்லி: வாக்கெடுப்பு நடத்தி இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் ஜே.எம்.ஆருண், என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமரை சந்தித்த இருவரும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் கேரளாவில் உள்ள இடுக்கி, தேவி குளம், பீர்மேடு பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும். இதற்காக அங்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அணையில் 162 அடிக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம், ராணுவத்திடம் ஒப்படைக்கலாம்: கலாம்


Abdul Kalam
முல்லைப் பெரியாறு அணையில் 162 அடிக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம், ராணுவத்திடம் ஒப்படைக்கலாம்: கலாம்
சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை ராணுவத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக அணையை பலப்படுத்தும் வகையில் தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம். நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும்.

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றாதீர்கள்-தமிழக, கேரள அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக, கேரள அரசுகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் மாநில அரசுகளை அறிவுறுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து செய்தித் தாள்களிலும் ஒரு பக்க விளம்பரம் கொடுத்திருந்தார்.
முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றியுள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். அதனால் அவர்கள் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க நினைக்கிறார்கள். ஒரு சிலரின் சுயநலத்திற்காக கேரள மக்கள் பலியாகிவிடக்கூடாது என்பது போன்ற கருத்துகள் அந்த விளம்பரத்தில் இருந்தது.

திங்கள், 12 டிசம்பர், 2011

அச்சுதானந்தனுடன் இணைந்து பிரதமரை சந்திக்கும் சாண்டி-ஜெ., கருணாநிதிக்கு நெருக்கடி தர 'டிரிக்'?


Oommen Chandy and Achuthananthan
திருச்சூர்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டியுடன் இணைந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கத் தயார் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உம்மன் சாண்டி தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுள்ளார்.
இதுகுறித்து திருச்சூரில் அவர் கூறுகையில், பிரதமர் நேரம் ஒதுக்கிக் கொடுத்தால், முதல்வர் சாண்டியுடன் இணைந்து அவரை சந்திக்க நான் தயார்.

அணை விவகாரம்- டெல்லியில் இருந்தபடி வேடிக்கை பார்க்காதீர்-மத்திய அரசு மீது கருணாநிதி கடும் தாக்கு


Karunanidhi
சென்னை: வேண்டுமென்றே திட்டமிட்டு, தமிழகத்தினுடைய செழிப்பை, செல்வாக்கை, வளத்தை வீணாக்கி அழித்து, தமிழகத்தை சஹாரா பாலைவனமாக்க திட்டமிட்டு கேரளத்திலிருந்து ஒரு சதி ஜோடிக்கப்படுமேயானால் அதை தமிழன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தான் அழிவதற்கு தன்னுடைய சந்ததிகள் அழிவதற்கு தன்னுடைய மக்கள் அழிவதற்கு தன்னுடைய நாடு அழிவதற்கு தன்னுடைய எதிர்காலமே அழிவதற்கு எந்த முட்டாள் தமிழனும் ஒத்துக் கொள்ள மாட்டான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசின் செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய பாதுகாப்பு படை தேவை: கருணாநிதி

சென்னை: "பிரச்னைக்கு ஒரு முடிவு ஏற்படும் வரையில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை, மத்திய பாதுகாப்பு படையினரின் பொறுப்பில் விட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து தி.மு.க., தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதம்: இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதென்றும், அதற்கடுத்து முல்லைப் பெரியாறு அணையால் பாசன வசதி பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் 14ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை மனிதச்சங்கிலி அணிவகுப்பு நடத்த, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் காலை 8 மணி முதலே உண்ணாவிரதத்தில் அமர்ந்திருக்க எனக்கு விருப்பம் தான். ஆனால், கட்சியின் தொண்டர்கள் எனது வயது கருதி, முழு நாளும் உண்ணாவிரதம் இருப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று, என்னை கேட்காமலேயே அவர்களாகவே முடிவு செய்திருக்கின்றனர். என் உடல், உண்ணாவிரதத்திற்கு ஒத்துழைப்பு தருகிறதோ, இல்லையோ, என் உள்ளம் எல்லாம் உண்ணாவிரதத்திலே தான் ஊன்றி நிலைத்திருக்கும். கேரளாவைச் சேர்ந்த பலர், தமிழகத்தில் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். தலைமைச் செயலகத்திலேயே பலர் உயர்நிலை அதிகாரிகளாக இருக்கின்றனர். கேரள மாநிலத்தில் இன்றைய தலைமைச் செயலராக உள்ள பிரபாகர், தமிழகத்தைச் சேர்ந்தவர்.
கடந்த ஆண்டு நான் திருவனந்தபுரம் சென்றபோது, தங்கும் விடுதிக்கே வந்து என்னை சந்தித்தார். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல பாசப் பிணைப்போடு பழகிக் கொண்டிருக்கும் இரு மாநிலத்தவரிடையே பேத உணர்வு வந்து விடக் கூடாதல்லவா?

ஜெ., கலைஞரின் தேதியில் மோத, கலைஞர், கேப்டனின் தேதியில்


முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தில் தற்போதுள்ள கொந்தளிப்பான நிலையை நான் நன்றாக அறிந்துள்ளேன். உங்கள் உணர்வுகளைப் புரிந்துள்ள நான், என்றும் உங்கள் பக்கமே இருப்பேன்” என்று கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, விடுத்த அறிவிப்பு ஒன்று, இதே பிரச்சினைக்காக கலைஞர் குறித்து வைத்திருந்த தேதி ஒன்றில் மோத, கலைஞரோ, விஜயகாந்த் வைத்திருந்த தேதியில் போய் மோதியுள்ளார்!
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிககையில் முதல்வர், “தமிழக மக்கள் இந்த விஷயத்தில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது. உங்கள் உணர்வுகள் எனக்குப் புரிகின்றது. அதே உணர்வுடன்தான் நானும் உள்ளேன். ஆனால், இதற்கான தீர்வுக்கு பதில் வன்முறை அல்ல.

Google நிறுவனம் ராணுவ ரகசியத்தை, ‘போட்டுக் கொடுத்த’ போட்டோ!!

ViruvirupuCarson City, USA: “Google may be compromising national security – all in the name of better mapping technology” says aviation speciality media ‘Flight Global’. According to them, at Google Maps, anyone can search for the names of military bases and zoom in to see airstrips and possibly even top-secret military drones like the RQ-170 Sentinel lost in Iran last week.In fact, Flight Global has done just that, and claims to have found the secret airstrip at Yucca Lake, Nev., used for testing the RQ-170. A photo obtained from Google Maps site shows satellite images of either a Predator or Reaper drone on the airstrip!

ஏவியேஷன் விவகாரங்களை வெளியிடும் பிளைட் குளோபல் ஊடகம், “கூகுள் தொழில்நுட்பத்தில் யாரும் அமெரிக்காவில் உள்ள விமானத் தளம் ஒன்றை சேர்ச் பண்ண முடியும். அந்த விமானத் தளத்தின் ரன்வேயை zoom பண்ணி மிக நெருக்கமாக கண்காணிக்கவும் முடியும். அமெரிக்காவின் அதி ரகசிய உளவு விமானம் என்று பெருமையடிக்கப்படும் RQ-170, ரகசியமாக நிறுத்தி வைக்கப்படும் இடத்தையும் கண்டுபிடிக்க முடியும்” என்று அறிவித்துள்ளது.
இந்த RQ-170  மாடல் உளவு விமானம்தான், கடந்த வாரம் ஈரானால் கைப்பற்றப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் சம்பவம், கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு உலை வைக்கிறது என்ற சர்ச்சையை எழுப்பி விட்டிருக்கின்றது.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

FDI விமான சேவை வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடிமுதலீடு?

வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment – FDI) திட்டம் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ள நிலையில், அதிகம் விளம்பரமின்றி மற்றொரு துறையில் FDI  அனுமதிக்கப்படவுள்ளது. இந்தியாவின் தனியார் விமான சேவை வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
தற்போதுள்ள தகவல்களின் அடிப்படையில், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு இந்த அனுமதிக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டது.

பெரியாறு போராட்டத்தால் கேரள அரசுப் பேருந்துகளுக்கு கடும் பாதிப்பு


KSRTC Bus
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளாவில் நடந்த தாக்குல்களுக்குப் பதிலடியாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களால் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தின் வழியாக இயக்கப்படும் 100 பஸ்களை போக்குவரத்துக் கழகம் நிறுத்தி விட்டதாம்.
கேரள அரசின் போக்குவரத்துக் கழகமான கேஎஸ்ஆர்டிசி மூலம் 427 பஸ்கள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.

கேரளாவுக்கு அனுப்பப்படும் 1000 டன் காய்கறிகளை நிறுத்தி வைத்து நாளை ஒட்டன்சத்திரத்தில் போராட்டம்

ஒட்டன்சத்திரம்: தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்றான ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் நாளை கேரளாவுக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம் நடத்துகின்றனர். நாளை கேரளாவுக்கு இங்கிருந்து ஒரு காய்கறி கூட போகாது என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்று ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட். இங்கிருந்துதான் கேரளாவுக்கு தேனி மாவட்டம் வழியாக பெருமளவில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை செல்கின்றன.
கேரளாவில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து வியாபாரிகள் இங்கு வருவது நின்று போய் விட்டது. மேலும் குமுளி வழியாக வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டதால் ஒட்டன்சத்திரத்திற்கு கேரள வியாபாரிகள் வர முடியவில்லை.

கனிமொழிக்கு பதவி வழங்கிட ...... எதிர்ப்பு.

கனிமொழிக்கு, தி.மு.க.,வில் முக்கியப்பதவி வழங்குவதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கனிமொழிக்கு எதிராக, மற்றொரு பெண் வாரிசு கொம்பு சீவிய முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும், கனிமொழிக்கு ஆதரவு தெரிவிப்பது யார்? எதிர்ப்பு தெரிவிப்பது யார்? என்பதை கண்டறியும் வகையில், உடனடியாக பதவி வழங்காமல், "நூல் விட்டு' பார்க்கிறார் கருணாநிதி என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டில்லி திகார் சிறைவாசத்திற்கு பின், சென்னை வந்த கனிமொழிக்கு, தி.மு.க.,வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் செல்வி உட்பட அனைவரும், சென்னை விமான நிலையம் வரை சென்று வரவேற்றனர். கனிமொழியின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என, அவரின் தாயார் ராஜாத்தி பிடிவாதமாக இருந்து வருகிறார்.

அணைக்கு எதிரான போராட்டத்தில் வி.ஆர்.கிருஷ்ண அய்யர்-வைகோ வேதனை!


V R Krishna Iyer
 முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அயர் கலந்து கொண்டது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ண அய்யருக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் நீதிபதியான தாங்கள், இந்த விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வைகோ தனது கடிதத்தில்,
கேரளாவில் நடந்த மனித சங்கிலியில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுடன் நீங்கள் கைகோர்த்து நின்ற செய்தியை அறிந்த போது அதிர்ச்சி அடைந்தேன்.

கேஸை இழுத்தடிப்பதுங்கிறதில் போயஸ் கார்டன் பி.ஹெச்.டியே வாங்கிடுவாங்க

ஒரு கேஸை எப்படி இழுத்தடிப்பதுங்கிறதில் போயஸ் கார்டன் ஆட்கள் பி.ஹெச்.டியே வாங்கிடுவாங்கஓப்பன் கோர்ட்டில் நடந்த அந்த விவாதங்களைப் பார்த்த வழக்கறிஞர்களும் பத்திரிகையாளர்களும் சொன்னது இதுதான், ஒரு கேஸை எப்படி இழுத்தடிப்பதுங்கிறதில் போயஸ் கார்டன் ஆட்கள் பி.ஹெச்.டியே வாங்கிடுவாங்க…

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.விடம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 313 ஸ்டேட்மெண்ட்டைப் பதிவு செய்த நிலையில், அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் 313 ஸ்டேட்மெண்ட்டுகளைப் பதிவு செய்யவேண்டும். ஜெ.வின் இசட் ப்ளஸ் பாதுகாப்பு கருதி, பரப்பனஅக்ரகாரம் சிறை வளாகத்தில் உள்ள கோர்ட்டிற்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்த சிறப்பு நீதிமன்றம் மீண்டும் சிட்டிசிவில் கோர்ட் கட்டிடத்தில் செயல் படத் தொடங்கிவிட்டது. அதேநேரத்தில், ஜெ.வின் வாக்குமூலப் படலம் முடிந்த நொடியிலிருந்தே, வழக்கைத் தாமதப்படுத்தும் காரியங்களையும் அவரது தரப்புத் தொடங்கிவிட்டது.

இனிமேல் பாருங்கள் எனது அரசியலை! கனிமொழி வைராக்கிய பேட்டி

டிசம்பர் மூன்றாம் தேதி
சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்தவர்கள், 'வழி தவறி அண்ணா அறிவாலயத்துக்குள் நுழைந்துவிட்டோமோ...’ என்று ஒரு கணம் குழம்பியிருப்பார்கள். 193 நாட்கள் திகார் சிறைவாசத்துக்குப் பிறகு, கனிமொழி சென்னை திரும்பிய தினம் அது!
'கனியக்கா எத்தனை மணிக்கு வர்றாங்க? ஃப்ளைட் வந்துடுச்சா?’ என்று எதிர்ப்பட்டோரிடம் எல்லாம் விசாரித்தபடி அலைந்துகொண்டு இருந்தார்கள் பாசக்கார உடன்பிறப்புக்கள். சென்னை சங்கமம் புகழ் இசைக் கலைஞர்களின் 'டங்குணக்க டங்குணக்க’ மேள தாளங்கள் அதிரத் துவங்க, தொண்டர் களோடு மகளிர் அணியினரும் சேர்ந்து ஆடியது அக்மார்க் குத்தாட்டம்!

கவர்ச்சி நல்லது!' - வித்யா பாலன்


Vidya Balan
திடர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த பிறகு எனக்கு ஏகப்பட்ட கவர்ச்சி வேடங்கள் குவிகின்றன. என்னைப் பொறுத்தவரை 'கவர்ச்சி நல்லது', என்று கண் சிமிட்டுகிறார் வித்யா பாலன்.
சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி தர்டி பிக்சர் படத்தில் கவர்ச்சி நடிகை சில்க்காக நடித்து கலக்கி இருந்தார் வித்யா பாலன். படம் படு சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது.
இந்தப் படம் காரணமாக வித்யா பாலனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இந்தியில் வர ஆரம்பித்துள்ளதாம்.

உலக அமைதிக்கான நோபல் விருதுகள் மூன்று பெண்களுக்கு வழங்கப்பட்டன

ஆஸ்லோ : அநீதி, சர்வாதிகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடிய மூன்று பெண்களுக்கு, நேற்று நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில், இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன.



இந்தாண்டுக்கான நோபல் விருதுகள், சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதன்படி நேற்று, நோபல் விருதுகள், உரியவர்களுக்கு வழங்கப்பட்டன. அறக்கட்டளை விதிகளின்படி முதலில், உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு விருதும், 15 லட்சம் டாலர் ரொக்க மதிப்புடையவை. லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன்,73, லைபீரிய பெண் உரிமைப் போராளி லீமா போவீ,39 மற்றும் ஏமனில் அதிபர் சலேவுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடி வரும் தவாக்குல் கர்மான்,32, ஆகியோருக்கு, இந்தாண்டுக்கான நோபல் விருதுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் மூலம், நோபல் விருதுகள் என்றாலே அது ஆண்களுக்குத் தான் என்ற வாதம் முறியடிக்கப்பட்டதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆவேசம் கொண்ட 20 ஆயிரம் தமிழர்கள் கேரளாவுக்குள் நுழைய முயற்சி : பரபரப்பு வீடியோ


ஹாஸ்டலில் தூக்குபோட்டு மாணவி தற்கொலை

புதுக்கோட்டை அருகே விடுதி அறையில் தூக்கு போட்டு நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வாணக் கன்காடு கிராமத்தில் வசிக்கும் சுப்புராமனின் மகள் கார்த்திகா(19). புதுக்கோட்டை சத்திய மங்கலம் அருகில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி முதலா மாண்டு படித்து வந்தார்.
நேற்று நீண்ட நேரம் ஆகியும் கார்த்திகா தங்கியிருந்த அறை திறக் கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த வார்டன் அறையை திறந்து பார்த்தார்.
அப்போது கார்த்திகா தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக் குப்பதிந்து கார்த்திகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்

அரசு டாக்டர்களின் அலட் சியத்தால் வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக ஒரு பெண் பரிதவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயி. இவரது மனைவி காயத்ரி (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வயிற்று வலி அதிகமானதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் (8ம் தேதி) அனுப்பி வைத்தனர்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட காயத்ரிக்கு இரண்டு நாள் ஆகியும் அறுவை சிகிச்சை செய்யப்பட வில்லை.
இந்நிலையில் நேற்று, அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவ, மாணவிகளை பார்க்க வந்த ராமமூர்த்தி எம்எல்ஏவிடம், காயத்ரியின் உறவினர்கள் இதுகுறித்து புகார் கூறினர்.
மருத்துவர்களின் அலட்சி யத்தை பார்த்து கொதிப்படைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏ ராமமூர்த்தி உடனே மருத்துவமனை டீன் தேன் மொழி வள்ளியை சந்தித்து பேசினார். வயிற்றில் இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கா விட்டால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது தெரியாதா? உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டிய நீங்கள் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.