சனி, 15 பிப்ரவரி, 2014

வித்யாபாலன்: உறவுக்கு நான் இன்னும் தயாராகவில்லை.

சென்னை:சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான ‘டர்ட்டி பிக்சர்ல் சில்க்காக நடித்தவர் வித்யாபாலன். இவர் சினிமா தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை கடந்த 2 வருடத்துக்கு முன் மணந்தார். மீண்டும் நடிக்க வந்த வித்யாபாலன் அளித்த பேட்டியில் கூறியதாவது:கணவருடன் ஒரே வீட்டில் இருந்தாலும் ரூம் மெட்போல்தான் வாழ்கிறோம். பணி காரணமாக இருவருமே காலையிலேயே வெளியில் சென்றுவிடுவோம். ரூம்மெட்கள் போல் அவ்வப்போது சந்திப்போம். சினிமாவில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தால் கணவர் எதிர்ப்பு தெரிவிப்பாரா என்கிறார்கள். திருமணத்துக்கு முன்புகூட நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் சூழல் ஏற்பட்டால் முதலில் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன்.
அப்போதுதான் படம் பார்க்கும்போது அவர்களும் அக்காட்சியை ஏற்க முடியும். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் அது பற்றி சித்தார்த் ராயிடமும் சொல்லிவிட்டுத்தான் நடிப்பேன். அவர் எதையும் ஜோவியலாக எடுத்துக்கொள்வார். குழந்தை பெற்றுக்கொள்வதுபற்றி கேட்கிறார்கள். அதற்கான வாய்ப்பை நான் இன்னும் ஏற்படுத்தி தரவில்லை. தாம்பத்ய உறவுக்கு நான் இன்னும் தயாராகவில்லை. இந்த ஆண்டு நிறைய படங்கள் ஒப்புக்கொண்டிருக்கறேன். எனவே அம்மா ஆகும் வாய்ப்பு இன்னும் தள்ளிப்போகும்.
இவ்வாறு வித்யா பாலன் கூறினாtamilmurasu.org

Facebook கில் இணைந்ததால் பெண் கல்லால் அடித்துகொலை: சிரியாவில் சம்பவம்

Islamic Judge Orders Syrian Girl Stoned to Death for Facebook Account

சிரியா நாட்டில் பெண்கள் பேஸ்புக் கணக்கை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் இணையதளத்தால் முறையற்ற பாலியல் குற்றங்கள் பெருகிவருவதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த நடைமுறை அங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் சிரியாவின் ராக்கா சிட்டி என்னும் நகரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் அல் ஜஸ்ஸிம் என்பவர் ஃபேஸ்புக்கில் புதியதாக ஒரு கணக்கை தொடங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அவர் மீது குற்றம் சுமத்திய இஸ்லாமியர்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இந்த வழக்கை விசாரணை செய்து அவருக்கு மரண தண்டனை விதித்தார்.இதையடுத்து அவரை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக சிரிய நாட்டு பெண்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஃபேஸ்புக்கில் கோடிக்கணக்கான பெண்கள் கணக்கை வைத்துள்ளனர் ஆனால் சிரியாவில் மாத்திரம் இம்மாதிரியான சட்டம் உள்ளதை பல நாடுகள் கண்டனம் செய்து வருகிறது.

Afghanistan காந்தகாரில் வேளாண் பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார் சல்மான் குர்ஷித்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் ஒருநாள் சுற்றுப்பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார். இந்திய அரசின் உதவியுடன் காந்தகாரில் அமைக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் முதல் தேசிய வேளாண் பல்கலைக்கழகத்தை சல்மான் குர்ஷித்தும், ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாயும்  இன்று திறந்து வைக்கின்றனர்.

மேலும் இந்திய அரசின் நிதி உதவியுடன் காபூலில் ஆப்கன் நாடாளுமன்ற கட்டிடமும், ஹெராட் மாகாணத்தில் சல்மா நீர்மின் அணையும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளையும் அதிபர் கர்சாயுடன் சேர்ந்து சல்மான் குர்ஷித் பார்வையிட உள்ளார்.

கமல்ஹாசன் :பாக்ஸ் ஆபீசுக்கும் நல்ல சினிமாவுக்கும் இடையில் முதல் பாலத்தைக் கட்டியவர் பாலுமகேந்திராதான்.

நமது சினிமாவில் எது நல்ல அம்சம், எது அப்படியல்ல என்பதைத் தெரிந்து வைத்திருந்ததில்தான் பாலுமகேந்திராவின் மேதமை அடங்கியிருந்தது.
புத்திசாலிகள் நிறைந்த ஊரில், அறிவும் ஞானமும் பெற்ற மனிதர் அதிகப் பயனுள்ளவராக இருப்பார். பாலுமகேந்திரா படித்தவர். அதனாலேயே எங்களுக்குச் சினிமா அறிவு இருக்க வில்லை என்று சொல்லிவிட முடியாது. புதிய ஊடகமாக சினிமா வடிவம் இருந்ததால், நாடகம் மற்றும் இலக்கியத்திலிருந்து பெற்றிருந்த முன் அனுபவத்தை சினிமா என்ற முற்றிலுமான புதிய ஊடகத்தில் முயற்சித்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்தப் புதிய ஊடகத்துக்கு வேறு வகையான கவர்ச்சி இருந்தது.
சினிமாவின் இலக்கணத்தை ஒவ்வொருவரும் அவரவர் துணிகரத்தில், இழப்பில்தான் கற்றுக்கொண்டார்கள் - சில நேரங்களில் மற்றவரின் இழப்பிலும். தமிழ் சினிமாவில் சாதனையாளர்களாக அப்போது இருந்தவர்கள் அனைவரும், கடும் உழைப்பின் வழியாகவே தங் களை உருவாக்கிக்கொண்டவர்கள். அப்போது குருகுலம் போன்ற பயிற்சி முறை இருந்தது. நாங்களும் அதை பின்பற்றினோம்.
பாலுவும் அவரது நண்பர்களும் புனே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பள்ளியில் படித்து வந்தவர்கள். இந்திய சினிமா புதிய காற்றைச் சுவாசித்தது மட்டுமின்றி, அந்தக் காற்று இந்தியச் சினிமாவையே மாற்றியது.

அர்விந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பிய (ரிலையன்ஸ்) அம்பானி சகோதரர்கள்


டெல்லி முதல்வராக 49 நாட்கள் பதவி வகித்த அர்விந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியில் முழுமுதற்கான அம்பானி சகோதர்கள் செயல்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜன்லோக்பால் மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வெற்றி பெறச் செய்ய முடியவில்லை, எனவே முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று கெஜ்ரிவால் கூறினாலும், அம்பானி சகோதரர்கள் அரசுக்கு கொடுத்த நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஊழலுக்கு எதிராக 2012ம் ஆண்டு போராட்டம் நடத்திய கெஜ்ரிவால் தொழிலதிபர்களான அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். அதோடு, அம்பானி சகோதரர்களின் சுவிஸ் வங்கிக் கணக்கு எண்களை பகிரங்கப்படுத்தினார் அர்விந்த் கெஜ்ரிவால். அப்போதிருந்தே அம்பானி சகோதரர்களுக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையேயான போர் தொடங்கிவிட்டது.

ஸ்ரேயா அதிர்ச்சி ! போட்டோ ஷூட் நடத்திவிட்டு பாலா திடீரென வரலட்சுமியை ,,,

சென்னை:போட்டோ ஷூட் நடத்தி முடித்த நிலையில் ஸ்ரேயாவை தனது படத்திலிருந்து நீக்கினார் பாலா.பாலா அடுத்து இயக்கும் படத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். இது கரகாட்டம் பற்றிய படம். இளையராஜா இசையமைக்கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க ஸ்ரேயாவிடம் பேசப்பட்டது. இதற்காக போட்டோ ஷூட் நடத்த ஸ்ரேயாவை அழைத்திருந்தார் பாலா. போட்டோ ஷூட் நடித்திவிட்டு, திருப்தியாக இருந்ததால் ஸ்ரேயாவுக்கு படக்குழு தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டது. >
இதனால் சந்தோஷத்தில் மிதந்தார் ஸ்ரேயா. இந்த படம் மூலம் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என கனவு கண்டார். ஆனால் அவரது கனவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. திடீரென வரலட்சுமியை அழைத¢து போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார் பாலா. இதில் ஸ்ரேயாவை விட வரலட்சுமி இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என பாலா நினைத்தாராம். இதனால் உடனேயே ஸ்ரேயாவை நீக்கிவிட்டு வரலட்சுமிக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார். இதனால் ஸ்ரேயா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த பட ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. படத்திற்கான பாடல் பதிவை இளையராஜா ஏற்கனவே முடித்துவிட்டார். - tamilmurasu.org

காதலர் தினம் ஒழுக்கக் கேடானது என்று பாலியல் குற்றச்சாட்டில் கைதான சங்கராச்சாரிகள் சொல்வார்கள்


காதலர் தினம் பற்றி 10 நிமிடம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்காக நேற்று (13-02-2014) பேசினேன். அது இரண்டு நிமிடங்களாக சுருக்கப்பட்டு இன்று காலை ஒளிபரப்பானது.
“காதலர் தினம் வர்த்தக தினமாக இருக்கிறது. காதலர் தினம் கொண்டாடப்பட்டப் பிறகுதான் காதலர்கள் அதிகமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.”
“தொழிலாளர் தினத்தை விட காதலர் தினத்திற்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழலை வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கிறது”
“காதலர் தினத்தை ஒழுக்கக்கேடு என்று சொல்கிற மத பழைமைவாதிகள் கள்ளக் காதல் கொண்டுகிற அளவிற்கு மோசமானவர்கள்” என்றேன். இது ஒளிபரப்பானது. இப்படி தெளிவாக அல்ல. குழப்பமாக.. காரணம் இடையில் நான் பேசிய பல செய்திகளை நீக்கியதால்.
நான் பேசியதில் நீக்கப்பட்ட முக்கியமான செய்திகள்,
“கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த பத்ரிநாத் தலைமை அரச்சர்கர் கேசவன் நம்பூதிரி, கருவறையை கரு உண்டாக்கும் அறையாக பயன்படுத்திய காஞ்சிபுரம் தேவநாத குருக்கள், கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் கைதான சங்கராச்சாரி இவர்களிடம் கேட்டால் அவர்களும் சொல்வார்கள் காதலர் தினம் ஒழுக்கக் கேடானது என்று”

திருச்சியில் 200 ஏக்கரில் தி.மு.க. 10–வது மாநில மாநாடு !

திருச்சியில் தி.மு.க.வின் 10–வது மாநில மாநாட்டை கருணாநிதி இன்று(சனிக்கிழமை) காலை கொடி ஏற்றி தொடங்கிவைக்கிறார். இதற்காக 200 ஏக்கரில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
திருச்சியில் தி.மு.க. மாநாடு
திருச்சியில் உள்ள திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே தி.மு.க.வின் 10–வது மாநில மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) என இருநாட்கள் நடைபெறுகின்றன. இதற்காக அங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்திற்கு அண்ணாநகர் என்றும் மாநாட்டு திடலுக்கு தந்தை பெரியார் பெயரும் சூட்டப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் உண்மை தொண்டர்கள் ,குண்டர்கள் அல்ல ,அதிக அளவில் உள்ள கட்சி இன்றும் .....திருச்சி நிருபிக்கிறதே ! 

அழகிரி:பதவி என்பது கால் தூசிக்கு சமம் ! அழகிரி பக்குவமாக செயல் பட தொடக்கி விட்டார்.

பதவி என்பது கால் தூசிக்கு சமம்; மூன்று மாதங்கள், 'வெயிட்' பண்ணுங்க, நல்ல முடிவு வரும்,'' என, மதுரையில் நடந்த, ஆதரவாளர் இல்ல திருமண நிகழ்ச்சியில், தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி தெரிவித்தார். அழகிரி பேசியதாவது:நான் மதுரைக்கு வந்த போது, முதலில் அறிமுகமாகிய நபர், தற்போது பதவி இழந்துள்ள, அவைத் தலைவர் இசக்கிமுத்து தான். அரசியலில் அடியெடுத்து வைக்க, அவர் காரணமாக இருந்தார். அன்று எந்த பதவியும் இல்லாமல், சாதாரண தொண்டனாக இருந்தபோதும், என்னை சுற்றி தீவிர ஆதரவாளர்கள் இருந்தனர். பலர் பதவிகள் பெற்றனர். பல இன்னல்கள்: அவர்கள், தற்போது பதவிகளை இழந்து, பல இன்னல்கள், சோதனைகளை சந்தித்த பின்னும், என்னுடன் உள்ளனர். 2000ம் ஆண்டில், எனக்கு ஒரு சோதனை (கட்சியில் இருந்த நீக்கப்பட்டது) ஏற்பட்டது. அதற்கு பின், 2014ல் மீண்டும் சோதனை ஏற்பட்டுள்ளது. எத்தனை சோதனைகள் வந்தாலும், நான் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஒரு பழிச் சொல்லை என் இதயம் தாங்காது. ஆ ..அப்படி போடு அஞ்சா நெஞ்சமே ?

ஊழலை ஒழிக்க உயிர்த்தியாகம் செய்ய தயார் ! ராஜினாமா செய்த Ex CM கெஜ்ரிவால்



ஊழலை ஒழிப்பதற்காக உயிர்த்தியாகம் செய்யவும் தயார் என்று, ராஜினாமா செய்த டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
கொட்டும் மழையில் பேச்சு
நேற்று மாலை சட்டசபை கூட்டம் முடிந்ததும், முதல்–மந்திரி கெஜ்ரிவால் மந்திரிசபை கூட்டத்துக்குப்பின் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. கொட்டும் மழையில் அங்கு திரண்டு வந்த தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசினார். 

விஜயகாந்த் நாக்கை துருத்தி, கையை நீட்டி, ''உனக்கெல்லாம், எதுக்கய்யா, நான் பதில் சொல்ல வேண்டும்; போய்யா

டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அவரை, நிருபர்கள் பேட்டி காண முயன்ற போது, அவர்களை நோக்கி, நாக்கை துருத்தி, கையை நீட்டி, ''உனக்கெல்லாம், எதுக்கய்யா, நான் பதில் சொல்ல வேண்டும்; போய்யா...'' எனக்கூறி, ஆவேசமாக, விஜய்காந்த் முன்னேற முயன்றதால், பாதியிலேயே, நிருபர்கள் சந்திப்பு முடிந்தது

 எல்.ஏ.,க்கள் அணிவகுப்பு:டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, பிரதமர் இல்லத்தை விட்டு வெளியே வந்த, விஜயகாந்தை, நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். பிரதமர் இல்லத்தின் எதிர்புறம் உள்ள சாலையில் தான், இடவசதி உள்ளது என்பதால், விஜயகாந்தை, அங்கு வரும்படி, நிருபர்கள் அழைத்தனர்.காரைவிட்டு, விஜயகாந்த் இறங்கி வருவதற்கு முன், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வந்து, வரிசையாக அணிவகுத்து நின்றனர். பின், சுதீஷ் சைகை காட்டியதும், நிருபர்கள் இருந்த இடத்திற்கு, விஜயகாந்த் வந்தார்.டில்லியில், நேற்று மழை பெய்து, மேக மூட்டமாக இருந்த நிலையிலும், கூலிங் கிளாஸ் அணிந்தபடியே, பேட்டியை விஜயகாந்த் ஆரம்பித்தார். பிரதமரின் சந்திப்பு குறித்து, பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல், பேச ஆரம்பித்தார்.     மாயவரத்துல கூப்டாக, மன்னார்குடியில் கூப்டாக.........இப்படி பாட்டு  படிச்சே பொழப்பு போகப் போகுது.......தலைவர் இவரை ஸ்டன்ட் நடிகர் என்று சொன்னார்..அங்கே டில்லியில் உடனே நாக்கை துருத்தி நல்ல பெர்பார்மென்ஸ்......இவரை பேட்டி காண போகும் நிருபர்கள் ஹெல்மெட் போட்டு போங்கப்பா...

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பா.ஜ.க.விற்குக்கு SRM பச்சமுத்துதான் Sponsor. கட்டவுட் , போஸ்டர் அடிப்பது, விஜிபி மைதா ஏற்பாடு ! ஆகையால் இவர் அடித்த கூத்துகளையெல்லாம் பா.ஜ.க.வினர் சகித்துக்


பச்சமுத்து உரைபாஜகவை பதம் பார்த்த புதிய தலைமுறை பாரிஜி ! மோடியின் சென்னை பொதுக்கூட்டத்தில் கர்ஜித்த பாரிவேந்தரின் பேச்சை நேரிலோ, யூ டிபிலோ பார்க்க முடியாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள். இந்தியாவை உய்விக்க வந்த பா.ஜ.க-ஐ.ஜே.கே கூட்டணி, அதன் ‘விடிவெள்ளி’ மோடி, தமிழகத்தின் ‘வலுவான’ மாற்று அணி’, அதன் கொள்கைகள், கூட்டணி ஏற்பட்ட வரலாறு அனைத்தையும் தரிசிக்க வைக்கிறது அன்னாரின் உரை. அதை பா.ஜ.க அணியின் கொள்கை அறிக்கை ஆவணம் என்று  குறிப்பிட்டால் கூட மிகையல்ல. ஐஜேகே, பாஜக நடத்திய வண்டலூர் திறந்த வெளி பொதுக்கூட்டத்தில் பச்சமுத்து உரை.

Delhi CM கெஜ்ரிவால் ராஜினாமா ! ஜன் லோக்பால் மசோதா தாக்கல் தோல்வி:

புதுடெல்லி, பிப். 14- டெல்லி சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியபடி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பதற்காக ஆளுநரை சந்திக்க உள்ளார். இதையொட்டி ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர், டெல்லியின் அனுமன் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். இரவு 8 மணியளவில் கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த தகவலை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:- ஜன் லோக்பால் மசோதாவை ஆதரிக்காமல் காங்கிரசும், பா.ஜனதாவும் எதிர்த்து வருகின்றன.

நடிகை மௌனிகா! பாலுமகேந்திரா உடலை பார்த்து கதறி அழுத காட்சி! தடுத்தவர் டைரக்டர் பாலா see photos

திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் 14.02.2014 வெள்ளிக்கிழமை போரூரில் அடக்கம் செய்யப்பட்டது.
மரணம் அடைந்த பாலுமகேந்திராவுக்கு அகிலா என்ற மனைவியும், சங்கி மகேந்திரா என்ற மகனும் உள்ளனர். இடையில் நடிகை ஷோபாவை காதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஷோபா தற்கொலை செய்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு நடிகை மவுனிகாவை மூன்றாவதாக திருமணம் செய்தார்.
பாலுமகேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், அவரை காண சென்றபோது என்னை சிலர் அனுமதிக்கவில்லை என்று மவுனிகா குற்றம் சாட்டியிருந்தார்.

தலைவர் சத்ய நாதெல்லா – அப்படியொன்றும் பெருமையில்லை..! – அருண் குப்

சத்ய நாதெல்லாஜான் க்வெஸ்ட் – ஹட்ஜி ழுபதுகளில் வாஷிங்டனுக்கு அருகில் வளர்ந்த எனக்கு ஜான் க்வெஸ்ட் தொலைக்காட்சி தொடரில் காட்டப்பட்ட “நன்றாக பேசக்கூடிய… கல்கத்தாவின் தெருக்களில் தனது திறமைகளில் வளர்த்துக் கொண்ட அநாதை”யான ஹட்ஜி என்ற சிறுவன் தான் ஒரு இந்தியனுக்கான வெகுஜன கலாச்சார அடையாளம். ”மூத்திரம் குடிக்கும் பழக்கம் உடைய இந்திய பிரதமரை” போலவும்,  ‘இவன் இந்தியாவிலிருந்து திரும்பியதிலிருந்து மந்தமாக இருப்பதற்குக் காரணம் ஊரில் இவனுக்கு பத்து வயதிலேயே திருமணம் செய்து வைத்திருக்க கூடும்’ என்று எனது ஆசிரியர் என் வகுப்புத் தோழர்களிடம் சொல்வது போலவும் அது அவமானகரமான அடையாளம்தான்.
தங்களில் ஒருவர் மேற்கத்திய உலகில் வெற்றிகளின் உச்சத்தைத் தொடும் போது இந்தியர்கள் பெருமிதம் அடைகிறார்கள். அந்த வெற்றி புலிட்சர் பரிசாகவோ, மிஸ் அமெரிக்காவாகவோ, கவர்னர் பதவிகளாகவோ அல்லது தொழிலதிபர்களாகவோ இருக்கலாம். இந்தியர்கள் என்பவர்கள் “குரங்கு மூளையை சாப்பிடும் அன்னியர்கள்” என்ற பொதுப்புத்தியின் மீதான அவர்களது எரிச்சலும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு தனிநபரின் வெற்றி தேசத்தின் கூட்டு அறிவுத்திறனுக்கும், பணி நேர்த்திக்கும்  திறமைகளுக்கும் நிரூபணமாக கருதப்படுகிறது.

ஒரு புதிய காதல் தூது ! கப்டனின் வலண்டின் ரோஜா !


ரூ.1,70,000 கோடி சொத்து படுத்தும்பாடு ! செத்துப்போன சாமியாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு ! காரணம் சாமியார் சாக மாட்டாராம்!

Divya Jyoti Jagriti Sansthan (DJJS) founder Ahutosh Maharaj was declared clinically dead, his son Dalip Jha is coming to Punjab, from his native place Lakanur in Madhubani district in Bihar, to claim his body for cremation as per Hindu rites. Dalip said he would explore all legal options for the purpose.வாழும் கலை சாமியார் அசு தோஷ் மகராஜ் செத்துப் போன நிலையில் அவர் சாக மாட்டார் - என்று சீடர்கள் கூறினர் - அரசோ செத்துப் போனவருக்கு இசட் பிரிவு பாதுகாப்புக் கொடுக்கிறது - ஏராளமான சொத்துகள் இருப் பதால் பித்தலாட்டங்கள் அரங்கேறுகின்றன. ஜனவரி மாத இறுதியில் வாழும் கலை சாமி அசுதோஷ் மகராஜ் என்பவர் நுரையீரல் தொடர்பான நோயால் இறந்தார். இது குறித்து சனவரி 29-ஆம் தேதி சண்டிகர் மருத்துவ அதி காரிகள் அடங்கிய குழு வெளி யிட்ட செய்திக்குறிப்பில் நுரையீரல் தொடர்பான தொற்றுநோயால் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட் டதன் காரணமாக சாமியார் இறந்து விட்டார் இது குறித்து சாமியாரின் திவ்யஜோதி ஜகருதி சங்கத்திற்கு அறிக்கை அனுப்பினோம் என்றனர். சாமிகளின் மறைவை அறிந்து ஹரியானா, பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் டில்லியில் இருந்து அவரது பக்தர்கள் கூட்டம் வந்துகொண்டு இருந்தது, இந்த நிலையில், திவ்ய ஜோதி ஜகருதி சங்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது அதில் குறிப்பிட்டுள்ளதாவது. சுவாமி அசுதோஷ் மகராஜ் நித்திய சமாதிக்கு செல்லும் முன்பு சீடர்களிடம், தான் நித்திய சமாதி அடையப் போவதாகவும் மீண்டும் பக் தர்களுக்கு அருள் பாலிக்க திரும்புவேன் என்று கூறினார்.

சீமாந்திராவுக்கு புதிய தலைநகர்: வரிச்சலுகை ! தெலுங்கானா மசோதாவில் தகவல் !

ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா மாநிலம் அமைக்க வகைசெய்யும் ‘ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு மசோதா’ நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே அதை தாக்கல் செய்தார். மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

சீமாந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும். பொது தலைநகரில், தற்போது கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியில் வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகளும் அடங்கும். சீமாந்திரா மாநிலத்துக்கு 45 நாட்களுக்குள் புதிய தலைநகரை தேர்வு செய்ய வல்லுனர் குழுவை மத்திய அரசு அமைக்கும்.

நடிகை மௌனிகா : என் கணவர் பாலுமகேந்திரா உடலை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை


சென்னை: என் கணவர் பாலு மகேந்திரா உடலைப் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை, என்று நடிகை மௌனிகா புகார் கூறியுள்ளார். இயக்குநர் பாலுமகேந்திரா மறைவு குறித்து நடிகை மௌனிகா மனம் திறந்துள்ளார். அவர், "பாலுமகேந்திரா என் கணவர். கடந்த 1993-ம் ஆண்டு முதல் அவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது. 16 வருடங்களுக்கு முன்பு (1998-ம் ஆண்டில்) நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். கோயிலில் திருமணம் செய்து கொண்டோம்
அன்று முதல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவர் இறந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ஓடினேன். ஆனால் அவர் உடலைப் பார்க்க என்னை சிலர் அனுமதிக்கவில்லை. பொதுவாக எல்லா 2-வது மனைவிகளுக்கும் நடக்கும் கொடுமைதான் இது என்பது எனக்குப் புரிந்தாலும், இந்தக் கொடுமையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை,'' என்று தெரிவித்துள்ளார்.

தி.மு.க., மாநாடு நுழைவுக் கட்டணம் : ஆண்களுக்கு ரூ.50; பெண்களுக்கு ரூ.20 !


திருச்சி: தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, நுழைவுக் கட்டணமாக, ஆண்களுக்கு, 50 ரூபாயும், பெண்களுக்கு, 20 ரூபாயும் வசூலிக்கப்பட உள்ளது.
தி.மு.க.,வின், 10 வது மாநில மாநாடு, திருச்சியில், வரும், 15, 16ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து முடிந்துள்ளன. விடுப்பட்ட சில பணிகள் மட்டுமே, தற்போது நடந்து வருகின்றன. மாநாட்டில், பல லட்சம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது. ஐந்து லட்சம் பேர் அமரும் வகையில், பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, ஆங்காங்கே பிரமாண்ட, எல்.இ.டி., மானிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மோடி மாநாட்டில் ஐந்து ரூபாய் வசூலிக்கிறார்கள் என்று பெருமை பீற்றி கொண்டவர்களே, இப்போது பாருங்கள்

காங்கிரசுடன் மீண்டும் கூட்டணியா? ஸ்டாலின் கொந்தளிப்பு; பிரசாரம் செய்ய மறுப்பு

தமிழகத்தில், புதிய கூட்டணியை ஏற்படுத்த, காங்கிரஸ் மேலிடம் காய் நகர்த்தி வருகிறது. தே.மு.தி.க.,வுடன் பேசி, கூட்டணியை உறுதி செய்துள்ள காங்., தலைமை, தி.மு.க.,வுக்கு தூது விட்டுள்ளது. தி.மு.க., தரப்பிலும், கனிமொழி உட்பட, சிலர், காங்., கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., கட்சிகள், ஓரணியில் வரலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் நேற்று, இந்த தகவலை மறுத்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ''தி.மு.க., தலைமையில், தற்போதுள்ள கூட்டணியில், எந்த மாற்றமும் இல்லை,'' என, தெரிவித்துள்ளார்.

 கூட்டணியில் சேர்த்தால்: கருணாநிதியின் இந்த திடீர் அறிவிப்புக்கு, காங்., கூட்டணிக்கு, ஸ்டாலின் காட்டிய கடும் எதிர்ப்பே, காரணம் என, தெரியவந்துள்ளது. 'காங்கிரசை மீண்டும் கூட்டணி யில் சேர்த்தால், பிரசாரத்திற்கு செல்ல மாட்டேன்' என, ஸ்டாலின் எதிர்ப்பு கொடி பிடித்ததால் தான், கருணாநிதி இம்முடிவுக்கு வந்துள்ளார் என, அறிவாலய வட்டாரம் சொல்கிறது. இதுகுறித்து, அந்த வட்டாரம் மேலும் கூறியதாவது: தி.மு.க.,வை மீண்டும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொண்டு வர, காங்., மேலிடம் விரும்புகிறது.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

இந்தியா இதுவரை கண்டிராத மனநோய் பீடித்த மதவாத சர்வாதிகாரி :அந்தப் பொண்ணு எப்படியாவது ஏமாத்திட்டு ஓடிடுவா”


2014 நாடாளுமன்றத் தேர்தல் போட்டியில் நிற்பதற்கு முன்பே ஜெயித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் நினைப்பு ஒரு பெண் விவகாரத்தால் தடைபடுகிறது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரல்ல, பிரதமரே அவர்தான் என்று ஊடகங்கள் சித்தரித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரசுக்கு லட்டு மாதிரியான ஒரு பிரச்சினை கிடைத்திருக்கிறது. குஜராத் அரசாங்கம் 2009இல் சட்ட விரோதமாக ஒரு பெண்ணின் படுக்கையறை வரை உளவு பார்த்த விவகாரம், அதில் நேரடியாகத் தொடர்புடைய அப்போதைய பா.ஜ.க. உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தாண்டி, நரேந்திர மோடி ‘சாஹேபை’யும் பதம் பார்க்கிறது.

நைஜீரியா ஓட்டலில் மனித தலை கறி விற்பனை ! பயங்கரம் மெனுவில் பக்காவாக அச்சிட்டு

Two freshly severed human heads wrapped in cellophane were reportedly discovered at a hotel restaurant which served human flesh, ..அனம்பிரா:ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஒரு ஓட்டலில் மனித உடல் உறுப்புகளை வறுத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பயங்கரமான செயலில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், அனம்பிரா என்ற இடத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில், மனித உடல் உறுப்புகளை வறுத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 2 மனித தலைகளை கலர் பேப்பரில் அழகாக சுற்றி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அஞ்சலி: பாலு மகேந்திரா ! Balanathan Mahendra


1974ல் நெல்லு என்ற மலையாள சினிமா வெளிவந்தது. ராமுகாரியட் இயக்கி பிரேம்நசீர் நடித்தபடம். அப்போது எனக்கு பன்னிரண்டு வயது. ஒரு மாமா வீட்டுக்குச் சென்றிருந்தபோது திருவனந்தபுரத்தில் அந்தப் படத்தைப் பார்த்தேன். உண்மையில் எனக்கு சினிமா என்ற அழகனுபவம் அங்கேதான் தொடங்குகிறது. நான் செம்மீனையும் வேறுபல முக்கியமான மலையாளப்படங்களையும் அதற்குப்பின்னர்தான் பார்த்தேன். அதுவரை நான் பார்த்திருந்த படங்கள் கறுப்புவெள்ளை மலையாளக் குடும்பப்படங்கள். எம்.ஜி.ஆர்,சிவாஜிகணேசன் நடித்த வண்ணப்பிழம்புகளான தமிழ்ப்படங்கள். நெல்லு எனக்கு ஒரு சினிமாவாகவே தெரியவில்லை. அது ஒரு கனவு. எனக்கும் இயற்கைக்குமான உறவை தீர்மானித்த அனுபவங்களில் அதுவும் ஒன்று என்று மிகப்பிந்தித்தான் உணர்ந்தேன்
நெல்லு படத்தை நான் பதினைந்து வருடம் கழித்து மீண்டும் பார்த்தேன்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி படுமோசமாக சரிந்தது !: 2010-11ல் 13.12%; 2012-13ல் 4.14%!! நாட்டிலேயே மிகக் குறைவான வளர்ச்சி கொண்ட மாநிலம

சென்னை: 2012-13ஆம் ஆண்டில் நாட்டிலேயே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிதான் மிகக் குறைவாக 4.14% ஆக இருந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 4.9% ஐ விட குறைவாகும். தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2014-15ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்தின் பொருளாதார நிலைமை குறித்து கூறுகையில், சரிநிகர் வளர்ச்சியை எட்ட மாநில அரசு கடுமையாக முயன்று வரும் அதே வேளையில் வளர்ச்சியைத் தூண்டவும், நலிவுற்று வரும் பேரியல் பொருளாதாரச் சூழ்நிலைகளை மேம்படுத்தவும், மத்திய அரசு தவறியதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சியும், முதலீடுகளும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

தெலங்கானா: மக்களவையில் மிளகுப்பொடி Spray! பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் சிலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்


மக்களவை உறுப்பினர் ராஜகோபால்
தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா எம்.பி. தன்வசம் இருந்த பெப்பர் ஸ்ப்ரே-வை தெளித்து நூதனப் போராட்டம் நடத்தியதால் மக்களவை போர்க்களமானது.
மக்களவையில் இன்று தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மக்களவையில் விஜயவாடா எம்.பி. ராஜகோபால் தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரேவை தெளித்து நூதனப் போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து, மக்களவையில் உறுப்பினர்கள் பலருக்கும் தொடர்ந்து இருமல் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதனிடையே, தெலங்கானா ஆதரவு மற்றும் எதிர்ப்பு எம்.பி.க்களுக்கு இடையே மக்களவையில் கடும் மோதலும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால், அவையே போர்க்களமாகக் காட்சியளித்தது.

அயோக்கியர்களின் கடைசி புகலிடம்! தேசபக்தி Singhapore தமிழருக்கு ஒரு நீதி தேவயானிக்கு ஒரு நீதி

சங்கீதாவிற்கு இழைத்த அநீதிகளும் இந்திய மக்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியாதபடி மூடிமறைக்கப்படுகின்றன. இந்த தேசபக்தி நாடகத்தின் இன்னொருபுறத்தில் தேவயானியால் பாதிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட சங்கீதா, தேவயானி மீது அமெரிக்க போலீசிடம் புகார் கொடுத்த ஒரே காரணத்திற்காகப் பேராசையும் கிரிமினல்புத்தியும் கொண்ட சதிகாரியாக, திருடி யாக, சி.ஐ.ஏ. உளவாளியாக மக்களிடம் காட்டப்படுகிறார்.
சிங்கப்பூர் கலவரத்தில் கைது செயப்பட்டுள்ள 35 தமிழகத் தொழிலாளர்களிடம் சிங்கப்பூர் சட்டதிட்டங்களை மதித்து நடக்குமாறு இந்தியத் தூதர் அறிவுரை கூறினாரே, அதே அறிவுரையை இந்திய அரசு தேவயானியிடம் ஏன் சொல்லவில்லை?ஆளுங்கட்சியும், அதிகார வர்க்கமும் தமது தவறுகளை யாரும் கேள்வி கேட்க முடியாதபடி மூடி மறைத்துக் கொள்வதற்கு, தமது அத்துமீறல்களை நியாயப்படுத்துவதற்கு தேச பக்தி, தேச பாதுகாப்பு, தேசத்தின் வளர்ச்சி என்ற பித்தலாட்டத்தனமான கருத்தாக்கத்தை முன்வைப்பதைத் தற்காலத்தில் பல வழக்குகளில் நாம் காண முடியும். இராணுவம், போலீசு துறைகளில் நடக்கும் ஊழல்களையோ, மோசடிகளையோ, போலி மோதல் கொலைகளையோ கேள்வி கேட்பது தேசத்தின் பாதுகாப்பையே கேள்வி கேட்பதாக மிகைப்படுத்தப்பட்டு வாயடைக்கப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்புகளையோ, நீதிபதிகளின் நடத்தையையோ கேள்வி கேட்கமுடியாதபடி, அவற்றுக்கு ஒரு புனிதம் கற்பிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் என்ற வாய்ப்பூட்டுச் சட்டத்தை நீதிபதிகள் தமது கைகளில் வைத்திருக்கிறார்கள்.

டி ராஜேந்தர் குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார் ! Ex தீவிர அய்யப்ப பக்தர்.?

சென்னை: டி ராஜேந்தர் தன் குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி ராஜேந்தர் தீவிர அய்யப்ப பக்தராக அறியப்பட்டவர். முன்பெல்லாம் தனது படத்தின் விளம்பரங்களில் அய்யப்பன் படத்தை பெரிதாக வெளியிடுவார் டிஆர். பின்னர் அவர் முஸ்லிமாக மாறிவிட்டதாக செய்திகள் உலாவின. பின்னர் அதை மறுத்தார் ராஜேந்தர். இந்த நிலையில், குடும்பத்தோடு அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளது. சிம்பு, குறளரசன் மற்றும் இலக்கியாவும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் மதம் மாறிவிட்டார்கள். இந்த மதமாற்றத்துக்கு சாட்சி சமீபத்தில் நடந்த ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம். முழுக்க முழுக்க கிறிஸ்தவ முறைப்படிதான் இந்தத் திருமணம் நடந்தது. டி ராஜேந்தரின் மனைவி உஷா நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே மனதளவில் கிறிஸ்தவராகிவிட்டவர். அதுமட்டுமல்ல, டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவிலேயே சிலுவைக் குறியீடு தொடர்ந்து இடம்பெற்றது நினைவிருக்கலாம்.
tamil.oneindia.in

ஜெர்மனியில் இந்திய வம்சாவளி எம்.பி. வீட்டில் குழந்தைகள் ஆபாச பட அதிரடி சோதனை

ஜெர்மனி நாட்டில் சர்வதேச அளவில் குழந்தைகள் ஆபாச பட குழு இயங்கி வருவதாக போலீசுக்கு தகவல்கள் கிடைத்தன். இது தொடர்பாக போலீசார் நடத்திய புலனாய்வில், குழந்தைகள் ஆபாச பட குழுவில் இந்தியரும், ஜெர்மனி எம்.பி.யுமான செபாஸ்டியன் இடாத்தியின் (வயது 44) பெயரும், அவரது இணையதள ஐ.பி. முகவரியும் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நீன்பர்க், ஸ்டெட்தாகன் நகர்களில் உள்ள அவரது அலுவலகங்கள், ரேபர்க்கில் உள்ள அவரது வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சிக்கியது என்ன என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. விசாரணையின் ஒரு அங்கமாகத்தான் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.

பாலு மகேந்திரா ஒரு சகாப்தத்தின் மரணம்! ஒரு அழியாத கோலங்கள்

தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளி பாலு மகேந்திரா மரணித்து விட்டாரா? - நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருக்கிறது திரையுலகமும், அதற்கு வெளியிலிருந்து அவரை நேசிக்கும் உள்ளங்களும். பாலு மகேந்திரா என்ன மரணத்துக்கு அப்பாற்பட்டவரா... அல்லது அவர் வயதுதான் மரணம் நெருங்கியிருக்கக் கூடாத ஒன்றா? பாலு மகேந்திரா... ஒரு சகாப்தத்தின் மரணம்! இரண்டுமே இல்லைதான். அவர் உடல் நிலை, வயது காரணமாக அவருக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை சில ஆண்டுகளாகவே பலரும் உணர்ந்திருந்தார்கள். 'பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி இருக்கின்றதென்பது மெய்தானே.. பேதை மனிதனே உடம்பு என்பது கனவுகள் வாங்கும் பைதானே!' -என்ற பாடலைப் படமாக்கிய கலைஞன் அவர்தானே... ஆனால் பாலு மகேந்திரா போன்றவர்களை அத்தனை சீக்கிரம் மரணம் தீண்டாத மனிதர்கள் பட்டியலில் வைத்துவிட்டது

உறுதியாகிறது திமுக- காங். கூட்டணி: சோனியாவுடன் கனிமொழி திடீர் சந்திப்பு!! ஸ்டாலின் ???


டெல்லி: லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாக சோனியா காந்தியை கனிமொழி திடீரென சந்தித்து பேசியுள்ளார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி இல்லை என்று கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் அறிவித்தனர். ஆனால் திமுகவில் மு.க. அழகிரி, தயாநிதி மற்றும் கனிமொழி ஆகியோர் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்காக முயற்சிகளை மும்முரமாக்கினர். இதனால் திமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து பேசினார். காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: ஸ்டாலின் அப்போதும்கூட காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்திருந்தார்.

பண்ணையாரும் பத்மினியும் ஒரு நல்ல சினிமா !

மனிதர்களை வைத்து கதை சொல்லும் சினிமாக்களை பார்த்திருக்கிறோம், மிருகங்களை வைத்துக் கதை சொல்லி பார்த்திருக்கிறோம், அமானுஷ்ய சக்தியாக உருவெடுக்கும் பல அனிமேஷன் படங்களை பார்த்திருக்கிறோம்... ஆனால் ஒரு காரை (மகிழுந்து) வைத்து கதை சொன்னது, முற்றிலும் புதிது! 90களின் தொடக்கத்தில் நடக்கிற கதையாக இருக்கிறது இப்படம். ஊருக்குள் இருக்கும் பண்ணையாரைப் பற்றியும் அவர் வைத்திருக்கும் பத்மினி காரைப் பற்றியும் கதை சொல்லும் ’பண்ணையாரும் பத்மினியும்’ ஒரு நல்ல சினிமா என்பதை யாராலும் மறுக்க முடியாது.

FeFsi Mafia ! குடிபோதையில் பெப்சி உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களுடன் மோதல்!


ென்னை: சினிமா விழாவில் பெப்சி உறுப்பினர்கள் குடித்துவிட்டு வந்து பத்திரிகையாளர்களுடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்சினிமாவில் நாளுக்கு நாள் பெப்ஸி எனப்படும் தென்னிந்திய திரைப்பட சம்மேளன உறுப்பினர்களின் அடாவடி அதிகரித்துக் கொண்டே போகிறது. தொழிலாளர்கள் என்பதால் பலர் மனதிலும் உண்டாகும் சலுகை மனப்பான்மையை சிதைக்கும் வகையில் அவர்களின் போக்கு அமைந்துள்ளது. நேற்று பெப்சி உறுப்பினர்கள் சிலர் ஒரு படத்தின் விழா நடக்கும் இடத்துக்கே வந்து பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்குப் போய்விட்டனர்.
பெப்ஸி தமிழ் சினிமாவில் 24 சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பு தான் பெப்ஸி. இந்த அமைப்பில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களில் பணிகளில் அமர்த்தக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம்.
ஆரம்பத்தில் ஒரு ஒற்றுமை உணர்வு வேண்டும், அதே நேரம் பணியாளர்களை தேடி அலையும் நேரமும் குறையும் என்பதால் தயாரிப்பாளர்கள் இந்த அமைப்பில் உள்ள தொழிலாளர்களை தாங்கள் தயாரிக்கும் படத்தில் வேலைக்கு அமர்த்தினார்கள். ஏகபோகம் ஆனால் அதுவே காலப் போக்கில் அவர்கள் ஏகபோகம் செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

வர்த்தகர்களை மிரட்டி ஆண்டுக்கு ரூ.140 கோடி பறிக்கும் மாவோயிஸ்ட்கள்


புதுடெல்லி : தங்களுடைய தீவிரவாத செயல்களுக்காக மாவோயிஸ்ட்கள், வர்த்தகர்கள், நிறுவனங்களை அச்சுறுத்தி ஆண்டுக்கு ரூ.140 கோடி அளவிற்கு பணம் பறிக்கிறார்கள்  என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு பணம் வரும் வழிகளை அரசு கண்காணித்து வருகிறது. புதுடெல்லியில் உள்ள பாதுகாப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தீவிரவாதிகள் பணம் வசூல் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.இதில் சிபிஜ-மாவோயிஸ்ட் இயக்கத்துக்கும், நக்சல் தீவிரவாதிகளுக்கும் வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது. போராளிகள் என்று சொல்லப்படும் பலரும் கப்பம் வாங்குவதற்கு தானே போராடினார்கள் ?

ஏன் சென்னை ஐகோர்ட்டில் பணியாற்ற பிற மாநில நீதிபதிகள் தயங்குகிறார்கள் ?


சென்னை,
சில துரதிருஷ்ட சம்பவங்களால், சென்னை ஐகோர்ட்டில் பணியாற்ற பிற மாநில நீதிபதிகள் தயக்கம் காட்டுகிறார்கள் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் பிரிவு உபசார விழாவில் கூறினார்.
பிரிவு உபசார விழா
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ராஜேஷ்குமார் அக்ரவால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சென்னை ஐகோர்ட்டில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் ஐகோர்ட்டு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அரசு வக்கீல்கள் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது ஊழல் தடுப்பு துறை வழக்கு!


இயற்கை எரிவாயு ஊழல் வழக்கில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்-, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது டெல்லி மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணா, கோதாவரி படுகையில் எரிவாயு எடுத்து வரும் ரிலைன்ஸ் நிறுவனம், அதனை மத்திய அரசுக்கு விற்பனை செய்து வருகிறது. இதற்கான விலையை மத்திய அமைச்சர்கள் சிலரின் துணையுடன் அதிரடியாக அந்த நிறுவனம் உயர்த்தியதாகவும், இதனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், செயற்கையான முறையில் தட்டுப்பாடு ஏற்படவும் ரிலையன்ஸ் நிறுவனம் வழிவகுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., கூட்டணி பேச்சுவார்த்தைகள் துவங்கி உள்ளன.

விஜயகாந்தின் தே.மு.தி.க., யார் பக்கம் சாயும் என்ற கேள்விக்கு, விடை தெரியாத நிலையில், தமிழக அரசியலில், திடீர் திருப்பமாக, தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., கூட்டணி அமைக்க, பேச்சுவார்த்தைகள் துவங்கி உள்ளன.

மேலும், தே.மு.தி.க.,வின் எதிர்பார்ப்பை, காங்கிரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும் எனக் கூறப்படுவதால், இரு கட்சிகளும் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. டில்லி காங்., தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், முகுல் வாஸ்னிக் ஆகியோர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன், தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  தளபதியில் சொல் அம்பலம் ஏறாது போல இருக்கிறது. கனிதான் அடுத்த திமுக தலைவர்?

புதன், 12 பிப்ரவரி, 2014

.jeyamohan :சமீபத்தில் எதையும் (ஓஷோ) படித்து இவ்வளவு நெகிழ்ச்சியாக உணர்ந்தது இல்லை.


ஒன்றை அறிந்துகொள்ளுதல் ஒரு உயர்வான அனுபவம் , அறிந்தவற்றைப் புரிந்து கொள்ளுதல் இன்னும் மேலான அனுபவம், ஆனால் அறிந்தவற்றையும் அதைப் புரிந்தவற்றையும் உணர்ந்துகொள்ளுதல் ஒரு உன்னதமான அனுபவம் , மிக அபூர்வமாகவே அது கைகூடும், மேலும் இந்த வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமும் நமக்கு மிக அரிதாகவே வாய்க்கும். இந்த வரிகள் அத்தகைய மின்னலெனத் தெறிக்கும் ஒற்றை வரிகள் நிறைய நமக்கு அறிமுகமானவை தான், நம் ஒவ்வொருவர் கைவசமும் அவ்வாறு ஒரு பட்டியல் இருக்கும், ஆனால் மேலுள்ளது போன்ற ஒரு உவமையும் படிமமும் நம்மை ஒரு மானுட உச்ச அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது . இது போன்ற வரிகளுக்காக மேலும் ஏங்க வைக்கிறது .
சிறுகதை, நாவல்கள் நமக்களிப்பது ஒரு மலையேறும் இலக்கிய அனுபவம், திருப்பங்கள் தோறும் புதிய காட்சிகள், ஏற ஏற அடி பரந்துகொண்டே செல்லும் நமது எடையும் கூடிக் கொண்டே செல்லும். கவிதைகள் நமக்களிப்பது ஒரு மின் தூக்கியில் மேல் உயர்வது போன்றது நமக்கு சாத்தியப்படுத்துவது கவிதைக் கணங்களை, எடையை உணர்ந்து கொண்டே சொகுசாக உயரும் அமோக அனுபவம். ஆனால் வாழ்வில் சிலமுறைகள் மட்டுமே நமக்கு ஆன்மிக அனுபவம் வாயக்கப் பெறும், அது ஒரு நேரடி நிகழ்வாகவோ அல்லது ஒரு கலையினூடாகவோ இருக்கலாம். ஒரு சருகாக எடையின்மையை நாம் உணர்ந்து காற்றில் மிதந்து கோபுரக் கலசத்தின் மீது எழுந்து தன்மையாக அமர்தல். மனிதப் பிறவிக்கு சாத்தியமான அதிகபட்ச அனுபவம் இதுவென்றே எண்ணுகிறேன், இதை இவ்வரிகளைப் படிக்கிறபோது அடைந்தேன்.

யுவன் இப்போ ஐஞ்சு வேளை தொழுகை நடத்தறேன்னு பத்திரிக்கைகளில்

Idam_Porul_Eval_1
"ஏம்பா...  யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்துக்கு மாறியது பற்றி, பரபரப்பா பேச்சு அடிபடுதே.... என்ன விஷயம் ? " என்றார் கணேசன்.
"இஸ்லாத் என்னை அழைத்தது.  அதனால் மதம் மாறினேன்னு அவர்தான் சொல்லிட்டாரே.... அப்புறம் என்ன ? "என்றான் தமிழ்.
"விளையாடாதப்பா.  விபரத்தை சொல்லு. "
"அண்ணே.. யுவன் சங்கர் ராஜா ஒரு மோசமான ஸ்த்ரீ லோலன்.  இந்தியா, மலேசியா, தாய்லாந்து ன்னு போயி பொறுக்கறதுதான் அவருக்கு வேலை. இவருக்கு நெருங்கிய தோஸ்து சிம்பு.
இவருக்கு ஏற்கனவே இரணடு முறை திருமணமாகி விவாகரத்து ஆகி விட்டது.  மூன்றாவதா, ஒரு பிரபலத்தோட மகளை திருமணம் பண்ணனும்னு முடிவு பண்றார்.  அந்தப் பெண்ணும், நான் பண்ணிக்கிறேன் ஆனா, முஸ்லீம் மதத்துக்கு மாறு ன்னு சொல்லியிருக்கார்.  இவரும், முஸ்லீமா மாறி, காதலாகி கசிந்துருகியிருக்கார்.  ஆனா, அந்தப் பெண் வீட்டுல, இந்த மாதிரி ஒரு ஆளுக்கு திருமணம் பண்ணி வைக்க சம்மதிக்கல.  இதையடுத்து அந்தப் பெண்ணும் முடியாதுன்னு சொல்லிடுச்சு.
அந்தப் பெண்ணின் மனதை மாத்தறதுக்காகத்தான் யுவன் இப்போ, நாலு வேளை பல்லு விளக்கறேன்.  ஐஞ்சு வேளை தொழுகை நடத்தறேன்னு, பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட வைச்சிக்கிட்டு இருக்காரு.  ஆனா, யுவனோட கனவு கைகூடாது.  அந்தப் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கு"
கொஞ்ச நாளுக்கு சோக பாட்டு பாடிக்கிட்டு சுத்துவாரு யுவன்.  அப்புறம், தாய்லாந்து போயி, சோகத்தை தீத்துக்குவாரு." என்று சொல்லி விட்டு தமிழ் எழுந்ததும், சபை கலைந்தது. savukku.com கொஞ்ச நாளைக்கு முந்தி இளையராஜாவுக்கு நெஞ்சு வலி மற்றும் ஹாட் அட்டாக் வந்த காரணம் இதுதான் ? 

இந்திய சூரியசக்தி கொள்கையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார்


solarஇந்திய சூரியசக்தி கொள்கையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் செய்துள்ளது.
“ஜவஹர்லால் நேரு தேசிய சோலார் மிஷன்” கொள்கை கடந்த 2010-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி 2022-ம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010-ல் தொடங்கிய தேசிய சோலார் மிஷன் திட்டத் தின் முதல் பகுதி 2013-ல் நிறைவடைந்தது. இந்நிலையில் இரண்டாம் பகுதி திட்டத்துக்கு 2013 அக்டோபரில் இந்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த இரண்டாவது திட்டத்தில் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையால் இந்தியா வுக்கு பெருமளவில் சூரியசக்தி மின் சாதனங்களை ஏற்றுமதி செய்து வந்த அமெரிக்க நிறுவனங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

த.வெள்ளையன் : கோக், பெப்சி போன்ற தனியார் குளிர்பானங்களில் கரப்பான் பூச்சி, ஈ, எறும்பு


கேடுவிளைவிக்கும் தனியார் குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும்: த.வெள்ளையன் கோரிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் தனியார் கம்பெனி தயாரிப்பான குளிர்பானத்தை குடித்த சிறுமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் அபிராமி (வயது 9) என்ற சிறுமி இறந்துவிட்டார்.
இன்னும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வப்போது கூட கோக், பெப்சி போன்ற தனியார் குளிர்பானங்களில் கரப்பான் பூச்சி, ஈ, எறும்பு போன்றவை காணப்பட்டு வருகிறது. இதிலிருந்து இத்தகைய குளிர்பானங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்படுவது இல்லை என்பது தெளிவாக தெரியவருகிறது.
மேலும் இத்தகைய குளிர்பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ‘மாலத்தியான்’ எனும் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்படுகிறது. லாபநோக்கம் ஒன்றே குறிக்கோளாக கருதி, மக்கள் நலனில் அக்கறை காட்ட தவறி வருகிறார்கள்.

சிக்கிட்டாரா.. தமிழக அரசியலை கலக்கும் மற்றொரு டேப்! அட ராமா ராமா

  சென்னை: தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் 'ரகசிய வாழ்க்கையை" மையமாக வைத்து மற்றொரு டேப் விவகாரம் வெடித்துள்ளது. அரசியல்வாதிகள் என்றாலே அவர்களுக்கு தொகுதி பிரச்சனை, தொண்டர்கள் பிரச்சனை, குண்டர்கள் பிரச்சனை, எதிரிகள் பிரச்சனை, துரோகிகள் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்களாக இருந்து வருகின்றனர். இதனால் தான் பல்வேறு அரசியல் அரசியல் தலைவர்கள் இரு திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரு திருமண பட்டியலில் "மூத்த தலைவர்" ஒருவர் இணைந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல்வேறு "கலவரமான" டென்சன்களுடன் எப்போதும் ஒரு தலைவர் வலம் வந்து கொண்டே இருப்பார். ஆனாலும் டென்சனை தணித்துக் கொள்ள அவருக்கு "தனிமை" வாழ்க்கை தேவைப்பட்டிருக்கிறது போல். அந்த மூத்த தலைவரது நக்கல், நையாண்டி, பேசும் விதம், ஆழமான கருத்து, இரண்டு அர்த்த வார்த்தை விளையாட்டு என பன்முக தன்மையை பார்த்து மனம் சொக்கிப் போன ஒருவர் தனது மனதையே அவரிடம் கொடுத்துவிட்டாரம்.

valentine day ஒசூரிலிருந்து 1.80 கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு !

மலர்கள் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, பாகலூர், அமுதகொண்டப்பள்ளி, கக்கதாசம், தளி, சேவகனாப்பள்ளி, கெலமங்கலம், ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பசுமைக் குடில்கள் அமைக்கப்பட்டு ரோஜா மலர்கள் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப நிலை ரோஜா மலர் சாகுபடிக்கு உகந்த நிலையில் உள்ளது.
பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட நகரங்களை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களும் ஒசூர் வட்டாரத்தில் ரோஜா மலர் சாகுபடி செய்து, கொய்மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
ஒசூர் பகுதி விவசாயிகள் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரோஜா மலர்களைச் சாகுபடி செய்கின்றனர்.

பாஜக-கூட்டணி விஜயகாந்த்-விலகிக்-கொண்டது பற்றிய-பின்னணி ! விஜயகாந்தை மோடி கண்டுக்கல்லியாம்

தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்படாததாலேயே பாஜக கூட்டணியில் சேர வேண்டாமென்று, தேமுதிக முடிவெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தலைமையிலான கூட்டணியில், மதிமுக, ஐஜேகே, கொமதேக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளன. பாமக-வின் நிலை இன்னும் சரியாகத் தெரியவில்லை, தேமுதிக பாஜக பாதையிலிருந்து விலகி காங்கிரஸ் திசையில் நகர ஆரம்பித்திருக்கிறது. பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறாமல் போனதற்கான காரணங்கள் குறித்து தேமுதிக, பாஜக வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்: பாஜக அணியில் மதிமுக-வுக்கு 10 முதல் 12 தொகுதிகள் வரை கேட்கிறார்கள். கொமதேக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது என தொகுதிப் பங்கீடு பேச்சு நடந்துள்ளது.
இதுதவிர, பாமகவுக்கு ஏற்கெனவே வேட் பாளர் அறிவிக்கப்பட்ட 10 தொகுதிகளும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் சாதி அமைப்புகளுக்கு மூன்று முதல் ஐந்து தொகுதிகளும் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் மட்டுமே 33 தொகுதிகளை கேட்கின்றன. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பாஜக 10 இடங்களில் கண்டிப்பாக போட்டியிட முடிவு செய்துள்ளது.

அலர்மேல் மங்கை IAS . சதீஷ்கரில் சாதனை படைத்திட்ட தமிழ் பெண் கலெக்டர்

நக்சசல்பாரிகள் உள் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்று பிரதமராலேயே சொல்லப்படுபவர்கள். இவர்களை சமாளிப்பதுதான் மாநிலத்தின் மிகப்பெரிய சவால் என்று மாநில முதல்வரால் விவரிக்கப்படுபவர்கள். இவர்களுக்கு ஜனநாயக வழியிலான தேர்தல் முறையில் விருப்பமில்லை. சட்டத்தின் ஆட்சி என்பது பிடித்தமானதல்ல. தேர்தலை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தை முன் நிறுத்துபவர்கள். தேர்தலுக்கு ஆதரவானவர்களை அடிப்பது உதைப்பது கடத்திச் செல்வது கொடூரமாய் கொல்வது என்பதெல்லாம் இவர்களது வழிமுறைகள். வாக்குச்சாவடியை கைப்பற்றுவது, ஓட்டளிக்க வருபவர்களை ஆயுதங்களால் தாக்குவது, ஒட்டுப் பெட்டியை உடைத்து சுக்கு நூறாக்குவது என்பது இவர்களுக்கு பழகிப்போன ஒன்று.
அதிலும் சதீஷ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டம் என்பது ஐம்பது சதவீதம் அடர்த்தியான காடுகள் நிறைந்த மாவட்டம். இதன் காரணமாக இங்குதான் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம். இந்த மாவட்டத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒரு சவலான விஷயம். இந்த சவாலான விஷயத்தை ஒருவர் கையாண்டு வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.   நக்சல்கள் இந்த மாதிரி மக்களுக்கு உதவுபவர்களைத்தான் முதல் குறியாக வைத்திருப்பார்கள்.இவர்களது பிரச்சாரமே இந்த ஜனநாயக அரசால் மக்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்பதுதான் . எனவே அரசு இந்த மாவட்ட ஆட்சியாளருக்கு 100% பாதுகாப்பை உறுதியுடன் வழங்க வேண்டும்.

3 லட்சம் கோடி தள்ளுபடி எங்கே போனது ? வங்கி ஊழியர் சம்பள உயர்வு !

புதுடில்லி: 'வங்கி ஊழியர்களுக்கு, இரண்டு ஆண்டுகளாக சம்பள உயர்வு தர மறுக்கும் வங்கி நிர்வாகங்கள், தங்களின் லாபத்திலிருந்து, வராக்கடன் தொகை, 3 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளன' என, வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பள உயர்வு கோரி, நேற்று முன்தினமும், நேற்றும், நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 10 சதவீத ஊதிய உயர்வு: வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன், வங்கி ஊழியர் சங்கத்தினர், மத்திய அரசு மற்றும் வங்கிகளை நடத்தும் நிர்வாகங்களுடன், ஊதிய உயர்வு கோரி, பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க, வங்கிகளின் சங்கம் முன்வந்தது. அதை ஏற்க மறுத்த ஊழியர் சங்கத்தினர், கூடுதலாக தர வேண்டும் என, வலியுறுத்தினர். இருதரப்பு பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்படாததை அடுத்து, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள உயர்வு கேக்குற வங்கி ஊழியர்கள சாலை பணியாளர்களா மாத்தீருங்க எல்லாம் சரியாபோவும்

நடிகர் மாதவன் : போராட்டம்: கொடுமைப்படுத்தப்படும் யானையை விடுவிக்க வேண்டும்

இருட்டறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்படும் யானையை விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் தொடங்கி இருக்கிறார் நடிகர் மாதவன். பிராணிகள் வதை தடுப்பு அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக இருக்கிறார் மாதவன். மிருகங்கள், செல்லப் பிராணிகளிடம் பாசம் காட்டி வளர்க்க வேண்டும், அவைகள் சுதந்திரமாக விடப்படவேண்டும் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தி வருகிறார். சமீபகாலமாக மும்பையில் மாதவன் கையில்,  ஒரு கரும்பலகை வைத்திருக்கும் போஸ்டர்கள் காணப்படுகின்றன.
அந்த போஸ்டடில், ‘’சுந்தர் சுதந்திரமாக விடப்பட வேண்டும்’’ என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாதவன் கூறும்போது, ’’எம்எல்ஏ ஒருவர் மகாராஷ்டிராவில் உள்ள ஜியோதிபா கோயிலுக்கு யானை ஒன்று பரிசளித்தார்.

தீக்குளிப்பேன்: தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. மிரட்டல்

தெலுங்கானா மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் மசோதா தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீமாந்திரா பகுதியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சப்பாம் ஹரி இன்று பத்திரிக்கை யாளர்களிடம் கூறுகையில், "தனித்தெலுங்கானா மசோதாவை அறிமுகம் செய்ய முயன்றால் மக்கள வையின் மையப்பகுதியில் தீக்குளிப்பேன். என்னுடன் மேலும் இரண்டு எம்.பி.க்களும் இணைந்து தீக்குளிப்பார்கள்." என்று தெரிவித்தார்.  nakkheeran.in

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

8 லட்சம் ஆண்டு பழமையான மனித காலடித் தடங்கள்: இங்கிலாந்து ஹப்பிஸ்பர்க்கில் கண்டுபிடிப்பு


 இங்கிலாந்தின் நார்போக்கில் உள்ள ஹப்பிஸ்பர்க் கடல் பகுதியில் உள்ள பழமையான காலடித்தடங்களைப் பார்வையிடும் பிரிட்டன் அருங்காட்சியக ஆய்வாளர். படம்: ஏ.பி./ மார்டின் பேட்ஸ்
எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் மூதாதையர்களின் காலடித் தடம் இங்கிலாந்தின் நார்போக்கில் உள்ள ஹப்பிஸ் பர்க் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஐரோப்பிய பகுதியில் வாழ்ந்த பழங்குடிகளின் காலடித் தடம் இவை. இதுவரை இந்தப் பகுதியில் விலங்குகளின் எலும்பு களும் கல் ஆயுதங்களும்தான் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள் ளன. முதன்முறையாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் தற்போது தான் கிடைத்துள்ளது.

அல்ஜீரியாவில் விமான விபத்து : 103 பேர் பலி

அல்ஜீரியாவில் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில் 103 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அல்ஜீரியாவின் தலைநகரிலிருந்து 300 கி.மீ., தொலைவில் உள்ள ஒவும் எல் போகாய் என்ற நகரில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் ராணுவ அதிகாரிகளின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விமான விபத்து குறித்து விரிவான தகவலை அந்நாட்டு அரசு உடனடியாக வெளியிடவில்லை.

கடலூரில் Pepsi குடித்த சிறுமி பலியானதால் அதிர்ச்சி

Girl Falls Sick, Dies after Consuming Pepsi in Tamil ... - IBTimes.com
கடலூர் மாவட்டத்தில் பெப்சி குளிர்பானம் குடித்த நான்கு பெண்கள் வாந்தி, மயக்கம் எடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற மூன்று பெண்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலாவதியான குளிர்பானத்தை குடித்ததால் சிறுமி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு உணவு பாதுகாப்புத் துறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் போலி குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, பல ஆயிரக்கணக்கான குளிர்பான பாக்கெட்டுகள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.