சனி, 29 நவம்பர், 2014

பூமிகா நடித்த களவாடிய பொழுதுகள்! தங்கரின் பொழுதுகளை களவாடியவர்கள் யார் யாரோ?

ரோஜா கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் படங்களில் நடித்த பூமிகா தனது பாய்பிரண்ட் பரத் தாகூரை 2007ல் மணந்தார். ஆனாலும் நடிப்புக்கு ஓய்வு கொடுக்காமல் தெலுங்கு. பஞ்சாபி, மலையாளம், போஜ்புரி என வெவ்வேறு மொழிகளில் நடித்துவந்தார். தமிழில் இவர் நடித்திருக்கும் ‘களவாடிய பொழுதுகள்‘ திரைக்கு வராமல் பெட்டியிலேயே முடங்கிக்கிடக்கிறது. இதற்கிடையில் அவரை தமிழில் நடிக்கவைக்க சில இயக்குனர்கள் அணுகியபோது பென்டிங்ல இருக்கற படம் ரிலீஸ் ஆகட்டும் அதுக்கப்பறம் தமிழில் நடிப்பதுபற்றி பார்க்கலாம் என்று கடுப்படிக்கிறாராம். ஆனால் தெலுங்கு, கன்னட படங்களுக்கு மட்டும் கால்ஷீட்டில் தாராளம் காட்டுகிறார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்த ‘லட்டுபாபு‘ ரிலீஸ் ஆனது. இதையடுத்து கன்னடத்தில் புதிய படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மாடர்ன் காலத்து மனைவியாக நடிக்கும் அவருக்கும் கணவருக்கும் இடையே நடக்கும் லடாய் படத்தின் முக்கிய அம்சமாம். - See more tamilmurasu.org/

இளங்கோவன் : மூப்பனார் காங்கிரஸ் கட்சிக்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை? உண்மைய சொல்லுறீங்க!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். வாசன் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் செய்தியாளகள் அவரிடம் கேள்வி எழுப்பினர், அப்போது பேசியஅவர்
400 கோடி கொடுத்து வாங்க வேண்டிய மின்சாரத்தை தனியாரிடம் ரூ.1400 கோடிக்கு வாங்குவதாகவும், இதற்கு யார் காரணமோ அவர்கள் மீது  தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுகக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை மோடி குறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி மூப்பனாரை முன்னிறுத்தி செயல்படாது என்றும், அவர் காங்கிரஸ்க்கு என்ன செய்தார் என்று தனக்கு தெரியவில்லை என்றார்.dinamani.com

எதற்காகவும் சுயமரியாதையை இழக்கமாட்டேன்: கேரளாவில் குஷ்பு!

திருவனந்தபுரம்: நான் எதற்காகவும் என்னுடைய சுயமரியாதையை இழக்கமாட்டேன் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார். நடிகை குஷ்பு திமுகவில் இருந்த போது அட்ராக்ஷன் ஆப் த பிகர் ஆக இருந்தார். இதனாலேயே அந்த கட்சியில் இருந்த குடும்ப பெண்மணிகளுக்கு சற்றே பொறாமை என்று கூறலாம். ஏற்கனவே திமுகவில் இருந்த மகளிர் அணியினர் கூட குஷ்புவை பொறாமை கண்ணோட்டத்துடனேயே கூட காண்பது வழக்கமானது. ஒரு நடிகை என்பதையும் தாண்டி குஷ்புவின் பிரசாரம் ரசிகர்களை கவரவே அவர் போகும் இடங்களில் கூட்டம் கூடியது. திமுகவில் மதிப்பில்லை என்று அவர் விலகிய பின்னர் எந்த கட்சியிலும் சிலகாலம் சேராமல் இருந்தார். பாஜக பக்கம் போவது போல போய், திடீரென்று தனது திரையுலக நண்பர்கள் மூலம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார் குஷ்பு. இதோ அவரின் அடுத்த அரசியல் பயணம் ஆரம்பமாகிவிட்டது. தமிழ், இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசத் தெரிந்த குஷ்புவினால் கன்னடம், மலையாளத்தை புரிந்து கொள்ள முடியுமாம் எனவே அவர் காங்கிரஸ் கட்சியின் தென்னிந்திய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் குஷ்பு நேற்று கேரளாவிற்கு பயணமாகியிருந்தார்.

வருமானவரி துறை ஜெயலலிதா சசிகலாவோடு சமரசம்! எழும்பூர் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வருகிறது!

சென்னை: ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் 1991-92, 1992-93ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பாக, வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு, எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கடந்த 7ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி, வருமான வரி துறையிடம் கொடுத்த சமரச மனு மீது நடவடிக்கை எடுக்கும் கால அவகாசம் நவம்பர் 28ம் தேதி வரை உள்ளது. எனவே, இந்த விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி ஒரு மனு தாக்கல் செய்தார்.

சாப்ட்வேர் எஞ்சினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் 3 வடநாட்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

சென்னை: சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வடமாநில வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம், ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் உமா மகேஸ்வரி (22). சென்னை, மேடவாக்கத்தில் தங்கியிருந்து, கேளம்பாக்கம் சிறுசேரி தொழிற்நுட்ப பூங்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்ரவரி 13ம் தேதி, இரவு பணி முடிந்து உமா மகேஸ்வரி வீட்டுக்கு புறப்பட்டார். பின்னர் திடீரென அவர் மாயமானார். இதுகுறித்து, அவரது தந்தை பாலசுப்பிரமணியம், கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா மகேஸ்வரியை தேடி வந்தனர்.

பள்ளிமாணவன் கொலை! தமிழ் சினிமாவினால் பரவும் வன்முறை விஷக்காற்று

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை பள்ளி வகுப்பறைக்குள் 8-ஆம் வகுப்பு மாணவர் கோ. பாஸ்கரன் (14) கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். வகுப்பறைக்குள் புகுந்து கொலை செய்த முன்னாள் மாணவர் செ. மாரீஸ்வரன் (19) சுவர் ஏறி குதித்து தப்பியோடி விட்டார். அவரை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த கோபால் மகன் பாஸ்கரன். இவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த செல்வம் மகன் மாரீஸ்வரன், அதே பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 வரையில் படித்துவிட்டு இடையிலேயே நின்று விட்டார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாஸ்கரன் உள்ளிட்ட மாணவர்கள் 5 பேரை திருசெந்தூருக்கு மாரீஸ்வரன் அழைத்துச் சென்றாராம். அங்கு தகாத பழக்க வழக்கத்தில் ஈடுபட்டதாகவும், மயக்க மருந்து கொடுத்து அங்கேயே அவர்களை மாரீஸ்வரன் விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தப்பி வந்த பாஸ்கரன் உள்ளிட்டோர் கிராமத்தினரிடம் விவரங்களைத் தெரிவித்தனர். சினிமா ஹீரோ அரிவாளோடு சுழற்றுவதை கவர்ச்சியாக காட்டி காட்டி நாட்டையே நாசமாக்கிய சினிமா?

நகராட்சி அதிமுக கவுன்சிலர்களிடையே வீரப்போர்? போர்களமான கிருஷ்ணகிரி?

கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், அரங்கம் போர்க்களமாக மாறியது. காயமடைந்த ஒரு கோஷ்டியினர், சாலை மறியலில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு நிலவியது.கிருஷ்ணகிரி நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதம்: சீனிவாசன் (அ.தி.மு.க., கவுன்சிலர்): என் வார்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடம் மற்றும் ரேஷன் கடை கட்டடம் ஆகியவற்றை, ஒப்பந்ததாரர்கள் தரமில்லாமல் கட்டுகின்றனர். கவுன்சிலர் என்ற முறையில், இதை கேட்டால் ஒப்பந்ததாரர்கள் மதிப்பதில்லை. தங்கமுத்து (தலைவர்): கட்டுமான பணிகளை, நகராட்சி அதிகாரிளை கொண்டு, தினந்தோறும் ஆய்வு நடத்தப்படும். சோபன்பாபு (அ.தி.மு.க., கவுன்சிலர்): என் வார்டில் தரமற்ற நிலையில், சமீபத்தில் போடப்பட்ட தார்ச்சாலை முற்றிலும் பழுதடைந்து விட்டது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வார்டில், பணிகளை ஒதுக்க, அ.தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களுக்கு அதிக பணிகளை கொடுக்கிறீர்கள்.

ஈராக்கில் 39 இந்தியர்கள் கொலை ! உறுதிப்படுத்தபடவில்லை?

ஈராக்கில், கடந்த ஜூன் மாதம், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய, இந்திய தொழிலாளர்கள், 39 பேர், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதாக, உயிர் தப்பிய வங்கதேச கட்டடத் தொழிலாளர்கள் பேட்டி அளித்துள்ளனர். ஆனால், அந்த தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்யவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.வங்கதேச நிருபரிடம், அந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஷாபி இஸ்லாம் மற்றும் ஹசன் கூறியதாவது:
ஈராக்கின் பல நகரங்களை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஜூன் மாதம் பிடிக்கத் துவங்கியதும், மொசூல் நகரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த, இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த, 91 பேர், உயிரை காப்பாற்றிக் கொள்ள, பாக்தாத் சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியில், எங்கள் வாகனங்களை வழிமறித்த பயங்கரவாதிகள், நாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரித்தனர். அது போல, எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரித்தனர். வங்க தேசத்து தொழிலாளர்களில் 99 சதவீதம் பேர் முஸ்லிம்கள்; ஹர்ஜீத் என்ற ஒரு இந்து மட்டும், எங்கள் குழுவில் இருந்தார்.

வெள்ளி, 28 நவம்பர், 2014

பள்ளிக்கூட ஆசிரியரை தாக்கிய அருளானந்தம் டுபாக்கூர் MLM சதுரங்க வேட்டை ஆசாமி! இன்னும் கைது செய்ய படவில்லை


கோடம்பாக்கத்தில் உள்ள மிகப் பழமையான பள்ளி அது. சாதாரண நடுத்தர வர்க்க குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் விசில் அடித்து மாணவர்களை ஒழுங்குப்படுத்துகிறார். மாணவர்களின் கூட்டத்தில் இருந்த ஒரு மாணவன், ஆசிரியர் விசில் அடிப்பதைப் போலவே விசில் அடிக்கிறான். கடுப்பான ஆசிரியர், மாணவனை அறைந்து தலைமை ஆசிரியரின் முன் நிறுத்துகிறார். கொஞ்ச நேரத்தில் அந்த மாணவன், ’நான் வீட்டுக்குப் போக வேண்டும். உடல்நிலை சரியில்லை’ என்று சொல்லி வீட்டிற்கு சென்றான்.
அடுத்த அரை மணி நேரத்தில் பள்ளிக்குள் திமுதிமு என நுழைந்த ரவுடிகள் அந்த உடற்கல்வி ஆசியரை சூழ்ந்துகொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். தப்பித்து வகுப்பறைக்குள் ஓடியவரை விடாமல் துரத்திச் சென்று அடித்தார்கள். மாணவர்களின் கண் முன்னால், சக ஆசிரியர்களின் கண் முன்னால் இந்த தாக்குதல் நடந்தது.

3வது மொழியாக ஜெர்மன் மொழியை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

அரசு செய்த தவறுக்கு மாணவர்களை ஏன் தண்டிக்க வேண்டும்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் நடப்பாண்டில் 3வது மொழியாக ஜெர்மன் மொழி தொடர பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெர்மன் மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதத்தை போதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிராக மாணவர்களின் பெற்றோர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், ஜெர்மன் மொழி கற்பிப்பது தொடர்பாக ஜெர்மன் இந்தியா இடையிலான ஒப்பந்தம் சட்ட விரோதம் என்பதால், ஜெர்மன் மொழியை கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் இனியும் கற்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.இந்த ஒப்பந்த விவகாரங்களில் அரசு செய்த தவறுக்கு மாணவர்களை ஏன் தண்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், ஜெர்மன் மொழியை தொடர்ந்து கற்பிப்பது தொடர்பான முடிவை ஒரு வாரத்திற்குள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.nakkheeran.in

மோடியின் வாரணாசியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள்! டுபாக்கூர் மோடியின் டுபாகூர் அலை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வென்றதாக்க் கூறப்படும் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் உள்ளனர் என்ற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.
வாரணாசி தொகுதியில் தற்போது வாக்காளர் சரிபாக்கும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. வாரணாசியில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதியில் இதுவரை 8 தொகுதியில் வாக்காளர் சரிபார்க்கும் பணி முடிந்துள்ளது. இந்த முடிவுகள் தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது இதுவரை சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 3,110,573 (மூன்று லட்சத்து பதினோராயிரத்து அய்நூற்றி எழுபத்தி மூன்று) வாக்குகாளர்கள் போலி என தெரியவந்துள்ளது.
வாரணாசியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இதுவரை சரிபார்க்கப்பட்ட அய்ந்து லட்சம் வாக்காளர்களில்  முக்கால்வாசி போலி வாக்காளர்கள் என தெரியவந்தது.

அருப்புகோட்டை பள்ளிமாணவன் வகுப்பிலேயே வெட்டி கொலை!

தூத்துக்குடி மாவட்டம் அயன்கரிசல்குளத்தை சேர்ந்தவர் கோபல் என்பவரின் மகன் பாஸ்கர் (14), பந்தல்குடியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை 8.50 மணிக்கு பள்ளிக்கு வந்தார் பாஸ்கர். வகுப்பறையில் அமர்ந்திருந்த போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் பாஸ்கரின் நெற்றியில் அரிவாளால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். காயமடைந்த மாணவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பரின் மகன் மாரிஷ்வரன் (19), மாந்திரிகம் செய்து வருபவர் என்றும், கடந்த 8 மாதங்களுக்கு முன் நரபலி கொடுப்பதற்காக பாஸ்கரனை கடத்தி சென்றதாகவும், இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு பாஸ்கர் தப்பி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளியில் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த பந்தல்குடி போலீசார் மகேஷ்வரன், மாவட்ட முதன்மை தலைவர் ஜெயகுமார் ஆகியோர் அப்பகுதியில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். dinamani.com

வைகுண்டராஜன் ?சகாயம் விசாரணைக்கு உத்தரவிட்டாலும் மக்ககள் போராட்டமின்றி அவ்விசாரணை முழுமையாக நடைபெறாது

வைகுண்டராஜன்கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையையே கரைத்து, விலையுயர்ந்த, அபூர்வமான தாதுமணலைக் கொள்ளையடித்தவர் வைகுண்டராஜன்
தாது மணல் கொள்ளைதாது மணல் mineral sand கொள்ளை! தூத்துக்குடி வ.உ.சி துறைமுகக் கழகத் தலைவராக இருந்த சுப்பையா ஐ.ஏ.எஸ்க்கு வைகுண்டராஜன் ரூ ஏழரை கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் வைகுண்டராஜனுக்கு மதுரை உயர்நீதி மன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் சொல்லுகின்றன. மிகப்பெரிய தொழிலதிபர், ஜெயா டிவியின் பங்குதாரர், சேனல் நியூஸ் 7 டிவியின் உரிமையாளர், செல்வாக்கு மிக்க பெரும்புள்ளி தலைமறைவாகி விட்டார் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தென் மாவட்டங்களின் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், கிரிமினல் கும்பல்களும் வைகுண்டராஜனின் அடியாட்களாக செயல்பட்டு வருவது நாடறிந்த உண்மை. அப்படிப்பட்டவர் இவர்களுக்கெல்லாம் தெரியாமல் தலைமறைவாகி விட்டார் என்று சொல்வது நாடகம் தவிர வேறு என்ன?

சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்

ன்பார்ந்த, இளைஞர்களே ! மாணவர்களே !
சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரஹாரமும்இன்றைய இளைஞர்களின் கண்ணாடியாக திரைப்படங்கள் உள்ளன. திரைப்படங்கள் இன்றைய அரசியலின் கண்ணாடியாக உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் கதாநாயகன் என்பவனை பொது நோக்கம் கொண்டவனாகவும், அநியாயத்தை தட்டிக் கேட்பவனாகவும் திரைப்படங்கள் காட்டின.
இன்றைக்கு திரைப்படங்களில் கதாநாயகன் யார் ! வில்லன் யார் ! என்கிற வித்தியாசம் தெரியவில்லை. ‘திருட்டு பயலே’ படத்தில் மேட்டுக்குடிகளின் தவறான “அந்தரங்க” உறவை படம் பிடித்து மிரட்டி பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்பவன் கதாநாயகன். நான்கு பெண்களை ஏமாற்றி விட்டு “நான் அவன் இல்லை” என்று நீதி மன்றத்தில் பேசுபவன் கதாநாயகன். “மங்காத்தா” படத்தில் 500 கோடியை ஆட்டையை போட சுட்டு வீழ்த்துகிறவன் கதாநாயகன். சதுரங்க வேட்டையில் உன்னை ஏமாற்றுகிறவனை குருவாக ஏற்றுக்கொள் என்றும் “குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்யும் எந்தத் தவறும் தவறு இல்லை” என்றும் கூறுகிறான் கதாநாயகன்.

திமுகவில் யாரும் எனக்கு எதிரி இல்லை! குஷ்பு சிறப்புப் பேட்டி? அடங் கொப்பரான?

காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் முன்னாள் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் முன்னாள் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
திமுகவில் இருந்து நான் வெளியேறி விட்டாலும் அங்கிருப்பவர்கள் யாரும் எனக்கு எதிரிகள் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் நேற்று அளித்த சிறப்புப் பேட்டி:
பாஜகவில் சேருவீர்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் திடீரென்று காங்கிரஸில் இணைந்துள்ளீர்களே?
இது நீண்டநாள் யோசித்து எடுத்த சரியான முடிவு. திமுகவில் இருந்து விலகினேனே தவிர அரசியலைவிட்டு விலகவில்லை. ஒரு கட்சியில் இருந்து விலகிய பின்னர், உடனடியாக இன்னொரு கட்சியில் சேருவது சரியாக இருக்காது.
பாஜகவில் முக்கியத்துவம் கிடைக் காது என்பதாலும் காங்கிரஸில் ராஜ்ய சபா எம்.பி. உள்ளிட்ட பதவிகள் கிடைக் கக்கூடும் என்பதால் இந்த முடிவா?
என்னைப் பொறுத்தவரை சாதி, மதம் இவற்றைக் கடந்து இந்தியர்கள் ஒரே குடையின்கீழ் வாழ வேண்டும். அதற்கு காங்கிரஸ்தான் சரியான இடம். சொல்லாலும் கல்லாலும் அடிச்சா  திமுக தொண்டன் தாங்குவான் ஆனா அன்பால அடிச்சிட்டீங்களே அம்மா குஷ்பூ? கழக வாக்குவங்கிக்கு இது சேதாரம் ஆச்சே?  தம்பி ஸ்டாலின் இதுவுல இருந்து கொஞ்சம் அரசியல் கத்துங்க! 

15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களுக்கு தில்லியில் தடை! பின்னணியில் வாகன உற்பத்தியாளர்கள்?

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை தலைநகரின் சாலைகளில் இயக்க அனுமதி அளிக்கப்படாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு கூறியதாவது:
தலைநகரில் காற்று மாசுபாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. இது, காற்று மாசுபாட்டுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெளிவாகக் காண்பிக்கிறது.
எனவே, 15 ஆண்டுகளாகவோ அல்லது அதற்கும் மேற்பட்டோ இயங்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் சட்டத்துக்கு உள்பட்டு, நோட்டீஸ் அனுப்புதல், வாகனங்களை பறிமுதல் செய்தல் போன்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.dinamani.com

25-3-1989 ம மு ஜெயலலிதா: இன்று மாலையே ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள், ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள்”

திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளூக்கு எழுதியுள்ள கடிதம் :
முதலமைச்சர் பதவியிலே இருப்பதற்கு ஒரு கண்ணியம் வேண்டும். அது எந்தக் கடையிலே விற்கும் என்று கேட்பவர்களை அங்கே உட்கார வைத்தால், அவர்கள் தங்கள் குணத்தைக் காட்டத் தான் செய்வார்கள். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூவாக வாய்த்திருக்கும் பன்னீர்செல்வம், சட்டசபையில் தி.மு.க.வினர் அராஜகம் செய்ததாக நேற்றைய அறிக்கையில் கூறியிருக்கிறார். 1957ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகச் சட்டப்பேரவையில் இடம் பெற்றிருக்கிறது. 15 பேராக நுழைந்து, 50 பேராக உயர்ந்து, 1967இல் பெரும்பான்மையைப் பெற்றுப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.கழகம் ஆட்சி அமைத்தது. அப்போது இந்தியாவையே ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க. என்ற ஒரு அமைப்பு பேரவையில் நுழைந்த பிறகு தான், அதுவும் குறிப்பாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகுதான், சட்ட சபையில் அராஜகம் - அநாகரீகம் என்பவை நுழைந்தன என்பதைத் தமிழ்நாட்டு மக்களும், பத்திரிகையாளர்களும் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள் அதிலும் குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே பிரச்சினை எழுவதற்கு முன்பாகவே, அ.தி.மு.க. (ஜா) அணி என்றும், அ.தி.மு.க. (ஜெ) அணி என்றும் பிரிந்து பேரவையிலே 28-1-1988 அன்று, எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் முதலமைச்சராக இருந்த போது; எதிர் அணியான ஜெயலலிதா அம்மையார் அணியினர், கலவரத்தை ஆரம்பித்து, சட்டப்பேரவையையே ரணகளமாக்கி, பேரவைக்குள் காவல்துறைத் தலைவர் தேவாரம் தலைமையிலே போலீசார் நுழைந்து தாக்குகின்ற அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய், ஜெயலலிதா எதிர்பார்த்ததைப் போலவே, அதை வைத்து ஜானகி அம்மையாரின் ஆட்சி கலைக்கப் பட்டது.
அப்போது அ.தி.மு.க.வினர் அங்காடித் தகராறு போல, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்ட சம்பவங்கள் மறந்தா விட்டன? பேசுவதற் காகக் கொடுக்கப்பட்ட “மைக்”குகளைப் பிடுங்கி, ஆயுதங்களாகப் பயன்படுத்தித் தாக்கிய சம்பவங்கள் தெரியாதா? அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளிலே “மைக்”குகளை ஏந்திக் கொண்டு ஏதோ போர்க் களத்திலே வாளேந்தி நடந்து வரும் வீரர்களைப் (! ) போல, வெற்றி நடை நடந்து வெளியே வந்த புகைப்படங்கள் எல்லாம் பழைய ஏடுகளிலே இன்றைக்கும் பார்க்கலாம்!

திருநாவுக்கரசு Ex MP: கருணாநிதியின் பட்ஜெட்டை பறித்து அவரை அடியுங்கள் என்று ஜெயலலிதா கேட்டார் ! நான் மறுத்தேன் ...ஒப்புதல் வாக்குமூலம்.

“இதே சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பட்ஜெட்டைப் படித்தபோது சட்ட மன்றத்திலே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது அனைவருக்கும் தெரியும். இப்போது நான் சொல்வது; என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர். அவர்கள் மீது சத்தியமாகச் சொல்வதாகும். முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தபோது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவரது வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து “நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும் போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது. எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து அடிக்க வேண்டும்” என்று சொன்னார். நான் உடனே மிகுந்த வேதனை யோடு சொன்னேன். “தெரிந்தோ தெரியாமலோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பத்தாண்டுக் காலம் கௌரவம் மிக்க பதவிகளில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். தயவுசெய்து அடியாட்களாக எங்களை மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனச்சாட்சி இடம் தரவில்லை. தமிழ்நாட்டில் ஒரு சொர்ணக்கா தலைவியாக அம்மாவாக கடவுளாக அவதாரங்கள் எடுத்த கேவல வரலாறு ,இந்த கறையை வரலாற்றில் இருந்து போக்க நீண்ட காலம் எடுக்க போகிறது

நீதிபதி மைக்கல் குன்ஹாவை வாழ்த்தி புலவர்கள்? குன்ஹா பணிஇடமாற்றம்!

tamilselvan - london,யுனைடெட் கிங்டம்: 
முதுகில் குற்றம் சுமந்து...நாவில் பொய் கொண்டு வந்தவளை... நாலு சுவற்றில் அமர வைத்த நல்லவரே...துணிவின்றி படி ஏற வாய்தா கொண்டு நழுவும் தோளுக்கு.... தோள் கொடுக்கும் அடிமைகளை அடி பணியே வைத்தவரே... பொருளுக்கு அடி பனியா உம் உள்ளம்...கூனிகளின் வலையில் நீ எட்டா கனியே...கொட நாட்டின் இளவரசியை சிறை வைத்த நீதியின் தேவனே... அதிகாரம் கொண்ட ஆணவத்தை அடக்கி ஆண்டவனே...மடி கொண்ட கணம்... மனு போட வைக்க ..மானம் இல்லா அடிமை மணல் வாரி தூற்ற ...நீதி மீது பிடி கொண்ட உம் மனம் அவர் அறியார்...நீர் நினைத்தால் அவர் கொடுக்கும் கோடிதனில் புரள முடியும்...கேடிகள் செய்யும் அவ்வேளை உம் தூய பனி செய்யாது...உம் பனி மாறினாலும்...என் உள்ளம் என்றும் உமக்கு நன்றி உரைக்கும்...நீவீர் நீடுடி வாழ்க....பல்லாண்டு வாழ்க 
 ஜெயாவின் ஒவ்வொரு கேசையும், இவரே கவனிக்க வேண்டும்.

தினமலர்.com

வியாழன், 27 நவம்பர், 2014

ஜெயந்தி நடராஜன் பா.ஜ.,வில் சேர முயற்சிக்கிறார்? முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் பேத்தி!


தேசிய அரசியலில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தும் விஷயமாக, நடிகை குஷ்பு, நேற்று காங்கிரசில் சேர்ந்தார். அதே நேரத்தில், காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், பா.ஜ.,வில் சேருவதற்கு, நாள் பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் பரவி, காங்கிரசில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வில் இருந்து விலகிய குஷ்பு, எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்தார். திடீரென்று, நேற்று டில்லியில், காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலை சந்தித்து, காங்கிரசில் இணைந்தார். இந்த சந்திப்பின் போது, தமிழக காங்., தலைவர் இளங்கோவனும் உடனிருந்தார். இதற்கிடையில், தமிழக காங்கிரசை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ஜெயந்தி நடராஜன், காங்கிரசில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
ரொம்ப சந்தோசம். இவரால் காங்கிரஸ் - க்கு எந்த பிரயோஜனமும் இல்லை
வசூல் ராணி என்று விமர்சிக்கபட்டவரை சேர்ப்பதில் என்ன பெருமை இருக்கிறது?

தமன்னாவ மீடியாக்காரங்க லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்டு மூட்அவுட் ஆக்கிராய்ங்க?.

கோலிவுட் ஹீரோவுடன் காதல் தோல்வியால் டோலிவுட்டுக்கு போனார் தமன்னா. 2 வருஷம் கழித்து ஆர்யா தயாரித்து நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வந்திருக்கின்றார். காமெடி படத்தை இயக்கும் ஆர்யாவோட ஆஸ்தான இயக்குனர் ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார். இதுவும் காமெடி படமாகத்தான் இருக்கும் என்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றிலும் செக்யூரிட்டி போட்டு யாரையும் உள்ளே விடக்கூடாது என ஆர்டர் போட்டிருந்தாராம் இயக்கம். சூப்பர் ஸ்டார் பட ஷூட்டிங்கிற்கே நேரா போய் பலபேரு கூட நின்னு ஸ்டில் எடுத்து அதை நெட்டில் பரப்புகிறார்கள். இந்த படத்துக்கு எதுக்கு இவ்ளோ கெடுபிடி என விசாரித்தபோது, 'அது ஒண்ணுமில்லீங்க... கோலிவுட்டுக்கு திரும்ப வந்திருக்கற தமன்னாவ மீடியாக்காரங்க மீட் பண்ணி லவ் பெயிலியர் பற்றி கன்னாபின்னானு கேள்வி கேட்டு மூட்அவுட் ஆக்கிடுவாங்க. அதனால்தான் கெடுபிடி' என யூனிட்காரர்கள் சொல்கிறார்கள் - tamilmurasu.org/

கேரளாவில் தமிழக வியாபாரிகள் விரட்டியடிப்பு

கம்பம்,நவ.27 (டி.என்.எஸ்) முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் பல்வேறு இடையூறுகளை செய்து வரும் கேரள அரசு, தற்போது கேரளாவில் உள்ள சிறு வியாபாரிகளை வியாபாராம் செய்ய விடாமல் துரத்தி அடித்துள்ளது.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கிய போது கேரளாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அடியாட்கள் அத்துமீறி தடை செய்யப்பட்ட அணை பகுதிக்குள் நுழைந்தனர்.அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற தமிழக அதிகாரிகளையும் தாக்கினர். ஆனால் தடையை தாண்டி அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர்த்தப்பட்டது. இதனால் தமிழக அதிகாரிகள் மீது கேரள போலீசார் மற்றும் அதிகாரிகள் கோபத்தில் உள்ளனர்.

ரஜினி (பட வசூலுக்காக) அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்! நல்லகண்ணுக்கு எழாத குரல் ரஜினிக்கு ஏன்?

ஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. ரஜினி பட ரிலீஸை ஒட்டி இப்படியான கேள்விகள் எழுவது தமிழர்களுக்குப் புதிதல்ல. முன்பெல்லாம் ஆர்வத்துடன் இதை விவாதித்த தமிழர்கள், இப்போது அயர்ச்சியுடனும் அலுப்புடனும் இந்தக் கேள்வியைக் கடந்துபோகிறார்கள்.
‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்வியைக் கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு, வேறு இரண்டு கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம்.

* ரஜினி 'அரசியல்’ செய்யவேயில்லையா?

* ரஜினி அரசியலுக்கு ஏன் வர வேண்டும்?

‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்விக்கு வயது கிட்டத்தட்ட 20 என்பதே, ரஜினி ‘அரசியல்’ செய்யவேயில்லையா என்ற கேள்விக்கான பதிலாக உள்ளது. 20 ஆண்டுகளாக, இந்தக் கேள்விக்குப் பதிலே சொல்லாமல், அல்லது குழப்பமான பதில்களைச் சொல்லியே, தக்கவைத்திருக்கிறார் ரஜினி. அதிலும் ரஜினியின் புதுப்பட ரிலீஸ்களை ஒட்டி இந்தக் கேள்வி எழுவது ரஜினி செய்யும் ‘அரசியல்’தான். மற்ற எந்த அரசியல்வாதிகளையும்விட இந்த விஷயத்தில் ரஜினி திறமையான அரசியல்வாதிதான்.

ரவி கே.சந்திரனுக்கு 'யான்' தயாரிப்பாளர்கள் நோட்டீஸ்...யான்' திரைப்படம் 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தின் காப்பி வெவகாரம்!

யான்' திரைப்படம் 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்பதால் 'யான்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சமீபத்தில் வெளியாகி கடுமையான விமர்சனத்துக்கு ஆளான திரைப்படம் 'யான்'. ஜீவா நாயகனாக நடித்திருந்த இத்திரைப்படத்தை, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கியிருந்தார். இது அவரது இயக்கத்தில் முதல் படமும் கூட.
'யான்' படத்தின் கதையும், பல காட்சிகளும், 1978-ஆம் ஆண்டு வெளியான 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' என்ற திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இரு படத்தின் காட்சிகளையும் ஒப்பிட்டு வீடியோக்களும் பரவ ஆரம்பித்தன.
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் எல்ரெட் குமார், "இணையத்தில் பிரபலமான வீடியோவை பார்த்த பின்பு தான் எங்களுக்கு அவர் காப்பியடித்தது புரிந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சியுற்றோம்.சமுக வலை தளங்களால் எவ்வளவு பெரிய நன்மை என்பது இப்போ தெரிகிறது! பெருச்சாளிகளுக்கு ஏன் சமுக வலைத்தளங்களை பிடிக்காதுன்னும்  இப்ப புரியறது

ஊழல் எதிர்ப்பு அணி – ஜூவியின் புதுப்பட ரிலீஸ் !

மும்மூர்த்திகளுக்குஆதரவா, கேலியா, இல்லை விகடனின் வர்த்தகமா?
மும்மூர்த்திகளுக்குஆதரவா, கேலியா, இல்லை விகடனின் வர்த்தகமா?
விலை பன்னிரெண்டு ரூபாய். இதழ் வாரம் இருமுறை. மாதம் எட்டு. இதழ் ஒன்றின் விநியோகம் 2 லட்சம் வரை இருக்கலாம். ஒரு இதழுக்கு மொத்த வரவு (செலவு, கழிவையும் உள்ளடக்கி – விளம்பர வரவை தவிர்த்து ) 24 லட்ச ரூபாய். இதை சாதிப்பதற்கு என்ன வேண்டும்?
அட்டைப்படக் கட்டுரை.
வாசகர்கள் ஜூனியர் விகடன் பெயருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட கவர் ஸ்டோரி என்ன என்றே பார்க்கிறார்கள். சரக்கு விலைபோவது விகடன் குழும பிராண்டில் அல்ல. மல்டி கலர் வம்பு தும்பு, கிசுகிசு, அரட்டை அக்கப்போர் இன்னபிற மசாலாக்களை கொண்டிருக்கும் அட்டைகளே சரணம். சரி அதனால் என்ன? பெட்டிக்கடையில் வாங்குபவன் வாசகரா, இளித்தவாயனா? அவர்கள் பகிரங்கமாகவே வா இல்லை இ என்றே தெரிவிக்கிறார்கள்.
இனி கதையின் காரணம். 30.11.2014 தேதியிட்ட ஜூவியின் அட்டைப்படம்: முறையே வாசன், விஜயகாந்த், வைகோ சிரித்தவாறு காட்சி. “உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!” – இது கவர் ஸ்டோரியின் தலைப்பு!

வினவு.காம்: MGR., ஜெயலலிதா பொறுக்கி அரசியல் பாசிசக் கோமாளிகள்? காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறை?

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வக்கிரமான, பொறுக்கி அரசியல், பாசிசக் கோமாளிகள் எதற்கும் தமது செல்லப் பிள்ளைகளான அரசு அதிகாரிகளையும் போலீசுக்காரன்களையும் கூலி எழுத்தாளர்களையும் நம்பி ஆட்சி நடத்தினார்கள்; தடையற்ற அதிகாரமுறைகேடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட இவர்கள் கூடுதலான விசுவாசத்தைக் காட்டுவதில் வியப்பொன்றுமில்லை. 

மிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 27 அன்று மாலை 5 மணிக்கு, பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது; ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது” இப்படி எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓயாது ஒப்பாரி வைக்கின்றன.இது உண்மையா! இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட அன்றும் மறுநாளும் அவரும் பிற அமைச்சர்களும் பெங்களூரு போய்விட்டதால் அவர்களின் கீழ் இருந்த அந்தந்த துறைசார்ந்த அதிகாரிகளும் ஊழியர்களும் தீர்ப்பின் பரபரப்பில் வேலை செய்யவில்லை. வெறுமனே அலுவலகத்துக்கு வந்தவர்களும் தமக்குரிய வழமையான பணிகளைக்கூடச் செய்யாது போய்விட்டார்கள்.
ஜெயலலிதாவைத் தண்டித்த தீர்ப்பு வந்த மறுநிமிடம் முதல் அவர் காலாலிட்ட உத்திரவைத் தலையால் ஏற்று அம்மா தி.மு.க.வின் அடிமைகளும் கைக்கூலிகளும் தமிழக அரசும் அவர் பிணையை விலைக்கு வாங்கிக் கொண்டு போயசுத் தோட்டம் மாளிகைக்குள் நுழையும் வரை செயல்பட்டனர். அதாவது, அம்மாவுக்காக அழுது புரண்டார்கள், ஒப்பாரி வைத்தார்கள், மொட்டை போட்டார்கள், பால்குடம் எடுத்தார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள், பொங்கல் வைத்தார்கள், அபிசேகங்கள், யாகங்கள், வேண்டுதல்கள், பரிகாரங்கள் செய்தார்கள்; கடைகளை மூடச்சொல்லி அடித்து நொறுக்கினார்கள்; அரசு மற்றும் தனியார் வாகனங்களை எரித்தார்கள் – அதில் முன்பு நடந்ததைப்போல நரபலி நிகழாமல்போனது குறித்து தண்டிக்கப்பட்ட தெய்வத்துக்கு வருத்தம் இருக்கலாம்.

குண்டர் சட்டத்திருத்தத்தை ரத்து செய்! – பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்

மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஜெயா, சசி கும்பல் மீது இயற்கை வளத்தை சூறையாடிய வைகுண்டராஜன், பி.ஆர்.பி மீதும் குண்டர் சட்டம் பாயவில்லை.
சுதந்திர போராட்ட காலத்தில் காலனிய ஆதிக்க பிரித்தானிய அரசு தனது மூலதனத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் பாதுகாக்கும் விதத்தில் தடுப்பு காவல் சட்டங்களை இயற்றி, போராட்டக்காரர்களை கடுமையாக ஒடுக்கியது. 1947-க்கு பின்பும், ‘சுதந்திர’ இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் பாகிஸ்தான் பிரிவினையின் சூழலைக் காரணம் காட்டி, அதே ஒடுக்குமுறை ஆயுதத்தை தன் உறைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டார்கள். இந்திராகாந்தி எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக, புரட்சிகர சக்திகளையும் கடுமையாக ஒடுக்க ‘மிசா’ என்னும் த.கா.சட்டத்தினைத் தான் பயன்படுத்தினார். அதற்கு பிறகு, தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் என தடுப்பு காவல் சட்டங்களை அடுத்தடுத்து கொண்டுவந்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும், எதிர்கட்சிகளையும் எப்படி ஒடுக்கினார்கள் என்பது கடந்த கால வரலாறு!

நீதிபதி குன்ஹா பணியிடம் மாற்றம்! தமிழக முதல்வரை மக்களின் முதல்வர் ஆக்கியதற்கு இதற்கும் சம்பந்தம் இருக்குமோ?

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றப் பதிவாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1991-96-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மைக்கேல் டி குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு கால சிறைத் தண்டனை மற்றும் ரூ100 கோடி அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.  இந்தத் தீர்ப்பினால் ஜெயலலிதாவின் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. அடுத்த 10 ஆண்டுகாலத்துக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமையும் ஏற்பட்டது. இந்தத் தீர்ப்பு வழங்கியதற்காக அதிமுகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நீதிபதி குன்ஹாவை பல்வேறு தரப்பினரும் நேர்மையான தீர்ப்பை வழங்கியவர்

வங்கி செயலாளர் கொலை: காலை மட்டும்தான் உடைக்க காண்ட்ராக்ட் கொடுத்தேன் கொலை பண்ணிடாய்ங்க! வெளங்கிடும்?

சேலம் : சேலம் அருகே நடந்த வங்கி செயலாளர் கொலையில் அவரது மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேறு ஒருவர் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தால்  அடித்து காலை உடைக்க சொன்னதாகவும், ஆனால் கொலையே செய்து விட்டனர் என்று போலீசிடம் அவர் தெரிவித்துள்ளார்சேலம் உத்தமசோழபுரம் அடுத்த சூளைமேடு பகுதியை  சேர்ந்தவர் அண்ணாமலை(45). கல்பாரப்பட்டி கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் 25ம் தேதி இரவு வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது  மர்ம ஆசாமிகளால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை கலாசாரம் பரவியதற்கு சினிமா வன்முறை காட்சிகள்தான் முக்கிய காரணம்.

Kushboo: கலைஞர் மிகச் சிறந்த தலைவர். அவர் மீது எனக்கு அன்பு, மரியாதை என்றைக்கும் உண்டு!

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை எதிர்க்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை என்று நடிகை குஷ்பு கூறினார்.
திமுகவில் இருந்து பிரிந்து சில மாதங்கள் அமைதியாக இருந்து வந்த குஷ்பு தற்போது காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.
திமுகவை எதிர்க்கும் நோக்கத்துடனே அவர் காங்கிரஸில் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் "தினமணி'க்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸில் இருந்து எல்லோரும் வெளியேறும் நிலையில், அந்தக் கட்சியில் நீங்கள் இணைந்தது ஏன்?

கனிமொழி பேச்சுக்கு அதிமுக எம்பீக்கள் எதிர்ப்பு! மருத்துவ மனைகளில் குழந்தைகள் இறப்பு விவகாரம் ....

பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: கனிமொழி பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு மகப்பேறு காலத்தில் தமிழக அரசு வழங்கும் நிதிஉதவி பெண்களுக்கு முறையாக சென்று சேருவதில்லை என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.மாநிலங்களவையில் புதன்கிழமை அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையேற்றம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிடடனர்.இதனைத்தொடர்ந்து பேசிய கனிமொழி, தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 16 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. முதல் அமைச்சர் பன்னீர்செல்வம், ஊட்டச்சத்து குறைபாட்டினாலேயே குழந்தைகள் உயிரிழந்ததாக கூறியுள்ளார். அப்படியென்றால் அரசு மகப்பேறு காலத்தில் வழங்கும் நிதிஉதவி பெண்களுக்கு முறையாக சென்று சேரவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.மிகவும் பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் மகப்பேறு கால நிதியுதவி சென்று சேர்வதில்லை. தமிழக முதல் அமைச்சர் ஏன் நிதியுதவி சென்று சேரவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றார்.இதற்கு அதிமுக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது nakkheeran.in

கலைஞர் : எல்லாம் எனக்கு தெரியும் என்று சொன்னது கிடையாது!

சென்னை: 'எல்லாம் எனக்கு தெரியும் என்று, நான் எப்போதும் சொன்னதும் கிடையாது; நினைத்ததும் கிடையாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ள நீர் அளவு தொடர்பாக, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில், கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழகத்தை சேர்ந்த மூத்த இன்ஜினியர்கள் எதிர்பார்க்கின்றனர் என, கூறியிருந்தேன். கேவியட் மனு என்பது, என் சொந்த யோசனை என்று கூட நான் சொல்லவில்லை. அப்படி இருக்கும் போது, தனக்கு எல்லாம் தெரிந்ததை போலவும், எனக்கு எதுவும் தெரியாததை போலவும், தன் மேதாவிலாசத்தை பறை சாற்றிக் கொள்வதற்காக, அகந்தைப் பெருக்கோடு, முதல்வர் பன்னீர் அறிக்கை விடுத்திருந்தார். எல்லாம் எனக்கு தெரியும் என, நான் எப்போதும் சொன்னது கிடையாது. அப்படி நினைத்ததும் கூடக் கிடையாது. ஆனால், நான் அறிந்தவற்றை, முழுமையாக, அறிந்து வைத்திருக்கிறேன். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார் dinamalar.com

பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : குறைந்து வரும் ஆண், பெண் விகிதத்தை சரிப்படுத்த வேண்டுமானால், பெண் குழந்தை பிறக்கும் குடும்பத்திற்கு, மாநில அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த பொது நல மனுவில், ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, அனைத்து மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறியது.இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் லலித் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:பிரசவத்திற்கு முன் குழந்தையின் பாலினத்தை அறிவதை தடைசெய்வதால் மாத்திரமே பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதை தடுக்க முடியாது.

புதன், 26 நவம்பர், 2014

குஷ்பூ youtube: நாட்டுக்கு நல்லது செய்வதற்காக காங்கிரஸில் சேர்ந்துள்ளேன்


காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து பேசி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அப்போது உடனிருந்தார். இது குறித்து குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியையும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களையும் பார்த்து வளர்ந்தவள். அப்படி இருக்க வேறு கட்சியில் இருந்தேன். எனினும், என் மனதில் ஏதோ உறுத்தலாகவே இருந்தது. இன்று காங்கிரஸில் இணைந்த பிறகு மனதில் அமைதியும் நிம்மதியும் ஏற்பட்டுள்ளது. சோனியாஜியின் வீட்டுக்கு சென்றபோது என்னை மிகவும் மதிப்புடன் வரவேற்றார். காங்கிரஸில் இணைந்தது மிகவும் பெருமையாகவும் உள்ளது. நாட்டுக்கு நல்லது செய்வதற்காக காங்கிரஸில் சேர்ந்துள்ளேன். கட்சி எனக்கு தரும் பணி தமிழகம் அல்லது வேறு எங்கு இருந்தாலும் அதனை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். சுயமரியாதையை வலியுறுத்தி ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகத்தில் குஷ்பூவின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட சோதனையை எல்லோரும் அறிவர். ஸ்டாலின் ஒருவழியாக திமுகவையும் அதிமுக பாணியில் அடிமைகளின் கூடாரம் ஆக்கி விட்டார் இதற்கு  குஷ்பூவின் வெளியேற்றம் மிக சரியான உதாரணம் . திமுக தேர்தல்களில் தோற்பதை விட அதன் சுயமரியாதை பகுத்தறிவு சமூகநீதி கொள்கைகளில் இருந்து பின்வாங்குவது மிகவும் வேதனைக்கு உரியது. ஜால்ரா போட்டுதான் திமுகவில் இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக திமுக பெட்டர் சாயிஸ் அல்ல .

கம்யுனிஸ்ட் EMS நம்பூதிரிபாட்டை விட வடலூர் ராமலிங்க அடிகளார் முற்போக்கு வாதியே

Ramalinga AdigalarE._M._S._Namboodiripadஇராமலிங்க அடிகள் VS நம்பூதிரிபாட்

மார்க்சியத்தை விஞ்ஞானப் பூர்வமாகப் புரிந்து கொண்ட பிறகும், அறிவியலுக்கு எதிராகப் பிறப்பாலேயே உயர்வு தாழ்வு எனறு புனிதப்படுத்திய ‘நாலு வர்ண’ நான்கு வேதங்களில் கம்யுனிசத்தைத் தேடிய, தன் பெயரை மறைத்து தன் ஜாதி பெயரையே தன் பெயராக அடையாளப்படுத்திக் கொண்ட, ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் (1909 –1998) என்ற கம்யுனிஸ்டை விட;
விஞ்ஞானத்திற்குப் புறம்பாக ஆன்மீகத்திற்குள்ளே தன்னை முற்றிலுமாக மூழ்கடித்துக் கொண்டு கற்பனாவாதங்களுக்குள் விடுதலையைத் தேடிய போதிலும், நான்கு வேதங்களின் மீது,
‘நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே – மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்..’ என்று காறி துப்பி, தன் பெயருக்குப் பின் இருந்த ஜாதிப் பெயரை துறந்த ‘சாமியார்’ இராமலிங்க அடிகளே (1823 – 1873) எனக்கு முற்போக்காளராகத் தெரிகிறார்.

குஷ்பூ காங்கிரசில் finally feel I'm home'இணைந்தார் !

 Kushboo Sundar on Wednesday joined the Congress. 
Addressing a press conference, the actor-politician said: "I finally feel I'm home". She further lashed out at DMK, saying the party did not give her due recognition.
The former DMK leader said that her focus would not be restricted only to Tamil Nadu but the entire country.  தாய் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்.திமுகவில் எனக்கு உரிய மரியாதையை கிடைக்கவில்லை, எனது கவனம் இனி தமிழ்நாட்டில் மட்டும் இன்றி முழு நாட்டுக்கும் ஆனதாக இருக்கும் ,

காமராஜர்-மூப்பனார்-படங்கள்-அச்சிட்ட-புதிய-கட்சிக்-கொடி-ஜிகேவாசன்-அறிமுகம்

புதிய கட்சியின் கொடியை, சென்னையில் நடந்த கொடி அறிமுக விழாவில் ஜி.கே.வாசன் அறிமுகப்படுத்தினார்."  காங்கிரஸ் கட்சியின் கொடியைப் போலவே, ஜி.கே.வாசனின் புதுக்கட்சி கொடியிலும் சிவப்பு, வெள்ளை, பச்சை என மூவர்ணம் உள்ளது. வெள்ளை நிறப் பகுதியில் காமராஜர் மற்றும் மூப்பனாரின் படங்கள் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, கொடியில் சைக்கிள் சின்னத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வாசன் ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால், சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காவிட்டால் சிக்கலாகிவிடும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதற்கிடையில், புதிய கட்சி பெயர் மற்றும் கொடி அறிமுக பொதுக்கூட்டத்துக்காக திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் 2.5 லட்சம் சதுர அடியில் மைதானம் தயாராகி வருகிறது.

குஷ்பூ காங்கிரசில் சேருகிறார்?சோனியாவை இன்று சந்திக்கிறார் Kushboo to meet Sonia, likely to join Congress


Party sources said the actor, who is in New Delhi now, got an appointment with AICC president Sonia Gandhi and party vice-president Rahul Gandhi at 5pm on Wednesday and is likely to formally join the Congress.சென்னை: நடிகை குஷ்பு டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை இன்று மாலை சந்திக்கிறார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது. திமுகவில் பரபரப்பாக இருந்த குஷ்பு தான் ஒதுக்கப்படுவதாகக் கூறி அக்கட்சியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் அரசியலை பற்றி நினைக்காமல் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் குஷ்புவை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குஷ்புவை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. இன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சேரும் குஷ்பு? பாஜக தவிர அதிமுகவும் குஷ்புவை தங்கள் கட்சியில் சேர்க்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் குஷ்புவோ தான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரவில்லை. அவ்வாறு வந்த செய்தியில் உண்மை இல்லை. அதை எல்லாம் நம்பாதீர்கள் என்று ட்விட்டரில் தெரிவித்தார். குஷ்புவுக்கு  இனி எல்லாம் வெற்றிதான். இது நாள்வரை குஷ்புவை சமாதனபடுத்த திமுக தரப்பில் இருந்து ஏதும் முயற்சி எடுத்தார்களா என்பது தெரியவில்லை , அப்படி முயற்சி எடுத்திருக்காவிடில் நிச்சயம் திமுகவும் இன்னொரு அதிமுகதான். ஸ்டாலினின் அடிமைகள் கூடாரம்?

Cm பன்னீர்செல்வம்: தைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்! இதுதாண்டா செலெக்டிவ் வீரம்!

சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் கருணாநிதிக்கு உள்ளது என்றால் அவர் 4.12.2014 அன்று கூட்டப்பட்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தி.மு.க தலைவர் கருணாநிதியும், அவருடன் பனிப்போர் தொடுத்திருக்கும் அவரது தனயன் மு.க.ஸ்டாலினும் பேரவையைக் கூட்டுவது பற்றி தரம் தாழ்ந்த அறிக்கைகளை வெளியிடுவதும், விமர்சனங்கள் செய்வதையும் தொடர்ந்து வருகின்றனர். சட்டப் பேரவை நடவடிக்கைகள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத கருணாநிதி, சட்டப் பேரவையைக் கூட்டாதது தமக்கு வருத்தமளிப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது பற்றி 22.11.2014 அன்று நான் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளேன். அந்த அறிக்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசால் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தீர்மானம் நிறைவேற்றிடவும், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றவும் சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்திருந்தேன்.  எனக்கென்னவோ பன்னீரும் கலைஞரும் சொல்லி வச்சு அடிக்கிராயங்க போல தெரியறது . ஜென்டில்மேன் எக்ரிமேண்டுன்னும் சொல்லலாம்? கலைஞரை காய்ச்சுற ஒவ்வொரு காய்ச்சும் நான்தான்  அண்ணே இனி அதிமுகாங்கிற மாதிரில்லே இருக்கிறது? போற்றி பாடடி பொன்னே தேவர்குல கண்ணே

பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக்கிற்கு 26 ஆண்டுகள் சிறை ! இவரோடு கணவர் உட்பட4 பேருக்கும் இதே தண்டனை .


இஸ்லாமிய தீவிர வாதிகளுக்கு எதிரான இவரது பேட்டிகள் இவரது   உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது, அதனால் இவர் தற்போது வெளிநாடுகளில் இருக்கிறார்  இஸ்லாமாபாத்: மதத்தை நிந்தித்ததாகக் கூறி நடிகை வீணா மாலிக், அவரது கணவர் பஷீர், ஜியோ டிவி உரிமையாளர் மிர் ஷகீலுர் ஹர்மான் உள்ளிட்ட 4 பேருக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை வீணா மாலிக் மற்றும் அவரது கணவர் பஷீர் கடந்த மே மாதம் ஜியோ டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் மதம் சார்ந்த பாடலை போட்டு மாலிக், பஷீர் போலியாக திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மதத்தை நிந்திப்பதாக உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத நிந்தனை வழக்கு: நடிகை வீணா மாலிக், கணவருக்கு 26 ஆண்டுகள் சிறை- பாக். கோர்ட் அதிரடி வழக்கை விசாரித்த தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் வீணா மாலிக், அவரது கணவர் பஷீர், பாகிஸ்தானின் மிகப்பெரிய மீடியா குழுமமான ஜியோ மற்றும் ஜாங் குழுமத்தின் தலைவர் மிர் ஷகீலுர் ரஹ்மான், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷைஸ்தா வாஹிதி ஆகியோருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

tamil.thehindu: இந்தியா என்றால் ஹிந்தி என்பது தவறு! இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட...

நாட்டு நலனுக்காக உருவாக்கப்பட்ட மொழிக் கொள்கைக்கு இப்போது குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மொழியிலும் உள்ள சிந்தனைகளை அந்தந்த மொழியின் வழியே படிப்பது அந்தச் சிந்தனைகளை அவற்றின் முழுப் பரிமாணத்தில் புரிந்துகொள்ள உதவும். ஆனால், பள்ளிப் படிப்பில் கிடைப்பது 10 ஆண்டுகளே. இந்தக் குறுகிய ஆண்டுகளில் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும் என்பது கல்வியில் மொழிக் கொள்கையின் மூலம் அரசு முடிவுசெய்ய வேண்டிய ஒன்று. அரசு நாட்டின் தேவையையும், அந்தத் தேவையை நிறைவேற்றக் குடிமக்கள் பெற வேண்டிய மொழித் திறனையும் முன்னிறுத்திக் கொள்கையை வகுக்கும்.
இப்படி 1961-ல் வகுக்கப்பட்டதுதான் மும்மொழிக் கொள்கை. மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் சமரசக் கொள்கையாக இது ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்போது கல்விக் கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு மாநிலங்களிடம் இருந்தது. மும்மொழிக் கொள்கை நாடு முழுவதற்கும் பொருந்தும் நாட்டுக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

லண்டன் இந்திய பாட்டாவுக்கு வயது 109 பாட்டிக்கு வயது 102. world's oldest couples

An Indian couple, both over 100 years old and said to be the world's oldest partners, has celebrated their joint birthdays this week in the UK.
Karam Chand reached 109 on the same day his wife turned 102. They marked the occasion with four generations of their family at their home in Bradford.
Karam, a retired mill worker, smokes one cigarette a day before his evening meal and drinks a tot of whisky or brandy three or four times a week.
இங்கிலாந்து நாட்டில் லண்டன் அருகே உள்ள பிராட்போர்டில் வசித்து வருபவர் கரம்சந்த். இந்தியரான இவருக்கு வயது 109. இவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இவரது மனைவிக்கு வயது 102. இவர்கள் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் என்பதால், தங்களது பிறந்த நாளை 4 தலைமுறையினருடன் வீட்டில் உற்சாகமாக கொண்டாடினார்கள். இவர்கள் இளம்வயதில் இந்தியாவில் இருந்தபோது 1925–ம் ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்து 89 வருடங்கள் ஆகிறது. இவர்களது திருமணம் நடந்த ஆண்டில் தான் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் பிறந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் 109 வயதானாலும் கரம்சந்த் இன்னும் தனது வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார். தினமும் மாலை உணவுக்கு முன்னர் ஒரு சிகரெட் புகைக்கிறார். வாரத்தில் 3 அல்லது 4 முறை சிறிதளவு விஸ்கி அல்லது பிராந்தி குடிக்கிறார். இவர்கள் தான் உலகிலேயே வயதான தம்பதிகளாக கருதப்படுகிறார்கள்.dailythanthi.com

உலக மயமாக்கலை வரவேற்கிறோம்.எனவே உலகம் சம்ஸ்கிருத மயமாக்கலை வரவேற்க வேண்டும்?

முதலீட்டாளர்கள் மாநாடு: கலைஞர் கேள்வி
திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
கேள்வி :- கட்டாய சமஸ்கிருதம், இந்துக்கள் நாடு என்ற பேச்சுகள் நாட்டில் எதிரொலிக்கத் தொடங்கி விட்டனவே?
கலைஞர் :- உலக இந்து மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்திருந்த அயோத்தியா இயக்கத்தின் தலைவரும், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான அசோக் சிங்கால் “மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழியை நீக்கி, சமஸ்கிருத மொழியைக் கொண்டு வந்துள்ள மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறையின் நடவடிக்கை சரியானதுதான். அந்நிய மொழி (ஆங்கிலம்) ஒன்று போதும். நம் நாட்டின் மொழி சமஸ்கிருதம் ஆகும். சமஸ்கிருதத்தை நீக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த நாட்டையே நீக்குவதற்கு ஒப்பாகும்” என்றும்; “800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, இந்துக்களின் கைகளில் வந்துள்ளது” என்றும் பேசியிருக்கிறார். அதே மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “இந்த நாடு இந்துக்களின் நாடு. இந்தியாவில் வாழ்பவர்கள் எந்த மதத்தவரானாலும் அவர்கள் இந்துக்களே” என்று பேசியிருக்கிறார்.

Admk யின் 37+11 எம்பிக்களும் நிருபர்களோடு அன்னம் தண்ணி கூடாது! ம.மு.ஜெயலலிதா கட்டளை

Poompattinaththaan - KaveriPoompattinam,
இந்த 37+11 மங்குனிகளும் தமிழ்நாட்டுக்கு ஒரு கிழியும் கிழிக்கப்போவதில்லை. அதுவும் டில்லி குளிரில் தினமும் பாராளுமன்ற செயல்பாடுகளை வேடிக்கை பார்த்துவிட்டு, தமிழ்நாடு இல்ல அறையில் தங்கி குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு, ஒரு மாத காலத்தையும் வீணடித்துவிட்டு ஹாயாக விமானத்தில் தமிழ்நாடு வந்து போயஸ் தோட்டத்தில் அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி விடுவர். இதைத் தவிர இந்த மங்குனி எம்பிக்களுக்கு என்ன தெரியும்? இவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மாக்களை(?) என்னவென்று சொல்வது? இந்த லட்சணத்தில் தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் இவர்களது கட்சியான அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று தற்போதைய கருத்துக்கணிப்பு ஒன்று பிரகடனம் செய்கிறது. தமிழன் மாயையில் மாண்டாலும் மாண்டுபோவானேதவிர மீண்டுவர ஒருபோதும் முயலமாட்டான். இதுகாறும் தெரிவிப்பது என்னவென்றால், 64 கோடி(இப்போது 3000 கோடி மதிப்பு) ஊழல் செய்வதெல்லாம் ஒரு பொருட்டல்ல... என்று தமக்குத்தாமே கருதிக்கொண்டு, தன் தலையில் தானே மண்ணை (அதுவும் கொள்ளைபோகும் ஆற்றுப்படுகை மண்) வாரித் தூற்றிக்கொண்டு இந்த செயலற்ற அதிமுக அரசாங்கத்தினால் மாண்டு வருகிறான். அரசாங்கமோ பால் விலை, இல்லாத மின்சாரத்திற்கு அதிகக் கட்டணம், மீனவர் பிரச்சினை, நீதிமன்றக் கண்டனங்கள் என எதைப்பற்றியும் சிந்திக்காமல், டாஸ்மாக்கே கருவூலம், போயஸ் கார்டனே புத்தபூமி என மூழ்கிக்கிடக்கிறது. ம்ம்ஹூம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு திருந்தாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீவிரமடைந்து உச்சத்துக்கு வரும் சமயம் தமிழ்நாடு தலைகீழ் மாநிலமாகத் தொங்கும் என்பதும் புலப்படுகிறது. அதிமுகவுக்கு சொம்படிக்கும் புண்ணியவான்களுக்கும், அந்தக்கட்சிக்கு வாக்களிக்கும் மாக்களுக்கும் இது ஒரு நாளும் விளங்காது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வரும்போதுதான் விளங்கும். அப்போது வலி முத்திப்போயிருக்கும் என்பதே நிதர்சனம். 

நிலக்கரி ! மன்மோகன்சிங்கிடம் ஏன் விசாரிக்கவில்லை? சிபிஐக்கு கோர்ட் கேள்வி

நிலக்கரி ஊழல் தொடர்பாக முன்னாள் நிலக்கரித் துறை மந்திரி மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரிக்கவில்லை? என்று சி.பி.ஐ.யிடம் சிறப்பு கோர்ட்டு சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளது.2005–ம் ஆண்டு தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் ஹிந்தால்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு 2 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து குமாரமங்கலம் பிர்லா மீதும், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 21–ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைக்கும்படி கோர்ட்டை சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது.

டில்லி-சென்னைக்கு புல்லட்ரயில் 300 கி.மீ. வேகம், 6 மணி நேரத்தில்....Delhi

பீஜிங்:டில்லி-சென்னை இடையேயான புல்லட் ரயில் திட்ட பணிகளுக்காக இந்திய உயர்மட்டக்குழு சீனா சென்றிருக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி,டில்லி-சென்னை இடையே புல்லட் ரெயில் இயக்குவது குறித்த திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிலையில், டில்லி-சென்னை இடையே புல்லட் ரயில் திட்டம் இயக்குவது திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான, திட்ட செயலாக்கம் குறித்த இலவச பயிற்சிக்கு சீனா ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தப்படி இந்திய ரெயில்வே அதிகாரிகள் 100 பேருக்கு பயிற்சி, தற்போதைய ரெயில் நிலையங்களை மறுமுன்னேற்றம் செய்தல், ரெயில்வே பல்கலைக்கழகம் நிறுவுதல் போன்றவற்றுக்கு சீனா உதவி செய்கிறது.

செவ்வாய், 25 நவம்பர், 2014

ஏலத்துக்கு வந்தன பி.ஆர்.பி. கிரானைட்ஸ் சொத்துகள் 1 வங்கியில் ரூ.149 கோடி கடன் பாக்கி!

பி.ஆர்.பழனிச்சாமி.
பி.ஆர்.பழனிச்சாமி.
மதுரை பிஆர்பி கிரானைட்ஸ், பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறு வனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் இந்தியன் வங்கி யில் ரூ.149 கோடி கடன் நிலுவை வைத்துள்ளதால் அவர்களின் நிலத்தை ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர், கீழவளவு, மேலவளவு, விக்கிரமங்கலம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதித்த அளவைவிட கூடுத லாகவும், சில இடங்களில் அனு மதியே இல்லாமலும் கிரானைட் கற்களை வெட்டியதாக 2011-ம் ஆண்டில் புகார் எழுந்தது. அப் போதைய மதுரை ஆட்சியர் உ.சகாயம் விசாரணை நடத்தி, முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்ட தாக அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை”? உச்சநீதி மன்றம் தீர்ப்பு?

மதச்சார்பின்மை வரையறுக்கப்படாதது இருக்கட்டும். மதம் என்றால் என்னவென்று வரையறுப்பது மத உரிமையைத் தீர்மானிப்பதற்கு அவசியமாக இருந்தது. ஏனென்றால் ஆணாதிக்கத்திலிருந்து தொடங்கி சாதி ஆதிக்கம், நிலவுடைமை ஆதிக்கம் வரையிலான அனைத்து வகை ஆதிக்கங்களுமே மத ஒழுக்கமாகவும் மத சம்பிரதாயமாகவும் மதச்சட்டமாவும் பின்னர் அதுவே அரசின் சட்டமாகவும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இந்த ஆதிக்க உணர்வுகளையும் மத உணர்வுகள் என்று தான் மதவாதிகள் கூறி வருகின்றனர். இதனடிப்படையில்தான் மதத் தனிநபர் சட்டங்களையும் நியாயப்படுத்தி வருகின்றனர்.
நவீன “இந்தியக் குடியரசு” அமையும் சந்தர்ப்பத்தில் இதற்கு முடிவு கட்ட விரும்பிய அம்பேத்கர், “சாராம்சத்தில் மதத்தன்மை மட்டும் கொண்ட சில சடங்குகள்… ஆகியவற்றுடன் மதம் குறித்த நமது வரையறுப்பை நாம் நிறுத்திக் கொள்ள முயல வேண்டும்” என்று கூறினார்.

சகாயம் மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு பற்றி மட்டும் தற்போது விசாரித்தால் போதும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடத்துவதற்கு சகாயம் கேட்கும் அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கனிம வளம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமா, மதுரையில் இருந்த கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசாரிக்க வேண்டுமா என்று தனக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று விசாரணை கமிஷன் அதிகாரியான சகாயம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

‘மானே தேனே..... கவர்ச்சி நாயகி சுபஸ்ரீகங்குலி ஹீரோயினாக நடிக்கிறார்

சென்னை: ‘மானே தேனே பேயே‘ படம் மூலம் பெங்காலி மொழி கவர்ச்சி ஹீரோயின் சுபஸ்ரீ தமிழில் அறிமுகமாகிறார். இதுபற்றி பட இயக்குனர் கிருஷ்ணா கூறியது: ஏற்கனவே நான் இயக்கிய ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைகளாக இருந்ததுபோல் தற்போது இயக்கும் இப்படமும் முற்றிலும் வித்தியாசமான கதையாக உருவாகி இருக்கிறது.

விஷால் : ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்த் நீக்க வேண்டும்!

கோவை,நவ.24 (டி.என்.எஸ்) என்னை தவறாக பேசிய ராதாரவி மற்றும் காளை இருவரையும் தான் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார்.பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை புலிய குளத்தில் பேனாவும், கானாவும் என்ற நட்சத்திர கலை விழா நடைபெற்றது.>இதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நடிகர் சங்க கூட்டத்தை வருகிற 30–ந் தேதி கூட்டி என்னை விலக்குவதாக கூறியுள்ளனர். தென் இந்திய நடிகர் சங்கம் குறித்து நான் தவறாக பேசியதாக நிரூபித்தால் நடிகர் சங்கத்தை விட்டு சென்று விடுவேன்.நான் என்ன தவறு செய்தேன்? என்பதை நிரூபிக்க வேண்டும். என்னை பற்றி அவதூறாக பேசிய ராதாரவி மற்றும் காளை ஆகியோரைத்தான் நடிகர் சங்கத்தில் இருந்து முதலில் நீக்க வேண்டும். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 2015–ம் ஆண்டு நடைபெற இருக்கும் நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிட போகிறேன்.

BJP Ex மேயர் கீதா மாலன் : கவுரவ கொலைகளை செய்யலாம்? காதல் திருமணங்களை தடுக்க......

deputy mayor of Junagadh city Geeta Malan suggested "honour killings" of Koli community girls, who elope with boys from another community.அகமதாபாத்: குஜராத்தில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாஜ மேயர் பேசுகையில், காதல் திருமணங்களை தடுக்க கவுரவ கொலை செய்ய வேண்டும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திரமோடி லோக்சபாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அங்கு பாஜவின் மூத்த தலைவரும், மூத்த எம்எல்ஏவுமான ஆனந்தி பென் படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் குஜராத் அமைச்சரவையில் போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என கோலி சமூகத்தினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இனியெல்லாம் இப்படி வாந்தி வாந்தியாதான் வரும்? 

டிராபிக் ராமசாமியின் அதிமுகவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!


அ.தி.மு.க.வுக்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்களும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் பொதுஇடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணாக்களுக்கு சட்டத்துக்கு புறம்பாக முழு அளவில் காவல் துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர்கள் மீது எந்த வழக்கையும் தமிழக காவல் துறை பதிவு செய்யவில்லை. எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் அ.தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்களின் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு போலீஸ் ஐ.ஜி ஆகியோரை தங்கள் கடமையில் இருந்து தவறிய குற்றத்தை இழைத்தவர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் இது போன்று சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களிலும், தர்ணாக்களிலும் ஈடுபடும் கட்சிகளின் மீது தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். அய்யா  அவாள் நீதித்துறையின் நம்மவா! திமுகவுக்கு எதிரா வழக்கு போட்டு பாருங்க நீதிபதிங்க  எல்லாம் ஓவர்டைம் வேலை பார்பாய்ங்க ! 

முல்லைபெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கலாம்: கண்காணிப்புக்குழுத் தலைவர்!

கூடலூர்:''பேபி அணையை பலப்படுத்தியபின், பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கலாம்'' என கண்காணிப்புக் குழுத் தலைவர் நாதன் கூறினார். பெரியாறு அணையை ஒட்டியுள்ள பேபி அணையில் நீர்க்கசிவு உள்ளதாகக் கூறியதன் அடிப்படையில், தமிழக, கேரள உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குப்பின் குழுத் தலைவர் நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையில் இனிமேல் எப்போது வேண்டுமானாலும் 142 அடி நீர் தேக்கலாம். இதில் எவ்வித பிரச்னையும் இல்லை. அணையை ஒட்டியுள்ள பேபி அணையில் நீர்க்கசிவு இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது.இருந்த போதிலும் கேரளா கூறும் புகாரைத் தொடர்ந்து பேபி அணையைப் பலப்படுத்தியபின் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் எவ்வித பிரச்னையும் இல்லை. அணைப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினரை நியமிப்பது குறித்து எங்கள் குழு தலையிடாது. மத்திய அரசும் தமிழக அரசும் சேர்ந்து முடிவெடுத்து நியமிக்கலாம் என்றார். இந்தியாவிலேயே கேரளாவில் தான் படித்தவர்கள் அதிகம் என்று சொல்லறாங்க. அங்கும் இவர்களின் அரசியல் செல்லுபடியாகிறது.அணு உலையை தமிழகத்தில் வைத்து, அதில் மின்சாரம் உங்கள் மாநிலத்துக்கு பெறும் போது மக்களின் பாதுகாப்பு கேள்விகுரியாகாதா.....

மோடியின் மனைவி யசோதா: போலீசாரால் என் உயிருக்கு ஆபத்து? தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மோடியின் வாழ்க்கை அம்பலம்?

மெக்சனா:'எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஏன்...? எந்த அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது?' என, பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தகவல் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்டுள்ளார். அதேநேரத்தில், 'முன்னாள் பிரதமர் இந்திராவை, அவரின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றது போல, எனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறேன்' என்றும், அவர் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது தன் சகோதரர் அசோக் மோடியுடன், மெக்சனா மாவட்டம், உஞ்ஜா நகரில் வசித்து வருகிறார். சமீபத்தில், பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்த யசோதா பென், தற்போது, குஜராத் மெக்சனா மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மொதாலியாவிடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மோடியின் இருண்ட கால லீலைகள் கௌதம் அதானிக்கும் தெரியும், யசோதா பெஹன் க்கும் தெரியும்.. ஒருத்தர் பயமுறுத்தி சம்பாதிக்க பலமாக ஒட்டிக்கிட்டார்.. மானமுள்ள யசோதா பெஹன் அவரை வெட்டி விட்டார்..

திங்கள், 24 நவம்பர், 2014

ஸ்மிருதி ராணி ஜனாதிபதி ஆவார்! ஜோதிடர் கணிப்பு ! பில்லி சூனியம் யாகம் போன்றவைதான் இனி அரசியல்??/

ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்வீர்கள் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு ஜோசியம் கூறியுள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஜோதிடர். ஜோதிடரின் இந்த கணிப்பு பாஜக தலைவர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஸ்மிருதி ராணி சிறுவயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர். 12ம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டு, 2000ம் ஆண்டு துவக்கத்தில் விளம்பர மாடலாக களமிறங்கினார். தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த அவர், 2003ல் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2004ல் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டபோது, தான் ஒரு பிஏ பட்டதாரி என்று கூறிய அவர், 2014ல் நடந்த நாடமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபோது, பி.காம். படித்திருந்ததாக விண்ணப்பத்தில் தெரிவித்திருந்ததால் சர்ச்சையில் சிக்கினார்.தேர்தல் சமயத்தில் அவர் ராஜஸ்தான் மாநிலம், பில்வாராவில் உள்ள கரோய் என்ற கிராமத்திற்கு சென்று, அங்கு பண்டிட் நாதுலால் வியாஸ் என்ற ஜோதிடரை சந்தித்து வெற்றி வாய்ப்பு குறித்து ஜாதகம் பார்த்துள்ளார். அதற்கு அந்த ஜோதிடர், மிக பிரபலமான பதவி உங்களுக்கு காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால், அமேதி தொகுதியில் ராகுல்காந்தியிடம் தோல்வி அடைந்ததால், ஜோதிடர் கணிப்பு பொய்யானது என்று கருதிய நேரத்தில், ஸ்மிருதி ராணிக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பதவியை அளித்து ஆச்சரித்தில் ஆழ்த்தினார் பிரதமர்

குஷ்பு : தற்போது எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை!

எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.தமிழக பாஜக நடிகர் ரஜினிக்கு வலைவீசிய நிலையில், நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின.இந்தநிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள குஷ்பு, தனக்கு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும், தன்னை பற்றி வெளியாகும் வதந்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்

அந்நிய முதலீடுகளால் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற அண்டப்புளுகே “மேக் இன் இந்தியா”

மேக் இன் இந்தியாபாசிஸ்டுகள் அடிமுட்டாள்களாகவும், அண்டப்புளுகர்களாகவும் கோமாளிகளாகவும்தான் இருப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துக்காட்டி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அந்நிய முதலீடுகள் பெருகினால், நாட்டில் தொழில் வளர்ச்சியும் வேலைவாப்பும் பெருகி இந்தியா வல்லரசாகிவிடும் என்ற அண்டப்புளுகையே, மீண்டும் “மேக் இன் இந்தியா” என்ற பெயரில் பாலிஷ் போட்டு அவர் கடைவிரிக்கிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தனியார்மய – உலகமயக் கொள்கையை காங்கிரசு கூட்டணியும் பா.ஜ.க. கூட்டணியும் தீவிரமாகச் செயல்படுத்தி தோல்வியடைந்துள்ள நிலையில், அடிமுட்டாள்தனமாக மீண்டும் அதே பாதையை மூர்க்கமாகச் செயல்படுத்த கிளம்பிவிட்டார் மோடி. அந்நிய முதலீட்டின் மகிமை : நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதை எதிர்த்து வேலை இழந்த அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

குஷ்பூ பாஜகவில்? ஸ்டாலின் எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிக்க சபதம்?

ஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டும்... - குஷ்புவின் 'லட்சியத்துக்கு' கைகொடுக்கிறது பாஜக! 
சென்னை: முக ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற குஷ்புவின் 'லட்சியத்துக்கு' தோள்கொடுக்க தயாராகிறது தமிழக பாஜக என்ற செய்தி தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. திமுகவில் குஷ்பு இணைந்தது, அங்கு அவருக்குக் கிளம்பிய எதிர்ப்புகள், சொந்தக் கட்சியினரே குஷ்பு மீது செருப்பு வீசியது, திமுக தலைவருடன் அவரை இணைத்துப் பரப்பப்பட்ட அநாகரீக அவதூறுகள்... இவையெல்லாம் 'குஷ்பு அரசியலில்' மறக்க முடியாத நிகழ்வுகள்குறிப்பாக தன்னை திமுகவிலிருந்து விரட்ட ஸ்டாலின் தரப்பும் அவரது குடும்பத்தினரும் செய்தவற்றை அத்தனை சுலபத்தில் மறக்கமுடியாமல் தவிக்கிறாராம் குஷ்பு. திமுகவிலிருந்து விலகி, இப்போதைக்கு அரசியல் பற்றி எதுவும் பேசாமலிருந்தாலும், குஷ்புவுக்கு தமிழகக் கட்சிகளிடம் ஏக வரவேற்பு உள்ளது. இப்போதும் கூட  குஷ்புவிடம் சமாதானம் பேசலாம்.  கலைஞர் மீது அன்பும் பகுத்தறிவு சுயமரியாதை கொள்கையும் கொண்ட  ஒரு  பெண்ணியவாதிதான் குஷ்பு !அவருக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக உண்டு ,ஸ்டாலின் மனைவிக்கு இது எங்கே புரிய போகிறது? குஷ்புவை பார்த்து பொறாமை கொண்டவர்கள் செய்த சூழ்ச்சியில் ஸ்டாலின் அகப்பட்டு கொண்டார்,என்ன செய்வது ஜால்ரா போதை ஏறிவிட்டதால் ஸ்டாலினுக்கு  யாரும் நல்லது சொல்ல முடியாமல் இருக்கிறது?

நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு வருட சிறை! காசோலை திரும்பிய வழக்கு


நடிகை ஜீவிதாவுக்கு 2 வருட சிறை!நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு இரண்டு வருட சிறை மற்றும் 25 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது ஆந்திர கோர்ட்.   காசோலை திரும்பிய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா: விளையாட்டு துப்பாக்கியை காட்டிய சிறுவனை போலீஸ் சுட்டு கொலை!


அமெரிக்காவின் கிளீவ்லண்ட் நகரில், விளையாட்டுத் திடல் ஒன்றில் கையில் துப்பாக்கி வைத்திருந்த 12 வயது கறுப்பினச் சிறுவன் ஒருவனை பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவத்தில், அச்சிறுவன் கையில் ஏந்தியிருந்தது ஒரு விளையாட்டு துப்பாக்கி எனத் தெரியவந்துள்ளது. பொலிசால் சுடப்பட்ட டாமிர் ரைஸ் பின்னர் மருத்துவமனையில் உயிர்விட்டார் >கையை உயர்த்தி நிற்கும்படி பொலிசார் சொன்ன வார்த்தைகளை அச்சிறுவன் கேட்டு நடக்காமல் போகவே பொலிஸ்காரர் ஒருவர் அச்சிறுவன் மீது இரண்டு தடவை சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட 14 ரயில்வே திட்டங்கள் ரத்து : ரயில்வே அமைச்சகம்

: தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்புள்ள 14 திட்டங்களை கைவிட ரயில்வே அமைச்சகங்கள் முடிவு செய்துள்ளது. 1992-1993 முதல் 2012 ஆண்டு வரை அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களில் 160 திட்டங்களின் பணிகள் முடிவடியாமல் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து தமிழகத்தில் சத்தியமங்கலம் வரை 260-கிமீ தூரத்திற்கு சுமார் ரூ. 14,000 கோடி மதிப்பில் ரயில் பாதை அமைத்தல் உட்பட தென் இந்தியாவில் மட்டும் 39 திட்டங்களுக்கான பணிகள் சிறிது கூட நடைபெறவில்லை. இதையடுத்து பணிகள் தொடங்காத ரயில்வேக்கு இழப்பை ஏற்படுத்தும் 160 திட்டங்களையும் கைவிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்பட தென் இந்தியாவில் மட்டும் 47 திட்டங்கள் கைவிடப்பட்டஉள்ளன. இவற்றில் 9 திட்டங்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மம்தா பேனர்ஜி ரயிவே அமைச்சராக அறிவிக்கப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் dinakaran.com

பொங்கி எழு மனோகரா ! ஏன் எதுக்காக என்று யாருக்கு தெரியும்?

ரமேஷ் ரங்கசாமி இயக்கும் படம் ‘பொங்கி எழு மனோகரா'. இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர் நடிக்கின்றனர். எஸ்.ஏ.பரந்தாமன் தயாரிக்கிறார். இப்படம்பற்றி இயக்குனர் கூறியது: பொங்கி எழு மனோகரா என்பது பிரபலமான வசனம். அந்த வசனம் என் வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்தது. நான் கஷ்டப்பட்டபோது உடன்பிறந்தவரிடம் உதவி கேட்டேன். செய்ய மறுத்தனர். அப்போது என் மனதில் பொங்கி எழு மனோகரா என்ற வசனம்தான் தோன்றியது. அப்போதுதான் இந்த கதை உருவானது. அந்த வசனத்தை பட தலைப்பாக்கினேன். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நான் அடி வாங்கி இருக்கிறேன். என்னை உருட்டிவிட்டு அடித்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் பன்னீர்செல்வம்? பிச்சை எடுக்கினும் பதவி நன்றே! ஒரு அடிமையின் Art of survival?

திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை: கேள்வி:- நீங்கள் சட்டசபைக்கு வருவ தில்லை என்றும் பேரவையை எப்போது கூட்டுவது என அரசுக்குத் தெரியும் என்றும் ‘பினாமி’ முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீண்டும் பிதற்றி யிருக்கிறாரே?கலைஞர் :- தமிழக மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகள் பல எழுந்துள்ளன; அவசர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரச்சினை களைப் பற்றி விவாதிப்பதற்காகச் சட்டப்பேரவை யைக் கூட்ட வேண்டுமென்று நான் மட்டுமல்ல, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “சட்டப்பேரவையைக் கூட்டுக” என்றால் பன்னீர்செல்வம் பெரிதும் பதற்றமடைகிறார். ஒருவேளை சட்டப் பேரவையைக் கூட்டினால், தான் எங்கே அமர்வது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்திருந்த இடத்திலேயே அமர முடியுமா? என்றும்; தலைமைச் செயலகத்தில் இன்னும் முதலமைச்சர் அறைக்கே செல்ல முடியாமல், முதலமைச்சரின் ஆசனத்தில் அமர முடியா மல், ஏன்? முன்னாள் முதலமைச்சரின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலேகூட தன்னுடைய காரை நிறுத்த முடியாமல், முதலமைச்சர் என்றே
அழைத்துக் கொள்ள முடியாத வெட்கக் கேடான நிலை ஏற்பட்டிருக்கிறதே என்றும்; இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்துக் கொண்டிருக்கும் தன்னைப் பார்த்து, இப்படியெல்லாம் எதிர்க் கட்சித் தலைவர்கள் தன்னை சங்கடப் படுத்து கிறார்களே என்ற பதற்றம் பன்னீர் செல்வத்தைப் பற்றிக் கொண்டு பாடாய்ப் படுத்துகிறது.

43 நாடுகளுக்கு இ-விசா திட்டம் நவம்பர்-27 முதல் அறிமுகம்

புதுடில்லி:ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இணையதளம் மூலம் இ-விசா வழங்கும் திட்டம் நவம்பர்-27 முதல் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தெரியவந்துள்ளது.இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளனர்.முதற்கட்டமாக, ரஷ்யா, பிரேசில் ஜெர்மனி, தாய்லாந்து, உக்ரைன், ஜோர்டான், நார்வே, மொரிஷியஸ் மற்றும் அரபு நாடுகளுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்த உள்ளதாகவும் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக இத்திட்டத்தினை கொண்டு வர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை எழுந்து வந்த சூழலில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக இருக்கும் என இந்திய சுற்றுலா கழக தலைவர் சுபாஷ் கோயல் தெரிவித்துள்ளார். பலநாடுகள் இந்த ஆன்லைன் விசாவை அறிமுக படுத்திவிட்டன ,இலங்கை கூட அறிமுக படுத்தி இரண்டு வருடங்களாகி விட்டன.