மதுரை: எம்.எல்.சி. பதவி கிடைக்கும் என்பதற்காகவே திமுகவில் போய்ச் சேர்ந்துள்ளார் நடிகை குஷ்பு என அதிமுக நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர்.மன்றபொதுக் கூட்டத்தில் ராமராஜன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தி.மு.க.வில் தற்போது நடிகை குஷ்பு சேர்ந்து இருக்கிறார். இவர் மேல்சபை பதவியை பெறுவதற்காகத்தான் அந்த கட்சியில் சேர்ந்துள்ளார். அவரால் தி.மு.க.வுக்கு எந்த வகையில் லாபம் கிடைக்கும் என்பது போகப்போகத் தெரியும்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வருவார். இதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு பல்வேறு சாதனைகளை செய்து விட்டதாக தி.மு.க. அரசு கூறி வருகிறது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட தி.மு.க. தயாரா? என்று கேட்கிறேன்.
பல கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு வந்தாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.
சனி, 22 மே, 2010
தாய்லாந்து இலங்கைத் தமிழர்களின் ஒத்துழைப்புடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறீ நாகதுர்க்காதேவி
தாய்லாந்து ரங்சிட் பத்தும்தானி கொங்சி பங்கொக் என்னுமிடத்தில் இலங்கைத் தமிழர்களின் ஒத்துழைப்புடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறீ நாகதுர்க்காதேவி அம்மன் ஆலய மகா கும்பாவிஷேக நிகழ்வானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23.05.2010) நடைபெறவுள்ளது என்பதனை மிகவும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். இவ்அறிவித்தலை ஏற்று இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் எமது ஆலயத்தில் இன்னும் சில தேவைகள் ப+ர்த்தியாகாதுள்ளன. எனவே மனமுவந்து எமது ஆலயத்திற்கு உதவிசெய்ய விரும்பும் பக்தஅடியார்கள் எமது ஆலய இணையதள மின்அஞ்சல் முகவரி அல்லது ஆலய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தங்கள் உதவிகளை நல்குமாறு கேட்டு கொள்கின்றோம்.
இவ்வண்ணம்
ஆலய பரிபாலன சபையினர்
ஆலய மின்அஞ்சல் முகவரி : sri.naga@hotmail.com
ஆலய இணையதள முகவரி : http://www.srinagathurka.com/
ஆலய தொலைபேசி இலக்கம் : 0066875144747. 0066813724938. 0066163058185.
கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில
கொழும்பு, வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதை படத்தில் காணலாம்
சாவகச்சேரி. சிசுவின் சடலமொன்று கிணற்றில்
22.05.2010 - சனிக்கிழமை
சாவகச்சேரிப் பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவின் சடலமொன்று கிணற்றில் இருந்து சாவகச்சேரி பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிசுவின் கொலைக்குக் காரணமான பெண்ணைத் தேடி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் படத்துக்குத் தடை
சென்னை: ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள 'வெல் கேட் சினிமா பாக்ஸ்' என்ற நிறுவனம் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற படத்தைத் தயாரித்துள்ளது.
சிறுவர்களுக்கான இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம் தயாரிப்பதற்காக அதன் தயாரிப்பாளர் சிலரிடம் கடன் பெற்றிருந்தார். இந்த நிலையில், இந்த படத்தை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டது. அதற்கு தடை கேட்டு பைனான்சியர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அதில் அவர், "என்னிடமிருந்து கடனாக பெற்ற ரூ.5 லட்சத்தை 19.10.2005 அன்று திரும்ப தருவதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். ஆனால் அதைத் தரவில்லை. அந்த தொகையை திருப்பி தருவதற்கு அவர் உறுதி அளித்தும் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. எனவே கடன் தொகையை திருப்பி தரும்வரை அந்த படத்தை வெளியிடக்கூடாது. ஆனால் கடந்த 21-ந் தேதி (நேற்று) அந்த படத்தை வெளியிடுவதாக பத்திரிகைகளில் தகவல் வந்தது. எனவே, அந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி டி. ஹரிபரந்தாமன் விசாரித்தார். 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்' படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் நேற்று வெளியாகவிருந்த இந்தப் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி உயர்மட்டக் குழு
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கவனிக்கவென புதிய எம்.பிக்களைக் கொண்ட உயர்மட்டக் குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்ட எம். பியும், இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ இதற்குத் தலைமை தாங்குவார்.
இந்தக் குழுவில் இடம்பெறும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கிளிநொச்சிப் பகுதிக்கு வாராவாரம் சென்று அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்வர்.
இதற்கேற்ற வகையில், ஒவ்வொரு எம். பிக்களுக்கும் வெவ்வேறு துறைகள் தனித் தனியாக வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி குழுவின் தலைவரான நாமல் ராஜபக்ஷ இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பாரெனத் தெரியவருகிறது.

வடிவேலுவும் விரைவில் கம்பி எண்ணுவார்-சிங்கமுத்து

வடிவேலுவின் மேனேஜருக்கு கொலை மிரட்டல்
அவர் கூறுகையில், "வடிவேலுவின் மேனேஜர் மானேஜர் கருப்பா, சிவப்பா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் எந்த தப்பும் செய்யாத என்னை சதி செய்து ஜெயிலுக்கு அனுப்பி விட்டார். வடிவேலு பற்றி நான் சொல்லாத விஷயங்கள் நிறைய இருக்கிறது. அந்த ரகசியங்களை விரைவில் வெளியிடுவேன். அப்போது வடிவேலுவும் என்னைப்போல் கம்பி எண்ணுவார்.
சினிமாவில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட பல வழிகளில் முயற்சிக்கிறார். பிறரை அழிக்க பொய்யாக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் அவர். என் வீட்டு முன்னால் கூட வடிவேலு ஆட்கள் தினமும் தகராறு செய்கிறார்கள். அதை போலீசில் நான் சொல்லவில்லை. நடிகர்
வடிவேலு வறுமையால் வாடியபோது அவருக்குக் கை கொடுத்து உதவினேன். அவருக்கு காமெடி எழுதி கொடுத்தவர்கள் பலர் இப்போது அவருடன் இல்லை. அவருடைய இரண்டு மானேஜர்கள் இப்போது உயிருடன் இல்லை. வளர்ந்து விட்டதால் ஆணவமாக திரிகிறார். என்னை கைது செய்ய வைத்ததன் மூலம் வடிவேலுவைப் பற்றி மக்கள்
ஜெயிலுக்குள் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். கொலைகாரர்களையும் சந்தித்தேன். கைதிகள் மத்தியில் தேவாரம், திருவாசகம், சொற்பொழிவு நடத்தினேன். கைதிகள் என்னிடம் பாசமாக பழகினார்கள் என்றார் சிங்கமுத்து.
பதிவு செய்தவர்: வடிவேலு ஸ்ரேயா மேட்டர் CD
பதிவு செய்தது: 22 May 2010 3:59 pm
வடிவேலு + ஸ்ரேயா மேட்டர் cdய சன் டிவி ல குடு. அவங்க பேரம் பேசி ஸ்ரேயா ( ) மேடர முடிச்சிட்டு, உனக்கும் அனுப்புவாங்க நீயும் ( ) மேடர கிழிக்கலாம். டிவி லயும் போடுவாங்க. நாங்களும் பாப்போம்ல. அப்போதான் கம்பி எண்ணவைக்கலாம்.
மங்களூர விமானம்் வெடித்து சிதறியதால் 163 பேர் பலியானதாக கர்நாடக முதலமைச்சர்
டுபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று அதிகாலை 2.30 மணி அளவில் புறப்பட்டு வந்தது. போயிங் 737 வகையைச் சேர்ந்த அந்த விமானத்தில் 163 பயணிகள், 4 குழந்தைகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 173 பேர் இருந்தனர். சுமார் 4 மணி நேர, நேரடி பயணத்துக்குப் பிறகு அதிகாலை 6.30 மணியளவில் அந்த விமானம் மங்களூர் விமான நிலையத்தை நெருங்கியது. விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த விமானம் தரை இறங்க அனுமதித்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால் கவனமாக தரை இறங்குமாறு நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
திடீரென விமானத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தில் திடீரென தீ பிடித்தது. அப்போது விமானம், விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்தான் இருந்தது.
புகை கக்கிய நிலையில்….
விமான நிலைய சுற்றுப்பகுதியை எட்டி இருந்த விமானம், தரை இறங்க சில வினாடிகள் இருந்த நிலையில், நிலை தடுமாறியது. புகை கக்கிய நிலையில் அந்த விமானம் அல்லாடியது. அதன் போக்கும் மாறியது.
இதைக் கண்டதும் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே தீ பரவுவதற்குள் விமானத்தை தரை இறக்கி விடலாம் என்று விமானிகள் முயற்சித்தாகத் தெரிகிறது. ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
விமான நிலையத்தின் புதிய ஓடு தளத்தில் இறங்குவற்கு பதில் தவறுதலாக, அதன் அருகில் விமானம் தரை இறங்க ஆரம்பித்தது.. இதனால் மேலும் நிலை தடுமாறிய விமானம் இழுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள மலையடிவார பகுதி மீது பலத்த சத்தத்துடன் மோதியது. மறுவினாடி விமானம் வெடித்துச் சிதறியது.
உறவினர்களை வரவேற்க வந்தவர்கள் இந்த கோர விபத்தை நேரில் பார்த்ததும் துடித்துப் போனார்கள். விபத்து குறித்து உடனடியாக மீட்புக் குழுக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புப் படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விமான நிலையம் அருகில் உள்ள டெக்கான் பார்க் மற்றும் ரயில் பாதை இடையே விமானம் தீ பிடித்தபடி கிடந்தது. முள்காடாக இருந்ததால், விமானத்தின் அருகில் செல்ல முதலில் மீட்புக்குழுவினர் தடுமாற வேண்டியிருந்தது. இதையடுத்து மீட்புப் பணிக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 150 வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த பாதை மூலம் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. சுமார் 25 அம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நின்றன. தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
முதலமைச்சர் தகவல்
விமானம் மோதிய வேகத்தில் தீ பிடித்து வெடித்து சிதறியதால் சம்பவ இடத்திலேயே பயணிகள் பிணமாகிப் பேனார்கள். விமானப் பணியாளர்கள் உட்பட 163 பேர் பலியானதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறினார்.
விமானத்தின் பின் பகுதியில் இருந்தவர்களில் 6 பேர் மட்டும் அதிசயமாக உயிர் தப்பினார்கள். அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடியபடி கிடந்தனர். உயிருக்குப் போராடியபடி கிடந்த ஒரு குழந்தையையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
அவர்கள் 6 பேரும் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். போதிய அளவு வெளிச்சம் இல்லாததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் விமானம் தரை இறங்கிக் கொண்டிருந்தபோது இடது பக்க இறக்கையில் தீ பிடித்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். இதபற்றியும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
போயிங் 737 ரக விமானங்களில் எல்லா நவீன வசதிகளும் உள்ளன. ஆபத்து காலத்தில் விமானத்தைத் தற்காத்துக் கொள்ளும் வசதிகளும் உள்ளன.
தரை இறங்க முயற்சிக்கும்போது நிலைமை மோசமாகியிருந்தால்கூட அந்த விமானத்தை உடனடியாக மேலே கிளப்ப முடியும். எனவே விமானியின் தவறான கணிப்பும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
90 உடல்கள் மீட்பு
அவர்களை அடையாளும் காணும் பணிகள் நடந்து வருகின்றன.மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Read: In English
விபத்து நடந்த இடத்தில் தற்போது உடல்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போயுள்ளன. இதுவரை 90 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.அவர்களை அடையாளும் காணும் பணிகள் நடந்து வருகின்றன.மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 19ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி இரவு தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

இலங்கைப் பிரச்னையை அலசும்போது அங்கே நிரந்தர அமைதியை நிறுவும் ராஜீவ் காந்தியின் நெடுநோக்கு முயற்சியையோ அல்லது அவரது கோரப் படுகொலையையோ தூரத் தள்ளிவைத்துவிட்டுத் தமிழீழ விவகாரத்தைப் புரிந்து கொள்ள முனைவது முற்றிலும் அரைவேக்காட்டுத்தனம்.
இலங்கையின் பாதுகாப்பு என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கும் நலனுக்கும் அச்சுறுத்தல் தருகிற எந்த நடவடிக்கையையும் தகர்க்கும் நோக்கில் அமைதிப்படையொன்றை அங்கே அனுப்பினார் ராஜீவ்.
சதாமிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தனது தேசத்தையே அமெரிக்காவுக்கு பலிகொடுத்து குவைத்திய முட்டாள்தனத்தைப் போன்று இலங்கை அரசும் ஏடாகூடம் செய்து விடக்கூடாதென்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் இந்தியா எடுத்த முயற்சியைத் துரதிர்ஷ்டவசமாக் சிங்களவர்களும்,விடுதலைப் புலிகளும் ஒருசேர எதிர்த்த கொடுமையை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.
உலகமே எதிர்த்தாலும் தனது தாயகத்தைக் காப்பாற்றுவது ஒன்றே உயர்க் கர்மம் என்றெண்ணியதைத் தவிர வேறெந்தக் குற்றமும் ராஜீவ் செய்யவில்லை.அதுவும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் கலந்தாலோசித்த பின்னரே காரியத்தில் குதித்தார் இந்தியப் பிரதமர்.
அந்தக் கொடூரமான கொலைப்பழியைத் தூக்கி தி.மு.க மீது போட்டுவிட்டு அரசியல் ஆதாயம் தேடியவர்கள் இங்கே உண்டு.அவர்களுக்குத் துணை போனவர்கள் இங்கே உண்டு.பிரபாகரன் குற்றவாளி என்று நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை மேடை போட்டுக் கேலி செய்தவர்கள் இங்கே உண்டு.அதனால்தான் இந்தியாவை இளிச்சவாயன் என்று நினைப்பவர்களுக்கு இங்கே பஞ்சமில்லாமல் போயிற்று.
அந்தக் காலகட்டத்தில்,இலங்கைக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீது,இராணுவ அணிவகுப்பின்போது ஒரு சிங்கள வெறியன் துப்பாக்கி பேனட்டால் கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டான்.அந்தத் துர்ச்சம்பவம்,சிங்கள இனம் இந்தியா மீது கடும் கோபம் கொண்டிருக்கிறது என்பதற்கான அப்பட்டமான அடையாளம்.நல்லவேளையாக அவர் உயிர் தப்பினார்.
ஆனால் ஒரு தமிழ் மனிதவெடிகுண்டிலிருந்துதான் அவரை எவராலும் காப்பாற்ற முடியவில்லை. அதுவும் இந்தியாவில்;தமிழகத்தில்.தமிழுக்கும் தமிழினத்துக்கும் அன்றைக்குக் கிடைத்த அவப் பெயரை இன்றளவும் நீக்க முடியவில்லை.
ஒரு தேசத்தின் பிரதமரை வெடிகுண்டு வைத்துக் கொல்வது தீரச்செயல் என்று வியந்த புண்ணியவான்கள் வாழ்ந்த புனிதபூமி இது.நாட்டுக்காக உயிர்த்தியாகம் புரிந்த ராஜீவைப் புகழ்ந்தால்,மரணத்தைக் கட்டித் தழுவிய தணுவை என்னவென்று பாராட்டுவது?என்று குறுக்குக் கேள்வி எழுப்பிய தேசாபிமானிகள் நிறைந்த நாடு இது.
சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் போர் நிறுத்தம் நீடித்த சமயத்தில், திடீரென்று ் தோன்றிய மாவீரன் பிரபாகரனிடத்தில் ஒரு வருத்தம் தெரிவிக்க மாட்டாரா என்ற ஏக்கத்தில்,‘ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தது பற்றி இப்போது நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’என்று ஓர் இந்திய செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.‘அது முடிந்து போன கதை. இப்போது அதைப்பற்றிய கேள்வி தேவையில்லை’என்று நெருப்பைக் கக்குவதைப் போல் வெறுப்பை உமிழ்ந்தார், பிரபாகரன்.
நூறு கோடி மக்களின் தலைவனின் கோரப்படுகொலைக்காக ஒரு விழுக்காடுகூட வேதனை தெரிவிக்காத அவரது அரக்கக் குணத்தை எண்ணி இந்தியத் தலைவர்கள் பொங்கி எழுந்திருக்க வேண்டும்.குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும்.தேச விசுவாசத்திற்கும் தேச துரோகத்திற்குமிடையே இங்கேதான் வித்தியாசம் வெளிப்படுகிறது.
தனது தளபதிகளில் பலபேரை பிரபாகரன் கொன்றிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அப்பாவி முஸ்லீம்களை வெவ்வேறு இடத்திற்குத் துரத்தியடித்திருக்கிறார்.அவர்களது வழிபாட்டு இடங்களை உருத்தெரியாமல் நொறுக்கியிருக்கிறார்.லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தியிருக்கிறார்.என்ன அக்கிரமம் செய்தாலும் அபாரம் என்று கை தட்டுகிற கோமாளித்தனங்களாலேயே இன்றைக்கு அவரொரு கொடுங்கோலனாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.
ஈழத் தமிழ் மக்களை முற்றிலுமாக காப்பாற்ற வேண்டுமென்ற நிஜமான சிந்தனை இருக்குமேயானால்,ஐக்கிய நாடுகள் சபை அறைகூவல் விடுக்கத் தேவையில்லை.அமெரிக்கா அலற வேண்டியதில்லை.இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் இயற்ற வேண்டிய அவசியமில்லை.தமிழகத்தில் தீ குளிப்புச் சம்பவங்கள்,மனிதச் சங்கிலிகள்,பேரூந்து எரிப்புகள், உண்ணாவிரதங்கள்,போராட்டங்கள் எதுவும் எதுவும் தேவையில்லை. எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஏகோபித்த குரலில் வேலுப்பிள்ளை பிரபாகரா!என் ஈழத்துச் சொந்தங்களைக் காப்பாற்று! என்று பிரார்த்தித்தால்,அதற்கு அவர் செவி மடுத்தால் போதும்;தமிழர்களுக்காக இங்கே யாரும் ஒப்பாரி வைக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.
கண்ணீர் சிந்தவேண்டிய கட்டாயமெல்லாம் தமிழர்களைக் காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை ஊக்கப்படுத்தியதால்தான்,இந்தப் பிரச்னையில் வானத்துக்கும் பூமிக்கும் எம்பிக் குதிக்கிற யாராவது ஒருவர்,முதலில் பிரபாகரனைப் போர் நிறுத்தம் செய்ய அறிவுறுத்தியதுண்டா?ஐ.நா.சபையால் தீவிரவாதிகள் என்று பிரகனப்படுத்தப்பட்ட ஒரு கும்பலை எதிர்த்து, மக்களால் நிறுவப்பட்ட ஓர் ஆட்சி யுத்தம் புரிந்தால்,குறுக்கே நின்று தடுத்து நிறுத்து என்று இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பது என்ன வகை ஜனநாயகம்?காஸா பகுதியில் இதே நிலை வியாபித்திருந்தபோது முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியான கேரளாவிலோ,மேற்கு வங்கத்திலோ ஏன் இந்த ஜனநாயகம் பேசப்படவில்லை?
அப்பேர்ப்பட்ட இலங்கையின் தேவக்குமாரனுக்காகத் தமிழகமே இப்போது திரண்டு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.இந்திய தேசத் தலைவனை வெடிகுண்டு வைத்துத் தகர்ந்த பிரபாகரனின் பெயரைத் தங்களது குழந்தைகளுக்கு சூட்டி அழகு பார்க்கிறது.எப்போதாவது ஒருநாள் தனது தீவிரவாதக் கொள்கையையும்,பரிவாரங்களையும் காப்பாற்ற இந்தியக் கரங்களால் மட்டுமே முடியும் என்று எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காத ஒரு போராளிக்காகச் சகோதர இந்தியத் தமிழர்களைப் பகைத்துக் கொள்கிற காட்டுமிராண்டித்தனம் இங்கே தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.நேற்றுவரை போற்றியவர்களால் இந்தியத் தலைவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்படுகின்றன.நாளைக்கு பாராட்டப்போகிற அரசியல் நண்பர்களின் உருவபொம்மைகள் சிதைக்கப்படுகின்றன.
இங்குதான் இந்தியத் தமிழினத்தைப் பற்றி ஒன்றுமே புரியமாட்டேனெங்கிறது.
ஈழத்து அப்பாவித் தமிழ் மக்கள் எவ்விதக் குறையுமின்றிக் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் இந்தியாவிலிலுள்ள எவரும் மாற்றுக் கருத்து கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை,ஏன்?ஐ.நாவும் அமெரிக்காவும் கூட அதற்காக குரல் கொடுக்கின்றன.ஜனாதிபதி பிரதிபா பட்டீல்,வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி,விடுதலைப் புலிகளால் தனது கணவரை இழந்து தாலியைத் துறந்த சோனியா காந்தி உள்ளிட்ட மத்தியத் தலைவர்களிலிருந்து,திராவிடக் கழகத் தலைவர் வீரமணி உட்பட அனைவரும் தமிழர் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருப்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால்,மத்திய அரசு லட்சுமணன் கோட்டைத் தாண்டுகிற விஷயத்தில் மட்டும் சற்றுத் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.அதுகூட தேசத்தின் நன்மையைக் கருதியே என்பதைச் சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொள்ள முடியும்.அப்படியானால் தமிழகத் தலைவர்களுக்குப் புரியவில்லையா? அல்லது புரியாதவர்கள் போன்று மத்திய மாநிலை அரசுகளைச் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டுமென்ற தீய நோக்கத்துடன் ஆர்ப்பரிக்கிறார்களா?அதற்கு இந்த தருணத்தைத் தேர்ந்தெடுத்தற்கு ஒருவேளை வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக இருக்கலாமோ?
அப்படியானால் அழுவது,கதறுவது,ஒப்பாரி வைப்பது அனைத்துமே அரசியல்தானா?அல்லல்படும் ஈழத்தமிழனுக்காக இல்லையா?
சுமார் ஓராண்டு காலமாகவே தமிழகத்து அரசியலில் அணிகள் மாறத் துவங்கிவிட்டன.. ஐந்தாண்டுகளாக எதிராளியாக இருந்தவர்களுடன் இப்போது கை கோர்த்து நடக்கவேண்டிய நிர்ப்பந்தம். காங்கிரசுடனோ தி.மு.கவுடனோ கூட்டணியை முறித்துக் கொள்வதற்கான இரத்தத்தைச் சூடாக்கும் கொள்கை முரண்பாடுகள் எதுவும் தோன்றிவிடவில்லை.மக்களிடம் கூறுவதற்குக் கைவசம் இருப்பதெல்லாம் இலங்கைப் பிரச்சனை மட்டுமே.எல்லாத் துருவங்களையும் ஒன்றிணைக்கிற சக்தி இப்போதைக்கு அது ஒன்றுதான்.
அதனால்தானோ என்னவோ இந்த விவகாரத்தில் தமிழக எதிர்நிலை தலைவர்களின் பாஷைகள் அறவே தெளிவாக இல்லை.செல்வி ஜெயலலிதாவைத் தவிர இடதுசாரிகள் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பேசும் செந்தமிழ் மொழியிலேயே நரேந்திரமோடியின் இரத்தவாடை வீசுகிறது.இப்போதைய தமிழகத்து அரசியல்வாதிகளின் வார்த்தைகளில் நிதானமோ தமிழ்ப்பண்போ வெளிப்படவில்லை.பாரதி பாடினானே,‘இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’என்று.அந்த இன்பமுமில்லை;தேனுமில்லை. அமிலத்தில் மட்டுமே தோய்த்தெடுக்கப்பட்ட வெறும் வர்க்க வெறி மட்டுமே வெளிப்படுகிறது.
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்,ஈழத்துப் பிரச்னையில் பாரதீய ஜனதாவை ஒதுக்கிவைக்க வேண்டியதில்லை என்று அறிவுரை கூறுகிறார் ஒரு செய்தியாளர்.இதுபோன்ற அற்புதமான யோசனைகளை மீடியாக்காரர்கள் வெளிப்படுத்தப் போய்த்தான் நாடு வெகு வேகமாக சீரழிந்து கொண்டிருக்கிறது.தனது கட்சியின் கொள்கை காரணமாகவே பா.ஜ.க.தள்ளியே நிற்கிறது என்பதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாமல்,குழம்பிப் போய்க்கிடக்கிறார்கள் பத்திரிகைகாரர்கள்.
இலங்கையில் கொல்லப்படுபவர்கள் ஒருவேளை கிருஸ்தவர்களாக இருந்திருந்தால் அமெரிக்கா தலையிட்டு அவர்களைக் கைத்தூக்கிவிட்டிருக்கும்’என்று வெடிக்கிறார் தமிழகத்துப் பெருந்தலைவர்களில் ஒருவரான ராமதாஸ்.இந்தியப் பேரரசில் அங்கம் வகித்துக் கொண்டே ஆரோக்கியமோ,சுகாதாரமோ இல்லாத சொற்களால் மத்திய அரசை அர்ச்சிக்கிறார் அவர்.
தமிழ்த் தேசிய கட்சியிலிருந்து காங்கிரஸூக்குத் தாவி,அங்கேயும் நிரந்தரமாகக் காலம் தள்ளாமல் தனிக்கட்சி துவங்கி,அதிலும் தங்காமல் இப்போது ஈழத்துப் போராளிகளுக்காகத் தனி ஆவர்த்தனம் வாசிப்பது நெடுமாறன் போன்ற அரசியல் துறவிகளுக்கு வேண்டுமானால் சரியாகப் படலாம். பாஸ்போர்ட்டே இல்லாமல் சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்குச் சென்று கள்ளத்தனமாக பிரபாகரனைச் சந்தித்துவிட்டு வந்த வை.கோ கூட நெடுமாறன் ரகம்தான்.அவர்களுடன் சேர்ந்துகொண்டு திருமாவளவன்,ராமதாஸ் போன்றோர் கூட ஈழத்துத் தமிழர்களின் வேதனையைத் தடுப்பதற்குப் பதிலாக நிலைமையை மிகவும் மோசமடையவே செய்யும்.
இவர்கள் அனைவரும் ஈழத்துத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
விடுதலைப்புலிகள் வேறு;ஈழத்துத் தமிழர்கள் வேறு,ஒன்றோடு ஒன்றைப் போட்டுப் பின்னிக் கொள்வதாலேயே ஈழத்தமிழர்கள் மிகவும் ஆபத்தான இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.ஓர் அன்னிய அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் நடைபெறுகிற போராகக் கருதாமல் இனப்படுகொலை என்று வர்ணம் பூசி எவ்விதப் பயனுமில்லை.
இங்கே தலைவர்கள் பிடிவாதம் பிடிக்கும் ஒவ்வொரு வினாடியும் அங்கே எண்ணற்ற தமிழன் உயிர் துறக்கிறான்.இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள மறுத்து,வேறு திசையில் கவனத்தைத் திருப்புவதுதான் தமிழனத் துரோகம்.

- ஏ.ஹெச். ஹத்தீப்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து நிவாரண உதவி
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து நிவாரண உதவி கிடைக்கப்பெற்றுள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்பின்பேரில் இந்நிவாரண உதவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையூடாக இவ்வுதவி அனுப்பப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். திருமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் ஆறு லொறிகளில் கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நீர்த்தாங்கிகள், தண்ணீர் போத்தல்கள், மற்றும் உலருணவுப் பொருட்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து மேலும் இரு லொறிகளில் நாளை நிவாரணப்பொருட்கள் கம்பஹாவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்மக்களே இந்த நிவாரண உதவிகளை வழங்கியுள்ளதாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
யாழ். முதல்வர் மீதான வழக்கு தள்ளுபடி! பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுமாறு யாழ் நீதவான் ஊடகங்களுக்கு அறிவுரை!

பிரபாகரன் தப்புவதற்குப் பல வழிகளை வைத்திருந்ததாக சிங்கப்பூர்
பொட்டம்மானும் சார்ள்ஸ் உம் இதன் போதே உயிரிழந்தனர்
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்புவதற்குப் பல வழிகளை வைத்திருந்ததாக சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஆய்வாளராக இருக்கும் றொகான் குணரத்ன தெரிவித்திருக்கிறார்.
பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையாக கிறிஸ்ரினா என்ற கப்பலை வரவழைத்து அதிலிருந்து ஹெலி கொப்டரைப் பயன்படுத்தி தப்பவது அவருடைய திட்டமாக இருந்தது. கனடாவைச் சேர்ந்த சங்கிலி என்றழைக்கப்படும் ரவிசங்கர் கனகராஜா கப்பலை ஒழுங்கு செய்வதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கப்பலை ஒழங்கு செய்து இந்தோனேசியாவிற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அச்சுதன் என்பவர் ஹெலிகொப்டரை ஒழுங்கு செய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரால் அதனை ஒழுங்கு செய்ய முடியாமல் போய் விட்டது. போரின் பின்னர் கிறிஸ்ரினா என்ற கப்பல் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இரண்டாவது வழிமுறையாக, பாதுகாப்பு வலயத்தை உடைத்துக் கொண்டு யால சரணாலயத்துள் நுழைவது. அங்கிருந்து தெற்கின் அடா காட்டிற்குள் நகர்வது. அதனூடாக பாதுகாப்பு படையினரின் கண்காணிப்புக் குறைந்த தெற்கக் கடல் வழியாக தீவிலிருந்து வெளியேறுவது.
மூன்றாவது வழிமுறையாக தளபதி ராம் இன் உதவியுன் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கிற்குத் தப்பிச் செல்வது. 2007இல் கிழக்கு கைப்பற்றப்பட்ட போதும் ராம் கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருந்து வந்தார் என குணரத்ன குறிப்பிடுகிறார்.
ஆனால், இந்த எந்தவொரு வழிமுறையும் அவருக்குக் கைகூடவில்லை. ஏனெனில் இலங்கைப் படையினர் தரையின் எல்லாப் பகுதியையும் கடல் வழியையும் சுற்றி வளைத்திருந்தனர். மே 16ஆம் திகதி முல்லைத் திவின் எல்லா கடற்கரைப்பகுதியும் இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தது. கடற்படையினரின் சுற்றிவளைப்பு தகர்க்க முடியாததாக இருந்தது.
நான்காவது வழிமுறையாக இலங்கைப் படைகளின் கடுமையான சுற்றிவளைப்பை நந்திக்கடலின் மேற்குப் புறத்தால் உடைத்துக் கொண்டு அடர்ந்த வன்னிக் காடுகளுக்குள் சென்று விடுவது. இதனால் தான் அங்கு விடுதலைப் பலிகள் தூரதிருஷ்டியுடன் பின்வாங்கும் போது ஆயுதங்களைப் புதைத்து வைத்தனர்.
புலிகளின் 140 போராளிகளுடன் பொட்டு அம்மான் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி (பிரபாகரனின் மகன்) ஆகியோரின் தலைமையில் பொதுமக்களைப் போல் சென்று படையினரைத் தாக்குவது என்று திட்டமிட்டனர். இதன் போது 30 தற்கொலையாளிகள் படையினர் மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர். இராணுவத்தின் முன்னரங்கக் காவல்நிலைகளைத் தகர்த்த புலிகளால் அதற்கு மேல் முன்னேற முடியாமல் போய் விட்டது. பொட்டம்மானும் சார்ள்ஸ் உம் இதன் போதே உயிரிழந்தனர் என அவர் தெரிவிக்கிறார்.
நடேசன் புலித்தேவன் ரமேஷ் போன்றோர் சரணடைய முயன்றபோதே சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அவர்கள் மோதலின் போதே சுட்டுக்கொல்லப்பட்டதாக 2009 மே 24ஆம் திகதிய அரச பத்திரிகையான சண்டே ஒப்சேவரை ஆதாரம்காட்டி அவர் குறிப்பிடுகிறார்.
பிரபாகரனும் அவருடைய மெய்ப்பாதுகாவலர்களும் பொதுமக்களுடன் இணைந்து நந்திக்கடலைக் கடப்பதற்காக வெள்ளி முள்ளிவாய்க்காலிலிருந்து கரய முள்ளிவாய்க்கால் வரை பொருத்தமான இடத்தைத் தேடியதாகவும், அதற்காக முழங்கால் வரை சேறு உடைய களப்புப் பகுதியில் காத்திருந்ததாகவும், எனினும் 19ஆம் திகதி காலை பத்து மணியளவில் விஜயபாகு ரெஜிமென்டினால் நெஞ்சில் கிரனைட் தாக்குதலுக்குள்ளாகியும், தலையில் துப்பாக்கிச்சூடு பட்ட நிலையிலும் சகதி தொய்ந்த நிலையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் றொகான் குணரட்ண கூறியிருக்கிறார்.

கடற்படை ரகசிய கசிவு தகவல்களை சில குறிப்பிட்ட ஆயுத வியாபாரிகளுக்கு
லண்டன்: இந்தியக் கடற்படையின் ஆயுதக் கொள்முதல் தொடர்பான முக்கிய தகவல்களை சில குறிப்பிட்ட ஆயுத வியாபாரிகளுக்கு கொடுத்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான ரவிசங்கரன் லண்டனில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவிசங்கரன், முன்னாள் கடற்படைத் தலைமைத் தளபதி அருண் பிரகாஷின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 12ம் தேதி லண்டன் போலீஸாரால் ரவிசங்கரன் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் ஜாமீன் அளித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு ரவிசங்கரனுக்கு எதிராக இன்டர்போல் போலீஸார் ரெட் கார்னர் அறிவிக்கையை வெளியிட்டனர். இதையடுத்து கடந்த நான்கு வருடங்களாக ரவிசங்கரன் தேடப்பட்டு வந்தார்.
கடந்த 2006ம் ஆண்டு ரவிசங்கரன் ஒரு தலைமறைவுக் குற்றவாளி என டெல்லி கோர்ட் பிரகடனம் செய்தது. அவரைக் கைது செய்து அனுப்புமாறு கோரி மத்திய அரசு இங்கிலாந்து கோர்ட்டையும் அணுகியது. இருப்பினும் லண்டன் போலீஸ் பிடியிலிருந்து தப்பிய ரவிசங்கரன், பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க் என ஓடிக் கொண்டிருந்தார்.
கடற்படை ரகசிய கசிவு வழக்கில் இதுவரை நான்கு கடற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து அப்போது கடற்படைத் தளபதியாக இருந்த அருண் பிரகாஷ் பதவி விலக முன்வந்தார். ஆனால் அதை மத்திய அரசு அனுமதிக்கவில்லை.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் - ஓய்வு பெற்ற இந்திய விமான்படை விங் கமாண்டர் எஸ்.எல்.சுர்வே, ஓய்வு பெற்ற கடற்படை கமாண்டர் குல்புஷன் பராஷார், டிஸ்மிஸ் செய்யப்பட்ட கடற்படை கமாண்டர்கள் விஜேந்தர் ராணா, வி.கே.ஜா ஆகியோர்.

2006ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி சுர்வே, ரவிசங்கரன், ஜா, ராணா மற்றும் ராஜ் ராணி ஜெய்ஸ்வால், முகேஷ் பஜாஜ், ஓய்வு பெற்ற விங் கமாண்டர் கோஹ்லி, காஷ்யப் குமார், குல்புஷன் பராஷார் ஆகியோர் மீது அலுவலக ரகசியக் காப்புச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டத்தின் 120-பி ஆகியவற்றின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
தற்போது கைதாகியுள்ள ரவிசங்கரனை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் சிபிஐ இறங்கியுள்ளது. இதற்கு பல வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவு செய்தவர்: ஆண்மகன்
பதிவு செய்தது: 22 May 2010 1:00 am
எங்கே போய்ட்டானுங்க இந்த நக்சல் மொண்ணை நாயி எல்லாம் இந்திய மக்களை குண்டு வச்சி கொல்றனுங்க இந்த மாதிரி துரோகிகளை, கசாப் மாதிரி சமூக விரோதிகளையும் விட்ருவானுங்க.,
அரச எதிர்ப்பும், புலி புகழ்பாடலும்தான் கனடாவில் ஊடக சாத்தான்கள் வேதம்
சாத்தான் வேதம் ஓதுகின்றது’ என்றொரு பழமொழி தமிழில் உண்டு. இதன் அர்த்தம், சாத்தான் என்ற மக்களுக்கு தீங்கு செய்யும் பிசாசு திருந்திவிட்டது என்பதாகாது. அது மக்களை ஏமாற்ற வேசம் போடுகிறது என்பதே இதன் உண்மையான அர்த்தமாகும். அதுபோன்ற ஒரு நிலையை, இப்போது கனடாவிலுள்ள சில தமிழ் ஊடகங்களும், தம்மை ஊடகவியலாளர்கள் என்று அழைத்துக் கொள்வோரும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரையில், கனடாவில்தான் மிக அதிகமான இலங்கைத் தமிழர்கள் - அதாவது மூன்று லட்சம் வரையில் வாழ்கின்றனர். அதன் காரணமாக ஏராளமான வியாபார ஸ்தாபனங்களும் உருவாகியுள்ளன. இந்த வியாபார நிறுவனங்களில் கணிசமான கோவில்களும், பத்திரிகைகளும் கூட அடங்கும். தாயகத்தில் தப்பித்தவறி ஒருமுறை தன்னும் பத்திரிகைகளைக் கையில் எடுக்காதவர்கள் கூட, இங்கு பத்திரிகை நடாத்துபவர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் பவனி வருகிறார்கள். இங்கு நடாத்தப்படும் வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் பல ‘அறிஞர்களும்’, ‘ஆய்வாளர்களும்’ செய்து வரும் ‘ஆய்வுகள்’ வரலாற்றில் நாம் முன்னொருபோதும் கண்டு கேட்டு அனுபவித்திருக்காதவை.
‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்றொரு பழமொழியும் தமிழர்களிடம் உண்டு. (முன்னைய காலங்களில் வாழ்ந்த சில தமிழ் விற்பன்னர்கள் தமது அனுபவங்களை பழமொழிகளாகச் சொல்லப்போய், அது இன்றைய ‘பல்துறை விற்பன்னர்களுக்கும்’ கனகச்சிதமாகப் பொருந்துவதற்கு நாம் பொறுப்பல்ல!) அதுபோல கனடாவிலும் பல இலுப்பைப்பூ சர்க்கரைகள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் என்ற தலைப்பாகையைக் கட்டிக்கொண்டு பவனி வருவதை, இங்குள்ள தமிழ் மக்கள் அங்கதச் சுவையுடன் கண்டு களித்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த இலுப்பைப்பூ சர்க்கரைகள் உருவானதிற்கு அடிப்படைக் காரணிகளாக அமைந்தது, இலங்கையில் உருவான யுத்தமும், அதை முன்னின்று நடாத்திய புலிகள் இயக்கமும் தான். கனடாவில் வாழ்கின்ற தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் மிகவும் கஸ்டப்பட்டு உழைத்து வாழும் மக்களாவர். சிலர் தாம் வாங்கிய வீடுகளுக்கு மாதாந்த கட்டுப்பணம் செலுத்துவதற்காகவும், தமது குடும்பத்தைப் பராமரிப்பதற்காகவும், தாயகத்தில் உள்ள உறவினாகளுக்கு பணம் அனுப்புவதற்காகவும் இரண்டு, மூன்று வேலைகளைக் கூட செய்துவருகின்றனர். ஆனால் அதேவேளையில், எந்தவிதமான வேலைகளிலும் ஈடுபடாத சிலர், தமது வயிறுகளை வளர்ப்பதுடன், மிகவும் விலையுயர்ந்த கார்களையும், வீடுகளையும் வாங்கி வைத்திருக்கின்றனர்.
அவர்களை வரிசைப்படுத்தினால் முதல்வரிசையில் இருப்பவர்கள், புலிகளுக்கு பொதுமக்களிடமிருந்து தயவாகவோ, மிரட்டியோ பணம் பறிக்கும் ஆசாமிகள். இரண்டாவது நிலையில் இருப்பவர்கள் கள்ள கடன் அட்டைகள் மூலம் வங்கிகளில் பணம் சுருட்டும் கில்லாடிகள். இவர்களும் அநேகமாக புலிகளின் ஆதரவும், ஆசீர்வாதமும், ஆலோசனையும் பெற்றவர்கள் தான். அடுத்த நிலையில் இருப்பவர்கள் சுமார் 50 வரையிலான கோவில் நடாத்துபவர்களும், கிட்டத்தட்ட அதேயளவு ஊடகங்கள் நடாத்துபவர்களும் எனச் சொல்லலாம். இவர்களில் கோவில் நடாத்துபவர்கள் அனைவரும் புலி விசுவாசிகள் எனச் சொல்ல முடியாவிட்டாலும், அவர்கள் தமது சுவாமிகளுக்கு கிள்ளித் தெளிக்காவிட்டாலும், புலிச் சுவாமிகளுக்கு அள்ளித் தெளித்தே ஆக வேண்டும்.
ஆனால் ஊடகங்கள் நடாத்துபவர்களின் நோக்கம் மக்களுக்கு உண்மையான தகவல்களைச் சொல்வதல்ல. அவர்களது ஒரே நோக்கம், தமது ஊடகங்களில் இங்குள்ள வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்களை பெருந்தொகையில் பெற்றுப் பிரசுரிப்பதின் மூலம், நிறையப் பணம் சம்பாதிப்பதுதான். இவர்களுடைய ஊடகங்களில் தமது விளம்பரங்களைச் செய்துதான் வியாபாரம் பண்ண வேண்டும் என்ற எந்த அவசர தேவையும் இங்குள்ள வர்த்தகர்களுக்கு இல்லை. ஆனால் விளம்பரம் கொடுக்காவிட்டால், தமக்கு ஏதாவது ஒரு வழியில் ஆபத்து வரலாம் என்ற, எச்சரிக்கை உணர்வு வர்த்தகர்களுக்கு எப்பொழுதும் உண்டு. ஏனெனில் இந்த ஊடக மாபியாக்கள் எப்பொழுதும் தம்மை பாசிசப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் போலக் காட்டிக் கொள்வர்.
அவர்களது பத்திரிகைகளின் ஒரே தாரக மந்திரம், இலங்கை அரச எதிர்ப்பும், புலி புகழ்பாடலும்தான். அதோடு கொஞ்சம் காரம் மணம் குணம் சேர்ப்பதற்காக துரோகிகள், ஒட்டுக்குழுக்கள், அரச அடிவருடிகள் பற்றியும் பேசப்படும். இந்தச் சூழ்நிலையில் வர்த்தகர் ஒருவர் இந்த ஊடக ‘தர்மபவான்களுக்கு’ விளம்பரம் கொடுக்க மறுத்தால், அவர் புலிகளின் கோபத்துக்கும், அதன் காரணமாக மறைமுக தண்டனைகளுக்கும் உள்ளாகலாம் என்ற அச்சம் வர்த்தகர்களுக்கு உண்டு. எனவே புலிகள் இலங்கையில் அழிந்துவிட்ட இன்றைய சூழலிலும் கூட, இங்குள்ள வர்த்தகர்களில் பலர் இங்குள்ள புலிகளின் அடிவருடிகளுக்கு பயந்துதான் வாழ்கின்றனர். (வர்த்தகர்களிலும் பலர், தமது வியாபாரத்தை புலிகள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் நடாத்துவதுடன், புலிகளின் விசுவாசிகளாகவும் இருப்பது இரகசியமல்ல)
ஆனால் இலங்கை அரசு கடந்த வருடம்(2009) நவம்பர் மாதம் 18ம் திகதியுடன் புலிகளை முற்றுமுழுதாக ஒழித்துக் கட்டியதின் பின்னர், கனடாவில் புலிகளுடன் ஒட்டி நின்று பணம் சம்பாதித்து வந்த பல்வேறு குழுக்களுக்கிடையில் பல குழப்பங்களும், ஊசலாட்டங்களும் ஏற்பட ஆரம்பித்தன. சில வர்த்தகர்கள் நேரடியாக இலங்கை சென்று, அங்கு வடபகுதியில் தமது முதலீடுகளைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களைச் சந்தித்து, தமது நல்லெண்ணத்தினை வெளிப்படுத்தும் முகமாக, இடம்பெயர்;ந்தவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கென ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தினையும் வழங்கிவிட்டு வந்தனர். இந்த செய்தியைப் படங்களுடன் பிரசுரித்த ‘உதயன்’ என்ற பத்திரிகையின் காரியாலயத்தை புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுவோர் தாக்கி சேதப்படுத்தினர். (உதயன் பத்திரிகையின் உரிமையாளரும், அதன் ஆசிரியருமான ஆர்.என்.லோகேந்திரலிங்கம் கூட புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதால், இந்த தாக்குதலுக்கான காரணம், இங்குள்ள சில தமிழ் பத்திரிகைகளுக்கிடையிலான வியாபாரப் போட்டியே எனவும் கூறப்படுகிறது)
இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், கனடாவில் வாழ்கின்ற பெரும்பான்மையான தமிழ் மக்கள் மத்தியில், புலிகள் பற்றி மிகைப்படுத்தப்பட்ட முறையில் கட்டியெழுப்பபட்டிருந்த பிம்பம் நொருங்கி விழுந்ததுடன், மக்கள் துணிகரமாகவும், வெளிப்படையாகவும் முன்வந்து, புலிகளை விமர்ச்சிக்க ஆரம்பித்தனர். அதுமாத்திரமின்றி அவர்கள் புலிகளுக்காக தொடர்ந்து பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த, தமிழ் ஊடகங்களையும் கடுமையாக சாட ஆரம்பித்தனர். அதன் காரணமாக இங்குள்ள பெரும்பாலான ஊடகங்கள் தமது தந்திரங்களை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. புலிகளுக்காக நேரடியாக பிரச்சாரம் செய்து, வால் பிடித்து வந்த சில பத்திரிகைகள், தமது வெளியீடுகளை நிறுத்திக் கொண்டன. அதேவேளையில் புலிகளின் கொள்கைகளை முன்னெடுக்கும் நோக்கத்துடன், சில புதிய புதிய பத்திரிகைகள் முளைக்க ஆரம்பித்துள்ளன.
இதில் ஒன்று ‘சுவிஸ் முரளி’ என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ‘நாளை’ என்ற பத்திரிகை. முரளி (நேற்றைய முரளி) சுவிஸ்லாந்தில் புலிகளின் பொறுப்பாளராக இருந்த காலத்தில் செய்த அட்டகாசங்களை, முழுப் புலம்பெயர் தமிழ் சமூகமும் நன்கு அறியும். அதுமாத்திரமல்ல புலம்பெயர் மண்ணில் மாற்றுக் கருத்தை துணிவுடன் முன்வைத்த ஊடகவியலாளர் சபாலிங்கம் பிரான்சில் அவரது வீட்டில் வைத்து, அவரது மனைவியின் முன்னாலேயே புலிக் கொலைகாரர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன், இன்று வரையும் முரளியின் பெயரும், புலம்பெயர் ஜனநாயக சக்திகளால் பிரஸ்தாபிக்கட்டு வருவதும் நின்றபாடாக இல்லை. இவரது பல முறைகேடுகள் குறித்து இவரது போட்டியாளர்கள் புலிகளின் தலைமைக்கு தகவல் கொடுத்ததின் பேரில், அவரை விசாரிப்பதற்காக புலித் தலைமை வன்னிக்கு அழைத்த போது, வருவதாகக்குறி, சிங்கப்பூர்வரை சென்று புலிகளுக்கு தண்ணி காட்டிவிட்டு, கனடாவுக்கு ஓடிவந்தார். புலிகள் அவரைக் கண்டால் தமக்கு தகவல் தரும்படி கூட, இணையத்தளங்களில் விளம்பரம் செய்தனர். ஆனால் முரளி (இன்றைய முரளி) பின்னர் எப்படியோ புலிகளுடன் சமரசம் செய்துகொண்டு, இன்று ‘மாற்றுக் கருத்து’ சொல்வதற்கென ‘நாளை’ பத்திரிகையையும் ஆரம்பித்துவிட்டார், சூழலுக்கேற்ப தமது நிறங்களை மாற்றிக் கொள்ளும் மிருகங்களைப் போல. (எனவே ‘நேற்று இன்று நாளை’ என்பதே இவரது பத்திரிகைக்கு பொருத்தமான பெயர்.)
இன்னொருவர் யஹ்யாகான் அல்லது ஜான் மாஸ்டர் என்பவர். இவர் மே18 என்ற இயக்கம் ஒன்றை ஆரம்பித்து, அதன் சார்பாக ‘வியூகம்’ என்றொரு பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறார். சில கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றார். புலிகளின் எச்சசொச்சங்கள் சிலரால் தற்பொழுது புனருருவாக்கம் செய்யப்பட்டுள்ள ‘தேடகம்’ என்ற அமைப்பின் அனுசரணையுடன் ஜானின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவரது மே18 இயக்கம் என்பது, மே 18 என்பது முடிவல்ல தொடக்கம் என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதன் அர்த்தம் புலிகள் மே 18 உடன் அழிந்துபோய் விடவில்லை, புலிகளது இயக்கம் தொடர்கிறது என்ற செய்தியை மக்களுக்குச் சொல்ல முயற்சிக்கிறது. இவ்வளவுக்கும் ஜான் தன்னை ஒரு மார்க்சிசவாதியாகக் காட்டிக்கொள்ளவும் முயற்சிக்கிறார். (இவரைப்போலவே இலங்கையிலிருந்து நவ சம சமாஜக்கட்சியும் புதிய ஜனநாயகக்கட்சியும், புலம்பெயர் நாடுகளிலிருந்து இணையத்தளங்களின் ஊடாக கொலைகார புலிகளையும் தமிழ் தேசியத்தையும் ஆதரிப்பவர்களும், தம்மை மார்க்சியவாதிகளாகவும் கூறிக் கொள்கின்ற அவலம் நிகழ்கின்றது. இந்த கட்சிகளினதும் அறிக்கைகளையும் இணையத்தளங்களின் செய்திகளையும் புலி ஊடகங்கள் முந்தியடித்துக்கொண்டு மறுபிரசுரம் செய்கின்றன.)
ஜான் முன்பு அங்கம் வகித்த ‘தீப்பொறி’ இயக்கம் புலிகளால் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டதுடன், அதன் முக்கிய தலைவராக இருந்த கேசவன் அல்லது கோவிந்தன் எனப்படும் நோபேர்ட் புலிகளால் கைதுசெய்யப்பட்டு, இரண்டு வருடங்களாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவர். கேசவன் கொலை செய்யப்பட்டதற்கு புலிகளுக்கு நன்றி செலுத்தவோ என்னவோ, ஜான் புலிகளுக்கு சார்பாக மே18 இயக்கத்தை ஆரம்பித்து, வியூகத்தை வெளியிடுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு உள்ள சூடு சொரணை கூட இல்லாமல், ஜான் போன்றவர்கள் தமது இயக்கத்தையும், அதன் தலைவனையும் அழித்தவனுக்கு ஆலவட்டம் பிடிப்பதை, உதைத்த காலை நக்கும் உவமையுடன்தான் ஒப்பிடத் தோன்றுகிறது. இவர்களது ஊடக முயற்சி எதற்காக, எப்படி இருக்கும் என்பதை நாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
கனடாவில் செயற்படும் தமிழ் வானொலிகளைப் பற்றி விசேடமாகக் குறிப்பிடுவது அவசியம். இங்கு வெளியாகும் அத்தனை பத்திரிகைகளும் போலவே, வானொலிகளும் புலிப் பாசிசவாதிகளின் ஊது குழல்களாகவே செயற்பட்டு வந்துள்ளன. CMR (Canadian Multicultural Radio) புலிகளினால் நேரடியாகவே நடாத்தப்படுவது. ஏனைய இரண்டு வானொலிகளைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் ஓரளவு நடுநிலைமையாகச் செயல்பட்டது எனக் கூறக்கூடிய ஒரு வானொலி இளையபாரதி என்பவர் நடாத்துகின்ற கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகும். (இந்த இளைய பாரதியை முன்பொரு தடவை புலிகள் சுட்டுப் படுகாயப்படுத்திய சம்பவமும் நடந்தது.) இவ்வளவுக்கும் இளையபாரதி தீவிரமான ஒரு புலி எதிர்ப்பாளர் அல்ல. எல்லோரையும் போலவே இளையபாரதியும் புலிகளைத் தாஜா செய்தே தனது வானொலி வியாபாரத்தை நடாத்த முயற்சித்தார். ஆனால் கொஞ்சமாவது ஊடக தர்மத்தையும் அவர் கடைப்பிடிக்க முற்பட்ட போது, ஏகப்பிரதிநிதித்துவம் பேசிய பாசிசப் புலிகளால் அவரைச் சகிக்க முடியாமல் போய்விட்டது.
ஆனாலும் இளையபாரதியின் வானொலியில் கனடிய உலகச் செய்திகள் வாசிக்கும் தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் என்பவரைத்தான் எந்த மனித வகையறைக்குள் சேர்ப்பது என்பது தெரியாமல் இருக்கின்றது. கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்பது போல, இவரது நிலைப்பாட்டையும் வகுக்க வேண்டியுள்ளது. ஆனாலும் மிகவும் எச்சரிக்கையுடன் தான் அதைச் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த கிருஸ்ணலிங்கம் புலிகள் கடந்த வருடம் அழிக்கப்படுவதற்கு முன், இளையபாரதியின் வானொலியில் புலிகளுக்காக செய்து வந்த பிரச்சாரம் கொஞ்ச நஞ்சமல்ல. புலிகளை எதிர்த்தவர்களை வாய் கூசாமல் துரோகிகள் என்று தூற்றவும் அவர் தயங்கியது கிடையாது. (இப்பொழுது தான் முன்பு புலிகளுக்காக வக்காலத்து வாங்கியது கிடையாது, அல்லது நிர்ப்பந்தம் காரணமாக அவ்வாறு செய்ய நேர்ந்ததாக கதை அளந்து வருகிறார்) செய்தி வாசிக்கும் போது சொல்லும் திகதியை கூட நவம்பர் மாதம் வந்தால், அவர் அதை நவம்பர் என்று சொல்வதில்லை. மாவீரர் மாதம் என்றுதான் ‘அர்த்தபுஸ்டியுடன்’ சொல்வார். அவ்வளவு தூரம் புலிப் பித்தேறி நின்ற ஒருவர். சென்ற வருடம் வன்னி யுத்த இறுதி நாட்களின் போது, ரொறன்ரோ நகர வீதிகளில் புலி ஆதரவாளர்கள் செய்த அட்டகாசங்களை நேரடியாகச் சென்று , பிரத்தியேகமாக வர்ணணை செய்தவர். புலி ஆதரவாளர்கள் ஒட்டவாவுக்கும், வாஷிங்டனுக்கும் காவடி தூக்கிய போது, தானும் கூடவே சென்று செடில் பிடித்தவர்.
கிருஸ்ணலிங்கம் இப்பொழுது இளையபாரதியின் வானொலியில் தனது கடந்த காலத்து புலிச் சித்து விளையாட்டுகளுக்கு பிராயச்சித்தம் செய்வது போல, ‘எதிர்முனை’ என்றொரு நிகழ்ச்சியை ஆரம்பித்து நடாத்த ஆரம்பித்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் வந்து புலிகளுக்கு எதிரான விமர்சனங்களைக் கொட்டித் தீர்ப்பதற்கும் ஓரளவு ‘ஜனநாயக’ அனுமதி வழங்கியிருக்கிறார். ஆனால் அவர் தான் மட்டும் பழைய நிலைப்பாட்டில் இருந்து மாறாமல், அழுங்குப் பிடியில் தந்திரோபாயமாக இருந்து வருகிறார். அவர் இன்னமும் பிரபாகரனை தேசியத் தலைவர் எனப் பயபக்தியுடன் நேசித்துத்தான் விளிக்கிறார். புலிகளின் தவறான தனிநாட்டுக் கோரிக்கையையோ, அவர்கள் கடந்த காலத்தில் மனித குலத்துக்கு எதிராக நடாத்திய கொடுமைகளையோ பற்றி, அவர் மூச்சும் விடுவதில்லை. புலிகளின் புலம்பெயர் பினாமிகளால் தொடங்கியுள்ள ‘கடல் கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற, அடுத்த மோசடி செப்பிடு வித்தைக்கும் அவர் ஆதரவுதான். அவருடைய பிரச்சினை எல்லாம் கடந்த காலத்தில் கனடாவில் புலிகளின் பெயரால் கோடி கோடியாகப் பணம் சம்பாதித்தவர்கள் மற்றும் போட்டி வானொலிகளில் அரசியல் ஆய்வுகள் செய்பவர்கள் பற்றியது மட்டுமே. இது என்ன வகையான வயிற்றெரிச்சல் என்பதைப் புரிந்து கொள்வதில் அதிகம் சிரமம் இருக்க முடியாது.
இந்த கிருஸ்ணலிங்கம், இன்னொரு ‘ஊடக தர்மத்தையும்’ தனது நிகழ்ச்சியினூடாக நிலைநாட்டி வருகின்றார். அதாவது கருத்துச் சொல்ல வரும் நேயர்கள், தன்மீதோ அல்லது வானொலி உரிமையாளர் இளைபாரதி மீதோ எவ்வித விமர்சனங்களும் முன்வைக்கக்கூடாது என முன் நிபந்தனை விதித்து விடுகிறார். யாராவது அதை மீறி அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் இல்லாவிட்டாலும், அவர்களது வானொலியைப் பற்றி ஏதாவது சொல்ல முனைந்தால், அவர்களது தொலைபேசித் தொடர்பை உடனும் துண்டித்து விடுகிறார். புலிகளுக்கு எதிரான விமர்சனங்களை யாராவது காட்டமாக முன்வைக்க முயன்றாலும்கூட, அவர்களுக்கும் நேரத்தை காரணம் காட்டி தடை போட்டு விடுவார்.
இது ஒருபுறமிருக்க ‘கீதவாணி’ என்றொரு இன்னொரு வானொலியை ராஜ்குமார் என்பவர் நடாத்தி வருகின்றார். இதை ஒரு வானொலி என்று சொல்வதே அபத்தம். யாழ்ப்பாணத்தில் இரண்டு வீட்டு வேலிகளுக்குள்ளால் கதைக்கப்படும் பாணியிலும், கள்ளுக்கடையில் பேசப்படும் மொழி நடையிலும் இதன் நிகழ்ச்சிகள் அமைவதுண்டு. இந்த வானொலியில் தான், கருணாநிதி, ஆனந்தசங்கரி போன்ற துரோககிள் கொல்லப்பட வேண்டும் என்ற பாணியில் கடந்த வருடம் ஏப்ரல் - மே மாதங்களில் சொல்லாடல்கள் பவனி வந்தன. இந்த வானொலியில் கூட, அண்மைக்காலங்களாக புலிகளுக்கு எதிராக சில விமர்சனங்கள் வருவதைக் காண முடிகிறது.
‘சுடலை ஞானம்’ என்று சிலர் சொல்வது கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கிருஸ்ணலிங்கமும் சரி, ‘கீதவாணி’ ராஜ்குமாரும் சரி, பத்திரிகை ஆரம்பித்திருக்கும் சுவிஸ் முரளியும் சரி, கடந்த காலத்தில் புலிகளின் எடுபிடிகளாக இருந்து கொண்டு, மற்றவர்களை துரோகிகள் என்றும், ஒட்டுக்குழுக்கள் என்று தூற்றியதை மறந்து, இனிமேல் யாரையும் ‘துரோகி’ என அழைக்கக்கூடாது என பேசியும், எழுதியும் வரும் விந்தையையும் செய்கிறார்கள். இது உண்மையான மாற்றமா? அல்லது சாத்தான்கள் வேதம் ஓதுவது போன்ற கதையா? ஏன இவர்களை நன்கு அறிந்த மக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
இவர்கள் எல்லோரும் தமது கடந்தகால புலி விசுவாச நடவடிக்கைகள் குறித்து யாரும் கேள்வி எழுப்பினால், “என்ன செய்வது, அப்பொழுதெல்லாம் புலிகளால் எங்களுக்கு பயங்கர மிரட்டல் இருந்தது. நாம் எமது எண்ணப்படி நடந்திருந்தால், இன்று உங்களுடன் கதைக்கவே இருந்திருக்கமாட்டோம்” எனவும் நாக்கூசாமல் பொய் சொல்லி மழுப்பி விடுகிறார்கள். இவர்கள் வாழ்வது வன்னியிலல்ல, கனடாவில் என்பதும், இங்கு புலிகள் இவர்களை பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது என்பது தெரிந்திருந்தும், மேற்கண்டவாறு மக்களின் காதுகளில் பூச்சுற்றுகிறார்கள். இவர்கள் என்னதான் சாக்குப் போக்குகள் சொன்னாலும், புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து துப்பாக்கி தூக்கி நின்று மக்களுக்கு எதிராக அட்டூழியம் செய்தவாகளுக்கு ஈடாகவே, இந்த ஊடக மாபியாக்களும் கடந்த காலத்தில், கனடிய தமிழ் மக்களுக்கு எதிராக தமது பேனாக்களையும், ஒலிபரப்புக் கருவிகளையும் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பதை வரலாற்றிலிருந்து ஒருபோதும் மறைத்துவிட முடியாது.
அதுவரை இந்த பிழைக்கத் தெரிந்த ‘மனிதர்களை’யிட்டு, மக்கள்தான் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். வேறு வழியில்லை.

வெள்ளி, 21 மே, 2010
யாழ். மாநகரசபைக்கு நடமாடும் கழிப்பறை
தனியார் வர்த்தக நிறுவனமான எக்ஸ்போ லங்காவினால் யாழ். மாநகரசபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடமாடும் கழிப்பறைத் தொகுதியினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் (21) பார்வையிட்டார்.
அவசிய தேவைகளின்போது பொது இடங்களில் மிக அத்தியாவசியமாகத் தேவைப்படும் நடமாடும் கழிப்பறைத் தொகுதியானது யாழ். மாநகர முதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களின் தொடர் முயற்சிகளையும் வேண்டுகோளையும் அடுத்து மேற்படி வர்த்தக நிறுவனத்தினால் யாழ். மாநகர சபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த யாழ். மாநகர முதல்வர் அவர்கள் மிகப்பெறுமதி வாய்ந்த இந்நடமாடும் கழிப்பறைத் தொகுதியினை அன்பளிப்புச் செய்த எக்ஸ்போ லங்கா நிறுவனத்தினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டதுடன் எதிர்வரும் நல்லூர் பெருந்திருவிழா உட்பட முக்கியமான நிகழ்வுகள் மற்றும் வைபவங்களின்போது இந்நடமாடும் கழிப்பறைத்தொகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஈடுபடுத்தப்படும் எனத்தெரிவித்தார்.
ஆண்களுக்கும் பெண்களுக்குமென தனித்தனியாக தலா நான்கு கழிப்பறைகள் என்ற வகையில் மொத்தம் எட்டுகழிப்பறைத் தொகுதிகளைக் கொண்ட இந்நடமாடும் தொகுதியானது வௌவேறான இரு குளியலறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்

குடுலால், ராஜாப்தீன், பஹ்யா, திகா பைஸர் ஆகியபாதாள ் கோஷ்டியினர் வெளிநாடுகளில் அரசியல் புகலிடம்
கொலை மற்றும் கப்பம்கோரல் போன்ற குற்றச்சாட்டுக்களின்பேரில் தேடப்பட்டுவரும் பாதாள உலகக் கோஷ்டியினர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று அங்கு அவர்கள் அரசியல் புகலிடம் கோரிவருவதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிய குடுலால், ராஜாப்தீன், பஹ்யா, திகா பைஸர் ஆகியோர் இவ்வாறு வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோருவதாக தெரிவிக்கும் பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள், இவர்களில் பிரதியமைச்சர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தவர் என்று நன்கறியப்பட்ட குடுலால் என்பவர் இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறி பிரிட்டனில் அரசியல் புகலிடம் கோரியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் இக்குற்றவாளிகள் தற்போது இந்தியா, பிரிட்டன், டுபாய் போன்ற நாடுகளில் தங்கியிருப்பதாகவும், இவர்களைக் கைதுசெய்வதில் சிரமம் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் பாதாள உலகக் கோஷ்டியினரின் செயற்பாட்டை முடக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எனினும், நாட்டைவிட்டு சென்ற குற்றவாளிகள் சிலர் பொய்யான தகவல்களை வழங்கி அரசியல் புகலிடம் கோரியிருப்பதாகவும் பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இன்று ராஜீவ் காந்தியின் 19ஆவது நினைவு தினமாகும்.

அன்று நீங்கள் தங்கத் தாம்பாளத்தில் இணைந்த வடகிழக்கு மாகான அரசு தந்தீர்கள் அதை கோடரிக்காம்புகள் குதறித்தள்ளி விட்டனர். ஈழத்தமிழ் இனத்தின் உண்மையான ஒரே நண்பன் நீங்கள் தான் என்பதை வரலாறு காட்டி விட்டது
நித்யானந்தா பிடியில் மனைவி, மகன்கள்-மீட்டுத் தருமாறு கணவர் கண்ணீர்
ஆசிரமத்துக்கு சகாய ஜார்ஜ் சென்றார். ஆனால், ஆசிரம நிர்வாகிகளும் நித்யானந்தாவின் சீடர்களும் அவரை அனுமதிக்கவில்லை.
இதனால் அவர் ஓஷோ மணியைத் தேடி சென்னை, சேலம் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார். அங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியே பல நாட்கள் அலைந்து திரிந்ததால் அவர் வேதனை அடைந்த ஜார்ஜ் இன்று நெல்லை போலீஸ் கமிஷனர் அபஸ் குமார் சிங்கை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அதில் தனது மனைவியை மூளை சலவை செய்து அழைத்து சென்ற ஓஷோ மணி, மற்றும் நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்து மனைவி, மகன்களை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.
சகாய ஜார்ஜ் ஏற்கனவே 2008ம் ஆண்டும் இதுகுறித்து புகார் செய்ததாகவும், ஆனால் போலீசார் நடவடிக்கை எடு்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பதிவு செய்தவர்: நாஞ்சில் குமரன்
பதிவு செய்தது: 21 May 2010 8:10 pm
இந்த பழ வியாபாரி தந்து பொண்டாட்டி பிள்ளைகளை வைத்து சாப்பாடு போட முடியாத ஒரு துப்புகெட்ட நாய், இல்லா விட்டால் நாலு வருடம் அங்கே போய் தின்பதை இவன் நினைத்தால் தடுத்திருக்கலாம், இவன் ஒரு சோம்பேறி இவனை காயடிக்க வேண்டும் அது தான் இவனுக்கு தண்டனை
காணிகளை அபகரித்துள்ள சிங்கள மக்களை வெளியேற்றுமாறு
திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேசத்திற்கு உட்பட்ட படுகாடு, முதலைமடு பகுதிகளில் பன்னெடுங்காலமாக தமிழர்களும், முஸ்லிம்களும் விவசாயத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். அம்மக்களால் பல வருடகாலமாக விவசாயம் செய்கைபண்ணப்பட்டுவந்த வயல் காணிகளை அப்பிரதேசத்தில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மத குரு ஒருவரினதும், பெரும்பான்மை அரசியல்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரினதும் அனுசரணையுடன் தமிழ் முஸ்லிம்களின் காணிகளில் அத்துமீறி விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிங்கள மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு திருகோணமலை மாவட்ட செயலாளர் மூதூர் மற்றும் சேருநுவர பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலாளர் தலமையில் மூதூர் மற்றும் சேருநுவர பிரதேச செயலாளர்களின் பங்குபற்றலுடன் சேருநுவர பிரதேச செயலகத்தில் உயர்மட்ட சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தங்களது பாரம்பரிய காணிகளில் சிங்கள மக்கள் அத்துமீறி விவசாய செய்கையில் ஈடுபடுவதாகவும் இவர்களை வெளியேற்றி தங்களின் காணிகளை பெற்றுத்தறுமாறு திருகோணமலை மாவட்ட செயலாளரிடம் வேண்டியிருந்தனர்.
இதற்கிணங்க திருகோணமலை மாவட்ட செயலாளர் இன்று நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பிலேயே அத்துமீறி தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரித்துள்ள சிங்கள மக்களை வெளியேற்றுமாறு கட்டளை பிறப்பித்துள்ளதுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவைப்படின் பொலிஸாரின் உதவியைப் பெறுமாறும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவை இன்று நீதி மன்றத்தில்
யாழ்ப்பாண மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவை இன்று நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் மேயரின் செயலாளரான அவரின் கணவர் பற்குணராசாவை இன்று பகல் 12 மணிக்குள் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாநகர துணை மேயர் றீகன், சாவகச்சேரி நீதவானை அச்சுறுத்தியதாகக் குற்றஞ் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்த வேளையில் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு விளம்பரம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த விளம்பரப் பிரசுரிப்பில் முக்கியபங்கை வகித்ததாகக் கூறப்படும் மேயரின் செயலாளரான அவரின் கணவர் பற்குணராசாவை இன்று பகல் 12 மணிக்குள் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த விளம்பரம் நீதிமன்றத்தை அவம திப்பதாக அமைந்துள்ளதாகக் கூறி நீதிமன் றம் மறுப்பு விளம்பரத்தைப் பிரசுரிக்குமாறு உத்தரவிட்டது. எனினும் பிரசுரிக்கப்பட்ட விளம்பரம் திருப்தி தரவில்லை எனக் கூறிய நீதிமன்றம் மீண்டும் மறுப்பு விளம்பரத்தைப் பிரசுரிக்குமாறு மேயருக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த விளம்பரம் தொடர்பாக விசார ணைகளை மேற்கொண்ட பொலிஸார் விளம்பரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்ற மாநகர ஆணையாளரின் வாக்கு மூலத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
அத்துடன் இந்த விளம்பரப் பிரசுரிப்புத் தொடர்பில் மேயர் அறிந்திருந்ததாகவும் அதேநேரம் அவரின் கணவரும் மேயரின் செயலாளருமான பற்குணராசாவே விளம்பர பிரசுரிப்பில் முக்கிய பங்கை வகித்ததாகப் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந் தனர்.
யாழ் ஒரு வாரத்துக்கான திரைப்பட விழாவொன்றை விரைவில் நடத்த
யாழ் மக்களின் மனநிலையில்; ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அங்கு ஒரு வாரத்துக்கான திரைப்பட விழாவொன்றை விரைவில் நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ் கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் மஹிந்த ஹத்துசிங்கவின் பணிப்பின்பேரில் இதற்கான நடவடிக்கைகளை யாழ் பாதுகாப்புத் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றது. இத்திரைப்பட விழாவில் தென்னிந்திய பழைய தமிழ் திரைப்படங்களும் வெற்றிப் படங்களும் காண்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் முன்னர் 16 திரையரங்குகள் இருந்தபோதும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அவையாவும் அழிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக திரையரங்குகளில் ஒன்றுகூடி படம் பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை இழந்தனர்.
இஸ்லாமிய விரோத வீடியோக்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி யூ டியூப் பேஸ்புக் இணையத் தளத்தை பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: இஸ்லாமிய விரோத வீடியோக்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி யூ டியூப் இணையத் தளத்துக்கு பாகிஸ்தான் அரசு
தடை விதித்துள்ளது. அந்த இணையத் தளத்தை பாகி்ஸ்தானில் பார்க்க முடியாதபடி முடக்கியுள்ளது.
நேற்று தான் பேஸ்புக் இணையத் தளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது. அந்த இணையத் தளத்தின் சில பக்கங்களில் நபிகள் நாயகம் குறி்த்த புகைப்படங்களை சமர்பிக்குமாறு கூறி சிலர் விஷமச் செயலில் ஈடுபட்டனர்.
இதை எதிர்த்து சில வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்ந்ததையடுத்து பேஸ்புக் இணையத் தளத்தை வரும் 31ம் தேதி வரை முடக்குமாறு நீதிமன்றம்
உத்தரவிட்டது. இதையடுத்து அந்த இணையத் தளத்துக்கு பாகிஸ்தான் தடை விதித்தது. தனது இணையத்தில் இடம் பெற்ற அந்தப் பக்கங்கள் குறித்து விசாரணை
நடத்தி வருவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.
இந் நிலையில் யூ டியூபும் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொலைத்தொடர்புத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த இரு இணையத் தளத்தின் உரிமையாளர்களும் பாகிஸ்தான் அரசை தொடர்பு கொண்டு பேசி, மத நம்பிக்கைகளை புண்படுத்தாத வகையில் தளத்தை நடத்த முன்வரலாம் என்று தொலைத் தொடர்புத்துறை கூறியுள்ளது.
இந்த இரு இணையத் தளங்கள் தவிர பிளிக்கர், என்சைக்ளோபீடியா உள்ளிட்ட மேலும் 450 இணையத் தளங்களையும் பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.
யூ டியூப் இணையத்தை 2008ம் ஆண்டிலும் ஒருமுறை பாகிஸ்தான் முட்க்கியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் 2 கோடி பேர் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
சீனாவல் பேஸ்புக் மற்றும் யூ டியூப் இணையத் தளங்களுக்கு நிரந்தரமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று தான் பேஸ்புக் இணையத் தளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது. அந்த இணையத் தளத்தின் சில பக்கங்களில் நபிகள் நாயகம் குறி்த்த புகைப்படங்களை சமர்பிக்குமாறு கூறி சிலர் விஷமச் செயலில் ஈடுபட்டனர்.
இதை எதிர்த்து சில வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்ந்ததையடுத்து பேஸ்புக் இணையத் தளத்தை வரும் 31ம் தேதி வரை முடக்குமாறு நீதிமன்றம்
இந் நிலையில் யூ டியூபும் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொலைத்தொடர்புத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த இரு இணையத் தளத்தின் உரிமையாளர்களும் பாகிஸ்தான் அரசை தொடர்பு கொண்டு பேசி, மத நம்பிக்கைகளை புண்படுத்தாத வகையில் தளத்தை நடத்த முன்வரலாம் என்று தொலைத் தொடர்புத்துறை கூறியுள்ளது.
இந்த இரு இணையத் தளங்கள் தவிர பிளிக்கர், என்சைக்ளோபீடியா உள்ளிட்ட மேலும் 450 இணையத் தளங்களையும் பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.
யூ டியூப் இணையத்தை 2008ம் ஆண்டிலும் ஒருமுறை பாகிஸ்தான் முட்க்கியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் 2 கோடி பேர் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
சீனாவல் பேஸ்புக் மற்றும் யூ டியூப் இணையத் தளங்களுக்கு நிரந்தரமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புலிப் போராளிகள சுமார் 20 ஜோடிகளுக்கு திருமணம
முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சிலருக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிடுவதாக அவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பாக இருக்கும் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் சுமார் 20 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க பி.பி.சி.க்கு தெரிவித்திருக்கிறார். அவர்களுடைய உறவுகள் யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் வாய் மூல உறுதிமொழி மூலம் திருமணம் செய்திருந்ததாகவும் ஆனால், உத்தியோகபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் அநேகமானோர் தமது ஜோடிகளை திருமணம் செய்ய விரும்புவதாகவும் ஆயினும் இருதரப்பினரதும் பெற்றோர்களினதும் இணக்கத்தை அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆயினும், சில ஜோடிகளின் நிலைமை மாற்றமடைந்திருக்கலாமெனவும் பெண்ணொருவர் இனிமேலும் அந்த மனிதரை நான் விரும்பவில்லையெனக் கூறக்கூடுமெனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், ஆண்களும் அவ்வாறு கூறக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் முடிவில் சுமார் 10 ஆயிரம் முன்னாள் போராளிகள் முகாம்கள் அல்லது புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டனர். ஜோடிகள் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் கிழமைக்கு ஒருதடவை ஒருவரையொருவர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக பிரிகேடியர் ரணசிங்க கூறியுள்ளார். அவர்கள் சட்டரீதியாகத் திருமணம் செய்த பின் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து குடும்பங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்ல முடியும். அவர்களில் சிலருக்குப் பிள்ளைகள் உள்ளனர். சிறியளவு தொகையினரே தற்போது வழக்கு விசாரணைக்காக வைக்கப்படுவார்களெனவும் அநேகமானோர் ஒருவருடத்தின் பின் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
____________________________________________________________________________________________
தமிழகத்தில் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு அதிகரித்திருப்பதால் மின் தடை நேர
தமிழகத்தில் தற்போது காற்றாலை மூலம் மின்உற்பத்தி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அக்னி வெயில் இன்னும் நான்கு நாளில் முடியப் போகிற நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல காற்று வீசதுவங்கியுள்ளது.
காற்று அதிகமாக வீச துவங்கியிருப்பதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவும் நேற்று காற்றாலை மூலம் 1,800 மெகாவாட் மின் உற்பத்தி ஆனது. இதே நிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக மி்ன்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் மின்தடை நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒரு மணி நேரம்தான் நேற்று மின்தடை இருந்ததாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதே நிலை தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காணிகளை அபகரிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக தனியார் காணிகள் கையகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.அந்தப் பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அனுப்பப்பட்ட மக்கள் அங்கு குடியேற்றப்படவில்லை என்றும் அந்தப் பகுதி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு முறைப்பாடு வந்துள்ளதாக இலங்கை அரசின் மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதன் காரணமாக மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முறிகண்டிப் பகுதியில் சாந்தபுரம் என்கிற பிரதேசத்திலேயே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
அந்தப் பகுதியில் "அரச காணிகள் இருக்கும் நிலையில், இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று தான் கருதுவதாகவும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் தான் பேசவிருப்பதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் இதுவரை சர்ச்சைக்குரிய இந்த விடயம் தொடர்பில், இராணுவத்துக்கு காணிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

முறிகண்டிப் பகுதியில் இராணுவ முகாம்கள் அமைபப்தற்காகவே இந்தக் காணிகள் எடுக்கப்படுகின்ற என்று தனக்கு வந்த தகவல்களின் ஊடாக அறிந்து கொண்டதாகவும் அவர் கூறுகிறார். தனியார் காணிகளை அபகரிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது
இந்த விடயம் குறித்து மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று கூறும் துணை அமைச்சர், எதிர் வரும் திங்கட்கிழமை தானும் மூத்த அமைச்சரான மில்ராய் ஃபெர்ணாண்டோவும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
"அபிவிருத்திகளுக்காக தனியார் காணிகளை எடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது" என்றாலும், இராணுவத் தேவைகளுக்காக அவ்வாறு எடுப்பது ஏற்றுக் கொள்ள் முடியாதது என்றும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.
அரசின் இப்படியான நடவடிக்கைகளுடன் தான் உடன்படவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

வியாழன், 20 மே, 2010
அதிக சம்பளம் கேட்கும் நடிகர், நடிகையரை, தயாரிப்பாளர்கள் துணிச்சலுடன் ஒதுக்க
பணமே குறியாக,அதிக சம்பளம் கேட்கும் நடிகர், நடிகையரை, தயாரிப்பாளர்கள் துணிச்சலுடன் ஒதுக்கி வைக்க முன்வர வேண்டும் என்று ராதாரவி கூறியுள்ளார்.
எஸ்.பி.சோலைராஜா தயாரித்து இயக்கும் நீயும் நானும் படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா பிலிம்சேம்பர் தியேட்டரில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு ராதாரவி பேசுகையில்,
நடிகர் நடிகைகள் கூடுதல் சம்பளம் வாங்குவதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து அமைப்பினரும் வற்புறுத்தி வருகின்றனர். சம்பளத்தை நடிகர்கள் நிர்ணயிப்பது இல்லை. தயாரிப்பாளர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள்.
குறிப்பிட்ட நடிகர், இயக்குனர்
தயாரிப்பாளர் அதிக சம்பளம் கொடுக்கும் இசையமைப்பாளர் டியூன் போட வெளிநாடுகளுக்கு போகிறார். தயாரிப்பாளர்களால்தான் இந்த குளறுபடிகள் நடக்கின்றன.
சம்பளம் அதிகம் கேட்கும் நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோரை தயாரிப்பாளர்கள் ஒருவருடம் ஒதுக்கி வைத்தாலே போதும். வழிக்கு வந்துவிடுவார்கள். மார்க்கெட்டில் இல்லாமல் போய்விடுவோம் என்று பயந்து கொடுத்த சம்பளத்தை வாங்க ஓடிவருவார்கள்.
கேரளா, ஆந்திராவில் திரைப்படத் துறையினருக்குள் ஒற்றுமை உள்ளது. ஒரு நடிகர் தவறு செய்தால் அவரை துணிச்சலாக ஒதுக்கி வைக்கிறார்கள். பிரச்சினைகள் வந்தாலும் ஒன்றாக போராடுகிறார்கள். இங்கு அந்த நிலைமை இல்லை.
சம்பளம் அதிகம் கேட்பவர்களை 1 வருடம் ஒதுக்குங்கள். இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு போய் டியூன் போடுவது பேஷனாகிவிட்டது. அவர்களையும் ஒதுக்கி வையுங்கள். அதன்பிறகு எல்லாம் சரியாக நடக்கும். இப்படி நான் பேசுவதால் எனக்கு நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்கலாம், அதுபற்றி கவலை இல்லை.
ஆங்கில படங்கள் திரையிடும் தியேட்டர்கள் 150 நாட்கள் தமிழ் படங்களையும் திரையிட வேண்டும் என்று முன்பு விதி இருந்தது. இப்போது இல்லை. தமிழ் படங்களை திரையிட வேண்டும் என்று அந்த தியேட்டர்கள் முன்பு போராட வேண்டும்.
சில தியேட்டர்களில் பெரிய நடிகர்கள் படங்கள்தான் திரையிடப்படுகின்றது. சிறிய படங்களை வாங்குவது இல்லை. ஆனால் பெரிய நடிகர்கள் படங்கள் ஓரிரு நாட்களிலேயே முடங்கி விடுகின்றன. சிறிய படங்களை திரையிட மறுக்கும் தியேட்டர் முன்பு சிறுபட தயாரிப்பாளர்கள் போராட்டம்
[ Read All Comments ] [ Post Comments ]
ஹிட்லரின் மறைவின் பின்னர் நாசி கட்சிக்கு நேர்ந்த நிலையே புலிகளுக்கு
பிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபாயங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழத்தின் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். பிரபாரன் மிகச் சிறந்த யுத்த தந்திரோபயங்களைப் பயன்படுத்திய சிறந்த இராணுவத் தலைவராக உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்கள் கருதிய போதிலும்இ உண்மை நிலைமை முற்றிலும் மாறுப்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதியில் பிரபாகரனின் யுத்த தந்திரோபாயங்கள் மாபெரும் தோல்வியை தழுவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கெரில்லா போராட்ட முறைமையிலிருந்துஇ மரபு ரீதியான ஆயுத போராட்டக் குழுவாக மாற்றமடைந்தமை பிரபாகரன் இழைத்த மாபெரும் தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள் கெரில்லா தாக்குதல் முறைமையை பின்பற்றியிருந்தால் இலங்கைப் படையினரால் ஒருபோதும் யுத்த ரீதியாக தோற்கடித்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் மரபு ரீதியான படையைப் போன்றே புலிகளின் படை பலத்தையும் அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ள்ளப்பட்ட பலவந்த ஆட்சேர்ப்பு புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வித பயிற்சியுமன்ற பொதுமக்களை யுத்த களத்தில் ஈடுபடுத்தியதாகவும்இ இதனால் தோல்விகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 60 வீதமான உறுப்பினர்கள் பலவந்தமான முறையில் புலிகளினால் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுத பலம் காணப்பட்ட அளவிற்கு இறுதி நேரத்தில் புலிகளிடம் ஆள் பலம் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ படை தொடர்பில் பிரபாகரன் குறைவாக கணித்து வைத்திருந்தமைஇ அரச படையினர் வெற்றியீட்ட வழிகோலியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளின் தத்துவாசிரியரான அன்ரன் பாலசிங்கத்தின் மறைவின் பின்னர்இ யதார்த்தபூர்வமான ஆலோசனைகளை பிரபாகரனுக்கு எவரும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்தியா அல்லது மேற்குலக நாடுகள் தலையீடு செய்யும் என பிரபாகரன் இறுதித் தருணம் வரையில் நம்பியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஹிட்லரின் மறைவின் பின்னர் நாசி கட்சிக்கு நேர்ந்த நிலையே புலிகளுக்கு நேர்ந்துள்ளதாக பேராசிரியர் குணரட்ன தெரிவித்துள்ளார்.
நாளை 7 படங்கள் திரைக்கு வருகின்றனவாம
கோடை விடுமுறை காலத்தில் இதுவரை வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்கிறார் போல இல்லாத நிலையில் நாளை 7 படங்கள் திரைக்கு வருகின்றனவாம்.
இதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது கரண் நடித்துள்ள கனகவேல் காக்க படம்
இப்படத்தை கவின்பாலா இயக்கியுள்ளார். கரணே கூட இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.
இதுதவிர அருண் விஜய்
இதுதவிர ஆங்கிலத்தில் உருவாகி தமிழில் டப் ஆகியுள்ள ஐயன்மேன் 2 படமும் நாளையே திரைக்கு வருகிறது.
ஜனாதிபதி மே மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்ததை அடுத்தே பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா

இந்நிலையில், கடந்த வருடம் மே மாதம் 18ஆம் திகதியே பிரபாகரன் கொல்லப்பட்டார் எனும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
போர் வெற்றி குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மே மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்ததை அடுத்தே வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் தான் நடத்தப்படும் விதம் குறித்தும் ஜெனரல் சரத் பொன்சேகா தனது ஏமாற்றத்தை இதன்போது வெளியிட்டார்.
இலங்கை இராணுவம் ஒரு போதும் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை எனவும் அவ்வாறு ஈடுபட்டிருந்தால் அது குறித்து அறியத்தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது காட்சிகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்
யாழ் மாவட்ட இணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ்
யாழ் மாவட்ட இணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் ஜனாதிபதியால் நியமனம். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் மஹிந்த சிந்தனையின் கீழ் “எதிர்கால நோக்கு” எனும் திட்டத்திற்கமைய அரசாங்க மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினால்
முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்றிட்டங்களையும் அமுலாக்குதல், வழிநடத்துதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் இணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்தின் மூலம் “மக்கள் சக்தி” அமைப்பினால் முன்னெடுக்கப்படும் பிராந்திய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் என்பனவற்றுடன் “கிராம எழுச்சித்” திட்டத்தின்கீழ் பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளின் அமுலாக்கம், வழிநடத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களும் விளங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnews

தேர்தல் நடந்தால் மீண்டும் காங். கூட்டணி வெல்லும்- அதிமுகவுக்கு '0' தான் கிடைக்கும்
டெல்லி: நாடாளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் மீண்டும் காங்கிரஸ்
கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்றும், அந்தக் கூட்டணிக்கு 25 இடங்கள் அதிகம் கிடைக்கும் என்றும் என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியே 39 இடங்களிலும் வெல்லும் என்றும் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் மாபெரும் தோல்வி ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து சமீபத்தில் ஓராண்டை நிறைவு செய்ததையொட்டி நாடு முழுவதும் என்டிடிவி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு நடத்தியது.
GfK MODE நிறுவனத்துடன் இணைந்து பிரபல கருத்துக் கணிப்பாளரும், என்டிடிவி அதிபர் பிரணாய் ராய் தலைமையிலான குழு நாடு முழுவதும் இந்த ஆய்வை நடத்தியது.
மொத்தம் 34,277 பேரிடம் இந்தக் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
அதில் தெரியவந்துள்ள விவரம்:
நாளையே மக்களவைக்குத் தேர்தல் நடத்தினால் காங்கிரஸ் கூட்டணிக்கு கடந்த தேர்தலை விட 25 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். மொத்தத்தில் 288 இடங்களை இந்தக் கூட்டணி கைப்பற்றும்.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த 39 இடங்களையும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றும். கடந்த தேர்தலில் 9 இடங்களில் வென்ற அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.
பாஜக கூட்டணிக்கு 15 இடங்கள் இழப்பு:
தேசிய அளவில் பாஜக தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கட்டணிக்கு 15 இடங்கள் குறைந்து மொத்தம் 145 இடங்களே கிடைக்கும்.
ஆனால், குஜராத்தில் பாஜகவுக்கு 4 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.
இடதுசாரி்க் கட்சிகளுக்கு ஒரு இடம் குறைந்து 23 எம்பிக்களே கிடைப்பர்.
அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-மம்தா பானர்ஜி கூட்டணி வைத்தால் 27 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் தனித்து் போட்டியிட்டால் 4 இடங்களே கிடைக்கும். மீதியுள்ள இடங்களில் 30 இடங்களை இடதுசாரிகளே பிடித்துவிடுவர். மம்தாவுக்கு 7 இடங்களே கிடைக்கும். இதனால் கூட்டணி வைத்தால் மட்டுமே இடதுசாரிகளை தோற்கடிக்க முடியும்.
கர்நாடகத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு:
கர்நாடகத்தில் தற்போது 6 எம்பி்க்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 12 இடங்கள் கிடைக்கும். அங்கு பாஜகவுக்கு 11 இடங்களை இழந்து 8 இடங்களில் மட்டுமே வெல்லும். தேவெ கெளடா கட்சிக்கு 2 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.
அதே நேரத்தில் ஆந்திராவில் தற்போது தன் வசம் உள்ள 33 இடங்களில் 3 இடங்களை காங்கிரஸ் இழக்கும். அங்கு தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 இடங்கள் அதிகமாகக் கிடைக்கும். பாஜகவுக்கு ஒரு இடம் குறையும்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 4வது இடமே:
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும். முதல்வர்
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கடந்த முறையைப் போலவே 18 இடங்களும், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி 3 இடங்களை இழந்து 18 இடங்களும் கிடைக்கும். பாஜகவுக்கு 15 இடங்களே கிடைத்து 4வது இடத்துக்குத் தள்ளப்படும்.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு 33 இடங்கள் வரை கிடைக்கும். கூட்டணி இல்லாவிட்டால் 23 இடங்களில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியே வெல்லும். மிச்சமுள்ள 12 இடங்களில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், 3 இடங்களில் மட்டுமே காங்கிரசும் வெல்ல முடியும்.
மொத்தத்தில் இப்போதுள்ள காங்கிரஸ் கூட்டணிக்கு 288 இடங்கள் கிடைக்கும். இது கடந்த தேர்தலில் கிடைத்ததைவிட 25 எம்பிக்கள் அதிகம்.
பாஜக கூட்டணிக்கு 145 இடங்கள் கிடைக்கும். இது கடந்த தேர்தலைவிட 15 இடங்கள் குறைவு.
லாலு-காங் கூட்டு சேர்ந்தால் பாஜகவுக்கு பெரும் நஷ்டம்:
அதே நேரத்தில் பிகாரில் லாலுவுடன் கூட்டணி சேர்ந்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு 318 இடங்கள் கிடைக்கும். இந்தக் கூட்டணி உருவானால் பாஜக கூட்டணிக்கு மேலும் 30 இடங்கள் குறைந்து 115 இடங்களே கிடைக்கும்.
மன்மோகனைவிட ராகுலே 'பெட்டர்':
மன்மோகன் சிங்கை விட ராகுல் காந்தி
சிறந்த பிரதமராக இருப்பார் என்று கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 50 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் மன்மோகன் சிங்கின் செயல்பாடு திருப்தியாக உள்ளதாக 70 சதவீதம் பேர் கூறினர். ராகுல் காந்தி அடுத்த பிரதமராவார் என்று 55 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
முந்தைய காங்கிரஸ் அரசை விட இப்போதைய காங்கிரஸ் அரசு மோசமாக இருப்பதாக 44 சதவீதம் பேரும், மன்மோகன் சிங்கை விட சோனியாவே சக்தி வாய்ந்தவர் என்று 62 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
ப.சிதம்பரம செயல்பாட்டுக்கு ஆதரவு:
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பணிகள் சிறப்பாக இருப்பதாக 61 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் செயல்பாட்டை 59 சதவீதம் பேர் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக 62 சதவீதம் பேர் பிரணாப் மீது குற்றம்சாட்டி உள்ளனர்.
ராசா ஊழல் நபரா?-'ஆமாம்':
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ராசா ஊழல் நபரா என்ற கேள்விக்கு 57 சதவீதம் பேர் 'ஆமாம்' என்று பதிலளித்துள்ளனர்.
நக்சலைட்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்று 67 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்தனர்.
நாட்டிலேயே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் சிறப்பாக செயல்படுவதாக 85 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக 84 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மும்பை தாக்குதல்
தீவிரவாதி அஜ்மல் கசாபை உடனே தூக்கில் போட வேண்டும் என்று 76 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்தனர்.
இவ்வாறு அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)