சனி, 5 ஜனவரி, 2019

இந்தியாவின் முதல் தலைமறைவு பொருளாதார குற்றவாளி.. விஜய் மல்லையா.. டெல்லி நீதிமன்றம்

 Vijay Mallya becomes India’s first fugitive economic offendertamil.oneindia.com - lakshmi-priya : டெல்லி: இந்தியாவில் கடன் பெற்றுவிட்டு லண்டனுக்கு ஓட்டம் பிடித்த விஜய் மல்லையா தலைமறைவு பொருளாதார குற்றவாளி என டெல்லி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரூ.9000 கோடி கடனை இந்தியாவில் உள்ள 14 வங்கிகளில் பெற்றுக் கொண்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு ஓடி ஒளிந்தார் மல்லையா. அவரை லண்டன் போலீஸ் உதவியுடன் நாடு கடத்த இந்திய அரசு போராடி வருகிறது. இதுகுறித்து லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் இந்திய சிறைகள் மோசமானதாகவும் அசுத்தமாகவும் இருப்பதால் தன்னால் இந்திய சிறைக்கு செல்ல முடியாது என மல்லையா கூறியுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மும்பை ஆர்தர் ரோடு சாலையில் உள்ள சிறைச் சாலையில் மல்லையாவை தங்கவைக்க உத்தேசிக்கப்பட்ட அறையை வீடியோவாக எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

பொங்கல் பரிசு: 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் துவங்கி வைத்தார்

பொங்கல் பரிசு: ₹ 1000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் EPS...zeenews.india.com -tamil : பொங்கல் பரிசுத் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார்....
தீபாவளி திருநாளைவிட பொங்கல் பண்டிகைக்குத்தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். பொங்கல் விழாவிற்கு தமிழர் திருநாள் என்றும் கூறுவார். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஆண்டு தோறும் பொங்கல் திருநாளுக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழ் மக்களுக்கு தமிழக முதலவர் பொங்கல் பரிசு அறிவித்துள்ளார்.

குறைந்த முதலீட்டு படங்களே தமிழ் திரையுலகை காப்பாற்றுகிறது ..

44 படங்களைத் தவிர்த்து 140 படங்கள் 2018ஆம் ஆண்டில் தோல்வியை தழுவியிருக்கிறது. இவற்றில் சராசரி 3 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 100 படங்கள் மூலம் 300 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது தமிழ் சினிமா. மேற்கண்ட 140 படங்கள் மூலம் வருடந்தோறும் திரைப்பட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது 
மின்னம்பலம் :தமிழ் சினிமா 365: பகுதி - 5 இராமானுஜம்
2018-ஆம் ஆண்டில் வெளியான 184 படங்களில் லாபம் அடைந்து வெற்றியைத் தொட்ட திரைப்படங்கள் பற்றிய விவரங்கள் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர்களால், விநியோகஸ்தர்களால் அறிவிக்கப்படவில்லை. உண்மைக்கு நெருக்கமாக இது பற்றிய தகவல்களை இந்த தொடரின் முந்தைய கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறோம்.
தங்களுடைய படம் வெற்றியடைந்து எத்தனை கோடி அல்லது எத்தனை லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது என்பதை இதுவரையிலும் எந்தவொரு படத் தயாரிப்பாளரும் வெளிப்படையாக தமிழ்த் திரையுலகத்தில் கூறியது இல்லை.

கும்பகோணம் 5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மாணவர் கழுத்து அறுத்து கொலை

ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுத்து கொலை
மாலைமலர் : கும்பகோணம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்தசீர்
 கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மனைவி மும்தாஜ்பேகம். இவர்களுக்கு முன்தசீர் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. முன்தசீர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சாகுல்ஹமீது வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் முன்தசீர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவனியாபுரத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை திருமங்கலகுடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக தாய் மும்தாஜ்பேகத்திடம் கூறி விட்டு முன்தசீர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். நள்ளிரவில் அவரது செல்போன் நம்பரில் இருந்து மும்தாஜ்பேகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமானால் எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுங்கள் என்று மிரட்டி உள்ளார்.

அமெரிக்காவில் 14 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண் கர்ப்பிணி ..


comaவெப்துனியா :அமெரிக்காவில் 14 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி கடந்த 14 வருடங்களாக கோமாவில் இருக்கும் நிலையில் அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறார். இது அந்த பெண்ணின் உறவினர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.<

குழந்தையின் கண்முன்னே பயணியை உதைத்த அரசுப்பேருந்து நடத்துனர்..விடியோ மகளிர் ஆணையம் விளக்கம் கேட்பு


நடத்துனர் குழந்தையின் முன்னே தாயை தாக்கும் காணொளி காட்சி 
THE HINDU TAMIL: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பேருந்து நிலையத்தில் 3 வயது குழந்தையின் கண்முன்னே அரசுப்பேருந்து நடத்துனர்  பெண் பயணியை தாக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
இன்று காலைமுதல் ஒரு காணொளி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அதில் பேருந்து நிலையம் ஒன்றில் சுற்றிலும் பயணிகள் வேடிக்கைப்பார்க்க, பேருந்தைவிட்டு 3 வயது பெண் குழந்தையுடன் இறக்கப்பட்ட கிராமத்துப் பெண் பயணி ஒருவர் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பதிலுக்கு நடத்துனர் அவரை மிரட்டும் தொனியில் திட்டுகிறார்.

பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி.. நாடாளுமன்ற தேர்தலில் ...

மாலைமலர் : வரவுள்ள மக்களவை தேர்தலில்
பெங்களூரு மத்திய
தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று அறிவித்துள்ளார்.
 நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு: நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார்.
தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.
இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன.
ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை. கமல்ஹாசன், ரஜினிகாந்த் போல அவர் கட்சி தொடங்குவாரா? என்றும் கேட்கப்பட்டது. ஆனால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அவர் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் தரிசனம் - கேரளா போலீஸ் அறிவிப்பு!

மாலைமலர் : சபரிமலையில்
இதுவரை 10 பெண்கள்
ஐயப்பனை தரிசித்துள்ளதாக கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பக்தர்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் இளம்பெண்கள் பலரும் அணி, அணியாய் சபரிமலைக்கு சென்றனர்.
இதனால் சபரிமலையில் பதட்டமான நிலை உருவானது. சன்னிதானம் வரை சென்ற பெண்கள் 18-ம்படி ஏறாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கேரள போலீசார் சபரிமலை செல்ல விரும்பிய பெண்களை ரகசியமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் சபரிமலை சென்று 18-ம்படி ஏறாமல் பின்பக்க வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.< பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. முதன்முதலாக இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்ததாகவும் கூறப்பட்டது.

பெரியார் 70 வயதில் ஏன் திருமணம்...? அதுவும் மகளை ஒத்த வயது மணியம்மையை?

தேன்மொழி திராவிடர்கழகம் : மகள் வயதுடைய பெண்ணை பெரியார் 70
வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்? மகளாய்த் தத்தெடுக்காமல் ஏன் திருமணம்?
முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது. இது அம்பேத்கரின் இந்து சட்டத் திருத்தங்கள் 1956-ல் அமலுக்கு வந்த பின்னே இந்த விதி நீக்கப்பட்டது.
பெரியாரை விமர்சிக்க ஏதும் காரணம் கிடைக்காத போது சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்வை/மணியம்மையார் திருமணம் குறித்தே விமர்சிப்பர். பெரியார்-மணியம்மை திருமணம் 9.7.1949 அன்று பதிவு செய்யப்பட்டது. அப்போது பெரியாருக்கு வயது 70; மணியம்மையின் வயது 30. இத்திருமணம் மணியம்மையாரின் சொந்த விருப்பத்தின் பேரில் சுயமாய்ச் சிந்தித்து, விரும்பி எடுக்கப்பட்ட முடிவே. இதில் யாருடையக் கட்டாயமும் இருக்க வில்லை.
பெரியாரிடம் வருவதற்கு முன்பே மணியம்மையார் தன் வீட்டில் தனக்குத் திருமணமே வேண்டாம் என்று முடிவுடன்தான் இருந்திருக்கிறார். பெரியாரிடம் வந்து சேர்ந்தப் பின்பும் அவருக்கு மணம் முடிக்க முயற்சிகள் செய்யப்பட்ட போது இயக்கப் பணியே வேண்டும், திருமணம் வேண்டாம் என்ற முடிவையே முன் வைத்தார்.

கல்வியில் சாதித்த திராவிடம் .. புள்ளி விபரங்கள் காட்டும் உண்மை ..

Suriya Moorthy : எப்படி சாத்தியமானது இந்த இடத்தை அடைவதற்கு எத்தனை
நீண்ட தூரம் பயணித்து வந்திருக்கிறோம் என்று வரலாற்றில் தேடிப்பார்த்தால் கண்கள் கலங்கிப்போகும் கல்வி சில இடங்களில் அறிவுக்கான மூலதனம் பல இடங்களில் வேலைக்கான மூலதனம் இந்த மண்ணில் மட்டும் தான் அது சுயமரியாதைக்குமான மூலதனம் கல்வியை தனிமனிதனின் pride identity ஆக மாற்றுவதற்கு இங்கே நடந்த அரசியலால் சாத்தியப்பட்டது இந்த இடம் இன்னும் கொஞ்சம் இடைவெளி, நாலு அடி சேர்த்து வைத்தால் அதையும் நிரப்பிவிடலாம்<

Bilal Aliyar : திராவிடத்தின் மிக முக்கியமான சாதனையாக கல்வி பரவலாக்களும், அது அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்தேயாக வேண்டும் என்ற முனைப்பும் தான்...
இன்று அந்த கல்வியை மூலதனமாக வைத்து தான் சமூக மாற்றத்திற்கான செயல்பாடுகளை தொடர்ந்து செய்தல் அவர் முடிகிறது
இதை பொறுக்க முடியாதவர்களால் தான், நாம் சோர்ந்திருந்த நேரத்தில் மாஃபா பாண்டியராஜன் போன்ற கருங்காலிகளால் நீட் போன்ற மறைமுக உயர்கல்வி மறுப்புக்கான வேலைகளை நிகழ்த்த முடிந்தது.....
தொடர்ந்தும் சமூக நீதிக்கான அரசியலை வலிமையாக பேசும் அண்ணன் BALA அவர்கள் எழுதிய கருத்துகளுடன்...

ஆணும், பெண்ணும் மனம் விரும்பி பாலியல் உறவு கொண்டால், அது பலாத்காரம் இல்லை: உச்சநீதிமன்றம்

ஸ்பெல்கோ : மகாராஷ்டிராவை சேர்ந்த நர்ஸ் ஒருவர், மருத்துவர் ஒருவர்
தன்னை  பலாத்காரம் செய்து விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் இணைந்து வாழ்ந்தபோது, இந்த பலாத்காரம் சம்பவம் நடந்ததாக மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் உடன்பட்டு உறவு வைத்துக்கொண்டால் அது பலாத்காரமாகவும், பாலியல் வன்கொடுமையாகவும் கருதப்படாது. சில காலமாக இருவருக்கும் உறவு நீடித்து வந்தாலும், அது பலாத்காரம் இல்லை. பாலியல் பலாத்காரத்துக்கும், சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கும் இடையே அதிக வேறுபாடு இருக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும்போது திருமணம் செய்து கொள்வதாக வாக்கு தருபவர், அதை செய்யத் தவறும்போது அதை பாலியல் பலாத்காரமாக எப்படி கருத முடியும் என கேள்வி எழுப்பி நர்ஸ் மனுவை தள்ளுபடி செய்தனர்.

கைம்பெண்கள் நலனுக்கு சட்டம் - திருச்சி சிவாவின் தீர்மானத்தை மாநிலங்களவை நிராகரித்தது

விதவைகள் நலனுக்கு சட்டம் -  திருச்சி சிவாவின் தீர்மானத்தை மாநிலங்களவை நிராகரித்ததுதினத்தந்தி :விதவை பெண்களின் நலன்களை பாதுக்காக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவை இன்று நிராகரித்து விட்டது.
கைம்பெண்கள் நலனுக்கு சட்டம் - திருச்சி சிவாவின் தீர்மானத்தை மாநிலங்களவை நிராகரித்தது
புதுடெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா விதவை பெண்களின் நலன்களை பாதுக்காக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தனிநபர் தீர்மானத்தை ஒன்றை தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் மீது பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை மந்திரி விரேந்தர் குமார், விதவையர்களின் நல்வாழ்வை பேணிப்பாதுக்காக்க அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அழகிரிக்கு போன தூது.. அவர் அமைதியாக இருக்கிறாரா? நிச்சயமாக தூங்கவில்லை ...

திருவாரூர் இடைத்தேர்தல்... ‘அண்ணன் அழகிரி’ ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்? புரியாத புதிராக ஆதரவாளர்கள்
Veerakumar :tamil.oneindia.com/ :  சென்னை: திருவாரூர் தொகுதியில் மு.க.அழகிரி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரோ, போட்டியிடாமல் தவிர்க்க வேண்டும் என்று கருணாநிதியின் குடும்பத்தினர் தூதுவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலைஞர்  மறைந்த பிறகு திமுகவில், தன்னை சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஸ்டாலினுக்கு தூதுவிட்டு பார்த்தார் அழகிரி. ஆனால் ,  கட்சியை விட்டு நீக்கப்பட்ட அழகிரியை, திமுகவில், சேர்த்துக் கொள்வதில்லை என்று ஸ்டாலின் உறுதியாக கூறிவிட்டாராம்.
 இதனால் அதிர்ச்சி அடைந்த அழகிரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி மெரினா கடற்கரையில் கலைஞர்  சமாதியை நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார்.
 அழகிரி
 அந்தப் பேரணியில் அழகிரி எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லாவிட்டாலும் கூட நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இதன் பிறகும் கூட ஸ்டாலின் அழகிரியை கட்சியில் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை . இதையடுத்து, திண்டுக்கல்லில் கலைஞர் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தி விட்டு அமைதியாகி விட்டார் அழகிரி. அழகிரி திட்டம் அழகிரி திட்டம்

வெள்ளி, 4 ஜனவரி, 2019

2019 தேர்தலில் மோடி தோற்றால் அனில் அம்பானி நாட்டை விட்டு தப்பி.. ஓடுவார்?

Swathi K : "அனில் அம்பானி".. ரிலையன்ஸ் கம்யூனிகேசன் (RCom) கம்பெனி
ஆரம்பிச்சு திவால் ஆனது தெரியும்.. இந்திய அரசு வங்கியில் கடன்வாங்கி இப்ப 45,000 கோடிக்கும் மேல் அது வாராக்கடனாக இருப்பதும் நமக்கு தெரிந்த விஷயம் தான்..
RCom கம்பெனி'க்கு தேவையான Telecom Equipments (தொலைத்தொடர்பு சாதனங்கள்) சுவீடன் நாட்டு Ericsson கம்பெனியிடம் வாங்கியதற்கு கொடுக்க வேண்டிய தொகையில் 550 கோடிகள் இன்னும் பாக்கி இருக்கிறது.. அதை டிசம்பர் 15க்குள் கொடுக்க சொல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.. ஆனால் அதை இன்று வரை ரிலையன்ஸ் திருப்பி கொடுக்கவில்லை..
அதனால் Ericsson இன்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று கொடுத்துள்ளது.. அதில் நிறைய விஷயம் இருந்தாலும், முக்கியமான இரண்டு விஷயம் 1. அனில் அம்பானியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் 2. அனில் அம்பானியின் பாஸ்போர்ட் முடக்கி வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க கோர்ட் முயற்சி எடுக்கவேண்டும்..

விஸ்வாசம் , பேட்ட தலைகீழாக மாறிய தியேட்டர் நிலவரம்- கோபத்தில் அஜித் ரசிகர்கள்

வெப்துனியா: வரும் ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு தமிழ் சினிமாவின் இரு உச்ச நட்சத்திரங்களான ரஜினி, அஜித் ஆகியோரின் படங்களான பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியாக் இருக்கின்றன
;அஜித்தின் விஸ்வாசம் படம் சென்ற தீபாவளிக்கே ரிலிஸ் ஆவதாக இருந்து பின்னர் சில பல பிரச்சனைகளால் பொங்கலுக்கு ரிலிஸாவதாக ஆறு மாதத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.
சாதாரண நாட்களில் ரிலிசானாலே அஜித் படத்திற்கான ஓபனிங் வேறு லெவலில் இருக்கும், பொங்கல் விடுமுறையில் சொல்லவா வேண்டும் என விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அட்வான்ஸ் கொடுத்து விஸ்வாசம் படத்தைப் புக் செய்துகொண்டனர்.
ஆனால் இடையில் திடீர் திருப்பமாக ரஜினியின் பேட்ட படமும் பொங்கல் வெளியிட்டீல் குறுக்கிட்டதால், தியேட்டர்கள் பற்றாக்குறை ஏற்படும் என விநியோகஸ்தர்கள் பயந்தனர். ஆனால் இரு படத் தயாரிப்புத் தரப்புமே ரிலிஸில் பின்வாங்காமல் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாவதில் உறுதியுடன் நின்றனர்.

சொராபுதீன் வழக்கு: சட்டத்தையும் நெறிமுறைகளையும் மீறிய தீர்ப்பு

savukkuonline.com/:>குற்றம் சாட்டப்பட்டவர்கள் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களாக இருக்கும் வழக்குகளில் நீதி வழங்குவதற்கான நம்முடைய குற்றவியல் நீதி முறையின் தன்மை மீது இந்தத் தீர்ப்பு இருளைப் பாய்ச்சுகிறது.
குஜராத் காவல் துறையால் சொராபுதீன் ஷேக் சுட்டுக்கொல்லப்பட்ட 14 ஆண்டுகள் கழித்து, மும்பை விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. அவரது சகோதரர் ருபாபுதின் ஷேக், தனது இதயம் நொறுங்கிவிட்டது என்று கூறினார். “நீதிமன்றம் எந்த சாட்சியத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சொராபுதீன் தன்னைத்தானே கொலை செய்துகொண்டார் போலும்’ என்கிறார் அவர்.

அய்யப்பன் கோயிலுக்கு சசிகலா போனது உண்மைதான்...சி சிடிவி- வீடியோ Sri Lankan Is Third Woman To Enter Sabarimala Temple

A 46-year-old woman from Sri Lanka, who entered the Sabarimala temple last night, became the third woman of menstruating age in the temple's history to offer darshan to the shrine of Lord Ayyappa nestled in the Western Ghats, since Supreme Court ordered the end of a decades-old ban on women of menstrual age entering the shrine. In a CCTV footage of the temple, the Sri Lankan national is seen going inside the temple with the 'irumudi kettu' or offerings kit on her head.
tamiloneindia -Keerthi Arunachalam திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு இலங்கை பெண் சசிகலா சென்று சாமி கும்பிட்டது உண்மைதான் என்று கூறியுள்ள கேரள போலீசார், அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய விவகாரங்களில் சபரிமலை அய்யப்பன் கோயிலும் ஒன்றாகும். கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. இதனையடுத்து பெண்கள் சிலர் கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் மற்றும் தீவிர பக்தர்கள் அவர்களை செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர்.
இருப்பினும், கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்கள் கேரள காவல்துறை உதவியுடன் சாமி தரிசனம் செய்தனர். இது அம்மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதனை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் சங் பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்றது.

பிளாஸ்டிக் தடை .. சனநாயக பொருளாதார விரோத பிளாஸ்டிக் தடை

Adv Manoj Liyonzon : ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது கண்டு பலரும் புளங்காகிதம் அடைவதை பார்க்க முடிகிறது
இது நியாயமான நடவடிக்கைதான் என்று பலரும், ஒருசில சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களும் வரவேற்கின்றனர்.
இது ஒரு வகையில் மட்டும் தான் ஏற்க முடியும் காரணம் இது அவசிமான நடவடிக்கை தான் என்றாலும் நியாயமற்ற ஒருதலைப்பட்சமான முடிவு ஆகும்.
அதாவது பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தால் ஒரு நல்ல பொருளாதார சூழலுக்கு பன்முகப்படுத்தல் (Diversification) அவசியம். அதிலும் குறிப்பாக சுயதொழில் (Self Employed), சிறு மற்றும் குறு நிறுவனங்கள் (Small & Tiny Industries) அரசின் பேராதரவோடு அதிக எண்ணிக்கையில் வலிமையான அடுக்கு பிரிவாக (Segment) இருப்பதே ஒரு நாட்டின் சிறந்த பொருளாதார நிலைக்கான அடையாளம். இது தான் ஒரு நாட்டில் பெரு நிறுவனங்களால் ஏற்படக்கூடிய பொருளாதார பேரழிவுகளிலிருந்து (Economic Disaster) நாட்டை காப்பாற்றும்.

திருவாரூர் அதிமுக வேட்பாளர் மலர்விழி கலியபெருமாள்.. அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ்...?

டிஜிட்டல் திண்ணை:  திருவாரூர் அதிமுக வேட்பாளர் மலர்விழி கலியபெருமாள்?மின்னம்பலம் : திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் ரேஸ் சூடுபிடித்துள்ளது. ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேநேரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் திருவாருர் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அனேகமாக 7ஆம் தேதி (திங்கள்கிழமை) இந்த மனு விசாரணைக்கு வருமென்ற நிலையில் திமுக, அதிமுக கட்சியினரை முந்திக் கொண்டு இன்று வேட்பாளரை அறிவித்து விட்டார் டிடிவி தினகரன். இன்று தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் அமமுகவின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜை அமமுக வேட்பாளராகத் தொண்டர்கள் மத்தியில் அறிவித்தார் தினகரன். வேட்பாளரை முடிவு செய்வதற்காக இன்று நடக்க இருந்த ஆட்சி மன்றக் குழுவை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறது அதிமுக. திமுக வேட்பாளர் யார் என்று பார்த்துக்கொண்டு அறிவிக்கலாம் என்பதுதான் இதற்குக் காரணம். திமுகவும் திருவாரூர் மாவட்டச் செயலாளர் கலைவாணனை இன்று மாலை வேட்பாளராக அறிவித்துவிட்டது.

திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் ..

அமமுகவைத் தொடர்ந்து திமுகவும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தனது வேட்பாளரை திமுக அறிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் திமுக தலைவர் கலைஞர் . தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் கலைஞர்  வென்றார்.

 வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்ற கலைஞர்  கடந்த ஆகஸ்டு 8-ம் தேதி அன்று காலமானதால், திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜன.28 அன்று திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சபரிமலையில் ஈழத்து சசிகலா தரிசனம் செய்தார், கேரளா போலீஸ் உறுதி செய்தது

சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம் செய்தார், கேரளா போலீஸ் உறுதி செய்ததுதினத்தந்தி : சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலைக்கு பெண்களால் செல்ல முடியவில்லை. ஆனால் நேற்று முன்தினம் அதிகாலையில் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (வயது 44), பிந்து (42) என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் நடை  அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.< சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரம் இந்து அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக கேரளாவை சேர்ந்த இந்து அமைப்புகளும், பா.ஜனதாவினரும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் நேற்று முன்தினம் முதலே மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் அரங்கேறின. பதட்டமான நிலையே தொடர்கிறது. 

துரைமுருகன் அப்போலோவில் அனுமதி .. நெஞ்சுவலி ... விரைவில் வீடு திரும்புவார் .

தீவிர சிகிச்சை /tamil.oneindia.com hemavandhana.:
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அழுகையோ, சிரிப்போ எல்லாமே இவருக்கு ஒன்றுதான். வெளிப்படையான இவரது குணம் அனைவரையுமே ஈர்க்கக்கூடிய ஒன்று.
நிறைய உணர்ச்சி வசப்பட்டாலும், இவரிடம் ஹியூமர் சென்ஸ்தான் அதிகம். எப்போதுமே கலகல பேச்சுதான், கலகல பேட்டிதான். சட்டசபையில் இவரது பேச்சுக்கென்றே அனைத்து கட்சிகளிலும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மிஸ்டர் துரைமுருகன்.. ஒருமுறை சட்டசபையில் ஜெயலலிதா எதிரே வந்த துரைமுருகன் வணக்கம் கூற, அப்போது ஜெயலலிதாவோ, "மிஸ்டர் துரைமுருகன்... உங்களுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸ் இருக்கு. அரசியலுக்கு வராமல் சினிமாவில் வந்திருந்தால் நீங்க ஒரு நல்ல நடிகனா வந்திருப்பீங்க" என்றார்.

திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன்?- இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

tamil.thehindu.com ; திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பில் விருப்ப மனுக்களை அக்கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர். இதில் பூண்டி கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 2, 3 தேதிகளில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார். முதல் நாளான நேற்று முன்தினம் யாரும் மனு அளிக்கவில்லை.

அதிமுகவு கூட்டணிக்கு தாவுகிறதா விடுதலைச்சிறுத்தைகள்?


வெப்துனியா :திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் அறிவித்த பின்னரும் திமுக கூட்டணிக்கு வலிய வந்து மதிமுக ஆதரவு தந்து கொண்டிருக்கும் நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் நிலைப்பாடு மாறி வருவதாக கூறப்படுகிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் கிடைப்பது கடினம் என்றும், அப்படியே கிடைத்தாலும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிக்கு மேல் கிடைக்காது என்றும், அந்த இரண்டு தொகுதிகளும் தாங்கள் கேட்கும் தொகுதிகள் கிடைக்காது என்றும் விசிக தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது.
எனவே திமுக கூட்டணி இல்லையெனில் அடுத்த ஆப்சன் அதிமுக கூட்டணி தான் என்பதால் அந்த கூட்டணி பக்கம் விசிக சாய்வதாக கூறப்படுகிறது. இதற்கு அச்சாரமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், 'மேகதாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி-க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது என்றும், அதிமுக எம்.பி-க்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தான் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார். இதனை வைத்து பார்க்கும்போது வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் பல மாற்றங்கள் இருக்கும் என கருதப்படுகிறது.

ஹென்றி மில்லர்.. மட்டக்களப்பில் வாழ்ந்த அமெரிக்க அருள் தந்தை . 94 வயது இயற்கை எய்தினார்

BBC :இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு தசாப்தங்களாக வாழ்ந்து,
மக்களுக்கு தொண்டூழியம் செய்து வந்த, அமெரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர், 94ஆவது வயதில், செவ்வாய்க்கிழமை, புத்தாண்டு பிறந்த நாளன்று மரணித்தார். அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிறந்தவர் அருட்தந்தை மில்லர். இலங்கை சுதந்திரம் பெற்று சில மாதங்களே ஆகி இருந்தபோது, இலங்கைக்கு வந்தார்.
அருட்தந்தை மில்லர் - இலங்கையில் இறுதியாக வாழ்ந்த அமெரிக்க ஜேசு சபையின் இறுதித் துறவி பெஞ்சமின் ஹென்றி மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகவும், அந்தக் கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியினுடைய பயிற்றுவிப்பாளராகவும், பணியாற்றி வந்த அருட்தந்தை - புனித மைக்கல் கல்லூரியின் யேசு சபை இல்லத்திலேயே மரணித்தார்.e>1873ஆம் ஆண்டு அமெரிக்க யேசு சபை மிசனரியினர் - மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியை உருவாக்கினர்.

பேரவையில் கண்ணீர் விட்டு அழுத துரைமுருகன் விடியோ


கலைஞரை நினைவுகூர்ந்து கண்ணீர்விட்ட துரைமுருகன்மின்னம்பலம : சட்டமன்றத்தில் நேற்று (ஜனவரி 3) கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கலைஞர் குறித்து துரைமுருகன் பேசியது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
சட்டமன்றத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று தீர்மானம் இயற்றப்பட்டது. அதில் ஏ.கே.போஸுக்கு அடுத்தபடியாக முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு நாளும் அவை ஆரம்பித்ததும் திருக்குறள் சொல்லப்படுவது வழக்கம். நேற்று கலைஞரைக் குறிப்பிடும் வகையில், ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்ற குறளை படித்து அவையின் செயல்பாடுகளை ஆரம்பித்தார் சபாநாயகர். இதைத் தொடர்ந்து திமுகவினரே எதிர்பாராத வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலைஞரைப் புகழ்ந்து தள்ளினர் .

குழந்தை மீது மின்சாரம் பாய்ச்சிய வீட்டு உரிமையாளர்!

குழந்தை மீது மின்சாரம் பாய்ச்சிய வீட்டு உரிமையாளர்!மின்னம்பலம் : வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்று கூறி, வீட்டில் இருந்த குழந்தை மீது மின்சாரம் பாய்ச்சிக் கொடுமைப்படுத்தியதாக அவ்வீட்டின் உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது வீட்டில் கணேஷ் குமார் தன் மனைவி, 8 வயது மகள் ஹரிணியுடன் வசித்து வந்தார். மார்க்கெட்டிங் துறையில் இவர் பணியாற்றி வருகிறார். கடந்த 4 மாதங்களாக கணேஷ் குமார் மணிவண்ணனிடம் வீட்டு வாடகையைக் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மணிவண்ணன், வாடகை தராவிட்டால் வீட்டைக் காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.

கேரளா 750 பேர் கைது!பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

வன்முறை எதிரொலி:  750 பேர் கைது; கேரளாவில் பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்புதினத்தந்தி :கேரளாவில் முழுஅடைப்பு .. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதன் எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. சபரிமலையிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.
ஆனால் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து (வயது 42), மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர்.
இந்த சம்பவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார். சபரிமலையின் பாரம்பரியத்தை மீறி பெண்கள் தரிசனம் செய்ததற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் இறங்கியது.

இந்த நிலையில், சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது.

சபரிமலையில் ஈழத்தமிழ் பெண் சசிகலா 18 ஆம் படி ஏறினார் .. வீடியோ நான் யாருக்கும் பயப்படமாட்டேன் ..Srilanakan Tamil women created history by climbing 18 holy steps in Sabarimala

இவர் 18 ஆம் படி ஏறி ஐயப்பனை தரிசித்தது உண்மை.   ஆனால் பாஜக குண்டர்களின் தாக்குதலில் இருந்து தன்னை  பாதுகாக்கும் நோக்குடன் இவர் தரிசனம் செய்யவில்லை என்று கூறுவதாக தெரிகிறது. இவர் இலங்கை சென்று பின்பு முழுவிபரமும் தெரியவரும்
Srilanakan Tamil women created history by climbing 18 holy steps in Sabarimala
Splco News Correspondent
Adhering to Superment Judgement Kerala police confirmed that a 46-year-old Sri Lankan woman offered prayers at the sanctum in Sabarimala temple on late Thursday.
 Police inside sources confirmed plainclothes officers, including women, gave Ms. Sasikala and her family covert security.
The squads, however, did not make their presence or the security cover visible. The police said the woman had booked her darshan time in advance.
 Ms Sasikala and her family had used the electronic queue system devised by the police and had sent her age-related records early. 

According to Police source the woman who climbed first the Holy 18 steps as Sasikala, daughter of Asok Kumaran, who holds a Sri Lankan passport.
Her passport gave her date of birth as December 3, 1972. Officers confirmed Ms. Sasikala had walked up the “18 Holy Steps” without any hindrance and offered her prayers at the sanctum.
Also sasikala’s relatives accompanied her. “Sasikala and her relatives finished her darshan at around 9.30 p.m. and reached Pampa safely by 11 p.m,” sources confirmed However the workers of the Sabarimala Karma Samathi (SKS), the hindutva backward fringe element outfit spearheading the protests against women of menstruating age entering the temple, have turned back a woman, identified as Deepa, midway at Marakootam on the 4 km uphill trek to Sabarimala temple.

முதல்வர் பினராயி விஜயனை " மரமேறி பனையேறி" என்று பாஜகவினர் கார்ட்டூன் ..

Prakash JP : கேரள முதல்வர் பினராய் விஜயனை "மரமேறி, பனையேறி" என்று
சாதி ரீதியாக விமர்சனம் செய்யும் பிஜேபியினர்..
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், பனையேறும் சாதியாகிய தீயர் என்னும் சாதியை சார்ந்தவர்.. (தமிழகத்தில் குமரி நெல்லை மாவட்டங்களில் நாடார் பிரிவின் மக்கள் பனையேறும் தொழில் செய்பவர்கள்)
சமீபத்திய சபரிமலை பிரச்சினையில் பினராய் விஜயன் எடுக்கும் நடவடிக்கைகள் மேல் கோபம் கொண்ட உயர் சாதியை சார்ந்த பிஜேபியினர் அவரின் சாதியை வைத்து பனையேறி மரமேறி என்று கார்ட்டூன்களை வரைந்து அவரை இழிவுபடுத்துகிறார்கள்.. பிஜேபி க்கு ஆதரவாக இங்கே செயல்படும் பனையேறும் தொழிலை குலத் தொழிலாக கொண்ட நாடார்கள் இதை கவனிப்பார்களா?
//Recently, BJP state vice-president M Sivarajan had asked the chief minister to go climb coconut trees if he did not deem himself capable of protecting the traditions at Sabarimala. The comment was a crass dig at the thiyya community, into which the chief minister is born, who were traditionally engaged in plucking coconuts and tapping toddy trees. The chief minister’s father was a toddy tapper as well. -- த நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்//

வியாழன், 3 ஜனவரி, 2019

கேரளாவில் பாஜகவை வளர்க்கவே, சபரிமலை பிரச்சனையை உருவாக்கி ஊதி பெருக்கி ....

Swathi K : சபரிமலைக்குள் பெண்கள் செல்ல அனுமதி கொடுக்கலாமா,
வேண்டாமா என்பதை தாண்டி கீழே உள்ளதை படிச்சு யோசிச்சு பாருங்கள்.. உங்களுக்கு RSS/ BJP மத அரசியல் புரியும்.. எப்படி அப்பாவி இந்துக்களை அவர்களின் அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது புரியும்..
** 2006ல் சபரிமலைக்குள் பெண்கள் செல்ல வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போட்டது யார்? 6 பெண் வக்கீல்கள் & RSS ஆதரவு வக்கீல் சங்கம்
** அவர்களுக்கு தேவையான ஆதரவு அனைத்தும் கொடுத்தது யார்? RSS
** 2018ல் பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு கொடுத்த தீர்ப்பின் முக்கிய நீதிபதி யார்? RSS/ BJP ஆதரவாளர் "தீபக் மிஸ்ரா".. அவருடன் மூன்று நீதிபதிகள்..
** எப்ப தீர்ப்பு கொடுத்தார்? பதவி காலம் முடிய ஒரு வாரம் இருக்கும் போது..
** தீர்ப்பை முதலில் வரவேற்றது யார்? RSS/ BJP
** இப்ப கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்ற போராட்டத்தை தூண்டுவது யார்? - RSS/ BJP
** சபரிமலையில் பத்திரிக்கை ஆட்களை அடித்து துவைத்தது யார்? - RSS/ BJP
** சபரிமலையை வைத்து நாம் நன்றாக அரசியல் செய்யவேண்டும்.. இதுதான் சரியான தருணம் என்று சொன்னது யார்? - கேரளா BJP தலைவர் "Sreedhran Pillai"
** சபரிமலையை கலவர பூமியாக மாற்றுவது யார்? - RSS/ BJP
** இதை வைத்து அரசியல் பண்ணுவது யார்? - RSS/ BJP
** இந்தியா முழுவதும் மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி எது? - பிஜேபி

உயர்நீதிமன்றம் : திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை- திருவாரூரில் பூண்டி கலைவாணன் போட்டி?

போட்டியில் யார் திருவாரூர் தேர்தலில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன்தான் போட்டியிடுவார்? 
மாலைமலர் : திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.ஜி. ஆர். பிரசாத் என்பவர் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில் கூறியிருந்ததாவது:-
 திருவாரூர் எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கஜா புயலினால், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. புயலின் பாதிப்பில் இருந்து அப்பகுதி இன்னும் முழுமையாக மீளவில்லை.
அதனால், திருவாரூர் தொகுதியில் நிவாரண பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது. இதனால் மிகப்பெரிய முறைகேடு நடைபெறும். தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். எனவே, திருவாரூர் தொகுதிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

கலைஞருக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலைஞருக்கு இரங்கல் தீர்மானம்: நெஞ்சம் நெகிழ்ந்தது. அனைவருக்கும் நன்றி -ஸ்டாலின்
NDTV : கலைஞருக்கு இரங்கல்
தீர்மானம்: நெஞ்சம் நெகிழ்ந்தது. அனைவருக்கும் நன்றி -ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று(புதன்கிழமை) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வரும் 8 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை கூட்டம் நடைபெறும். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று(புதன்கிழமை) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வரும் 8 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை கூட்டம் நடைபெறும்.
இன்று இரண்டாவது நாளாக தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்காக இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் திமுக எம்.எல்.ஏ. போன்றோர் இரங்கல் தீர்மானம் வாசித்தனர்.

மதிமுகவுக்கு 2 தொகுதிகள் மற்றும் தேர்தல் செலவு 50 லட்சம்?

2 சீட், 50 லட்சம்: வைகோ டார்கெட்மின்னம்பலம் : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 3) கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மதிமுகவின் தேர்தல் நிதி மற்றும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியே அதிகம் ஆலோசிக்கப்பட்டதாக தாயக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஜனவரி 1 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக அணியில் மதிமுக இடம்பெற்றிருப்பதாகவும் வருகிற தேர்தல் 2004 தேர்தலைப் போல திமுக அணிக்கு முழு வெற்றியாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

நீலகிரி: பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரி: பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!மின்னம்பலம் : நீலகிரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மக்களை வாட்டிவந்த குளிர் 5 டிகிரி, 3 டிகிரி என்று குறைந்து, தற்போது 0 டிகிரி என்ற நிலைக்கு வந்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை, கேரட் உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி, குந்தா, அவலாஞ்சி, தலகுந்தா, தாவரவியல் பூங்கா பகுதிகளில் இரண்டாவது நாளாகக் கடும் பனிபொழிவு நீடிக்கிறது.
கடுங்குளிரால் பெட்ரோல், டீசல் உறைந்த நிலையில் இருப்பதால், காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர் நீலகிரி மக்கள். ஸ்வெட்டர், தொப்பி இல்லாமல் வெளியே வர முடியாத நிலை உள்ளது. அங்குள்ள பூங்காக்களில் பனி பொழிந்துள்ளதால், எங்கு பார்த்தாலும் பசுமையின்றி வெள்ளையாகக் காணப்படுகிறது. இந்த பனியினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை: செய்தியாளர்களைத் தாக்கிய பாஜக குண்டர்கள்!

சபரிமலை: செய்தியாளர்களைத் தாக்கிய போராட்டக்காரர்கள்!
மின்னம்பலம் : சபரிமலை சன்னிதானத்துக்குள் இரண்டு பெண்கள் சென்றதைக் கண்டிக்கும் வகையில் இரண்டு நாள் போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
பிந்து, கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள் நேற்று சபரிமலை சன்னிதானத்துக்குள் நுழைந்து ஐயப்ப தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் இன்று (ஜனவரி 3) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசுப் பேருந்துகள், காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கேரளம் மற்றும் தமிழக எல்லைகளில் அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பெண்கள் குழுவொன்று தடுப்பைத் தாண்டி கேரள தலைமைச்செயலகத்துக்கு அருகில் சென்று முற்றுகையிட முயன்றனர்.

சரவண பவன், அஞ்சப்பர் உட்பட 32 இடங்களில் வருமானவரி அதிரடி சோதனை ..சென்னையில் ..

Income tax raids on premises of Hotel Saravana bhavan, Anjappar tamil.oneindia.com- veerakumaran.: சென்னை: சென்னையில், ஹோட்டல் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட பிரபல உணவகங்களின் தலைமையகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
ஹோட்டல் சரவணபவன், கிராண்ட் ஸ்வீட்ஸ், அஞ்சப்பர், ஹாட்பிரெட் போன்ற உணவகங்கள், இனிப்பகங்கள் உட்பட தமிழகம் முழுக்க 32 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். காலை 8 மணி முதல் ரெய்டு நடக்கிறது. 100 மேலான அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த உணவகங்களின் தலைமை அலுவலகம், கார்பொரேட் அலுவலகங்களில்தான் ரெய்டு நடப்பதால், இந்த உணவகங்கள், இனிப்பகங்களின் பிற கிளைகளில், வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களின், தலைமை அலுவலகங்கள் மட்டுமின்றி, மேலாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது. வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்கள் அடிப்படையில் ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த ரெய்டு நாளையும் தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சபரிமலை தடையை உடைத்து எழுவோம்! - கனகதுர்கா பேட்டி

Kerala
பிந்து - கனகதுர்கா
nakkheeran.in - mathivanan : சமீப காலமாக கேரளாவில் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்த சபரிமலை கோவில் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கோரி சம உரிமை முழக்கமிட்டு, வனிதா மதில் என்கிற மாபெரும் மனிதச் சங்கிலியை கேரள பெண்கள் முன்னெடுத்தது இந்தியா முழுவதும் பேசுபொருளானது.
அதேநாளின் நள்ளிரவில் கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள், சபரிமலைக் கோவிலில் வழிபட்டு வரலாற்றைத் திருத்தி எழுதினர். சம உரிமை, சமத்துவம் பேணும் பலரும் இதனைப் பாராட்டி வாழ்த்தி வரும் நிலையில், பாஜகவினர் கேரளாவில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர்.

பிந்து மற்றும் கனகதுர்கா

சீமான் ஸ்டெர்லைட் தரப்பிடம் பணம் பெற்றார்?”

vikatan.com- -antonyraj. எல்.ராஜேந்திரன்  :  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள விவகாரம் பற்றியெரிகிறது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பிடமிருந்து சீமான் தரப்புக்குப் பணம் தரப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அ.வியனரசு எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு அவர் விரிவான கடிதம் எழுதியிருக்கிறார்.
குற்றம்சாட்டும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்
சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் மக்கள் நீதிக் கொற்றம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார் ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அ.வியனரசு. அதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், சீமான் புறக்கணிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்தான், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பி ஒன்பது பக்கங்கள் கொண்ட கடிதத்தை சீமானுக்கு வியனரசு அனுப்பியுள்ள விவரம் தெரியவந்தது.

கேரளா கலவரம் - இன்று முழு அடைப்புக்கு அழைப்பு .. பாஜக குண்டர்கள் பொது சொத்துக்களுக்கு சேதம் ..

thinathatnhi : தினத்தந்தி :சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் இன்று (வியாழக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் நேற்று போராட்டங்க திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. சபரிமலையிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர். ஆனால் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து (வயது 42), மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் நேற்று அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.

BBC :கேரளாவில் கலவரம் ,, பெண்ணுரிமையாளர்களுக்கு எதிராக இந்துவா குண்டர்கள் அராஜகம்


அ.தா.பாலசுப்ரமணியன் - பிபிசி தமிழ் :
 பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கேரளாவில் 620 கி.மீ. மனித சங்கிலி ஒன்றை ஏற்பாடு செய்தது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. மறுநாளே இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலில் நுழைந்து வரலாறு படைத்துள்ளனர். பெண்கள் கோயில் நுழைவை முன்னிறுத்தி பாஜக இதுவரை இந்துத்துவ ஆயுதத்தை கையில் எடுத்துவந்த நிலையில், பெண்ணுரிமை ஆயுதத்தின் துணையோடு இப்போது களத்தில் இறங்கியுள்ளது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்).
சபரிமலையில் வயது வேறுபாடு இல்லாமல் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதித்து இந்திய உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தீர்ப்பளித்தது.
அதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பெண்கள் முயன்றபோது அதை எதிர்த்து பாஜக ஆதரவு பெற்ற பெண்களும், ஆண்களும் சபரிமலைக்கு செல்லும் வழிகளில் சூழ்ந்து நின்று வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ரபேல் ஒப்பந்த கோப்புகளை பெட்ரூமில் ஒளித்துள்ள பாரிக்கர்.. ஆடியோ ஆதாரம். காங்கிரஸ் அதிரடி

tamil.oneindia.com  : ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான கோப்புகளை அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் மறை
த்து வைத்துள்ளார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆடியோ ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளது.
விவிஐபிகளுக்கான ரபேல் சொகுசு விமானங்களை கொள்முதல் செய்ய பிரான்ஸுடன் ஒப்பந்தம் இட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துவிட்டார்.
 இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் பிரான்ஸ் நாட்டுடனான ரபேல் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார்.

கேரளம் ஒரு பிராந்தாலயம் .. சுவாமி விவேகானந்தர் : (ஜாதிவெறி பிடித்த) பைத்தியக்கார மாநிலம்! வனிதா மதில் கூறும் சரித்திரங்கள்

நாஞ்சில்காரி : :குமரி மாவட்டத்தின் வரலாற்று பார்வை குமரி மாவட்டத்தின் சாதி கொடுமையும்
இன்றைய கோடாலி காம்பின் கதையும் ..குமரி மாவட்டம் ,செழிப்பான ஒரு மாவட்டம் ,அதன் கடந்த கால வரலாற்றை சற்று புரட்டி பார்த்தோமேயானால் பல சாதீய கொடுமைகளை நடத்தி உயிரோடு மண்ணில் புதைத்த மனித உரத்தில் ,வளர்ந்த செழிப்போ என தோன்றுவதை கடந்த கால வரலாற்றை அறிந்தவர்களால் மறுக்க இயலாது ,கேரளாவை ஒட்டிய மாவட்டம் என்பதினால் ரப்பரும் ,பாக்கும் ,நல்ல மிளகும் செழிப்பாக வளரும் மண் ,அதன் கூடவே கேரளா நம்பூதிரிகளின் சாதிய கொடுமைகளும் இம்மண்ணில் நன்றாக வேர்விட்டு படர்ந்து இருந்தது கேரளத்தில் உள்ள (திருவனந்தபுரம் ) சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமை…!! தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர்…. உள்ளிட்ட “18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்.” சமஸ்தானத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்தபோதும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மற்றும் உயர் சாதி நாயர்கள் பிள்ளைமார் இந்துக்களால் உலகில் மிகவும் கொடுரதனமாகவும் ,கேவலமாக நடத்தபெற்ற வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்திருக்க வேண்டும் .அதனால் இந்த பதிவு …!!

புதன், 2 ஜனவரி, 2019

திருவாரூர் இடைதேர்தல் .. திமுக வேட்பாளர் யார்? எதிர்கட்சிகள் கடும் ஆர்வம்?

மின்னம்பலம் : “தேர்தல் களைகட்டிவிட்டது திருவாரூரில். இந்தத்
தொகுதியைப் பொருத்தவரை பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். வீரக்கோடி வெள்ளாளப் பிள்ளை, கார்காத்தார் பிள்ளை,சோளியபிள்ளை, யாதவ பிள்ளை எனப் பிள்ளைமார் சமுதாயத்தின் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் வாக்குகள்தான் திருவாரூர் தொகுதியின் வெற்றியை நிர்ணயம் செய்வதாக இருக்கிறது. கலைஞர் உயிருடன் இருந்தவரை இந்தத் தொகுதிக்குள் சாதி அரசியல் வரவில்லை. மக்களும் சாதி பார்க்கவில்லை. கலைஞர் என்ற ஒற்றைச் சொல்லுக்கு மட்டுமே திருவாரூர் கட்டுப்பட்டது. மக்கள் வாக்கும் விழுந்தது. ஆனால், கலைஞருக்குப் பிறகு இங்கே நிலைமை மாறிவிட்டது. தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் எப்படி சாதியை வைத்து வேட்பாளரின் வெற்றி - தோல்வி நிர்ணயம் செய்யப்படுகிறதோ அதே நிலைதான் இன்று திருவாரூர் தொகுதிக்கும். இது திமுக தலைமைக்கும் தெரியாமல் இல்லை.
திமுகவின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஆனால், ஸ்டாலினுக்கோ கலைவாணன் மீது நல்ல அபிப்ராயம் கலைஞர் காலத்திலிருந்தே இல்லை. டி.ஆர்.பாலுவுக்கும் அவரது மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் கலைவாணன் நிற்பதில் உடன்பாடு இல்லை. ‘கலைஞர் இடத்துல கலைவாணனை எப்படி வெச்சுப் பார்க்கிறது? அதெல்லாம் சரியாக வராது. கட்சிக்காரங்களும் அதை விரும்பல. கலைஞர் குடும்பத்துல இருந்து ஒருத்தரை நிற்க வைங்க...’ என்று டி.ஆர்.பி.ராஜா வெளிப்படையாகவே அறிவாலயத்தில் சொல்லியிருக்கிறார்.

சபரிமலை ..பரிகாரபூஜை .. இரு பெண்கள் நுழைந்ததால் அய்யப்பனுக்கு தீட்டாம்


மாலைமலர் :கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததால் மூடப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில், பரிகார பூஜைக்குப்பின் மீண்டும் நடை திறக்கப்பட்டது.
திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று இளம்பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் நுழைவது கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், இளம்பெண்கள் சபரிமலை சன்னிதானம் சென்றால் கோவில் நடையை மூடுவோம் என்றும் ஏற்கனவே பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று இளம்பெண்கள் இருவர் சபரிமலை சன்னிதானம் சென்றதை அறிந்ததும் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமாரவர்மா அதிர்ச்சி அடைந்தாராம் .
இவரைப்போல கோவில் தந்திரிகள், அர்ச்சகர்களும் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்களாம். அவர்கள் இதுபற்றி கோவில் மேல்சாந்தி, தலைமை தந்திரி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டையில் மட்டும் சுமார் 5 டன் பிளாஸ்டிக்!!! ஒரே நாளில் அதிரடி

pudukottainakkheeran.in - bagathsingh : பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு, நோய்கள் ஏற்படுகிறது என்பதால் பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடையை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் உணவு விடுதிகள், தேநீர் கடைகளில் பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவது பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கறிக் கடைகள், மீன் கடைகளில் பழையபடி பனை ஓலைகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. அப்படி இருந்தும் இன்னும் பல கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் உள்ளது. அவற்றை கண்காணித்து பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் ... பாஜகவையும் அதிமுகவையும் நாடாளுமன்றத்தில் அடித்து துவம்சம் செய்த ராகுல் ! விடியோ!


மின்னம்பலம் : ரஃபேல் விவகாரத்தில் பதில் சொல்ல மோடிக்குத் தைரியம் இல்லை என்று குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி தனது அறையில் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடரின் போது அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளின் அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தை முடக்கத் தமிழக எம்.பி.க்களுடன் பாஜக கூட்டு வைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இன்று ரஃபேல் ஊழல் தொடர்பாக விவாதம் நடைபெற்ற நிலையில்,மேகதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்பிகள் பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார். அதுபோன்று மோடிக்கு ரஃபேல் விவகாரத்தில் பதில் கூற தைரியம் இல்லை என்று குறிப்பிட்ட ராகுல், பிரதமர் தனது அறையில் ஒளிந்துகொண்டிருக்கிறார். 95 நிமிடம் நேர்காணல் கொடுக்கும் மோடி, நாடாளுமன்றத்துக்கு வந்து ரஃபேல் விவகாரம் குறித்து 5 நிமிடம் பேச தைரியமில்லையா என்று கடுமையாக சாடினார்.

மக்களவையில் இருந்து 24 அதிமுக எம்.பிக்கள் 5 நாட்களுக்கு இடை நீக்கம்!

மக்களவையில் இருந்து 24 அதிமுக எம்.பிக்கள் 5 நாட்களுக்கு சஸ்பென்ட்மாலைமலர்: மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக அதிமுகவை சேர்ந்த 24 எம்.பிக்களை 5 நாட்களுக்கு இடை நீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். புதுடெல்லி மக்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்கள் 5 நாட்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயர் உத்தரவை மீறி தொடர் அமளியில் ஈடுபட்டதாக அதிமுகவைச் சேர்ந்த 24 எம்.பிக்கள் 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 374ஏ விதிப்படி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா?

Devi Somasundaram : இந்த தகவல சரியா
தெரிஞ்சுக்காம எழுத வேணாம்னு
ரெண்டு நாளா பேசாம இருந்தேன்...கொளத்தூர் மணி அண்ணன் தந்தார்ன்னு சொல்லி ஒரு அறிக்கை முகனூல் முழுக்க சுத்துது ..இதை மணி அண்ணன் தான் தந்தாரான்னு அந்த அமைப்ப சேர்ந்த சிலரிடம் கேட்டேன்..இதோ கேட்டு சொல்றேன் தேவின்னு சொன்ன யாரும் இது வரை பதில் தர வில்லை ..
இந்த அறிக்கையை கொளத்தூர் மணி அண்ணன் வெளியிட்டதா எந்த உறுதியான தகவலும் இல்லை...ஒரு வேளை யாராவது உறுதி படுத்தினா அதன் பின் அதற்கு பதில் சொல்றேன்
.கெளசல்யா எவிடன்ஸ் கதிர் தலைமைல தான் நேற்று வரை செயல் பட்டார் . சக்திய காதலித்த போதும் எவிடன்ஸ் ஆதரவில் தான் இருந்தார் ..
ஆனா இன்று சக்தி கொளத்தூர் மணி அண்ணன் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு காதலிச்ச மாதிரியும், மேட்டர் செய்த மாதிரியும் இவர்கள் அறச்சீற்றத்தை பார்த்தா நாட்ல பெண்களுக்கு இத்தனை ஆதரவும் பாதுகாப்புமான்னு புல்லரிச்சு போவுது..