சனி, 31 மார்ச், 2012

சசியை பற்றி போட்டுகொடுத்ததையே ஜெயா சசியிடம் சொல்லிவிடுவாரோ அமைச்சர்கள் நடுக்கம்


சசிகலா அறிக்கையின் பின் கிடுகிடு அமைச்சர்கள் மீது… ‘அதே கண்கள்’

Viruvirupu
அ.தி.மு.க. வி.ஐ.பி.-கள் இப்போது ‘சசிகலா’ என்று உச்சரிப்பதையே நிறுத்தி விட்டார்கள். அடாடா, அவரை அதற்குள் மறந்து விட்டார்களா என்று அவசரப் படாதீர்கள். பவ்வியமாக, ‘சின்னம்மா’ என்று உச்சரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். அமைச்சர்கள் நடுக்கம், சசியை பற்றி போட்டுகொடுத்ததையே ஜெயா சசியிடம் சொல்லிவிடுவாரோ ?
சீனியர் அமைச்சர்கள் உட்பட ஓவர்நைட்டில் சின்னம்மா பாராயணத்துக்கு தாவிய காரணம், சின்னம்மாவின் ‘சகோதரியே..’ அறிக்கைதான்.

கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தப்படும் அயோக்கியத்தனங்கள்

கடவுள் என்பது என் தனி விருப்பம். அதில் தலையிட உனக்கு உரிமையில்லைஎன்று சொல்வது சரியா, அப்படி சொல்பவர்களை என்ன செய்வது?
- ராஜன்
__________________________________________
அன்புள்ள ராஜன்,
கடவுள் நம்பிக்கை குறித்து பார்க்கும் முன் – இந்த ‘தனி’ விருப்பம், ‘தனிப்பட்ட’ நம்பிக்கை, ‘தனிப்பட்ட’ வாழ்க்கை என்பதைக் குறித்து பார்த்து விடுவோம். கடவுளை விடுங்கள், நாம் நமது வாழ்வில் கற்றுக் கொள்ளும் நல்லது – கெட்டது, புனிதமானது – புனிதமற்றது, சரி – தவறு என்பதை நாம் எங்கேயிருந்து கற்கிறோம்? நமது வாழ்வை வழிநடத்திச் செல்லும் ‘தனிப்பட்ட’ அறம் சார்ந்த விழுமியங்களை எப்படி கட்டமைத்துக் கொள்கிறோம்? இவையனைத்தும் ‘தனிப்பட்ட’ / ‘சொந்த’ முறையில் என்று நம்புகிறீர்களா?
கருத்துக்களும், உணர்ச்சிகளும், நம்பிக்கைகளும் நமது மனதின் அடியாழத்திலிருந்து சுயம்புவாய்த் தோன்றி விடுகிறதா என்ன? ஆப்கானிலும், ஈராக்கிலும், போஸ்னியாவிலும்,  ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக வீசப்படும் குண்டுகளால் உடல் கிழிந்து பிய்த்து எரியப்படும் மனித உடல்கள் நமக்கும் ஒரு அமெரிக்கனுக்கும் ஒரே விதமான உணர்ச்சியையா உண்டாக்குகிறது?

Pepsi Coke Maggi Kfc சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Kfc Pepsi Mcdonalds Pizza
 
புதுடெல்லி : குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அடிமைப்பெண் சசிகலா மீதான நடவடிக்கையை ரத்து செய்தார் ஜெயலலிதா

சென்னை: உடன்பிறவா சகோதரி சசிகலா மீதான கட்சி ரீதியான ஒழுங்குநடவடிக்கைகளை அதிமுக பொதுச்செயலாலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவரை அதிமுகவிலிருந்து நீக்கிய நடவடிக்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளார். அடிமைப்பெண்
அதே நேரத்தில் சசிகலாவின் ஒரு டஜன் உறவினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்தும் சசிகலா வெளியேற்றப்பட்டநிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு "அக்கா" ஜெயலலிதாவுக்காக "எதையும்" தியாகம் செய்யத் தயார் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆதிக்க சாதியை பாதுகாக்கும் போலீசும் அதிகார வர்க்கமும்

தாழ்த்தப்பட்டவரை கொடியேற்ற விடாமல் தீண்டாமையை அனுசரித்த கள்ளர் சாதிக் கும்பலை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டிய போலீசு கட்டப்பஞ்சாயத்து பேசியுள்ளது

தனிச்சுடுகாடு, இரட்டைக்குவளை எனத் தெளிவாகத் தெரியும்வண்ணம் தாழ்த்தப்பட்டோர் மீது ஏவப்படும் தீண்டாமைக் கொடுமை, பல புதிய வடிவங்களை எடுத்தவண்ணம் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கருவடத்தெரு சிற்றூரில் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று அது அரங்கேறியுள்ளது.

கிரிமினல்கள் நிறைந்த பார்லிமென்டை நான் மதிக்க முடியாது,அன்னா குழு அரவிந்த் கெஜ்ரிவால்

காசியாபாத் :""கிரிமினல் பின்னணியுடன் கூடிய எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்டை நான் மதிக்க முடியாது,'' என, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், "பார்லிமென்ட் எம்.பி.,க் களில், 163 பேருக்கு எதிராக, கொடூர குற்றங்கள் புரிந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கற்பழித்தவர்கள், கொலைகாரர்கள் மற்றும் கொள்ளையடித்தவர்கள் எல்லாம் பார்லிமென்டில் அமர்ந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில், ஜன்லோக்பால் மசோதா நிறைவேறும்' என, தெரிவித்திருந்தார்.கெஜ்ரிவாலின் இந்தக் கருத்துக்கு பார்லிமென்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்கள் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.

வெளிமாநில கூலிப்படை ஊடுருவலா? ராமஜெயம் கொடூர கொலை?

திருச்சி: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி, ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதத்தை வைத்து பார்க்கும்போது, அதை செய்தவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பலாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ராமஜெயம், நேற்று முன்தினம் காலை வாக்கிங் செல்லும்போது கடத்தி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கல்லணை செல்லும் வழியில், திருவளர்ச்சோலை என்ற இடத்துக்கு முன் சாலையோர முட்புதரில், கொலையாளிகள் வீசிவிட்டு சென்றனர். ராமஜெயம் உடல், போலீசாரால் மீட்கப்பட்டு, நேற்று முன்தினம் பிரேத பரிசோதனைக்குப் பின், நேற்று காலை 11 மணிக்கு திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.கொலை செய்யப்பட்ட ராமஜெயம், எந்த விதத்திலும் தப்பிவிடக்கூடாது என்று அதீத முன்னெச்சரிக்கையாக கொலையாளிகள் செயல்பட்டுள்ளனர். அவரது கை, கால், முட்டிக்கால் ஆகிய இடங்கள் கட்டுக்கம்பி கொண்டு கட்டியும், டேப்பால் இறுக்க சுற்றியும் உள்ளதிலிருந்து, கொலையாளிகளின் செயல் அப்பட்டமாகி உள்ளது.வாயில் துணியை வைத்து அடைத்து, கட்டையால் அடித்தும், உயிர்பயத்தை ஏற்படுத்தி, மிகவும் கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்

பெங்களூரு:கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.,யான சங்கர் பிதரி, வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது, சதாம் உசேன், முகமது கடாபியை விட மோசமாக நடந்து கொண்டவர். எனவே, அவருக்கு டி.ஜி.பி., பொறுப்பு வழங்கப்பட்டது சரியல்ல என்று, கர்நாடக ஐகோர்ட், பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.,யாக சங்கர் பிதரியை நியமித்ததை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பிரிவு டி.ஜி.பி., அப்துல் ரஹ்மான் இன்பேன்ட், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (சி.ஏ.டி.,) வழக்கு தொடர்ந்தார்.

வெள்ளி, 30 மார்ச், 2012

பணிப்பெண்ணை வீட்டில் பூட்டிவிட்டு வெளிநாடு சென்ற Dr தம்பதி

டெல்லி: 13 வயது பணிப்பெண்ணை வீட்டில் பூட்டிவிட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காங்குக்கு 6 நாள் பயணமாக சென்ற தம்பதியினரின் கொடூரச் செயல் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
வீட்டில் வைத்து பூட்டப்பட்ட அந்த சிறுமி ஜன்னல் ஒன்றைத் திறந்து உதவிகோரி கூக்குரல் எழுப்பியதும்தான் அவர் வீட்டில் அடைபட்டுக் கிடந்தது அனைவருக்கும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த சிறுமி காப்பாற்றப்பட்டார். அவரது உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.
இதில் கொடுமை என்னவெனில் தம்பதியர் இருவருமே மருத்துவர்கள்தான்!
வெளிநாடு திரும்பிவிட்டு வந்து சிறுமியின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக வீட்டுக்குள் காமிராவையும் பொருத்தி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து தரகர்கள் மூலம் இந்த சிறுமி கொண்டுவரப்பட்ட நாள் முதல் ஒரு பைசா சம்பளமும் கூட கொடுக்கவில்லையாம்..

பார்ப்பன – பனியா கும்பல்தான் கொள்ளையடிக்கும் கூட்டமாக

கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா?
பர்மா பஜாரில் லுங்கியும் சென்ட் பாட்டிலும் விற்கும் முஸ்லிமைக் காட்டி ”பார் முஸ்லிம்தான் கடத்தல்காரன்” என்கிறது இந்து முன்னணி.

”இராமநாதபுரம் கீழக்கரையில் தொடங்கி பம்பாய் தாவுத் இப்ராஹிம் வரை, கடத்தல் போன்ற சட்ட விரோதத் தொழில்களில் முசுலீம்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்.”
- இந்து முன்னணியின் மேடைகளிலும், ஆர்.எஸ்.எஸ்.-இன் ‘ஷாகா‘க்களிலும் அடிக்கடி வலியுறுத்தப்படும் ஒரு அவதூறு
மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஆமாம் உண்மைதானே’ என்று தோன்றும்.

Ilayaraja.சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்தார் மரி மரி நின்னே.

நான் தேவன்டா’ சிவாஜியின் பெருமை-‘கண்ணதாசன் குழந்தை மாதிரி’-  இளையராஜா மட்டும்…

நீங்கள் ஆதரிக்கும் இளையராஜா பிராமண ஆதரவாளராக தானே இருக்கிறார்? அவரை மட்டும் விமர்சிக்க மறுப்பது ஏன்
-தமிழ்மகன், திருநெல்வேலி.
இதுகுறித்து நான் ஏற்கனவே பல முறை விளக்கி இருக்கிறேன். தங்கம் வாசர்களுக்கு அதை மீண்டும் தருகிறேன்.
தமிழ்நாடு கடவுளையே கடுமையாக விமர்சித்த பூமி. அப்படியிருக்கையில் இளையராஜா மட்டும் விமர்சனங்களுக்கு விலக்கானவர் இல்லை.
99 சதவீதம் இளையராஜா நம்மோடு இசை மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு சதவீதமே அவரின் வார்த்தைகள் நம்மை சேர்ந்திருக்கும். 99 சதவீதத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதவர்கள்,

சங்கரராமன் கொலை வழக்கு : ஜெயேந்திரர் நேரில் ஆஜராக உத்தரவு


புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஏப்ரல் 9ம் தேதி ஜெயேந்திரர் நேரில் ஆஜராக வேண்டும் என புதுவை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே ஜெயேந்திரர், புதுவை தலைமை நீதிபதி ராமசாமி ஆகியோர் போனில் உரையாடியதாக செய்தி வெளியானது. இதையடுத்து சவுந்தரராஜன் என்பவர், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்பாக சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.

கொலையுண்ட ராமஜெயத்தின் எதிரிகள் பட்டியல் மகா நீளம்

ராமஜெயம் கொலை: போலீஸ் ட்ரேஸ் பண்ணிய கடைசி போன் கால்!Viruvirupu,

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 24 மணி நேரம் ஆகிவிட்ட நிலையில், திருச்சி போலீஸ் இன்னமும் விசாரணை நிலையிலேயே இருக்கிறது. அரசியல் காரணமா என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள் என்றாலும், தொழில் போட்டி அல்லது முன்விரோதம்தான் அநேகமாக காரணமாக இருக்கும் என்று திருச்சி போலீஸ் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.இந்த கொலை விசாரணைக்காக, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறுகிறது காவல்துறை.
திருச்சி மாவட்ட தி.மு.க. அளவில், நேருவும், அவரது கொல்லப்படட தம்பி ராமஜெயமும் அசைக்க முடியாத சக்திகளாக இருந்தவர்கள். அசைக்க முடியாத சக்தி என்றால் எல்லா விதத்திலும்தான்… அரசியலில் இருந்து, அடிதடி வரை!

உடலை பிளேடால் கிழித்து பி.இ. மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

பெரியபாளையம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 3ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தனது உடலை பிளேடால் கிழித்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியபாளையம் அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பி.இ. 3ம் ஆண்டு படித்து வந்தார். அவர், சக மாணவர்கள் 3 பேருடன் சேர்ந்து பெரிய பாளையம் வ.உ.சி.நகரில் குமார் என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார்.
நேற்று அவருடன் தங்கியிருந்த மாணவர்களில் 2 பேர் பரீட்சை எழுத சென்னைக்கும், இன்னொருவர் கல்லூரிக்கும் சென்றுவிட்டனர். வெங்கடேஷ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார்.

ஒசாமா Bin Laden பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம் வந்தார் மனைவி வாக்குமூலம்

நியூயார்க்: அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் முழுமையான சுதந்திரத்துடன் ஒசாமா பின்லேடன் வலம் வந்ததாக அவரது இளம் மனைவி அமல் அகமது அப்துல்பதே வாக்குமூலம் அளித்துள்ளார்
9 ஆண்டு காலம் பாகிஸ்தானில் முழு சுதந்திரத்துடன் ஒசாமா வலம்வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரிடம் ஒசாமாவின் இளம் மனைவி அப்துல்பதே அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:

திமுகவினர் பெரும் வன்முறை- பிரேதப் பரிசோதனைக் கூடத்தை சூறையாடினர்!

ராமஜெயம் கொலையால் கடும் ஆத்திரமடைந்த திமுகவினர், திருச்சி அரசு மருத்துவமனையில் புகுந்து அங்கிருந்த பிரேதப் பரிசோதனைக் கூடத்தைத் தாக்கி சூறையாடினர். போலீஸார் மீதும் சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்தையும் சீர்குலைத்தனர்.
கே.என்.நேருவின் தம்பியான ராமஜெயம் நேற்று காலை வாக்கிங் சென்றபோது காரில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரற்ற அவரது உடலை திருவளர்ச்சோலை என்ற இடத்தில் வைத்து போலீஸார் மீட்டனர்.

ஜெயலலிதா: இருளர் பெண்களை போலீஸார் பலாத்காரம் செய்யவில்லை

சென்னை: இருளர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அறிகுறி இல்லை என்றும், லாக்கப் மரணத்தில் காவலர்கள் மீது குற்றம் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
லாக்கப் மரணங்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் இரா.அண்ணாதுரை, காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.விஜயதரணி ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் இரா.அண்ணாதுரை 28-ந் தேதி இந்த மாமன்றத்திலே உரையாற்றும்போது, கடந்த 9 மாத கால ஆட்சியில் 11 லாக்கப் மரணங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று கூறியிருந்தார்.

Same Sex Marriage in Punjab



People in India are extremly concerned about what is happening in other's lives. The concept of society there is disgusting. Mny  do things that they otherwise would'nt only for the fear of society. Still  live in a stone age civilization

சசிகலா, மொட்டை அடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர் இப்போது

முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்னரே உருக்கமான அறிக்கையை சசிகலா வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 எனவே முதல்வர் ஜெயலலிதா அறிவுரையின்படியே அவர் அறிக்கை வெளியிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நடப்பது கனவா அல்லது நிஜமா என்பதுதான் நான்கு மாதங்களுக்கு முன்பு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் மீது ஜெயலலிதா எடுத்த அதிரடி நடவடிக்கையின்போது அனைவரின் மனதிலும் நிழலாடிய கேள்வி. காரணம், வரலாறு காணாத வகையில் சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் கூண்டோடு கட்சியை விட்டும் தனது நட்பு வட்டத்தையும் விட்டு நீக்கினார் ஜெயலலிதா.
இந்த நடவடிக்கைக்கு அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஏன் மொட்டைகள் போட்டும் கூட கொண்டாடி மகிழ்ந்தனர்.

பள்ளி ஆசிரியர் கைது மாணவியை பாலியல் பலாத்காரம்


சேலம் மாவட்டம் சினப்பம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 32) இவர் ஆரூர் பட்டியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.இவரிடம் தரமங்கலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் கந்தசாமியின் மகள் கவிதா வயது 19 என்பவர் ஆங்கில சிறப்பு பயிற்சிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

கவிதா தற்போது கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோவை கல்லூரியிலிருந்து கவிதா காணாமல் போய்விட்டார்.
ஆரூர் பட்டி பள்ளிக்கு செல்ல வேண்டிய ஆசிரியர் கணேசனும் காணாமல் போய்விட்டார். இருவரையும் காணவில்லை என்று கவிதாவின் தந்தையார் தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து தாரமங்கலம் போலீசில் ஆஜரான கவிதா, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூட்டி சென்ற கணேசன் ஊட்டி கோவை, மேட்டுப்பாளையம் என்று பல இடங்களில் சுற்றி திரிந்துவிட்டு, என்னை லாட்ஜில் தங்கவைத்து பலவந்தப்படுத்தி உடலுறவு கொண்டார்.
இப்போது, தாரமங்கலத்துக்கு கூடிவந்து உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உன் பெற்றோர் வீட்டுக்கு செல் என்று கையை விரித்து விட்டார்.

ராமஜெயம் இறுதி ஊர்வலத்தில் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் பங்கேற்பு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் 29.03.2012) அதிகாலை நடைப்பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
ராமஜெயத்தின் உடல் இறுதிச் சடங்கிற்காக இன்று (30.03.2012) காலை 10 மணிக்கு தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. திருச்சி காவிரி கரையில் உள்ள ஒயாமாரி சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
இறுதி ஊர்வலத்தில் டி.ஆர்.பாலு, அழகிரி, தயாநிதி மாறன், முல்லைவேந்தன், கி.வீரமணி, நெப்போலியன், திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

பாரதிராஜா படத்தில் மேலும் குழப்பம்!அமிருக்கு பதிலாக மகன் மனோஜ் கே பாரதி.


பாரதிராஜா தனது கனவுப் படமாக அறிவித்து, தனது சொந்த ஊரிலேயே படப்பிடிப்பையும் ஆரம்பித்தது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை தான். ஹீரோவாக நடிக்க முதலில் நடிகர் பார்த்திபன் அழைக்கப்பட்டு அதன் பின் அவர் சரிவராமல் இயக்குனர் அமிரை வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்தார் பாரதிராஜா. 

சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு

www.tamilpaper.net B.R. மகாதேவன் சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் மூன்றாம் ஆயிரமாண்டில் ஆரம்பித்தது. 2600-1900 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. அதன் பிறகு வீழ்ந்தது. பொ.யு.மு. முதல் ஆயிரமாண்டில் கங்கைச் சமவெளியில் ஒரு புதிய நாகரிகம் உருவெடுக்கிறது. மூன்றாம் ஆயிரமாண்டுக்கும் முதலாம் ஆயிரமாண்டுக்கும் இடையிலான காலகட்டம் வேத இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. 
 அப்போது நடந்தது என்ன? அரசியலின் பெருவெளியில் உண்மையின் வேடம் பூண்டபடி முடிவற்று அலைகின்றன அபாயகரமான யூகங்கள். அந்த இரண்டாம் ஆயிரமாண்டு என்பது ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த காலகட்டமாகச் சொல்லப்படுகிறது. குதிரைகளில் ஏறி வந்த ஆரியர்கள் பூர்வகுடிகளான திராவிடர்களைக் கொன்று அவர்களுடைய நகரங்களை நிர்மூலமாக்கினர். வேத கலாசாரத்தை இந்தியாவில் புகுத்தினர்.

தினமலர் அழுகிறது ஜெயாவின் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமாம்

(செல்விக்காக தன்னோட திருமதி பட்டத்தையே விட்டு கொடுக்க தயாராயிட்டாரே சசிகலா ?)அக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள் தான்' என, சசிகலா வெளியிட்ட அறிக்கையை தயாரித்ததே, சசிகலாவின் உறவினர்கள்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் நீக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பின், சசிகலா, திடீரென நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த அறிக்கையின் பின்னணி குறித்த தகவல்கள், இப்போது வெளிவரத் துவங்கியுள்ளன. போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின், சசிகலா, சென்னை தி.நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். அந்த வீட்டில் தான், கடந்த சில நாட்களாக சசிகலாவின் உறவினர்கள் ரகசிய ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்குமோ?மெய்வழிச் சாலையில் மெய்யாக நடப்பது என்ன?

புதுக்கோட்டையில் உள்ள மெய்வழி அனந்தர்களுக்குள் ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை இப் போது வீதிக்கு வந்துவிட்டது.
அனந்தர்கள் யார்?
அனந்தர்கள் என்பவர்கள்  புதுக்கோட்டையில் தொடங்கிய ஒரு மதத்தைப் பின்பற்றுவதாகச் சொல் லிக் கொள்பவர்கள் ஆவர். இவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக் கிறார்கள். அதையும் தாண்டி தொழில் நிமித்தமாக மற்ற மாநி லங்களிலும் வசித்து வருகிறார்கள் என்ற போதிலும் அவர்களின் கொள் கைகளைப்பற்றிக் கேட்டால் சிறுவர் களுக்குக்கூட சிரிப்பு வந்து விடும். மறலி கைதீண்டா சாலை ஆண்ட வர்கள் மெய்மதம் என்பதுதான் அவர்களது மதத்திற்குப் பெயர்.
இதுவரை நாம் கேள்விப்பட்டது இந்து, இஸ்லாம், கிறித்தவம், சீக்கியம், பாரசி போன்றவைதான். ஆனால் இவர்கள் மட்டும் இத்தனை நீளமான ஒரு மதத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மறலி என்றால் சாவு என்று பொருளாம். கைதீண்டா என்ற பொருளில் சாவு இவர்களை நெருங்காதாம். சாலை ஆண்டவர்கள் என்றால் இந்த மதத்தை உருவாக் கியவராம். மெய் மதம் என்றால் உண் மையான மதமாம். அந்த மதத்தில் உள்ளவர்கள் அனந்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களது உண்மை என்ன என்பதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்து கொண்டிருக்கிறதே. விரைவில் மற்ற அனைத்தும் ஊடகங்களில் வரப்போகிறது என்பதுதான் உண்மை.

சென்னை துப்பரவுக்கு மீண்டும் தனியார் நிறுவனங்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளை சுத்தப்படுத்தவும், வளாகங்களை பராமரிப்பதற்கும் தனியார் நிறுவனங்கள் நியமிக்கப்பட உள்ளன.
அதற்கான ஆணை, விரைவில் பிறப்பிப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. குறைந்தளவில் பணியாளர்கள்: தமிழகத்தில், 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட, 245 மருத்துவமனைகள் உள்ளன. ஒவ்வொரு மருத்துவமனையிலும், துப்புரவு பணியாளர், வார்டு பாய் உள்ளிட்ட பணியாளர்கள், அரசால் நியமிக்கபட்டுள்ளனர்.

Anna university விடுதியில் என்ஜினியரிங் மாணவர் தற்கொலை-சாவில் மர்மம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் என்ஜினியர் மாணவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த தேவராஜபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(24). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ. பாடப்பிரிவில் 3ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் உள்ள 19வது பிளாக்கில் தங்கி இருந்த மணிகண்டனின் அறை நேற்று உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.சகமாணவர்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனையடுத்து விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அறையின் கதவை உடைத்து பார்த்த போது, அறையில் இருந்த மின்விசிறியில் வேட்டி மூலம் தூக்கு போட்டு மணிகண்டன் தற்கொலை செய்து இறந்து கிடந்தார்.

இந்தியாவில் பெண்கள் வைன் அருந்துவது முன்புபோல பெரிய விஷயமல்ல.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடந்த வருடம் இந்தியாவில் வைன் உற்பத்தி 12 லட்சத்து 50 ஆயிரம் பாரல்களாக, அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலுள்ள இந்த அழகான மலைப்பிரதேசத்தைப் பாருங்கள். இதன் பெயர் குண்டமகெரே. கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது. பச்சைப் பசேல் என்றுள்ள இதன் அடிவாரத்தில் தலையில் ஒருவித முண்டாசு அணிந்த விவசாயிகள் தினை, சோளம் போன்ற இந்தியாவின் சம்பிரதாயமான தானியங்களையும், பட்டுப்புழுக்களை வளர்க்க உதவும் முசுக்கொட்டை மரங்களையும் வளர்த்து வந்ததை நீங்கள் கண்டிருக்கலாம்.
அப்படியானால் நீங்கள் பல வருடங்களுக்குமுன் அங்கே போயிருப்பீர்கள். உங்களை அப்டேட் பண்ணவேண்டும்!

வியாழன், 29 மார்ச், 2012

நடிகர் சங்கத்தில் 30 கோடி ரூபாய் அளவுக்கு பேரம்

சரத்குமாரின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டோம். அவரது ஃபோன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது.டிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது? என்கிற ஆவேச கேள்வி, ஸ்டார் நடிகர்களிலிருந்து சாதாரண நடிகர்கள் வரை சத்தமில்லாமல் எதிரொலிப்பதுதான் கோடம் பாக்கத்தின் ஹாட் டாபிக்.

தென்னிந்திய நடிகர்-நடிகையர்களின் நலன்களுக்காக 1952-ல் உருவானது தென்னிந்திய நடிகர் சங்கம். தங்களுக்கென ஒரு சங்கம் வேண்டுமென தீவிர முயற்சி எடுத்த எம்.ஜி.ஆரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சென்னை அபிபுல்லா சாலையில் ஒரு ஏக்கர் ( 18 கிரவுண்ட்) நிலத்தை வாங்கினர்.
அந்த இடத்தில் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சிவாஜி, வங்கி மூலம் கடன் பெற்று சங்கத்திற்காக பிரம்மாண்டமான கட்டி டத்தை கட்டினார். சங்கத்தின் வளாகத்திலேயே மீட்டிங் ஹால், டப்பிங் தியேட்டர் உள்ளிட்டவை களையும் உருவாக்கினார் சிவாஜி. அவரின் அய ராத உழைப்பினால் உருவானதுதான் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம்.

மலையாள ஆவி கதை தமிழுக்கு மொழி மாற்றம்

;மலையாளத்தில் வினயன் இயக்கிய படம் யக்ஞையும் யானும். காதல் ஜோடிகளை வில்லன் கொல்ல, அந்த ஆவிகள் மோதிரம் வழியாக ஹீரோவின் உடம்புக்குள் புகுந்து தன்னை கொன்றவர்களை எப்படி பழிவாங்குகிறது என்ற கருவை மையமாக வைத்து உருவானது.
இப்படம் தெலுங்கில் லங்கேஸ்வரி என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழில் ஜக்கம்மா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.காதல் ஜோடி ஆவிகளாக கவுதம், மேக்னா ராஜ் நடித்துள்ளனர். வில்லன்களாக தேவ், திலகன், ராஜ் நடித்துள்ளனர். இது பற்றி பட வசனகர்த்தா பாலா.ஆர் கூறும்போது, மலையாளத்தில் இப்படத்திற்காக அமைக்கப்பட்ட இசை எபெக்ட் பகுதிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, புதிதாக 15 நாட்கள் சவுண்ட் மிக்ஸிங் செய்யப்பட்டுள்ளது. தமிழுக்கு சில பகுதிகள் ரீ ஷூட் செய்யப்பட்டு இணைக்கப்பட்டது. மோகினி வேடத்தில் கவர்ச்சியாக  நடித்திருக்கிறார் மேக்னா ராஜ் என்றார்.

Gujarat உயிர்தப்பிய ஒருவரின் தைரியம்

அகமதாபாத் ஷா இ ஆலம் நிவாரண முகாம் 10,000 க்கும் அதிகமான தப்பிப் பிழைத்தவர்களுக்கான மிகப்பெரிய முகாம். அதன் முற்றத்தில் சிதறிக் கிடக்கும் மனித எச்சங்களில் சாய்ரா (வயது 12), அப்ஸனா (வயது 11), நைனா (வயது 12), அஞ்சு (வயது 12 ), ருக்சத் (வயது 9), நீலோபர் (வயது 10), நீலோபர் (வயது 9), ஹேனா (வயது 11) ஆகியோரும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் நரோடா பாடியாவில் தப்பிப் பிழைத்தவர்கள். எந்தக் குழந்தையும் பார்க்கக் கூடாதவற்றை அவர்கள் பார்த்திருக்கிறார்கள், எந்தக் குழந்தையும் கற்றிருக்கக் கூடாத வார்த்தைகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
“பலாத்கார்” (பாலியல் வன்முறை) -என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியும். “மெயின் பதாவூம் தீதீ?” (நான் சொல்லட்டுமா, அக்கா?), “பலாத்கார் கா மத்லப் ஜப் அவுரத் கோ நங்கா கர்தே ஹைன், அவுர் பிர் உசே ஜலா தேத்தே ஹைன்” (பாலியல் வன்முறை என்றால் ஒரு பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு, பிறகு எரிக்கப்படுவது). அதன் பிறகு அவள் தரையை நோக்கி வெறித்துப் பார்க்கிறாள். ஒரு குழந்தை மட்டுமே இப்படி பேச முடியும்.

சேது திட்டம்-நிறைவேற்ற கோரி திமுக அமளி-தேசிய சின்னமாக்க அதிமுக அமளி

டெல்லி: சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கை துரிதமாக்கக் கோரியும், அத்திட்டத்தை மீண்டும் துவங்கக் கோரியும் திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி அதிமுகவினரும் கோஷமிட்டனர். இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கை துரிதமாக்கக் கோரி இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக, தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு எழுந்து, சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார்.
பதிலுக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் எழுந்து முதல்வர் ஜெயலலிதா கூறியபடி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றார். இதற்கு பாஜகவினரும் ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.

சூப்பர் சிங்கர் கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போலவே விஜய் டிவி

ளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார்.
”ஆராரிரோ..நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு…”
அரங்கிலிருப்பவர்கள் முதல் நடுவர்கள் வரை அவரவர் அன்னையின் தியாகத்தை எண்ணி உருகியபடி இருக்கின்றனர். பாடலின் நடுவில், நடுவர்களில் ஒருவர் இடைமறிக்கிறார்.
“ஒரு நிமிசம், இதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க, சந்தோஷ்?”
”அம்மாவுக்கு, சார்” – போட்டியாளர்
“உன் அம்மா எங்க?” – விட்டால் அழுது விடுவது போன்ற உருக்கமான குரலில் நடுவர்.
”அம்மா வரலை, அம்மாவுக்கு உடம்பு முடியாததால, வந்து உட்கார முடியாது. .அதனால வரலை.” – போட்டியாளர்.
“அப்டியா? நிஜம்மா?” – போலித்தனமான இரக்க வார்த்தைகளில் நடுவர்.
”ஆமா, நிஜமாத்தான் சார்” – பாடலை பாதியில் நிறுத்தச் சொன்ன கலக்கத்துடன் பதிலளிக்கிறார் போட்டியாளர்
“இங்கே பாருங்க, ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கு” என்று நடுவர்  சொன்னதும், அரங்கமே திரையில் பார்க்கிறது. அங்கு, வாசலுக்கு வெளியே ஸ்ட்ரெச்சரிலிருந்து ஒரு அம்மாவை இறக்குகிறார்கள்.

Sasikala:300 ஆவணங்களைக் கொடுங்க, அப்பத்தான் தெளிவா பதில் சொல்ல முடியும்

பெங்களூர்: சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றத்தி்ல ஆஜராகி படு நிதானமாக கேள்விகளுக்குப் பதிலளித்து ஏற்கனவே நீதிபதியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் சசிகலா, தற்போது புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 300 ஆவணங்களைத் தனக்குத் தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா ஆஜராகி நான்கு நாட்கள் வாக்குமூலம் அளித்தார்.
தற்போது சசிகலா ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார். அவரிடம் கேட்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளைத் தயார் படுத்தி வைத்திருந்த அரசுத் தரப்பு சசிகலா பதில் சொல்கிற வேகத்தைப் பார்த்து கடுப்பாகி நிற்கிறது.
ஒவ்வொரு கேள்விக்கும் நிறுத்தி நிதானமாக யோசித்தபடி பதிலளித்து வருகிறாராம் சசிகலா. இது நீதிபதி மல்லிகார்ஜுனாவையே எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது.

சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான' அதிமுகவினர்!

சென்னை: எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று சசிகலா நீக்கப்பட்டபோது சித்தாந்தமாக பேசி சிலாகித்துப் போன அதிமுகவினர் இப்போது எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டதே என்று திகிலடித்துப் போய் நிற்கின்றனராம்.
காரணம், சசிகலாவின் மறு வருகை.. இவர்கள் இப்படித்தான் பேசுவார்க
ள், பின்னர் சேர்ந்து கொள்வார்கள், இது என்ன புதுசா என்றுதான் 4 மாதத்திற்கு முன்பு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கூண்டோடு அதிமுகவை விட்டும் போயஸ் கார்டன் வீட்டை விட்டும் ஜெயலலிதா தூக்கியபோது அனைவருமே நினைத்தார்கள். இருந்தாலும் ஜெயலலிதாவின் செயல்பாட்டு வேகத்தைப் பார்த்த அதிமுகவினரும், பொதுமக்களும், பரவாயில்லையே உண்மையிலேயே சசிகலாவை துரத்தி விட்டு விட்டாரே என்றுதான் நினைத்தனர்.

ராமஜெயத்தை கொன்றது யார்... 3 தனிப்படைகள் அமைத்து வேட்டை

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தை படுகொலை செய்த கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக திருச்சி மாநகர ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர் மீது பல நில அபகரிப்பு வழக்குகள் தற்போதைய அதிமுக ஆட்சியில் போடப்பட்டுள்ளன. இதில் ஜாமீனில் விடுதலையாகி வெளியே இருந்து வந்தார் ராமஜெயம்.
பல்வேறு தொழில்களை அவர் திருச்சியை மையமாக வைத்து செய்தும் வந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் வாக்கிங் சென்றபோது சிலரால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி வெட்டிப் படுகொலை!

Ramajeyam
திருச்சி: முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்திக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் கல்லணையை ஒட்டி புதர்ப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி வட்டாரத்தில் முக்கிய திமுக தலைவர் கே.என்.நேரு. முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது தம்பி ராமஜெயம். இவரது வீடு தில்லைநகர் பகுதியில் உள்ளது. ராமஜெயம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்.அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் மீதும், கே.என்.நேரு மீதும் ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்தன. குறிப்பாக நில மோசடி வழக்குகள் நிறைய போடப்பட்டன. இந்த வழக்குகளில் கைதாகி ஜாமீனி்ல் விடுதலையாகியிருந்தார் ராமஜெயம்.

2050-ல் இந்தியா பொருளாதாரத்தில் முதலிடம் உலக அளவில்

India
டெல்லி: உலக அளவில் 2050-ல் இந்தியாவின் பொருளாதாரத்தில் முதலிடம் பெறும் என்று சிட்டி வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
(இம்முறை உலக அளவில் அதுவரை கம்முன்னு இருங்க).
ஆசியா மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார எதிர்காலம் பற்றிய இந்த அறிக்கையில், வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பியநாடுகளின் பொருளாதார நிலையானது 2050-ல் கடும் சரிவை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2010-ல் 41 சதவீதமாக இருக்கும்இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது 2050-ல் 18சதவீதமாக குறைந்துவிடும் என்கிறது அந்த அறிக்கை.

மீண்டும் உடன்பிறவா சகோதரிகள்…நிஜமான காரணம்

“மிடாஸ் மோகன் கைதுதான் திருப்புமுனை” என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ, “சசிகலா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடைசி சில தடவைகள் ஆஜரான போதே, கதையில் திருப்பம் வந்து விட்டது” என்கிறார்கள்.
  விளக்கம் எப்படியோ, காரணம் எப்படியோ, சசிகலாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது. மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சசிகலாவின் உருக்கமான அறிக்கை இன்று (புதன்கிழமை) எந்த மீடியாவில் வெளியானது என்பதைக் கவனியுங்கள், அதுவே சொல்லும் ஆயிரம் கதைகள். “அவருக்கு (ஜெயலலிதாவுக்கு) நான் கனவிலும் துரோகம் நினைத்தது இல்லை” என்று கூறும் சசிகலாவின் அறிக்கை ஜெயா டி.வி.யில் படிக்கப்பட்டது.
போயஸ் கார்டனில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காமல், ஜெயா டி.வி.யில் இப்படியொரு அறிக்கை வெளியாக முடியாது.

நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோவில்கள்

கோபியில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த அய்ம்பது வருடமான விநாயகன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளால் பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றப்பட்டன.
இதுபோன்று சென்னையிலும் சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக கட்டப்பட்ட கோவில்கள் அகற்றப்படவேண்டும்.

தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் எத்தனை பேர்? கணக்கெடுப்பு

வறுமைக்கோட்டின் கீழ் வராதவர் யார், என்ற கேள்விக்கு நாள் ஒன்றுக்கு, 29.62 ரூபாய் வருமானம் உடையவர்கள் என்ற கருத்தை, திட்ட கமிஷன் கூறியது, தற்போது பெரிய சர்ச்சையாக பேசப்படுகிறது. இரு நாட்களுக்கு முன், 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்ட தகவல்களில், தமிழகத்தில் உள்ள ஏழைகளை அடையாளம் காண சுலபமாக வழி வகுக்கும். மொத்தம், 36 கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட விடைகளில் தொகுக்கப்பட்ட, இக்கணக்கெடுப்பில் தமிழக மக்கள் வசதிகளை எளிதாகக் கண்டறிய சில தகவல்கள் உள்ளன.

பிட்டுப் படம்னா அது பி.ஜே.பிதான்! ‘யோக்கியன்னா’ அது எடியூரப்பாதான்!!

மில்ட்ரீ டிஜிப்ளின்
“பரம் வைபன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம்” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இது ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் தினசரி காலையில் பாடும் பஜனையில் வரும் ஒரு வரி. இதற்கு, ‘பரம வைபவமான நிலையில் உன்னை வைத்திருப்பேன் என் ஸ்வராஷ்ட்ரமே’ என்று பாரதத் தாயைப் பார்த்து பாடுவதாகப் பொருள் சொல்லிக் கொள்கிறார்கள். பாரதத் தாய் பரம வைபவமான நிலைக்குப் போனாளோ என்னவோ – காக்கி டவுசர் கும்பல் பரம வைபவத்தை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாக தினசரி செய்தித் தாள்களின் பக்கங்கள் கோலாகலமாக அறிவிக்கின்றன.
ஒழுக்கம் என்றால் ஆர்.எஸ்.எஸ் – ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒழுக்கம் என்பது தான் அவர்களின் பாரம்பரிய மார்க்கெட்டிங் தந்திரம். இந்த தந்திர மந்திரத்தை தமிழகத்தில் துக்ளக், தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் தவறாமல் ஓதுவது நாம் அறிந்த செய்திதான்.

ஜெயா சசி தோழிகளுக்கு எதுவுமே தெரியாதாமே?

மக்களை எல்லாம் மடையர்களாக மதிக்கும் இந்தம்மா ஆட்சியில் இது ஒன்றும் அதிசயமில்லை. என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் மடையர்கள் இருக்கும்வரை இதுக்கெல்லாம் விமோசனமே கிடையாது.
தினமலரின் அங்கலாய்ப்பை வாசியுங்கள் பார்ப்பானாம் கொக்காம் 
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை. அவை:
* கடந்த மூன்று மாதங்களாக பல செய்திகள் வெளிவருவதால், விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளதாக சசிகலா குறிப்பிட்டுள்ளார். சசிகலாவும் அவரது உறவினர்களும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது தான், செய்திகள் அதிகமாக வெளிவந்தன. அப்போது விளக்க அறிக்கை வெளியிடாமல், செய்திகள் ஓய்ந்த பின், மூன்று மாதங்கள் கழித்து இந்த விளக்கத்திற்கு என்ன அவசியம் வந்தது?

புதன், 28 மார்ச், 2012

விரட்டல், மிரட்டல், கண்ணீர், கெஞ்சல், சரணாகதி, சந்திப்பு… எல்லாம் பிரமை!

சசிகலா மற்றும் அவரது உறவினர்களை கட்சி மற்றும் போயஸ் கார்டனிலிருந்து ஜெயலலிதா விரட்டிவிட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், நம்மிடம் ஒரு மூத்த நிருபர் (அதிமுக அலுவலக பீட் பார்ப்பவர்) சொன்னது, ‘ஆரம்பிச்சிடுச்சி அடுத்த எபிசோட்… ஒரு மூணு மாசத்துக்கு தாங்கும்,’ என்றார் கிண்டலாக!அது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது!

உண்மையில் ஜெயலலிதாவை அறிந்த யாரும் சசிகலா போயஸ் கார்டனிலிருந்து நிரந்தரமாக வெளியேறிவிட்டார் என்பதை நம்பவில்லை. ‘ம்ம்.. நடக்கட்டும்… கொஞ்சநாள் போனதும் ரெண்டுபேரும் ஒண்ணா போஸ் தருவார்கள்’ என்பதுதான் சலூன்கடை அரசியல் ஆர்வலர்களின் பேச்சாகவும் இருந்தது.
ஆனால் இந்த பிரிவுக்குப் பின்னணியில் இருந்த பேரங்கள், உடன்பாடுகள், சமாதானப் படலங்கள் அல்லது ஜோசியக் காரணங்கள் தெரியாமல் அவரவர் இஷ்டத்துக்கு அடித்துவிட்டனர்.

போயஸ் கார்டன் திரும்பினார் சசி?! பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்

சசிகலா புதன்கிழமை (28.03.2012) காலை விடுத்த அறிக்கையில்,
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள். அவருக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. அவர்களின் உறவை துண்டித்து விட்டேன். எம்எல்ஏ, அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும், பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஜெயலலிதாவுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று சசிகலா சந்தித்தார்

மறு ஆய்வு "நேர்மையை" நிரூபிக்க போராடும் ஆ.ராசா?


Raja
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் வழக்கில் ஆ. ராசா தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகள் சிறிது காலத்துக்கு ஆ. ராசாவுக்கு ஆறுதலைத் தரக்கூடியதாக இருக்கும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்தது தொடர்பாகவும் தமது நடவடிக்கைகளை விமர்சித்தும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மீண்டும் ஆராய வலியுறுத்தி முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா மறு ஆய்வு மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தமது தரப்பு வாதங்கள் முன் வைக்க வழங்கப்படாதது என்பது நீதித்துறை நடைமுறைகளை மீறியதுடன் தமக்கு நீதி கிடைப்பதற்கான சூழலை மறுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sasikala:அக்கா' ஜெயலலிதாவின் எதிரிகள் எனக்கும் எதிரிகளே

சென்னை: ஜெயலலிதாவுக்கு நான் எந்த துரோகமும் செய்யவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிரானவர்கள் எனக்கும் எதிரிகளே, என்று திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார் சசிகலா. இந்த அறிக்கையால் பரபரப்பு எழுந்துள்ளது.
முதல் வர் ஜெயலலிதாவின் 'உடன்பிறவா சகோதரி' சசிகலா நடராஜன் கடந்த டிசம்பர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். ஆட்சிக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி அவரும் அவரது உறவினர்கள் மொத்தபேரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

அமைச்சர் ஏ.கே.அன்டனி சிக்கினார், “எனக்கு ஏற்கனவே கதை தெரியும்!”

ராணுவத் தளபதி வி.கே.சிங் இரு தினங்களுக்குமுன் போட்ட குண்டு, மத்திய அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கிவிட்டது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டன், “தனக்கு ஒருவர் லஞ்சம் கொடுக்க முயன்ற விஷயத்தை ராணுவத் தளபதி என்னிடம் தெரிவித்தது உண்மைதான்” என்று தெரிவித்திருப்பது, மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி திஜேந்தர்சிங் என்ற விஷயம், ராஜ்யசபாவில் வெளிப்படையாக பேசப்பட்டு பதிவாகிவிட்டது. திஜேந்தர்சிங் தற்போது மத்திய அரசு தொடர்பான ராணுவ விவகாரங்களில் லாபி செய்யும் நபராக உள்ளார்.

கனிமொழிக்கு ஒரு பதில் கூறுங்க சார்!

டில்லி ஹைகோர்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கனிமொழி எம்.பி. தாக்கல் செய்துள்ள மனு, சி.பி.ஐ.-க்கு எக்ஸ்ட்ரா வேலையைக் கொடுத்துள்ளது. கனிமொழி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டு, ஏற்கனவே நடந்துவரும் 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாகவே அவரது புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. “இந்த வழக்கில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால், வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்பதே கனிமொழி மனுவின் மெயின் கான்ஸெப்ட். அதை சப்போர்ட் பண்ணுவதற்காக இரு விஷயங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தார் அவர்.
அந்த இரண்டுமே, சி.பி.ஐ.-க்கு கொஞ்சம் வில்லங்கமான ஏரியாக்கள் என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம்.

இலவச `சானிட்டரி நாப்கின்' திட்டம்: ஜெ. தொடங்கி வைத்தார்

இலவச `சானிட்டரி நாப்கின்' வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்கிழமை அன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார். இதன் மூலம் 40 லட்சம் இளம்பெண்கள், 7 லட்சம் பிரசவித்த தாய்மார்கள், 700 பெண்கைதிகள் மற்றும் மனநல மருத்துவமனைகளில் உள்ள 500 பெண் நோயாளிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் தடுப்பு
வளர் இளம் பெண்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொற்று நோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைப்பதற்காக ஏழு வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்கி இத் திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா, தொடங்கிவைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான், இந்த திட்டம் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படவிருக்கிறது.

உறவைத் துண்டித்தது இஸ்ரேல்! ஐ.நா மனித உரிமை பேரவையுடனான

ஜெனிவா: இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமைப்புடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமிய நாடுகள் கடந்த வாரம் இத்தீர்மானத்தை கொண்டுவந்தன. அமெரிக்கா மட்டுமே தீர்மானத்தை எதிர்த்தது.
இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

கைதிகளுக்காக திரையிடப்பட்டது விஜய் படம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலம் மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடையே மனிதநேயத்தை வளர்க்கும்;சிறையில் உள்ள கைதிகளுக்கு ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்து வெளியான நண்பன் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்து ரசித்த கைதிகள் இறுக்கம் தளர்ந்து  காணப்பட்டுள்ளனர்.அதன் பிறகு அவர்கள் பல விதமான விளையாட்டுகள் விளையாடி உள்ளனர். தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இந்த படம் போடப்பட்டதாம்.>நண்பன் படம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது போல் கைதிகளாலும் நன்முறையிலேயே  விரும்பப்பட்டுள்ளது.

Jeyalalitha:நானே ஒதுக்கிட்டேன்; உங்களுக்கு என்ன உறவு'

அக்கும்பலை நானே ஒதுக்கிட்டேன். உங்களுக்கு (எம்.எல்.ஏ., க்கள்) அவர்களிடம் என்ன உறவு இருக்கிறது. இதை எவ்வளவோ முறை சொல்லி விட்டேன். இனிமேல் நடவடிக்கை தான்' என, சமீபத்தில் கட்சி எம்.எல்.ஏ., களிடம் முதல்வர் ஜெயலலிதா காட்டமாகக் கூறியுள்ளார்.
சென்னையில் அ.தி.மு.க., கட்சி எம்.எல்.ஏ., க்கள் சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ., க்கள் பங்கேற்றனர்.

சங்கரன்கோவில் மீண்டும் மின்சார வெட்டு!


தினமும் 8 மணி நேர மின்சார வெட்டு. இதனால் கிராமப்புறங்களில் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது. போதிய வருமானம் இல்லாமல் தொழில்களும், தொழிலாளர்களும் முடக்கப்பட்டனர்.தமிழகத்தில் மற்ற பகுதிகளைப் போன்று சங்கரன்கோவிலிலும் இதுதான் நிலைமை.

இப்பிரச்சனைகளுக்கிடையே நடக்கும் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு வாய்ப்பு குறைவு என்பன போன்ற தகவல்கள் உளவுத்துறை மற்றும் கட்சி பொறுப்பாளர்களிடமிருந்தும் அதிமுக தலைமைக்கு தகவல்கள் சென்றன.
இந்த சூழலில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள், மின்வெட்டை முன்வைத்து சூடு பறந்துகொண்டிருந்தன. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு கடந்த 14.03.2012 வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே ஆட்சியாளர்களால் சங்கரன்கோவிலுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.

அமைச்சர் அந்தோணி:வி.கே.சிங் எழுத்து மூலம் புகார் கொடுத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன்

எங்கேயோ இடிக்கிறதே?
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி திஜேந்தர்சிங், தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த விவரத்தை, என்னிடம் ராணுவத் தளபதி ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தார். இருப்பினும், அதை அவர் அந்த நேரத்தில், பெரிதுபடுத்த விரும்பவில்லை. இதற்கான காரணங்கள் எனக்குத் தெரியாது. இவ்விஷயத்தில் நான் நடவடிக்கை எடுத்திருக்கலாம்தான். ஆனால், எழுத்துப் பூர்வமான புகார் எதையும், அந்த நேரத்தில், ராணுவத் தளபதி என்னிடம் தரவில்லை' என்று, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.

ராணுவத் தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக, தனக்கு 14 கோடி ரூபாய் வரை லஞ்சம் அளிக்க முயற்சி நடந்ததாக ராணுவத் தலைமை தளபதி வி.கே.சிங் குற்றம் சாட்டியிருந்தார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான திஜேந்தர்சிங்தான், இந்த பேரத்தில் ஈடுபட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து, நேற்று முன்தினம் பார்லிமென்டில் புயல் வீசி ஓய்ந்த நிலையில், நேற்று ராணுவ அமைச்சர் அந்தோணி விளக்கம் அளித்தார்.

துறையூரில் நில அதிர்வு பெரம்பலூரிலும் பதட்டம்

துறையூர் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில், நேற்று நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியதால், பதட்டம் ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், துறையூர் நகரம் மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில், நேற்று காலை, 10.23 மணிக்கு லேசான நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்தனர். வீட்டிலிருந்த பெண்களும், முதியவர்களும், பெரும் பதட்டமடைந்து, தங்கள் வீடுகளில் இருந்து வீதிக்கு ஓடிவந்து, அக்கம்பக்கத்தினரிடம், நிலஅதிர்வு குறித்து விசாரித்தனர். வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகள் உட்பட இதயநோயாளிகள், இந்த நில நடுக்கத்தில், லேசான பதட்டத்துக்கும், படபடப்புக்கும் உள்ளாகினர். இந்த உணர்வும், பதட்டமும், துறையூர் சுற்றுப் புறங்களிலும் உணரப்பட்டது.

செவ்வாய், 27 மார்ச், 2012

பாரிஸில் நடந்த கொள்ளை முயற்சி! தமிழர்கள் கைவரிசை!!

கடந்த சனியன்று பாரிஸ் நகரில் குட்டி யாழ்;ப்பாணம் என வர்ணிக்கப்படும் லாச்சப்பலில் பிற்பகல் வேளையில் கொள்ளை முயற்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
பாரிசில் பிரபல வர்த்தக நிறுவனமான கோபால் அன் கோ வின் சகோதர நிறுவனத்திலிருந்து பணம் எடுத்துச் செல்லப்பட்டவேளையில் இந்த கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

வெங்காயம்: கலங்க வைத்த கூத்துக் கலைஞன்


பாராட்டுக்குரிய சேரனுடன் ராஜ்குமார்


மனிதர்களை இழிவாக நடத்துகிற மதம், ஜாதி அவைகளின் தொடர்ச்சியான மூடநம்பிக்கை; இவைகளின் மீதான கோபம், வெறுப்பு, பிரபலங்களின், ‘அறிவாளி’களின் முட்டாள்தனத்தால் அவர்கள் மீது ஏற்படுகிற அலட்சியம் என்று பல நிலைகளில் பெரியார் பயன்படுத்திய சொல் ‘வெங்காயம்’.
பல மோசடி மூடர்களின் தோலை ‘உரி’ த்த பெரியார், ‘உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லை’ என்ற அர்த்தத்தில்தான் ‘வெங்காயம்’ என்ற சொல்லை பயன்படுத்தினார்.

ஒரு சொட்டு காவிரி தண்ணீர் கூட தரக்கூடாது: கர்நாடக காங்கிரஸ்


Siddaramaiah
பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் திறந்து விடக்கூடாது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் கர்நாடக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீது கர்நாடக சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது பேசிய சித்தராமையா,

ஐகோர்ட் கண்டனம் மக்கள் நலப்பணியாளர்கள் வாழ்வில் விளையாடுவது ஏன்?


மக்கள் நலப்பணியாளர்கள் வாழ்வில் விளையாடுவது ஏன்?
தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்;
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்காமல் அவர்களது வாழ்க்கையில் விளையாடுவது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் கடந்த நவம்பர் 8ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது. எனினும் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர்.

TN 75% தனிக் குடித்தனம்; 52% வீடுகளில் டாய்லெட் இல்லை!, டி.வி. பார்ப்பதில் நம்பர் 2!


Tamilnadu
சென்னை: இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் வீடுகள் பட்டியல் கணக்கெடுக்கும் பணி கடந்த 2010ம் ஆண்டு தொடங்கியது. தமிழகத்தில் இந்தப் பணியில் சுமார் 1.20 லட்சம் பேர் ஈடுபட்டனர். இந்தக் கணக்கெடுப்பு முடிவடைந்ததையடுத்து இன்று அது தொடர்பான அறிக்கை வெளியிட்டப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையின் தமிழ்நாடு மாநில இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக் கொண்டார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள்” சுமங்கலி திட்டம்!கோவை சூரிய பிரபா மில்: பெண்கள் கொத்தடிமை


சுமங்கலிகோவை குனியமுத்தூர் பகுதியில் சூரிய பிரபா மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை சுமங்கலி திட்டத்தின் கீழ் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்குகின்றனர்.
கோவை சூரிய பிரபா மில்: பெண்கள் தாலியறுக்கும் சுமங்கலி சுரண்டல் திட்டம்!;
கொத்தடிமை வாழ்க்கை
கோவை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களிலோ அல்லது அதிகாலை நேரங்களிலோ தான் குடிதண்ணீர் திறந்துவிடுவது வாடிக்கை. அன்றும் (20. 03. 2012 ) அவ்வாறுதான்  அதிகாலை 4 மணிக்கு கோவை விஜயலட்சுமி மில்ஸ் (கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் குனியமுத்தூர் தாண்டி உள்ள பகுதி) பகுதி மக்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது ”காப்பாத்துங்கள்,  காப்பாத்துங்கள்”  என்று ஆறு இளம்பெண்களின் கதறல் கேட்டது. தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தவர்கள் அந்த இளம்பெண்களை பாதுகாத்து மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

ஜெயமோகனும் மக்கள் பங்கேற்பு முறைகளும்


‘ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாகவும் பூச்சி, புழுக்களை இரையாக உண்டுவாழும் பொத்தை என்ற நன்னீர்மீன் பறவைகளாலோ பிற ஜீவராசிகளாலோ தனக்கான இரை பறிபோய்விடும் என்று தெரிந்தால், அந்நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டு எதையும் பார்க்கவியலாமல் செய்துவிடுமாம். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளை ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயரால் கூப்பிடுவதையும், கலக்குவது என்பது சிலருக்கு, குறிப்பாக அரசதிகார வர்க்கத்திற்கு ராஜதந்திர உத்தியெனவும், கலங்கலிலேயே வாழும் உயிரினங்கள் அக்கலங்கிய சூழலில் எப்படி நிலைத்திருக்க கற்றுக்கொண்டிருக்கின்றன…’ என்ற முன்னுரையுடன், கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவலைப் பற்றிய தனது மதிப்புரையைத் தொடங்குகிறார்  ஜெயமோகன்.

சீனாவில் போலி கோழி முட்டை உற்பத்தி


முட்டையிடும் சீன மனிதர்கள்!/ வேறு வழி இல்லை இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கு தலைப்பிட வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய 'கைத்திறமை' யைக் காட்டி வந்த சீனா தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது.
கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.