மன்மோகன் சிங் அவர்களின் காலத்தில் அன்றைய இலங்கை பிரதமராக இருந்த திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் இது கவனம் எடுத்திருந்தார்.
இந்திய அரசிடம் இது பற்றி பேசியும் இருந்தார் . அந்த பேச்சுவார்த்தை ஆய்வு நிலையிலேயே இருந்தது. திரு ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கோரிக்கை இந்திய ஆட்சியாளரிடம் என்ன விளைவை அப்போது ஏற்படுத்தி இருந்தது என்பது தெரியவில்லை . ஆனாலும் இது பற்றி ஆய்வு செய்வதாக கூறியிருந்தனர் .
ரணிலின் ராமேஸ்வரம் தலைமன்னார் ரயில் பாதை என்பது நடக்கவே முடியாத ஒரு திடடம் என்று கூற முடியாது. இது பற்றி 1893 யிலேயே ஆங்கிலேயர்கள் சிந்தித்து இருக்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான செய்தியாகும் . இது பற்றிய ஒரு முக்கிய குறிப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து அப்போது வெளியான கத்தோலிக்க பாதுகாவலன் அல்லது Jaffna Catholic Guardian என்ற இதழில் வெளியாகி உள்ளது