நக்கீரன் செய்திப்பிரிவு : திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள விஸ்வேஸ்வரசும்வாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களில் இன்று தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு,
“தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, கோயில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டும் என இருக்கின்ற திருக்கோயில்கள், குடமுழுக்குக்காக எடுத்துக் கொண்ட பணி தொய்வடைந்து உள்ள கோயில்கள், அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு, குடமுழுக்கு பணிகளை விரைவுபடுத்த வகையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சனி, 24 ஜூலை, 2021
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் 100 நாட்களில் முழுமையாக செயல்படுத்தப்படும்..” - அமைச்சர் சேகர்பாபு
இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்
kuruvi.lk : ரிஷாட் வீட்டில் வேலை செய்த 11 மலையக யுவதிகள் துன்புறுத்தல்? July 24, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு, மலையகத்திலிருந்து இதற்கு முன்னர் அழைத்து வரப்பட்டிருந்த 11 யுவதிகள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 11 பேரில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகளை மேற்கோள்காட்டி திவயின என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பணிப் பெண்ணாக பணிப் புரிந்த யுவதியொருவர் பம்பலபிட்டி பகுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமொன்று தொடர்பிலும் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை, ரிஷாட் பதியூதீன் அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியில், அவரது உத்தியோகப்பூர்வ வீட்டில் மலையக யுவதியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரன் நேற்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சார்பட்டா பரமபரையின் உண்மை வரலாறு என்ன?
Bhagath Veera Arun : சார்பட்டா உண்மை வரலாறு என்ன?
பா.ரஞ்சித்தின் ”சார்பட்டா பரம்பரை” படம் வெளியாகி வரவேற்பு, அதீத வரவேற்பு, விமர்சனம் என பலவித கருத்து பரிமாற்றங்களை பார்க்க முடிகின்றது.
படம் எடுக்கப்பட்ட விதம் குறித்து சினிமா வல்லுனர்கள் பேசட்டும். என்னை பொருத்தவரை மெட்ராஸ் பாக்சிங் பரம்பரை, எமர்ஜென்சி அரசியல், சமூக அரசியல் என நிறைய விவாதிக்க இருக்கின்றது. பெரும்பாலான நண்பர்கள் தலித் அரசியல்-கலை-விளையாட்டு சார்ந்து இப்படத்தை அணுகுகிறார்கள். இப்பின்னணியில் சார்பட்டா பரம்பரை குறித்த உண்மை வரலாறு பற்றிய தேடலும் விவாதமும் அவசியமான ஒன்றாக கருதுகிறேன்.
சார்பட்டா உண்மையில் யார் அடையாளம்??
சார்பெட்டா பெயருக்கான பொருளை அறிய பலரும் முற்படுகின்றனர். சரியான விளக்கத்தை கண்டடைய முடியவில்லை. ஆனால் அது யாரை பிரதிநிதித்துவப் படுத்துகின்றது என்பது கேள்வியானல் நிறைவான பதிலை கண்டடையலாம்.
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு!
நக்கீரன் செய்திப்பிரிவு : கன்னியாகுமரி அருகே அருமனையில் ஜூலை 18- ஆம் தேதி நடந்த கிறிஸ்துவ அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தின் போது பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டத் தலைவர்களை விமர்சித்துப் பேசினார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது காவல்துறைக்கு புகார் வந்ததையடுத்து, அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த தகவலை அறிந்த ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார். இதையடுத்து, காவல்துறை ஐந்து தனிப்படைகளை அமைத்து தேடி வந்த நிலையில் மதுரை அருகே ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியாவில் வீட்டுப்பணிப்பெண்ணை அடிமை யாக வைத்திருந்த தமிழ் தம்பதிக்கு சிறை; நீதிமன்றம் தீர்ப்பு
thaainaadu.com : அவுஸ்திரேலியாவில் வீட்டுப்பணிப்பெண்ணை அடிமை யாக வைத்திருந்த தமிழ் தம்பதிக்கு சிறை; நீதிமன்றம் தீர்ப்பு
பெண்ணொருவரை வீட்டுப்பணிப்பெண் என்ற பெயரில் 8 வருடங்கள் அடிமையாக வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான அவுஸ்திரேலியாhவைச் சேர்ந்த தமிழ் தம்பதியினருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மெல்பேர்ன் நகரில் வசிக்கும் கந்தசாமி கண்ணன் (57) மற்றும் குமுதினி கண்ணன் (53) ஆகிய இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்ளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களுக்கு எதிரான தண்டனை புதன்கிழமை (21) அறிவிக்கப்பட்டது. இதன்படி குமுதினி கண்ணனுக்கு (Kumuthini Kannan) 8 வருட சிறைத்தண்டனையும் கந்தசாமி கண்ணனுக்கு (Kandasamy Kannan) 6 வருட சிறைத்தண்டனையும் விதித்து விக்டோரியா மாநில உச்சீதிமன்றம் தீர்ப்பளித்தது. .abc.net.melbourne-couple-who-kept-slave-sentenced
திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தொங்கு பாலம்: அமைச்சர் எ.வ.வேலு
மின்னம்பலம் : கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல ரூ.37 கோடி மதிப்பில் தொங்கு பாலம் அமைக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று (ஜூலை 23) பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் நெடுஞ்சாலை துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் , ஐந்து மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஐந்து மாவட்டங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வட மாநிலங்களில் எந்தவித கட்டமைப்பும் உருவாக்காத பாஜக திராவிடத்தால் வீழ்ந்தோம் என பரபரப்புரை செய்கிறது,
சக்தி ராஜேஸ்வரி : நேற்று இரவு 11 மணியளவில் நான் எழிலன் வே மற்றும் பிரதீப் மூவரும் டீ குடிப்பதற்காக பைபாஸில் இருக்கும் ஒரு டீ கடைக்கு சென்றோம்.
வெளியே ஒரு ஆறு பேர் கழுத்தில் காவி துண்டுடன் உட்கார்ந்து கொண்டிருந்தனர். எல்லாம் வட இந்திய முகம்.
வயதும் எல்லாம் முப்பதற்குள். ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து இப்படி இருக்காங்களே. தமிழ்நாட்டில் இப்படி இருப்பார்களா என யோசித்து அவர்களை புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டேன்.
சரி வா எழிலா எதாவது பேசுவோம். என பார்க்கும்போதுதான் பைக்கும் அதில் பிளாஸ்டிக் chairs ம் இருந்தது. அப்போதுதான் புரிந்துது அவர்கள் சேர் விற்க வந்தவர்கள் என்று. ..
"பையா எந்த ஸ்டேட்ல இருந்து வரீங்கனு" கேட்டேன்.
"ராஜஸ்தான்" என்றார்கள்.
"ஒரு சேர் வித்தா எவ்வளவு profit" எனக் கேட்டேன்... அவர்களுக்கு புரியவில்லை..
"கித்தனா கித்தனா பையா சேர் வித்தா" .. என்றேன்
கும்பகோணம்: `ஹெலிகாப்டர் சகோதரர்கள் ரூ.600 கோடி மெகா மோசடி?’ -புகாரை தொடர்ந்து அதிர வைத்த போஸ்டர்கள்
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன். தொழிலதிபர்களான இருவரும் சகோதரர்கள். எப்போதும் ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால் `ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என அழைக்கப்பட்டனர். கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
வெள்ளி, 23 ஜூலை, 2021
ராகுல் காந்தி : ஒட்டு கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்!
தினத்தந்தி :ரபேல் தொடர்பான விசாரணையை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி, பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இவ்விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-
ரபேல் தொடர்பான விசாரணையை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது.
100 நாள் வேலை திட்டத்தின் கூலியை 300 ரூபாயாக உயர்த்த பரிசீலினை..” - அமைச்சர் பெரியக்கருப்பன்
நக்கீரன் :"Consideration to increase the wage to 300 rupees for the 100 day work program ..." - Minister Periyakaruppan
“100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு 300 ரூபாயாக கூலி உயர்த்தித் தர பரிசீலினை செய்யப்படும்” என உளுந்தூர்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்ன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த மேட்டத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைதிட்ட பணிகளை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்பன் மற்றும் தமிழக உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்பன், "100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் பகுதி நலனுக்காக மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். 100 வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியளர்களுக்கு ஒரு நாள் ஊதியமான 273 ரூபாயை, 300 ரூபாயாக உயர்த்தித் தர தமிழக முதல்வர் உத்தரவுடன் பரிசீலினை செய்யப்படும்” என தெரிவித்தார்.
நூற்றாண்டு கண்ட திராவிட கருத்தியலின் இருண்ட காலம் எது?
Muralidharan Pb : பெரியாரின் கருத்துக்களை இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்ல தவறிவிட்டனரோ பெரியாரின் பெயரில் இயங்கும் இயக்கங்கள்? சில பேச்சாளர்கள்/ கருத்தியலாளர்கள் இதில் விதிவிலக்கு.
எங்கே பெரியாரை இன்னும் ஆழமாக கொண்டு செல்ல வேண்டும்?
எங்கே பெரியாரை கொண்டு செல்ல தவறவிட்டோம்?
Sridharan Chakrapani : பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் மட்டுமே என்றளவுத்தான் பெரியியர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
பெரியார் என்றால் சாதி மத மறுப்பாளர், பெண்ணடிமைக்கு எதிரானவர், பகுத்தறிவு சுயமரியாதை ஆகியவைகளை வற்புறுத்தியவர் என்பதை அவ்வளவு வலிந்து சொல்லவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது!
பல்லாவரம். டி.சம்பத் : அண்ணா அது வெள்ளி நாற்காலியண்ணா?
ஜெயலலிதாவுக்கு மடிப்பாக்கம் வேலாயுதம் கொடுத்தது மாதிரி
அந்த காலத்துல யாராவது கொடுத்திருப்பாங்களோ?
தலைவர் கலைஞரின் கருத்துக்களையும்,
அவரின் சாதனைகளையுமே கொண்டு சேர்க்கவில்லை.
இப்போதே தலைவர் கலைஞர் ஸ்டாம்ப் சைஸ் ஆயிட்டார்..
இளம் பெண்ணைத் தொடர்ந்த மோடி
.amarx.in A . Marx : நரேந்திர மோடி தன் மனைவியை விலக்கி வைத்திருப்பது, அல்லது ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்க முயல்வது முதலான அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றிப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் உண்டு. அதில் மற்றவர்கள் பிரவேசிக்கத் தேவையில்லை என்பது உண்மையே, ஆனால், ஒருவர் இன்னொரு இளம் பெண்னின் அந்தரங்கத்தில், அவரறியாமல் சட்ட விரோதமாகத் தலையிடுவது என்பதை யாரும் கண்டிக்காமலிருக்க இயலாது. அதுவும் அந்த நபர் ஒரு மாநில முதலமைச்சராகவும், பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் இருந்து, தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அரசு எந்திரத்தை இதற்காகப் பயன்படுத்தியுள்ளதை அறியும்போது ஜனநாயக ஆளுகையில் நம்பிக்கை உடைய யாரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. அந்த வகையில் மோடியும், அவருக்கு ஆக மிக நெருக்கமாகவும் அவரது உள்துறை துணை அமைச்சராகவும் இருந்த அமித் ஷாவும் 2009ல் ஒரு இளம் பெண்ணைப் பின் தொடர்ந்து (Stalking) அவர் யார் யாரைச் சந்திக்கிறார், யாருடன் என்ன பேசுகிறார், ஹோட்டலில் யாருடன் தங்கி இருந்தார், விமானத்தில் யாருடன் சென்றார் என்றெல்லாம் அந்தப் பெண் தங்கியிருந்த அறை முதல் ஷாப்பிங் போன மால், ஏறிப்போன விமானம் வரை பின் தொடர்ந்த செய்தி முக்கியமாகிறது.
நடிகை ஷில்பா செட்டி கணவர் குந்த்ரா பெண்களை நிர்வாணமாக்கி ஒவ்வொரு நாளும் லட்சம் லட்சமாக சம்பாதித்தார்
Kalaimathi - tamil.filmibeat.com : மும்பை: பெண்களை நிர்வாணமாக்கி ஆபாச படங்களை தயாரித்த ராஜ் குந்த்ரா அதன் மூலம் ஒவ்வொரு நாளும் லட்சங்களை குவித்துள்ளார்.
ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டது தொடர்பாக கடந்த திங்கள் கிழமை இரவு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதமே இதுதொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் பொறுமை காத்தனர்
காவல் இந்நிலையில் திங்கள் கிழமை இரவு கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ரா செவ்வாய்க்கிழமை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மும்பை போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
போடி தொகுதியில் ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு!
மின்னம்பலம் :முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார்.
இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், தேர்தல் முடிவில் தங்க தமிழ்ச்செல்வனை விட ஓ.பன்னீர் செல்வம் 11,055 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அவரது வெற்றிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
போடி தொகுதியைச் சேர்ந்த மிலானி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்ததாகவும், அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. -பிரியா
சீனாவில் பெருவெள்ளம்: சாலையில் குப்பையாய் குவிந்து கிடக்கும் கார்கள் – ‘பருவநிலை மாற்றம் காரணம்’
சீனாவின் க்ஹெனான் மாகாணம் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது.
அந்த மாகாணத்தின் ஜெங்ஜோ நகரில் மூன்று வருடங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாளில் கொட்டி தீர்த்ததில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜங்ஜோ நகரில் உள்ள ஒரு பாதாள மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த வெள்ள நீர் அங்குள்ள ரயில்களுக்கு உள்ளும் புகுந்தது. இதனால் பயணிகள் 12 பேர் இறந்தனர்.
ரயில் பெட்டிக்குள் இடுப்பளவு நீரில் பயணிகள் நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ரயில் பேட்டியின் மேல் பகுதியைப் பிடித்துக்கொண்டு வெள்ளத்தை பயணிகள் தவிர்க்க முயல்வதும் அந்தக் காணொளிகளில் பதிவாகியுள்ளன.
ரயில் பெட்டிக்குள் வெள்ளம் மேலும் அதிகரித்தால் உள்ளே இருப்பவர்கள் நீரில் மூழ்கி இறந்து போக நேரலாம் என்ற அச்சமும் நிலவியது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா .25-ம் தேதி பதவி விலகுகிறார்! அடுத்த முதலமைச்சர் யார்?
Rayar A - Oneindia Tamil : பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் மாநில முதல்வர் எடியூரப்பாவின் பதவியும் இன்னும் சில நாட்களில் கிட்டத்தட்ட நிறைவு பெறும் என்றே தெரிகிறது.
எடியூரப்பா பதவி விலகக்கோரி உள்கட்சியினரே அதுவும் சீனியர் எம்.எல்.ஏ.க்கள்,அமைச்சர்களே தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தனக்கு வயதாகி விட்டதால் மகன் விஜயேந்திராவை ஆட்சி நிர்வாகத்தில் அதிகம் தலையீடு செய்ய வைத்தார் எடியூரப்பா.
இதுவே அவரது பதவிக்கு ஆபத்து வரும் செயலாகவும் மாறி விட்டது. எடியூரப்பாவுக்கு எதிராக டெல்லி பாஜக தலைமையிடம் வரிசையாக புகார்கள் அனுப்பினார்கள்.
டெல்லி சென்ற முதல்வர் எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரிடம் விவகாரத்தை எடுத்து கூறினார்.
வியாழன், 22 ஜூலை, 2021
பத்திரபதிவு அலுவலங்களில் உயர்மேடை இனி தேவையில்லை
ஆலஞ்சியார் : சத்தமில்லாமல் திமுக சாதித்துக் கொண்டிருக்கிறது..
பத்திரபதிவு அலுவலங்களில் உயர்மேடை இனி தேவையில்லை என்ற அறிவிக்கை அகம்பாவ சிந்தனையை அகற்றிட உதவும் ..
பத்திர அலுவலங்களில் தன் சொத்துக்களை வாங்க விற்க செல்லும் போது நடத்தபடும் விதம் ஏதோ எஜமானிடம் நிற்பதை போலதோன்றும் ..
அலுவலரிடம் நடத்தைகளும் அதையொத்தே இருக்கும்.. மாற்றங்கள் சுயமரியாதையை உள்ளடக்கியதாக இருப்பதில் மகிழ்ச்சி..
கடந்த பத்தாண்டாய் அதிலும் கடந்த நான்காண்டுகளில் ஆர்எஸ்எஸ்காரர்களில் அரசு அலுவல்களில் ஊடுறுவியிருப்பது வெளிப்படையாக தெரிகிறது
மதுரை நகராட்சியின் நேற்றைய நடவடிக்கையும் எழுந்த எதிர்ப்பும் அதை அரசு கையாண்டவிதம் தமிழகத்தில் இனி அவர்கள் மெல்ல அகற்றபடுவார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ஆரோக்கியம் பற்றிய முக்கிய விபரங்கள்
ராஜா ஜி : 2019 இதே நாள் காலையில் பதைபதைக்கும் கடைசி நாட்கள் என ஜெயலலிதா இறப்பு குறித்தான டாக்குமென்ரி- News18 Tamil Nadu-ல்.
2016 செப்டம்பர் 22 அப்பல்லோ செல்லும் வரையான 6 மாத ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா, மரு.சிவகுமார் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் கூறியதாக ஓடிற்று.
ஜெயலலிதா உடம்பில் ஈ.கோல் பாக்டீரியா, அது கழிவறையிலும் செப்டிக் டேங்கிலும் காணப்படும் பாக்டீரியா!
2014 சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனைக்குப் பிறகான மன உளைச்சலில் மலம், சிறுநீர் கழிப்பது கட்டுப்பாடு இல்லாம போய், டயாப்பர் பயன்படுத்தும் சூழல்.
கணத்த உடல், ஒவ்வாமை வேறு.
டயாப்பர் மூலமாக மலத்தில் காணப்படும் ஈகோல் பாக்டீரியா சிறுநீர் பாதை வழியே உடலுக்குள் சென்று, இரத்தத்தில் கலந்து என போகிறது மருத்துவ அறிக்கை.
பார்க்கவே பரிதாபமாக....
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லையென்று சொல்லும் போது மமதையாக தெரிந்த ஜெயலலிதாவின் பிம்பம் சுக்குநூறாக உடைந்தது.
அவரது உணவு, வாழ்வுமுறை, சுற்றம் என தனித்து தீவுகளில் வாழ்ந்து ரகசியமாக செத்துப் போனார் ஜெயலலிதா!
முதல் ஹிட் லிஸ்டில் மூன்று மாஜிக்கள்: திட்டம் மாறியது ஏன்?
செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று (ஜூலை 22)
அதிகாலை முதல் தமிழகத்தின் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினார்கள்.
கரூரில் உள்ள விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடு, நிறுவனங்கள், அவரது
உறவினர்களின் வீடுகள் அலுவலகங்கள் என சுமார் இருபதுக்கும் மேற்பட்ட
இடங்களில் இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனைக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்
கண்டனம் தெரிவித்த நிலையில். .சோதனை முடிவில் முன்னாள் அமைச்சர்
விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதியப்பட்டுள்ளதாக லஞ்ச
ஒழிப்புத் துறை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வனப்பரப்பை 33% ஆக உயர்த்த நடவடிக்கை: முதல்வர் அறிவுறுத்தல்!
மின்னம்பலம் :தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவிகிதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜூலை 22) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் இத்துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சார்பட்டா ஒரு அரசியல்-கலை உடைப்பை ஏற்படுத்தி இருக்கிறது1
Karthikeyan Fastura : ரெம்ப வருடங்களுக்கு பிறகு நேரடி அரசியல் படம் பார்த்த அனுபவம் சார்பட்டாவில் கிடைத்தது.
அதற்கே இயக்குனர் ரஞ்சித்திற்கு நன்றி சொல்லவேண்டும்.
மலையாள மொழிப் படங்களில் நேரடி அரசியல் படம் வெளிவந்திருக்கிறது.
கம்யூனிசத்தை விமர்சித்தும் வரும் கொடி பிடித்தும் வரும் அததற்கான தர்க்க நியாயங்களுடன்.
அப்படி திராவிட கட்சிகளை வாழ்வின் அங்கமாக வரித்துக்கொண்ட கதாபாத்திரங்கள் கொண்ட காட்சியமைப்பு வந்து நான் பார்த்ததில்லை.
மறைமுகமாக கொடிபிடிக்கும் காட்சிகள் நிறைய வந்திருக்கிறது.
அவை கூட சமீபகாலங்களில் பார்க்க முடியாது.
எஸ்எஸ் சந்திரன், இயக்குனர் சந்திரசேகர்(விஜய் தந்தை), ராமராஜன், பாக்கியராஜ் போன்றோரின் படங்களில் தான் பார்க்கமுடியும்.
சில இயக்குனர்கள் கம்யூனிசத்தை வலியுறுத்தி படம் எடுத்தார்கள்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
தமிழ் சினிமாவின் முதல் நேரடி Anti-ADMK படம் என்றால் அது சார்பட்டா தான்
முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் : நடிகர்கள்: ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன்
ஒளிப்பதிவு: முரளி.ஜி.; இசை: சந்தோஷ் நாராயணன்; இயக்கம்: பா. ரஞ்சித்; வெளியீடு: அமெஸான் பிரைம்.
விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள், இயக்குனர்களுக்கு மிகச் சவாலானவை. படம் பார்ப்பவர்களுக்கு அந்த விளையாட்டு அறிமுகமில்லாவிட்டால், துவக்கத்திலேயே ஆர்வமில்லாமல் போகக்கூடும். அப்படி ஒரு சவாலை ஏற்று களமிறங்கியிருக்கும் பா. ரஞ்சித், முதல் காட்சியிலேயே அந்த சவாலைக் கடந்துவிடுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஆச்சரியம்.
1975ன் பிற்பகுதியில் நடக்கிறது கதை. அந்த காலகட்டத்தில், வடசென்னையில் சார்பட்டா பரம்பரை - இடியாப்ப பரம்பரை என்ற இரண்டு குத்து சண்டைக் குழுக்களிடையே நிலவும் பகைமைதான் படத்தின் அடிப்படை.
சிங்கார சென்னை 2.0 முதல்வரின் கனவு திட்டம்.. சூப்பர் சோனிக் வேகத்தில் அமைச்சர்கள் களமிறங்கி அதிரடி
Rayar A - Oneindia Tamil : சென்னை: தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக தலைநகர் சென்னையை புதுப்பொலிவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முதல்வர் மு.கஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க ஆட்சி காலத்தில்தான் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் அதிக பாலங்கள் கட்டப்பட்டன என்று கூறப்படுகிறது.
மேலும் ஸ்டாலின் முன்பு சென்னை மேயராக இருந்தபோது கூவத்தை தூய்மைப்படுத்துவது தொடர்பாக வெளிநாடுகளுக்கும் சென்று ஆலோசனை நடத்தி வந்தார்.
சிங்கார சென்னை 2.0 தற்போது திமுக ஆட்சிக்கு வந்து விட்டதால் சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கில கலெக்டரின் கல்லறையைத் தேடும் அதிகாரிகள்!
மின்னம்பலம் :உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயரின் கல்லறையைத் திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலர்கள் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்தவர் ஒயிட் என்னிஸ். இவர் 1810ஆம் ஆண்டு சென்னை மாகாண கலெக்டராக இருந்தவர். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அதுகுறித்து ஆராய மதுரை உயர் நீதிமன்றக் கிளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
மதுரை துணை ஆணையர் சண்முகத்தை பணி நீக்கம் செய்து உத்தரவு - தமிழக அரசு அதிரடி..
ஆர்.எஸ்.எஸ் தலைவர் .. சிறப்பு ஏற்பாடுக்கு உத்தரவிட்ட மாநகராட்சி.. சர்ச்சை.. முழு விவரம்
Rayar A - e Oneindia Tamil : மதுரை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரைக்கு நாளை வரும் நிலையில் அவர் செல்லும் இடங்களில் சிறப்பு பணி மேற்கொள்ள மதுரை மாநகராட்சி உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை சத்தியசாய் நகரில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மவருகிறார்.
மோகன் பாகவத் வருகையை முன்னிட்டு மாநகராட்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை சத்தியசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயிலில் உள்ள நிகழ்ச்சிகளில் 22 ஆம் தேதி முதல் 26 அம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அதனால், அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைத்தால், தெருவிளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திட வேண்டும்.
புதன், 21 ஜூலை, 2021
விற்பவர்கள் முதலாளிகள்... அதை வாங்க வக்கற்றவர்கள் தொழிலாளிகள். வாங்குபவர்கள் நடுத்தர வர்கம்
சுமதி விஜயகுமார் : எனக்கு தெரிந்து முதன்முதலில் டிவி விளம்பரத்தில் , தன் கடைக்காக தானே தோன்றி விளம்பரம் கொடுத்தவர் வசந்த் & கோ உரிமையாளர்.
அதற்கடுத்து திருச்சி மங்கள் & மங்கள் உரிமையாளர். மங்கள் & மங்கள் உரிமையாளர் ,
முதலில் பாத்திரங்களை தள்ளு வண்டியில் வீடுவீடாக விற்பனை செய்தார் என்று அம்மா சொல்ல கேட்டதுண்டு.
எனக்கு தெரிந்து, மலைக்கோட்டை எதிரில் ஒரு சிறிய கடையாக இருந்தது.
இப்போது அது விரிவடைந்து பலமாடி கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.
இது போல் உழைப்பால் உயர்ந்தவர்கள் , பிறகு அந்த துறையில் கோலோச்சுவது அரிது கிடையாது.
இது போல் ஒவ்வொரு ஊரிலும் உதாரணங்கள் இருக்கும்.
இப்போது சரவணா ஸ்டோர்ஸ் , லலிதா நகை கடையை தொடர்ந்து போத்திஸ் உரிமையாளரும் விளம்பரத்தில் வருகிறார்.
முறைகேடான டெண்டர்கள் ரத்து செய்யப்படும்: கே.என்.நேரு
மின்னம்பலம் :டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் அது ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் இன்று (ஜூலை 21) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“கோயம்புத்தூர் ,சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகள் , நகராட்சிகள் , பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகளை விரைவாக முடிக்கவும், ஆரம்பிக்கப்படவுள்ள பணிகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் எதனால் தாமதம் ஏற்படுகிறது என்றும் ஆலோசிக்கப்பட்டது. பாதாளச் சாக்கடை திட்டம், குடிநீர் வழங்கல் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை விரைவாக முடிக்க முதல்வர் ஆய்வை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆணையர்கள் இன்றைய கூட்டத்தில் விளக்கமளித்தனர்” என்றார்.
தமிழ்நாட்டில் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை. அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் துவக்கத்தில் ஆக்சிஜன் தேவை 230 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் தினசரி புதிய கொரோநா நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 36 ஆயிரமாக உயர்ந்தது. இதனால், தினசரி தேவை 550 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. ஆனால், அப்போது அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கிடைக்காத நிலை இருந்ததால் வட மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனைப் பெற்றோம். ஒருபோதும் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் சுத்தமாக இல்லாத நிலை ஏற்படவில்லை" என தெரிவித்தார்.
ராகுல் காந்தி : ஜி.கே.வாசன் வேண்டாம்.. வேற யார் வந்தாலும் ஓகே.. ஒரே போடு..
Veerakumar - Oneindia Tamil : சென்னை: ஜி.கே.வாசனுக்கு ராகுல் காந்தி போட்ட ரெட் கார்டு பற்றிதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஜே.கே.வாசன் ஆழ்ந்து யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.அதிமுக கூட்டணியில் இருக்கிறது ஜி.கே.வாசனின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடைந்தது.
தமிழக அரசியலில் ஏற்கனவே மிக சோர்வாக இருந்த த.மா.கா.வின் இரண்டாம் நிலை தலைவர்களும் நிர்வாகிகளும் தேர்தல் தோல்வியால் மீண்டு துவண்டு போய்விட்டனர். இதனால் தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி திமுகவில் இணைந்து வருகின்றனர்
மத்திய அமைச்சராக இருந்த வாசன் பொதுத் தேர்தலில் வாசன் போட்டியிட்டதாக வரலாறே இல்லை. மூன்று முறையும் ராஜ்யசபா மூலமாகவே எம்.பியாகி இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். வாசன் தனிப்பட்ட முறையில் தனது அரசியல் இருப்பை தக்க வைத்தாலும், அவரது கட்சியும், கட்சியைச் சேர்ந்தவர்களும் வளருவதற்கு பதில் தேய்ந்துதான் வருகின்றனர்.
ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டும்...” - மு. தமிமுன் அன்சாரி
நக்கீரன் செய்திப்பிரிவு : இன்று (21.07.2021) தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகைக்குப் பிறகு, நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “கடந்த இரண்டு ரமலான் பண்டிகைகளையும், ஒரு பக்ரீத் பண்டிகையையும் கரோனா காரணமாக கொண்டாட முடியவில்லை. இவ்வாண்டு தொற்று குறைந்துள்ளதால் முகக் கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியோடு மக்கள் தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்தனர்.
பக்ரீத் வாழ்த்து அறிக்கைகள் விடுத்த தலைவர்கள், சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்து கூறிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா தொற்று ஒழிந்து உலகம் மீண்டு வரவும், மக்கள் மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதும் முக்கிய பிரார்த்தனையாக இருந்தது.
10, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் தேர்வு- பள்ளிக்கல்வித்துறை புதிய நடவடிக்கை
மாலைமலர் :கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் நலிவடைந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வருகிறார்கள்.
10, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் தேர்வு- பள்ளிக்கல்வித்துறை புதிய நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் 2 கல்வி ஆண்டுபடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கியதும் பள்ளிகள் மூடப்பட்டன. 12-ம் வகுப்பை தவிர அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2019-2020 கல்வி ஆண்டு இறுதியில் தேர்வுகள் நடைபெறும் காலத்தில் தொற்று பரவியதால் அரசு இந்த முடிவை மேற்கொண்டது.
அதனைத் தொடர்ந்து 2020-2021 கல்வி ஆண்டிலும் கொரோனாவின் தாக்கம் நீடித்தது. இதனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள்.
பெகாசஸ் ஸ்பைவேர்: இந்திய ஜனநாயகத்தை ஆட்டம் காண வைக்கும் உளவுப் பிரச்னையா?
செளதிக் பிஸ்வாஸ் - பிபிசி இந்தியா :;"நீங்கள் வேவு பார்க்கப்படுவதாக உணர்ந்தால், அதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்" என்கிறார் 'தி வொயர்' செய்தி வலைதளத்தின் நிறுவனர் சித்தார்த் வரதராஜன்.
"இது ஒரு மிகப் பெரிய ஊடுருவல்" என்கிறார் அவர். "யாரும் இதை எதிர்கொள்ளத் தேவை இல்லை"
ஒரு இஸ்ரேலிய நிறுவனத்தால் அரசாங்கங்களுக்கு விற்கப்பட்ட செல்ஃபோன் ஸ்பைவேரால் உலகம் முழுக்க உள்ள பல செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சித்தார்த் வரதராஜனும் ஒருவர் என்கிறது ஊடக செய்திகள்.
கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படும் தரவு தளத்திலிருந்து கசிந்த 50,000 எண்களில் 300 எண்கள் இந்தியர்களுடையது என்கிறது தி வொயர் செய்திகள்.
விளம்பரம்
IIT-ல் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது ஏன்?” : TR.பாலு MP கேள்வி!
கலைஞர் செய்தி : இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் டாக்டர் வி.ராம்கோபால் அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? என டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் டாக்டர் வி.ராம்கோபால் அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? என்று நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்ற கழக குழுத் தலைவருமான, டி.ஆர்.பாலு மக்களவையில், இந்திய தொழில் நுட்ப நிறுவனங்களில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான, டாக்டர் வி.ராம்கோபால் அவர்களின் அறிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டதா? என்றும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடம் விரிவான கேள்வி எழுப்பினார்.
ராஜஸ்தானில் நிலநடுக்கம்... 5.3 ரிக்டர் அளவுகோல்
நக்கீரன் செய்திப்பிரிவு : ராஜஸ்தானின் ஒரு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிக்கெனரில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்தனர். ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. அதிகாலை சுமார் ஐந்தரை மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல் லடாக்கில் அதிகாலையில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது
முதல்வர்கள் படங்கள் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படம்... சர்ச்சை வெடித்ததால் அகற்றம்
Mathivanan Maran - e Oneindia Tamil : சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்கள் வரிசையில் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி எம்.எல்.ஏ. படம் இடம்பெற்றது சர்ச்சையானது.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் உதயநிதி ஸ்டாலின் படம் அகற்றப்பட்டிருக்கிறது.
தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இணையான மரியாதையை உதயநிதி எம்.எல்.ஏ.வுக்கும் தருகின்றனர். அவர்களின் சட்டை பைகளிலும், மொபைல் ஃபோன்களிலும் ஸ்டாலினுக்கு பதிலாக உதயநிதி படமே பளிச்சிடுகிறது.
மேலும் தங்கள் இல்லங்களிலும், எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் உதயநிதியின் படத்திற்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஜூனியர் அமைச்சர்கள் இதனை செய்தால், உதயநிதிதான் தங்களின் எதிர்காலம் என நினைத்துக் கொள்ளலாம். சீனியர் அமைச்சர்கள் சீனியர் அமைச்சர்கள் ஆனால், சீனியர் அமைச்சர்கள் கூட இதைத்தான் செய்கிறார்கள் என்பதுதான் சர்ச்சை.
ரேஷன் கடைகளில் வெளியாட்கள் இருக்கக் கூடாது!
minambalam : தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சம்பந்தப்பட்ட ஊழியர்களை தவிர வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது. ஆட்சியர்கள் ரேஷன் கடைகளை ஆய்வு செய்து மாதந்தோறும் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் புகார் பதிவேடு வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினும் அறிவுறுத்தியிருந்தார்.
ஸ்பீக்கர்களில் புரட்சி செய்த அமர்போஸ்! “போஸ் ஆடியோ சிஸ்டம்” BOSE speaker system
பாண்டியன் சுந்தரம் : பேருந்தில், காரில் செல்லும் போது காதுகளில் ஹெட்போன் மாட்டியபடி அல்லது கார்களின் ஸ்பீக்கர் மூலம் வீட்டில் இருக்கும் போதும் ஸ்பீக்கரில் இசையை, இனிய பாடல்களை விரும்பிக் கேட்பவரா நீங்கள்?
நமக்குப் பாடலையும், அதன் இசையையும் கேட்பதில் ஒரு மாபெரும் மாற்றத்தைத் துல்லியத்தை கொண்டு வந்தவரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா? அவரும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர் தான்!
உலகம் முழுக்க உள்ள இசை ரசிகர்களது ஒலியின் ரசனையை மாற்றியமைத்தவர் அமர் கோபால் போஸ்.
அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், தமது இறுதி மூச்சு வரை அயராது உழைத்த உழைப்பினால் சிகரத்தைத் தொட்டவர்.
அவரது "போஸ் ஸ்பீக்கர்" என்னும் நிறுவனத்திற்கு, தனது சொந்த முயற்சி மற்றும் புதுமையான படைப்புகள் வழி தனி இடத்தை உருவாக்கித் தந்தவர்!
அலைபேசி உலகில் ஆப்பிளும், ஸ்டீவ் ஜாப்ஸும் எவ்வளவு பிரசித்தமோ, அதே அளவுக்கு அமர் போஸும் எலெக்ட்ரானிக் உலகில் பிரவேசித்து புகழ் பெற்றவர்!
அமைச்சர் துரைமுருகன் மீது ஜாதிய வன்கொடுமை புகார்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு
Veerakumar- Oneindia Tamil :வேலூர்: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சாதிய வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கூறியுள்ளது.
வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவர்தான் புகார்தாரர். தமிழக நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் மீது டெல்லியிலுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், நில அபகரிப்பு, ஜாதிய வன்கொடுமை தொடர்பாக இவர் புகார் அளித்துள்ளார். சுப்பிரமணியின் புகாரில், அமைச்சர் துரைமுருகனின் உறவினர்கள் சிலரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
செவ்வாய், 20 ஜூலை, 2021
இனி தமிழிலும் மருத்துவம், பொறியியலை படிக்கலாம்; மாணவர்களின் சிரமத்தை உணர்ந்த தி.மு.க அரசு -ஐ.லியோனி
கலைஞர் செய்திகள் : மாணவர்களின் சிரமத்தை உணர்ந்து தமிழ் வழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் புத்தகங்களை அச்சிடும் பணியை தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளதாக திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.
இனி தமிழிலும் மருத்துவம், பொறியியலை படிக்கலாம்; மாணவர்களின் சிரமத்தை உணர்ந்த தி.மு.க அரசு -ஐ.லியோனி தகவல்
தாய்மொழியாம் தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்துள்ளதாகவும் அண்ணா, கலைஞரின் கனவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுகல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
பிட்காயின் 30,000 டாலருக்கு கீழ் சரிவு..! மேலும் சரியும் வாய்ப்பு?
tamil.goodreturns.in : கிரிப்டோகரன்சி ஆதிக்கத்தைக் குறைக உலக நாடுகள் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்தும், கிரிப்டோ உற்பத்தி முதல் வர்த்தகம் வரையில் அனைத்தும் தடை செய்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு சீனா கிரிப்டோகரன்சி-க்குப் போட்டியாக டிஜிட்டல் யுவான்-ஐ அறிமுகம் செய்து, இதன் வெற்றியில் கிரிப்டோ உற்பத்தி, வர்த்தகம், முதலீடு என அனைத்தையும் தடை செய்தது.
தற்போது ஐரோப்பாவும் சீனாவுக்குப் போட்டியாக டிஜிட்டல் யூரோ நாணயத்தை மக்களின் பயன்பாட்டுக்குச் சோதனை திட்டமாக அறிமுகம் செய்துள்ளது.
இந்த அறிவிப்பு கிரிப்டோ சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை.
சீனாவின் தடை சீனாவில் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி தடை செய்த பின்பு சந்தையில் பிட்காயின் சப்ளை குறைந்து அதன் விலை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்பட்ட நிலையில், பிட்காயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா 40 லட்சம் பேர் உயிரிழப்பு - ஆய்வு India’s excess deaths during COVID could be over 4 million: Study
செளதிக் பிஸ்வாஸ் - பிபிசி நியூஸ் : இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
முந்தைய சில ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விட கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தப் பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களில் கோவிட்-19 பாதிப்பால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கூறுவது கடினமென்றாலும், அந்தத் தொற்றால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்பை அளவிடுவதற்கான எண்ணிக்கையாக இது உள்ளது.
ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பம்
தினத்தந்தி :சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஓட்டலில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளா் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கா்னி உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.
ஸ்டாலின் "பிரதமர்" வேட்பாளர்?.. அகில இந்திய அரசியலில் தமிழ்நாடு லீட்
Hemavandhana - Oneindia Tamil : சென்னை: ஒரு முக்கியமான விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது.. முதல்வர் ஸ்டாலினின் மருமகனும் பிரசாந்த் கிஷோரும் அடிக்கடி பேசி வருகின்றனராம்..
இது சூப்பர் பதவிக்கான மூவ் என்கிறது டெல்லி வட்டாரங்கள்..!
நான் கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு போன பிரசாந்த கிஷோர் 2 மாசத்தில் மறுபடியும் அரசியலுக்கு ரீ-என்ட்ரி தந்துவிட்டார்..!
சூட்டோடு சூடாக சரத்பவாரையும் சென்று சந்தித்தார்.. ஒருவேளை 3வது அணி வரப்போகிறதோ என்ற டவுட் இருந்தது..
ஆனால், பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத 3வது அணி இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டார்
எம்பி தேர்தல் ஆனால், 2024-ல் நடைபெறவிருக்கும் எம்பி தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக-வை மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான வலுவான கூட்டணியை பிகே களம் அமைக்க தயாராகிவிட்டார் என்றே கூறப்பட்டு வருகிறது..
மேலும் உபி உட்பட பல்வேறு மாநிலங்களில் விரைவில் தேர்தல் வரப்போகிறது.. இந்த முறை உபியில் ஜெயித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கங்கணம் கட்டி இறங்கி உள்ளது.. அதேபோல பஞ்சாப்பையும் காங்கிரஸ் விடுவதாக இல்லை.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்! .. சந்திரலேகா ஆசிட் வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்டவர்
News18 Tamil : தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தந்த அதிமுக தலைவர்களுள் மதுசூதனன் முக்கியமானவர்.
அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் அவைத்தலைவராக இருந்து வரும் மதுசூதனன். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடம் ஆகியிருப்பதாகவும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது..
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர், எனினும் அவரின் உடல்நிலை சீரடையவில்லை.
திமுக வழக்கறிஞர் அணியில் சலசலப்பு.. "இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டோம்.." சத்தமாக கேட்கும் முனுமுனுப்பு
Veerakumar - Oneindia Tamil : சென்னை: திமுக வழக்கறிஞர் அணியிலிருந்து அதிருப்தி முனுமுனுப்புகள் அதிகம் கேட்கத் தொடங்கியுள்ளது.
இதற்கு காரணமும் இருக்கிறது. திமுக வழக்கறிஞர் அணி எப்போதுமே மிகவும் பலமானது.
எத்தனையோ வாய்தா கேட்டு இழுத்தடிப்பு செய்தாலும்கூட இறுதியாக சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவர் தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை பெற்றுத் தரும் அளவிற்கு உரிய ஆவணங்களை திரட்டியது.
ஜெ. வழக்கில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டதில் திமுக வழக்கறிஞர் அணிக்கு பெரிய பங்கு இருக்கிறது.
வழக்கறிஞர் அணி முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின்போது மெரினா கடற்கரையில் அவருக்கு நினைவிடம் அமைப்பதற்கு அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு நிலம் ஒதுக்க மறுத்தது.
இதை எதிர்த்து நள்ளிரவிலும் கூட நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி, சட்ட பாயிண்ட்களுடன் நீதிபதியை சம்மதிக்க வைத்ததிலும் திமுக வழக்கறிஞர்களின் பங்கு அபாரமானது. இந்த வழக்கில் வாதாடிய வில்சன் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் பஸ்-லாரி மோதி விபத்து 30 பேர் பலி
தினத்தந்தி : இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டிரக்குடன் பயணிகள் பஸ் மோதியதில் 30 பேர் பலியானார்கள் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகள் பஸ் ஒன்று சியால்கோட்டிலிருந்து ராஜன்பூருக்கு சென்று கொண்டிருந்தது. தேரா காசி கானில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது பஸ் எதிர்பாரத விதமாக எதிரே வந்த ஒரு டிரக் மீது பயணிகள் பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் உள்பட 30 பேர் பலியானார்கள். 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
பாடகி கல்பனாவின் மகளுக்குப் பாலியல் கொடுமை .. பாதிரியார் இன்னும் கைதுசெய்ப்படவில்லை ஏன்?
Priya Perumal : பிரபல பாடகி கல்பனா திடீரென்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்டார் அல்லது விலகிக்கொண்டார்.
கல்பனாவிற்கு கணவர் கிடையாது. அதனால் தான் தங்கச்சியிடம் தான்... தன் மகளை ஒப்படைத்திருந்தார். ஏனென்றால் கல்பனா வாழ்வது ஹைதராபாத்தில்.
கல்பனாவின் குடும்பம் பிராமண பின்னணியில் இருந்தாலும் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டனர்.
அவரின் தங்கச்சியின் பெயர் பிரசன்னா. இவரும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறி கிறிஸ்தவரை திருமணம் செய்திருந்தார். ஆனால் அவருக்கு குழந்தை கிடையாது. இவரும் பாடகி தான் ஆனால் வேறு பெயரில் பாடுகிறார்.
இவர் தமிழ் படங்களில் பாடுவதில்லை கிறிஸ்தவ ஆலயங்களிலும் மற்றும் ஆங்கில ஆல்பங்களில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்.
அவ்வப்போது தன் மகளை காணவரும் கல்பனா சென்ற முறை மகளை பார்த்த போது கொஞ்சம் அரண்டு விட்டார்.
திங்கள், 19 ஜூலை, 2021
13 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்! நாவலப்பிட்டி மலையகத்தில்
Malayaga Kuruvi : 13 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்
நாவலப்பிட்டியில் 13 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வரும் தடயவியல் பொலிசார், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 10 இடங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
சிறுமி 6 முதல் 7 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாவலப்பிட்டி, ஹரங்கல இலுக்தென்ன பகுதியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் அண்மையில் வெளியானது.
42 வயதான திருமணமான ஆசாமியொருவர் சிறுமியை அழைத்துச் சென்று, கற்குகை ஒன்றுக்குள் 4 நாட்களாக தடுத்து வைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டான்.
எப்படி இவ்வளவு Refund வருகிறது?
Karthikeyan Fastura : எங்களது Intaxsevaவில் வாடிக்கையாளர்களுக்கு இவ்வளவு Refund வந்திருக்கிறது என்று சொல்லும்போது மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒரு கேள்வி எப்படி இவ்வளவு Refund வருகிறது? என்பதுதான்.
நீங்கள் கட்டாத தொகையை நாங்கள் Refund வாங்கித் தர முடியாது.
அதிக சம்பளம் வாங்கும் அனைவரும் அதிக வரி கட்டுவது இயல்பு என்று நினைத்து விடுகின்றனர். ஆனால் அதிகம் சம்பாதிக்கும் எந்த தொழிலதிபரும் அதிக வரி கட்டுவதில்லை.
அதற்கு அவர்களின் ஆடிட்டர்கள் தேவையான அளவு வழிகாட்டுகிறார்கள்.
ஆனால் நீங்கள் ஆடிட்டிங் நிறுவனத்திடம் நாம் செல்ல வேண்டியதில்லை என்று நீங்களே முடிவு செய்து விடுகிறீர்கள்.
உங்களது நிறுவனம் தங்களது பணியாளர்களிடம் இருந்து வரியை பிடிக்கும்போது வரிவிலக்கு பகுதிகளை மிகக்குறைவாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
வழக்கறிஞர் பாண்டியன் (விட்னஸ் ஃபார் ஜஸ்டிஸ்) கொலையை மனிதஉரிமை என்.ஜி.ஓ. க்கள் மூடி மறைப்பது ஏன்?
வழக்கறிஞர் பாண்டியன் |
Arumugam Selvi : நீதிக்கான சாட்சியம், இயக்குனர், வழக்கறிஞர். பாண்டியன் கொலையை மனித உரிமை என்.ஜி.ஓ. க்கள் மூடி மறைப்பது ஏனோ ?
நண்பர்களே, இந்த பதிவை பதிவு செய்வதன் நோக்கம் உண்மைகள் புதைக்கப்பட கூடாது.
அதுவும் 'சமூக நீதி' ஒரு போதும் அநீதிக்கு துணை போகாது என உறுதியாக சொல்லுவேன். நான் அறிந்ததை பொதுமக்கள் முன் வைப்பது எனது கடமையும் ஆகும்.
எனக்கு கடந்த 05.07.2021ம் தேதி பிற்பகல் 5.38க்கு திருநெல்வேலியில் இருந்து மனித உரிமை வழக்கறிஞர் தம்பி சுரேஷ்குமார் தொலைபேசியில் அழைத்து அண்ணா கடந்த இரு நாட்களுக்கு முன்பு 03.07.2021ம் தேதி பெங்களூரை மையமாக இயங்கும் Center for Law & Policy நிறுவனம் வன்கொடுமை சட்டம் குறித்த கூட்டம் காணொலி கூட்டம் (Zoom) நடத்தியது.
அதில் நானும் கலந்து கொண்டேன், பாண்டியன் அண்ணன் தான் வன்கொடுமை சட்டம் குறித்து பேசிக்கொண்டு இருந்தார்.
ஆர்.எஸ்.பாரதி பேச்சு குறித்த உச்ச நீதிமன்ற வழக்கு தள்ளுபடி ! வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை..
tamil.asianetnews.com : எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை அவமதித்ததாக திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மீது பதியப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை அவமதித்ததாக திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மீது பதியப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி ஹரிஜன நீதிபதிகளை நியமனம் செய்தது திமுக தான். உயர் நீதிமன்றத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. திமுக தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது என சர்ச்சைக்குரிய இழிவான வகையில் பேசினார்.
காஷ்மீர் மக்களின் தூதராக இருப்பேன்: இம்ரான் கான்
இதற்காக பாக்கிஸ்தான் பகுதியில் உள்ள ஆசாத் காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாக்., பிரதமருமான இம்ரான் கான் பேசியதாவது:
பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சித்தாந்தங்கள்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
இந்த இரு அமைப்புகளின் சித்தாந்தங்கள் முஸ்லிம்களை மட்டும் இலக்காக வைக்கவில்லை.
சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பட்டியலினத்தவர்களையும் குடிமக்களாக இவர்கள் கருதவில்லை.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரம் 370வது பிரிவை பிரதமர் மோடி ரத்து செய்தது அட்டூழியம்.
சபரீசனுக்கு நேரடி அரசியலில் ஆர்வம் இல்லை? முதல்வரிடமே தெரிவித்து விட்டார்?
Hemavandhana - e Oneindia Tamil : சென்னை: திமுகவின் செல்வாக்கு கூடி கொண்டே வந்தாலும், மாப்பிள்ளையின் கொடிதான், கட்சிக்குள் உயர உயர பறந்து செல்கிறது என்கிறது மேலிட தொடர்புகள். திமுகவை பொறுத்தவரை சபரீசனின் முக்கியத்துவம் அதிகம்..
எப்போது தேர்தல் நடந்தாலும் சபரீசன்தான் பெரும்பாலும் கூட்டணிகளை பேசுவது, தலைவர்களுடன் சீட் விவகாரம் நடத்துவது என்று நிறைய பங்களிப்புகள் இருக்கும்
அதேபோல, ஒவ்வொரு தேர்தலின்போதும் ஸ்டாலினுக்கான தேர்தல் சுற்றுப்பயண விவரங்கள் முதல் மக்களை கவருவது வரை அனைத்தையும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தருவதிலும் சபரீசனின் ரோல்தான் அதிகம் இருக்கும்.
பெகாசஸ் ப்ராஜெக்ட்' அறிக்கை. Pegasus: the spyware technology that threatens democracy
nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு : இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுகேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ குரூப் (NSO GROUP) தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த மென்பொருளைக் கொண்டு ஒருவரின் தொலைபேசியை ஹேக் செய்து, அவர் என்ன வார்த்தையைத் தட்டச்சு செய்கிறார் என்பது வரை கண்காணிக்க முடியும்.இந்தநிலையில் இந்த மென்பொருள் மூலம், இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர்களின் தொலைபேசி எண்கள் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில், பெகாசஸ் ஹேக்கிங் குறித்து ஆய்வு செய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது பெரிய சர்ச்சையானதுடன், இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
உத்தர பிரதேசத்தில் கூட்டணிக்கு தயாராகும் காங்கிரஸ்: பிரியங்கா காந்தி சூசக அழைப்பு
hindutamil.in :உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி்க்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது என்று மாநிலத்தின் பொறுப்பாளரும், பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 2022ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி இரு ஆண்டுகளுக்கு முன்பே பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கிவிட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால், மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படுமா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கோ பேக் மோடி- வெல்கம் ராம்நாத்- ஸ்டாலினின் ’தேசிய திட்டம்’!
தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 19) பிற்பகல், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்,
“தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் அவர்களை முதல் முறை சந்திப்பதற்காக வந்தேன். முதலமைச்சராக பொறுப்பேற்றதற்காக அவர் எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.