சனி, 27 ஜூன், 2020

சாத்தான்குளம் .வணிகர் சங்கங்கள் .. பறிபோகும் தமிழக வணிக மேலாண்மை ..

Muruganantham Ramasamy : சாத்தான் குளம் காவல்படுகொலையில் நாம் வணிகர்சங்கங்களின் பங்கை கவனித்தோமா..?
தமிழக வணிகர் சங்கங்கள் ஒரு சாதியின் பேரக்குழுக்களாகத்தான் இயங்கி வருகின்றன.. கொல்லப்பட்டவர்களின் அதே சாதி.. ஆனால் அவர்களின் பிணம் காணுமுன் காவல்நிலையம் பக்கம் கூட செல்லவில்லை.. இத்தனைக்கும் தவறாமல் சந்தா வாங்கி விடுவார்கள்.. உள்ளூர் காவல்துறையினரிடம் காரியம் சாதிக்க வணிகர்சங்கத்தின் தலைவர்கள் வைத்திருக்கும் சுமூக உறவுக்கான விலை இது..!
வேறெந்த தொழிற்குழுக்களைக்காட்டிலும் இந்த வணிகர் சங்கங்கள் அமைப்புரீதியாக வலுவானவை.. இருந்தும் கூட சாதாரண சிறுவணிகர்களுக்காக ஒரு ஆணியையும் பிடுங்குவதில்லை என்பது வெளிப்படை.. இருவரையும் காவல்துறை அழைத்துச்சென்ற போது வணிகர் சங்க நிர்வாகிகள் காவல் நிலையம் சென்று கைதுக்கு என்ன காரணம் எனக்கேட்டிருந்தால் போதும்.. இருவரும் செத்திருக்க மாட்டார்கள்.. அதிகபட்சம் வழக்கோடு பிரச்சனை முடிந்திருக்கும்.. ஆனால் அப்போது செல்லாமல் பிணத்தை பார்த்தபின் அவர்கள் பாடும் பிலாக்கனம் அருவெறுப்பாக இருக்கிறது.
இன்று பா.ஜ.க வின் எச்.ராஜா வணிகர் சங்கங்களை அந்நியக்கைக்கூலி என்கிற அளவுக்கு பேசியிருப்பதன் பின்னணி தெளிவானது.. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் வணிகத்தில் கோலோச்சும் தமிழ் சாதிக்குழுக்களின் மீது மார்வாரிகள், குஜராத்தி பனியாக்கள், ஜெயின்கள் இவர்களுக்கு ஒரு கண்.. இவர்களின் கூலிப்படைகள் பா.ஜ.க மற்றும் சங்பரிவாரங்கள்.. தமிழகத்தின் வணிகர்சங்கங்களில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியாத வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாக இதே தூத்துக்குடியில் "இந்து வணிகர் சங்கம்" என்ற பெயரில் ஒரு உடைப்புக்குழுவை

சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் நடிகை சனம் செட்டி முறையீடு

சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி
சனம் ஷெட்டியின் புகார்மாலைமலர் : சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் மரணம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து இவர் கதம் கதம், சவாரி, சிபிராஜ் நடித்த வால்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு நடித்து வரும் மஹா படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ்க்கு ஆதரவாக வீடியோ பதிவில் தனது கருத்துக்களை தெரிவித்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கிளி , லாங்குர் வளர்ப்பதற்குக் இனி அனுமதியில்லை..கான்பூர் வனச்சரகம் உத்தரவு ..

கிளி மற்றும் லங்கூர் வளர்த்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!zeenews.india.com/tami/: செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் உண்டு.  நாய், பூனை, கிளி மட்டுமல்ல, யானை போன்ற விலங்குகளையும் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாற்றிக் கொள்ளும் மனிதர்களை நாம் பார்த்திருக்கலாம்.
தற்போது காலம் மாறிவிட்டது.  முதலில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது இயல்பான ஒன்றாக இருந்தது.  அதற்கு பெரிய அளவில் செலவாகாது.  ஆனால் இந்த விருப்பம் தற்போது மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது.
சிலருக்கு கிளிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் இப்போது இந்த பொழுதுபோக்குகள் மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது.  கான்பூர் வனச்சரகம் லங்கூர் மற்றும் கிளி வளர்ப்பை தடை செய்துள்ளது. இந்தத் தடையை மீறி லங்கூர் மற்றும் கிளியை வளர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக போலீஸ் ஆர் எஸ் எஸ் குண்டர் படை? சாத்தான்குளத்தில் காவல்துறை சேவா பாரதி.. ஆர் எஸ் எஸ் வெறியாட்டம்


Venkat Ramanujam : · அடித்த கொன்றது போலிசா அல்லது #rss ஆ
ப ஜக வை ஆக்கிரமித்த ஓர் சூழ் சாதி கைபர் கனவாய் வந்தேறி ராஜாஷர்மாக்கள் தீடிர் என போலிஸ் பாசம் வந்தது என்பது ஒரு புள்ளி ..
  சேவா பாரதிக்கும் #RSS க்கும் உள்ள் தொடர்பு என்பது ஒரு புள்ளி ..
 சேவா பாரதி மாற்று மதத்தினரை போலிஸ் ஸ்டேஷ்னில் கொல்லும் அளவுக்கு போலிசை செயல் இழக்க செய்துள்ளது ஒரு புள்ளி .. ..
 இந்த சேவா பாரதி எந்த அடிப்படையில் friends of police க்கு ஊழியம்
செய்கிறார்கள் என்பது ஒரு புள்ளி .. இந்த சேவா பாரதி யாரால் நடத்த படுகிறது என்பது ஒரு புள்ளி .. இப்படி பல புள்ளிகள் ஒன்றினைத்தால் அதில் தெரியும் கோலத்தில் மோகன் பகவ்த்களின் குரூர உண்மை முகம் தெரியலாம் அல்லவா
சாத்தான்குளம்: காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும் – எச். ராஜா.
 சாத்தான்குளம் சம்பவத்திற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் “Justice For Jeyaraj And Fenix” என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் ஜீவா, ஜெயம் ரவி என சமூகத்தில் பல தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஊழல் டெண்டர் ரத்து: உதயகுமார் பதவிக்கு ஆபத்து?

ஊழல் டெண்டர் ரத்து: உதயகுமார் பதவிக்கு ஆபத்து? மின்னம்பலம  :  தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக பாரத் நெட் என்ற திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களை இணைய வழி இணைக்கும் திட்டத்துக்கான டெண்டர் விடப்பட்டது. 1950 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், எனவே இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டுமென்றும் முதன் முதலில் அறப்போர் இயக்கம் வெளிக் கொணர்ந்தது. இந்த அறப்போரின் முடிவாக ஒன்றிய வர்த்தக, தொழில் துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசின் 1950 கோடி ரூபாய் டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது.
பைபர் ஆப்டிக் கேபிள் பாரத்நெட் டெண்டர் நிபந்தனைகள் பாரபட்சமானதாகவும் போட்டியை குறைக்கும் வண்ணம் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் ஆணை தெரிவித்துள்ளது.
சந்தோஷ்பாபு வகுத்த டெண்டர்
ஒன்றிய அரசின் நிதியுதவியோடு தமிழகத்திலுள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் ஃபைபர் ஆப்டிகல் கேபிள் மூலம் இணைய இணைப்பைக் கொண்டு சேர்க்கும் திட்டம்தான் பாரத் நெட். கடந்த ஆண்டு தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்.தான் இந்தத் திட்டத்துக்கான டெண்டர் நிபந்தனைகளை பல மாதங்கள் உழைத்து உருவாக்கினார்.

திமுக எம் எல் ஏ ஆர் டி அரசு கொரோனா தொற்று பாதிப்பு .. மருத்துவமனையில்


இன்னொரு திமுக எம்.எல்.ஏ.வுக்கு வைரஸ் தொற்று! மின்னம்பலம் :  திமுகவின் செய்யூர் சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மருத்துவ அணி மாநில துணைச் செயலாளருமான ஆர்.டி. அரசு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று (ஜூன் 27) அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அரசு, ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பலருக்கும் நிவாரணப் பணிகளை செய்து வந்தார். அரசு பல் மருத்துவர், அவரது மனைவி மருத்துவர். சென்னை போரூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக தனக்கு காய்ச்சல் அடிப்பதால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று சோதித்துக் கொண்டார்கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வரவே, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரட்டை கொலை .. அதிர்ச்சி ஆடியோ...வீடியோ லீக்


/tamil.news18.com/ : சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளன. உடல் நலக்குறைவுடன் இருந்த தந்தையும், மகனும் சிறையில் அடைக்க தகுதிச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் யார்? சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு காரணமான அதே போலீசார் மீது குவியும் புகார்கள்.. அடுத்தது என்ன?< அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர், விசாரணை என்ற பெயரில் காவல்துறை அதிகாரி கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தில் மூச்சு விட முடியாமல் உயிரிழந்தார். உலகையே புரட்டிப் போட்ட இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
அந்த சம்பவத்திற்கு நிகராக, அதிகாரம் படைத்த கரங்களால், அப்பாவிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த சாத்தான்குளம் சம்பவம் இந்தியாவையே புரட்டிப் போட்டுள்ளது.
டீக்கடை தொடங்கி, டிக்டாக் வரை ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பதே விவாதப்பொருளாக மாறியுள்ளது.

CSI சர்ச்சுக்கள் நாடார்களின் சங்கர மடங்கள். ஏறக்குறைய பார்ப்பனியத்தின் 2.0

Arjun Selvaprabhu:   : நாடார் சங்கங்கள்...
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருது நகர் மாவட்டங்களில்,
நாடார்கள் கடை வைத்திருக்கும் ஏரியாக்களில் ஒரு தாழ்த்தப்பட்டவர் போய் கடை வைத்துப் பிழைப்பு நடத்த முடியாது.
நாடார்கள் தங்கள்து கடைகளை ஒரு போதும் மற்ற சாதி மக்களுக்கு வாடகைக்கு கொடுப்பதில்லை. கடை சும்மாவே பூட்டியிருந்தாலும் கூட மற்றவர்களுக்கு கொடுக்கவே மாட்டார்கள்.
நாடார்கள் போகும் கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு ஒரு தலித் போதகராக போகவே முடியாது.
CSI சர்ச்சுக்கள் இவர்களது சங்கர மடங்கள்.
இது ஏறக்குறைய பார்ப்பனியத்தின் 2.0
தமிழக வணிகர் சங்கம் என்பது உண்மையில் அது நாடார்களின் வணிகர் சங்கம்.
இரண்டு வாரங்களுக்கு முன் திருவண்ணாமலையில் போலீசார் ஒரு வியாபாரியை அடித்து இழுத்து சென்றிருக்கிறார்கள், அவ்வியாபாரியின் தாய் தீக்குளித்து இருக்கிறார். அப்போது இந்த வணிகர் சங்கம் போனது? திருச்சியில் ஒரு இசுலாமிய பெரியவரை போலீஸ் அடித்துக் கொல்லும் போது இந்த வணிகர் சங்கம் எங்கே போனது??
எத்தனை தலித்துகள் , இஸ்லாமியர்கள், பழங் குடிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்த நாடார் அமைப்புகள் ஏதாவது ஒரு சிறு கண்டனக் குரலாவது கொடுத்திருக்கிறார்களா?
பார்ப்பன பனியா கும்பல்கள் வணிகத்தையும், மீடியாக்களையும், அதிகாரத்தையும் தங்கள் வசப்படுத்தி பிற சாதி மக்கள் மேல் அக்கறையற்று, தங்களது நலனில் மட்டும் அக்கறை கொண்டு எப்படி மிகப்பெரிய நெட்வொர்க்வுடன் லாபியிஸ்ட்டுகளாக, குழு மனப்பான்மையில் வாழ்கிறார்களோ அதைப் போல்தான் இவர்களும் சமூக மைய நீரோட்டத்திலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

Police விடிய விடிய அடிச்சே கொன்னுருக்காங்க`- கதறும் Kovilpatti Bennix அக்கா

ஆடிட்டர் குருமூர்த்தியால் எனது உயிருக்கு ஆபத்து… பெண் எழுதிய கடிதத்தால் பரபரப்பு… வெளிவந்த அதிர்ச்சி தகவல்!


kanchinakkheeran.in - தாமோதரன் பிரகாஷ் : சங்கரராமன் படுகொலைக்குப் பிறகு மீண்டும் ஒரு ரத்தக் களரி நடக்கும் அறிகுறிகள் காஞ்சி சங்கர மடத்தில் தெரிகின்றன எனப் பதற்றத்தோடு தெரிவிக்கின்றனர் உண்மையான பக்தர்கள்.
அதற்கு வலு சேர்ப்பதுபோல, “ஆடிட்டர் குருமூர்த்தியால் எனது உயிருக்கும், எனது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது” எனக் காமாட்சி என்கிற பெண்மணி பரபரப்பான கடிதத்தை விஜயேந்திரருக்கு எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் நமக்குக் கிடைக்கவே, நாம் கௌரி காமாட்சியைத் தொடர்பு கொண்டோம். அவர் மடத்தில் நடக்கும் விவகாரங்களை ஒரு ஆடியோ பேட்டியாக நமக்கு அளித்தார்.
“நமஸ்காரம். என் பெயர் கௌரி காமாட்சி. திருவனந்தபுரத்தில் இருக்கிற காலேஜில் சி.இ.ஓ. அண்டு டிரஸ்டி. 2011இல் இந்தக் காலேஜோட மேனேஜ்மெண்ட்ட ஜெயேந்திரர் சுவாமிகள் எனக்குக் கொடுத்தார். இந்தக் காலேஜ் காஞ்சிபுரம் சங்கர மடத்தினுடையது. 2011இல் இருந்து நான்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். பல தடவை இந்த டிரஸ்டீஸ் சைடில் இருந்து விற்கணும் விற்கணும் எனச் சொல்லுவா. ஜெயேந்திரர் வேண்டாம் எனத் தடுத்துடுவா. இப்ப பெரியவா மறைவுக்கு அப்புறம் விஜயேந்திரர் ஸ்வாமிகள்தான் இந்தக் காலேஜோட பேர்ட்டன். அவர்தான் முடிவு எடுக்கணும். நான் ஜெயேந்திரரால் நியமிக்கப்பட்டேன்.

வெள்ளி, 26 ஜூன், 2020

சாத்தான் குளம் ..சுசித்ரா அதிரடி வீடியோ Singer suchitra latest viral video

இன்று ம பொ சிவஞானம் பிறந்த நாள் . பலரும் அறியாத செய்திகள்


 Elengovan K Dev இவர் காங்கிரஸில் இருந்தபோது பிராமணர் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.
 நீதிக்கட்சியை எதிர்பதே குறிக்கோளாக கொண்டவர்
காங்.கட்சி போட்டியிடாதபோதும் அதன் சார்பாக சுதந்திரா கட்சி போட்டியிட்டது .
அந்த தேர்தலில் ஆட்சிஅதிகாரத்திற்கு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டால் நீதிக்கட்சி வரவிடக்கூடாது என்பதற்காக சுயேட்சை வேட்பாளர் சுப்பராயனை முதல்வராக்க துடித்தவர்
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காலையில் கலந்து கொண்டு மாலையில் விலகி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்தவர் இந்தி போராட்டம் காங் .எதிர்ப்பு என்று விளக்கம் அளித்தவர்
1929 ல் சைமன் கமிசனில் இந்தியர் எவரும் இல்லை என்று சைமன் கமிசனை காந்தி புறக்கணித்தபோது பிராமணருடன் சேர்ந்து அறிக்கை அளிக்க தயாரானவர் மபொசி
1946 ல் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் இவருக்கு வழங்கபட்ட இடம் நரசிம்மராவ்க்கு ஒதுக்கபட்டதால் அவர் தெலுங்கர் என்ற பிரச்சாரத்தை தொடங்கியவர் மபொசி

பொம்பியோ: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகளை இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் நியமிக்க பரிசீலனை


tamilmurasu.com : அதிபர் டிரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரில் இந்தப் பரிசீலனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் இதன் அங்கமாக ஜெர்மனியில் தமது படைகளை 52,000த்திலிருந்து 25,000ஆக குறைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது என்றார் மைக் போம்பியோ. படம்: ராய்ட்டர்ஸ் சீனாவின் அச்சுறுத்துல் அதிகரித்து வருவதையடுத்து, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைகளை ஆசியாவில் நியமிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார் இந்தப் பரிசீலனை அதிபர் டிரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் இதன் அங்கமாக ஜெர்மனியில் தமது படைகளை 52,000த்திலிருந்து 25,000ஆக குறைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது என்றார் மைக் போம்பியோ.

கனிமொழியின் பாதுகாப்பு போலீஸ் வாபஸ்.. தனியார் செக்கியுரிட்டிகளை ...


amil.oneindia.com - hemavandhana : சென்னை: இரண்டு நாட்களாக சாத்தான்குளம் விவகாரத்தில் எடுத்த அதிரடிகளில் மொத்தமாக  தொகுதி மக்களின் மனசிலும் நின்றுவிட்டார் எம்பி கனிமொழி!
வழக்கமாக, சென்னையில் உள்ள கனிமொழியின் வீட்டு வாசலில் 10 போலீஸ்காரர்கள் எந்நேரமும் இருப்பார்கள்.. ஆனால், நேற்று ஒருத்தரையும் காணவில்லை.. அதனால் உடனடியாக தனது பாதுகாப்பிற்கு தனியார் செக்யூரிட்டிகளை அவசர அவசரமாக வரவழைத்தார்..
இதற்கெல்லாம் காரணம்.. சாத்தான்குளம் விவகாரத்தில் கனிமொழி காட்டிய ஆவேசமான அக்கறைதான்.. சாத்தான்குளம் போலீசாருக்கு எதிராக டிஜிபியை நேரில் சந்தித்து புகாரையும் அளித்துவிட்டு வந்த மறுநாளே வீட்டில் பாதுகாப்பு போலீசார் வாபஸ் பெறப்பட்ட சம்பவம் அரங்கேறியது
முன்னதாக, கனிமொழிக்கு நெருக்கமாக இருந்த ஒரு காவல்துறை அதிகாரியும் வேறு பதவிக்கு மாற்றப்பட்ட நிகழ்வும் அரங்கேறியது...

ஜே அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் முதல்வர் எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு பதில்


முதல்வரே உங்க வேலையப் பாருங்க: அன்பழகன் சீட்டில் அமர்ந்த மகன்! மின்னம்பலம் : முதல்வரே உங்க வேலையப் பாருங்க: அன்பழகன் சீட்டில் அமர்ந்த மகன்!
திமுக சென்னை மேற்கு மாசெவும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் 10 ஆம் தேதி காலமானார்.
அதுமுதல் கொண்டு அதிமுக அமைச்சர்களும், முதல்வரும் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒருங்கிணைவோம் வா திட்டத்தால்தான் ஜெ. அன்பழகன் மரணமடைந்தார் என்று விமர்சித்தனர். இதற்கு திமுக தரப்பில் பதில் தரப்பட்ட நிலையில் முதல் முறையாக ஜெ. அன்பழகனின் குடும்பத்தில் இருந்து முதல்வருக்கு எதிரான குரல் வெடித்துள்ளது.

சாத்தான் குளம் காவல் நிலையத்தில் அரங்கேறிய வெறியாட்டம் ... சவுக்கு சங்கர்

சாத்தான்குளம் கடைசியாக இருக்கட்டும் savukkuonline.com : தமிழகத்துக்கு கஸ்டடிகொலைகளும், போலி மோதல் படுகொலைகளும் புதிதல்ல. இதில் வட இந்தியா, தமிழகம் இரண்டுக்கும் வேறுபாடெல்லாம் இல்லை. கஸ்டடி எடுப்பவர்களை அடித்து துவைப்பது என்பது அன்றாட நிகழ்வு. இதில் கொலைகளும் நடந்து விடுவதுண்டு. இது போல நடக்கும் கஸ்டடிகொலைகளில், நூற்றில் ஒரு வழக்கில்கூட சம்பந்தப்பட்ட காவல் துறையினர் தண்டிக்கப்படுவதில்லை.  சில நிகழ்வுகளில் துறை நடவடிக்கை எடுக்கப்படுவதுண்டு.  ஆனால் 95 சதவிகித நிகழ்வுகளில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.
காவல் நிலையத்தில் வைத்து ஒரு கைதியை அடித்தே கொலை செய்த பிறகு கூட நம்மை நமது துறை காப்பாற்றி விடும் என்கிற காவல் துறையினரின் அசாத்திய நம்பிக்கையே இதுபோன்ற கொலைகள் தொடர  காரணமாக இருந்து வருகிறது. இது தான்  சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டதற்கான அடிப்படை காரணம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்து போன பென்னிக்ஸ் (31) மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் (58) ஆகியோர் மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.   பொது பிரச்சினைகளில் கூட தலையிடாதவர்கள்.  பென்னிக்ஸ் ஒரு செல்போன் கடை வைத்துள்ளார்.  அவர் தந்தை ஜெயராஜ் மரக்கடை நடத்தி வருகிறார்.  இவர்கள் எந்த காரணத்துக்காகவும் காவல் நிலையத்துக்குச் சென்றதில்லை. ஆனால் இவர்கள்தான் பொதுமுடக்க சமயத்தில் கடையை மூடவில்லை என்ற ஒரே காரணத்துக்காக இன்று அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான் குளம் .. நடந்தது என்ன ? போலீஸ் தாக்குதல் கொரோனா நோய் போன்றது: உயர் நீதிமன்றம்

திமுக எம்.பி கனிமொழி அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அவர் அளித்துள்ள புகாரில், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது பென்னீக்ஸை கையாண்ட விதம் மனித உரிமை மீறல் ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21க்கு புறம்பாக செயல்பட்டுள்ளனர். மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை போலீசார் சிறிதும் பின்பற்றவில்லை. இதேபோல் தமிழக அரசு பிறப்பித்துள்ள காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மீறியிருக்கின்றனர்..

மின்னம்பலம் :போலீஸ் தாக்குதல் கொரோனா நோய் போன்றது: உயர் நீதிமன்றம்!
காவல்துறையினரால் மக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்று மற்றொரு நோய் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. ஜூன் 24ஆம் தேதி இவ்வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணை கைதிகள் மரணமடையும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தூத்துக்குடி எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை மற்றும் இருவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, அதன் வீடியோ பதிவு ஆகியவற்றை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்திய – சீன.. பதற்றம்: கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் புதிய ராணுவ கட்டடங்கள்

புதிய கட்டடங்களை காட்டும் புகைப்படம்புதிய செயற்கைக்கோள் படம்   BBC : இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் 15ஆம் தேதி இரவு மோதல் நடந்த பல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் சீனா புதிய கட்டுமானங்களை எழுப்பியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிகிறது.
பதுங்குக் குழிகள் கூடாரங்கள் ராணுவ தளவாடங்கள் தளங்களுக்கான சேமிப்பு கிடங்குகள் ஆகியவை புதிதாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது அந்த படங்கள் மூலம் தெரிய வருகிறது.
இந்த கட்டுமானங்கள் எவையும் சென்ற மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில் இல்லை; அணு ஆயுதங்களை கொண்டுள்ள இந்த இரண்டு நாடுகளும் எல்லைப்பகுதியில் கட்டுமானங்கள் எழுப்புவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது சமீபத்திய பதற்றத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

சாத்தான்குளம் வியாபாரிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

sathankulam-traders-bodies-given-to-relatives.hindutamil.in : காவல்துறை தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் சாத்தான்குளம் வியாபாரிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பட்டிருந்த சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை வாங்குவதற்காக அவர்களது உறவினர்கள் இன்று காலை 11 மணியளவில் வந்தனர்.

ஒற்றைத் தலைமை- சுற்றுப் பயணம்: எடப்பாடி ரெடி

ஒற்றைத் தலைமை- சுற்றுப் பயணம்:  எடப்பாடி ரெடிமின்னம்பலம் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்புப் பணிகளை ஒருபக்கம் முடுக்கி விட்டிருந்தாலும், அதிலேயே முழு கவனத்தையும் செலுத்தாமல் மற்ற பணிகள் மீதும் கவனத்தைத் திருப்பியிருக்கிறார். நேற்று (ஜூன் 25) கோவை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுக் கூட்டங்கள், மக்கள் சந்திப்புகள் என்று களமிறங்கிவிட்டார்.
சேலத்தில் இருந்து நேற்று கோவை சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழிற்சாலைகள் நிறைந்த கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அமரர் வி பி சிங் : என் வாழ்நாள் முழுவதும் கலைஞருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்

இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி . ஏழைகள் சமுகத்தின் அடிநிலையில் உள்ள மக்களின் குறைகளை கேட்பதற்காக அவருடைய வீட்டு கதவும் காதுகளும் எப்போதும் திறந்தே இருக்கும் . சமுக நீதிக்கான பயணத்தில் எனக்கு உறுதியான கூட்டாளியாக அவர் திகழ்ந்தார். தன்னுடைய ஆட்சியையும் இழக்க தயாராக இருந்தார் . அதற்காக என் வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்! சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் (ஜூன் 25)
Govi Lenin : பிரதமர் பொறுப்பை ஏற்ற பிறகு 1990ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னைக்கு வருகிறார் வி.பி.சிங். தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில், கலைஞர். புதுப்பிக்கப்பட்ட மீனம்பாக்கம் விமான நிலையத்தின் திறப்பு விழா. (கண்ணாடி உடைந்துவிழுந்து கின்னஸ் சாதனை செய்யும் இந்த கட்டடம் அல்ல. அதற்கு முந்தையது).
விழாவில் முதல்வர் பேசும்போது, பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும் சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார். பிரதமர் வி.பி.சிங் பேசும்போது, முதல்வரின் கோரிக்கையை ஏற்று, ‘அண்ணா பன்னாட்டு முனையம்’, ‘காமராஜர் உள்நாட்டு முனையம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுவதாக அந்த மேடையிலேயே அறிவித்ததுடன், “கலைஞர் அவர்களே.. இனி உங்கள் மாநிலத்தின் கோரிக்கைக்காக நீங்கள் டெல்லி வரைக்கும் வரவேண்டியதில்லை. சென்னையிலிருந்தே போன் செய்யுங்கள். நிறைவேற்றுகிறோம்” என்றார்.

சசிகலா நடராஜன் விடுதலை .. சில வாரங்களில் அல்லது ஆகஸ்ட்டில் ...

tamil.samayam.comஅதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் இவர்கள் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா காலமானதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே, நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என கர்நாடக சிறைத்துறை இயக்குநராக இருந்த என்.எஸ்.மெகரிக் தெரிவித்திருந்தார்.

தலித் ஜாதி வெறிக்கு எதிராக பொங்க மறுப்பது ஏன்?

Kathiravan Mayavan : ஜாதி ஒழிப்புக்கவே உயிர் வாழுகிற
போராளிகளின் கவனத்திற்கு ..
இன்னும் இந்த கொடுமையை பற்றி பேச மறுப்பது என்?
சுய ஜாதியிலேயே மறு திருமணம் செய்து கொண்ட கௌசல்ய பற்றி பேசுபவர்கள் தலித் ஜாதி வெறிக்கு எதிராக போங்க மறுப்பது என்?
ஜாதி ஒழிப்பு என்பது பிற்படுத்த மக்களுக்கு எதிராக மட்டும் தானா ? > சேரியில் உள்ள ஜாதிவெறிக்கு எதிராக பேச மறுப்பவர்கள் இனியாவது பேசுவார்களா? அல்லது தொடர் கள்ள மௌனம் இருப்பார்களா? ..
கோவை தடாகம் இடையர்பாளையத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகம் சார்ந்த கார்த்திகேயன் என்பவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தமிழினி என்ற பெண்ணை காதலித்து சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்!
இவர்கள் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு என்பதனால் அவர்கள் மணமகன் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழினியின் தந்தை முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதனால் நள்ளிரவில் வீடு புகுந்து மணமகனையும், அவரது குடும்பத்தவரையும் கொடூரமாகத் தாக்கிய தமிழினியின் உறவினர்கள் தமிழினியைக் கடத்திச் சென்றுள்ளனர்!
மேலும் மணமகனை ஆணவப்படுகொலை செய்வதாகவும் மிரட்டிச் சென்றுள்ளனர்!

வியாழன், 25 ஜூன், 2020

சிக்கலில் கருணா .. ஆனையிறவுத் தாக்குதலில் 2000-3000 இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக ....

ஆனையிறவுத் தாக்குதலின் போது 2000-3000 இராணுவத்தினரை  ஒரே இரவில் கொன்றொழித்ததாக புலிகளின் தளபதி  கருணா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவரிடம் இன்று 7 மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. 

எம்.எஸ்.எம். ஐயூப் :;  தேசப்பற்று என்பது ஒரு வகையில் ஆச்சரியமானது. சிலவேளைகளில், அது மனிதனை இயங்கச் செய்கிறது. சிலவேளைகளில், அது அவ்வாறு செய்வதில்லை. சிலவேளைகளில், கிள்ளுவதுகூட ஒருவரை ஆவேசம் கொள்ளச் செய்யும். சிலவேளைகளில், அணுகுண்டு வெடித்தாலும் ஒருவரைத் தட்டி எழுப்பாது.
 கடந்த காலங்களில், தமிழ் அரசியல் கட்சிகள் சமஷ்டி முறை ஆட்சி வேண்டும் என்று கூறிய போதெல்லாம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலர், நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள் எனக் கூறி, துள்ளிக் குதித்தனர். ஆனால், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தாம்
ஆ​ைனயிறவு இராணுவ முகாமில் 2,000 படையினரையும் கிளிநொச்சியில் 3,000 படையினரையும் கொன்றதாகக் கடந்த வாரம் கூறியபோது, அதை நியாயப்படுத்த பொதுஜன பெரமுனவினர் படும் பாட்டையும் கேட்காததைப் போல இருக்க எடுக்கும் முயற்சியையும் பார்க்கும் போது தான், இவ்வாறு தேசப்பற்று விந்தையானது என்று தோன்றுகிறது.

நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை


மாலைமலர் : நெல்லையின் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை: நெல்லையில் உள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சமீபத்தில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் ஹரிசிங் இன்று தற்கொலை செய்துகொண்டார். தனக்கு கொரோனா இருப்பது பற்றி தெரியவந்ததும், தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீன கைப்பேசிகள் .. சில நிமிடங்களில் ஆன்லைனில் விற்றுத் தீர்த்தன.. சீனாவிற்கு எதிரான மனநிலையை மீறி அமோக விற்பனை

anti-china-sentiment-india-mobile-phoneshindutamil.in : சீனாவிற்கு எதிரான மக்கள் மனநிலையை மீறி சில நிமிடங்களில் ஆன்லைனில் அதன் கைப்பேசிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இது அமேஸான் இந்தியா டாட்காமில் ஜூன் 18 இல் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவுடனான சீனாவின் ஜூன் 15 மோதலில் நம் 20 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதிலும்சீனத் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் சீனாவிற்கு எதிரான கருத்துகள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால், சீனா நிறுவனமான ஒப்போ தனது புதியவகை கைப்பேசியின் ஆன்லைன் அறிமுகத்தை ஒத்தி வைத்துள்ளது.

சாத்தான் குளம் .. அதிமுக அரசை நேரடியாக கண்டிக்க மறுக்கும் பா. ரஞ்சித்

நீங்கள்தான் மக்கள் அரசா... பா.ரஞ்சித் கோபம்!
p r
நக்கீரன் செய்திப்பிரிவு  :தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின்
பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாக கூறி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சுந்தரம் ஆசாரி மகன் மகேந்திரன்.. சாத்தான்குளம் போலீஸ் செய்த இன்னொரு கொலை

பத்து நாட்களுக்கு முன்னால் பேய்க்குளத்தில் சுந்தரம் ஆசாரி மகன் மகேந்திரன் என்பவரை சாத்தான்குளம் போலீஸார் அடித்து படுகொலை செய்துவிட்டார்கள். அந்த வீட்டைச் சேர்ந்தவர்களிடம் பயம் காட்டி அவர்களை மிரட்டி புகார் கொடுக்காமல் செய்துவிட்டார்கள்
மின்னம்பலம் : சாத்தான்குளம் போலீஸ் செய்த இன்னொரு கொலை?தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலைய போலீஸால் தாக்கப்பட்ட ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம் அடைந்த விவகாரம் மேலும் பல விவகாரங்களை கிளறிவிட்டிருக்கிறது. இதே சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பேய்க்குளத்தைச் சேர்ந்த இன்னொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்று புதிய புகாரை எழுப்பியுள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், மகன் பென்னீக்ஸ் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணையின் பேரில் இருவரையும் கடுமையாகத் தாக்கியதில் ஜெயராஜும், பென்னீக்ஸும் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

சீனா எல்லை மீறுவதற்கு என்ன காரணம்? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!"

bjpநக்கீரன் : இதுவரை இல்லாத அளவுக்குக் கடும் நெருக்கடியில் இந்தியா? சீனா எல்லை மீறுவதற்கு என்ன காரணம்? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!"
சீனாவின் படைக் குவிப்பு, நேபாளத்தில் எல்லை உரிமை, அவ்வப்போது காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல், தேசமெங்கும் கரோனா ஆக்கிரமிப்பு என சுதந்திர இந்தியாவில் வேறெப்போதும் காணாத நெருக்கடியை இந்திய ஒன்றிய அரசு சந்தித்துவருகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்கூட அடிக்கடி எல்லைப் பிரச்சனைகள் வருகின்றன. அப்போதெல்லாம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என அதிரடி காட்டும் நமது பாதுகாப்புத் துறை. சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை ராணுவ மற்றும் ராஜ்ஜியரீதியான சுமூக முறையில் எதிர்கொள்கிறோம் என்கிறது இந்திய வெளியுறவுத் துறை.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான எல்லைக் கோட்டை லைன் ஆப் கண்ட்ரோல் (LOC) என்கிறோம். அதாவது இந்திய- பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லைக்கோடு இருநாடுகளின் பரஸ்பர சம்மதத்தின் பேரில் வரையறுக்கப்பட்டது. மாறாக, இந்திய- சீனாவுக்கு இடையேயான எல்லைக்கோடு லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் (LAC) எனப்படுகிறது. அதாவது இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைக்கோடு பரஸ்பரம் வரையறுக்கப்படவில்லை.

சி பிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மாலைமலர் : புதுடெல்லி: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசுநாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்ததுஇதனிடையே தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஒரு மாணவரின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது.

திருக்குறள் முதன் முதலில் ஆங்கிலேயர்களால் தான் பதிப்பிக்கப்பட்டது.

முதலில்வெளிவந்த திருக்குறள்
Vicky Kannan : திருக்குறள் முதல் பதிப்பு!
திருக்குறள் என்பதே ஆங்கிலேயர்களால் தான் பதிப்பிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் தான் திருக்குறளை படித்து அதன் அருமை பெருமைகளை வெளியுலகிற்கு கொண்டு வந்தனர் எனும் பிம்பம் இக்காலத்தில் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை காண முடிகிறது. ஆனால் உண்மை என்ன? திருக்குறள் ஏற்கனவே நேரடியாக சைவ சித்தாந்த சாத்திர நூல்களிலும் , திருமுறைகளிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்பதை சில நாட்களுக்கு முன்பு விரிவாக ஒரு கட்டுரையில் பதிவிட்டிருந்தோம். (படிக்காதோர் மறுமொழியில் பார்க்க)
ஆங்கிலேயரான மதிப்பிற்குரிய எல்லீஸ் அவர்கள் திருக்குறளினை படித்து, வியந்து அதனை அச்சுக்கு கொண்டு வந்தார் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் செய்தி. ஆனால் அவர் 13 அதிகாரங்களுக்கு மட்டுமே உரையெழுதியிருந்தார். மீதமுள்ளவைகளை திரு இரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதி அதனை வெளியிட்டது வெகுபிற்காலம்.
திருக்குறளின் மூலப்பதிப்பு எது என தேடினால் கிடைத்தது 1812இல் மாசதினச்சரிதை அச்சுக்கூடத்தால் (இது தான் தமிழகத்தின் முதல் இதழ்) பதிப்பிக்கப்பட்டது தான். பதிப்பித்தவர் யாரென பார்த்தால் தஞ்சை நகர மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசர் அவர்கள் தான்.

பொட்டம்மான் தமிழ்செல்வன் நடேசன் ..... கருணா .. ஒரு கிழக்கு போராளியின் குரல்

Reginold Rgi :  யார் இந்த கருணாம்மான் என்ற
கேள்விக்கு 1983ம் ஆண்டு காலப்பகுதிக்கு  செல்ல வேண்டும் ஆம் மட்டக்களப்பு மாவட்டத்தின் 80% நிலப்பரப்பையும் அம்பாரை மாவட்த்தின் 30%
நிலப்பரப்பையும் தனது பூரண கட்டுப்பட்டுக்குள் வைத்திருந்த ஒரு மாவீரனின் வரலாறு ஒரு புறம்மறைக்கப்பட தமிழீழமே எமது மூச்சு என்று எமது சொந்தங்கள் பந்தங்கள் சொத்து சுகங்களை இழந்து போராடப் புறப்பட்ட நான்கு நண்பர்களின் கதை ஆம் வீரம் விளைநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் மட்டக்களப்பில் உள்ள எழுவான்கரைதான் எனது சொந்த ஊர் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் சிங்கள பௌத்த பேரினவாதிகளாலும் முஸ்லிம் ஊர்காவல் படையாலும் நாளுக்கு நாள் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தன எங்கெல்லாம் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் போதெல்லாம் ஒரு மாவீரனின் பெயரை மட்டக்களப்பிலும் அம்பாரையிலும் வாழும் தமிழ் மக்கள் உச்சரித்து கொண்டே இருப்பார்கள்

திணறும் திமுக.. யார் சொல்வதை கேட்பது.. "இவரா.. அவரா".. அதிருப்தியில் சீனியர்கள்..!

 Hemavandhana  - /tamil.oneindia.com :  சென்னை: சீனியர்கள், நிர்வாகிகள், ஐடிவிங் என்பதையும் தாண்டி, பிகேவுக்கு முக்கிய விஐபியுடன் மோதல் போக்கு உருவாகி உள்ளதாம்.. அதனால் கட்சிக்குள்ளேயே பிரசாந்த் கிஷோருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பி அறிவாலயத்தை சூடாக்கி உள்ளதாக கூறப்படுகிறது! எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற தீவிரத்திலும், வேகத்திலும் உள்ளார் திமுக தலைவர்.. இதற்காகவே வியூக புலியை ஒப்பந்தம் செய்து அழைத்து வந்தார்
அத்துடன், தமது ட்விட்டர் பக்கத்தில், பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து திமுக பணியாற்றும் என்றும் அறிவித்தார்.. ஸ்டாலினின் இந்த அறிவிப்பு விவாத பொருளானது. "இந்து விரோத கொள்கை, பிரிவினைவாதம், விஞ்ஞான ஊழலின் ஊற்றுக்கண் என பல பேர்பெற்ற தலைவர்களால் கட்டமைக்கபட்ட  ஒரு சர்வாதிகாரியாக ஸ்டாலின்  இருந்தும் கட்டுப்படுத்த வழியின்றி புதிய முயற்சியாய் பிராமணர் பிகேயார் காலடியில் சரணடைவது தொண்டர்கள் மேல் உள்ள அவநம்பிக்கை தான் காரணமா?" என தமிழக பாஜக ட்வீட் போட்டு கேள்வி எழுப்பியது. எதிர்க்கட்சி என்பதால் பாஜக இப்படித்தான் பேசும் என்று நினைத்தால், திமுகவுக்குள்ளேயே புகைச்சல் ஆரம்பமானது. 
வரப்போகிற சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம் என்று வியூகம் அமைத்து களமிறங்குவார்கள் என்று பார்த்தால், களையெடுப்பை கையில் எடுத்தது முக்கிய நிர்வாகிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது.. 

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: மனிதர்களிடம் பரிசோதனை தொடக்கம்


BBC : பிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு கொடுத்துப் பரிசோதிக்கும் பணி தொடங்கியது. இந்த
மருந்தினை தங்கள் உடலில் செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிற தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்துவது தொடங்கிவிட்டது. அடுத்த சில வாரங்களில் 300 பேர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்படும். லண்டன் இம்பீரியல் கல்லூரிப் பேராசிரியர் ராபின் ஷட்டாக் குழுவினர் இந்தப் பரிசோதனையை நடத்துகிறார்கள்.
முன்னதாக விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பதும், பயனுள்ள வகையில் நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வல்லுநர்கள் ஏற்கெனவே மனிதர்களிடம் பரிசோதனையைத் தொடங்கிவிட்டனர்.

தந்தை, மகன் மரணம் : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தை, மகன் மரணம் : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு தினமலர் :  மதுரை : போலீஸ் தாக்குதலில் காயமடைந்த தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம் அடைந்தது குறித்து தானாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, 'ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க போலீசார் பின்பற்றும் வகையில் வழிகாட்டுதல்கள் உள்ளனவா என அரசு தெளிவுபடுத்த வேண்டும். துாத்துக்குடி எஸ்.பி.,அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் 63, மரக்கடை நடத்தினார். இவரது மகன் பென்னிக்ஸ் 31. அதே பகுதியில் அலைபேசி கடை நடத்தினார். ஜூன் 19 இரவு 9:00 மணிக்கு சில போலீசார் ரோந்து சென்றனர். ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடையை திறந்து வைத்திருப்பதாகக்கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை கடைகளை மூடுமாறு கூறினர். இதில் இருதரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கனிமொழி MP : உடற்கூராய்வு முடியும் முன்பே தந்தை, மகன் இறப்பு காரணம் முதல்வருக்கு எப்படி தெரியும்?


கனிமொழி கேள்வி tamil.oneindia.com - veerakumaran : சென்னை: உடற்கூராய்வு முடிவதற்கு முன்பே, கோவில்பட்டி சிறைச்சாலையில் உயிரிழந்த தந்தை மகன் இறப்பின் காரணம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி தெரிந்தது, என்று திமுக எம்.பி.யான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவர் தந்தை ஜெயராஜ் ஆகியோர், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு, போலீசாரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோவில்பட்டி சிறைச்சாலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தமிழகம் முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அனைத்து எதிர்க் கட்சியினரும் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்,
சாத்தான்குளம் காவல் துறையினர் திரு.ஜெயராஜ் மற்றும் திரு.பென்னிக்ஸ் ஆகியோரை 19.06.2020 அன்று இரவு கைது செய்து, 20.06.2020 அன்று அதிகாலை சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கொலை வெறியர்களாக உருவெடுத்த தமிழக போலீஸ் . தூத்துக்குடி .. சாத்தான் குளம் ...

சாவித்திரி கண்ணன் : ''சார்,கையில பேப்பர் வச்சு இருக்கீங்க..இன்னைக்கு என்ன செய்தி வந்திருக்கு?''
காலையில் இளநீர் குடிக்கப் போன இடத்தில் பையன் கேட்டான்!
’’சாத்தான்குளங்கிற ஊர்ல மொபைல் கடையை கூடுதலான நேரம் திறந்து வச்சதுக்காக அப்பா,புள்ளை ரெண்டு பேரையும் போலீஸ் லாகப்புல வச்சு கொன்னுட்டாங்களாம்பா!’’
’’அய்யோ, கடையை மூடாம வச்சதுக்கா கொன்னுட்டாங்க…’’ அதிர்ச்சி தாங்காமல் கேட்டான் அந்த இளைஞன்!
’’டேய் பார்த்துடா..,போலீஸ் வந்து மூடுன்னா..,அடுத்த நிமிஷமே சரிங்க ஐயா ன்னுட்டு பவ்வியமா சட்டுபுட்டுனு எல்லாத்தையும் எடுத்துவச்சு குளோஸ் பண்ணிடு,கொலைகாரப் போலீசு பயலுவ…ஜாக்கிரதை’’ என்றார் பக்கத்தில் இளநீர் குடிக்க வந்த பெரியவரான அந்த வாடிக்கையாளர்!
’’ஆமாங்கய்யா! நான் எந்த பேச்சும் வச்சிக்க மாட்டேன்..ஏன்னா அவனுங்க சரியான காட்டானுங்க…அவங்க அதிகாரம் தான் அவங்களுக்கு முக்கியம்..அத்தொட்டு பணிவா போயிடுவேன்! அவங்க சாரயக் கடைக்குத் தான் பாதுகாப்பு கொடுப்பாங்க….ஆனா, எங்கள மாதிரி இளநீர் விக்கிறவங்களத் தான் டார்ச்சர் பண்ணுவாங்க…’’ என்று புலம்பித் தள்ளினான்!

புதன், 24 ஜூன், 2020

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் : முதல்வர் பழனிசாமி இரங்கல் - தலா 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

முதல்வர் எடப்பாடியின் உயிருக்கு ஆபத்து .. உளவுத்துறை எச்சரிக்கை .. பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது

தினகரன் :தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக உளவுப்பிரிவு போலீஸ் எச்சரிக்கை: பாதுகாப்பை பலப்படுத்த ஆணை சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக உளவுப்பிரிவு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத அடிப்படைவாதிகள், தமிழினவாதிகளிடம் இருந்து முதல்வருக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதால் இஸட் பிளஸ்  பாதுகாப்பை பலப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை.. செல்போன் லஞ்சமாக கேட்டு நடந்த கொலைகள்! ....

சில நாட்களுக்கு முன்பாக செல்போன் லஞ்சமாக கேட்டிருந்தார்கள் என்று தெரியவருகிறது அதை அவர்கள் தர மறுத்ததால் இந்த கொலைகள் நடந்திருப்பதாக தெரியவருகிறது . இது மிகவும் பாரதூரமான குற்றமாகும் .வெறுமனே பணத்தை நிவாரணமாக கொடுத்து சமாளித்து விட முடியாது . திட்டமிட்ட கொலைகளை புரிந்த குற்றவாளிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை தரக்கூடாது   என்று மக்கள் கொந்தளித்து போயுள்ளனர் .
வினவு ::தூ த்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தனது அதிகாரத்தைக் கேள்வி கேட்ட தந்தை – மகன் இருவரை சட்டவிரோதமாகக் கடத்தி அடித்து, போலீசு படுகொலை செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் நீதிகேட்டு பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை ஒட்டி, சம்பந்தப்பட்ட போலீசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது போலீசு. கொரோனா ஊரடங்கில் போலீசின் கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வணிகர்கள்தான். அந்த பாதிப்பு இங்கே இரண்டு பேரின் கொலையாக முடிந்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். ஜெயராஜும் அவரது மகன் மகன் பென்னிக்சும் அந்தப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர். கடந்த 19-ம் தேதி கடை மூடுவது தொடர்பாக கடையில் இருந்த ஜெயராஜிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார் போலீசு உதவி ஆய்வாளர் ரகுகணேஷ். இதனை ஒட்டி மறுநாள் 20-ம் தேதி ஜெயராஜைக் கைது செய்து அழைத்துச் சென்றது போலீசு.

கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செல்வதற்கு கடும் கண்டனம்

pr pandiyanகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதா? மத்திய அரசுக்கு  பி.ஆர்.பாண்டியன் கண்டனம் .
nakkheeran.in -நக்கீரன் செய்திப்பிரிவு: ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்படு வருவாய் இழப்பு ஏற்படுமேயானால் கடன் குறித்த நிவாரணத்தை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்கிறது.  இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப் படுத்தப்படுகிறது. எனவே கூட்டுறவே நாட்டுயர்வு என்ற வரலாற்று புகழுக்கு சொந்தமான கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதின் மூலம் மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் மட்டுமல்ல கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் செயலுமாகும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது. கிராமப் பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் முடக்கும் செயல்.

40 சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல் - சீனா மறுப்பு

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்: 40 சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல் - சீனா மறுப்பு தினத்தந்தி :  கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பீஜிங் . கிழக்கு லடாக் எல்லை பகுதியில்  கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 5 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியானது. முன்னதாக சீன அரசு மற்றும் ஊடங்கள் இந்த விவகாரத்தில் இந்திய ராணுவம் அத்துமீறியதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சீன தரப்பில் உயிரிழப்பு குறித்தும் மறுப்பு தெரிவித்துள்ளது.

சீக்கிரம் முடிச்சுக் கொடுத்துடுங்க சார். முடியாமப் போச்சுன்னா பிரயோஜனம் இல்லாம போயிடும்

டிஜிட்டல் திண்ணை: ஆட்சி போகும் போக்கு...!
டிஜிட்டல் திண்ணை: ஆட்சி போகும் போக்கு...!மின்னம்பலம் :
“ஒவ்வொரு ஆட்சிக்கும் ஐந்தாண்டு காலம் என்பது நமது அரசியல் அமைப்பு சட்டம் விதித்திருக்கும் கட்டளை. ஐந்தாண்டுகளை முடிக்கும் தருவாயில், ஒவ்வொரு ஆட்சியைப் பற்றியும் அந்த ஆட்சியின் தூண்களாக இருந்து பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு பிக்சர் கிடைக்கும். முழு ஆண்டு தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்கள் பற்றி அந்தந்த சப்ஜெக்ட் ஆசிரியர்களுக்கு எப்படி ஒரு கணிப்புச் சித்திரம் கிடைக்குமோ அதுபோல இந்த ஆட்சியைப் பற்றிய ஒரு சித்திரம் அதிகாரிகளுக்கு வந்துவிடும், ஆட்சி பற்றிய இந்த பிராக்ரஸ் ரிப்போர்ட்டின்படிதான் அதிகாரிகளின் கடைசி வருட நடவடிக்கைகள் இருக்கும். ஆட்சி மீது மக்கள் அதிருப்தியாக இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் முடிவு செய்துவிட்டால் அந்த போக்கு அதிகாரிகளிடத்திலும் எதிரொலிக்க ஆரம்பிக்கும். இப்படித்தான் அதிமுக அரசின் இந்த நான்காண்டுகள் பற்றிய ஒரு பிராக்ரஸ் ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும், ஐபிஎஸ் அதிகாரிகளும் தத்தமது வட்டாரங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி உளவுத்துறை போலீஸாரும், காவல்துறை அதிகாரிகளும் மக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்று அதை மேலிடத்துக்கு அனுப்பி வைக்கிறார்களோ, அதேபோல அரசின் நிர்வாகச் சங்கிலி மூலம் மக்களிடையே இருக்கும் மனப்பான்மை பற்றி ஐஏஎஸ் அதிகாரிகளான துறைச் செயலாளர்கள் வரை கருத்துகள் செல்லும்.

சாத்தான் குளம் . தந்தையையும் மகனையும் போலீசார் சித்திரவதை செய்து கொன்றனர்

சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம்:  கொரோனா தொற்று இருந்ததா?மின்னம்பலம் : சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம்: கொரோனா தொற்று இருந்ததா?
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த 26 வயது இளைஞர் பென்னிகஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் (56) ஆகியோர் காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, கோவில்பட்டி கிளைச் சிறையில் பூட்டப்பட்ட நிலையில் ஜூன் 22 ஆம் தேதி இரவு மகன் பென்னிகஸும், ஜூன் 23ஆம் தேதி காலை அவரது தந்தை ஜெயராஜும் இறந்துவிட்ட கொடூரம் தமிழகம் முழுக்க அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு இன்று வணிகர்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். சாத்தான்குளத்தில் இது மக்கள் போராட்டமாக மாறி தூத்துக்குடி, திருநெல்வேலி என தென்மாவட்டம் முழுவதும் பெரும் வேகத்தோடு இந்தப் போர்க்குரல் பரவிக் கொண்டிருக்கிறது.

தமிழக போலீஸ் கூலிக்கு கொலை செய்யும் குண்டர்கள் ஆகிவிட்டனர்?


ஊரடங்கில் கடை திறந்தது குற்றமே
என்றாலும் கைது செய்து சிறையில் அடைப்பது என்கிற அளவுக்கு கொடுங்குற்றமா?
அதன் பொருட்டு இரு இறப்புகள்.
இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. குறுதொழில் செய்யும் எனது நண்பர்கள் சிலர் சொல்லும் செய்திகளைக் கேட்கும் பொழுது இந்த நெருக்கடியான கால கட்டத்தில் அதிகாரத்தின் விகாரமான முகம் மிகக் கோரமாக மாறி உள்ளதாகத் தெரிகிறது. ஊரடங்கின் போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளத் தொழில்களைச் செய்பவர்கள் பலரும் கடந்த இரு நாட்களாக பெரும் மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறான தொழில் புரியும் என் நீண்டகால நெருங்கிய நண்பர் ஒருவரை அழைத்த போது ஊரடங்கு முடியும் வரை அலுவலகத்தை மூடி விட்டதாகச் சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் "பணம் கொடுத்து மாளவில்லை"
பொதுமக்கள்னா, எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து சொல்லு.. முதல்ல வண்டியில ஏறு...உடனே கைது, ரிமாண்ட், எதுவா இருந்தாலும் கோர்ட்ல பாத்துக்கோ.
அதுவே போலீஸ்னா, குறைந்தபட்சம், சஸ்பெண்ட், காத்திருப்போர் பட்டியல் கூட கிடையாது. ஒருவேளை ஐபிசி குற்றங்களிலிருந்து விலக்கு பெற்ற துறையா, காவல்துறை?

செவ்வாய், 23 ஜூன், 2020

மதுரவாயல் துறைமுகம் சாலை தடைபட்டது ஏன்?

Kandasamy Mariyappan  : ஒரு சில சின்னச் சின்ன செய்திகளுக்கு பின்னால்
எவ்வளவு பெரிய முன்னேற்றத் தடைகள் இருக்கிறது? அறிந்து கொள்வோம்.
அத்திட்டம் வெற்றிகரமாக முடிந்திருந்தால், நிறைய பலன்களை தமிழகம் அனுபவித்து இருக்கும்.
ஆனால் அதை நிறைவேறாமல் விடுபட்டதன் பின்னணி யாது?
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை ஏன் நிறுத்தப்பட்டது!?
Billion $ Questions!
UPA 1 அரசில் அங்கம் வகித்த திமுக, சென்னை துறைமுக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், திருப்பெரும்புதூரில் ஒரு Dry Port அமைத்து, சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 19 கிலோமீட்டர் தூரத்திற்கு 1800 கோடி மதிப்பில் ஒரு பறக்கும் சாலையை அமைக்க திட்டம் வகுத்து 400 கோடி செலவு செய்து தூண்கள் அமைக்கும் பணி முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2009ல் இதன் பணிகள் துவங்கப்பெற்றது.

உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு முன்பே எதிர்பார்க்க பட்டதா?


சாவித்திரி கண்ணன் : எதிர்பாராத எதுவும் உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பில் வந்து விடவில்லை!
ஒரு மேல்முறையீடு வழக்கு மூன்று வருடமாக இழுத்தடிக்கப்பட்டதிலேயே அரசு தரப்பில் வெளிப்பட்ட அலட்சியம் புரிந்தது.
இன்றைய மத்திய,மாநில ஆட்சியாளர்களின் மனோபாவத்திற்கேற்பத் தான் வழக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தப்படியே தீர்ப்பும் பெரும்பான்மை சாதிகளின் மக்கள் மகிழ்ச்சியடையும் வண்ணம் வந்துள்ளது.
கொலையின் சூத்திரதாரியான கெளசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டது நியாயப்படுத்தவே முடியாத அநீதி! இன்று தண்டிக்கப்பட்டவர்களுக்கும் உடுமலை சங்கருக்கும் எந்தவித முன் விரோதமும் கிடையாது. மூலவர்களை விட்டுவிட்டு, ஏவப்பட்டவர்கள் மட்டும் தண்டிக்கப்படுவது பேரவலம்!
ஒரு உயிரை எடுக்கும்படியான திட்டமிட்ட கொலைக்கு தண்டனை இல்லையென்றால், இனி குற்றங்கள் பெருகவே இது வாய்ப்பாகும். அந்த வகையில் இந்த தீர்ப்பு சமூக தளத்தில் ஏற்படுத்த போகும் எதிர்கால விளைவுகளை நினைத்தால் கவலையளிக்கிறது!
இந்த விவகாரத்தில் கெளசல்யா காட்டிவரும் உறுதி பிரமிக்க வைக்கிறது.

கொரோனா தடுப்பு மருந்து (favipiravir) கிளேன்மார்க் பங்குகள் எகிறியது 40 வீத ஏற்றம்



ஃபவிபிரவிர் மாத்திரைஃபவிபிரவிர் மாத்திரை
samayam .tamil : கொரோனா கொள்ளை நோயால் உலகம் முழுக்க மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு ஒரு தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கமாட்டார்களா என மக்கள் ஏங்கிக் கிடக்கின்றனர். மறுபுறம், கொரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க மருந்து நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பணிபுரிந்து வருகின்றன.இந்நிலையில், கிலென்மார்க் நிறுவனத்தின் ஃபவிபிரவிர் (favipiravir) மருந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய அரசு அனுமதியளித்துள்ளது. 200 மில்லிகிராம் அளவுள்ள 34 ஃபவிபிரவிர் மாத்திரைகள் அடங்கிய பேக்கின் விலை ரூ.3,500 ஆகும்.
;இதைத்தொடர்ந்து, நேற்று கிலென்மார்க் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 40% உயர்வை எட்டி சாதனை படைத்தது. மேலும், சிப்லா நிறுவனத்தின் பங்குகள் 9.5% உயர்ந்துள்ளன. இந்நிலையில், கிலென்மார்க், சிப்லா பங்குகளால் குறுகிய கால பயன் மட்டுமே கிடைக்குமே தவிர நீண்ட கால அடிப்படையில் லாபத்திற்கான வாய்ப்புகள் குறைவு என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு .. நைஜீரியா அறிவிப்பு

கொரோனாவிற்கு தடுப்பு மருந்துMageshbabu Jayaram - Samayam Tamil : உலகம் முழுவதும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் சூழலில் புதிதாக நைஜீரியா  நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறியுள்ளனர்.
;சீனாவில் தொடங்கி ஒட்டுமொத்த உலகையும் தனது கட்டுக்குள் கொண்டு விட்டதைப் போல் கொரோனா வைரஸ் நம்மை உணர வைத்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 4,74,467 பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 91,93,194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை தாண்டிவிடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத காரணத்தால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. />
இதற்கான ஆராய்ச்சிகளை பல்வேறு நாடுகளும் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் நைஜீரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி நைஜீரிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கோவிட்-19 ஆராய்ச்சி குழுவினர் கூட்டாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

மீனவர்களை காப்பாற்றவோ ..கடத்தலை தடுக்கவோ பயனற்று போன ரோந்து படகுகள் .. ராமேஸ்வரம்

 பழுதாகி கிடக்கும் கடலோர ரோந்து படகுகள்மின்னம்பலம் : மண்டபத்தில் பல மாதங்களாக கடலோர போலீசாருக்கு வழங்கப்பட்ட ரோந்து படகுகள் பழுதாகி கிடக்கின்றன. இவை இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்திலேயே மிக முக்கிய கடல் மற்றும் கடற்கரை பகுதிகளைக் கொண்ட மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம். அதற்கு முக்கிய காரணம் இலங்கை மிக அருகாமையில் உள்ளதாலும் அவ்வப்போது இலங்கையில் இருந்து அகதிகள் வந்து செல்வதோடு தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதும், இங்கிருந்து இலங்கைக்கு கடல் அட்டை மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாலும் இந்த கடல் மற்றும் கடற்கரை பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவே விளங்கி வருகிறது