சனி, 14 ஜூலை, 2012

எதியூரப்பா கோஷ்டி பிளவு ! Karnataka BJP game over

 Berth Pangs Push Bsy Camp Verge Spl அமைச்சர் பதவி விவகாரம்: 'டமார்' ஆகப் போகும் எதியூரப்பா கோஷ்டி!

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவின் கூட்டணி பிளவு ஏற்படும் நிலையில் உள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா முதல்வர் சதானந்த கவுடாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவருடைய நெருக்கடியையடுத்து சதானந்த கவுடா பாஜக மேலிடத்தின் உத்தரவின்பேரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எதியூரப்பாவின் ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் சதானந்த கவுடாவை பதவியில் இருந்து நீக்க எதியூரப்பாவின் சார்பில் குரல் கொடுத்து வந்த பேலூர் கோபாலகிருஷ்ணா, பி. சுரேஷ் கவுடா மற்றும் பி.பி. ஹரீஷ் ஆகியோர் தங்களுக்கு ஜெகதீஷ் ஷெட்டரின் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் எதியூரப்பாவின் கூட்டணி உடையும் நிலையில் உள்ளது.

சுய முன்னேற்ற நூல்களை எழுதிய கோபிக்கு தெரியவா இல்லை?


தமிழர்கள் சில விஷயத்தை பிடிக்காவிட்டால் கூட, திட்டிக்கொண்டே தொடர்ந்து செய்வார்கள். “கிரிக்கெட் மக்களை கெடுக்கிறது” என்று சொல்லிகொண்டே மேட்ச் பார்ப்பார்கள். சினிமாவை திட்டி கொண்டே, சினிமா செய்தி ஒன்று விடாமல் படிப்பார்கள். அந்த வரிசையில் இணையத்தில் மிக அதிகம் விமர்சிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா! என்ன தான் இந்நிகழ்ச்சியையும் கோபியையும் இணையத்தில் திட்டினாலும் நிறைய பேர் நிகழ்ச்சி பார்க்கின்றனர் என்பது நிதர்சனம்.
சரி விஷயத்துக்கு வருவோம்.

ரீமா சென்னின் கணவர் கோபம் திருமணத்துக்குப் பிறகும் படுக்கையறை காட்சியா?

Shiv Karan Angry On Reema Sen அட கண்றாவியே..திருமணத்துக்குப் பிறகும் படுக்கையறை காட்சியா?' - ரீமா சென் மீது கணவர் கோபம்!

திருமணமான பிறகும் படுக்கையறைக் காட்சியில் நடித்ததால் நடிகை ரீமா சென் மீது செம கடுப்பில் இருக்கிறார் அவரது கணவர் ஷிவ் கரண்.
நடிகை ரீமாசென்னுக்கும், டெல்லியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.
இதை தொடர்ந்து கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சொசைட்டி என்ற இந்தி படத்திலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அன்சாரி:


 Ansari Vice Presidential Candidate
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியையே மீண்டும் வேட்பாளராக நிறுத்த ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது. டெல்லியில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட்டது,
குடியாசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை நிறுத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியையே மீண்டும் நிறுத்துவது என முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.

Shanti niketan தாகூரின் கல்லூரியில் சிறுநீர் பருக்கியது சரியாம் சுவாமி அக்னிவேஷ்

குழந்தையை மூத்திரம் குடிக்க வைத்தது தப்பில்லை - சுவாமி அக்னிவேஷின் உளறல்

நாட்டில் நடக்கும் எக்கச்சக்கமான பிரச்னைகளில் கடந்த சில நாள்களில் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மேற்கு வங்கத்தின் ஷாந்தி நிகேதனில் நடந்த ஒரு சம்பவம்.
ரபீந்திரநாத் தாகூர் உருவாக்கிய பள்ளி/கல்லூரி இது. ஜவாஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தியைப் படிக்க அனுப்பிய பள்ளி இது.
படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டாள் என்பதால் பத்து வயதுச் சிறுமியை, அந்தச் சிறுநீரையே நக்கவைத்திருந்தார் அந்த ஹாஸ்டல் வார்டனான உமா போத்தார் என்பவர். விஷயம் பெரிதாகி, அந்த ஹாஸ்டல் வார்டன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் குழந்தையிடம், அந்தப் பள்ளிக்கூடத்துக்கு மீண்டும் செல்கிறாயா என்று கேட்டாலே அதிர்ச்சியில் உடல் நடுங்குகிறது என்கின்றன செய்திகள்.

கேரள நடிகர்கள் ஷாக்! இனி பிரைவேட் விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது! -

Kerala Film Chamber Bans Actors Att
திருவனந்தபுரம்: கேரள படங்களின் தொடர் தோல்வி காரணமாக, இனி நடிகர், நடிகைகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய வருவாய் ஆதாரமாக இந்த தனியார் விழாக்கள் இருப்பதால், அடுத்து என்ன செய்வதென ஆலோசனையைத் தொடங்கியுள்ளனர் கேரள நடிகர் சங்கத்தினர்.
கேரளாவில் சமீப காலமாக திரையிடப்படும் சினிமாக்கள் குறிப்பிட்ட வசூலும் பெறாமல் தோல்வி அடைந்து வந்தன. முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் தோல்வியை தழுவின. இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்துக்குள்ளானார்கள்.
இந்நிலையில் கேரளா பிலிம் சேம்பர் கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில் மலையாள சினிமா நடிகர்கள் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்வதால் சினிமா வசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று புகார் எழுப்பப்பட்டது.

அமெரிக்கா: நித்தியானந்தாவின் அத்தனை மடங்களும் மோசடியானவை

நித்தியானந்தாவின் அத்தனை மடங்களும் மோசடியானவை அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பால் கதிகலங்கிப் போன நித்தியானந்தா

அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் தனது மடத்தின் நிதி மோசடிகள் தொடர்பான வழக்கில் தண்டனை அறிவிக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து நித்தியானந்தா தனது கொடைக்கானல் முகாமை ரத்து செய்து விட்டு மதுரைக்கு ஓடி வந்துள்ளார்.
கலிபோர்னியா நீதிமன்றத்தில் நித்தியானந்தாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அவரை பதவியிலிருந்து நீக்குவேன் என்று மதுரை ஆதீனம் வேறு அதிரடியாக பேட்டி அளித்துள்ளதால், பீதியடைந்தே நித்தியானந்தா மதுரைக்கு ஓடி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நித்தியானந்தாவின் அத்தனை மடங்களும் மோசடியானவை, பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளன என்று கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Assam பெண் மானபங்கம் நாடு முழுவதும், கடும் எதிர்ப்பு

கவுகாத்தி: அசாமில், 20 பேர் கொண்ட வெறிக் கும்பலால், இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நாடு முழுவதும், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு, தேசிய பெண்கள் கமிஷன், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மானபங்கத்தில் ஈடுபட்ட 20 பேரில், இதுவரை, நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 13 ஜூலை, 2012

நடிகை நயன்தார டைரக்டர் ஆகிறார்

நடிகை நயன்தாரா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில்அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
கவும்சினிமாவிற்கு முழுக்கு போட்டு சென்றவர் மறுபடியும் வந்ததிலிருந்து பல பிரபல இயக்குனர்களின் படங்களை மறுத்து வந்த நயன்தாரா சட்டென விஷ்ணுவர்தன் படத்தில் ஒப்புக்கொண்டது ரசிகர்களுக்கு அந்த படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. நயன்தாரா படப்பிடிப்பிற்கு வந்து நடித்து முடித்துவிட்டு உடனே   சென்றுவிடுவதில்லையாம்.   படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே இருந்து விஷ்ணுவர்த்தனின் அசிஸ்டண்ட் டைரக்டராகவே  வேலை செய்துகொண்டிருக்கிறாராம்.
தனது சினிமா வாழ்க்கையில் முன்னேறி இயக்குனராகவேண்டும் என்ற நயன்தாராவின் கனவு கூடிய விரைவில் நிறைவேறிவிடும் என்கின்றனர் படக்குழுவினர். அவ்ளோ ஈடுபாட்டோட செய்றாங்களாம்

ஜாதி வெறி மீண்டும் தமிழகத்தில் பற்றி எரிகிறது

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது.  அரசு பொதுப் பள்ளியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப்படுவதை மறுப்பதாக, தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவதைத் தடுப்பதாக, கலப்பு மணத்தை எதிர்ப்பதாக, தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை அவமதிப்பதாக, ஆதிக்க சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்குவதாக, தீண்டாமைச் சுவராக, இரட்டை டம்ளராக, தாழ்த்தப்பட்டோர் படித்தும், உழைத்தும் சுயமரியாதையுடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பொறாமையாக  இப்படிப் பல்வேறு வடிவங்களில் இந்த ஆதிக்க சாதித் திமிர் தலைவிரித்தாடி வருவதற்கு சமீப காலமாக நடந்துவரும் பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டலாம்.

பில்லா 2.. சென்னையில் மட்டும் 50 அரங்குகள்!

Ajith Billa 2 Releasing 50 Screens In City
சர்வதேச அளவில் 2500 அரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 50 அரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது
 பில்லா 2.
ரஜினியின் சிவாஜி- தி பாஸ்க்குப் பிறகு, படத்தை வெளியிடும் முறையே மாறிப் போய்விட்டது. தமிழ் சினிமா வியாபாரத்தில் பல வகையிலும் முன்னோடியாக பார்க்கப்படும் இந்தப் படம்தான், அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் போக்கையும் ஆரம்பித்து வைத்தது.
2007-ல் சிவாஜி - தி பாஸ் படத்தை 19 அரங்குகளில் வெளியிட்டனர் 2007-ல். படத்துக்குத் தரப்பட்ட பெரும் விலையை, நான்கைந்து வாரங்களிலேயே எடுத்ததோடு, நல்ல லாபத்தையும் சம்பாதித்தனர்.
அதற்குப் பிறகு பலரும் தங்கள் படங்களை அதிக அரங்குகளில் வெளியிட்டு, குறைந்த நாட்களில் போட்ட பணத்தை எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
அதன் பிறகு 2010-ல் வந்த சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 44 அரங்குகளில் வெளியாகி புதிய சரித்திரம் படைத்தது.
இப்போது, அஜீத் நடிப்பில் வெளியாகும் பில்லா 2 படத்தை 50 அரங்குகளில் வெளியிட்டுள்ளனர் சென்னை நகரில் மட்டும். சர்வதேச அளவில் 2500 அரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.
பல தியேட்டர்களில் ரஜினி - அஜீத் படங்கடன் பில்லா 2 பேனர்களை வைத்துள்ளனர் அஜீத் ரசிகர்கள்.

நடுரோட்டில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த குடிகாரக் கும்பல்!

 Guwahati Minor Molested 20 Men Only 4 Arrested நடுரோட்டில் இளம்பெண்ணை விரட்டி, விரட்டி மானபங்கம் செய்த குடிகாரக் கும்பல்!

கெளஹாத்தி: அசாம் மாநிலத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் 20க்கும் மேற்பட்ட குடிகாரக் கும்பல் ஒன்று இளம் பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் செல்லும் சாலையில் மதுபானக் கடைக்கு இளம்பெண் ஒருவர் நண்பருடன் வந்திருக்கிறார். அப்போது போதையில் இருந்த 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த இளம்பெண்ணை சுற்றி வளைத்து மானபங்கப்படுத்தியுள்ளனர். அவரது தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி அடித்துத் தாக்கியுள்ளனர். மேலும் அவரை உடைகளை பொதுமக்கள் முன்னிலையிலேயே களைந்தும் இருக்கின்றனர்.சுமார் அரைமணி நேராமக அந்தக் கும்பலின் அட்டகாசம் நீடித்தது. அப்பகுதிக்கு போலீசார் வந்ததையடுத்து கும்பல் தப்பி ஓடியது. இதை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று அப்படியே படம்பிடித்து ஒளிபரப்பாக்கிவிட்டது. அப்புறம் என்ன! மாநிலமே களேபரமானது.

Guwahati Girl Molested By Mob In Public


Ex DMK MLA கைது, சிறுமி கற்பழித்து கொலைவீட்டு வேலை செய்து வந்த கேரள சிறுமி கற்பழித்துகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.  கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ராஜ்குமார் வீடு பெரம்பலூர்- அரியலூர் சாலையில் வெங்கடாசலபதி நகரில்
உள்ளது. இவர் தனது வீட்டுக்கு வேலை செய்ய பெண் தேவை என்று கூறி இருந்தார். கேரள மாநிலம் பீர்மேடு பகுதியை சேர்ந்த வேலைக்கு ஆள் அனுப்பும் தரகர்கள் பன்னீர்செல்வம், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் இதுபற்றி அறிந்தனர். அவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை தொடர்பு கொண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த சந்திரன்- சுசீலா தம்பதியின் மகள் சத்யா (வயது 15) வீட்டு வேலைக்கு வர தயாராக இருப்பதாக கூறினார்கள். சத்யா கேரளாவில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
வறுமை காரணமாக பள்ளியில் படித்து கொண்டிருந்த சத்யாவை, அவரது பெற்றோர் வீட்டு வேலைக்கு அனுப்ப சம்மதித்தனர். இதற்காக சந்திரன்-சுசீலா தம்பதி யினர் கடந்த 23-ந் தேதி பெரம்பலூர் வந்து ரூ.5 ஆயிரம் மட்டும் பெற்றுக் கொண்டு ஊருக்கு திரும்பினர்.

பில்லா 2 திருட்டு டிவிடி அவுட்!வெளியான 4 மணி நேரத்தில்


Billa 2 Pirated Dvd Out

 பில்லா 2, இன்று உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் இன்று காலை சென்னையில் வெளியானது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் நேற்று இரவே வெளியாகிவிட்டது.
இதனால், படத்தின் திருட்டு டிவிடி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல, இந்தியாவில் படம் ரிலீசான நான்கு மணி நேரங்களுக்குள் சுடச் சுட பில்லா 2 படத்தின் டிவிடிக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.
இணையதளங்கள் சிலவற்றிலும் இந்தப் படம் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.
திருட்டு டிவிடி வெளியாகியிருப்பது பில்லா 2 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
கதாநாயகன் அஜீத் வரமாட்டேன் என அடம்பிடித்த நிலையில், படத்தின் விளம்பரங்களுக்கு பெரிய அளவில் செலவழித்த தங்களுக்கு, திருட்டு டிவிடி விவகாரம் பெரும் சிக்கலைத் தந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.
நாளை அல்லது அதற்கடுத்த நாள் அநேகமாக போலீசாரை சந்திக்கவிருக்கிறார்கள், திருட்டு டிவிடிக்கு எதிராக மனு கொடுக்க!

லஞ்சத்தை தடுக்க முயன்றவருக்கு அமைச்சர் தண்டனை

கில்லாடி அ.தி.மு.க. அமைச்சர்: தூக்கியும் எறிந்தார்… தூதும் அனுப்பினார்!

Viruvirupu
அதிகாரிகள் மட்டத்தில் இப்படி ஒரு அதிரடியை எந்தவொரு அதிகாரியும் சந்தித்திருக்க முடியாது. நேர்மையாக பணியாற்றிய காரணத்தால் சிக்கலுக்கு உள்ளான ஆட்சியர் ஒருவர் பற்றிய விவகாரம் இது.
‘பைசா பார்க்கக்கூடிய’ நியமனங்களை நேர்மையாக திறமை அடிப்படையில் (மெரிட்) செய்ய முயன்றதில், கரை வேட்டிகளால் சமீபத்தில் தூக்கி எறியப்பட்ட ஆட்சியர் அவர். எறியப்பட்டு அவர் போய் விழுந்த இடம், ‘காத்திருப்போர் பட்டியல்’ அதற்குள் இருந்து வெளியே வருவதென்றால், ‘புஷ்’ வேண்டும் என்பது, நிர்வாக வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட விஷயம்தான்.
அது பழைய கதை. புதிய கதை என்ன?
நேர்மையான அதிகாரி வாழ்க்கையே வெறுத்துப் போய் உள்ளார். காரணம், அவருக்கும் வந்திருக்கிறது ஒரு தூது!
“நேர்மை, கருமை, எருமைன்னு இந்தாள் எதுக்கு கூச்சல் போடுகிறார்? ஆளை தூக்கிர வேண்டியதுதான்” என்று கட்சிக்காரர்களிடம் கூறியவர், ஒரு மா.செ.-கம்- அமைச்சர். அதிகாரியை தூக்கி எறிய சென்னையில் சக்தி கொடுத்ததும் அதே அமைச்சர்தான்.

பில்லா 2 அஜீத்துக்கு மகா தைரியம்!

Billa 2 Review 2 பில்லா 2 - ஸ்பெஷல் விமர்சனம்

-எஸ் ஷங்கர்
என்னதான் பணத்தைக் கொட்டி படமெடுத்து, அதற்கு வண்டி வண்டியாய் விளம்பரம் செய்தாலும், கதை என்ற தூண் வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு அஜீத் குமார் நடித்துள்ள பில்லா 2 ஒரு சிறந்த உதாரணம்.
மேலும் சக்ரி டோலெட்டியின் இயக்க திறமை மீது ஆரம்பத்திலிருந்தே அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கை நிரூபணமாகியிருக்கிறது.
படத்தை ஸ்டைலாக எடுக்க வேண்டும், கலர் டோன் இப்படி இருக்க வேண்டும், யாரும் போகாத இடத்துக்குப் போய் படமாக்க வேண்டும் என்று யோசித்தவர்கள், கொஞ்சம் வித்தியாசமான கதையாக சொல்லத் தவறிவிட்டார்கள்.
படத்தின் கதை? ஒரே வரியில் சொன்னால்... டேவிட் பில்லா நடக்கிறார்... திரும்பிப் பார்க்கிறார்... எதிரி என்றல்ல... எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது!
கதையின் ஆரம்பம் என்னவோ நன்றாகத்தான் உள்ளது. ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் ஈழத்து அகதியாக அறிமுகமாகும் அஜீத்துக்கு, ஒரே ஒரு அக்கா. ஆனால் அவருக்கு இவரது போக்கு பிடிக்கவில்லை. ஒரு சர்ச்சில் மகளுடன் வசிக்கிறார்.

மதுரை ஆதீனதுக்கு ஆலோசனை நித்தியை கழட்டி விடுங்கள்

மதுரை ஆதீனத்துக்கு புதிதாக இரு அட்வைசர்கள்: “நித்தியை என்ன செய்யலாம்?”

Viruvirupu,
“அதோ அந்த பறவை போல..” தேவையில்லாமல் சிக்கலை தூக்கி தலையில் போட்டுக் கொண்ட மதுரை ஆதீனம், நித்தியை கழட்டிவிடும் மன நிலைக்கு வந்துவிட்டார் என்கிறார்கள், உள் விவகாரம் அறிந்தவர்கள்.
நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக்க, தமிழகத்திலுள்ள மற்றைய பீடாதிபதிகளை பகைத்துக் கொண்ட மூத்த ஆதீனம் அருணகிரிநாதர், அடுத்தடுத்து இது பீடாதிபதிகளை ஓசைப்படாமல் சந்தித்திருக்கிறார்.
இந்த இருவரில் ஒருவர், மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தி விஷயத்தில் அறிக்கை விட்டவர் என்பதே சுவாரசியம்.
“சில தேவைகளுக்காக அவரிடம் (நித்தி) போக வேண்டியதாயிற்று. இப்ப என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று மதுரை மூத்தவர் மனந்திறந்து வெளிப்படையாக பேசியதால், மற்றைய தரப்பில் இருந்து சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.துக்கு ஆலோசனை
நித்தியை படிப்படியாக கழட்டி விடக்கூடிய ஆலோசனைகள் அவை.
“நித்திக்கு எதிராக பல கோர்ட் விவகாரங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றில் பாதகமாக தீர்ப்பு வெளியான உடனே, அதைக் காரணமாக வைத்தே ஆளைக் கழட்டி விடுங்கள்” என்ற அட்வைசையே சொல்லி வைத்தால்போல இருவரும் கொடுத்திருக்கிறார்.
தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு வந்திருக்கிறார் மதுரை ஆதீனம்.
நித்தி சுவாமிகளே… watch out your cases, buddy.

டில்லியின் ‘கடுமை முகம்’ ஒன்று விஜயகாந்தை நோக்கி

கோபாலபுரம்-விஜயகாந்த்-டில்லி: முக்கோண ரகசியம் தெரியுமா? வில்லங்க முடிவு! 
ஜனாதிபதித் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிக்குமாறு, ‘தட்ட முடியாத நிர்ப்பந்தம்’ ஒன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் தரப்பால் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக, டில்லி வட்டாரத் தகவல்கள் உள்ளன. அதை விஜயகாந்த் எப்படி ஹான்டில் பண்ணப் போகிறார் என்பதைக் காண தமிழகத்திலும் சிலர் ஆவலுடன் உள்ளார்கள்.
அந்த ‘சிலர்’ யார் என்பதை ஊகிக்க முடிகிறதா? ஆம். தி.மு.க.-வில் உள்ளார்கள் அந்த ‘சிலர்’.
கடந்த வாரமே ஒதுவிதமான அழுத்தம் விஜயகாந்துக்கு டில்லியில் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. “ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டோமே.. இப்போது திடீரென பல்டி அடித்தால், பெரிய பப்ளிசிட்டி டிஸாஸ்டராக மாறிவிடும் அது” என விஜயகாந்துக்கு நெருக்கமான புள்ளி ஒருவர், டில்லிக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

ரோட்டில் யாரையும் கண்டால் Shobanaவுக்கு பிடிக்காது

Actress Shobana Is Telling Lies Says Cycle Shop Owner டீக்கடைக்காரர் மீது பொய் புகார் கூறியுள்ளார் ஷோபனா.. பஞ்சர் கடைக்காரர் பரபரப்பு பேட்டி!

சென்னை: நடிகை ஷோபனா வீட்டு அருகே டீ, டிபன் கடை நடத்தி வந்த பெண் ஒரு அப்பாவி. கடந்த 35 வருடமாக இங்கு அவர் கடை நடத்தி வந்தார். அந்தக் கடையால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஷோபனாவின் வீட்டில் அவர் தண்ணீர் பிடித்ததால் கோபமடைந்து பொய்யான புகாரைக் கூறி கடையைக் காலி செய்து விட்டார் என்று கூறியுள்ளார் ஷோபனா வீட்டு அருகே பஞ்சர் கடை வைத்திருக்கும் ஜோதி என்பவர்.
நடிகை ஷோபனாவால் பெரும் பரபரப்பாகியுள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவரை அபகரித்துக் கொண்டதாக அந்த நபரின் மனைவி ஷோபனா மீது பரபரப்புப் புகார் கொடுத்தார். இந்த நிலையில் ஒரு டீக்கடைக்காரரை அகற்ற கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் போய் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஷோபனா. அவரது புகாரை ஏற்ற போலீஸாரும் உடனே நடவடிக்கை எடுத்து டீக்கடையை ராவோடு ராவாக தூக்கி விட்டனர்.

Mass ஹீரோக்களை தூக்கி சாப்பிடும் ஈ!


 பிரம்மாண்டம். ஹாலிவுட் படத்துக்கு சவால்விடுகிற வகையில் பல காட்சிகளை அமைத்திருக்கிறார்
தன் எதிர்வீட்டில் வசிக்கும் சமந்தாவை பல வருடங்களாக சுற்றி சுற்றி காதலிக்கிறார் நானி. சமூக சேவை செய்யும் சமந்தாவிற்கு கோடீஸ்வர தொழிலதிபர் சுதீப், பதினைந்து லட்சம் கொடுக்கிறார். சமந்தாவை தன் வசப்படுத்தவே சுதீப் அந்த தொகையை கொடுக்கிறார். சமந்தா நானியை விரும்புகிறார் என்பதை அறிந்து நானியை சித்திரவதை செய்து கொலை செய்கிறார். சுதீப்பை பழிவாங்க நானி ஈ-யாக மறுபிறவி எடுக்கிறார். 
ஈ என்ன செய்துவிட முடியும் என்று சாதாரணமாக நாம் நினைக்கக் கூடும்.

தேர்வுக்கு பர்தா அணிந்து வரக்கூடாது -தேர்வு அலுவலர் கண்டிப்பு


சென்னை விருகம்பாக்கம் பாலலோக் தனியார் பள்ளியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முஸ்லிம் பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்தார். ஆனால் தேர்வு அறைக்குள் பர்தாவுடன் வரக்கூடாது என்று ஊழியர்கள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
ஆனால் பர்தாவை அகற்ற அந்த பெண் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் எடுத்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்கலாம். உடை விஷயத்தில் தலையிடகூடாது என்று அந்த பெண் காரசாரமாக வாதம் செய்தார்.

சாப்ட்வியூ நிறுவன அதிபர் கணியரசு மா.ஆண்டோ பீட்டர் மறைவு

  தந்தை பெரியார் குறித்து தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் நாம் உருவாக்கிய “www.periyar.org" இணைய தளத்தினை மிகச் சிறப்பாக வடிவமைத்தவர்.
சென்னை, ஜூலை.12- தமிழ் கணினித் துறையில் பல்வேறு குறிப்பிடத்தக்க சேவைகள் செய்திருப்பவர் ஆண்டோபீட்டர். கணித் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த அவர் சாப்ட்வியூ என்ற நிறுவனத்தை தொடங்கி ஏராளமானவர்களுக்கு நவீன தொழில் நுட்பத்தில் பயிற்சி அளித்து வந்தார்.
சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள ரமணி நகரில் வசித்து வந்த அவருக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

சங்மா அணியினர் Black Mail? பிரணாப் வெற்றி பெற்றால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
புதுடெல்லி :ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றிபெற்றால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என பி.ஏ.சங்மா அணியினர் அறிவித்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக தான் வகித்து வந்த நிதியமைச்சர் பதவி உள்பட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார். இதில் ஒரு சில ஆதாயம் தரும் பதவிகளை அவர் ராஜினாமா செய்யவில்லை என பிரணாப்பை எதிர்த்து போட்டியிடும் பி.ஏ.சங்மா குற்றம் சாட்டியிருந்தார்.

என்ன ஆச்சு வழக்குகள்?நடராஜன், ராவணன், திவாகரன் மீது போடப்பட்டுள்ள

சென்னை: "நடராஜன், ராவணன், திவாகரன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் என்னவாயிற்று?' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி, அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: அந்தக் கால அரசர்களைப் போல், கொடநாட்டிற்கு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து, நாட்டிலே மழை ஒழுங்காகப் பெய்கிறதா? என, முதல்வர் விசாரித்துக் கொண்டிருக்கிறார். அன்றாடம் முதல்வர் பெயரால் ஒரு அறிவிப்பு மட்டும் கொடநாட்டிலே இருந்தவாறே வந்து கொண்டிருக்கின்றன. அந்த அறிவிப்புகள் எல்லாம் முறையாக அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் விவாதிக்கப்பட்டு வருகின்றனவா? அரசு செயல்படுகிறதோ இல்லையோ, செயல்படுவது போன்ற தோற்றமாவது இருக்க வேண்டாமா? முதல்வர் நினைத்தால் சசிகலா மீதும், அவருடைய கணவர் மீதும், அவர்களுக்கு வேண்டிய ராவணன், திவாகரன் போன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். அடுக்கடுக்கான வழக்குகளைப் பதிவு செய்வார். அவ்வாறு கொடுக்கப்பட்ட புகார்களின் மேல், முறையாக முதல் நிலை விசாரணை நடத்தாதது ஏன்? அந்த வழக்கிலே சம்பந்தப்பட்டவர், சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரை, "என்கவுன்டர்' செய்ய முயற்சி நடைபெற்றதாக, இந்த ஆட்சியினர் மீது குற்றம் சாட்டினார். அதற்கு அரசின் பதில் என்ன? அதன் பின் அவர் வாயே திறக்கவில்லையே? வாயைத் திறக்கக் கூடாது என, அடக்கி வைக்கப்பட்டு விட்டாரா அல்லது பயமுறுத்தப்பட்டு விட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மத்திய அரசில் அந்தோணிக்கு 2வது இடமா?

புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் பதவியிலிருந்து, பிரணாப் முகர்ஜி விலகி விட்டதால், மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்த இரண்டாவது இடம், ராணுவ அமைச்சர் அந்தோணிக்கு வழங்கப்படலாம் என, தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அந்தோணிக்கு, பிரதமருக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
அமைச்சரவை கூட்டம் நடக்கும் போது, பிரதமருக்கு அடுத்த வலது பக்க இருக்கையில் தான், முன்னர் பிரணாப் முகர்ஜி எப்போதும் அமர்வார். நேற்று, அந்த இருக்கையில் அந்தோணி அமர்ந்திருந்தார். பிரதமருக்கு அடுத்த இடதுபக்க இருக்கையில், வழக்கமான அமைச்சரவை செயலர் அஜித் சேத் அமர்வது வழக்கம். நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முன், மத்திய அரசில் நம்பர் 2 இடத்தில் பிரணாப் இருந்தார். பிரதமர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், பிரணாப் டில்லியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாருக்கு, மத்திய அரசில் இரண்டாவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது என, கடந்த வாரம் செய்தி வெளியானது. பிரதமர் அலுவலக இணைய தளத்தில், பிரதமருக்கு அடுத்ததாக, சரத்பவாரின் பெயர் இடம் பெற்றதால், இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகம் இதை மறுத்தது

பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசு புதிய திட்டம்: தேன், புளி, மூங்கிலுக்கு குறைந்தபட்ச விலை

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மற்றும் கோதுமையை குறைந்தபட்ச கொள்முதல் விலை கொடுத்து வாங்குவது போல, பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் தேன், மூங்கில், பீடி இலை போன்றவற்றையும் குறைந்தபட்ச கொள்முதல் விலை கொடுத்து வாங்கிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பழங்குடியின மக்கள் பெரிதும் பயன் பெறுவர்.
நெல் மற்றும் கோதுமையை விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்கிறது. இதற்காக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்து அவற்றை வாங்கி வருகிறது.
உரிய விலை: இதனால், விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையை பெறுவதோடு மட்டுமின்றி, இடைத்தரகர்களின் ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

வியாழன், 12 ஜூலை, 2012

கருப்பை வெள்ளையாக்குவதற்கு அம்பானிகளும் டாடாக்களும் பன்னாட்டு நிறுவனங்களும் மேற்கொண்ட

சன் நியூஸ் நிருபர் மீது இரண்டு மனைவிகள் புகார்!!

சென்னை: தங்களை ஏமாற்றிவிட்டு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ள பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்ய முயற்சி செய்வதாக தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது அவரது முதல் இரண்டு மனைவிகள் புகார் கூறியுள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் வசித்து வருபவர் ராஜராஜராஜன். இவர் சன் நியூசில் அவுட்புட் எடிட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி சாருமதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஒராண்டுக்குக்குப் பின்னர் இவர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்குக் காரணம் சன் டிவியில் செய்திவாசிப்பாளராக உள்ள மைதிலி என்பவருக்கும் ராஜராஜராஜனுக்கும் ஏற்பட்ட தொடர்புதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மைதிலியை ராஜராஜராஜன் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவரது இரண்டு மனைவிகளும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து ராஜராஜனின் இரண்டாவது மனைவி சாருமதி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது,

Facebook கில் பாகிஸ்தானின் பெண் உளவாளியிடம் 'வீழ்ந்த' இந்திய ராணுவ அதிகாரி!

Lieutenant Colonel caught chatting online with Bangladeshi woman 'working' for ISI
டெல்லி: பேஸ்புக் மூலம் வலைவீசிய பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் பெண் உளவாளியிடம் சிக்கியுள்ளார் இந்திய ராணுவத்தின் லெப்டினட் கலோனல் ஒருவர்.

Lieutenant Colonel caught chatting online with Bangladeshi woman ‘working’ for ISI

New Delhi: A Lieutenant Colonel is facing charges of establishing unauthorised contacts on Facebook with a Bangladeshi woman, suspected to be an ISI agent, who had earlier honeytrapped an Indian officer in Dhaka last year.
The Armored Corps officer deployed in Suratgarh district of Rajasthan is facing a Court of Inquiry (CoI) for allegedly establishing contacts with the Bangladeshi woman on Facebook, Army sources said on Wednesday.
They said the CoI was ordered after the Intelligence Bureau personnel noticed that the officer was regularly in touch with the Bangladeshi woman on Facebook and chatting with her.
Army sources said the officer had not established any physical contact with the woman and it was limited only in the cyber domain.
However, reports suggested the officer was honeytrapped and arrested in an operation along with the Bangladeshi woman, suspected to be working for a foreign spy agency, from a city hotel in May on a tip-off from the external intelligence agencies.
The same woman by the name of Sheeba was allegedly involved in honeytrapping of another Lt Col during his posting in Bangladesh and then blackmailed by ISI which reportedly asked him to spy for Pakistan.
The Infantry officer was doing his Staff College course in Bangladesh’s Military Academy in Dhaka.
The officer was reportedly honey-trapped by the woman whom he had met at a party in Dhaka and was then later approached by agents of Pakistan’s intelligence agency.
Armed with alleged tapes of the officer and the woman together, the officer was asked by ISI agents to spy for Pakistan.
 ராஜஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் கவசப் படைப் பிரிவின் லெப்டினட் கலோனலான இவர் அந்தப் பெண்ணுடன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டதை மத்திய உளவுப் பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோ கண்டுபிடித்து பாதுகாப்பு அமைச்சகத்தை எச்சரித்துள்ளது.

துபாயில் செட்டிலாக திட்டமிட்டதால் கொலை செய்யப்பட்ட லைலா கான், குடும்பத்தார்

Plan Migrate Dubai Cost Laila Khan Kin Their Lives பொறாமை மற்றும் பேராசையால் தான் பர்வேஸ் தக் பாலிவுட் நடிகை லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தாரை கொடூரமாகக் கொன்றது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே இகத்புரியில் உள்ள மாயமான பாலிவுட் நடிகை லைலா கானின் பண்ணை வீட்டில் இருந்து நேற்று முன்தினம் 6 எழும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. அவை கொல்லப்பட்ட லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தாருடையதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில் பணம், சொத்து, பொறாமை, பேராசை மற்றும் லைலா கான் குடும்பம் துபாயில் செட்டிலாக முடிவு செய்தவையால் தான் லைலா கானின் தாய் ஷெலீனாவின் 3வது கணவர் பர்வேஸ் தக் அவர்களை கொலை செய்துள்ளார் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி: pinky பெண்தான் அவரால் கற்பழிக்க முடியாது

 Pinki Pramanik Incapable Rape கற்பழிக்கக் கூடிய அளவுக்கு பிங்கியிடம் திறன் இல்லை-நீதிபதிகொல்கத்தா: கற்பழிப்பை நிகழ்த்தக் கூடிய அளவுக்கு பிங்கியிடம் திறன் இல்லை என்பது முதல் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் மூலம் தெரிய வருவதால் அவருக்கு கொல்கத்தா கோர்ட் ஜாமீன் அளித்துள்ளது.
கற்பழிப்புப் புகாரில் சிக்கி கைதாகி நேற்று ஜாமீ்னில் விடுதலையானார் பிங்கி. அவருக்கு ஆதரவாக விளையாட்டுத்துறையைச் சேர்ந்த ஜோதிர்மாயி சிக்தர், பைசுங் பூதியா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிங்கியிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை குறித்த அறிக்கைகள் பராசாத் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

Time பத்திரிக்கைக்குப் பதில் Times of India வை கிழித்த தமிழக காங்கிரஸார்!

 Tn Youth Congress Mistakes Times For Time அடடே... 'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்!

சென்னை: நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

டிஆர்பி ரேட்டிங் Down ஒரு கோடி நிகழ்ச்சி முடிவுக்கு வரும்

சரியும் டிஆர்பி ரேட்டிங்!.. முடிவுக்கு வரும் 'கோடி' நிகழ்ச்சிகள்!!! ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 27,2012 அன்று ஆரம்பித்த விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவடைகிறது .
சுமார் 4 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான கேள்விகளால் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது
டி.ஆர்.பி ரேட்டிங் சரிய தொடங்கியதும் நடிகர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் என நிகழ்ச்சியை ஒரு வழியாக ஓட்டி வந்தனர்.

Shirdi சாய்பாபா பால் குடித்தாரா? பிராட்வேயில் பரபரப்புtamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதண்டையார்பேட்டை : பிராட்வேயில் சாய்பாபா சிலை பால் குடித்ததாக செய்தி பரவியதால் பக்தர்கள் திரண்டனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிராட்வே வரத முத்தப்பன் தெருவை சேர்ந்தவர் அசோக் (30). நகைக்கடை ஊழியர். இவரது மனைவி பவானி (26). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பவானி தீவிர சாய்பாபா பக்தர். வீட்டில் அரை அடி வெள்ளி சாய்பாபா சிலை வைத்து தினமும் பூஜை செய்து வந்தார். நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல¢ பூஜை பொருட்களை எடுத்து வைத்தார். சாய்பாபா சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார். தலையில் இருந்து பால் வடிந்து வாய் அருகில் வந்ததும் மாயமானது. உடனே ஒரு கிண்ணத்தில் பால் எடுத்து வாய் அருகில் கொண்டு சென்றார். அதுவும் காலியானது. சாய்பாபா பால் குடித்ததாக அந்த பகுதியில் செய்தி பரவியது. அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர். இது பற்றி பவானி நிருபரிடம் கூறுகையில், தீவிர பக்தரான என் வீட்டில் சாய்பாபா பால் குடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றார்.

16 குழந்தைகளை கடத்தி விற்றோம் : கைதான 2 பேர் திடுக் தகவல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மாவட்டங்களில் 16 குழந்தைகளை கடத்தி விற்றோம் என்று கோவை போலீசில் சிக்கிய 2 பேர் தெரிவித்துள்ளனர். கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ராணி. மகள் கார்த்தியாயினி(6), கோவில்மேட்டிலுள்ள மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறாள். நேற்று முன்தினம் மாலை சிறுமியை அழைத்துவர ராணி, பள்ளிக்கு சென்றார். அங்கு கார்த்தியாயினியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் சிறுமியை காணவில்லை. சாயிபாபா காலனி போலீசில் புகார் செய்தனர். தனிப்படை அமைத்து சிறுமியை போலீசார் தேடி வந்தனர். மாயமான சிறுமி அன்று இரவு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒலவக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் ஒருவருடன் அழுது கொண்டிருக்கும் விவரம் கோவை போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு, குழந்தையுடன் இருந்தவரை கோவை அழைத்து வந்து விசாரித்தனர்.

காஷ்மீர் பாகிஸ்தானுக்குக் கிடைக்காமைக்கு இந்தியா காரணமல்ல


 What Do With Kashmir
பழம்பெரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார்.
இந்த நூலில் காஷ்மீர் பிரச்சினை குறித்தும், அதில் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் கொண்டிருந்த நிலைப்பாடு குறித்தும் விவரித்துள்ளார் நய்யார்...
எனது கருத்து என்னவென்றால், பாகிஸ்தான் சற்று அமைதியாக இருந்திருந்தால் காஷ்மீர் அவர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் தானாகவே கிடைத்திருக்கும். காரணம், இந்தியா காஷ்மீரை முதலில் விரும்பவே இல்லை. குறிப்பாக சர்தார் வல்லபாய் படேல் விரும்பவில்லை.

BJP யின் தமிழ் விரோதம் சேது சமுத்திர திட்டத்தை முடக்கபோகிரதாம்

மிரட்டலுக்கு அஞ்சப் போகிறதா மத்திய அரசு? ராமர் ராமர் பாலத்தை பாதுகாக்க மத்திய அரசு தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மூத்த தலைவர் வி.கே. மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் சேது சமுத்திர திட்டப்பணிகள் துவங்கின. ஆனால் ராமர் பாலம் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், அதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என் றும் உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப் புகளும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.

Pinky: கை, கால் கட்டி சோதனை போலீசார் சித்திரவதை

போலீசார் எனது கை, கால்களை கட்டி வலுக்கட்டாயமாக சோதனை செய்தனர். நான் கதறி அழுத போதும், யாரும் கண்டுகொள்ளவில்லை,''என, பாலின சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிரமானிக் சோகத்துடன் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிங்கி பிரமானிக். ஆசிய தடகளம் உட்பட பல்வேறு போட்டிகளில் தங்கம் வென்றவர். இவர் ஒரு ஆண் என்றும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். 
இவரை போலீசார் மிக மோசமாக நடத்துவதாக கூறி மனித உரிமை அமைப்புகள் சார்பில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.

டெலி மார்க்கெட்டிங்கில் அல்லல்படும் மக்கள்: தவிக்கும் வாடிக்கையாளர்கள்!

ஒவ்வொரு நாளும் குறைந்தது, பத்து பேராவது போன் செய்து, எங்களிடம் இடம் உள்ளது வாங்குங்க, "...ரியல் எஸ்டேட்டிலிருந்து பேசுகிறோம்; இடம்வேண்டுமா...' "...பாங்க்கிலிருந்து பேசுறோம்; கடன் வேணுமா...' என விடாமல், மொபைல்போன் வாடிக்கையாளர்களை விரட்டுவதால், செய்வதறியாது மொபைல்போன் வாடிக்கையாளர்கள் திகைத்து வருகின்றனர்.
கோவையில், "டெலிமார்க்கெட்டிங்' அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொபைல்போன் சொந்த உபயோகத்துக்கு வைத்திருந்தாலும், அது பெரும் தொல்லையாக மாற்றம் பெற்றுள்ளது. குறிப்பாக,"பிரிபெய்டு' வாடிக்கையாளர்கள் படும்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பாகுபாடு இல்லாமல், மொபைல்போனில் பேசுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தமிழகத்திலிருந்து 16 சிறுமிகள் கடத்தி விற்பனை? போலீஸ் விசாரணை

கோவை: தமிழகத்திலிருந்து, 16 சிறுமிகளை கடத்தி சென்று, கேரள மாநிலத்தில் விற்பனை செய்திருப்பதாக தகவல் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த போலீசார் கடத்தல் பேர்வழிகளையும், சிறுமிகளை விலைக்கு வாங்கும் கும்பலையும் வளைத்து பிடிக்க கோவையில் மூன்று தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் களம் இறங்கியுள்ளனர்.

புதன், 11 ஜூலை, 2012

Billa 2 முதல் ஷோ டிக்கெட் ரூ 650!! ஒரு வாரம் ஃபுல்..

ரஜினி - கமல் என்ற வரிசைக்கு அடுத்த நடிகர்களில் நல்ல ஓபனிங் என்றால் அது அஜீத் படத்துக்குதான்.
ப்ளாப் படமாக இருந்தாலும் அஜீத் படத்துக்கு முதல் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுவது வழக்கம்.
மங்காத்தா என்ற வெற்றிக்குப் பிறகு அஜீத் நடிப்பில் வரும் படம் பில்லா 2. இந்தப் படத்தில் அஜீத், யுவன் சங்கர் ராஜா தவிர, வேறு தெரிந்த முகங்கள் இல்லை.
இயக்குநர் சக்ரிக்கு ஒரு வகையில் இதுதான் முதல் படம். இதற்கு முன் அவர் உன்னைப் போல் ஒருவனை இயக்கினாலும், அதில் கமலின் பங்களிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
நாயகிகள் பார்வதி ஓமனக்குட்டன், ப்ருனா அப்துல்லா இருவருக்குமே இது முதல் படம். எனவே அவர்களால் படத்துக்கு பெரிய பலன் கிடையாது.
இருந்தும் அஜீத் படம் என்ற ஒரே காரணத்துக்காக சென்னை திரையரங்குகளில் பில்லா 2 க்கு ஒரு வாரத்துக்கான புக்கிங் முடிந்துவிட்டது.

நிதியமைச்சராகிறார் ப.சிதம்பரம்?: உள்துறை அமைச்சராகிறார் சுஷில்குமார் ஷிண்டே

 P Chidambaram Take Charge As Fin Min
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சராக்கப்படுவார் என்று தெரிகிறது.
அப்பாடா ஒரு வழியா தாய் வீட்டுக்கு வந்தாச்சு ,இழவு உள்துறை போதுமைய்யா 
முன்பு நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தைத் தான் உள்துறை அமைச்சராக்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. நாட்டில் குண்டுவெடிப்புகள் அதிகரித்த நிலையில் சிவராஜ் பாட்டீலை தூக்கிவிட்டு உள்துறை பொறுப்பை சிதம்பரத்திடம் தந்தார்.
இந் நிலையில் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி பதவி தேர்தலில் போட்டியிடுவதையடுத்து அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்தன.
திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரெங்கராஜன் உள்பட பலரது பெயர்கள் அடிபட்டன.

பத்மநாபசுவாமி கோயிலை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்: சரத்யாதவ்

புதுதில்லி, ஜூலை.11: கேரளாவில் கோடிக்கணக்கில் பொக்கிஷங்கள் உள்ளதாக கண்டறியப்பட்ட பத்மநாபசுவாமி கோயிலை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
அக்கோயிலின் சொத்துக்களை இந்தியாவில் உள்ள அனைத்து இந்து கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.இந்தியாவில் உள்ள பணக்கார கோயில்களை ஒழுங்குபடுத்த நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கோயில்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்கு உரியவை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.பத்மநாபசுவாமி கோயில் சொத்துக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கோயில் சொத்துக்களின் மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் நெடுஞ்செழியனுக்கு அதிருப்தி நெடுஞ்செழியன் : நம்பர் 2
நிரந்தர முதல்வர், நிரந்தரப் பொதுச்செயலாளர் என்பன போன்ற பதங்களை நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் நிரந்தர இரண்டாம் இடம் என்றொரு பதமும் உண்டு. அது சிலருக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக, அரசியலில். கட்சிகள் மாறும். காட்சிகள் மாறும். தலைவர்கள் மாறுவார்கள். ஆனால் அந்த இரண்டாம் இடம் மட்டும் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும். அவ்வப்போது அவர்களை முதலிடம் முத்தமிடும். ஆனால் நிலைக்காது. இத்தனைக்கும் முதல் இடத்தைப் பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் அவர்களுக்கு இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசியல் களம் கண்ட முக்கியமான நம்பர் 2 தலைவர் நாவலர் நெடுஞ்செழியன்.
அவரைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதவேண்டும் என்று நீண்ட நாள்களாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் அவருடைய புத்தகம் ஒன்றைப் புரட்டியபோது அவர் பிறந்த தேதி கண்ணில்பட்டது. 11 ஜூலை 1920. அதாவது, இன்று.

சங்மா: எப்படி வெற்றி பெறுவேன் என்பது ரகசியம்

ஜனாதிபதி ரேஸ்: சங்மா மாயாஜாலம் செய்ய… வைத்திருக்கும் ரகசியம்! ஜனாதிபதி தேர்தலில் எப்படி வெற்றி பெறுவேன் என்பது ரகசியம். அதை வெளியிட்டால் மற்றவர்கள் உஷாராகிவிடுவார்கள்

Viruvirupu,
தேர்தலில் போட்டியிடும் அனைவரும் சொல்லும் வாக்கியம்தான், இருந்தாலும் அதைச் சொல்லி பிரணாப் தரப்பை லேசாத பதற வைத்திருக்கிறார் சங்மா. “ஜனாதிபதி தேர்தலில் நான்தான் வெற்றி பெறுவேன். எப்படி வெற்றி பெறுவேன் என்பதுதான் ரகசியம்” என்பதே சங்மாவின் வாக்கியம்.

சிறுதாவூரில் கலைஞரிடம் ஆடையை பறிகொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கருணாநிதி சிறுதாவூரில் வைத்த பொறி! சிக்குவதற்கு நம்ம தோழர் ஏமாளியா?

Viruvirupu
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தி.மு.க. தலைவருக்கும் இடையிலான அறிக்கைப் போர் ஓய்வதாக தெரியவில்லை. “ராமகிருஷ்ணன் வெறுப்பை நெருப்பாகக் கொட்டுகிறார்” என்று கருணாநிதி அறிக்கை விட்டதற்கு, “தி.மு.க. மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை. நில மோசடியைத் தடுக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நோக்கம்” என்று கூறியிருந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
விடுவாரா கருணாநிதி. சுடச்சுட பதில் கொடுத்திருக்கிறார்.
“2010-ம் ஆண்டே சிறுதாவூர் நில பிரச்சினை குறித்து நீதிபதி சிவசுப்பிரமணியம் அறிக்கையை அளித்தார். அதற்குப் பிறகு தி.மு.க. அரசு ஒன்றரை ஆண்டுகள் இருந்தது. அப்போது அந்த அறிக்கை மீது தி.மு.க. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ராமகிருஷ்ணன் கேட்டிருக்கிறார்.
“இப்ப என்ன பண்ணுவீரு?”
தி.மு.க. ஆட்சியில், நீதிபதி சிவசுப்பிரமணியம் விசாரணை கமிஷனே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது. கமிஷன் அமைத்தவுடன், அந்த கமிஷனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றம், கமிஷனை முடக்கிப் போட்டது.

ஸ்டாலின் உஷார்! கனிமொழி தரப்பில் வருகிறது பிளான்!!

Viruvirupu,
தி.மு.க.-வின் ஸ்டாலின் அணி அதீத உற்சாகத்தில் உள்ளது. “சிறை நிரப்பு போராட்டம் யாருக்கு நன்மை செய்ததோ, இல்லையோ, தளபதியின் கைதான் கட்சிக்குள் ஓங்கியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது” என்று உற்சாகப்படுகிறார்கள் அவர்கள்.
கடும் அப்செட்டில் உள்ளவர்கள், அழகிரி அணியினர்தான். அண்ணன் போராட்டம் நடந்த திசைக்கே வராமல் விட்டதில், கட்சிக்கு உள்ளேயே கிண்டல் கணைகளை தாங்க வேண்டிய பரிதாப நிலை அவர்களுக்கு. மதுரையிலேயே சுரத்தில்லாமல்தான் போராட்டம் நடந்தது. அஞ்சாநெஞ்சம் அடங்கிப் போனதன் காரணம், மதுரை காவல்துறை கையில் ரெடியாக வைத்திருக்கும் சில புகார்கள் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
“புகார்களும் ரெடி, புகார் கொடுக்க ‘கன் பார்ட்டிகளும்’ ரெடி. மேலிடத்தில் இருந்து சிக்னல் வரவேண்டியதுதான் பாக்கி” என்ற கிசுகிசுப்பு, மதுரை போலீஸ் வட்டாரங்களில் உள்ளது.
இம்முறை ஸ்டாலின் தரப்பு, அழகிரி ஆட்களை கணக்கில் எடுக்கவே இல்லை. அவர்கள் லேசான பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது, கனிமொழியின் மூவ்களைத்தான். சந்தடி சாக்கில் கனிமொழி வின் பண்ணிக்கொண்டு போய்விடுவாரோ என்ற பயம், ஸ்டாலினுக்கும் இருந்தது என்கிறார்கள்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:கலைஞரை சுற்றிதான் தமிழக அரசியல் உள்ளது

ஈரோடு நகராட்சி மண்டபத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர்,தமிழக அரசியலை பொறுத்தவரை தி.மு.க. தலைவர் கருணாநிதியை தொடாமல் யாரும் அரசியல் பண்ண முடியாது. அவரை சுற்றிதான் தமிழக அரசியல் உள்ளது. மற்றவர்களை காட்டிலும் கருணாநிதி மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. காங்கிரஸ் கட்சியை நான் உயிர் மூச்சாக நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி தமிழ்நாடடில் ஆட்சி க்கு வரவேண்டும் என்று எங்களுக்கும் ஆசை உள்ளது. எனவேதான் நான் கருணாநிதி பற்றி விமர்சனம் செய்தேன். இது தவிர்க்க முடியாதது. 1967-ம் ஆண்டுக்கு முன் காங்கிரசை தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்தார்கள். அதன் பிறகு காமராஜர் இறந்தபிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டியவர் கருணாநிதி.

திருப்பதி கோவிலில் குழந்தை திருட்டு

திருமலை, ஜூலை 10- திருமலையில் சென் னையைச் சேர்ந்த தம் பதியரின் 8 மாத ஆண் குழந்தை கடத்தப் பட் டது. ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு மண்டபத்தில் தூங்கிய போது நடந்த இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குழந் தையைத் தேடி வரு கிறார்கள்.
சென்னை அடை யாறு கோட்டூர் தெற்கு கடைசி தெருவைச் சேர்ந்தவர் ராஜா. கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி தங்கப் பிரியா. இருவரும் தங் கள் குடும்பத்தினர் மற் றும் உறவினர்களுடன் கடந்தவெள்ளிக் கிழமை சென்னையில் இருந்துதிருப்பதி வந்தனர்.

Junior Vikatan மீது ஜெயலலிதா வழக்கு! “எனது மகள் இல்லையென்று தெரியாதா

Viruvirupu
விகடன் மீது கோபப் பார்வையைத் திருப்பியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. சமீப காலமாக, ‘ஜெயலலிதாவின் மகள்’ என்று செய்திகளில் அடிபடும் பெண் பற்றி விலாவாரியாக செய்தி வெளியிட்டதே கோபத்துக்கு காரணம்.
நம்ம அமைச்சர்கள் மீது கோபம் ஏற்பட்டால், ‘வேறு விதமாக’ காட்டிலாம். இது மீடியா மீது ஏற்பட்ட கோபம், எனவே முதல்வர் சார்பில் கோர்ட்டுக்கு போயிருக்கிறார்கள். 2 கிரிமினல் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில், மாநகர குற்றவியல் அரசு வக்கீல் ஜெகன் தாக்கல் செய்துள்ள செய்துள்ள 2 மனுக்களில், ஜுனியர் விகடனில் வெளியான இரு கட்டுரைகள், மெட்டீரியல் எவிடென்ஸ்களாக காட்டப்பட்டுள்ளன.
‘துப்பட்டாவுக்குள் மறையும் ஜெயில் மகள்’ என்பது ஒரு கட்டுரை. ‘என் கைதுக்கு காரணம் சசிகலா’ என்பது அடுத்த கட்டுரையின் தலைப்பு! இந்த இரு தலைப்புகளே கதைச் சுருக்கத்தை கூறிவிடுகின்றன.
விகடன் குரூப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “குறிப்பிட்ட முதலாவது கட்டுரையில், ‘முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக் கொள்ளும் பிரியா மகாலட்சுமியை மோசடி வழக்கில் கைது செய்திருந்த போதிலும், மீடியாக்களில் பார்வையில் இருந்து போலீசார் அவரை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

Olympic Games Villageகளில் நடக்கும் கூத்து தெரியுமா?!

லண்டன் ஒலிம்பிக் போட்டி நெருங்கி விட்டது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி கிராமங்களில் அதாவது கேம்ஸ் வில்லேஜ்களில் நடைபெறும் கூத்துக்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகி விளையாட்டின் மறுபக்கத்தை புட்டுப் புட்டு வைத்துள்ளது.
போட்டி எங்கு நடந்தாலும் சரி, எந்த நாடு நடத்தினாலும் சரி கேம்ஸ் வில்லேஜ்களில் ஆணுறைகளுக்கும், மதுவுக்கும் பஞ்சமே இருப்பதில்லை என்று இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. ஆணுறைகள்தான் இதில் பெருமளவில் சப்ளை ஆகுமாம்.
முன்னாள் இங்கிலாந்து வீரர் ஒருவர்தான் இந்த நூலை எழுதியுள்ளார். தனது பெயரை குறிப்பிடாமல் புனை பெயரில் அவர் The Secret Olympics என்ற இந்த நூலை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
2000மாவது ஆண்டு சிட்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது வீரர்களுக்கு 70,000 ஆணுறைகளை ஏற்பாடு செய்திருந்தனராம் போட்டி அமைப்பாளர்கள். அனைத்துமே ஒரே வாரத்தில் காலியாகி விட்டதாம்.

நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர்; ஆபாச வீடியோவால் அதிர்ச்சி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதமிழ் நடிகர் மஹத்துக்கு அடி, உதை ஏன்? நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர்; ஆபாச வீடியோவால் அதிர்ச்சி

சென்னை :நட்சத்திர விருந்தில் தமிழ் நடிகர் மஹத்துக்கு அடி, உதை விழுந்த விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலிப்பதாக சொல்லி, நடிகையை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்து டார்ச்சர் செய்ததாக, மஹத் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. தெலுங்கு பட ஹீரோ மனோஜ் மன்சு. பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன். தமிழில் மங்காத்தாவில் நடித்தவர் மஹத். கடந்த சனிக்கிழமை சென்னையில் ஒரு பார்மசூட்டிகல் உரிமையாளர் அளித்த நட்சத்திர விருந்து நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவருமே நடிகை டாப்ஸியை காதலித்திருக்கிறார்கள். மன்சுவுடன் பிரிவு ஏற்பட்ட சமயத்தில் மஹத், காதல் வளர்த்திருக்கிறார். இதுதொடர்பாக நட்சத்திர விருந்தில் மனோஜ் , மஹத் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மஹத்தை, மனோஜும் அவரது நண்பர்களும் அடித்து, உதைத்தனர். இதில் காயம் அடைந்த மஹத், ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் மனோஜ் தாக்கியது பற்றி மஹத் கூறியதாவது: பார்ட்டியில் பங்கேற்ற நான், கூட்டத்தில் இருந்து விலகி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது மனோஜ் மற்றும் அவரது 3 நண்பர்கள், எங்கள் அருகில் வந்து வம்பு செய்தனர்.

திருப்பதியில் அமைகிறது Brain Washing புராண இலக்கிய பூங்கா

கோவில் நகரமான திருப்பதியில், புராண இலக்கிய பூங்கா அமையவுள்ளது. நாட்டில் உள்ள முக்கியமான 108 கோவில்களின் மாதிரிகளும் இதில் இடம் பெறும். திருப்பதிக்கு வரும் பக்தர்கள், அங்கிருந்தவாறே காசி விஸ்வநாதர், அயோத்தி ராமர் கோவில், பூரி ஜெகன்நாதர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரை தரிசிக்க முடியும். தனியார் பங்களிப்புடன் அமையவுள்ள இந்தப் பூங்கா, பக்தர்களின் நீண்ட நாள் கனவினை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.

அதிக வருவாய் :

மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவன்

சேலத்தில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை கொலை செய்த பெண்ணுக்கு ஜாமீன் சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (38). இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 21-ந் தேதி வீட்டின் படுக்கை அறையில் இருந்து லட்சுமியின் மூத்த மகள் சத்தம் போட்டார். இதையடுத்து லட்சுமி அங்கு சென்று பார்த்த போது அவரது கணவர் முருகன் மகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி கணவரை போராடி இழுத்தார். மேலும் கத்தியால் வெட்டினார். ஆனாலும் முருகன் மகளிடம் பாலியல் கொடுமையை தொடர்ந்தார். இதனால் ஆவேசம் அடைந்த லட்சுமி தனது கணவரை அடித்துக்கொலை செய்தார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் கட்டிப்புரண்டு சண்டை லஞ்ச பணத்தை பங்கு பிரிப்பதில்

 இது தான் டா போலீஸ் ........... அவர்கள் புகை படம் , தொலை பேசி எண்களையும் போடவும் ...
ஊத்துக்கோட்டை:போலீஸ் நிலையத்தில் பணத்தை பங்கு பிரிப்பதில் போலீஸார் இருவரிடையே மோதல் ஏற்பட்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை போலீஸ் உட்பிரிவில் ஊத்துக்கோட்டை, வெங்கல், ஆரணி, பெரியபாளையம், பென்னலூர்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் தமிழக - ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ளது பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையம். இங்கு ஏழு சிறப்பு எஸ்.ஐ.,க்கள் மற்றும், 11 போலீசார் பணியில் உள்ளனர்.இந்த போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில், 77 கிராமங்கள் உள்ளன. தமிழக - ஆந்திர எல்லையில் இந்த போலீஸ் நிலையம் அமைந்துள்ளதால், தமிழகத்தில் இருந்து திருட்டு மணல், ரேஷன் அரிசி மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து மலிவுவிலை மது, செம்மரக்கட்டை ஆகியவை கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது.
கட்டிப்புரண்டு சண்டை

அழுகையை நிறுத்த சிறுமிக்கு சூடு: அங்கன்வாடி பணியாளர்கள் சஸ்பெண்ட்

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே, குழந்தையின் அழுகையை நிறுத்த சூடு வைத்த அங்கன்வாடி அமைப்பாளர், உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கம்பம் அருகே சுருளிப்பட்டி காலனியில் அங்கன்வாடி உள்ளது. இங்கு பாரதி அமைப்பாளராகவும், ஜெயா உதவியாளராகவும் பணிபுரிகின்றனர். இம்மையத்தில் சசிக்குமார், முருகேஸ்வரி தம்பதியினரின் குழந்தை ரோஷினி,3, சேர்க்கப்பட்டிருந்தார். சில நாட்களாகவே மையத்திற்கு வந்ததும், ரோஷினி அழத் துவங்கியுள்ளார். ரோஷினியின் அழுகையை நிறுத்த, மையத்தின் உதவியாளர் ஜெயா, கொள்ளிக்கட்டையை எடுத்து கை, கால்களில் சூடு வைத்தார்.

அரிசியை விட தண்ணீர் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது?

பெங்களூரு:""பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கும் மத்திய தர வகுப்பினர், அரிசிக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால் கூச்சல் போடுகின்றனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:கொள்முதல் விலையை அதிகரித்ததால், லட்சக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாம் ஒவ்வொரு விஷயத்தையும், மத்திய தர வகுப்பினரை கருத்தில் கொண்டே பார்க்க முடியாது. பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் அல்லது ஐஸ் கிரீமிற்கு 20 ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்கும், நம் நாட்டில் உள்ள மத்திய தர வகுப்பினர், அரிசிக்கோ அல்லது கோதுமைக்கோ, கிலோவுக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால், கூச்சல் போடுகின்றனர்.

செவ்வாய், 10 ஜூலை, 2012

கேரளாவின் திருட்டுத்தனம் Hariyana முதியவரின் 1 கோடி ரூபாய் லபக்

ரூ.1 கோடி பரிசுத் தொகை கேட்டு 80 வயது முதியவர் போராட்டம் லாட்டரியில் தனக்கு விழுந்த பணத்தை வழங்கக் கோரி, 80 வயது முதியவர் ஒருவர் கேரள தலைமைச் செயலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.;ஹரியானா மாநில துணி வியாபாரி கிஷன் சந்த். வியாபார விஷயமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவனந்தபுரம் சென்ற அவர், கேரள அரசின் லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளார். அதற்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது.இதையடுத்து, கேரள அரசை அணுகி, பரிசுத் தொகையை வழங்குமாறு கோரியுள்ளார். ஆனால், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் பரிசுத் தொகையை வழங்க அரசு மறுத்து வருகிறது.இதையடுத்து, லாட்டரியில் விழுந்த பணத்தை வழங்கக் கோரி, கேரள தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் கிஷன் ஈடுபட்டுள்ளார்.

பேராசிரியர் அன்பழகன் புதிய மனு ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு: தினசரி விசாரணை நடத்த வேண்டும்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் ஜெயலலிதா, சசிகலா செயல்படுகின்றனர். பெங்களூரு கோர்ட்டில் ஜெயலலிதா மீதான வழக்கை தினசரி நடத்த வேண்டும். வழக்கில் பலமனுக்களை தாக்கல் செய்வது தாமதப்படுத்துவதே நோக்கம் என்றும் மனுவில் கூறியுள்ளார்.திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு திங்களன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pranab Mukerjiக்கு எதிரான சங்மா மனுவை நிராரித்தது தேர்தல் ஆணையம்

பிரணாப் முகஜிக்கு எதிரான பி.ஏ.சங்மா மனுவை நிராரித்தது தேர்தல் ஆணையம்! இந்திய குடியரசுத் தலைவர் தேர்த-ல் காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். பிரணாப் முகர்ஜியின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், அந்த மனுவை மறு ஆய்வு செய்யுமாறு, பி.ஏ.சங்மா தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

மனுத்தாக்க-ன்போது ரவீந்திர பாரதி சங்க தலைவராக பிரணாப் முகர்ஜி இருந்ததாகவும், பிர்பும் இன்ஜினியரிங் கல்லூரி துணைத் தலைவராக பிரணாப் இருந்ததாகவும் பி.ஏ.சங்மா புகார் கூறியிருந்தார்.இந்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.

ஜெயா ஆட்சி: ஓராண்டில் நூறாண்டு வேதனை!


ஜெயா அரசு, தனது “நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’’யைப் பற்றிச் சுயதம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த வேளையில், அவரது ஆதரவு ஏடான ஜூனியர் விகடன், “இந்த ஆட்சியில் எந்த வேலையையும் செய்ய ஒப்பந்தக்காரர்கள் முன்வருவது இல்லை என்கிறாரே கருணாநிதி?” என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு இப்படி பதில் அளித்திருந்தது:
‘‘கமிஷன் தொகையையும் அதிகரித்துவிட்டார்கள்.  யாரிடம் கொடுப்பது என்பதிலும் குழப்பம்.  எப்படி வருவார்கள் ஒப்பந்தக்காரர்கள்?” (ஜூ.வி.,03.06.2012)
எதிர்க்கட்சியான தி.மு.க.வின் இந்தக் குற்றச்சாட்டை உண்மையென்று அவாள் ஏடு மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை.  அ.தி.மு.க. என்ற கொள்ளைக்கூட்டத்தின் தலைவியான ஜெயாவும் உண்மைதான் என்று கூட்டம் போட்டு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Indian உபகண்டத்தில் சீனாவின் விஸ்வரூபம்

தெற்காசிய நாடுகளில் விஸ்வரூபெமடுக்கும் சீனா- செக் வைக்க தூதர்களுடன் சிவசங்கர் மேனன் தீவிர ஆலோசனை

டெல்லி: இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கமான உறவால் அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, தூதர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
நேபாளத்தில் 36, இலங்கையில் 12, பாகிஸ்தானில் 20, ஆப்கானிஸ்தான் 7, வக்கதேசத்தில் 9, மாலத்தீவில் 8 திட்டங்களை சீன அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த நாடுகளில் இந்தியா மேற்கொண்டும் பணிகள் மிகக் குறைவானது. இந்த நாடுகளுக்கு உதவுவதன் மூலம் இந்தியாவுக்கான சீனாவின் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது.
இதனால் அந்தந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அந்நாடுகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தூதர்களை வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் அழைத்துள்ளார்.
முதல் கட்டமாக நேபாளத்துக்கான தூதர் ஜெயந்த் பிரசாத், பூட்டானுக்கான தூதர் பவன் வர்மா, வங்கதேசத்தின் பங்கஜ் சரன் ஆகியோருடன் சிவசங்கர் மேனன் ஆலோசனை நடத்த உள்ளார்

CBI சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் சரண்

 Anbumani Surrender Medical College Case மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்த வழக்கு: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி

டெல்லி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அன்புமணிக்கு 2 முறை சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டிப்பார்த்தனர். ஆனாலும் அன்புமணி ஆஜராகவில்லை.
இதையடுத்து அன்புமணிக்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. அவரை 20ம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.