மாலைமலர் : அ.தி.மு.க.வில் அதிகாரம் மிக்க பெரிய பதவியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இன்று அமர்ந்தார்.
1972-ம் ஆண்டு அ.தி.மு. க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். கட்சியின் நிறுவன தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். 1978-ம் ஆண்டு வரையில் எம்.ஜி.ஆர். வசமே இருந்த இந்த பதவியில் பின்னர் நாவலர் நெடுஞ்செழியன் அமர்ந்தார்.
2 ஆண்டுகள் அவர் இந்த பொறுப்பில் இருந்தார். இவரை தொடர்ந்து 3-வது பொதுச்செயலாளராக ப.உ.சண்முகம் 4½ ஆண்டுகள் வரையில் இருந்தார்.
அவரை தொடர்ந்து ராகவானந்தம் 1½ ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவியை வகித்தார். இதையடுத்து மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர். மறையும் வரை அந்த பொறுப்பில் இருந்தார்.
செவ்வாய், 28 மார்ச், 2023
7-வது பொதுச்செயலாளர்: அ.தி.மு.க.வின் அதிகாரம் மிக்க பதவியில் எடப்பாடி பழனிசாமி
ரூ.1000 உதவித் தொகை கிடைக்கும்?... முதலமைச்சர் வெளியிட்ட முழுப் பட்டியல்!
![]() |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகளிர் உரிமைத் தொகை குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று விளக்கமளித்தார்.
முதலமைச்சர் பேசும்போது, “கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிவிடும் என்று நமது அரசு உறுதியாக நம்புகிறது.
எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு மாணவர்கள் உள்பட 7 பேர் உயிரிழப்பு
மாலை மலர் ; வாஷிங்டன்: அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திங்கள், 27 மார்ச், 2023
அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு அறிவிப்பு
மாலை மலர் : புதுடெல்ல அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து எம்.பி. என்ற முறையில் அவருக்கு டெல்லி துக்ளக் லேனில் உள்ள அரசு குடியிருப்பில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்யவேண்டும்.
இந்நிலையில், அரசு பங்களாவை வரும் ஏப்ரல் 22ம் தேதிக்குள் ராகுல் காந்தி காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுயமரியாதைக்கு எந்த வழியில் சவால் வந்தாலும் எதிர்கொண்டு வினையாற்றுங்கள்.
ராதா மனோகர் : சுயமரியாதை!
உங்கள் சுயமரியாதையை சீண்டும் வேலையை உங்கள் எதிரிகளை விட உங்களோடு கூடவே இருப்பவர்கள்தான் அதிகமாக செய்வார்கள்.
வேடிக்கை என்ற ரீதியில்தான் இந்த சுயமரியாதை சீண்டல்கள் அதிகமாக நடக்கிறது
அந்த சீண்டல்களை நட்பு அல்லது உறவு என்ற ரீதியில் நீங்களும் கடந்து செல்வீர்கள்
சிலவேளை நீங்களும்கூட சிரித்து வைப்பீர்கள்.
இங்கேதான் மெதுவாக உங்கள் சுயமரியாதை உணர்வு களவாடப்படுகிறது.
இந்த தந்திரம்தான் பார்ப்பனீயம் காலகாலமாக பயன்படுத்துகிறது!
நம் சமூகத்தில் ஆசிரியர் பெற்றோர் போன்றவர்களே வளரும் சிறுவர்களின் சுயமரியாதையை சீண்டி விடும் கொடுமையை செய்து விடுகிறார்கள்
இது நிமிர்ந்து நிற்கும் ஒருவரை தரையில் தள்ளிவிடும் செயலுக்கு ஒப்பானது.
இந்த விடயத்தில் அசல் பார்ப்பனர்களிடம் இருந்து நாம் பாடம் கற்கலாம் என்று தோன்றுகிறது.
பார்ப்பன வீட்டு குழந்தைகளுக்கு இந்த கொடுமை நடப்பதில்லை.
பெற்றோல் தட்டி கொடுத்து வளர்ப்பார்கள் ..
தள்ளி தரையில் வீழ்த்தி விடுவதில்லை.
உங்கள் தன்னம்பிக்கையை குலைக்கும் ஒவ்வொருவரும் உங்களை தரையில் தள்ளி விழுதி விடுகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.
சுயமரியாதை இயக்கத்தின் தேவை ஏன் உண்டானது என்ற வரலாறை படியுங்கள்
சுயமரியாதைக்கு எந்த வழியில் சவால் வந்தாலும் எதிர்கொண்டு வினையாற்றுங்கள்.
விசாரணை கைதிகளின் பற்களை கல்லால் உடைத்து ..அந்தரங்க உறுப்பை நசுக்கும் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பல்வீர் சிங்.. கதறும் இளைஞர்கள்!
![]() |
![]() |
tamil.oneindia.com - Vignesh Selvaraj : திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களை விசாரிக்கும் போது பற்களை பிடுங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்களிடம் அத்துமீறுவதாக ஏ.எஸ்.பி பல்பீர் சிங் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியும், அந்தரங்க உறுப்பை நசுக்கியும் கொடுமைப்படுத்துவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு, 26 மார்ச், 2023
சென்னை கவிக்கோ மன்றத்தில் அண்ணா, கலைஞர் படம் ஏன் இல்லை? என்று கோவி.லெனின் கேள்வி எழுப்பியுள்ளார்.
![]() |
மின்னம்பலம் -christopher ; சென்னை கவிக்கோ மன்றத்தில் அண்ணா, கலைஞர் படம் ஏன் இல்லை? என்று கோவி.லெனின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிட இயக்க எழுத்தாளரும், திமுக ஐடி விங் ஆலோசகருமான கோவி. லெனின் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அதில், “கவிக்கோ மன்றம் இலக்கியவாதிகள்-சமூக செயற்பாட்டாளர்களின் சரணாலயம். சென்னை சி.ஐ.டி. காலனியில் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் குறைந்த கட்டணத்தில் நல்ல முறையில் நிகழ்ச்சிகளை நடத்த முடியும். வேறு அரங்குகள் அனுமதிக்க மறுக்கும் நிகழ்வுகளைக்கூட அதன் முக்கியத்துவம் கருதி கவிக்கோ மன்றம் அனுமதித்து, நெருக்கடிகளை சந்தித்ததும் உண்டு.
ரேணுகா சவுத்திரியை சூர்ப்பனகை என்று மோடி கூறிய விவகாரம் பழைய பேச்சைக் கிளரும் காங்கிரஸ்!
நக்கீரன் : தன்னை சூர்ப்பனகை என்று கூறிய மோடிக்கு ராக வழக்கு தொடரப் போவதாக காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சௌத்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். \
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் சேவை ஏப்பிரல் 29 இல் ஆரம்பம் .. 4 மணித்தியால பயணம் ..
hirunews.lk : இந்திய - இலங்கை கப்பல் சேவை ஆரம்பமாகும் தினம், கட்டண விபரங்கள் அறிவிப்பு!
இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை, துறைமுகத்துக்கு குறித்த தினத்தில் புதிய கப்பல் சேவையின் முதல் படகு வருகைதரும் என்றார்.
அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய கப்பல் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..
இலங்கையில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி! ரணில் அரசு அதிரடி
president Ranil Wickremasinge |
ஹிரு நியூஸ் : நாட்டில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை அரிசியாக மாற்றி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வழங்க உள்ளது.
ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரிசியை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி
ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
tamil.news18.com : ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாகச் சென்னை அடுத்த போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இதய ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.
தலைமை நீதிபதி சந்திரசூட் : சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு பதில்
bbc.com : மு.க.ஸ்டாலின் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் கோரிக்கை: சமூக நீதி அடிப்படையில் நியமனம் குறித்து என்ன சொன்னார்கள்?
மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்,
சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
வழக்காடு மொழி குறித்த கோரிக்கைக்கு மேடையில் பதில் கூறிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவு கூறுவதால், தமிழை வழக்காடு மொழியாக உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படலாம் என்று தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியும் திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்பு கொள்கையும்
![]() |
ராதா மனோகர் : 1952 இல் தந்தை செல்வாவும் அவரின் சம்பந்தி நாகநாதனும் முறையே காங்கேசன்துறை யாழ்ப்பாணம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் இந்த இருவரும் வெறுப்பு அரசியலை விதைத்து இருக்க மாட்டார்கள்
அந்த தோல்வி இருவரையும் ஒரு தவறான அரசியலை முன்னெடுக்க வைத்து விட்டது. அந்த தோல்வியில் இருந்து மீள்வதற்கு தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்ட பரப்புரைகளை இரவல் வாங்கினார்கள்
அதை அப்படியே சிங்கள எதிர்ப்பாக கூர் தீட்டினார்கள்
திராவிட கோட்பாட்டாளரான திரு எஸ் டி சிவநாயகத்தையும் அவரது நண்பர் செல்லையா ராசதுரையையும் கொழும்பில் திராவிட கழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட குழு செயலாளராக இருந்த அமிர்தலிங்கத்தையும் முன்னிறுத்தி தமிழ் தேசிய அரசியல் கடையை விரித்தார்கள்
தமிழினத்தின் மொத்த அரசியலையும் நாசமாக்கிய துரோகி என்ற சொல்லை செல்வநாயகம் நாகநாதன் முதல் முதலில் பயன்படுத்தியது திரு ஜி ஜி பொன்னம்பலத்திற்கு எதிராகத்தான்
இதில் இருந்துதான் தமிழினத்தின் சாபக்கேடான துரோக அரசியல் ஆரம்பித்தது!
சனி, 25 மார்ச், 2023
அன்று ராகுல் கிழித்த அவசரச் சட்டம், இன்று அவரையே... பத்து வருட ஃப்ளாஷ் பேக்!
மின்னம்பலம் - Aara : அன்று ராகுல் கிழித்த அவசரச் சட்டம், இன்று அவரையே… பத்து வருட ஃப்ளாஷ் பேக்!
பத்து வருடங்களுக்கு முன் 2013 ஆம் ஆண்டு ராகுல்காந்தி டெல்லியில் அப்போது நடைபெற்ற தனது காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கொண்டுவந்த அவசர சட்டத்தை கிழித்து எறிந்தார்.
அதன் ஒரு விளைவாகவே இப்போது 2023 மார்ச் 23 ஆம் தேதி ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற விவாதங்கள் தேசிய அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இப்படி ஒரு நிலை ராகுல் காந்திக்கு அல்ல வேறு எந்த மக்கள் பிரதிநிதிக்கும் வரக் கூடாது என்பதற்காக… 2013 இல் ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது காங்கிரஸ் கூட்டணி அரசு.
வன்முறையை துண்டியதாக சீமான் மீது திருச்சி காவல்துறை வழக்கு
மாலைமலர் : திருச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக் கோரி திருச்சியில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து பொதுக்கூட்டம் போன்று மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும்போது, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பெண் கொலை வழக்கில் கிளி சாட்சியத்தால் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
maalaimalar : பெண் கொலை வழக்கில் கிளி சாட்சியத்தால் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
•விஜய் ஷர்மா வீட்டில் வளர்த்து வந்த அவரது செல்ல கிளி நீலம் ஷர்மாவின் கொலைக்கு பிறகு சாப்பிடாமல் அமைதியாக இருந்தது.
•விஜய் ஷர்மா கொலையை கிளி நேரில் பார்த்திருக்கலாம் என சந்தேகப்பட்டார்.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
விஜய் ஷர்மா தனது மகன், மகளுடன் வெளியே சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த நீலம் ஷர்மாவை மர்மநபர்கள் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கொலையாளிகள் பற்றி எந்த தடயமும் கிடைக்கவில்லை.
ஶ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி மகராஜ். பிராம்மணர்களைப் பற்றி “சத்தியார்த்தப்பிரகாசம்” எனும் நூலில்..
![]() |
Dhinakaran Chelliah : பிராம்மணீயம்
பிராம்மணர்களைப் பற்றி ஶ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்
சத்தியார்த்தப்பிரகாசம் ” எனும் நூலில் எழுதுகிறார்;
பிராம்மணர்களே வித்தை யற்றவர்களாகும் பொழுது ஷத்திரியர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் அறிவற்றுப்போவதைப் பற்றிக்கேழ்ப்பானேன். தலை
முறை தலைமுறையாய அர்த்தத்துடன் வேதம் முதலான சாஸ்திரங்களை ஓதி
வந்ததும் மறைந்து விட்டது. கேவலம் ஜீவனோபாயத்திற்கு மாத்திரம்
பிராம்மணர்கள் பாடஞ் செய்து வந்தார்கள். அதைக்கூட அவர்கள் சத்திரியர்
களுக்கும் பிறர்களுக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை. அவித்வான்கள் ஜனங்களின் போதகர்களாகவே வஞ்சனை, கபடம், புரட்டு, அதர்மம் முதலானவைகள் விருத்தியாயிற்று. பிராம்மணர்கள் தங்கள் ஜீவனத்திற்கு ஏதாவது ஒரு வழிதேட வேண்டுமென்று யோசித்து நிச்சயஞ் செய்து கொண்டு ஷத்திரியர் முதலானவர்களுக்கு “நாங்கள் தான் உங்களுடைய பூஜ்ய தேவதைகள்.எங்களை வணங்காமல் உங்களுக்கு முக்தி கிடையாது. எங்களைப் பூஜை செய்யாமல் போனால் கஷ்டமான நரகத்தில் விழுவீர்கள்" என்று உபதேசஞ் செய்தார்கள்.
பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி.. தலையில் பலத்த அடி!
hirunews.lk : பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இசைகச்சேரியின் போது, திடீரென அவர் மயங்கி கீழே விழுந்ததாகவும், இதனையடுத்து அவர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.
தமிழில் இவர் பாடிய 'வசீகரா', 'ஒன்றா ரெண்டா ஆசைகள்' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ராகுல் காந்தியின் இன்றைய நிலைக்கு ராகுல் காந்தியே காரணம்
ராகுல் காந்தியை இன்று காப்பாற்ற கூடிய சட்ட திருத்தத்தை ராகுல் காந்தியே அன்று மூர்க்கத்தனமாக எதிர்த்தார் . லாலு பிரசாத் யாதவை காப்பாற்றுவதற்காக மன்மோகன் சிங் அரசால் அந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது .. லாலு என்றால் ஊழல் செய்திருப்பார் என்ற மேட்டுக்குடி பொதுப்புத்தியில் ராகுல் அன்று காட்டிய மேட்டிமைத்தனம்
இந்த காணொளியில் அன்றய ராகுலின் உடல் மொழி முகபாவம் போன்றவற்றை பார்த்தால் பல விடயங்கள் தெளிவாகும்
LR Jagadheesan : Please watch this video; .
And Read this news item:
https://www.barandbench.com/.../2013-ordinance-rahul...
As a scion of the Nehru dynasty, Rahul Gandhi intoxicated with his privileged position and the power that comes from his family background, publicly tore down an ordinance that was enacted by a coalition government, headed by his own Congress party.
That too when the Indian Prime Minister (who is from his own Congress party) who enacted the ordinance was abroad, he did this. That was the greatest humiliation any Indian Prime Minister faced when he/she was abroad. So, please watch the video again; particularly look at his body language that oozes outrageous arrogance, and utter contempt towards the entire Indian political class in general and his own party and its government in particular. Hear the words. Witness how he sneers.
வெள்ளி, 24 மார்ச், 2023
டி.எம். சௌந்தரராஜன் நூற்றாண்டு விழா: 10,000 பாடல்கள் பாடிய டி.எம்.எஸ் வரலாறு
bbc.com : டி.எம். சௌந்தரராஜன் நூற்றாண்டு விழா: அரை நூற்றாண்டில் 10,000 பாடல்கள் பாடிய டி.எம்.எஸ் எப்படி சினிமாவுக்குள் வந்தார் தெரியுமா? - BBC News தமிழ்
தமிழ் சினிமா வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை அவர் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார்.
டிஎம்எஸ் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு `டி.எம்.சௌந்தரராஜன் சாலை` எனப் பெயர் சூட்டுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது குறித்த அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறது.
ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம்
மாலை மலர் : மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
சூரத் கோர்ட்டு விசாரணை நடத்தி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அறிவித்தார்.
டிரம்ப்பை தெருவில் இழுத்துச்சென்ற போலிஸார்.. இணையத்தில் பரவும் புகைப்படம்.. உண்மை நிலை என்ன ?
கலைஞர் செய்திகள் - Praveen : : கடந்த இரண்டு நாட்களாக டிரம்ப்பை போலிஸார் கைது செய்து தெருவில் இழுத்துச்செல்வதைப் போல புகைப்படம் வெளியாகி பரவி வருகிறது
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
அதன்பின்னர் அரசு ஆவணங்களை எடுத்துக்கொண்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராகுல் காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
லண்டன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்.. இந்திய தூதரக போலீசார் மீது முட்டை- மை வீச்சு
மாலைமலர் : லண்டன்:இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தியாவின் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூதரகத்தில் இருந்த இந்திய தேசிய கொடியை அகற்றினர்.
இந்நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு ஏராளமானோர் திரண்டு கோஷம் எழுப்பினர். இதையடுத்து தூதரகத்தில் இருந்து பல அடி தூரத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டனர். அப்பகுதியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழன், 23 மார்ச், 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க : கடந்த ஜூலை தீப்பிடித்த நாட்டை மீட்டவன் நான்.” –
தேசம் நெட் - அருண்மொழி : சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையில்,
“கடந்த ஜூலை 9 ஆம் திகதி நான் தீப்பிடித்த நாட்டையே பொறுப்பேற்றேன். குழப்பத்தில் இருந்த ஒரு நாடு. நாளைய தினம் பற்றிய நம்பிக்கை ஒரு துளி கூட இல்லாத நாடு. அதிகாரப்பூர்வமாக திவாலான நாடு என அறிவிக்கப்பட்ட நாடு. பணவீக்கம் 73% வரை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்ட நாடு.
நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் பல நாட்களாக தவித்த மக்கள் வாழ்ந்த நாடு. பாடசாலைகள் மூடப்பட்ட நாடு. ஒரு நாளைக்கு 10 – 12 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நாடு. விவசாயிகளுக்கு உரம் இல்லாத நாடு.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் - டெல்லி சென்ற ஆளுநர் RN.ரவி!
Kalaignar Seithigal - Prem Kumar : தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளினால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர்.
எனவே, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலையும் பெறுவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அவசரச் சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார்.
ராகுல்காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை ..குஜராத் நீதிமன்றம் .. மோடி மீது அவதூறு பேச்சாம்
மாலை மலர் : சூரத் 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி பேசினார்.
அப்போது அவர் "எல்லா திருடர்களும் மோடி என்ற ஒரே குடும்ப பெயரை ஏன் வைத்து உள்ளனர்?" என்று பேசியதாக கூறப்படுகிறது.
தொழில் அதிபர்களான நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் இதை பேசினார். பிரதமர் மோடியை மறைமுகமாக அவதூறு செய்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது.
இதை தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மீது குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
பாராட்ட வார்த்தைகளே இல்லை.. தொடரட்டும் உழவர் புரட்சி; திராவிட மாடல் ஆட்சி”: ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!
Kalaignar Seithigal - Prem Kumar ; மூன்றாவது முறையாக வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை என்பது எங்குமில்லாத முன்னுதாரணம். விவசாயம் என்பது ‘பாவ தொழில்’ என்ற மனுதர்மத்திற்கு எதிராக விவசாய நலனில், விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“கடந்த சுமார் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில், தமிழ்நாடு பல துறைகளில் ஓர் ‘அமைதிப் புரட்சியை’ சந்தித்து மகிழ்ந்து வருகிறது. வாழும் வயிற்றிற்கெல்லாம் சோறிடும் மிக இன்றியமையாத துறைதான் வேளாண்மைத் துறை; அதுமட்டுமல்ல, மனித நாகரிகத்தின் திருப்பமும் வேளாண்மையே ஆகும்.
வேளாண் என்பது மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு அடையாளம்!
காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ, 9 பேர் பலி – 13 பேருக்கு சிகிச்சை
மாலைமலர் : காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் ஏற்கெனவே 8 பேர் உயிரிழந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த மருத்துவமனையில் கஜேந்திரன் (50) 90 சதவீதமும், சசிகலா (45) 100 சதவீதமும், ஜெகதீசன் (35) 95சதவீதமும், ரவி (40) 90 சதவீதமும், உண்ணாமலை (48) 40 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உண்ணாமலை என்ற பெண் தவிர 3 ஆண்களும் 1 பெண்ணும் அபாய கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வெடி விபத்தில் தற்போது சசிகலா (வயது 45 ) என்ற பெண்மணி இறந்துவிட்டார். இவருடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் இறந்து விட்டனர்.
புதன், 22 மார்ச், 2023
பருத்தித்துறையில் 10 படகுகள் தீக்கிரை.. உள்ளூர் கோஷ்டி மோதல்?
![]() |
hirunews.lk : பருத்தித்துறையில் 10 படகுகள் தீக்கிரையாகின!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை காவல்துறை பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் க்கிரையாக்கப்பட்டுள்ளன.
கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களின் இந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான படகுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்தைவெளி வெளிவட்ட சாலைக்கு டி.எம் சவுந்தர ராஜன் பெயர்.. அரசாணை வெளியீடு
மாலை மலர் : பிரபல பாடகரான டி.எம்.சவுந்தர ராஜன் கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார்.
இவரது நூற்றாண்டு விழா வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பிரபல பாடகரான டி.எம்.சவுந்தர ராஜன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், நாகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான தனித்தனி குரலில் பாடி அவர்களின் முகத்தை ரசிகர்களின் கண்முன் நிறுத்தும் திறமை கொண்டவர். டி.எம்.சவுந்தர ராஜன்
இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் படங்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார்.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் 2500-க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
உக்கிரேனில் ஜப்பான் பிரதமர் .. சீன அதிபரின் ரஷிய வருகைக்கு பதிலடியாகவா ?
மின்னம்பலம் : Kavi : மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசிய நிலையில், ஜப்பான் பிரதமர் உக்ரைன் சென்றுள்ளார். இதனால் சீனா கடும் அதிருப்தியில் உள்ளது.
போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்க தலைவர்கள் திடீர் பயணம் மேற்கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வரிசையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீரென உக்ரைனுக்குச் சென்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து விமானம் மூலம் போலந்து சென்ற ஜப்பான் பிரதமர், அங்கிருந்து உக்ரைன் சென்றுள்ளார். அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளார்.
போர் தீவிரமடைந்துள்ள இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக ஜப்பான் பிரதமரின் பயணம் அமைந்துள்ளது.
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் - தூத்துக்குடியில் பரபரப்பு
மாலை மலர் : தூத்துக்குடியில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அத்துடன் அங்கிருந்த பொருள்களையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பியார்புரத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.
அப்போது அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரகதீஸ்வரனை பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கியதாக மாணவனின் தாத்தா முனியசாமி ஆசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து முனியசாமியும், அவரது உறவினர்களும் தலைமை ஆசிரியரையும், சக ஆசிரியர்களையும் தாக்கியுள்ளனர்.
செவ்வாய், 21 மார்ச், 2023
பட்ஜெட்டில் பலா - கறிவேப்பிலை- முருங்கை: அறிவிப்புகள்!
மின்னம்பலம் -Kavi : பலா, கறிவேப்பிலை, முருங்கை ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“அதன்படி, ஐந்து ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2500 எக்டர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும்.
இத்திட்டம் அரியலூர், திண்டுக்கல், கடலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
பலா தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்தி, புதிய ரகங்கள், உயர் மகசூல் தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தப்படும்.
இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி- IMF நிதியம் ஒப்புதல்
Maalaimalar : சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது.
கொழும்பு: இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, தட்டுப்பாடும் நிலவியது.
அன்றைய செலாவணி இருப்பு குறைந்ததால் அரசு திணறியது.
மக்கள் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் ராஜினாமா செய்த பிறகு புதிய அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.
மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பிப்பது எப்படி... யாருக்கு கிடையாது... எப்படி கிடைக்கும்? - முழு விவரம்
zeenews.india.com - Sudharsan G : Thousand Rupees For Women: தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 20) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குடும்ப தலைவிக்களுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது.
நிதியமைச்சரின் அறிவிப்பு
இதுகுறித்து பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,"தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
கேரளா தேவி குளம் தமிழ் எம் எல் ஏ ராஜாவின் வெற்றி செல்லாது . .உயர்நீதிமன்றம் தீர்ப்பு .. போலி சான்றிதழ்
Kalaignar Seithigal - Praveen : கேரள மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவிக்குளம் தொகுதியில் ராஜா என்பவர் போட்டியிட்டார்.
இவர் தன்னை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட டி. குமார் என்பவரை 7,848 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.
சட்டமன்றத்தில் இவர் தமிழில் பதவி பிரமாணம் எடுத்தது தமிழ்நாட்டில் கவனத்தை பெற்றது.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா
![]() |
minnambalam.com - Kavi : ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார்.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லி சென்று வந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் கடந்த 15ஆம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திங்கள், 20 மார்ச், 2023
ஆம்புலன்சில் புலிகளுக்காக வெடிபொருள்:கடத்திய சதீஸ்குமாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு 15 ஆண்டுகளின் பின் விடுதலை! பேட்டி
President Ranil Wickremasingha |
![]() |
அவ்வாறான பாதிப்புகளை எதிர்நோக்கியவர்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் அடங்குவார்கள்.
புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்றும் பலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள். இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு வழங்கியதாகக் கூறப்பட்டு, 15 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் அண்மையில், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
]குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை- செப்.15ம் தேதி முதல் வழங்கப்படுகிறது
மாலை மலர்வ ; தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-
கோவையில் ரூ.172 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும்.
முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.
ஒகேனக்கல் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.7,149 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தில் 10,000 குளங்கள், ஊரணிகளை புதுப்பிக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு நெய்தல் திட்டம் அமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.
கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
திருமாவளவன் : போலி (சீமான்) தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றியாகவேண்டும்
tamil.samayam.com : ‘சீமானிடம் ஜாக்கிரதையாக இருங்கள்..’ - சூசகமாக சீண்டிய திருமாவளவன்.!
திரிபுவாத அரசியலை பேசிவரும் போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார்.
இதன் மூலம் சீமானை அவர் மறைமுகமாக சாடியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் தேசிய அரசியலை பேசி வருகிறார்.
ஆனால் அவர் பேசுவது இனத்தூய்மை வாதம் எனவும், திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பதாக கூறிகொண்டு சனாதனம் பேசுகிற பாஜகவிற்கு துணை போவதாக திமுக ஆதரவாளர்கள், திராவிட சித்தாந்தவாதிகளும் கூறிவருகின்றனர்.
ஓடும் ரெயிலில் மாணவி மீது பாலியல் வன்கொடுமை ... காஷ்மீர் எல்லை பாதுகாப்பு வீரர் கேரளாவில் கைது
![]() |
நக்கீரன் கல்லூரி மாணவிக்கு ரயில் பயணத்தின் போது மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த எல்லை பாதுகாப்பு வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதி சேர்ந்தவர் பிரதீஷ்குமார்.
இவர் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் விடுமுறைக்காக ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அந்த ரயிலில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரும் பயணித்து வந்துள்ளார். இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பேசிக் கொண்டு வந்துள்ளனர்.
அப்பொழுது மாணவிக்கு வலுக்கட்டாயமாக மதுபானத்தை கொடுத்த பிரதீஷ்குமார்
மாணவி மயக்கமடைந்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பிரதீஷ்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
லண்டன் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் கல்வீச்சு
மாலைமலர் : லண்டன் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.
இதையடுத்து, இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
ஞாயிறு, 19 மார்ச், 2023
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். உயர்நீதிமன்றம் அதிரடி பன்னீர் கூட்டம் கொண்டாட்டம்
மாலை மலர் : சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என கூறினார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ். தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், உயர்நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி. நீதி வெல்லும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என கூறினார்.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இலங்கையின் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது - இலங்கை அரசு அறிவிப்பு
hirunews.lk: இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்வை அடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலையில் தேவையான விடயங்களுக்கு போதுமான டொலர்கள் கையிருப்பில்இருப்பதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
நாளை 20ஆம் திகதியன்று இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், 2.9 பில்லியன் டொலர்களுக்கான ஒப்புதலை வழங்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், இதனையடுத்து நாளை மறுநாள் நாட்டுக்கு முதல் கட்டமாக 390 மில்லியன் டொலர்கள் விடுவிக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
agrivoltaics சோலார் பேனல்கள்களுக்கு அடியில் பயிர்கள் ஒரே கல்லில் இரண்டு மங்காய்
Sriram Govind : சோலார் பேனல் மின்சாரத்தில் சிக்கல் என்னவெனில் அதை சுத்தம் செய்ய தண்ணீர் தேவைப்படுவதுதான்.
பாலைவனம், வெட்டவெளியில் பேனல்களை நிறுவுகையில் அதன் மேல் தூசி படியும், தூசி படிந்தால் மின்சாரம் உற்பத்தி ஆகும் அளவு குறையும்.
அதனால் பேனல்கள் மேல் நீரை விட்டு அடித்து சுத்தம் செய்யவேண்டும். இதற்கு தண்ணீர் வீணாகும். அத்துடன் ஏக்கர்கணக்கில் பேனல்களை நிறுவுகையில் இடமும் வீணாகும்.
இதனால் இப்போது அக்ரிவோல்டைக்ஸ் (agrivoltaics) எனும் உத்தியை பயன்படுத்துகிறார்கள்.
சீனாவில் 1 ஜிகாவாட்ஸ் அளவுள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்ய கோபி பாலைவனத்தில் ஒரு மிகப்பெரிய சோலார் பார்க் அமைக்கபட்டது.
திமுகவின் ஆணிவேர்களை அசைக்கும் சூழ்ச்சியில் திமுக தலமை வீழ்ந்துவிட்டதா? சமூகவலையில் கருத்து மோதல்கள்
Elengovan K Dev : திமுகவின் ஆணிவேர்களை அறுக்கும் சூழ்ச்சியில் திமுக தலமை வீழ்ந்துவிட்டதாகவே நினைக்கிறேன்..
நீங்க நம்பாட்டாலும் இதுதான் உண்மை.
Kandasamy Mariyappan : எப்படி இந்த முடிவுக்கு வந்தீங்க.!
Mpn Ramesh Narayanasamy : 30 - வருடம் 40 - வருடம்...
ஒருவனுக்கு ஒரே மாதிரி இருக்காது .
தேவைகள் ஒருவனை நெட்டித் தள்ளும் .
அவன்களுக்கும் குடும்பம் குழந்தைகள் இருக்குமே ...
அதிமுகவில் இருந்த பல லட்சம் பேர் மூன்று தலைமுறைகளுக்கு செட்டிலாகி விட்டனர் .
ஆனால்..
இங்கே இன்னமும் டீக்கடையில் கொள்கை முழங்கிக் கொண்டு இன்னொரு டீ எவன் வாங்கித் தருவானென்று காத்திருக்கும் திமுக தொண்டர்கள் (கட்சி மாறாத ) .
இவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட எதுவும் செய்ய வேண்டாமா ?
அவன் அப்படியே செத்து சுண்ணாம்பாக போய்விட வேண்டியதுதானா ?
Kandasamy Mariyappan : Mpn Ramesh Narayanasamy அதிமுக தொடர்ந்து ஆட்சி செய்ய மக்கள் வழி செய்கின்றனர்.!
அதிமுக ஆட்சி செய்ய திமுக தவிர அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் உதவி புரிகின்றன.!
வட இந்தியாவில் உருவானது திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு !..
![]() |
![]() |
Kalaignar Seithigal - Prem Kumar ; டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்காக திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு தொடங்கிவைக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் மாணவர் கூட்டமைப்பை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தொடங்கிவைத்தார். .
இம்ரான் கானை தரதரவென இழுத்துச் சென்ற பரபரப்பு காட்சி. வெடித்த மோதல்... கலவர பூமியான பாகிஸ்தான்
இந்த நிலையில், குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க இம்ரான் கான், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது, இம்ரான் கான் வீட்டை சுற்றி அவரின் கட்சித் தொண்டர்கள் இருந்தனர்.
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு ஒரு நிமிடம்கூட அனுமதி இல்லை - மந்திரி டக்ளஸ் தேவானந்தா
மாலைமலர் : இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரிக்க வேண்டும் என கூறினார்.
கொழும்பு: இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ், வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது. பாஸ் நடைமுறையும் இல்லை.
தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவரிடம் அரசாங்க ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளைப் பார்த்துவிட்டு செல்லட்டும். அப்போதுதான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என தெரிவித்தார்.
சனி, 18 மார்ச், 2023
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.25 ஆயிரம் கோடியில் கை வைத்த ஒன்றிய அரசு: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி
tamil.samayam.com : தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024 வரும் திங்கள் கிழமை (மார்ச் 20) சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று டெல்லியில் முக்கிய சந்திப்புகளை நிகழ்த்தினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய நிதித்துறை செயலாளரை சந்தித்தார்.
தமிழக நிதி நிலைமை சரிவிலிருந்து மீள்கிறதா?
அதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“வரும் திங்கட்கிழமை தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழகத்தின் நிதி நிலைமை முன்னர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.
உரிமம் பெறாத லிப்டில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு டெல்லியில்
மாலைமலர் : டெல்லியில், கமலா மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடத்தின் திறந்த லிப்டில் இருந்து தவறி விழுந்து 29 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், " சம்பவ இடத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆய்வு செய்தனர். அங்கு இரும்பிலான திறந்தவெளியில் லிப்ட் ஒன்று பொருட்களை ஏற்றி இறக்க பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த லிப்ட் பாதி வழியில் நின்ற நிலையில் அந்த நபர் கீழே படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.
இதை கவனித்த உரிமையார் மற்றும் சிலர் இளைஞரை மீட்டு லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட லிப்ட் உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.
திமுக பூங்கோதை ஆலடி அருணாவை தோற்கடிக்க ஹரி நாடருக்காக வேலை செஞ்சுருக்கோம் ஒரு அதிர்ச்சி ஒப்புதல் வாக்குமூலம்
கிளாடியஸ் கிளாடிஸ் : இல்லை புரியல இப்படிப்பட்டவருக்கு
முட்டு கொடுக்கவேண்டிய தேவை என்ன? என்ன அவசியம் வந்தது?பிரசாந்த் கிஷோர் ஐ திமுக காரன்னு சொல்லிட முடியுமா?
ஏதாவது லாபத்துக்காகத்தான்னா சொல்லிட்டு செய்வதில் விமர்சனம் இல்லை.
தன் வாழ்நாள் முழுவதும் எதிரிகளை விட துரோகிகளால் காயம் பட்டுக்கொண்டே இருந்த அந்த ஒற்றை மனிதன் கலைஞரையும் அவர் வளர்த்த கட்சியையும் நம்புகிற எந்த உண்மையான தொண்டனும் இதுக்கு விமர்சனம் செய்யத்தான் செய்வான்.(அப்படிப்பட்ட தொண்டனிடம் நல்லி எலும்பன் எல்லாம் தனியா மாட்னா.)
அப்படிப்பட்டவனுக்கு தனியா பெயர் வச்சி கூப்பிட்டா அல்லது அவனை விமர்சித்தால் விமர்சிப்பவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்.
அப்புறம் களம் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும் என்று தீர்க்கமாய் நம்பும் உடன்பிறப்புகளுக்கு..
90%களத்தில் களமாடாத கட்சிதான் இன்று நாட்டை ஆள்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்..
ரஷிய அதிபர் ;விளாடிமிர் புட்டினுக்கு கைது வாரண்ட் ..உலக குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்ற அறிவிப்பு
மாலை மலர் : மாஸ்கோ உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.
போர் விதிகளை மீறி ரஷியா பல்வேறு கொடூரச் செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
வெள்ளி, 17 மார்ச், 2023
திருச்சி சிவாவை நேரில் சந்தித்த கே.என். நேரு
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா, ''கட்சி தான் முக்கியம் என நினைப்பதால் இந்த விஷயங்களை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
இருப்பினும் இந்த நிகழ்வு எனக்கு மன வேதனை அளிக்கிறது.
புதுசேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
மாலைமலர் : . புதுச்சேரி: தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
சேர்ச்சுக்கு வரும் பெண்களுடன் ஆபாச வீடியோ: கன்னியாகுமரி மதபோதகர் தலைமறைவு
![]() |
தினத்தந்தி : கன்னியாகுமரியில் ஆபாச வீடியோ வெளியானதால் மதபோதகர் தலைமறைவாகி விட்டார்.
நர்சிங் மாணவி புகாரை தொடர்ந்து அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். ஆபாச வீடியோ கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் 27 வயதான மதபோதகர் (பாதிரியார்) ஒருவர் பணியாற்றி வந்தார்.
அவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார்.
முதலில் அன்பாக பேசிய அவர் நாட்கள் செல்ல செல்ல இரட்டை அர்த்தத்தில் பேசி பெண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார்.
தன்னிடம் விழுந்த பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
துக்ளக் சோ flashback : மோடி தான் பிரதராக வேண்டும்.. அத்வானி முன்மொழிய வேண்டும்: நாம் சொன்னால், மோடி கேட்க மாட்டார் என்ற பயம் பாஜக தலைவர்களுக்கு உள்ளது.
பாஜகவில் அருண் ஜேட்லி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா போன்ற தலைவர்களுக்கு பிரதமராகும் எண்ணம் உள்ளது என்றாலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மட்டுமே பிரதமராகும் தகுதி உள்ளது.
நாம் சொன்னால், மோடி கேட்க மாட்டார் என்ற பயம் பாஜக தலைவர்களுக்கு உள்ளது.
15 january 2013
tamil.oneindia.com : சென்னை: மத்தியில் திமுக அதிகாரத்துக்கு வரக் கூடாது, அதிமுக தான் வர வேண்டும். பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிய வேண்
டும் என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.
துக்ளக் பத்திரிகையின் 43வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.
காங்கிரஸ் ஊழல்வாதிகள்.. பாஜகவில் 'நேர்மைவாதிகள்':
வியாழன், 16 மார்ச், 2023
நடிகை மீனாவை தனுஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? கொளுத்திப் போட்ட பயில்வான் ரங்கநாதன்!
tamil.filmibeat.com Mari S : சென்னை: சினிமா நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றி தொடர்ந்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.
மூத்த சினிமா பத்திரிகையாளரும் நடிகருமான இவர் தற்போது கொளுத்திப் போட்டிருப்பது ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கணவரை இழந்து வாடி வரும் நடிகை மீனாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார் தனுஷ் என்கிற வெடி குண்டை தூக்கிப் போட்டு ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
ஈவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை: மருத்துவர் பேட்டி!
minnambalam.com - Kavi : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மார்ச் 16) சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், டெல்லி சென்று கட்சித் தலைவர்களைச் சந்தித்துவிட்டு நேற்று மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி சம்பவங்கள் ... பஹ்ரைன் நாட்டிலுருந்து திரும்பிய திருச்சி சிவா பேட்டி
மாலைமலர் : திருச்சி: பக்ரைன் நாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பிய திருச்சி சிவா எம்.பி. இன்று எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற குழு அனுப்பிய 178 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக பக்ரைன் நாட்டிற்கு சென்று விட்டு இன்று திரும்பி இருக்கிறேன். நடந்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போதைக்கு நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை. நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன்.
தனி நபரை விட கட்சி தான் முக்கியம். ஆகவே பலவற்றை நான் பெரிது படுத்தியது இல்லை. யாரிடமும் புகார் சொன்னதும் இல்லை. தனி மனிதனை விட இயக்கம்தான் முக்கியம் என வளர்ந்தவன், இருப்பவன்.
நியூசிலாந்தில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவு! சுனாமி எச்சரிக்கை விடுப்பு
tamil.oneindia.com - Shyamsundar : அன்காரா; நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுக்க கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்கம்
இதனால் பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. ஆனால் இதனால் பெரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேபோல் பிலிப்பைன்சில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி
மாலைமலர் : சென்னை: சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வென்றார்.
இதனைத்தொடர்ந்து சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்< அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயவியல் மருத்துவ நிபுணர் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதன், 15 மார்ச், 2023
திருச்சி சிவா அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அடிதடி வன்முறை: முக்கிய நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
4 திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்ட்டுள்ளனர்.
திருச்சியில் இன்று அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
திருச்சி சிவா வீட்டில் சிலர் தாக்குதல் நடத்தினர்.
அவரது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருச்சி காவல் நிலையத்திலும் அமைச்சர் கே.என்.நேரு- திருச்சி சிவா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
ஈரானில் பொதுவெளியில் நடனமாடிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!
![]() |
வீரகேசரி : ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய யுவதிகளின் பாதுகாப்பு குறித்து கரிசனைகள் எழுந்துள்ளன. ஹிஜாப் அணியாமலும் இப்பெண்கள் காணப்பட்டனர்.
தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதியான எக்பதானில், உயர்ந்த கட்டடங்கள் அருகிலிருந்து யுவதிகள் ஐவர் நடனமாடியுள்ளனர். இவர்கள் நடனமாடும் காட்சி அடங்கிய வீடியோ டெலிகிராம் மற்றும் டுவிட்டரில் வெளியாகின. நைஜீரிய பாடகர் ரேமாவின் ‘காம் டவ்ன்’ எனும் பாடலுக்கு இவர்கள் நடனமாடினர்.
சர்வதேச மகளிர் தினமான கடந்த 8 ஆம் திகதி இந்த வீடியோ டிக்டொக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.
ஈரானில் பெண்கள் பகிரங்கமாக நடனமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. தலையை மறைக்கும் ஹஜாப் ஆடை அணியாமல் பொது இடங்களில் காணப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
கொலையாளியை காட்டிக்கொடுத்த நாய் 4 KM மேடுபள்ளங்களில் ஓடி சென்று கட்டிலுக்கு கீழ் படுத்திருந்த கொலையாளியை கவ்வியது . இலங்கை
![]() |
தமிழ் மிரர் : திருமணமான 27 வயதான இளம் பெண்ணொருவர் படுகொலைச் செய்யப்பட்டு சேற்றுக்குள் புதைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கண்டி அலவத்துகொடவில் அண்மையில் இடம்பெற்றிருந்தமையை யாவரும் அறிவீர்கள்.
அந்த கொலையாளியை கண்டுப்பிடிப்பதற்கு வயல்வெளியில் இரண்டு நாற்றுக்களை கழற்றி“ஏகல்” வழிகாட்டிகொடுத்தது என்று அஸ்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
பெருமாள் முருகன் எழுதிய 'பைர்' நாவல் -புக்கர் பரிசு போட்டிக்கு தேர்வு
மாலை மலர் : புதுடெல்லி இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ பதிப்பிக்கப்பட்ட நாவலுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
இது 50 ஆயிரம் பவுண்ட்ஸ் (ரூ.50 லட்சம்) பரிசுத்தொகை கொண்ட விருது.
எழுத்தாளருக்கும், மொழி பெயர்த்தவருக்கும் இத்தொகை பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான போட்டிக்கு தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'பைர்' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் எம்.எம்.அப்துல்லா இடையே நடந்த மோதல்! முழு விவரம்!
![]() |
abdulla affair . 'கைக்கு அஞ்சு! வாய்க்கு பத்து!' அர்த்தராத்திரியில் தன்னிலை மறந்த ஆபாச எம்.பி அப்துல்லா
Mohan Raj kathir.news : அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பொதுவெளியில் ராஜ்யசபா எம்.பி அப்துல்லா தரை லோக்கலாக இறங்கி பேசிய விவகாரம் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சில அரசியல்வாதிகள் கெட்ட வார்த்தைகளை பேசுவதையே பெருமையாக நினைத்துக்கொண்டு பேசுவார்கள்,
அதனையும் பெருமையாக வேறு சட்டை காலரை தூக்கி ‘எப்படி பேசிட்டோம் பார்த்தியா, நாமெல்லாம் யாரு?’ என பெருமையாக கூறுவார்கள்,
அதனை கேட்டுகொண்டு தலைவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள், தொண்டர்கள் குஷியாகி விசிலடிப்பார்கள்.
செவ்வாய், 14 மார்ச், 2023
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்னவெனில்...'' - ரகசியத்தை உடைத்த உதயநிதி ஸ்டாலின்
Hindu Tamil : ''நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்னவெனில்...'' - ரகசியத்தை உடைத்த உதயநிதி ஸ்டாலின்
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியினை வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அரியலூர்: அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்துக்கு அனிதா பெயர் சூட்டப்படுவதால் கல்வி பயில வரும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு இருந்த எதிர்ப்பு குறித்து அறிந்து கொள்வார்கள் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது
மாலை மலர் : திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தடையை மீறி சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
The Elephant Whisperers: “ஆஸ்கர் விருது பெற்ற முதல் தமிழ் படம் ... யானை ரகு கூட இல்லையே!” – நெகிழும் பொம்மன்-பெள்ளி
முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.
"ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
திங்கள், 13 மார்ச், 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அசுர சாதனை! நாட்டின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி...
![]() |
Manoharan Ashok : நாட்டைக் காப்பாற்றி விட்டாரா ரணில் ?
இவ்வளவு பயங்கரமான முறையில் திவாலாகிப் போன நாட்டை ஐந்து மாதங்களுக்குள் மீட்டெடுத்த தலைவரோ, அவ்வாறு மீண்டுவிட்ட நாடுகளோ உலகில் இல்லை. நாடு முழுமையாக இன்னும் மீட்கப்பட்டில்லை, ஆனால் ஆபத்தான கட்டங்களை நிச்சயமாக நாடு கடந்துவிட்டது. ICU வுக்குள் இருந்த நோயாளி தற்போது சாதாரண Ward க்கு மாற்றப் பட்டிருப்பதைப் போலத்தான் நாடு தற்போது உள்ளது.
கிரேக்கம் திவாலாகி பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன. அந்த நாடு ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருந்தாலும் பொருளாதார ரீதியாக இன்னும் மீளவில்லை.
இலங்கை மக்களைப் போலவே, வெனிசூலாவின் மக்களதும் பொய்ப் பகட்டின், கிறுக்குத்தனத்தின் காரணமாக, ஹியூகோ சாவேஸ் வெனிசுலாவின் ஜனாதிபதியாகி, நாட்டை முற்றாக அழித்து, இன்று வெனிசுலா மக்கள் வேறு நாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள், மற்றொரு பகுதி மக்கள் பசியால் வாடுகிறார்கள். பணவீக்க விகிதம் 300% வரை உயர்ந்துள்ளது.
CM சார் தேங்க்ஸ் .. பிரஷாந்த் கிஷோர் சொன்னதுமே.. பின்னாடியே வந்துட்டாரு ராஜீவ் காந்தி.. அடடே சீமான்
சென்னை: சீமான் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியதையடுத்து, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. இதற்கு பிரசாந்த் கிஷோர் முதல்வருக்கு நன்றி சொல்லியுள்ள நிலையில், திமுக தரப்பு அதை வரவேற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார்.. அதில் வடமாநில தொழிலாளர்களை சீமான் மிரட்டுவதாக சர்ச்சைகள் கிளம்பின.
இந்த விஷயத்தில் திடீரென என்ட்ரி தந்தார் பிரசாந்த் கிஷோர்.. சீமான் பேசிய அந்த வீடியோவை, ட்விட்டரில் வெளியிட்டு, அதை சுட்டிக்காட்டியும் இருந்தார்.
பட்டாசு வெடித்ததால் அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்தது! அமைச்சர் கே கே ஆர் ஆர் எஸ்
![]() |
நக்கீரன் : பட்டாசு வெடித்தால் கார் கண்ணாடி உடையுமா என்று கேட்டால் “அதான் அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்துவிட்டதே...” என்று டென்ஷனாகச் சொல்கிறார்கள் ஆளும்கட்சியினர்.
விருதுநகர் – சூலக்கரையில் பகுதி நேர நியாய விலைக் கடையைத் திறந்து வைக்க வந்திருந்தார் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். 30 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் நியாய விலைக்கடை கிடையாது.
2 கி.மீ தள்ளியிருந்த ரேசன் கடையில்தான் மக்கள் பொருட்கள் வாங்கி வந்துள்ளனர்.
நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது தெலுங்கு இசைமையப்பாளர் கீரவாணியின் இசையில்
மாலை மலர் : அகாடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் ஆஸ்கர் விருதாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான (Writing (Original Screenplay)) ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் 'எவ்ரி திங்க் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்' (Everything Everywhere All at Once) திரைப்படத்திற்காக எழுத்தாளர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர்.
13 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களை மாற்ற முடிவு- மல்லிகார்ஜுன கார்கே அதிரடி திட்டம்
மாலைமலர் : புதுடெல்லி: பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே இதற்காக பல புதிய திட்டங்களையும் வியூகங்களையும் அமல்படுத்த ஆலோசித்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக குஜராத், மராட்டியம், டெல்லி, உத்தரகாண்ட், நாகாலாந்து, திரிபுரா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட 13 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்ற திட்டமிட்டுள்ளார்.
புதிய தலைவர்களின் கீழ் மாநிலங்களில் புதிய நிர்வாக குழுவை ஏற்படுத்தவும் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து வருகிறார்.
புதிய நிர்வாக குழுவில் அனைத்து தரப்பினரும் இடம் பெறச்செய்ய வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் காட்டுகிறார்.
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வீடியோ.. நடிகர்களை வைத்து வீடியோ எடுத்த YouTuber மேல் வழக்கு !
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.
ஞாயிறு, 12 மார்ச், 2023
அங்கீகரிக்க முடியாது'.. தன்பாலின திருமணத்திற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு.. உச்ச நீதிமன்றத்தில் கறார்!
tamil.oneindia.com - 'Halley Karthik : தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது
டெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் இந்து திருமண சட்டம், வெளிநாட்டு திருமண சட்டம் என சில திருமண சட்டங்கள் இருந்தாலும், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் குறித்து எவ்வித உறுதியான சட்டமும் தற்போதுவரை கிடையாது. திருணம் கூட இரண்டாவதுதான், ஆனால் அதற்கு முன்னாள் தன்பாலின சேர்க்கை என்பதையே இந்திய சமூகம் தொடக்கத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த 2018ம் ஆண்டுதான் இதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியது.
The central government has filed an affidavit in the Supreme Court regarding same-sex marriage
பிரதமர் மோடி : எனக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது!
மாலை மலர் : பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகாவுக்கு வந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரூ.8 ஆயிரத்து 480 கோடியில் தேசிய நெடுஞ்சாலை எண்.275ல் பெங்களூரு- மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலையை மண்டியா மாவட்டம், மத்தூரில் இருந்து பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து மைசூரு- குசால்நகர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் தார்வாருக்கு சென்றார். அங்கு நடைபெறும் விழாவில் தார்வார் ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பா.ஜ.க.விடம் ஒருபோதும் பணிய மாட்டேன் - லாலு பிரசாத் யாதவ் தாக்கு
மாலை மலர் : பாட்னா:காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார்.
அப்போது பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சனி, 11 மார்ச், 2023
ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பான் பெண் மீது டெல்லி இளைஞர்கள் பாலியல் அத்துமீறல்
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 8ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மக்கள் மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டங்களில் போது இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் பகுதியில் அப்பகுதி மக்கள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் மீது வண்ணம் பூசுவதுபோல் இளைஞர்கள் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ நேற்று இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வைகோ திருமா சந்திப்பு! மக்கள் நலக்கூட்டணி 2.0 .... ?
நக்கீரன் : அண்மையில் தொலைக்காட்சி நேர்காணலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.
இக்கேள்விகளுக்கு திருமா பதில் அளித்தது சர்ச்சையாக்கப்பட்டது.
திருமாவளவனின் நேர்காணல் குறித்து மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு. ராசேந்திரன் காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
அரசு பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவன் கொலை: 3 மாணவர்கள் கைது! திருச்சி மாவட்டம்
மாலை மலர் : திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கோபி மகன் மவுலீஸ்வரன் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருந்தார்.
நேற்று மதியம் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். சில மாணவர்கள் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் மவுலீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
தொடர்ந்து அவர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து மவுலீஸ்வரனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அண்ணாமலை மீது வழக்கு: திமுக அரசைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மாலை மலர் : சென்னை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ மற்றும் மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், திருப்பதி நாராயணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
வெள்ளி, 10 மார்ச், 2023
காஷ்மீர் அமெரிக்க new york times தலையங்கம்! இந்தியா கடும் கண்டனம்
புதுடில்லி: காஷ்மீர் பற்றிய தகவல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பொய் மற்றும் கற்பனையான தகவல்களையும், இந்தியா குறித்து பொய் செய்திகளையும் பரப்பி வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவை சேர்ந்த நாளிதழ், இந்தியா குறித்து செய்தி வெளியிடும் போது நடுநிலையை கடைபிடிப்பதை நீண்ட நாட்களுக்கு முன்னரே நிறுத்திவிட்டது.
அந்த நாளிதழ், காஷ்மீர் குறித்த செய்தியை தவறான மற்றும் கற்பனையாக வெளியிட்டு உள்ளதுடன், இந்தியா மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகள் குறித்து பொய் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வெளியிட்டு உள்ளது.
சீமானை ஏன் கைது செய்யவில்லை? பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி!
மின்னம்பலம் - christopher : சீமானை ஏன் கைது செய்யவில்லை? பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி!
வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழ்நாடு அரசுக்கு பிரஷாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடஇந்திய தொழிலாளர்கள் இந்தியில் பேசியதற்காக தூக்கிலிடப்பட்டதாகவும், கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கடந்த வாரம் இணையத்தில் பரப்பப்பட்ட போலி வீடியோக்கள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இருமாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் உயரதிகாரிகள் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.
6 முறை இதய துடிப்பு நின்ற ஆசிரியர் உயிர் பிழைத்த அதிசயம் .. சென்னை அரசு மருத்துவ மனையில்
![]() |
மாலை மலர் : சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜேஷ் (38). இவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.
ஆசிரியர் பணி செய்து வந்த ராஜேசுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை சைதாப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
கொந்தளித்த திருமா! மறுபுறம் தூதுவிடும் செல்லூர் ராஜூ! நோட் பண்ணுங்க
tamil.oneindia.com - Vigneshkumar : திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. திருமாவளவனும் சில நாட்களுக்கு முன்பு, பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இப்போது திமுக தலைமையிலான கூட்டணி வலுவாகவே உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் உருவான இந்தக் கூட்டணி அதன் பிறகு பல்வேறு தேர்தல்களை இணைந்தே சந்தித்து வருகிறது.
வியாழன், 9 மார்ச், 2023
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு
BBC News தமிழ் : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பி வைத்த நிலையில், அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம். இரண்டாவது முறையாக மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தெரிவித்தாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் இனி தேசிய கட்சி அல்ல... கேசிஆர் மகள் கவிதா சொன்ன 'டீம் பிளேயர்' அட்வைஸ்
மாலை மலர் :புதுடெல்ல மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்தக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ரஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கவிதா டெல்லி வந்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி இனி தேசிய கட்சி அல்ல என்றும், அது எப்போது தன் ஆணவத்தை விட்டுவிட்டு யதார்த்தத்தை எதிர்கொள்ளுமோ? என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் ஒரு அணியின் வீரராக (டீம் பிளேயர்) இருக்க வேண்டும், பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால் மாநில கட்சிகளுடன் கூட்டணி சேரவேண்டும், என்றும் கவிதா தெரிவித்தார்.
கொளத்தூரில் பன்னோக்கு மருத்துவமனை : அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்முதல்வர்
minnambalam.com - christopher : கொளத்தூரில் பன்னோக்கு மருத்துவமனை : அடிக்கல் நாட்டிய முதல்வர்
கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 8) அடிக்கல் நாட்டினார்.
சென்னை கொளத்தூரில் பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம், இஸ்திரி பெட்டி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நடிகை கஸ்தூரி சர்ச்சை ட்வீட்.! : திமுக எம்பி அப்துல்லா ஒரு பெண்ணா.?-
tamil.samayam.com : போனமுறை கலைஞரை இழிவுபடுத்திய நடிகை கஸ்தூரி, இம்முறை திமுக எம்பி அப்துல்லாவிற்கு மகளிர் வாழ்த்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய ட்வீட்களுக்கு பெயர் பெற்றவர் நடிகை கஸ்தூரி.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி, நாடு முழுவதும் பேசு பொருளானது.
குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவதாகவும், எரிக்கப்படுவதாகவும் வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமிழக அதிகாரிகளுடன் இது குறித்து பேசினார்.
தொடர்ந்து பீகார் அதிகாரிகள் குழு தமிழகம் வந்தது.