சனி, 12 நவம்பர், 2016

கனிமொழி MP : மீதேன் திட்டம் ரத்து செய்யப்படுவது ஆறுதலை தருகிறது

"மீத்தேன் திட்டம் ரத்து: மத்திய அரசின் நடவடிக்கை ஆறுதலை தருகிறது - இது குறித்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
“காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்திருப்பதாக வெளியான தகவல் மகிழ்ச்சியைத் தருகிறது. மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன். இத்திட்டத்தின் விளைவாக காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் வலியுறுத்தி மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும் என்று குரல் கொடுத்துள்ளேன். மேலும் டெல்டா விவசாயிகளின் வலிமையான போராட்டமும் மத்திய அரசின் இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய காவிரி தண்ணீரை தராமல் தொடர்ந்து முரண்டு பிடித்து, அதன் மூலம் டெல்டா விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மீத்தேன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது ஆறுதலை தருகிறது. மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராடிய விவசாய அமைப்புப் பிரதிநிதிகளை டெல்லி அழைத்துச் சென்று பெட்ரோலிய மந்திரியை சந்திக்க வைத்து மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும் என்று போராடியவர் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: