நடிகர் கார்த்தி ஆரம்பம் முதலே வெற்றிப் படங்களை கொடுத்து வந்ததால், ஷங்கர் தயாள் இயக்கத்தில் அரசியல் சார்ந்து எடுக்கப்பட்ட சகுனி படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் டிரெய்லர்களும், போஸ்டர்களும் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கின அஜித் நடித்த ’பில்லா-2’ படத்துடன் ’சகுனி’ போட்டி என்ற அளவிற்கு பேசப்பட்டு பின்பு தனியே களமிறங்கிய சகுனி திரையில் களமாடவில்லை.
தனது பாரம்பரியமான பரம்பரை வீட்டை பாலம் அமைப்பதற்காக இடிக்காமல் இருக்க, தேர்தல் நேரத்தில் தனக்கு உறுதியளித்த அரசியல்வாதிகளை நம்பி சென்னை வரும் கார்த்தி சந்தானத்தை சந்திக்கிறார்.
மதுரை ஆதீன மட வளாகத்தில் புனித நீரைக்
குடித்து விட்டு மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்டோரும்,
ஆண்களும், பெண்களும் டான்ஸ் ஆடியது தொடர்பான புகாரில் முகாந்திரம் உள்ளது.
எனவே இதுகுறித்து உடனே போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,
இல்லாவிட்டால் நானே வழக்குப் பதிவு செய்வேன் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை
நீதிபதி செல்வம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்து மக்கள் கட்சி சார்பில் சோலைக்கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், மதுரை ஆதீனம் என்னை மடத்திற்கு அழைத்திருந்தார். பிறகு அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் என்னை கலந்து கொள்ளக் கூறினார்கள்.
அப்போது புனித நீர் என்ற பெயரில் போதை கலந்த பானத்தை அங்கிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள், எனக்கும் கொடுத்தார்கள். அடுத்து நித்தியானந்தாவும், ஆதீனமும் மூன்றுக்கும் மேற்பட்ட புலித்தோலை கீழே போட்டு அதில் அமர்ந்திருந்தனர். அங்கு யானைத் தந்தங்களும் இருந்தன.
அதன் பிறகு நித்தியானந்தா, மதுரை ஆதீனம், ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மற்றும் ஆண்களும், பெண்களும் போதையில் டான்ஸ் ஆடினர். கேட்டால் ஆனந்த நடனம் என்றனர்.