சனி, 15 ஜூலை, 2017

நீட் .. தமிழக மாணவர்களை வீழ்த்திய துரோக வழக்கறிஞர்கள்.. ராமன் அய்யங்கார் ... நளாயினி (பாஜாக)

Sivasankaran Saravanan : வதந்திகள் எந்தளவுக்கு றெக்கை கட்டி பறப்பவை என்பதற்கும் மையப்பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்ப நைச்சியமாக பரப்பப்படுகின்றன என்பதற்கும் இதுவொரு உதாரணம். தமிழக அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்றத்திலே தடைபெற்ற வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் ராமன் அஇஅதிமுகவை சேர்ந்தவர் என்ற அவதூறு திட்டமிட்டு பரப்பப்படுகிறது . திரு. ராமன் அவர்கள் ஐயங்கார் சமூகத்தை சேர்ந்த சீனியர் வழக்கறிஞர் . சீனியர் வழக்கறிஞர்கள் கட்சி சார்பின்றி அரசு வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கும் நடைமுறை உள்ளது. அதன்படி ராமன் திமுக, அதிமுக ஆகிய இரண்டு ஆட்சிகளின் போதும் தமிழக அரசு வழக்கறிஞராக பணி செய்துள்ளார். யார் மீதுள்ள கோபத்தை திசைதிருப்புவதற்காக இதைச்செய்கிறார்கள் என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்..!

பாபா ராம்தேவ்.. அடுத்த.. டாட்டா .. பிர்லா .. அம்பானி

India Inc, be afraid! Baba Ramdev could be the next Tata or Ambani
மின்னம்பலம்:  யோகா குரு பாபா ராம்தேவ் தனியார் பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கியுள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் அவரைப் பார்த்து அச்சமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். பரக்ராம் சுரக்ஷா என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அவரது பதஞ்சலி நிறுவனம் இந்திய ஆயுர்வேத மருத்துவ சந்தையில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதுகாப்பு துறையில் அவர் கால் பதித்துள்ளது பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடங்கிய 10 ஆண்டுகளில் அவரின் பதஞ்சலி நிறுவனம் நுகர்வோர் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்திய அளவில் அவரது பதஞ்சலி நிறுவன பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த பிராண்டுகளில் அவரது பதஞ்சலி நிறுவனம் 4வது இடத்தில் உள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. எஸ்.பி.ஐ. ஏர்டெல், ரிலையன்ஸ், பிலிப்கார்ட் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் பாதுகாப்பு துறையை அவர் தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவின் முதல் சோலார் ரயில் சேவை தொடக்கம்!

இந்தியாவின் முதல் சோலார் ரயில் சேவை தொடக்கம்!
மின்னம்பலம்: சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் சோலார் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியில் இன்று (ஜூலை 15) தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க எரிபொருள்களின் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. டீசல், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களின் உபயோகத்தைக் குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களின் தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது. இதுபோல், அதிக பண செலவு, காற்று மாசுபடுதல் ஆகியவற்றைக் குறைக்கவும், டீசல் மற்றும் மின்சார பயன்பாட்டை பெருமளவில் குறைக்கும் வகையிலும் சோலார் ரயில் பெட்டிகள் கொண்ட சோலார் ரயிலை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
விளக்குகள், மின்விசிறிகள், தகவல் காட்சிப்படுத்தப்படும் அமைப்பு ஆகியவை அனைத்தும் முழுக்க முழுக்க ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேணல்களில் இருந்து கிடைக்கும் ஆற்றல் கொண்டு இயக்கப்படும்.

இந்திரா காந்தியின் படுக்கையறையை எட்டிப்பார்க்கும் நோய்மனநிலை!

thetimestamil : சுகந்தி நாச்சியாள்: ஒரு பெண் ஆணுடன் அந்தரங்கமாக இருந்ததை ஒரு புத்தகமாக, கட்டுரையாக எழுதுவது குரூர சிந்தனையின் வெளிப்பாடே. நான் எத்தனை பெரிய அழகியை காதலித்தேன் தெரியுமா? நான் எத்தனை பெரிய அழகியுடன் செக்ஸ் வைத்திருந்தேன் தெரியுமா? என சுயதம்பட்டம் அடித்து, அதன் மூலம் தான் ஒரு காதல் மன்னன் என்பதை நிரூபிக்கவே இந்த மாதிரியான மன குரூரங்களை எழுத்தில் வடிப்பார்கள்.
அதில் அந்த பெண் கற்பற்றவர் என்பதை உலகத்துக்கு சொல்லி அதை ஊரறியச் செய்துவிட்டோம் என்கிற பச்சை துரோகம் தான் அதில் இருக்கும். பனிரெண்டு வருடங்களாக ஒரு பெண்ணுடன் காதல் கொண்டேன்; படுக்கையைப் பகிர்ந்தேன்; காமத்தின் எல்லையைக் கண்டேன் என பிதற்றுபவர்கள், அந்த பெண் பதவியில் இருந்த காலத்தில் அதை பகிரங்கமாக எழுத முற்பட மாட்டார்கள். சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அதில் அவர்கள் இருவரும் சம்பந்தபப்டட் கதை என்பதால் அவர்கள் இருவருக்கு மட்டுமெ அதில் எததனை சதவீதம் உண்மை இருந்தது, எத்தனை சதவீதம் பொய் இருந்தது என்பது தெரியும்.

அய்யாக்கண்ணு மீண்டும் டெல்லியில் போராட்டம் ! ஏமாற்றியது மோடி, எடப்பாடி அரசுகள்.. ரயில் நிலையத்தில் பேட்டி!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை திருச்சியில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூர் வந்தனர். பின்னர் அவர்கள் சென்டிரலில் இருந்து கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். நாளை காலை அவர்கள் டெல்லி சென்றடைகின்றனர். பயணத்தின்போது நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அய்யாக்கண்ணு, நாளை காலை டெல்லி சென்றடைவோம். நாளை காலை முதல் போராட்டத்தை துவங்குவோம். தமிழகத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இது சம்பந்தமாக பிரமரை சந்தித்து முறையிட எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தினோம்.

ட்ராபிக் ராமசாமி தற்கொலை போராட்ட முயற்சி! முதல்வர் அமைச்சர்களை கைது செய்ய கோரிக்கை!

நக்கீரன் :டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல்! முதல்வர், அமைச்சர்களை கைது செய்யக்கோரி தற்கொலை கடிதம்!
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி 3 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் தொடர்ந்து சமாதானப்படுத்தும் முயற்சியில் இருந்தனர். பின்னர் வலுக்கட்டாயமாக மாடியில் இருந்து கீழே இறக்கினர். கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக கடந்த 30-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாளை காலைக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், முதல்வர் பதவி விலகவும் வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை பாரிமுனையில் இன்று மாலையில் திடீரென தனது வீடு மற்றும் அலுவலகம் உள்ள இடத்தின் மூன்று மாடி கட்டிடத்தின் மீது ஏறி நின்று அக்கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

3,500 ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்

புதுடில்லி: ஜூன் மாதத்தில் மட்டும், 3.500 குழந்தை ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதளங்களின் அச்சுறுத்தலைப் போக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பிங்கி ஆனந்த் கூறியதாவது: கடந்த மாதத்தில் மட்டும், 3,500 குழந்தை ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், குழந்தைகள் ஆபாச தளங்கள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், ஜாமர் கருவிகளைப் பொருத்தும்படி, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி பஸ்களில், ஜாமர்களைப் பொருத்துவது சாத்தியமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

BBC :மருத்துவ படிப்பில் 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசாணை நீக்கம்!

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கையின்போது, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மாநில அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.<>இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வை நடத்தி, அதில் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்கவேண்டுமென மத்திய அரசு கூறியது.
மத்திய அரசின் இந்த விதியை எதிர்த்தும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி சேர்க்கையை நடத்தவும் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் "தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி சேர்க்கை மசோதா" ஒன்றை நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில், நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் இடம்பெறவில்லை.

சசிகலாவுக்கு சலுகை? தொலைகாட்சிகளில் டி ஐ ஜி ரூபா பெட்டி கொடுப்பது உள்நோக்கத்தில்?

ரூபாவுக்கு எச்சரிக்கை!மின்னம்பலம் : ‘சசிகலாவுக்குச் சிறையில் சிறப்பு சலுகைகள் தரப்படுவதாக டி.ஐ.ஜி. ரூபா, தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்தது தவறாகும். போலீஸ் அதிகாரிகளுக்கென சில விதிமுறைகள் உள்ளன. எனவே, இதுகுறித்து விளக்கமளிக்கும்படி டி.ஐ.ஜி. ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கர்நாடகச் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாகப் பொறுப்பேற்ற ரூபா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு மேற்கொண்டு டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர். அதில், சிறையில் சசிகலாவுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார். மேலும், இதற்கு சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால், இதற்கு சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க பாஜகவினர் தூண்டுதலில் இவர் இப்படி பேசுவதாக சந்தேகம் எழுந்துள்ளது

சேலம் ...வீதி விபத்தில் நீதிபதி நாகலட்சுமி ஜோதி மரணம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் சப்- கோர்ட் நீதிபதியாக இருப்பவர் நாகலட்சுமி ஜோதி. இவர் வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு சென்று விட்டு ஆத்தூர் நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரது கனவரும் வழக்குரைஞருமான குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இன்று மாலை, 5.00 - மணிக்கு, மல்லியக்கரை அருகில் உள்ள மோட்டூர் அருகில் இருந்த சாலை வளைவில் கார் வந்தபோது, எதிரில் வந்த ஒருவரின் மோட்டர் சைக்கிள் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்துள்ளது. இதில், காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட நாகலட்சுமி ஜோதி வெளியில் இருந்த கான்கிரிட் சுவரில் மோதியதில் தலை நசுங்கி பலியானார். சீட் பெல்ட் அணிந்திகுந்த காரணத்தால் அவரது கணவர் குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் நக்கீரன்

லண்டன் பாணி பூரிகள் கூறும் செய்தி .. ‘நேற்று இன்று நாளை’. Case study


Don Ashok :லண்டனில் நடந்த ஏ.ஆர்.ரெஹ்மானின் கச்சேரியும் அதன்பின்பான
வட இந்தியர்களின் புறக்கணிப்பும், எதிர்வினையும் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தரும் அருமையான ‘case study’.
அந்த நிகழ்ச்சியின் பெயர், ‘நேற்று இன்று நாளை’. அதாவது நிகழ்ச்சிக்கு பெயரே தமிழில்தான் சூட்டியிருக்கிறார் ரெஹ்மான். அந்த நிகழ்ச்சிக்கு சென்று இந்தி பாடல்களை எதிர்பார்ப்பது மிலிட்டரி ஹோட்டலுக்கு சென்று சுத்த சைவத்தை எதிர்பார்ப்பதைப் போன்ற செயல். அப்படியும் கூட 28 பாடல்களில் 16 பாடல்களை இந்தியிலும், வெறும் 12 பாடல்களை மட்டுமே தமிழிலும் பாடியிருக்கிறார் ரெஹ்மான். (இந்த விஷயத்தில் ரெஹ்மான் மேல் எனக்கு வருத்தம்தான்.) அதாவது அங்கு கூடியிருந்த தமிழர்கள் 16 இந்திப் பாடல்களையும், 12 தமிழ் பாடல்களையும் ஒருசேர ரசித்திருக்கிறார்கள். ஆனால் அங்கு கூடியிருந்த இந்தி எருமைகளால் (எருமைகள் மன்னிக்க) 12 தமிழ் பாடல்களைக் கூட பொறுமையாக கேட்க முடியவில்லை. பாதியில் எழுந்து போயிருக்கிறார்கள். இந்தியாவுக்கு ஆஸ்கர் வாங்கித்தந்த ரெஹ்மானைப் பற்றி டிவிட்டரில் ஒப்பாரி வைக்கிறார்கள். நிற்க.
ஒருமுறை ’ரசிகா ரசிகா’ என்ற ரெஹ்மானின் பாடலை நான் கேட்டுக் கொண்டிருந்தபோது அறைக்குள் வந்த நண்பன், “மச்சி இந்தப் பாட்டை இந்தில கேளு சூப்பரா இருக்கும்,” என்றான். அவனுக்கும் இந்தி தெரியாது, எனக்கும் தெரியாது. ஆனால் நம் ஆட்களுக்கு இயல்பாகவே அப்படி ஒரு புத்தி. இது ஒருமுறை அல்ல, பலமுறை நடந்திருக்கிறது. உயிரே பாடல்களுக்கு வைரமுத்து அற்புதமாக வரிகளை எழுதியிருப்பார். இன்னும் சொல்லப்போனால் மணிரத்னத்தின் படங்கள் எல்லாவற்றுக்குமே முதலில் தமிழில் வைரமுத்துவினால் வரிகள் எழுதப்பட்டு பின்புதான் இந்திக்கு செல்லும். ஆனால் நம் ஆட்கள் எல்லோரும் ‘இந்தில சூப்பரா இருக்கும், இந்தில சூப்பரா இருக்கும்,” என தமிழ் பாடல்களை இந்தியில் கேட்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் 16 பாடல்கள் இந்தியில் பாடப்பட்டும், தமிழில் பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில் வெறும் 12 தமிழ் பாடல்கள் பாடப்படுவதையே இந்தி வெறியர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

லண்டன் .. ரஹ்மான் ..(12 தமிழ் - 16 ஹிந்தி) டிக்கெட் காசை திருப்பி கேட்ட ஹிந்தி ரசிகர்கள் ... தமிழ்பாடல்களும் பாடிவிட்டாராம்!

ட்வீட்டாரில் பொங்கிய எழுந்த திராவிட குரல்கள் ... சில  உதாரணங்கள் :
Abhi Nandan @Abhinandan248 This is how v feel when Hindi is imposed or Hindi songs r in list in Yuva Dasara Mysuru or Hindi is heard in flight announcement 

ಅರುಣ್ ಜಾವಗಲ್Arun J @ajavgal We must demand refund of tax paid to Indian Govt as we dont get service in my Langauge 

#ARRahman we hear modi speaking in Hindi always, what refund Hindians gonna give???

 ARRahman SINGS a lot of Tamil songs and suddenly all HINDI folks erupt, lol guys that's the same feel when u want ur HINDI all over south.

Garga Chatterjee ✔ @GargaC Hindis want concert ticket refund coz #ARRahman sang Tamil songs. NonHindi states be refunded for taxes that subsidize Hindi states frm 1947

இன்று உலகில் வாழும் முக்கிய இசைக் கலைஞர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். நேற்று வெம்ப்லியில் (பிரிட்டன்) நடைபெற்ற அவரது "நேற்று இன்று நாளை" எனும் தலைப்பிலான இசை நிகழ்ச்சியில் பாடல்கள் பலவும் தமிழில் உள்ளன எனக் கூறி வட இந்திய ரசிகர்கள் வெளி நடப்புச் செய்துள்ளதாக வந்துள்ள செய்தி வேதனை அளிக்கிறது.
இந்தித் திரை இசையினையும், புகழ் மிக்க திரை இசை அமைப்பாளர்களையும், திரைப் பாடகர்களையும் எத்தகைய காழ்ப்புணர்வும் இல்லாமல், பாடல்களின் பொருள் புரியாமலும் எத்தனையோ பத்தாண்டுகளாக ரசித்து வந்துள்ளோம். முகேஷ், மன்னாடே, கிஷோர் குமார், எஸ்.டி.பர்மன், ஆர்.டி பர்மன், லக்ஷ்மிகாந்த் ப்யாரேலால். கீதா தத், லதா, சுமன் கல்யாண்பூர், சலீல் சவ்த்ரி.... என எத்தனை இசைக் கலைஞர்களை நாங்கள் கொண்டாடி வந்துள்ளோம்.
ரஹ்மான் இன்று உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் இசை மேதை.
முட்டாள்கள்..
இசைக்கு ஏது மொழி, இனம், மதம்..
இவர்கள் அங்கு நிதி சேர்த்து இங்குள்ள மதவாதக் கொலைஞர்களுக்கு ஆதரவளிக்க மட்டுமே தகுதியான டேஷ் பக்தர்கள்...
~ அ. மார்க்ஸ்

NRI க்களின் மூலதனத்தைக் கூட மோடியால் ஈர்க்க முடியவில்லை

மூன்றாண்டுகளில் மோடி முக்கி முனகி போட்டது எல்லாம்
கூமுட்டைகளே...! மோடி கொடுக்கும் உத்தரவாதத்தை நம்பி இந்தியாவில் முதலீடு செய்ய இதுவரை யாருக்கும் தைரியம் வரவில்லை.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் மூலதனத்தைக் கூட மோடியால் ஈர்க்க முடியவில்லை . பண மதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி வரி விதிப்பின் மூலம் மோடி முடங்கியது உள்நாட்டு பொருளாதாரத்தை மட்டுமே..!
ஊழல் கட்சிகளுக்கு சட்ட பாதுகாப்பு கொடுத்து, உழல்வாதிகளை தட்டிக்கொடுத்து ஆட்சி நடத்தும் மோடியால் ஊழலையும் ஒன்றும் செய்ய முடியாது. எத்தனையோ உருப்படாத திட்டங்களை கொடுவந்த மோடியால் லோக்பால் சட்டத்தை கொண்டு வர முடிந்ததா..?
60 ஆண்டுகால காங்கிரசின் அடையாளங்களை அழிக்கத்தான் மோடி நாடு நாடாய் அலைகிறார். காவி நிறத்தை இந்தியாவிற்கு போர்த்தி காந்தியை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.ன் செயல் திட்டம்.
அம்பேத்கார் பெயரில் உள்ள வாக்கு வங்கிக்காக அவரையும் உள்வாங்கத் தயாராகும் காவிகள் அவர் வாழ்ந்த போது அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியவர்கள் என்பதை மக்களிடம் இருந்து மறைக்கப் பார்க்கின்றனர்..!
காவிப் பொறுக்கிகளுக்கு வேண்டுமானால் மோடியின் கிறுக்குத் தனங்கள் ரசிக்கும் படி இருக்கலாம். நாட்டின் நலன் நாடுவோர் மோடியை ரசிப்பதற்கில்லை...!
- தமிழரிமா வனத்தையன்

வெள்ளி, 14 ஜூலை, 2017

RSS இன் கோரப்பிடியில் மக்கள் ! அமர்த்தியா சென் ஆவணப்படத்திற்கு தடை போடும் மத்திய அரசு !

தமக்கு எதிராக ஒரு சிறிய கருத்தைக் கூட விட்டு வைக்காமல், அதனை முளையிலேயே கிள்ளி எரிய தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வானளாவிய அதிகாரத்தையும் இந்தக் கும்பல் தமது இந்து ராட்டிரக் கனவை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டுள்ளது
அமர்த்தியா சென் பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியா சென் குறித்து ஒரு ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார், கொல்கத்தாவைச் சேர்ந்த சுமன் கோஷ். இந்த ஆவணப்படம், இரண்டு பகுதிகளாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு முதல் பகுதிக்கான படப்பிடிப்பும், 2017-ம் ஆண்டில் இரண்டாம் பகுதிக்கான படப்பிடிப்பும் நடைபெற்றது.
இந்த ஆவணப்படத்தில், பல்வேறு சம்பவங்கள் குறித்த தனது கருத்தை அமர்த்தியா சென் உட்பட பலரும் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக 2002 குஜராத் கலவரம், பசுப் பாதுகாவலர்களின் அத்துமீறல் மற்றும் ஹிந்துத்துவ இந்தியா குறித்தும் அவர்கள் பேசியிருக்கின்றனர். இந்த ஆவணப்படத்தை பொதுத் திரையிடலுக்காக அனுமதி கேட்டு கொல்கத்தாவில் உள்ள ‘மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின்’ முன் கடந்த ஜூலை 11 அன்று திரையிடப்பட்டது.

2016-க்கும் பிப்ரவரி 2017-க்கும் இடையில் 1,982 விவசாயிகள் தற்கொலை.. பாஜகவின் மத்திய பிரதேசத்தில் வளர்ச்சி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 2016-க்கும் பிப்ரவரி 2017-க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் 1,982 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
றட்சியால் விளைச்சலை இழந்து நட்டமடைந்து போனதால், கடன் தள்ளுபடிக் கேட்டுப் போராடுகிறார்கள் தமிழக விவசாயிகள். அதிகமாக விளைந்து, அதற்குரிய விலை கிடைக்காமல் நட்டமடைந்து நிற்பதால், கடன் தள்ளுபடி கேட்டுப் போராடுகிறார்கள் வடமாநில விவசாயிகள். விசித்திரமான முரண்பாடு!
வறட்சி, நல்ல விளைச்சல் என்ற எதிரும் புதிருமான நிலைமை ஒரு காலவரிசையில் திரும்பத் திரும்ப நிகழ்ந்து விவசாயிகளின் வாழ்க்கையை அலைக்கழித்து வருவதை நாம் பலமுறை பார்த்துவிட்டோம். ஆளுங்கட்சிகளால், அதிகார வர்க்கத்தால் இம்முரண்பாட்டிற்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட யோசனைகள், நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிராக அமைந்து தோற்றுப் போய்விட்டதை, இந்தியாவெங்கும் நடந்துவரும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அம்பலப்படுத்துகின்றன.
மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசால் ஆறு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பஞ்சாப் மாநிலம், பதிண்டா நகரில் ம.பி. முதல்வர் சிவராஜ் சௌஹானின் கொடும்பாவியை எரித்து பஞ்சாப் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

காஞ்சனமாலா ..ஜெர்மனியில் வெள்ளிப்பதக்கம் பெற்றவர் ஜெர்மன் தெருக்களில் பிச்சைக்காரி! ஊழலில் நாறிப்போன அரசு!


Indian para-athlete forced to beg in Berlin after being left without money while competing abroad WINS silver Despite all odds, Kanchanmala and Suyash Jadhav won silver medals Nagpur-based Kanchanmala is completely blind and swims in the S11 category Kanchanmala's outstanding performance means that she has qualified for the World Championships In her own words, Kanchanmala's Europe trip was no less than a 'horror show' Her coach, sent by India's governing body, went missing during the main events and also asked for £90 (Rs 7,462) as participation fee from his own athletes The Paralympic Committee of India has blamed the Sports Authority of India

வினவு : ஜெர்மனில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கண்பார்வையற்ற காஞ்சனமாலா
நூற்றி முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒரே ஒரு வெங்கலப் பதக்கம் கூட கிடைக்கவில்லையே என முக்கி முனகுவது ஏன்? ஜமைக்கா போன்ற குட்டி நாடுகளும், எத்தியோப்பியா போன்ற ஏழை நாடுகளும் பதக்கங்களைக் குவிக்கும் போது இந்தியர்கள் ஏன் திணறுகின்றனர்?
காஞ்சனமாலாவின் கதையை நீங்கள் அறிந்து கொண்டால் மேற்கண்ட கேள்விக்கு விடை கிடைக்கலாம்.
காஞ்சனமாலா நாக்பூரைச் சேர்ந்தவர். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. 2011-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெங்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை. இந்தாண்டு மெக்சிகோவில் நடக்கவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உலக நீச்சல் போட்டியில் தகுதி பெறுவதற்கான இம்மாத முதல் வாரத்தில் ஜெர்மன் சென்றிருக்கிறார்.

ஐ நா சபையில் ஜல்லிகட்டு ஆவணப்படம் திரையிடப்படுகிறது


சென்னை மெரினாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது. இதன் முன்னோட்டம் ஐக்கிய நாடு சபையில் வெளியிடப்படுகிறது. ஜனவரி 5-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சென்னை மெரினாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய போராட்டமாக எழுச்சி பெற்றது. எந்த கட்சி சார்பும், அரசியல் கலப்பும் இல்லாமல் நடந்த இந்த போராட்டம் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது. சந்தோஷ் இயக்கும் இந்த படத்தை அஸ்மிதா புரொடக்‌ஷன் சார்பில் சிங்கப்பூரை சேர்ந்த நிருபாமா, குருசரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வாஷிங்டனை சேர்ந்த ஜெயபால் இணைந்து தயாரித்திருக்கிறார். சு.கா.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். ரமேஷ் விநாயகம் இசை அமைக்கிறார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் பலர் தொழில் நுட்பபணியில் ஈடுபடுகிறார்கள். ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் முதல் போஸ்டர் வாஷிங்டனில் வெளியிடப்பட்டது. ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் முன்னோட்டம் நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் இளைஞர் அணி மாநாட்டில் வெளியிடப்படுகிறது. இதில் இயக்குனர் சந்தோஷ், தயாரிப்பாளர் அனுபமா பங்கேற்கிறார்கள்.  மாலைமலர்

லண்டன் ரஹ்மான் நிகழ்ச்சியில் அதிகம் தமிழ்பாடல்கள் ... ஹிந்தி ரசிகர்கள் எதிர்ப்பு

BBC : லண்டன் வெம்ப்ளியில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 8 ஆம் தேதி
நடைபெற்ற ஏ.ஆர் ரஹ்மானின் ''நேற்று, இன்று, நாளை'' என்ற இசை கச்சேரி, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி பேசும் ட்விட்டர் பயன்பாட்டாளர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. வெம்ப்ளியில் உள்ள தி எஸ் எஸ் இ அரங்கத்தில் ஜூலை 8 ஆம் தேதி மாலை ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரி நடைபெறும் என்றும், அதில் பாடகர்கள் பென்னி தயால், ஜாவேத் அலி, நீத்தி மோகன், ஹரிச்சரன், ஜோனிட்டா காந்தி மற்றும் ரஞ்சித் பரோட் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக உணர்வுக்கு ஆதரவாக ஏ. ஆர். ரஹ்மான் உண்ணாவிரதம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீது 'ஃபத்வா' இச்சூழலில், சமூக ஊடகமான ட்விட்டரில் ஆர் ஸ்மித் என்ற பயன்பாட்டாளர், 'வெம்ப்ளியில் நடைபெற்ற கச்சேரி மிகவும் மோசம். தொடர் கிராஃபிக்குகளால் பெரும் தலைவலி' என்று பதிவிட்டிருந்தார்.

பிகார் ஆட்சிக்கு ஆபத்து? ஐக்கிய ஜனதா தளம் உடைந்து விடும்: நிதிஷ் குமாருக்கு ராம்விலாஸ் பாஸ்வான் அறிவுரை

tamilthehindu.com : நிதிஷ் குமார், லாலு பிரசாத் ஆகிய இருவருக்குமே முன்னர் நெருக்கமாக
இருந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பிஹாரில் மகாக்கூட்டணிக்கு இருக்கும் நெருக்கடியை கருத்தில் கொண்டு ஐக்கிய ஜனதா தளம் உடைந்து போக வாய்ப்புள்ளது, எனவே நிதிஷ் விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு பிரத்யேக பேட்டியளித்த ராம்விலாஸ் பாஸ்வான், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய ஐக்கிய ஜனதா தளம் 4 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது, ஆனால் ஆட்சிக்கு ஆதரவளிப்போர் நிதிஷ் குமாரை விட யாதவ்வுக்கு ஆதரவாக உள்ளனர் என்றார். “இந்த நிலைமை 3-4 மாதங்களுக்கு நீடித்தால் பெரிதாகி விடும். எனவே இதனை வளரவிடாமல் நிதிஷ் குமார் தடுக்க வேண்டும். ராஷ்டிரிய ஜனதா தளம் ஐக்கிய ஜனதாதளத்தை உடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ராஷ்டிரிய ஜனதாதளத்துக்கு இன்னமும் வெகுஜன ஆதரவு அடிப்படை உள்ளது.

அமெரிக்கா : வெளிநாட்டு மாணவர்களுக்கு நிபந்தனை!

அமெரிக்கா : வெளிநாட்டு மாணவர்களுக்கு நிபந்தனை!
அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் அமெரிக்க கல்வித் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு பதிவு செய்தது முதல் அந்தப் படிப்பை முடிக்கும் காலம் வரை ஒரு முறை விண்ணப்பித்தால் போதுமானது. அவர்கள் தங்கி படிக்கும் காலம் வரை எஃப்-1 விசா வழங்கப்படும்.
இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்கி படிப்பதற்கு, நாட்டின் புதிய குடியேற்றக் கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய படிப்புக்கான பதிவை மறு விண்ணப்பம் செய்து புதுப்பிக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு ஒவ்வொரு முறையும் 200 அமெரிக்க டாலர்களைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து உள்ளது. 2016 ஆம் ஆண்டில் 1,6,000 இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்லூரிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2 ஆண்டுக்கு முன்பு சுமார் 1 லட்சமாக இருந்தது.

மருத்துவ படிப்பு கனவை சிதைத்த நீட் தேர்வு!

Odisha Dalit girl scores 91% in matric exam, but collects sal seeds instead of studying in college
மின்னம்பலம் : மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்குத் தமிழக அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கி அரசு பிறப்பித்த ஆணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் ஜூலை 14-ஆம் தேதி(இன்று) தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் ஜூலை 14-ஆம் தேதி(இன்று) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் ஊரக மாணவர்களின் மருத்துவக் கல்விக்கனவு சிதைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் சட்டம், சமத்துவம் ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவே தோன்றுகிறது.
ஆனால், இதை தனித்துப் பார்க்கக்கூடாது. மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழங்கப் பட்டதால் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாக கவலைப்படும் நீதிமன்றங்கள், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளவில்லை.

அர்ஜுன் சம்பத் : .பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை ஆடைகளோடு ஆபாசமே உலவுகிறார்கள் .

Shalin Maria Lawrence நேற்று அர்ஜுன் சம்பத் அவர்கள் உதிர்த்த முத்துக்கள்
1 .சமீப காலமாக விஜய் டிவி விவாத நிகழ்ச்சிகள் இந்திய கலாச்சாரத்தை பண்பை எதிர்க்கும் விதமாக இருக்கின்றன .உதாரணத்திற்கு தாலி வேண்டுமா வேண்டாமா ? தனிக்குடித்தனம் வேண்டுமா வேண்டாமா,பெண்ணியம் போன்ற பகுத்தறிவு ,முற்போக்கு விஷயங்களை அதிகம் பேசி வருகின்றனர் அதனால் பிக் பாஸ் மற்றும் விஜய் டிவி விவாத நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் .
2 . ஜூலி என்கிற பெண்ணை ,எதற்காக செலக்ட் செய்தார்கள் ? வேறு யாரும் கிடைக்கவில்லையா ?
3 . பிக் பாஸ் ஒரு தேச விரோத நிகழ்ச்சி .
4 .ஜூலி ஒரு தேச விரோதி .மோடியை திட்டி இருக்கிறார் .தனி தமிழ்நாடு வேண்டும் என்று தீட்டி இருக்கிறார் .ஆகவே அவர் தேச விரோதி .
5 .தனி தமிழ்நாடு என்று சொன்னால் தேச விரோதம் .
7 .தனி தமிழ்நாடு என்று அண்ணா சொல்லலாம் ,ஜூலி சொல்ல கூடாது .
8 .ஜூலி நிகழ்ச்சியின் துவக்கத்தில் சிகப்பு ஆடை அணிந்திருந்தார் அது கம்யூனிச அடையாளம் .அவர் ஒரு கம்யூனிஸ்ட் .
8 .ஓவியா குட்டை பாவாடை போடுகிறார் அது ஆபாசம் ,கலாச்சார சீர்கேடு .
10 .ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரேய வீட்டில் வாழ்கிறார்கள் அது அசிங்கம் ,அவமானம் .காலாச்சார அழிவு .
10 .ஆங்கிலேயர்கள் வந்துதான் மக்களை மலம் அல்ல வைத்தார்கள் .அவர்களே ஜாதி பிரிவினைகளை உண்டாக்கினார்கள் .
11 .ரஜினி ஆன்மீகவாதி அதனால்தான் அவரை ஆதரிக்கிறோர் .கமல் ஹிந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் நாத்திகர் அதனால் அவரை எதிர்க்கிறோம் .
12 .சினிமா தமிழர் பண்பாட்டை கெடுக்கிறது .ஆனால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் .

ஓவியர் வீர.சந்தானம் மறைவு!


ஓவியர் வீர.சந்தானம் மூச்சுக் கோளாறினால் நேற்று இரவு இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி தமிழக செயல்தளங்கள் பலவற்றிலும் ஒரு மௌனமான அதிர்வலையைக் கடத்திச் சென்றது. புதிதாகக் களம்காணும் பத்திரிகையாளர்கள் உட்பட பலருக்கும், ‘பீட்சா படத்தில் மந்திரவாதியாக வருவாரே’ என்று சொன்னால் தெரியும். குறும்படங்கள் ஆவணப்படங்கள் சார்ந்து இயங்குபவர்களிடையே ‘வேட்டி’ என்றதும், வீர.சந்தானம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நடிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவையெல்லாம் புதிதாக வருபவர்கள் அவரைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்பவை. ஆனால், அவருக்கென்ற தனித்துவம் தோல் பாவை ஓவியத்தில் இருக்கிறது.

மராட்டியத்தில் தோன்றியதாக இருந்தாலும், தமிழக மக்களின் பொழுதுபோக்கில் ஒன்றாகக் கலந்துவிட்ட இந்த தோல் பாவைக் கூத்துகளில், ஆட்டுத் தோலில் நாடகத்தின் கதாபாத்திரங்களை வரைந்து பாவைகளாகப் பயன்படுத்துவார்கள். இந்த ஓவியத்தில் தனித்திறன் பெற்றிருந்த வீர.சந்தானம், தீவிர தமிழ்த்தேசியவாதி. ஈழத் தமிழர்களைப்பற்றி சீரிய அறிவும், புரிதலும் கொண்டிருந்த வீர.சந்தானம் தனது கலையின் ஊடாகவும் அவர்களது வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்.

தமிழகம் 2011 இல் தொழில்கள் தொடங்க முதல் மூன்று இடங்களில் .. 2015 இல் கடைசி மூன்று இடங்களில்

Special Correspondent FB டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மாநிலத் தலைமைச்
செயலாளர்கள் கூட்டத்தில் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை அதிகாரி அமிதாப் காந்த் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:
தொழில் மற்றும் வணிகம் புரிவதற்கு உகந்த மாநிலங்களில் ஆந்திரா, தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளது. இப்பட்டியலில் தமிழகம், கேரளா, அசாம் ஆகியவை கடைசி 3 இடங்களில் உள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் 2.42 லட்சம் கோடிகள் பெற்று இந்தியாவிலே அதிகளவில் முதலீடு செய்துள்ளன என்று ஜெயலலிதா 2015 ஆண்டுசட்டமன்றத்தில் சொன்னார் . இதனால் வேலை வாய்ப்பு அதிகளவில் பெருகியுள்ளது என ஆளும் அதிமுக பெருமை பேசி வந்த வேளையில் இந்த அறிவிப்பு பலர்க்கும் அதிர்ச்சியை தந்துள்ளது ..
தொழில் வளர்ச்சி திமுக ஆட்சி காலத்திலே அதிக பட்சமாக 13.12 #GDP இருந்து ., முதல் முன்று இடத்திலே இருந்த தமிழகம் இப்போது கடைசி முன்று இடத்திலே என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெவிக்கின்றன என்று பொருளாதர வல்லுநர்கள் கூறுகிறார்கள்

முள்ளிவாய்க்கால் மீண்ட தமிழினம் சாதி முள்வேலி அமைக்கும் கொடுமை ..வடமராட்சியில் கோவிலுக்கு தங்கத்தில் தேர் கூடவே ஒரு சாதிவேலி

kathiravan.com: தமிழர்கள் இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் 
புத்தகக்கடைகள், பதிப்பகங்களை விட நகைக்கடைகள் அதிகம் திறக்கிறார்கள்.
 சந்தனம் மிஞ்சினால் எங்கேயோ தடவுவது போல் பணம் மிஞ்சிப் போனதால் வடமராட்சியில் ஒரு, பிள்ளையாருக்கு தங்கமுலாம் பூசி ஒரு தேர் செய்திருக்கிறார்கள்.
இயற்கையான மரத்திற்கு தங்கமுலாம் பூசி அலங்கோலப்படுத்தியதைப் போல இந்தக் கோவில் நிர்வாகசபையினரின் மனங்களில் சாதிவெறி இறுகப் பூசி மனிதத்தை கேவலப்படுத்துகிறது.
அறுபதாம் ஆண்டுகளில் இலங்கை கம்யுனிஸ்ட்டுக் கட்சியினரும், சிறுபான்மை தமிழர் மகாசபையினரும் சாதிக் கொடுமைகளிற்கு எதிராகப் போராடினார்கள். தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை கோவில்களில் சமமாக நடத்து என்ற முழக்கம் விண்ணதிர எழுந்தது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கோவில்கள் போராட்டத்தின் விளைவாக தங்களது சாதிவெறியை மறைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிற்கு வாசல் திறந்தன. ஆனால் இன்று தச்சன்தோப்பு பிள்ளையாரின் சாதிவெறிக் கதவுகள் தாழ் திறக்கவில்லை.
தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை உள்ளே விடவில்லை என்று தானே போராட்டம் நடத்துகிறீர்கள், நாங்கள் ஒருவரையுமே உள்ளே விடப்போவதில்லை என்று கோவிலை மூடினார்கள். முள்வேலி போட்டார்கள். பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்தார்கள். நிர்வாகசபைக்காரர்கள் மட்டும் கோவிலிற்கு உள்ளே சென்று பிள்ளையாரை வெளியே கொண்டு வருவார்கள்.
நிர்வாகசபைக்காரர்கள் இரு மரபும் துய்ய வந்தவர்கள் என்பதை எழுதித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பிள்ளையாரின் புனிதத்தையும், சைவ வேளாளர்களின் மானத்தையும் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து காப்பாற்றி விட்டார்களாம்.

பிக் பாஸ் ... பெரியாரியார் , சிறுபான்மையோர் ஆதரவாம் ... அர்ஜுன் சம்பத் கூறுகிறார்!


Shalin Maria Lawrence · அர்ஜுன் சம்பத் : " பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பெரியாரிஸத்தை புகுத்துகிறார் , சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களை வளர்க்கபாக்கிறார் " பிக் பாஸ் நிகழ்ச்சி சிலரின் ஜாதி கோரமுகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது . அவர்கள் குட்டு வெளிப்படுகிறது . மக்கள் கேள்விகேட்கிறார்கள் . இது ஹிந்துதுவாவிற்கு பிரச்சனை . இந்த ஒரு விஷயம்தான் ஹிந்து மக்கள் கட்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோருகிறது . பெரியாரிஸமும் , சிறுபான்மையினர் வளர்ச்சியும் தான் அவர்களை பொறுத்தவரை கலாச்சார சீர்கேடு என்றால் அந்த சீர்கேடு தொடர்ந்து நடக்கட்டும் . வாழ்க பிக் பாஸ் . ஜாதி இல்லை என்று பிதற்றி கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு இது போன்ற ஒரு பிக் பாஸ் காலத்தின் தேவை .

வியாழன், 13 ஜூலை, 2017

சின்னத்திரைக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு ... 2009 முதல் 2013 ஆண்டு வரை

மாலைமலர் :2009 முதல் 2013 ஆண்டு வரைதமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான நெடுந்தொடர்கள், அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:-

2009-ம் ஆண்டு:

1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - திருமதி செல்வம்

2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - வசந்தம்

3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - டெல்லி கணேஷ்

4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - பீலிசிவம்

5. சிறந்த கதாநாயகன் - ஜி.ஸ்ரீகுமார் (உறவுகள் & சிவசக்தி)

6. சிறந்த கதாநாயகி - சங்கீதா (திருப்பாவை)

7. சிறந்த குணச்சித்திர நடிகர் - சிவன் சீனிவாசன் (திருப்பாவை)

8. சிறந்த குணச்சித்திர (நடிகை) - வடிவுக்கரசி (திருமதி செல்வம்)

9. சிறந்த வில்லன் நடிகர் - ஷிரவன் (தங்கமான புருஷன்)

2009 - 2014 ,,தமிழ்த் திரைப்படங்களுக்கான தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

மாலைமலர் :தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள்
ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2009 - 2014 வரை வெளிவந்த படங்களில் சிறந்த படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் குறித்த முழு விபரங்கள் பின்வருமாறு:-

2004-ம் ஆண்டு:

1 சிறந்த படம் முதல் பரிசு - பசங்க

2 சிறந்த படம் இரண்டாம் பரிசு - மாயாண்டி குடும்பத்தார்

3 சிறந்த படம் மூன்றாம் பரிசு - அச்சமுண்டு அச்சமுண்டு

4 சிறந்த நடிகர் - கரண் (மலையன்)

5 சிறந்த நடிகை - பத்மப்ரியா (பொக்கிஷம்)

6 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு)

7 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - அஞ்சலி (அங்காடித் தெரு)

சபரிமலை ஐயப்பன் ஒரு அரசர் .. கடவுள் அல்ல ..அய்யனார், சாஸ்தா, தர்மராஜா, போதிராஜா இவை அனைத்துமே புத்தர் வழிபாடே.

ஐயப்பன் கோயில் - தெரியாத உண்மைகள்
கேரளா சபரிமலையில் உள்ள ஐயப்பன், உண்மையில் புராண கதை அல்ல, அது வரலாற்று பூர்வமான உண்மை. ஆனால் அந்த உண்மை இந்து பக்தர்கள் விரும்பும் உண்மை அல்ல, ஐயப்பன் உண்மையில் இந்து கடவுள் அல்ல அது ஒரு பவுத்த கோயில், அதை விட வினோதம் என்னவென்றால், அய்யப்பனே புத்தரை வணங்கி வந்த ஒரு அரசகுடும்ப இளவரசன் என்பது தான்.
இங்கு சொல்லப்பட்டிருப்பது, கற்பனை அல்ல, பந்தள அரசவம்சத்தில் வந்த, கேசரி பாலக்ருஷ்ண பிள்ளை எழுதிய Followers, மற்றும் ஈழவர்செம்பாட்டு என்ற நூலிகளில் இருந்து பெரும்பகுதியும் நலன்கல் கிருஷ்ணபிள்ளை மற்றும் டாக்டர்.எஸ்.கே.நாயர் ஆகியோரின் புத்தகங்களிலிருந்தும், திரு.ஜம்னாதாஸ் எழுதிய திருப்தி புத்தர் கோயிலே என்ற புத்தகத்திலிருந்தும் சொல்லப்படும் வரலாறே
ஐயப்பன் பற்றிய புராண கதைகளை சுருக்கமாக பார்த்தால், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்தவன், கழுத்தில் மணியுடன் காட்டில் குழந்தையாக பந்தள ராஜனால் கண்டெடுக்கப் பட்டு, அவனிடம் வாழ்கிறான் (காது கேளாத வாய்பேச முடியாத குருவின் மகனை குணப்படுத்துகிறான் (கேரள கிருஸ்த்துவ மதத்தின் தாக்கம்), சின்னம்மாவின் சூழ்ச்சியால் காட்டுக்கு புலிப்பால் கொண்டு வர போகிறான், அங்கே மகிஷியை கொல்கிறான், பின்னர் உதயணன் என்ற கொள்ளையனை கொல்கிறான், பின் சபரி மலையில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்கிறான். உண்மையிலேயே நான் படித்த புராண கதைகளில் அந்த கதாசிரியரின் ஒரு தனித்துவ முத்திரை (Author’s Personal Touch) இல்லாத கதை இதுவென்று தான் சொல்வேன்.

திலகனை சாகடித்த மோகன்லால் .. பாவனாவை கடத்திய திலீப் ... மலையாள சினிமா ஒரு மாபியாவாகி நீண்ட நாளாகி விட்டது!


செவ்வாய்க்கிழமை ‘இந்துக்களுக்கு’ நல்ல நாள் இல்லை. ஆனாலும் ஜூலை 11 செவ்வாய் அன்றுதான் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப் கைது செய்யப்பட்டு கொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். “மத்திய சிறைக்கு வரவேற்கிறோம் – வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்” என்ற பதாகைகளுடன் மக்கள் அவரை வரவேற்றனர். உண்மையில் 2016-ம் ஆண்டில் திலீப் நடித்த படத்தின் தலைப்பும் அதுதான்.
படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் – படம் பிடித்து பிரச்சினை வெளியே வந்த பிப் – 2017-க்கு பிறகு நிறைய செய்திகள் – கதைகள்! அவற்றில் அரை உண்மைகளோடு அரை பொய்களும் இருந்ததால் கதையின் விறுவிறுவிப்பைக் கூட்டின.
இந்திய சினிமாக்களில் நாற்பது வயது இயக்குநர்கள் எடுத்தே ஆகவேண்டிய இரு மனைவி – காதல் – முக்கோணக் கதையும், அதிக வருமானத்தை சொத்தாக்கும் கூட்டணி பிரச்சினையும், குற்றத்தை மறைக்கும் பிரபலங்களின் அதிகாரமும், அந்த அதிகாரம் தோற்றுவிக்கும் ஆணாதிக்கமும் இதில் இருக்கின்றன.

சூரத்: மோடியின் மண்ணில் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து இலட்சம் பேர் பேரணி!

ஜூலை 1 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஜவுளி வியாபாரிகள்
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் எது மாறியிருக்கிறதோ இல்லையோ, மோடியின் குஜராத், இன்று மோடிக்கு எதிரான குஜராத்தாக மாறியிருக்கிறது. இந்தியாவிலேயே வைரம் மற்றும் ஜவுளித் தொழிலுக்குப் பெயர் போன சூரத் நகரம், மத்திய மோடி அரசுக்கு எதிரான போர்க்களமாக மாறியிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு வைர வியாபாரிகள் மற்றும் ஜவுளி மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவணிகர்கள், மோடி அரசு அமல்படுத்தியிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிராக அன்றாடம் பல்வேறு கடையடைப்புப் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை 1 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஜவுளி வியாபாரிகள், ஜூலை 3 அன்று சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் திரண்டு ஜவுளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5% சரக்கு மற்றும் சேவை வரியை இரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைவெட்டி சவுதி அரேபியாவை எதிர்த்து உலகெங்கும் போராட்டம் – படக்கட்டுரை

தாங்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத துயரங்களுக்கு மத்தியில் சவுதியில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர் காஷ்மீர் மக்கள். 2017-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை 44 பேரை சிரச்சேதம் செய்து கொன்றுள்ளது சவுதி அரசு. அதிலும் கடந்த 10.07.2017 அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 6 பேரைக் கொன்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அறுவரில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் மற்ற ஐந்து பேரும் சவுதி நாட்டவர்கள்.
மரண தண்டனை வழங்கும் நாடுகளில் சவுதி தான் முதலிடத்தில் உள்ளது. 2014-ல் 158 பேரையும், கடந்த வருடம் 153 பேரையும் வெட்டிக் கொன்றுள்ளது. ஜூன் 2017-ல் ஒரு மனித உரிமைகள் நிறுவனம் எடுத்த ஆய்வின்படி கொல்லப்படும் மக்களில் 41% பேர் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடாதவர்கள்; அவர்கள் அனைவரும் அரசியல் கூட்டங்கள் மற்றும் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள்.
கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வருகைக்குப் பின்னர் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது அந்த ஆய்வறிக்கை. இதில் மாற்றுத்திறனாளி ஒருவரும் அடக்கம்.

பாவனாவை நிர்வாணப்படம் எடுக்க நடிகர் திலீப் பணம் கொடுத்தார்?


நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் கைதாகி 2 நாள் போலீஸ் காவலில் உள்ளார் நடிகர் திலீப். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை பாவனாவை தாக்கி அவரது நிர்வாண போட்டோவை எடுக்க பணம் கொடுத்த விவகாரம் தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனாவை சிலர் காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்தனர். அது தொடர்பாக பல்சர் சுனில் என்பவர் உட்பட சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக சமீபத்தில் அவரிடமும், அவரது மேலாளர் அப்புண்ணி மற்றும் இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடமும் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், பாவனாவை காரில் கடத்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தி வரும் ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனில் கடிதத்தில் தெரிவித்ததை அடுத்து, காவ்யா மாதவனின் கடையில் போலீசார் கடந்த 1-ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

தீர்ப்பு : மகிழ்ச்சியில் கால்நடை விவசாயிகள்!

minnambalam: மத்திய அரசின் சந்தைகளில் இறைச்சிக்கான கால்நடைகள் விற்கத் தடை என்ற புதிய சட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை (11.07.2017) நடந்த இந்த வழக்கில் இடைக்காலத் தடைக்கு அனுமதியளித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மே மாதம் 26ஆம் தேதி மத்திய அரசின் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறை சார்பாக நாடு முழுவதும் சந்தைகளில் இறைச்சிக்கான கால்நடைகள் விற்கத் தடை என்ற அறிவிப்பு வெளியானது. இந்தத் தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. விவசாயிகள் தரப்பிலும் இந்த உத்தரவுக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்றில் மத்திய அரசின் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தற்போது இடைக்கால தடை உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா”: அமர்த்தியா சென்னின் இந்த வார்த்தைகளுக்காக தடை!

thetiemestamil.comn :அ. குமரேசன்:அது ஒரு முழு நீளக் கதைத் திரைப்படம் அல்ல. ஒரு ஆவணப்படமே. ஆகப்பெரும்பாலும் இந்தியாவில் ஆவணப்படங்கள், கருத்துடன்பாடு உள்ள அவையோர் முன்னிலையில் திரையிடப்படுகின்றன. பொதுவெளியில், பொதுமக்களிடம் நேரடியாக வருவது மிக மிகக் குறைவு. அப்படியொரு ஆவணப்படம் ‘Argumentative Indian’ (வாதாடும் இந்தியர்). நோபல் விருது பெற்றவரான பொருளாதார ஆய்வாளர் அமர்த்தியா சென் பற்றிய அந்த்ப் படம். இந்த ஒரு மணிநேரப் படத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கியவர் இயக்குநர் சுமன் கோஷ். அமர்த்தியா சென்னும் அவரது மாணவரான கவுஷிக் பாசு என்ற பொருளாதார வல்லுநரும் உரையாடுகிறார்கள். இடையிடையே பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் சென் பற்றிய தங்களது கருத்துகளைக் கூறுகிறார்கள்.
ஏற்கெனவே நியூயார்க், லண்டன் நகரங்களில் திரையிடப்பட்டுள்ள இந்தப்படம் முந்தாநாள் கொல்கத்தாவில் காட்டப்பட்டது, நேற்று திடீரென திரைப்படத் தணிக்கை வாரியம், அந்தப் படத்தில் அமர்த்தியா சென் வாயிலிருநது வருகிற நான்கு சொற்களை நீக்கினால்தான் அல்லது ‘பீப்’ ஒலியால் மறைத்தால்தான் சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறிவிட்டது. (அதுவும், பெரியவர்களோடு வரக்கூடிய குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற ‘யுஏ’ சான்றிதழ்.)

டி ஐ ஜி ரூபா முட்கள் ... சசிகலா சிறை வசதிகளை கண்டுபிடித்த கர்நாடக சிறைதுறை DIG


BENGALURU: Deputy Inspector of General (Prisons) D Roopa on Wednesday kicked up a storm by accusing her superior officer, Director General of Police (Prisons) K Sathyanaranaya Rao, of interfering in her work ever since she took charge. ..
ராகினி ஆத்ம வெண்டி மு. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை வசதிகள் விதிமுறைகளை மீறி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. 2014-ம் ஆண்டு இதே வழக்கில் பெங்களூருவில் உள்ள கீழ் நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்பட 3 பேருக்கும் சிறைத் தண்டனை
விதித்து தீர்ப்பளித்தபோது, ஜெயலலிதா முதல்வராக பதவியில் இருந்ததால், பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல்வகுப்பு வசதி அளிக்கப்பட்டது. ஜெயலலிதா சிறையில் அனுபவித்த அனைத்து சலுகைகளும் சசிகலா உள்ளிட்டோருக்கும் கிடைத்தது. ஆனால், இந்த முறை சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சிறையில் எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை.

ஊத்துகுழி வெண்ணை உற்பத்திக்கு ஆபத்து .. ஜி எஸ் டி .... கோமாதா வியாதி போன்றவைகளால் ..

ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தி நிலையம்
ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தி நிலையம் ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தி நிலையம் திருப்பதிக்கு லட்டு, பழநிக்கு பஞ்சாமிர்தம், திருநெல் வேலிக்கு அல்வா – இவைபோல ‘ஊத்துக்குளி’ என்றதுமே, ‘வெண்ணெய்’ என்று யாரும் யோசிக் காமல் சொல்லிவிடுவார்கள். ஒருகாலத்தில் வெண்ணெய் உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த ஊத்துக்குளியில் இப்போது, வெண்ணெய் எங்கே என்று தேடவேண்டி இருக்கிறது! திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி – வெண் ணெய்க்கு பேர் போன ஊர். இங்கு தயாரான வெண் ணெய்யானது இந்தியாவின் பல பாகங்களுக்கும் பயணித்த காலமுண்டு. ஆனால், இப்போது உள்ளூரி லேயே வெண்ணெய்யைத் தேடி விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டி இருக்கிறது. எருமைகளே காரணம் ‘‘இதே ஊத்துக்குளியில் ஒருகாலத்துல ஐம்பதுக்கும் அதிகமான வெண்ணெய் கம்பெனிகள் இருந்துச்சு. குடிசைத் தொழில் கணக்கா வெண்ணெய் உற்பத்தி செஞ்சு வியாபாரம் பார்த்தாங்க. வாரத்துக்கு பத்து டன் அளவுக்குக்கூட இங்கருந்து வெண்ணெய் வெளி யூர்களுக்குப் போகும்.

நடிகர் திலீப் கைது: ரூ.50 கோடி மதிப்புள்ள படங்கள் சிக்கலில்?

நடிகர் திலீப் | கோப்புப் படம். tamilthehindu.com நடிகர் திலீப் | கோப்புப் படம்.< நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதால், சுமார் ரூ.50 கோடி மதிப்பளவிலான படங்கள் பாதியில் நிற்கின்றன. இதனால் மலையாள திரையுலகம், வரப்போகும் நாட்களில் நடக்கவுள்ள நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்துக் காத்திருக்கிறது.< திலீப்பின் அடுத்த வெளியீடாக இருந்தது ‘ராம்லீலா’. அருண் கோபி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜூலை முதல் வாரத்தில் வெளியாவதாக இருந்த ‘ராம்லீலா’வின் வெளியீட்டுத் தேதி ஜூலை 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் ரூ.15 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
திலீப்பின் கைதால் இப்படம் இன்னும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் பேச முயற்சித்தபோது, பதில் கிடைக்கவில்லை.

சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் .. 2 கோடி லஞ்சம் ... சிறை அதிகாரிகளுக்கு ஜாலிலோ

tamilthehindu : சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா விஐபி சலுகைகளைப் பெற்று சவுகரியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு சிறைத்துறை டிஐஜி டி.ரூபா காவல்துறை ஐ.ஜி ஆர்.கே.தத்தாவுக்கு அனுப்பிய அறிக்கையில் தன்னுடன் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
புதன்கிழமையன்று அவர் தாக்கல் செய்த அந்த அறிக்கையில், சிறைத்துறை எச்.எஸ்.சத்யநாராயண ராவ், அவரது அலுவல் உதவியாளரும் சசிகலா தரப்பிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனி சமையலறை..
சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையிலேயே தற்காலிக சமையிலடம் உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்கு சமைத்துக் கொடுக்க சிறையில் இருக்கும் பெண்மணி ஒருவரை பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை உள்துறை செயலருக்கும், ஊழல் தடுப்பு ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கோபாலபுரத்தில் கோபாலகிருஷ்ண காந்தி!

கோபாலபுரத்தில் கோபாலகிருஷ்ண காந்தி!
minnambalam :எதிர்க்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி, திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் சென்னை வந்த அவர், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஜூலை 12ஆம் தேதி நேற்று மாலை கோபாலபுரத்தில் உள்ள வீட்டுக்கு நேரில் சென்று தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். மேலும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.

எறும்புகள் ... பிள்ளையார் எறும்புகளாய் இருந்தவர்கள் எப்படி செவ்வெறும்புகள் ஆகினர்?

Bharathi Nathan :ஆண்டோ எனும் மாயை சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘எறும்புகள்’
சிறுகதைப் பற்றி...
இது மரம் ஏறும் தொழிலாளர்களைப் பற்றியது. பனைமரத்தில் இயல்பாய் கிடைப்பது கள் மட்டும் தான், தெலுவு எனப்படும் பதநீர் கிடைப்பது அதன் பாளை ஊறலில் சேகாரத்திற்காக செருகப்படும் சட்டியில் சுண்ணாம்பு தடவுவதால் தான். பனையேறும் தொழிலாளர்களுக்கு பிரச்னையே போலீஸ் தான். அவர்களுக்கு மாமூல் தான் முக்கியம். பனையேறும் தொழிலாளர்கள் தெலுவை விடுத்து ஓரிரு மரங்களில் தங்கள் சுய தேவைக்காக கள் போட்டால் கூட, உடனே மூக்கு வேர்த்து கள் கேசு போட வந்து விடுவார்கள். இதை தவிர்த்து தெலுவே போட்டாலும் லோக்கல் போலீசும், கலால் போலீசும் மாமூல் கேட்டு வந்து விடுவார்கள். அவர்களுடனான அராஜகத்திற்கு எதிரான இடைவிடாத அந்தப் போராட்டத்தில் சிக்குண்டு தவிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையே எறும்புகள் சிறுகதை. இதற்கு ஏன், எறும்புகள் என்று தலைப்பு வைத்தேன் என்றால், எறும்புகள் வகையில் யார் மிதித்தாலும் கண்டுக் கொள்ளாமல் போகும் போராட்ட குணமற்ற பிள்ளையார் எறும்புகளும் உண்டு. யாராவது சீண்டினால் திருப்பிக் கடிக்கும் ரோசமான செவ்வெறும்புகளும் உண்டு.

கமல் ஹாசன் : தமிழகத்தின் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது!

Karthikeyan சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் துறைகளிலும் லஞ்சம்
தலை விரித்து ஆடுகிறது என நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து சென்னையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நான் ஓட்டுதான் போடுவேன், அரசு செயல்பாடு பற்றி மார்க் போட மாட்டேன். இப்போதே எனது கருத்தை சொல்லிவிட்டால் ரகசியமாக வாக்களிக்க அவசியம் இல்லையே என்று கூறினார். மேலும் தசாவதாரம் எடுத்தபோது கொண்டாடியவர்களுக்கு விஸ்வரூபம் எடுத்தால் பிடிக்காது. எனது பல படங்களின் வெளியீட்டின்போது பலரும் எதிர்த்தபோது அரசும், மக்களும் வேடிக்கை பார்த்தார்கள். சமூக சேவைக்காக செய்கிறேன் என்று சொல்வதற்கு நான் அரசியல்வாதி அல்ல. தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்றும் குற்றம்சாட்டினார்  tamiloneindia.com

வேண்டுகோள் .. நீட் தேர்வை எதிர்த்து ஒரு கோடி கடிதம் ..

நீட் தேர்வை எதிர்த்து இந்திய குடியரசு தலைவருக்கு ஒரு கோடி அஞ்சல் அட்டை மற்றும் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம், மாண்புமிகு தளபதி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
கீழ்கண்ட கடிதத்தை உங்கள் மின்னஞ்சலில் இருந்து presidentofindia@rb.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி நம் உணர்வை வெளிப்படுத்துங்கள்.
அதே போல அஞ்சலட்டை அனுப்பியும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டுகிறோம்.
To
His Excellency
The President of India
Rashtrapati Bhavan
New Delhi 110 004
Respected Sir,
Request your goodself to kindly give your assent for the two bills - Tamil Nadu Admissions to Post Graduate Courses in Medicine and Dentistry Bill, 2017 and the Tamil Nadu Admissions to MBBS and BDS Courses Bill, 2017 - unanimously passed by Tamil Nadu Assembly on 31.1.2017 to exclude the State from NEET examination that will protect the present policy of Tamil Nadu State for admission to Medical Colleges under the State quota.
Yours sincerely
(உங்கள் பெயர் மற்றும் முகவரியை எழுதவும்)

புதன், 12 ஜூலை, 2017

பிக் பாஸ் - முழுக்க முழுக்க பொய் ... செட்டப் செய்திகள் .... நாம கூவுறதும் கூடுறதும் காசுக்கு காசுக்கு காசுக்கு

நடிகை கஸ்தூரியிடம் அட்டு பிகரு என்று சினிமாவில் டயலாக் வைக்கிறார்களே அதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டால் தெரியாது என்கிறார்! சில விசயங்களை புத்திசாலித்தனமா தவிர்க்கிறாராம்! எதுஎப்படியோ கமல், காயத்ரி ரகுராம், கஸ்தூரி, இந்து முன்னணி அர்ஜுன் சம்பத் எல்லாம் ஒரே கோட்டில் நிற்கும் அயோக்கியர்கள் என்பதே உண்மை
தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி உள்ளது.
ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாக மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள நடிகர் வையாபுரி இன்னும் 10 நாட்களில் எலிமினேட் ஆகி வந்துவிடுவார் என அவரது மனைவி பேசுவது போல் ஒரு தொலைப்பேசி உரையாடல் வெளியாகி உள்ளது.
அந்த ஆடியோவில், இளைஞர் ஒருவர் தான் ஈரோட்டில் இருந்து பேசுவதாகவும், ஊர் திருவிழா கலை நிகழ்ச்சியில் வையாபுரி கலந்து கொள்ள அவரிடம் பேச வேண்டும் என கூறுகிறார். அதற்கு வையாபுரியின் மனைவி என் கணவர் தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறார். அதனால் பேச முடியாது. ஆனால் விரைவில் வெளியேறி வந்துவிடுவார் என்றார்.

மதுரை - விகாஷ் ...தேசிய நீச்சல் போட்டியில் வென்ற தமிழக மாணவர்!

மின்னம்பலம் : தேசிய அளவில் நடந்த ஜூனியர்களுக்கான நீச்சல் போட்டியில் தமிழக மாணவர் சாதனை படைத்துள்ளார். மதுரையை சேர்ந்தவர் பி.விகாஷ் . இவர் மதுரையில் உள்ள லீ சார்ட்லியர் என்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். தேசிய அளவில் ஜூனியர்களுக்கான நீச்சல் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடந்தது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 51 நீச்சல் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். அதில் மதுரையில் இருந்து மட்டும் மூன்று மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டியின் இறுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 22 பதக்கங்களை வென்று தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

நடிகர்கள் மீதான அவதூறு வழக்கு ரத்து!

மின்னம்பலம் : நடிகர் சூர்யா உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு நடிகைகள் மஞ்சுளா, ஸ்ரீப்ரியா, நமீதா உள்ளிட்டோர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிக்கையை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கக் கூட்டத்தில் கண்டன கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர்கள் விவேக், சூர்யா, சத்யராஜ், சரத்குமார், சேரன், அருண்விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராகாத மேற்குறிப்பிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை கடந்த மே மாதம் 23ம் தேதி நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் பிறப்பித்தார்.

திருக்குறள் மீது சுப்பிரமணிய பாரதி பூசிய சேறு

'பாரதி' ய ஜனதா பார்ட்டி புத்தகத்திலிருந்து,
"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
என்று தொடங்கிய திருவள்ளுவர், தன்னுடைய 1330 குறள்களிளும் கடைசிவரை ஆதிபகவன் யார் என்று சொல்லாமலேயே விட்டுவிட்டார். இது, சுப்பரமணிய பாரதிக்கு பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது.
அந்தக் கடுப்பு தாங்காமல், எடுத்திருக்கிறார் எழுதுகோலை - வடித்திருக்கிறார் பாடலை.
ஆதிபகவன் யாரென்றும், தன்னுடைய சிறப்புகள் எதனால் என்றும் தமிழ்த்தாயே ஒப்புதல் வாக்குமூலம் தருவதுபோல் எழுதி அடைத்தார் தமிழர்களின் வாயை.
"ஆதிசிவன் பெற்றுவிட்டன - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக் கணஞ் சேய்து கொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்.
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வழ்ந்தேன்."
இதில் மொத்தம் மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பரமணியார்.

நெல்லை சரவணா செல்வரத்தினம் அங்காடி மூட நீதிமன்றம் உத்தரவு!

பி.ஆண்டனிராஜ் சே.சின்னதுரை :விதிமுறைகளை மீறி கட்டடம்
கட்டப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோருக்கு சீல் வைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, திட்டக்குழும அதிகாரிகள் அந்தக் கட்டடத்துக்கு சீல் வைத்தனர். நெல்லை தெற்குப் புறவழிச் சாலையில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் திறக்கப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டப்பட்டதில் பல்வேறு விதிமுறை மீறல்கள் இருப்பதாகத் தொடக்கத்திலிருந்தே புகார்கள் வந்தன. கட்டடத்தின் முகப்பை மறைப்பதாகக் கூறி, சாலையில் இருந்த பெரிய மரத்தை வெட்டியதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் எழுந்தன. அத்துடன், இந்தக் கடைக்காக திடீரென அந்த இடத்தில் பஸ் நிறுத்தம் ஏற்பாடுசெய்ததாக காவல்துறையினர், பொதுப்பணித்துறையினர், போக்குவரத்துத் துறையினர் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

விடுதலை சிறுத்தைகள் நெல்லை மாவட்ட பிரமுகர் அப்துல் காதர் வெட்டி படுகொலை

கொலைகார மனநோயாளிகளே...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயக பேரவையின் நெல்லை மாநகர மாவட்ட அமைப்பாளர் #அப்துல்காதர் அவர்கள்
மர்ம நபர்களால் இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.
மதவெறியும் சாதி வெறியும் பிடித்து அலையும் மனநோயாளிகளின் களமாய் இந்தியா இப்போது தீவிரமாக மாறி வருகிறது என்பதற்கு இந்தப் படுகொலையும் ஒரு சான்று.
வண்மையாக கண்டிக்கிறோம் என்பதோடு நமது பணி முடிந்துவிடவில்லை. கொலை செய்த படுபாதகர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்வரை நமது பணி தொடரவேண்டும்..தோழர் அப்துல்காதர் அவர்களின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சன்னா

Air India இனி அய்யர் இந்தியா என்று அழைக்கபப்டும்? சாதா பயணிகளுக்கு மாமிசம் கிடையாது ... உயர் பயணிகளுக்கு கிடைக்கும்

Air India..No  non vegetarian food for economy class passengers 
Muthu Krishnan: இனி இந்தியாவிற்குள் பறக்கும் தங்களது விமானங்களில்
அசைவ உணவு பரிமாறுதல் நிறுத்தப்படுகிறது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இப்படி அசைவ உணவை நிறுத்துவதால் உணவின் தரம் மேம்படும் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
அந்த அறிவிப்பை இன்னும் சற்று உற்று நோக்கினால் இந்த அசைவு உணவு தடை என்பது அனைவருக்குமானது அல்ல, அது பணம் கூடுதலாக கொடுத்து BUSINESS CLASSல் பயணிக்கும் வசதிபடைத்தவர்களுக்கானது அல்ல, இந்த தடை என்பது ECONOMY CLASSல் பயணிகளுக்கு மட்டுமே. சாமானியர்களின் உணவு பழக்கங்களின் மீது தொடர்ந்து தாக்குதலை தொடுப்பதன் வழியே இந்தியாவில் வாழும் 88% சதவிகித மக்களை மீண்டும் ஒரு முறை அசிங்கப்படுத்தும் செயலில் இறங்கியுள்ளது பாஜக அரசு.
1. தைரியம் இருந்தால் ஏர் இந்தியாவின் வெளிநாட்டு சேவையிலும் இந்த தடையை விதித்து பார்க்க வேண்டும் பாஜக அரசு

கோபால கிருஷ்ண காந்தி காங்கிரஸ் துணை குடியரசு தலைவர் வேட்பாளர்

காங்கிரஸ் தலைமையிலான துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட
மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ணகாந்தி தேர்வு செய்யப்பட்டார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தும் வேட்பாளரை முடிவு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் உள்ள பாராளுமன்ற இல்லத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு சோனியா காந்தி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தியை (மகாத்மா காந்தியின் பேரன்) தேர்ந்தெடுத்து உள்ளன என்றார். 

BBC :நிகாப் அணிய தடை மேல்முறையீட்டு மனுவும் நிராகரிப்பு

பெல்ஜியம் அரசு, இஸ்லாமியப் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் துணியை அணிவதற்கு 2011-ம் ஆண்டு விதித்த தடையை மீறி முகத்தை மறைக்கும் துணியை தொடர்ந்து அணிந்து, அத்தடைக்கு எதிராக வழக்குத் தொடுத்த , இரு முஸ்லிம் பெண்கள் தங்களில் சவாலில் தோல்வியடைந்துள்ளனர். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து, அபராதம் மற்றும் சிறை தண்டனையைக் குறித்த அச்சுறுத்தலைத் தவிக்க ஒரு பெண் வேறுவழியின்றி நிகாப் அணிவதை நிறுத்தியதாகவும், மற்றொரு பெண் வெளியில் செல்லாமல் வீட்டிலே நிரந்தரமாக தங்கிவிட்டதாகவும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் இரு பெண்களும் கூறியிருந்தனர்.
தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கான உரிமைகள், மதம் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக, அப்பெண்களின் கூற்றுகளை ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள நீதிமன்றம் நிராகரித்தது. முகத்தை மறைக்கும் துணியை அணிவதற்கு எதிரான சட்டத்தால், மற்றவர்களை விட சில முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படலாம், ஆனால், அது பொது ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய தேவைக்கு பொருத்தமானது என நீதிமன்றம் கூறியுள்ளது

மாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல் – கொதித்தெழும் விவசாயிகள்


வினவு : சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மாட்டு வியாபார்கள் சங்கப் பிரதிநிதிகள், தங்களது தொழிலில் ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளையும், தற்போது புதியதாக வெளியிடப்பட்டிருக்கும் மத்திய அரசின் மாடு விற்பனைக்கான ஒழுங்குமுறை அரசாணையைத் தொடர்ந்து தமிழகத்தில் இத்தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் குறித்துப் பேசியுள்ளனர். இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை “ரெட் பிக்ஸ்” என்ற “யூ-டியூப்” சேனல் பதிவேற்றியுள்ளது.
இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மாட்டு வியாபாரிகளின் சங்கப் பிரதிநிதிகள், மத்திய அரசு வெளியிட்டுள்ள மாடு விற்பனை ஒழுங்குமுறை அரசாணையை உபயோகித்து தமிழகத்தில் இந்துமுன்னணி, பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள் மாட்டு வியாபாரிகளிடம் மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.

Autism ஆட்டிசம் . .ஒரு புரியாத புதிய உலகம். அங்கு அறிவாளிகளும் இருக்கிறார்கள். வளர்ந்த குழந்தைகளும் வாழ்கிறார்கள்

Bamini Rajeshwaramudaliyar  :ஆட்டிசமும் என் மகனும் நானும்.
மீண்டும் மீண்டும் கதைத்ததை மீண்டும் கதைக்க, கூறிய பதிலை , பலமுறைகள் மீண்டும் சொல்ல எனது நாள் ஆரம்பமாகும். இதுதான் ஆட்டிசத்தின் தன்மை.
ஏன் அப்படி கதைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் மகனின் மனதிற்கு ஆறுதல் கொடுத்து அமைதிப்படுத்த வேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.
ஆட்டுசம் உள்ளவர்களுக்கு -பதட்டமும்(Anxiety ), மாற்றங்களை விரும்பாத தன்மை உண்டு. -சமுதாயத்தை பற்றிய புரிந்துணர்வுகள் மிக மிக குறைவு.
-அவர்களின் ஐம்புலன்களும் (supper sensitive ) கூர் உணர்ச்சியுடையதாக இருக்கும்.
அவர்களுக்கு அனைத்து சத்தங்களும் (non stop)நிற்காது தொடர்ந்து ஒரே நேரத்தில் கேட்கும் போது, இரைவதுபோல் இருக்கும்.
காற்றின் சத்தம் கூட அவர்களுக்கு கேட்கும். அதனால்தான் காதை விரலால் அடைக்க முனைவார்கள்.
என் மகன் மற்றைய சத்தங்களை கேட்காமல் இருக்க , எந்த நேரமும் earphone போட்டு பாடல் கேட்டுக்கொண்டுருப்பார்.
அமைதியான இரவில் கூட அவர்கள் பலவற்றை உணர்வார்கள்.
இரவில் தெரியும் சிறிய வெளிச்சம் கூட அவர்கள் தூக்கத்தை கலைக்கும்.
அதனால் தூக்கம் குறைவாக இருக்கும். அதனால் பதட்டம் அதிகரிக்கும்.
இவற்றிற்கு எந்தப் பதிலும் கிடையாது.
இது அவர்களின் வாழ்க்கை.

களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி By Krishnavel T S

அவாளுக்கு" முதல் மரியாதை தந்து, அள்ளி அள்ளி கொடுத்து ஆட்சி செஞ்சா,
பொற்க்கால ஆட்சி.... இல்லைன்னா, அது இருண்ட காலம். இந்திய வரலாறு இந்த கூற்றிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.//
களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி By Krishnavel T S
களப்பிரர் காலம் தமிழ் வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 - 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்.
தொல்காபியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப் பட்ட காலம் கி.மு. 1 - முதல் கி.பி.5 - ஆம் நுற்றாண்டு வரையே.
ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்ட காலம், களப்பிரர் என்ற வேறு ஒரு இனம் தமிழரை அடிமை படுத்திய காலம் என்று ஏன் கூறுகிறது.
களப்பிரர் வேறு இனம் என்றால் அவர்கள் ஏன், தமிழில் இப்படி பட்ட இலக்கியங்களை படைக்க வேண்டும் அல்லது படைக்க உதவ வேண்டும்.
உண்மையில் நடந்தது என்ன வென்று பார்ப்போம். கி.பி.1ஆம் நூற்றாண்டு மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட முடிவை நெருங்கிய காலம். அந்த கால கட்டத்தில் பெரும் பான்மையான மக்கள் கொண்டிருந்த வழக்கம், முன்னோர் வழிபாட்டு முறையான நடுகல் வழிபாடு(போரில் இறந்த முன்னோருக்கு கல்நட்டு வழிபடுதல்) மற்றும் சாத்தன் வழிபாடு(போரில் இறந்த முன்னோரில் குதிரை ஏறி புரிந்தவர், குதிரை வைத்திருந்த வீரன் சிறு வசதியான குடும்பமாக இருப்பர், அவர்கள் சிறு கோயில் கட்டி வழிபட்டனர்),

வருமானவரி பொறியில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி - மகன்- மாமனார்- உறவினர் என மொத்த குடும்பமும்?

Special Correspondent FB ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது
சந்தேகத்திற்குரிய அமைச்சர்கள் மீது அதிகாரப்பூர்வமாக அல்லாமல் போலீசாரை வைத்து ரெய்டு நடத்தினார். இதில் எடப்பாடி தரப்பினரும் அடக்கம். அதன்பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி, எடப்பாடி மகன் மிதுன் மீதும் உறவினர் மொடக்குறிச்சி ராமலிங்கம் மீதும் வழக்குப் பதிவு செய்தார்கள். அது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு ராமலிங்கமும், மிதுனும் கைது செய்யப்பட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு தமிழகத்தில் பெரிய சாலைகள் போடுவது, அரசு கட்டிடங்கள் கட்டுவது, பாலங்கள் கட்டுவது என அனைத்து டெண்டர்களையும் எந்த காண்ட்ராக்டருக்கு தருவதென முடிவு எடப்பாடியின் மாமனார் முருகேசன், இவர்களது உறவினர் மொடக்குறிச்சி ராமலிங்கம் மற்றும் மகன் மிதுன் . இந்த மூவரும்தான் எடப்பாடியின் கஜானா என்கிறார்கள் வருமான வரித்துறையை சேர்ந்த அதிகாரிகள். தற்பொழுது இந்த மூவர் டீமின் பணப்புழக்கத்தைப் பற்றி டெல்லிக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மத்தியில் இருந்து ஆணை வந்தால் ரெய்டு நடத்துவோம்'' என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

திருபஞ்சிலி கதிரேசன் அடித்து கொலை ..முதுகுக்கு பின்னால் கைகள் கட்டப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு...

 Vincernt Raj :எவிடென்ஸ் கதிர்: திருச்சி , திருப்பஞ்சிலி கிராமத்தின் சேரிக்குள் றுவன்தான் அந்த வீட்டினை அடையாளம் காட்டினான்.வாழை செடிகள் மலர்ந்து நின்றன.வீட்டுக்குள்ளிருந்து 18 வயது தம்பி ஒருவன் வந்தான்.என்னை பார்த்ததும் கதிர் சார்..உங்களை தெரியும்.நீங்கள்தானே தீண்டாமைக்கு எதிராக போராடி கொண்டு இருப்பவர் என்று என் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டான்.தம்பி நீ யாருப்பா என்றேன்.சார்..கொலை செய்யப்பட்ட கதிரின் தம்பி சார் என்று கண் கலங்கினான்.கதிரின் மனைவியும் அம்மாவும் அப்பாவும் அண்ணன்களும் வரிசையாக வந்தனர்.கதிருக்கு திருமணம் ஆகி 5 மாதம்தான் ஆகிறது.மனைவியின் பெயர் நந்தினி.கள்ளர் சமூகம்.
நுழையும்போதே சாவுவாசனை முகத்தில் அடித்தது.கதிரேசன் என்கிற கதிர் வீடு எங்கே என்று கேட்டேன் .ஒரு சி
என்ன நடந்தது கதிருக்கு? கடந்த 08.07.2017 அன்று காலை சுமார் 6.00 மணியளவில் சாதி இந்துவான தங்கராசு (57) த.பெ.வீரபத்திரபிள்ளை, அவரது மகன்கள் சுரேஷ் (37), பாஸ்கர் (30) ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் கதிரேசன் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து கதிரேசனை தேடியுள்ளனர். அங்கிருந்த பொருட்களை எல்லாம் காலால் எட்டி உதைத்துவிட்டு பீரோவை திறந்தும் பார்த்துள்ளனர்.