சவுக்கு :
அரசியல்
விஞ்ஞானியான டாக்டர் லாரன்ஸ் பிரிட், பாசிசம் தொடர்பாக ஒரு கட்டுரையை
(பாசிசம் எனிஒன்? பிரி என்குவய்ரி, ஸ்பிரிங் 2003, ப 20) எழுதினார்.
ஹிட்லர் (ஜெர்மனி), முசோலினி (இத்தாலி), பினான்கோ (ஸ்பெயின்), சுகர்த்தோ
(இந்தோனேசியா), பினோசெட் (சிலி), ஆகிய பாசிச ஆட்சியாளர்களை ஆய்வு செய்த
பிரிட், அவர்களிடையே 14 அம்சங்கள் பொதுவாக இருப்பதைக் கண்டறிந்தார். இவற்றை
பாசிசத்தின் அடையாளக் கூறுகள் என
குறிப்பிடுகிறார். அதன்படி, பாசிசத்தின்
14 முக்கிய அம்சங்கள் வருமாறு:
சக்தி வாய்ந்த, தொடரும் தேசியவாதம்

பாசிச
ஆட்சியாளர்கள், தேசப்பற்று சார்ந்த இலட்சியங்கள், கோஷங்கள், அடையாளங்கள்,
பாடல்கள் மற்றும் பிற உபகரணங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். கொடிகள்
எல்லா இடங்களிலும் இருக்கும். ஆடைகள் மற்றும் பொது இடங்களிலும் கொடிகளைப்
பார்க்கலாம்..
மனித உரிமைகளை அங்கீகரிக்க மறுப்பு
எதிரி
மீதான அச்சம், பாதுகாப்பு தொடர்பான தேவை காரணமாக, பாசிச அரசின் கீழ் உள்ள
மக்கள், சில நேரங்களில் தேவை காரணமாக மனித உரிமைகளை அலட்சியம் செய்யலாம் என
நம்ப வைக்கப்படுகின்றனர். சித்திரவதை, விசாரணை இல்லாத தூக்கு தண்டனை,
படுகொலைகள், கைதிகளின் நீண்ட சிறைவாசம் ஆகியவற்றை மக்கள் கண்டும் காணாமல்
இருக்கின்றனர் அல்லது ஆங்கீகரிக்கவும் செய்கின்றனர்.